Thursday, 10 August 2017

சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்!!!சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்!!!இந்தியா 70 –ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றது.

சீனாவின் அச்சுறுத்தல், பாகிஸ்தானின் அத்துமீறல், நக்சலைட்டுகளின் தாக்குதல், மாவோயிஸ்ட்களின் மிரட்டல், தீவிரவாதிகளின் ஊடுருவல் என பல பதற்றமான சூழ்நிலைகள் நிலவுகிற போதும் ஆகஸ்ட் 15 –ஆம் தேதியை கொண்டாட, பெற்ற சுதந்திரத்தைக் கொண்டு மகிழ்ந்திட ஆவலோடு இந்தியப் பிரஜைகள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த நேரத்தில் சுதந்திர இந்தியா என்கிற இடத்தை நோக்கிய நகர்வில், சுதந்திரப் போராட்டம் என்கிற பாதையை நோக்கிய பயணத்தில் முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பை, அர்ப்பணிப்பை எண்ணிப் பார்த்திடவும், சமூக முற்றத்திற்கு எடுத்துக் கூறிடவும் முஸ்லிம் சமூகத்திற்கு நியாயமான கடமை இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

ஏனெனில், வரலாறுகள் திரிபுகளுக்கும், மாற்றத்திற்கும் உள்ளாகிக் கொண்டு வருகிற மகா மோசமான காலம் இது.

”அப்துல்கலாம் எனும் முஸ்லிம் சரஸ்வதி தேவியின் கையில் வைத்திருக்கும் வீணையை வைத்திருப்பார். தன் வேதத்தை விட பகவத் கீதையை அதிகம் விரும்புவார்” என்பது போன்ற தோற்றத்தை அடுத்த தலைமுறைக்கு வரலாறாக விதைக்க முற்பட்டுக் கொண்டிருக்கும் காலமும் கூட.

இந்துக் கடவுளர்களையும், இந்து வேதத்தையும் மதிக்கின்றவனே முஸ்லிம் என்கிற முக்கியமான விஷ வித்து இன்று விதைக்கப் பட்டிருக்கின்றது. அது விருட்சமாக மாறும் போது தான் அதன் விளைவுகள் உலகிற்குத் தெரியவரும்.
அல்லாஹ், இந்த தேசத்தில் வாழும் அனைவரையும் அனைத்து விதமான ஆபத்துகளில் இருந்து காத்தருள்வானாக! ஆமீன்!.

போராட்ட குணமும்… முஸ்லிம் சமூகமும்…

நீதிக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக இருக்கட்டும், அநீதிக்கு எதிராக போராடுவதாக இருக்கட்டும் முதல் குரலும், பங்களிப்பும் தருவது முஸ்லிமின் குரலாகத் தான் இருக்கும், முஸ்லிமின் பங்களிப்பாகத் தான் இருக்கும்.

ஏனெனில், ஒரு முஸ்லிமின் இயல்பான பண்புகளில் இவ்விரண்டும் மிக முக்கியமான அம்சமாக இஸ்லாம் ஆக்கியிருக்கின்றது.

தன் சமூகம் சார்ந்த அம்சமாக இருப்பினும் சரி, பிற சமூகம் சார்ந்த அம்சமாக இருப்பினும் சரி, தன் ஊர் சார்ந்த அம்சமாக இருப்பினும் சரி, பிற ஊர் சார்ந்த அம்சமாக இருப்பினும் சரி இவ்விரண்டு பண்புகளும் முஸ்லிமின் புறத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

நீதிக்கு ஆதரவான குரல்! ஆட்சியாளனை எதிர்த்து….

மூஸா {அலை} அவர்களை ஃபிர்அவ்ன் கொல்லப்போவதாக அறிவித்த போது..

وَقَالَ رَجُلٌ مُؤْمِنٌ مِنْ آلِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَانَهُ أَتَقْتُلُونَ رَجُلًا أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ

”ஃபிர்அவ்னுடைய குடும்பத்தைச் சார்ந்த – தம் இறைநம்பிக்கையை மறைத்து வைத்திருந்த ஒருவர் ஃபிர்அவ்னை நோக்கி “அல்லாஹ் தான் என் இறைவன் என்று கூறுகின்றார் என்பதற்காகவா அவரை நீர் கொன்று விடுவீர்?” என்று கேட்டார்.

                                                      ( அல்குர்ஆன்: 40: 28 )

நீதிக்கு ஆதரவான குரல்! தம் சொந்த சமூகத்தை எதிர்த்து…

அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்து மூஸா {அலை} அவர்களிடம் பனூஇஸ்ரவேலர்கள் தர்க்கம் செய்த போது…

قَالَ رَجُلَانِ مِنَ الَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمَا ادْخُلُوا عَلَيْهِمُ الْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَالِبُونَ وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ()

“அவ்வாறு நுழைய அஞ்சிக்கொண்டிருந்த அம்மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிருந்த இருவர் அம்மக்களை நோக்கி “வலிமை வாய்ந்தவர்களை பொருட்படுத்தாமல் வாயிலினுள் நுழைந்து விடுங்கள்! அவ்வாறு நுழைந்து விடுவீர்களாயின் நீங்கள் தான் வெற்றியாளர்களாய் திகழ்வீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருங்கள்”.

                                                       ( அல்குர்ஆன்: 5: 23 )
அநீதிக்கு எதிரான போராட்டம்! ஆட்சியாளனை எதிர்த்து…

ஃகிள்ரு {அலை} மூஸா {அலை} சந்திப்பின் போது பயணித்த கப்பலை ஃகிள்ரு {அலை} அவர்கள் சேதப்படுத்துவார்கள். மூஸா {அலை} அவர்கள் கடுமையாக ஆட்சேபம் தெரிவிப்பார்கள்.

பின்னர், கப்பலை சேதப்படுத்தியதற்கான காரணத்தை ஃகிள்ரு {அலை} அவர்கள் கூறும் போது…

أَمَّا السَّفِينَةُ فَكَانَتْ لِمَسَاكِينَ يَعْمَلُونَ فِي الْبَحْرِ فَأَرَدْتُ أَنْ أَعِيبَهَا وَكَانَ وَرَاءَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ غَصْبًا ()

“அந்தக் கப்பலைப் பற்றிய விஷயம் என்னவெனில், அது கடலில் கூலி வேலை செய்து கொண்டிருந்த சில ஏழைகளுக்கு உரியது. நான் அதை பழுதாக்கிட நாடினேன். ஏனெனில், அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் ஒவ்வொரு கப்பலையும் நிர்பந்தமாகப் பறித்துக் கொண்டிருந்தான். அதிலிருந்து பாதுகாக்கவே நான் கப்பலை சேதப்படுத்தினேன்”.  ( அல்குர்ஆன்: 18: 79 )

அநீதிக்கு எதிரான போராட்டம்! தம் சொந்த சமூகத்தை எதிர்த்து…

யாஸீன் சூராவில் அல்லாஹ் அந்தாக்கிய்யா ஊர் மக்களிடம் மூன்று இறைத் தூதர்களை அனுப்பியது பற்றியும், அவ்வூர் மக்கள் அத்தூதுவர்களை மறுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை ஏசிப் பேசி துன்புறுத்த முயன்ற போது….

وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ () اتَّبِعُوا مَنْ لَا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُمْ مُهْتَدُونَ ()

“நகரத்தின் ஒரு கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து “என் சமூகத்தவரே! இறைத்தூதர்களைப் பின் பற்றுங்கள்! எவர்கள் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லையோ, மேலும் எவர்கள் நேர்வழியில் இருக்கின்றார்களோ அவர்களையே நீங்கள் பின்பற்றுங்கள்!” என்றார்.               ( அல்குர்ஆன்: 36: 20 )

நகரத்தின் கோடியிலிருந்து வந்து அம்மக்களுக்கு அறிவுரை வழங்கினாரே அவர் ஹபீபுன் நஜ்ஜார் என்று அழைக்கப்படுகின்றார்.

அம்மக்களிடம் இருந்து அந்த இறைத்தூதர்களை காக்கும் பணியில் மிகப் பெரிய போராட்டத்தைச் சந்தித்தார்.

இறுதியில், அந்த இறைத்தூதுவர்களும், அவரும் பெரிய விலை கொடுக்க வேண்டி வந்தது. ஆம்! அவ்வூர் மக்கள் அவரையும், இறைத்தூதுவர்களையு அடித்தே கொன்று விட்டனர்.

பின்னர், அல்லாஹ் அம்மக்களை பெரும் சப்தத்தைக் கொண்டு அழித்தான்.

وَمَا أَنْزَلْنَا عَلَى قَوْمِهِ مِنْ بَعْدِهِ مِنْ جُنْدٍ مِنَ السَّمَاءِ وَمَا كُنَّا مُنْزِلِينَ () إِنْ كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ خَامِدُونَ ()

“அவருக்குப் பின்னர் அவருடைய சமூகத்தினர் மீது வானத்திலிருந்து யாதொரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை. அவ்வாறு இறக்குவதற்கான அவசியமும் நமக்கு இருக்கவில்லை. ஒரே ஓர் உரத்த ஓசை தான்! அவர்கள் எல்லோரும் உடனே கருகிச் சாம்பலாகி விட்டனர்”.                             ( அல்குர்ஆன்: 36: 28, 29 )

தனியாகவோ, இருவராகவோ, கூட்டாகவோ சேர்ந்து நீதிக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது, அநீதிக்கு எதிராக போராடுவது என்பது முஸ்லிம் சமூகத்தின் இயல்புப் பண்புகளாகும் என்பதை மேற்கூறிய இறைவசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மேலும், மாநபி {ஸல்} அவர்கள் தங்களின் இளமைப் பருவத்தை தாங்கள் பிறந்த மக்காவில் இயங்கி வந்த ”ஹில்ஃபுல் ஃபுளூல்” எனும் அமைப்பில் இணைந்து நீதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தும், அநீதிக்கு எதிராக போராடியும் வந்துள்ளார்கள் என்பதை வரலாற்றின் வாயிலாக அறிய முடிகின்றது.

ஆகவே தான் இந்திய தேசிய விடுதலையை இந்திய சமூகத்தின் எந்த மக்களும் கையில் எடுப்பதற்கு முன்னால், யாரும் முஸ்லிம் சமூகத்தை அழைக்கும் முன்பாக வங்காளச் சிங்கம் ஷஹீத் சிராஜ் உத் தௌலா அவர்களும், ஷஹீத் திப்பு சுல்தான் அவர்களும் கையில் எடுத்து முதல் போராளிகளாய் முத்திரை பதித்தனர்.

”க்விட் இந்தியா” ( வெள்ளையனே வெளியேறு ) என்ற சொற்சொடரை காந்திக்குப் பரிந்துரைத்தவர் யூஸுஃப் மெஹர் அலி எனும் முஸ்லிம் தான்.

தனது 47 வருட வாழ்க்கையில் நாட்டுக்காக சுமார் எட்டு முறை சிறை சென்றார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்படும் போது அவர் பம்பாய் நகரத்தின் மேயராக இருந்தார்.

ஏழை மக்களுக்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும் வாழ் நாள் முழுவதும் பாடுபட்டார்.

          ( நாம் எங்கிருந்து எங்கு வந்து விட்டோம் எனும் நூலிலிருந்து… )

சுதந்திர இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட, போராடிய, பொருளாதரம் வழங்கிய, சிறை சென்ற உயிர் நீத்த, இன்ன பிற உங்களுக்குத் தெரிந்த செய்திகளை இத்தோடு இணைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு முக்கியமான விஷயம் இந்த சுதந்திர தின ஆண்டு முஸ்லிம் சமூகத்தை எப்படி கடக்கப் போகிறது? என்பது தான்.

ஆம்! சுதந்திர இந்தியாவின் 70 –ஆவது ஆண்டின் துவக்கம் முஸ்லிம் சமூகத்திற்கு எப்படி அமையப் போகிறது? என்கிற கவலையை அயோத்தி பிரச்சனை சம்பந்தமாக ஷியா வக்ஃபு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிற மனு ஏற்படுத்தி இருக்கின்றது.

இரண்டு நாளைக்கு முந்தைய ( புதன் கிழமை 9/8/2017 ) தமிழ் தி இந்துவின் தலைப்புச் செய்தியாக வந்த செய்தி “அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தடை நீங்குகின்றது, இடிக்கப்பட்ட இடத்தை விட்டு விட்டு புதிய இடத்தில் மசூதி கட்டிக் கொள்ள ஷியா வக்ஃபு வாரியம் சம்மதம்” எனும் அந்தச் செய்தி தான்.

அநேகமாக இந்த மனுவின் மீதான விசாரணை 11 –ஆம் தேதி இன்று ( வெள்ளிக்கிழமை )  நடத்தப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரத்தில் இருந்து தற்போதைய மாட்டுக்கறி பிரச்சனை வரை பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்களை, உடமைகளை இந்தச் சமூகம் இழந்திருக்கின்றது.

நாட்டில் இருக்கிற அத்துனைச் சிறைச்சாலைகளிலும், சட்டத்தில் இருக்கிற பெரும்பாலான குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் அத்தனை பிரிவுகளின் கீழும், தடா, பொடா, தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற சிறப்புச் சட்டங்களின் பெயராலும் முஸ்லிம்கள் விசாரணைக் கைதிகளாக ஆண்டுகணக்கில் இருந்து வருகின்றனர்.

பாபர் மசூதி வழக்கு, கோவை, மும்பை, குஜராத் மற்றும் இதர கலவர வழக்குகள், பொது சிவில் சட்டம், முத்தலாக், மதமாற்ற தடைச் சட்டம், பசுவதைத் தடைச் சட்டம் என்று இன்ன பிற வழக்குகளில் முஸ்லிம் சமூகம் தீர்ப்புகளை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றது.

இப்படியாக சுதந்திர இந்தியாவின் கடந்த 69 ஆண்டுகள் கழிந்து கொண்டிருக்க, இப்போது புதிதாக முஸ்லிம் சமூகத்தை நோக்கி “ஷியாயிஸம்” எனும் வில் அம்பொன்றை எய்திருக்கின்றது. இதன் வீரியத்தை, எவ்வாறு முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ளப்போகின்றது என்பது தான் தெரியவில்லை.

ஷியாயிஸம் என்பது ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்திற்கான மாபெரும் ஆபத்து என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

الخلاف السني الشيعي :هو خلاف تاريخي بين أكبر طائفتين أهل السنة والطائفة الشيعية  والخلاف بين الطائفتين يتركز في عدة محاور: منها ما هو متعلق بالعقيدة, ومنها ما هو متعلق بالمسائل الفقهية حتى وصل الأمر الى المسائل السياسية وهو الأخطر فى هذه المرحلة التى يمر بها 
النقاط الرئيسة للخلاف
ــالخلافة بعد الرسول
يؤمن السنة بان الرسول محمد مات ولم يوص لخليفة بعده وترك للصحابة حرية الاختيار لذلك فهم يرون ان اختيار أبوبكر ومن ثم عمر بن الخطاب ومن ثم عثمان بن عفان  ومن ثم على بن أبى طالب للخلافة كان صحيحا.
بينما يرى الشيعة ان الرسول قد أوصى بالخلافة من بعده إلى على بن أبى طالب وبتالي فهم يعتقدون ببطلان خلافة من سبقه.
المهدي
يتفق كلا الطرفين على ظهور شخص صالح سوف يملئ الارض عدلا ويدمر قوى الفساد ويلقب بالمهدي لكن يختلفون بشخصيته.
فيعتقد الشيعة ان المهدي هومحمد بن الحسن وهو الامام الثاني عشر المولود عام 874م والذي منحه الله معجزة طول العمر وهو حي يرزق وسوف يعلن عن وجوده عندما يحين الوقت ليملئ الارض عدلا.
بينما يعتقد السنة بان المهدي هو شخص اسمه محمد ويكون من نسل فاطمة الزهراء وانه هو نفسه لن يعلم بانه المهدي في بداية حياته.
أهم الخلافات العقائدية
وتكمن أهم النقاط الخلافية العقائدية بين الشيعة و السنة في:
الخلاف
عند الشيعة
عند السنة
العصمة
للأنبياء والأئمة الإثنى عشر
للأنبياء فقط
الصحابة
بعضهم عادل والبعض الآخر منافق أو مرتد، ويكفر البعض من علمائهم البعض من الصحابة، ويرون ان البعض منهم في النار
كلهم عدول بتعديل الله لهم وحبهم والترضي عنهم واجب. ويعتقدون أن أفضل الناس بعد الأنبياء هم أبو بكر ثم عمر ثم عثمان ثم علي، ثم باقي الصحابة حسب الأفضلية.
أمهات المؤمنين
يرون أن عائشة خالفت شرع الله وخرجت على امام زمانها ولم تحقن دماء المسلمين وكانت تؤذي الرسول
عائشة أم المؤمنين من آل بيت النبي، ويترضون عنها، وأنها أحب الناس إلى الرسول، وأنها زوجته في الجنة.
الإمامة
الإمامة منصوص عليها ومحددة من قبل الله
الإمامة لم يتم تحديدها من قبل الله وأن الإمامة فضل من الله يتفضل به على من يشاء من عباده وليست خاصة لأحد
الاستغاثة والتوسل
تجوز الاستغائة بغير الله ، ويعتقدون أن أئمتهم يملكون الشفاعة.
لا واسطة بين الله وبين عباده، ولا يرون جواز دعاء غير الله أو الاستغاثة بغيره.
أهم الخلافات الفقهية
تكمن أهم النقاط الخلافية الفقهية بين الشيعة و السنة في:
الخلاف
عند الشيعة
عند السنة
الخمس
يرون أن إخراجها واجب على الكفار وكل مال يغنمه المسلم زائد عن مؤونته السنوية تذهب نصفها إلى الامام القائم مقام الرسول او مايسمى الولي الفقيه
يرون أن إخراجها واجب على الكفار فقط في الركاز وغنائم الحرب
زواج المتعة
مباح وعليه اجر
محرم ويعتبرونه زنا
السجود على
التربة الحسينية
يؤمن الشيعة بعدم جواز السجود أثناء الصلاة الا على الأرض من رمل وحجر وتراب وكذلك على ما تنبت الأرض من غير المأكول ولا الملبوس, وان السجود على الملابس والاقمشة والأفرشة من سجاد ونحوها وكذلك على المعادن من نحاس وفضة وذهب امر غير جائز
يرى أهل السنة والجماعة أن هذا من الأمور المحدثة في الدين، حيث لم يفعلها الرسول ولا الصحابة بما فيهم علي والحسين.
وضع اليدين على الصدر في الصلاة
لايرى الشيعة انها سنه
يرى أهل السنة والجماعة أن من السنّة وضع اليدين على الصدر في الصلاة (اليمنى فوق اليسرى) وتركها لايبطل الصلاة
الأذان
يوجد اضافات في الاذان يعتبرها اهل السنة انها بدعه ولايجوز ترديد الاذان خلفها مثل ( اشهد ان عليا ولي الله ) و (حي على خير العمل)
يختلف الاذان عند اهل السنة عن الاذان عند الشيعة
ضرب النفس
مباح
محرم

ஷீஆவின் தோற்றம்....

நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி சுமார் 30 வருடங்களுக்கு பின் உருவானதுதான் இந்த ராபிளா எனும் ஷீஆ பிரிவாகும். சன்ஆ எனும் பகுதியில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறி முஸ்லிம்களுக்குள் ஊடுருறுவினான்.

பிறப்பின் அடிப்படையில் இவன் ஒரு யஹூதி. இவனால் தோற்று விக்கப்பட்ட பிரிவு தான் ஷீஆவாகும். அரசியல் லாபம் தேடி ஒற்றுமையாக ஒரே உம்மத்தாக உஸ்மான்(ரலி) அவர்களது தலையின் கீழ் ஒன்றுபட்டிருந்த இஸ்லாமிய சமூகத்தை பிளவுப்படுத்தி கலவரத்தை உண்டுபண்ணி இரத்தத்தை ஓட்டி பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப்படுத்தியவனாவான். 

இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அன்று உருவாக்கிய இரத்தக் களரி இன்றுவரை ஷீஆ சுன்னி என்று ஓடிக்கொண்டிருக்கிறது.
 
ஷீஆக்கள் (அலி) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆதரவு தெரிவிப்பதாகவே அரசியல் பிரவேசம் செய்தனர். அதாவது நபி (ஸல்) அவர்களுக்கு பின் அலி (ரலி) அவர்கள்தான கிலாபத் (இமாமியத்) பொறுப்புக்குரியவர். அதனை அபூபக்கர் உமர் தட்டிப்பறித்து விட்டனர்.

இவர்கள் அலி(ரலி)க்கு அநீதி இழைத்து விட்டு அலியிடம் மன்னிப்புக் கோராமலே மரணித்து விட்டனர். எனவே அவர்கள் இருவரும் மீதும் அல்லாஹ்வினதும் மக்களினதும் சாபம் உண்டாகட்டும் என சபிக்கின்றனர் (நூல்.அல்காபி:8-245)

ஷீஆக்களின் இந்த பிரச்சாரத்திற்கும் அலி(ரலி) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வில்லை. 

சஹாபாக்களான அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் (ரலி)ஆகிய யாருக்கு எதிராக குறைகூறி வசைப்பாடுகின்ற பணியை ஆரம்பித்து வைத்து பித்னாவை உண்டுபண்ணிய யூதனான அப்துல்லாஹ் இப்னு ஸபாவை அலி(ரலி) அவர்கள் பிடித்து மரணதண்டனை வழங்கியபோது அவனுக்காக சிலர் பரிந்து பேசிய போது மதாஇன் எனும் பகுதிக்கு நாடு கடத்தினார்கள்.

அலி(ரலி) மரணித்து விட்டார்கள் என கூறிய போது இல்லை இல்லை அலி மரணிக்கவில்லை. அவர் மரணித்து விட்டார் எனக் கூறி அவருடைய மூளையை கொண்டுவந்து 70 பேர் சாட்சி சொன்னாலும் ஏற்க மாட்டேன்.அவர் மேகத்தில் இருக்கிறார். 

இடி அவரது ஓசை. மின்னல்அவரது பார்வையாகும். என இந்தஅப்துல்லாஹ் இப்னு ஸபா கூறினான். ஷீஆக்களின் இக் கொள்கையை ஸபஈய்யா என அழைக்கப்படும்.
அலி(ரலி) அவர்களுக்கும் அபூபக்கர்ரலி) உமர் (ரலி) மற்றும் ஏனைய சஹாபாக்களுக்குமிடையில் சிநேகபூர்வமான நட்பும் நேசமும் இருந்ததே தவிர யூத ஷீஆக்கள் கூறுவது போல் பகைமை இருந்ததில்லை.

உமர் (ரலி) வபாத்தாகி அவர்களுடைய ஜனாஸாவை சுமப்பதற்கு தயாரான போது அவ்விடத்தில் அலி(ரலி)அவர்கள் கூறிய வார்த்தைகள் உள்ளத்தை உருகச்செய்கிறது.உமரே!அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக. உமரே, உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வை சந்திப்பதற்கு முன்மாதிரியாக நான் விரும்பி ஏற்கத்தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. 

அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்களான (நபி(ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்கர் (ரலி) ஆகிய இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் நானும் அபூபக்கர் உமரும் சென்றோம் என்றும் நானும் அபூபக்கரும் உமரும் புறப்பட்டோம் என்றும் சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கின்றேன். என்றார்கள். (நூல்:புகாரி 3685) அலி (ரலி) அவர்களின் இவ்வார்த்தைகளை ஷீஆக்கள் மறைத்து விட்டு அபாண்டங்களையே அள்ளி வீசுகிறார்கள்.

சஹாபாக்கள் மதம் மாறியவர்களாக சித்தரிக்கும் ஷீஆக்கள்

இந்த உம்மத்தின் அதி சிறந்த உத்தமர்களான சஹாபாக்களை நாம் மதிக்கிறோம். ஆனால் இலட்சக்கணக்கான சஹாபாக்களை குறைகூறியதுமட்டுமல்லாமல் அவர்களில் ஸல்மான் பாரிஸி (ரலி) மிக்தாத் இப்னு அஸ்வத் (ரலி) அபூதர்கிபாரி (ரலி) ஆகிய மூவரைத்தவிர மற்ற அனைத்து சஹாபாக்களும் நபி(ஸல்) அவர்களின் வபாத்திற்குப்பின் மதம் மாறிவிட்டார்கள் (நூல்:ரிஜாலுல் கிஷ்ஷி பக்கம் 37. உசூலுல் காபி பாகம் 2. பக்கம் 243 பிஹாருல் அன்வார்.

ஆண்களில் நான்கு சிலைகளும் பெண்களில் நான்கு சிலைகளும் உள்ளன.அபூபக்கர் உமர் உஸ்மான் முஆவியாஆகியோர் ஆண் சிலைகளாவர். ஆயிஷா ஹப்ஸா ஹிந்து உம்முல்ஹகம் ஆகியோர் பெண் சிலைகளாவர். 

நிச்சயமாக இந்த பூமியின் மேல் அல்லாஹ்வின் படைப்புக்களில் இவர்களே மிகவும் மோசமானவர்கள். அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் (ஷீஆ) இமாம்களையும் நம்பக்கூடியவர் இவர்களை தங்களுடைய எதிரிகளாக நம்பாத வரை ஈமான் பூர்த்தியடையாது என்பது எங்களது (ஷீஆ) கொள்கைகளில் உள்ளதாகும்.(நூல்:ஹக்குல் யகீன் பக்கம்.519) ஆயிஷாவும் ஹப்ஸாவும் மோசமான நடத்தைக் கெட்ட பெண்களாவர் (நூல்: தப்ஸீருல் கும்மி பாகம்2.பக்கம்.377) 

நபி(ஸல்)அவர்களின் மனைவிமார்கள் முஷ்ரிக்குகளாவர். அவர்களுடன் இணைந்ததற்காக நபியின் அபம் நரகம் நுழையும் ;(நூல்:பஷ்புல் அஸ்ரார் பக்கம் 24 உமர்(ரலி) அவர்களை கொலை செய்த இறை நிராகரப்பாளரான மஜூஸி அபூலுஃலுஃ என்பவனை இஸ்லாத்தின் வீரன்என புகழுhரம் சூட்டுகின்றனர்.(நூல் :ஹக்துல்துரர் பீ பத்னி பக்ரி உமர் பக்கம்107

நீங்கள் ஸஹாபாக்கள் என கூறும் அவர்கள் நயவஞ்சகர்கள் முனாபிக்குகள். ஏன ஆயதுல்லாஹ் குமைனி கூறுகிறார்.(நூல்:உகூமதுல் இஸ்லாமிய்யா பக்கம் 69)

இஸ்லாத்தின் தூண்களாக நின்று சுவனத்து சொந்தங்களாக வாழ்ந்த சஹாக்களையும் நபிகளாரின் மனைவிமார்களையும் படுமோசமாக விமர்சிக்கின்றனர். நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் முஃமின்களின் தாய்மார்கள் என குர்ஆன் கூறுகிறது. (33:6) இதற்குமாற்றமான கருத்துக்கள் யூதனுடைய உள்ளத்தில் தோன்றுமே தவிர நல்லவர்களின் சிந்தனையில் ஒருபோதும் உதிக்காது.

சஹாபாக்களை காபிர்களாக்கிய பிறகு இஸ்லாத்தின் நம்பகத்தன்மை எங்கே நிற்கப்போகிறது.?யாரிடமிருந்து இஸ்லாத்தை ஏற்பது? எல்லாமே புஸ்வனமாகிவிடும். அல்குர்ஆன் அல்ஹதீஸ் அனைத்தும் போலியானதாக மாறிவிடும்.புதிதாக மார்க்கத்தை உருவாகிட வேண்டும். இந்த விஷமத்தனத்தைத்தான் இவர்கள் செய்தார்கள்.
 
புதிய மாரக்கம் -கலிமா


இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை நாசப்படுத்தி விட்டு ஷீஆக்கள் புதிய கொள்கை பிரச்சாரத்தை உருவாக்கினர். இன்னுமொருவார்த்தையில் கூறினால் நபிகளார்(ஸல்) அவர்கள் போதித்த மார்க்கத்தின் அத்திவாரத்தையே பிடுங்கி எறிந்து விட்டு புதிய மார்க்க போதனைகளையும் அடிப்படைகளையும் தோற்றுவித்தனர்

இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. 1கலிமா 2.தொழுகை 3.நோன்பு 4.ஜகாத் 5..ஹஜ்.இது தான் முஸ்லிம்களின் அடிப்படை கொள்கை இதனை அப்படியே மாற்றிவிட்டு இஸ்லாம் ஐந்து விடயங்ளின் மீது நிறுவப்பட்டுள்ளது. 1.தொழுகை 2.நோன்பு 3.ஜகாத் 4..ஹஜ் 5.விலாயத் அலி. (அலியின் தலைமைத்துவத்தை ஏற்பது) இந்த ஐந்தில் விலாயத்து அலியே மிகச் சிறந்தது என்கிறார்கள்.(நூல் அல்காபி)

கலிமாவுக்கு மாற்றமாக அலி(ரலி) அவ்களின் கிலாபத் (ஆட்சி) பொறுப்பே ஈமானின் முதல் அம்சம் என்று மாற்றியதன் மூலம் சஹாபாக்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களையும் காபிர்களாக்கிவிட்டனர். நபி(ஸல்) அவர்கள போதித்த கலிமாவை ஓரம்கட்டிவிட்டார்ககள்.
அல்குர்ஆனில் மாற்றம்:
உலக முஸ்லிம்களிடம் காணப்படும் குர்ஆனில் உண்மை இல்லை என்றும் அதில் சஹாபாக்கள் கூட்டல் குறைவுகள் செய்து திரிபுபடுத்தி விட்டனர் என்றும் 17ஆயிரம் வசனங்களை கொண்ட குர்ஆனை ஜிப்ரீல் நபியவர்களுக்கு இறக்கிவைத்தார்கள் (நூல் அல்காபி. பாகம்2 பக்கம்234) என்றும்ஷீஆக்கள் கூறுகின்றனர். 

நம்மிடம் முஸ்ஹஃப் பாத்திமா என்ற குர்ஆன் இருக்கின்றது. அது உங்களின் குர்ஆனை விட மூன்று மடங்iகுடையது. அதில் உங்கள் குர்ஆனில் உள்ள ஒரு எழுத்துக்கூட இல்லை என்கிறார்கள் .(நூல்: அல்காபி பாகம்.2 பக்கம் 597)

முஸ்லிம்களுடைய குர்ஆனை விட வித்தியாசமான ஆயிரக்கணக்கான வசனங்களைக் கொண்ட குர்ஆனை வைத்துள்ளார்கள் என ஒப்குதல் வாக்குமூலம் தருகிறார்கள். அக் குர்ஆனுக்கான தப்ஸீர்களையும் இவர்களே எழுதிவைத்துள்ளனர். சஹாபாக்கள் குர்ஆனில் மோசடி செய்த பாவிகள் என்கிறார்கள்.

ஹதீஸ்களை நிராகரித்தல்:

நபி(ஸல்) அவர்கள் மூலமாக சஹாபாக்கள் அறிவித்த ஹதீஸ்களையோ முஸ்லிம்உம்மத ஏற்றுக் கொண்டுள்ள சஹீஹூல் புகாரி முஸ்லிம் இப்னுமாஜா திர்மிதி அபூதாவுத் நஸாயீ முஅத்தா முஸ்னத் அஹ்மத் போனற் ஹதீஸ் நூற்களையோ அவைகளை எழுதிய இமாம்களையோ ஷீஆக்கள் ஏற்கமாட்டார்கள். இந்த உம்மத் ஏற்று மதிக்கின்ற இமாம்களான மாலிக்(ரஹ்) அபூஹனீபா ஷாபி(ரஹ்) அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)போன்ற எந்தவொரு இமாமையும் அங்கீகரிக்கமாட்டார்கள். 

இதற்கு மாற்றமாக ஷீஆவின் பரம்பரையில் வந்த பெரியார்களையே இமாம்களாகவும் அவர்கள் சொன்ன செய்திகளையே ஹதீஸ்களாகவும் ஏற்று பின்பற்றுவார்கள். 

முஸ்லிம்கள் மதிக்கின்ற அஹ்லுல்பைத்கள் சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸ்களை மட்டும் எமது ஹதீஸ் நூற்களிலிருந்து எடுத்துக் காட்டி அலி(ரலி) பாதிமா (ரலி) ஹஸன்(ரலி) ஹூசைன் (ரலி) ஆகியோரை நாமும் மதிக்கிறோம் ஷீஆவும் சுன்னியும் ஒரே விடயத்தைத்தான் பேசிவருகிறோம் என மழுப்புவார்கள். 

ஆனால் அந்த ஹதீஸ்களை அறிவித்த சஹாபாக்களைரலியல்லாஹூ அன்ஹூஎன கூறவும்மாட்டார்கள்.நபிகளாரின் குடும்ப அங்கத்தினரை-மனைவிமார்களை- அஹ்லுல்பைத் களாக ஏற்கமாட்டார்கள்.

12 இமாம்களை நம்புதல்:

அலி(ரலி) அவர்களின் குடும்பத்தின் பரம்பரையில் வந்ததாக கூறப்படும்12 பேர்களை மட்டுமே இமாம்களாக மதிப்பர். இந்த இமாம்கள் பாவத்தை விட்டும் பரிசுத்தமானவரக்ள தவறு மறதியை விட்டும் அப்பாற்பட்டவர்கள். மறைவான ஞானம் பெற்றவர்ககள்.

இந்த உலகத்தில் நடந்துமுடிந்தவை நடந்து கொண்டிருப்பவை இனி நடக்க போகின்றவை பற்றிய ஞானம் உடையவர்கள். ஒருவர் ஒரு திர்ஹத்தை கையில்வைத்து புறட்டுவது போல் இமாம் இப்பரபஞ்சத்தை புறட்டுகிறார்கள் என்றும் வாரத்தின் இருமுறை படைப்பினங்களின் அமல்களை மலக்குகள் இமாமிடத்தில் எடுத்துக் காட்டுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

ஷீஆ புரட்சியின் சிற்பி என வர்ணிக்கப்படும் ஆயதுல்லாஹ் குமைனி இவ்வாறு கூறுகிறார்: நமது இமாம்களுக்கு இருக்கும் அந்தஸ்து அல்லாஹ்வின் நெருக்கத்திற்குரிய மலக்கோ அல்லது அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபிக்கோ கிடையாது என்பது நமது கொள்கையில் (ஷீஆ மத்ஹபில்) அவசியம் அறிந்திருக்க வேண்டியதாகும் (நூல்:ஹூகூமதுல் இஸ்லாமிய்யா பக்கம் 52.) 

மலக்குகள் மற்றும் நபிமார்கள் அடைந்து கொள்ளாத சிறப்புகளை ஷீஆஇமாம்களுக்கு உண்டு என்று கூறுவதன் மூலம் ஈமானை பால்படுத்துகின்ற கொள்கையுடையவர்கள் என்பது மிகவும் தெளிவானது.

அல்லாஹ்விடத்தில் அமல்களை காண்பிப்பதை விட இமாம்களிடத்தில் காண்பிக்கப்படுகிறது என்றால் அல்லாஹ்வுக்கு எந்த வேளையுமில்லை. மதிப்பும் இல்லை என்கிறார்கள்.
 
மேலும் குமைனி கூறுவதை கேளுங்கள்: நபிமார்கள் அனைவரும் நீதியை நிலைநாட்டுவதற்காகவே வந்தனர். ஆனால் அதில் அவர்கள் வெற்றிப் பெறவில்லை.(தோழ்வி கண்டனர்.) மனித குலத்தை சீர்திருத்த வந்த இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூட தோல்வியைத்தான் சந்தித்தார்கள்

எல்லா நபிமார்கள் தோழ்விஅடைந்து விட்டார்கள் இஸ்லாத்தை நிலை நாட்டி எத்திவைப்பதில் நபி(ஸல்) அவர்களும் தோழ்வி அடைந்து விட்டார்கள் என்றால் இந்த இஸ்லாம் பூரணத்துவமற்ற நீதியை நிலை நாட்டதவறிய மார்க்கம் அல்லாஹ் இம்மார்க்கத்தை குறைவுள்ளதாக ஆக்கியுள்ளான் என சாடுகிறார் குமைனி;.

இமாம்களின் மறு பிறப்பு:

இந்த உலகத்தில் மரணிக்கின்ற எவரும் திரும்பி வரபோவதில்லை என்பது தான் இஸ்லாத்தின் கொள்கையாகும். ஆனால் ஷீஆக்கள் மரணித்துப் போன தங்களுடைய இமாம்கள் திரும்பி வந்து நீதியை நிலை நாட்டுவார்கள் என கூறி மறு பிறப்புசிந்தனையை தோற்றுவித்தனர். 

அவர்களது 12வது இமாமாக கருதும் அல்மஹ்தி எனப்படும் முஹம்மத் இப்னு ஹஸன் அல்அஸ்கரி என்பவர் ஹிஜ்ரி 256-ல் பிறந்து ஐந்தாம் வயதில் ஒரு குகையில் மறைந்து விட்டார். இவர் திரும்பி வந்து நீதியை நாட்டுவதுடன் அபூபக்ர் (ரலி) உமர்(ரலி) ஆயிஷா (ரலி) ஆகியோரை எழுப்பி தண்டிப்பதுடன் மேலும் பலசஹாபாக்களுக்கெதிராக பழி தீர்ப்பார்கள் என் கூறுகிறார்கள்.(நூல்:இய்காலு மினல் ஹஜ்இதி)
 
ஷீஆக்களில் முப்தி ஒருவர் பேசும் போது நாங்களும் (சுன்னிகளாகிய) நீங்களும்; ஒரே உம்மத்தாக இருக்கிறோம். இது எதுவரை என்றால் (எதிர்பாரக்கப்படும் மஹ்தியான ஹஸன் இப்னு ஹஸ்கரி) இமாம் வரும் வரையாகும். அவர் வாளுடன் வந்து விட்டால் நீங்கள் ஒரு சமூகமாவும் நாங்கள் வேறொரு சமூகமாகவும் ஆகிவிடுவோம் எனறார் (ஆதாரம்:. அல்புர்ஆன் . தொலைக்காட்சி நிகழ்ச்சி)
வெளிப்படையில் ஒற்றுமையைப்பற்றி கோஷம் எழுப்புகின்றவர் உள்ளுக்குள் எந்தளவு குரோதத்துடனும் வைராக்கியத்துடனும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
அல்லாஹ் அறிவுடையவன் அல்ல. அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்த ஞானமுள்ளவன் என்பது முஸ்லிம்களாகிய எங்களது விசுவாசமாகும். ஆனால் ஷீஆவின நம்பிக்கை அதற்கு மாற்றமானது.
உலகில் நடைப்பெறுகின்ற எந்தவொரு நிகழ்வும் நடைப்பெற்ற பின்புதான் அல்லாஹ்வுக்கு தெரியவரும். அதற்கு முன்பு அவனுக்கு தெரியாது இதனை அல்பதாஎன அழைக்கப்படும் என கூறுகின்றனர். மதுபானம் அருந்துதல் ஹறாம் என்றும் அல்லாஹ்வுக்கு பதாஏற்படுதல் நிச்சயம் உண்டு என்றும் சொல்லாத எந்த நபியையும் அல்லாஹ் அனுப்பவில்லை. (நூல்:அல்காபி பாகம் 1 பக்கம்148)

அதாவது அல்லாஹ் அனைத்தும் அறிந்த ஞானமுள்ளவன் அல்ல என்று அறிவிப்பதற்கு நபிமார்களை அனுப்பிவைத்தானாம். நஊது பில்லாஹ்!

முத்ஆ (விபச்சாரம்):

ஒரு பெண்ணை குறிப்பிட்ட காலம் வாடகைக்கு அமர்த்தி இன்பம் அனுபவிப்பதை முத்ஆ எனப்படும். இந்த முத்ஆவை நபி(ஸல்)அவர்கள் கைபர் யுத்தத்தின் போது அல்லது பத்ஹூ மக்காவின்போது தடைசெய்தார்கள்.(நூல் முஸ்லிம்)

ஆனால் ஷீஆக்கள் முத்ஆ (விபச்சாரத்தை) வாழ்கையில் ஒரு முறையேனும் செய்யவேண்டும் என ஊக்குவிக்கிறார்கள். முத்ஆ செய்யாமல் மரணிப்பவன் மறுமையில் ஊன முற்றவனாக பிறப்பான் என்றும் முத்ஆ செயதவன் குளிக்கும் போது அவனுடைய உடலிலிருந்து சொட்டுகின்ற ஒவ்வொரு நீர் துளிக்கும் 70 மலக்குகள பாவமன்னிப்புக் கோருவதுடன் முத்ஆசெய்யாதவனுக்கு மறுமைநாள் வரை சபிக்கின்றனர் என்கின்றனர். (நூல்:முன்தஹல்ஆமால்:2-341) விபச்சாரத்தை கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை. ஹராமான பிறப்பில் குழந்தைகளை உற்பத்திசெய்வதில் எத்துனை அக்கறை இவர்களுக்கு!

தனிமனித வழிபாடு:

குமைனியுடைய கப்ரை புனித கஃபதுல்லாஹ் போன்று கட்டி புனிதப்படுத்தி வணங்குவதும் கர்பலா எனும்பகுதியில் ஹூசைன்(ரலி) அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மண்ணை புனிதமாகக் கருதி அந்த மண்ணால் செய்யப்பட்ட உருண்டையின் மீது சுஜூது செய்தும் வழிபடுவர். 

ஆஷூராவுடைய தினத்தை துக்கதினமாக பிரகடனப்படுத்தி அன்றைய நாளில் கர்பலாவில் ஒன்றுதிரள்வதை ஹஜ் செய்வதை விட உயர்ந்த கிரிகையாக கூறுவர்.
யார் ஹூசைன் (ரலி)யின் கப்றை தரிசிக்கிறாரோ அவருக்கு 20 ஹஜ் உம்ரா செய்வதை விட சிறப்பானதாகும். (நூல்: நூருல் ஐன் பக்கம் 253) 

( நன்றி: இஸ்லாம்கல்வி.காம், அரபிக்கான தமிழ் மொழிபெயர்ப்பு செய்திகளை மட்டும் இந்த தளத்திலிருந்து காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றேன். )

அல்லாஹ்வில் தொடங்கி, மாநபி {ஸல்} அவர்களைத் தொடர்ந்து, நபிமார்கள், ஸஹாபாக்கள், மலக்குமார்கள், குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹ், என எல்லாவற்றிலும் கை வைத்து புதிய மார்க்கம், புதிய கலிமா என புதிய அவதாரத்தோடு காட்சி தரும் இவர்கள் தான் முஸ்லிம் உம்மாவின் ஆக மிகப் பெரும் விரோதிகள்.

இவர்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். ஏனெனில், இம்முறை இவர்கள் கை கோர்த்திருப்பது ஃபாஸிசத்தோடு.

 உலகில் முஸ்லிம்களின் எல்லா வகையான எதிரிகளோடும் இவர்கள் கை கோர்ப்பார்கள் முஸ்லிம் சமூகத்தை அழிப்பதற்காக!

எனவே, சுதந்திர இந்தியாவில் இப்போது முஸ்லிம் சமூகத்தின் எதிரிகளின் பட்டியலில் புதிதாக ஒரு விரோதி தன்னை வெளிப்படையாக அடையாளம் காட்டி இருக்கின்றான். ஆம்! ஷீஆ எனும் முகமூடி அணிந்து கொண்டு.

ஷீஆக்களின் முகத்திரையை கிழித்து சுதந்திரக் காற்றை முழுமையாய் சுவாசித்திட இன்னுமோர் போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகம் தயாராக வேண்டும்.
அதுவே காலத்தின் கட்டாயமும் கூட!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து பாதுகாப்பானாக!

புதிதாய் கிளம்பி இருக்கும் இந்திய ஷீஆக்களின் தீங்கிலிருந்து அல்லாஹ் இந்திய முஸ்லிம்களைப் பாதுகாப்பானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment