Thursday 4 December 2014

இறையில்லம்! அதன் மாண்பும்.. மகத்துவமும்…



இறையில்லம்! அதன் மாண்பும்.. மகத்துவமும்





இறையில்லம் என்பது ஓர் இறைநம்பிக்கையாளனின் உணர்வுகளோடும், உள்ளத்தோடும் இரண்டற கலந்து விட்ட ஓர் உன்னதமான அங்கமாகும்.

இறையில்லத்தோடு அவன் தொடர்பில் இருக்கும் காலமெல்லாம் இறைவனின் அருள் மழையில் சதா அவன் நனைந்து கொண்டே இருக்கின்றான்.

ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிருக்கு நிகரான, புனிதம் வாய்ந்த ஒன்று இருக்குமேயானால் அது இறையில்லமாகத்தான் இருக்கும்.

ஏனெனில், உயிரின் உரிமையும் இறையில்லத்தின் உரிமையும் முற்றிலும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது.

وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ
அல்லாஹ் கூறுகின்றான்: ”மேலும், திண்ணமாக மஸ்ஜித்கள்பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும்”.                          ( அல்குர்ஆன்:72:18 )

إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ
அல்லாஹ் கூறுகின்றான்:

உண்மையாக, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், உடமைகளையும் சுவனத்திற்கு பகரமாய் விலைக்கு வாங்கிக் கொண்டான்”.                                                 ( அல்குர்ஆன்:9:111 )

உலகில் வாழ்கிற போது இறையில்லத்துடன் ஓர் இறைநம்பிக்கையாளன் கொண்டிருக்கிற தொடர்பு என்பது உளப்பூர்வமானதாகவும், உயிரோட்டமானதாகவும் அமைந்து விடும் பட்சத்தில் அல்லாஹ்வின் அரியணையின் கீழ் நிழல் பெறுகிற பெரும் பேற்றை வழங்கி கௌரவிப்பதாக இஸ்லாம் உயர்த்திக் கூறுகிறது.

فعن أبي هريرة - رضي الله عنه - أن رسول الله - صلى الله عليه وسلم - قال: ((سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ: الْإِمَامُ الْعَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ، وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ))
البخاري (620)، ومسلم (1712).

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான்.

 நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபர், இறையில்லத்தோடு தனது இதயத்தை தொடர்புபடுத்திய மனிதர், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்.

நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

முன்னுரிமை பெறும் அம்சம்.

இறைநம்பிக்கையாளர்களின் வாழ்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும் முதல் அம்சமாக இருப்பதும் இறையில்லம் தான்.

அல்லாஹ் தன் திருமுன் உறவாடிட, விண்ணுலகப் பயணத்திற்கு நபிகளாரை அழைத்துச் சென்ற போது பைத்துல் முகத்தஸ் எனும் புனித இறையில்லத்திற்கு அழைத்து வந்து, பின்னர் அங்கிருந்து விண்ணுலகிற்கு அழைத்துச் சென்றதாக அல்குர்ஆனில் கூறுகின்றான்.

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ ()
மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகுதொலைவில் இருக்கிற மஸ்ஜிதுல் அக்ஸா வரையில்! அதன் சுற்றுப் புறங்களை அவன் அருள்வளம் நிறைந்ததாய் ஆக்கியுள்ளான்.

எதற்காக அழைத்துச் சென்றானெனில், தன்னுடைய சான்றுகளை அவருக்கு காண்பிப்பதற்காக! உண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்”.                              ( அல்குர்ஆன்:17:1 )
وفي يوم الاثنين 8 ربيع الأول سنة 14 من النبوة ـ وهي السنة الأولى من الهجرة نزل رسول الله صلى الله عليه وسلم بقباء .
وأقام رسول الله صلى الله عليه وسلم بقباء أربعة أيام : الاثنين والثلاثاء والأربعاء والخميس  وأسس مسجد قباء وصلى فيه، وهو أول مسجد أسس على التقوى بعد النبوة،

பெருமானார் {ஸல்} அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற போது வழியில் குபா எனும் இடத்தில் நான்கு நாட்கள் தங்கினார்கள்.

நபித்துவத்தின் பதினான்காம் ஆண்டு, அதாவது ஹிஜ்ராவின் முதல் ஆண்டு ரபீவுல் அவ்வல் பிறை 8,9,10,11 (திங்கள் முதல் வியாழன் வரை) ஆகிய நாட்கள் தங்கினார்கள்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு பள்ளியை நிர்மாணித்து அங்கே ஐவேளை தொழகைகளை நிறைவேற்றினார்கள். குபாவில் நிர்மாணித்த அந்த இறையில்லம் தான் நபித்துவத்திற்குப் பிறகு இறைவனை வணங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்ட முதல் பள்ளியாகும்.

            ( நூல்: அர்ரஹீக்குல் மஃக்தூம், பாடம்: ஹிஜ்ரத்துன் நபீ {ஸல்}…)

தங்கியதென்னவோ நான்கு நாட்கள் தான். ஆனால்,ஓர் இறைநம்பிக்கையாளன் தனக்கான வாழ்வியல் நோக்கங்களில் பிரதானமானதாக, முன்னுரிமை தர வேண்டிய முதல் அம்சமாக இறையில்லம் தான் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதை இந்த உம்மத்துக்கு உணர்த்திக் காட்டினார்கள்.

فإن أول عمل قام به النبي صلى الله عليه وسلم عندما قدم إلى المدينة المنورة هو بناؤه لمسجده الشريف في المكان الذي بركت فيه ناقته، وكان ملكاً ليتيمين فاشتراه النبي صلى الله عليه وسلم وأقام عليه المسجد، وكان يعمل فيه بنفسه مع أصحابه الكرام، وقد بدأ بناء المسجد في ربيع الأول سنة واحد من الهجرة بعد وصول النبي صلى الله عليه وسلم مباشرة، كما جاء في كتاب "الرحيق المختوم" للمباركفوري وغيره.

மதீனா வந்த பின்னரும் கூட மஸ்ஜிதுன் நபவீயை நிர்மாணிப்பதில் அண்ணலார் காட்டிய அக்கறை மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலுக்கு தேர்ந்தெடுத்த இடம் இரண்டு அநாதை இளைஞர்களுக்கு சொந்தமானது. அந்த இடத்தை விலைக்கு வாங்கி நபி {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயை நிர்மாணித்தார்கள்.

