Wednesday 19 November 2014

மண்ணறையை சுவனத்தின் பூஞ்சோலையாக்குவோம்!



மண்ணறையை சுவனத்தின் பூஞ்சோலையாக்குவோம்!



மனித வாழ்வென்பது பல உலகங்களோடு தொடர்புடையது.

ஆலமுல் அர்வாஹ் எனும் ஆன்மாக்களின் உலகத்தில் துவங்கி, பின்னர் ஆலமுல் அர்ஹாம் எனும் தாயின் கருவறை, பின்னர் ஆலமுத்துன்யா எனும் நாம் காணும் இந்த உலகம், பின்னர் ஆலமுல் பர்ஸக் எனும் மர்மங்கள் பல நிறைந்த மண்ணறை உலகம், பின்னர் ஆலமுல் ஹஷ்ர் எனும் ஒன்று திரட்டப்படும் உலகம், பின்னர் நன்மை, தீமை அடிப்படையில் சுவனம், நரகம் என்று தீர்ப்பளிக்கப்படுகிற ஆலமுல் ஹிஸாப் வரை தொடர்கிறது.

அல்லாஹ் எங்கிருந்து மனித வாழ்வை தீர்மானித்தானோ இறுதியாக அங்கேயே அவனுடைய சகாப்தத்தை நிறைவு செய்கிறான்.

இதற்காக ஒவ்வொரு உலகத்திருக்கும் மனிதனுக்கும் இடையே நெருங்கிய ஒரு தொடர்பையும், காரணத்தையும் அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்றான்.

அந்தத் தொடர்பு மனித வாழ்வோடு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதுவே அவனது இறுதி வாழ்வையும் தீர்மானிக்கிறது.

இதில், இறுதி வாழ்வை நன்மையின் அடிப்படையிலும், சுவனப் பேற்றின் அடிப்படையிலும் அமைத்துக் கொள்வது தான் நாம் வாழும் இந்த உலகத்திற்கான நியதியாக இறைவன் வகுத்திருக்கின்றான்.

இதற்கான தேர்வில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிற தளமாக அல்லாஹ் மண்ணறை உலகத்தை அமைத்திருக்கின்றான்.

عَنْ هَانِئٍ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانٍ  قَالَ : " كَانَ عُثْمَانُ رَضِي اللَّهُ عَنْهُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ , قَالَ فَقِيلَ لَهُ : تَذْكُرُ الْجَنَّةَ وَالنَّارَ وَلا تَبْكِي ، وَتَبْكِي مِنْ هَذَا ؟ فَقَالَ  إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ
  الْقَبْرُ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ الآخِرَةِ , فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ
، وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدَّ مِنْهُ , وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  مَا رَأَيْتُ مَنْظَرًا إِلا وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ " .

உஸ்மான் (ரலி) அவர்களின் பணியாளர் ஹானிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “உஸ்மான் (ரலி) அவர்கள் அடக்கஸ்தலத்திற்குச் சென்று விட்டால் தங்களின் தாடி நனையும் அளவிற்கு தேம்பித் தேம்பி அழுவார்கள்.

அவ்வாறு, ஒருமுறை உஸ்மான் (ரலி) அவர்கள் அழும்போது அருகில் நின்று கொண்டிருந்த தோழர்கள்உஸ்மான் (ரலி) அவர்களே! சுவர்க்கம், நரகம் குறித்து உங்களிடத்திலே கூறப்படுகிற போது கூட இவ்வாறு அழுததில்லையே? இது போன்ற மண்ணறைகளுக்கு நீங்கள் வந்து விட்டால் இப்படித் தேம்பி தேம்பி அழுகின்றீர்களே? ஏன்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக மண்ணறை என்பது மறுமையின் தங்குமிடங்களில் முதல் தங்குமிடம் மண்ணறை தான்; ஒருவன் அங்கே வெற்றி பெற்று விடுவான் எனில், அதற்குப் பின் உண்டான அத்துணை திடுக்கங்களில் இருந்தும் வெற்றி பெற்று விடுவான்.

ஒருவன் அங்கே தோற்றுப் போய் விடுவான் எனில், அதற்குப் பின் உண்டான அத்துணை திடுக்கங்களில் இருந்தும் வெற்றி பெறுவதென்பது மிகவும் கடினமாகி விடும்.” இதனைத் தொடர்ந்து மேலும், நபி {ஸல்} அவர்கள்உலகில்  மண்ணறையை விட பயங்கரம் நிறைந்த ஓர் இடத்தை நான் ஒரு போதும் கண்டதில்லைஎன்று கூறினார்கள்.

