Wednesday 6 January 2016

புகழோடு இப்பூவுலகை விட்டும் பிரிந்த பூமான் நபி {ஸல்} அவர்கள்…2



புகழோடு இப்பூவுலகை விட்டும் பிரிந்த பூமான் நபி {ஸல்} அவர்கள்…2



வாழ்க்கையாக இருக்கட்டும், வாழ்ந்து மறைந்த பின் விட்டுச் செல்கிற வரலாறாக இருக்கட்டும் புகழுக்குரியதாய் அமைந்திருக்க வேண்டும் என்கிற புதியதோர் இலக்கணத்தை இப்பூவுலகிற்கு தந்தவர்கள் பெருமானார் {ஸல்} அவர்கள்.

தோன்றின் புகழோடு தோன்றுகஎன்பான் வள்ளுவன், வரலாற்றிலும் கூட புகழோடு தோன்றுகிற பெரும் பேறு பெற்றவர்கள் நமது உயிரினில் கலந்த உத்தம நபி {ஸல்} அவர்கள்.

உலகத்தில் ஆளுமை செலுத்திய அத்துனை தலைவர்களில் இருந்தும் நபி {ஸல்} அவர்கள் என்னென்ன அம்சங்களில் வேறுபட்டு சிறந்து விளங்கினார்கள் என்பது குறித்த தகவல்களை வரலாற்றின் ஒளியில் இருந்து நாம் பார்த்து வருகிறோம்...

வாருங்கள்! வரலாற்றின் ஒளியில் இதோ... இன்னும் அரிய பல தகவல்களைப் பார்ப்போம்!

4. பணிவிடை செய்து மகிழ்வித்தவருக்கு மாநபி {ஸல்} அவர்கள் செய்த பிரதி உபகாரம்….

عن أبي موسى الأشعري – رضي الله عنه ـ ، أن رسول الله – صلى الله عليه وسلم ـ نزل بأعرابي فأكرمه ، فقال له : « يا أعرابي سل حاجتك » قال : يا رسول الله ، ناقة برحلها, وأعنز يحلبها أهلي . قالها مرتين ، فقال له رسول الله – صلى الله عليه وسلم ـ:أعجزت أن تكون مثل عجوز بني إسرائيل ؟ فقال أصحابه : يا رسول الله ، وما عجوز بني إسرائيل ؟ قال : « إن موسى أراد أن يسير ببني إسرائيل فأضل عن الطريق ، فقال له علماء بني إسرائيل : نحن نحدثك أن يوسف أخذ علينا مواثيق الله أن لا نخرج من مصر, حتى ننقل عظامه معنا ، قال : وأيكم يدري أين قبر يوسف ؟ قالوا : ما تدري أين قبر يوسف إلا عجوز بني إسرائيل ، فأرسل إليها, فقال: دليني على قبر يوسف, فقالت : لا والله لا أفعل حتى أكون معك في الجنة ، قال : « وكره رسول الله– صلى الله عليه وسلم ـ ما قالت, فقيل له : أعطها حكمها فأعطاها حكمها فأتت بحيرة ، فقالت : أنضبوا هذا الماء . فلما نضبوه قالت : احفروا هاهنا, فلما حفروا إذا عظام يوسف ، فلما أقلوها من الأرض, فإذا الطريق مثل ضوء النهار »

நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஒரு பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

நபி (ஸல்) அவர்களை மிகவும் கண்ணியப்படுத்தினார்.  இச்செயலை கண்டு அக மகிழ்ந்து போன நபி {ஸல்} அவர்கள் மதீனா வந்தால் அவசியம் தங்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு கொடுத்து விட்டு விடை பெற்றார்கள்.

சிறிது காலம் கழித்து அக்கிராம வாசி மதீனா வந்தார்.  நபி (ஸல்) அவர்களை மஸ்ஜிதுந் நபவீயில் வந்து சந்தித்தார். அவரை நபி (ஸல்) அவர்கள் அன்புடன் உபசரித்தார்கள்.

அவர் விடைபெற்றுச் சென்ற போது என்னிடம் ஏதாவது கேளுங்கள்!”  என்று நபி (ஸல்) அவர்கள் அக்கிராம வாசியிடம் கேட்டார்கள்.

”அவர் எனக்கு ஓர் ஒட்டகம் தேவை அதை நான் வாகனமாக பயன் படுத்திக் கொள்வேன்” என்றார். மீண்டும் நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்றார்கள்.

அதற்கவர், அதை பாதுகாக்க ஒரு நாய் வேண்டும் என்றார். மீண்டும் நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்றார்கள், அதற்கவர் அவ்விரண்டையும் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணைத்தாருங்கள் என்று கேட்டார்.

இதுதான் உங்கள் தேவையா? என மாநபி (ஸல்) கேட்ட போது,  ஆமாம் அல்லாஹ்வின் தூதரே! இதுவே எனக்குப் போதும் என்றார் அவர்.

அல்லாமா குஷைரீ (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கும் ஒரு ரிவாயத்:

அக்கிராமவாசி பால் கறக்கும் ஓர் ஒட்டகம்,  பாலை கறக்க ஓர் பாத்திரம்,  பாலை அளக்க ஒரு அளவை தாருங்கள் என்றார். இதைக்கேட்ட நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்று கூறிய போது இவை மட்டும் போதும் என்றார் அக்கிராமவாசி.

அல்லாமா தப்ரானீ (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கும் ரிவயாத்

அக்கிராமவாசி ஓர் ஒட்டகம் தேவை,  தாங்கள் அதை வழங்கினால் வாகனமாக பயன்படுத்திக் கொள்வேன், இன்னும் சில ஆடுகளைத் தந்தால் அதன் பாலைக் கறந்து என் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வேன் என்றார். இதுதான் உங்களின் தேவையா? என்று வினவியபோது ஆமாம் இறைத்தூதரே!  இதுவே எனக்குப் போதும் என்றார்.

