Thursday, 20 August 2015

எதிர்வினைக்கு அஞ்சுவோம்!!எதிர்வினைக்கு அஞ்சுவோம்!!ஓர் இறைநம்பிக்கையாளனின் ஈருலக வாழ்க்கையையும் நிலைகுலையச் செய்திடும் காரணிகளில் எதிர்வினைக்கு மிக முக்கியப் பங்குண்டு.

அது என்ன எதிர்வினை? அதற்கென்ன இப்படியொரு ஆற்றல்? ஓர் இறை நம்பிக்கையாளனின் ஈருலக வாழ்வையும் சிதைக்குமென்றால் அதன் வீரியத்திற்கு என்ன காரணம்?

உலகில் நாம் சந்திக்கின்ற எத்தனையோ பல நல்ல வணக்கசாலிகள், பல நல் உள்ளம் படைத்த மனிதர்கள், இஸ்லாமிய வாழ்க்கை முறையை இம்மியளவும் விட்டு விடாமல் காப்பாற்றி வருகின்றவர்கள் இவர்கள் வாழ்வில் எல்லா விஷயங்களிலும் மார்க்கத்திற்கு முன்னுரிமை வழங்கினாலும் அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் அவர்கள் நிம்மதியிழந்தே வாழ்ந்து வருகின்றார்கள். ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகளையும், இழப்புகளையும் சந்தித்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்பதை சில போது உணர முடிகின்றது.

ஏன்? என்ன காரணமாக இருக்கும் என்று ஆழமாக நாம் மார்க்கத்தின் வழிகாட்டல் படி விடை தேடினோம் என்றால் அங்கு தான் இந்த எதிர்வினை என்பது விடையாக வந்து கிடைக்கிறது.

நாம் அறிந்து கொண்டோ அல்லது அறியாமலோ சகமனிதர்களிடையே சொல்லாலோ, செயலாலோ, செய்கையாலோ, மனதளவிலோ இழைக்கிற அநீதி.

இது நமது நெருங்கிய உறவுகளில் தொடங்கி, நண்பர்கள், அண்டை வீட்டார், குடும்பத்தினர் என தொடர்ந்து யாரென்றே அறியாதவர்கள் வரை தொடர்கிறது.

துரதிஷ்டவசமாக நாம் அதற்குப் பின்னால் ஏற்படுகிற விளைவுகளை யோசிப்பதில்லை.

அது தான் நம் ஈருலக வாழ்வையும் நிலைகுலையச் செய்கிறது. ஆம்! பாதிப்புக்குள்ளாகிறவர்களின் கண்ணீரும், அவர்கள் படைத்த ரப்பிடம் முறையிடும் முறையீட்டும் தான் எதிர்வினையாக வந்து உலகில் நம் நிம்மதியைக் கெடுக்கிறது.

மறுமையில் நரகின் அதள பாதாளத்தில் கொண்டு சேர்த்து விடுகின்றது. ஆகவே, எதிர்வினையால் ஏற்படுகிற ஆபத்துகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளுமாறு இஸ்லாம் வலியுறுத்துகின்றது. எதிர்வினைக்கு அஞ்சிவாழுமாறும் அது நம்மை பணிக்கிறது.

நபி {ஸல்} அவர்களின் எச்சரிக்கை….

ومن ذلك ما أخرجه البخاري ومسلم عن ابن عباس -رضي الله عنهما- أن رسول الله -صلى الله عليه وسلم- قال لمعاذ بن جبل حين بعثه إلى اليمن واتق دعوة المظلوم، فإنه ليس بينها وبين الله حجاب.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு அனுப்பும் போதுமுஆதே! அநீதி இழைக்கப்பட்டவனின் முறையீட்டை அஞ்சிக்கொள்ளுங்கள்! ஏனெனில், அவனுக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில் எவ்வித திரையும் கிடையாதுஎன்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                                            ( நூல்: புகாரி )

وعن أبي هريرة -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم-: (وَدَعْوَةُ الْمَظْلُومِ تُحْمَلُ على الْغَمَامِ وَتُفْتَحُ لها أَبْوَابُ السماء
وَيَقُولُ الرَّبُّ عز وجل وعزتي لأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِين).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அநீதி இழைக்கப்பட்டவனின் முறையீடு உடனடியாக மேகத்தைக் கடக்கிறது. அதற்காக வானலோகத்தின் வாசல்களும் திறக்கப்படுகிறது. அந்த முறையீட்டுக்குப் பதில் தரும் முகமாக அல்லாஹ்என் கண்ணியத்தின் மீது ஆணையாக! இதோ இப்போதே உன் முறையீட்டுக்குப் பதில் தருகின்றேன்என்று கூறுவதாக, நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                  ( நூல்: முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் )

وعن أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وسلم- قال: (دعوة المظلوم مستجابة وإن كان فاجرا ففجوره على نفسه).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அநீதி இழைக்கப்பட்டவனின் முறையீட்டை அல்லாஹ் உடனடியாக ஏற்றுக் கொள்கின்றான். அவன் பாவியாக இருந்தாலும் சரியே!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                     ( நூல்: தப்ரானீ )

யாருடைய மனவருத்தத்திற்கும் ஆளாகக் கூடாது

روى مُحَمَّد بن إسحاق عن نافع وزيد بن أسلم، عن ابن عُمر، وعن سعيد بن أبي المقبري، وابن المنكدر عن أبي هريرة، وعن عَمَّار بن ياسر، قالوا: قد قدمت دُرَّة بِنْت أبي لهب المدينة مهاجرةً، فنزلت في دار رافع بن المعلّي الزرقيّ، فقال لها نسوة جلسْنَ إليها من بني زريق: أنتِ ابِنة أبي لهب الذي يقول الله له: " تبّت يدا أبي لهب وتبّ " فما يغني عنكِ مهاجرتكِ؟ فأتت دُرَّة النَّبِيّ صلّى الله عليه وسلّم فذكرت له ما قلن لها فسكّنها وقال: " اجلسي " . ثم صلى بالناس الظهر، وجلس على المنبر ساعةً ثم قال: " أيها الناس، ما لي أُوذى في أهلي؟ فوالله إن شفاعتي لتنال بقرابتي حتى إن صُداءَ وحكماً وسلهماً لتنالها يوم القيامة وسِلْهَمُ في نسب اليمن " .
அண்ணல் நபிகளாரின் அவைக்கு அழுத வண்ணமாக ஓடோடி வருகின்றார் துர்ரா பின்த் அபூலஹப் (ரலி) என்ற பெண்மணி.

மிகவும் ஆர்வத்தோடு இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்ட பெண்மணிகளில் அவரும் ஒருவர்.

ஹிஜ்ரத் எனும் புனிதப் பயணத்தின் பதிவேட்டில் இடம் பெற்றவர்களில் அவரும் ஒருவர்.

அந்தப் பெண்மணியின் அழுகையைப் பார்த்து அண்ணலாரின் திரு முகம் கூட மாறிப் போனது.

காரணம் கேட்கின்றார்கள் நபிகளார். அந்தப் பெண்மணி அன்ஸாரிப் பெண்மணிகளில் பனீ ஸரீக் குடும்பப் பெண்கள் தன்னை சுடு வார்த்தைகளால் காயப் படுத்தி விட்டதாகஅழுது கொண்டே கூறினார்கள்.

அவர்களின் கரம் பற்றிப் பிடித்து, ஆறுதல் கூறி அமர வைத்தார்கள். அப்போது ளுஹர் தொழுகைக்கான நேரமாக அது இருந்தது.

துர்ரா (ரலி) அவர்கள் வேறு யாருமல்ல. அண்ணலாரின் மிக நெருங்கிய உறவினரான அபூ லஹபின் மகள் தான்.

இப்போது நமக்கு புலப்பட்டிருக்கும் பனூ ஸரீக் பெண்மணிகள் எத்தகைய வார்த்தைகளால் துர்ரா (ரலி) அவர்களைக் காயப் படுத்தியிருப்பார்கள் என்று.

ஆம்! இப்படிச் சொன்னார்களாம்: உமது தந்தை அபூலஹபின் கேட்டினாலும், உமது தாயின் தகாத செயலினாலும், அண்ணலாரின் மீது கொண்டிருந்த தீராத பகமையினாலும் அல்லாஹ் உமது தாயையும், தந்தையையும் சபித்து ஒரு சூராவையே தனது குர்ஆனில் இடம் பெறச் செய்துள்ளான். நீ ஹிஜ்ரத் செய்து எந்த பலனையும் அடையப் போவதில்லை” என்று.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ளுஹர் தொழுகைக்குப் பின்னர், மிம்பரின் மீதேறிமக்களே! என் குடும்பத்தார்களின் விஷயத்தில் இப்படி இப்படியெல்லாம் பேசி என்னையும் என் குடும்பத்தாரையும் நோவினைப் படுத்தாதீர்கள்.என்று கூறினார்கள்.

பின்னர், துர்ரா (ரலி) அவர்களை தமதருகே அழைத்து எவர் உம்மை கோபப்படுத்துவாரோ, அவர் மீது அல்லாஹ்வும் கோபப்படுவான். நீ என்னைச் சார்ந்தவள். நான் உன்னைச் சார்ந்தவன்.என்று கூறினார்கள்.

பின்னர், இது பற்றி அறிந்த அப்பெண்மணிகள் தமது தவறை உணர்ந்து மிகவும் வருந்தினார்கள்.

            ( நூல்: உஸ்துல் ஃகாபா, தபகாத் இப்னு ஸஅத், அல் இஸ்தீஆப். )

அப்படி பிறரின் மன வருத்தத்திற்கு ஆளாகும் போது அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும், அதுவே தங்களது குடும்பத்தார்களின் விவகாரமாக இருந்தால் பாதிப்பு மிகவும் அதிகமாகும் என்பதை எச்சரிக்கை செய்தார்கள்.

அண்டை வீட்டாரின் மனவருத்தமும்…. பிரார்த்தனையும்அதன் பாதிப்பும்….

