Wednesday, 23 April 2014

வளமாய் வாழ… நலமாய் வாழ…

                


                    வளமாய் வாழநலமாய் வாழ….


 ISLAM IS AN UNIVERSAL RELIGION – இஸ்லாம் ஓர் உலகளாவிய மார்க்கம் எனும் உயரிய புகழாரத்தையும் கௌரவத்தையும் உலகில் பெற்றிருந்தது.

அக் காலகட்டத்தில் முஸ்லிம்கள் வளமாகவும் நலமாகவும் வாழ்ந்து வந்ததாகவும் வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

அந்த பேற்றை முஸ்லிம் சமுதாயம் மூன்று வழிகளில் அடைந்து கொண்டதாகவும் வரலாற்றை வாசிக்கும் போது உணர முடிகின்றது.

1.கல்வியறிவில் சிறந்து விளங்கியதின் மூலமும்
2.பொருளாதார வலிமையை வளப்படுத்தியதன் மூலமும்
3.வரலாற்றை உள் வாங்கி நடைபோட்டதின் மூலமும்

எப்போது இந்த முஸ்லிம் சமூகம் இம்மூன்று அம்சங்களில் இருந்து விலகிச்சென்றிட ஆரம்பித்ததோ அப்போதிருந்தே வாழ்வின் வளம் வரண்டு போனது. நலம் நழுவிப் போனது.

கல்வியறிவில் மேம்பாடு

1.     இஸ்லாம் மனித சமூகத்திற்கு வழங்கிய முதல் கட்டளையே கல்வி அறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளதைக் காணலாம்.

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ

(நபியே) நீர் உம்மைப் படைத்த இறைவனின் பெயர் கொண்டு (ஓதுவீராக!) படிப்பீராக!

2.கல்வியறிவு என்பது ஆளுமைத் தகுதிக்கான அடிப்படை பண்பு என்பதாகவும் இஸ்லாம் வரையறுத்து தந்துள்ளது.

أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِنْ بَنِي إِسْرَائِيلَ مِنْ بَعْدِ مُوسَى إِذْ قَالُوا لِنَبِيٍّ لَهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ قَالَ هَلْ عَسَيْتُمْ إِنْ كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ أَلَّا تُقَاتِلُوا قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَأَبْنَائِنَا فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا إِلَّا قَلِيلًا مِنْهُمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ

பனூ இஸ்ரவேலர்கள் மூஸா {அலை} அவர்களுக்குப் பின்னால் நாடாளும் அரசர்களால் நசுக்கப்பட்ட போது, அதிலிருந்து மீண்டெளுவதற்கும், தங்களை வழி நடத்தி அத்தீயோர்களை வெல்வதற்கும் ஓர் ஆட்சியாளரை அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுத்தறுமாறு தங்களின் நபியிடம் வேண்டி நின்றனர்.

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا قَالُوا أَنَّى يَكُونُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِنَ الْمَالِ قَالَ إِنَّ اللَّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ وَاللَّهُ يُؤْتِي مُلْكَهُ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

அதற்கு அந்த நபி, அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு ஆட்சியாளராக நியமித்திருக்கின்றான் என்று கூறிய போது, அதை ஏற்றுக்கொள்ள பனூ இஸ்ரவேலர்கள் மறுத்தனர்.

அதற்கு பதிலளித்த அந்த நபிஉங்களுக்கு மேலாக அல்லாஹ் அவரையே ஆட்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளான். மேலும், அறிவாற்றலையும், உடல் வலிமையையும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான்.”  (அல்குர்ஆன்:2:246-247)

3.மேலும், நீதி நெறி சார்ந்த வாழ்க்கைக்கு கல்வியறிவு அவசியம் என இஸ்லாம் பேசுகிறது.

فَخَرَجَ عَلَى قَوْمِهِ فِي زِينَتِهِ قَالَ الَّذِينَ يُرِيدُونَ الْحَيَاةَ الدُّنْيَا يَا لَيْتَ لَنَا مِثْلَ مَا أُوتِيَ قَارُونُ إِنَّهُ لَذُو حَظٍّ عَظِيمٍ (79) وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ اللَّهِ خَيْرٌ لِمَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا وَلَا يُلَقَّاهَا إِلَّا الصَّابِرُونَ
காரூணின் செல்வ வளங்களைக் கண்ட பலகீனமான சமுதாய மக்கள் அவனைப் போல வாழ வேண்டுமென விரும்பிய போது, அங்கிருந்த கல்வியாளர்கள் இப்படிக் கூறினார்கள்.

 “ஆயினும் கல்வியறிவு வழங்கப்பட்டவர்கள் கூறினார்கள்: “உங்கள் நிலை குறித்து வருந்துகிறோம். நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தோருக்கு அல்லாஹ்வின் நற்கூலி சிறந்ததாகும். மேலும், பொறுமையை மேற்கொள்கிறவர்களுக்குத் தான் இது போன்ற நற்பாக்யம் கிடைக்கும்.”

                                                     (அல்குர்ஆன்:28:79-80)

4.இறை நெருக்கத்தையும், இறை உதவியையும் பெற்றுத்தரும் உயரிய பொக்கிஷமாக கல்வியறிவு திகழ்வதாக இஸ்லாம் விமர்சிக்கிறது.

قَالَ يَا أَيُّهَا الْمَلَأُ أَيُّكُمْ يَأْتِينِي بِعَرْشِهَا قَبْلَ أَنْ يَأْتُونِي مُسْلِمِينَ (38) قَالَ عِفْرِيتٌ مِنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ تَقُومَ مِنْ مَقَامِكَ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ (39) قَالَ الَّذِي عِنْدَهُ عِلْمٌ مِنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِنْدَهُ

அல்லாஹ் கூறுகின்றான்: ஸுலைமான் {அலை} கேட்டார்: “அவையோரே! அவர்கள் கீழ்ப்படிந்தவர்களாய் வருமுன் அப்பெண்மணியுடைய அரியணையை உங்களில் யார் என்னிடம் கொண்டு வர முடியும்”?

பலம் பொருந்திய ஒரு ஜின் கூறியது: “நீங்கள் உங்களுடைய இடத்தை விட்டு எழுவதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வருகின்றேன். நான் அதற்கு வலிமை பெற்றவனாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன்.”

அவர்களுள் கல்வியறிவைப் பெற்றிருந்த ஒருவர்நீங்கள் கண்மூடி திறப்பதற்குள் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுகின்றேன்என்று கூறினார்.

அவ்வாறே அவ்வரியணை தம்மிடத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டிருப்பதை ஸுலைமான் {அலை} கண்டார்.

5.அந்தஸ்தையும் உயர்வையும் பெற்றுத்தரும் வல்லமை மிக்கது கல்வியறிவு என்று இஸ்லாம் சான்று பகர்கின்றது.

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ
அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், எவர்களுக்கு கல்வியறிவு வழங்கப்பட்டிருக்கின்றதோ அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பதவிகளை வழங்குவான்.

6.அதிகரித்துக் கேட்க அனுமதியுள்ள ஒரே ஒரு விஷயம் கல்வியறிவு என இஸ்லாம் அழைத்துச் சொல்கிறது.

وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا

(நபியே) நீர் இறைஞ்சுவீராக! “ என் இறைவனே! எனக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்தி வழங்குவாயாக!

இன்னும் ஏராளமான இறைவசனங்கள் கல்வியறிவைப் பெற்றுக் கொள்வதைப் பற்றியும் அதில் மேம்பாடு காணவேண்டும் என்பதைப் பற்றியும் மிக ஆழமாகவே போதிக்கின்றன.

என்றாலும் இந்த உம்மத் கல்வியறிவை பெறுவதில் அக்கறை செலுத்துகின்றதா? கல்வியறிவில் மேம்பட்டு இருக்கின்றதா? என்றால் சொல்லிக் கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல முடியும்.

