Wednesday 14 October 2015

வாழ்க்கையை வெல்வோம்!!!



வாழ்க்கையை வெல்வோம்!!!



வெற்றி இதற்கு ஆசைப்படாத மனிதர்களே இல்லை. இதற்காக மனிதன் எதை வேண்டுமானாலும் இழக்க முன் வந்து விடுகின்றான்.

சிலருக்கு வியாபாரத்தில் வெற்றி வேண்டும். சிலருக்கு குடும்பத்தில் வெற்றி வேண்டும். சிலருக்கு விளையாட்டில் வெற்றி வேண்டும். சிலருக்கு தேர்வில் வெற்றி வேண்டும். சிலருக்கு தேர்தலில் வெற்றி வேண்டும். சிலருக்கு தாம் நினைத்த காரியத்தில் எல்லாம் வெற்றி வேண்டும்.

இப்படியாக வெற்றி என்பது ஆளாளுக்கு மாறுபடுகிறது. அதை அடைவதற்காக ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்கிற வழிகளும் வேறுபடுகிறது.

இஸ்லாமிய மார்க்கமும் மனிதனை வெற்றிப் பாதையை நோக்கி முன்னேறச் சொல்கிறது. வெற்றிக்கு மேல் வெற்றியை குவிக்குமாறு தூண்டுகிறது. இறுதியாக, மகத்தான வெற்றிக்குச் சொந்தக்காரனாக ஆகுமாறு வலியுறுத்தவும் செய்கிறது.

ஆகவே தான், இஸ்லாம் வெற்றியை இரு கூறுகளாகப் பிரித்துக் கூறுகிறது. 1. வாழ்க்கையில் வெற்றி கொள்வது. 2. வாழ்க்கையை வெற்றி கொள்வது.

இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றதாகும்.

இதில், மேற்கூறிய வெற்றிகள் யாவும் வாழ்க்கையில் வெற்றி பெறுகிற வகையைச் சார்ந்ததாகும். இதில் யார் வேண்டுமாலும் வெற்றி பெறலாம். அந்த வெற்றி எப்போதும் யாரிடமும் நிரந்தரமாக இருப்பதில்லை.

இன்னொன்று வாழ்க்கையை வெற்றி கொள்கிற வகையைச் சார்ந்தது. இந்த வெற்றி நிலையானது. இதில் எல்லோராலும் எளிதாக வெற்றி பெற்றிட இயலாது. இது தான் மனிதன் பெறுகிற வெற்றிகளில் மகத்தான வெற்றியாகும்.

இஸ்லாம் இந்த இரண்டாவது வெற்றியை நோக்கியே பயணிக்குமாறு ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு அறை கூவல் விடுக்கின்றது. அப்படி அதை நோக்கி அவன் பயணிக்கும் போது அவனுக்கு வாழ்க்கையில் வெற்றி பெறுவதை இலகுவாக்கி விடுகின்றது.

முதல் வகையான வெற்றிக்கு மனிதன் பல வழிகளிலும் முயற்சிக்க வேண்டி வரும். ஆனால், இரண்டாவது வகையான வெற்றிக்கு உயர்ந்த எண்ணங்களையும், இலட்சியங்களையும் கொண்டிருப்பதே போதுமானதாகும்.

அன்றொரு நாள் ஒரு ஆசிரியர் வகுப்பறையில் தன் மாணவர்களிடம் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அது ப்ராக்டிக்கல் வகுப்பு.

பாடத்தின் ஊடாக மாணவர்களிடம்தாமரைப்பூவின் நீளம் என்ன?” என்று வினவினார்.

ஒரு மாணவன் எழுந்து 2 அடி என்றான். அதற்கு ஆசிரியர் ஏன் அப்படிக் கூறுகிறாய்? அது இரண்டரை அடி நீளத்திற்கு, மூன்று அடி நீளத்திற்கு வளரலாம் அல்லவா? என்று மீண்டும் வினா எழுப்பினார்.

அதற்கு அவன் ஆம் வளரலாம் என்றான். அடுத்து இன்னொரு மாணவனிடம் கேட்டார் அந்த ஆசிரியர்.

எழுந்த அந்த மாணவன் ஆசிரியர் அவர்களே! தண்ணீர் இரண்டு அடி என்றால் தாமரையும் இரண்டு அடி நீளம் வளரும். தண்ணீர் 200 அடி என்றால் தாமரையும் 200 அடி நீளம் வளரும். தண்ணீர் 2000 அடி என்றால் தாமரையும் 2000 அடி நீளம் வளரும் தண்ணீர் உயர, உயர தாமரையின் வளர்ச்சியும் உயர்ந்து கொண்டே இருக்கும்என்று கூறினான்.

இதைக் கேட்ட ஆசிரியர், அந்த மாணவனின் கைகளைக் குலுக்கிப் பாராட்டி விட்டு மாணவர்களை நோக்கிஇப்படித்தான், உங்களின் எண்ணங்களும், இலட்சியங்களும் உயர, உயர உங்கள் வாழ்க்கையின் தரம் உயரும், வெற்றியின் சிகரத்தையே ஒரு நாள் நீங்கள் தொட்டு விடுவீர்கள்என்று கூறினார்.

