Thursday 26 February 2015

இஸ்லாத்தின் ஒளியும்… இன்றைய இளைஞர் சமூகத்தின் வழியும்….



இஸ்லாத்தின் ஒளியும்இன்றைய இளைஞர் சமூகத்தின் வழியும்….



அழிவின் விளிம்பில் பயணித்துக் கொண்டிருக்கிற இளைஞர் சமூகத்தையும், அவர்களின் அடையாளங்களையும், அவர்களுக்கான சீர்திருத்த முறைகளையும் கடந்த இரு வாரங்களாக நாம் பார்த்து வருகின்றோம்.

இறுதியாக, …

6. கொள்கையில் தடுமாறிக் கொண்டிருக்கும் இளைஞன். இவனும் அழிவின் விளிம்பில் இருக்கின்றான்..

தினம் ஒரு நிலைப்பாடு, வாரத்திற்கு ஒரு கொள்கை, மாதத்திற்கு ஒரு இயக்கம், ஆண்டிற்கு ஒரு தலைவர் என நிறம் மாறும் பூக்கள் போல தம்மை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கும் ஓர் இளைஞன்.

இத்தகைய சிந்தனை கொண்ட இளைஞர்கள் தாங்கள் கொண்டிருக்கிற கொள்கைகளுக்காக பெற்றோர்கள், இரத்த உறவுகள், நல்ல நண்பர்கள், சமூகத்தின் பெரியோர்கள், மார்க்க அறிஞர்கள், அண்டை அயலார்கள் என ஒரு நீண்ட உறவு வட்டங்களை நொடிப்பொழுதில் இழக்க முன் வந்து விடுகின்றனர்.

ஒரு கவிஞன் சொன்னதைப் போல… “தனக்கொரு கொள்கை, அதற்கொரு தலைவன், அதற்கொரு பாதை, அதற்கொரு பயணம்என தன் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் இயக்கவெறியின் பெயராலும், கொள்கை தடுமாற்றத்தின் பெயராலும் சீரழித்துக் கொண்டிருக்கிற ஆபத்தான ஓர் இளைஞர் சமூகம் நிறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

இத்தகைய சிந்தனை கொண்ட ஓர் இளைஞனுக்கு இஸ்லாமிய கொள்கைகள் மீதான கண்ணோட்டம் எது? அவைகளின் அளவுகோல்கள் என்ன? அதிலும் குறிப்பாக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளின் வரையறை எவை? என்பது போன்ற ஐயங்களை தெளிவாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

அது தான் அவர்களுக்கான சீர்திருத்த முறைகளில் முதன்மையானதும், இன்றியமையாததும் ஆகும்.

முஸ்லிம்சமூகமும்... ஒற்றுமையும்...

உலக அரங்கில் ஒற்றுமை ஒன்று தான் மனித சமூகத்திற்கு வெற்றிகளை வசப்படுத்தும் என முழங்க வேண்டிய ஓர் உன்னதமான சமூகம், இன்று பல்வேறு பிரிவுகளாக பிரிந்து ஒருவொருக்கொருவர் சொற்போர் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

எளிதில் களையவேண்டிய கருத்து வேறுபாடுகளை இன்றைய சமூகம் ஓர் கலையாகவே வளர்த்து வருகின்றது. ஆதலால் இன்று புற்றீசல்கள் போல் புதிது புதிதாய் கருத்து வேறுபாடுகள் முளைத்து விருட்சமாய் வளர்ந்து தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

நவீன இயக்கங்களால் கவரப்படுகின்ற இளைஞர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகள் குர்ஆன் ஹதீஸுக்கு முற்றிலும் முரணாக இருப்பதாக போதிப்படுகின்றனர்.

மத்ஹப்கள் தான் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கியது என்றும், அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தின் இஜ்மாஃ, கியாஸ் கொள்கைகள் வழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

ஆதலால் தான் அவர்கள் தூயவடிவிலான இஸ்லாத்தை அறிந்து கொள்ள வேண்டிய ஆவலில் இன்றைய தவ்ஹீத் இயக்கங்களின் பின்னால் இருப்பதாக விளக்கம் தருகின்றனர்.

உண்மை யாதெனில், அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தின் எந்த ஒரு அம்சமும் குர்ஆன் ஹதீஸின் ஒளியிலிருந்து பிறழ்ந்தவை அல்ல என்பது தான்.

மேலும், ஷரீஆவில் ஏற்படுகிற சில கருத்து முரண்பாடுகளின் போது இஜ்மாஃ, கியாஸ் ஆகிய வழிமுறைகளை எடுத்தாள்வது தான் இந்த உம்மத்தை அழிவின் பாதையில் இருந்தும், வழிகேட்டிலிருந்தும் பாதுகாக்கின்றது என்பதை ஏற்க மறுக்கின்றனர்.

1. ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்வதும், ஏகத்துவத்தின் அடிப்படையில் ஒன்றிணைவதும் இஸ்லாம் கூறும் அடிப்படை அம்சமாகும்.

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; மேலும், நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.” ( அல்குர்ஆன்: 3:103)

إِنَّ هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَأَنَا رَبُّكُمْ فَاعْبُدُونِ ()
நிச்சயமாக, உங்கள் உம்மத்சமுதாயம் பிரிவுகளில்லாத ஒரே சமுதாயம் தான். மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன். எனவே, நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்.”                                        (அல்குர்ஆன்: 21:92)

وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ ()

மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படியுங்கள். ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறு நீங்கள் பிணங்கிக் கொண்டீர்களெனில் உங்கள் மதிப்பும் வலிமையும் அழிந்து போய்விடும். ஆகவே, பொறுமையை மேற்கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருக்கின்றான்.”                                               (அல்குர்ஆன்: (8:46)

ஏகத்துவத்திற்குப் பின்னால் உயர்ந்த ஓர் அம்சமாக இஸ்லாம் கூறுவது ஒற்றுமையைத் தான்.

ஷிர்க்இணைவைப்புக்கு நிகரான ஓர் பெரும் பாவமாக இஸ்லாம் கூறுவது பிரிவினையைத் தான்.

அல்லாஹ்வின் தூதர் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் இருந்து கட்டளைகளைப் பெறுவதற்காக தூர் ஸீனா மலைக்குச் சென்றிருந்தார்கள்.

கிடைத்த இடைவெளியில் ஸாமிரீ பனூஇஸ்ரவேலர்களை காளை மாட்டை வணங்கும் படி செய்து விட்டான். அத்தோடு நின்று விடாமல்உங்கள் இறைவனும், மூஸாவின் இறைவனும் இதுதான். ஆனால், மூஸா மறந்து விட்டார்என்று மக்களை சொல்லவும் வைத்தான்.

தூர் ஸீனா மலையில் இருந்து திரும்பி வந்த மூஸா (அலை) அவர்கள் கடும் சினத்தோடு பனூஇஸ்ரவேலர்களை கடுமையாக விமர்சித்தார்கள்.

                  ( பார்க்க: 20: 86 முதல் 91 வரை )

அத்தோடு, தமது சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களிடமும் இது குறித்து வினவினார்கள்.

قَالَ يَا هَارُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوا () أَلَّا تَتَّبِعَنِ أَفَعَصَيْتَ أَمْرِي () قَالَ يَبْنَؤُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي إِنِّي خَشِيتُ أَنْ تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِي إِسْرَائِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِي ()

ஹாரூனே! அவர்கள் வழிதவறிச் சென்று கொண்டிருப்பதை நீர் பார்த்தபோது, என் வழிமுறைப்படி செயல்படுவதிலிருந்து உம்மைத் தடுத்தது எது?  நீர் ஏன் என் கட்டளைக்கு மாறுசெய்தீர்?” என்று மூஸா (அலை) கேட்டார்.

அதற்கு, ஹாரூன் பதிலளித்தார்: “என் தாயின் மகனே! என் தாடியைப் பிடிக்காதீர்; என் தலைமுடியை இழுக்காதீர்; இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடையே நீ பிரிவினை ஏற்படுத்தி விட்டாய்;” மேலும், என்னுடைய சொல்லுக்காக காத்திருக்கவும் இல்லைஎன்று நீர் கூறிவிடுவீரோ!?” என நான் அஞ்சினேன்.”                                  ( அல்குர்ஆன்: 20: 92 - 94 )

இங்கே, ஹாரூன் (அலை) அவர்கள் கூறிய பதில் மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.

இக்கட்டான, குழப்பமான தருணத்தில் கூட ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்திக் கூறுகின்றது.

2. பிரிவினைகளை ஏற்படுத்தும் கருத்து வேறுபாடுகள் களையப்பட வேண்டும்..

وَلَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ () مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ ()

மேலும், இணைவைப்பாளர்களுடன் நீங்கள் சேர்ந்து விடாதீர்கள்; அவர்களோ தங்களுடைய மார்க்கத்தைத் தனித்தனியாகப் பிரித்து பல குழுக்களாகப் பிரிந்து விட்டார்கள். மேலும், அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் தங்களிடம் இருப்பவற்றைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றார்கள்.” ( அல்குர்ஆன்: 30:31,32)

إِنَّ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا لَسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَفْعَلُونَ ()
எவர்கள் தங்களுடைய தீனைநெறியை துண்டு துண்டாக்கி பல்வேறு குழுக்களாய் பிரிந்து விட்டார்களோ அவர்களோடு ( நபியே! ) உமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. அவர்களுடைய விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பிலேயே உள்ளது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவனே அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான்.”                        ( அல்குர்ஆன்: 6:159 )

3. இஸ்லாம் கூறும் கருத்து வேறுபாடுகளின் வரையறை?...

கருத்து வேறுபாடுகளை கையாள்கிற விஷயத்தில் இஸ்லாம் மூன்று வழிமுறைகளை பேணச்சொல்கின்றது.

1. மனோ இச்சையின் அடிப்படையில், தமது சொந்த விருப்பு வெறுப்பு அடிப்படையில் அமைகின்ற கருத்து வேறுபாடுகள். இதற்கு இஸ்லாத்தில் துளி அளவு கூட அனுமதி இல்லை.

وَلَا تَتَّبِعِ الْهَوَى فَيُضِلَّكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنَّ الَّذِينَ يَضِلُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ بِمَا نَسُوا يَوْمَ الْحِسَابِ ()

மேலும், மன இச்சையை பின்பற்றாதீர்! அது அல்லாஹ்வின் வழியிலிருந்து உம்மைப் பிறழச்செய்து விடும். எவர்கள் அல்லாஹ்வின் வழியிலிருந்து பிறழ்ந்து விடுகின்றார்களோ, அவர்களுக்கு திண்ணமாக கடும் தண்டனை இருக்கின்றது. கேள்வி கணக்கிற்குரிய நாளை அவர்கள் மறந்துவிட்ட காரணத்தால்!” (அல்குர்ஆன்:38:26)

2. சத்தியத்தை நிலை நாட்ட அசத்தியத்தோடு முரண்படுவது இது கடமை வாஜிப் ஆகும்.

உதாரணமாக,
முஸைலமா தன்னை நபியாக வாதிடும் போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உயிரோடு இருந்தார்கள். அவனுக்கு எதிராக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பெரிய ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

கடிதம் அனுப்பி எச்சரித்தார்கள். ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஸைலமாவின் அட்டகாசம் கூடிப்போகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் குர் ஆன் மற்றும் ஸுன்னாவை அடிப்படையாக வைத்து நபித்தோழர்களை ஒன்று கூட்டி முஸைலமாவையும், அவனை நம்பிக்கொண்டிருக்கின்ற மக்களையும் முர்தத்மதம்மாறியவர்கள் என்று கருத்தொற்றுமையை ஏற்படுத்தி அவர்களோடு போர் செய்யவேண்டும் எனப் பிரகடனம் செய்தார்கள்.

அத்தோடு நின்று விடாமல் ஓர் படைப்பிரிவையும் அனுப்பி வைத்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் முஸைலமாவின் ஆதரவாளர்கள் முஸ்லிம்களுக்கு நிகராக எண்ணிக்கையில் இருக்கின்றார்கள் என்றோ, ஐக்கியம், ஒற்றுமை கெட்டு விடும் என்றோ எண்ணிக் கொண்டிருக்க வில்லை.

மாறாக, இறுதி நபித்துவம் என்கிற ஒன்று கேள்விக்குறியாகி, மக்கள் குஃப்ரில் சென்று கொண்டிருக்கின்றார்கள் எனும் போது சத்தியத்தைப் பாதுகாக்க அசத்தியத்தோடு முரண்பட்டு நின்றார்கள்.

3. இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் அல்லாத, கிளைச்சட்டங்களில் ஏற்படுகிற கருத்து வேறுபாடுகள் இவைகளில் சில போது அனுமதியும் சில போது தடையையும் மார்க்கம் ஏற்படுத்தி இருக்கின்றது.

பெரும்பாலும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் ஐக்கியமும், ஒற்றுமையும் கேள்விக்குறியாகும் எனும் நிலை ஏற்பட்டால் அது தவிர்க்கப்பட வேண்டும் என இஸ்லாம் வரையறுத்துத் தந்துள்ளது.

உதாரணமாக, அலீ (ரலி) அவர்களின் கிலாஃபத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் போது….

அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம், முஸ்லிம்கள் அணிகளாக பிரிந்து போயிந்த தருணம் அது.

உஸ்மான் (ரலி) அவர்களை கொலை செய்தவர்களை கண்டு பிடித்து தண்டித்தால் மட்டுமே பைஅத் செய்வோம் என சில முஸ்லிம்கள்.

அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்கள் என்கிற போர்வையில் நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு ஸபா தலைமையில் சிலர்.

வெளிப்படையாக விமர்சித்த கவாரிஜிய்யாக்கள் சிலர்.

ஆதரவு, எதிர்ப்பு திருப்தி, அதிருப்தி என்று சிலர்.

இஸ்லாமிய தலைமையின் கனத்தை மிகவும் கவனத்தோடும், பொருப்போடும் தங்களது சீர்மிகு அறிவாற்றலால் நகர்த்திக் கொண்டிருந்தார்கள்கலீஃபா அலீ (ரலி) அவர்கள்.

இந்த தருணத்தில் ஃகலீஃபா அலீ (ரலி) அவர்களை நிலை குலையச் செய்திடும் ஓர் சம்பவம் அரங்கேறியது.

ஆம்! அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களில் பெரும் திரளானவர்கள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டனர்.

وما كاد ينتهي النقاش بينهم حتى نهض منهم عشرون ألفا،
ومعلنين خروجهم من خصومة الامام عليّ..!!

அல்லாமா தஹபீ, அல்லாமா தபரீ, இமாம் சுல்லாபீ, (ரஹ்அலைஹிம்) ஆகியோரின் கூற்றுப்படி ஆதரவாளர்கள் சுமார் 20,000 –க்கும் மேற்பட்டவர்கள்.

ஏன் அவர்கள் விலகிச் சென்றார்கள்? என்பதை வரலாற்றுப் பிண்ணனியோடு விளங்கி, உள்வாங்கினால் மட்டுமே மக்கள் விளங்கும் அளவுக்கு எளிதாக நாம் விவரிக்க முடியும்.

பின் வரும் தகவலை நாம் மக்கள் மன்றத்திலே விவரிக்கத் தேவையில்லை என்றாலும் ஆலிம்களாகிய நாம் விளங்கும் பொருட்டு வரலாற்று நூற்களான தாரீகே தபரீ, பத்வு வத் தாரீக், அல் பிதாயா வன் நிஹாயா, ஸியர் அஃலா மின் நுபலா ஆகியவைகளின் ஒட்டு மொத்த திரட்டுகளில் இருந்து சுருக்கமாக இதோ உங்களின் மேலான பார்வைக்கு

 உஸ்மான் (ரலி) அவர்களின் உயிரை சிதைத்தவர்களை பழிவாங்கியே ஆக வேண்டும் என்கிற எண்ணம் மதீனாவில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைக் கண்டு  தல்ஹா (ரலி) அவர்களும், ஜுபைர் (ரலி) அவர்களும் கவலையுற்றனர்.

இருவரும் அலீ (ரலி) அவர்களை சந்தித்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட கலீஃபா முன்வர வேண்டும் என்றும் தங்களது ஆலோசனையை வெளிப்படுத்தினார்கள்.

قدم طلحة والزبير إلى مكة ولقيا عائشة - رضي الله عنهم جميعًا - وكان وصولهما إلى مكة بعد أربعة أشهر من مقتل عثمان تقريبًا، أي في ربيع الآخر من عام36هـ(1)، ثم بدأ التفاوض في مكة مع عائشة، رضي الله عنها، للخروج، وقد كانت هناك ضغوط نفسية كبيرة على أعصاب الذين وجدوا أنفسهم لم يفعلوا شيئًا لإيقاف عملية قتل الخليفة المظلوم، فقد اتهموا أنفسهم بأنهم خذلوا الخليفة وأنه لا تكفير لذنبهم هذا - حسب قولهم- إلا الخروج للمطالبة بدمه، علمًا بأن عثمان هو الذي نهى كل من أراد أن يدافع عنه في حياته تضحية في سبيل الله، فعائشة تقول: إن عثمان قُتل مظلومًا والله لأطالبن بدمه(2)، وطلحة يقول: إنه كان منى في عثمان شيء ليس توبتي إلا أن يسفك دمي في طلب دمه(3)، والزبير يقول: نُنهض الناس فيدرك بهذا الدم لئلا يَبْطل، فإن في إبطاله توهين سلطان الله بيننا أبدًا، إذا لم يُفطم الناس عن أمثالها لم يبق إمام إلا قتله هذا الضرب(4).

__________
(1) تاريخ الطبري (5/469).
(2) تاريخ الطبري (5/485).
(3) سير أعلام النبلاء (1/34).

(4) تاريخ الطبري (5/487).


அத்தோடு நின்றிடாமல் உம்ராவிற்க்குச் சென்றிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஊர் திரும்பும் வரை காத்திராமல் நேரிடையாகச் சென்று விஷயம் விபரீதம் ஆகுவதற்குள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் எனக் கருதி மக்கா நோக்கி பயணமானார்கள்.

உம்ரா முடிந்ததும் அன்னையவர்களைச் சந்தித்து மதீனாவின் நிலவரத்தை விளக்கினார்கள்.

( நூல்: ஸீரத் அமீருல் முஃமினீன் அலீ பின் அபூ தாலிப் (ரலி) லி இமாமிஸ் ஸுல்லாபீ )

فاجتمع فيها خلق من سادات الصحابة، وأمهات المؤمنين، فقامت عائشة رضي الله عنها في الناس تخطبهم وتحثهم على القيام بطلب دم عثمان، وذكرت ما افتات به أولئك من قتله في بلد حرام وشهر حرام، ولم يراقبوا
جوار رسول الله صلى الله عليه وسلم وقد سفكوا الدماء، وأخذوا الاموال.
فاستجاب الناس لها، وطاوعوها على ما تراه من الامر بالمصلحة، وقالوا لها: حيثما ما سرت سرنا معك، فقال قائل نذهب إلى الشام، فقال بعضهم: إن معاوية قد كفاكم أمرها، ولو قدموها لغلبوا، واجتمع الامر كله لهم، لان أكابر الصحابة معهم وقال آخرون: نذهب إلى المدينة فنطلب من علي أن يسلم إلينا قتلة عثمان فيقتلوا، وقال آخرون: بل نذهب إلى البصرة فنتقوى من هنالك بالخيل والرجال، ونبدأ بمن هناك من قتلة عثمان.
فاتفق الرأي على ذلك وكان بقية أمهات المؤمنين قد وافقن عائشة على المسير إلى المدينة، فلما اتفق الناس على المسير إلى البصرة
__________
(1)                          في فتوح ابن الاعثم


ஆலோசனையின் இறுதியாகநாம் மூவரும், இந்தக் கருத்தில் உடன்பாடுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து முஆவியா (ரலி) அவர்களைச் சந்தித்து விவரத்தை எடுத்துச் சொல்லி இந்தக் கருத்துள்ள ஒட்டு மொத்த ஆதரவாளர்களையும் ஒன்று திரட்டி மதீனா வந்து அலீ (ரலி) அவர்களைச் சந்தித்து உஸ்மான் (ரலி) அவர்கள் விவகாரத்தில் உடனடித் தீர்வை மேற்கொள்ள நெருக்கடி தருவோம்.” என்று முடிவெடுக்கப்பட்டு முஆவியா (ரலி) கவர்னராக இருந்த ஷாம் நோக்கிச் செல்லலாம் என சிலர் ஆலோசனை கூற அது நிராகரிக்கப்பட்டது.

பின்னர் ஏகோபித்த கருத்தாக அனைவரும் பஸராவிற்குச் செல்லலாம் என முடிவாகி பஸரா நோக்கி பயணம் மேற்கொள்ளப்பட்டது.

                                        (நூல்: அல் பிதாயா வன் நிஹாயா)

அலீ (ரலி) அவர்களுக்கு இந்தச் செய்தி முஆவியா (ரலி) அவர்களை அழைத்து வந்து அன்னை ஆயிஷா (ரலி), தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) (அன்ஹும்) சேர்ந்து போர் செய்யப்போகின்றார்கள் என்று தவறாகத் தரப்படுகின்றது.

அலீ (ரலி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தலைமையிலான அவரின் ஆதரவாளர்கள் பஸராவிற்கு போவதற்கு முன்னால் தடுத்து நிறுத்திட தங்களது தலைமயில் ஓர் படையை திரட்டிச் சென்றார்கள்.

இந்த தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்த அப்துல்லாஹ் இப்னு ஸபா மற்றும் அவனது ஆதரவாளர்கள் தங்களையும் அலீ (ரலி) அவர்களின் படையோடு இணைத்துக் கொண்டனர்.

ஜமல் எனும் இடத்தில் வைத்து அன்னை ஆயிஷா, ஜுபைர், தல்ஹா (ரலிஅன்ஹும்) ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்கள் அலீ (ரலி) அவர்கள்.

மூவரும் அலீ (ரலி) அவர்களிடம்நாங்கள் உங்களுக்கு எதிராக போரிட இந்த அணியை ஒன்று திரட்டவில்லை. மாறாக, முஆவியா (ரலி) அவர்களை வைத்து உங்களுக்கு உஸ்மான் (ரலி) அவர்களின் விவகாரத்தில் நெருக்கடி கொடுக்கவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவிளக்கம் தந்தனர்.

இன்ஷா அல்லாஹ்.. மதீனா சென்றதும் நிச்சயம் நான் உஸ்மான் (ரலி) அவர்களை கொலை செய்தவர்களைக் கண்டு பிடித்து கடும் தண்டணை கொடுப்பேன்என்று நான் உங்களுக்கு வாக்கு தருகின்றேன்.

நீங்கள் இத்தோடு உங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு மதீனா திரும்பிட வேண்டும்என அலீ (ரலி) கேட்டுக் கொண்டார்கள்.

இரு பிரிவினரிடையே சமாதானம் ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இரவு தங்கி விட்டு காலையில் செல்வதாக முடிவெடுத்து இரு அணியினரும் அவரவர்களின் இடத்திலேயே டெண்ட் அடித்து தங்கிக் கொண்டனர்.

எதிர் பார்த்த இழப்புகள் ஏதும் நடை பெறாததால் அப்துல்லாஹ் இப்னு ஸபா ஏமாற்றம் அடைந்தான்.

இரவோடு இரவாக இரகசிய திட்டம் தீட்டி மிகப் பெரிய சதியை அரங்கேற்றினான்.

அதன் விளைவாக ஏற்பட்ட கலகத்திலே கிட்டதட்ட இரு தரப்பிலும் சேர்த்து 10,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்.

ஒரு வழியாக கலகம் நிறைவுற்றது. ஆனால், அடுத்த கனமே அலீ (ரலீ) அவர்களின் அணியிலிருந்து அவர்களை நிலை குலையச்செய்திடும் அந்த சம்பவம் அரங்கேரியது.

ஆம்! பெரும் திரளான ஆதரவாளர்கள் விலகிச் சென்றனர்.

بعث به الامام عليّ كرّم الله وجهه ذات يوم الى طائفة كبيرة منهم فدار بينه وبينهم حوار رائع وجّه فيه الحديث وساق الحجة بشكل يبهر الألباب..
ومن ذلك الحوار الطويل نكتفي بهذه الفقرة..
سألهم ابن عباس:
" ماذا تنقمون من عليّ..؟"
قالوا:
" ننتقم منه ثلاثا:
أولاهنّ: أنه حكّم الرجال في دين الله، والله يقول ان الحكم الا لله..
والثانية: أنه قاتل، ثم لم يأخذ من مقاتليه سبيا ولا غنائم، فلئن كانوا كفارا، فقد حلّت أموالهم، وان كانوا مؤمنين فقد حرّمت عليه دماؤهم..!!
والثالثة: رضي عند التحكيم أن يخلع عن نفسه صفة أمير المؤمنين، استجابة لأعدائه، فان لم يكن امير المؤمنين، فهو أمير الكافرين.."


ஒரு நாள் அலீ (ரலி) அவர்கள் மிகவும் கவலையோடு அமர்ந்திருக்கும் போது, அங்கே வருகை தந்த அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம்நான் வேண்டுமானால் பிரிந்து சென்ற அவர்களிடம் சென்று சமரச பேச்சு வார்த்தை நடத்தட்டுமா?” என்று கேட்டார்கள்.

வேண்டாம்! அவர்களால் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திடுமோ? என நான் அஞ்சுகிறேன்என அலீ (ரலி) அவர்கள் பதில் கூற..

எதுவும் நேராது, நான் கவனமாக நடந்து கொள்கின்றேன்என்று கூறி நேராக அவர்களிடம் சென்றார்கள்.

அவர்களை ஒன்று திரட்டி ஓரிடத்தில் அமர வைத்து, எழுந்து நின்று ஏன் அலீ (ரலி) அவர்களை நீங்கள் நிந்திக்கின்றீர்கள்? பலிக்கின்றீர்கள்? அவர்களை விட்டும் விலகி வந்து விட்டீர்கள்?”

அக்கூட்டத்திலிருந்து இப்படி பதில் வந்தது. நாங்கள் மூன்று காரணங்களுக்காக அவர்களை நிந்திக்கின்றோம்! பலிக்கின்றோம்! விலகி வந்திருக்கின்றோம்!

தொடர்ந்து அந்த காரணங்களை வரிசையாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

முதலாவது: மார்க்க விவகாரங்களில் மனிதர்களைக் கொண்டு தீர்ப்பளிக்கின்றார்.

இரண்டாவது: (ஜமல் கலகத்தை மையப்படுத்தி) யுத்தத்திற்கு அழைக்கின்றார்; ஆனால், தோற்றவர்களின் பொருட்களை ஃகனீமத்தாக எடுக்கக்கூடாது என்றும், எதிரணியில் உள்ளவர்களை கைதிகளாக பிடிக்கக்கூடாது எனவும் கூறுகின்றார்.

மேலும், எதிரிகள் காஃபிர்களாக இருந்தால் அவர்களின் பொருட்கள் (ஹலால்) ஆகுமாகும் என்றும், அதுவே முஸ்லிம்களாக இருந்தால் அவர்களின் உயிரும், பொருட்களும் (ஹராம்) ஆகுமாகாது என்றும் கூறுகின்றார்.

மூன்றாவது: அரசு மற்றும் நிர்வாக சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கையெழுத்து இடுகிற இடங்களில் தம் பெயருக்கு முன்னால்அமீருல் முஃமினீன்என்று குறிப்பிடுவதில்லை.

நாங்கள் கேட்கின்றோம்! அவர் (அலீரலி) முஃமின்களின் தலைவரா? அல்லது காஃபிர்களின் தலைவரா?, முஃமின்களின் தலைவரென்றால் அவர் ஏன் தம் பெயருக்கு முன்னால் அமீருல் முஃமினீன் என்று குறிப்பிடுவதில்லை?

وأخذ ابن عباس يفنّد أهواءهم فقال:
" أما قولكم: انه حكّم الرجال في دين الله، فأيّ بأس..؟
ان الله يقول: يا أيها الذين آمنوا، لا تقتلوا الصيد وأنتم حرم، ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوا عدل منكم..
فنبؤني بالله: أتحكيم الرجال في حقن دماء المسلمين أحق وأولى، أم تحكيمهم في أرنب ثمنها درهم..؟؟!!


”சொல்லுங்கள்! அதற்கான தீர்வை நான் குர்ஆனில் இருந்தும், மேலான நபிகளாரின் சுன்னாவில் இருந்தும் தருகின்றேன்!

அது உங்களை திருப்திபடுத்தும் வகையில் இருந்தால் அதை ஏற்று உங்கள் முடிவை நீங்கள் மாற்றி மீண்டும் அலீ (ரலி) அவர்களோடு இணைந்து விட வேண்டும்! என்கிற நிபந்தனையை முன்வைத்தவர்களாக ஒவ்வொன்றுக்கும் விளக்கம் தர ஆரம்பித்தார்கள்.

உங்களின் முதலாம் குற்றச்சாட்டுக்கான பதில் இது தான், அலீ (ரலி) அவர்கள் மார்க்க விவகாரங்களில் ஏன் மனிதர்களைக் கொண்டு தீர்ப்பளிக்கக் கூடாது? அதில் என்ன குற்றம் இருக்கின்றது?

ஏனென்றால், அல்லாஹ் தன் திருமறையில்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَأَنْتُمْ حُرُمٌ وَمَنْ قَتَلَهُ مِنْكُمْ مُتَعَمِّدًا فَجَزَاءٌ مِثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهِ ذَوَا عَدْلٍ مِنْكُمْ

இறைநம்பிக்கை கொண்டவர்களே!, நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டையாடிப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! மேலும், உங்களில் யாரேனும் வேட்டையாடிப் பிராணிகளைக் கொன்றுவிட்டால், அதற்குப் பரிகாரமாக அவர், தான் கொன்ற பிராணிக்குச் சமமான ஒரு பிராணியைக் கால்நடைகளிலிருந்து பலி கொடுக்க வேண்டும்.உங்களில் இரு நீதியாளர்கள் அதனைத்தீர்மானிக்க வேண்டும்.”

என்று கூறுகின்றான். தோழர்களே! நன்கு கவனியுங்கள், இங்கே திர்ஹத்தின் மதிப்பு கூட பெறாத முயலுக்கே மனிதர்களில் இரு நீதியாளர்கள் தீர்மானிக்க வேண்டும் என்றால், மார்க்க விவகாரங்களில் மனிதர்களைக் கொண்டு தீர்ப்பு வழங்குவதில் என்ன தவறு இருக்கின்றது.

அலீ (ரலி) அவர்களின் நிலைப்பாடு அல்குர்ஆனின் வழிமுறைப்படி சரியானது தான் என்பதை ஒப்புக் கொள்கின்றீர்களா?

ஆம்! நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம்! என்று அவர்கள் கூறினர்.

" وأما قولكم: انه قاتل فلم يسب ولم يغنم، فهل كنتم تريدون أن يأخذ عائشة زوج الرسول وأم المؤمنين سبيا، ويأخذ أسلابها غنائم..؟؟
وهنا كست وجوههم صفرة الخحل، وأخذوا يوارون وجوههم بأيديهم..


அடுத்து உங்கள் இரண்டாவது குற்றச்சாட்டுக்கான பதில் இது தான். அல்லாஹ் தன் திருமறையில்

النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ وَأُولُو الْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَى بِبَعْضٍ فِي كِتَابِ اللَّهِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُهَاجِرِينَ إِلَّا أَنْ تَفْعَلُوا إِلَى أَوْلِيَائِكُمْ مَعْرُوفًا كَانَ ذَلِكَ فِي الْكِتَابِ مَسْطُورًا

திண்ணமாக! நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரை விட நபி தான் முன்னுரிமை பெற்றவராவார். மேலும், நபியின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராவார்.”

என்று கூறியிருக்கும் பட்சத்தில்நீங்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை கைதியாக பிடிக்கச் சொல்கின்றீர்களா? அவர்களின் உடமைகளை ஃகனீமத்தாக கருதுகின்றீர்களா?

அப்படியே கைதியாக பிடித்தாலும், அன்னை அவர்களை திருமணம் செய்யும் தைரியம் உங்களுக்கு இருக்கின்றதா?

அடுக்கடுக்கான இந்த கேள்விகளால் அவர்கள் அப்படியே ஆடிப்போய் விட்டனர்.

அவர்களின் முகம் மஞ்சரித்துப் போய் விட்டது. தங்களின் கைகளை முகத்தின் மீது அடித்தவர்களாக

நாங்கள் இந்த இரண்டாவது விளக்கத்தையும் ஏற்றுக் கொள்கின்றோம்என்று அவர்கள் கூறினார்கள்.

وانتقل ابن عباس الى الثالثة:
" وأما قولكم: انه رضي أن يخلع عن نفسه صفة أمير المؤمنين، حتى يتم التحكيم، فاسمعوا ما فعله الرسول يوم الحديبية، اذ راح يملي الكتاب الذي يقوم بينه وبين قريش، فقال للكاتب: اكتب. هذا ما قاضى عليه محمد رسول الله. فقال مبعوث قريش: والله لو كنا نعلم أنك رسول الله ما صددناك عن البيت ولا قاتلناك..
فاكتب: هذا ما قاضى عليه محمد بن عبدالله.. فقال لهم الرسول: والله اني لرسول الله وان كذبتم.. ثم قال لكاتب الصحيفة: أكتب ما يشاءون: اكتب: هذا ما قاضى عليه محمد بن عبدالله"..!!

அடுத்து உங்களின் மூன்றாவது குற்றச்சாட்டுக்கான பதில் இது தான். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வாழ்வில் நடைபெற்ற ஓர் செய்தியை கூறுகின்றேன். நன்றாக செவிதாழ்த்திக் கேளுங்கள்!

ஹுதைபிய்யா உடன்படிக்கைகுரைஷிகளுக்கும் நபிகளாருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்பந்தத்தில் எழுதும் போது இது! அல்லாஹ்வின் தூதர் முஹம்மது {ஸல்} அவர்களும் உடன்படுகின்ற ஒப்பந்தம்! என்று எழுதுமாறு கூறிய அண்ணலாரை நோக்கி, அதை நாங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் தான் இந்த நிலையே ஏற்பட்டிருக்காதே! என்று விமர்சித்த போது..

நபி {ஸல்} அவர்கள்முஹம்மது இப்னு அப்துல்லாஹ்என்று எழுதுமாறு ஆணையிட்டார்கள்.

பின்பு சபையினரை நோக்கி நபி {ஸல்} கூறினார்கள்: “ நீங்கள் ஏற்றுக் கொண்டாலும், பொய்ப்படுத்தினாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் தூதர் தான்.”

இங்கிருந்து தான் தமக்கான செயல்பாட்டில் அலீ (ரலி) அவர்கள் முன் மாதிரியை பெற்றிருக்கின்றார்கள்.

உங்களின் மூன்று குற்றச்சாட்டுகளுக்கான தெளிவான பதில் இவைகள் தாம் என்று கூறி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முடித்த போது கிட்டத்தட்ட சுமார் 18,000 –க்கும் மேற்பட்டோர் மீண்டும் அலீ (ரலி) அவர்களோடு இணைந்து கொண்டார்கள்.

கொஞ்சம் பேர் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அலீ (ரலி) அவர்களுடன் இணைய மறுத்து விட்டனர்.

பின் நாளில் இவர்கள் தாம் அலீ (ரலி) அவர்களுக்கு எதிரானவர்களில் மாபெரும் தீய சக்தியாக விளங்கினார்கள்.

                                (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}..)

அன்றைக்கு அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மேற்கொண்ட பெரும் முயற்சி எதெற்கெனில் சமூகத்தை பிரிக்கிற கருத்து வேறுபாடுகள் இஸ்லாம் தடை செய்திருக்கின்றது என்பதால் தான்.

அத்தகைய முயற்சியை அவர்கள் மேற்கொள்ள வில்லையென்றால் மிகப்பெரும் பிளவும், பிரிவினையும் தோன்றியிருக்கும்.

நபி {ஸல்} அவர்கள் காலத்தில் நபித்தோழர்களுக்கு ஏற்பட்ட ஓர் கருத்து வேறுபாடு..

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாழ்ந்த பொற்காலத்தில் நபித் தோழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளின் போதும், கருத்து முரண்களின் போதும் ஸஹாபாக்கள் நபி {ஸல்} அவர்களின் சமூகத்திற்கு வந்தே நின்றனர். நபி {ஸல்} அவர்களும் அந்தப் பிரச்சனைகளை முன் நின்று தீர்த்து வைத்தார்கள்.

ஸஹாபாக்கள் அத்தீர்வையே முடிவாக ஏற்றுக் கொண்டார்கள்.

தாதுஸ் ஸலாஸில் எனும் போருக்கு அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களின் தலைமையில் 300 பேர் கொண்ட ஒரு படையை நபி  {ஸல்} அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.                            

அவருக்கு உதவியாக அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் {ரலி} அவர்களின் தலைமையில் ஓர் துணைப் படையையும் பின்னால் அனுப்பி வைத்தார்கள்.                                                  
அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களின் தலைமையின் கீழ் அபூபக்ர் {ரலி}, உமர் {ரலி} போன்ற பெரும் ஸஹாபிகளெல்லாம் படை வீரராக கலந்து கொண்டார்கள். அவர்கள் கடும் குளிர் காலத்தில் பயணமேற்கொண்டனர்.                                            
ஸலாஸில் என்பது மதீனாவில் இருந்து 10 நாட்கள் நடந்து செல்லும் தொலைவில் உள்ள ஓர் மணற்பாங்கான பகுதியாகும். போருக்குச் செல்கிற வழியில் இந்த உம்மத்திற்கு பெரும் பாடங்களை கற்றுத் தந்த மூன்று நிகழ்வுகள் நடந்தேறியது.                                          
பெரும்பாலும் படைத் தளபதிகளே மக்களுக்கு இமாமாக நின்று தொழவைப்பார்கள். அது தான் அண்ணலாரின் வழக்கமாகவும் இருந்தது.                                                                      
ஒரு நாள் இரவு அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களுக்கு குளிப்புக் கடமையாகி விடுகின்றது. தயம்மும் செய்து சுபுஹ் தொழுகையை தொழ வைத்தார்கள்.                                  
இதை அறிந்து கொண்ட உமர் {ரலி} அவர்கள் உட்பட, படை வீரர்கள் அனைவரும் ஆட்சேபித்தனர். ஆனாலும், தளபதியின் முடிவுக்கு கட்டுப் பட வேண்டுமென்ற மாநபியின் கட்டளை அவர்களைத் தடுத்து விட்டது.                                      
அடுத்து ஸலாஸிலை சமீபித்திருந்த ஒரு பகுதியில் இரவு தங்க நேரிட்டது. குளிரின் தாக்கம் அதிகமாகி விடவே, வீரர்கள் நெருப்பு மூட்டினர்.                                                                
சிறிது நேரத்தில் அங்கு வந்த தளபதியார்தீயை அணைத்து விடுங்கள்; இனி யாரும் நெருப்பு மூட்ட வேண்டாம். இது தளபதியின்  உத்தரவாகும்என்று அனைவரிடத்திலும் கூறினார்கள்.                        

மீண்டும் படை வீரர்களுக்கு மத்தியில் சலசலப்பு  முணுமுணுப்பு. இறுதியாக, போர் நடந்தது.                                          

முஸ்லிம்கள் மாபெரும் வெற்றி வாகை சூடினர். எதிரிகள் தலை தெறிக்க புறமுதுகு காட்டி ஓடினர்.                                   

இப்போது தளபதி அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களிடம் இருந்து ஓர் கட்டளைஎதிரிகளை யாரும் துரத்திச் சென்று தாக்கிட வேண்டாம்; அப்படியே திரும்பி விடுங்கள். யாரும் இப்படியொரு உத்தரவை அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் போடுவார்கள்என சற்றும் எதிர் பார்க்கவில்லை.                    

எதிரிகளை பதம் பார்த்திட அருமையானதொரு சந்தர்ப்பம். இனிமேல், இதுபோன்றதொரு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. இம்முறை எதிர்ப்பு கடுமையாகவே தளபதியிடம் வீரர்கள் அனைவரும் ஒருமித்த குரலில்நாம் எதிரிகளை விரட்டிச் சென்று தாக்குவோம்என்றனர்.

இல்லை, இப்போதே படை வாபஸ் பெறப்படுகிறது.               உடனடியாக, நாம் மதீனா திரும்பிச் செல்கின்றோம்என்றார் தளபதி. பல்வேறு சிக்கலுக்குப் பிறகு மதீனா வந்து சேர்ந்தது முஸ்லிம்களின் படை.                                             
உடனடியாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் உமர் {ரலி} அவர்கள் மற்றும் இன்னும் சில வீரர்கள் சேர்ந்து தளபதியின் நடத்தை குறித்து முறையிட்டனர்.                                        
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், உமர் கூறிவிட்டார். அபூபக்ர் கூறிவிட்டார். இன்னும் கண்ணியத்திற்குரிய பெரும் ஸஹாபாக்களெல்லாம் கூறிவிட்டனர். உடனே  அம்ர் {ரலி}  அவர்களை அழைத்து அதற்காக தண்டிக்கவில்லை.                        

அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்களை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். அம்ர் {ரலி} அவர்கள் வந்ததும்அம்ரே! மக்கள் உம் மீது இன்னின்னவாறான ஆட்சேபனைகளை என்னிடம் முறையிட்டுள்ளனர். உம்முடைய பதில் என்ன?” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.                                                
அதற்கு அம்ர் {ரலி} அவர்கள்ஆம்! அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். கடுமையான குளிரில் குளித்தால் மரணித்து விடுவேனோ என நான் அஞ்சினேன்.                                                      
அப்போது எனக்குஉங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்கள் மீது அளப்பெரும் கருணையாளனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன்:4:29) எனும் இறை வசனம் நினைவுக்கு வந்தது.                                   
எனவே நான் தயம்மும் செய்து தொழவைத்தேன். அது தவறா இறைத்தூதரே!?” என்று கேட்டார்.                                                

அது கேட்ட அண்ணலார் புன்முறுவல் பூத்தவராகஇல்லை, தப்பொன்றும் இல்லைஎன்று கூறிவிட்டு, ”ஏன் நெருப்பை மூட்ட வேண்டாம் என்று கூறினீர்கள்என்று கேட்டார்கள்.                                                                                                
அதற்கு அம்ர் {ரலி} அவர்கள்எதிரிகளின் இடத்தை நாங்கள் நெருங்கிய பின்பு தான் நான் அவ்வாறு கூறினேன். காரணம் நம் நடமாட்டத்தை அறிந்து எதிரிகள் நம்மைத் தாக்கி விடுவார்களோ என நான் அஞ்சினேன்.                                                         
அதன் பின்னர் தான் அப்படி நான் கட்டளை பிறப்பித்தேன்என விளக்கம் தந்தார்கள். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் புன்னகை பூத்தார்கள். பின்னர், ”ஏன் விரட்டிச் சென்று தாக்கிட வேண்டாம் என்று உத்தரவிட்டீர்கள்என மாநபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.                                           

அதற்குஎதிரிகளின் எண்ணிக்கை நம் எண்ணிக்கையை விட அதிகம். அவர்கள் களத்தை விட்டும் வெளியேறி பரந்த வெளியில் ஓடிக்கொண்டிருந்தனர்.                                              
தொடர்ந்து சென்று தாக்கினால் அவர்கள் சுற்றி வளைத்து நம்மை தாக்கி, வெற்றி பெற்றுவிடுவார்களோ என நான் அஞ்சிய போது அந்த முடிவை எடுத்தேன்என்று அம்ர் {ரலி} அவர்கள் கூறினார்கள். இப்போதும் நபி {ஸல்}  சிரித்தார்கள்.                                
பின்பு, “என்ன தான் இருந்தாலும் களத்தில் நிற்கிற போது படைவீரர்களிடம் நீங்கள் ஆலோசித்து முடிவெடுத்து இருக்க வேண்டும். என அறிவுரை கூறி அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

      (நூல்:தாரீகுல் இஸ்லாம் லி இப்னி அஸாக்கிர், பக்கம்: 59 முதல் 67 வரை.)

ومن أمثلته كذلك ما أخرجه أبو داود والحاكم من حديث عمرو بن العاص رضي الله عنه، قال: (احتلمت في ليلة باردة في غزوة ذات السلاسل (11) فأشفقت إن اغتسلت أن أهلك، فتيممت ثم صليت بأصحابي الصبح، فذكروا ذلك للنبي صلى الله عليه وسلم فقال: "يا عمرو صليت بأصحابك وأنت جنب؟ " فأخبرته بالذي ((وَلاَ تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ الله كَانَ بِكُمْ رَحِيماً )) [النساء:29]. فضحك رسول الله صلى الله عليه وسلم ولم يقل شيئاً )
இந்த சம்பவத்தில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அங்கீகரித்திடாத ஓர் செயலை அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் செய்த போது, ஊருக்கு வந்த உடன் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து முறையிட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் உடனடியாக அழைத்து அது குறித்து விரிவாக ஓர் விசாரணையை மேற்கொண்டார்கள். இறுதியில் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் விளக்கத்தை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஆமோதித்தார்கள்.

இது போன்றே இன்னொரு செய்தியும் ஹதீஸில் பதிவாகியுள்ளது.

فعن ابن عمر، رضي الله عنهما، قال:
قال النبي صلى الله عليه وسلم يوم الأحزاب
 لا يصلين أحد العصر إلا في بني قريظة، فأدرك بعضهم العصر في الطريق، فقال: لا نصلي حتى نأتيهم، وقال بعضهم: بل نصلّي لم يُرد منا ذلك فذُكر ذلك للنبي صلى الله عليه  وسلم
فلم يعنِّف واحداً
 منهم
[متفقٌ عليه، واللفظ للبخاري]
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அகழ்ப்போர் முடிந்து வந்த தினம் நபி {ஸல்} அவர்கள்பனூகுறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை உங்களில் எவரும் அஸ்ருத்தொழுகையைத் தொழவேண்டாம்என்று கூறினார்கள்.

வழியிலேயே அஸ்ருத்தொழுகையின் நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர்பனூகுறைழா குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழவேண்டாம்என்று கூறினர்.

வேறு சிலர், “(தொழுகை நேரம் தவறிப்போனாலும் தொழவேண்டாம் என்ற) அர்த்தத்தில் நபி {ஸல்} அவர்கள் கூறவில்லை. ”வேகமாக அங்கு போய்ச்சேருங்கள்என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையை கூறினார்கள்) எனவே, ”நாம் தொழுவோம்என்று கூறினர்.

நபி {ஸல்} அவர்களிடம் இருசாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது அவர்களில் எவரையும் நபி {ஸல்} அவர்கள் குறை கூறவில்லை.” ( நூல்: புகாரீ )

وفي فتح الباري للحافظ ابن حجرقال السهيلي وغيره: في هذا الحديث من الفقه أنه لا يعاب على من أخذ بظاهر حديث أو آية ولا على من استنبط من النص معنى يخصصه، وفيه أن كل مختلفين في الفروع من المجتهدين مصيب
وفي شرح النووي لصحيح مسلم فأخذ بعض الصحابة بهذا المفهوم نظراً إلى المعنى لا إلى اللفظ، فصلوا حين خافوا فوت الوقت، وأخذ آخرون بظاهر اللفظ وحقيقته فأخروها. ولم يعنف النبي صلى الله عليه وسلم واحداً من الفريقين لأنهم مجتهدون. ففيه دلالة لمن يقول بالمفهوم والقياس ومراعاة المعنى ولمن يقول بالظاهر أيضاً، وفيه أنه لا يعنف المجتهد فيما فعله باجتهاده إذا بذل وسعه في الاجتهاد، وقد يستدل به على أن كل مجتهد مصيب
இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள்கியாஸுக்கான ஆதாரம் இதுஎன்பதாக இமாம் நவவீ (ரஹ்), இமாம் ஸுஹைலீ (ரஹ்) இப்னு ஹஜர் (ரஹ்) ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

இந்த இரு நபிமொழிகளும் சத்திய ஸஹாபாக்கள் தங்களின் வாழ்வினில் ஏற்பட்ட பிரச்சனைகளின் போது நபி {ஸல்} அவர்களை நாடினார்கள். நபி {ஸல்} அவர்களும் அதற்கான தீர்வை முன் மொழிந்தார்கள் என உணர்த்துகின்றது.

நபி {ஸல்} அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர் நபித்தோழர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்..

நபி {ஸல்} அவர்களின் காலத்தைத் தொடர்ந்து நபி {ஸல்} அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஏராளமான விஷயங்களில் நபித்தோழர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றனர்.

ஏன் நபி {ஸல்} அவர்கள் வஃபாத்தாகி விட்டார்களா? இல்லையா? என்பதில் கூட நபித்தோழர்களுக்குள் முரண்பாடு நிலவியது.

உமர் (ரலி) அவர்கள் உருவிய வாளோடு நின்றார்கள் என்கிற செய்தியும், அபூபக்ர் (ரலி) அவர்கள் அதை தீர்த்து வைத்த விதமும் நாம் அறிந்ததே.

ويروي ابن عباس رضي الله عنهما عن سيدنا عمر رضي الله عنه أنه قال له في خلافته:

"يا ابن عباس هل تدري ما حملني على مقالتي التي قلت حين توفي رسول الله صلّى الله عليه وسلم؟ قال: قلت: لا أدري يا أمير المؤمنين أنت أعلم.

قال: فإنه - والله - إن كان الذي حملني على ذلك إلاّ أني كنتُ أقرأ هذه الآية: ((وكذلك جعلناكُم أمَّةً وسطاً لِتَكُونوا شُهداء على الناسِ ويَكُون الرَّسولُ عليكمُ شهيداً )) [البقرة:143] فوالله إن كنت لأظن أن رسول الله صلّى الله عليه وسلم سيبقى في أمته حتى يشهد عليها بآخر أعمالها، فإنه الذي حملني على أن قلت ما قلت (26). فكأنه رضي الله عنه قد اجتهد في معنى الآيات الكريمة، وفهم أن المراد منها: الشهادة في الدنيا، وذلك يقتضي بقاء رسول الله صلّى الله عليه وسلم ، إلى آخر أيامها. "

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பின் நாளில், உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த போது ஒருமுறை நானும் அவர்களும் சந்தித்துக் கொண்டோம்.

உமர் (ரலி) அவர்கள் என்னிடம்இப்னு அப்பாஸே! அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மறைவின் போது நான் ஏன் உருவிய வாளோடு நின்றிருந்தேன் தெரியுமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, நான்என்னை விட நீங்கள் தானே அறிவீர்கள்என்றேன். அப்போது, உமர் (ரலி) அவர்கள்நான் பகராவினுடைய 143 –வது இறைவசனத்தின் கருத்தைஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} உலக முடிவின் இறுதி நாள் வரை உயிரோடி இருப்பார்கள்என்று விளங்கி வைத்திருந்தேன்என்றார்கள்.

ثم اختلفوا في المكان الذي ينبغي أن يدفن فيه رسول الله صلّى الله عليه وسلم ، فقال قائل: "ندفنه في مسجده. وقال قائل: بل ندفنه مع أصحابه. فقال أبو بكر رضي الله عنه: إني سمعت رسول الله صلّى الله عليه وسلم يقول: "ما قبض نبي إلاّ دفن حيث يقبض " فرفع فراش رسول الله صلّى الله عليه وسلم الذي توفي عليه، فحفر له تحته "

அடுத்து நபி {ஸல்} அவர்களை எங்கே அடக்கம் செய்வது? என்ற பிரச்சனை எழுந்தது. சிலர் மக்காவில் என்றும், சிலர் மதீனாவில் என்றும், வேறு சிலர் ஜன்னத்துல் பகீஃயிலும் என்றனர்.

அப்போது அங்கே பிரசன்னமாகி இருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள்நபி {ஸல்} அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்எந்த ஒரு நபியும் அவரின் ஆன்மா எங்கே கைப்பற்றப்படுகின்றதோ அங்கேயே அடக்கம் செய்யப்படுவார்கள்என்று கூறி தீர்த்து வைத்தார்கள்.

يقول ابن إسحاق: "ولما قبض رسول الله صلّى الله عليه وسلم انحاز هذا الحي من الأنصار إلى سعد بن عبادة في سقيفة بني ساعدة واعتزل علي بن أبي طالب، والزبير بن العوام، وطلحة بن عبيد الله في بيت فاطمة، وانحاز بقية المهاجرين إلى أبي بكر، وانحاز معهم أسيد بن حضير في بني عبد الأشهل "

அடுத்து முஸ்லிம் உம்மாவை வழி நடத்தும் தலைவர் யார்? எனும் பிரச்சனை எழுந்தது. அன்ஸாரிகள் ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவாகவும், முஹாஜிர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவாகவும் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். இந்த இரு குழுவிலும் கலந்து கொள்ளாமல் அலீ (ரலி) தல்ஹா (ரலி) ஜுபைர் (ரலி) ஆகியோர் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டில் தஞ்சமடைந்திருந்தனர்.

قال عمر: فقلت لأبي بكر: انطلق بنا إلى إخواننا هؤلاء من الأنصار حتى تنظر ما هم عليه. وليدع سيدنا عمر يروي بقية ما حدث، حيث قال: … إن الأنصار خالفونا واجتمعوا بأشرافهم في سقيفة بني ساعدة فانطلقنا نؤمهم، حتى لقينا - منهم - رجلان صالحان فذكرا لنا ما تمالأ عليه القوم، وقالا: أين تريدون يا معشر المهاجرين. قلنا: نريد إخواننا هؤلاء من الأنصار. قالا: فلا عليكم ألاّ تقربوهم يا معشر المهاجرين، اقضوا أمركم. قال : قلت : والله لنأتينهم، فانطلقنا حتى أتيناهم في سقيفة بني ساعدة، فإذا بين ظهرانينا رجل مزمل، فقلت: من هذا الرجل ؟ فقالوا: سعد بن عبادة، فقلت ماله؟ فقالوا: وجع فلما جلسنا نشهد خطيبهم… ثم ذكر مآثر الأنصار وفضائلهم، وما يدل على أنهم أولى بخلافة رسول الله صلى الله عليه وسلم من غيرهم.

وهنا لا بد من وقفة، فالأنصار أهل البلد، وهم فيها الغالبية المطلقة - كما يقال اليوم - وهم الذين آووا ونصروا، وتبوّؤوا الدار والإيمان وفتحوا للإسلام قلوبهم قبل بيوتهم، وليس هناك مهاجري واحد إلاّ ولأخ له من الأنصار عليه فضل كبير، ولو كان في أمر الخلافة نص قاطع من كتاب الله أو سنة رسوله عليه الصلاة والسلام لانتهى الأمر بذكره والاحتكام إليه، وارتفع الخلاف، ولكن ليس هناك شيء من ذلك، فلم يبق إلاّ التحلي بكل خصال الحكمة والحنكة، وأدب الاختلاف والحوار العقلاني الهادئ القائم على إثارة أنبل المشاعر وأفضلها لدى كل من الطرفين، لتجاوز العقبة، واحتواء الأزمة، والخروج منها، وذلك ما كان يقول سيدنا عمر.

ولما سكت -أي خطيب الأنصار - أردت أن أتكلم وقد زوّرت (هيأت وحسنت ) في نفسي مقالة أعجبتني. فقال أبو بكر: على رسلك يا عمر؛ فكرهت أن أغضبه، فتكلم، وهو كان أعلم مني وأوقر - فوالله ما ترك كلمة أعجبتني من تزويري إلاّ قالها في بديهته، أو مثلها أو أفضل حتى سكت، ومما قال رضي الله عنه: "أما ما ذكرتم فيكم من خير فأنتم به أهل" وأشاد بهم وبما قدموا لدينهم ولإخوانهم المهاجرين، وذكر من فضائلهم ومآثرهم ما لم يذكره خطباؤهم، ثم بدأ في إخراج المدينة - وحدها - فالجزيرة العربية اليوم - كلها - تستظل بظل الإسلام ، وإذا كان المهاجرون القاطنون في المدينة يمكن أن يسلموا لإخوانهم قريش، وما لم تتوحد الكلمة فلن يكتب لرسالة الإسلام تجاوز الحدود والانتشار خارج الجزيرة، إذن فمصلحة الدعوة تقتضي أن يكون الخليفة من قريش لتستمر الرسالة، وتتحد الكلمة، وتجتمع القلوب، ويستمر المد الإسلامي، ثم خيَّرهم بين أحد قرشيين لا يماري أحد في فضل أي منهما: عمر وأبي عبيدة، ونزع نفسه من الأمر ".

يقول سيدنا عمر: "ولم أكره شيئاً مما قاله غيرها - أي: غير ترشيحه لعمر وأبي عبيدة - وكان- والله أن أقدم فتضرب عنقي لا يقرِّبني ذلك إلى إثم، أحب إلي من أن أتأمّر على قوم فيهم أبو بكر… ".

இப்போது இங்கே பல்வேறு விதமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அடுத்த தலைவர் முஹாஜிர் தான் என்று முஹாஜிர்களும், அல்ல அன்ஸார்கள் தான் என்று அன்ஸாரிகளும், அல்ல முஹாஜிர்களில் ஒருவர் அன்ஸாரிகளில் ஒருவர் என இருவர் தலைவராக இருக்கட்டும் என்றும், முஹாஜிர்கள் என்றார் முஹாஜிர்களில் யார்? என்றும், அன்ஸாரிகள் என்றால் அன்ஸாரிகளில் யார்? என்றும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இன்னும் சிலர், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாழும் காலத்தில் அதிகமாக நபிகளாரோடு நெருக்கத்திலும், இணைத்தும் பேசப்பட்டவர்கள் உமர், அபூபக்ர் ஆகிய இருவர் தான். எனவே இருவரில் ஒருவர் தான் தலைவராக வரவேண்டும் எனவும் கூறினர்.

இப்படிப்பட்ட பல்வேறு முரண்களும், கருத்து வேறுபாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்ததை அறிந்த உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களையும், முஹாஜிர்களையும் கையோடு அழைத்துக் கொண்டு ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களும் அன்ஸாரிகளும் குழுமியிருந்த பனூ ஸாயிதாவினரின் இல்லத்தருகே வந்தார்கள்.

ثم قام من الأنصار خطيب آخر يريد أن يرجع الأمر إلى الإطار الأول الذي وضعه خطيبهم الأول فيه .. فقال: "…منا أمير ومنكم أمير يا معشر قريش " قال عمر: "فكثر اللغط، وارتفعت الأصوات حتى تخوّفت الاختلاف " فقلت: "ابسط يدك يا أبا بكر فبسط يده فبايعته، ثم بايعه المهاجرون،ثم بايعه الأنصار ". وقد كاد سعد بن عبادة مرشح الأنصار رضي الله عنه أن يقتل في الزحام "فقد تدافع الناس لمبايعة أبي بكر حتى كادوا يقتلون سعداً دون أن ينتبهوا له ".

அங்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் எழவே, உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் கையில் பைஅத் செய்தார்கள். உடனே, மற்றெல்லா நபித்தோழர்களும் அடுத்தடுத்து வந்து அபூபக்ர் (ரலி) அவர்களின் கரத்தில் பைஅத் செய்தார்கள்.

சத்திய ஸஹாபாக்கள் எந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அந்த விஷயத்தில் உடனடியாக அல்லாஹ்வின் வழிகாட்டியான குர்ஆனிடமும், நபி {ஸல்} அவர்களின் வார்த்தை மற்றும் வாழ்க்கையான ஹதீஸிடமும் வந்து நின்றனர்.

அவர்கள் ஒருபோதும் மனோ இச்சையின் அடிப்படையில் செயல்பட்டது கிடையாது.

அதைத் தொடர்ந்து அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் குர் ஆனை ஒன்று திரட்டுவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு.

ஜகாத்தைத் தர மறுத்தவர்களிடத்தில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறையில் உமர் (ரலி) அவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வருவதில் தடை கொண்டு வருதில் கருத்து வேறுபாடு. முத்தலாக் விஷயத்தில் கருத்து வேறுபாடு. தராவீஹ் ஏற்படுத்துவதில் கருத்து வேறுபாடு, மஹ்ர் தொகை நிர்ணயம் செய்வதில் கருத்து வேறுபாடு, ஹிஜ்ரா விஷயத்தில் கருத்து வேறுபாடு.

உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் குர்ஆனை எழுத்து வடிவில் கொண்டு வருவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு. அலீ (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் அரசியல் கருத்து வேறுபாடு என ஏராளமான சான்றுகளை நாம் முன் வைக்கலாம்.

இந்த அத்தனை கருத்து வேறுபாடுகளின் போதும் ஸஹாபாக்களிடையே நிலவிய நீதமான அணுகுமுறை தான் இந்த உம்மத்திற்கு கிடைத்த இஜ்மாஃ எனும் பொக்கிஷமாகும்.

அத்தகைய இஜ்மாஃவை இன்று வழிகேடு என்று விமர்சிக்கின்றார்கள்.

கருத்து வேறுபாடு கொண்டிருந்த போதும் கூட ஸஹாபாக்கள் ஒருவருக்கொருவர் எப்படி வாழ்ந்திருக்கின்றார்கள் என்கிற வரலாற்றை நவீன கொள்கை குழப்பவாதிகளின் தலைவர்கள் ஒருமுறை வாசித்துப் பார்க்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்.. அடுத்த வாரமும் இது தொடர்பான பதிவை இட்டு இந்த தலைப்பில் உள்ள விஷயங்களை முடித்துக் கொள்கின்றேன்.

      அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக! ஆமீன்! ஆமீன்!!
                      வஸ்ஸலாம்!!!

( நாம் மேற்கொண்டிருக்கிற இந்த ஆய்வுப்பதிவு இப்னுல் கையிம் (ரஹ்) அவர்களின் இஃலாமுல் மூக்கினீன் எனும் நூலிலும், ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் அல் இன்ஸாஃபு ஃபீ பயானி ஸபபில் இஃக்திலாஃப் எனும் நூலிலும், காணக்கிடைக்கின்றது. அரபி மூலம் தேவைப்படுபவர்கள் தங்களின் இமெயில் ஐடி யைத்தந்தால் பெற்றுக்கொள்ளலாம். சுமார் 60 பக்கம் கொண்ட ஓர் தொகுப்பு )

இன்ஷா அல்லாஹ்.. அடுத்த வாரம்..

கருத்து வேறுபாடுகள் நிகழ்வதின் காரணங்கள் என்ன? அவை எவை? என்றும். மத்ஹபுகள் உருவான விதம், காலகட்டம் எது? என்றும், கருத்து வேறுபாடு கொண்ட ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் ஒருவருக்கொருவர் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது குறித்தும் காண்போம்.