இதைக்கேட்டதும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்:  அல்லாஹ்வின் தூதராகிய நான் உமது தேவை குறித்து கேட்டபோது இவ்வளவு மலிவான பொருளை கேட்டு விட்டீரே! மூஸா (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மூதாட்டி மூஸா (அலை) அவர்களிடம் கேட்டது போல நீங்களும் கேட்க தவறி விட்டீரே! உம்மை விட அம்மூதாட்டி சிறந்தவள் என்றார்கள்.

உடனே சுற்றியிருந்த தோழர்கள் யார் அந்த மூதாட்டி?அப்படி என்ன தான் கேட்டார்?ஆர்வமாய் அண்ண்லாரிடம் கேட்டார்கள்.

மூஸா நபியவர்கள் பனூ இஸ்ரவேலவர்களை எகிப்திலிருந்து பைத்துல் முகத்தஸ்ஸிற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது பாதை தெரியாமல் பயணம் தடைபட்டது.

அது குறித்து ஆலோசித்த போது அங்கிருந்த மூத்த வயதுடையவர்கள்இஸ்ரவேலவர்கள் பைத்துல் முகத்தஸ்ஸிற்கு பயண மேற்கொள்வதாக இருந்தால் தமது ஜனாஸாவையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என நபி யூஸுப் (அலை) அவர்கள் வஸிய்யத் செய்ததாகவும் அதனால் தான் பயணம் தடை படுவதாகவும்சொன்னார்கள்.

 சக நபி யூசுப் (அலை) அவர்களின் அடக்கத்தலம் குறித்து விசாரித்த போது இது குறித்த தகவல் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டிற்கு தெரியும் என தெரிந்து கொண்டார்கள்.

இறுதியில், அம் மூதாட்டியை சந்தித்த மூஸா (அலை) அடக்கத்தலம்குறித்து விசாரித்தார்கள்.

நான் அறிவித்து தந்தால் எனக்கு என்ன சன்மானம் தருவீர்கள்? என அம்மூதாட்டி கேட்டார்.என்ன வேண்டும்? எது கேட்டாலும் தருகிறேன் என்று மூஸா (அலை) அவர்கள் பதில் கூறினார்கள்.

அப்படியானால், மறுமையில் சுவனத்தில் உங்களுடன் நான் இருக்க வேண்டும் என தமது கோரிக்கையை முன் வைத்தார்கள்.

அம்மூதாட்டியின் ஆர்வத்தையும், ஆவலையும் கண்டு வியந்த நபி மூஸா (அலை) அவர்கள் ஒப்புக்கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.

பின்பு அம்மூதாட்டி காண்பித்த நீரோடை அருகேயிருந்து யூஸுப் (அலை) அவர்களின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டு, பைத்துல் முகத்தஸை நோக்கி கொண்டு செல்லப்பட்டு அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

                                       ( நூல்: அல் முஸ்தத்ரக் அல் ஹாகிம் )

5. நபி {ஸல்} அவர்களின் உயிரைக் காக்க போராடியவருக்கு நபி {ஸல்} அவர்கள் செய்த பிரதி உபகாரம்

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் எனும் வதந்தியால் உஹத் யுத்தகளத்தின் நிலைமைகள் முற்றிலுமாய் மாறிப்போயிருந்த தருணம் அது

நபித்தோழர்களில் பலர் எதிரிகளின் தாக்குதல் தாங்க முடியாமல் யுத்த களத்தின் நாலாபுறமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர்.

இந்த வதந்தியைக் கேட்ட மாத்திரத்தில் யுத்தகளத்தின் நடுப்பகுதியிலிருந்து தங்களது குடும்பம் சகிதமாக அண்ணலாரைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.

ஆம்! உஹத் யுத்தகளத்தில் அவர்களின் கணவர் ஸைத் இப்னு ஆஸிம் (ரலி) மற்றும் அவர்களின் இரு மகன்களான ஹபீப் இப்னு ஸைத், அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலிஅன்ஹுமா) ஆகியோரோடு கலந்து கொண்டார்கள் வீர மங்கை உம்மு உமாரா (ரலி) அவர்கள்

இறுதியாக, அண்ணலாரின் இருப்பிடத்தைக் கண்டதும், அண்ணலார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்கள்.

ஆச்சர்ய மேலீட்டால்இதோ அண்ணலார் உயிரோடு இங்கே உயிரோடு இருக்கின்றார்கள்என்று உஹத் யுத்தகளம் முழுமையும் கேட்கும் அளவுக்கு சப்தமாகக் கூறினார்கள்.

قال ابن إسحاق فلما عرف المسلمون رسول الله صلى الله عليه وسلم نهضوا به ونهض معهم نحو الشعب معه أبو بكر الصديق وعمر بن الخطاب وعلى بن أبي طالب وطلحة بن عبيد الله والزبير بن العوام وسعد بن أبي وقاص وابو دجانة وزياد بن السكن والحارث بن الصمة وأم عمارة نسيبة بنت كعب المازنية ورهط من المسلمين رضوان الله عليهم.

இதே நேரத்தில், எதிரிகள் அண்ணலாரைத் தாக்கிட ஆயத்தமானார்கள். அப்போது அண்ணலாருக்கு அருகே நாலா புறங்களிலும் அரணாக தங்களை அமைத்து அண்ணலாரை காக்கும் பணியில் சில நபித்தோழர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அதில் தங்களையும் ஒருவராக வீர மங்கை உம்மு உமாரா (ரலி) அவர்கள் இணைத்துக் கொண்டார்கள்.

عن عمر قال سمعت رسول الله صلى الله عليه و سلم يقول ما ألتفت يوم أحد يمينا ولا شمالا إلا وأراها تقاتل دوني.

மாநபி {ஸல்} அவர்கள் தங்களைக் காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு சுழன்று சுழன்று போராடிய உம்மு உமாரா (ரலி) அவர்களைப் பார்த்துஉஹத் யுத்தகளத்தில் என்னைச் சுற்றி வலப்புறத்திலும், இடப்புறத்திலும் உம்மு உமாரா (ரலி) அவர்கள் போராடியதைப் போன்று வேறெவரும் போராட நான் பார்க்க வில்லைஎன்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

கிட்டத்தட்ட 13 – க்கும் மேற்பட்ட காயங்களோடு அம்மையார் போராடிக் கொண்டிருக்க ஒரு எதிரி வாள் கொண்டு வீசி அம்மையாரின் தோள்பட்டையை காயப்படுத்தி விட்டான்.

அந்தக் காயம் அதிக வேதனையைத் தரவே அண்ணலாரை நோக்கி மெல்ல நடந்து வந்தார்கள். அண்ணலாரின் அருகே வந்ததும்அல்லாஹ்வின் தூதரே! என் கணவர், இருமகன்கள், நான் உட்பட அனைவரும் நாளை மறுமையில் சுவனத்தில் உங்களோடு தோழமை பெற்றிட துஆ செய்யுங்கள்என்று வேண்டினார்கள்.

أن رسول الله صلى الله عليه وسلم قال : اللَّهُمَّ اجْعَلْهُم رُفَقَائِي فِي الجَنَّةِ).  )

உடனடியாக, உம்மு உமாராவுக்காக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்யாஅல்லாஹ் இவர்கள் அனைவரையும் சுவனத்தில் என்னுடன் இருப்பவர்களாய் ஆக்கியருள் புரிவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.

இதனைக் கேட்ட உம்மு உமாரா (ரலி) அவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்.

( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம், ஸியரு அஃலா மின் நுபலா, தபகாத் இப்னு ஸஅத் )

6. பசித்த நேரத்தில் உணவளித்தவருக்கு பிரதி உபகாரம் செய்த மாநபி {ஸல்} அவர்கள்….

அபுல் ஹைஸம் அத்தீய்ஹான் (ரலி) அவர்கள், நபி {ஸல்} அவர்களின் தனிப்பெரும் அபிமானத்திற்கும், அன்பிற்கும் சொந்தமான நபித்தோழர் ஆவார்கள்.

ஆம்! மதீனாவின் ஆரம்பப்பொழுதுகள் அண்ணலாருக்கும், அவர் தம் அருமைத் தோழர்களுக்கும் மிகவும் அசௌகர்யங்களைத் தந்த தருணம் என்றால் அது மிகையல்ல.

மதீனாவின் பல பொழுதுகள் மாநபிக்கும், நபித்தோழர்களுக்கும் பசியோடே கழிந்தது. எப்போதாவது சில வேளை மட்டுமே வயிற்றுப் பசியை நீக்க இயலும். அதுவும் பால் கொண்டோ அல்லது பேரீத்தம் பழம் அல்லது நீர் கொண்டோ வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள்.

இந்த நேரங்களில் சில போது மாநபி {ஸல்} அவர்களுக்கும், நபித்தோழர்களுக்கும் இறைச்சியோடு கோதுமை ரொட்டியை வயிறார உண்ணக் கொடுப்பார்கள் அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: صَنَعَ أَبُو الْهَيْثَمِ بْنُ التَّيْهَانِ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَعَامًا فَدَعَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ فَلَمَّا فَرَغُوا قَالَ
 أَثِيبُوا أَخَاكُمْ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا إِثَابَتُهُ؟ قَالَ إِنَّ الرَّجُلَ إِذَا دُخِلَ بَيْتُهُ فَأُكِلَ طَعَامُهُ، وَشُرِبَ شَرَابُهُ، فَدَعَوْا لَهُ فَذَلِكَ إِثَابَتُهُ

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களுக்கும், நபித்தோழர்களுக்கும் உணவு சமைத்துக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

வயிறார உண்டு முடித்து திருப்தியோடு இருக்கும் எங்களிடம்உங்கள் சகோதரருக்கு நீங்கள் வாழ்த்து சொல்லுங்கள்! என்று எங்களிடம் நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அப்போது, நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! எப்படி வாழ்த்துவது? என்று கேட்டோம். அதற்கு நபி {ஸல்} அவர்கள்அவருக்காக துஆ செய்வதுஎன்று பகர்ந்தார்கள்.

جاء رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إلى دار أبي الهيثم فتَقَدَّمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أبا بكر وعمر فَاسْتَأْذَنَ عَلَيْهِمْ، وَأُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْمَعُ السَّلَامَ تُرِيدُ أَنْ يَزِيدَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ السَّلَامِ فَلَمَّا أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْصَرِفَ، خَرَجَتْ أُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْعَى فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ: قَدْ سَمِعْتُ تَسْلِيمَكَ وَلَكِنْ أَرَدْتُ أَنْ تَزِيدَنَا مِنْ سَلَامِكَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيْنَ أَبُو الْهَيْثَمِ؟» قَالَتْ: قَرِيبٌ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ يَسْتَعْذِبُ لَنَا مِنَ الْمَاءِ، ادْخُلُوا، السَّاعَةَ يَأْتِي، فَبَسَطَتْ لَهُمْ بِسَاطًا تَحْتَ شَجَرَةٍ حَتَّى جَاءَ أَبُو الْهَيْثَمِ مَعَ حِمَارِهِ وَعَلَيْهِ قِرْبَتَانِ مِنْ مَاءٍ فَفَرِحَ بِهِمْ أَبُو الْهَيْثَمِ وَقَرَّبَ تَحِيَّتَهُمْ. وَصَعِدَ أَبُو الْهَيْثَمِ عَلَى نَخْلَةٍ فَصَرَمَ أَعْذَاقًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” حَسْبُكَ يَا أَبَا الْهَيْثَمِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ تَأْكُلُونَ مِنْ بُسْرِهِ وَمِنْ رُطَبِهِ، وَتَلَذُّوا بِهِ، ثُمَّ أَتَاهُمْ بِمَاءٍ فَشَرِبُوا عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا مِنَ النَّعِيمِ الَّذِي تُسْأَلُونَ عَنْهُ» ، ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ إِلَى شَاةٍ لِيَذْبَحَهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكَ وَاللَّبُونَ» ، ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ فَعَجَنَ لَهُمْ وَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ رُءُوسَهُمْ فَنَامُوا فَاسْتَيْقَظُوا وَقَدْ أَدْرَكَ طَعَامُهُمْ، فَوَضَعَهُ بَيْنَ أَيْدِيهِمْ فَأَكَلُوا وَشَبِعُوا وَحَمِدُوا اللَّهَ، وَأَتَاهُمْ أَبُو الْهَيْثَمِ بِبَقِيَّةِ الْأَعْذَاقِ فَأَصَابُوا مِنْهُ… ولما سلم رسول الله صلى الله عليه وسلم منصرفاً قَالَتْ لَهُ أُمُّ أَبِي الْهَيْثَمِ: لَوْ دَعَوْتَ لَنَا فَقَالَ: «أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ» .

