Thursday 17 August 2017

சிறப்பு தினங்கள்! உங்கள் வாழ்வின் அந்தஸ்தை உயர்த்தட்டும்….



சிறப்பு தினங்கள்!
உங்கள் வாழ்வின் அந்தஸ்தை உயர்த்தட்டும்….



வாழ்க்கையில் எல்லா மனிதர்களுமே உயர்ந்த அந்தஸ்தை அடைய வேண்டும் என்று விரும்புகின்றார்கள். அதற்காக எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள்.

ஏனெனில், அந்த அந்தஸ்து தான் சமூகத்தில் மிகப் பெரிய அங்கீகாரத்தையும், மரியாதையையும், அடையாளத்தையும் பெற்றுத் தருகின்றது.

உலகியல் சார்ந்த ஏதேனும் ஓர் துறையின் மூலம் அடைகிற அந்தஸ்தும் அதன் மூலம் பெறப்படுகிற அங்கீகாரமும், மரியாதையும் நிலையானதல்ல என்பதை ஏனோ மனித சமூகம் விளங்கிக் கொள்ள முன்வருவதில்லை.

      எது மரியாதை? எது அங்கீகாரம்? எது அடையாளம்? எது கண்ணியம் என்கிற அடிப்படை புரிதல் இல்லாததும், எந்த உயர்ந்த அந்தஸ்து நிரந்தரமான கண்ணியத்தையும், அங்கீகாராத்தையும் பெற்றுத்தரும் என்கிற அடிப்படை அறிவு இல்லாததுமே முழுமுதற் காரணம் ஆகும்.

எனவே, ஒரு முஸ்லிம் சமூகத்தில் மரியாதையை எதிர்பார்க்கக்கூடாது, கண்ணியத்தை ஆதரவு வைக்கக் கூடாது, அடையாளத்தைப் பெற முயற்சி மேற்கொள்ளக் கூடாது, உயர்ந்த நிலையை அடைய ஆசை கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு நாம் வந்து விடவும் கூடாது.

ஏனெனில், கண்ணியம், மரியாதை, அடையாளம், அங்கீகாரம் என்பதெல்லாம் ஓர் இறைநம்பிக்கையாளனின் அழகிய அணிகலன் ஆகும்.

இன்னும் சொல்லப் போனால் கண்ணியம், மரியாதை, அங்கீகாரம் ஆகியவைகள் எல்லாம் அழகு பெறுவதே இறைநம்பிக்கையாளர்களோடு அவைகள் இணையும் போது தான்.
وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ

எனினும், கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரியதாகும்”.                  ( அல்குர்ஆன்: 63: 8 )

رَفِيعُ الدَّرَجَاتِ ذُو الْعَرْشِ

அர்ஷின் உரிமையாளனாகிய அல்லாஹ்! அவன் உயர்ந்த அந்தஸ்துகளை உடையவன்”.                                                ( அல்குர்ஆன்: 40: 15 )

எது உயர்ந்த அந்தஸ்து? யாரிடம் அதை எதிர்ப்பார்க்க வேண்டும்? எதன் மூலம் அதை அடைந்து கொள்ள முடியும்?...

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ
 " ابْتَغُوا الرِّفْعَةَ عِنْدَ اللَّهِ "

 அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைந்து கொள்ள ஆசைப்படுங்கள்என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.       ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

ஏனெனில், அல்லாஹ் தான் கண்ணியத்தையும், உயர்ந்த அந்தஸ்தையும் வழங்குகின்றான்.
وَتُعِزُّ مَنْ تَشَاءُ

அல்லாஹ்வே! நீதான் நாடியவர்களுக்கு கண்ணியத்தை வழங்குகின்றாய்!”

                                                       ( அல்குர்ஆன்: 3: 26 )

அல்லாஹ் இந்த உலகத்திலும் மறுமையிலும் நான்கு பிரிவினர்களுக்கு உயர்ந்த அந்தஸ்துகளை வழங்குவதாக வாக்களிக்கின்றான்.

1. இறைநம்பிக்கை கொண்டவர்கள், 2. மார்க்கக் கல்வி பெற்றவர்கள்..

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ

உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ, மேலும் எவர்களுக்கு ஞானம் வழங்கப்பட்டிருக்கின்றதோ அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்துகளை வழங்குவான்”.                               ( அல்குர்ஆன்: 58: 11 )


3. நல்அமல்கள் செய்பவர்கள்…..
وَلِكُلٍّ دَرَجَاتٌ مِمَّا عَمِلُوا وَلِيُوَفِّيَهُمْ أَعْمَالَهُمْ

ஒவ்வொருவருக்கும் அவரவரின் நல் அமல்களைப் பொறுத்து சில உயர்ந்த அந்தஸ்துகள் உள்ளன. மேலும், அல்லாஹ் அவர்களின் அமல்களுக்குரிய கூலியை அவர்களுக்கு முழுக்க முழுக்க அளித்திட வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு செய்கின்றான்”.                                              ( அல்குர்ஆன்: 46: 19 )

4. பணிவை கடைபிடிப்பவர்கள்….

عن إبراهيم بن عابس بن ربيعة قال: قال عمر رضي الله عنه وهو على المنبر
 أيها الناس تواضعوا , سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " من تواضع لله , رفعه الله "
இப்ராஹீம் இப்னு ஆபிஸ் இப்னு ரபீஆ (ரலி) அறிவிக்கின்றார்கள்:

உமர் (ரலி) அவர்கள் மின்பரில் நின்று உரையாற்றும் போதுமக்களே! பணிவை மேற்கொள்ளுங்கள்! ஏனெனில், நான் மாநபி {ஸல்} அவர்கள் இவ்வாறுஎவர் அல்லாஹ்வுக்காக பணிவை மேற்கொள்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் உயர் அந்துஸ்துகள் வழங்குவான்என்று கூற நான் கேட்டிருக்கின்றேன்என்று கூறினார்கள்.                                         ( நூல்: ஜாமிஉஸ் ஸஹீஹ் )

எனவே, உயர்ந்த அந்தஸ்திற்கும், கண்ணியத்திற்கும் உரியவனான அல்லாஹ் இடத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற ஆசை கொள்வதோடு, அவன் எதன் மூலம் எல்லாம் உயர் அந்துஸ்துகளை, கண்ணியத்தைத் தருவதாக வாக்களித்துள்ளானோ அவைகளை வாழ்க்கையில் செயல்படுத்தி உயர்ந்த அந்தஸ்தை அடைய முயற்சிப்போம்!

அல்லாஹ் நம் அனைவரையும் உயர்ந்த அந்தஸ்தோடும், கண்ணியத்தோடும், மரியாதையோடும் வாழச் செய்வானாக! ஆமீன்!

இந்த வகையில் நல் அமல்கள் மூலம் நாம் உயர்ந்த அந்தஸ்துக்களைப் பெற முயற்சிக்க வேண்டும்.

குறைவான ஆயுட்காலம் வழங்கப்பட்டிருக்கும் உம்மத்தாகிய நமக்கு அல்லாஹ் செய்திருக்கிற பேருபகாரம் என்னவெனில் குறிப்பிட்ட சில நாட்களில் செய்யும் சில அமல்களுக்கு, குறிப்பிட்ட சில அமல்களை தொடர்படியாக செய்து வருபவர்களுக்கு நிறைவான நன்மைகளையும், கூலிகளையும் வழங்குவதாகும்.

அந்த அடிப்படையில் அல்லாஹ் துல் ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களுக்கு நிறைவான நன்மைகளையும், உயர்ந்த அந்தஸ்துகளையும் வழங்குகின்றான்.

துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் மற்றும் அய்யாமுத்தஷ்ரீக் உடைய நாட்களின் சிறப்புகளும்… நன்மைகளும்…

وقد روى أحمد عن جابر مرفوعا: أن هذا هو العشر الذي أقسم الله به في قوله: { وَالْفَجْرِ وَلَيَالٍ عَشْرٍ }

”அதிகாலையின் மீது சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக!

                                                                                                              ( அல்குர்ஆன் 89: 1, 2 )

இறைவன் ஆணையிட்டுக் கூறும் அந்த பத்து நாட்கள் துல் ஹஜ்ஜின் பத்து நாட்களைக் கொண்டு தான் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் முஸ்னதில் கூறுகின்றார்கள்.

மேலும், அதிகாலையின் மீது சத்தியமாக எனப் பொதுவாக கூறப்பட்டிருப்பதால் அது துல்ஹஜ் மாதம் 10 ஆம் நாள் பெருநாள் காலையின் மீது சத்தியமாக என்றும் பொருள் கொள்ள வேண்டும் என மஸ்ரூக், முஜாஹித், முஹம்மது பின் கஅப் ( ரஹிமஹும் ) போன்ற தாபியீன் விரிவுரையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الأَيَّامِ الْعَشْرِ)). فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((وَلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلاَّ رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ))رواه . ترمدي

நற்செயல்கள் செய்யப்படும் நாட்களில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைவிட அல்லாஹ்வக்கு மிகப் பிரியமான நாட்கள் வேறெதுவும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது, இதைக் கேட்ட நபித்தோழர்கள்அல்லாஹ்வின் தூதரே! இந்நாட்களின் அமல் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விடவும்  மிகப் பிரியமானதா? எனக் கேட்டனர்.

அதற்கு, ஆம்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விட மிகப் பிரியமானது என்று கூறிவிட்டு  ஒருவர் தனது சரீரத்துடனும்.பொருளுடனும் அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டு.உயிரையும்,  பொருளையும் தியாகம் செய்கிறார் அவரின்  அமல்களைத் தவிர என மாநபி {ஸல்} அவர்கள் பதிலளித்தார்கள்.                                                ( நூல்: திர்மிதீ )

قال الحافظ ابن حجر العسقلاني: والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة لمكان اجتماع أمهات العبادة فيه, وهي الصلاة والصيام والصدقة والحج, ولا يتأتى ذلك في غيره.
( فتح الباري بشرح صحيح البخاري، 2/534 )

அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானீ (ரஹ்) கூறுகின்றார்கள்”  துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களின் சிறப்பிற்கு காரணம் இஸ்லாம் வலியுறுத்திக் கூறும் அனைத்து முக்கிய வணக்கங்களும்  இந்த நாட்களில் தான் மொத்தமாக செய்யும் வாய்ப்பு கிடைக்கின்றது. இது அல்லாத மற்ற நாட்களில் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை

 பெருநாள் தொழுகையின் மூலம் தொழுகை என்னும் வணக்கம். அரஃபா தினத்தன்று நோற்கும்  நோன்பு, மற்றும் ஹஜ்ஜின் கிரியைகள், துஆ ஒப்புக் கொள்ளப்படும் இடங்களில் செய்யப்படும் துஆக்கள்,  குர்பானியின் மூலம் ஸதக்கா, தக்பீர் சொல்வதன் மூலம் தஸ்பீஹ் மற்றும் திக்ர் ஆகிய வணக்கங்களை செய்ய முடிகின்றது.

عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ، وَلَا أَحَبُّ إِلَيْهِ مِنَ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ ، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ، وَالتَّكْبِيرِ، وَالتَّحْمِيدِ»

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”துல்ஹஜ் உடைய முதல் பத்து நாட்களை விட  வேறு  எந்த நாட்களில்  செய்யப்படுகின்ற  நல்லறங்களும் அல்லாஹ்விடத்தில்  மிகவும் கண்ணியமானதாகவும், பிரியமானதாகவும் இல்லை. எனவே,  இந்நாட்களில் அதிகமாக  தஹ்லீல் ( லாஇலாஹ இல்லல்லாஹு, )  தக்பீர்  ( அல்லாஹு அக்பர் ) தஹ்மீது ( அல்ஹம்து லில்லாஹ் )  சொல்லுங்கள்.

                                                      ( நூல்: அபூதாவூத் )

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ
عن ابن عباس: الأيام المعلومات: أيام العشر،
وفي سنن أبي داود: أن رسول الله صلى الله عليه وسلم كان يصوم هذا العشر
وقال البخاري: وكان ابن عمر، وأبو هريرة يخرجان إلى السوق في أيام العشر، فيكبران ويكبر الناس بتكبيرهما

அல் ஹஜ் அத்தியாயத்தின் 28 –ஆம் வசனத்தில்  அறியப்பட்ட  நாட்களில் இறைவனை திக்ரு செய்யுங்கள் என்பது துல்ஹஜ் பத்து நாட்களாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.

நபி {ஸல்} அவர்கள் முந்தைய பத்து நாட்களில் நோன்பு நோற்பவராக இருந்தார்கள் என அபூதாவூதில் ஒரு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

இப்னு உமர் (ரலி ) அபூஹீரைரா (ரலி) ஆகிய இருவரும் துல்ஹஜ் மாதத்தில் முந்தைய பத்து  நாட்களில் கடை வீதிக்கு சென்றால் தக்பீர் சொல்வார்கள்  அதை பார்த்து மக்களும் சொல்வார்கள்.                              ( நூல் இப்னு கஸீர் )


அரஃபாவின் நோன்பு.....

عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صِيَامُ يَوْمِ عَرَفَةَ، إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ» ترمدي

அபூ கதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அரஃபாவின் நோன்பு அதற்கு முன்னுள்ள ஓர் ஆண்டு, மற்றும் பின்னுள்ள ஓர் ஆண்டின் குற்றங்களை அழித்து விடும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                     ( நூல்: திர்மிதி )



கல்வியின் மூலம் அந்தஸ்தைப் பெற்றவர்கள்….

وهنالك الكتاب الجليل: "معجم المصنفين" الذي هو في موضوعه دائرة معارف في ستين مجلداً تحتوي على عشرين ألفاً من الصفحات، وعلى تراجم أربعين ألفاً من المصنفين.. لقد ترجم هذا الكتاب الفذ لكل من ألَّف بالعربية كتاباً منذ بدأ العهد التأليفي إلى سنة 1350 هجرية.
ومؤلف هذه الموسوعة الكبرى: العلامة محمود حسن خان التونكي المتوفى تقريباً سنة 1366 هجرية.
ومحمود حسن خان التونكي
 له مصنف سماه
معجم المصنفين
 كدائرة معارف، يقع في ستين مجلدًا، يحتوي على عشرين ألفًا من الصفحات المطبوعة، وعلى تراجم أربعين ألفًا من المصنفين، منهم ألفان باسم أحمد.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் தோங்க் நகரத்தில் பிறந்த மௌலானா மஹ்மூத் ஹஸன் கான் (ரஹ்) அவர்கள் உலகத்தின் தலை சிறந்த வரலாற்று அறிஞர்களான இமாம் சுயூத்தி (ரஹ்), இமாம் இப்னு கஸீர் (ரஹ்), இமாம் இப்னு அஸாக்கீர் (ரஹ்), இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) ஆகிய அறிஞர் பெருமக்களின் அறிவுத் தரத்தோடும், தியாக வாழ்வோடும் இணைத்துப் பேசப்படும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றார்கள்.

ஆம்! இமாம் zஸர்கலீ (ரஹ்) அவர்கள் எழுதியஅல்அஃலாம்எனும் நூலில் முஸ்லிம் உம்மாவிற்காக அரும்பாடுபட்ட, பெரும்பங்கு வகித்த அறிஞர் பெருமக்களின் பட்டியலில் மௌலான மஹ்மூத் ஹஸன் கான் (ரஹ்) அவர்களையும், அவர்களின் அர்ப்பணிப்பு வாழ்வையும் குறிப்பிடுகின்றார்கள்.

40,000 இஸ்லாமிய எழுத்தாளர்களின் எழுத்துக்களையும், அவர்களது வாழ்க்கை வரலாற்றையும் சுமார் 20,000 பக்கங்களில், 60 பாகங்களாக எழுதினார்கள்.

அதிலும் குறிப்பாக ஒரேயொரு நூலை மட்டுமே எழுதியிருக்கும் ஒரு எழுத்தாளரின் வாழ்வைக் கூட பதிவு செய்யாமல் இருக்கவில்லை.

இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் 40,000 எழுத்தாளர்களில் 2000 பேருக்கு அஹ்மத் எனும் பெயர் இருந்தது.

இந்த எழுத்தாளர்களில் முஹத்திஸீன்கள், முஃபஸ்ஸிரீன்கள், வரலாற்று ஆசிரியர்கள், ஃபுகஹாக்கள், அரபி இலக்கண, இலக்கிய ஆசிரியர்கள் இன்னும் பல பேர் அடங்குவர்.

அவர்கள் எழுதிய அந்நூலுக்குமுஃஜமுல் முஸன்னிஃபீன்எனும் பெயரை வைத்தார்கள். இந்த 60 பாகங்களில் 4 பாகங்களை பெய்ரூத் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 56 பாகங்களும் இந்தியாவின் ஹைதராபாத் நகரிலுள்ள அசாபிய்யா நூலகத்தில் இருக்கின்றது.

இந்த நூலைப் பற்றி குறிப்பிடும் இமாம் ஸர்கலீ (ரஹ்) அவர்கள்இமாம் அவர்களின் உழைப்பும், முயற்சியும் வியக்கத்தக்கது. இத்துனை இமாம்கள், அறிஞர்கள் ஆகியோரின் தகவல்களைத் திரட்ட மேற்கொண்ட பயணங்கள், அவற்றின் தூரம் ஆகியவைகளைக் கணக்கிட்டால் இமாம் அவர்களின் வாழ்க்கையின் முழுப் பகுதியும் இந்தப் பணியிலேயே செலவாகி இருக்கின்றது”. என்று கூறுவார்கள்.

                  ( நூல்: அல்அஃலாம் லி இமாமி அஸ்ஸர்கலீ (ரஹ்)….. )

நல்அமல்கள் மூலம் அந்தஸ்தைப் பெற்றவர்கள்….

ஹிஜ்ரி 532 –இல் பிறந்து சுமார் 57 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து, மௌத்தாகும் போது முழு உலகமும் அவருடைய மரணத்திற்காக இரங்கல் தெரிவித்து, இன்றளவும் முஸ்லிம் உம்மத்தைத் தாண்டி உலகின் அத்துனை வரலாற்று அறிஞர்களின் சிந்தனையிலும் ஆளுமை செய்து கொண்டிருக்கிற அந்த மாமனிதரின் வெற்றிக்கும், உயர்ந்த அந்தஸ்துக்கும் பின்னால் என்ன இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

சிலுவை யுத்தத்தின் தோல்வி அந்த சமூக மக்களிடையே நூற்றாண்டுகளைக் கடந்தும் ஆறாத வடுவை ஏற்படுத்தி இருந்தது.

முதலாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்திருந்த தருணம் அது. மெல்ல பிரெஞ்சுப் படைகள் தங்களின் ஆதிக்கத்தை உலக நாடுகளின் பால் திருப்பிக் கொண்டிருந்த தருணமும் கூட.

சிரியாவை நோக்கி ஜெனரல் ஹென்றி கோர் தலைமையில் 1920, ஹிஜ்ரி 1338 துல்கஅதா பிறை 8 –இல் பிரெஞ்சுப்படை சென்றது.

சற்றும் எதிர்பாராத இந்த படையெடுப்பில் அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களோடு போரிட்டு இறுதியில் தோல்வியைத் தழுவி ஆட்சியையும் பறிகொடுத்தார்.

வரலாற்றில் இந்தப்போர் Battle of Maysalun மைஸ்லோன் போர் என அழைக்கப்படுகிறது.

முதல் வெற்றி அதுவும் இஸ்லாமிய ஆட்சியாளரை எதிர்த்து பிரெஞ்சுப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் ஹென்றி கோர் வெற்றிக் களிப்பில் திளைத்தான்.

He is remembered in the Levant primarily for this role, and for an attributed anecdote which portrays him as the epitome of Western triumphalism in the Middle East. Following the Battle of Maysalun, Gouraud reportedly went to the tomb of Saladin, kicked it, and said: "Awake, Saladin. We have returned. My presence here consecrates the victory of the Cross over the Crescent."
. Kingmakers: The Invention of the Modern Middle East. W. W. Norton & Company. p. 359.
வெற்றி பெற்ற கையோடு திமிஷ்க் வந்த ஜெனரல் ஹென்றி கோர் நேராகஉலக சிந்தனையாளர்களையும், வரலாற்று நிபுணர்களையும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறஅந்த மாமனிதரின் மண்ணறையின் முன்பாக வந்து நின்றான்.

அந்த மாமனிதர் வேறு யாருமல்ல. சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள்.

வந்தவன் சும்மா நிற்கவில்லை, மண்ணறையின் மீது ஷூ அணிந்த காலோடு நின்று கொண்டுஸலாஹுத்தீனே! எழுந்து வா! இதோ நாங்கள் மீண்டும் வந்து விட்டோம்! எங்கள் முன்னோர்களான சிலுவைப் படையினருக்கு எதிராக நீ பெற்ற வெற்றிக்குப் பழி வாங்கும் முகமாக இதோ பலமான வெற்றியோடு இதோ நாங்கள் வந்திருக்கின்றோம்! எழுந்து வா! ஸலாஹுத்தீனே!” என்று கொக்கரித்தான்.

நூற்றாண்டு கடந்தும் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் எதிரிகளின் இதயத்தில் நீங்காத நினைவாக இருந்தார் என்றால் அவர்களின் இஸ்லாமிய வாழ்க்கை எவ்வளவு தூய்மையானதாக இருந்திருக்கும்.

வாருங்கள்! உலக வரலாற்றை ஆளுமை செய்கிற அந்த மாமனிதரின் வாழ்விலிருந்து சில செய்திகளை பார்த்து வருவோம்!

பைத்துல் முகத்தஸ் என்றால் நமக்கு எப்படி ஸுலைமான், தாவூத் (அலைஹிமா) ஞாபகத்திற்கு வருவார்களோ, எப்படி மிஃராஜ் பயணமும், மாநபி {ஸல்} அவர்களும் ஞாபகத்திற்கு வருவார்களோ, எப்படி ஜகரிய்யா, யஹ்யா, யூஸுஃப் (அலைஹிம்) ஞாபகத்திற்கு வருவார்களோ, எப்படி உமர் (ரலி) அன்ஹு அவர்கள் ஞாபகத்திற்கு வருவார்களோ, எப்படி நம்முடைய முதல் கிப்லா எனும் ஞாபகம் வருமோ அது போன்று ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களும் ஞாபகத்திற்கு வருவார்கள்.

சிலுவை யுத்தக்காரர்களை சிதறடித்து பைத்துல் முகத்தஸை வெற்றி கொண்டு இந்த முஸ்லிம் உம்மாவின் சிந்தனையில் வெற்றி வீரராக இன்றும் வலம் வருபவர் சுல்தான் ஸலாஹுத்தீன் (ரஹ்) அவர்களே.

சிலுவைப் போராட்ட வீரர்களுக்கெதிராக அவர்கள் அடைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்குப் பின்னர் அல்லாஹ்வின் உதவி அவருக்கு இருந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

அல்லாஹ்வின் உதவி அவருக்கு எப்படிக் கிடைத்தது என்பதை நாம் உணர வேண்டும்.

 وكان رحمه الله سخيًّا، كريمًا، حبيبًا، ضحوك الوجه، كثير البشر، لا يتضجر من خير يفعله، شديد المصابرة والمثابرة على الخيرات والطاعات
 قال العماد: كان السلطان صلاح الدين حليمًا، مقيلًا للعثرة، تقيًّا، نقيًّا، وفيًّا صفيًّا، يُغضِي ولا يغضب، ما رد سائلًا ولا خَجَّل قائلًا، كثير البر والصدقات

فقد كان مواظبًا على الصلوات في أوقاتها جماعة، يقال إنه لم تفته الجماعة في صلاة قبل وفاته بدهر طويل حتى ولا في مرض موته، بل كان يدخل الإمام فيصلي به، فكان يتجشم القيام مع ضعفه، وكان رقيق القلب سريع الدمعة، وكان يحب سماع القرآن العظيم ويواظب على سماع الحديث حتى إنه سمع في بعض المصافات جزءًا وهو بين الصفين للقتال وكان يقول: هذا موقف لم يسمع أحد في مثله حديثً

அல்லாமா தகபீ (ரஹ்), அல்லாமா இப்னு கஸீர் (ரஹ்), அல்லாமா அமாத் (ரஹ்), அல்லாமா அப்துல் லதீஃப் (ரஹ்) ஆகியோர் தங்களின் நூற்களில் பதிவு செய்திருக்கும் விஷயங்கள் மிகவும் அற்புதமானது.

சுல்தான் ஸலாஹுத்தீன் (ரஹ்) அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும் போது கூட ஜமாஅத்துத் தொழுகையை விட்டது கிடையாது.

பெரும்பாலும் இரவு நேரங்களில் வணக்க வழிபாடுகளில் கழிப்பார்கள். இல்முடைய சபைகளில் அதிகம் பங்கேற்பார்கள். அதிகமாக குர்ஆன் ஓதுபவராகவும், குர்ஆன் ஓதச் சொல்லி கேட்பவராகவும் இருந்தார்கள்.

மாபெரும் ஆட்சியாளராக இருந்தும் ஆடை, வீடு, உணவு விஷயத்தில் மிகவும் எளிமையையே கடை பிடித்தார்கள்.

தனி வாழ்க்கை, பொதுவாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என அனைத்திலும் நபி {ஸல்} அவர்களின் சுன்னத்தைக் கடை பிடித்தார்கள்.

படையின் தளபதியாக இருந்தாலும் சாதாரண படை வீரர் ஒருவரைப் போன்று யுத்த களத்தில் எல்லா வேலைகளையும் செய்வார்கள்.

யுத்தத்தின் ஓய்வு நேரத்தில் கூட குர்ஆன் ஓதச் சொல்லிக் கேட்பார்கள்.

இரக்க சிந்தனை, மனிதநேயம், மனிதாபிமானம் என இவைகளை பாரபட்ச மின்றி அனைத்து வகையான மனிதர்களோடும் நடந்து கொண்டார்கள்.

قال ابن كثير: "وفي سنة (589هـ) اشتد به المرض ثم حصل له عرق شديد بحيث نفذ إلى الأرض، وعندما ظهرت مخايل الضعف الشديد وغيبوبة الذهن في بعض الأوقات استدعى الشيخ أبا جعفر إمام الكلاَّسة ليبيت عنده يقرأ القرآن ويلقنه الشهادة إذا جد به الأمر، فذكر أنه كان يقرأ عنده وهو في غمرات الموت
 {هُوَ اللَّهُ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ} [الحشر: 22] فقال: وهو كذلك صحيح، فلما أذن الصبح جاء القاضي الفاضل فدخل عليه وهو في آخر رمق، فلما قرأ القارئ: {لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ} [التوبة: 129] تبسم، وتهلل وجهه وأسلم روحه إلى ربه، ومات رحمه الله
ஸக்ராத்தின் நிலையில் இருக்கும் போது கல்லாஸாவின் இமாம் அபூ ஜஅஃபர் அவர்களை அழைத்து குர்ஆன் ஓதக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். திடீரென மயக்கமாவதும், மயக்கம் தெளிந்த பின்னர் மீண்டும் குர்ஆன் ஓதச் சொல்லி கேட்பதுமாக இருந்தார்கள்.

தவ்பா அத்தியாயத்தின் 129 –ஆவது இறைவசனத்தை கேட்டுக் கொண்டிருக்கும் போது முகமலர்ச்சியோடும், புன்முறுவலோடும் அவர்களின் ஆன்மா ரப்பிடம் சென்று சேர்ந்தது.

دفن صلاح الدين في دمشق وتحديداً في المدرسة العزيزيّة الواقعة إلى القرب من المسجد الأموي إلى جوار نور الدين زنكي، وقد قيل أنه عند فتح خزانته الشخصيّة لم يعثر فيها على ما يكفي من المال لتغطية نفقات جنازته، لأنها ذهبت جميعاً في الصدقات
ஈகைச் சிந்தனை அதிகம் கொண்டவர்கள் அய்யூபி (ரஹ்) அவர்கள். எந்த அளவுக்கெனில் அவர்களை கஃபன் செய்யக் கூட துணி வாங்க பணம் இல்லாத நிலை ஏற்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

لم يترك في خزانته من الذهب سوى دينار واحد، وستة وثلاثين درهمًا، وقال غيره: سبعة وأربعين دينار، ولم يترك دارًا ولا عقارًا، ولا مزرعة، ولا بستانًا، ولا شيئًا من أنواع الأملاك، وإنما لم يخلف أموالًا، ولا أملاكًا لكثرة عطاياه وهباته وصدقاته وإحسانه إلى أُمرائه ووزرائه وأوليائه حتى إلى أعدائه
அவர்கள் வஃபாத் ஆகும் போது அவர்களுக்கென்று இந்த உலகில் அசையும், அசையா சொத்து என்று எதுவும் இல்லை.

وكان أهل دمشق لم يصابوا بمثل مصابه، وود كل منهم لو فداه بأولاده وأحبابه وأصحابه، وغلقت الأسواق، وأخذ الناس في البكاء

மேலும், அவர்களின் இழப்பை அன்றைய அந்த மக்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. நீண்ட நாட்களாக வீதிகள் வெறிச்சோடி கணப்பட்டது. அனைத்து சமூக மக்களும் அவர்களின் இறப்பின் போது அழுதார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சுல்தான் ஸலாஹுத்தீன் (ரஹ்) அவர்களுக்கு அவர்கள் செய்த நல் அமல்களைக் கொண்டு இவ்வுலகில் நீங்காத உயர்ந்த ஓர் அந்தஸ்தைக் கொடுத்தான்.

இன்ஷா அல்லாஹ்நாளை மறுமையில் சுவனத்தைக் கொடுத்து அல்லாஹ் அன்னாரைக் கவுரவிப்பானாக! ஆமீன்!

ஆகவே, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய உயர்ந்த அந்தஸ்தைக் கவனத்தில் கொண்டு நம்மீது பேருபகாரம் செய்து இது போன்ற சிறப்பு நாட்களைத் தந்து அதில் அமல் செய்யுமாறு ஆர்வ மூட்டுகின்றான்.

நாமும் அந்த நாட்களை வீணடிக்காமல் நல் அமல்களின் மூலம் அலங்கரித்து ஈருலகிலும் உயர்ந்த அந்தஸ்தை அடைவோமாக!

வல்ல அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
                          வஸ்ஸலாம்!!!

6 comments:

  1. ஒரே கட்டுரையில் மூன்று அம்சங்களை உள்ளடக்கிய பதிவு மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. Mashaa allah good status Jazkkumullahu hairan Hazrath

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.! சிறப்புகளை மரியாதையைஅல்லாஹ்விடமே தேடவேண்டும். என்று கூறி சிறப்பான பத்து நாட்களை குறித்து சிறந்த ஆக்கத்தை வழங்கியுள்ளீர்கள். அல்லாஹ் தங்களின் வாழ்வை சிறப்பாக்குவானாக. ஆமீன். جزاكم الله خيرا كثيرا يا أستاذ

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.! சிறப்புகளை மரியாதையைஅல்லாஹ்விடமே தேடவேண்டும். என்று கூறி சிறப்பான பத்து நாட்களை குறித்து சிறந்த ஆக்கத்தை வழங்கியுள்ளீர்கள். அல்லாஹ் தங்களின் வாழ்வை சிறப்பாக்குவானாக. ஆமீன். جزاكم الله خيرا كثيرا يا أستاذ

    ReplyDelete