حدثنا عبد الوارث بن سفيان حدثنا قاسم بن أصبغ أخبرنا المطلب ابن سعيد أخبرنا عبد الله بن صالح قال: حدثني الليث قال: حدثني ابن الهادي عن أبي بكر بن محمد بن عمرو بن حزم قال: جاءت أروى بنت أويس إلى أبي محمد بن عمرو بن حزم فقالت له: يا أبا عبد الملك إن سعيد بن زيد بن عمرو بن نفيل قد بنى ضفيرة في حقي فأته بكلمة فلينزع عن حقي فوالله لئن لم يفعل لأصيحن به في مسجد رسول الله صلى الله عليه وسلم فقال لها: لا تؤذي صاحب رسول الله صلى الله عليه وسلم فما كان ليظلمك ولا ليأخذ لك حقاً. فخرجت وجاءت عمارة بن عمرو وعبد الله بن سلمة فقالت لهما ائتيا سعيد بن زيد فإنه قد ظلمني وبنى ضفيرة في حقي فوالله لئن لم ينزع لأصيحن به في مسجد رسول الله صلى الله عليه وسلم. فخرجا حتى أتياه في أرضه بالعقيق فقال لهما: ما أتى بكما؟ قالا: جاءتنا أروى بنت أويس فزعمت أنك بنيت ضفيرة في حقها وحلفت بالله لئن لم تنزع لتصيحن بك في مسجد رسول الله صلى الله عليه وسلم فأحببنا أن نأتيك ونذكر ذلك لك. فقال لهما: إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " من أخذ شبراً من الأرض بغير حقه يطوقه الله يوم القيامة من سبع أرضين " . فلتأت فلتأخذ ما كان لها من الحق اللهم إن كانت كاذبة فلا تمتها حتى تعمي بصرها وتجعل ميتتها فيها فرجعوا فأخبروها ذلك فجاءت فهدمت الضفيرة وبنت بنيانا فلم تمكث إلا قليلاً حتى عميت وكانت تقوم بالليل ومعها جارية لها تقودها لتوقظ العمال فقامت ليلة وتركت الجارية فلم توقظها فخرجت تمشي حتى سقطت في البئر فأصبحت ميتة.

மர்வான் இப்னு ஹகம் (ரஹ்) அவர்களிடம் அர்வா பிந்த் உவைஸ் எனும் பெண்மனி சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட பத்து நபித்தோழர்களில் ஒருவரான ஸயீத் இப்னு ஜைத் (ரலி) அவர்களைக் குறித்து நில அபகரிப்புக் குற்றச்சாட்டு ஒன்றை சமர்ப்பித்தார்.

அபூ அப்துல் மலிக் அவர்களே! எனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை ஸயீத் இப்னு ஜைத் அவர்கள் அபகரித்துக் கொண்டார். நீங்கள் வந்து பேசி என் நிலத்தை அவரிடம் இருந்து மீட்டுத்தரவேண்டும். இல்லையெனில், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! மஸ்ஜிதுன் நபவீக்கு முன்னால் நின்று நான் கூச்சலிடுவேன்என்று கூறினாள்.

அப்போது, மர்வான் அவர்கள்அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் நபித் தோழருக்கு நோவினை கொடுக்காதே! அவர் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார். முதலில் இங்கிருந்து கிளம்புஎன்று விரட்டி விட்டார்கள்.

அங்கிருந்து வெளியேறிய அப்பெண்மனி நேராக அம்மாரா இப்னு அம்ர், மற்றும் அப்துல்லாஹ் இப்னு ஸலமா என்பவர்களிடத்தில் சென்று மர்வான் அவர்களிடத்தில் முறையிட்டது போன்று முறையிட்டாள்.

இருவரும் ஸயீத் (ரலி) அவர்களிடம் வந்து அர்வா வின் முறையீடு குறித்தும், அவளின் மிரட்டல் குறித்தும் கூறிவிட்டு இது குறித்து உங்களின் அபிப்பிராயம் என்ன? என்று கேட்டனர்.

அப்போது, ஸயீத் (ரலி) அவர்கள் “”எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை கழுத்தில் மாலையாகக் கட்டி தொங்க விடப்படுவார்என நபி {ஸல்} அவர்கள் கூறியதை ( தங்களின் செவியைப் பிடித்துக் காட்டி ) இந்தச் செவியால் நான் கேட்டிருக்கின்றேன்.

பிறகு, நான் எப்படி அவ்வாறு அப்பெண்மனியின் நிலத்தின் ஒரு பகுதியை அபகரிப்பேன்?என்று அவ்விருவரிடமும் கேட்டு விட்டு

தங்களின் இரு கரங்களையும் வானை நோக்கி உயர்த்திஇறைவா! அவள் பொய் சொல்கிறாள் என்றால் அவளின் பார்வையை குருடாக்கி விடு! எந்த நிலத்தை நான் அபகரித்ததாகச் சொல்கிறாளோ அதிலேயே அவளை மரணிக்கச் செய்! என துஆச் செய்தார்கள்.

அல்லாஹ் ஸயீத் அவர்களின் துஆவைக் கபூலாக்கினான். பின் நாளில் அது போன்றே அவளின் மரணமும் நடந்தேறியது.

மக்கள் கூடஅல்லாஹ் அர்வாவைக் குருடாக்கியது போல் உன்னையும் குருடாக்குவானாக! என ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிலையை நாங்கள் கண்டோம் என அலாவு இப்னு அப்துர்ரஹ்மான் மற்றும், முஹம்மத் இப்னு அபூபக்ர் ஆகிய இந்த அறிவிப்பின் இரு ராவிகளும் கூறுகின்றார்கள்.

                       ( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபத்தில் அஸ்ஹாப் )

فَبَعَثَ رِجَالاً يَسْأَلُوْنَ عَنْهُ بِالكُوْفَةِ، فَكَانُوا لاَ يَأْتُوْنَ مَسْجِداً مِنْ مَسَاجِدِ الكُوْفَةِ إِلاَّ قَالُوا خَيْراً، حَتَّى أَتَوْا مَسْجِداً لِبَنِي عَبْسٍ.
فَقَالَ رَجُلٌ يُقَالُ لَهُ: أَبُو سعدَةَ: أَمَا إِذْ نَشَدْتُمُوْنَا بِاللهِ، فَإِنَّهُ كَانَ لاَ يَعْدِلُ فِي القَضِيَّةِ، وَلاَ يَقْسِمُ بِالسَّوِيَّةِ، وَلاَ يَسِيْرُ بِالسَّرِيَّةِ.
فَقَالَ سَعْدٌ: اللَّهُمَّ إِنْ كَانَ كَاذِباً فَأَعْمِ بَصَرَهُ، وَعَجِّلْ فَقْرَهُ، وَأَطِلْ عُمُرَهُ، وَعَرِّضْهُ لِلْفِتَنِ.
قَالَ: فَمَا مَاتَ حَتَّى عَمِيَ، فَكَانَ يَلْتَمِسُ الجُدُرَاتِ، وَافْتَقَرَ حَتَّى سَأَلَ، وَأَدْرَكَ فِتْنَةَ المُخْتَارِ، فَقُتِلَ فِيْهَا  .
قَالَ عَبْدُ المَلِكِ: فَأَنَا رَأَيْتُهُ بَعْدُ يَتَعَرَّضُ لِلإِمَاءِ فِي السِّكَكِ، فَإِذَا سُئِلَ كَيْفَ أَنْتَ؟
يَقُوْلُ: كَبِيْرٌ مَفْتُوْنٌ، أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ.
مُتَّفَقٌ عَلَيْهِ  .

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூஃபாவில் ஆளுநராக இருந்தார்கள். அப்போது, ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் மீது சில குற்றச்சாட்டுகள் ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களின் கவனத்திற்கு வந்த போது அவைகள் உண்மைதானா என்று அறிய ஒரு குழுவை நியமித்தார்கள்.

அந்த குழு கூஃபா விரைந்து சென்று மக்களிடையே விசாரித்தது. கூஃபா நகர மக்கள் ஸஅத் (ரலி) அவர்கள் குறித்து நல்லதையே கூறினார்கள்.

பனூஅபஸ் எனும் பள்ளியில் அந்தக் குழு விசாரித்த போது, அங்கிருந்த உஸாமா இப்னு கதாதா ( அபூஸஅதா ) என்பவர் எழுந்து ”ஆளுநர் ஸஅத் அவர்கள் எங்களுக்கு மத்தியில் சமத்துவமாகப் பங்கு வைப்பதில்லை, தீர்ப்பளிப்பதில் நீதியாக நடந்து கொள்வதும் இல்லை, எங்களோடு யுத்தகளங்களுக்கு வருவதும் இல்லை” என்று குற்றம் சுமத்தினார்.

இதைச் செவியுற்ற ஸஅத் (ரலி) அவர்கள் அதிர்ச்சியுற்றவராக “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்குப் பாதகமாக நான் மூன்று பிரார்த்தனைகளைச் செய்கின்றேன்” எனக்கூறிவிட்டு...

யாஅல்லாஹ்! உனது அடியார் உஸாமா இப்னு கதாதா என் மீது சுமத்திய குற்றச்சாட்டில் பொய்யுரைத்திருந்தால் அவரின் ஆயுளை நீ நீளமாக்குவாயாக!, அவரின் வறுமையை நீ நீளமாக்குவாயாக!, அவரைக் குழப்பங்களுக்கு மத்தியில் வாழ வைப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

உஸாமா இப்னு கதாதா தங்களது கடைசி காலத்தில் “தமது இரு புருவங்களும் கண்களின் மீது விழுந்து தொங்கும் அளவிற்கு முதுமை அடைந்தார். மேலும், கடுமையான வறுமை ஏற்பட்டு, வீதியில் வருவோர் போவோரிடம் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அத்தோடு பாதையில் செல்லும் பெண்களை சில்மிஷம் செய்து, அவமாரியாதைக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும், இது குறித்து அவரிடம் ஏன் இந்த வயதில் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கின்றீர்கள்? உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று கேட்டால் “ஸஅத் அவர்களின் மனவருத்தமும், துஆவும் தான் என்னுடைய இந்த கேவலமான நடவடிக்கைகளுக்கு காரணம்” என்று பதில் கூறுவார்.