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் சொல்ல தாம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்:

ஒரு நாள் நண்பகல் நேரத்தில் நபி {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயில் அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் வருகை தந்திருக்கின்றார்கள். அப்போது, நபி {ஸல்} அவர்கள்அபூபக்ரே! என்ன இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கின்றீர்கள்?” என்று வினவினார்கள். அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! உங்களை இந்த நேரத்தில் இங்கே வரவைத்தது எதுவோ அதுவே என்னையும் வரவைத்ததுஎன்று பதில் கூறினார்கள்.

சிறிது நேரத்தில் உமர் (ரலி) அவர்களும் அங்கே வருகை தர, நபி {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வினவியது போன்று வினவ, உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! கடுமையான பசி ஆதலால் இங்கு வந்தேன்என்று கூறினார்கள்.

கொஞ்ச நேரம் அண்ணலார் {ஸல்} அவர்கள் அபூபக்ர், உமர் (ரலிஅன்ஹுமா) ஆகியோரோடு உரையாடிவிட்டுதோழர்களே! வாருங்கள்! மூவரும் சேர்ந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று வருவோம்!” என்று கூறினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் நடுவே வர, அபூபக்ர் (ரலி) அவர்கள் வலது புறத்திலும், உமர் (ரலி) அவர்கள் இடது புறத்திலும் ஒரு சேர நடந்து வந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டின் முன் வந்து நின்றார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் ஸலாம் கூறினார்கள். வீட்டிலிருந்து பதிலேதும் வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறை ஸலாம் கூற உள்ளிருந்து பதிலேதும் வராததால் நபி {ஸல்} அவர்களும், தோழர்களும் திரும்பி வருவதற்கு ஆயத்தமான போது, “வஅலைக்குமுஸ்ஸலாம்யாரஸூலுல்லாஹ்….” வீட்டின் உள்ளிருந்து உம்மு ஹைஸம் அவர்களின் குரல் கொடுத்தார்கள்.

உம்மு ஹைஸம் அவர்களே! ஏன் மூன்று ஸலாம் வரை மௌனம் காத்தீர்கள்! உடனடியாக பதில் கூறியிருக்க வேண்டாமா? என நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதரே! ஸலாம் கூறியது தாங்கள் அல்லவா? தங்களின் ஸலாம் எத்தனை மகத்துவம் நிறைந்தது?!” ஆதலால் தான் சிறிது தாமதித்து பதில் கூறினேன் என்றார்கள்.

நபி {ஸல்} அவர்கள் புன்னகையை மறுமொழியாய் தந்து விட்டு, அபுல் ஹைஸம் எங்கே? என்று வினவினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இதோ அருகில் இருக்கிற கிணற்றுக்கு தண்ணீர் கொண்டு வர சென்றிருக்கின்றார். அதோ அந்த மரத்தடியில் சற்று இளைப்பாருங்கள்! இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வருகின்றார்கள். அங்கே மரத்தின் நிழலில் மாநபி {ஸல்} அவர்களையும், அபூபக்ர், உமர் (ரலி) இருவரையும் பார்த்து பூரிப்படைந்தவராக முக மலர்ச்சியோடு வரவேற்றார்கள்.

உடனடியாக, அருகில் இருந்த பேரீத்த மரங்களில் ஏறி காய்ந்த, ஈரமான இளவட்டமான அனைத்து ரக பழங்களையும் பறித்துக் கொண்டு வந்து அண்ணலாரின் முன் வந்து வைத்து விட்டுஅல்லாஹ்வின் தூதரே! தங்களது வருகை எனக்கு கண் குளிர்ச்சியை ஏற்படுத்தி விட்டதுஎன்று கூறி சாப்பிடுமாறு கூறினார்கள்.

மூவரும் திருப்தியாக சாப்பிட்டனர். அருகே வந்த அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் பேரீத்தங்கனியை கொண்டு வரட்டுமா? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்போதும், கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!” என்று கூறினார்கள்.

நல்ல குளிர்ந்த தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார் அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள். மூவரும் தண்ணீரை அருந்தினார்கள். பின்பு நபி {ஸல்} அவர்கள்இந்த தண்ணீரும் இறைவனின் அருட்கொடை தான்இது குறித்தும் நீங்கள் மறுமையில் கேட்கப்படுவீர்கள்என்று கூறினார்கள்.

அப்போது, அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! சற்று ஓய்வெடுங்கள்! இன்னும் சிறிது நேரத்தில் உணவு தயாரித்து கொண்டு வருகின்றேன்! சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்!” என்று கூறினார்கள்.

மூவரும் மரத்தின் நிழலில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உறங்கினார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் உம்மு ஹைஸம், அபுல் ஹைஸம் இருவரும் உணவை தயாரித்து ஆட்டிறைச்சியும், கோதுமை ரொட்டியும் தயார் செய்து நபி {ஸல்} அவர்களின் முன் கொண்டு வைத்து விட்டு மூவரையும் எழுப்பினார்கள்.

கண்விழித்து எழுந்த மூவரும் கை, கால் முகம் கழுவி விட்டு வயிறார உண்டார்கள்.

மூவரும் சாப்பிட்டு முடித்ததும், அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அப்போது, உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக துஆ செய்யுங்கள்!” என்று கூறினார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள்நீங்கள் பூமியில் நடமாடுகின்றவர்களில் நல்லோர்களுக்கு உணவளித்திருக்கின்றீர்கள்! பல நாள் சாப்பிடாமல் பட்டினியாய் இருந்தவர்களுக்கு வயிறு நிறைய உணவளித்து இருக்கின்றீர்கள்! ஆகையால், இறைவன் தன் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு துஆ செய்ய வைத்திருக்கின்றான்! இதோ! வானவர்கள் உங்களுக்காக துஆ செய்து கொண்டிருக்கின்றார்கள்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

عن أبي هريرة: أن النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قال لأبي الهيثم بن التَّيهان: “هل لك خادم؟


நபி {ஸல்} அவர்கள் அபுல் ஹைஸம் (ரலி) அவர்களை அன்பொழுக நோக்கியவாறு, தோழரே! உங்களுக்கு பணிவிடை செய்ய வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டார்கள்.

அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள்இல்லை, என்றார்கள். அப்படியானால், நம்மிடம் கைதிகள் வந்தார்கள் என்று நீங்கள் கேள்வி பட்டீர்கள் என்றால் நம்மிடம் வாருங்கள்! நல்ல ஒரு கைதியை பணியாளனாக பெற்றுச் செல்லுங்கள்!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அது போன்று, ஒரு சந்தர்ப்பத்தில் நபி {ஸல்} அவர்களிடம் இரு கைதிகள் வந்ததாக கேள்விபட்டு அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் சென்றார்கள்.

நபி {ஸல்} அவர்கள் இரு கைதிகளில் ஒருவரை தேர்வு செய்து கொடுத்து விட்டு, “தோழரே! இவர் தொழுகையாளி, இவரோடு நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்!” என்று கூறினார்கள்.

அந்த அடிமையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் உம்மு ஹைஸம் (ரலி) அவர்களிடம் நடந்த சம்பவங்களைக் கூறினார்கள்.

அது கேட்ட உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள்அப்படியானால், இந்த அடிமையை அல்லாஹ்விற்காக நாம் உரிமை விட்டு விடுவோம்! என்று கூறி உரிமை விட்டு விட்டார்கள்.

இந்த செய்தியறிந்த நபி {ஸல்} அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து இருவருக்காகவும் துஆ செய்தார்கள்.

                                 ( நூல்: இப்னு கஸீர், பாகம்: 4, பக்கம்: 707 )

7. அழுகையை அர்ப்பணித்தவர்களுக்கு அண்ணல் நபி {ஸல்} அவர்கள் செய்த பிரதி உபகாரம்….

قال ابن إسحاق: ومر رسول الله صلى الله عليه وسلم بدار من دور الأنصار من بني عبد الأشهل وظفر فسمع البكاء والنوائح على قتلاهم فذرفت عينا رسول الله صلى الله عليه وسلم فبكى ثم قال: لكن حمزة لا بواكي له! فلما رجع سعد بن معاذ وأسيد ابن خضير إلى دار بني عبد الأشهل أمر نساءهم أن يتحزمن ثم يذهبن فيبكين على عم رسول الله صلى الله عليه وسلم.
قال ابن إسحاق: حدثني حكيم بن حكيم عن عباد بن حنيف عن بعض رجال بني عبد الأشهل قال: لما سمع رسول الله صلى الله عليه وسلم بكاءهن على حمزة خرج عليهن وهن على باب مسجده يبكين عليه فقال: ارجعن يرحمكن الله فقد آسيتن بأنفسكن.

உஹத் 70 ஷுஹதாக்களைத் தந்த யுத்தகளம். அண்ணலாரும், அருமைத் தோழர்களும் மதீனாவின் எல்கையைத் தாண்டி ஊருக்குள் பிரவேசித்த தருணம் அது.

ஷஹீத்களின் குடும்பத்தார்கள் தங்களின் குடும்பத்தினர் சகிதமாக வந்து உஹதில் ஷஹீதானவர்களின் நிலை கேட்டு அழுத வண்ணம் இருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் புகழ்பெற்ற பனூ அப்துல் அஷ்ஹல், ளஃபர் கோத்திரத்தாரைக் கடந்து செல்கின்றார்கள். உஹதில் அதிக உயிர்களை அல்லாஹ்விற்காகத் தந்த கோத்திரம் அது.

பனூ அப்துல் அஷ்ஹல், ளஃபர் குலத்துப் பெண்கள் அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த பெண்களில் சிலர் தங்களின் கணவன்மார்களை, சிலர் தங்களின் தந்தைமார்களை, சிலர் தங்களின் சகோதரர்களை, சிலர் தங்களின் வாரிசுகளை இழந்திருந்தனர்.

இளகிய மனம் படைத்த அண்ணல் நபி {ஸல்} அவர்களால் அழுகையை அடக்க முடியவில்லை. அண்ணலாரின் இரு கண்களும் கண்ணீரை வாரி இறைத்துக் கொண்டிருந்தன.

ஒரு கணம் அப்படியே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அழுகையை நிறுத்தி விட்டு “எம் பெரிய தந்தையின் இழப்பு எவ்வளவு பெரிய இழப்பு, அவருக்காக அழ இங்கு ஒருவரும் இல்லையே!?” என நபி {ஸல்} அவர்கள் கூறிவிட்டு அங்கிருந்து மஸ்ஜிதுன் நபவீயை நோக்கி சென்று விடுகின்றார்கள்.

பனூ அப்துல் அஷ்ஹல் குலப் பெண்கள் இந்த வார்த்தையை தங்களின் குலத்தலைவர்களில் இருவரான ஸஅத் இப்னு முஆத் (ரலி), உஸைத் இப்னு ஹுளைர் (ரலி) ஆகியோரிடம் தெரிவித்தனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்படியா கூறினார்கள்? என்று கேட்ட இருவரும் தங்களின் குடும்பப் பெண்களையும், குலப்பெண்களையும் அழைத்துக் கொண்டு மாநபியின் மஸ்ஜிதுக்கு வருகை தந்து, மஸ்ஜிதின் வாயிலில் நின்று, “என் குலப் பெண்களே! அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் பெரிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களுக்காக நீங்கள் அழுங்கள்!” என்று கூறினார்கள்.

மஸ்ஜிதுக்கு முன் நின்று அன்ஸாரிப் பெண்கள் அழுகின்றார்கள் என்பதைக் கேள்வி பட்ட அண்ணலார் ஓடி வருகின்றார்கள்.

“அன்ஸாரிப் பெண்களே! பனூ அப்துல் அஷ்ஹல் குலப் பெண்களே! ஏன் அழுகின்றீர்கள்? என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.

”அல்லாஹ்வின் தூதரே! தங்களின் பெரிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக நாங்கள் அழுகின்றோம்” என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நெகிழ்ந்து போனார்கள். பெண்களே! நீங்கள் உங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லுங்கள்! இந்த நபியின் குடும்ப இழப்பிற்காக அழுத உங்கள் வாழ்க்கையில் அல்லாஹ் அருள் புரிவான்!” என துஆ செய்து அனுப்பி வைத்தார்கள்.  ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம் )

அழுகையை கூட தங்களின் உயிரினும் மேலாக மதிக்கிற அண்ணலாருக்காக அர்ப்பணித்த அந்த நபித்தோழியர்களுக்கு உடனடியாக துஆ செய்து தங்களின் பிரதி உபகாரத்தை நிறைவேற்றினார்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்.

இன்னும் இது போன்ற நிறைய சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களுக்கு உபகாரம் செய்தவர்களுக்கு பிரதி உபகாரமாக சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லியிருக்கின்றார்கள்.

அல்லது சுவனத்தில் நபிகளாரோடு இருக்க வேண்டுமென ஆசை கொண்டு துஆ செய்ய வேண்டி நிற்போரின் உயர்வான வேண்டுகோலை ஏற்று நபி {ஸல்} அவர்கள் அதற்காக துஆவும் செய்திருக்கின்றார்கள்.

வரலாறு நெடுகிலும் இது போன்று ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. நம் ஆயுள் போதாது அவைகளைக் காண்பதற்கு.

4. யாருக்கும் தீங்கு செய்யாத போதும், தங்களோடு வாழும் காலத்தில் தங்களால் பாதிக்கப்பட்டவர், அவர் எவராக இருந்தாலும் தான் வாழும் காலத்திலேயே தன்னை பழிதீர்த்துக் கொள்ளுமாறு பெரும் மக்கள் திரளிலே சூளுரைத்தார்கள்.

உலகத்தலைவர்களில் வேறெவராலும் இது வரையிலும் விட முடியாத அறை கூவல் இது…

عن الفضل بن عباس قال: جاءني رسول الله صلى الله عليه وسلم فخرجت إليه فوجدته موعوكاً قد عصب رأسه فأخذ بيدي وأخذت بيده فأقبل حتى جلس على المنبر ثم قال: ناد في الناس فصحت في الناس فاجتمعوا إليه فقال أما بعد أيها الناس فإني أحمد إليكم الله الذي لا إله إلا هو وإنه دنا مني خلوف بين أظهركم فمن كنت جلدت له ظهرا فهذا ظهري فليستقد منه ومن كنت أخذت له مالا فهذا مالي فيأخذ منه ولا يقولن رجل إني أخشى الشحناء من رسول الله صلى الله عليه وسلم ألا وإن الشحناء ليس من طبيعتي ولا شأني ألا وإن أحبكم إلي من أخذ حقا إن كان له أو حللني فلقيت الله عز وجل وأنا طيب النفس وإني أراني أن هذا غير مغن عني حتى أقوم فيكم مراراً ثم نزل فصلى الظهر ثم رجع فجلس على المنبر فعاد لمقالته الأولى في الشحناء وغيرها فقام رجل فقال: يا نبي الله إن لي عندك ثلاثة دراهم قال: أما إنا لا نكذب قائلا ولا نستحلفه على يمين فيم كان لك عندي؟ قال: تذكر يوم مر بك المسكين فأمرتني فأعطيته ثلاثة دراهم فقال: أعطه يا فضل فأمر به

ஃபள்ல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு புதன் கிழமை உடல் நெருப்பாய் கொதித்தது. அவ்வப்போது நபி {ஸல்} அவர்கள் மயக்கமுற்றுக் கொண்டிருந்தார்கள்.

நபி {ஸல்} அவர்கள் எங்களிடம் “பல கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து  ஏழு துருத்திகளில் கொண்டு வந்து என் மீது ஊற்றுங்கள், நான் மக்களிடம் சென்று ஓர் ஒப்பந்தம் வாங்கப்போகின்றேன்” என்று கூறினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஏழு துருத்திகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, நபி {ஸல்} அவர்களை ஒரு பாத்திரத்தில் அமர வைத்து தண்ணீர் ஊற்றப்பட்டது. அப்போது தான் நபி {ஸல்} அவர்களின் மேனியில் இருந்த சூடு தணிந்தது.

பின்னர், தலையில் ஒரு தடிப்பான துணியைக் கட்டிக் கொண்டு போர்வையை போர்த்தியவர்களாக மிம்பரில் வந்து அமர்ந்தார்கள். அது தான் நபி {ஸல்} அவர்கள் அமர்ந்த கடைசி சபையாகும்.

அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டு, “மக்களே! நான் எவரையாவது முதுகில் அடித்திருந்தால் இதோ எனது முதுகை நான் தந்து விடுகின்றேன் அவர் பழி தீர்த்து கொள்ளட்டும்! எவரையாவது அவரின் கண்ணியம் சீர்குலையும் படி ஏசியிருந்தால், திட்டியிருந்தால் இதோ உங்கள் முன் நான் நிற்கின்றேன் அவர் பழி தீர்த்துக் கொள்ளட்டும்! என்று கூறிவிட்டு மிம்பரிலிருந்து இறங்கி ளுஹரை தொழ வைத்தார்கள்.

பின்னர், மீண்டும் மிம்பரில் ஏறி பழி தீர்க்க விரும்புவோர் பழி தீர்த்துக் கொள்ளுங்கள்! நான் அல்லாஹ்வை தூய்மையான மனதோடு சந்திக்கவே விரும்புகின்றேன்! நான் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றேன் என்பதற்காக யாரும் என்னிடம் பழிதீர்த்துக் கொள்ளாமல் இருந்து விடாதீர்கள்! என்னிடம் பழிதீர்த்துக் கொள்கிறவர்களை நான் நேசிக்கின்றேன்! என்று மீண்டும் அறிவிப்புச் செய்தார்கள்.

அப்போது, ஒருவர் எழுந்து “எனக்கு நீங்கள் மூன்று திர்ஹம் தர வேண்டியுள்ளது” என்றார்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் “எப்போது உம்மிடம் நான் மூன்று திர்ஹம் வாங்கினேன்! சொல்லுங்கள்” என்றார்கள்.

அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே! ஒரு நாள் ஒரு ஏழை உங்களிடம் யாசகம் கேட்டார். அப்போது, அவருக்கு தருவதற்கு உங்களிடம் எதுவும் இல்லை, என்னிடம் மூன்று திர்ஹம்களைக் கொடுக்கச் சொன்னீர்கள்! நான் கொடுத்தேன்” என்றார்.

ஃபள்லே! அதை அவரிடம் கொடுத்து விடுங்கள்! என என்னிடம் நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                       ( நூல்: திர்மிதீ, ரஹீக் அல் மக்தூம், )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உயிருடன் வாழும் காலத்திலேயே சில நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் பழிதீர்த்துக் கொள்ள வேண்டி நின்ற போது முக மலர்ச்சியோடு நபி {ஸல்} அவர்கள் முன் வந்தார்கள்.

فقد روى عبد الرحمن بن أبي ليلى عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ قَالَ
 بَيْنَمَا هُوَ – يعني أسيد بن حضير - يُحَدِّثُ الْقَوْمَ - وَكَانَ فِيهِ مِزَاحٌ - بَيْنَا يُضْحِكُهُمْ ، فَطَعَنَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَاصِرَتِهِ بِعُودٍ . فَقَالَ : أَصْبِرْنِي . فَقَالَ : اصْطَبِرْ
 قَالَ : إِنَّ عَلَيْكَ قَمِيصًا وَلَيْسَ عَلَيَّ قَمِيصٌ . فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَمِيصِهِ ، فَاحْتَضَنَهُ وَجَعَلَ يُقَبِّلُ كَشْحَهُ ، قَالَ : إِنَّمَا أَرَدْتُ هَذَا يَا رَسُولَ اللَّهِ
رواه أبو داود (5224) ومن طريقه البيهقي في "السنن الكبرى" (7/102) ، ورواه الطبراني في "المعجم الكبير" (1/205) والحاكم في "المستدرك" (3/327) وابن عساكر في "تاريخ دمشق" (9/76) .
وهذا الحديث سنده صحيح ، صححه الحاكم وكذا الذهبي ، وصححه الألباني في صحيح أبي داود .

1. உஸைத் இப்னு ஹுளைர் (ரலி) அவர்களின் வேண்டுகோள்…

ஒரு நாள் நபி {ஸல்} அவர்கள் தோழர்களோடு பேசி சிரித்துக் கொண்டிருந்த ஓர் சபையில் நபி {ஸல்} அவர்கள் கேலிக்காக உஸைத் இப்னு ஹுளைர் (ரலி) அவர்களின் இடுப்பில் ஒரு குச்சியால் குத்தினார்கள்.

சிறிது நேரத்தில், உஸைத் (ரலி) அவர்கள் அதற்கு பழி தீர்க்க வேண்டும் என அண்ணலாரிடம் தெரி வித்த போது அண்ணலார் முன் வந்தார்கள். அப்போது, உஸைத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! மேலாடை இன்றி நான் இருந்த நேரத்தில் நீங்கள் குச்சியால் குத்தினீர்கள்” என்றார்.

நபிகளார் புனித மேனியில் இருந்து மேலாடையை விலக்கிய போது, நுபுவ்வத்தொளிரும் நபி முதுகின் நபித்துவ முத்திரையை முத்தமிட்ட உஸைத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இதற்காகத்தான் பழி தீர்க்குமாறு கோரினேன்” என்றார்கள்.

அது கேட்ட அண்ணல் நபி {ஸல்} அவர்கள் புன்னகையோடு அங்கிருந்து சென்றார்கள்.
وعندما وقف المسلمون في صفوف القتال ، أخذ الرسول صلى الله عليه وسلم في تعديل صفوفهم وفي يده قدح ، فطعن به سواد بن غزية في بطنه ، لأنه كان متنصلا من الصف ، وقال له : { استو يا سواد ، فقال سواد : يا رسول الله : أوجعتني فأقدني ، فكشف عن بطنه ؟ قال : استقد ، فاعتنقه سواد وقبل بطنه ، فقال : ما حملك على هذا يا سواد ؟ قال : يا رسول الله ، قد حضر ما ترى ، فأردت أن يكون آخر العهد بك أن يمس جلدك جلدي}. فدعا له رسول الله صلى الله عليه وسلم بخير.
இதே போன்று பத்ர் யுத்தத்திற்கான அணிவகுப்பை சரி செய்கிற போது ஸவாத் இப்னு ஃகஸிய்யா (ரலி) அவர்களும் நபி {ஸல்} அவர்களிடம் உஸைத் (ரலி) அவர்களைப் போன்று முறைய்யிட்டு நபித்துவ முத்திரையில் முத்தம் பதித்தார்கள்.

ஸவாத் (ரலி) அவர்களுக்காக நபி {ஸல்} அவர்கள் துஆ செய்தார்கள்.

                                        ( நூல்: புகாரி, முஃஜம் அத் தப்ரானீ )

ஆக, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இப்பூவுலகை விட்டும் பிரியும் போது அப்பழுக்கற்ற, தூய்மையான இதயத்தோடும், எவ்வித குறைகளும், மாசு மறுவின்றியும் பிரிந்தார்கள்.

நபிகளாரின் பிறப்பும், நபிகளாரின் வாழ்வும், நபிகளாரின் மரணமும் புகழுக்குரியதாய் அமைந்திருந்தது.

நாம் ஆரம்பத்தில் சொன்னது போன்று உலகில் சிலர் புகழோடு பிறக்கிறார்கள்! இன்னும் சிலர் புகழோடு வாழ்கிறார்கள்! இன்னும் சிலர் புகழோடு இறக்கின்றார்கள்!

புகழோடு பிறக்கிற பலர் புகழோடு வாழ்ந்ததாக வரலாறு இல்லை. பிறப்பும், வாழ்வும் புகழோடு அமைந்த பலருக்கு தங்களின் மரணம் புகழ் மிக்கதாய் அமைந்திருக்க வில்லை.

மரணம் புகழோடு அமைந்த பலருக்கு அவர்களின் பிறப்பும், வாழ்வும் புகழ் வாய்ந்ததாய் அமையவில்லை.

ஆனால், பூமான் நபி {ஸல்} அவர்கள் மட்டும் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் மலர இடம் தந்தார்கள்.

ஆம்! நபி {ஸல்} அவர்கள் மட்டுமே புகழோடு பிறந்தார்கள்! புகழோடு வாழ்ந்தார்கள்! புகழோடு பூவுலகை விட்டும் பிரிந்தார்கள்!

அல்லாஹ் நம் உயிர் இருக்கிற வரை பூமான் நபியை உயிரினும் மேலாக நேசிக்கிற நற்பேற்றையும், புகழுக்குரிய அவர்களின் வாழ்க்கையை சுவாசிக்கிற தௌஃபீக்கையும் நம் எல்லாவருக்கும் தந்தருள் பாளிப்பானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

வஸ்ஸலாம்!!!

8 comments:

  1. மாஷா அல்லாஹ் அற்புதமான கட்டுரை
    நபி {ஸல்} அவர்கள் அவர்களின் வாழ்க்கையை சுவாசிக்கிற தௌஃபீக்கையும் நம் எல்லாவருக்கும் தந்தருள் பாளிப்பானாக!

    ReplyDelete
  2. அற்புதமான தகவலை தொடராகவும்,சிறந்த கோர்வையுடனும் உண்மையில் படிப்போரை நெகிழ வைக்கிறது...
    அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ் தங்களின் முயறச்சிக்கு சிறந்த பிரதி உபகாரம் தருவானாக....

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் அற்புதமான கட்டுரை
    நபி {ஸல்} அவர்கள் அவர்களின் வாழ்க்கையை சுவாசிக்கிற தௌஃபீக்கையும் நம் எல்லாவருக்கும் தந்தருள் பாளிப்பானாக!

    Reply

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் அற்புதமான கட்டுரை
    நபி {ஸல்} அவர்கள் அவர்களின் வாழ்க்கையை சுவாசிக்கிற தௌஃபீக்கையும் நம் எல்லாவருக்கும் தந்தருள் பாளிப்பானாக!

    Reply

    ReplyDelete
  5. அல்ஹம்து லில்லாஹ் அருமையான கட்டுரை தொகுப்பு ஹளரத் அவர்களுக்கு அல்லாஹ் நீன்ட ஆயுளையும்Mobile Uploads - வெளிநாடுகளில் வேலை செய்யும் நண்பர்கள் கவனத்திற்கு :
    நாம் நம் தாய் நாடு , குடும்பம் , நண்பர்கள் ,சொந்தங்கள் மற்றும் சொந்த ஊரை விட்டு கடல் கடந்து இங்கு வந்து நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரு பிச்சைகார கும்பல் அரசாங்கம் என்ற பெயரில் நம் பணத்தை கொள்ளை அடிக்க ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது ..
    அந்த திட்டம் தான் 12.36 % சேவை வரி .
    அதாவது நம் இந்திய ரூபாய் மதிப்பில் ,
    ரூ . 100 க்கு - ரூ .12.36.
    ரூ. 1000 க்கு - ரூ . 126.36
    ரூ. 10000 க்கு - ரூ. 1236.
    ரூ. 100000 க்கு - ரூ. 12360.
    சேவை வரியாக செலுத்த வேண்டும் ..
    நம்ம அரசாங்கம் நமக்கு எந்த சேவை பண்ணி கிளிச்சானுங்கனு இந்த சேவை வரி கேக்குரானுங்கனு .தெரியல.
    வெளிநாடுகளில் சம்பாதிக்க வரும் அனைவருமே தன்னுடைய குடும்ப தேவைகளுக்கு தான் இங்கு வருகிறோம். அதுவும் கூலி வேலை செய்யும் சகோதரர்கள் எவ்வளவு பாதிக்க படுவார்கள்.
    நாம் இங்கிருந்து அனுப்பும் பணத்திற்கு நாம் ஏற்கனவே இங்கு சேவை வரியாக 14 முதல் 20 ரியால் , திர்ஹம் கொடுக்கிறோம் . இந்த சேவை வரி மூலம் நமது அரசாங்கத்திற்கு ஒரு வருடத்திற்கு 350 முதல் 400 கோடி வரை கிடைக்கிறது .. இருந்தாலும் நமது அரசாங்கம் இது போதவில்லை இவர்களிடம் இருந்து மேலும் பிடுங்கவேண்டும் இந்த சேவை வரி திட்டத்தை அமல் படுத்தி உள்ளது.
    இவர்களுக்கு சுவிஸ் வங்கியில் லட்ச கோடி கணக்கில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க வக்கில்லை .. வெளிநாடுகளில் இருந்து மாதம் 5000 , 10000 அனுப்பும் நபர்களிடம் இருந்து சேவை வரியாக பிச்சை கேட்கிறார்கள்.
    இதை அதிகமாக ஷேர் பண்ணுங்கள்.. இதை பற்றி இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் ...
    அனைவரும் ஒன்றிணைந்து இந்த சேவை வரியை நீக்குவோம்..
    இதற்கு லைக் போடுவதை விட அதிகமாக ஷேர் செய்யுங்கள் .
    நன்றி. — நிறைய சிந்தனையும் நிறைந்த பரகத்தையும் வழங்குவானாக ஆமீன்!...

    ReplyDelete