Wednesday 4 November 2015

வாழ மறந்த வாழ்க்கை!!!



வாழ மறந்த வாழ்க்கை!!!



இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்திலே இபாதத்இறைவணக்கம், வழிபாடுகளிலிருந்து விலகி வாழ்கிற மக்கள் ஏராளம் இருக்கின்றார்கள்.

பெருநாள் தொழுகையை மட்டும் தொழுகிறவர்கள், ஜும்ஆ தொழுகையை மட்டும் தொழுகிறவர்கள், சுபுஹைத் தவிர்த்து 4 வேளை மட்டும் தொழுகிறவர்கள், லுஹர், அஸரை விட்டு விட்டு 3 வேளை மட்டும் தொழுகிறவர்கள், ரமலானில் மட்டும் தொழுகிறவர்கள், மிஃராஜ், பராஅத் லைலத்துல் கத்ர் இரவில் மட்டும் தொழுகிறவர்கள், 5 வேளைத் தொழுகையைக் கூட நினைத்தால் மட்டும் தொழுகிறவர்கள்.

ரமலான் நோன்பைப் பிடிக்காதவர்கள், ஒற்றைப் படை நாட்களில் மட்டும் நோன்பு பிடிப்பவர்கள்.

ஜகாத், தானதர்மம், குர்பானி, ஹஜ் போன்றவற்றில் கூட எல்லை வகுத்து செய்பவர்கள். தொழுதவுடன் ஓடுபவர்கள், குர்ஆனை ஓதாதவர்கள், திக்ர் செய்யாதவர்கள், பயானைக் கேட்காதவர்கள். ஜனாஸாவோடு வந்து விட்டு தொழாமல் ஓரமாக ஒதுங்கி நிற்பவர்கள் என இப்படியாக ஒரு நீண்ட பட்டியலைத் தரலாம்.

இவர்களைச் சந்தித்து ஏன் நீங்கள் இவ்வாறு இறைக்கடமைகளில் இருந்து, இபாதத்களில் இருந்து தூரமாக விலகி இருக்கின்றீர்கள் என்று கேட்டால்…?

சிலர்என்னுடைய பிரச்சனைகள் எல்லாம் முடியட்டும் இன்ஷா அல்லாஹ் இபாதத்தில் கவனம் செலுத்துவேன்என்பார்கள்.

சிலர்என்னுடைய கஷ்டங்கள் தீரட்டும் அப்புறம் பாருங்கள் நான் எப்படி இபாதத்தாளியாக மாறுகின்றேன்என்பார்கள்.

சிலர்என்னுடைய சோதனைகள் என்னை விட்டு அகன்றதும் சதா அல்லாஹ்வின் நினைவிலேயே மூழ்கிவிடுவேன்என்பார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரும் பிரச்சனைகள், சிரமங்கள், கஷ்டங்கள், சோதனைகள் நீங்கி விட்டால் அல்லாஹ்வை நினைப்பதாகவும், இபாதத்தில் மூழ்கி விடப்போவதாகவும் கூறுகின்றார்கள்.

ஆனால், ஒரு போதும் இவர்களால் இறைவழிபாட்டில் இருந்து விலகி, இறை நினைப்பில் இருந்து ஒதுங்கி தங்கள் பிரச்சனைகள் கஷ்டங்கள், சோதனைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறிட முடியாது.

அல்லாஹ் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான மனித வாழ்வை ஓர் சோதனைக் களமாகவே அமைத்திருக்கின்றான்.

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا

அவன் தான் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் சிறந்த செயல் புரிபவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு!”        ( 67: 2 )

ஒரு பிரச்சனை முடிந்தால் இன்னொன்று, அடுத்து இன்னொன்று. ஒரு சோதனை முடிந்தால் இன்னொன்று, அடுத்து இன்னொன்று இது தான் மனித வாழ்வின் நியதியாகும்.

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ

மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள், விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக நாம் சோதிப்போம்”.  
                                                         ( 2: 155 )
وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً

மேலும், நல்ல, கெட்ட நிலைமைகளை ( மாறி மாறி ) தந்தும் நாம் உங்களைச் சோதித்துக் கொண்டிருப்போம்”.                                ( 21: 35 )

எப்போது மனிதன் தன் பிரச்சனைகளில் இருந்து, சோதனைகளில் இருந்து தான் விடுபட்டதாக உணர்கின்றானோ அப்போது அவன் ஸக்ராத்தின் விளிம்பிற்கு வந்திருப்பான்.

காலமெல்லாம் பிரச்சனை, கஷ்டம், சோதனை என்று சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டு இறை நினைவை மறந்து, வழிபாடுகளிலிருந்து விலகி வாழ்ந்த அவன், ஸக்ராத்தின் போது இபாதத் செய்திருக்க வேண்டுமே? தான தர்மம் செய்திருக்க வேண்டுமே என்று ஆவல் கொள்வான். கை சேதப்படுவான்.

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ (99) لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا

இறுதியில், அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்து விடுமானால், “என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக! அங்கு நான் நற்செயல் புரிவேனே!” என்று கூறத் தொடங்குவான். அவ்வாறு ஒரு போதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கிற வெறும் வார்த்தைகள் தாம்!” ( என்று சொல்லப்படும் ).                                       ( 23: 99, 100 )

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ (10) وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا

உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வரும் முன்பாக நாம் வழங்கியவற்றிலிருந்து நல் வழியில் செலவு செய்யுங்கள்! மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்என் இறைவனே! நீ எனக்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் அளித்திருக்கக்கூடாதா? நான் தானதர்மம் செய்திருப்பேனே? நல்லோர்களில் ஒருவனாகவும் ஆகியிருப்பேனே!?”

ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்து விட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக வழங்குவதில்லை”.                                        ( 63: 10, 11 )

இறை வழிபாட்டிலிருந்து விலகி வாழ்வோர் தங்களின் பிரச்சனையை பொருளாதார ரீதியாக சந்திக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கான பதில்

أَلْهَاكُمُ التَّكَاثُرُ (1) حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ (2)

பிறரை விடக் கூடுதலாக உலகவசதிகளைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது. நீங்கள் மண்ணறைகளைச் சென்றடையும் வரையில்…”                           ( 102: 1, 2 )

இறை வழிபாட்டிலிருந்து விலகி வாழ்வோர் தங்களின் சோதனையை உடல், உயிர் இழப்பு, நோய் ரீதியாக சந்திக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கான பதில்

أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ (2) وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ

நாங்கள் நம்பிக்கை கொண்டு விட்டோம்என்று மட்டும் கூறுவதனால் விட்டு விடப்படுவார்கள்; மேலும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டார்களா என்ன?” உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்திருக்கின்றோம்”.            ( 29: 1 – 2 )

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ (214)

உங்களுக்கு முன் சென்றுவிட்ட (நம்பிக்கையுடைய) வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா? இன்னல்களும், இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன.

(அன்றைய) இறைத்தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும்அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்?” என்று கெஞ்சிக் கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். அப்போது, அவர்களுக்குஇதோ அல்லாஹ்வுடைய உதவி அண்மையில் இருக்கிறதுஎன கூறப்பட்டது”. ( 2: 214 )

மாறாக, சிரமத்திற்கும், பிரச்சனைகளுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் இறை நினைவோடும், இறை வழிபாட்டோடும் வாழ்ந்து, அருள் நிறைந்த, அல்லாஹ்வின் உதவி நிறைந்த ஓர் உன்னத வாழ்க்கையை அனுபவிக்குமாறு இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அது தான் உண்மையான வாழ்க்கை என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

அப்படியான ஓர் அற்புதமான வாழ்க்கையை மறந்தவர்களாக நம்மில் பலர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வாருங்கள்! வாழ மறந்த வாழ்க்கையின் பக்கங்களை கொஞ்சம் வாசித்து விட்டு, வாழப் பழகுவோம்!!

மஹ்ஷர் பெருவெளியில் இறை நினைவை விட்டும் விலகியவர்களின் நிலை..

و في الحديث
 أن أربعة يستشهد عليهم بأربعة : ينادى بالأغنياء و أهل الغبطة فيقال لهم : ما شغلكم عن عبادة الله ؟ فيقولون : أعطانا الله ملكاً و غبطة شغلنا عن القيام بحقه في دار الدنيا فيقال لهم : من أعظم ملكاً : أنتم أم سليمان ؟ فيقولون : بل سليمان . فيقال : ما شغله ذلك عن القيام بحق الله و الدأب في ذكره . ثم يقال : أين أهل البلاء ؟ فيؤتى بهم أنواعاً فيقال لهم : أي شيء شغلكم عن عبادة الله تعالى ؟ فيقولون : ابتلانا الله في دار الدنيا بأنواع من الآفات و العاهات شغلتنا عن ذكره و القيام بحقه فيقال لهم : من أشد بلاء : أنتم أم أيوب ؟ فيقولون بل أيوب .فيقال لهم : ما شغله ذلك عن حقنا و الدأب لذكرنا ثم ينادي : ابن الشباب العطرة و المماليك فتقول الشباب : أعطانا الله جمالاً و حسناً فتناً به فكنا مشغولين عن القيام بحقه و كذلك المماليك فيقولون : شغلنا رق العبودية في الدنيا فيقال لهم : أنتم أكثر جمالاً أم يوسف عليه السلام . فلقد كان في رق العبودية ما شغله ذلك عن القيام بحقنا و لا الدأب لذكرنا ثم ينادي : أين الفقراء ؟ فيؤتى بهم أنواعاً فيقال لهم : ما شغلكم عن عبادة الله تعالى ؟ فيقولون : ابتلانا الله في دار الدنيا بفقر شغلنا فيقال لهم : من أشد فقراً . . أنتم أم عيسى عليه السلام ؟ ! فيقولون : بل عيسى فيقول لهم : ما شغله ذلك عن القيام بحقنا و الدأب لذكرنا . . . فمن بلى بشيء من هذه الأربع فليذكر صاحبه . .

இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாளை மறுமை நாளில் மஹ்ஷர் பெருவெளியில் அல்லாஹ்வின் விசாரணை மன்றத்தில் நான்கு வகை மனிதர்கள் விசாரணைக்கு கொண்டு வரப்படுவார்கள்.

முதல் வகையினர் செல்வந்தர்கள், இரண்டாம் வகையினர், கஷ்டங்களுக்கும் சோதனைக்கும் உள்ளானவர்கள், மூன்றாம் வகையினர் அடிமைகள் பணியாளர்கள். நான்காம் வகையினர் ஏழைகள். நான்கு வகையினருமே உலகில் இறை வழிபாட்டிலிருந்து விலகி வாழ்ந்தவர்கள்.

முதலில் அல்லாஹ் செல்வந்தர்களை அழைப்பான். “நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில் என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி வாழ்ந்தீர்கள்? ஏன் இபாதத் செய்யவில்லை?” என்று கேட்பான்.

அதற்கவர்கள், “யாஅல்லாஹ்! நாங்கள் உலகில் வாழும் காலத்தில் நீ எங்களுக்கு அதிகமான செல்வத்தையும், பொருளாதாரத்தையும் தந்திருந்தாய், அதனைப் பன்மடங்காகப் பெருக்குவதிலும், அதைப் பாதுகாப்பதிலுமே எங்களின் கால நேரங்கள் ஓடி விட்டது. இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டதுஎன்று பதில் கூறுவார்கள்.

அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில் நபி ஸுலைமான் (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரம், செல்வம், பொருளாதாரம் ஆகியவற்றையும் நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் பெரும் செல்வந்தர்களா? ஸுலைமான் (அலை) அவர்கள் பெரும் செல்வந்தரா?” என்று கேட்பான்.

அதற்கவர்கள், ”உண்மையில் எங்களை விட நபி ஸுலைமான் (அலை) அவர்களே பெரும் செல்வமும் அதிகாரமும் கொண்டவராவார்என்று பதில் கூறுவார்கள்.

அப்போது, அல்லாஹ்அப்படியானால் அவர்களுக்கு அவ்வளவு செல்வமும், ஆட்சி, அதிகாரம் இருந்தும் அவர்கள் என்னை மறக்கவில்லையே! என்னை வழிபடுவதிலிருந்து விலகி வாழ வில்லையே!” என்று கூறுவான்.

பின்னர், சோதனைகளிலும், கஷ்டங்களிலும் உழன்றவர்களை அல்லாஹ் அழைப்பான். அவர்களிடம்நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில் என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி வாழ்ந்தீர்கள்? ஏன் இபாதத் செய்யவில்லை?” என்று கேட்பான்.

அதற்கவர்கள், “யாஅல்லாஹ்! நாங்கள் உலகில் வாழும் காலத்தில் நீ எங்களுக்கு அதிகமான கஷ்டங்களையும், சோதனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாய் கொடுத்தாய். அவைகளில் இருந்து வெளியேருவதற்காக காலம் பூராவும் நாங்கள் சதா போராடிக் கொண்டே இருந்தோம்.

இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டதுஎன்று பதில் கூறுவார்கள்.

அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில்நபி அய்யூப் (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட கொடிய நோய் மற்றும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், அவர்கள் சமூக மக்களிடையே பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் அடைந்தது பெரும் சோதனையா? அல்லது அய்யூப் (அலை) அவர்கள் அடைந்தது பெரும் சோதனையா?” என்று கேட்பான்.

அதற்கவர்கள், ”ரஹ்மானே! உண்மையில் எங்களை விட நபி அய்யூப் (அலை) அவர்களே பெரும் சோதனைக்கும் துன்பத்திற்கும் உள்ளானவராவார்கள்என்று பதில் கூறுவார்கள்.

அப்போது, அல்லாஹ்அப்படியானால் அவர்கள் அவ்வளவு சோதனையிலும், துன்பத்திலும் என்னை மறக்கவில்லையே! என்னை வழிபடுவதிலிருந்து விலகி வாழ வில்லையே!” எப்போதும் என்னை நினைவு கூறிக் கொண்டே இருந்தார்களே!?” என்று கூறுவான்.

பின்னர், அல்லாஹ் அடிமைகள் மற்றும் பணியாளர்களை அழைப்பான். அவர்களிடம்நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில் என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி வாழ்ந்தீர்கள்? ஏன் இபாதத் செய்யவில்லை?” என்று கேட்பான்.

அதற்கவர்கள், “யாஅல்லாஹ்! நாங்கள் உலகில் வாழும் காலத்தில் நீ எங்களுக்கு அழகிய தோற்றத்தைத் தந்திருந்தாய்! அதைக் கொண்டு நாங்கள் பலவாறாக சோதிக்கப்பட்டோம்! மேலும், அடிமைப் பணியாளர்களாக நாங்கள் இருந்தோம்! எங்கள் அழகின் சோதனையில் இருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அதிகமான வேலைகள் செய்வதற்கும் காலம் பூராவும் நாங்கள் சதா போராடிக் கொண்டே இருந்தோம்.

இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டதுஎன்று பதில் கூறுவார்கள்.

அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில்நபி யூஸுஃப் (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட அழகையும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும், அவர்கள் அடிமையாக இருந்து அரச குடும்பத்தார்களிடையே பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் அழகால் பெரும் சோதனையை அடைந்தீர்களா? அல்லது யூஸுஃப் (அலை) அவர்கள் அழகால் அடைந்தது பெரும் சோதனையா?” நீங்கள் அடிமையாக இருந்து பட்ட கஷ்டம் பெரிதா?” அல்லது யூஸுஃப் (அலை) அவர்கள் அடிமையாக இருந்து அடைந்த கஷ்டம் பெரிதா?” என்று கேட்பான்.

அதற்கவர்கள், ”ரஹ்மானே! உண்மையில் எங்களை விட  எல்லா விதத்திலும் நபி யூஸுஃப் (அலை) அவர்களே அழகால் பெரும் சோதனைக்கும் துன்பத்திற்கும் உள்ளானவராவார்கள், அடிமைத்தனத்தால் பெரும் கஷ்டத்திற்கும் உள்ளானவர்கள்என்று பதில் கூறுவார்கள்.

அப்போது, அல்லாஹ் அப்படியானால் அவர்கள் அவ்வளவு சோதனையிலும், கஷ்டத்திலும் என்னை மறக்கவில்லையே! என்னை வழிபடுவதிலிருந்து விலகி வாழ வில்லையே!” எப்போதும் என்னை நினைவு கூறிக் கொண்டே இருந்தார்களே!?” என்று கூறுவான்.

பின்னர், அல்லாஹ் ஏழைகளை அழைப்பான். அவர்களிடம்நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில் என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி வாழ்ந்தீர்கள்? ஏன் இபாதத் செய்யவில்லை?” என்று கேட்பான்.

அதற்கவர்கள், “யாஅல்லாஹ்! நாங்கள் உலகில் வாழும் காலத்தில் நீ எங்களுக்கு பசி, பட்டினி, வறுமை போன்றவற்றைத் தந்திருந்தாய்! வறுமை அகல, பசி நீங்க, பட்டினி விரண்டோட இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருந்தோம்.

இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டதுஎன்று பதில் கூறுவார்கள்.

அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில்நபி ஈஸா (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஏழ்மை மற்றும் வறுமையை நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் ஏழ்மையால் பெரும் சிரமத்தை அடைந்தீர்களா? அல்லது ஈஸா (அலை) அவர்கள் ஏழ்மையால் பெரும் சிரமம் அடைந்தார்களா?” என்று கேட்பான்.

அதற்கவர்கள், ”ரஹ்மானே! உண்மையில் எங்களை விட  எல்லா விதத்திலும் நபி ஈஸா (அலை) அவர்களே ஏழ்மையால் பெரும் சோதனைக்கும் துன்பத்திற்கும் ஆளானார்கள்என்று பதில் கூறுவார்கள்.

இறுதியில், அல்லாஹ் அவர்களின் செயல்களுக்குத் தக்கவாறு தண்டனை வழங்குவான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

( நூல்: அத் தத்கிரத்து ஃபீ அஹ்வாலில் மௌத்தா வஉமூருல் ஆஃகிரா லி இமாமி குர்துபீ )

சிரமங்களுக்கும், சோதனைக்கும் மத்தியில் நபி {ஸல்} அவர்களின் இறை நினைவு

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பிறந்தது முதல் இறப்பெய்யும் வரை பல்வேறு சிரமங்களுக்கும், சோதனைகளுக்கும் மத்தியிலே தான் வாழ்ந்தார்கள்.

இன்றைக்கு உலகில் உள்ள ஒட்டு மொத்த மனித சமூகத்தின் வாழ்விலும் இடம் பெற்றிருக்கிற சோகமும், கஷ்டமும், ஏழ்மையும், துன்பமும் நபிகளார் {ஸல்} அவர்கள் தங்களுடைய தனி மனித வாழ்வில் மொத்தமாக சந்தித்து இருக்கின்றார்கள்.

பிறக்கும் போது யதீம், பிறந்த பின்னர் அன்னை இல்லை, பெற்றோர் இல்லாததால் சம காலத்தில் வாழ்ந்த அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும், அபூ ஸுஃப்யான் (ரலி) அவர்களுக்கும் கிடைத்த கல்வி கிடைக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதராக உருவாக்கம் பெற்றதன் பின்னர், மார்க்கத்திற்காக பல இழப்புகள், கதீஜா (ரலி), அபூதாலிப் மரணத்தின் பின்னர் ஏற்பட்ட இழப்புகள், ஊர் விலக்கம், இறுதி நபி என்பதற்காக தமது வாழ் நாளிலேயே மூன்று ஆண்மக்களை இழந்து சந்ததியற்றவர் எனும் விமர்சனத்திற்குள்ளானது, வாழும் காலத்திலேயே மூன்று பெண்மக்களின் மரணம், பிறந்த பூமியை விட்டு துறத்தப் படுதல், மதீனாவில் எதிரிகளின் அச்சுறுத்தலும், நயவஞ்சகர்களின் வஞ்சக சூழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை என அடுக்கிக் கொண்டே போகலாம்.

உதாரணத்திற்கு அண்ணல் நபி {ஸல்} அவர்களின் ஏழ்மை வாழ்வைக் குறிப்பிடலாம்.


حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الأَعْمَشُ قَالَ تَذَاكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ الرَّهْنَ ، وَالْقَبِيلَ فِى السَّلَفِ ، فَقَالَ إِبْرَاهِيمُ حَدَّثَنَا الأَسْوَدُ عَنْ عَائِشَةَ - رضى الله عنها - أَنَّ النَّبِىَّ - صلى الله عليه وسلم - اشْتَرَى مِنْ يَهُودِىٍّ طَعَامًا إِلَى أَجَلٍ وَرَهَنَهُ دِرْعَهُ .

நபி {ஸல்} அவர்கள் யூதர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தவணைக்கு உணவுப் பொருளை வாங்கினார்கள். அதற்காக தமது கவசத்தை அடைமானம் வைத்தார்கள்என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.    ( நூல்: புகாரி )

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا هِشَامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسٍ - رضى الله عنه - قَالَ وَلَقَدْ رَهَنَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - دِرْعَهُ بِشَعِيرٍ ، وَمَشَيْتُ إِلَى النَّبِىِّ - صلى الله عليه وسلم - بِخُبْزِ شَعِيرٍ وَإِهَالَةٍ سَنِخَةٍ ، وَلَقَدْ سَمِعْتُهُ يَقُولُ « مَا أَصْبَحَ لآلِ مُحَمَّدٍ - صلى الله عليه وسلم - إِلاَّ صَاعٌ ، وَلاَ أَمْسَى » . وَإِنَّهُمْ لَتِسْعَةُ أَبْيَاتٍ .

நபி {ஸல்} அவர்கள் தமது போற்கவசத்தை வாற்கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி {ஸல்} அவர்களிடம் வாற்கோதுமை ரொட்டியையும், வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன்.

அதைப் பார்த்த அண்ணலார் {ஸல்} முஹம்மதின் குடும்பத்தாரிடம் அவர்கள் ஒன்பது வீட்டினராக இருந்தும் கூட ஒரேயொரு ஸாவு ( தானியம் அல்லது பேரீச்சம்பழம் ) தவிர காலையிலோ மாலையிலோ வேறெந்த உணவும் இருந்ததில்லை என்று கூறினார்கள்என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

                                                            ( நூல்: புகாரி )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மாதக் கணக்கில் குடும்பம் சகிதமாக அழகிய உணவை உண்டதில்லை என்பதை மேற்கூறிய ஹதீஸ் உணர்த்துகிற அதே வேளையில், தங்களது ஏழ்மையான சூழ்நிலையை தங்களது உயிரை விடவும் மேலாக நேசிக்கிற தங்களது தோழர்களிடம் கூட வெளிப்படுத்தாமல், ஒரு யூதரிடம் தங்களது போற்கவசத்தை அடகு வைத்தார்கள் என்பதில் இருந்து எந்தளவு சுய மரியாதையோடு வாழ்ந்தார்கள் என்பதையும் உணர முடிகின்றது.

அண்ணலாரின் சுய மரியாதைக்கு வரலாற்றில் வாகாய் இன்னொரு எடுத்துக் காட்டு

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ، عَنْ مُجَالِدِ بْنِ سَعِيدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: دَخَلَتْ عَلَيَّ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ، فَرَأَتْ فِرَاشَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبَاءَةً ثَنِيَّةً، فَانْطَلَقَتْ، فَبَعَثَتْ إِلَيَّ بِفِرَاشٍ حَشْوُهُ الصُّوفُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا هَذَا يَا عَائِشَةُ؟» ، قَالَتْ
 فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فُلَانَةُ الْأَنْصَارِيَّةُ دَخَلَتْ عَلَيَّ، فَرَأَتْ فِرَاشَكَ، فَذَهَبَتْ، فَبَعَثَتْ إِلَيَّ بِهَذَا، فَقَالَ: «رُدِّيهِ يَا عَائِشَةُ» ، قَالَتْ: فَلَمْ أَرُدَّهُ، وَأَعْجَبَنِي أَنْ يَكُونَ فِي بَيْتِي، حَتَّى قَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، قَالَتْ: فَقَالَ: «رُدِّيهِ يَا عَائِشَةُ فَوَاللَّهِ لَوْ
شِئْتُ لَأَجْرَى اللَّهُ عَزَّ وَجَلَّ مَعِيَ جِبَالَ الذَّهَبِ وَالْفِضَّةِ

ஒரு நாள் வெளியில் சென்றிருந்த மாநபி {ஸல்} அவர்கள் வீட்டிற்குள் நுழைகின்றார்கள். நபிகளாரின் புருவம் வியப்பால் உயர்கிறது. ஆம்! தாம் அமரும் இடத்தைப் பார்க்கின்றார்கள். அங்கே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய புத்தம் புதிய விரிப்பொன்று விரிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள்.

இப்போது, நபி {ஸல்} அவர்கள் வீட்டின் இன்னொரு புறத்தில் அமர்ந்திருந்த தமது அருமைத்துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கிஆயிஷாவே! நான் காணும் இந்த விரிப்பு என்ன? எங்கிருந்து வந்தது? யார் தந்தது?” என அன்பொழுக வினவினார்கள்.

அதற்கு, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்அன்ஸாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். என்னோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது உங்களுடைய விரிப்பைப் பார்த்து இது யாருடையது? எனக் கேட்டார். நான் அல்லாஹ்வின் தூதருடையது என்றேன். அதற்கு, அந்தப் பெண்மணிஇந்த இத்துப்போன, கிழிசல் உடைய பழைய விரிப்பிலேயா அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அமர்வார்கள்? உறங்குவார்கள்?” என்று கேட்டு விட்டு நேராக வீட்டிற்குச் சென்றார். பின்னர், நீங்கள் காணும் இந்த அழகிய விரிப்பைக் கொடுத்தனுப்பினார்என்று பதில் கூறினார்கள்.

இது கேட்டதும் அண்ணலாரின் முகம் மாறிப்போனது. “ஆயிஷாவே! இதை அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் சென்று திருப்பிக் கொடுத்து விட்டு வாருங்கள்!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அதற்கு, ஆயிஷா (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! விரிப்பு பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றதே! அவசியம் திருப்பிக் கொடுக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள்.

அப்போது, அண்ணலார்ஆயிஷாவே! இதை அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் சென்று திருப்பிக் கொடுத்து விட்டு வாருங்கள்!” என்று நபி {ஸல்} அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

பின்னர், ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கிஆயிஷாவே! நான் விரும்பி கேட்டால் இதோ இருக்கிற இந்த மலைகளை ( அருகில் தெரிந்த மலைகளை காட்டி) தங்கமாகவும், வெள்ளியாகவும் அல்லாஹ் மாற்றித் தந்து விடுவான்என்று கூறினார்கள்.

பொதுவாகவே நபி {ஸல்} அவர்கள் அன்பளிப்புகளை யார் கொடுத்தாலும் அக மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களாகவே இருந்தார்கள். இருந்தும் இங்கே அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் திருப்பிக் கொடுக்கச் சொல்கின்றார்கள் என்றால்…? வேறொன்றுமில்லை, அந்தப் பெண்மணி அண்ணலாரின் மீது அனுதாபப்பட்டு அந்த விரிப்பைக் கொடுத்தார்கள்.

يا أباذر إن جبرئيل أتاني بخزائن الدنيا على بغلة شهباء فقال لى : يا محمد  هذه خزائن الدنيا ولا ينقصك من حظك عند ربك فقلت : يا حبيبي جبرئيل لا حاجة  لي فيها ، إذا اشبعت شكرت ربي وإذا جعت سألته

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: என்னுடைய நேசர் முஹம்மது {ஸல்} அவர்கள் என்னிடம்அபூதர்ரே! ஜிப்ரயீல் (அலை) என்னிடம் உலகத்தின் கருவூலங்கள் அனைத்தையும் கொண்டு வந்து, முஹம்மத் {ஸல்} அவர்களே! இதோ உலகத்தின் கருவூலங்கள், உங்கள் இரட்சகன் உங்களுக்கு வழங்கிய குறைவில்லா செல்வங்கள்! எடுத்துக்கொள்ளுங்கள்என்றார்.

அதற்கு, நான்என் நண்பர் ஜிப்ரயீலே! இதன் மீதெல்லாம் நமக்கு விருப்பம் இல்லை, வயிறு நிரம்ப சாப்பிட்டால் என் இறைவனுக்கு நான் நன்றி செலுத்துவேன்! பசியோடு நான் இருந்தால் என் இறைவனிடமே நான் கேட்டுக் கொள்வேன்!” என்று கூறினேன் என்றார்கள்.

قَالَ الْفَقِيهُ رَحِمَهُ اللَّهُ حَدَّثَنَا الْخَلِيلُ بْنُ أَحْمَدَ ، حَدَّثَنَا الْعَبَّاسُ السَّرَّاجُ , حَدَّثَنَا أَبُو رَجَاءٍ قُتَيْبَةُ بْنُ سَعْدٍ الْبَغْلَانِيُّ ، حَدَّثَنَا ابْنُ أَبِي زُرَارَةَ الْحَلَبِيُّ ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحَ , قَالَ : دَخَلْتُ مَعَ ابْنِ عُمَرَ وَعُبَيْدِ بْنِ عُمَيْرٍ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا ، فَسَلَّمْنَا عَلَيْهَا ، فَقَالَتْ
 مَنْ هَؤُلَاءِ ؟ فَقُلْنَا : عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ، وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ ، فَقَالَتْ : مَرْحَبًا بِكَ يَا عُبَيْدَ بْنَ عُمَيْرٍ مَا لَكَ لَا تَزُورُنَا ؟ فَقَالَ عُبَيْدٌ : زُرْ غِبًّا تَزْدَدْ حُبًّا
فَقَالَ ابْنُ عُمَرَ : دَعُونَا مِنْ هَذَا ، حَدِّثِينَا بِأَعْجَبِ مَا رَأَيْتِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ : كُلُّ أَمْرِهِ عَجِيبٌ غَيْرَ أَنَّهُ أَتَانِي فِي لَيْلَتِي ، فَدَخَلَ مَعِي فِي فِرَاشِي حَتَّى أَلْصَقَ جِلْدَهُ بِجِلْدِي ، فَقَالَ : " يَا عَائِشَةُ ، أَتَأْذَنِينَ لِي أَنْ أَتَعَبَّدَ لِرَبِّي " ، قُلْتُ : وَاللَّهِ إِنِّي لَأُحِبُّ قُرْبَكَ ، وَلَأُحِبُّ هَوَاكَ ، فَقَامَ إِلَى قِرْبَةٍ فَتَوَضَّأَ مِنْهَا ، ثُمَّ قَامَ فَبَكَى ، وَهُوَ قَائِمٌ حَتَّى بَلَغَتِ الدُّمُوعُ حِجْرَهُ ، ثُمَّ اتَّكَأَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ ، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى تَحْتَ خَدِّهِ الْأَيْمَنِ ، فَبَكَى حَتَّى رَأَيْتُ الدُّمُوعَ بَلَغَتِ الْأَرْضَ ، ثُمَّ أَتَاهُ بِلَالٌ بَعْدَمَا أَذَّنَ الْفَجْرُ ، رَآهُ يَبْكِي . قَالَ : لِمَ تَبْكِي يَا رَسُولَ اللَّهِ وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ ؟ قَالَ : " يَا بِلَالُ ، أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا ، وَمَا لِي لَا أَبْكِي ، وَقَدْ نَزَلَتْ عَلَيَّ اللَّيْلَةَ "
 إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ سورة آل عمران آية  ، إِلَى قَوْلِهِ فَقِنَا عَذَابَ النَّارِ سورة آل عمران آية  ، ثُمَّ قَالَ : " وَيْلٌ لِمَنْ قَرَأَهَا وَلَمْ يَتَفَكَّرْ فِيهَا " .

அதாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ ஒரு நாள் நானும், இப்னு உமர் மற்றும் உபைத் இப்னு உமைர் ( ரலிஅன்ஹுமா ) ஆகியோரும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்திக்க அன்னையரின் வீட்டிற்குச் சென்றோம்.

வீட்டின் வாசலில் நின்று கொண்டு மொத்தமாக ஸலாம் கூறி அனுமதி கேட்டோம். அப்போது என் குரலை வைத்து கண்டு பிடித்து விட்ட அன்னையர் அவர்கள் உடன் வந்திருப்பவர்கள் யார்? என்று வினவினார்கள்.

அதற்கு, நான் என்னோடு இப்னு உமர் (ரலி) அவர்களும், உபைத் இப்னு உமைர் (ரலி) அவர்களும் வந்திருப்பதாகக் கூறினேன்.

அதைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்உபைத் இப்னு உமைரே! உமது வரவு நல்வரவாகட்டும்! நீண்ட நாட்களாக நம்மை சந்திக்க வராததன் காரணம் தான் என்ன?” என்று வினவினார்கள்.

அதற்கு, உபைத் அவர்கள்இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரே! இடைவெளி விட்டு சந்தித்தால் நேசம் அதிகமாகும் அல்லவா?” அது தான் காரணம் என்றார்கள்.

அப்போது, இப்னு உமர் (ரலி) அவர்கள்அன்னையே! அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களோடு நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையில் உங்களால் மறக்கவே முடியாத தருணம் ஏதேனும் உண்டா? அப்படியிருந்தால் எங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்என்றார்கள்.

அதற்கு, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்அவர்களோடு வாழ்ந்த வாழ்க்கை முழுவதுமே மறக்க முடியாத தருணங்கள் தானே எனக்குஎன்று கூறி விட்டு, என் மனதை நெகிழச் செய்த ஓர் நிகழ்வினை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்கின்றேன் என்று கூறிய ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்ந்தார்கள்.

என்னோடு தங்கும் முறை உள்ள ஒரு நாள் இரவு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என் வீட்டிற்கு வருகை தந்தார்கள். என்னோடு மிக நெருங்கி அமர்ந்தார்கள். பின்பு என்னிடம்ஆயிஷாவே! இன்றிரவு முழுவதும் என் இறைவனை நான் வணங்கிட விரும்புகின்றேன்! எனக்கு கொஞ்சம் அனுமதி தருவாயா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, நான்அல்லாஹ்வின் தூதரே! உங்களின் நெருக்கத்தை எவ்வாறு நான் விரும்புகின்றேனோ, அது போன்றே உங்களது விருப்பங்களையும் நான் விரும்புகின்றேன்! தாராளமாக இரவு முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள்என்றேன்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எழுந்து, உளூ செய்து விட்டு வந்து தொழுகைக்காக தக்பீர் கட்டினார்கள். பின்பு நீண்ட நேரம் அழுதவர்களாக நின்றார்கள். அவர்களின் தாடியெல்லாம் நனையும் அளவு அழுதார்கள். அவர்களின் கண்ணீர் நபிகளாரின் தொடையையும் நனைத்தது.

தொழுது முடித்ததன் பின்னர், வலது புறமாக ஒருக்கணித்து அமர்ந்து, வலது கையை வலது தொடையின் மீது வைத்தவர்களாக அழுது கொண்டே இருந்தார்கள். அவர்களின் அழுகையால் வீடு முழுவதும் நனைந்து இருந்தது.

இதே நிலையில் ஃபஜ்ர் தொழுகைக்கான பாங்கும் விடுக்கப்பட்டது. அண்ணலாரைக் காணாத பிலால் (ரலி) அவர்களும் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

அண்ணலாரை அழுத நிலையில் கண்ட பிலால் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! எதற்காக நீங்கள் அழ வேண்டும்? அல்லாஹ் தான் உங்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டானே?” என கனிவோடு கூறினார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்பிலாலே! நான் அல்லாஹ்விற்கு நன்றியுணர்வுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கூறி விட்டு, இப்போது தான் ஆலுஇம்ரானின் 190 முதல் 193 வரையிலான இறைவசனங்கள் இறக்கப்பட்டது.

எவன் அதை ஓதியதன் பின்னர் அந்த இறைவசனத்தை சிந்திக்க வில்லையோ அவன் மீது நாசம் உண்டாகட்டும்!” என்று கூறினார்கள்.               ( நூல்: புகாரி )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களோடு வாழ்ந்த வாழ்க்கையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது இதயத்தை நெகிழச் செய்த, நீங்காத பசுமையாய், மறக்க முடியாத தருணமாய் அமைந்த ஒன்றாக எதைத் தேர்ந்தெடுத்தார்கள்?

உண்ண சரியான உணவில்லை, விரித்துப் படுக்க ஒழுங்கான விரிப்பும் இல்லை, வீடும் சிறியதாகத்தான் இருந்தது.

ஆனாலும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு போதும் இறை நினைவின்றி வாழ்ந்ததில்லை. இறை வழிபாடுகளிலிருந்து விலகியதும் இல்லை.

அல்லாஹ் நம்மை ஒன்றும் இப்படியானதொரு வாழ்க்கையை வாழ வைக்கவில்லை.

ஆனாலும், நம்மில் பலர் கஷ்டம், பிரச்சனை, சோதனை, ஏழ்மை, நோய் என்று மிகவும் சாதாரணமாக சாக்குப் போக்குக் கூறி இறை நினைவிலிருந்து விலகி வாழ்கின்றனர்.

அல்லாஹ்வை மகிழச் செய்திடும் அற்புத அமல் சிரமத்தின் போது செய்யும் அமலேஅது எதுவாக இருப்பினும் சரியே!
موسى عليه السلام والطيرين
ان موسى عليه السلام خرج ومعه يوشع بن نون فاذا بطير ابيض
قد وقع على كتف موسى عليه السلام وقال يانبي الله احفظني اليوم من
القتل قال ممن؟ قال من الصقر يريد ان يأكلني ودخل في كمه فاذا الصقر
قد اقبل فقال يانبي الله لاتمنع صيدي عني فقال موسى ع اذبح لك شاة من
غنمي قال لحم الغنم لايصلح لي قال مو سى ع فكل من لحم فخذي فطار
الطير من كمه فطار الصقر خلفه ثم اقبل الطائران على موسى ع فقال
احدهما انا جبرائيل ع وقال الاخر انا ميكائيل ع جئناك لنجربك في شفقتك
على عباد ربك

அல்லாமா நைஸாபூரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் மூஸா (அலை) அவர்களும், யூஷஃ இப்னு நூன் (அலை) அவர்களும் ஓரிடத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, உருவ அமைப்பில் சிட்டுக்குருவியைப் போன்று இருந்த வெள்ளைப் பறவை ஒன்று வேகமாக சிறகடித்துக் கொண்டு, மூஸா (அலை) அவர்களின் இருப்பிடத்தை வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் பதறித்துடித்தவாறுஅல்லாஹ்வின் நபியே! என்னை ராஜாளிப் பறவை ஒன்று துரத்திக் கொண்டு வருகிறது. அதன் தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்கு நீங்கள் அடைக்கலம் தாருங்கள்! என்றது.

மூஸா (அலை) அவர்களும் தங்களது மேலாடையில் ஒளிந்து கொள்ளுமாறு அந்த வெள்ளைப் பறவையிடம் கூறினார்கள்.

அதுவும் ஒளிந்து கொண்டது. சற்று நேரத்தில் ராஜாளியும் அங்கு வந்து சேர்ந்தது. கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் பறந்து திரிந்து தேடியது. பின்னர், மூஸா (அலை) அவர்களின் மேலாடையில் ஒளிந்து கொண்டிருப்பதை வெளியே தெரிந்து கொண்டிருக்கிற அதன் இறகை வைத்து கண்டு பிடித்தது.

நேராக, மூஸா (அலை) அவர்களிடம் வந்த ராஜாளிஅல்லாஹ்வின் நபியே! ஒளித்து வைத்திருக்கிற அந்த வெள்ளைப் பறவையை வெளியே விட்டு விடுங்கள்!” என்றது.

அதற்கு, மூஸா (அலை) அவர்கள்ஒளித்து வைக்கவில்லை, மாறாக, நான் அதற்கு அடைக்கலம் தந்திருக்கின்றேன்என்றார்கள்.

அப்போது, ராஜாளிஅல்லாஹ்வின் நபியே! எங்களின் உணவாக அல்லாஹ் இது போன்ற சிறிய பறவைகளைத் தான் அமைத்துத் தந்திருக்கின்றான். ஆகவே, என்னுடைய உணவை என்னிடம் கொடுத்து விடுங்கள்என்று வேண்டி நின்றது.

அதற்கு, மூஸா (அலை) அவர்கள் பசியும், உணவும் தான் உன்னுடைய பிரச்சனை என்றால் நான் வைத்திருக்கும் ஆட்டு மந்தைக்கு என்னோடு வா! உனக்கு விருப்பமான கொழுத்த ஆட்டை எடுத்துக் கொள்! தயவு செய்து அடைக்கலம் பெற்றிருக்கிற வெள்ளைப் பறவையை வெளியே விட நிர்பந்திக்காதே!” என்றார்கள்.

அப்போது, ராஜாளிஆட்டு இறைச்சியெல்லாம் எனக்கு சரி பட்டு வராதுஎன்றது. அதற்கு, மூஸா (அலை அவர்கள்அப்படியானால் என்னுடைய தொடைக் கறியை உனக்கு அறுத்ததருகிறேன் நீ உன் பசியைப் போக்கிக் கொள்என்றார்கள்.

அப்போது, ராஜாளிமனித உடலில் எங்கள் இனத்திற்கு மிகவும் பிடித்த பாகம் கண்கள் தான்வேண்டுமானால் உங்களின் கண்களைத் தாருங்கள்என்றது.

அதற்கு, மூஸா (அலை) அவர்கள் உடனடியாக கீழே படுத்து விட்டுஇதோ என் இரு கண்கள்! இரண்டையோ, இரண்டில் ஒன்றையோ எடுத்துக் கொள்! என்றார்கள். ராஜாளி மூஸா (அலை) அவர்களின் மார்பின் மீது வந்து அமர்ந்தது.

இதுவரை இந்த உரையாடலை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்த யூஷஃ இப்னு நூன் (அலை) அவர்கள்மூஸா (அலை) அவர்களே! கண் என்பது அல்லாஹ் தந்த மாபெரும் அருட்கொடையாகும்! இந்த கண் இல்லை என்றால் ரிஸாலத்தை எப்படிக் கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பீர்கள்! ஒரு பறவைக் கேட்கிறது என்பதற்காக இப்படியெல்லாம் நடந்து கொள்வது எனக்கு சரியாகப் படவில்லை. நாளை மறுமையில் அல்லாஹ் கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.

இந்த உரையாடலைக் கேட்டதும் ஒளிந்திருந்த வெள்ளைப் பறவை வேகமாக வெளியேறி பறந்து சென்றது. அதைத் துரத்தியவாறே ராஜாளியும் பறந்து சென்றது.

பறவைகள் சென்ற திசையை நோக்கியவாறே மூஸா (அலை) அவர்கள் கவலையில் ஆழ்ந்திருந்த நேரத்தில் அங்கே ஜிப்ரயீல் (அலை) அவர்களும், மீக்காயீல் (அலை) அவர்களும் வருகை தந்தார்கள்.

கவலை தோய்ந்த முகத்திற்கான காரணம் என்னவென்று ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் வினவ, நடந்த சம்பவத்தை ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் விடையாக விவரித்தார்கள்.

அப்போது, ஜிப்ரயீல் (அலை) அவர்கள்பதறித்துடித்தவாறு, உயிரைக் காப்பாற்ற உங்களிடம் அடைக்கலம் தேடி வந்ததே அந்த வெள்ளைப் பறவை நான் தான். ராஜாளியாக வந்தது மீக்காயீல் (அலை) அவர்கள் தான் அல்லாஹ் தான் எங்களை அந்த உருவத்தில் உங்களிடம் எங்களை அனுப்பினான்என்றார்கள்.

அப்போது, மூஸா (அலை) “எதற்காக அல்லாஹ் உங்களை அந்த தோற்றத்தில் அனுப்பினான்என ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள்சோதனையான நேரத்தில் நீங்கள் எவ்வாறு இறை நினைவோடும், இறைக்கட்டளைகளை மதித்தும் வாழ்கின்றீர்கள்என்பதை சோதிப்பதற்காக வேண்டி. அதில் நீங்கள் வெற்றியும் அடைந்து விட்டீர்கள்.

மேலும், அல்லாஹ் உங்களின் இந்த தியாகம், உங்களின் கண்களை அர்ப்பணிக்க முன் வந்த அந்த செயல் அல்லாஹ்வை மிகவும் மகிழ்வித்ததாக தெரிவிக்கச் சொன்னான்என்று கூறி அங்கிருந்து விடை பெற்றுச் சென்றார்கள்.

( இந்த சம்பவத்தின் அரபி வாசகம் நான் வைத்திருக்கும் ஷாமிலாவின் கிதாப் தொகுப்பில் இல்லை. மேலே இடம் பெற்றிருக்கிற அரபி வாசகத்தை ஒரு வலைப்பூவில் இருந்து காப்பி செய்து போட்டிருக்கின்றேன். ஏனெனில், அரபி வாசகத்திற்கும் அதன் மொழியாக்கத்திற்கும் நீங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள் என்பதற்காக இதைத் தெரிவிக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்.. மூல அரபி முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் அப்டேட் செய்திடுவேன் )

                ( நூல்: ரவ்ளத்துல் வாயிளீன் லி இமாமி நைஸாபூரீ (ரஹ்)…. )

وأشارت عائشة رضي الله عنها إلى ما جرى في غزوة حمراء الأسد، وهي على نحو ثمانية أميال من المدينة، وذلك أنه لما كان في يوم الأحد، وهو الثاني من يوم أحد، نادى رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ في الناس بإتباع المشركين، وقال: (لا يخرج معنا إلا من شهدها بالأمس) فنهض معه مائتا رجل من المؤمنين. في البخاري فقال: (من يذهب في إثرهم) فانتدب منهم سبعون رجلا. قال: كان فيهم أبو بكر والزبير على ما تقدم، حتى بلغ حمراء الأسد، مرهبا للعدو، فربما كان فيهم المثقل بالجراح لا يستطيع المشي ولا يجد مركوبا، فربما يحمل على الأعناق، وكل ذلك امتثال لأمر رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ورغبة في الجهاد. وقيل: إن الآية نزلت في رجلين من بني عبد الأشهل كانا مثخنين بالجراح، يتوكأ أحدهما على صاحبه، وخرجا مع النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فلما وصلوا حمراء الأسد، لقيهم نعيم بن مسعود فأخبرهم أن أبا سفيان ابن حرب ومن معه من قريش قد جمعوا جموعهم، وأجمعوا رأيهم على أن يأتوا «3» إلى المدينة
فيستأصلوا أهلها، فقالوا ما أخبرنا الله عنهم:" حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ". وبينا قريش قد أجمعوا على ذلك إذ جاءهم معبد الخزاعي، وكانت خزاعة حلفاء النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وعيبة «1» نصحه، وكان قد رأى حال أصحاب النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وما هم عليه، ولما رأى عزم قريش على الرجوع ليستأصلوا أهل المدينة احتمله خوف ذلك، وخالص نصحه للنبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وأصحابه على أن خوف قريشا بأن قال لهم: قد تركت محمدا وأصحابه بحمراء الأسد في جيش عظيم، قد اجتمع له من كان تخلف عنه، وهم قد تحرقوا عليكم، فالنجاء النجاء! فإني أنهاك عن ذلك

உஹதிலிருந்து முஸ்லிம் படைகள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தத தருணம் அது. இடையில் அண்ணல் நபி {ஸல்} அவர்கள் மீண்டும் படையை ஹம்ராவுல் அஸத் எனும் இடத்திற்கு அழைத்து வந்தார்கள்.

ஹம்ராவுல் அஸத் என்பது மதீனாவிலிருந்து எட்டு மைல் தூரத்தில் இருந்த ஓர் இடமாகும்.

காரணம் இது தான், உஹதிலிருந்து அபூசுஃப்யான் தமது படையுடன் மக்கா திரும்பிச் சென்று கொண்டிருக்கும் போது, ரவ்ஹா எனும் இடத்தை அடைந்ததும்நமக்கு முழுமையான வெற்றி வேண்டுமானால், (நஊது பில்லாஹ்..) முஹம்மது {ஸல்} அவர்களை ஏன் நாம் கொல்லக்கூடாது? வாருங்கள்! முஸ்லிம்களையும், நபி {ஸல்} அவர்களையும் பூண்டோடு அழித்து வருவோம்!” என்று கூறி மீண்டும் படையை நடத்தி வந்தார்.

அல்லாஹ் இந்தச் செய்தியை மாநபி {ஸல்} அவர்களுக்குத் தெரியப் படுத்தினான். ஆகவே தான் அண்ணலார் ஊர் திரும்பிய தமது படையை மீண்டும் இன்னொரு யுத்தகளம் நோக்கி அழைத்து வந்தார்கள்.

தூரத்தில் இருந்து ஒற்றர்களின் மூலம் நபிகளாரும், நபித்தோழர்களும் ஹம்ராவுல் அஸதில் முகாமிட்டிருந்ததை தெரிந்து கொண்ட அபூசுஃப்யான் தமது படையை வாபஸ் வாங்கி மக்காவிற்கு அழைத்துச் சென்று விட்டார்.

மாநபி {ஸல்} அவர்களும், நபித்தோழர்களும் மூன்று நாட்கள் அங்கே முகாமிட்டு பின்னர் நிம்மதியாக மதீனா திரும்பினார்கள்.

உஹத் தோல்விக்கு அடுத்த நாளில் இந்த சம்பவம் நடைபெறுகின்றது. அதுவும் சிலர்கள் “உங்களை கூண்டோடு அகற்ற அபூஸுஃப்யான் படை நடத்தி வருகிறார் என்று நபித்தோழர்களை பயமுறுத்திய போது, நபித்தோழர்கள் “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவனே பொறுப்பு சாட்டப்படுபவர்களில் மிக உயர்ந்தோனாய் இருக்கின்றான்” என்றவர்களாக பீடு நடை போட்டவர்களாக கிளம்பினார்கள்.

தோல்வியிலிருந்து எப்படி மீள்வது என்பதை அல்லாஹ் உணர்த்திய அடுத்த நாளே இன்னொரு போருக்கு தயாராகி, தங்களை இயல்பான நிலைக்கு கொண்டு வந்தனர் நபித்தோழர்கள்.

அல்லாஹ் இந்த அரிய செயலைப் பாராட்டி சோபனத்துடன் கூடிய மகத்தான கூலியுண்டு என்று இறை வசனத்தை இறக்கியருளி கௌரவித்தான்.

يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُؤْمِنِينَ () الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ لِلَّذِينَ أَحْسَنُوا مِنْهُمْ وَاتَّقَوْا أَجْرٌ عَظِيمٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டோரின் நற்கூலி வீணாகி விடுவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டிருக்கிறது. (அவர்கள் எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால் அவர்கள் (போரில்) தங்களுக்கு காயங்கள் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடைய அழைப்புக்கும், தூதருடைய அழைப்புக்கும் மறுமொழி பகர்ந்தார்கள்.

அவர்களில் யார் பாவங்களிலிருந்து விலகி, நற்செயல் புரிந்து வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அகமகிழ்வு தரும் மகத்தான கூலியுண்டு.”

الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (173) فَانْقَلَبُوا بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ لَمْ يَمْسَسْهُمْ سُوءٌ وَاتَّبَعُوا رِضْوَانَ اللَّهِ وَاللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ (174)

“உங்களுக்கு எதிராகப் பகைவர்கள் பெரும்படையாகத் திரண்டிருக்கின்றார்கள். எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்!” என்று மக்கள் அவர்களிடம் கூறினார்கள். அதனைக் கேட்டு அவர்களின் இறை நம்பிக்கை இன்னும் அதிகமாகி விட்டது. அது மட்டுமல்ல, “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” என்றும் கூறினார்கள்.

இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங்கொடைகளையும் அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகையத் தீங்கும் ஏற்படவில்லை. இன்னும், அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தின் படி நடந்தார்கள் எனும் சிறப்புப் பெயரும் அவர்களுக்குக் கிடைத்தது”.                ( அல்குர்ஆன்: 3: 171 - 174 )

மிகவும் சிரமமான நேரத்தில் அதுவும் மிகப்பெரிய அளவிலான இழப்புகள், காயங்கள் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வின் மார்க்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்கிற உயர்ந்த அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடக்க முன் வந்த அந்த செயலுக்கான அங்கீகாரத்தை அல்லாஹ் அல்குர்ஆனில் பதிவிட்டிருக்கின்றான்.

ஆகவே, சோதனை, ஏழ்மை, வறுமை, கஷ்டம், வியாபாரம், வேலை என்று சாக்கு போக்குகளை சொல்லிக் கொண்டு வாழும் நாம் மேற்கூறிய நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்.

யாஅல்லா! எங்களை உன்னை நினைவு கூர்பவர்களாகவும், உனக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாகவும், உன்னை அழகிய முறையில் வழிபடக்கூடிய வணக்கசாலிகளாகவும் ஆக்கியருள் புரிவாயாக!
        
           ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!வஸ்ஸலாம்!!!


12 comments:

  1. அருமையான நிகழ்வுகள் ஆதாரத்துடன் கிடைப்பது அரிது,நீங்கள் பெரும் முயற்சி எடுத்துள்ளீர்கள் உங்கள் முயற்சிக்கும் தெளிவான எழுத்துக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக ! தொடர்ந்து எழுத வேண்டும்

    ReplyDelete
  2. அருமையான
    தகவல்



    ReplyDelete
  3. ஜஸாகல்லாஹ்

    ReplyDelete
  4. உண்மையான வாழ்கை எது என்பதை எழுத்தில் வடித்த தங்களின் வாழ்விலும் இதை படிக்கும் எங்களின் வாழ்விலும் பயான் மூலம் கேட்கும் அனைத்து மக்களும் தங்கள் வாழ்விலும் வாழ்ந்து கலிமாவுடன் மரணத்தை வல்ல ரஹ்மான் வழங்குவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் துஆவுடன் பரகத் பாகவி திருப்பூர்

    ReplyDelete
  5. உண்மையான வாழ்கை எது என்பதை எழுத்தில் வடித்த தங்களின் வாழ்விலும் இதை படிக்கும் எங்களின் வாழ்விலும் பயான் மூலம் கேட்கும் அனைத்து மக்களும் தங்கள் வாழ்விலும் வாழ்ந்து கலிமாவுடன் மரணத்தை வல்ல ரஹ்மான் வழங்குவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    ReplyDelete
  6. தங்களின் குறிப்பை போலவே கண்டிப்பாக பயனும் நன்றாக இருக்க துஆ செய்வதோடு பயானை கேட்க ஆசைப்படுகிறேன்

    ReplyDelete
  7. நல்ல தகவல்
    ஒவ்வொரு வாரமும் உங்கள் பதிவு எதிர்பார்க்கப்படுகிறது. அல்ஹம்துலில்லா

    ReplyDelete
  8. நல்ல தகவல்கள் அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் தங்கள்

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் சிறிய சந்தேகம் இந்த பதிவில் வரும் ஒரு ஹதீசின் அரபி வாசகம்( وضع يده اليمنى تحت خده الامين )இதற்கு வலது கையை வலது தொடையில் வைத்தார்கள் என்று மொழியாக்கம் செய்துள்ளீர்கள்..تحت خده الايمن என்பதற்கு வலது தொடையா? அல்லது வலது கன்னமா ??விளக்கம் தரவும்

    ReplyDelete
  10. Ennai thangalin valai thalathil inaithu kollungal. Assalamu alaikum

    ReplyDelete