இந்தக் கதை வாழ்க்கையில் உயரத்துடிக்கும் எல்லோருக்கும் ஒரு உதாரணமாகும்.

அல்லாஹ்வின் அருளால் நாம் ஹிஜ்ரி 1436 –ஆம் ஆண்டை நிறைவு செய்து விட்டு 1437 –ஆம் ஆண்டின் துவக்க பொழுதின் முதல் ஜும்ஆவில் வீற்றிருக்கின்றோம்.

நம்மைக் கடந்து சென்றிருக்கிற 1436 –ஆம் ஆண்டு இந்த முஸ்லிம் உம்மத்தின் பல்வேறு தோல்விகளையும், ரணங்களையும், கசப்புகளையும் கொண்டதாகும்.

ஹஜ்ஜில் ஏற்பட்ட உயிரிழப்பு, சிரியா, ஃபலஸ்தீனைத் தொடர்ந்து யாகூப் மேமன், உ.பி யின் முஹம்மது அஃக்லாக் வரை பல்வேறு உயிரிழப்புக்கள்.

முஸ்லிம்களின் ஈடேறாத எண்ணங்கள், சர்வதேச அளவில் துவங்கி இந்த தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

தனி மனித முஸ்லிம் ஒருவனின் வாழ்வில் தொடங்கி, குடும்பம், முஹல்லா, ஜமாஅத், அமைப்பு, இயக்கம், அரசியல், ஆன்மீகம், உலகம் என அத்துணை தளங்களிலும் தோல்வியைத் தழிவியதற்கான காரணங்களை கண்டறிந்து வெற்றிகளாக மாற்றிட முன் வருவோம்!

வாருங்கள்! நாம் வாழ்க்கையை வெல்வதற்கான அணுகுமுறைகளை அறிந்து  வெற்றிப் பயணத்தைத் துவங்குவோம்!

இந்த புத்தாண்டு நம் எதிர்காலத்தின் வெற்றிகளை எளிதாக்கிடவும், கடந்த காலத்தின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றிடவும் ஏதுவாக அமைந்திட வல்ல ரஹ்மான் துணை செய்வானாக! ஆமீன்!

நபி {ஸல்} அவர்கள் மேற்கொண்ட  புனிதப் பயணமான ஹிஜ்ரத் பயணம் நமக்கு பல்வேறு படிப்பினைகளையும், பாடங்களையும் உணர்த்துகின்றது.

அதில் ஒன்று உயர்ந்த எண்ணங்களும், இலட்சியங்களும் கொண்டவர்களாக இறைநம்பிக்கையாளர்கள் ஒளிர வேண்டும்.

ஹிஜ்ரத் பயணம் என்பதே உயர்ந்த நோக்கத்திற்காகவும், உயர்ந்த இலட்சியத்திற்காகவும் தான் மேற் கொள்ளப்பட்டது.

ஆகவே தான் அல்லாஹ் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் மகத்தான வெற்றியை நல்கினான். அது இன்று நம் வரை கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருக்கின்றது.

எனவே, உயர்ந்த எண்ணங்களையும், இலட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை வெற்றி கொள்வோம்.


அல்லாஹ் உயர்வான எண்ணங்களையே விரும்புகின்றான்

عَنْ حُسَيْنِ بن عَلِيٍّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ اللَّهَ يُحِبُّ مَعَالِيَ الأُمُورِ وأَشْرَافَهَا ، وَيَكْرَهُ سَفَاسِفَهَا ".

ஹுஸைன் இப்னு அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நிச்சயமாக! அல்லாஹ் காரியங்களில், செயல்பாடுகளில் மிக உயர்வானதையும், சிறப்பானதையுமே நேசிக்கின்றான். காரியங்களில், செயல்பாடுகளில் மிகவும் கீழானவற்றை வெறுக்கின்றான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                                     ( நூல்: தப்ரானீ, 2856 )
 كنا نصلي وراء النبي صلى الله عليه وسلم فلما رفع رأسه من الركعة قال سمع الله لمن حمده، قال رجل من ورائه ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه، فلما انصرف قال من المتكلم؟ قال أنا، قال رأيت بضعة وثلاثين ملكا يبتدرونها أيهم يكتبها أول

ரிஃபாஆ இப்னு ராஃபிவுர் ஸுர்கீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். நபி {ஸல்} அவர்கள் ருகூவிலிருந்து நிமிர்ந்து நேராக நிலைக்கு வந்து سمع الله لمن حمده என்று கூறிய போது, ஒருவர் “இறைவா! தூய்மையான, ஏராளமான, பாக்கியம் நிறைந்த புகழ் யாவும் உனக்கே உரியது!” என்று கூறினார். தொழுது முடித்ததும் இவ்வாறு கூறியவர் உங்களில் யார்? என நபி {ஸல்} அவர்கள் வினவிய போது ஒருவர் எழுந்து நான் தான் கூறினேன் என்றார்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் “30 –க்கும் மேற்பட்ட வானவர்கள் அவர் மொழிந்த அந்த வார்த்தையை தான் தான் சுமந்து சென்று அல்லாஹ்விடம் ஒப்படைப்பேன்” என்று கூறி போட்டி போட்டுக் கொண்டிருப்பதை நான் இப்போது காண்கிறேன்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் ருகூவில் வந்து சேர்ந்த அவர் ஒரு ரக்அத் கிடைத்த மகிழ்ச்சியில் இவ்வாறு கூறினார். ஆதலால் தான் வானவர்களிடையே போட்டி ஏற்பட்டது” என்று கூறுகின்றனர்.

ஹிஜ்ரத் பயணத்தில்.....

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், தோழர் அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் புறப்பட்டு பயணமாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

வழியில், சுராக்கா இப்னு மாலிக் என்பவர் சிவப்பு நிற நூறு ஒட்டகைகளுக்காக துரத்திக்கொண்டு வருவதை அபூபக்ர் (ரலி) பார்த்து விட்டு, அல்லாஹ்வின் தூதரிடம் தெரிவிக்கின்றார்கள்.

இன்னும் வேகமாக செலுத்துகின்றார்கள் குதிரையை, ஆனாலும் அருகாமையில் வந்து விட்ட சுராக்காவை கண்ட அபூபக்ர் (ரலி) மீண்டும் பெருமானார் {ஸல்} அவர்களிடம் முறையிட, அப்படியே குதிரையை விட்டு கீழிறங்கி நின்று கொண்டு பின் தொடர்ந்து வருவதின் நோக்கம் என்ன வென்று சுராக்காவிடம் கேட்டார்கள் {ஸல்} அவர்கள்.

சுராக்கா சொன்னார்உங்களது கூட்டத்தினர் உங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறினர்அதற்காகவே பின் தொடர்கின்றேன்.

وروى ابن عيينة، عن أبي موسى، عن الحسن أن رسول الله صلى الله عليه وسلم قال لسراقة ابن مالك: كيف بك إذا لبست سواري كسرى ومنطقته وتاجه؟ قال: فلما أى عمر بسواري كسرى ومنطقته وتاجه، دعا سراقة بن مالك وألبسه إياهما.
وكان سراقة رجلاً أزب كثير شعر الساعدين، وقاله له: ارفع يديك، وقل: الله أكبر، الحمد لله الذي سلبهما كسرى بن هرمز، الذي كان يقول: أنا رب الناس، وألبسهما سراقة رجلاً أعرابياً، من بني مدلج، ورفع عمر صوته.

அப்போது, பெருமானார் {ஸல்} அவர்கள் சுராக்காவை நோக்கிசுராக்காவே! பாரசீக மன்னர் கிஸ்ராவின் அணிகலன்களை நீர் அணிந்தால் நீர் எப்படி இருப்பீர்? உமது தோற்றம் எப்படி இருக்கும்?” என்று கேட்டார்கள்.

சுராக்கா அண்ணலாரிடம்பாரசீக மன்னர் கிஸ்ராவின் அணிகலனையா நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி {ஸல்} அவர்கள்ஆம்! இஸ்லாம் பாரசீகத்தை வென்றெடுக்கும்! அதன் அணிகலன்கள் உங்களை அலங்கரிக்கும்!” என்று கூறினார்கள்.

ஆம்! உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் பாரசீகம் வெற்றி கொள்ளப்பட்டது. சுராக்கா இப்னு மாலிக் (ரலி) அழைக்கப்பட்டு பாரசீக மன்னன் கிஸ்ராவின் அணிகலன்களை அணிவித்து விட்டு, உமர் (ரலி) அவர்கள்மக்களின் இறைவன் நானே என்று சொல்லிக்கொண்டிருந்த ஹுர்முஸின் மகன் கிஸ்ராவினுடைய அணிகலனை ஏகனாம் அல்லாஹ்வின் அடிமையாகிய ஓர் அரபியான சுராக்காவிற்கு அணிவிக்க துணை செய்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! என்று உரத்த குரலில் முழங்கினார்கள்.

                                   (நூல்: உஸ்துல் காபா, பாகம்:1, பக்கம்:422)

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுடைய வஃபாத்திற்கு ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பாரசீக வெற்றி சாத்தியமானது.

ஆனால், ”20 ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்லாமும், முஸ்லிம்களும் எந்த அளவு உயர்வை அடைந்திருக்க வேண்டும் என்பதில் பெருமானார் {ஸல்} அவர்கள் எவ்வளவு உயர்ந்த எண்ணங்களையும், இலட்சியத்தையும் கொண்டிருந்தார்கள்என்பதை மேற்கூறிய வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

தியாகத்தை வென்ற உயர்ந்த எண்ணம்….

பொதுவாக எந்தப் போட்டியிலும் தியாகமே முதலிடம் பெறும், வெற்றி வாகை சூடும். ஆனால், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் உயர்ந்த எண்ணத்திற்கும், இலட்சியத்திற்கும் ஸஅத் இப்னு ரபீஉ (ரலி) அவர்களின் அர்ப்பணிப்பிற்கும், தியாகத்திற்கும் இடையே நடந்த போட்டியில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் உயர்ந்த எண்ணமே வென்றது.

கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்

அபூபக்ர் (ரலி) அவர்களும் அப்து அம்ர் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். வியாபார விஷயமாக அப்து அம்ர் யமனுக்குச் சென்றிருந்தார்.

இந்த வேளையில் தான் அண்ணலார் ஏகத்துவ வசந்தத்தை ஏந்தி வந்திருக்கிற இறைத்தூதர் என தங்களைப் பிரகடனப்படுத்தினார்கள்.

அன்னை கதீஜா (ரலி), அலீ (ரலி), அபூபக்ர் (ரலி), ஜைத் (ரலி) இவர்களொடு நபிகளாரின் மூன்று பெண்மக்களும் ஏகத்துவ வசந்தத்தில் தங்களை இணைத்திருந்த தருணம் அது.

لقد أسلم في وقت مبكر جدا..
بل أسلم في الساعات الأولى للدعوة، وقبل أن يدخل رسول الله دار الأرقم ويتخذها مقرا لالتقائه بأصحابه المؤمنين..
فهو أحد الثمانية الذن سبقوا الى الاسلام..
عرض عليه أبوبكر الاسلام

யமனில் இருந்து திரும்பிய அப்து அம்ர், நண்பர் அபூபக்ர் (ரலி) அவர்களை சந்தித்து தான் ஊரில் இல்லாத போது நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். பேச்சின் ஊடாக அண்ணலார் பற்றிய பேச்சு வரவே அத்தோடு பேச்சை நிறுத்தி விட்டு நேராக அப்து அம்ரை நபி {ஸல்} அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் மார்க்கம், வேத வெளிப்பாடு, ஓரிறைக் கொள்கை என ஏகத்துவத்தின் உண்மை முகத்தை அப்து அம்ருக்கு அண்ணலார் விளக்கிக் கொண்டே வருகின்றார்கள்.

அண்ணலார் பேசி முடித்ததும் அவர்களின் கரம் பற்றி கலிமா ஷஹாதா கூறி எட்டாவது நபராக தம்மை இணைத்துக் கொண்டார் அப்து அம்ர்.

அப்து அம்ர் - அம்ரின் அடிமை இது இஸ்லாமிய நாகரீகத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பெயர் என்று கூறிய அண்ணலார் அப்துர்ரஹ்மான்ரஹ்மானின் அடிமை என்று பெயர் சூட்டினார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஏகத்துவ வெளிச்சம் மக்காவின் பெருவெளியில் பரவத் தொடங்கிய போது அப்துர்ரஹ்மான் அவர்களின் பெயரும், அவர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார் எனும் செய்தியும் பரவத்தொடங்கியது.

அன்று மிகப்பிரபல்யமாக இருந்த பெரும் வியாபாரிகளில், செல்வந்தர்களில் அப்துர்ரஹ்மான் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட அப்து அம்ரும் ஒருவர்.

எப்படி தூதுத்துவத்தை கேள்விக்குரியாக்கினார்களோ, விவாதப் பொருளாக ஆக்கினார்களோ அதே போன்று அப்துர்ரஹ்மான் அவர்களின் பெயரையும் விவாதப் பொருளாக மாற்றினர் குறைஷிகள்.

அப்துர்ரஹ்மான் இது அன்று வரை குறைஷிகளால் அறியப்படாத பெயர். அப்துல் கஅபா, என்றும் அப்துல் உஸ்ஸா என்றும் அப்து அம்ர் என்றும் பெயர் சூட்டி அழைத்துப் பழகியவர்கள் அவர்கள். அபூபக்ர் அவர்களின் பெயர் கூட அப்துல் கஅபா என்று தான் இருந்தது நபி {ஸல்} அவர்கள் தான் அப்துல்லாஹ் என்று மாற்றினார்கள்.

விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக அல்லாஹ் அல் இஸ்ராஃ அத்தியாயத்தின் 110 –வது வசனத்தை இறக்கியருளி ரஹ்மான் என்பது அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்றாகும் என்று பறை சாற்றினான்.

ஏகத்துவத்தின் வளர்ச்சி எல்லா முஸ்லிம்களையும் பாதித்தது போன்று அப்துர்ரஹ்மான் அவர்களையும் பாதித்தது. அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்த முதல் குழுவில் அப்துர்ரஹ்மான் அவர்களும் இடம் பெற்றார்கள்.

பின்னர் மீண்டும் மக்கா திரும்பி அண்ணலாருடன் இணைந்து கொண்டார்கள். முஸ்லிம்கள் அடைந்த துன்பங்கள், பின்னடைவுகள் ஆகியவற்றிலும் பங்கு கொண்டு, ஊர் விலக்கம் செய்யப்பட்ட அணியிலும் இடம் பெற்றார்கள்.

இறுதியாக, எந்த இடமும் உலகத்தின் முடிவல்ல. அது பரந்து விரிந்த இப்பூமியின் இன்னொரு இடத்தின் எல்கை என்று உணர்த்துவது போல் அமைந்தது தான் மதீனாவை நோக்கிய அதிகாரப்பூர்வ ஹிஜ்ரத் பயணம்.

உஸ்மான் (ரலி) அவர்களைத் தவிர்த்து வெறெவரும் தங்களுடைய முழு பொருட்செல்வத்துடன் ஹிஜ்ரத் செய்யவில்லை.