   ( நூல்: அல் ஃகராஜ் லி இமாமி அபூ யூஸுஃப் (ரஹ்), ஹதீஸ் எண்:39 )

மண்ணறை வாழ்க்கை உண்டா?

وعن البراء بن عازب رضي الله عنه ، قال :
كنا في جنازة في بقيع الغرقد ، فأتانا النبي صلى الله عليه وسلم ، فقعد وقعدنا حوله ، كأن على رءوسنا الطير ، وهو يلحد له ، فقال : أعوذ بالله من عذاب القبر ، ثلاث مرات ، ثم قال : إن العبد المؤمن إذا كان في إقبال من الآخرة وانقطاع من الدنيا ، نزلت إليه الملائكة ، كأن على وجوههم الشمس ، معهم كفن من أكفان الجنة ، وحنوط من حنوط الجنة ، فجلسوا منه مد البصر ، ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه ، فيقول : يا أيتها النفس الطيبة ، اخرجي إلى مغفرة من الله ورضوان ، قال : فتخرج تسيل كما تسيل القطرة من في السقاء ، فيأخذها ، فإذا أخذها لم يدعوها في يده طرفة عين ، حتى يأخذوها فيجعلوها في ذلك الكفن وذلك الحنوط ، ويخرج منها كأطيب نفحة مسك وجدت على وجه الأرض ، قال : فيصعدون بها ، فلا يمرون بها ، يعني على ملأ من الملائكة ، إلا قالوا : ما هذه الروح الطيبة ؟ فيقولون : فلان بن فلان ، بأحسن أسمائه التي كانوا يسمونه بها في الدنيا ، حتى ينتهوا بها إلى السماء ، فيستفتحون له ، فيفتح له ، فيشيعه من كل سماء مقربوها ، إلى السماء التي تليها ، حتى ينتهى بها إلى السماء السابعة ، فيقول الله عز وجل : اكتبوا كتاب عبدي في [ ص: 574 ] عليين ، وأعيدوه إلى الأرض ، فإني منها خلقتهم ، وفيها أعيدهم ، ومنها أخرجهم تارة أخرى .

قال : فتعاد روحه في جسده ، فيأتيه ملكان ، فيجلسانه ، فيقولان له : من ربك ؟ فيقول ربي الله ، فيقولان له : ما دينك ؟ فيقول : ديني الإسلام ، فيقولان له : ما هذا الرجل الذي بعث فيكم ؟ فيقول : هو رسول الله ، فيقولان له : ما علمك ؟ فيقول : قرأت كتاب الله فآمنت به وصدقت ، فينادي مناد من السماء : أن صدق عبدي ، فأفرشوه من الجنة ، وافتحوا له بابا إلى الجنة ، قال : فيأتيه من روحها وطيبها ، ويفسح له في قبره مد بصره ، قال : ويأتيه رجل حسن الوجه ، حسن الثياب ، طيب الريح ، فيقول : أبشر بالذي يسرك هذا يومك الذي كنت توعد ، فيقول له : من أنت ؟ فوجهك الوجه الذي يجيء بالخير ، فيقول : أنا عملك الصالح ، فيقول : يا رب ، أقم الساعة حتى أرجع إلى أهلي ومالي .

قال : وإن
العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة ، نزل إليه من السماء ملائكة سود الوجوه ، معهم المسوح ، فيجلسون منه مد البصر ، ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه ، فيقول : أيتها النفس الخبيثة ، اخرجي إلى سخط من الله وغضب ، قال : فتتفرق في جسده ، فينتزعها كما ينتزع السفود من الصوف المبلول ، فيأخذها ، فإذا أخذها لم يدعوها في يده طرفة عين ، حتى يجعلوها في تلك المسوح ، ويخرج منها كأنتن ريح خبيثة وجدت على وجه الأرض ، فيصعدون بها ، فلا يمرون بها على ملأ من الملائكة إلا قالوا : [ ص: 575 ] ما هذا الروح الخبيث ؟ فيقولون : فلان بن فلان بأقبح أسمائه التي كانوا يسمونه بها في الدنيا ، حتى ينتهى بها إلى السماء الدنيا ، فيستفتح له ، فلا يفتح له ، ثم قرأ رسول الله صلى الله عليه وسلم : لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط [ الأعراف : 40 ] فيقول الله عز وجل : اكتبوا كتابه في سجين ، في الأرض السفلى ، فتطرح روحه طرحا ، ثم قرأ : ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق [ الحج : 31 ] .

فتعاد روحه في جسده ، ويأتيه ملكان فيجلسانه ، فيقولان له : من ربك ؟ فيقول : هاه هاه ، لا أدري ، فيقولان له : ما هذا الرجل الذي بعث فيكم ، فيقول : هاه هاه ، لا أدري ، فينادي مناد من السماء : أن كذب ، فأفرشوه من النار ، وافتحوا له بابا إلى النار ، فيأتيه من حرها وسمومها ، ويضيق عليه قبره ، حتى تختلف أضلاعه ، ويأتيه رجل قبيح الوجه ، قبيح الثياب منتن الريح ، فيقول : أبشر بالذي يسوءك ، هذا
[ ص: 576 ] يومك الذي كنت توعد ، فيقول : من أنت ، فوجهك الوجه يجيء بالشر ، فيقول : أنا عملك الخبيث ، فيقول رب لا تقم الساعة .

رواه الإمام أحمد وأبو داود ، وروى
النسائي ، وابن ماجه أوله ، ورواه الحاكم وأبو عوانة الإسفراييني في ( ( صحيحيهما ) ) وابن حبان .


பர்ராஃ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அன்சாரித் தோழர் ஒருவரின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக பகீஉல் ஃகர்கத் எனும் மையவாடிக்கு நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம்.

மண்ணறையின் அருகே சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள்.

எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் (அமைதியாக) அமர்ந்திருந்தோம்.

 (திடீரென) நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள்.

இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருகை தருவார்கள்.

அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து ஒரு நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் அமர்ந்திருப்பார்கள்.

அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, ”! நல்ல ஆன்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு!” என்று கூறுவார்.

தோல் பையிலிருந்து நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆன்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை கைப்பற்றியதும் சற்று நேரம் கூட தாமதிக்காமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள்.

உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள்.

அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார்

அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள வானவர்கள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வார்கள்.

அப்போது எல்லாம் வல்ல அல்லாஹ், ஆன்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கிஎன் அடியானுடைய செயல்களை இல்லிய்யீனிலே’ (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு, (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவனுடைய உடலில் (கப்ரில் - மண்ணறையில்) அவருடைய ஆன்மாவைச் சேர்த்து விடுங்கள்!” என்று கூறுவான்.

(அந்த அடியானுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும்) அப்போது, அவரிடத்தில் இரு வானவர்கள் வந்து அவரை அமரவைத்து...

உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன்!” எனக் கூறுவார்.

அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளர் அல்லாஹ் கூறியதாக அழைத்துச் சொல்வார் ”என் அடியான் உண்மை சொல்லிவிட்டான்!

ஆகவே, அவருக்காக சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள்! என்று அறிவிப்புச் செய்வார்.  

அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும்.

மேலும், அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, அழகிய ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.

உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே! நீர் யார்? எனக் கேட்பார். நான் தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார்.

அப்போது அவர், ”இறைவா! என் குடும்பத்தார்களிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் விரைந்து செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக!” எனக் கூறுவார்.

இதே வேளையில், நிராகரிப்பாளன் ஒருவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும்.
அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் வந்து அவனருகில் அமர்வார்.
அவர் அவனை நோக்கி, கெட்ட ஆன்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார்.
அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும். முள் வேலியிலிருந்து நனைத்த கம்பளி துணியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். 

(இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) சற்று நேரம் கூட தாமதிக்காமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர்.
 
வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இந்த கெட்ட உயிர் யாருடையது? என அவ்வானவர்கள் கேட்பார்கள். 

அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும்.
 
இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்; ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ ()

“உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றைப் புறக்கணித்து, ஆணவம் கொண்டார்களோ அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும், குற்றவாளிகளுக்கு நம்மிடம் இத்தகைய கூலி தான் கிடைக்கும். (அல்குர்ஆன் 7:40)

வல்ல நாயன் அல்லாஹ், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, ”அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள ஸிஜ்ஜீன்” (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும்.

பிறகு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ ()

“இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31)
இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும்.

அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாதுஎன்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாதுஎன்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாதுஎன்பான். 

அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளர் அல்லாஹ் கூறியதாக அழைத்துச் சொல்வார் ”என் அடியான் பொய் சொல்லிவிட்டான்! 

ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள்! இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள்!” என்று சொல்லப்படும்.

அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.
 
உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே! நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், இறைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான்.

( நூல்: ஷரஹ் அகீதா அத் தஹாவிய்யா, பாடம்: அதாபுல் கப்ரி வ நயீமிஹி )

دخَل رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم مُصَلَّاه فرَأى ناسًا كأنهم يكتَشِرون قال : أما إنَّكم لو أكثرْتُم ذِكرَ هاذِمِ اللذاتِ لشغَلَكم عما أرى ( الموتَ ) فأكثِروا من ذِكرِ هاذِمِ اللذاتِ الموتَ فإنه لم يأتِ على القبرِ يومٌ إلا تكلم فيه فيقولُ أنا بيتُ الغُربةِ وأنا بيتُ الوَحدَةِ وأنا بيتُ التُّرابِ وأنا بيتُ الدودِ فإذا دُفِنَ العبدُ المؤمنُ قال له القبرُ مرحبًا وأهلًا أما إن كنتُ لأُحِبُّ مَن يمشي على ظهري إليَّ فإذا وَلِيتُك اليومَ وصِرتَ إليَّ فسَترى صَنيعي بك قال فيَتَّسِعُ له مَدَّ بصرِه ويُفتَحُ له بابٌ إلى الجنةِ وإذا دُفِنَ العبدُ الفاجرُ أو الكافرُ قال له القبرُ لا مرحبًا ولا أهلًا أمَا إن كنتُ لأُبغِضُ مَن يمشي على ظهري إليَّ فإذ وَلِيتُك اليومَ وصِرتَ إليَّ فسَترى صَنيعي بك . قال : فيَلتَئِمُ عليه حتى يلتقيَ عليه وتختَلِفَ أضلاعُه قال قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم بأصابِعِه فأدخَل بعضَها في جوفِ بعضٍ قال ويُقَيِّضُ اللهُ له سبعين تِنِّينًا لو أن واحدًا منها نفَخ في الأرضِ ما أنبَتَتْ شيئًا ما بَقِيَتِ الدنيا فيَنهَشَنَّه ويَخدِشَنَّه حتى يُفضى به إلى الحسابِ قال قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم إنما القبرُ رَوضةٌ من رِياضِ الجنةِ أو حُفرَةٌ من حُفَرِ النارِ

அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நபி {ஸல்} அவர்கள் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வருகை தந்தார்கள்.

அப்போது, அங்கே சிலர் உரக்கச் சப்தமிட்டு சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள்.

உடனடியாக அண்ணலார், சிரித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கிஇன்பங்களை இல்லாமல் ஆக்கிவிடும் மரணத்தை நீங்கள் அதிகமாக நினைவுகூர்வீர்களேயானால், அது உங்களை இது போன்று சிரிப்பதிலிருந்து தடுத்து விடும்.

ஆகவே, எல்லா வகையான இன்பங்களையும் ஒழித்துக் கட்டிவிடும் மரணத்தை மிக அதிகமாக நினைவு கூருங்கள்!”

ஏனெனில், ஒவ்வொரு நாளும் மண்ணறை கூறிக் கொண்டிருக்கின்றது: “நான் பயணத்தின் வீடாவேன்; நான் தனிமைச் சிறையாவேன்; மண் இல்லமாவேன்; புழு பூச்சிகளின் இருப்பிடமாவேன்!” என்று.

இறை நம்பிக்கையுடைய ஒரு மனிதன் மண்ணறையில் புதைக்கப்படும் போது மண்ணறை அவனை வரவேற்று பின்வருமாறு கூறும்:

உன் வரவு நல்வரவாகட்டும்! என் முதுகின் மீது நடந்து சென்றோர்களிலேயே எனக்கு அனைவரையும் விட அன்புக்குரியவனாய் நீ இருந்தாய்! இன்று நீ என்னிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறாய்! நான் உன்னிடம் எவ்வளவு பரிவுடன் நடந்து கொள்கிறேன் என்பதை நீ பார்க்கப் போகிறாய்!

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அந்த இறைநம்பிக்கையுடைய மனிதருக்காக அவரது மண்ணறை கண்ணுக்கெட்டும் தூரம் வரை விசாலமாகும். அவருக்காக சுவனத்தின் ஒரு வாசல் திறந்து விடப்படும்.”

இதுவே, ஒரு தீய செயல் புரிந்த ஒரு நிராகரிப்பாளன் புதைக்கப்படும் போது, அவனுக்காக மண்ணறை அவனை வரவேற்பதில்லை.

மாறாக, அவனை நோக்கி மண்ணறை பின் வருமாறு கூறும்: “என் மீது நடந்து சென்றவர்களிலேயே அனைவரையும் விட நீயே எனக்கு மிகவும் வெறுப்புக்குரியவனாக இருந்தாய்! இப்போது நீ என்னிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறாய்! நான் உன்னிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொள்ளப் போகிறேன் என்பதை நீ பார்க்கப்போகிறாய்!

அண்ணலார் கூறினார்கள்: பின்னர் அம்மண்ணறை அவனுக்காகக் குறுகிவிடும்! நெருக்கமாகி விடும்! எந்த அளவுக்கெனில் அவனது விலா எழும்புகள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொள்ளும்!” என்று கூறி விட்டு நபி {ஸல்} அவர்கள் ஒரு கரத்தின் விரல்களை மற்றொரு கரத்தின் விரல்களுக்குள் புகுத்திக் காட்டினார்கள்.

பின்பு கூறினார்கள்: “அவன் மீது எழுபது பாம்புகள் சாட்டப்படும்! அவற்றின் நச்சுத்தன்மை மிகக்கடுமையானதாய் இருக்கும். எந்தளவுக்கெனில், பூமியில் அதன் மூச்சுக்காற்று பட்டு விட்டால் அதன் பாதிப்பால் பூமி தன்னுடைய முளைப்பிக்கும் தன்மையை இழந்து விடும்.

மேலும், இந்தப் பாம்புகள் அனைத்தும் கேள்வி கணக்கு நாள் வரும் வரை தீண்டிக் கொண்டே இருக்கும். இறுதியாக, அவன் மஹ்ஷர் பெருவெளியில் கணக்கு ஒப்படைத்திட கொண்டு வரப்படுவான்.”

இதைக்கூறிய பிறகு அண்ணலார்ஒரு மனிதனுக்கு மண்ணறை என்பது ஒன்று சுவனத்து பூஞ்சோலைகளில் ஒரு சோலையாக அமையும்! அல்லது நரகத்து படுகுழிகளில் ஒரு படுகுழியாக அமையும்என்று கூறினார்கள்.

                                                         ( நூல்: திர்மிதீ )

உலக வாழ்வும்.. மனிதனும்...

இன்று உலகில் வாழ்கிற எல்லோருமே ஏதோ உலகை ஆளப்பிறந்தவர்களாக தம்மை எண்ணிக் கொண்டு உலக வாழ்வின் இன்பங்களையும், சுக போகங்களையும் அனுபவிப்பதிலேயே கவனத்தோடு ஈடுபட்டிருக்கின்றார்கள்.

இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் மனித வாழ்வைக் குறித்து சொல்வதைக் கேளுங்கள்.

மனிதனே நீ யார் தெரியுமா? நீ சில நாட்களின் தொகுப்பு. ஒவ்வொரு நாளும் கடந்து செல்லச் செல்ல உன்னிலே ஒரு பகுதி அழிந்து கொண்டிருக்கிறது. உனக்குரிய நாட்கள் நிறைவு பெறுகின்ற போது நீயும் ஒரு நாள் சென்று விடுவாய்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் சில நாட்களை வரையறுத்து வைத்திருக்கிறான்.

அந்த நாட்கள் முடிவுறுகிறபோது அவனது உலக வாழ்வும் முடிவுக்கு வருகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் முடிவடைகின்ற போது தனது ஆயுளின் ஒவ்வொரு பகுதி கழிந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.

மரணத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பியதாக சரித்திரம் கிடையாது. உலகில் வாழும் காலங்களில் மறுமைக்காக வாழாதவர்கள் மட்டுமே தங்களின் மரண நேரத்தில் மண்ணறைக்காக, மறுமைக்காக வாழ ஆசைப்படுவார்கள்.

ஆனால், அப்போது அவரின் ஆசை நிராகரிக்கப்படும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ () لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ ()

இறுதியில், அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்து விடுமேயானால், “என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக! அங்கு சென்று நான் நற்செயல் செய்து வருகின்றேன்!” என்று கூறத்தொடங்குவான்.

அவ்வாறு ஒரு போதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கின்ற வெறும் வார்த்தைகள் தாம்! (இறந்து போகும்) இவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் மறுமை நாள் வரையிலும் பர்ஸஃக் எனும் திரை வாழ்க்கை இருக்கின்றது.”                                  (அல்குர்ஆன்:23:99,100) 

 நீண்ட ஆயுளைப் பெற்ற இறைதூதர்களில் ஒருவர் தான் நபி நூஹ் (அலை)  அவர்கள்.

 இவ்வுலகில் சுமார் 1000 வருடங்கள் வாழ்ந்த அவர்களின் உயிரைக் கைப்பற்றுவதற்காக வந்த மலகுல் மௌத் அவரை நெருங்கி வந்துநீண்ட ஆயுளைப் பெற்று வாழ்ந்த அல்லாஹ்வின் தூதரே! இவ்வுலக வாழ்க்கையை நீங்கள் எப்படிக் கருதுகின்றீர்கள்?” எனக் கேட்டார்.

அதற்கு, நூஹ் (அலை) அவர்கள்நான் இந்த உலகத்தை இரண்டு வாசல்கள் உள்ள ஒரு வீட்டைப் போல் கருதுகின்றேன். ஒரு வாசல் வழியாக நுழைந்து இன்னொரு வாசல் வழியாக வெளியேறியதைப் போன்று இருக்கின்றதுஎனப் பதில் கூறினார்கள்.

ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த ஒரு இறைத்தூதர்  இவ்வுலக வாழ்வை எப்படிப் பார்க்கிறார் என்பதை சிந்தித்துப் பார்க்க நாம் கடமைப் பட்டிருக்கின்றோம். இது தான் உலக வாழ்க்கை.

எத்துனை நாட்கள் வாழ்கிறோம் என்பதை விட எப்படி வாழ்கிறோம் என்பதும், நம்முடைய இறுதி முடிவு எப்படி அமைந்திருக்கிறது என்பதையும் பொருத்து தான் நம்முடைய மண்ணறை சுவனத்தின் பூஞ்சோலையாக மாற்றம் பெரும்.

உலகில் தோன்றிய அத்தனை நபிமார்களும் உலக வாழ்வில் துன்பங்களை  சந்தித்திருக்கிறார்கள்.

ஆனால்,  நபி யூஸுப் (அலை) அவர் கள் தனது வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் கடுமையாக சோதிக்கப்பட்டார்கள். அப்போதும் அவர் மரணத்தையே நினைத்துப் பார்த்தார். பின்னர் அவருக்கு ஆட்சி,  அதிகாரம் கிடைத்தது. அந்த நிலையிலும் அவர் மரணத்தையே நினைத்துப் பார்த்தார்கள்.

நபி யூஸுப் (அலை) அவர்கள் ஆட்சியாளராக இருந்த போது அவர் பிரார்த்தித்த துஆவை அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது..

رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ ()

யா அல்லாஹ் நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து கனவுகளின் விளக்கங்களையும் எனக்குக் கற்றுத் தந்தாய் வானங்களையும் பூமியையும் படைத்தவனே இம் மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன். முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்து விடுவாயாக!                                                                                                                                                (அல்குர்ஆன்:12: 101)

ஆக, ஒரு இறை நம்பிக்கையாளனுடைய பிரார்தனையாக, உலக வாழ்வின் மீதான தேட்டமாக இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

மேன்மக்களும்... மண்ணறை பற்றிய கவலையும்...
عن ابن عباس قال: دخلت على عمر بن الخطاب رضي الله عنه حين طعن فقلت: أبشر بالجنة يا أمير المؤمنين, أسلمت حين كفر الناس, وجاهدت مع رسول الله حين خذله الناس, وقبض رسول الله وهو عنك راض, ولم يختلف في خلافتك اثنان, وقتلت شهيدا. فقال أعد علي: فأعدت عليه, فقال: والله الذي لا إله غيره, لو أن لي ما على الأرض من صفراء وبيضاء لافتديت به من هول المطلع.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஸைய்யிதினா உமர் (ரலி) அவர்கள் அபூ லுஃலுவுல் ஃபைரோஸி எனும் கொடியோனால் வீழ்த்தப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்த போது, நபித்தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து நலம் விசாரித்த வண்ணம் இருந்தனர்.

அப்போது நானும் அங்கு சென்றேன். உமர் (ரலி) அவர்களைப் பார்த்துஅமீருல் முஃமினீன் அவர்களே! சுவனத்தைக் கொண்டு சோபனம் பெறுங்கள்! ஏனெனில், மக்களெல்லாம் நிராகரித்த போது நீங்கள் இஸ்லாத்தில் இணைந்தீர்கள்! அல்லாஹ்வின் மார்க்கத்திற்கான யுத்தங்களில் மக்கள் பின் வாங்கிய போது முன் வரிசையில் நின்று போர் புரிந்தீர்கள்!

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இப்பூலகை விட்டுப் பிரியும் தருணத்தில் அவர்களின் முழுப் பொருத்தத்திற்கும் பாத்தியமான நிலையில் நீங்கள் இருந்தீர்கள்! இப்போது நீங்கள் ஷஹாதத் எனும் வீர மரணத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றீர்கள்என்றேன்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் (ரலி) அவர்களே! மீண்டும் ஒரு முறை நீங்கள் சொன்னதை என் காதருகே வந்து சொல்லுங்கள்என்றார்கள்.

மீண்டும் நான் முன்பு போலவே கூறினேன். அதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இந்த பூமி முழுவதும் தங்கமாகவும், வெள்ளியாகவும் இருக்குமேயானால் அதை நான் ஈடாகக் கொடுத்து மண்ணறை வாழ்விலிருந்து நான் பாதுகாப்பு பெற்றிடுவேனே!” என கவலையோடு கூறினார்கள்.

நான் துல் பஜாதைனாக (ரலி) இருக்கக் கூடாதா?...

خرج صلى الله عليه وسلم إلى تبوك، وفي ليلة من الليالي نام هو والصحابة، وكانوا في غزوة في سبيل الله، قال ابن مسعود - رضي الله عنه وأرضاه -: قمت آخر الليل فنظرت إلى فراش الرسول - صلى الله عليه وسلم - فلم أجده في فراشه، فوضعت كفي على فراشه فإذا هو بارد، وذهبت إلى فراش أبي بكر فلم أجده على فراشه، فالتفت إلى فراش عمر فما وجدته، قال: وإذا بنور في آخر المخيم، وفي طرف المعسكر، فذهبت إلى ذلك النور ونظرت، فإذا قبر محفور، والرسول - عليه الصلاة والسلام - قد نزل في القبر، وإذا جنازة معروضة، وإذا ميت قد سجي في الأكفان، وأبو بكر وعمر حول الجنازة، والرسول - صلى الله عليه وسلم - يقول لأبي بكر وعمر: « دليا لي صاحبكما».

فلما أنزلاه نزله - صلى الله عليه وسلم - في القبر، ثم دمعت عيناه - صلى الله عليه وسلم - ثم التفت إلى القبلة ورفع يديه وقال: «اللهم إنّي أمسيت عنه راض فأرض عنه، اللهم إنّي أمسيت عنه راض فارض عنه».
قال: قلت من هذا؟

قالوا: هذا أخوك عبد الله ذو البجادين مات في أول الليل.

قال ابن مسعود: فوددت والله أني أنا الميت


இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

தபூக் யுத்தத்திற்காக எதிரிகளின் இருப்பிடத்திற்கே நபித்தோழர்களை அண்ணலார் அழைத்துச் சென்றிருந்த தருணம் அது.

முதல் நாள் இரவு திடீரென நான் கண்விழித்தேன். அண்ணலாரின் கூடாரத்தில் அண்ணலாரைப் பார்த்தேன். ஆனால், நபி {ஸல்} அவர்கள் அங்கு இல்லை.

உடனடியாக நபி {ஸல்} அவர்களைத் தேடியவாறு அபூபக்ர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்கு வந்தேன். அங்கு அண்ணலாரும் இல்லை, அபூபக்ர் (ரலி) அவர்களும் இல்லை.

அங்கிருந்து நேராக உமர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்குச் சென்று தேடினால், அங்கு உமர் (ரலி) அவர்களும் இல்லை.

மூவரையும் தேடிக் கொண்டிருக்கும் போது படை வீரர்கள் முகாமிட்டிருந்த பகுதியின் எல்லைப் பகுதியிலிருந்து நெருப்பு மூட்டப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

அதன் அருகே விரைவாகச் சென்று பார்த்தேன். அங்கு அண்ணலார் {ஸல்} அவர்களும், அபூபக்ர்(ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களும் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.

அங்கே, கப்ர் ஒன்று தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு ஜனாஸாவும் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் இறந்து போன அந்த மனிதர் யார்? என்று வினவினேன்.

அதற்கு அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உமது தோழர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் (ரலி) அவர்கள் தான் என்று கூறினார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் மண்ணறைக்குள் இறங்கினார்கள். பின்னர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்களின் உடலை குழிக்குள் இறக்குமாறு கூறினார்கள்.

பின்னர், மண்ணறைக்குள் நின்றவாறு வானை நோக்கி கையை உயர்த்தியாஅல்லாஹ்! இன்று மாலை நேரத்தை அடைகிற போது இந்த அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்கள் வாழ்வை  நான் பொருந்திக் கொண்டேன்! உன்னுடைய தூதராகிய நான் பொருந்திக் கொள்கிற நிலையில் அவர் இவ்வுலகில் வாழ்ந்தார்! எனவே யாஅல்லாஹ் நீயும் அவரைப் பொருந்திக் கொள்வாயாக!” என்று இருமுறை துஆ செய்தார்கள். பின்னர் தாங்களே நல்லடக்கமும் செய்தார்கள்.

அப்போது நான் இறந்து போன அப்துல்லாஹ் துல் பஜாதைனாக இருந்திருக்கக் கூடாத என ஏங்கினேன்.”

                                   ( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல்ஃகாபா )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பொருந்திக் கொள்கிற அளவில் வாழ்வது எவ்வளவு பெறும் பேற்றுடைய வாழ்வு. அதுவும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே அதற்கு சான்றும் பகர்கிறார்கள்.

அத்தகைய மேன்மையை அடைந்த அவரின் மண்ணறை பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையாக அல்லவா இருக்கும். அந்த பாக்கியம் தமக்கு கிடைக்காமல் போய் விட்டதே என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஏங்கினார்கள்.

மண்ணறையின் பதில்….

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இப்பூலகை விட்டுப் பிரிந்த ஆறு மாதங்களில் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களும் இறப்பெய்கிறார்கள்.

ஜனாஸா தொழுகைக்குப் பின்னர் அன்னையவர்களின் ஜனாஸா அடக்கஸ்தலத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

حدثني عبد الرحمن بن عبد العزيز بن عبد الله بن حنيف ، عن عبد الله بن أبي بكر بن حزم ، عن عمرة بنت عبد الرحمن ، قالت : « فصلى عليها العباس بن عبد المطلب ونزل في حفرتها هو وعلي والفضل بن عباس »

குழியில் ஃபள்ல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும், அலீ (ரலி) அவர்களும் இறங்கி நின்று அன்னையவர்களின் உடலை வாங்கி வைக்கிறார்கள்.

பின்னர், சுற்றி நின்றவர்களில் (அபூதர் (ரலி) அவர்கள் என்று ஒருஅறிவிப்பிலும்) ஒருவர் கப்ரை நோக்கிஓ மண்ணறையே! இங்கே யாருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?

சொல்கிறேன், கேட்டுக்கொள்! அல்லாஹ்வின் தூதர் முஹம்மது {ஸல்} அவர்களின் அன்பு மகள், அவர்களின் இதயம், அவர்களின் ஒரு பகுதி, ஈரல்குலைத் துண்டு அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஆவார்கள்.

ஓ மண்ணறையே! இங்கே யாருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?” சொல்கிறேன், கேட்டுக்கொள்! அலீ (ரலி) அவர்களின் மனைவி, சுவனத்து இளைஞர்களின் இரு தலைவர்களான ஹஸன், ஹுஸைன் (ரலிஅன்ஹுமா) ஆகியோரின் தாயார் ஃபாத்திமா (ரலி) ஆவார்கள்என்று கூறினார்.

உடனடியாக, மண்ணறையில் இருந்து ஓர் அசரீரி கேட்டதுயார் அணுவளவு நன்மை செய்தாரோ அதை இங்கே கண்டு கொள்வார்; யார் அணுவளவு தீமை செய்தாரோ அதை இங்கே கண்டு கொள்வார்”.
                                            ( நூல்: துர்ரியதுத்தாஹிரா )

ஒழுக்கத்தின் சிகரம், குணங்களின் குன்று, பண்புகளின் பாசறை, சுவனத்து தலைவி அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களின் புனித உடலை சுமந்த மண்ணறை இவ்வாறு கூறியதென்றால்

நாமெல்லாம் எந்த தைரியத்தில் உலகில் மண்ணறை வாழ்வை மறந்து அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றோம்.

அல்லாஹ்வும், அவன் தூதரும் பொருந்திக் கொள்கிற வாழ்வை மேற்கொண்டு நன் மண்ணறையை சொர்க்கத்தின் பூஞ்சோலையாக்குவோம்!

வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக! ஆமீன்! வஸ்ஸலாம்!!



1 comment:

  1. கண்களை குளமாக்கி விட்டீர்கள்

    ReplyDelete