அந்த இடத்தை வாங்குவதற்கான விலையை பனூ நஜ்ஜார் கோத்திரத்தார்கள் எந்த வித பிரதிபலனும் நோக்காமல் கொடுத்தார்கள்.

              ( நூல்: அர்ரஹீக்குல் மஃக்தூம், பாடம்: ஹிஜ்ரதுன் நபி {ஸல்}.. )

அண்ணலாரின் அடிச்சுவட்டில் அப்படியே பின்பற்றிய, நேர்வழி நின்று ஆட்சி செய்த கலீஃபாக்களும் இஸ்லாமிய எல்லைகள் விரிவடைகிற போதெல்லாம் முதலாவதாக அங்கே இறையில்லம் அமைப்பதற்கே முன்னுரிமை கொடுத்து வந்தார்கள்.

احتطّ عتبة مكان الأبلّة مدينة البصرة، وعمّرها وبنى مسجدها العظيم..
ولبث عتبة مكانه يصلي بالناس، ويفقههم في دينهم، ويحكم بينهم بالعدل، ويضرب لهم أروع المثل في الزهد والورع والبساطة...

ஃகலீஃபா உமர் (ரலி) அவர்கள் பாரசீகத்தை வென்றெடுக்க இறுதியாக அனுப்பிய படைப்பிரிவுக்கு உத்பா இப்னு ஃகஸ்வான் (ரலி) அவர்களை தளபதியாக நியமித்தார்கள்.

பாரசீகர்களின் இராணுவத் தளமான உபுல்லாவின் கோட்டையைக் கைப்பற்றி, வெற்றியை பதிவு செய்தது உத்பா (ரலி) அவர்களின் தலைமையிலான முஸ்லிம் அணியினர்.

கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு இந்த வெற்றியை குறித்தும் எதிர்கால திட்டம் குறித்தும் விரிவான ஒரு கடிதத்தை எழுதினார்கள்.

அதில் உடனடியாக அங்கே ஓர் பள்ளிவாசலை நிறுவ வேண்டும் என்றும்  உபுல்லாவின் கோட்டையை இஸ்லாமிய இராணுவத்தளமாகவும், ஒரு நகரை உருவாக்கி ஆட்சியின்  தலைமையிடமாகவும் அமைக்க வேண்டும்கொண்டு என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

உத்பா (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதற்கு இசைவு தந்தார்கள்.

பஸ்ரா எனும் நகரை உருவாக்கி, ஒரு பள்ளிவாசலையும் நிறுவி, இராணுவத் தலைமையிடத்தையும் உருவாக்கினார்கள்.

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்களையே இஸ்லாமிய அரசின் முதல் ஆளுநராக நியமித்தார்கள்.

அங்கேயே உத்பா (ரலி) அவர்கள் முதல் இமாமாகவும் பரிணமித்தார்கள்.

                              ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}..... )

ஆக அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், அவர் தம் அருமைத் தோழர்களும் இறையில்லத்திற்கு வழங்கிய முக்கியத்துவத்தை மேலே கூறிய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

இறையில்லத் தொடர்பு! சன்மானமும்.... சோபனமும்....

روى الشيخان في صحيحيهما أن عثمان بن عفان - رضي الله عنه - أراد بناء المسجد، فكره الناس ذلك، وأحبوا أن يدعه، فقال عثمان - رضي الله عنه -: سمعت النبي - صلى الله عليه وسلم - يقول: ((مَنْ بَنَى مَسْجِدًا - قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ - بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ))
البخاري (431)، ومسلم (829).
உஸ்மான் (ரலி) அவர்கள் தங்களின் ஆட்சிக்காலத்தில் மதீனாவின் ஒரு பகுதியில் இறையில்லத்தை எழுப்புவதற்கு விரும்பிய போது, அப்பகுதியின் மக்கள் அதற்கு விரும்பவில்லை.

அப்போது, விரும்பாத அம்மக்களை அழைத்து, உஸ்மான் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.. “எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இறையில்லத்தைக் கட்டுவாரோ, அவருக்காக அல்லாஹுதஆலா சுவனத்தில் மாளிகை ஒன்றைக் கட்டுகின்றான்என்று கூறினார்கள்.                                ( நூல்: புகாரி, முஸ்லிம் )

روى أبو هريرة أنه - عليه الصلاة والسلام - قال: ((أَحَبُّ الْبِلَادِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا، وَأَبْغَضُ الْبِلَادِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا)).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உலகில் எல்லா இடங்களைக் காட்டிலும் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் இறையில்லங்களாகும். மிக வெறுப்பான இடம் கடைவீதிகளாகும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கின்றேன்.                ( நூல்: முஸ்லிம் )

وقال - عليه الصلاة والسلام -: ((مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنْ الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ))"
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் காலை, மாலை இறையில்லத்திற்குச் செல்கின்றாரோ, அவருக்கு சொர்க்கத்தில் விருந்து உபசரிப்பு செய்ய அல்லாஹ் ஏற்பாடு செய்கின்றான். காலையோ, மாலையோ அவர் எத்தனை முறை இறையில்லத்துக்குச் சென்றாலும் அத்தனை முறையும் அவருக்கு அந்த ஏற்பாடு செய்யப்படுகின்றதுஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

فعن أبي هريرة - رضي الله عنه - قال: قال - عليه الصلاة والسلام -: ((مَنْ تَطَهَّرَ فِي بَيْتِهِ، ثُمَّ مَشَى إِلَى بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ لِيَقْضِيَ فَرِيضَةً مِنْ فَرَائِضِ اللَّهِ؛ كَانَتْ خَطْوَتَاهُ إِحْدَاهُمَا تَحُطُّ خَطِيئَةً، وَالْأُخْرَى تَرْفَعُ دَرَجَةً))
10 مسلم (1070).
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் வீட்டிலிருந்து உளூ செய்து விட்டு, பின்னர் இறையில்லத்திற்கு அல்லாஹ்வின் கட்டளைகளில் ஏதேனுமொரு கட்டளையை நிறைவேற்ற நடந்து செல்வார் எனில், அவரின் ஒவ்வொரு எட்டிற்கும் இரண்டு விதமான சன்மானம் வழங்கப்படுகின்றன. 1. அவரின் ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது. 2. அவருக்கு சுவனத்தின் ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகின்றதுஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.      ( நூல்: முஸ்லிம் )

عن أبي الدرداء
 رضي الله عنه قال
: سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول: ((المسجد بيت كل تقي، وتكفل الله
 لمن كان المسجد بيته بالروح والرحمة، والجواز على الصراط إلى رضوان الله إلى الجنة

அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறையில்லம் என்பது இறையச்சமுள்ள ஒவ்வொருவரின் இனிய இல்லமாகும். எவருடைய இல்லம் இறையில்லமாக ஆகிவிடுமோ, அவருக்கு ஆரோக்கியத்தை கொடுக்கவும், தன் அருளைப் பொழியவும், சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதில் கடக்கவும், தன் திருப்பொருத்தத்தை அளிக்கவும், மேலான சுவனத்தைத் தரவும் அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ரானீ )

وأخرج الإمام أحمد أيضا عن معاذ بن جبل رضي الله عنه أن نبي الله صلى الله عليه وسلم قال إن الشيطان ذئب الإنسان كذئب الغنم ، يأخذ الشاة القاصية والناحية ، فإياكم والشعاب ، وعليكم بالجماعة والعامة والمسجد }

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஆடுகளை வேட்டையாடும் ஓநாயைப் போன்று, மனிதனை வேட்டையாடும் ஓநாய் ஷைத்தான் ஆவான். மந்தையை விட்டும் தனித்திருக்கிற ஆட்டையே ஓநாய் பிடித்துக் கொள்கின்றது. அது போன்றே ஷைத்தானும் ஆவான்.

ஆகவே, தனித்து செயல்படுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்; கூட்டாக இருப்பது, பொதுமக்களுடன் சேர்ந்து இருப்பது, இறையில்லத்தில் இருப்பது ஆகியவற்றை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்:அஹ்மத்)

وفي الترمذي عن النبي صلى الله عليه وسلم أنه قال :
إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان ; لأن الله يقول : { إنما يعمر مساجد الله } الآية. قلت : رواه الترمذي كما قال شيخ الإسلام من حديث أبي سعيد الخدري رضي الله عنه وقال : حديث حسن غريب ، ورواه ابن ماجه وابن خزيمة وابن حبان في صحيحيهما والحاكم من طريق دراج أبي السمح عن أبي الهيثم عن أبي سعيد . وقال الحاكم صحيح الإسناد .

அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறையில்லத்தோடு அதிக தொடர்பில் இருப்பவரைக் கண்டால் அவர், இறைநம்பிக்கை உள்ளவர் என்று நீங்கள் சாட்சியம் சொல்லுங்கள்என்று கூறிய மாநபி {ஸல்} அவர்கள்அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களே! இறையில்லங்களை நிர்வகிக்கத் தகுதியுடையோர்என அல்லாஹ் கூறியுள்ளான், என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                      ( நூல்: திர்மிதீ )


عن ابن عباس أن امرأة كانت تلقط القذى من المسجد فتوفيت ، فلم يؤذن النبي - صلى الله عليه وسلم - بدفنها ، فقال النبي - صلى الله عليه وسلم - : " إذا مات لكم ميت فآذنوني " وصلى عليها وقال :
 " إني رأيتها في الجنة [ لما كانت ] تلقط القذى من المسجد " .
 .
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு பெண்மணி மாநபி {ஸல்} அவர்களின் பள்ளிவாசலில் குப்பை கூளங்களை அகற்றி வந்தார். ஒரு நாள் அப்பெண்மணி இறந்து விட்டார். அவரை அடக்கம் செய்த விவரத்தை நபித்தோழர்கள் அண்ணலாருக்குத் தெரிவிக்கவில்லை.

அண்ணலாருக்குத் தெரிய வந்த போதுஉங்களில் ஒருவர் இறந்து விட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்என்று கூறிய அண்ணலார், பிறகு அப்பெண்மணிக்காக ஜனாஸா தொழுகை தொழுதார்கள்.

பின்னர், தோழர்களை நோக்கிஇப்பெண்மணி பள்ளியில் குப்பைக் கூளங்களைச் சுத்தம் செய்து வந்த காரணத்திற்காக சுவனத்தில் இருந்ததை நான் பார்த்தேன்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.              ( நூல்: தப்ரானீ )


وأخرج الإمام أحمد رضي الله عنه عن أبي هريرة رضوان الله عليه عن النبي صلى الله عليه وسلم قال {
إن للمساجد أوتادا الملائكة جلساؤهم ، إن غابوا يفتقدوهم ، وإن مرضوا عادوهم ، وإن كانوا في حاجة أعانوهم } .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறையில்லத்திற்கென முளைக்கம்புகள் இருக்கின்றன. எவர்கள் இறையில்லத்தில் ஒன்று கூடுவதை வழக்கமாக்கிக் கொள்கின்றார்களோ, அவர்களுடன் வானவர்கள் அமர்கின்றனர்.

பள்ளியில் அவர்களை காணவில்லை என்றால், வானவர்கள் தேடுகின்றனர். மேலும், அவர்கள் நோயுற்றால் நலம் விசாரிக்கச் செல்கின்றனர். ஏதேனும் தேவை கருதி அவர்கள் வெளியே சென்றால் அவர்களுக்கு வானவர்கள் உதவுகின்றனர்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                            ( நூல்: அஹ்மத் )

حدثنا محمد بن العلاء حدثنا حسين بن علي عن زائدة عن هشام بن عروة عن أبيه عن عائشة قالت أمر رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وأن تنظف وتطيب

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் வாழும் பகுதிகளில் இறையில்லங்களை அமைத்திட உத்தரவிட்டார்கள். மேலும், அவைகளை சுத்தமாகவும் நறுமணம் கமழும் இடமாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்கள்”. ( நூல்:அபூதாவூத்)

ஆக ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்வில் நீங்காத அருட்கொடையாக, ஈருலக வாழ்க்கையின் உயர்வுக்கும் ஆதாரமாக இருக்கிற ஓர் உயர்ந்த அங்கம் தான் இறையில்லம் எனும் பள்ளிவாசல் ஆகும்.

அத்தகைய ஓர் பள்ளிவாசலை இந்த தேசத்தின் இஸ்லாமிய சமூகம் காவிக் கயவர்களின் கரசேவையால் இழந்து நாளையோடு 22 ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆம்! டிசம்பர் 6, 1992 இந்திய தேசத்தின் ஒவ்வொரு இஸ்லாமியனின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நாள்.

பாபர் பள்ளிவாசல் ஓர் வரலாற்றுப் பார்வை....

பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ராஹிம் லோடியாவார். இவர் 1524 ல் பள்ளிவாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவரால் அப்பணியைத் தொடரமுடியவில்லை.

காரணம் இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற்றினார் பாபர். கி.பி 1528 ல் அந்த அடித்தளத்தின் மீது தான் பாபர் பள்ளியைக் கட்டினார் மிர்பக்கி என்பவர்.

இந்த மிர்பக்கி பேரரசர் பாபர் அவர்களின் கீழ் பணிபுரிந்த ஓர் படைத்தலைவர். இவரது சொந்த ஊர் தாஷ்கண்ட். இப்பள்ளிவாசல் அந்தப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றிடும் முகமாகத்தான் கட்டப்பட்டது.

ஆட்சியாளர் ஜஹாங்கீர் அவர்கள் காலம் முதற்கொண்டு தான் இந்தப் மஸ்ஜித் பாபரி மஸ்ஜித் என்றழைக்கப்பட்டது. மஸ்ஜித் கட்டி முடிக்கப்பட்ட அந்த நாள் முதல் முஸ்லிம்கள் தொழுகைகளைக் கூட்டாக இந்த மஸ்ஜிதில் தான்  நிறைவேற்றி வந்தார்கள்.

பாபர் மஸ்ஜித் வழக்கும்... அது கடந்து வந்த பாதையும்...

1949 –ஆம் ஆண்டு டிசம்பர் 23 –ஆம் தேதி இரவுதொழுகையை நிறைவேற்றி விட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகையை நிறைவேற்ற வந்த போது, அங்கே பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமணர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்றனர்.

திட்டமிட்டபடி நடந்த இந்த செயலை மையமாக வைத்து, ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் பிரச்சனையை துவக்கியது.

வன்முறைக்கும்பல் ஒன்று பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து சிலைகளை வைத்ததாக பைசலாபாத் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இதன் பின்னர் முஸ்லிம்கள் அங்கே தொழுகை நடத்திட தடை விதிக்கப்பட்டது. அன்று முதல் இந்த தேசத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக இது பார்க்கப்பட்டது.

பின்னர், 1950 –இல் சுயம்புவாகத் தோன்றியிருக்கும் ராமபிரானுக்கு வழிபாடு நடத்த இந்துக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோபால்சிங் விசாரத், பரஹம்ஸர் என்ற இருவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

சிலைகளை அங்கிருந்து அகற்றவோ, பூஜை நடத்துவதைத் தடுக்கவோ கூடாது என்று மாவட்ட நீதிபதி நாயர் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து பூஜை மற்றும் வழிபாட்டுக்கு வழிவகுத்தார்.

சுமார் 9 ஆண்டுகள் கழித்து, 1959 –இல் பாபரி மஸ்ஜித் அமைந்துள்ள 1500 சதுர கெஜம் அளவிலான நிலத்தின் மீது உரிமை கோரி, நிர்மோகி அகோரா எனும் அமைப்பு உரிமை மூல வழக்கை நீதிமன்றத்தில் தொடுக்கிறது.

அந்த மனுவில் இராமன் பிறந்த இடம் என்றோ, மத நம்பிக்கையின் அடிப்படையில் இடத்தைக் கேட்கிறோம் என்றோ எந்த வாதமும் கூறப்பட வில்லை.

இதை எதிர்த்து சன்னி வக்ஃப் வாரியம் 1961 –இல் எதிர் மனு தாக்கல் செய்தது.

ஆனால், 1986, செப்டம்பர் 30 –இல் பூட்டியிருந்த கோயிலின் கதவைத் திறந்து பக்தர்களின் தரிசனத்திற்கும், வழிபாட்டிற்கும் உத்தரவிட்டார் பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே. எம். பாண்டே.

இதில், ஜீரணிக்கவே முடியாத விஷயம் என்னவென்றால் 1986 –இல் ராமரின் பக்தர் ஒருவரின் பேரில் மனுதாக்கல் செய்ய வைத்து, எதிர் தரப்பான சன்னி வக்ஃப் வாரியதுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் வழக்கின் மீது விசாரணை நடத்தி தீர்ப்பு கூறினார் கே.எம் பாண்டே.

1989 –இல் தான் இராம ஜென்ம பூமி எனும் கோஷத்தை மையமாக வைத்து, இராமர் பிறந்த இடம், அங்கே இராமர் கோயில் ஒன்று இருந்தது, அதை இடித்து விட்டு பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது எனும் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியவர் ஓய்வு பெற்ற நீதிபதி தேவகி நந்தன் அகர்வால் என்பவர் தான்.

வெறும் உரிமையியல் வழக்கின் மூலம் முஸ்லிம்களிடமிருந்து இந்த இடத்தை சட்டரீதியில் கைப்பற்ற முடியாது; இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையின் கீழ் இந்த வழக்கைக் கொண்டு வருவதன் மூலம் தான் சட்டப்படியே இதனைக் கைப்பற்ற முடியும் எனும் சூட்சமத்தை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி தேவகி நந்தன் அகர்வாலுக்கு மட்டுமே அன்று புரிந்திருந்தது.

நீதிபதி பதவிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு, உடனடியாக இராமனை மைனராக்கி, மனுதாரராகவும் ஆக்கி, சிலைகள் பேசமுடியாது என்பதால் அதன் சார்பாக தான் வாதிடுவதற்காக தன்னை நண்பனாக, காப்பாளராக இணைத்துக் கொண்டு வழக்கு தொடுத்தார் தேவகி நந்தன் அகர்வால்.

பின்னர், 1989 –ஆம் ஆண்டு அயோத்தியில் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட ஒரு கும்பமேளாவில் ஒன்று கூடி இந்து மதத் தலைவர்கள் மற்றும் ஃபாஸிஸ அரசியல் தலைவர்கள் ஒன்று கூடி இராம ஜென்ம பூமியை மீட்க சபதமெடுத்தனர்.

அதன் விளைவாக, நாடு முழுவதும் இந்தப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டு பாபரி பள்ளி வளாகத்தில் இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிட செங்கல் தானம் செய்வதென்று முடிவெடுத்து அயோத்திக்கு ராம் என பொறிக்கப்பட்ட செங்கல்களை அனுப்பி வைத்தனர்.

1989 நவம்பர் 9 –ஆம் தேதியன்று நீதிமன்ற உத்தரவோடு, ராஜீவ் அரசின் பின் புலத்தோடு இராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனிடையே 1989 –இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய முன்னணி என்ற பெயரில் பி.ஜே.பி. வி.பி. சிங்குடன் இணைந்து சந்தித்தது.

அதில் 80 இடங்களில் பா..க வென்றது. வி.பி. சிங் பிரதமரானார். பா..க விற்கு கிடைத்த ஒவ்வொரு ஓட்டும் இராமர் கோயிலுக்காக விழுந்த ஓட்டு என்று கூறி பா..க பொய்ப்பிரச்சாரம் செய்தது.

இது பெரிதாக ஆன போது, வி.பி. சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை உடனடியாக செயல்படுத்தப் போவதாக அறிவித்தார்.

1990 –இல் விஷ்வ இந்து பரிஷத் பாபரி பள்ளி இருக்கும் இடத்தில் கோயில் கட்டும் பணி ஜனவரி 2 –ஆம் தேதி ஆரம்பமாகும் என்று அறிவித்தது.

வி.பி. சிங் வேண்டுகோளுக்கு இணங்க அது நான்கு மாத காலம் தள்ளிப் போடப்பட்டது.

1990 –ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் பரிந்துரையின் மூலம் கிடைக்க விருக்கின்ற சமூக நீதியிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும், இராமர் கோயிலின் மீது மக்களின் கவனத்தை ஈர்த்திடவும் அத்வானி ர(த்)த யாத்திரை மேற்கொண்டார்.

இந்த யாத்திரை சென்ற இடங்களிலெல்லாம் கலவரம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிர் துறந்தார்கள்.

ரத யாத்திரை விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, நாட்டின் பல பகுதியிலிருந்தும் அதை தடை செய்திட வேண்டும் என மக்கள் குரல் பலமாக ஒலித்தது.

பீகாரில் லாலு பிரசாத் ரதயாத்திரைக்கு தடை விதித்ததோடு மாத்திரமல்லாமல், தடையை மீறி யாத்திரை மேற்கொண்ட அத்வானியை கைதும் செய்ய உத்தரவிட்டார்.

23.10.1990 அன்று அத்வானி கைது செய்யப்பட்டார். அத்வானியை கைது செய்ததும் ஒரு பெருங்கூட்டம் உ.பி யை நோக்கி சென்றது.

அப்போது, .பி. யில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான அரசு ஆட்சி பீடத்தில் இருந்தது.

முலாயம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளால் பாபரி மஸ்ஜித் அப்போது இடிக்கப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டது. என்ற போதிலும் பாபர் மஸ்ஜிதின் சுற்றுச் சுவர் பலத்த சேதம் அடைந்தது. பள்ளியின் மினாராவின் மீது காவிக்கொடியும் ஏற்றப்பட்டது.

1991 –ஆம் ஆண்டு காங்கிரஸ் நரசிம்மராவ் தலைமையில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. அந்த ஆண்டே ஒரு சிறப்புச் சட்டத்தையும் அது கொண்டு வந்தது.

அதாவது, 15.08.1947 இந்தியா விடுதலை அடைந்த நாள் முதற்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியே பாதுகாக்கப்படும். ஆனால், பாபரி மஸ்ஜிதை இந்தச் சட்டம் பட்டுப்படுத்தாது என்று அந்தச் சட்டம் கூறியது.

1991 –ஆண்டு அக்டோபர் மாதம் உ.பி. யில் கல்யாண் சிங் தலைமையிலான பா... வின் அரசு பாபரி மஸ்ஜிதை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.

17.10.1991 அன்று அலகாபாத் நீதிமன்றத்தில் ஓர் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது உ.பி. அரசு கையகப்படுத்திய ஆணை செல்லாது என அறிவிக்கும் படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.

25.10.1991 அன்று அந்த ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்ததோடு நின்று விடாமல், கையகப்படுத்திய அந்த இடத்தில் நிரந்தரமான எந்தக் கட்டிடங்களையும் கட்டக் கூடாது என்றும், இறுதித் தீர்ப்பு வரும் வரை அந்த இடத்தை யாரின் பேரிலும் சொந்த மாக்கி விடக்கூடாது என்றும் கூறியது.

1992 மார்ச் உ.பி யின் பா..க அரசு பாபரி மஸ்ஜிதை சுற்றியுள்ள 42 ஏக்கர் நிலத்தை இராம ஜென்ம பூமிக்கு குத்தகைக்கு விட்டது. அந்த இடம் இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட பயன்படுத்தப்படும் என்று அறிவித்தது.

1992, ஏப்ரல் 7 –ஆம் தேதியன்று நாடாளுமன்ற தேசிய ஒருமைப் பாட்டுக்குழு 35 பேர் கொண்ட ஒரு குழுவை எஸ்.ஆர் பொம்மை அவர்கள் தலைமையில் அயோத்தியில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிந்து வருமாறு அனுப்பி வைத்தது.

ஆய்வு செய்த அந்த குழு நாடாளுமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் நீதிமன்றத்தின் எந்த ஆணைகளும், நெறிகளும் அங்கே கையாளப்பட வில்லை என்று சுட்டிக்காட்டியது.

1992 அக்டோபர் 30,31 ஆகிய தேதிகளில், டெல்லியில்  வி.ஹெச்.பி யினர் நடத்திய சாதுக்களின் மாநாட்டில் டிசம்பர் 6 –ஆம் தேதி முதல் கரசேவை துவங்கும். அது பாபரி மஸ்ஜிதின் மத்திய டூம் பகுதியிலிருந்து ஆரம்பிக்கும். என்று அறிவித்தனர்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, பா..க வைச் சேர்ந்த தலைவர் ஒருவர் ஓர் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், டிசம்பர் 6, 1992 அன்று நடக்கவிருக்கும் கரசேவை என்பது வெறு சமிக்ஞை அளவில் தான் நடைபெறும். அத்துடன் கீர்த்தனைகள் தான் பாடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், 6.12.1992 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்து மாலை 6 மணியளவில் பாபரி பள்ளிவாசல் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இந்திய தேசத்தின் இறையாண்மையும், ஜனநாயகமும் கேள்விக் குறியாக்கப்பட்ட ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பை எதிர் நோக்கிய பயணத்தில் இருந்த இந்த தேசத்தின் சிறுபான்மை சமூகதினருக்கும், நடுநிலையாளர்களுக்கும் பேரிடியாய் அமைந்தது தான் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு.

செப்டம்பர் 30, 2010 அன்று அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பெஞ்ச் நீதிபதிகள் டி.வி. சர்மா, எஸ்.யூ. கான், அகர்வால் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சட்ட விரோதமான ஒரு தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டது.

அதில், சன்னி வக்ஃப் வாரியம், நிர்மோகி அகோரா, ராம் ஜென்மஸ்தான் ஆகிய மூன்று மனுதாரர்களுக்கும் பாபர் மசூதி வளாகத்தை மூன்று பங்காக பிரித்துக் கொடுக்குமாறு தீர்ப்பளித்து உத்தரவிட்டிருந்தனர்.

பட்டா, பத்திரம் போன்ற ஆவணங்களின் அடிப்படையிலோ, அல்லது அனுபோக பாத்தியதை குறித்த ஆதாரங்களின் அடிப்படையிலோ, வரலாறு மற்றும் அகழ்வாராய்ச்சி அடிப்படையிலோ பரிசீலித்து தீர்ப்பு வழங்க வேண்டிய ஒரு உரிமை மூல வழக்கில், அவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு, கடவுளின் சொத்துரிமை மற்றும் கடவுள் குறித்த இந்து பக்தனின் நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

கொஞ்சம் வரலாற்றின் முதற்பகுதியில் இருந்து வருவோம்!

1855 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக அயோத்தியில் ஒருபிரச்சினை முஸ்லிம்களால் எழுப்பப்படுகிறது.

அது என்னவென்றால், ஹனுமன் கார்ஹி எனும் இடத்தில் பள்ளிவாசல் ஒன்றை இடித்து விட்டு கோயில் கட்டப்பட்டதாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அப்போது அயோத்தியை உள்ளடக்கிய பைசலாபாத் சமஸ்தானத்தின் மன்னராக வாஜித் அலி ஷா என்பவர் இருந்தார்.

இது குறித்து எழுந்த கலவரங்களில் 200 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இறந்து போயினர். பல முஸ்லிம்கள் உயிரைத் தியாகம் செய்தும் பள்ளிவாசலை மீட்க முடியவில்லை.

முஸ்லிம்கள் ஹனுமன் கார்ஹியிலிருந்த மஸ்ஜிதை மீட்க முயற்சி மேற்கொண்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்துக்கள் எதிர் நடவடிக்கை ஒன்றை எடுத்தார்கள்.
அது தான் பாபரி மஸ்ஜித் முன்பாக ராம் சாபுத்ரா எனும் இடம் இருந்ததாக பொய்யாக, இல்லாத ஓர் இடத்தை இருப்பதாக இட்டுக் கட்டிக் கூறினார்கள்.

( நூல்:வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் & ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டியின் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர், க. சம்பக லக்‌ஷ்மி என்பவர் எழுதிய நூலிலிருந்து...)

பைசலாபாத் சமஸ்தானம் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வந்த பின்னர், 1885 –இல் இது தொடர்பான முதல் உரிமையியல் வழக்கை மஹந்த் ரகுவர் தாஸ் என்பவர் தொடர்ந்தார்.

அன்றைய துணை நீதிபதியாக இருந்த “பண்டிட் ஹரி கிஷன்” என்பவர், மஹந்த் ரகுவர் தாஸ் –க்கு சாதகமாக தீர்ப்பு வழங்க, அதை எதிர்த்து முஸ்லிம்கள் மாவட்ட நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

அதை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் பின்வருமாறு தீர்ப்பளித்தது.

அதாவது “இந்துக்கள் புனிதமாகக் கருதும் ஒரு இடத்தில் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்பது துரதிருஷ்டவசமானதுதான். என்றாலும், சம்பவம் நடந்து 356 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்ட படியால், தற்போது இதற்கு நிவாரணம் கோருவது மிகவும் காலம் கடந்ததாகும்” என்று கூறி மஹந்த் ரகுவர் தாஸின் மனுவைத் தள்ளுபடி செய்து, தற்போது உள்ள நிலையே (அதாவது பள்ளிவாசலாகவே இருக்கவேண்டும்) நீடிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார் மாவட்ட நீதிபதி சேமியர்ஸ் என்பவர்.

இந்த வழக்கில் பாபரி மஸ்ஜித் சர்ச்சையாக்கப்பட வில்லை. பாபரி மஸ்ஜிதின் ஓரிடத்தில் தான் பிரச்சனை எழுப்பட்டது.

1855 –க்குப் பிறகு 1949 –இல் தான் மீண்டும் அங்கு பிரச்சினைகள் எழுகின்றன. அது டிசம்பர் 22 –ஆம் தேதி நள்ளிரவில் பாபரி மஸ்ஜிதின் பூட்டை உடைத்து மஸ்ஜிதின் உள்ளே ராமர் சிலை வைக்கப்பட்டது தான் பிரச்சனைக்கான முதல் காரணம்.

பாபர் இடித்தாரா? அல்லது ராமர் பிறந்தாரா?

ராமர் எங்கு பிறந்தார்?

அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.

இராமரைப்பற்றி முதன்முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார்.

இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.

வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்துக்களின் கால அளவை முறையில் 'யுகம்' என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:

கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

 திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

 துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.

கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.

அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.
இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன.

இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை. கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்கவில்லை.

இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.


இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந்தார்எனக் கூறுகிறது.

அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல்பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில்அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்எனக் குறிப்பிடுகின்றார்.

அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.

இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.


அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார்.
ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது.

இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.

அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது.

'ஒன்றரை யோஜன்' என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும். ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்தியிலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.

அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமாயணம் கூறுவது மெய்யாகும்.


அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை.

மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான். மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது.

ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். 

நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.

எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.

இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.

பாபர் இடித்தாரா?

எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில்தான் துளசிதாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார்.

1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசிதாசரும் வாழ்கிறார்.

இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை என்பது தான் உண்மை.

 தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ்கிருத மொழியில்தான் இருந்தது

இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார்.

இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசிதாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்புதான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.

இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளரும் ஆவார்.

இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவிலும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528 ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்
.
எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறுவது முழுப் பொய் என்பது இதன் மூலமும் நிரூபணமாகிறது.

பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார்.

குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்கமாட்டார்.

அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.

பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்துக் கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.

பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை.

ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.

பாபருக்குப் பின் அவரது மகன் ஹுமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் தி கிரேட் அக்பர் ஆட்சிக்கு வருகிறார்.

இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, 'தீனே இலாஹி' என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை.

உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பார்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே...!

வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும் சரி, நாடு விடுதலை அடைந்த நேரத்திலும் சரி கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை.

இந்து முஸ்லிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்த காலத்தில் கூட இது போன்ற பிரச்சினை எதுவும் எழவில்லை.

ஆனால், 1949 டிசம்பர் 23 ல் சிலைகளைப் பள்ளிவாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக்கவில்லை.

( நூற்கள்: விடியல்வெள்ளி டிசம்பர் 1998, வைகறைவெளிச்சம் நவம்பர் 2010, புதிய கலாச்சாரம் டிசம்பர் 2010, நக்கீரன் அக்டோபர் 2010 மற்றும் அதிரை முஜீப். ப்ளாக்ஸ்பாட்.காம், பயணிக்கும் பாதை.ப்ளாக்ஸ்பாட்.காம் )

நாம் என்ன செய்ய வேண்டும்?

உலகில் மரியாதையும், கண்ணியமும் அல்லாஹ்வுக்கு சொந்தமானது. அவனது இறைத்தூதருக்குச் சொந்தமானது, அல்லாஹ்வையும், அவனது இறைத்தூரையும் சார்ந்து வாழ்கிற முஸ்லிம்களுக்குச்சொந்தமானது.

இந்த உண்மையை நயவஞ்சகர்களும்,இறைமறுப்பாளர்களும் புரிந்து கொள்ளாவிட்டாலும் முஸ்லிம்கள் புரிந்து வாழவேண்டும். என அல்குர்ஆன் வலியுறுத்துகிறது.

{وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ} [المنافقون: 8].

அடுத்து, அல்லாஹ் எதையெல்லாம் கண்ணியமானவைகளாக, மரியாதைக்கு உரியவைகளாக ஆக்கி யிருக்கின்றானோ அவைகளையும் முஸ்லிம்கள் கண்ணியமானவைகளாகக் கருதவேண்டும். மதிக்க வேண்டும்.

ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ ()

அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், எவரேனும் ஒருவர் அல்லாஹ் ஏற்படுத்திய புனிதச் சின்னங்களுக்கு கண்ணியம் அளிப்பாராயின் திண்ணமாக, அதுவெ இறையச்சம் நிறைந்திருக்கிற இதயத்திற்குச் சான்றாகும்.” (அல்குர்ஆன்:22:32)

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள்இறையில்லத்தின் விஷயங்களில் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும், மேலும் பாதுகாத்திடவும் வேண்டும்என கூறுகின்றனர்.

நாம் மதிக்கின்ற ஒன்று, நாம் பாதுகாக்கிற ஒன்று சேதப்பபடுத்தப்படுமானால், நம்மிடம் இருந்து பறிக்கப்படுமானால் அதற்காக போராட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

جاء رجل إلى رسول الله، فقال: يا رسول الله، أرأيت إن جاء رجل يريد أخذ مالي؟ قال: "فَلاَ تُعْطِهِ مَالَكَ". قال: أرأيت إن قاتلني؟ قال: "قَاتِلْهُ". قال: أرأيت إن قتلني؟ قال: "فَأَنْتَ شَهِيدٌ". قال: أرأيت إن قتلته؟ قال: "هُوَ فِي النَّارِ
مسلم: كتاب الإيمان

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து... “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் என் பொருளை அபகரிக்க வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார்.

அதற்கு அண்ணலார் “உன் பொருளை அவன் கைப்பற்றிவிடாமல் நீ பாதுகாக்கவேண்டும் என்று பதில் கூறினார்கள்.

நான் அவனை தடுக்கிறபோது, அவன் என்னிடம் சண்டையிட்டால் இப்போது நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் மீண்டும் கேட்டார்.

அதற்கு நபி ஸல் அவர்கள் நீ அவனுடன் போராடியேனும் உன் உரிமையை மீட்க வேண்டும்”  என்றார்கள்.

”அப்படி அவனிடம் நான் போராடும் போது அவன் என்னை கொலை செய்துவிட்டால் இப்போது என் நிலை என்ன?” என்று அவர் கேட்ட போது...நீ மார்க்கப்போராளி எனும் ஷஹீது அந்தஸ்தைப் பெறுவீர்”. என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

சரி! நான் அவனை கொலை செய்து விட்டால் இப்போது என்ன சொல்கிறீர்கள்?”  என்று அவர் கேட்டதும் அப்போது அண்ணலார்அவன் நரகவாதியே!” என்று பதில் கூறினார்கள்.                                                                                      (  நூல்: முஸ்லிம் )

உலக வாழ்வின் அலங்காரம் என்றும், சோதனை என்றும் அல்லாஹ்வாலும், அவன் தூதராலும் வர்ணிக்கப்படுகிற பொருளாதாரத்தைப் பாதுகாக்கவே போராட அனுமதி இருக்கிறது எனும் போது அல்லாஹ்விற்கு உரிய, இறைநம்பிக்கையாளனின் வாழ்வில் மகத்துவத்தையும், மாண்பையும் ஏற்படுத்துகிற இறையில்லத்தை மீட்பதில் எந்தளவு ஒரு முஃமின் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை மேற்கூறிய நபிமொழி நமக்கு உணர்த்துகின்றது.

அநீதிக்கு எதிராக போராடுவது அவசியமாகும்..

அநியாயத்திற்கு எதிராக போராடுவதையும், தடுத்து நிறுத்துவதையும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.

وَاسْأَلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ إِذْ يَعْدُونَ فِي السَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَيَوْمَ لَا يَسْبِتُونَ لَا تَأْتِيهِمْ كَذَلِكَ نَبْلُوهُمْ بِمَا كَانُوا يَفْسُقُونَ () وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ ()

கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த ஓர் ஊரைப்பற்றி இவர்களிடம் நீர் கேட்டுப்பாரும்! அங்கு வாழ்ந்த மக்கள் சனிக் கிழமையில் இறைக்கட்டளையை மீறியதை இவர்களுக்கு நினைவூட்டுவீராக!

அந்தச் சனிக்கிழமைகளில் அவர்களுடைய மீன்கள் தண்ணீரின் மேல்மட்டத்தில் உயர்ந்து அவர்களிடம் வரும். மேலும், சனிக்கிழமை அல்லாத நாட்களில் அம்மீன்கள் அவ்வாறு வருவதில்லை. அவர்கள் கீழ்ப்படியாதிருந்த காரணத்தால் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.

மேலும், இவர்களுக்கு நினைவூட்டுங்கள்! அவர்களில் ஒரு பிரிவினர், (இன்னொரு பிரிவினரிடம்) “எந்த மக்களை அல்லாஹ் அழிக்கவிருக்கின்றானோ,  மேலும், கடுமையான தண்டனைக்கு ஆளாக்க இருக்கின்றானோ,  அந்த மக்களுக்கு ஏன் நல்லுரை வழங்குகின்றீர்கள்?”  என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள்நாங்கள் உங்கள் இறைவனிடம் தகுந்த காரணம் கூறவேண்டும் என்பதற்காகவே இவர்களுக்கு நல்லுரை கூறுகின்றோம். மேலும், இதன் மூலம் இவர்கள் இறைவனின் வரம்புகளை மீறுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளக்கூடும்.” என்று பதில் கூறினார்கள்.

இறுதியில்,  அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டவற்றை முற்றிலும் அவர்கள் மறந்து செயல்பட்ட போது, தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அக்கிரமம் செய்து கொண்டிருந்த அனைவரையும் நாம் கடுமையான வேதனை கொடுத்து தண்டித்தோம்.

                பிறகு, எதைச் செய்யக்கூடாது என தடுக்கப்பட்டார்களோ, அவற்றையே வரம்புமீறி செய்து கொண்டிருந்தபோதுநீங்கள் குரங்குகளாகி இழிவடைந்து விடுங்கள்!” என்று நாம் கூறினோம்.                                                                                                      (அல்குர்ஆன்: 7: 163 – 169)

இந்த வரலாறு நமக்கோர் உண்மையை உணர்த்துகின்றது. அநியாயத்தைச் செய்பவர்களையும் வரம்பு மீறுபவர்களையும் நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் அல்லாஹ் நம்மை சும்மா விடமாட்டான்.

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட இடத்தை இணைவைப்போர் ஆக்கிரமிப்பதும், இடிப்பதும் தகாத, அடாத செயலாகும். மாபெரும் அநீதியாகும்.

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ ()

அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ்வுடைய இல்லங்களில் அவனுடைய நாமத்தைத் துதி செய்வதைத் தடுத்து அவற்றை பாழாக்க முயற்சி செய்பவனை விட மகா அநியாயக்காரன் யார்?”                              (அல்குர்ஆன்:2:114)

அல்லாஹ்வை ஸஜ்தா செய்த இடத்தை மீட்க உளத்தூய்மையோடு நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் அல்லாஹ் நிரம்ப நற்கூலிகளை வழங்கிடுவான்.

எனவே, அநீதிக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதில் தான் ஓர் இறை நம்பிக்கையாளன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.  அது தான் ஈருலகிலும் அவனை வெற்றியின் வாசலுக்கு அழைத்துச் செல்லும்.

தன்னை அந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளும் போது, அவன் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை.  யாருடைய சூழ்ச்சியும் அவனை ஒன்றும் செய்திடாது.

ஏனெனில்,  அல்லாஹ் கூறுகின்றான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ()
 இறை நம்பிக்கை கொண்டவர்களே!  உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள்.  நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாது.”                                                                                                                    (அல்குர்ஆன்:5:105)

அப்படியே நாம் எதிரிகளால் துன்புறுத்தப்பட்டாலும், நம் நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்போமேயானால் அல்லாஹ் நம்மை நிலைப்படுத்தி வைப்பான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ ()
அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு உதவி புரிந்தால் அவனும் உங்களுக்கு உதவி புரிவான். மேலும், உங்களுடைய பாதங்களையும் நிலைப்படுத்தி வைப்பான்”.     ( அல்குர்ஆன்:47:7 )

எனவே, நம்முடைய ஜும்ஆ உரைகளில் கடந்த காலங்களில் அமெரிக்காவின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டியிருப்போம். இஸ்ரேலின் கொடுமைகளை விளக்கியிருப்போம்.

விஸ்வரூபம், இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் போன்ற திரைப்படங்களின் வாயிலாக இந்த சமூகத்தில் முஸ்லிம்களை கேவலப்படுத்த துணிந்த கயவர்களை அடையாளம் காட்டியிருப்போம்.

இதோ இந்த இந்திய தேசத்தின் ஓர் மூலையில் அமர்ந்திருக்கிற இறையில்லமாம் பாபரி மஸ்ஜிதின் மீட்பு குறித்தும் கொஞ்சம் முழங்குவோம்.

அல்லாஹ் நாளை மறுமையில் ”என் வீட்டை என் விரோதிகள் இடித்த பிறகு, அதற்காக நீ என்ன செய்தாய்? என்று கேட்டால்...

என்ன பதில் வைத்திருக்கின்றோம்? மறுமையில் பதில் சொல்லிட, அல்லாஹ்வின் அன்பைப் பெற்றிட ஒன்றுபட்டு பாடுபடுவோம்.

 இழந்த உரிமைகளை பெறுவதற்கும், இறையில்லங்களை பாதுகாக்கவும் தொடர்ந்து துணிவுடன் போராடுவோம்!

இன்ஷா அல்லாஹ்! இனி வரும் காலங்களில் இறையில்லங்கள் பாதுகாக்கப்படும்!

                          வஸ்ஸலாம்!!!

6 comments:

  1. மிக அற்புதமான தகவல்கள்.அல்லாஹ் உங்களுடைய சேவையை கபூல் செய்வானாக!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நல்லதொரு பதிவு ஜஸாக்கல்லாஹ் கைர நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  4. அல்ஹம்து லில்லாஹ் நல்ல ஆதாரமான ஆணித்தரமான பதிவு. ஜஸாகல்லாஹ்

    ReplyDelete
  5. ماشاء الله تبارك الله احسنت بهذه الكلمات وصدقت والله يحسن ويعهد وعده للمحسنين الجنة العالية

    ReplyDelete