முக்தார் எனும் ஆட்சியாளரின் காலத்தில் ஏற்பட்ட ஒரு கலவரத்தில் கடுமையான முறையில் கொலைசெய்யப்பட்டு இறந்தார்.

                       ( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா, உஸ்துல் ஃகாபா )

أَسَدُ بنُ مُوْسَى: حَدَّثَنَا يَحْيَى بنُ زَكَرِيَّا، حَدَّثَنَا إِسْمَاعِيْلُ، عَنْ قَيْسٍ، قَالَ:
كَانَ لابْنِ مَسْعُوْدٍ عَلَى سَعْدٍ مَالٌ، فَقَالَ لَهُ ابْنُ مَسْعُوْدٍ: أَدِّ المَالَ.
قَالَ: وَيْحَكَ مَا لِي وَلَكَ؟
قَالَ: أَدِّ المَالَ الَّذِي قِبَلَكَ.
فَقَالَ سَعْدٌ: وَاللهِ إِنِّي لأَرَاكَ لاَقٍ مِنِّي شَرّاً، هَلْ أَنْتَ إِلاَّ ابْنُ مَسْعُوْدٍ، وَعَبْدُ بَنِي هُذَيْلٍ.
قَالَ: أَجل وَاللهِ! وَإِنَّكَ لابْنُ حَمْنَةَ.
فَقَالَ لَهُمَا هَاشِمُ بنُ عُتْبَةَ: إِنَّكُمَا صَاحِبَا رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- يَنْظُرُ إِلَيْكُمَا النَّاسُ.
فَطَرَحَ سَعْدٌ عُوْداً كَانَ فِي يَدِهِ، ثُمَّ رَفَعَ يَدَهُ، فَقَالَ: اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ!
فَقَالَ لَهُ عَبْدُ اللهِ: قُلْ قَوْلاً وَلاَ تَلْعَنْ.
فَسَكَتَ، ثُمَّ قَالَ سَعْدٌ: أَمَا وَاللهِ لَوْلاَ اتِّقَاءُ اللهِ لَدَعَوْتُ عَلَيْكَ دَعْوَةً لاَ تُخْطِئُكَ.
  
ஒரு முறை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மக்கள் திரளாக குழுமியிருந்த ஓர் சபையில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் வந்து “ஸஅதே! எனக்குத் தர வேண்டிய பணத்தை தாருங்கள்” என்றார். அதற்கு, ஸஅத் (ரலி) அவர்கள் “உனக்கும் எனக்கும் பண ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லையே?, உன்னிடம் நானோ என்னிடம் நீயோ ஒரு போதும் கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டதில்லையே?. அப்படி இருக்கும் போது இப்படி நீ நடந்து கொள்வது சரி இல்லை. என் நற்பேருக்கு களங்கம் விளைவிக்க நீ முயற்சிப்பதாகவே நான் கருதுகின்றேன்.

நீ மஸ்வூத் (ரலி) அவர்களின் மகனாக இருக்கிற ஒரே காரணத்திற்காக உன்னை விட்டு விடுகிறேன், உடனடியாக இங்கிருந்து சென்று விடு” என்று கூறினார்கள்.

அப்போது, அப்துல்லா இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் “ ஸஅதே! நானும் உம் தந்தைக்காகத் தான் இப்படி வந்து அமைதியான முறையில் கேட்கின்றேன். இல்லை என்றால்..... ?” என்று சப்தத்தை உயர்த்தினார்.

அப்போது, அந்த சபையில் இருந்த ஹாஷிம் இப்னு உத்பா என்பவர் இருவரின் அருகே வந்து “நீங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித தோழர்களாவீர்கள். இதோ மக்களெல்லாம் உங்களையே உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். தயவு செய்து உங்கள் சண்டையை நிறுத்துங்கள்” என்றார்.

அப்போது, கையில் ஊண்றியிருந்த ஊன்று கோலை தூக்கி எறிந்த ஸஅத் (ரலி) அவர்கள், இருகரங்களையும் வானை நோக்கி உயர்த்தி “வானங்களை படைத்து பரிபாலிக்கும் என் இறைவா!” என்று பிரார்த்திக்கத் துவங்கினார்கள்.

பதறித்துடித்தவர்களாக அருகே வந்த இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் “ஸஅத் அவர்கள்! அழகிய பிரார்த்தனையைச் செய்யுங்கள்! என் விஷயத்தில் சாபம் ஏதும் விட்டு விடாதீர்கள்” என்றார்.

அது கேட்ட, ஸஅத் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் பயம் மாத்திரம் எனக்கு இல்லை என்றால் உம்மால் வாழ்க்கையில் நிமிர்ந்திட முடியாத அளவு பாதிப்பை ஏற்ப்படுத்துமாறு அல்லாஹ்விடம் நான் முறையிட்டு இருப்பேன்” என்றார்.