அணிய ஒரு ஆடை கூட இல்லாத ஏழை முஸ்லிம்களும், வாழ்வாங்கு வாழ்ந்த முஸ்லிம்களும் எல்லாவற்றையும் துறந்து ஒன்றுமில்லாமல் அகதிகளாக, ஈமான் எனும் உயரிய செல்வத்தை மட்டுமே உடன் எடுத்துக் கொண்டு மதீனா நோக்கி ஒவ்வொருவராக, சில குழுக்களாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.

அந்த அணியில் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களும் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

ஆம்! மக்காவின் பெரும் செல்வந்தராக, செல்வாக்கு மிக்க தலைவர்களான உத்பா, ஷைபா ஆகியோரின் மருமகனாக ( உத்பாவின் மகள் உம்மு குல்ஸூமையும், ஷைபாவின் மகளையும் மணம் முடித்திருந்தார்கள் ) வலம் வந்த அப்துர்ரஹ்மான் ஒரு சில திர்ஹத்தோடு, உடுத்திய ஆடையோடு, செல்வாக்கு, செல்வம் என அத்துனையையும் துறந்து ஹிஜ்ரத் எனும் புனிதப் பயணம் மேற்கொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எல்லாவற்றையும் துறந்து வந்த முஹாஜிர்களை அன்ஸார்களிடம் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.

அன்ஸாரிகளும் அவ்வாறே மனமுவந்து முஹாஜிர்களை சகோதரர்களாக ஏற்றுக் கொண்டனர்.

அப்படி ஏற்படுத்தப் பட்ட சகோதர உறவின் மூலம் சகோதரர்களானார்கள் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களும் ஸஅத் இப்னு ரபீஉ (ரலி) அவர்களும்.

آخى الرسول -صلى الله عليه وسلم- بين المهاجرين والأنصار، فآخى بين عبد الرحمن بن عوف و سعد بن ربيع،فقال سعد لعبد الرحمن: { أخي أنا أكثر أهل المدينة مالا، فانظر شطر مالي فخذه، وتحتي امرأتان، فانظر أيتهما أعجب لك حتى أطلّقها وتتزوجها }.

இங்கே தான் தியாகத்திற்கும், உயர்ந்த எண்ணத்திற்குமான போட்டி ஏற்பட்டது. ஆம்! தம் சகோதரர் அப்துர்ரஹ்மானை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்ற ஸஅத் (ரலி) அவர்கள்சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்களே! இதோ இது என் வீடு இதில் நீங்கள் சரிபாதியை எடுத்துக் கொள்ளுங்கள்! அதோ என் இரு தோட்டங்கள் அதில் நீங்கள் விரும்பும் ஒரு தோட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இதோ நான் மணம் முடித்திருக்கின்ற என் இரு துணைவியர்கள், இருவரில் எவரை வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்கள்! இத்தா காலம் முடிந்ததும் நானே உங்களுக்கு மணம் முடித்து தருகின்றேன்! என்று அகம் மகிழ கூறினார்கள்.

فقال عبد الرحمن: { بارك الله لك في أهلك ومالك، دُلوني على السوق }.

எல்லாவற்றையும் சரி பாதியாகத் தரத் துடித்துக் கொண்டிருக்கும் ஓர் உன்னத ஆத்மாவை, மரியாதை கலந்த பார்வையோடு, புன்னகை பூத்த முகத்தோடு அக மகிழ்வோடு ஏறிட்டுப் பார்த்துஸஅதே! என் சகோதரரே! அல்லாஹ் உமக்கும், உம் குடும்பத்தாருக்கும், உம் செல்வத்திற்கும் அபிவிருத்தியை நல்கட்டும்!

உம்முடைய எதையும் நிராகரிக்கும் எண்ணம் எமக்கில்லை, ஆனாலும், இந்த நோக்கத்திற்காக நான் இஸ்லாத்திற்கு வரவில்லை. எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்! எனக்கு மதீனாவின் கடை வீதிக்குச் செல்லும் வழியை மட்டும் காட்டுங்கள்! அது போதும்என்றார்கள் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள்.

எதை வேண்டுமானாலும் தர முன்வந்து நின்ற ஸஅத் (ரலி) அவர்களின் தியாகத்தின் முன்பு எதுவுமே வேண்டாம் என்கிற பெருந்தன்மையும், அதன் பிண்ணனியில் இருந்த உயர்ந்த இலட்சியமும் வென்றது.

வரலாற்றில் முதன் முதலாக இங்கு தான் தியாகம் தோற்றுப் போனது.

மதீனாவின் புகழ்பெற்ற கடை வீதியான பனூகைனுகா கடை வீதிக்கு வழிகாட்டப்பட்டார். அல்லாஹ்வின் திருப்பெயரை முன் மொழிந்து கடை வீதிக்குள் நுழைந்த அவர் மாவு, நெய், பாலாடைக்கட்டி என சிறு வணிகம் செய்து லாபம் ஈட்டினார்.

உயர்ந்த எண்ணங்களோடும், இலட்சியத்தோடும் அவர்கள் சில திர்ஹத்தோடு வாழ்வைத்துவங்கிய போது அவர்களுக்கு வயது 37 அல்லது 40 தான். அவர்கள் இப்பூவுலகைப் பிரியும் போது 75 வயது.

சற்றேறக்குறைய 35 ஆண்டுகளில் மிகப் பெரும் செல்வந்தராக உருவெடுத்தார்கள். அல்லாஹ்வின் வணிகர் என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வரலாற்றில் இடம் பெற்றார்கள்.

فقال: { لقد رأيتني لو رفعت حجرا لوجدت تحته فضة وذهبا }.

எந்தளவு அவர்கள் உயர்ந்த இடத்திற்கு வந்தார்கள் என்றால், அவர்களே சொல்வார்களாம்: “ஒரு கல்லைத் தொட்டு தூக்கினால் கூட அதன் அடியிலிருந்து தங்கத்தையோ, வெள்ளியையோ பெற்றுக் கொண்டே இருக்கின்றேன். நான் தொட்டதெல்லாம் துலங்கிற்று. என் கை பட்டதெல்லாம் பொன்னாகியதுஎன்று

ما وعده الرسول -صلى الله عليه وسلم-: { عبد الرحمن بن عوف في الجنة }.

எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணல் நபிகளாரின் அருள் நிறைந்த வாயால் உலகிலேயே சுவனத்தைக் கொண்டு சோபனம் பெறும் பேற்றையும் பெற்றார்கள்.

ஆம் சுவனத்தைக் கொண்டு சோபனம் பெற்ற பதின்மரில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களும் ஒருவர்.

அவர்கள் சத்திய சன்மார்க்கத்திற்காகவும், ஏழை எளியோருக்காகவும் வாரி வழங்கியதைப் பற்றிய செய்திகளைப் பார்த்தாலே அவர்கள் பெற்றிருந்த செல்வம் எவ்வளவு என்பதை வியப்பின் விளிம்பில் நின்று தான் நாம் உணர முடியும்.

وبلغ من جود عبد الرحمن بن عوف أنه قيل: { أهل المدينة جميعا شركاء لابن عوف في ماله، ثُلث يقرضهم، وثُلث يقضي عنهم ديونهم، وثلث يصِلَهم ويُعطيهم }.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் செல்வத்தில் மதீனா வாசிகள் அனைவருக்கும் பங்கிருந்ததாம். ஆம்! செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை மக்களுக்கு கடனாக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை மக்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை அவர்களுக்கு தானமாக வழங்குவார்களாம்.

باع في يوم أرضا بأربعين ألف دينار، ثم فرّقها في أهله من بني زهرة، وعلى أمهات المؤمنين، وفقراء المسلمين.
وقدّم يوما لجيوش الاسلام خمسمائة فرس، ويوما آخر الفا وخمسمائة راحلة.
وعند موته، أوصى بخمسن ألف دينار في سبيل الله، وأ،صى لكل من بقي ممن شهدوا بدرا بأربعمائة دينار،

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் மரண நேரத்தில் செய்த வஸிய்யத்தில் “ என் செல்வத்தில் 50000, தீனாரை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்து விடுங்கள். பத்ரில் கலந்து கொண்டவர்களில் இப்போது எவரெல்லாம் உயிருடன் இருக்கின்றார்களோ அவர்களில் ஒவ்வொருவருக்கும் 400 தீனார் வீதம் கொடுத்து விடுங்கள்” என்று சொல்லி இருந்தார்களாம்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹயாத்தோடு வாழும் காலத்தில் தமது பொருளாதாரத்தில் சரிபாதியை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தார்கள். ஒரு போரின் போது 500 வாகனங்களையும், இன்னொரு போரின் போது 1500 வாகனங்களையும் அர்ப்பணித்தார்கள்.

மதீனாவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான அடகு வைக்கப்பட்ட சுமார் 30000 வீடுகளை தன் சொந்தப் பணத்தில் மீட்டுக் கொடுத்தார்கள்.

ஒரு தடவை 700 ஒட்டகங்களையும், அவை சுமந்து வந்த வியாபாரப் பொருட்களையும் முஸ்லிம்களுக்கு தானமாக வழங்கினார்கள். பிரிதொரு முறை 500 குதிரைகள் சுமந்து வந்த பொருட்களை மக்களுக்கு வாரிக் கொடுத்தார்கள்.

ஒரு முறை தங்களுக்கு சொந்தமான ஒரு இடத்தை விற்று, அதன் மூலம் வந்த 40000 தீனாரை அண்ணலாரின் அருமைத் துணைவியர்களுக்கும், ஏழைகளுக்கும், அவர்களின் சொந்த உறவுகளில் சிரமப்படுவோருக்கும் வழங்கினார்கள்.

 ( நூல்: இஸ்தீஆப், தபகாத் இப்னு ஸஅத், ஸியரு அஃலா மின் நுபலா, உஸ்துல் காபா, ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}.... )

ஸஅதே! என் சகோதரரே! அல்லாஹ் உமக்கும், உம் குடும்பத்தாருக்கும், உம் செல்வத்திற்கும் அபிவிருத்தியை நல்கட்டும்!

உம்முடைய எதையும் நிராகரிக்கும் எண்ணம் எமக்கில்லை, ஆனாலும், இந்த நோக்கத்திற்காக நான் இஸ்லாத்திற்கு வரவில்லை. எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்! எனக்கு மதீனாவின் கடை வீதிக்குச் செல்லும் வழியை மட்டும் காட்டுங்கள்! அது போதும்என்ற அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் வெளிப்படுத்திய உயர்ந்த எண்ணமும், இலட்சியமும் தான் இவ்வளவு மகத்தான வெற்றியை பெற வைத்தது.

அவர்கள் வாழ்க்கையை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கில் பயணித்தமையால் வாழ்க்கையிலும் வென்றார்கள். ஆம்! அன்றைய அரபுலகின் முடிசூடா மாபெரும் செல்வந்தராக, வணிகராக விளங்கினார்கள்.

ஹுதைஃபா இப்னு அல்யமான் (ரலி) அவர்களின் உயர்ந்த எண்ணம்…

உஹத் யுத்தகளத்தின் பரபரப்பான தருணம் அது…

புறமுதுகிட்டு ஓடிய எதிரிகள் மீண்டும் வந்து முஸ்லிம்களை நிலை குலையச் செய்த அபாயகரமானச் சூழல், நாலா புறமும் முஸ்லிம்கள் சிதறி ஓடிக் கொண்டிருந்தனர்.

இப்போது, யுத்தகளம் முழுவதையும் எதிரிகள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர்.

" وَأَمّا حُسَيْلُ بْنُ جَابِرٍ فَاخْتَلَفَتْ عَلَيْهِ أَسْيَافُ الْمُسْلِمِينَ فَقَتَلُوهُ وَلَا يَعْرِفُونَهُ فَقَالَ حُذَيْفَةُ : أَبِي ! فَقَالُوا : وَاَللّهِ إنْ عَرَفْنَاهُ، وَصَدَقُوا!! قَالَ حُذَيْفَةُ : يَغْفِرُ اللّهُ لَكُمْ وَهُوَ أَرْحَمُ الرّاحِمِينَ . فَأَرَادَ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ أَنْ يَدِيَهُ، فَتَصَدّقَ حُذَيْفَةُ بِدِيَتِهِ عَلَى الْمُسْلِمِينَ ، فَزَادَهُ ذَلِكَ عِنْدَ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ خَيْرًا "
"سيرة ابن هشام" (2 / 86)

وروى البخاري (4065) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ فَصَاحَ إِبْلِيسُ : أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ ! فَرَجَعَتْ أُولَاهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ ( أي وهم يظنون أنهم من العدو ) فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ : أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي ! فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ . فَقَالَ حُذَيْفَةُ : غَفَرَ اللَّهُ لَكُمْ .

 وكان النبي صلى الله عليه وسلم قد أَسَرَّ إلى حذيفة أسماء المنافقين ، وضبط عنه الفتن الكائنة في الأمة .
இந்த யுத்தத்தில் ஹுதைஃபா (ரலி) அவர்கள், தங்களது தந்தை ஹுஸைல் இப்னு ஜாபிர் (ரலி) அவர்களோடு களம் புகுந்திருந்தார்கள்.

இருவரும் இணைந்து எதிரிகளை துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஹுஸைல் (ரலி) அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் எதிரி தப்பி ஓடுகின்றான். அவனைத் துரத்திக் கொண்டு ஹுஸைல் (ரலி) அவர்கள் ஓடுகின்றார்கள்.

சற்று தூரத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்களில் சிலர் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு, ஹுஸைல் (ரலி) அவர்களை எதிரியாகவும், தப்பி ஓடும் எதிரியை முஸ்லிமாகவும் தவறாக நினைத்துக் கொண்டு ஹுஸைல் (ரலி) அவர்களுக்குப் பின்னால், அவரைத் தாக்க துரத்திக் கொண்டிருந்தார்கள்.

தூரத்தில் நின்று கொண்டு போரிட்டுக் கொண்டிருந்த ஹுதைஃபா (ரலி) அவர்கள் இதைக் கண்ணுற்று நடக்க இருக்கும் விபரீதத்தை உணர்ந்தவர்களாக “தோழர்களே! அவர் என் தந்தை, அவர் ஒரு முஸ்லிம்” என உரக்க சப்தமிட்டவாறே பின்னால் ஓடினார்கள்.

யுத்தகளத்தின் களேபரத்தில் ஹுதைஃபாவின் குரல் நபித்தோழர்களின் செவிகளுக்கு எட்டவில்லை.

எது நடக்கக் கூடாது என நினைத்தார்களோ அது நொடிப்பொழுதில் நடந்து முடிந்து விட்டது. ஆம் நபித்தோழர்கள் ஹுதைஃபாவின் தந்தை ஹுஸைல் (ரலி) அவர்களின் தலையை வெட்டி வீழ்த்தினார்கள்.

ஹுஸைல் (ரலி) அவர்களின் தலை துண்டாக வீழ்ந்த அதே நேரத்தில், அவர்கள் அணிந்திருந்த முகக்கவசமும் உடைந்து தெறித்தது.

நபித்தோழர்கள் அருகே சென்று பார்க்கின்றார்கள். அது ஹுதைஃபா (ரலி) அவர்களின் தந்தை ஹுஸைல் (ரலி) அவர்கள்.

ஒரு முஸ்லிமை சக முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயமாக கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்வோடு தலைகுனிந்தவர்களாக செய்வதறியாது விக்கித்து நின்றார்கள் நபித்தோழர்கள்.

இதே நேரத்தில் ஹுதைஃபா அவர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். செய்வதறியாது விக்கித்து நிற்கும் தோழர்களை இரக்க மனதோடும், வாஞ்சையோடும் நோக்கிய ஹுதைஃபா (ரலி) அவர்கள் “தோழர்களே! நீங்கள் என்ன செய்வீர்கள்! நீங்கள் ஒன்றும் என் தந்தையை திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை! தவறுதலாகத்தான் செய்து விட்டீர்கள்! கிருபையாளர்களுக்கெல்லாம் கிருபையாளனான அல்லாஹ் உங்களை மன்னிக்கட்டும்! என்று உணர்வுகளை அடக்கி, உயர்ந்த எண்ணத்தோடு வார்த்தைகளை உதிர்த்து விட்டு, யுத்தகளம் நோக்கி எதிரிகளைத் தாக்க விரைந்து சென்றார்கள்.

யுத்தகளம் ஓய்ந்தது. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு நடந்த சம்பவங்களெல்லாம் எடுத்துச் சொல்லப்பட்டது. ஹுதைஃபா (ரலி) அவர்களை அழைத்து கட்டித்தழுவி ஆறுதல் மொழி பகர்ந்தார்கள்.

தந்தையை இழந்த மகனுக்கு தக்க நஷ்ட ஈட்டை வழங்குமாறு ஹுஸைலைக் கொன்ற நபித்தோழர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.

நஷ்டஈடாக வழங்கப்பட்ட தொகையை அண்ணலாரிடமே திருப்பித்தந்த ஹுதைஃபா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இந்த தொகையை ஏழை முஸ்லிம்களுக்கு உங்கள் கரங்களாலே வழங்கி விடுங்கள்” என்று கூறி நபி {ஸல்} அவர்களை நெகிழ வைத்தார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு ஹுதைஃபா (ரலி) அவர்களின் மீதான அன்பும், நேசமும் நபி {ஸல்} அவர்களுக்குப் பல்கிப் பெருகியது.

அன்றிலிருந்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் அந்தரங்கக் காரிய தரிசியாக, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரகசியங்களைக் கட்டிக் காக்கும் உயரிய பணியின் தலைமைச் செயலராக நியமனம் பெற்றார்கள்.

( நூல்: ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}…, ஸீரத் இப்னு ஹிஷாம், புகாரி )

ஆகவே, வாழ்க்கையில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் வாழ்க்கையை வெற்றி கொள்வதில் கவனம் செலுத்த முயற்சிப்போம்!

அல்லாஹ் வாழ்க்கையிலும், வாழ்க்கையையும் வெற்றி கொள்கிற மேன்மக்களாக நம்மை ஆக்கி அருள் புரிவானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!


11 comments:

  1. alhamdhu lillah, baarakallah.அருமை அருமை மிக மிக அருமை.ரப்புல் ஆலமீன் நம் வாழ்க்கையையும் வெற்றியாக ஆக்குவானாக. அற்புதமான கட்டுரையை தந்த பஷீர் ஹழ்ரத் அவர்களின் இல்மில் மென்மேலும் பரகத் செய்வானாக

    ReplyDelete
  2. அற்புதமான கட்டுரையை தந்த பஷீர் ஹழ்ரத் அவர்களின் வாழ்க்கையிலும், வாழ்க்கையையும் வெற்றி அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக! ஆயுளையும் நீளமாக்குவானாக

    ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

    ReplyDelete
  3. அன்புடன் பரகத் பாகவி

    ReplyDelete
  4. அன்புடன் பரகத் பாகவி

    ReplyDelete
  5. அற்புதமான கட்டுரையை தந்த பஷீர் ஹழ்ரத் அவர்களின் வாழ்க்கையிலும், வாழ்க்கையையும் வெற்றி அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக! ஆயுளையும் நீளமாக்குவானாக

    ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ்
    அருமையான கட்டுரை
    ஹஜ்ரதின் சிந்தனையை
    என்னவென்று புகழ்வது
    மேலும் கல்வியை அல்லாஹ்
    அதிகப்படுத்துவானாக
    ஆமீன்

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ் அருமை👌👌👌

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ்...
    ஒரு முஸ்லிமின் வாழ்வில் உயரிய சிந்தனை எவ்வளவு முக்கிய இடம் பிடிக்கிறது என்பதை நெஞ்சை நெகிழ வைக்கும் அமைந்தது ஹஸரத்தின் பதிவு.
    அல்லாஹ் ஹஸரத்தின் இல்மிலும்,நேரத்திலும் பரக்கத் செய்யட்டும்.

    ReplyDelete
  9. சிறப்பான தகவல்கள்
    அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete