Wednesday 3 February 2016

இந்த ஐந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு மௌத்தாகனும்!!!



இந்த ஐந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு மௌத்தாகனும்!!!



நாம் தாயின் கருவறையில் இருக்கும் போதே நம்முடைய இறுதி முடிவும்மரணமும் முடிவு செய்யப்பட்டு விட்டது.

அது எங்கே நடக்கும்? எப்படி நடக்கும்? எப்போது நடக்கும்? இது பற்றி நம்மில் யாரும் அறிய மாட்டோம். ஆனால், அது கண்டிப்பாக நடந்தே தீரும்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மை மரணம் வந்து அடைந்தே தீரும்.

இது வரை உலகில் எவரும் மரணத்தில் இருந்து தப்பித்து விட்டதாக செய்தி கிடையாது.

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ

அல்லஹ் கூறுகின்றான்: “ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்”.                                                    ( அல்குர்ஆன்: 3: 185 )

أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ

அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை வந்து அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே!”

                                                     ( அல்குர்ஆன்: 4: 78 )

قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (8)

நபியே அம்மக்களிடம் நீர் கூறுவீராக! நீங்கள் மரணத்தை விட்டும் விரண்டோடிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால், நிச்சயம் அந்த மரணம் உங்களை ஒரு நாள் தழுவியே தீரும்”.                                   ( அல்குர்ஆன்: 62: 8 )

எனவே, நாம் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு நாள் மரணத்தை தழுவ இருக்கின்றோம். இப்போது நாம் அமர்ந்திருக்கிற இதே பள்ளிவாசலிலோ, அல்லது இது போன்றதொரு பள்ளிவாசலிலோ நம்முடைய உடலை கஃபன் செய்து இறுதி பிரார்த்தனைக்காக எடுத்து வர இருக்கின்றார்கள்.

அப்படியானால், நம்முடைய மரணம் நமக்கு எப்படி அமைந்திருக்க வேண்டும்?

வாருங்கள்! அல்குர்ஆனின் ஒளியில் அண்ணல் நபி {ஸல்} அவர்களின் பொன்மொழியின் அழகில் கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம்!!

எந்த மனிதராக இருந்தாலும் மரணம் என்பது இரண்டு விதமாக அமையும் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.

وَالنَّازِعَاتِ غَرْقًا (1) وَالنَّاشِطَاتِ نَشْطًا (2)

“ ( உயிர்களை ) ஆழ்ந்து பற்றி இழுக்கின்ற, மேலும், மெதுவாக வெளிக் கொணர்கின்ற வானவர்கள் மீது சத்தியமாக!”  ( அல்குர்ஆன்: 79: 1,2 )

மனிதனின் உயிர் உடலை விட்டு மலக்குல் மௌத் வானவரால் கைப்பற்றப் படும் போது ஒன்று இலகுவாகவோ அல்லது உச்சி முதல் உள்ளங்கால் வரை உயிரைப் பற்றி இழுத்தோ கைப்பற்றப்படும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

நாம் தான் தீர்மானிக்க வேண்டும் நம்முடைய ரூஹ் இலகுவாகக் கைப்பற்றப் பட வேண்டுமா? அல்லது பற்றி இழுக்கப்பட வேண்டுமா?

ஏனெனில், ரூஹ் இலகுவாகக் கைப்பற்றப் பட வேண்டுமானால், ரூஹ் பற்றியிழுக்கப் படக் கூடாது என்றால் அதற்கென ஓர் உன்னதமான வாழ்க்கையை வாழ வேண்டியது இருக்கும்.

அப்படியான வாழ்க்கையை மேற்கொண்டால் மூன்று வகையான சோபனங்கள் அந்த மனிதனுக்கு உயிர் பிரியும் நேரத்தில் அல்லாஹ்வால் வழங்கப்படும்.

முதல் சோபனம்

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ (30) نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ (31) نُزُلًا مِنْ غَفُورٍ رَحِيمٍ (32)

எவர்கள் அல்லாஹ் எங்கள் இறைவன் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நின்றார்களோ, ( அவர்களின் உடலை விட்டும் உயிர் பிரியும் போது ) திண்ணமாக, அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள்.

மேலும், அவர்களிடம் அவ்வானவர்கள் கூறுவார்கள் “ ( உலகில் நீங்கள் விட்டுச் செல்கின்றவைகள் குறித்து ) அஞ்சாதீர்கள்! ( நாளை மறுமையில் என்ன நடக்குமோ என்று ) கவலைப் படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்! நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாக இருப்போம்! இந்த உலக வாழ்விலும் மறுமையிலும்!

இரண்டாவது சோபனம்….

فَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِينَ (88) فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ (89) وَأَمَّا إِنْ كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ (90) فَسَلَامٌ لَكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ

இறக்கின்ற மனிதர் இறைவனுக்கு நெருக்கமானவர்களுள் ஒருவராய் இருந்தால் அவருக்கு சுகமும், உயர்தரமான உணவும், அருட்கொடைகள் நிறைந்த சுவனமும் இருக்கின்றன. மேலும், அவர் வலப்பக்கத்தார்களுள் ஒருவராய் இருந்தால்சாந்தி உண்டாகட்டும்! உம் மீது!” நீர் வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருக்கின்றீர்! என்று கூறி வரவேற்கப்படுவார்”.                         ( அல்குர்ஆன்: 56: 88 – 91 )

மூன்றாவது சோபனம்….

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ (27) ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً (28) فَادْخُلِي فِي عِبَادِي (29) وَادْخُلِي جَنَّتِي (30)

ஓ அமைதியடைந்த ஆன்மாவே! செல் உன் இறைவனின் பக்கம்! உன் நல்ல முடிவைக் கொண்டு மகிழ்ந்த நிலையில், மேலும், உன் இறைவனின் திருப்தியைப் பெற்ற நிலையில்! இணைந்து விடு, என்னுடைய நல்லடியார்களுடன்! மேலும், புகுந்து விடு, என்னுடைய சுவனத்தில்!”                     ( அல்குர்ஆன்: 89: 27-30 )

وعن البراء بن عازب رضي الله عنه ، قال
كنا في جنازة في بقيع الغرقد ، فأتانا النبي صلى الله عليه وسلم ، فقعد وقعدنا حوله ، كأن على رءوسنا الطير ، وهو يلحد له ، فقال : أعوذ بالله من عذاب القبر ، ثلاث مرات ، ثم قال : إن العبد المؤمن إذا كان في إقبال من الآخرة وانقطاع من الدنيا ، نزلت إليه الملائكة ، كأن على وجوههم الشمس ، معهم كفن من أكفان الجنة ، وحنوط من حنوط الجنة ، فجلسوا منه مد البصر ، ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه ، فيقول : يا أيتها النفس الطيبة ، اخرجي إلى مغفرة من الله ورضوان ، قال : فتخرج تسيل كما تسيل القطرة من في السقاء ، فيأخذها ، فإذا أخذها لم يدعوها في يده طرفة عين ، حتى يأخذوها فيجعلوها في ذلك الكفن وذلك الحنوط ، ويخرج منها كأطيب نفحة مسك وجدت على وجه الأرض ، قال : فيصعدون بها ، فلا يمرون بها ، يعني على ملأ من الملائكة ، إلا قالوا : ما هذه الروح الطيبة ؟ فيقولون : فلان بن فلان ، بأحسن أسمائه التي كانوا يسمونه بها في الدنيا ، حتى ينتهوا بها إلى السماء ، فيستفتحون له ، فيفتح له ، فيشيعه من كل سماء مقربوها ، إلى السماء التي تليها ، حتى ينتهى بها إلى السماء السابعة ، فيقول الله عز وجل : اكتبوا كتاب عبدي في [ ص: 574 ] عليين ، وأعيدوه إلى الأرض ، فإني منها خلقتهم ، وفيها أعيدهم ، ومنها أخرجهم تارة أخرى .

قال : فتعاد روحه في جسده ، فيأتيه ملكان ، فيجلسانه ، فيقولان له : من ربك ؟ فيقول ربي الله ، فيقولان له : ما دينك ؟ فيقول : ديني الإسلام ، فيقولان له : ما هذا الرجل الذي بعث فيكم ؟ فيقول : هو رسول الله ، فيقولان له : ما علمك ؟ فيقول : قرأت كتاب الله فآمنت به وصدقت ، فينادي مناد من السماء : أن صدق عبدي ، فأفرشوه من الجنة ، وافتحوا له بابا إلى الجنة ، قال : فيأتيه من روحها وطيبها ، ويفسح له في قبره مد بصره ، قال : ويأتيه رجل حسن الوجه ، حسن الثياب ، طيب الريح ، فيقول : أبشر بالذي يسرك هذا يومك الذي كنت توعد ، فيقول له : من أنت ؟ فوجهك الوجه الذي يجيء بالخير ، فيقول : أنا عملك الصالح ، فيقول : يا رب ، أقم الساعة حتى أرجع إلى أهلي ومالي .

பர்ராஃ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அன்சாரித் தோழர் ஒருவரின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக பகீஉல் ஃகர்கத் எனும் மையவாடிக்கு நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம்.

மண்ணறையின் அருகே சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள்.

எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் (அமைதியாக) அமர்ந்திருந்தோம்.

 (திடீரென) நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள்.

இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருகை தருவார்கள்.

அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து ஒரு நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் அமர்ந்திருப்பார்கள்.

அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, ”! நல்ல ஆன்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு!” என்று கூறுவார்.

தோல் பையிலிருந்து நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆன்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை கைப்பற்றியதும் சற்று நேரம் கூட தாமதிக்காமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள்.

உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள்.

அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார்.

அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள வானவர்கள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வார்கள்.

அப்போது எல்லாம் வல்ல அல்லாஹ், ஆன்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கிஎன் அடியானுடைய செயல்களை இல்லிய்யீனிலே’ (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு, (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவனுடைய உடலில் (கப்ரில் - மண்ணறையில்) அவருடைய ஆன்மாவைச் சேர்த்து விடுங்கள்!” என்று கூறுவான்.

(அந்த அடியானுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும்) அப்போது, அவரிடத்தில் இரு வானவர்கள் வந்து அவரை அமரவைத்து...

உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன்!” எனக் கூறுவார்.

அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளர் அல்லாஹ் கூறியதாக அழைத்துச் சொல்வார் ”என் அடியான் உண்மை சொல்லிவிட்டான்!

ஆகவே, அவருக்காக சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள்! என்று அறிவிப்புச் செய்வார்.  

அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும்.

மேலும், அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, அழகிய ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.

உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே! நீர் யார்? எனக் கேட்பார். நான் தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார்.

அப்போது அவர், ”இறைவா! என் குடும்பத்தார்களிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் விரைந்து செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக!” எனக் கூறுவார்.


உயர்வான வாழ்க்கையை மேற்கொள்ளாமல் தான் விரும்பியவாராக எல்லாம் வாழ்ந்த ஒருவனிடத்தில் அவனுடைய ரூஹைக் கைப்பற்ற வானவர்கள் வந்தால் உயிரை முழு உடலில் இருந்து பற்றி இழுத்து கைப்பற்றுவார்கள்.

இது மாதிரியான மனிதர்களின் உயிரைக் கைப்பற்றும் நிலை குறித்து அல்லாஹ் குர்ஆனில் விவரிக்கும் போது

كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ (26) وَقِيلَ مَنْ رَاقٍ (27) وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ (28) وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ (29) إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ (30)

உயிர் தொண்டை வரை எட்டும் போது, மேலும், இந்த மரணத்திலிருந்து மீட்டு மந்திரித்து ஊதுபவர் எவரேனும் உண்டா? என்று கேட்கப்படும் போது,

மேலும், இது உலகை விட்டுப் பிரியும் நேரம் என்று மனிதன் புரிந்து கொள்ளும் போது, கெண்டைக்கால், கெண்டைக்காலுடன் பின்னிப் பிணையும் போது, அந்த நாளில் தான் உன் அதிபதியின் பக்கம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்”.

                                                    ( அல்குர்ஆன்: 75: 26-30 )

فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ (83) وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ (84) وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ (85) فَلَوْلَا إِنْ كُنْتُمْ غَيْرَ مَدِينِينَ (86) تَرْجِعُونَهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ (87)

இறந்து போகின்ற ஒருவரின் உயிர் தொண்டைவரை வந்து அவர் இறந்து கொண்டிருப்பதை உங்கள் கண்களாலேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்?

அந்நேரத்தில் வெளியேறிக் கொண்டிருக்கும் அவருடைய உயிரை நீங்கள் ஏன் திரும்பக் கொண்டு வருவதில்லை? அப்போது, உங்களைக் காட்டிலும் நாம் அவருக்கு மிக அண்மையில் இருக்கின்றோம்.

நீங்கள் யாராலும் கட்டுப்படுத்தப்படாதவர்களாய் இருந்தால், உங்களுடைய கருத்தில் நீங்கள் வாய்மையானவர்களாய் இருந்தால் போகிற உயிரை கொண்டு வாருங்கள் பார்ப்போம்!?”                                 ( அல்குர்ஆன்: 56: 83-87 )

பர்ராஃ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிற ஹதீஸின் தொடரில்….

قال : وإن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة ، نزل إليه من السماء ملائكة سود الوجوه ، معهم المسوح ، فيجلسون منه مد البصر ، ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه ، فيقول : أيتها النفس الخبيثة ، اخرجي إلى سخط من الله وغضب ، قال : فتتفرق في جسده ، فينتزعها كما ينتزع السفود من الصوف المبلول ، فيأخذها ، فإذا أخذها لم يدعوها في يده طرفة عين ، حتى يجعلوها في تلك المسوح ، ويخرج منها كأنتن ريح خبيثة وجدت على وجه الأرض ، فيصعدون بها ، فلا يمرون بها على ملأ من الملائكة إلا قالوا : [ ص: 575 ] ما هذا الروح الخبيث ؟ فيقولون : فلان بن فلان بأقبح أسمائه التي كانوا يسمونه بها في الدنيا ، حتى ينتهى بها إلى السماء الدنيا ، فيستفتح له ، فلا يفتح له ، ثم قرأ رسول الله صلى الله عليه وسلم
لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط [ الأعراف : 40 ] فيقول الله عز وجل : اكتبوا كتابه في سجين ، في الأرض السفلى ، فتطرح روحه طرحا ، ثم قرأ : ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق [ الحج : 31 ] .

فتعاد روحه في جسده ، ويأتيه ملكان فيجلسانه ، فيقولان له : من ربك ؟ فيقول : هاه هاه ، لا أدري ، فيقولان له : ما هذا الرجل الذي بعث فيكم ، فيقول : هاه هاه ، لا أدري ، فينادي مناد من السماء : أن كذب ، فأفرشوه من النار ، وافتحوا له بابا إلى النار ، فيأتيه من حرها وسمومها ، ويضيق عليه قبره ، حتى تختلف أضلاعه ، ويأتيه رجل قبيح الوجه ، قبيح الثياب منتن الريح ، فيقول : أبشر بالذي يسوءك ، هذا
[ ص: 576 ] يومك الذي كنت توعد ، فيقول : من أنت ، فوجهك الوجه يجيء بالشر ، فيقول : أنا عملك الخبيث ، فيقول رب لا تقم الساعة .

رواه الإمام أحمد وأبو داود ، وروى
النسائي ، وابن ماجه أوله ، ورواه الحاكم وأبو عوانة الإسفراييني في ( ( صحيحيهما ) ) وابن حبان .

இதே வேளையில், நிராகரிப்பாளன் ஒருவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும்.
அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் வந்து அவனருகில் அமர்வார்.
 
அவர் அவனை நோக்கி, கெட்ட ஆன்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். 

அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும். முள் வேலியிலிருந்து நனைத்த கம்பளி துணியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். 

(இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) சற்று நேரம் கூட தாமதிக்காமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர்.
வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இந்த கெட்ட உயிர் யாருடையது? என அவ்வானவர்கள் கேட்பார்கள்.
அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும்.
இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்; ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ ()
“உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றைப் புறக்கணித்து, ஆணவம் கொண்டார்களோ அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும், குற்றவாளிகளுக்கு நம்மிடம் இத்தகைய கூலி தான் கிடைக்கும். (அல்குர்ஆன் 7:40)

வல்ல நாயன் அல்லாஹ், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, ”அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள ஸிஜ்ஜீன்” (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும்.

பிறகு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ ()

“இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31)

இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும்

அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாதுஎன்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாதுஎன்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாதுஎன்பான். 

அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளர் அல்லாஹ் கூறியதாக அழைத்துச் சொல்வார் ”என் அடியான் பொய் சொல்லிவிட்டான்!

ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள்! இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள்!” என்று சொல்லப்படும்.

அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.

உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே! நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், இறைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான்.

( நூல்: ஷரஹ் அகீதா அத் தஹாவிய்யா, பாடம்: அதாபுல் கப்ரி வ நயீமிஹி )

இப்போது நாம் முடிவு செய்வோம்! நம்முடைய உயிர் எப்படி நம்மிடம் இருந்து பிரிய வேண்டும்? நம்முடைய மரணம் எப்படி அமைய வேண்டும்? என்று..

நம்முடைய உயிர் இலகுவாகப் பிரிய வேண்டுமானால் இந்த உலகில் நாம் முக்கியமாக ஐந்து கடமைகளை முழுமையாக நிறைவேற்றி விட வேண்டும்.

இந்த ஐந்து கடமைகளை எப்போது முழுமையாக நிறைவேற்றுகிறோமோ அப்போது தான் நம்முடைய மௌத்தின் நேரத்தில் அல்லாஹ்வின் சோபனங்களைப் பெற முடியும்.

என்ன அந்த ஐந்து கடமைகள்?

1. மௌத்துக்கு முன்னால் எல்லா பாவங்களில் இருந்தும் நாம் அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற்று விடவேண்டும்....

ஏனெனில், மௌத்தின் போது அல்லாஹ்விடம் கேட்கப்படும் பாவமன்னிப்பிற்கு மதிப்பு கிடையாது. பாவங்களுக்கு மன்னிப்பும் கிடையாது.

وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا ()

அல்லாஹ் கூறுகின்றான்: “எவர்கள் பாவங்கள் புரிந்தவாறு வாழ்ந்து விட்டு மரணம் நெருங்கும் போது “நான் இப்போது மன்னிப்புக் கோருகின்றேன்” என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது. மேலும், இறுதி மூச்சு வரை நிராகரிப்பிலேயே மூழ்கியிருப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையோருக்கு துன்புறுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்”.                                        ( அல்குர்ஆன்: 4: 18 )

2. மௌத்துக்கு முன்னால் அல்லாஹ்வின் பாதையில் தான தர்மங்களை செய்து விட வேண்டும்…

ஏனெனில், மௌத்தின் போது தான் தான தர்மங்கள் செய்திருக்க வேண்டுமே என்கிற ஏக்கமும், ஆசையும் பிறக்கும். என்ன செய்வது அப்போது அந்த ஆசைக்கு அல்லாஹ்விடம் மதிப்பேதும் இருக்காது.

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ () وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا

அல்லாஹ் கூறுகின்றான்: “உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக, நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நல் வழியில் செலவு செய்து விடுங்கள்! ஏனெனில், அந்த நேரத்தில் நல்வழியில் செலவு செய்யாதவர் “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிது கால அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!” என்று கூறுவார்.

ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்து விட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும், கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக வழங்குவதில்லை”.                               ( அல்குர்ஆன்: 63: 10 )

3. மௌத்துக்கு முன்னால் ஸாலிஹான எல்லா அமல்களையும் செய்து விட வேண்டும்…

ஏனெனில், மௌத்தின் போது தான் அமல்கள், இபாதத்கள் செய்திருக்க வேண்டுமே என்கிற ஏக்கமும், ஆசையும் பிறக்கும். என்ன செய்வது அப்போது அந்த ஆசைக்கு அல்லாஹ்விடம் மதிப்பேதும் இருக்காது.

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ (99) لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا

அல்லாஹ் கூறுகின்றான்: “இறுதியில் அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்து விடுமானால், “என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக! அங்கு சென்று நான் நற்செயல் புரிந்து வருகின்றேன்!” என்று கூறுவான். அப்போது, இவ்வாறு ஒரு போதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கும் வெற்று வார்த்தைகள் தாம்!” என்று கூறப்படும்”. (அல்குர்ஆன்: 23: 99)

4. மௌத்துக்குமுன்னால் உலகில் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லா பொறுப்புக்களையும் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்…

ஏனெனில், மௌத்தாகும் நேரத்தில் தான் பொறுப்புணர்வு தோன்றும் ஆனால், பொறுப்பை நிறைவேற்றுவதற்கான அவகாசம் நமக்கு இருக்காது.

إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا ()

அல்லாஹ் கூறுகின்றான்: “நாம் பொறுப்புகள் எனும் அமானிதத்தை வானங்கள் பூமி, மலைகள் ஆகியவற்றின் முன்பாக வைத்த போது அவை அதனை ஏற்கத் தயாராகவில்லை. மேலும், அதன் சுமையைக் கண்டு அஞ்சின. ஆனால், மனிதன் அதனை ஏற்றுக் கொண்டான். திண்ணமாக, அவன் பெரிதும் அநீதி இழைப்பவனாகவும் அறியாதவனாகவும் இருக்கின்றான்”.       ( அல்குர்ஆன்: 33: 72 )

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا

அல்லாஹ் கூறுகின்றான்: “ (முஸ்லிம்களே!) அல்லாஹ் உங்களுக்கு கட்டளை பிறப்பிக்கின்றான். அமானத் – பொறுப்புக்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் முழுமையாக நிறைவேற்றி விடுங்கள்”.                        ( அல்குர்ஆன்: 4: 58 )

நபி {ஸல்} அவர்கள் பொறுப்புகள் குறித்து விவரிக்கும் போது இவ்வாறு குறிப்பிடுவார்கள்.

حدثنا بشر بن محمد المروزي قال أخبرنا عبد الله قال أخبرنا يونس عن الزهري قال أخبرنا سالم بن عبد الله عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وزاد الليث قال يونس كتب رزيق بن حكيم إلى ابن شهاب وأنا معه يومئذ بوادي القرى هل ترى أن أجمع ورزيق عامل على أرض يعملها وفيها جماعة من السودان وغيرهم ورزيق يومئذ على أيلة فكتب ابن شهاب وأنا أسمع يأمره أن يجمع يخبره أن سالما حدثه أن عبد الله بن عمر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسئول عن رعيته الإمام راع ومسئول عن رعيته والرجل راع في أهله وهو مسئول عن رعيته والمرأة راعية في بيت زوجها ومسئولة عن رعيتها والخادم راع في مال سيده ومسئول عن رعيته قال وحسبت أن قد قال والرجل راع في مال أبيه ومسئول عن رعيته وكلكم راع ومسئول عن رعيته

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின், பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கேட்கப்படுவார்.

ஆட்சியாளரும் பொறுப்பாளரே; அவரிடம் அவரது குடிமக்களைப் பற்றி வினவப்படும். கணவன் தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். பெண், தன் கணவனின் வீடு, அவனுடைய குழந்தைகளுக்குப் பொறுப்பாளியாவாள். பணியாள் தன் முதலாளியின் பொருளுக்குப் பொறுப்பாளியாவான்.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்களில் ஒவ்வொருவரிடமும் அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவர்களைப் பற்றிக் கேட்கப்படும்”.

                                                  ( நூல்: புகாரி, முஸ்லிம் )

5. மௌத்துக்கு முன்னால் நம்மால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகுந்த இழப்பீட்டை கொடுத்து விட வேண்டும். மௌத்துக்கு முன்னால் நமக்கு உதவி, உபகாரம் செய்தவர்களுக்கு உபகாரம் செய்து விட வேண்டும்…

قال - صلى الله عليه وسلم -:

مَن أعطى شيئًا فوجَد، فليَجزِ به، ومَن لم يجد، فليُثنِ به، فإنَّ أَثنى به، فقد شكَره، وإنْ كتَمه، فقد كفَره، ومن تَحلَّى بما لَم يُعطِ، فإنَّه كلابس ثَوبَي زُورٍ

எவருக்கு ஒரு உபகாரம் செய்யப்பட்டதோ, அவரிடம் வசதி இருந்தால் உபகாரம் செய்தவருக்கு அவர் பகரம் செய்யட்டும். இல்லையாயின் இன்னார் எனக்கு உபகாரம் செய்தார் என மக்களிடம் கூறி அவருக்காக துஆ செய்யட்டும். எவர் அவ்விதம் நடந்து கொள்கின்றாரோ அவர் நன்றி செலுத்திவிட்டார். எவர் மக்களிடம் மறைத்துப் பேசுவாரோ அவர் நன்றி கொன்றவாகி விட்டார்என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
                                                                  ( நூல்:திர்மிதீ )

حدثنا آدم بن أبي إياس حدثنا ابن أبي ذئب حدثنا سعيد المقبري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم تكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவராவது உலகில் வாழும் காலத்தில் தன் சக முஸ்லிம் ஒருவருக்கு அநீதி இழைத்திருப்பாரேயானால், அவர் எந்த தீனாரும், எந்த திர்ஹமும் எந்த வித பயன்பாட்டையும் தந்திடாத மறுமை நாளைக்கு முன் வாழும் காலத்திலேயே, இந்த உலகத்திலேயே அவர் அதற்கான பரிகாரத்தைத் தேடிக் கொள்ளட்டும்!

அப்படி எவராவது பரிகாரம் தேடிக்கொள்ளாமல், நாளை அல்லாஹ்வின் சந்நிதானத்திற்கு கொண்டு வரப்பட்டால் அநீதம் இழைக்கப்பட்டவருக்கு பரிகாரமாக அநீதி இழைத்தவரிடத்திலிருந்து அவர் இழைத்த அநீதத்தின் அளவுக்கு நற்செயல்களை எடுத்து அல்லாஹ் கொடுத்து விடுவான்.

அப்படி, நற்செயல்கள் ஏதும் அவரிடத்தில் இல்லையெனில்,  அநீதம் இழைக்கப்பட்டவரிடமிருந்து பாவத்தை எடுத்து அநீதி இழைத்தவருக்கு கொடுத்து விடுவான். இதன் காரணமாக, அவர் நரகத்திற்கு தூக்கி வீசப்படுவார்.”

                                                           ( நூல்: புகாரி )
குறிப்பு:

( இந்த ஐந்தாவது கடமையை நிறைவேற்றுகிற விஷயத்தில் பெருமானார் {ஸல்} அவர்களின் சொந்த வாழ்வில் அவர்கள் கடைபிடித்த நெறிமுறைகளை நாம் புகழோடு இப்பூவுலகை விட்டும் பிரிந்த பூமான் நபி {ஸல்} அவர்கள் எனும் தலைப்பில் நிறைய குறிப்பிட்டு இருந்தோம். அதிலிருந்து ஏதேனும் சம்பவங்களை இதன் கீழ் இணைத்துக் கொள்ளவும்.

மேலும், மூன்றாவது கடமையை நிறைவேற்றுகிற விஷயத்தில் ஸாலிஹீன்களாக வாழ ஆசைப்படுவோம் எனும் தலைப்பில் கூறப்பட்ட சம்பவங்களை இணைத்துக் கொள்ளவும். முதல் இரண்டு கடமைகளை நிறைவேற்றுகிற விஷயத்தில் உள்ள சம்பவங்களை கீழே தருகின்றேன் )

1. மௌத்துக்கு முன்னால் எல்லா பாவங்களில் இருந்தும் நாம் அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற்று விடவேண்டும்....

ஸஅலபா இப்னு அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களின் நெகிழ்ச்சியான வரலாறு…

روى عن جابر بن عبد الله رضي الله عنهما قال
إن فتى من الأنصار يقال له ثعلبة بن عبد الرحمن أسلم ، فكان يخدم النبي صلى الله عليه وسلم ، بعثه في حاجة ، فمر بباب رجل من الأنصار ، فرأى امرأة الأنصاري تغتسل ، فكرر النظر إليها ، وخاف أن ينزل الوحي على رسول الله صلى الله عليه وسلم ، فخرج هاربا على وجهه ، فأتى جبالا بين مكة والمدينة فولجها ، ففقده رسول الله صلى الله عليه وسلم أربعين يوما ، وهي الأيام التي قالوا ودعه ربه وقلى ، ثم إن جبريل عليه السلام نزل على رسول الله صلى الله عليه وسلم ، فقال : يا محمد ! إن ربك يقرأ عليك السلام ويقول : إن الهارب من أمتك بين هذه الجبال يتعوذ بي من ناري . فقال رسول الله صلى الله عليه وسلم : يا عمر ويا سلمان ! انطلقا فأتياني بثعلبة بن عبد الرحمن ، فخرجا في أنقاب المدينة ، فلقيهما راع من رعاء المدينة يقال له : ذفافة . فقال له عمر : يا ذفافة ! هل لك علم بشاب بين هذه الجبال ؟ فقال له ذفافة لعلك تريد الهارب من جهنم ؟ فقال له عمر : وما علمك أنه هارب من جهنم ؟ قال : لأنه إذا كان جوف الليل خرج علينا من هذه الجبال واضعا يده على رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ولم تجردني في فصل القضاء . قال عمر : إياه نريد . قال : فانطلق بهم رفاقة ، فلما كان في جوف الليل خرج عليهم من بين تلك الجبال واضعا يده على أم رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ، ولم تجردني لفصل القضاء . قال : فعدا عليه عمر فاحتضنه فقال : الأمان الخلاص من النار . فقال له عمر : أنا عمر بن الخطاب . فقال : يا عمر ! هل علم رسول الله صلى الله عليه وسلم بذنبي ؟ قال : لا علم لي إلا أنه ذكرك بالأمس فبكى رسول الله صلى الله عليه وسلم . يا عمر ! لا تدخلني عليه إلا وهو يصلي ، وبلال يقول : قد قامت الصلاة . قال : أفعل . فأقبلا به إلى المدينة ، فوافقوا رسول الله صلى الله عليه وسلم وهو في صلاة الغداة ، فبدر عمر وسلمان الصف ، فما سمع قراءة رسول الله صلى الله عليه وسلم حتى خر مغشيا عليه ، فلما سلم رسول الله صلى الله عليه وسلم قال : يا عمر ويا سلمان ! ما فعل ثعلبة بن عبد الرحمن ؟ قالا : هو ذا يا رسول الله . فقام رسول الله صلى الله عليه وسلم قائما فقال : ثعلبة ! قال : لبيك يا رسول الله ! فنظر إليه فقال : ما غيَّبك عني ؟ قال : ذنبي يا رسول الله . قال : أفلا أدلك على آية تكفر الذنوب والخطايا ؟ قال : بلى يا رسول الله ! قال : قل : اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار . قال : ذنبي أعظم يا رسول الله ! فقال رسول الله صلى الله عليه وسلم : بل كلام الله أعظم . ثم أمره رسول الله صلى الله عليه وسلم بالانصراف إلى منزله . فمرض ثمانية أيام ، فجاء سلمان إلى رسول الله صلى الله عليه وسلم فقال : يا رسول الله ! هل لك في ثعلبة نأته لما به ؟ فقال رسول الله صلى الله عليه وسلم : قوموا بنا إليه . فلما دخل عليه أخذ رسول الله صلى الله عليه وسلم رأسه فوضعه في حجره ، فأزال رأسه عن حجر رسول الله صلى الله عليه وسلم . فقال له رسول الله صلى الله عليه وسلم : لم أزلت رأسك عن حجري ؟ قال : إنه من الذنوب ملآن . قال : ما تجد ؟ قال : أجد مثل دبيب النمل بين جلدي وعظمي . قال : فما تشتهي ؟ قال : مغفرة ربي . قال : فنزل جبريل عليه السلام على رسول الله صلى الله عليه وسلم فقال : إن ربك يقرأ عليك السلام ويقول : لو أن عبدي هذا لقيني بقراب الأرض خطيئة لقيته بقرابها مغفرة . فقال له رسول الله صلى الله عليه وسلم : أفلا أعلمه ذلك ؟ قال : بلى . فأعلَمَه رسول الله صلى الله عليه وسلم بذلك . فصاح صيحة فمات . فأمر رسول الله صلى الله عليه وسلم بغسله وكفنه وصلى عليه ، فجعل رسول الله صلى الله عليه وسلم يمشي على أطراف أنامله ، فقالوا : يا رسول الله ! رأيناك تمشي على أطراف أناملك ؟ قال : والذي بعثني بالحق نبيا ما قَدِرت أن أضع رجلي على الأرض من كثرة أجنحة مَن نزل لتشييعه من الملائكة .
رواه أبو نعيم في "حلية الأولياء" (9/329-331) وفي "معرفة الصحابة" (1/498))

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி {ஸல்} அவர்களுக்கு பணிவிடைகள் செய்த நபித்தோழர்களில், அன்ஸாரிகளைச் சார்ந்த ஸஅலபா இப்னு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் ஒருவர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அன்றொரு நாள் ஸஅலபா (ரலி) அவர்களை ஏதோ பணி நிமித்தமாக எங்கோ அனுப்பினார்கள்.

சென்ற ஸஅலபா (ரலி) அவர்கள் மீண்டும் அண்ணலாரின் சமூகத்திற்கு வரவே இல்லை. அண்ணலாரும் அவர் வருவார். நியமித்த பணியை நிறைவேற்றி விட்டு இதோ இன்று வந்து விடுவார், நாளை வந்து விடுவார் என எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்.

நாட்கள் மட்டும் அடுத்தடுத்து வந்ததே தவிர ஸஅலபா (ரலி) அவர்கள் இன்னும் வரவில்லை.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, ஒரு வாரம் இரண்டு வாரம் அல்ல நாற்பது நாட்கள் நகர்ந்து விட்டது இன்னும் ஸஅலபா வரவில்லை.

எங்கு போனார்? என்ன ஆனார்? அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில், ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ”அண்ணலாரின் சமூகத்திற்கு வருகை தந்து அல்லாஹ் ஸலாம் சொல்லி அனுப்பியதாகவும், உங்களிடம் உங்களது தோழர் ஒருவர் மக்கா, மதீனாவிற்கு இடையே இருக்கிற மலை முகடு ஒன்றில் இருந்து அல்லாஹ்விடம் கடந்த நாற்பது நாட்களாக பாவமன்னிப்பையும், நரக ஈடேற்றத்தையும் கேட்டு மன்றாடிக் கொண்டிருக்கிறார் என்கிற செய்தியை சொல்லி விட்டு வருமாறு என்னை அனுப்பி வைத்திருக்கின்றான்” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்கள்.

உடனே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இந்த மன்றாட்டத்திற்கு உரியவர் காணாமல் போன ஸஅலபாவாகத் தான் இருக்கும் என்று தீர்மானித்து விட்டு, உமர் மற்றும் ஸல்மான் (ரலி – அன்ஹுமா) ஆகியோரை அழைத்து ”என்னிடம் ஸஅலபாவைக் கொண்டு வாருங்கள்!” என்று பணித்தார்கள்.

இருவரும் ஸஅலபாவைத் தேடி மக்கா, மதீனாவிற்கு இடையே இருக்கிற மலைப்பகுதியின் அடிவாரத்திற்கு வந்து, அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த துஃபாஃபா என்கிற இடையனிடம் ஸஅலபா குறித்தும், அவரின் மன்றாட்டம் குறித்தும் கூறி விசாரித்தார்கள்.

அதற்கு, அந்த இடையர் ஆம்! சமீப நாட்களாக இங்கே வசிக்கிற நாங்கள் “என் ஆன்மாவைக் கைப்பற்றும் ஆற்றல் கொண்டவனே! என் உடலை மீட்டும் ஆற்றல் பெற்றவனே! நாளை மறுமையில் என்னைத் தண்டித்து விடாதே! எனக்கு நரகத்தை விட்டும் நீ பாதுகாப்புத் தர வேண்டும்!” என்று ஒருவர் மன்றாடுவதை கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

நீங்கள் சொன்ன இன்னின்ன அடையாளம் கொண்ட அந்த நபரை நான் பார்த்திருக்கின்றேன். இதோ இந்த பகுதியில் தான் அவர் இருப்பார். இன்னும் சற்று நேரத்தில் அவரின் மன்றாட்டம் கேட்கும் என்று கூறினார்.

சற்று நேரம் தாமதித்த பின்னர், மலை முகட்டில் இருந்து ஸஅலபா (ரலி) அவர்களின் மன்றாட்டம் ஒலித்தது. ஒலி வந்த திசையை நோக்கி இருவரும் நடந்து ஸஅலபா (ரலி) அவர்களை அடைந்து கொண்டனர்.

இருவரையும் பார்த்த ஸஅலபா (ரலி) அவர்கள் மீண்டும் அழுதார்கள். அப்போது, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ் உம்மை மன்னிப்பான். உம்மை நரகில் இருந்து பாதுகாப்பான்!” நபி {ஸல்} அவர்கள் உம்முடைய இந்த மன்றாட்ட நிலை குறித்து கேள்வி பட்டு நேற்று அழுதார்கள். மேலும், உம்மை அழைத்து வருமாறு எங்களிடம் கூறி இங்கே அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.” வாருங்கள்! ஸஅலபா செல்வோம்” என்றார்கள்.

இது கேட்ட ஸஅலபா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நான் செய்த பாவம் குறித்து அறிந்து கொண்டார்களா?” என்று வினவினார். இல்லை என்று உமர் (ரலி) பதில் பகர்ந்ததும் அப்படியானால், நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் என்னை அழைத்துச் செல்லுங்கள்! பாவியான நான் அண்ணல் நபி {ஸல்} அவர்களை முகம் பார்த்து பேச வெட்கப்படுகின்றேன்!” என்று கூறினார்கள்.

அவரை அழைத்துக் கொண்டு இருவரும் மஸ்ஜிதுன் நபவீக்கு வந்து இஷாத் தொழுகையின் இகாமத்தை பிலால் (ரலி) அவர்கள் கூறும் வரை காத்திருந்து பின்னர் தொழுகை ஆரம்பித்ததும் தொழுகையில் இணைந்து கொண்டனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழுகையில் அத் தகாஸுர் சூராவை ஓதினார்கள். முதல் இரு வசனங்களை கேட்ட மாத்திரத்திலேயே ஸஅலபா (ரலி) மயக்கமாகி கீழே விழுந்து விட்டார்கள்.

தொழுகை முடிந்ததும் உமர் மற்றும் ஸல்மான் (ரலி) இருவரையும் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் எங்கே ஸஅலபா? என்று கேட்டார்கள்.

இதோ! அல்லாஹ்வின் தூதரே! மயக்கமுற்று கீழே விழுந்து கிடக்கின்றார் என்றார்கள் இருவரும்.

முகத்தில் தண்ணீர் தெளித்து, அருகே அமர வைத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அன்பொழுக “ஸஅலபா! உமக்கு என்ன நேர்ந்து விட்டது? ஏன் இவ்வளவு நாளாக எங்கு சென்றீர்?” என்று கேட்டார்கள்.

”லப்பைக்க யாரஸூலுல்லாஹ்! நான் செய்து விட்ட ஒரு பாவம் தான் அல்லாஹ்வின் தூதரே! காரணம்” என்றார் நா தழுதழுத்தவராக!

”யாஅல்லாஹ்! இவ்வுலகிலகிலும் எனக்கு நீ சிறந்ததைக் கொடு! மறுமையிலும் சிறந்ததைக் கொடு! மேலும், நரக வேதனையில் இருந்து என்னைக் காத்துவிடு!” என்று இறைஞ்சுங்கள்” உமது பாவத்திற்கு பரிகாரமாக அமைந்து விடும் என்றார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள்.

இல்லை, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய பாவம் மிகப் பெரியது! என்றார் ஸஅலபா (ரலி). தோழரே! அல்லாஹ்வின் வார்த்தை அதை விட மிகப் பெரியது! இதைக் கூறுங்கள் அல்லாஹ் உம் குற்றங்களை மன்னிப்பான்” என்றார்கள்.

மீண்டும் அவர் முன்பு போல் கூறவே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அவரின் வீட்டில் கொண்டு விட்டு வருமாறு தோழர்களிடம் கூறினார்கள்.

வீட்டிற்குச் சென்ற ஸஅலபா இந்தக் கவலையால் நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையானார். எட்டு நாட்கள் ஆகியும் அவர் பள்ளிக்கு வரவில்லை.

அப்போது, ஸல்மான் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நாம் சென்று ஸஅலபாவை நலம் விசாரித்து விட்டு வருவோமே! அவர் எட்டு தினங்களாக பள்ளிக்கும் வரவில்லை. அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை” என்றார்கள்.

நபி {ஸல்} அவர்கள் அங்கிருந்த தோழர்களை அழைத்துக் கொண்டு ஸஅலபா (ரலி) வீட்டிற்கு சென்றார்கள்.

படுத்த படுக்கையாய் கிடக்கிற ஸஅலபாவின் தலையை தங்களது புனித மடியில் கிடத்தி “ஸஅலபாவே! உமக்கு என்ன? நீர் அப்படி என்ன தான் பாவம் செய்து விட்டீர்? என்று கேட்டார்கள்.

அப்போது, ஸஅலபா (ரலி) அவர்கள் “எனக்கு இன்ன வேலையைச் செய்து வருமாறு என்னை நீங்கள் அனுப்பிய போது, அதைச் செய்வதற்காக நான் விரைந்து போய்க்கொண்டிருந்தேன்! மதீனாவின் இன்ன தெருவைக் கடந்து செல்கிற போது வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தார்.

நான் என்னையும் அறியாமல் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தேன். பின்பு அது பாவம் எனத் தெரியவே அங்கிருந்து விலகி விட்டேன். என்றாலும், அல்லாஹ் என்னுடைய இந்த பாவம் குறித்து, ஏதேனும் இறைவசனத்தை இறக்கி தண்டித்து விடுவானோ என நான் பயந்து மலை முகட்டுக்குச் சென்று விட்டேன்” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதரே! இந்த மாபெரும் பாவத்தை அல்லாஹ் மன்னிப்பானா? என்னையே நான் வெறுக்கின்றேன்! என் உடல் முழுவதும் புழு பூச்சிகள் ஊர்ந்து செல்வது போல் அருவருப்பாக உணர்கின்றேன் என்றார் ஸஅலபா.

அப்போது, அங்கே வருகை தந்தார்கள் வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள். தொடர்ந்து “அல்லாஹ் ஸலாம் சொல்லி அனுப்பியதாகவும், உங்களிடம் என்னுடைய அடியான் பூமி முழுவதும் பாவத்தோடு என்னை நெருங்கி வந்தால், அதே பூமி முழுவதும் மன்னிப்போடு நான் அவனை நெருங்கி வருகின்றேன்” இதோ! இவரின் பாவத்தை அல்லாஹ் மன்னித்து விட்டான்” என்கிற செய்தியை சொல்லி விட்டு வருமாறு என்னை அனுப்பி வைத்திருக்கின்றான்” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்கள்.

ஸஅலபாவே! உமக்கு ஒரு விஷயத்தை நான் சொலட்டுமா? என்று கூறிவிட்டு அல்லாஹ் உம்மை மன்னித்து விட்டான் என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

இது கேட்ட ஸஅலபா (ரலி) பெரும் சப்தம் ஒன்றை எழுப்பியவாறு மரணித்து விட்டார்கள். இன்னாலில்லாஹ்…

பின்னர் நபி {ஸல்} அவர்கள் அவருக்கு குளிப்பாட்டுமாறும், கஃபன் செய்யுமாறும் ஆணையிட்டு விட்டு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.

அதன் பின்னர், அவரின் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்ற நபி {ஸல்} அவர்கள் தங்களின் பெருவிரலால் ஊன்றி, ஊன்றி மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றார்கள்.

மண்ணறையில் அடக்கம் செய்து முடித்ததும், நபித்தோழர்கள் இது குறித்து வினவிய போது, அவரின் ஜனாஸாவை மலக்குமார்களில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வந்தனர். எங்கு நோக்கினும் வானவர்கள் இறக்கைகளையே நான் கண்டேன். வானவர்களின் இறக்கைகளை மிதித்து விடாதிருக்கவே நான் அவ்வாறு பெரு விரலால் நடந்து வந்தேன்” என்று பதில் கூறினார்கள்.

{ நூல்: அல் இஸாபா ஃபீ மஅரிஃபதிஸ் ஸஹாபா, ஹுல்யத்துல் அவ்லியா )

சின்னஞ்சிறிய தவறைக் கூட பெரும் பாவமாக நினைத்து நபித்தோழர் ஒருவர் இந்தளவுக்கு அல்லாஹ்விடம் மன்றாடினார் என்றால் அனுதினமும் ஆயிரமாயிரம் பாவங்கள் செய்யும் நாம் எந்தளவு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

2. மௌத்துக்கு முன்னால் அல்லாஹ்வின் பாதையில் தான தர்மங்களை செய்து விட வேண்டும்…

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا ، فَتَقَدَّمَ لِيُصَلِّيَ ، فَالْتَفَتَ إِلَيْنَا ، فَقَالَ : " هَلْ عَلَى صَاحِبِكُمْ دَيْنٌ ؟ " قَالُوا : نَعَمْ ، قَالَ : " هَلْ تَرَكَ لَهُ مِنْ وَفَاءٍ ؟ " قَالُوا : لا ، قَالَ : " صَلُّوا عَلَى صَاحِبِكُمْ " ، قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : عَلَيَّ دَيْنُهُ يَا رَسُولَ اللَّهِ ، فَتَقَدَّمَ فَصَلَّى عَلَيْهِ ، وَقَالَ : " جَزَاكَ اللَّهُ يَا عَلِيُّ خَيْرًا كَمَا فَكَكْتَ رِهَانَ أَخِيكَ ، مَا مِنْ مُسْلِمٍ فَكَّ رِهَانَ أَخِيهِ إِلا فَكَّ اللَّهُ رِهَانَهُ يَوْمَ الْقِيَامَةِ "

அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள அறிவிக்கிறார்கள்:-

நபி (ஸல்) அவர்களின் முன் இறந்து போன ஒருவரின் ஜனாஸா தொழுவிப்பதற்காக வைக்கப்பட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் இறந்து போன இவர் மீது ஏதேனும் கடன் உள்ளதா?எனக் கேட்டார்கள்.அதற்கு மக்கள் ஆம் இவர் மீது கடன் உண்டுஎன்றனர்.

கடனை நிறைவேற்றுமளவுக்கு அவர் ஏதேனும் பொருளை விட்டுச் சென்றுள்ளாரா? என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்.
மக்கள் இல்லை என்று கூறினார்கள்.

அவ்வாறென்றால் நீங்களே அவருக்கு ஜனாஸா தொழுகை தொழுது கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்நிலையைக் கண்ட அலீ (ரலி) அவர்கள்: அல்லாஹ்வின் தூதரே! அக்கடனை அடைக்கும் முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்கள்.

அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் முன்வந்து தொழ வைத்தார்கள்.
பின்பு அலீ (ரலி) அவர்களை நோக்கி“அலீயே! அல்லாஹ் உம்மை நரகிலிருந்து காப்பானாக!முஸ்லிம் சகோதரர் ஒருவரின் கடனை அடைக்கும் எந்த முஸ்லிமையும் அல்லாஹ் மறுமை நாளில் நரகிலிருந்து விடுதலை செய்யாமல் இருக்க மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.        ( நூல்: ஷரஹூஸ் ஸுன்னா )

உஸ்மான் தின் நூரைன், உஸ்மானில் கனீ என்றழைக்கப்பட்ட உஸ்மான் (ரலி) அவர்களின் சமூகத்தொண்டும், அல்லாஹ்விற்காக வாரி வாரி வழங்கியதும் அளப்பரியது.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜிரத் செய்து மதீனா வந்த புதிதில் முஸ்லிம்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்தது வறட்சியான காலமும் கூட அது. அருகிலிருக்கும் ஒரு யூதனின் பிஃர-ரூமா எனும் கிணற்றிலிருந்து தான் முஸ்லிம்கள் ஒரு முத்து விலையாக கொடுத்து ஒரு பாத்திரம் (ஒரு குடம்) தண்ணீர் பெற்றுக் கொண்டிருந்தனர்.

விலையில்லாமல் அந்த தண்ணிரை மக்களுக்கு யாராவது பெற்றுத் தர மாட்டார்களா? என நபி (ஸல்) தமது விருப்பத்தை தெரிவித்தபோது, ஹல்ரத் உஸ்மான் (ரலி) 12,000 தீனார் கொடுத்து ஒரு நாள் யூதனுக்கும், ஒரு நாள் முஸ்லிம்களுக்கும் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் உரிமையை பெற்றுத்தந்தார்கள். மீண்டும் நெருக்கடி ஏற்படவே மீண்டும் 12,000 தீனார் கொடுத்து முழுக்கிணற்றையும் விலைக்கு வாங்கி மதினமாநகர் முழுவதுமுள்ள மக்களெல்லாம் பயன்பெறுமளவுக்கு அதை அர்ப்பணித்தார்கள்.

அல்லாஹ்வின் மார்க்கத்தில் சாரை சாரையாய் மக்கள் இணைந்து கொண்டிருந்த தருணம் அது.

மஸ்ஜித் நவபி நெருக்கடியில் திக்குமுக்காடியது.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகிலிருக்கும் இடத்தை யாராவது பெற்றுத்தந்தால் மஸ்ஜித் நவபீயை இன்னும் விஸ்தரித்து இடநெருக்கடியை குறைத்து கொள்ளலாமே?என தமது விருப்பத்தை வெளிப்படுத்திய போதும் உஸ்மான் (ரலி) அவர்களே15,000 தீனார் கொடுத்து மஸ்ஜிதுக்கு அருகாமையில் இருந்த இடத்தை வாங்கி அர்ப்பணித்தார்கள்.

மாபெறும் வெற்றியான ஃபத்ஹ்-மக்காவிற்குப்பின் இஸ்லாமிய எழுச்சி ஹரம் ஷரீஃபிலும் எதிரொலித்தது! ஆம் அங்கும் இட நெருக்கடி 10,000 தீனார் விலை கொடுத்து அருகே இருந்த இடத்தை வாங்கி (விஸ்தரிக்க) அர்பணித்தார்கள்.

முஸ்லிம்களின் தேவைகள் அதிகமான போதெல்லாம் தாமாகவே முன்வந்து ஒவ்வொரு முறையும் உஸ்மான் (ரலி) அவர்கள் இறை திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமது செல்வத்தின் மூலம் பல சமூக சேவைகள் புரிந்துள்ளார்கள்.              ( நூல்: குலஃபாவுர்ரஸுல் (ஸல்) பக்கம் 185, 186  )

எனவே, மௌத்துக்கு முன்னால் இந்த ஐந்து கடமைகளையும் நாம் நிறைவேற்றி விட்டோம் என்றால் நம்முடைய மரண நேரமும், மண்ணறை வாழ்க்கையும், மஹ்ஷர் வாழ்க்கையும் வெற்றிக் குரியதாய் அமைந்து விடும்.

அல்லாஹ் நாம் மௌத்தாகும் முன்னரே இந்த ஐந்து கடமைகளையும் முழுமையாக நிறைவேற்றி விட்டு மௌத்தாகும் நற்பேற்றைத் தந்தருள் புரிவானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!