தற்காலத்தில் இந்த முஸ்லிம் சமூகம் கல்வியை உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று இரு கூறுகளாகப் பிரித்து பாவிப்பதையும், கல்வியாளர்களை உலகவியலாளர்கள், மார்க்க அறிஞர்கள் என தரம் பிரித்து வைத்திருப்பதையும் காண முடிகிறது.

இந்தியாவில் வாழ்கின்ற மலைவாழ் மக்கள், பழங்குடியின மக்கள் ஏனைய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை விட, இந்த சிறுபான்மை முஸ்லிம் சமூகம் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் பின் தங்கி இருப்பதாக ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ராஜீந்தர் சஜ்ஜார் தலைமையில் அடங்கிய ஏழு பேர் கொண்ட { Dr. T.K. Ooman, M.A. Basith, Dr. Akthar Majeed, Dr. Abu Saleh Shariff, and Dr. Rakesh Basant, Dr. Syed Zafar Mahmood } கமிட்டி 403 பக்க அறிக்கையை இந்திய பாராளுமன்றத்தில் 30.11.2006 அன்று ஒப்படைத்து முஸ்லிம்களின் அறியாமையை உலகிற்கு உணர்த்தியது.

உண்மையில் இஸ்லாம் கல்வியையும் கல்வியாளர்களையும் இப்படி வேறு படுத்தி காட்டுவதை ஒரு போதும் விரும்புவதில்லை.

இரண்டு கல்வியையும் ஒரு முஸ்லிம் முறையே பெற்றிருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
எனவே, உலகக் கல்வியையும் மார்க்கக் கல்வியையும் ஒருங்கே பெற்றிருக்கிற ஒரு சமூகத்தால் மட்டுமே வளமாய் நலமாய் வாழ்ந்திட இயலும்.

உலக அரங்கில் முஸ்லிம்களின் குரல்:

இன்றைய நவீன உலகில் இஸ்லாத்திற்கெதிராக எழுப்பப்படுகிற விமர்சனங்களுக்கும், சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுகளுக்கும் அதை நிராகரிப்பதற்கு  தக்க சான்றுகள் இருந்தும் அதை துணிவாக எடுத்துக்கூறிட தலை சிறந்த கல்வியாளர்கள் இந்த உம்மத்தில் இல்லை.

அவ்வப்போது அத்தி பூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் யாராவது ஒருவர் குரல் கொடுக்கின்றார். ஆனால், அதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கின்றது.

இஸ்லாமிய பண்பாடும், இன்றைய உலகோடு அது கொண்டிருக்கின்ற தொடர்பும்.. { Collquium On Islamic Culture In Its Relation to Contempory World } என்கிற தலைப்பில் 1953 –ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் எட்டு நாட்கள் ஒரு மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது.

அதில் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் குறித்து கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட போது, அதற்கு பதில் கூறுவதற்காக ஏமன் நாட்டின் மார்க்க அறிஞரும், அந்நாட்டு நீதித்துறை அமைச்சருமான அல் காழி, அஷ் ஷெய்க், முஹம்மது அல் ஹஜ்ரீ அவர்கள் அந்த சபையின் முன் எழுந்து நின்றார்.

தன்னுடைய உரையில் உலக நாடுகளில் பின் பற்றப்படுகிற குற்றவியல் சட்ட நடைமுறைகளை பட்டியலிட்டு, அது ஒவ்வொரு நாடுகளிலும் பல் வேறு விதமாக பின் பற்றப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

பின்னர், திருட்டுக் குற்றத்திற்கு திருமறை வகுத்துள்ள தண்டனை எவ்வாறு இஸ்லாமிய நாடுகளில் வேறுபாடுகளின்றி நடைமுறை படுத்தப் படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட தவறவில்லை.

உலக நாடுகளிலிருந்து இஸ்லாமிய குற்றவியல் தண்டனைச்சட்டத்தை மேற்கொள்கிற இஸ்லாமிய நாடுகள் எவ்வாறு வேறுபட்டு நிற்கிறது என்பதையும் புள்ளி விவரத்தோடு சுட்டிக்காட்டினார்.

وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنَ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
அல்லாஹ் கூறுகின்றான்: “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைகளுக்கான கூலியாகும். மேலும், அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்.”                                     (அல்குர்ஆன்:5:38)


இந்த இறைவசனத்தையும், ஏராளமான நபிமொழிகளையும் எண்ணிலடங்கா வரலாற்றுச் சான்றுகளையும் மேற்கோள் காட்டி விரிவாகப் பேசினார்.

இந்த கடுமையான தண்டனை எந்தச் சூழ்நிலையில் வழங்கப்பட வேண்டும் என்பது பற்றி அவர் பேசும் போது

”1.வறுமை மற்றும் பசியின் காரணமாக ஒருவன் திருடினால் அதற்காக கை வெட்டப்படாது. அதற்கு சமூகமும் சமுதாயமும் தான் காரணம்.
2.பொதுச் சொத்தில் இருந்து திருடினால் அதற்கும் கை வெட்டப்படாது. அதற்கு அரசின் மெத்தனப்போக்கே காரணம்.
3.சுற்றத்தார்களிடம் திருடினாலும் கை வெட்டப்படாது. அவனுடைய உரிமையைப் பேணாததே அதற்கு காரணம்.
4.பகலில் திருடினாலும் கை வெட்டப்படாது.
5.குறைவான, மதிப்பில்லாத பணத்தையோ பொருளையோ திருடினாலும் கை வெட்டப்படாது.
6.எவரின் கட்டாயத்தின் பேரிலோ, வற்புறுத்தலின் பேரிலோ, நிர்பந்தத்தின் தூண்டுதலிலோ திருடினாலும் கை வெட்டப்படாது.

ஆனால், 1.பொருளோ, பணமோ குறிப்பிட்ட கணிசமான மதிப்புடையதாக இருக்க வேண்டும்.
2.பலவந்தமாக திருடினால், சம்பந்தப்பட்டவர்களை தாக்கி திருடினால், பூட்டியிருக்கும் வீட்டையோ, பூட்டையோ உடைத்து திருடினால் கை வெட்டப்பட வேண்டிய குற்றமாகும்.

எனக்குத் தெரிந்து ஏமனில் 1953 வரை இரண்டே இரண்டு வழக்குகளில் மட்டுமே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

இங்கே,

 முஹம்மது அல் ஹஜ்ரீ அவர்கள் இஸ்லாத்தின் மீதான விமர்சனத்திற்கு ஆணித்தரமாக உலக நாடுகளின் தலைவர்கள் அறிஞர்கள் ஆகியோருக்கு மத்தியில் விவாதித்து மிகச் சரியான பதிலைத் தந்தார்கள்.
இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் தான் மனித சமூகத்தை குற்றச் செயல்களில் இருந்து காப்பாற்றும். குற்றச் செயல்களின் விகிதாச்சாரத்தை மட்டுப்படுத்தும் என்று புள்ளி விவரங்களோடு பதில் கூறினார்.

இது எப்படி சாத்தியமானது என்றால் தீர்க்கமான ஷரீஆவின் அறிவுபெற்ற ஆலிமாகவும், உலக சட்டங்கள் உலக நாடுகளின் குற்றச் செயல்கள் குறித்தான முழுமையான உலக அறிவும் பெற்றிருந்ததன் விளைவாகத்தான் என்பதை சமூகம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

நபிகளாரின் வாழ்வினிலே

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயின் அறைக்குள் இருந்தார்கள்.

அப்போது பனூதமீம் கோத்திரத்தார்கள் உதாரித் இப்னு ஹாஜிப் மற்றும் அக்ரஃ இப்னு ஹாபிஸ், ஸபர்கான் இப்னு பத்ர், அம்ர் இப்னு அஹ்தம், ஹப்ஹாப் இப்னு யஸீத் ஆகியோரின் தலைமையில் அங்கே வருகை புரிந்தார்கள்.

فلما قدم وفد بني تميم كانا معهم فلما دخل وفد بني تميم المسجد نادوا رسول الله صلى الله عليه وسلم من وراء حجراته: أن اخرج إلينا يا محمد فآذى ذلك رسول الله صلى الله عليه وسلم من صياحهم فخرج إليهم فقالوا: يا محمد جئناك نفاخرك فأذن لشاعرنا وخطيبنا قال: قد أذنت لخطيبكم فليقل فقام عطارد بن حاجب فقال: الحمد لله الذي له علينا الفضل والمن وهو أهله الذي جعلنا ملوكاً ووهب لنا أموالاً عظاماً نفعل فيها المعروف وجعلنا أعز أهل المشرق وأكثره عدداً وأيسره عدة فمن مثلنا في الناس؟ ألسنا برءوس الناس وأولي فضلهم؟ فمن فاخر فليعدد مثل ما عددنا وإنا لو نشاء لأكثرنا الكلام ولكنا نحيا من الإكثار فيما أعطانا وإنا نعرف بذلك.
أقول هذا لأن تأتوا بمثل قولنا وأمر أفضل من أمرنا ثم جلس.


பள்ளிக்கு வெளியிலிருந்து முஹம்மதே! வெளியே வாரும் என்று அக்ரஃ இப்னு ஹாபிஸும், உயைனா இப்னு ஹிஸ்ன் அவர்களும் அழைத்தனர்.

அவர்கள் அழைத்தது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு நோவினை தருவதாய் அமைந்தது.

எனினும் உள்ளிருந்து நபிகளார் மிகவும் வேதனையுடன் வந்தார்கள். அண்ணலாரைப் பார்த்த அவர்கள் இருவரும்முஹம்மதே! நாங்கள் எங்களின் குலப்பெருமையை உங்களிடம் எடுத்துக் கூறவே நாங்கள் வந்திருக்கின்றோம்.

அனுமதி கொடுத்தால் நாங்கள் பிரசங்கத்தின் மூலமும் கவியின் மூலமும் அதை வெளிப்படுத்துவோம்என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சரி உங்கள் பேச்சாளரை அழையுங்கள்! உரை நிகழ்த்தட்டும்! என்று அனுமதி வழங்கினார்கள்.

உடனே அக்ரஃ இப்னு ஹாபிஸ், உதாரித் இப்னு ஹாஜிப் அவர்களை உரை நிகழ்த்துமாறு அழைத்தார்கள்.
அங்கே, ஒரு புறம் நபித்தோழர்களின் கூட்டமும் இன்னொரு புறம் பனூதமீம் கோத்திரத்தார்களும் குழுமியிருந்தனர்.

நபிகளாரின் முன் வந்து நின்ற உதாரித் உரை நிகழ்த்த ஆரம்பித்தார். உரையில்எங்களை சிறப்பு மிக்க சமுதாயமாகவும் வளமிக்க சமுதாயமாகவும் ஆக்கிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!

எங்களை அவன் அரசர்களாக ஆக்கியிருக்கின்றான். எங்களுக்கு பெரும் பொருளாதாரத்தையும் தந்திருக்கின்றான். நாங்கள் அவற்றை நல்ல வழிகளிலேயே பயன் படுத்தி வருகின்றோம்.

எங்களை சூரியன் உதிக்கும் திசையில் வாழச்செய்து கண்ணியப்படுத்தி இருக்கின்றான். நாங்கள் பெரும்பான்மை சமூகம் ஆவோம். எங்களைப் போல் மனித சமூகத்தில் உயர்ந்தவர் யார் இருக்கின்றார்கள்?

தலைமைத்துவத்தாலும் சிறப்பாலும் எங்களை விட உயர்ந்தோர் யார் இருக்கின்றார்கள்?

எங்களைப் போல் இப்படி அதிக எண்ணிக்கையில் வரிசைப் படுத்தி சொல்லும் அளவிற்கு யாருக்கு தைரியம் இருக்கின்றது?

இப்போதும் கூட நாங்கள் வெட்கத்தால் அதிகம் சொல்வதை தவிர்த்திருக்கின்றோம்.

முடிந்தால் எங்களைப்போல் சொல்லுங்கள் பார்க்கலாம்! எங்களை விட எதில் நீங்கள் சிறந்து இருக்கின்றீர்கள் என்பதை நாங்களும் தான் பார்க்கின்றோமே?” என்று கூறி அமர்ந்தார்.

இவை அனைத்தையும் மிகக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்த அண்ணலார் ஸாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்களை பனூ தமீம் கோத்திரத்தார்களின் உரைக்கு பதில் கூறுமாறு பணித்தார்கள்.

فقال رسول الله صلى الله عليه وسلم لثابت بن قيس بن الشماس أخي بني الحارث بن الخزرج قم فأجب الرجل في خطبته فقام ثابت فقال: الحمد لله الذي السموات والأرض خلقه قضى فيهن أمره ووسع كرسيه علمه ولم يك شيء قط إلا من فضله ثم كان من قدرته أن جعلنا ملوكاً واصطفى من خير خلقه رسولاً أكرمه نسباً وأصدقه حديثاً وأفضله حسباً فأنزل عليه كتابه وائتمنه على خلقه فكان خيرة الله من العالمين ثم دعا الناس إلى الإيمان به فآمن برسول الله المهاجرون من قومه وذوي رحمه أكرم الناس حسباً وأحسن الناس وجوهاً وخير الناس فعالاً ثم كان أول الخلق إجابة واستجاب لله حين دعاه رسول الله صلى الله عليه وسلم نحن فنحن أنصار الله ووزراء رسوله نقاتل الناس حتى يؤمنوا بالله فمن آمن بالله ورسوله منع منا ماله ودمه ومن كفر جاهدناه في الله أبداً وكان قتله علينا يسيراً أقول قولي هذا واستغفر الله لي وللمؤمنين والمؤمنات والسلام عليكم.

ஸாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் எழுந்து சபையின் முன் வந்து நின்றுவானம் மற்றும் பூமியை படைத்து அவைகளின் மீது தம் கட்டளைகளை செயல் படுத்தி, விசாலமான அறிவுடன் காரியங்கள் அனைத்தையும் நடாத்துகின்ற ஏகனாம் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!

எங்களை அவன் தன் வல்லமையால் உலகாளும் நல்லார்களாய் ஆக்கியிருக்கின்றான்.

மேலும், படைப்புகளிலேயே சிறந்த, பாரம்பரியத்தால் உயர்ந்த எப்போதும் உண்மை பேசுகிற குணத்தால் மிகச் சிறந்த ஒரு தூதரை எங்களுக்கு வழங்கி அவர்களுடன் இணைந்து வாழ்ந்திட எங்களுக்கு நற்பேறு வழங்கியுள்ளான்.

அவரின் மீது தன் வேதத்தை இறக்கியருளி, தன் படைப்பினங்களின் வாழ்க்கைக்கு விடியலாக அகில உலகத்தார்களுக்கு சிறந்த தேர்வாக அல்லாஹ் அவர்களை ஆக்கியிருக்கின்றான்.

அந்த இறைத்தூதர் ஈமான் எனும் ஒளிக்கற்றையின் பால் அழைத்தார். அந்த அல்லாஹ்வின் தூதரின் அழகிய அழைப்பை ஏற்று எங்களின் சகோதரர்களான முஹாஜிரீன்கள் அவர்களைக் கொண்டு ஈமான் கொண்டனர்.

பின்பு எங்களையும் அந்த ஒளிக்கற்றையில் வந்து பிரகாசத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அந்த இறைத்தூதர் அழைத்தார்.

உடனடியாக நாங்கள் பதில் கொடுத்தோம். நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாய் மாறிப்போனோம். அவரின் தூதருக்கு உற்ற நேசர்களாய் ஆகிப்போனோம்.

அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் வரை நாங்கள் பிறரிடம் சண்டை போடுவோம். ஏற்றுக் கொண்டு விட்டாலோ அவர்களின் உதிரத்திற்கும் உடமைகளுக்கும் உத்திரவாதமாய் நாங்கள் மாறிவிடுவோம்.

எங்களோடு இறை நிராகரிப்பு கொண்ட நிலையில் யார் எதிர்த்தாலும் அவர்களோடு அல்லாஹ்விற்காக இறுதி வரை உறுதியோடு போராடுவோம்!

அவர்களை வீழ்த்தி நாங்கள் சாதனை புரிவது எங்களுக்கு மிக எளிதான காரியம் ஆகும்.

இது தான் என்னுடைய உரையாகும். இந்த உரையின் மூலமாக நான் இறை நம்பிக்கை கொண்டிருக்கிற ஆண் பெண் அனைவரின் பிழைகளையும் அல்லாஹ் மன்னித்து அருள் பாளிக்க வேண்டுமாய் மன்றாடிக் கேட்டு விடை பெறுகின்றேன்.

அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது நிலவட்டும்!” என்று கூறி அமர்ந்தார்.

فقام الزبرقان بن بدر فقال:
نحن الكرام فلا حي يعادلنا ... منا الملوك وفينا تنصب البيع
وكم قسرنا من الأحياء كلهم ... عند النهاب وفضل العز يتبع
ونحن نطعم عند القحط مطعمنا ... من الشواء إذا لم يؤنس القزع
بما ترى الناس تأتينا سراتهم ... من كل أرض هوياً ثم تصطنع
فننحر الكوم عبطاً في أرومتنا ... للنازلين إذا ما أنزلوا شبعوا
فلا ترانا إلى حي نفاخرهم ... إلا استفادوا فكانوا الرأس يقتطع
فمن يفاخرنا في ذاك نعرفه ... فيرجع القوم والأخبار تستمع
إنا أبينا ولا يأبى لنا أحد ... إنا كذلك عند الفخر نرتفعஅடுத்து ஸபர்கான் இப்னு பத்ர் எழுந்து இலக்கிய நடையில் கவி படித்து தங்களது பெருமைகளை பறை சாற்றினார்.

قال ابن إسحاق: وكان حسان غائباً فبعث إليه رسول الله صلى الله عليه وسلم قال حسان: جاءني رسوله فأخبرني أنه إنما دعاني لأجيب شاعر بني تميم فخرجت إلى رسول الله صلى الله عليه وسلم وأنا أقول:
منعنا رسول الله إذ حل وسطنا ... على أنف راض من معد وراغم
منعناه لما حل بين بيوتنا ... بأسيافنا من كل باغ وظالم
ببيت حريد عزه وثراؤه ... بجابية الجولان وسط الأعاجم
هل المجد إلا السودد العود والندى ... وجاه الملوك واحتمال العظائم
قال: فلما انتهيت إلى رسول الله صلى الله عليه وسلم وقام شاعر القوم فقال ما قال عرضت في قوله وقلت على نحو ما قال قال: فلما فرغ الزبرقان قال رسول الله صلى الله عليه وسلم لحسان بن ثابت: قم يا حسان فأجب الرجل فيما قال فقام حسان فقال:
إن الذوائب من فهر وإخوتهم ... قد بينوا سنة للناس تتبع
يرضى بهم كل من كانت سريرته ... تقوى الإله وكل الخير يصطنع

அதற்கு பதில் கூற ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அவர்களை நபிகளார் அழைத்து கவி படிக்கச் சொன்னார்கள்.

அந்த சமயம் அங்கே ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் சபையில் இல்லை. ஆளனுப்பி அழைத்து வரச் சொல்லி பதில் கொடுக்கச் சொன்னார்கள்.

இறுதியாக பனூதமீம் கோத்திரத்தார்கள் இஸ்லாத்திற்குள் நுழைந்தனர். இந்த வரலாற்றுப் பிண்ணணியை அடிப்படையாகக் கொண்டுதான் அல் ஹுஜ்ராத் அத்தியாயத்தின் 3 –ஆம் வசனம் இறக்கியருளப்பட்டது.

                    (நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:264-267)

இங்கே,

ஸாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்களிடம் மார்க்க அறிவும் வரலாற்று ரீதியான அறிவும் ஒருங்கே இருந்ததனால் அவர்களை முன்னிலைப் படுத்தினார்கள்.

ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அவர்களிடம் மார்க்க அறிவோடு இலக்கிய அறிவும் ஒருங்கே இருந்ததனால் சபையிலேயே இல்லாத போதும் அவரை அழைத்து வரச் செய்து பதில் கூறச் சொன்னார்கள்.

ஆகவே, இரண்டு கல்வியும் பெற்றிருந்த இருவரின் மிகச் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியதன் விளைவாக ஒரு சமூகமே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக வரலாறு சான்றுரைக்கின்றது.

எனவே, இஸ்லாமியக் கல்வி முறை என்பது மார்க்க அறிவும் உலகியல் விஞ்ஞான அறிவும் ஒன்று சேர்ந்து அமையப் பெற்றிருக்க வேண்டும் என்பதாகத் தான் அறிவுறுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூட கல்வியை பயன் தருகிற கல்வி, பயன் தராத கல்வி என்று தான் அடையாளப் படுத்தினார்களே தவிர இன்று நாம் இரண்டாக பிரித்து வைத்து அழைப்பதைப் போல் அல்ல.

வாழ்வின் இன்பத்தை சுவைக்க வேண்டுமானால்

உண்மையில் ஒரு மனிதனின் வாழ்க்கை இன்பமும், இனிமையும் நிறைந்ததாய் அமையப் பெற்றிருக்க வேண்டுமானால் அவனுக்கு சுய மரியாதையும், மான உணர்ச்சியும் மிக அவசியம் தேவை.

அவ்விரண்டையும் ஒருங்கே பெற்றவர்கள் இந்த மனித சமூகத்தில் இருக்க வேண்டுமானால் அவர்கள்கல்வியறிவுபெற்றவர்களாய் இருப்பது அவசியம் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

وروى الزهري، عن ابن المسيب وعروة، عن حكيم بن حزام قال: سألت النبي صلى الله عليه وسلم فأعطاني، ثم سألته فأعطاني، فقال: " يا حكيم، إن هذا المال خضرة حلوة، من أخذه بسخاوة نفس بورك له فيه ومن أخذه بإشراف نفس لم يبارك له فيه، وكان كالذي يأكل ولا يشبع، واليد العليا خير من اليد السفلى " . قال حكيم: يا رسول الله، والذي بعثك بالحق لا أرزؤك ولا أحداً بعدك شيئاً، فكان أبو كبر رضي الله عنه يدعوه إلى عطائه فيأبى أن يأخذه، ودعاه عمرو رضي الله عنه فأبى، فقال عمر: يا معشر المسلمين، أشهدكم أني أدعو إلى عطائه فيأبى أن يأخذه، فما سأل أحداً شيئاً إلى أن فارق الدنيا.
وعمي قبل موته، ووصى إلى عبد الله بن الزبير.


ஹுனைன் யுத்தம், அதன் முடிவு முஸ்லிம்களுக்கு சாதகமாய் மாறிப்போனதோடு நின்று விடாமல் ஏராளமான கனீமத் செல்வங்களை அள்ளி வழங்கிற்று.

நபிகளார் அதனை தோழர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார்கள். புதிதாய் இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு தாராளமாய் வாரி வாரி வழங்கினார்கள். அப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருந்த ஹகீம் இப்னு ஹிஷாம் (ரலி) அவர்களுக்கும் வழங்கினார்கள்.

ஆனால், தனக்கு வழங்கப்பட்டது போதாது எனக்கூறி மீண்டும் தருமாறு நபிகளாரிடம் கோரினார். அண்ணலார் வழங்கினார்கள்.

இரண்டாம் முறையும் கோரினார். மீண்டும் அண்ணலார் வழங்கினார்கள். இவ்வாறு வழங்கப்பட்டதின் விளைவாக அவருக்கு நூறு ஒட்டகங்கள் கிடைத்தன.

பின்னர், ஹக்கீம் இப்னு ஹிஷாம் (ரலி) அவர்களை அழைத்து அண்ணல் நபி {ஸல்} அவர்கள்ஹக்கீமே! மிகவும் உயர்தரமான ஒட்டகைகள் உமக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மன திருப்தியுடன் ஏற்றுக் கொண்டால் அது அல்லாஹ்வின் பரக்கத் அருள் வளம் நிறைந்து, பெருகிக் காணப்படும்.

ஆனால், பேராசை கொண்டு நீர் அதை அணுகும் பட்சத்தில் அதில் அல்லாஹ்வின் அருள் வளம் அணுவளவு கூட இருக்காது. மேலும், உண்டும் வயிறு நிரம்பாத மனிதனைப் போன்று நீர் ஆகி விடுவீர்! மேலும், தாழ்ந்திருக்கும் கையை விட மேலிருக்கும் உயர்ந்திருக்கும் கையே மிகச் சிறப்பானதுஎன்று கூறினார்கள்.

அதைக் கேட்ட ஹக்கீம் இப்னு ஹிஷாம் அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! உம்மை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அந்த இறைவன் மீது ஆணை! என் வாழ் நாளில் இனி ஒரு போதும் உங்களைத் தவிர வேறு யாரிடமும் எதையும் கேட்கவே மாட்டேன். நான் இறக்கும் வரை யார் எதைத் தந்தாலும் பெற்றுக் கொள்ள மாட்டேன்! இது அல்லாஹ்வின் மீது ஆணை!” என்று முழங்கினார்கள்.

நாமும் தான் உணர்ச்சிப் பெருக்கில் சத்தியம் செய்கிறோம். ஆனால், நம்மில் எத்துணை பேர் இறுதி வரை அதை காப்பாற்றுகிறோம்.

அவரை சத்தியத்தில் இருந்து பிறழ்ந்து சென்றிட ஏராளமான தருணங்கள் வாசல் முன் வந்து நின்று கதவைத் தட்டின ஆனால் அவர்கள் ஒரு போதும் அதற்கு இசைந்து கொடுக்க வில்லை.

கலீஃபா அபூ பக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் அரசுக் கருவூலத்தில் இருந்து ஹக்கீம் (ரலி) அவர்களுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டு அதை வந்து பெற்றுக் கொள்ள வேண்டுமென கலீஃபா ஆளனுப்பினார்கள்.

அந்த நிதிகள் எதுவும் தமக்கு தேவை இல்லை என புறக்கணித்து விட்டார்கள்.

இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் ஏராளமான பணம் ஹக்கீம் (ரலி) அவர்களின் பேரில் தேங்கியிருப்பதையும், அதை அவர் பெற்றுக் கொள்ள மறுப்பதையும் அறிந்து கொண்ட கலீஃபா உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்று கூட்டி “மக்களே! இதோ இங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்தப் செல்வங்களெல்லாம் ஹக்கீம் அவர்களுக்கானது.

ஆனால், அவர் முந்தைய ஆட்சியாளரான அபூ பக்ர் (ரலி) அவர்களிடமிருந்தும், நம்மிடமிருந்தும் இதைப் பெற்றுக் கொள்ள எவ்வளவோ அழைத்தும் தொடர்ந்து மறுத்து வருகின்றார். எனக்கும் அவருக்குமான இந்த விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் சாட்சி பகரவேண்டும்” என்று கூறினார்கள்.

                             (நூல்: உஸ்துல் காபா, பாகம்:1, பக்கம்:278,279)

இந்த வரலாற்றுச் செய்தியை நினைவு படுத்துகின்ற வரலாற்று ஆசிரியர் காலித் முஹம்மத் காலித் (ரஹ்) அவர்கள் “நிரப்பமான கல்வியறிவு பெற்றிருந்ததன் காரணத்தால் அவர்களிடத்தில் இயற்கையாகவே சுயமரியாதைச் சிந்தனையும், மான உணர்ச்சியும் பிரவாகமெடுத்து ஓடியது” என்பதாக குறிப்பிடுகின்றார்கள்.

எனவே,

காலத்தின் அருமை கருதி இந்த சமூகம் தமது எதிர் கால தலைமுறையினரை மார்க்க அறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற்றவர்களாக உருவாக்கிட முன்வர வேண்டும்.

வளமான வாழ்விற்கும், நலமான வாழ்விற்கும் இஸ்லாத்தின் உயர்வுக்கும், இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் முஸ்லிம் உம்மத்தின் வளர்ச்சிக்கும் முழு மூச்சாய் பாடு பட கல்வியறிவின் உச்சத்திற்கு சென்றிடுவோம்.

வளமாய் வாழ … நலமாய் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்!
     
                        வஸ்ஸலாம்!!

சங்கைக்குரிய ஆலிம்களே! இந்த தலைப்பிற்கு தேவையான கூடுதலான தகவல்களைப் பெற்றுக் கொள்ள கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவிட்ட நம்முடைய “இழந்த பெருமையை மீட்டெடுப்போம்!”  ”பொருளாதாரத்தை வலிமை படுத்துவோம்!”  “வரலாற்றை வாசிப்போம்! வரலாறு படைப்போம்!” ஆகிய தலைப்புகளை மேற்பார்வையிடவும். 

Wednesday, 16 April 2014

எதிர்பார்ப்பும்...எதிர்காலமும்...

எதிர்பார்ப்பும்...எதிர்காலமும்...

 
    
ஒவ்வொரு மனிதனுக்கும் தான் வாழும் வாழ்க்கையின் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும். தன் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்தான கனவுகளும் இருக்கும்.

எதிர்பார்ப்புகளும் எதிர்காலத்தைப்பற்றிய கனவுகளும் இல்லாதவன் சிறந்த மனிதனாகவே கணிக்கப்படமாட்டான்.

ஆம்! ஓர் இறை நம்பிக்கையாளனிடத்திலும் இத்தகைய அம்சங்களும், அதற்கான தேடல்களும் இருக்க வேண்டுமெனெ இஸ்லாம் விரும்புகின்றது.

இல்லையென்றால்இன்ஷா அல்லாஹ்..” என்ற வார்த்தைப்பிரயோகம் அவசியமில்லாத ஒன்றாக ஆகிப்போயிருக்கும்.

ஆகவே, ஓர் முஃமின் அவனது எதிர்பார்ப்புகளையும், எதிர்காலக் கனவுகளையும் இறைவனின் விருப்பப்படியும் இறைத்தூதரின் முன்மாதிரியின் படியும் அமைத்துக் கொள்வது அவசியமாகும்.

தகாத எதிர்பார்ப்புகளும், அழிவில் ஆழ்த்துகிற எதிர்காலக் கனவுகளும் ஓர் இறை நம்பிக்கையாளனின் ஈமானின் இன்பத்தையே பொசுக்கிவிடும் வல்லமை கொண்டது.

وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “ஒவ்வோர் சமுதாயமும் அதன் இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஆகவே, (இறை நம்பிக்கையாளர்களே!) நன்மையானவற்றில் நீங்கள் ஒருவருக்கொருவர் முன்னேறிச் செல்லுங்கள்.

عَنْ حُسَيْنِ بن عَلِيٍّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ اللَّهَ يُحِبُّ مَعَالِيَ الأُمُورِ وأَشْرَافَهَا ، وَيَكْرَهُ سَفَاسِفَهَا ".

ஹுஸைன் இப்னு அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நிச்சயமாக! அல்லாஹ் காரியங்களில், செயல்பாடுகளில் மிக உயர்வானதையும், சிறப்பானதையுமே நேசிக்கின்றான். காரியங்களில், செயல்பாடுகளில் மிகவும் கீழானவற்றை வெறுக்கின்றான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                                        (நூல்: தப்ரானீ, 2856)

எதிர் காலத்தைப்பற்றிய இலட்சியங்களாக இருக்கட்டும், வாழ்க்கை குறித்தான எதிர்பார்ப்புகளாக இருக்கட்டும் அதற்கான எல்கை எது என்பதை மேற்கூறிய ஆயத்தும், நபிமொழியும் நமக்கு உணர்த்துகின்றது.

முஸ்லிம்களின் தலைமையும்... எதிர்காலமும், எதிர்பார்ப்பும்….

இந்த உம்மத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் சமுதாய அரசியல் தலைவர்கள் மற்றும் இயக்க தலைவர்களுக்கு மத்தியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை கண்கூடாக கண்டுவருகின்றோம்.

ஏற்கனவே 58 இஸ்லாமிய அமைப்புகள் இருக்கும் பட்சத்தில் தற்போது புதிதாய் ஓர் அமைப்பு உதயமாகி விட்டது.

பதவிகளிலும், அதிகாரங்களிலும் இருந்து சுகம் கண்டவர்கள் ஏதேனும் சில்லரைக் காரணங்களுக்காக ஓர் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டோ, அல்லது விலகும் சூழல் ஏற்படும் போதோ உடனடியாக புதிதாய் ஓர் அமைப்பை தோற்றுவித்து முஸ்லிம்களின் தலைவர்களாக தங்களை அடையாளப்படுத்தி தங்களின் சுகபோகத்தை தொடர்கின்றனர்.

தேர்தல் நேரங்களில் ஆளுக்கு ஒரு அரசியல் கட்சிகளை தேர்ந்தெடுத்து முஸ்லிம் சமுதாயத்தை அடகுவைத்து மதிப்புமிக்க வாக்குகளை சேதாரமாக்கி, சமுதாயத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றனர்.
நம் காலத்து அரசியல் கட்சிகளின் நிலையை நம் இஸ்லாமிய அரசியல் & இயக்க தலைவர்கள் ஒரு போதும் அறிந்து வைத்திட முற்பட்டதில்லை.

கடந்த (2009 – 2014) நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் 162 பேர் ரவுடிகள், கொலை மற்றும் கொள்ளைக்காரர்கள்.

இது 30% சதவீதமாகும். இதுவே அதற்கு முந்தைய (2004 – 2009) நாடாளுமன்றத்தில் 24% சதவீதமாக இருந்தது.

 நடக்க இருக்கும் இப்போதைய தேர்தலிலும் இத்தகையவர்கள் தாம் அதிகமாக வெற்றிபெற வாய்ப்பு இருக்கின்றது.

     (வைகறை வெளிச்சம் மாத இதழ், ஏப்ரல் 2014,Times Of India: 12.2.2014.)

நமது தேசத்தின் மிகப் பெரும் கட்சியும், தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் கொலைகாரர்.

நமது தேசத்தை ஆளத்துடித்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை மூன்றில் ஒருவர் கொலைகாரர்.

(வைகறை வெளிச்சம் மாத இதழ், ஏப்ரல் 2014 Association Of Democratic Rights)

நமது தேசத்தின் பிரபல கட்சிகளைப் பற்றி அதிர்ச்சியூட்டும் இன்னொரு புள்ளி விபரம்.

நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் கொலைகாரர்களையும், கொள்ளைகாரர்களையும் (80%சதவீதம் பேர்) கொண்ட கட்சி சிவசேனைகட்சி.

அதற்கு அடுத்து பாரதீய ஜனதா கட்சி 41.7% சதவீதம் பேர்.              ஐக்கிய ஜனதா தளம் 36.84% சதவீதம் பேர். பகுஜன் சமாஜ் கட்சி 28.57% சதவீதம் பேர்.

சமாஜ்வாதி கட்சி 27.27% சதவீதம் பேர். காங்கிரஸ் கட்சி 23.88% சதவீதம் பேர். கம்யூனிஸ்ட் கட்சி 18.75% சதவீதம் பேர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 16.16% சதவீதம் பேர்.

(வைகறை வெளிச்சம் மாத இதழ், ஏப்ரல் 2014, The Numbers Story: March 17, 2013.)
கொஞ்சம் வரலாற்றை பின்னோக்கிச் செல்வோம். 1947 இந்திய விடுதலைச் சட்டம் ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்த தருணம் அது.

கிளிமண்ட் அட்லி அன்றைய ஆங்கிலேய அரசின் பிரதமர், இந்தியாவிற்கு சுதந்திரம் விரைவில் தந்துவிட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார்.

அப்போதைய ஆங்கிலேய அரசின் பிரதான எதிர்க்கட்சித்தலைவரான வின்ஸ்டன் சர்ச்சில் இப்படிக்கூறினார்:

You are entrusting the reigns of government in the hand of Rowdies, rascals and free booters they will not stop at anything the very air people breath will be taxed one day.

It will take millions and millions Of Years for the Indians to enter into the periphery of politics”

அதாவது, “இந்தியாவின் பரிபாலனத்தை நீங்கள் கொலைகாரர்கள், குண்டர்கள் கொள்ளையர்கள் ஆகியோரின் கையில் ஒப்படைக்கின்றீர்கள். அவர்கள் அநீதி இழைப்பதை நிறுத்தவே மாட்டார்கள்.

ஒரு நாள் மக்கள் சுவாசிக்கும் காற்றுக்கும் வரி போட்டு விடுவார்கள். அவர்கள் உண்மையான அரசியல் எல்லையைத் தொடுவதற்கு பல நூறு நூற்றாண்டுகள் ஆகும்..”

                      (நன்றி: வைகறை வெளிச்சம் மாத இதழ், ஏப்ரல் 2014)

இந்தியா சுதந்திர நாடாக வேண்டும் என்பதில் இஸ்லாமியர்கள் காட்டிய தீவிரம் எத்தகையது என்பதை இந்திய சுதந்திரத்தின் இரத்த வரலாற்றில் பக்கங்களில் நிரம்பவே காணப்படுகின்றது. (அது வேறு விஷயம்)

ஆனால், அன்றைக்கு வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது எவ்வளவு பொருந்திப்போகின்றது இன்றைய நவீன கால அரசியலில்

இந்த அரசியல் கட்சிகளில் ஏதேனும் ஒன்றைத்தான் நம்முடைய இயக்க மற்றும் அரசியல் தலைவர்கள் நம் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் தன்மைகள் கொண்டதாக அடையாளப் படுத்துகின்றனர்.

நபிகளாரின் வாழ்வினிலே….

 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், தோழர் அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் புறப்பட்டு பயணமாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

வழியில், சுராக்கா இப்னு மாலிக் என்பவர் சிவப்பு நிற நூறு ஒட்டகைகளுக்காக துரத்திக்கொண்டு வருவதை அபூபக்ர் (ரலி) பார்த்து விட்டு, அல்லாஹ்வின் தூதரிடம் தெரிவிக்கின்றார்கள்.

இன்னும் வேகமாக செலுத்துகின்றார்கள் குதிரையை, ஆனாலும் அருகாமையில் வந்து விட்ட சுராக்காவை கண்ட அபூபக்ர் (ரலி) மீண்டும் பெருமானார் {ஸல்} அவர்களிடம் முறையிட, அப்படியே குதிரையை விட்டு கீழிறங்கி நின்று கொண்டு பின் தொடர்ந்து வருவதின் நோக்கம் என்ன வென்று சுராக்காவிடம் கேட்டார்கள் {ஸல்} அவர்கள்.

சுராக்கா சொன்னார்உங்களது கூட்டத்தினர் உங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறினர்அதற்காகவே பின் தொடர்கின்றேன்.

وروى ابن عيينة، عن أبي موسى، عن الحسن أن رسول الله صلى الله عليه وسلم قال لسراقة ابن مالك: كيف بك إذا لبست سواري كسرى ومنطقته وتاجه؟ قال: فلما أى عمر بسواري كسرى ومنطقته وتاجه، دعا سراقة بن مالك وألبسه إياهما.
وكان سراقة رجلاً أزب كثير شعر الساعدين، وقاله له: ارفع يديك، وقل: الله أكبر، الحمد لله الذي سلبهما كسرى بن هرمز، الذي كان يقول: أنا رب الناس، وألبسهما سراقة رجلاً أعرابياً، من بني مدلج، ورفع عمر صوته.

அப்போது, பெருமானார் {ஸல்} அவர்கள் சுராக்காவை நோக்கிசுராக்காவே! பாரசீக மன்னர் கிஸ்ராவின் அணிகலன்களை நீர் அணிந்தால் நீர் எப்படி இருப்பீர்? உமது தோற்றம் எப்படி இருக்கும்?” என்று கேட்டார்கள்.

சுராக்கா அண்ணலாரிடம்பாரசீக மன்னர் கிஸ்ராவின் அணிகலனையா நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி {ஸல்} அவர்கள்ஆம்! இஸ்லாம் பாரசீகத்தை வென்றெடுக்கும்! அதன் அணிகலன்கள் உங்களை அலங்கரிக்கும்!” என்று கூறினார்கள்.

ஆம்! உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் பாரசீகம் வெற்றி கொள்ளப்பட்டது. சுராக்கா இப்னு மாலிக் (ரலி) அழைக்கப்பட்டு பாரசீக மன்னன் கிஸ்ராவின் அணிகலன்களை அணிவித்து விட்டு, உமர் (ரலி) அவர்கள்மக்களின் இறைவன் நானே என்று சொல்லிக்கொண்டிருந்த ஹுர்முஸின் மகன் கிஸ்ராவினுடைய அணிகலனை ஏகனாம் அல்லாஹ்வின் அடிமையாகிய ஓர் அரபியான சுராக்காவிற்கு அணிவிக்க துணை செய்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! என்று உரத்த குரலில் முழங்கினார்கள்.

                                   (நூல்: உஸ்துல் காபா, பாகம்:1, பக்கம்:422)

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுடைய வஃபாத்திற்கு ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பாரசீக வெற்றி சாத்தியமானது.

ஆனால், ”20 ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்லாமும், முஸ்லிம்களும் எந்த அளவு வளர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்பதில் பெருமானார் {ஸல்} அவர்கள் எதிபார்ப்போடும், வளமான எதிர்கால இலட்சியத்தோடும் இருந்தார்கள்என்பதை மேற்கூறிய வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.


கைபர் யுத்தத்திலே ஒல்லியான தேகம் கொண்ட வாலிப நபித்தோழர் ஒருவர் ஆயுதத்தைச் சுமந்தவாறு களத்திலே நுழைகின்றார். அவரால் அந்த ஆயுதத்தை இரு கரங்களால் மட்டுமே தூக்க முடியும் என்றொரு நிலை.

பெருமானார் {ஸல்} அவர்கள் அந்த வாலிபரை அழைத்துநீர் போரில் கலந்து கொள்ள வேண்டாம்! போய் படைவீரர்கள் அழைத்து வந்துள்ள குதிரைகள் மற்றும் ஒட்டகைக்கு தீனிபோடும் பணியை மேற்கொள்ளுங்கள்!” என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

கைபர் வெற்றி கொள்ளப்பட்டது. கனீமத் பங்கு வைக்கப்பட்டது. அந்த வாலிபருக்கும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு பங்கை கொடுத்தனுப்பினார்கள்.

அதைப் பெற்றுக்கொண்ட அவர் அதை எடுத்துக்கொண்டு கண்களில் நீர் ததும்ப பெருமானார் {ஸல்} அவர்களின் சபை நோக்கி வந்துஅல்லாஹ்வின் தூதரே! இந்தாருங்கள்! நான் இந்த வெகுமதிகளுக்காக போர்க்களத்திற்கு வரவில்லை! உண்மையில் அல்லாஹ்வின் பாதையில் போராடி வீரமரணம் அடைந்திட வேண்டுமென்ற வேட்கையில் தான் வந்தேன்! ஆனால் போர்க்களத்தில் நீங்கள் என்னை பங்கெடுக்க அனுமதிக்க வில்லைஎன்றார்.

அது கேட்ட நபிகளார் {ஸல்} அவர்கள் அந்த நபித்தோழரை ஆறுதல் படுத்தினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் நினைத்திருந்தால் போர் ஆயுதங்களைக்கூட தூக்க முடியாத அந்த மெலிந்த தேகமுடைய வாலிபரை கைபர் யுத்த களத்தில் அடகு வைத்திருக்க முடியும். ஆனால், நபி {ஸல்} அவர்கள் அதை விரும்பவில்லை.

ஆனால், இன்றைய நம் அரசியல் & இயக்க தலைவர்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் ஏதோ சில லாபங்களுக்காக அடகு வைப்பதைக் காண முடிகின்றது.

ஒரு சமுதாயத்தின் எதிர்காலத்தையும், சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளையும் தீர்மானிக்க வேண்டிய ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சங்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இங்கே நமக்கு சுட்டிக் காட்டுகின்றார்கள்.


நபித்தோழர்கள் வாழ்வினிலே…..

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம். காதிஸிய்யா யுத்தத்திற்காக காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் ஓர் படையை அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்திருந்தார்கள்.

காதிஸிய்யா போர் கிஸ்ரா வம்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த போர் ஆகும். இதற்குப் பிறகு ஈராக் பகுதி முழுவதும் இஸ்லாமிய நிழலின் கீழ் வந்தது.

படை சென்ற பின்னர் ஒரு நாள் நகர் வலம் வந்து கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களின் காதில் பேரிடியாய் வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்.

ஏகத்துவத்தையும், இறை நம்பிக்கையையும் உரசிப்பார்ப்பதாய் உணர்ந்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

ஆம்! மக்கள்காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் தலைமையை ஏற்றுச் சென்றிருக்கும் முஸ்லிம் படை நிச்சயம் வெற்றியுடன் தான் திரும்பும்என்று பேசிக்கொண்டனர்.

உடனடியாக அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களின் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பி இதை கொண்டு காதிஸிய்யாவிற்குச் செல்லுங்கள். அனைத்துப்படை வீரர்களுக்கு மத்தியில் இதைப்படித்துக் காட்டச் சொல்லுங்கள்என்று உமர் (ரலி) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. படைவீரர்களின் ஊடாகச் சென்ற அபூ உபைதா (ரலி) அவர்கள் தளபதி காலித் (ரலி) அவர்களிடம் கொடுத்து ஆட்சித்தலைவர் சொன்ன விபரத்தைச் சொன்னார்கள்.

காலித் இப்னு வலீத் (ரலி) கடிதத்தைப் பிரித்தார்கள். படித்தார்கள். அதில் இடம் பெற்றிருந்த வாசகம் இதோஆட்சித்தலைவர் உமர் அவர்களிடமிருந்து தளபதி மற்றும் படைவீரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்…. இதோ இந்த நிமிடத்திலிருந்து காலித் (ரலி) படைத்தளபதி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அபூ உபைதா (ரலி) நியமிக்கப்படுகின்றார். இது அமீருல் முஃமினீன் அவர்களின் உத்தரவு!

உடனடியாக முஸ்லிம்கள் அதை ஏற்று செயல்பட்டனர். அதே படையில் ஒரு வீரராக காலித் (ரலி) அவர்கள் பங்கு பெற்றார்கள்.

அபூ உபைதா (ரலி) அவர்களின் தலைமையில் முஸ்லிம்களின் படை வெற்றியோடு மதீனா திரும்பியது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களால்ஸைஃபுல்லாஹ்என்று கண்ணியப்படுத்தப்பட்டுள்ளேன். ஆகவே, என்னை நீக்கம் செய்தது செல்லாது என்றோ, தனியாய் பிரிந்து சென்று வேறு அணியில் முஸ்லிம்களை ஒன்றிணைப்பேன் என்றோ காலித் அவர்கள் சூளுரைக்கவில்லை.

மாறாக, அதே யுத்தகளத்தில் சாதாரண ஒரு படை வீரராகவே களம் கண்டார்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

பின்னாளில், ஒரு நாள் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கலீஃபா அவர்களே! ”நான் எந்த ஒரு யுத்தகளத்திலும் இஸ்லாமிய யுத்த விதிகளை மீறியது கிடையாது. எந்த ஒரு மோசடியும் செய்தது கிடையாது. என் தலைமைப்பதவியை தவறாக பயன்படுத்தியதும் கிடையாது. எல்லா நிலையிலும் நான் ஓர் உண்மை இறை விசுவாசியாகவே நடந்து கொண்டிருக்கின்றேன்.

பின்னர் ஏன் நீங்கள் என்னை பதவி நீக்கம் செய்தீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள்என்னுடைய தனிப்பெரும் நேசத்திற்கும், பாசத்திற்கும் உடையவர்கள் நீங்கள். எப்போதும் உங்கள் மீது நான் தனிப்பெரும் கண்ணியம் வைத்துள்ளேன். உங்களை மோசடியாளனாகவோ அல்லது வேறு எந்த சிந்தனைகொண்டவனாகவோ காணவில்லை.

மாறாக! அல்லாஹ்வை மட்டுமே நினைத்த இதயங்கள்! அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடி கெஞ்சிய நாவுகள்! இப்பொது அதை உதறிவிட்டு காலித் போனால் வெற்றி, அவர் தலைமை தான் வெற்றிக்குரிய தலைமை என்று அல்லாஹ்வை மறந்து பேச எத்தனித்து விட்டனர்.

வேறு வழியில்லை உம்மை பதவியிலிருந்து இறக்கினால் தான் இம்மக்களுக்கு அல்லாஹ்வின் உதவி ஞாபகம் வரும் என்பதற்காகத் தான் உம்மை பதவி நீக்கம் செய்தேன்என்றார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்…. என்று கூறி முக மலர்ச்சியுடன் அங்கிருந்து விடை பெற்றுச்சென்றார்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

                              (நூல்: குலஃபாவுர்ரஸூல் {ஸல்}, பக்கம்:186-187)

பத்ர் யுத்தகளத்தில் கைதியாக பிடிக்கப்பட்டு மஸ்ஜிதுன் நபவீயின் ஓரத்தில் அமர்ந்து கொண்டிருந்த சுஹைல் இப்னு அம்ர் அவர்களைக் கண்ட உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! அனுமதி கொடுங்கள்! அவரின் பல்லை உடைத்து விடுகின்றேன்! இனி மேல் ஒரு போதும் உங்கள் முன்னால் வந்து நின்று குறைஷிகள் சார்பாக உரையாட மாட்டார்என்றார்கள்.

அது கேட்ட அண்ணலார்உமரே! அவரை விட்டு விடுங்கள்! பின்னாளில் உங்களுக்கு மகிழ்ச்சி தருகிற உரையொன்றை நிகழ்த்துவார்என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மையாகிப் போனது. குறைஷிகளின் பேச்சாளராககதீபாக விளங்கிய சுஹைல் (ரலி) அவர்கள் இஸ்லாமிய கதீபாக விளங்கினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித உயிர் இப்பூலகை விட்டு பிரிந்திருந்த தருணம் அது.

மயக்க நிலையில் சில முஸ்லிம்கள். நபி {ஸல்} மிஃராஜ் சென்றிருக்கின்றார்கள் என சில முஸ்லிம்கள். உருவிய வாளோடு உமர் (ரலி) அவர்கள் என பல்வேறு நிலைகளைக் கொண்டிருந்த தருணம் அது.

நாயகத்தோழர் அபூபக்ர் (ரலி) அவர்கள் மதீனத்து முஸ்லிம்களிடம் உரையாடிய அந்த உரை நாம் அறிந்ததே.

ஆனால், மக்காவில் முஸ்லிம்களின் நிலை என்ன வென்பதை வரலாற்று ஆசிரியர் காலித் முஹம்மத் காலித் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது
ஹரமுக்கு அருகே திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் முன்பு அநாயசமாக நின்று கொண்டு எழுச்சியான உரை நிகழ்த்தினார் சுஹைல் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்.

சுஹைல் (ரலி) மக்கள் வெள்ளத்தை நோக்கிசத்தியமாக முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான். அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை முழுமைபடுத்தி முடித்த பின்னரே அல்லாஹ் தன்னிடம் அழைத்துக் கொண்டான். அவர்கள் தங்களது தூதுத்துவத்தை நம்மிடையே மிகச்சரியாகவே கொண்டு வந்து சேர்ப்பித்துள்ளார்கள். நம்மை விட்டு முஹம்மத் {ஸல்} பிரிந்து சென்றிருக்கிற இந்த வேளையில் உண்மையில் ஓர் இறைவிசுவாசி அவர்கள் காட்டித்தந்த வழியிலேயே நடை போடுவான்என்று முழங்கிக்கொண்டிருந்தார்கள்.

இந்தச் செய்தி மதீனா நகர மக்களுக்கு தெரிவிக்கப்பட்ட போது, அங்கிருந்த உமர் (ரலி) அவர்கள்முன்னரே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இது குறித்து சொல்லியிருக்கின்றார்கள்என்றார்கள்.

                        (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:590)

உண்மையில் பிளவின் அருகே அந்த சமூகம் நின்று கொண்டிருந்தது. ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மதீனாவில் அபூபக்ர் (ரலி) அவர்களும், மக்காவில் சுஹைல் இப்னு அம்ர் (ரலி) அவர்களும் அன்றைக்குச் செய்த அந்தப் பிரசங்கம் தான் இந்த உம்மத்தை பெரும் அழிவுப்பாதையில் இருந்து காப்பாற்றியது.

இது போன்ற தலைமைப் பண்புகளை கொண்ட தலைவர்களால் மட்டும் தான் இந்த முஸ்லிம் சமூகம் மிகச்சிறந்த எதிர்காலத்தையும், உயரிய எதிர்பார்ப்புகளையும் எய்தப் பெற முடியும்.

சமுதாயத் தலைவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து, தங்களைப் புதுப்பிக்க வேண்டிய அருமையான சந்தர்ப்பம் இது.

விழிப்புணர்வு இல்லாத சமுதாயம் ஒரு போதும் தம் எதிர்பார்ப்புகளை அடைந்து கொண்டது கிடையாது.

உண்மையை உணராத எந்த ஒரு சமுதாயத்தின் எதிர்காலமும் பிரகாசமாய் அமைந்தது கிடையாது.

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِم
அல்லாஹ் கூறுகின்றான்: “எந்த ஒரு சமூகமும் தம் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை..”

وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் புறக்கணித்து விட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்; மேலும், அவர்கள் உங்களைப் போன்று இருக்கமாட்டார்கள்..”

ஆகவே, எதிர்காலக் கனவுகளை தூய்மையாக்குவோம்! வாழ்வின் மீதான எதிர்பார்ப்புகளை வாகாய் அமைப்போம்!

நல்ல தலைமையைப் பெற்று, எல்லாமும் பெற ஏகனாம் அல்லாஹ் அருள் புரிவானாக!

                    ஆமீன்! வஸ்ஸலாம்!!