Thursday 24 November 2016

முஸ்லிம் எனும் அடையாளத்தை இழக்க முடியுமா?



முஸ்லிம் எனும் அடையாளத்தை இழக்க முடியுமா?



21/11/2016 அன்றைய தமிழ் தி இந்து நாளிதழில் ஆர்.பி.ஐ ரிஸர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி பிரசுரமாகி இருந்தது.

அதில் “தற்போது இருக்கும் வங்கி நடைமுறையில் முஸ்லிம்களுக்கு தனியான பிரிவை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசும், ரிஸர்வ் வங்கியும் முஸ்லிம் மக்களை வங்கி அமைப்புக்குள் கொண்டுவரும் நோக்கில் தனியான முஸ்லிம் வங்கிகளை ஏற்படுத்த உண்டான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றது. முஸ்லிம் மக்கள் அவர்களுடைய மத நம்பிக்கைகளின் காரணமாக வங்கி அமைப்புக்குள் வருவதில்லை.

பல்வேறு விதிகள், சவால்கள் இந்த விஷயத்தில் அடங்கியுள்ளது. மேலும், இந்திய வங்கிகளுக்கு இதில் முன் அனுபவம் இல்லை. முஸ்லிம் வங்கிகள் இந்தியாவில் படிப்படியாக கொண்டு வரப்படும். முதலில் தற்போதுள்ள வங்கிகளில் முஸ்லிம்களுக்கு தனிப்பிரிவு மூலம் சில திட்டங்கள் கொண்டு வரப்படும்” என்று.

இதுவும் கூட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு ரிஸர்வ் வங்கி கொடுத்துள்ள பதிலாகும்.

இந்த அறிவிப்பு கடந்து வந்த பாதை…

இன்றைய வங்கிகளின் இயக்கம் வட்டியை அடிப்படையாக கொண்டிருப்பதால் முஸ்லிம்கள் வங்கிகளில் சேமிக்கத் தவறுகின்றார்கள் என்றும் ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்த.

ஆய்வு 1. நீதியரசர் ராஜீந்தர் சச்சார் தமது அறிக்கையில் நாட்டில் இயங்குகின்ற 27 பொதுத்துறை வங்கிகளில் முஸ்லிம்கள் சேமிப்பு கக்கு பரிவர்த்தனையில் 12 விழுக்காடு தான் பங்கு பெற்றுள்ளனர்.

அதாவது நாட்டில் வசிக்கும் 25 கோடி முஸ்லிம்களில் 3 1/2 கோடி முஸ்லிம்களுக்கு வங்கித் தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வு 2. மேலும் 2005ல் Legal News and Views எனும் ஆய்வில் வங்கிகளில் முஸ்லிம்களால் கைவிடப்பட்ட வட்டிப்பணம் 75,000 கோடி கேட்பாரற்று கிடக்கின்றது. அதிலும் குறிப்பாக கேரள வங்கிகளில் மட்டும் 45,000 கோடி என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் அப்போது ஆளும் காங்கிரசின் கதவைத் தட்டியது.

கடந்த காங்கிரஸ் அரசிடம் வட்டியில்லா வங்கி குறித்த இக்கோரிக்கை  முன் வைக்கப்பட்ட போது 2006ம் ஆண்டில் இது குறித்து பரிசீலனை செய்யுமாறு ரிசர்வ் வங்கியை மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். ஆனால் சாத்தியமில்லை என்று கூறி ரிசர்வ் வங்கி கையை விரித்தது.

அப்போது கைவிரித்த அல்லது கைவிட்ட ரிஸர்வ் வங்கி தான் இப்போது, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும், அதற்கு முன்னோட்டமாக தற்போதைய வங்கி முறையில் முஸ்லிம்களுக்கு தனிப்பிரிவை துவங்க முயற்சி மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

காலம் கடந்த முடிவு என்றாலும் முஸ்லிம் சமூகத்தின் குரல்களைப் புறக்கணிக்க முடியாது எனும் நிலையை மத்திய அரசும், நாட்டின் முதன்மை நிறுவனமும் ஒப்புக்கொண்டிருக்கும் நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

அல்ஹம்து லில்லாஹ்….

ரிஸர்வ் வங்கி கொடுத்திருக்கிற அறிக்கையில், மத்திய அரசும், ரிஸர்வ் வங்கியும், “முஸ்லிம் சமூகம் மத நம்பிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள், எந்த ஒரு காரணத்திற்காகவும் முஸ்லிம் எனும் அடையாளத்தை விட்டுத் தரவும் மாட்டார்கள், வளைந்து கொடுக்கவும் மாட்டார்கள் என்று ஒத்துக் கொண்டுள்ளதை” உணர முடிகின்றது.

2050 –ஆம் ஆண்டை சர்வதேச மனித சமூகம் மிகப் பெரிய அளவில் எதிர் நோக்கி இருக்கிறதென்றால் அது மிகையல்ல.

மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் முதற்கொண்டு, உலகின் பல நாடுகளைத் தாண்டி இந்தியா வரை இஸ்லாம் தன் ஆளுமையை விரிவாக்கம் செய்து, மிகப் பெரிய அளவிலான எண்ணிக்கையை கொண்ட முஸ்லிம் சமூகமாக உருவாக்கம் பெரும் என்கிற பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவு தான் இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையாகும்.

2050 –இல் முஸ்லிம்களின் எண்ணிக்கை உயர்ந்து விடக்கூடாது, இஸ்லாத்தின் ஆளுமை விரிவடைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாகவும் அதே நேரத்தில் கண்காணிப்போடும் இருக்கின்றார்கள்.

ஆகவே, மிகக் கவனமாக, சர்வதேச ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் மீது மறைமுக தாக்குதல்களைத் துவக்கி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒன்று முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதே முஸ்லிம் எனும் அடையாளத்தை முஸ்லிம் சமூகத்திடம் இருந்து அகற்ற வேண்டும். இஸ்லாத்தை விட்டும் முஸ்லிம்களை தூரமாக்க வேண்டும் என்கிற முயற்சிகளில் முழு மூச்சாக இரவு, பகலாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இத்தகைய காலகட்டத்தில் ரிஸர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பது தான் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும்.

முஸ்லிம் எனும் அடையாளத்தை ஏன் முஸ்லிம்கள் இழக்கத் துணிவதில்லை?...

هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا

மேலும், அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும், அவன் வழங்கிய மார்க்கத்தில் ( இஸ்லாத்தில் ) உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை.

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் தான் இதற்கு முன்பும், இப்போதும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியுள்ளான். தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக!”.         ( அல்குர்ஆன்: 22: 78 )

அடையாளத்தை இழக்க, முகவரியைத் தொலைக்க ஒரு முஸ்லிம் ஒரு போதும் முன் வரமாட்டான்.

ஏனெனில், இந்த அடையாளத்தையும், முகவரியையும் தந்தவன் அனைத்துலகையும் படைத்துப் பரிபாலனம் செய்யும் ரப்புல் ஆலமீன் ஆகிய அல்லாஹ் தான் என்று மேற்கூறிய இறைவசனம் நமக்கு உணர்த்துகின்றது.

அடையாளத்தை இழக்க விரும்பாத மேன்மக்கள்….

பைத்துல்லாஹ்வின் அஸ்திவாரத்தை உயர்த்திய இப்ராஹீம் {அலை} அவர்கள் அல்லாஹ்விடம் கை உயர்த்தி, தம் திருப்பணியை ஏற்றுக் கொள்ளுமாறு இறைஞ்சியதோடு,

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ

“எங்கள் இரட்சகனே! எங்களிருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படிகிற முஸ்லிம்களாகவும், எங்களுடைய சந்ததியில் இருந்தும் உனக்கு கீழ்ப்படிகிற முஸ்லிம்களையும் ஆக்கியருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். ( அல்குர்ஆன்: 2:128 )

وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ ()

இப்ராஹீமும், யஃகூபும் தங்களுடைய இறுதி நேரத்தில் தங்களின் மக்களுக்கு “என் மக்களே! நிச்சயமாக, அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தையே உங்களுக்காக தேர்ந்தெடுத்துள்ளான்; ஆகவே, நீங்கள் முஸ்லிம்களாக அன்றி நிச்சயமாக மரணிக்க வேண்டாம் என்று வஸிய்யத் செய்தார்கள்”.                   ( அல்குர்ஆன்: 2: 132 )

1. அடையாளத்தை இழக்கச் செய்யும் எதையும் ஓர் இறை நம்பிக்கையாளன் அங்கீகரிக்க மாட்டார்….

فذهب إلى بيت إسماعيل فقال لامرأته : أين صاحبك ؟ قال ذهب للصيد وكان إسماعيل عليه السلام يخرج من الحرم فيصيد ، فقال لها إبراهيم : هل عندك ضيافة ؟ قالت ليس عندي ضيافة ، وسألها عن عيشهم ؟ فقالت : نحن في ضيق وشدة ، فشكت إليه فقال لها : إذا جاء زوجك فأقرئيه السلام وقولي له فليغير عتبة بابه ، فذهب إبراهيم فجاء إسماعيل فوجد ريح أبيه فقال لامرأته : هل جاءك أحد ؟ قالت : جاءني شيخ صفته كذا وكذا كالمستخفة بشأنه قال فما قال لك ؟ قالت قال أقرئي زوجك السلام وقولي له فليغير عتبة بابه ، قال ذلك أبي وقد أمرني أن أفارقك الحقي بأهلك ، فطلقها وتزوج منهم أخرى ، فلبث إبراهيم ما شاء الله أن يلبث ، ثم استأذن سارة أن يزور إسماعيل فأذنت له وشرطت عليه أن لا ينزل ، فجاء إبراهيم عليه السلام حتى انتهى إلى باب إسماعيل فقال [ ص: 148 ] لامرأته أين صاحبك ؟ قالت ذهب يتصيد وهو يجيء الآن إن شاء الله ، فانزل يرحمك الله ، قال : هل عندك ضيافة ؟ قالت : نعم فجاءت باللبن واللحم ، وسألها عن عيشهم ؟ فقالت : نحن بخير وسعة ، فدعا لهما بالبركة ولو جاءت يومئذ بخبز بر أو شعير وتمر لكانت أكثر أرض الله برا أو شعيرا أو تمرا ، فقالت له : انزل حتى أغسل رأسك ، فلم ينزل فجاءته بالمقام فوضعته عن شقه الأيمن فوضع قدمه عليه فغسلت شق رأسه الأيمن ثم حولت إلى شقه الأيسر فغسلت شق رأسه الأيسر فبقي أثر قدميه عليه ، فقال لها : إذا جاء زوجك فأقرئيه السلام وقولي له قد استقامت عتبة بابك ، فلما جاء إسماعيل ، وجد ريح أبيه فقال لامرأته : هل جاءك أحد ؟ قالت : نعم شيخ أحسن الناس وجها وأطيبهم ريحا ، وقال لي كذا وكذا وقلت له كذا وكذا ، وغسلت رأسه وهذا موضع قدميه فقال : ذاك إبراهيم النبي أبي ، وأنت العتبة أمرني أن أمسكك .

இப்ராஹீம் (அலை) அவர்கள் பாலைவனத்தில் தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக சில காலம் கழித்து (திரும்பி) வந்தார்கள்.

அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் மனைவியிடம் இஸ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.

பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாஙகள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.

உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் சொல். மேலும், அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள்.

ஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளஙகள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார் எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன்.

என்னிடம் உஙகள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார்.

அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க, அதற்கு அவர் ஆம் உங்களுக்கு தன் சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு உன் நிலைப்படியை மாற்றிவிடு என்று (உஙகளிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துக்கொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்.

பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்.

அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அஙகு) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் நீஙகள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா) என்று கேட்டார்கள். மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் உஙகள் உணவு எது என்று கேட்க அவர் இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள் உஙகள் பானம் எது என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தாணியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள். 

ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடஙகளில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்தக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது உங்களிடம் எவரேனும் வந்தார்களா என்று கேட்க அவருடைய மனைவி ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார்.

அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் உஙகளுக்கு சலாம் உரைக்கிறார் உஙகள் நிலைப்படியை உறுதிப்பபடித்திக் கொள்ளும்படி உஙகளுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மணைவியாக வைத்தக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளான் என்று சொன்னார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள்.                             ( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ, அத்தபரீ )

இஸ்மாயீல் {அலை} அவர்களின் முதல் மனைவியிடம் 1. முழுக்க முழுக்க அல்லாஹ்வைச் சார்ந்திருத்தல். 2. அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு போது மாக்கிக் கொள்தல், 3. குடும்ப இரகசியத்தை பேணிப் பாதுகாத்தல் ஆகிய ஒரு முஸ்லிமுக்கான இலக்கணப் பண்புகள் இல்லாததால் விவாகரத்துச் செய்யச் சொன்னார்கள்.

அதே நேரத்தில், இந்த அத்துனை அம்சங்களும் ஒருங்கே பெற்றிருந்த இரண்டாவது மனைவியை இறுதி வரை தம்மோடு வைத்துக் கொள்ளுமாறு தங்களது மகனார் இஸ்மாயீல் {அலை} அவர்களுக்கு ஆணையிட்டார்கள் இப்ராஹீம் {அலை} அவர்கள்.

சொந்த வாழ்வானாலும் ஒரு முஸ்லிம் தன் அடையாளத்தை இழக்கச் செய்யும் எந்த ஒரு செயலையும் அங்கீகரிக்கக் கூடாது என்பதை இந்த வரலாறு உணர்த்துகின்றது.

2. வேறெந்த முஸ்லிமும் முஸ்லிம் எனும் அடையாளத்தை இழந்து விடுவதை ஒரு முஸ்லிம் அங்கீகரிக்க மாட்டார்.

وجاء رجل شاب فقال: أبشر يا أمير المؤمنين ببشرى الله لك، من صحبة رسول الله صلى الله عليه وسلم، وقدم في الإسلام ما قد علمت، ثم وليت فعدلت، ثم شهادة
فلما أدبر إذا إزاره يمس الأرض
 قال
 ردوا علي الغلام، قال: ابن أخي ارفع ثوبك، فإنه أنقى لثوبك، وأتقى لربك

உமர் (ரலி) அவர்கள் அபூலுஃலுவுல் ஃபைரோஸீ என்பவனால் குத்தப்பட்டு, ஷஹாதத்தின் விளிம்பில் இருக்கும் போது ஒரு இளைஞர் உமர் (ரலி) அவர்களின் அருகே வந்து அமர்ந்தார்.

”இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உமர் (ரலி) அவர்களே! உங்களுக்கு சோபனம் உண்டாகட்டும்!

நபி {ஸல்} அவர்களின் தோழமையப் பெற்றிருக்கின்றீர்கள்! இஸ்லாத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே ஏற்றுக் கொண்டீர்கள்! முஸ்லிம்களின் ஆட்சியாளராக அரியணையில் அமர்ந்து நல்லாட்சி வழங்கினீர்கள்! உயரிய ஷஹாதா வீரமரணத்தை நோக்கி நீங்கள் வீற்றிருக்கின்றீர்கள்! இவைகள் எல்லாம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய சோபனங்களே!” என்று கூறி விட்டு அந்த இளைஞர் அங்கிருந்து விடை பெற்றுச் செல்கின்றார்.

நடந்து செல்லும் அந்த இளைஞரின் கீழாடை தரையைத் தொட்டவாறே சென்றதைக் கண்டதும் உமர் (ரலி) அவர்கள் அந்த இளைஞரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார்கள்.

அந்த இளைஞர் அருகே வந்ததும், என் சகோதரனின் மகனே! உன் கீழாடையை உயர்த்திக் கட்டுவாயாக! உன் ஆடையை தூய்மையாக வைத்துக் கொள்வாயாக! உமதிறைவனை பயந்து வாழ்வீராக!” என்று கூறினார்கள்.

( நூல்:ஸஃகத்துஸ் ஸில்ஸால் லிநஸஃபி அபாதீலுர் ரஃப்ளி வல் இஃதிஸால் )

இக்கட்டான நிலைமையில், உயிர் போகும் அந்த தருணத்திலும் கூட ஒரு முஸ்லிம் தன் அடையாளத்தில் இருந்து அகன்று விடக்கூடாது என்று பதறித் துடித்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

அனைத்து நபிமார்களும் தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்துவதையே விரும்பியிருக்கின்றார்கள் என்று குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகின்றது.

எனவே, முஸ்லிம்களாக வாழ்வோம்! முஸ்லிம் எனும் அடையாளத்தோடு வாழ்வோம்! முஸ்லிம் எனும் அடையாளத்தை இழக்கச் செய்யும் எதையும் அணுவளவேனும் வாழ்க்கையில் அங்கீகரிக்காமல் வாழ்வோம்! அதற்காக உயிர் போனாலும் சரியே!!!

யாஅல்லாஹ்! எங்களை முஸ்லிம்களாக வாழச்செய்வாயாக! முஸ்லிம்களாகவே மரணிக்கச்செய்வாயாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Thursday 17 November 2016

21 –ஆம் நூற்றாண்டு முஸ்லிம்களின் வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும்?



21 ஆம் நூற்றாண்டு முஸ்லிம்களின் வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும்?



நூற்றாண்டுகளுக்கும் முஸ்லிம் உலகிற்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கின்றது.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் வியக்கத்தக்க ஏதேனும் மாற்றத்தை முஸ்லிம் உலகு உள்வாங்கி இருக்கின்றது.

சில போது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இன்னும் சில போது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்றுக் கொண்டும் இருக்கின்றது.

என்ற போதிலும் இந்த 21 –ஆம் நூற்றாண்டு முஸ்லிம் உலகு இதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு பாதையில், முடிவுகளே இல்லையோ என்று விக்கித்து நிற்கும் ஓர் பாதையில் பயணப்பட்டு கொண்டிருப்பதை உணர முடிகின்றது.

ஆம்! இஸ்லாத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பிய எதிர்ப்பாளர்கள் எல்லா நூற்றாண்டுகளிலும் வாழ்ந்திருக்கின்றார்கள், ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் அதற்காக முழு முயற்சியும் எடுத்திருக்கின்றார்கள்.

வரலாற்றின் ஊடாக நாம் அந்த எதிரிகள் மேற்கொண்ட முயற்சிகளை ஆராய்ந்து பார்த்தால் 4 வகையான அணுகுமுறைகளை மேற்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

1. Annihilation – அனிகிலேஷன் நிர்மூலமாக்குதல் அல்லது இல்லாமல் ஆக்குதல்,

2. Acimilation – அசிமிலேஷன் தனித்தன்மையை இல்லாமல் ஆக்குதல், அல்லது தனித்தன்மையை அழித்தொழித்தல்,

3. Segregation – செக்ரிகேஷன்புறக்கணிப்பது, அல்லது ஒதுக்கி வைப்பது,

4. Elimination – எலிமினேஷன் வெளியேற்றுவது

கடந்த 20 நூற்றாண்டுகளில் இஸ்லாமும், முஸ்லிம் உலகும் இவ்வாறான எதிர்ப்புகளைத் தான் ஒவ்வொரு எதிரிகளாலும் தனித்தனியான கால கட்டங்களில் சந்தித்து வந்திருக்கின்றன.

ஆனால், இந்த 21 –ஆம் நூற்றாண்டில் எதிரிகளால் இந்த நான்கு வகையான எதிர்ப்புகளையும் ஒட்டு மொத்தமாக எதிர் கொண்டு வருகின்றது.

1. Annihilation – அனிகிலேஷன் நிர்மூலமாக்குதல் அல்லது இல்லாமல் ஆக்குதல் எனும் ஆயுதத்தை ஏந்தி வெறியாட்டம் போட்ட சிலுவைப்படையினர்.

முதல் வகையான அனிகிலேஷன் அணுகுமுறையை கையில் எடுத்து சுமார் 200 ஆண்டுகள் 9 முறை போர்கள் நடத்தி முஸ்லிம்களின் உயிர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர் சிலுவைப் போர் வீரர்கள் எனும் போர்வையில் இருந்த வெறி பிடித்த கிறிஸ்தவர்கள்.

11 –ஆம் நூற்றாண்டில் இருந்து துவங்கியது இந்த துவேஷம். உலகில் முஸ்லிம் என்று யாருமே இருக்கக்கூடாது. ஒருவர் கூட இல்லாமல் ஆக்கப் பட வேண்டும் என்ற நோக்கத்திலும், ஜெரூஸலத்தை மையமாகக் கொண்டு கிறிஸ்தவப் பேரரசை நிருவ வேண்டும் என்ற நோக்கிலும் துவங்கப்பட்டது தான் இந்த சிலுவைப் போர்.

வரலாற்று ஆசிரியர் கிறிஸ்தவ போதகர் பால் ஜான்சன் என்பவர் ஹிஸ்டரி ஆஃப் கிறிஸ்டியானிட்டி என்ற புத்தகத்தில் பல தகவல்களை பதித்துள்ளார்.

அதில், “உலகில் இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய சக்திகளை வளர விடக்கூடாது என்று மிக அற்புதமாகத் திட்டமிட்ட இந்தப் போர்கள் பல பெயர்களில் 17 ம் நூற்றாண்டு வரை நடந்தது.

முதல் சிலுவைப் போர் 1095-1099,  இரண்டாவது 1147-1149, மூன்றாவது 1189-1192, நான்காவது 1198-1204,  குழந்தைகள் சிலுவைப் போர் 1212,  ஐந்தாவது 1217-1221,  ஆறாவது 1228-1229,  ஏழாவது 1248-1254,  எட்டாவது 1270,  ஒன்பதாவது 1290 லும் நடந்தது.

கி.பி. 1099 ல் முதல் சிலுவைப்போரின் போது சிலுவைப் படையினர் அல் அக்ஸாவை சுற்றிய பகுதியைக் கைப்பற்றியபோது முஸ்லிம்களிடம் சிலுவைப்படையினர் நடந்து கொண்ட முறையை மிகாட் என்ற வரலாற்றாசிரியர் Histories Croisades  சிலுவை யுத்த வரலாறு எனும் நுலில்.....

v வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டர்கள்.
v அடைக்கலம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது.
v தப்பியோடியவர்களை தேடிச்சென்று கொன்றனர்.
v கோபுரங்கள், மாளிகைகள், பள்ளிவாசல்களில் ஒளிந்து கொண்டோர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

ஜெருஸ்ஸலம் நகரெங்கும் உயிரை இழக்கும் மனிதர்களின் அழுகைகளும், முனகல்களும் தான் எதிரொலித்தன.

பிரிட்டானியா கலைக்களசியம் பின்வருமாறு வர்ணிக்கிறது....

அல்  அக்ஸா பள்ளி வளாகமெங்கும் ரத்தவெள்ளம் ஒடிக் கொண்டிருந்தது. பச்சிளங்குழந்தைகளின் உயிர்களை சுவற்றில் அடித்தோ, அல்லது போர் நடக்கும் இடத்திற்கு மத்தியில் வீசியோ கொலை செய்தனர்.

2. Acimilation – அசிமிலேஷன் தனித்தன்மையை இல்லாமல் ஆக்குதல், அல்லது தனித்தன்மையை அழித்தொழித்தல் எனும் ஆயுதத்தைக் கையில் ஏந்திய மங்கோலியர்கள் எனும் தார்த்தாரியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள்….

524 ஆண்டுகள் ( ஹிஜிரி 132 கி.பி. 750 முதல் ஹிஜிரி 641 கி.பி. 1243 வரை )
 அப்பாஸியாக்களின் ஆட்சிக்காலம் இஸ்லாமிய உலகின் பொன்னான ஆட்சிக்காலம் எனலாம்.

இன்று உலகில் அறியப்படும், போற்றப்படும் கல்வி - விஞ்ஞானம்- மருத்துவம் அனைத்திலும் முஸ்லிம்கள் முன்னோடிகளாய், கண்டுபிடிப்பாளர்களாய் ஜொலித்த காலமும் அதுதான்.

இன்னும் சொல்லப்போனால், இஸ்லாமும், முஸ்லிம் சமூகமும் தான் கல்வி - விஞ்ஞானம்- மருத்துவம்  என அனைத்திலும் உலகை வழிநடத்திச் சென்றது.

இது தவிர்த்து இன்னும் நீதியான, நேர்மையான ஆட்சி, சிறுபான்மை சமூகமாக இருந்த ஏனைய மக்களோடு கடைபிடித்த சகிப்புத்தன்மை என பல்வேறு தனித்தன்மைகளோடு கோலோச்சிக்கொண்டிருந்த தருணத்தில் தான் ஐரோப்பியர்களும், மங்கோலியர்களும் இணைந்து அத்துணை தனித்தன்மைகளையும் இல்லாமல் ஆக்கினர். இல்லையில்லை அழித்தொழித்தனர்.

தாத்தாரியாக்களும், ஐரோப்பியர்களும் ஸ்பெயினை வீழ்த்துகிற போது, அங்கிருந்த நூல்நிலையங்களை சூறையாடினர்.

நடுவீதியில் முஸ்லிம்களின் அரிய நூல்களைதீயிட்டு கொளுத்தினர்.

எந்தளவு எனில் வீடு வீடாகச் சென்று நூல்களை அள்ளியெடுத்து வீதியில் போட்டுதீவைத்து கொளுத்தினர்.

பல நாட்களாக அதன் சாம்பல் ஸ்பெயின் நகரெங்கும் காற்றில் பரவிக்கொண்டிருந்தது.சுமார் 20 லட்சம் கிதாபுகள் அழிக்கப்பட்டன்.

பைத்துல் ஹிக்மா அடியோடு அழிக்கப்பட்டது. ஃபுராத் நதியில் தண்ணீரில் கிதாபுகளையும், அறிவியல் நூல்களையும் கொண்டு ஐரோப்பியர்கள்ஒரே நேரத்தில் 7 குதிரைகள் ஜோடியாக செல்கிற அமைப்பில் (இன்றைய நான்கு வழிச்சாலை போல)பாலம் அமைத்தனர்.

சுமார் ஒன்பது மாதங்களாக ஃபுராத் நதியின் தண்ணீரின் கலர் கிதாபுகள் எழுதப்பயன்படுத்தப்பட்டமையின் நிறமான கருப்பு கலரில் ஓடியது. மேலும், முஸ்லிம்களின் கைகளில் இருந்து கைநழுவிப்போன ஸ்பெயின் பேரரசின் குர்துபா ஜாமிஆமஸ்ஜித் இன்று நூதன சாலையாக மாற்றப்பட்டு இதில் கட்டாயம் செருப்பு அணிந்துதான் செல்லவேண்டும் என சட்டமியற்றியுள்ளனர்.

இல்லாமல் ஆக்கப்பட்ட தனித்தன்மைகள்…..

1) அரபு மொழி நிர்வாகத் துறையிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது,
2) (
மஸ்ஜித்) பள்ளிவாயில்களோடிருந்த கல்விக் கூடங்களில் (மதரசாக்களில்) மார்க்கக் கல்வியை மட்டுந்தான் போதிக்க வேண்டும் என்றும், அவர்கள் ஏற்கனவே போதித்துக் கொண்டிருந்த வரலாறு, விஞ்ஞானம், கணக்கு போன்ற பாடங்களைக் கற்றுத் தரக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

3) அரசின் நிர்வாகத்தின் கீழ் நடந்த பாடசாலைகளில் முஸ்லிம்களின் வரலாற்று திரிக்கப்பட்டு 'அவர்கள் கொடுமையாளர்கள்' என்று போதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆண்ட காலம் 'இருண்ட காலம்' என இட்டுக்கட்டப்பட்டது.

4) முஸ்லிம்களின் வீடுகள் அடிக்கடி காவல் துறையினராலேயே சூறையாடப்பட்டன. இதற்கு 'அவர்கள் வீடுகளில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்' 'வீடுகளில் இரகசியக் கூட்டங்களைக் கூட்டினார்கள்' – என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டன.

5) உண்மையாக அரபு நாட்டிலிருந்து வந்து ஸ்பெயினில் குடியேறிய அரபு நாட்டு முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களின் பரம வைரிகள் ஸ்பெயினை அழித்தவர்கள் என்பன போன்ற அவதூறுகளை இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பொய்ப் பிரச்சாரங்களால் பாமர மக்கள் 'முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய வீணர்கள்' என்ற முடிவுக்கு வந்தனர்.

6) கிறிஸ்தவர்களிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறிப் போனவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு வந்துவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

7) அரபு நாட்டு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் பிறந்த முஸ்லிம்கள் 'சட்ட விரோதமாகப் பிறந்தவர்கள்' என்று அறிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் அவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டார்கள்.

8) இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் 'மீண்டும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படவேண்டும்' என்று சட்டம் வந்தது. பின்னர் இஸ்லாமிய முறைப்படிச் செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது' என்று அறிவிக்கப்பட்டது.

9) ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் கடைசி முயற்சியாக தங்கள் தலைமுறையை இஸ்லாத்தில் தக்கவைத்துக் கொள்ள தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுத்தார்கள்.

ஆனால் காலப் போக்கில் தங்களுக்கேற்பட்ட அளவுக்கதிகமான இழப்பைக் கண்டு நிலை குலைந்தனர். 'இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், முஸ்லிம்கள் முதலில் இஸ்லாமிய முறைப்படி தங்கள் திருமணங்களைத் தங்கள் இல்லங்களில் வைத்து இரகசியமாகச் செய்து கொள்வார்கள்.

பின்னர் அரசின் அதிகாரிகள் முன் அரசு விதிகளுக்கேற்ப ஒரு முறை சடங்குகளை நிறைவேற்றுவார்கள். காலப்போக்கில் முஸ்லிம்கள் இன்னும் இரகசியமாக இஸ்லாமிய முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்த அதிகாரிகள், அந்த திருமணங்களைக் கண்டுபிடித்துத் தண்டனைகள் தந்தார்கள்.

ஆகவே முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படித் திருமணங்கள் செய்வதை நிறுத்தினார்கள். முஸ்லிம்கள் இத்தகைய கெடுபிடிகளைச் சந்திக்க இயலாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தபோது, பல முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு கிறிஸ்தவர்களாகி விட்டார்கள் என்ற பிரச்சாரம் முழுவேகத்தில் அவர்களை வந்து தாக்கிற்று.


விரக்தி, பீதி - இவை முஸ்லிம்களை முழுமையாக ஆட்கொண்டன. கற்றறிந்த முஸ்லிம்கள் ஸ்பெயினைக் காலி செய்து விட்டு துனீசியா, மொராக்கோ போன்ற நாடுகளில் குடியேறினர். அங்குள்ள முஸ்லிம்கள் அவர்களை அனுதாபத்தோடு அரவணைத்துக் கொண்டார்கள்.

உலமாக்கள் சிலர்தான் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றிடும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், மார்க்க விதிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த இவர்களால் அந்த முஸ்லிம்களைக் காப்பாற்றிட இயலவில்லை.

அன்றைய முஸ்லிம்களைக் காப்பாற்றிட அரசியல் அறிவு, உலக நிலை பற்றிய அறிவு, முஸ்லிம்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த சதியின் விபரம், நிலையான தன்மை, இஸ்லாத்தைப் பற்றிய முழுமையான அறிவு-இவையாவும் தேவைப்பட்டன.

இவற்றோடு கிறிஸ்தவ கொலை வெறிக் கும்பலைச் சமாளித்து முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்ற ஓர் வலுவான தற்காப்புப் படையும் தேவைப்பட்டது.

மார்க்க நெறிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த அந்த உலமாக்களிடம் இவற்றில் எதுவும் இருக்கவில்லை. ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் அந்த நாட்டு ஆட்சியாளர்களிடம் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றச் சொல்லி முறையிட்டிருக்கலாம்.

ஆனால் அவர்கள் - ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் - அந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முடக்கிப் போட்டார்கள்.

அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களிடம், நீங்கள் ஸ்பெயினில் வாழ்ந்திடும் முஸ்லிம்களைக் காப்பாற்றிட ஏதேனும் செய்தால் அதைக் காரணங்கள் காட்டி அங்குள்ள முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் அதிகமாகக் கொடுமைப் படுத்துவார்கள் என்று கூறி அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களைத் தடுத்தார்கள்.

இப்படியாகக் கடைசி முஸ்லிமும் ஸ்பெயினைக் காலி செய்து வெளியேறிய ஆண்டுதான் கி.பி 1612.

3. Segregationசெக்ரிகேஷன்புறக்கணிப்பது, அல்லது ஒதுக்கி வைப்பது, 4. Elimination எலிமினேஷன் வெளியேற்றுவது எனும் ஆயுதத்தைக் கையில் ஏந்தியது சோவியத் ரஷ்யாவின் கம்யூனிசவாதிகள்

உலகில் அதிகமான இனப்படுகொலைக்கு ஆளானவர்கள் யார் என்று கேட்டால் உடனே இப்படிப் பதில் கூறுவார்கள்: “யூதர்கள்என்று.

1940 - 1945 வருடங்களில் 1,85,403 யூதர்கள் கொல்லப்பட்டதாக யூதர்கள் சொல்கிறார்கள் (இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை -ஹேரி ஸ்டைன்).

ஆனால் உண்மையில் அதே காலக்கட்டத்தில் (1940-1945) மாபெரும் இனப்படுகொலை நடந்த இடம் செச்சன்யா . இது ரஷ்யாவில் உள்ள ஒரு பகுதி .

இங்கு அழிவுக்குள்ளானவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் .அழிவை ஏற்படுத்தியவர்கள் ஜோசப் ஸ்டாலின் என்பவரை தலைவராக கொண்டிருந்த ரஷ்யர்கள் அல்லது பொதுவுடைமை தத்துவம் பேசுபவர்கள் .

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 இலட்சமாகும் . கம்யூனிஸ்டுகளின் கணக்கின் படி 4,78,479 ஆகும்.

                                  ( ஆதாரம்: Radiance News Week 11th Feb 2007 )

இத்தனை இலட்சம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட செய்தியை , இரும்புத்திரை போட்டு மூடிவிட்டார்கள் ரஷ்யர்கள்.

இந்த மாபெரும் இனச்சுத்திகரிப்பு அல்லது இனப்படுகொலை நடந்த நாள் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 . இதை உலக செச்சன்யா நாள் ( World Chechn Day) என அழைக்கின்றார்கள்.

செச்சன்யாவில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது ஜோசப் ஸ்டாலின் என்ற ரஷ்ய கம்யூனிஸ தலைவர் . திடீரென ஒரு பழியை சுமத்தினார்.

அது முஸ்லிம்கள் இரண்டாவது உலக போரில் ரஷ்யாவை முற்றுகை இட வந்த ஹிட்லரின் நாசிப்படைகளுக்கு உதவி செய்தார்கள் என்பதே ஆகும் . ஆனால் உண்மையில் முஸ்லிம்கள் அப்படி எதையும் செய்யவில்லை .

மாறாக , அவர்கள் இரண்டாம் உலகப்போரில் ரஷ்யப்படையுடன் இணைந்து ஹிட்லரை விரட்டி அடிக்க உதவி செய்தார்கள் .உண்மையில் ஜோசப் ஸ்டாலினுடைய கோபம் செச்சன்யா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் ஈமானில் உறுதியுடன் இருந்தார்கள் என்பதே.

அவர்கள் எல்லா நிலையிலும் ஸ்டாலின் போதித்த இறை மறுப்பு கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள் என்பதுதான்.

1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரஷ்யாவினுடைய செம்படை செச்சன்யா பகுதிக்கு வந்து பல்வேறு பகுதிகளில் பரவி பறந்து நின்றது. செம்படை நாள் என்று அழைக்கப்படும் பிப்ரவரி 23 ஆம் நாள் மூளை முடுக்குகளில் இருந்த முஸ்லிம்களை எல்லாம் ஓர் இடத்தில் ( Local soviet building ) கூட்டத்தொடங்கினர்.

எல்லா முஸ்லிம்களும் தங்களுக்கு என்ன நடக்கபோகிறது என்பதை தெரிந்திராமல் அப்பாவிகளாய் செம்படையினர் கூட சொன்ன இடத்தில் கூடினர் .

அன்று செம்படையினர் தங்களது நாளை கொண்டாடப்போகின்றனர் , அதனை நாம் கண்டு கழிக்கப்போகின்றோம் என்று நினைத்தே முஸ்லிம்கள் அங்கெ கூடினார்கள் . ஆனால் செம்படையினர் அங்கு தங்கள் நாளை கொண்டாடிடவில்லை.

மாறாக, ரஷ்யாவின் அதிகாரிகள் ( The Decree of The Presidum of the Supreme Soviet ) தந்த தீர்ப்பை படித்தார்கள்.

அந்த தீர்ப்பில், செச்சன்யாவை சேர்ந்த முஸ்லிம்களும் ( மக்கள் அனைவரும் ) இங்குஷ் என்ற பகுதியில் வாழ்ந்த மக்களும் ( முஸ்லிம்கள்) நாடு கடத்தப்பட வேண்டும்.காரணம் அவர்கள் ரஷ்யாவை முற்றுகை இட வந்த ஜெர்மானிய எதிரிகளுக்கு உதவி செய்தார்கள் எனக் குறிப்பிடபட்டிருந்தது .

இப்படித்தான் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் பல்வேறு பழிகள் சுமத்தப்பட்டு அரச தீவிரவாதங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் .இன்று அமெரிக்காவின் பெரிய முயற்சியின் கீழ் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் . அன்று ரஷ்யா முஸ்லிம்களை துரோகிகள் என்று தூற்றி நாடு கடத்தியது .

இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவென்று சொன்னால் பிப்ரவரி 23, 1944 ம் ஆண்டு முஸ்லிம்களை துரோகிகள் என்று அழைத்த ரஷ்யாதான், அதே மக்களை ஜெர்மானிய படைக்கு எதிராக ரஷ்ய ராணுவ படையோடு இணைந்து போராடினார்கள் என போற்றி, பாராட்டி பட்டங்களையும் பல பதக்கங்களையும் வழங்கியது. உண்மையைச் சொன்னால் சோவியத் ராணுவப்படை வீரர்கள் பெற்ற பதக்கங்களை விட , செச்சன்யா பகுதி மக்கள் வாங்கிய பதக்கங்கள் அதிகம்.

( source: World Chechenya Day Commemoration of Chechn, Holocaust by Dr.Habeeb Haris in Radiance )

ஆனால் செச்சன்யா பகுதியிலிருந்து ரஷ்யாவின் sembadaiyodu இணைந்து போராடிய இராணுவ வீரர்களை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை எல்லோரையும் நாடு கடத்து என்றார்கள் .

எல்லா மக்களையும் துப்பாக்கி முனையில் சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றினார்கள் . அந்த சரக்கு ரயில் பெட்டிகளில் ஆடு மாடுகள் கூட பயணம் செய்ய மாட்டா. ரயில் பெட்டிகளில் ஏற மறுத்தவர்களை அங்கேயே சுட்டு பிணமாக்கினார்கள்.

வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் , பெண்கள் குழந்தைகள் என யாரையெல்லாம் எளிதாக ரயில் பெட்டிகளில் ஏற்ற முடியவில்லையோ அவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளினார்கள் .

இதற்கு பட்டவர்த்தமான அத்தாட்சியும் உண்டு . ஹைபக் (Haibakh ) என்ற மலையடிவாரத்தில் வாழ்ந்த பெண்கள் , குழந்தைகள் உட்பட சுமார் 700 பேர் அதே இடத்திலேயே கொலை செய்யப்பட்டார்கள் . இதற்கான ஆவணங்கள் இன்றைக்கும் இருக்கின்றன .

இதே போல் செச்சன்யாவின் பல மலையடிவாரங்களிலும் முஸ்லிம்கள் கொளுத்தப்பட்டார்கள் . அன்றைக்கு இருந்த அத்தாட்சிகள் அனைத்தையும் ரஷ்ய அரசு அழிக்க முயன்றாலும் இது குறித்த ஆவணங்கள் இன்றும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன .
அவற்றில் ஒன்றுதான் 1944 பிப்ரவரி 29 ஆம் நாள் ரஷ்யாவின் ரகசிய படியான NKVD இன் தலைவர் 'லாவரண்டி பெரியா (Lavrenti Beria) என்பவர் ரஷ்யாவின் சர்வதிகாரி ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் . அதில் இப்படி குறிப்பிட்டிருந்தார் :

" செச்சன்யாவில் வாழும் மக்கள் , இங்குள்ள பகுதியில் வாழும் மக்கள் ஆகியோர்களை நாம் நாடு கடத்தி , மறு குடியேற்றம் செய்தது குறித்தது இந்த கடிதம் . இந்த மறு குடியேற்றம் பிப்ரவரி 23 ஆம் நாள் தொடங்கியது .

எல்லா மக்களையும் வெளியேற்றிவிட்டோம் என்றாலும் , மலைப்பகுதியில் மிக உயரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களை அப்படியே விட்டுவிட்டோம் .

மொத்தத்தில் 4,78,479 பேரை நாம் மொத்தமாக சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றி அனுப்பினோம் . இதில் இங்குஷ் பகுதியை சேர்ந்த 91,250 பெரும் அடங்குவர் . 180 சிறப்பு ரயில்களில் இவர்களை அனுப்பினோம் .

இதில் 159 ரயில்கள் எங்கே செல்ல வேண்டும் என்பது பற்றி தெளிவான ஆணையையும் நாம் தரவில்லை . ஆகவே இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள் நமக்கு வசதியான இடங்களில் இறக்கிவிடப்படலாம் .

( source: Secret letter written to Stalin by Cheif of the NKVD )
            
சரக்கு ரயில் பெட்டிகளில் முஸ்லிம்களை ஏற்றி அந்த பெட்டிகளை சீல் வைத்துவிட்டார்கள். ஒரு சரக்கு ரயில் பெட்டியில் 50 பேர்தான் நிற்கமுடியும் என்றால் , அதில் 100 முதல் 150 பேர்களை ஏற்றி அடைத்தார்கள்.

பெண்கள் குழந்தைகள், வயோதிகர்கள் என்று பெட்டிக்குள் ஏறமுடியும் என்ற நிலையிலுள்ள யாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை .

அவர்களுக்கு உணவு என்று எதையும் ஏற்பாடு செயவில்லை 'டை பாய்டு ' என்ற நோய் அனைவரையும் தொற்றிக்கொண்டது. நெருக்கம் பட்டினி , நோய் இவற்றால் அந்த முஸ்லிம்கள் துடியாய் துடித்தார்கள்.

பலர் பெட்டிக்குள்ளேயே மரணித்தார்கள். ஒவ்வொரு நிறுத்தங்களிலும் பெட்டிகளின் முத்திரையை சீலை உடைத்து இறந்தவர்களை எடுத்து வெளியே வீசினார்கள் .

இந்த ரயில் பெட்டி பயணம் செய்த இடங்களில் வாழ்ந்த சாதாரண மக்களிடமெல்லாம் ஒரு பொய் பிரச்சாரத்தை அப்போதே செய்துவைத்தார்கள். 

அது, "இந்த பெட்டிகளில் அடைத்து வெளிஎற்றப்படுவோர் அனைவரும் ரஷ்யாவின் எதிரியான ஜெர்மானிய படைகளுக்கு உதவி செய்தவர்கள் , அதனால்தான் தண்டிக்கபடுகிரார்கள்" என்பதாகும்.

இதனால் வழி நெடுகிலும் வாழ்ந்த மக்கள் யாரும் இவர்கள் பெட்டிகளிருந்து வீசிய முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யவும் முன்வரவில்லை .

தொடர்ந்து பயணம் செய்தவர்கள் எங்கேனும் இந்த ரயில் நிற்கும் . தங்களை இறக்கிவிடுவார்கள். அங்கெ இறந்தவர்களின் சடலங்களை எடுத்து அடக்கம் செய்யலாம் என எண்ணி பிணங்களை தங்களுடனேய வைத்துக்கொள்ள முயற்ச்சிகளை மேற்கொண்டார்கள். அதுவும் முடியவில்லை. எங்கேயும் அவர்களை இறக்கிவிடுவதாக தெரியவில்லை.

இதனால் ரயில் நிற்கும் இடங்களில் அவர்களே பிணங்களை இறக்கிடவும் செய்தார்கள் . இதனால் இஸ்லாமிய முறைப்படி இறந்தவர்களை எடுத்து அடக்குவதற்கு செய்த முயற்ச்சிகள் அத்தனையும் தோற்றுப்போயின .

பல வாரங்கள் இப்படியே பயணித்த பிறகு அந்த முஸ்லிம்கள் இன்றைக்கு கஜகஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், கிர்க்கிஸ்தான், சைபீரியன் டிஜான் என்றழைக்கபட கூடிய இடங்களில் இறக்கிவிடப்பட்டார்கள்.

பயணத்தின் முடிவில் மிகச் சிலரே உயிர் வாழ்ந்தனர் . இவர்களுக்கும் உணவு உறைவிடம் ஏற்பாடு செய்து தரப்படவில்லை. இதனால் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒரு சேர இறந்தார்கள் . அவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்திடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

பல குடும்பங்கள் பிரிந்தன .அவர்கள் மீண்டும் சேரவே முடியவில்லை .அவர்கள் குடியமர்த்தப்பட்ட இடங்களில் கடுமையான சட்டங்களை காட்டி அவர்களை அங்கேயும் தண்டித்தார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்.

இத்தனை கொடுமைகளுக்கும் பதிலாக வளமான வாழ்கையை வாக்களித்தார்கள் ரஷ்யர்கள். அனாலும் தாங்கள் கொண்ட இறை நம்பிக்கையில் எள்முனை அளவுகூட தளர்வைக் காட்டவில்லை செச்சன்யா முஸ்லிம்கள் .

இதை ரஷ்ய வரலாற்று ஆசிரியர் அலெக்சாண்டர் சோலிங்ஸ்டின் இப்படி வர்ணித்தார்:  உலக வரலாற்றில் ஒரு சமுதாயம் தங்களின் சொந்த இடங்களிலிருந்து பிடுங்கி வீசப்பட்டது. கொடுமையும் குரூரமும் நிறைந்த பயணங்களுக்கு ஆட்படுத்தப்பட்டது . பயணத்தில் பெற்ற குழந்தைகளையும் பேணிவளர்த்த பெற்றோர்களையும் நல்லடக்கம்கூட செய்ய முயாமல் பிணங்களாக தூக்கி வீசவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டது . அந்த சமுதாயத்தை இறுதியாக இறக்கிவிட்ட இடங்களிலும் அவர்களை நிம்மதியாக வாழவிடவில்லை.

சிறைச்சாலை, சிரச்சேதம் ஆகியவற்றால் அழிக்கப்பட்டது. அத்தனை கொடுமைகள், கொலைகள் இவற்றிற்கு இடையேயும் தாங்கள் கொண்ட கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தது அந்த சமுதாயம்.

கொடுமைகளும் கொடூரங்களும் தங்களை தாக்கிடும் போதெல்லாம் அந்த சமுதாயம் கொள்கையில் உறுதியை காட்டியதே அல்லாமல் சிஞ்சிற்றும் விட்டுத்தரவில்லை

இந்த நிலையிலும் தங்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தியவர்களிடம் அவர்கள் யாசிக்கும் நிலையில் பேசியது இல்லை. தங்களுடைய உணர்வில், கொள்கையில் அவர்கள் எப்போதும் உடைந்து போகவில்லை.

ரஷ்யாவின் பயங்கரப்படைகள் அவர்கள் முன்னே அணிவகுத்து வந்தபோது, நெஞ்சை நிமிர்த்தி எதிர்ப்பை காட்டினார்களே தவிர வளைந்து கொடுத்து வாழ விரும்பவில்லை . அவர்களை தொடர்ந்து 30 வருடங்களாக கொடுமைப்படுத்திய அரசுகள் என்னென்னவோ செய்து பார்த்தன. ஆனால் அவர்கள் அந்த குரூர ஆட்சியாளர்களின் சட்டங்களை ஒரு போதும் அவர்கள் மதிக்கவில்லை.

அவர்கள் முன்னே அணிவகுத்து வந்த ராணுவங்களும் கூட அந்த சட்டங்களை மதிக்க வைக்க முடியவில்லை . அந்த சமுதாயம்தான் செச்சன்யா முஸ்லிம்கள் . வரலாற்றின் பக்கங்கள் இன்றும் அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருக்கின்றன . வளைந்து கொடுக்காத ஒரு வரலாற்றிற்கு சொந்தக்காரர்களாய் அந்த முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் "

( source: THE GULAG ARCHIPELAGO )

1953 இல் கொடுங்கோலன் ஜோசப் ஸ்டாலின் இறந்தான் . அதுவரை செச்சன்யா முஸ்லிம்கள் நிம்மதியற்ற வாழ்கை அநீதி ,அவமானம் மரணம் இவற்றையே சந்தித்தார்கள். ஸ்டாலினுடைய மரணத்திற்கு பின்னர் செச்சன்யா முஸ்லிம்கள் தாங்கள் மீண்டும் தங்களுடைய சொந்த இடங்களுக்குச் சென்று குடியேற அனுமதி அளிக்க வேண்டும் என போராட தொடங்கினார்கள்.

அத்தோடு சோவியத் அரசின் கொடுங்கோலன் ஜோசப் ஸ்டாலின் செய்தது கொடுமை என்பதை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் . நிவாரணங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அழுத்தமாகப் போராடினார்கள் .
இவர்களின் இடைவிடாத போராட்டத்தின் பயனாக 1956 இல் கம்யூனிச கட்சியின் 20 ஆவது காங்கிரஸ் -மாபெரும் கூட்டம் சோவியத் அதிபர் குருச்சேவ் செச்சன்யா மக்களுக்கு இழைக்கப்பட்டது கொடுமைதான் என்பதை ஒப்புக்கொண்டார்,

இந்த தவறை அவர் ஏற்றுக்கொண்டவுடன் செச்சன்யா மக்கள் தங்களுடைய சொந்த இடம் நோக்கி பயணம் செய்தார்கள். இந்தப்பயனத்தின் போது புதைக்கப்பட்ட தங்கள் சொந்தபந்தங்களின் எலும்புகளை தங்களுடன் எடுத்துவந்தார்கள். அவற்றை தங்கள் மூதாதையர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் புதைக்க வேண்டும் என விரும்பினார்கள்.

இவர்கள் செச்சன்யா வந்து சேர்ந்தபோது தங்களுடைய குடியிருப்புகள் எல்லாம் ரஷ்ய மக்களுக்கு தாரை வார்த்து தரப்பட்டிருப்பதை பார்த்தார்கள் . ஆகவே அங்கே இன்னொரு போராட்டத்தை அவர்கள் தொடங்க வேண்டியதாயிற்று .அவர்கள் அங்கு வாழ்ந்தபோது ஏற்படுத்தி வைக்கபட்டிருந்த இஸ்லாமிய அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன.

இடிக்கப்பட்டைவகள் அல்லாமல் 800 பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டு கிடந்தன . 400 மார்க்க கல்லூரிகள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டிருந்தன .பெரும்பாலான பள்ளிகளும் மார்க்க கல்லூரிகளும் மியூசியங்களாக மாற்றப்பட்டிருந்தன . செச்சன்யா முஸ்லிம்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

1978 க்கு பிறகுதான் அதாவது அவர்கள் நாடு கடத்தப்பட்டு 34 வருடங்களுக்கு பின்னரே அவர்களால் கௌகாஸ் பகுதில் 40 பள்ளிகளை திறக்க முடிந்தது . அதுபோது அவர்களிடம் 300 உலமாக்கள் மட்டும்தான் உயிருடன் இருந்தார்கள்.

செச்சன்யா முஸ்லிம்களிடம் ஒரு பழக்கம் இருந்தது அவர்கள் தங்களுடைய வரலாற்றை நினைவாற்றல் வழியாகவே பாதுகாத்து வந்தனர் . முழுமையாக வரலாறு தெரிந்த ஒருவர் தனக்கு தெரிந்த வரலாற்றை தன்னுடைய சந்ததியிடம் ஒப்படைப்பார் . இப்படி அவர்களுடைய வரலாறும் கலாச்சாரமும் பாதுக்காக்கப்பட்டு வந்தன.

ஆனால், சோவியத் அதிபர் கம்யூநிசதலைவர் ஜோசப் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்த வரலாற்று தடம் தடைப்பட்டது. இந்த வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் செச்சன்யா மக்கள் மீண்டும் உழைகலானார்கள்.

இந்நிலையில் செச்சென்ய மக்களின் இடைவிடாத போராட்டத்தினால் அவர்களுக்குத் தன்னாட்சி உரிமை கிடைத்தது. இதனை செச்சென் இங்குஷ் தன்னாட்சி போது உடமை குடியரசு என ரஷ்ய கம்யூனிஸ்ட் அரசு அழைத்தது.

அதன்பிறகு அவர்கள் இன்று வரை தங்களுடைய மறு வாழ்வை , தாவது தங்கள் வாழ்கையை புனரமைத்து கொள்ளும் பணிகளில் ஈடபட்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்கை புனரமைப்பு என்பது அவர்களை பொறுத்தவரை இஸ்லாமிய கலாச்சாரம், பண்பாடு மற்றும் தங்களுடைய பூர்வீக வரலாறு ஆகியவற்றை மீண்டும் கட்டி எழுப்புவதுதான்.

செச்சன்யா முஸ்லிம்களின் தனித்தன்மை என்னவென்றால் அவர்கள் தங்களுடைய சொந்த வாழ்கையை வளப்படுத்திட விரும்புவதை விட இஸ்லாமிய ஒழுக்கங்களையும் இஸ்லாமிய வாழ்க்கையையும் கட்டி எழுப்புவதையே அதிகமாக விரும்புகின்றார்கள் .அவர்களை பொறுத்தவரை வாழ்கையின் அனைத்து பகுதிகளை விட இறை நம்பிக்கையும் இஸ்லாமிய வாழ்கை முறையும்தான் முக்கியம் .

1991 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தான் முஜாஹிதுகளின் கைகளில் மரண அடி வாங்கியது . ஆப்கானிஸ்தான் முஜாஹிதுகளிடம் வாங்கிய அடியில் சோவியத் ரஷ்யா சுக்கு நூறானது . யூ.எஸ்.எஸ்.ஆர். என்ற ஒருங்கிணைந்த ரஷ்யா நொறுங்கி சோவியத் போது உடமை நாடுகள் என்றழைக்கப்பட கூடிய காமன் வெல்த் நேஷன்ஸ் என்றானது .

சோவியத் ரஷ்யாவிலிருந்து எஸ்டோனியா, லித்வேனியா ,லாத்வியா, ஜார்ஜியா, உக்ரைன் ஆகிய மாநிலங்கள் விடுதலை அடைந்துவிட்டதாக அறிவித்து தனி குடியரசாயின . இவையெல்லாம் தனி அரசுகள் என்று ரஷ்ய அரசும் அங்கீகரித்தது.

ஆனால் செச்சன்யாவின் எதிர்காலத்திற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் செச்சன்யா, ரஷ்யர்களால் உதுமானிய பேரரசுடமிருந்து ,தனியாக பிரித்து எடுத்து ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட ஓர் இடமாகும். செச்சன்யா மற்ற மற்ற மாநிலங்களை போல் தானும் தனி குடியரசாக மாறியதாக அறிவித்தது . அதே நேரத்தில் மற்ற மாநிலங்களை போல தங்களுடைய விடுதலையையும் அங்கீகரிக்க வேண்டும் என கோரியது .

இதனை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட ரஷ்யா பின்னர் தனது முடிவை மாற்றிக்கொள்வதாக அறிவித்தது . டிசம்பர் 10 ஆம் நாள் 1994 ஆம் ஆண்டு சோவியத் அதிபர் போரிஸ் எல்ஸ்டின் செச்சன்யா மீது படை எடுத்தார்.

படைகள் கௌகாஸ் பகுத்திக்கு பரவின விமானப்படைகள் காரணமின்றி கௌகாஸ் பகுதி மற்றும் செச்சன்யா பகுதிகளில் குறைந்த சக்தி உள்ள அணு குண்டுகளையும் கொத்து வெடி குண்டுகளையும் வீசின . ரஷ்யாவின் இந்த அடாத செயலால் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் பின மலைகளாக குவிந்தார்கள்.

தங்களுடைய தன்னாட்சியை அங்கீகரித்த ஒரு நாடே எந்த ஆயுதமும் இல்லாத தங்கள் மீது குண்டு மழைகளை பொழிவதை கண்ட முஸ்லிம்கள் நிலைகுலைந்தார்கள்.பின மலைகளாக குவிவதை தவிர வேறு வழி தெரியவில்லை

ஆனால் அதே காலக்கட்டத்தில் ரஷ்யாவிடமிருந்து பிரிந்து போன பிற மாநிலங்களின் மீது ரஷ்யா படை எடுக்கவில்லை .குண்டு மழைகளை பொழியவில்லை . காரணம் அங்கு வாழ்பவர்கள் முஸ்லிம்கள் இல்லை . செச்சன்யா மீது குண்டு மழை பொழிந்ததற்கு காரணம் அங்கு வாழ்பவர்கள் முஸ்லிம்கள்.

ரஷ்யாவின் இந்த மிருக பலத்திற்கு எதிராக செச்சன்யா முஸ்லிம்கள் கையில் கிடைத்ததை கொண்டு போராடினார்கள் . ரஷ்ய படைகளை விரட்டி அடிப்பதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள் . ரஷ்ய படைகள் பின்வாங்கின .

1994 இல் தொடங்கிய இந்த போர் 1996 இல் முடிந்தது . பல்லாயிரக்கணக்கான் முஸ்லிம்கள் தங்களுடைய உயிரை தந்து ஷஹீதான பிறகு செச்சன்யா முஸ்லிம்கள் தங்களுடைய உடமைகளையும் வீடுகளையு இழந்த பிறகு 1996 இல் ஒரு முடிவு ஏற்பட்டது . ரஷ்ய படைகளின் தாக்குதலில் ஒரு தளர்வு ஏற்பட்டது .

இந்த அமைதியும் அதிக நாள் நீடிக்கவில்லை .1999 ஆம் ஆண்டு அப்போதைய ரஷ்யாவின் அதிபர் புடின் செச்சன்யா மீது மீண்டும் படை எடுப்பு நடத்தினார் . வழக்கம் போலவே எந்த காரணமும் சொல்லவில்லை . அந்த முஸ்லிம்களை சீரழித்தார் .சின்னாபின்னாமாக்கினார் .காரணம் கேட்டபோது தீவிரவாதிகளை தேடுவதாக கூறினார் . யார் தீவிரவாதிகள் என கேட்டபோது "ரஷ்ய அரசுக்கு எதிராக சிந்திப்பவர்கள் " எனக்கூறினார் .

செச்சன்யா முஸ்லிம்களிடம் தாங்களே அங்கீகரித்த விடுதலையையும் சுதந்திரத்தையும் மீறி அந்த மக்கள் மீது இப்படி தொடர்ந்து வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.

( நன்றி: மு . குலாம் முகம்மது அவர்கள், ஆசிரியர் : வைகறை வெளிச்சம் )

1. நாம் மறந்து விட்ட ஒன்றும்... நாமே காரணமாக இருப்பதும்....

மேற்கூறிய இந்த வரலாற்று கோரங்களை வாசிக்கும் நாம் இன்னொன்றையும் மறந்து விடக்கூடாது.

இதே சிலுவைப் படை வீரர்களை சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் தலைமையின் கீழ் அல்லாஹ் வீழ்த்தி வெற்றியைத் தந்தான்.

இதே ஸ்பெயினில் முஸ்லிம்களுக்கு 800 ஆண்டுகால ஆட்சி, அதிகார பீடத்தை அல்லாஹ் வழங்கினான்.

இந்திய தேசத்தில் 900 ஆண்டுகால ஆட்சி, அதிகார பீடத்தை அல்லாஹ் வழங்கி இருந்தான்.

ஏன் நிலைமை தலை கீழாக மாறிப்போனது. ஏன் முஸ்லிம் சமூகம் இவ்வாறான இழி நிலைக்கு ஆளாக்கப்பட்டது.

எதிரிகளையும், எதிர்ப்புகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிற நாம் எதிர்ப்புகள் ஏன் உருவானது? எதிரிகள் எப்படி உருவானார்கள்? என்பது குறித்து சிந்திக்க மறந்து விட்டோம்.

நமக்கு வழங்கப்பட்ட ஓர் நிஃமத் நம்மை விட்டும் போய் விடுகிறது, அல்லது இன்னொருவரின் கையில் சென்று விடுகிறது என்றால் அதற்கான காரணம் என்ன?

அல்லாஹ் குர்ஆனில் தெளிவு படுத்துகின்றான்…..

ذَلِكَ بِأَنَّ اللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِعْمَةً أَنْعَمَهَا عَلَى قَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَأَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ ()
“எந்தச் சமுதாயத்தாரும் தங்களின் நடைமுறையை மாற்றிக் கொள்ளாத வரை, நிச்சயமாக! அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த எந்த ஓர் அருட்கொடையையும் மாற்றுவதில்லை”.                                            ( அல்குர்ஆன்: 8: 53 )

وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ

“நீங்கள் (அல்லாஹ்வை) புறக்கணித்து விட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்”.   ( அல்குர்ஆன்: 47 : 38 )

எனவே, நமக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு ஒரு வகையில் நம்மால் ஏற்பட்டிருப்பது தான்.

அல்லாஹ் பனூ இஸ்ரவேலர்கள் குறித்து அல்குர்ஆனில் பல இடங்களில் சிறப்பித்துக் கூறுகின்றான்.

يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ ()

“இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும், உங்களை நான் உலகத்தோர் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவு கூர்ந்து பாருங்கள்”.              ( அல்குர்ஆன்: 2: 47 )

وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ ()

“மூஸா தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவு கூறுங்கள்! “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்களிடையே நபிமார்களைத் தோற்றுவித்தான், உங்களை ஆட்சியாளர்களாகவும் ஆக்கினான், மேலும், உலக மக்களில் வேறு எவருக்கும் வழங்கப்படாதவற்றை எல்லாம் வழங்கினான்”.     ( அல்குர்ஆன்: 5: 20 )

وَنُرِيدُ أَنْ نَمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ ()

“மேலும், பூமியில் (ஃபிர்அவ்னால்) எவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாகவும், அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கிடவும் நாம் நாடியிருந்தோம்”.                                             ( அல்குர்ஆன்: 28: 5 )

இறுதியில், அவர்களிடம் இருந்து அல்லாஹ் தலைமைத்துவத்தைப் பறித்தான், நாடோடிகளாக ஆக்கினான், இழிவான சமுதாயமாக ஆக்கினான்.

என்ன காரணம், அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்தார்கள், அல்லாஹ்வை விமர்சித்தார்கள், நபிமார்களைக் கொன்றார்கள், அல்லாஹ்வின் வேதத்தில் விளையாடினார்கள், இன்னும் பலவாறாக நடந்து கொண்டார்கள்.

உலக மக்களிலேயே மிகச் சிறந்த சமுதாயம் என அல்லாஹ்வால் அழைக்கப் பட்ட ஓர் சமூகத்தின் நிலையை மாற்றிட காரணமாக அமைந்தது அவர்களின் அல்லாஹ்விற்கெதிரான நடைமுறை தான் என அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் விவரிக்கின்றான்.

ஸ்பெயினாக இருக்கட்டும், இந்தியாவின் மொகலாயர்களாக இருக்கட்டும் விரல் விட்டு எண்ணுகிற ஆட்சியாளர்களைத் தவிர்த்து எவரும் இஸ்லாமிய வாழ்க்கையை வாழவில்லை, இஸ்லாமிய நடைமுறையைக் கொண்டிருக்க வில்லை, அவர்களுக்குள் அடித்துக் கொண்டார்கள், போரிட்டுக் கொண்டார்கள், பணம், பதவி, அந்தஸ்து மோகம் அவர்களின் கண்ணை மறைத்தது. அவர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த முஸ்லிம் சமூகமும் அவ்வாறே இருந்தனர்.

அப்போது அல்லாஹ் தன்னுடைய ஸுன்னத் எனும் நடைமுறையைப் பயன் படுத்தி ஆட்சியதிகாரத்தை மாற்றிக் கொடுத்தான். முஸ்லிம்களுக்கு வழங்கிய நிஃமத் களைப் பறித்தான்.

அந்த சமயங்களில் விழிப்புணர்வோடும், அல்லாஹ்வைப் பயந்தும் வாழ்ந்த மக்களுக்கு இடையிடையே வசந்தத்தை ஏற்படுத்தினான்.

ஆகையால் தான் இந்தியாவில், மொகலாயர்களில் ஔரங்கஜீப் (ரஹ்) காலத்தில் சிறு மலர்ச்சியையும், ஃபலஸ்தீனில் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் காலத்தில் சிறு வசந்தத்தையும் முஸ்லிம் உலகால் அனுபவிக்க முடிந்தது.

2. எந்நிலையிலும் முஸ்லிமாகவே வாழவேண்டும்….

வெற்றியின் களிப்பில் திளைக்கும் போது நிதானமும், அல்லாஹ்வைப் பற்றிய பயமும், முஸ்லிமாகவே வாழ வேண்டும் என்கிற மனோநிலையில் இருக்கிற சமூகத்திற்கு அல்லாஹ் ஒரு போதும் தோல்விகளை, சோதனைகளை ஏற்படுத்துவதில்லை.

ஒரு காலகட்டத்தில் அப்படியான மேன்மக்களும் முஸ்லிம் உம்மத்தில் வாழ்ந்து தான் இருக்கின்றார்கள்.

அபுத்தர்தா (ரலியல்லாஹு அன்ஹூ) அவர்களும்… சைப்ரஸ் வெற்றியும்…

சைப்ரஸ் இது சிரியாவின் மேற்கே அமைந்திருந்த ஓர் அழகிய தீவு. ஆனால், இப்போது இஸ்லாமியர்களுக்கெதிரான அபாயகரமான தீவாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

ஆம்! ரோமர்கள் முஸ்லிம்களுடன் தோற்றுப் போய் ஓடி ஒளிந்து அங்கு தான் தஞ்சம் புகுந்திருந்தனர். இப்போதோ அவர்கள் பெருமளவில் ஆயுதங்களைத் திரட்டி வலுவான கப்பற்படையை உருவாக்கி முன்னர் அடைந்த தோல்விக்கு பலி வாங்கும் முகமாக தயாராகி முஸ்லிம்களை அழிக்க நாள் குறித்துக் கொண்டிருந்தனர்.

இந்த தீவின் மீது படையெடுத்து அங்கேயும் ரோமர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் முஆவியா (ரலி) அவர்களுக்கு இருந்தது. ஆயினும், உமர் (ரலி) அவர்கள் அதற்குள் ஷஹாதா வீரமரணம் அடைந்து விட்டார்கள்.

இதே கருத்தை உஸ்மான் (ரலி) அவர்களிடம் முஆவியா (ரலி) அவர்கள் தெரிவித்த போது உஸ்மான் (ரலி) அவர்கள் அதற்கு ஒப்புதல் தந்தார்கள்.

இதற்கு முன்னர் நடந்த போர்கள் அனைத்தும் நிலங்களிலும், பாலைவனங்களிலும் நடைபெற்றது. ஆனால், இது முற்றிலும் வேறுபட்டு கடல் மார்க்கமாக நடைபெறும் போராகும்.
ஆகவே, எந்த ஒரு முஸ்லிமையும் நிர்பந்திக்காமல், வற்புறுத்தாமல் படை வீரர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு சைப்ரஸ் மீது போர் தொடுக்க அனுமதி வழங்கினார்கள்.

அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்ய அல்லவா போர் நடத்தப் படுகின்றது. ஆர்வமாக பலர் வந்து இணைந்து கொள்கின்றார்கள். அந்தப் படையில் அபூதர் அல் ஃகிஃபாரீ (ரலி), ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) உப்பாதா இப்னு ஸாமித் (ரலி) அவரின் மனைவி உம்மு ஹராம் பிந்த் மில்ஹான் (ரலி), அபூதர்தா (ரலி) ஆகிய மூத்த நபித்தோழர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அவர்களின் தலைமையில் படை கடல் மார்க்கமாக புறப்பட்டுச் சென்றது.

அல்லாஹ் அந்தப் போரை வெற்றிகரமாக முடித்து வைத்தான். இந்தப் போர் ஹிஜ்ரி 28 மற்றும் 29 –இல் நடைபெற்றது.

ஏராளமான பொருட்செல்வங்கள் ஃகனீமத்தாக வந்து சேர்ந்தன. அந்தச் செல்வங்களை எல்லாம் முஸ்லிம் வீரர்கள் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

كانت الدنيا كلها في عين أبي الدرداء مجرّد عارية..
عندما فتحت قبرص وحملت غنائم الحرب الى المدينة رأى الناس أبا الدرداء يبكي... واقتربوا دهشين يسألونه، وتولى توجيه السؤال اليه:" جبير بن نفير":
قال له:
" يا أبا الدرداء، ما يبكيك في يوم أعز الله فيه الاسلام وأهله"..؟؟
فأجاب أبو الدرداء في حكمة بالغة وفهم عميق:
ويحك يا جبير..
ما أهون الخلق على الله اذا هم تركوا أمره..
بينما هي أمة، ظاهرة، قاهرة، لها الملك، تركت أمر الله، فصارت الى ما ترى"..!
أجل..


அதையெல்லாம் கண்ட அபூதர்தா (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அருகில் இருந்த ஜுபைர் இப்னு நஃபீர் (ரலி) அவர்கள்அபூதர்தா அவர்களே! அல்லாஹ் சத்திய சன்மார்க்கத்திற்கு வலுவையும், வெற்றியையும் தந்திருக்கும் இந்த தருணத்தை மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும் வரவேற்காமல் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கின்றீர்களே?” ஏன் என்ன காரணத்திற்காக அழுகின்றீர்கள்?”.

அபூதர்தா (ரலி) அவர்கள் வினா தொடுத்த ஜுபைரை நோக்கிஜுபைரே! அல்லாஹ்வோ வெற்றிக்கு மேல் வெற்றியாக வழங்கிக்கொண்டிருக்கின்றான். வெற்றியும் ஆட்சியும், நிலப்பரப்பும் விரிவடைந்து, அதனால் கிடைக்கும் வெகுமதியில் மனம் மயங்கி, இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகள் விஷயத்தில் முஸ்லிம்கள் பொடுபோக்காக இருந்து விட்டால் எத்தகைய கேவலமானவர்களாக அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் காட்சி தருவார்கள்?”

ஜுபைரே! இதோ, நம் கண் முன்னே வீழ்ந்து கிடப்பவர்களும், கைதியாய் நிற்பவர்களும் யார் தெரியுமா? நேற்று வரை இந்தப் பூமியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள். ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ்வை மறந்து, அகங்காரத்தோடும், ஆணவத்தோடும் இருந்ததால், இன்று நம்மிடம் தோற்றுப் போய் இருக்கின்றார்கள்.

இதைப் போன்ற ஓர் மனோநிலை இந்த பொருட்செல்வங்களையும், வெகுமதிகளையும் கண்டு பிரமித்து நிற்கிற முஸ்லிம்களுக்கு ஏற்படுமானால், இன்றைய இந்த வெற்றி நாளை என்னவாகும்?” இவர்களுக்கு ஏற்பட்ட கதி நாளை நமக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே?” என்று நினைத்து தான் நான் அழுகின்றேன்என்றார்கள் அபூதர்தா (ரலி) அவர்கள்.

                       ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல்… {ஸல்} அவர்கள் )

உத்பா இப்னு கஸ்வான் (ரலியல்லாஹு அன்ஹூ) அவர்களும்…. பாரசீக வெற்றியும்…..

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் இஸ்லாமிய நிலப்பரப்புகள் விரிவடைந்து கொண்டிருந்த அற்புதமான தருணமும் கூட!

அந்த நேரத்தில் அன்றைய பெரும் வல்லரசுகளான ரோம் மற்றும் பாரசீகப் படைகளுடன் முஸ்லிம்கள் இரு வேறு திசைகளில் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

இன்றைய இராக்கின் முக்கால் பகுதி அன்றைய பாரசீகத்தின் வசம் தான் இருந்தது.

முஸ்லிம்களின் பெரும்படையொன்றை அனுப்பிய கலீஃபா உமர் (ரலி) அவர்கள் பாரசீகத்தை வென்று வருமாறு ஆணை பிறப்பித்தார்கள்.

பெரும்பாலான பகுதிகளில் முஸ்லிம்களின் கை ஓங்கியிருந்தாலும் பாரசீகர்களில் இராணுவத்தலைமை இடமாகத் திகழ்ந்த உபுல்லா நகரை முஸ்லிம்களால் நெருங்கக் கூட முடியவில்லை.

இந்தத் தகவலை முஸ்லிம்களின் படைத்தளபதி கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்குத் தெரிவித்து, இன்னும் கூடுதல் எண்ணிக்கையில் ஒரு படை வந்தால் பாரசீகத்தின் வெற்றி நிச்சயம் உறுதி செய்யப்படும் என்று கடிதம் ஒன்றை அனுப்பினார்.

فقال له أمير المؤمنين - عمر بن الخطاب: "انطلق أنت ومن معك، حتى تأتوا أقصى بلاد العرب، وأدنى بلاد العجم، وسِرْ على بركة الله ويُمنِه، ادعُ إلى الله مَن أجابك، ومن أبَى فالجزية، وإلا فالسيف في غير هَوادة، كابدًا العدو، واتقِ الله ربك".

ஹிஜ்ரி 14 ஆம் ஆண்டு உத்பா (ரலி) அவர்களின் கரங்களில் இஸ்லாமிய கொடியைக் கொடுத்த உமர் (ரலி) அவர்கள் உத்பா அவர்களே! இதோ இம்மக்களை அழைத்துக் கொண்டு உபுல்லா நோக்கிச் செல்லுங்கள்.

முந்தைய படை வீரர்களுக்கு துணையாக உங்களை அனுப்புகின்றேன். உபுல்லா இது பாரசீகர்களின் இராணுவத்தலைமையகம் ஆகும்.

அதை வெற்றி கொள்ள அல்லாஹ் உமக்கும், உம் படைக்கும் உதவி புரிவான். நீங்கள் அம்மக்களை வெற்றி கொண்டால் அல்லாஹ்வின் சத்திய தீனின் பால் அழைப்பு விடுங்கள்!

அம்மக்கள் உமது அழைப்பை ஏற்றுக் கொண்டால் அன்போடு அம்மக்களை நடத்துங்கள். உமது அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையானால் ஜிஸ்யாவை அவர்களின் மீது விதியாக்குங்கள்.

இதற்குப் பிறகும் அவர்கள் உம்மோடு பகைமை கொண்டால் அவர்களின் பகைமை தீரும் வரை, உமது தலைமையை அவர்கள் ஏற்கும் வரை அவர்களுடன் நீர் போரிடுவீராக!

உத்பா அவர்களே! உங்களுடைய கடமைகளை நிறைவேற்றுவதில் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!என்று உரை நிகழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.

ஒரு இராணுவத் தலைமையகத்தை வெற்றி கொள்ள முந்நூற்றி சொச்சம் பேரை அனுப்பி வைக்கிறார்கள். அவர்களும் கொஞ்சம் கூட மறுப்பேதும் கூறாமல் புறப்பட்டுச் செல்கிறார்கள்.

அங்கே, அவர்கள் ஈமானிய உணர்வின் மூலம் அடைந்த அசாத்தியமான தைரியத்தோடும் துணிவோடும் தங்களின் இனிய பயணத்தை தொடர்ந்தார்கள்.

உபுல்லாவை நெருங்கியதும் உத்பா (ரலி) அவர்களும், படைவீரர்களும் அதிர்ச்சியுற்று நின்று விட்டனர். காரணம் எதிரிகளின் எண்ணிக்கை பெருமளவில் இருந்ததைக் கண்டார்கள்.

நேரடித் தாக்குதல் உடனடியாக எந்தப் பயனையும் தராது என்பதை உணர்ந்த உத்பா (ரலி) அவர்கள் வேறு வழியில் சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

அதன் விளைவாக, ஒரு யோசனைத் தோன்றவே தம் படை வீரர்களையும், பெண்களையும் இரு அணிகளாகப் பிரித்தார்கள்.

முன்னால் ஆண்களின் அணியைத் தாங்கள் வழி நடத்திச் செல்வதென்றும், பின்னால் பெண்களின் கையில் ஏராளமான கொடிகளைக் கொடுத்து ஒருவர் பின் ஒருவராக சிறிது இடைவெளி விட்டு நடந்து வரவேண்டும் என்றும்,

கால்களால் புழுதிகளைக் கிளறிக் கொண்டே வர வேண்டும். தூரத்தில் இருந்து பார்க்கின்ற எதிரிகளுக்கு ஏதோ பெரும் படையொன்று தம்மைத் தாக்க வருவது போல் ஒரு மாயத் தோற்றத்தை அது ஏற்படுத்தி, எதிரிகளின் உள்ளத்தில் ஒருவித பீதியை உண்டு பண்ண வேண்டும்என்றும் முடிவு செய்து அப்படியே படைப் பிரிவை அமைத்துக் கொண்டு உபுல்லாவை நெருங்கினார் உத்பா (ரலி) அவர்கள்.

அவர்கள் எதை நினைத்து இந்த தந்திரத்தைக் கையாண்டார்களோ, அது ஒரு சில மணித்துளிகளிலேயே நடைபெறவும் செய்தது.

ஆம்! பெரும் படையொன்று தம்மை நோக்கி தாக்க வருவதாக நினைத்துக் கொண்ட பாரசீகர்கள் உபுல்லாவை காலி செய்து விட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடியே விட்டார்கள்.

எந்த போராட்டமும், இரத்தமும் சிந்தாமல் பாரசீக வெற்றி சாத்தியமானது.

உபுல்லாவின் கோட்டைக்குள் நுழைந்த முஸ்லிம் படையினருக்கு ஆச்சர்யம் தாளவில்லல்.

கோட்டைக்குள் பொன்னும், பொருளும் மலை போல் குவிந்து கிடந்தது.

கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு இந்த வெற்றியை குறித்தும் எதிர்கால திட்டம் குறித்தும் விரிவான ஒரு கடிதத்தை எழுதினார்கள்.

அதில் உடனடியாக அங்கே ஓர் பள்ளிவாசலை நிறுவ வேண்டும் என்றும்  உபுல்லாவின் கோட்டையை இஸ்லாமிய இராணுவத்தளமாகவும், ஒரு நகரை உருவாக்கி ஆட்சியின்  தலைமையிடமாகவும் அமைக்க வேண்டும்கொண்டு என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

உத்பா (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதற்கு இசைவு தந்தார்கள்.

பஸ்ரா எனும் நகரை உருவாக்கி, ஒரு பள்ளிவாசலையும் நிறுவி, இராணுவத் தலைமையிடத்தையும் உருவாக்கினார்கள்.

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்களையே இஸ்லாமிய அரசின் முதல் ஆளுநராக நியமித்தார்கள்.

பாரசீகத்தின் வளங்களைக் கேள்விப் பட்ட மதீனத்து முஸ்லிம்கள் பெருமளவில் பஸராவிற்கு குடிபெயர்ந்தார்கள்.

ஆனால், மிகவும் துடிப்போடு இருந்த முஸ்லிம்கள் பாரசீக வளங்களைக் கண்டதும் ரொம்பவே மாறிப் போய் விட்டார்கள்.

நிலம் வாங்குவதிலும், வீடு கட்டுவதிலும் தங்களை முழு வீச்சில் ஈடுபடுத்திக் கொண்ட முஸ்லிம்களைக் கண்டதும் கலங்கிப் போன உத்பா (ரலி) ஆழ்ந்த கவலையில் மூழ்கிப் போனார்கள்.

இப்படியே போனால், சொகுசு வாழ்க்கையில் இம்மக்கள் மூழ்கிப்போனால் ஈமானிய வாழ்க்கையை இழந்து விடுவார்களோ? என்ற அச்சம் உத்பா (ரலி) அவர்களின் ஆழ்மனதை ரணமாக்கிக் கொண்டிருந்தது.

أخبرنا يحيى بن محمود بن سعد بإسناده عن أبي بكر بن أبي عاصم قال: حدثنا أزهر بن حميد أبو الحسن، حدثنا محمد بن عبد الرحمن الطفاوي، حدثنا أيوب السختياني، عن حميد بن هلال، عن خالد بن عمير: أن عتبة بن غزوان - وكان أمير البصرة - خطب فقال في خطبته:
" ألا إن الدنيا قد ولّت حذّاء، ولم يبق منها إلا صبابة كصبابة الإناء يتصابها أحدكم، وإنكم ستنتقلون منها لا محالة، فانتقلوا منها بخير ما بحضرتكم إلى دار لا زوال لها ، وأعوذ بالله أن أكون عظيماً في نفسي صغيراً في أعين الناس، "

நிலைமை விபரீதமாவதற்குள் மக்கள் அனைவரையும் பள்ளிவாசலில் ஒன்று கூட ஆணையிட்டார்கள்.

மக்கள் ஒன்று கூடியதும், மக்கள் திரள் நோக்கிமக்களே! அறிந்து கொள்ளுங்கள்! இவ்வுலக வாழ்வும் அதன் சொகுசும் மிக விரைவில் அழிந்து போய் விடும்! அழிவே இல்லாத ஒரு உலகத்தை நோக்கியே நாம் வாழ வேண்டும் என நபி {ஸல்} அவர்களால் வழிகாட்டப்பட்டு இருக்கின்றோம்.

அந்த உலகத்திற்கு நீங்கள் செல்ல வேண்டுமேயானால் மிகச் சிறந்த நற்செயல்கள் செய்திருக்க வேண்டும்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இஸ்லாத்தை அறிமுகம் செய்த போது அவர்களுடன் இருந்தது ஒரு சின்னஞ்சிறு கூட்டம் அந்தக் கூட்டத்தில் ஏழாவது நபராக நான் இருந்தேன்.

لقد رأيتني سابع سبعة مع رسول الله صلى الله عليه وسلم، ما لنا طعام إلا ورق الشجر، حتى قرحت اشداقنا.
அண்ணலாரையும், அவர்தம் குடும்பத்தார்களையும், தோழர்களையும் ஊர் விலக்கு செய்து அபூ தாலிப் கணவாயில் தங்கியிருந்த போது அவர்களுள் நானும் ஒருவன், உண்ண உணவின்றி இலைகளையும், தழைகளையும் உண்டதால் எங்களின் உதடுகளிலும் வாய்களிலும் கொப்பளங்கள் ஏற்பட்டது.

ولقد رزقت يوما بردة، فشققتها نصفين، أعطيت نصفها سعد بن مالك، ولبست نصفها الآخر"
மேலும், என்னிடம் அணிந்து கொள்ள ஆடை கூட கிடையாது, ஒரு போது யாரோ தூக்கியெறிந்த ஒரு பழைய துணி ஒன்று வீதியில் கிடந்தது. அதை எடுத்து பாதியாகக் கிழித்து நானும் ஸஅத் இப்னு மாலிக் (ரலி) அவர்களும் இடுப்பில் அரைத் துணியாக கட்டிக் கொண்டோம்.

ஆனால், இன்றோ அக்குழுவில் இருந்த எங்களில் சிலர் சில நகரங்களுக்கு தலைவர்களாக ஆகியிருக்கின்றோம்.

உலக மக்களின் பார்வையில் நான் உயர்ந்தோனாகவும், அல்லாஹ்வின் பார்வையில் கீழோனவனாகவும் ஆகிவிடாமல் இருக்க அவனிடமே நான் பாதுகாவல் தேடுகின்றேன்!” என்று கூறி தமது உரையை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.

ثم خرج حاجاً وخلف مجاشع بن مسعود، وأمره أن يسير إلى الفرات، وأمر المغيرة بن شعبة أن يصلي بالناس،
ஏறக்குறைய நான்காண்டுகள் அம்மக்களோடு இருந்து அவர்களின் குண நலன்கள் மாறிட போராடினார்கள். இறுதியாக ஹிஜ்ரி 18 –ஆம் ஆண்டின் ஒரு ஷவ்வால் மாதத்தின் இறுதியில் இந்த உரையை நிகழ்த்தி விட்டு ஹஜ்ஜுக்காக அங்கிருந்து புறப்பட்டார்கள்.

தங்களுக்கு பகரமாக முஜாஷஃ இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களை தற்காலிக ஆளுநராகவும், முகீரா இப்னு ஷுஅபா (ரலி) அவர்களை இமாமாகவும் வைத்து விட்டு ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வந்தார்கள்.

فلما وصل عتبة إلى عمر استعفاه عن ولاية البصرة، فأبى أن يعفيه،
ஹஜ் கடமையை முடித்ததும் மதீனா வந்த உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்கள் நேராக ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து தன்னால் தொடர்ந்து ஆளுநர் பதவியில் நீடிக்க முடியாது என்றும், ஆளுநர் பதவியில் இருந்து தம்மை அகற்றிவிடுமாறு கோரி நின்றார்கள்.
فيصيح به عمر:
" والله لا أدعك.. أتضعون أمانتكم وخلافتكم في عنقي.. ثم تتركوني"..؟؟!!
فقال عتبة بن غزوان: اللهم لا تردني إليها! فسقط عن راحلته فمات ، وهو منصرف من مكة إلى البصرة، بموضع يقال له: معدن بني سُليم، قاله ابن سعد.

அது கேட்ட உமர் (ரலி) அவர்கள் உரத்த குரலில்அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களின் பொறுப்புக்களை, உங்களின் தலைமைத்துவத்தை என் கழுத்தில் சுமத்தி விட்டு சென்று விடலாம் என்று எண்ணுகின்றீகளா?”

ஒரு போதும் உங்களை நான் விட்டு விட மாட்டேன்! மீண்டும் பஸராவிற்கு செல்லுங்கள்!” என்று கண்டிப்புடன் கூறினார்கள்.

இதைக் கேட்டதும், பஸராவை நோக்கி தமது வாகனத்தை செலுத்திய உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்கள் வானை நோக்கி கையை உயர்த்தியா அல்லாஹ்! என்னை பஸராவிற்கு அழைத்துச் சென்றிடாதே!

அல்லாஹ் மனத்தூய்மையுடன் செய்த அந்த துஆவை ஒப்புக் கொண்டான். ஆம்! பஸரா சென்றிடும் வழியில் பனூ ஸுலைம் பள்ளத்தாக்கின் அருகே வாகனம் இடரி கீழே விழுந்து ஷஹீதானார்கள்.

               ( நூல்: உஸ்துல் ஃகாபா, ரிஜாலுன் ஹவ்லர் ரசூல் {ஸல்}.. )

நம்முடைய சூழ்நிலைகள் ஷரீஆவிற்கும், இஸ்லாத்திற்கும் முரணாக அமைந்திருக்கும் பட்சத்தில் நம்முடைய நிலைகளை அல்லாஹ் மாற்றுவான் என்கிற செய்திகளை மேற்கூறிய செய்திகளின் ஊடாக உறுதியாக விளங்க முடிகின்றது.

இப்போது, முடிவெடுப்போம்! 21 –ஆம் நூற்றாண்டு முஸ்லிம்கள் வரலாறு நிஃமத்துக்கள் பறிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் என்று ஒரு போதும் இடம் பெற்றுவிட அனுமதிக்க மாட்டோம்!” என்று.

முஸ்லிம் உலகும், இஸ்லாமும் தழைத்தோங்க உதவியாளர்களாய் இருந்தவர்கள் தான் 21 –ஆம் நூற்றாண்டு முஸ்லிம்கள் என வரலாறு படைப்போம்!

அல்லாஹ் நம்மை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் முஸ்லிம்களாகவே வாழச்செய்வானாக!

முஸ்லிம்களாகவே மரணிக்கச் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!