                                        ( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா )

فقال الحجاج : ويلك يا سعيد . فقال سعيد : الويل لمن زحزح عن الجنة وأدخل النار . فقال الحجاج : اختر يا سعيد أي قتلة تريد أن أقتلك ؟ قال : اختر لنفسك يا حجاج ، فوالله ما تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة . قال : أفتريد أن أعفو عنك ؟ قال :إن كان العفو فمن الله ، وأما أنت فلا براءة لك ولا عذر . قال : اذهبوا به فاقتلوه . فلما خرج من الباب ضحك ، فأخبر الحجاج بذلك ، فأمر برده ، فقال : ما أضحكك ؟ قال : عجبت من جراءتك على الله وحلم الله عنك . فأمر بالنطع فبسط ، فقال : اقتلوه . فقال سعيد : ( وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين ) ، قال : شدوا به لغير القبلة . قال سعيد : ( فأينما تولوا فثم وجه الله ) ، قال : كبوه لوجهه . قال سعيد : ( منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ) قال الحجاج : اذبحوه . قال سعيد : أما إني أشهد وأحاج أن لا إله إلا الله وحده لا شريك له ، وأن محمدا عبده ورسوله ، خذها مني حتى تلقاني يوم القيامة . ثم دعا سعيد الله فقال : اللهم لا تسلطه على أحد يقتله بعدي . فذبح على النطع رحمه الله . قال : وبلغنا أن الحجاج عاش بعده خمس عشرة ليلة ، ووقع الأكلة في بطنه ، فدعا بالطبيب لينظر إليه فنظر إليه ، ثم دعا بلحم منتن ، فعلقه في خيط ثم أرسله في حلقه فتركها ساعة ، ثم استخرجها وقد لزق به من الدم ، فعلم أنه ليس بناج ، وبلغنا أنه كان ينادي بقية حياته : ما لي ولسعيد بن جبير ؟ كلما أردت النوم أخذ برجلي .

ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் அவர்களுக்கும் அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஏராளமான அறிஞர்களுக்கும் இடையே மிகப் பெரிய அளவிளான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. அந்த மாதிரி தருணங்களில் ஹஜ்ஜாஜ் தன்னை எதிர்க்கிற அறிஞர்களில் ஏராளமானவர்கள் தன்னுடைய ஆட்சி, அதிகாரத்தைக் கொண்டு கொன்று குவித்தார்.

அப்படித்தான்  ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களுக்கும், ஹஜ்ஜாஜிற்கும் இடையே கடுமையான முரண்பாடு நிலவியது. ஹஜ்ஜாஜ் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார்.

கடும் சித்ரவதைக்குப் பின்னரே அவருக்கு மரண தண்டனையை ஹஜ்ஜாஜ் வழங்கினார்.

ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் மரணிக்கும் போது அல்லாஹ்விடம் “யாஅல்லாஹ்! எனக்குப் பிறகு யாரையும் இந்த அநியாயக்கார ஆட்சியாளனின் கையால் கொலை செய்திடும் அதிகாரத்தை வழங்கி விடாதே! இவனுக்கும், இவன் ஆட்சிக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்து விடு!” என்று பிரார்த்தித்தார்கள்.

மிகச்சரியாக ஸயீத் (ரஹ்) அவர்கள் கொல்லப்பட்டு (ஷஹீதாக்கப்பட்டு) பதினைந்து நாட்கள் இன்னொரு அறிவிப்பின் படி நாற்பது நாட்கள் தான் ஆகியிருக்கும் ஹஜ்ஜாஜ் மன நோயாளி போன்று “எனக்கும் ஸயீத் அவர்களுக்கும் என்ன பிரச்சனை? என் கனவில் வந்து என் ஆடைகளைப் பற்றி இழுத்து, ஹஜ்ஜாஜ் ஏன் என்னை அநியாயமாக கொலை செய்தாய்? என்று கேட்டு, என் தூக்கத்தை பறித்து விட்டார்” என்று பார்க்கிறவர்களிடம் எல்லாம் புலம்பிக் கொண்டிருந்தார்.

மேலும், இனம் காணாத நோய் ஏற்பட்டு அந்த நோயின் காரணமாகவே இறந்தும் போனார்.

                                           ( நூல்: ஹுல்யத்துல் அவ்லியா )

الإمام الذهبي في كتاب الكبائر يقول
أن رجلا مقطوع اليد من الكتف كان ينادي في النهار من رآني فلا يظلمن أحدا فقال له رجل: ما قصتك؟ قال: يا أخي قصتي عجيبة، وذلك أني كنت من أعوان الظلمة، فرأيت يوما صيادا قد اصطاد سمكة كبيرة فأعجبتني، فجئت إليه وقلت له: أعطني هذه السمكة، فقال: لا أعطيكها أنا آخذ بثمنها قوتا لعيالي، فضربته وأخذتها منه قهرا ومضيت بها، قال: فبينما أنا ماش بها إذا عضت إبهامي عضة قوية وآلمتني ألما شديدا حتى لم أنم من شدة الوجع وورمت يدي فلما أصبحت أتيت الطبيب وشكوت إليه الألم، فقال: هذه بدوّ آكلة اقطعها وإلا تلفت يدك كلها، قال: فقطت إبهامي ثم ضربت يدي فلم أطق النوم ولا القرار من شدة الألم فقيل لي: اقطع كفك فقطعتها وانتشر الألم إلى الساعد فآلمني ألما شديدا ولم أطق النوم ولا القرار وجعلت أستغيث من شدة الألم، فقيل لي: اقطعها من المرفق فانتشر الألم إلى العضد، فقيل لي: اقطع يدك من كتفك وإلا سرى إلى جسدك كله فقطعتها، فقال لي بعض الناس: ما سبب هذا فذكرت له قصة السمكة، فقال لي: لو كنت رجعت من أول ما أصابك الألم إلى صاحب السمكة، فاستحللت منه واسترضيته، لما قطعت يدك فاذهب الآن وابحث عنه واطلب منه الصفح والمغفرة قبل أن يصل الألم إلى بدنك قال: فلم أزل أطلبه في البلد حتى وجدته فوقعت على رجليه أقبلهما وأبكي، وقلت: يا سيدي سألتك بالله إلا ما عفوت عني، فقال لي: ومن أنت؟ فقلت :أنا الذي أخذت منك السمكة غصبا وذكرت له ما جرى وأريته يدي، فبكى حين رآها، ثم قال: قد سامحتك لما قد رأيت من هذا البلاء، فقلت :بالله يا سيدي، هل كنت دعوت علي؟ قال: نعم، قلت: اللهم هذا تقوّى علي بقوته علي وضعفي وأخذ مني ما رزقتني ظلما فأرني فيه قدرتك. ـ

அல்லாமா தஹபீ (ரஹ்) அவர்கள் தங்களின் கபாயிர் எனும் நூலில் ஒரு செய்தியை பதிவு செய்திருக்கின்றார்கள்.

“ஒருவர் பகல் நேரத்தில் வீதியில் நின்று கொண்டு வருவோர் போவோரிடம் எல்லாம் தன் துண்டான ஒரு கையைக் காட்டி யாரும் பிறருக்கு அநீதம் இழைக்காதீர்! அநீதம் இழைத்தால் எனக்கு நிகழ்ந்தது போன்றே நிகழும்” என்று கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது, ஒருவர் அவரை அணுகி ஏன் நீ யாருக்கு என்ன அநீதம் இழைத்தாய்? இந்த கை எப்படி துண்டானது? என்று வினவினார்.

அதற்கவர், ”ஒரு நாள் நான் ஒரு ஏரிக்கரையின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவன் அங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் அருகே சென்ற நான் அவன் பிடித்து வைத்திருந்த பெரிய மீன் ஒன்றை கேட்டேன். அவன் தர மறுத்தான்.

நான் என் பலம் அனைத்தையும் பிரயோகித்து அவனிடம் இருந்து பறித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன். கொஞ்ச தூரம் தான் வந்திருப்பேன். என் கையில் கடுமையான வலி ஏற்படுவதை உணர்ந்தேன். மீனைக் கொண்டு வீட்டில் கொடுத்து விட்டு நேராக மருத்துவரிடம் சென்றேன்.

கையைப் பார்த்த மருத்துவர் விரல்களை எடுத்தால் தான் வலி குணமாகும் என்றார். நானும் விரல்களை எடுத்து விட்டேன். மீண்டும் சில நாட்கள் கழித்து பழைய படி வலி ஏற்படவே மருத்துவரிடம் சென்றேன். மணிக்கட்டை எடுக்க வேண்டும் என்றார்.

பின்னர் வலி ஏற்பட்ட போது முழங்கை, பின்னர் வலி ஏற்பட்ட போது குடங்கை என இப்போது என் முழு கையையும் இழந்து நான் நிற்கின்றேன்” என்று அவரிடம் கூறினார்.

அதைக் கேட்ட அந்த மனிதர் உன் கை முழுவதும் போவதற்கு நீ மீன் பிடித்துக் கொண்டிருந்தவனிடம் உன் பலப்பிரயோகத்தை காட்டி அநீதி இழைத்தாய் அல்லவா? அது தான் காரணம். அப்போதே அவனிடம் நீ சென்று மன்னிப்பு கேட்டு இருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது. அந்த மனிதரின் சாபம் தான் இப்படி உனக்கு ஏற்படக் காரணம். ஆகவே, இப்பொழுதே அவனிடம் சென்று நீ நடந்து கொண்ட தவறான முறைக்காக மன்னிப்புத் தேடிக்கொள்! இல்லையென்றால் இன்னொரு கையும் போய் விடப்போகின்றது” என்றார்.

அப்போது, அவர் அந்த மீன் பிடிக்கும் மனிதரை நோக்கி ஓடோடிச் சென்றார். அவர் அதே ஏரியில் அப்போதும் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

அருகே சென்ற கையில்லாதவர் “என்னை மன்னித்து விடுங்கள்” என்றார். யார் நீ? உன்னை எதற்காக நான் மன்னிக்க வேண்டும் என்றார்.

இவர் ஆரம்பத்திலிருந்து தற்போது தான் மன்னிப்புக் கேட்க வந்தது வரையிலான அத்தனைச் செய்திகளையும் கண்ணீர் மல்க கூறினார்.

அதைக் கேட்டு விட்டு, என்னுடைய துஆ தான் உம்முடைய இந்த நிலைக்குக் காரணம் என்று கூறிவிட்டு “யாஅல்லாஹ் தன் பலம் அனைத்தையும் பிரயோகித்து எனக்கு அநியாயம் இழைக்கிற இவனுக்கு உன் பலம் என்னவென்று காட்டு!” என்று துஆ செய்ததாகக் கூறினார்.

அவரின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட அவர், இவரை மன்னித்து விட்டதாகவும் கூறினார்.

                                     ( நூல்: அல்கபாயிர் லி இமாமி தஹபி )

ஆகவே, மேற்கூறிய சம்பவங்கள் அனைத்தும் உணர்த்துவது ஒன்றே ஒன்று தான் எதிர்வினைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் என்று.

ஆனால், இன்று பெற்றெடுத்த தாய் தந்தையர்களை மக்களும், பெற்றெடுத்த மக்களை பெற்றோர்களும் உறவினர்களையும், அண்டை வீட்டார்களையும், நண்பர்களையும் அறிமுகமானவர்களையும் அல்லல் படுத்தி ரசிக்கிற போக்கு அதிகரித்திருக்கின்றது.

தன்னிடம் அதிகாரம் இருக்கின்றது, அறிவு இருக்கின்றது, செல்வம் இருக்கின்றது, மக்கள் செல்வாக்கு இருக்கின்றது, பிள்ளைச் செல்வம் இருக்கின்றது என்பதற்காக எளிதில் பிறரின் உணர்வுகளைத் துண்டாடி விடுகின்றோம். மனதைப் புண் படுத்தி விடுகின்றோம்.

ஆனால், அவர்களின் இரு கரங்களையும், இரு கண்களில் இருந்து வெளியாகிற கண்ணீர்த் துளிகளையும் நாம் மறந்து விடுகின்றோம்.

எதிர்வினை நம் ஈருலக வாழ்வைச் சீர்குலைப்பதோடு நின்று விடாமல், நம் ஈமானையும் நிர்மூலமாக்கி விடுகின்றது.


إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ()

அல்லாஹ் கூறுகின்றான்: “நிச்சயமாக அல்லாஹ் அநியாயக் காரர்களுக்கு ஒரு போதும் நேர்வழியில்  (இஸ்லாத்தில் நிலைத்திருக்க வைப்பதில்லை) செலுத்த மாட்டான்”                                                    ( அல்குர்ஆன்: 5:51 )

பிறருக்கு அநீதம் இழைத்தவர்கள் மஹ்ஷர் பெருவெளியில் வெறுமையோடும், தலைகுனிந்தும் நிற்பார்கள் என்கிற எச்சரிக்கையையும் நாம் மறந்து விடுகின்றோம்.

 وعن أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وسلم- قال
 أتدرون مَن المفلس يوم القيامة 
 قالوا المفلس فينا مَن لا درهم له ولا متاع 
  قال إن المفلس مِن أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي وقد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته فإن فنيت حسناته قبل أن يُقضى ما عليه أُخذ من خطاياهم فطُرحت عليه ثم طُرح في النار


அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “என் உம்மத்தில் மறுமை நாளில் ஒன்றுமில்லாதவர்களாக வருபவர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, தோழர்கள் “எங்களில் வீடு வாசல் இல்லாதவர்கள், காசு பணம் இல்லாதவர்களைத் தான் நாங்கள் ஒன்றுமில்லாதவர்களாக நாங்கள் அறிந்து வைத்திருக்கின்றோம்” என்று பதில் கூறினார்கள்.

அதற்கு, அண்ணலார் “நாளை மறுமையில் என் உம்மத்தில் சிலர் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற வழிபாடுகளின் மூலம் ஏராளமான நன்மைகளின் குவியல்களோடு வருவார்கள்.

இறுதியில், உலகில் வாழும் காலத்தில் இவர்களால் அநீதம் இழைக்கப்பட்டவர்களுக்கு அங்கு அவரின் நன்மைகள் ஈடாக வழங்கப் பெற்று, கொடுப்பதற்கு நன்மைகள் இல்லாமல் அநீதம் இழைக்கப்பட்டவர்களின் பாவச் சுமைகளை இவர் மீது திணித்து, கடைசியில் ஒன்றுமில்லாதவராக, நிராயுதபாணியாக நரகில் தூக்கி வீசப்படுவார். இவர் தான் ஒன்றுமில்லாதவர்” என்று நபி {ஸல்} அவர்கள் விளக்கம் தந்தார்கள்.                        ( நூல்: அஹ்மத் )

ஆகவே, ஈமானை நிர்மூலமாக்கி, ஈருலக வாழ்க்கையை சிதைத்து நிம்மதியில்லாத வாழ்க்கையை வாழச்செய்கிற எதிர்வினையை ஏற்படுத்துகிற காரியங்களில் ஈடுபடுவதில் இருந்தும் தவிர்ந்து வாழ்வோம்!

யாஅல்லாஹ்! பிறருக்கு அநீதம் இழைக்கிற மாபாதகச் செயல்களைச் செய்வதில் இருந்தும் எங்களைக் காப்பாற்றுவாயாக!

எதிர்வினைக்கு அஞ்சி பிறரோடு இணங்கி வாழ்கிற மேன்மக்களாக எங்களை ஆக்கியருள் புரிவாயாக!

       ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!