Thursday 3 August 2017

அழகிய படைப்பாளன் அல்லாஹ்வும்… அழகிய படைப்பாகிய மனிதனும்…



அழகிய படைப்பாளன் அல்லாஹ்வும்
அழகிய படைப்பாகிய மனிதனும்



மனிதன் பிறந்ததில் இருந்து மரணிக்கும் வரை ஏதாவது ஒன்றை தேடிக் கொண்டே இருக்கின்றான்.

ஒன்று தேடியது கிடைக்காமலே இறந்து போகின்றான். அல்லது தேடியது கிடைத்தும் அனுபவிக்காமல் இறந்து போகின்றான்.

எனினும் படைத்த ரப்பைக் குறித்த தேடல் மனிதனுக்கு மிகக் குறைவாகவே இருக்கின்றது.

படைத்த ரப்பாகிய அல்லாஹ்வைப் பற்றிய தேடலில் ஒரு மனிதன் இறங்கி விட்டான் என்றால் அதன் ஆரம்பம் ஹிதாயத் எனும் நேர்வழி அதன் தொடர்ச்சி ஈமானிய வாழ்க்கை அதன் இறுதி முடிவு என்பது எல்லையில்லா இன்பச் சோலையான சுவர்க்கம் ஆகும்.

ஆதாலால் தான் மேன்மக்களான அறிஞர் பெருமக்கள்உலகில் ஆக உயர்ந்த அறிவும், தேடலும் படைத்த ரப்பாகிய அல்லாஹ்வைப் பற்றிய அறிவும், தேடலும் ஆகும்என்று கூறுவார்கள்.

அல்லாஹ் யார்? எனும் கேள்வியோடு இறைவனைப் பற்றிய தேடலைத் துவக்கினால் அல்குர்ஆனின் 6666 வசனங்களிலும் கோடான கோடி விடைகளும், தெளிவுகளும் நம் அகக்கண் முன்னாலும், புறக்கண் முன்னாலும் வந்து குவியும்.

ஒற்றை வார்த்தையில் அல்குர்ஆனின் வசனம் இப்படிச் சொல்லும்

اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ

அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் படைத்தவனாவான். அவனே ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளனாக இருக்கின்றான்” ( அல்குர்ஆன்: 39: 62 )

அவன் எப்படிப்பட்ட படைப்பாளன்?

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى () الَّذِي خَلَقَ فَسَوَّى () وَالَّذِي قَدَّرَ فَهَدَى

“ ( நபியே! ) உயர்வான உம் இறைவனைத் துதிப்பீராக! அவன் எத்தகையவன் எனில், அவன் தான் படைத்தான்; ஒவ்வொன்றையும் பொருத்தமாகவும் அமைத்தான்; மேலும், அவனே அவைகளுக்கான நியதிகளை நிர்ணயித்தான்; பிறகு அவனே அதற்கான வழிகளையும் காட்டினான்”.                      ( அல்குர்ஆன்: 87: 1 – 3 )

மனிதனை எப்படி படைத்தான்?

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம்

                                                       ( அல்குர்ஆன்: 95: 4 )
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ
மனிதனை நாம் களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம். பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் செலுத்தப்பட்ட விந்தாக ஆக்கினோம். பிறகு, அந்த விந்தினை இரத்தக் கட்டியின் வடிவத்தில் அமைத்தோம்.

பின்னர் அந்த இரத்தக் கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு, அச்சதைக்கட்டியை எலும்புகளாய் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளை சதையால் போர்த்தினோம். பிறகு, அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச் செய்தோம். பெரும் அருட்பேறுகள் நிறைந்தவன் மனிதன்”.     ( அல்குர்ஆன்: 23: 14 )

ஆகவே, அவன் மிக அழகிய படைப்பாளன்

فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ

அல்லாஹ் படைப்பாளர்களிலெல்லாம் மிகச் சிறந்த படைப்பாளன் ஆவான்”. ( அல்குர்ஆன்: 23: 14 )

அல்லாஹ் மனிதனை படைத்தான் மற்றெல்லா படைப்புகளை விடவும் மிகச் சிறந்த, உயர்ந்த படைப்பாக படைத்துள்ளான்.

மனிதன் மட்டும் தான் உலகில் மற்றெல்லா படைப்புகளை விட மிகச் சிறந்த படைப்பு என்பதற்கு அடிக்கடி நாம் ஆதாரமாகப் பயன்படுத்துவதுஆறறிவுஎன்பதைத் தான்.

அதைத் தாண்டி இன்னொன்றின் மூலமாகவும் அல்லாஹ் உலக படைப்புகளை விட மனித சமூகத்தை கண்ணியப் படுத்தி இருக்கின்றான் என்று அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا

நாம் ஆதமின் வழித்தோன்றல்களுக்குக் கண்ணியம் அளித்துள்ளோம். மேலும், தரையிலும், கடலிலும் அவர்களுக்கு வாகனம் வழங்கி இருக்கின்றோம். மேலும், தூய உணவுகளையே  அவர்களுக்கு நாம் உணவாக வழங்கினோம். மேலும், நாம் படைத்த பெரும்பாலான படைப்புக்களை விட அவர்களுக்கு அதிகச் சிறப்புக்களை வழங்கி இருக்கிறோம். இவை நமது கொடையாகும்           ( அல்குர்ஆன்: 17: 70 )

இந்த இறைவசனத்தில் தூய உணவுகளையே உணவாக நாம் வழங்கினோம்என்று மனித படைப்பின் மகத்துவங்களில் ஒன்றாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

எனவே, உலகப் படைப்புகளில் எப்படி அறிவின் மூலம் மனித படைப்பு சிறந்த படைப்பு என்பதாக பெருமை அடைகின்றோமோ, அது போன்று உணவின் மூலமும் மனித படைப்பு மிகச் சிறந்த படைப்பாகும்.

தாய்ப்பால் எனும் அருட்கொடை….

அந்த அடிப்படையில் மனித சமூகத்திற்கு முதல் உணவாக அல்லாஹ்தாய்ப்பால்எனும் கொடையை வழங்கியிருக்கின்றான்.

அத்தோடு நின்று விடாமல் தாய்ப்பால் என்பது பிறந்த குழந்தைக்கு முறையாக வழங்கப்பட வேண்டும் எனவும் அல்லாஹ் வழிகாட்டி இருக்கின்றான்.

وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا لَا تُضَارَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَهُ بِوَلَدِهِ

தம் குழந்தைகளுக்கு பால்குடியை நிறைவு செய்ய வேண்டும் என்று தந்தையர்களில் எவராவது விரும்பினால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரண்டாண்டு காலம் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். இந்நிலையில், அத் தாய்மார்களுக்கு நல்ல முறையில் உணவளிப்பதும், உடை கொடுப்பதும் குழந்தைகளின் தந்தையர்கள் மீது பொறுப்பாகும்.

ஆனால், எவர் மீதும் அவரது சக்திக்கு ஏற்பவே தவிர பொறுப்பு சுமத்தப்பட மாட்டாது. தாயும் தனது குழந்தைக்கு பாலூட்டும் காரணத்தால் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட மாட்டாள். தந்தையும் தனது குழந்தையினால் சிரமத்திற்கு உள்ளாக்கப் படமாட்டார்”. பார்க்க: முழு இறைவசனத்தையும்              ( அல்குர்ஆன்: 2: 233 )

ஆனால், தாய்ப்பால் எனும் இந்த விஷயத்தில் மனித சமூகத்தின் பெரும் பாலோர் அநீதமாக நடந்து கொள்வதைப் பார்க்கமுடிகின்றது.

ஆகஸ்ட் 1 –ஆம் தேதி உலக தாய்ப்பால் தினமாக உலகெங்கும் கொண்டாடப் பட்டு வருகின்றது.

இதன் மூலம் தாய்ப்பால் குறித்த மகத்துவத்தை, விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக.

குளோபல் பிரஸ்ட்பீடிங் கனெக்டிவ் என்ற அமைப்புடன் . நா குழந்தைகள் நல நிதியம் ( யுனிசெஃப் ), மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை கூட்டாக மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை சமீபத்தில் . நா வெளியிட்டது.

அதில்போதிய அளவு தாய்ப்பால் புகட்டப்படாததால் சீனா, இந்தியா, நைஜீரியா, மெக்ஸிகோ, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 2,36,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்கின்றன. அதிலும் குறிப்பாக, இந்தியாவில் 99,499 குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றன.

குழந்தைகளின் இறப்புக்கு டயோரியா ( வயிற்றுப்போக்கு ) நிமோனியா காய்ச்சல் ஆகியவை இரு முக்கிய காரணிகளாகும்.

முறையாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் டயோரியா மற்றும் நிமோனியா ஆகியவற்றை தடுக்க முடியும். இது மட்டுமின்றி கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்று நோய் ஆபத்துகளில் இருந்து பெண் சமூகத்தை காக்கவும் முடியும்.

தாய்ப்பால் புகட்டுவதை தள்ளிப்போடாமல் முன்னதாகவே தொடங்கி, முதல் ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்டுவது, ஆறுமாதங்களுக்குப் பிறகும் தாய்ப்பால் புகட்டுவதை தொடர்வது ஆகியவற்றால் டயோரியா மற்றும் நிமோனியா வை தடுத்து குழந்தைகள் இறப்பைத் தடுக்க முடியும்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

                         ( நன்றி: தமிழ் தி இந்து 3/08/2017 காஞ்சிபுரம் பதிப்பு )

இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் . நாவால் சுட்டிக்காட்டப் பட்டிருக்கும் 5 நாடுகளில் இரண்டு நாடுகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளாகும்.

இந்தோனேசியாவில் 88. 22%, நைஜீரியாவில் 49% என்கிற அளவில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

இந்தியாவில் 14. 2% சதவீதமும், மெக்ஸிகோவில் 0. 3%, சீனாவில் 03% சதவீதம் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்என்பது தான்.

வேலைக்கு பெண்கள் செல்ல ஆரம்பித்தது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊட்டச்சத்து மாவுகள் வரத்து துவங்கியது, நாகரிகமோகம், போதுமான வலிமை இன்மை, பால் சுறக்கும் தன்மை குறைவு என சில பல காரணங்களால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை நிறுத்தி விட்டனர்.

எனினும், உலகளவில் சில நாடுகளில் தாய்ப்பால் புகட்டுகிற பழக்கம் கடுமையாக பின்பற்றப்படுகிறது.

இந்தியாவில் கூட 55 சதவீத குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு முழுமையாக தாய்ப்பால் புகட்டப்பட்டு வருவதாக ஓர் ஆய்வு கூறுகின்றது.

இஸ்லாமியப் பார்வையில் தாய்ப்பால் புகட்டுவது என்பது?

جاء في الموسوعة الفقهية (22/239) : " لا خلاف بين الفقهاء في أنه يجب إرضاع الطفل ما دام في حاجة إليه ، وفي سن الرضاع " .
والرضاعة حقٌّ ثابت للرضيع بحكم الشرع يلزم إيصاله إليه من قِبَلِ من وجب عليه هذا الحق ، وقد صرح الفقهاء بأن الرضاعة " حقٌّ للولد " .
وعللوا ذلك بقولهم : " لأن الرضاع في حقِّ الصغير كالنفقة في حق الكبير " .

ஃபுகஹாக்களின் ஏகோபித்த முடிவின் படி தாய்ப்பால் புகட்டுவது வாஜிப் ஆகும்.

மேலும், தாய்ப்பால் என்பது குழந்தைக்கான உரிமையும் ஆகும். எனவே குழந்தைக்கான உரிமையை நிறைவேற்றுவது தாயின் கடமையாகும்.

ஆகவே தான் அல்லாஹ் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு செலவு செய்வதை அவசியமாக்கி இருக்கின்றான்.

تعد الرضاعة الطريق الذي تكسب به الأم أجرا وثوابا عند الله تعالى بعد ثواب الحمل والوضع، قال تعالى
حملته أمه وهنا على وهن" (لقمان: 14)، وقوله تبارك وتعالى
 "حملته أمه كرها ووضعته كرها" (الأحقاف: 15)، فتأخذ الوالدة المرضع على عملية الرضاعة - وهي الأمر الفطري الجبلي- أجرا عند الله؛ كما لا يخفى ما للرضاعة من أهمية في مساعدة الأم النفساء على استعادة قوتها، حيث إن عملية الإرضاع تسهل انقباض الرحم، وعودته إلى حجمه الطبيعي، فتتخلص النفساء من الدم بسرعة كبيرة
، خلافا لما هو شائع إذ "تحسب الجاهلات أن الإرضاع يسبب لهن الضعف والوهن، مع أن الرضاعة تحدث تحسنا في الحالة الصحية، وتبعث النشاط في وظائف الهضم للاستزادة من المواد الغذائية"

மேலும், தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலிகளையும் வழங்குவான். ஏனெனில், அல்லாஹ் லுக்மான் அத்தியாயம் – 14 ஆம் வசனத்திலும், அல் அஹ்காஃப் அத்தியாயத்தில் – 15 ஆம் வசனத்திலும் பால்குடி நிலையை வஹ்ன், குர்ஹ் ( பலகீனம், சிரமம் ) என்று இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

எனவே, அல்லாஹ்வின் ஒரு கட்டளையை, குழந்தைக்கு உரிய ஒரு கடமையை நிறைவேற்றிய நன்மையும், நிஃபாஸ் எனும் இரத்தப் பெருக்கு எனும் சிரமத்திற்கும், பலகீனத்திற்கும் மத்தியில் குழந்தையின் உரிமையின் விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளையை மதித்து நடப்பதால் மகத்தான கூலியையும் தாய் பெற்று விடுகின்றாள். அத்தோடு அந்த தாய்க்கு செலவு செய்வதால் குழந்தையின் தந்தைக்கும் நன்மை கிடைத்து விடுகின்றது.

சுருங்கச் சொன்னால் தாய்ப்பால் கொடுப்பதும் ஓர் இபாதத் ஆகும். எப்போது ஓர் செயலைச் செய்தால் நன்மை கிடைக்குமோ அப்போதே அதை நிறைவேற்றாமல் தவறு செய்தால் தண்டனையும் கிடைக்கும்.

وَالْمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ وَهِيَ مَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا

ஒரு பெண் அவளுடைய கணவனின் குழந்தைக்கும், அவனுக்கு பாத்தியமானவைகளுக்கும் பொறுப்பு தாரியாவாள் நாளை மறுமையில் அந்த பொறுப்பு குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்என நபி {ஸல்} அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.                                                 ( நூல்: புகாரி )

தாயின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த இறைவன்….

ஃபிர்அவ்னுடைய சூழ்ச்சிகளில் இருந்து மூஸா (அலை) அவர்களைக் காக்கும் பொருட்டு, மூஸா {அலை} அவர்களைக் கருவில் சுமந்து நின்ற தாயிடம் அல்லாஹ் நைல் நதியில் ஒரு பெட்டியில் வைத்து போட்டு விடுமாறு பணிக்கின்றான்.

அந்தக் கட்டளையோடு மீண்டும் உம் குழந்தையை உம்மிடம் ஒப்படைப்போம் என்கிற உத்திரவாதத்தையும் அல்லாஹ் வழங்கினான். பார்க்க அல்கஸஸ் அத்தியாயம் முதல் 10 வசனங்கள்.

அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே நிறைவேற்றிய அந்த தாயின் உணர்வுகளை அல்லாஹ் கௌரவப் படுத்தினான். இப்படி…

وَأَصْبَحَ فُؤَادُ أُمِّ مُوسَى فَارِغًا إِنْ كَادَتْ لَتُبْدِي بِهِ لَوْلَا أَنْ رَبَطْنَا عَلَى قَلْبِهَا لِتَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ (10) وَقَالَتْ لِأُخْتِهِ قُصِّيهِ فَبَصُرَتْ بِهِ عَنْ جُنُبٍ وَهُمْ لَا يَشْعُرُونَ (11) وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ فَقَالَتْ هَلْ أَدُلُّكُمْ عَلَى أَهْلِ بَيْتٍ يَكْفُلُونَهُ لَكُمْ وَهُمْ لَهُ نَاصِحُونَ (12) فَرَدَدْنَاهُ إِلَى أُمِّهِ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ (13)

“அங்கே மூஸாவுடைய தாயாரின் உள்ளம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. நமது வாக்குறுதியை நம்பிக்கை கொள்வோரில் அவரும் ஒருவராக வேண்டும் என்பதற்காக, நாம் அவருடைய உள்ளத்தை உறுதிப்படுத்த வில்லையானால் நிச்சயம் அக்குழந்தையின் இரகசியத்தை அவர் வெளியிட முனைந்திருப்பார்.

அவர் அக்குழந்தையின் சகோதரியிடம் கூறினார்: “அதைப் பின் தொடர்ந்தே செல்! அவ்வாறே, எதிரிகள் அறிந்து கொள்ளாத வகையில் தூரத்தில் இருந்தே அக்குழந்தையை கண்காணித்துக் கொண்டிருந்தாள்.

மேலும், இதர பெண்களின் மார்பகங்களில் இருந்து பால் அருந்துவதை விட்டு, முன்னரே நாம் தடுத்திருந்தோம். இந்நிலையை கவனித்து அச்சிறுமி “இக்குழந்தையை பரிபாலித்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வீட்டாரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவித்து தரட்டுமா? என்று கூறினாள்.

இவ்வாறு மீண்டும் நாம் மூஸாவை அவரின் தாயாரிடம் திருப்பிக் கொடுத்தோம். அவர் கண்குளிர்ந்து கவலை மறந்திருப்பதற்காகவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதென்று அறிந்து கொள்வதற்காகவும் தான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதை அறிவதில்லை”.          ( அல்குர்ஆன்: 28: 10 – 13 )

இந்த இறைவசனத்தில் பெற்றெடுத்த தாயே பால் புகட்டுவதற்கு முதல் தகுதியைப் பெற்றவள் என்பதையும், பெற்றெடுத்த தாயின் உள்ளம் பசியால் வாடும் தன் குழந்தையைப் பற்றி எந்தளவுக்கு ஏக்கத்திற்குள்ளாகும் என்பதையும் விளக்குகின்றது.

ஆதலால் தான் அல்லாஹ் மற்றெந்த பெண்ணின் பாலையும் குடிக்க விடாமல் அல்லாஹ் மூஸா {அலை} அவர்களைக் காத்தான்.

மறுமை வரை பால்புகட்டும் உறவு இவ்வுலகில் நிலை பெற்றிருக்கும்…

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ (1) يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ (2)

“மனிதர்களே! உங்கள் இறைவனின் கோபத்தை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். உண்மையில் மறுமை நாளின் பூகம்பம் மாபெரும் திகிலை ஏற்படுத்தும் விஷயமாகும்! அதனை நீங்கள் பார்க்கும் நாளில் நிலைமை எவ்வாறு இருக்குமெனில், பாலூட்டும் ஒவ்வொரு தாயும் பால் அருந்தும் தன் குழந்தைகளை மறந்து விடுவாள்”.                                          ( அல்குர்ஆன்: 22: 1,2 )

தாய்ப்பால் புகட்டுவதில் தான் ஏற்ற இறக்கங்கள் இருக்குமே தவிர ஒட்டு மொத்தமாக பால் புகட்டும் முறை இந்த உலகில் இருந்து நீங்காது என்பதை மேற்கூறிய இறைவசனம் உணர்த்துகின்றது.

தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம்….

மாயிஸ் (ரலி) அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

மாயிஸ் (ரலி) அவர்களுக்கு விபச்சாரம் செய்ததற்கான குற்றவியல் தண்டனை வழங்கப்பட்டு சில நாட்கள் கூட கழிந்திருக்காத நிலையில் அண்ணலாரையும், நபித்தோழர்களையும் அதிர்ச்சியடையச் செய்த ஓர் சம்பவம் நபிகளாரின் சபையில் நடந்தேறியது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்திற்கு அஸ்த் குலத்தின் கிளையான ஃகாமிதிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வருகை தந்தார்கள்.

வந்த அந்தப் பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். எனக்கு உரிய தண்டனையை நிறைவேற்றி என்னை தூய்மை படுத்துங்கள்! என்றார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணியை திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்பெண் மறு நாளும் அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து நின்று முன்பு சொன்னது போலவே சொன்னார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் திரும்பிச் செல்லுமாறு கூறிய போது, அப்பெண்மணிஅல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னை திருப்பியனுப்புகின்றீர்கள்? மாயிஸ் இப்னு மாலிக் {ரலி} அவர்களின் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போன்றல்லவா என் விஷயத்திலும் நடந்து கொள்கின்றீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக இருக்கின்றேன்என்று கூறினார்.

நபி {ஸல்} அவர்கள் ஆச்சர்யத்தோடுநீயா அது?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணிஆம்என்றார்.

அப்படியானால் உமது வயிற்றினுள் உள்ள குழந்தையை பெற்றெடுத்து விட்டு வா!” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அப்பெண்மணி ஒரு துணியில் அந்தக் குழந்தையை சுற்றியெடுத்துக் கொண்டு, மாநபி {ஸல்} அவர்களிடம் வந்துஇது நான் பெற்றெடுத்த குழந்தைஎன்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், “நீ சென்று அந்தக் குழந்தைக்கு அமுதூட்டு! பால்குடி மறக்கடிக்கப்பட்ட பின் வா! என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

அமுதூட்டும் காலம் நிறைவடைந்த பின்னர், அக்குழந்தையை அழைத்துக் கொண்டு, அக்குழந்தையின் கையில் ரொட்டித் துண்டு ஒன்றை கொடுத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது என் குழந்தை உணவை உட்கொள்ள ஆரம்பித்து விட்டதுஎன்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அக்குழந்தையை அன்ஸாரிகளில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.

அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, அவருக்காக மார்பளவு குழி தோண்டப்பட்டது.

பின்னர் அக்குழிக்குள் அப்பெண் நிறுத்தி வைக்கப்பட்ட பின் கல்லெறியுமாறு மக்களுக்கு கட்டளையிட, மக்கள் அவர் மீது கல்லெறிந்து அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றினார்கள்.

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்து அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். பீறிட்டு வந்த இரத்தம் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முகத்தில் தெரித்தது.

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் அப்பெண்ணை சபித்தார்கள்; ஏசினார்கள்.

இதை அருகில் நின்று கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அப்பெண்மணி அழகிய முறையில் தவ்பா பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார்.

பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்.என்று கூறினார்கள்.

பிறகு அப்பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு நபித்தோழர்களை பணித்தார்கள்.

அவருக்காக ஜனாஸா தொழுகையை தாமே தொழவைத்தார்கள். பின்னர் அப்பெண்மணி நல்லடக்கமும் செய்யப்பட்டார்.

( நூல்: முஸ்லிம், பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா, புகாரி, பாபு மன் தரகல் ஃபவாஹிஷ், ஹதீஸ் எண்: 6820, 6824, மிஷ்காத், கிதாபுல் ஹுதூத், பக்கம்: 310 )

தான் செய்த விபச்சார குற்றத்திற்குரிய  தண்டனையை நிறைவேற்றுமாறு ஒரு பெண்மணி பெருமானார் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்தின் முன் வந்து நின்றார்கள் என்ற போதும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அதில் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதோடு, பெற்றெடுத்து வந்த பின்னர் பால்குடி மறக்கும் வரை தண்டனையை நிறுத்தி வைத்து பின்னர் தண்டனை நிறைவேற்றப் பட்டது என்றால் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தை இதை விட தெளிவாக யாரும் விளக்கிட முடியாது.

மேற்கூறிய அல்பகரா அத்தியாயத்தின் 233 –ஆவது வசனத்தின் பிற்பகுதியில் செவிலித்தாய்மார்கள் மூலமாகவாவது பெற்றெடுத்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்ட வேண்டும் என அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கின்றான்.

وَإِنْ أَرَدْتُمْ أَنْ تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُمْ مَا آتَيْتُمْ بِالْمَعْرُوفِ

“மேலும், உங்களுடைய குழந்தைகளுக்கு செவிலித்தாய்மார்கள் மூலம் பாலூட்ட விரும்பினால் இதிலும் உங்கள் மீது எவ்விதக் குற்றமுமில்லை. ஆனால், ஒரு நிபந்தனை: அவர்களுக்கு பிரதிபலனாக கொடுக்க வேண்டியதை நீங்கள் முறைப்படி கொடுத்து விட வேண்டும்”.                       ( அல்குர்ஆன்: 2: 233 )

மாநபி {ஸல்} அவர்கள் கூட செவிலித்தாயான அன்னை ஹலீமா (ரலி) அவர்களிடம் குழந்தை பருவத்தில் பால் புகட்டப்பட்டார்கள்.

ஆக, தாய்ப்பால் என்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் நாம் மேற்கூறிய நிகழ்வுகள் மற்றும் இறைவசனங்களின் மூலம் விளங்கிக் கொண்டோம்.

முஸ்லிம் சமூகம் தாண்டி அனைத்து சமூக மக்களிடமும் தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணரச் செய்வோம்!

அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
                               வஸ்ஸலாம்!!!

11 comments:

  1. மாஷா அல்லாஹ். அருமை.
    அல்லாஹ் தங்களுக்கு பரக்கத் செய்வானாக. ஆமீன்.

    ReplyDelete
  2. جزاك الله في الدارين

    ReplyDelete
  3. அழகிய பதிவு

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்.

    அல்லாஹ் தங்களின் வாழ்விலும் அறிவிலும் பரக்கத் செய்வானாக. தங்களின் இச்சேவையை ஏற்று தொடரச் செய்வானாக. ஆமீன்.

    ReplyDelete
  5. بارك الله في علمك و عمرك وفي كل شئ !

    ReplyDelete
  6. Hajrath background picture illaamal irunthal innum nanraaka irukkum...

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். உலகில் மனிதன் உட்பட எல்லாஜீவனும் தாய்ப்பால்அருந்தியே வளர்கிறது. அப்படிப்பட்ட தாய்ப்பால் மகத்துவம்மற்றும் முக்கியத்துவத்தை குறித்து அழகான ஆக்கம் தந்துள்ளீர்கள். جزاكم الله خيرا كثيرا يا أستاذ

    ReplyDelete
  8. மாஷாஅல்லாஹ் அழகிய பதிவு.

    ReplyDelete