Wednesday 29 October 2014

தடைக்கற்களை தகர்த்தெறிவோம்!



தடைக்கற்களை தகர்த்தெறிவோம்!





பன்முகங்கள் கொண்ட பாக்கியங்கள் பல நிறைந்த முஹர்ரம் மாதத்தின், இஸ்லாமியப் புத்தாண்டின் முதல் ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

அல்லாஹ்வின் மாதம், போர் செய்வதற்கு தடை செய்யப்பட்ட நான்கு மாதங்களில் ஒரு புனித மாதம், இஸ்லாமிய வாழ்வை உலகிற்கு உணர்த்திய உன்னதப் பயணமாம் ஹிஜ்ரத் எனும் எழுச்சிப்பயணத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமியக் காலண்டரை தந்த மாதம், கொடியோனாம் ஃபிர்அவ்னிடம் இருந்து மூஸா (அலை) அவர்களும் அவர் தம் சமூகமும் அல்லாஹ்வின் உதவியால் ஈடேற்றம் பெற்ற நாள் இடம் பெற்ற மாதம், ஜனநாயகம் தழைக்க கர்பலாவில் வீரமரணம் அடைந்த ஹுஸைன் (ரலி) அவர்களின் காவியத்தைச் சுமந்து நிற்கும் மாதம், இன்னும் வரலாற்றில் நீண்ட ஒரு பட்டியலை கொண்டிருக்கிற பன்முகம் கொண்ட ஓர் உன்னத மாதம் தான் முஹர்ரம் மாதம்.

நம்மைக் கடந்து சென்றிருக்கிற 1435 –ஆம் ஆண்டு இந்த முஸ்லிம் உம்மத்தின் பல்வேறு தோல்விகளையும், ரணங்களையும், கசப்புகளையும் கொண்டதாகும்.

சிரியாவில் தொடங்கி, ஃபலஸ்தீனைத் தொடர்ந்து எஸ். பி. பட்டணம் வரை பல்வேறு உயிரிழப்புக்கள்.

முஸ்லிம்களின் ஈடேறாத எண்ணங்கள், சர்வதேச அளவில் துவங்கி இந்த தேசத்தின் பாராளுமன்ற தேர்தல் வரை தொடர்ந்தது.

இந்த புத்தாண்டு நம் எதிர்காலத்தின் வெற்றிகளை எளிதாக்கிடவும், கடந்த காலத்தின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றிடவும் ஏதுவாக அமைந்திட வல்ல ரஹ்மான் துணை செய்வானாக! ஆமீன்!

தனி மனித முஸ்லிம் ஒருவனின் வாழ்வில் தொடங்கி, குடும்பம், முஹல்லா, ஜமாஅத், அமைப்பு, இயக்கம், அரசியல், ஆன்மீகம், உலகம் என அத்துணை தளங்களிலும் ஒளிர்ந்திடாமல் போனதற்கான காரணங்களை கண்டறிந்து அவைகளை களைந்திட முன் வருவோம்!

வாருங்கள்! நாம் மேற்கொண்ட பிழையான அணுகுமுறைகளை அறிந்து  தடைக்கற்களை தகர்த்தெறிவோம்!

உலகில் தோல்விகளும், இழப்புகளும் நிரந்தரமானதல்ல... தோல்விகளுக்குப் பின்னால் வெற்றிகளும், இழப்புகளுக்குப் பின்னால் ஈடேற்றமும் அணிவகுத்து வரும் ஆற்றல் கொண்டவையாகும் என்பதை நாம் உணரவேண்டும்.

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا () إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ()

அல்லாஹ் கூறுகின்றான்: “உண்மையில், சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது; திண்ணமாக, சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.”

1. தோல்விகளிலிருந்து கற்றல் வேண்டும். (Learining From the Failure)

இன்றைய முஸ்லிம்களிடம் இல்லாமல் போன, இஸ்லாம் வலியுறுத்திக் கூறுகிற முக்கியமான பண்பு இது.

உஹத் யுத்தம் முஸ்லிம் உம்மத்திற்கு எல்லா காலத்திற்கும் தேவையான பல்வேறு பாடங்களையும், படிப்பினைகளையும் மறைத்து வைத்திருக்கிற மாபெரும் புதையலாகும்.

ஹிஜ்ரி 3 –ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் பிறை 15 –இல் சனிக்கிழமை அன்று நடைபெற்ற யுத்தமாகும்.

ஆரம்பத்திலேயே உறுதி செய்யப்பட்டு விட்ட வெற்றி, நபித்தோழர்களின் சிலரின் செயல்பாடுகளால் எதிரிகளின் வசம் மாறிப்போனது.

பத்ரில் எதிரிகள் அடைந்திருந்த அதே உயிரிழப்பு இப்போது முஸ்லிம்களின் தரப்பிலிருந்து ஏற்பட்டிருந்தது.

மாபெரும் மாண்பாளர்களாய் அறியப்பட்டிருந்த ஹம்ஸா (ரலி), முஸ்அப் (ரலி), அபுத்தஹ்தாஹ் (ரலி) ஸஅத் இப்னு ரபீஉ (ரலி) போன்ற முக்கிய நபித்தோழர்கள் உட்பட 70 பேர் வீர மரணம் அடைந்திருந்தனர்.

முஸ்லிம்கள் தடுமாறிப்போய், செய்வதறியாது திகைத்து நின்ற தருணமும் கூட.

அல்லாஹ்விற்காக போராடுகிற நாம் ஏன் தோற்றுப் போனோம்? அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நம்மோடு இருக்கும் போது எப்படி நமக்கு தோல்வி ஏற்படும்? என்பது போன்ற கேள்விகள் அவர்களின் ஆழ்மனதை துளைத்தெடுத்தன.

அல்லாஹ் அவர்களின் தோல்விக்கான காரணங்களையும், தோல்வியிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும், அவர்களின் மனதை சாந்தப்படுத்துகிற ஆறுதல்களையும் ஆலு இம்ரான் அத்தியாயத்தின் 139 முதல் 179 வரை தொடர்ச்சியான இறைவசனங்களின் மூலம் தெளிவு படுத்தினான்.

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ () إِنْ يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِثْلُهُ وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ ()

அல்லாஹ் கூறினான்: “நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்.

இப்போது உங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதென்றால், இதற்கு முன்னர் உங்கள் எதிரணியினருக்கும் இதே போன்ற காயம் ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் காலத்தின் மாற்றங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறி மாறி வரச் செய்கின்றோம்.

(உங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரக் காரணம்) உங்களில் உண்மையான நம்பிக்கையாளர்கள் யார் என்பதனை அல்லாஹ் கண்டறிந்து உண்மையிலேயே சத்தியத்திற்குச் சான்றுபகர்கின்றவர்களை உங்களிலிருந்து வேறுபடுவதற்காகத்தான்!

وأشارت عائشة رضي الله عنها إلى ما جرى في غزوة حمراء الأسد، وهي على نحو ثمانية أميال من المدينة، وذلك أنه لما كان في يوم الأحد، وهو الثاني من يوم أحد، نادى رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ في الناس بإتباع المشركين، وقال: (لا يخرج معنا إلا من شهدها بالأمس) فنهض معه مائتا رجل من المؤمنين. في البخاري فقال: (من يذهب في إثرهم) فانتدب منهم سبعون رجلا. قال: كان فيهم أبو بكر والزبير على ما تقدم، حتى بلغ حمراء الأسد، مرهبا للعدو، فربما كان فيهم المثقل بالجراح لا يستطيع المشي ولا يجد مركوبا، فربما يحمل على الأعناق، وكل ذلك امتثال لأمر رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ورغبة في الجهاد. وقيل: إن الآية نزلت في رجلين من بني عبد الأشهل كانا مثخنين بالجراح، يتوكأ أحدهما على صاحبه، وخرجا مع النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فلما وصلوا حمراء الأسد، لقيهم نعيم بن مسعود فأخبرهم أن أبا سفيان ابن حرب ومن معه من قريش قد جمعوا جموعهم، وأجمعوا رأيهم على أن يأتوا «3» إلى المدينة
فيستأصلوا أهلها، فقالوا ما أخبرنا الله عنهم:" حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ". وبينا قريش قد أجمعوا على ذلك إذ جاءهم معبد الخزاعي، وكانت خزاعة حلفاء النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وعيبة «1» نصحه، وكان قد رأى حال أصحاب النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وما هم عليه، ولما رأى عزم قريش على الرجوع ليستأصلوا أهل المدينة احتمله خوف ذلك، وخالص نصحه للنبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وأصحابه على أن خوف قريشا بأن قال لهم: قد تركت محمدا وأصحابه بحمراء الأسد في جيش عظيم، قد اجتمع له من كان تخلف عنه، وهم قد تحرقوا عليكم، فالنجاء النجاء! فإني أنهاك عن ذلك 
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், உஹதிலிருந்து முஸ்லிம் படைகள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தது. இடையில் அண்ணல் நபி {ஸல்} அவர்கள் மீண்டும் படையை ஹம்ராவுல் அஸத் எனும் இடத்திற்கு அழைத்து வந்தார்கள்.

ஹம்ராவுல் அஸத் என்பது மதீனாவிலிருந்து எட்டு மைல் தூரத்தில் இருந்த ஓர் இடமாகும்.

காரணம் இது தான், உஹதிலிருந்து அபூசுஃப்யான் தமது படையுடன் மக்கா திரும்பிச் சென்று கொண்டிருக்கும் போது, ரவ்ஹா எனும் இடத்தை அடைந்ததும்நமக்கு முழுமையான வெற்றி வேண்டுமானால், (நஊது பில்லாஹ்..) முஹம்மது {ஸல்} அவர்களை ஏன் நாம் கொல்லக்கூடாது? வாருங்கள்! முஸ்லிம்களையும், நபி {ஸல்} அவர்களையும் பூண்டோடு அழித்து வருவோம்!” என்று கூறி மீண்டும் படையை நடத்தி வந்தார்.

அல்லாஹ் இந்தச் செய்தியை மாநபி {ஸல்} அவர்களுக்குத் தெரியப் படுத்தினான். ஆகவே தான் அண்ணலார் ஊர் திரும்பிய தமது படையை மீண்டும் இன்னொரு யுத்தகளம் நோக்கி அழைத்து வந்தார்கள்.

தூரத்தில் இருந்து ஒற்றர்களின் மூலம் நபிகளாரும், நபித்தோழர்களும் ஹம்ராவுல் அஸதில் முகாமிட்டிருந்ததை தெரிந்து கொண்ட அபூசுஃப்யான் தமது படையை வாபஸ் வாங்கி மக்காவிற்கு அழைத்துச் சென்று விட்டார்.

மாநபி {ஸல்} அவர்களும், நபித்தோழர்களும் மூன்று நாட்கள் அங்கே முகாமிட்டு பின்னர் நிம்மதியாக மதீனா திரும்பினார்கள்.

உஹத் தோல்விக்கு அடுத்த நாளில் இந்த சம்பவம் நடைபெறுகின்றது. தோல்வியிலிருந்து எப்படி மீள்வது என்பதை அல்லாஹ் உணர்த்திய அடுத்த நாளே இன்னொரு போருக்கு தயாராகி, தங்களை இயல்பான நிலைக்கு கொண்டு வந்தனர் நபித்தோழர்கள்.

அல்லாஹ் இந்த அரிய செயலைப் பாராட்டி சோபனத்துடன் கூடிய மகத்தான கூலியுண்டு என்று இறை வசனத்தை இறக்கியருளி கௌரவித்தான்.

يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُؤْمِنِينَ () الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ لِلَّذِينَ أَحْسَنُوا مِنْهُمْ وَاتَّقَوْا أَجْرٌ عَظِيمٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டோரின் நற்கூலி வீணாகி விடுவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டிருக்கிறது. (அவர்கள் எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால் அவர்கள் (போரில்) தங்களுக்கு காயங்கள் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடைய அழைப்புக்கும், தூதருடைய அழைப்புக்கும் மறுமொழி பகர்ந்தார்கள்.

அவர்களில் யார் பாவங்களிலிருந்து விலகி, நற்செயல் புரிந்து வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அகமகிழ்வு தரும் மகத்தான கூலியுண்டு.”

தோல்வியைப் பற்றி பெரிதாகப் பேசுகிற நாம் உடனடியாக அதிலிருந்து பாடம் பெற்று, சரிசெய்து, இயல்பு நிலைக்கு திரும்பும் இந்தப் பண்பைக் கொண்டோராக மாற வேண்டும்.

2.தனியாத ஆர்வம் வேண்டும். (Enthusiasm)

தோல்விகளில் இருந்து விடுபட்டு, வெற்றிப் பாதையில் வலம் வந்திட  இஸ்லாம் மேற்கொள்ளத் தூண்டும் முக்கியமான பண்பு இது தான்.

யமாமா பல நபித்தோழர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் யுத்தமாக விளங்கியதென்றால் அது மிகையல்ல.

ஆமாம், யமாமாவின் வெற்றியைத் தீர்மானித்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்களில் ஒருவர் தான் பர்ராஃ இப்னு மாலிக் (ரலி) அவர்கள். இவர்கள் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

ஒரு கட்டத்தில் முஸ்லிம் படையினர் பின் வாங்கும் சூழல் உருவானது. அப்போது இதைக் கண்ணுற்ற பர்ராஃ இப்னு மாலிக் (ரலி) அவர்கள்அன்ஸாரி இளைஞர்களை நோக்கி வீர உரை ஒன்றை நிகழ்த்தினார்கள்.

" يا أهل المدينة..
لا مدينة لكم اليوم..
انما هو الله والجنة"..
كلمات تدل على روح قائلها وتنبئ بخصاله.

அந்த உரையில் “தோழர்களே! மதீனாவிற்கு திரும்பிச் சென்றிடும் எண்ணம் யாருக்கும் எழ வேண்டாம்! இந்த நாளுக்குப் பிறகு உங்களுக்கு மதினா கிடையாது. உங்களுக்கென இருப்பதெல்லாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தமும், மேலான சுவனமும் தான்!” என்று கூறினார்கள்.

அவர்களின் வீர உரையைக் கேட்ட மாத்திரத்தில் மீண்டும் யுத்த களத்தில் அனல் பறக்க ஆரம்பித்தது.

போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. முஸ்லிம்களின் தொடர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் முஸைலமாவின் ஆதரவாளர்கள் அங்கிருந்த ஒரு கோட்டைக்குள் ஒளிந்து கொண்டு அங்கிருந்து தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர்.

ஏனென்றால், கோட்டைக்குள் நுழைந்த முஸைலமாவின் படையினர் அங்கிருந்து கொண்டு கண்மூடித்தனமாக அம்பு எய்து கொண்டிருந்தனர்.

கோட்டையின் கதவை திறந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் எனும் நிலையில் உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கிற கோட்டையின் கதவை யார் திறப்பது? எப்படி திறப்பது? என்கிற நிலை ஏற்பட்டது.

وهنا علا البراء ربوة عالية وصاح:
" يا معشر المسلمين..
احملوني وألقوني عليهم في الحديقة"..
ألم أقل لكم انه لا يبحث عن النصر بل عن الشهادة..!!
اقتحم فقاتلهم على الحديقة حتى فتحها على المسلمين ودخل عليهم المسلمون فقتل الله مسيلمة.

பின்னர், சுற்றியிருந்த படையினரை நோக்கி “முஸ்லிம் படை வீரர்களே! என்னை எதிரிகளின் கோட்டைக்குள் தூக்கி வீசிவிடுங்கள்! என்னால் இயன்றால் அவர்களுடன் போரிட்டு கோட்டையின் கதவைத் திறக்கின்றேன்! இல்லையேல் இறைவனின் பாதையில் உயிரைத் தியாகம் செய்கிறேன்!” என்றார்கள்.

அவர்கள் கூறியதும் படையினர் எவரும் மறுப்பேதும் சொல்லவில்லை! மாறாக, தங்களின் அணிவகுப்பை சீர்படுத்தி அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்தார்கள்.

وكان البراء بن مالك هذا أحد الفضلاء ومن الأبطال الأشداء قتل من المشركين مائة رجل مبارزة سوى من شارك فيه.

ஏனென்றால், யுத்தகளம் என்று வந்து விட்டால் பர்ராஃ இப்னு மாலிக் (ரலி) அவர்கள் தனியொரு நபராக களத்திற்கு நடுவே சென்று 100 குதிரை வீரர்களை வெட்டி வீழ்த்தி, எதிரிப்படையினரின் கட்டமைப்பையே சீர் குலைத்து விடுவார் என அறிந்து வைத்திருந்தனர்.

அவர் கூறியது போன்றே ஒரு கேடயத்தில் அவரை நிறுத்தி, அம்புகளின் துணை கொண்டு கோட்டைக்குள் வீசினர்.

ஒட்டு மொத்த எதிரிகளும் குழுமியிருக்கிற ஒரு கோட்டைக்குள் தனியொரு நபராக உள்ளே சென்று போராடுவதென்பது மிகவும் எளிதான ஒரு செயல் அல்லவே!

ஆனால், உள்ளே சென்ற பர்ராஃ இப்னு மாலிக் (ரலி) அவர்கள் தங்களின் முழு கவனத்தையும் கோட்டையின் கதவைத் திறப்பதிலேயே செலுத்தினார்கள்.

நாலாபுறத்திலிருந்தும் எய்யப்பட்ட அம்புகளையும், ஈட்டிகளையும் எதிர் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்கள்.

قال خليفة وحدثنا الأنصاري عن أبيه ثمامة عن أنس قال رمى البراء بنفسه عليهم فقاتلهم حتى فتح الباب وبه بضع وثمانون جراحة من بين رمية بسهم وضربة فحمل إلى رحله يداوي فأقام عليه خالد شهراً.

இறுதியாக, கோட்டையின் கதவை திறந்து வெளியே வந்த பர்ராஃ இப்னு மாலிக் (ரலி) அவர்கள் உடலில் எண்பதுக்கும் மேற்பட்ட காயத்தோடு நிற்க முடியாமல் ஓரிடத்தில் வீழ்ந்தார்கள்.

கதவு திறக்கப்பட்டதும் காட்டாற்று வெள்ளம் பாய்வது போன்று முஸ்லிம் படை வீரர்கள் எதிரிகளின் கோட்டைக்குள் பிரவேசித்து மிகக் கடுமையாக போரிட்டார்கள்.

இறுதியாக, சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையே நடந்த அந்தப் போரில், ஈமானியப் படை வெற்றி வாகை சூடியது.

ஆமாம்! முஸைலமாவும், முஸைலமாவின் படையினரைச் சார்ந்த 20000 –க்கும் மேற்பட்டோரும் அங்கே கொல்லப்பட்டனர்.

இந்த வெற்றிக்கான ஆரம்ப வாசலைத் திறந்து விட்ட பர்ராஃ இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அசைவற்று மயக்க நிலையில் கிடந்தார்கள்.

அருகே சென்ற காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் இன்னும் பர்ராஃ (ரலி) உயிரோடிருப்பதை உறுதி செய்து கொண்டு மதீனாவிற்கு அழைத்து வந்து, ஒரு மாத காலம் அவரருகே இருந்து மருத்துவ உதவிகள் செய்து பராமரித்து வந்தார்கள்.

وعن ابن سيرين أنه قال كتب عمر بن الخطاب رضي الله عنه ألا تستعملوا البراء بن مالك على جيش من جيوش المسلمين فإنه مهلكة من المهالك يقدم بهم.

பர்ராஃ இப்னு மாலிக் (ரலி) அவர்கள் வெற்றியின் மீது கொண்டிருந்த தனியாத ஆர்வத்தை விளங்கியிருந்த உமர் (ரலி) அவர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் எந்த ஒரு படையை அனுப்பினாலும் படைத்தளபதிகளுக்கு ஓர் கடிதம் எழுதி அனுப்புவார்களாம்.

அதில் “முஸ்லிம் படைப்பிரிவுகளில் எதற்கும் இவரைத் தலைவராக நியமிக்க வேண்டாம். ஏனெனில், அவர் அழிவைப் பற்றி கொஞ்சம் கூட அஞ்சாமல் பின்னால் உள்ளவர்களை அழைத்துச் செல்வார்” என்று எழுதும் அளவிற்கு இவர்களின் தனியாத ஆர்வம் அமைந்திருந்தது.

 ( நூல்: அல் இஸ்தீஆப், ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}..)

3. நிதானம் மற்றும் விவேகம் வேண்டும்.

வெற்றியின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிற எல்லா ஆற்றலும் இந்த இரு பண்புகளுக்கும் இருப்பதாக இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

இன்றைக்கு ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது முஸ்லிம் சமூகத்திடத்திலே இந்த பண்புகள் அரிதாகி விட்டதை உணர்த்துகின்றது.

حديث مرفوع) نا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ ، نا حُمَيْدٌ ، عَنْ أَنَسٍ ، قَالَ : كَانَتْ نَاقَةٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُسَمَّى الْعَضْبَاءُ وَكَانَتْ لا تُسْبَقُ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قُعُودٍ فَسَبَقَهَا فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ فَلَمَّا رَأَى مَا فِي وُجُوهِهِمْ قَالُوا : يَا رَسُولَ اللَّهِ سُبِقَتِ الْعَضْبَاءُ فَقَالَ :
 " إِنَّ حَقًّا عَلَى اللَّهِ أَنْ لا يَرْفَعَ مِنَ الدُّنْيَا شَيْئًا إِلا وَضَعَهُ "

அள்பாஃ இது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் ஒட்டகைகளில் ஒன்று. நபி {ஸல்} அவர்கள் தங்களது இருதிப் பேருரையை இதன் மீது அமர்ந்து தான் ஆற்றினார்கள் என்று ஒரு தகவலும் உண்டு.

அன்றைய அரபுலகத்தின் அனைத்துப் பந்தயங்களிலும் பங்கு கொண்டு முதல் இடத்தை தட்டிச் செல்லும் செல்வாக்கும் துடிப்பும் நிறைந்த ஒட்டகம் அது.

ஒரு சந்தர்ப்பத்தில்  கிராமவாசி ஒருவரின் ஒட்டகையிடம் தோற்றுப் போய் இரண்டாமிடத்திற்கு வந்தது அள்பாஃ, நபித்தோழர்களால் இதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. உணர்ச்சிவசப்பட்டார்கள் நபித்தோழர்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களின் முகங்களில் காணப்பட்ட கவலை ரேகைகளை அறிந்து கொண்டு, என்ன? எல்லோரும் முகம் வாடியவர்களாக இருக்கின்றீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஒரு கிராமவாசியின் ஒட்டகம் தங்களது அள்பாஃவை முந்திவிட்டது. அது தான் தங்களின் முக வாட்டத்திற்கு காரணம் என்று உணர்ச்சி மேலிடக் கூறினார்கள்.

அப்போது, அண்ணல் நபி {ஸல்} அவர்கள் தோழர்களை நோக்கிஉலகில் தோற்றுப் போகிற எந்த ஒன்றையும் அல்லாஹ் உயரிய வெற்றிக்கு சொந்தமானதாக ஆக்காமல் இருப்பதில்லை. இது அல்லாஹ் தன் மீது விதியாக்கிக் கொண்ட ஒன்றாகும். இப்போது அந்த கிராமவாசியின் ஒட்டகம் வெற்றி பெரும் முறையாகும்.” என்று பதில் கூறினார்கள்.

வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை ஒற்றை வார்த்தையில் சொன்னார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.

இன்றைக்கு சமூகத்திலே அரசியல், அமைப்பு, இயக்கங்களின் தலைவர்கள் மீதான அன்பின் வெளிப்பாட்டால் அவர்கள் ஏதாவது பாதிப்புக்கோ அல்லது பிரச்சனைகளுக்கோ உள்ளானால் அவர்களின் தொண்டர்கள் நிதானமிழந்து செயல்படுவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.

அதைக் கண்டிக்க வேண்டிய, தடுக்க வேண்டிய தலைவர்கள் பேசாமல் மௌனம் காத்து வருவதையும் நாம் அறிந்திருக்கின்றோம்.

ஆனால், நபித்தோழர்கள் நிதானமிழந்து அடுத்த செயலில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உயரிய வார்த்தைகளை கொண்டு தமது தோழர்களை கட்டிப்போட்டார்கள்.

في حجة الوداع، كان هناك مع رسول الله صلى الله عليه وسلم، وأصابه المرض، وذهب الرسول يعوده، فساله سعد قائلا:
"يا رسول الله، اني ذو مال ولا يرثني الا ابنة، أفأتصدّق بثلثي مالي..؟
قال النبي: لا.
قلت: فبنصفه؟
قال النبي: لا.
قلت: فبثلثه..؟
قال النبي: نعم، والثلث كثير.. انك ان تذر ورثتك أغنياء، خير من أن تذرهم عالة يتكففون الناس، وانك لن تنفق نفقة تبتغي بها وجه الله الا أجرت بها، حتى اللقمة تضعها في فم امرأتك"..

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் நோய் வாய்ப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கொண்டிருந்த வேளையில் மாநபி {ஸல்} அவர்கள் ஸஅத் (ரலி) அவர்களை நலம் விசாரிக்க வருகை தருகின்றார்கள்.

ஸஅத் (ரலி) அவர்களின் அருகே அமர்ந்த அண்ணலார் நோயின் தீவிரம் குறித்து விசாரித்து விட்டு ஆறுதல் கூறியாஅல்லாஹ் ஸஅதை நோயின் தீவிரத் தன்மையில் இருந்து மீட்டெடுப்பாயாக! ஸஅதிற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவாயாக! என்று துஆச் செய்தார்கள்.

நபிகளாரின் இந்தச் செய்கைகளால் உணர்ச்சிவசப்பட்ட ஸஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! என் செல்வம் முழுவதையும் இறைவழியில் அர்ப்பணித்திட விரும்புகின்றேன்!” என்றார்.

அதற்கு, நபிகளார் வேண்டாம் ஸஅதேஎன்றார்கள்.

மீண்டும் ஸஅத் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! என் செல்வத்தில் சரி பாதியை இறைவழியில் அர்ப்பணித்திட விரும்புகின்றேன்!” என்றார்.

அதற்கும் அண்ணலார் மறுத்து விட்டார்கள். மூன்றாவது முறையாக ஸஅத் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! என் செல்வத்தில் மூன்றில் ஒரு பகுதியை இறைவழியில் அர்ப்பணித்திட நான் விரும்புகின்றேன்! என்றார்.

அது கேட்ட அண்ணலார் ஆம்! என்று ஆமோதித்து விட்டுஇது கூட அதிகம் தான் என்று கூறி ஸஅதே! நீர் உம் சந்ததியை பிறர் தயவில் வாழும் நிலையில் விட்டுச் செல்வதை விட செல்வந்தர்களாக விட்டுச் செல்வதே மேல். அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செய்யும் சின்னதொரு அர்ப்பணிப்பிற்கும் அல்லாஹ்விடத்தில் சிறந்த நற்கூலியுண்டு. நீர் உம் மனைவியின் வாயில் ஓர் கவள உணவை ஊட்டினாலும் அதற்கும் கூலி உண்டு.” என்று கூறினார்கள்.

                                 ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}…)

இங்கே, ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் விவேகமின்றி செயல்பட நினைத்த போது மாநபி {ஸல்} அவர்கள் ஒரு தனி மனிதன் எடுக்கும் சில முடிவுகள் சந்ததிகளை எந்தளவு பாதிக்கும் என்பதை உணர்த்தினார்கள்.

ஆகவே, கடந்த காலங்களில் நம்மை கவலையுறச் செய்த காரியங்களில், தோல்வியைத் தழுவிட வைத்த செயல்பாடுகளில், ரணங்களையும், கசப்புணர்வுகளையும் தந்த சம்பவங்களில் மேற்கூறிய பண்புகளைக் கையாள்வதில் நாம் பின் தங்கி இருந்திருப்போம்.

நம் வெற்றிகளுக்கு இன்னும் இது போன்று ஏராளமான காரணங்கள் குவிந்து கிடக்கின்றன.

தோல்விகளிலிருந்து பாடங்களை கற்று, வெற்றி வாகை சூட வேண்டுமென்ற தனியாத ஆர்வத்தோடு நிதானத்தையும் விவேகத்தையும் கையாண்டு எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறிவோம்!

   வல்ல நாயன் நமக்கு துணை நிற்பானாக! ஆமீன்!

இந்த புத்தாண்டை உங்களுக்கும் எனக்கும் முழு உம்மத்திற்கும் வெற்றிகள் பல நிறைந்த ஆண்டாக அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்!

                            வஸ்ஸலாம்!!