Thursday 29 November 2018

நேற்று… இன்று… நாளை..?


நேற்றுஇன்றுநாளை..?




ஒரு இறைநம்பிக்கையாளனுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளே!

கடந்து போன நொடிப்பொழுதை விட நடந்து கொண்டிருக்கிற நொடிப்பொழுது மிகவும் முக்கியமானது.

நடந்து கொண்டிருக்கிற நொடிப்பொழுதை விட அடுத்து வரவிருக்கிற நொடிப் பொழுதுகள் மிக, மிக முக்கியமானது.

நேற்றைய நாளைப்போல் இன்றைய நாள் இருக்கக்கூடாது. இன்றைய நாளைப் போல் நாளைய நாள் இருக்கக் கூடாது.

ஒவ்வொரு நாளும் இன்னொரு நாளை விட மிகச் சிறப்பானதாக அமைந்திருக்க வேண்டும்.

சுருங்கச் சொன்னால், ஓர் இறைநம்பிக்கையாளனுடைய வாழ்க்கையில் முந்தைய எல்லா நாட்களையும் விட பிந்தைய நாட்கள் மிகச் சிறப்பானதாக அமையப் பெற்றிட வேண்டும்.

وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى (4)

மேலும், ( நபியே! ) உம்முடைய பிந்தைய காலகட்டம் முந்திய காலகட்டத்தை விட மிகச் சிறப்பானதாகும்”. ( அல்குர்ஆன்: 93: 4 )

மேற்கூறிய இறைவசனம் பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முழுமைத்துவம் பெற்ற முழு வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் மகத்தான வசனமாகும்.

நபிகளாரின் நபித்துவ வாழ்க்கைக்கு முந்தைய வாழ்வு சிறப்பிற்குரியது என்றால், அதை விட சிறப்பிற்குரியது நபித்துவத்திற்கு பிந்தைய வாழ்வு.

நபித்துவத்திற்கு பிந்தைய மக்கா வாழ்க்கை வியப்பிற்குரியது என்றால், மதீனாவின் வாழ்க்கை அதை விட பன்மடங்கு வியப்பிற்குரியது.

ஃபதஹ் மக்காவிற்கு முந்தைய வாழ்க்கை வெற்றிக்குரியது என்றால், ஃபதஹ் மக்காவிற்கு பிந்தைய வாழ்க்கை அதை விட விசாலமான வெற்றிக்குரியது.

ஹஜ்ஜத்துல் விதாவுக்கு முந்தைய வாழ்க்கை புகழுக்குரியது என்றால், அதை விட பன்மடங்கு புகழுக்குரியது பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்பூவுலகை விட்டும் பிரியும் அந்த தருணம்.

ஆம்! மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கையின் அத்துனை பகுதிகளும் நமக்கு உணர்த்துகிற மகத்தான பாடமும், படிப்பினையும் இது தான்.

ஓர் இறைநம்பிக்கையாளனின் நேற்று.. இன்றுநாளைஏன்? வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிப்பொழுதுகளும் சிறப்பிற்கும், வியப்பிற்கும், வெற்றிக்கும், புகழுக்கும் உரியதாய் அமைந்திருக்க வேண்டும் என்று”.

தனியொருவர் ஆனால்,,,,

அதிகாலை நேரம், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் நிறைந்த சபையில் அல்லாஹ் ஓர் இறைவசனத்தை இறக்கியருளினான்.

وَمِنَ الْأَعْرَابِ مَنْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَتَّخِذُ مَا يُنْفِقُ قُرُبَاتٍ عِنْدَ اللَّهِ وَصَلَوَاتِ الرَّسُولِ أَلَا إِنَّهَا قُرْبَةٌ لَهُمْ سَيُدْخِلُهُمُ اللَّهُ فِي رَحْمَتِهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (99)

“இந்த நாட்டுப்புற அரபிகளில் சிலர் இவ்வாறும் உள்ளனர்; அல்லாஹ்வின் மீதும் மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர். மேலும், அவர்கள் எதனைச் செலவழித்தாலும் அதன் மூலம் அல்லாஹ்விடம் நெருக்கத்தையும், அவன் தூதரிடமிருந்து அருள்பாலிக்கப்படுவதற்குரிய பிரார்த்தனைகளையும் அடைவதற்கான சாதனமாக எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஆம்! திண்ணமாக, அது அல்லாஹ்விடம் அவர்கள் நெருங்குவதற்குரிய சாதனமாகும். தன்னுடைய கருணையில் அல்லாஹ் அவர்களை நிச்சயம் நுழைவிப்பான். திண்ணமாக! அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்”.                               ( அல்குர்ஆன்: 9: 99 )

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வசனத்தை ஓதி முடித்த மாத்திரத்தில் நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஆச்சர்ய மேலீட்டால் புருவத்தை உயர்த்தி இப்படியான புகழாரத்திற்கும், அல்லாஹ்வின் அருளில் நுழைந்து கொள்ளும் பாக்கியத்திற்கும் சொந்தக்காரர்கள் யாராக இருக்கும் என்று கண்களாலேயே பேசிக் கொண்டனர்.

நபித்தோழர்களின் ஆச்சர்ய மேலீட்டிற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடை பகர்ந்தார்கள்.

“அல்லாஹ் புகழ்ந்து கூறும் அம்மக்கள் இந்த சபையில் இல்லை. இந்த ஊரிலும் இல்லை. இன்னும் சிறிது நேரத்தில் தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வருகை தர இருக்கின்றார்கள்” என்று.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன்பாகவே இறைவனின் திருமுகத்தை திருப்தி படுத்திய அந்த மேன்மக்கள் யாராக இருக்கும் என்கிற ஆவலோடு மதீனாவின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் வழிமேல் விழி வைத்து காத்துக் கிடந்தது.

மாலை நேரத்தில் மதீனா நகரெங்கும் புழுதி பறந்தது. மதீனாவின் வீதியெங்கும் இரு புறங்களிலும் மக்கள் திரண்டனர்.

முன்னால், ஒருவர் குதிரையின் மீது அமர்ந்து வருகிறார், அடுத்து அவரின் சாயலில் இன்னொரு பத்து பேர் வருகின்றார்கள். அவர்களை அடுத்து ஒருவர் பின் ஒருவராக சுமார் 400 குதிரை வீரர்கள் வருகின்றார்கள்.

முன்னால் வந்த அவரையும், அவரின் சாயலில் இருந்த அந்த பத்து நபர்களையும் பார்த்ததும் மதீனாவின் அன்ஸாரிகளுக்கு அளவற்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும் பற்றிக் கொண்டது.

வரலாற்று ஆசிரியர்கள் இப்படிக் குறிப்பிடுவார்கள்: “மதீனா நகரமே குதிரை வீரர்களின் வரவால் அதிர்ந்தது. மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்தது” என்று.

மஸ்ஜிதுன் நபவீயை அடைந்து மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அந்த மக்கள் சந்திக்கின்றார்கள். தூய இஸ்லாத்தை திருக்கலிமாவை மொழிந்து ஏற்றுக் கொள்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மக்களின் வருகையால் அளவற்ற ஆனந்தமும், மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.

எந்தளவுக்கெனில், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: “அல்லாஹ் முஜைனா கோத்திரத்தார்களுக்கு அருள்புரிவானாக! அல்லாஹ் முஜைனா கோத்திரத்தாருக்கு அருள்புரிவானாக! அல்லாஹ் முஜைனா கோத்திரத்தாருக்கு அருள்புரிவானாக!” என்று துஆ செய்தார்கள்.

“அன்ஸாரிகளுக்கும், முஜைனா, ஜுஹைனா, ஃகிஃபார், அஷ்ஜஃ ஆகிய கோத்திரத்தார்களுக்கும் அல்லாஹ்வும், அவன் தூதருமே பொறுப்பாளர்கள் ஆவார்கள்” என்றும்,

صلى الله عليه وسلم- قال فيهم :{ ان للإيمان بيوتا و للنفاق بيوتا، وان بيـت بني مقرن من بيوت الايمان

“திண்ணமாக! ஈமானுக்கென்று சில வீடுகளும், நிஃபாக்கிற்கென்று சில வீடுகளும் இருக்கின்றன. பனீ முகர்ரின் - முகர்ரின் பெற்றெடுத்த மக்களின் வீடுகள் ஈமானுக்கான வீடுகள் ஆகும்” என்றும் புகழ்ந்து கூறினார்கள்.

அந்த மேன்மக்கள் யார்?

في ذاتِ عَشِيَّةٍ ، جَلَسَ سَيِّدُ القومِ ، النعمانُ بنُ مقرِّنٍ المزنيُّ ، في ناديه مع إِخْوَتهِ ومَشْيَخَةِ قبيلتهِ فقال لهم : يا قوم واللّهِ ما عَلِمْنا عن محمدٍ إِلاَّ خيراً ، ولا سَمِعْنَـا من دَعْوَتِهِ إِلاَّ مَرْحَمَةً وِإحْساناً وعَدْلاً، فما بالُنا نُبْطِئُ عنه ، والناسُ إليه يُسْرِعون .
ثم أتبعَ يقول: أما أنا فقد عَزَمْتُ على أن أغدُوَ عليه إِذا أصْبَحْتُ ، فمَنْ شاءَ منكم أنْ يكونَ مَعي فَلْيَتَجَهَّزْ ، وكأنَّمَا مَسَّتْ كلماتُ النُّعْمَانِ وَتَراً مُرْهَفاً في نفوسِ القوم ، فما إِنْ طَلَعَ الصباحُ حَتَّى وَجَدَ إِخْوَتَهُ العشرةَ ، وأربَعَمِائَةِ فارس من فرسانِ مُزَيْنَةَ قد جَهَّزوا أنفُسَهُمْ لِلْمُضِيِّ مَعَه إِلى يَثْرِبَ لِلِقَاء النبيِّ صلواتُ اللّه وسلامُه عليه ، والدُّخول في دينَ اللّهِ .
بَيْدَ أن (غير أن ) النُّعْمَانَ اسْتَحَى أن يَفِدَ مع هذا الجمع الحاشِدِ على النبيِّ صلى الله عليه وسلم دونَ أن يَحْمِلَ له وللمسلمين شيئاً في يَدِه ، لكنَّ السَّنةَ الشَّهْبَاءَ المُجْدِبَةَ التي مَرَّتْ بِها مُزَيْنَةُ لم تَتْرُكْ لها ضرْعاً وَلا زَرْعاً ، فطافَ النُّعْمَانُ بِبَيْتِهِ وَبُيُوتِ إِخْوَتِهِ ، وجَمَعَ كُلَّ ما أبْقَاهُ لهمُ القَحْطُ من غُنَيْماتٍ ، وسـاقَها أمَامَهُ وقَدِمَ بها علَى رسولِ اللّهِ صلى الله عليه وسلم ، وأعْلَنَ هو ومَنْ معه إِسلامَهم بينَ يَدَيْه .
اهتَزَّتْ يثربُ من أقْصاهَا إِلى أقصاها فَرَحاً بالنُّعْمَانِ بنِ مُقَرِّنٍ وصَحْبِه ، إِذْ لم يَسْبِقْ لِبَيْتٍ مِنْ بيوتِ العربِ أن أسْلَمَ منه أحدَ عَشَرَ أخاً من أبٍ واحدٍ ومَعَهُمْ أربعُمائة فارِسٍ وسُرَّ الرسولُ الكريمُ بإسلامِ النعمانِ أبلغَ السُّرورِ.وتَقَبَّلَ اللّه جَلَّ وَعَزَّ غُنَيْمَاتِهِ ، وَأنْزَلَ فيهِ قرَآناً فقال: { وَمِنَ الأعْرَابِ مَنْ يُؤمِنُْ بِاللّهِ وَالْيَوْمِ الاَخِر وَيَتَّخِذُ مَا يُنْفِقُ قُرُبَاتٍ عِنْدَ اللّهِ وَصَلَوات الرَّسُولِ ألاَ إِنَّها قُرْبَةٌ لَهُمْ سَيُدْخِلُهُمُ اللّهُ في رَحْمَتِهِ إِنَّ اللّهَ غَفُورٌ رَحيمُ } .


மக்காவில் இருந்து மதீனா போகும் வழியில் இருக்கிற வர்க்கான் எனும் மலைக் குன்றை சுற்றி வாழ்ந்து வரும் கோத்திரம் முஜைனா கோத்திரம் ஆகும்.

அறியாமைக்காலத்திலும் கூட பண்பொழுக வாழ்ந்த கோத்திரம். எழுத்தறிவு, கல்வியறிவு, வீரம், போர் மரபு, ஈகை என எல்லாவற்றிலும் சிறந்த விளங்கியவர்கள் முஜைனா கோத்திரத்தின் மக்கள்.

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஏனைய மக்காவில் வசித்து வந்த அனைத்து முஸ்லிம்களும் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தடைந்த தருணம் அது.

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையும், ஏகத்துவ செய்தியும் அந்த மக்களை வந்தடைகின்றது.

அந்த ஊரைக் கடந்தே பல மக்கள், பல கூட்டத்தார்கள் இஸ்லாத்தை ஏற்க வந்து செல்லும் நிகழ்வை அன்றாடம் அம்மக்கள் கண்டனர்.

முஜைனா கோத்திரத்தின் தலைவர் நுஃமான் இப்னு முகர்ரின் அவர்களுக்கும் இது தெரிய வருகின்றது.

இஸ்லாத்தைப் பற்றியும், மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றியும், இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் பற்றியும், பண்பாடுகள், போதனைகள் பற்றியும் முழுமையாக அறிந்து கொண்டு ஓர் இரவுப் பொழுதில் கோத்திரத்து மக்களையும், தன் குடும்பத்தார்களையும் ஓரிடத்தில் ஒன்று கூடுமாறு கட்டளை பிறப்பித்தார்.

முஜைனா கோத்திரத்தார்கள் முழுவதுமாக தலைவரின் ஆணைக்கு கட்டுப்பட்டு அவர் சொன்ன இடத்தில் ஒன்று கூடினர்.

கூடியிருந்த கூட்டத்தின் நடுவே வந்து நின்ற நுஃமான் இப்னு முகர்ரின்: “என் மக்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். முஹம்மது என்றொருவர் இங்கு யஸ்ரிபிற்கு வந்திருக்கிறார், அவர் மக்களுக்குக் கருணையை கற்றுத் தருகிறாராம்; நீதியும் நேர்மையும் போதிக்கிறாராம். இன்னும் அவரைப் பற்றி நான் கேள்விப்படுவதெல்லாம் நல்லவையாகவே இருக்கின்றன.

நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருக்கும் மக்களெல்லாம் முந்திக்கொண்டு அவரிடம் செல்கிறார்கள். நல்லவற்றை ஏற்றுக்கொள்வதை நாம் ஏன் தாமதப்படுத்த வேண்டும்? என்று மக்களை நோக்கி கேட்டு விட்டு,

அதனால் நான் முடிவு செய்துவிட்டேன். நாளைக் காலையில் நான் யஸ்ரிப் சென்று அவரைச் சந்திக்கப் போகிறேன். என்னுடன் வர விருப்பமுள்ளவர்களெல்லாம் பயணத்திற்குத் தயாராக இருங்கள்" என்று கூறினார். சபையில் இருந்த மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

மறுநாள் பொழுதுவிடிந்து, வீட்டை விட்டு வெளியே வந்த நுஃமான் தமக்கும் முன்பாக, தம் தாயின் வயிற்றில் பிறந்த அவரின் பத்து சகோதரர்களும் நானூறு போர்வீரர்களும் என்று ஒரு பட்டாளமே பயணத்திற்குத் தயாராக நின்று கொண்டிருந்தது.

புருவம் உயர்த்தி சிறிது நேரம் யோசித்த நுஃமான் “இவ்வளவுபேர் செல்கிறோம்; அதுவும் இறைத்தூதர் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறோம்; முஸ்லிம் சமூகத்தைக் காணச் செல்கின்றோம்! எப்படி வெறுங்கையுடன் செல்வது? ஏதாவது அன்பளிப்பு அளிக்க வேண்டுமே..” என அவரின் மனம் தூண்டுகின்றது.

 காரணம் இல்லாமல் இல்லை, கடந்து போன அந்த ஆண்டில் மழையின்றி, விளைச்சல் இன்றி, கடும் வறுமையில் இருந்தார்கள் அவர்கள். கால்நடைகளும் ஏதும் அதிகமில்லை.
சுற்றும் முற்றும் பார்த்த நுஃமான் அவரது வீட்டிலும் அவரின் சகோதரர்கள் வீட்டிலும் பஞ்சத்திலிருந்து காப்பாற்றி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் சில இருந்தன. அவற்றையெல்லாம் ஓட்டிக்கொண்டு நானூற்றி பத்து நபர்களோடு மதீனாவை நோக்கி புறப்பட்டார்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த நற்செய்தியை நபியவர்களுக்குத் தெரிவித்து அத்தவ்பா அத்தியாயத்தின் 99 –ஆவது இறை வசனத்தை இறக்கியருளினான்.

மதீனாவில் இதற்கு முன்பாக எத்தனையோ கோத்திரத்தார்கள் வருகை புரிந்திருக்கிறார்கள்; தனித்தனியாக வந்தும் இருக்கின்றார்கள், சிறு, சிறு குழுக்களாய்  வந்திருக்கிறார்கள்; இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக.

ஆனால், மதீனாவிலிருந்த முஸ்லிம்களுக்குப் புதுசு. வரலாற்றில் தனித்தன்மையை பெற்றுவிட்ட ஒரு பெருநிகழ்வு என்றே சொல்லலாம் தனியொருவர், ஒரு குலத்தின் தலைவர் தம் சகோதரர்கள் அனைவரோடும் தம் குலத்தின் நானூறு போர் வீரர்களோடும் ஒரு கோத்திரமாக வந்து இஸ்லாத்தில் இணைவதைக் காண்பது.

இஸ்லாமிய வரலாற்றில் பிரசித்தி பெற்று, சிறந்து விளங்கிய பிரபல்யமான 104 ஸஹாபிகள் முஜைனா கோத்திரத்தைச் சார்ந்தவர்கள்.

அந்த 104 ஸஹாபிகளும் இந்த நாணூற்றி சொச்சம் பேர்களில் இருந்தும் உள்ளவர்கள் என்று இஸ்லாமிய வரலாற்று ஆசிரியப் பெருமக்கள் குறிப்பிடுவார்கள்.

தனியொருவர் தான் ஆனால், அவரின் உரை அந்த சமூகத்தில் 400 பேர் கலிமாவை மொழிவதற்கு, சுவனம் புகுவதற்கு காரணமாய் அமைந்தவர்.

தனியொருவர் தான் தன் குடும்பத்தில் தன்னோடு பிறந்த 10 சகோதரர்களுக்கும் ஹிதாயத் கிடைப்பதற்கு, ஜன்னத்தில் நுழைவதற்கு அடித்தளமாய் விளங்கியவர்.

தான் சார்ந்து வாழ்ந்த கோத்திரத்தார்களுக்கும், குடும்பத்தார்களுக்கும் ரப்பின் புறத்தில் இருந்து சோபனத்தையும், ரப்பின் தூதரிடத்தில் இருந்து துஆவையும் பெற்றுத் தந்தவர்கள் நுஃமான் இப்னு முகர்ரின் அல் முஜ்னீ (ரலி) அவர்கள்.

அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு ஆட்சிக்காலத்தில் நுஃமான் இப்னு முகர்ரின் அல் முஜ்னீ ரலியல்லாஹு அன்ஹு....

இஸ்லாமிய வரலாற்றில் கடுங்கொந்தளிப்பான, நெருக்கடியான காலகட்டம் அது.
கலீஃபா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் முஸ்லிம்களும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழந்த சோகத்தில் மனமும் உடலும் நொடிந்து போய் இருக்கும் தருணம் அது.


'மதீனாவிலிருந்து முஸ்லிம் வீரர்களின் பெரும் எண்ணிக்கையிலான படை உஸாமாவின் தலைமையில் ரோமர்களை நோக்கிச் சென்றுவிட்டது.

இப்போது புதிதாய் சிலர் முளைத்தார்கள்.

நபியவர்கள் மரணிக்குமுன் புதிதாய் இஸ்லாத்தில் நுழைந்த கோத்திரத்தினர் சிலர் இருந்தனர். அவர்கள் இதயத்தில் ஓரிறைக் கொள்கை முற்றிலும் வேரூன்றாமல் இருந்தது. பண்டைய பழக்க வழக்கங்களில் ஊறித் திளைத்திருந்த அவர்கள் மனதிலிருந்து அப்பழக்கம் முழுவதுமாய் விடுபடவில்லை.

நபியவர்களின் மரணச் செய்தி அவர்களை பழைய வாழ்க்கையான குலப் பெருமை, அதிகார வேட்கை, பண ஆசை ஆகியவற்றின் பக்கம் திரும்பவும் அழைத்துச் சென்றது.

ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஜகாத்தை தர மறுத்தார்கள். ஆம்! தொழுது கொள்கிறோம்; நோன்பு நோற்கிறோம்" ஜகாத்தெல்லாம் தர முடியாது” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் அந்தக் கோத்திரங்களின் குழுவொன்று அபூபக்ருவைச் சந்தித்து, “ஸகாத்தெல்லாம் முஹம்மது நபி இருக்கும்போது கேட்டார்கள்; தந்தோம். அவர் சென்றுவிட்டார். அதனால் அதை நாங்கள் உங்களுக்குத் தரத் தேவையில்லை. எங்களை ஸகாத் கடமையிலிருந்து விடுவித்துவிடுங்கள். இல்லையா எங்களுக்கு இஸ்லாமெல்லாம் தேவையில்லை. நாங்கள் வெளியேறுகிறோம்" என்றார்கள்.

இதே நேரத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக பனூ கதஃபான், பனூ அஸத், பனூ தாய் ஆகியோர் போர்களத்திற்கு வந்துவிட்டார்கள். பனூ தால்பா பின் ஸஅத், பனூ மர்ரா, பனூ அபாஸ் எனும் கோத்திரத்தினர் தங்களது படையுடன் மதீனா நகருக்கு அருகே அமைந்துள்ள அப்ராக் எனும் திறந்தவெளிக்கு வந்துவிட்டனர்.

பெருங் கூட்டமாய்க் கூடி நெருக்குதல் அளித்தால் கலீஃபா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு இணங்கிவிடுவார், அப்படி இல்லையானால் மதீனாவைத் தாக்கிக் கைப்பற்றுவோம் என்ற திட்டம் அவர்களிடம் இருந்தது.


"ஸகாத் மட்டும்தானே தரமாட்டோம் என்கிறார்கள். ஆனால் தொழுது கொள்கிறேன், இதர கடமைகள் செய்கிறேன் என்கிறார்கள்; எனில் அவர்களும் முஸ்லிம்களாகத்தானே கருதப்பட வேண்டும். கலிமாச் சொல்லியிருக்கும் இவர்களிடம் எப்படிப் போரிடுவது?" என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு உட்பட மூத்தத் தோழர்கள் மத்தியில் இந்த முர்தத்களை எதிர்த்துப் போர்தொடுப்பதில் தயக்கம் இருந்தது.

 இதை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளிப்படையாகவே அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதில் இரத்தினச் சுருக்கமானது, ஆனால், மிகவும் வலிமை வாய்ந்தது.

அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். தொழுகைக்கும் ஸகாத்திற்கும் இடையில் வேறுபாடு காண்பவன் யாராக இருந்தாலும் நிச்சயம் அவனை எதிர்த்து நான் போரிடுவேன். ஸகாத் அவர்களது சொத்தின் மீதான உரிமையாகும்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபியவர்களிடம் சிறியதொரு பெண் ஆட்டை ஸகாத்தாக கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது எனக்குத் தரமறுத்தால் போர்தான். அவ்வளவு ஏன், மூக்கணாங்கயிறு ஒன்றை ஸகாத் கடமையாய் அவர்கள் நபியவர்களிடம் அளித்திருந்து அதை இப்பொழுது தர மறுத்தாலும் சரியே".

அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அந்த பதில், வந்த குழுவினரைப் பேச்சடைத்துப் போகச் செய்தது.

அதேநேரத்தில், அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திட்டவட்டமான இந்த பதில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் இதரத் தோழர்களின் உள்ளங்களைத் திறக்க காரணமாக அமைந்தது.

தங்களின் பதிலால் பேச்சுவார்த்தை நடத்த வந்தவர்கள் முகத்தில் தெரிந்த மாறுதலைத் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள் கலீஃபா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

எப்படியும் இவர்கள் போருக்குத் தயாராகி மதீனாவைத் தாக்கத் திட்டமிடுவார்கள் என்பது நிச்சயமாகத் தெரிந்தது.

தோல்வியைத் தழுவி திரும்பிய குழு, தங்கள் தலைவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தது. அந்த அனைத்துக் கோத்திரத்தின் தலைவர்களும் பரபரவென்று ஆலோசனை செய்தார்கள்.

முஸ்லிம்களின் பெரும் படையொன்று மதீனாவை விட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டதால் போதிய படை பலம் இன்றி முஸ்லிம்கள் பலகீனமான நிலையில் இருக்கிறார்கள். நம் தாக்குதலை எதிர்க்கும் அளவிற்கெல்லாம் அவர்களிடம் இப்போது வலுவில்லை. இதுதான் சரியான தருணம்.

 மதீனா நம் கையில் வந்துவிட்டால் அதன் நிர்வாகம் நமதே! அந்த ஒவ்வொரு கோத்திரமும் வெற்றியில் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய லாபத்தைக் கனவு கண்டு, வாயைத் துடைத்துக்கொண்டு, “நாங்கள் தயார்" என்று ஏகமனதாய் அறிவித்துவிட்டன.

உடனடியாக மதீனாவில் தற்காப்பு ஏற்பாடுகள், போர் ஏற்பாடுகள் என சுறுசுறுப்போடு களத்தில் இறங்கினார் கலீஃபா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

முழு முதற்காரியமாகப் பெண்களையும் குழந்தைகளையும் கோட்டைகளுக்குள்ளும் மலைகளுக்கும் அனுப்பி வைத்தார். மதீனா நகருக்கு வெளியே காவல்படை அமைக்கப்பட்டது.

அடுத்த கட்டமாக, இஸ்லாத்தில் திடமாய் நிலைத்திருந்த இதர கோத்திரத்தினருக்கு உடனே அழைப்பு விடுத்தார்கள் கலீஃபா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

 இஸ்லாம் ஆழ வேரூன்றிக் கிடந்த அஸ்லம், கிஃபார், அஷ்ஜா, ஜுஹைனா, கஅப் மற்றும நுஃமானின் முஸைனா கோத்திரங்களுக்குத் தகவல் வந்து சேர்ந்ததுமே, குதிரைகள், ஒட்டகங்கள், போர்த் தளவாடங்கள் என்று மதீனாவின் வீதிகள் அக்கோத்திரங்களின் முஸ்லிம் வீரர்களால் நிறைந்தன.

அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கணிப்பு தவறாகவில்லை. எதிரிகள் வந்து பேசிச் சென்று மூன்று நாட்கள்கூட ஆகியிருக்கவில்லை. அஸத், கத்ஃபான், அப்ஸ், திப்யான், பக்ரு கோத்திரங்கள் படை திரண்டனர்.

தீஹுஸ்ஸா என்ற பகுதியில் முகாம் அமைத்துக் கொண்டு குறிப்பி்ட்ட அளவிலான படை வீரர்கள் முதலில் மதீனாவை நோக்கிக் கிளம்பினர்.

நகருக்கு வெளியே இருந்த காவல் படைவீரர்கள் கிளம்பி வரும் ஆபத்தை உடனே கலீஃபாவுக்குத் தெரிவிக்க, "அங்கேயே இருங்கள். இதோ வந்துவிட்டேன்" என்று கலீஃபா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இன்னும் சில போர் வீரர்களும் உடனே அங்கு விரைந்தனர்.

அலட்சியத்துடன் வந்த எதிரிகள் மதீனா நகருக்கு வெளியே அத்தகைய பாதுகாப்பையும் முஸ்லிம் போர்வீரர்களையும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

மதீனா நோக்கிச் செல்லும் சாலையெங்கும் திறமையான முஸ்லிம் போர்வீரர்கள் காவல் நிற்க, துவங்கியது சண்டை! நிறைய நேரம் எடுக்கவில்லை. சற்று நேரத்திலேயே எதிரிகளை விரட்ட ஆரம்பித்துவிட்டனர் முஸ்லிம்கள்.

மிரண்டு திரும்பி ஓடஆரம்பித்தனர் எதிரிகள். விடாமல் அவர்களை விரட்டிக் கொண்டு சென்றது முஸ்லிம் படை. வெற்றிச் செய்தியை எதிர்நோக்கி முகாமிட்டுக் காத்திருந்த எதிரிப் படையின் இதர போர்வீரர்கள், மூச்சிரைக்க தங்களது படை ஓடிவருவதையும் அவர்களை முஸ்லிம் படையினர் ஆவேசமாய்த் துரத்திக் கொண்டு வருவதையும் பார்த்துத் திடுக்கி்ட்டு எழுந்தனர். தங்களுக்கு பலத்த உயிர்ச்சேதம் ஏற்படப் போகிறது என்று தெளிவாகத் தெரிந்தது.

உடனே சாதுர்யமாக ஒரு காரியம் செய்தார்கள். தங்களிடமிருந்த முரசுகளையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு ஆவேசமாய்க் கொட்ட ஆரம்பித்தார்கள். பயங்கரமான முரசு ஒலிகள்.

அத்திட்டம் சரியாக வேலை செய்தது. முஸ்லிம்களின் ஒட்டகங்கள் அவ்வொலியில் மிரண்டு திக்குத் தெரியாமல் ஓடத் துவங்கின. அவற்றையெல்லாம் சமாளித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குள் முஸ்லி்ம் படைகளுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. ஒருவழியாய் உயிரிழப்பு எதுவும் இல்லாமல் மதீனா திரும்பியது முஸ்லிம்களின் படை.

இதனிடையே முஸ்லிம்களை எப்படியும் வென்றுவிடுவோம் என்று தப்புக்கணக்குப் போட்டிருந்த எதிரிகள் முன்னமேயே தில்-கிஸ்ஸா பகுதியிலிருக்கும் தங்கள் நண்பர்களுக்குத் தகவல் அனுப்பியிருந்தனர். முஸ்லிம்கள் பலகீனமான நிலையில் இருக்கிறார்கள். வேறொரு வழிபிடித்துக் கிளம்பி வாருங்கள்.

அந்த தில்-கிஸ்ஸா மக்களும் ஒரு படை திரட்டிக் கொண்டு மதீனா நோக்கி வர ஆரம்பித்தனர். இந்தப் படை அணியும் மதீனாவை எளிதாய்க் கைப்பற்றி விடலாம், பெரிதாய் எதிர்ப்பெல்லாம் இருக்காது என்று ஏகப்பட்ட நம்பிக்கையுடனும் அலட்சியத்துடனும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கான விதியை வேறுவிதமாய் அமைத்தார் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவில்.

அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் படை ஒன்றை திரட்டினார். வலப்பக்க அணிக்குத் தலைமை நுஃமான் இப்னு முகர்ரின் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இடப் பக்க அணிக்கு அவர் சகோதரர் அப்துல்லா இப்னு முகர்ரின் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலாட் படைக்குத் தலைமை மற்றொரு சகோதரர் ஸுவைத் இப்னு முகர்ரின்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

 மதீனாவிலிருந்து கிளம்பியது இந்தப் படை. எதிரிகளை அவர்கள் சற்றும் எதிர்பாராமல் தாக்கும் திட்டம் தீட்டப்பட்டது. எனவே முஸ்லிம் படையினர் படு கவனமாய் எச்சரிக்கையுடன் சப்தமே எழுப்பாமல் மிக மிக அமைதியாய் முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர்.

இருள் முற்றிலும் விலகாத விடியற்காலை நேரம் அது. எதிரிகளின் மிக அருகில் நெருங்கி விட்ட  முஸ்லிம் படை மிகவும் அமைதியாக, ஊசி கீழே விழுந்தால் கூட சப்தம் தெளிவாகக் கேட்கும் அளவுக்கான நிசப்தம் அது.

திடீரென, எதிரிகளை பாய்ந்து தாக்கியது முஸ்லிம் படை. என்ன, ஏது" என்று உணர்வதற்குள் வாள்கள் மின்னல் போல் சுழன்றன; ஈட்டிகள் பாய்ந்தன; அம்புகள் பறந்தன. எதிரிகளின் உடல்களை சரமாரியாகத் துளைக்க ஆரம்பித்தன.

பொழுது விடிந்து சூரியன் உதிப்பதற்குள் எதிரிகள் சுற்றி வளைத்துக் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர் களத்தை வி்ட்டு ஓட, மீதமிருந்தவர்களை முஸ்லிம் படையினர் துரத்த, தில்-கிஸ்ஸாவரை எதிரிகளை ஓடஓட விரட்டினர் முஸ்லிம்கள். இறுதியில் எதிரிகளின் கால்நடைகள் முஸ்லிம்கள் வசமாயின.

பின்னர், அந் நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைமையில் ஒரு படைப்பிரிவை அப்பகுதியில் காவலுக்கு நிறுத்திவிட்டு கலீஃபா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்ற வீரர்களுடன் மதீனா திரும்பினார்.

இந்நிலையில் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “முக்கியமான கால கட்டங்களில். கலீஃபா இத்தகைய அபாய நடவடிக்கைகளில் தாமே நேரடியாக ஈடுபடாமல் மற்ற தோழர்களைத் தளபதியாக அனுப்ப வேண்டும் என்று ஆலோசனையொன்றை கூறினார்கள்.

 அவரது ஆலோசனையை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டு அதை அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தெரிவித்தனர்.

அந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், காலீத் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், இக்ரிமா பின் அபூஜஹ்ல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் போன்ற திறமையான பதினோரு தளபதிகள் தலைமையில் பல பகுதிகளுக்கும் படையனுப்பினார்.

அவர்களில் ஒருவர் நுஃமான் இப்னு முகர்ரின் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சகோதரர் ஸுவைத் இப்னு முகர்ரின் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
அவரது தலைமையில் ஒரு படைப்பிரிவு திஹாமா பகுதிக்குச் சென்று போரிட்டது. பின்னர் முர்தத்கள் அனைவரின் மீதும் ஏககாலத்தில் முழுவீச்சில் போர் தொடுக்கப்பட்டு அவர்களது பிரச்சினை ஒருவழியாய் முடித்து வைக்கப்பட்டது.

( நூல்: ஸுவரும் மின் ஹயாத்திஸ் ஸஹாபா லி இமாமி அப்துர் ரஹ்மான் ரஃபத் பாஷா ரஹிமஹுல்லாஹ் )

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சிக்காலத்தில் நுஃமான் இப்னு முகர்ரின் ரலியல்லாஹு அன்ஹு..

பக்ரு இப்னு அப்தில்லாஹ் அல் முஸனீ(ரஹ்) மற்றும் ஸியாத் இப்னு ஜுபைர் இப்னி ஹய்யா(ரஹ்) ஆகிய இருவரும் அறிவித்தார்கள்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) இணைவைப்போருடன் போர் புரிய மக்களைப் பெரும்பெரும் நகரங்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அப்போது ('ருஸ்தும்' என்கிற பாரசீகத் தளபதியான) 'ஹுர்முஸான்' இஸ்லாத்தை ஏற்றார். உமர் ரலியல்லாஹு அன்ஹு ஹுர்முஸான் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம், 'நான் என்னுடைய இந்தப் (புனிதப்) போர்களில் உங்களிடம் தான் ஆலோசனை கேட்கப் போகிறேன்' என்றார்கள்.

அதற்கு அவர், 'சரி, நீங்கள் போரிட விரும்பும் நாடுகளின் நிலையும் அதிலுள்ள எதிரிகளின் நிலையும் ஒரு தலையும் இரண்டு சிறகுகளும் இரண்டு கால்களும் கொண்ட ஒரு பறவையின் நிலை போன்றதாகும்.

 (அதன்) இரண்டு சிறகுகளில் ஒன்று ஒடிக்கப்பட்டு விடுமாயின், கால்கள் இரண்டும் தலையும் (மீதியுள்ள) ஒரு சிறகின் உதவியால் எழுந்து விடும். மற்றொரு சிறகும் ஒடிக்கப்பட்டு விடுமாயின், இரண்டு கால்களும் தலையும் (மீண்டும்) எழும்.

தலையே நொறுக்கப்பட்டால் இரண்டு கால்களும், இரண்டு சிறகுகளும், தலையும் போய்விடும். (சாசானியப் பேரரசனான) கிஸ்ரா (குஸ்ரூ) தான் தலை. சீசர் ஒரு சிறகும் பாரசீகர்கள் மற்றொரு சிறகும் ஆவர். எனவே, கிஸ்ராவை நோக்கிப் புறப்படும்படி முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுங்கள்' என்று (ஆலோசனை) கூறினார்.

அதனடிப்படையில் பாரசீகத்தை நோக்கி ஸஅத் இப்னு அபீ வக்காஸ் தலைமையில் பெரும் எண்ணிக்கையிலான படைப்பிரிவு ஒன்றை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

பாரசீகத்திற்குள் முஸ்லிம் படைகள் அடியெடுத்து வைத்த நாள் முதலாய் பற்பல போர்கள். அவற்றுள் மிக முக்கியமான போர் தான் காதிஸிய்யா. பாரசீகர்களின் முதுகெலும்பை ஒடித்து முற்றிலுமாய் அவர்களை முடங்க வைத்த யுத்தம் அது.

அப்போரில் முஸ்லிம் படைகளுக்குத் தலைவராக ஸஅத் பின் அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹுவை நியமித்தார் உமர். பிரம்மாண்டமான பாரசீகப் பேரரசின் வலிமையான படைகளை எதிர்கொள்ள முஸ்லிம் படைகள் தயாராகிக் கொண்டிருந்தன. அப்பொழுது ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து கடிதமொன்று வந்தது.

அவர்களுடைய ( பாரசீகர்களின் ) வலிமையைப் பற்றிக் கேள்விபட்டு, அவர்களிடமுள்ள போர்த் தளவாடங்களின் பிரம்மாண்ட எண்ணிக்கையைக் கண்டு தயங்கவோ அஞ்சவோ வேண்டாம்.

அல்லாஹ்வின் உதவியை நாடுங்கள்; அவனிடமே நம்பிக்கைக் கொள்ளுங்கள். அறிவிலும் துணிவிலும் சிறந்த நம் தோழர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அந்த அரசனிடம் அனுப்பிவைத்து அவனை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலில் அழைப்பு விடுங்கள்" என்று அந்த கடிதத்தில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள்.

மதீனாவில் கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி பாரசீகத்தை நோக்கிச் சென்ற படைகளுக்குள்ளாக மிகச் சிறந்த அறிவும், வீரமும் நிறைந்த சிலர் தேவைப்படுகின்றார்கள்.

சொல்லுங்கள்! யாரை அனுப்பலாம். கூடியிருந்தவர்களின் ஆலோசனைப்படி ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் முதல் ஆள் நுஃமான் இப்னு முக்கர்ரின் ரலியல்லாஹு அன்ஹு, மற்றவர்கள் பி்ஸ்ரிப்னு அபீரஹ்ம் அல் ஜுஹனி, ஹம்லா இப்னு ஜுவை அல் கினானி, ஹன்ளலா இப்னு அர்ரபீஉத்தமீமி, ஃபுராத் இப்னு ஹிப்பான் அல்அஜாலி, அதிய் இப்னு ஸுஹைல், அல்-முகீரா இப்னு ஸராரா மேற்கொண்டு ஏழுபேரை உமர் ரலியல்லாஹு அன்ஹு தேர்ந்தெடுத்து ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குத் தகவல் அனுப்பினார்கள்.

அங்கே ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதாரிதிப்னு ஹாஜிப் அத்தமீமி, அல்-அஷ்அத் பின் ஃகைஸ் அல்கின்தி, அல்-ஹாரித் இப்னு ஹஸன் அத்துஹலி, ஆஸிம் இப்னு அம்ருத்தமீமி, அம்ரிப்னு மஅதிகரிப் அஸ்ஸுபைதி, அல்-முகீரா இப்னு ஷுஅபா அஸ்ஸகஃபி, அல்-முஸன்னா இப்னு ஹாரிதா அஷ்ஷைபானி ( ரலியல்லாஹு அன்ஹும் ) ஆகியோரைத் தேர்ந்தெடுத்தார்கள்.


முஸ்லிம்கள் சென்று சந்தித்துப் பேசவிருப்பது அக்காலத்தில் வல்லரசு என்று போற்றிப் புகழப்பட்ட ஒரு நாட்டின் பேரரசனிடம் எனவே மிக கவனமாக கலீஃபாவாலும், படைத் தளபதியாலும் அறிவிலும் துணிவிலும் மதி நுட்பத்திலும் வீரத்திலும், மிகச் சிறந்த பதினான்கு பேர் அடங்கிய முஸ்லிம்களின் பிரதிநிதிக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

فقُبَيْلَ الْقَادِسِيَّة ، أرسلَ سعدُ بنُ أبي وَقَّاص قائدُ جيوشِ المسلمينَ وَفْداً إِلى (كِسْرَى يَزْدَجُرْدَ) بِرِئاسَةِ النُّعْمَانِ بنِ مُقَرِّنٍ لِيَدْعُوَهُ إلى الإسلامِ ولما بلغوا عاصِمَةَ كِسْرَى في المدائِنِ استأذنوا بالدُّخولِ عليه فأذِنَ لهم ، ثم دعَا التَّرجُمَانَ فقال له:سَلْهُمْ : ما الذي جاءَ بِكم إِلى دِيارِنا وأغرَاكُمْ بِغَزْوِنَا لَعَلَّكُمْ طَمِعْتُمْ بنا واجْتَرَأتمْ علينا لأنَنّاَ تَشَاغَلْنَا عَنْكُمْ ، ولم نَشَأ أنْ نَبْطِشَ بكم .
فالْتَفَتَ النعمانُ بنُ مُقَرِّنٍ إلى مَنْ مَعَهُ وقال : إنْ شئتم أجَبْتُهُ عنكـم ، وِإنْ شاءَ أحدُكم أنْ يَتكَلَّمَ آثرْتُهُ بالكلامِ ، فقالوا : بل تَكَلَّمْ ، ثم التَفَتُوا إلى كِسْرَى وقالوا هذا الرجلُ يَتَكَلَّمُ بِلِسَانِنَا فَاسْتَمِعْ إلى ما يقول ، فَحَمِدَ النُّعْمَان اللّهَ وَأثنَى عليه ، وصَلى على نَبِيِّهِ وَسَلّمَ ، ثم قال : إِنَّ اللّهَ رَحِمَنَا فأرْسَلَ إِلينا رسولاً يَدُلُّنَا على الخيرِ ويأمُرُنا به ، ويُعَرِّفُنَا الشَّرَّ وَيَنْهانا عنه.
ووعَدَنا إِنْ أجَبْنَاهُ إِلى ما دعانا إليه أنْ يُعْطِيَنَا اللّهُ خَيْرَي الدنيا والآخِرة ، فمـا هو إِلاَّ قليلٌ حتَّى بَدَّلَ اللّهُ ضِيقَنَا سَعَةً ، وذِلَّتَنا عِزَّةً ، وَعداوتِنا إخاءً ومَرحَمَةً وقد أمرَنَا أنْ نَدْعُوَ الناسَ إلى ما فيه خيرهُمْ وأنْ نَبْدَأ بَمَنْ يجاورنا.فنحنُ ندعوكم إِلى الدخولِ في ديننا ، وهو دين حَسَّنَ الحَسَنَ كَلَّهُ وحَضَّ عليه ، وقَبَّحَ الْقَبِيحَ كَلَّهُ وَحَذَّرَ منه ، وهوَ يَنْقُلُ مُعْتَنِقيهِ من ظلامِ الكُفرِ وجَوْرِه إِلى نورِ الإيمانِ وعَدْلِه .
فإنْ أجبْتُمُونا إلى الإسلامِ خَلَّفْنا فيكم كتابَ اللّهِ وَأقَمْنَاكُمْ عليه ، على أن تَحْكُمُوا بأحكامِه ، ورَجَعْنَا عنكم وتَرَكْنَاكُم وشأنكم فإنْ أبيْتُـمُ الدخولَ في دينِ اللّهِ أخذْنا منكـم الْجِزْيَةَ وَحَمَيْنَاكم ، فإنْ أبَيْتُمْ إِعطاءَ الجِزْيةِ حارَبْناكم فاسْتَشَاطَ يَزْدَجرْدُ غَضَباً وغَيْظاً مِمَّا سَمِعَ .
وقال:إني لا أعلمُ أمَّةً في الأرضِ كانت أشْقَى منكم ولا أقَلَّ عدداً ، ولا أشَدَّ فُرْقَةً ، ولا أسْوَأ حالاً وقد كُنَّا نكِلُ أمْركم إلى وُلاَةِ الضَّوَاحِي فيأخذون لنا الطاعَةَ منكم ، ثم خفف شيئا من حدته وقال : فإنْ كانت الحاجَةُ هي التي دَفَعَتْكُمْ إلى المجيء إلينا أمَرْنَا لكم بِقوتٍ إلى أن تُخْصِبَ ديَارُكم ، وكَسَوْنَا سَادَتَكُمْ وَوُجوهَ قومِكم ، ومَلَّكْنَا عليكم مَلِكاً من قِبَلِنَا يَرْفُقُ بكم .
فرَدَّ عليه رَجُلٌ من الوفدِ رَدّاً أشْعَلَ نارَ غَضَبِهِ من جديدٍ فقال : لولا أن الرُّسُلَ لا تُقْتلُ لَقَتَلْتُكُـم قوموا فليس لكم شَيْءٌ عندي ، وأخْبِرُوا قائِدَكم أنِّي مُرْسِل إِلَيْهِ (رُسْتُم) حتَّى يَدْفِنَهُ وَيَدْفِنكُـم معاً في خَنْدَقِ الْقَادِسِيَّةِ ، ثم أمَرَ فَأتِيَ لَهُ بِحِمْلِ تُرَابٍ ، وقال لِرِجالِه : حَمِّلوهُ على أشْرَف هؤلاءِ ، وسوقوه أمامَكـم على مرأىً من النَّاسِ حتى يَخْرُجَ من أبوابِ عاصمةِ مُلْكِنَا .
فقالوا للوفد : مَنْ أشْرَفُكُمْ؟ فبادرَ إِليهم عاصِمُ بنُ عُمَرَ وقال : أنا.فَحَمَّلُوهُ عليه حتى خَرَجَ مِنَ المدائِنِ ، ثم حَمَّلَهُ عَلَى ناقَتِهِ وأخَذَه معه لِسَعْدِ بنِ أبي وَقَّاص ، وَبَشَّرَهُ بِأن اللّهَ سَيَفْتَحُ علَى المسلمين دِيَارَ الفرْسِ وَيُمَلِّكُهُمْ تُرَابَ أرضِهم ، ثم وقعت معركةُ القادسيةِ ، واكْتَظَّ خَنْدَقُها بِجُثَثِ آلافِ الْقَتْلَى ، ولكِنَّهُم لم يكونوا من جُنْدِ المسلمين ، وِإنَّما كانوا من جنودِ كِسْرَى .


அந்த குழுவிற்கு அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைவராக நியமிக்கப்பட்டார். பாரசீகத் தலைநகர் மதாயின் வந்தடைந்தார்கள் அவர்கள். யஸ்தஜிர்தின் பேரவையில் சந்திப்பு நிகழ்ந்தது.

மொழிபெயர்ப்பாளரை அருகில் வைத்துக் கொண்டு அவர்களுடன் உரையாடினான். உங்களை எங்கள் இடத்திற்குள் நுழையச் செய்தது எது? எங்களது நிலத்திற்குள் இந்தளவு படையெடுத்து ஊடுருவ உங்களை ஊக்குவித்தது எது? நாங்கள் வெவ்வேறு வேலைகளில் கவனமாக இருப்பதால் எங்களைத் தாக்கலாம் என்று உங்களுக்குத் துணிச்சல் வந்துவிட்டதா?" என்று உருமினான்.

நுஃமான் இப்னு முகர்ரின் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடன் வந்திருந்த தோழர்களை நோக்கி, “நீங்கள் விரும்பினால் நான் இவனிடம் பேசுகிறேன். அல்லது உங்களில் யாராவது அவனிடம் பேச விரும்பினால் முன் செல்லவும்"

“இல்லை, நீங்கள் பேசுங்கள் நுஃமான்" என்றவர்கள், யஸ்தஜிர்திடம் எங்கள் சார்பாக இவர் பதிலுரைப்பார் என்று நுஃமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் காட்டினர்.

அல்லாஹ்வை புகழ்ந்து, நன்றி கூறி, அவன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாவத் சொல்லி விட்டுப் பேச ஆரம்பித்தார் நுஃமான் ரலியல்லாஹு அன்ஹு.

அல்லாஹ் எங்கள் மீது இரக்கம் கொண்டான்; தூதர் ஒருவரை அனுப்பினான். அவர் எங்களுக்கு நேர்மையைக் கற்றுத் தந்தார்; அதை கடைபிடிக்கும்படி கட்டளையிட்டார். தீமைகளைப் பற்றி எச்சரித்தார்; அதையெல்லாம் நாங்கள் கைவிட எங்களுக்குக் கட்டளையிட்டார்.

மிக சொற்ப காலத்தில், அல்லாஹ் எங்களது ஏழ்மையை நீக்கி வளம் அளித்தான்; கீழ்நிலையிலிருந்த எங்களுக்கு உயர்வளித்து எங்களின் கண்ணியத்தை உயர்த்தினான்; எங்கள் மத்தியில் நிலவிய விரோதத்தையும் போரையும் சகோதரத்துவமாகவும் கருணையாகவும் மாற்றிவிட்டான்.

அவர் அழைப்பிற்கு இணங்கி நாங்கள் அடிபணிந்து நடந்தால் அல்லாஹ் எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்பேறு அளிப்பான் என்று சத்தியவாக்கு அளித்துள்ளார்.

சில கோத்திரங்கள் ஏற்றுக் கொண்டனர்; வேறு சிலர் மறுத்துவிட்டனர். அவரை எதிர்த்த அரபு மக்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைக்க எங்களுக்கு உத்தரவிட்டார். முதலில் அந்த அரபு மக்களிடமிருந்து எங்கள் பணியைத் துவக்கினோம். தொடக்கத்தில் சிலர் விருப்பமின்றி இம்மார்க்கத்தில் இணைந்து அதன்பிறகு இதிலுள்ள உன்னதத்தை உணர்ந்து தங்களது முடிவு தவறில்லை என்று பெருமகிழ்வடைந்தார்கள்.

வேறுசிலர் துவக்கத்திலேயே விருப்பத்துடன் இணைந்து அனைத்து நன்மைகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

பின்னர் அண்டை தேசத்து மக்களை அழைக்க அவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். நீங்கள் எங்களது அண்டை நாட்டுக்காரர்கள். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுக்கிறோம்.

நல்லொழுக்கத்தைப் பண்பாடுகளாய் போற்றும் உயர்மார்க்கம் இது. அதை நோக்கியே மக்களை ஊக்குவிக்கிறது. கீழ்மை, அற்பத்தன்மையை எல்லாம் இம்மார்க்கம் நிந்திக்கிறது. அவற்றிலிருந்து விலகிவிடும்படி இது எல்லோரைரையும் எச்சரிக்கிறது. இதை ஏற்றுக் கொள்பவர்கள் அநீதியிலிருந்தும் ஏகஇறை நம்பிக்கையற்ற இருட்டிலிருந்தும் விலகி, நீதியும் ஒளிவாய்ந்த இறைநம்பிக்கையும் உள்ள இடத்தை வந்தடைவார்கள்.

நீங்கள் எங்களது இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொண்டால், அல்லாஹ்வின் வேதத்தை தங்களிடம் விட்டுச் செல்வோம். நீங்கள் அதற்குப் பாதுகாப்பாளன் ஆவீர்கள். அதன் சட்டதிட்டப்படி நடப்பது உங்களது கடமையாகிறது. உங்களது காரியங்களை, நாட்டை நீங்களே நிர்வகித்துக் கொள்ளலாம். எங்களது தலையீடு இருக்காது.

நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் நிர்ணயிக்கப்படும் ஜிஸ்யா வரியை நீங்கள் எங்களுக்குச் செலுத்த வேண்டும். நாங்கள் உங்களுக்கு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பளிப்போம்.

அதையும் தர மறுத்தீர்கள் என்றால் போர் ஒன்று தான் தீர்வு" என்ன சொல்கின்றீர்கள்? என்று கேட்டு மற்ற தோழர்களோடு சேர்ந்து நின்று கொண்டார் நுஃமான் ரலியல்லாஹு அன்ஹு.

இவை அத்தனையையும் கேட்ட யஸ்தஜிர்து கோபத்தில் புழுவாய் துடித்தான். யார் இவர்கள்? எங்கிருந்து கிளம்பி வந்தார்கள்? நாம் யார்? நம் அந்தஸ்து என்ன? நம்பெருமை என்ன? நம்கீர்த்தி என்ன? யாரைப் பார்த்து யார் எச்சரிப்பது? என்ன பேச்சு இது?” என்று கொக்கரித்தான்.

தொடர்ந்து யஸ்தஜிர்து பேசினான்: உலகத்திலேயே உங்களைப் போன்ற கீழ்த்தரமான மக்கள் இருந்ததில்லை. குறைந்த எண்ணிக்கையில் இருந்தீர்கள். துண்டு துண்டாய்ப் பிரிந்து போய்க் கிடந்தீர்கள். ஏழ்மையில் உழன்றுக் கொண்டிருந்தீர்கள்.

எங்களது மாநில ஆளுநர்களுக்குக் கீழ்படிந்து கிடந்தீர்கள். அவர்களும் உங்களை இலகுவாய் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருகாலத்தில் பாரசீகத்தை எதிர்த்து நிற்பதையெல்லாம் கனவிலும் நீங்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்பொழுது நீங்கள் எங்களை வீழ்த்திவிடலாம் என்று நினைத்தால் அது உங்களுடைய மிகப் பெரிய முட்டாள்தனமாகும்"

சற்று நிதானித்து, முஸ்லிம்கள் மீது பரிதாபப்பட்டவனாக, “வறுமையினால் துன்பப்படுகிறீர்கள் என்றால் சொல்லுங்கள். உங்களது நிலைமை சீரடையும்வரை நாங்கள் உண்ண உணவளிப்போம். உடுத்த உடை அளிப்போம். உங்களின் தலைவர்களைக் கௌரவிப்போம்; உங்களை கனிவுடன் நடத்தி நிர்வாகம் செய்ய ஓர் அரசனையும் நியமிப்போம்" என்றான்.

முகீரா இப்னு ஸராரா எழுந்து நின்றார்.நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். சொல்லப்போனால் அதைவிட மோசமான நிலையிலிருந்தோம். அதெல்லாம் கடந்த காலம்" என்று சொல்லிவிட்டு பின்னர் அல்லாஹ் தன் கருணையினால் எப்படித் தங்களை உயர்த்தினான் என்பதையெல்லாம் விவரித்து, இறுதியில் நுஃமான் சொன்னதையே மீண்டும் கூறினார்.

அதற்குமேல் அவனால் பொறுக்க முடியவில்லை. பொங்கியெழுந்தான் யஸ்தஜிர்து தூதுக் குழு கொல்லப்படக் கூடாது என்ற நடைமுறை மட்டும் இல்லாதிருப்பின் உங்களையெல்லாம் நான் கொன்றிருப்பேன். உங்களுக்கெல்லாம் இங்கே ஒரு மண்ணும் கிடையாது. திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறியவன்.

இப்படி வெறுமெனே அனுப்பினால் போதாது; முஸ்லிம்களை அவமானப்படுத்தி அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து தமது பணியாளர்களிடம் மூட்டை நிறைய மண் எடுத்து வாருங்கள்" என்றான்.

உடனே எடுத்து வந்தார்கள் பணியாளர்கள். இந்தத் தூதுக்குழுவில் உயர்குடி வகுப்பினரின் முதுகில் மணல் மூட்டையை ஏற்றி வைத்து, மக்களெல்லாம் காணும் வகையில் இவர்களை மதாயின் நகரை விட்டே துரத்துங்கள்" என்று கூறி குதூகலித்தான் யஸ்தஜித்.

கூட்டத்தில் இருந்து முன் வந்து நின்றார் ஆஸிம் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு. "இந்தக் குழுவில் உயர்குடியைச் சேர்ந்தவன் நானே" என் முதுகில் மணல் மூட்டையை ஏற்றி வையுங்கள்!” என்றார்.

மதாயின் நகர மக்களெல்லாம் பரிகாசமும் நையாண்டியுமாய்ப் பார்க்க அந்தத் தூதுக்குழு தங்களது படை முகாமிற்குத் திரும்பியது. படைத் தலைவர் ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆவலுடன் கேட்டார், “சென்ற காரியம் என்ன ஆயிற்று?"

"மனம் மகிழுங்கள்! தளபதியே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ், அவர்களது அரசாங்கத்தின் சாவியை நம்மிடம் ஒப்படைத்துவிட்டான்" என்று மணல் மூட்டையை இறக்கி வைத்த ஆஸிம் ரலியல்லாஹு அன்ஹு நடந்த சம்பவத்தை விவரித்தார்கள்.

அதன் பிறகு ருஸ்தும் தலைமையில் மிகப் பெரும்படை கிளம்பி வந்து, மகா உக்கிரமான போர் காதிஸிய்யாவில் நிகழ்வுற்று இறுதியில் ருஸ்தும் கொல்லப்பட்டு அதில் முஸ்லிம்கள் மகத்தான வெற்றியும் பெற்றார்கள் என்பது பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்ட தனி வரலாறு.

அல்லாஹ் முடிவு செய்து வைத்திருந்த அலங்காரம்...

وكان سعد بن أبي وقاص قد ولَّى النعمان على
كسكر بين الكوفة والبصرة، فكره النعمان منصبه الإداري هذا، وكتب إلى عمر يسأله أن يعزله؛ لأنه لا يريد أن يكون موظفًا ولا جابيًا
، بل يريد أن يعيش في سبيل الله غازيًا
، فكتب إليه عمر:
"بسم الله الرحمن الرحيم، من عبدالله عمر (أمير المؤمنين) إلى النعمان بن مقرن، سلام عليك، فإني أحمد إليك الله الذي لا إله إلا هو، أما بعدُ: فإنه قد بلغني أن جموعًا من الأعاجم كثيرة قد جمعوا لكم بمدينة (نهاوند)، فإذا أتاك كتابي هذا فسر بأمر الله وبعون الله وبنصر الله بمن معك من المسلمين، ولا توطئهم وعرًا فتؤذيهم، ولا تمنعهم حقهم فتكفرهم، ولا تدخلهم غيضة (الأجمة؛ وهي مغيض ماء يجتمع فيه الشجر) فإن رجلاً من المسلمين أحب إليِّ من مائة ألف دينار والسلام عليك".
22 ½ லட்சம் சதுர மைல் பரப்பளவிலான எல்கையின் ஓர் அங்கமான கஸ்கர் எனும் பகுதிக்கு நுஃமான் இப்னு முகர்ரின் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கவர்னராக நியமித்து இருந்தார்கள்.

திடீரென உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முன்பாக ஒரு கடிதம் வந்திருந்தது. அது நுஃமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து வந்திருந்தது.

 உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அல்லாஹ்விற்காக என்னை எனது இந்தப் பதவியிலிருந்து விடுவித்து முஸ்லிம் படைகளிடம் அனுப்பிவையுங்கள்" என்று எழுதப்பட்டு இருந்தது.

இதே நேரத்தில் யஸ்தஜிர்த் அடுத்த போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றான் என்ற உளவுச் செய்தியும் வந்து சேர்ந்தது. இரண்டையும் உமர் ரலியல்லாஹு அன்ஹு தம் ஷூரா குழுவினருடன் ஆலோசித்தார்.

ஒன்றரை லட்சம் வீரர்களோடு காதிஸிய்யாவின் தோல்விக்கு பழி தீர்க்க நஹாவந்த் எனும் இடத்தில் யஸ்தஜிர்த் மீண்டும் பெரும் படையொன்றைத் திரட்டினான். அவர்களுக்கு ஃபைரஸான் என்பவனைத் தளபதியாக நியமித்தான்.

நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைமையில் முஸ்லிம் படைகள் பாரசீகர்களை எதிர்கொள்ள வேண்டும் என்று முடிவானது.

பதிலெழுதினார் உமர் ரலியல்லாஹு அன்ஹு  நஹாவந்த் செல்லுங்கள். அங்குள்ள நம் படைக்குத் தலைமையேற்றுக் கொள்ளுங்கள்"

அப்படையின் குழுத் தலைவர்களாய் ஹுதைஃபா இப்னுல்-யமான், அபூ மூஸா அல்அஷ்அரீ, அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹும் நியமிக்கப்பட்டனர்.

முஸ்லிம்களின் படையில் முப்பதாயிரம் வீரர்கள் இருந்தனர். இலட்சத்து ஐம்பதினாயிரம் வீரர்களை எதிர்த்து முப்பதாயிரம் வீரர்கள்! நுஃமான் தலைமையில் அந்தப் படை நஹாவந்த் வந்தடைந்தது.

நஹாவந்த் பலமான அரண் கொண்ட நகர். உயர்ந்த நெடிய சுவர். ஆழமான அகழி. தவிர குதிரைகள் முன்னேற முடியாத வகையில் கூர்மையான இரும்பு முள்கள் நிலங்களில் பரப்பி மறைத்து வைக்கப்பட்டன. சுவர்களின் மேலே திறமையாய் அம்பெய்யும் பாரசீக வீரர்கள் தகுந்த இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

விரைந்து முன்னேறிவந்த முஸ்லிம்களின் குதிரைப்படை இரும்பு முள் குத்தி, நிலைகுத்தி நின்றுவிட்டது. திறமையான தற்காப்பு நடவடிக்கை அது. நகரின் அரண் சுவரை நெருங்கவிடாமல் தடுக்கும் இரும்பு முள்கள், அதைத் தாண்டி அகழி என்று இவற்றையெல்லாம் சமாளித்து சில முஸ்லிம் வீரர்கள் சுவரருகே நெருங்கினால் மேலிருந்து அம்புகள் மழையாய்ப் பொழி்ந்து தாக்கின.

ثم أشار طليحة الأسدي برأي، فاستجاده الناس، فأمر النعمان القعقاع بن عمرو ومن معه أن يذهبوا إلى البلد، فيحاصروا الفرس وحدهم، ويهربوا من بين أيديهم إذا برزوا إليهم، ففعل القعقاع ذلك، فلما برزوا من حصونهم، نكص القعقاع بمن معه، فاغتنم الفرصة الأعاجم وفعلوا ما ظن طليحة أنهم فاعلوه، وقالوا: "هي هي"، فخرجوا بأجمعهم، ولم يبق بالبلد من المقاتلة إلا من يحفظ الأبواب حتى انتهوا إلى الجيش، والنعمان بن مقرن على تعبئته وذلك في صدر نهار يوم جمعة.
فلما حان الزوال صلى النعمان بالمسلمين، ثم ركب برذوْنًا، فجعل يقف على كل راية ويحثهم على الصبر ويأمرهم بالثبات، وأخبرهم أنه سيكبّر ثلاث تكبيرات:
إذا كبَّر الأولى تأهب الناس للحملة.
وإذا كبَّر الثانية فلا يبقى لأحد أهبة.
ثم الثالثة ومعها الحملة الصادقة، ثم رجع إلى موقعه.
بينما اصطف الفرس في المقابل صفوفًا هائلة في عَدد وعُدد لم ير مثله، وقد تغلغل كثير منهم بعضهم في بعض، وألقوا حسك الحديد وراء ظهورهم؛ حتى لا يمكنهم الهرب ولا الفرار ولا التحيز، ثم إن النعمان بن مقرن - رضي الله عنه - كبَّر الأولى وهز الراية، فتأهب الناس للحملة، ثم كبَّر الثانية، وهز الراية، فتأهبوا أيضًا.
ثم كبَّر الثالثة وحمل الناس على المشركين، وجعلت راية النعمان تنقض على الفرس كانقضاض العقاب على الفريسة، حتى تصافحوا بالسيوف، فاقتتلوا قتالاً لم يعهد مثله ولا سمع السامعون بوقعة مثلها، فقد قتل من المشركين ما بين الزوال إلى الظلام ما طبق وجه الأرض دمًا
ووقع النعمان بن مقرن من على راحلته، وجاءه سهم في خاصرته فقتَله، ولم يشعر به إلا أخوه، فأخفى موته، ودفع الراية إلى حذيفة بن اليمان - رضي الله عنه - فأقام حذيفة أخاه نعيمًا مكانه، وأمر بكتم موته حتى لا ينهزم المسلمون.
فلما أظلم الليل، انهزم المشركين مدبرين وتبعهم المسلمون، وكان الكفار قد قرنوا ثلاثين ألفًا بالسلاسل وحفروا حولهم خندقًا لئلا يفروا، فلما انهزموا وقعوا في الخندق وفي تلك الأودية، فهلك منهم بشر كثير نحو مائة ألف أو يزيدون سوى من قتل في المعركة، وهرب قائدهم (الفيرزان)، واتبعه نعيم بن مقرن، وقدم القعقاع بين يديه، فلحقه القعقاع عند ثنية همدان، فلم يستطع الفيرزان صعودها، فنزل، ومشي على رجليه وتعلق في الجبل، فاتبعه القعقاع حتى قتله.

பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாமல் இப்படியே இரண்டு நாள் கழிந்தது. படைத் தலைவர்களையெல்லாம் அழைத்து ஆலோசனை நிகழ்த்தினார் நுஃமான். அப்பொழுது துலைஹா இப்னு குவைலித் அல்-அஸதி ஒரு யோசனையை முன்வைத்தார்.

முஸ்லிம்களின் குதிரைப்படை பாரசீகர்களுடன் சண்டையைத் துவங்க வேண்டும். அவர்கள் தூண்டப்பட்டு நகரின் சுவருக்குப் பின்னாலிருந்து வெளிவருவார்கள். அவர்களைக் கண்டதும் பயந்து பின்வாங்குவதுபோல் குதிரைப்படை பின்வாங்க வேண்டும்.

அதைக் கண்டால் பாரசீகர்கள் என்ன செய்வார்கள்? ‘விடாதே! துரத்து!என்று பின் தொடர்ந்து துரத்த ஆரம்பிப்பார்கள். அது அவர்களை அவர்களது அரணை வி்ட்டு, தொலைவிற்கு இட்டு வந்துவிடும். முஸ்லிம்களின் படையொன்று அங்கு மறைந்திருக்க வேண்டும். அப்பொழுது பாரசீகர்களை மறைந்துள்ள முஸ்லிம்களின் படை திடீரென்று வந்து தாக்கத் துவங்கினால் மீண்டும் தங்களது அரணுக்குள் ஓடிவிட முடியாத நிலை பாரசீகர்களுக்கு ஏற்படும். முடித்துவிடலாம்"

மற்றொரு குறிப்பில், "இரவு கவிழ்ந்ததும் தீப்பந்தம் ஏற்றுங்கள். எதிரியின் கவனத்தைக் கவரும்படி நிறைய தீப்பந்தங்கள் எழட்டும். அதை ஏந்திக்கொண்டு வேகமாய்ப் பின்வாங்குங்கள். பயந்து பின்வாங்கும் முஸ்லிம்களைப் பிடித்து விடவேண்டும் என்று ஆசையில் அவர்கள் வெளியே ஓடிவருவார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் அடிநாதம், எதிரிப்படைகளை அவர்களது அரணுக்கு வெளியே தந்திரமாக வரவழைப்பது.

அந்த யோசனை நுஃமானுக்குப் பிடித்திருந்தது. உடனே காரியங்கள் நடைபெறத் துவங்கின. தனது படையை மூன்று குழுவாகப் பிரித்தார் நுஃமான்.

முதல் பிரிவுக்குத் தலைவராக காஃகா இப்னு அம்ரு. இப்பிரிவு குதிரைப்படை. இவர்களது பணி எதிரிகளின் அரண் சுவரைத தாக்கி போரைத் துவங்க வேண்டும்.

இரண்டாவது பிரிவுக்கு நுஃமான் தலைவர். இந்தப் படையினர் தகுந்த இடங்களில் பதுங்கி மறைந்திருக்க வேண்டும். எதிரிகள் நெருங்கியதும் களத்தில் குதித்து அவர்களுடன் நேருக்கு நேரான போர் தொடுப்பது என்று முடிவானது.

மூன்றாவது பிரிவு மற்றொரு குதிரைப் படை. இவர்கள் முஸ்லிம் படைகளிலேயே வலிமையான வீரர்கள். இவர்களும் தூரத்தில் மறைந்திருக்க வேண்டும். எதிரிகள் நெருங்கியதும் அவர்களின் இருபுறமிருந்தும் தாக்குதல் தொடுக்க வேண்டும்.

"எல்லோரும் அவரவர் இடங்களில் பதுங்கிக் கொள்ளவும். நான் உத்தரவு அளிக்கும்வரை சண்டையைத் துவங்கக் கூடாது" என்று கட்டளையிட்டார் நுஃமான். நபியவர்களிடம் பயின்ற தோழர் அவர்.

நான் மூன்று முறை தக்பீர் உரைப்பேன். முதல் தக்பீரில் தயாராகி விடுங்கள். இரண்டாவது தக்பீருக்கு உங்கள் ஆயுதங்களை உருவிக் கொள்ளுங்கள். மூன்றாவது தக்பீரில் நாம் அனைவரும் ஒரே நேரத்தில் எதிரிகளின் மீது பாய்வோம்"

காஃகா (ரலி) தம் வேலையைச் சிறப்பாக ஆரம்பித்தார். மிகுந்த சாதுரியத்துடன் காரியமாற்றினார். தமது குதிரைப் படையுடன் அவர் பின்வாங்குவதைக் கண்ட பாரசீகர்கள் உற்சாகமடைந்தார்கள்.

 "பிடியுங்கள் அவர்களை" என்று தாங்கள் நிலத்தில் பரப்பி வைத்திருந்த இரும்பு முள்களை தாங்களே அகற்ற ஆரம்பித்தனர். குதிரைகளில் ஏறி முஸ்லிம்களைத் துரத்த வேண்டுமல்லவா? முஸ்லிம் வீரர்களுக்குத் தங்களது குதிரைப் படையைச் செயலிழக்க வைத்த இரும்பு முள் பிரச்சினை அகன்றது.

 கடலலைபோல் பாரசீகப் படைகள் பாய்ந்து வெளியே ஓடிவந்து முஸ்லிம்களைத் துரத்த ஆரம்பித்தன. நன்றாக அவர்களை முன்னேறி வரவி்ட்டுக் காத்திருந்தது மறைந்திருந்த முஸ்லிம்களின் படை. அவர்கள் எளிதில் பின்வாங்கி அரணுக்குள் நுழைந்து கொள்ள முடியாத தூரத்தில் வந்ததுதான் தாமதம், உரத்து எழுந்தன மூன்று தக்பீர்கள். களத்தில தொம் தொம்மென்று வந்து குதித்தனர் நுஃமான் தலைமையிலான முஸ்லிம் படையினர். அதேநேரம் எதிரிகளின் இருபுறமிருந்தும் மறைந்திருந்த குதிரைப் படையினர் பாய்ந்தோடி வந்தனர். பின்வாங்குவதைப்போல் ஓடிக்கொண்டிருந்ததே காஃகா தலைமயிலான படை, அது சரேலெனத் திரும்பி நின்று எதிரிகளை நேருக்குநேர் நிமிர்ந்து பார்த்தது.

துவங்கியது  யுத்தம். எங்கிருந்து வந்தார்கள், எப்படி வந்தார்கள் என்று தெரியாமல் நாலாபுறமும்  சூழப்பட்டனர் பாரசீகர்கள். என்ன ஏது என்று அடுத்து யோசிப்பதற்குள் வாள்கள் சுழல ஆரம்பித்தன. வீறுகொண்ட வேங்கையைப்போல் களத்தில் சுழன்று கொண்டிருந்தார் நுஃமான்.

வரலாறு பத்திரமாய்ப் பதிவு செய்து வைத்துள்ள மிக உக்கிரமான போர் அது. சரசரவென எதிரிகளை வெட்டி வீழ்த்த ஆரம்பித்தது முஸ்லிம்களின் படை. ஆட்டுக்கல்லில் அகப்பட்ட தானியத்தின் நிலைதான் அன்று பாரசீகர்களின் நிலை. உயிரற்ற உடல்கள் சரமாரியாக நிலத்தில் வீழ்ந்து கொண்டிருந்தன. குருதி பெருக்கெடுத்து ஓடியது. நிலமெங்கும் சடலங்கள். தப்பித்து ஓடியவர்களும் தாங்கள் வெட்டி வைத்திருந்த அகழியிலேயே வீழ்ந்து மடிந்தனர். துணியைக் கிழித்தெறிவதுபோல் அந்தப் போரில் பாரசீகப் படை கிழித்தெறியப்பட்டது. பாரசீகப் படைத் தலைவன் ஃபைரஸானை காஃகா பின்தொடர்ந்து சென்று பிடிக்க, அவன் கதை முடிந்தது.

குதிரையின்மேல் அமர்ந்து நுஃமான் போரிட்டுக் கொண்டிருக்க ஓர் அசந்தர்ப்ப தருணத்தில் அவரது குதிரை தடுமாறி விழுந்துவிட்டது. கீழே விழுந்த அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் ரலியல்லாஹு அன்ஹு அங்கேயே அப்பொழுதே வீரமரணம் அடைந்தார். அதைக் கண்டுவிட்ட நுஃமானின் சகோதரர் உடனே ஒரு காரியம் செய்தார். நுஃமானின் கையிலிருந்த கொடியை தாம் ஏந்திக் கொண்டு, நுஃமானின் சடலத்தை ஒரு துணி கொண்டு மறைத்து அதை முஸ்லிம்கள் காணாமல் மறைத்து விட்டார்.

போரெல்லாம் முடிந்து வெற்றியடைந்தவுடன்தான் முஸ்லிம்கள் தங்களின் படைத் தலைவரைத் தேட ஆரம்பித்தனர். நுஃமானின் சகோதரர் துணியை விலக்கி, “இதோ உங்கள் படைத்தலைவன். வெற்றியைத் தரிசிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய அல்லாஹ் வீரமரணத்தையும் அவருக்குப் பரிசளித்துள்ளான்" என்று சத்தியம் சொன்னார்.

கலீஃபா உமருக்கு செய்திகள் அறிவிக்கப்பட்டன. நுஃமானின் மறைவைக் கேட்டு இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" என்றவர் கண்ணீர்விட்டு அழுதார். வேறு யாரெல்லாம் வீரமரணம் அடைந்தார்கள் என்று விசாரிக்க, பட்டியல் தெரிவிக்கப்பட்டது.

தனியொருவராக இல்லாமால் ஒரு கோத்திரத்தின் தலைவராக அறியப்பட்ட நுஃமான் இப்னு முகர்ரின் அல் முஜ்னீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் அவர்களே செதுக்கினார்கள். அழாகன அமைப்பில் வடிவமைத்தார்கள்.

இத்தோடு நின்று விடவில்லை அவர்களின் வாழ்க்கை. அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் அவர்களின் வாழ்க்கையை ஷஹாதாவோடு தீர்மானித்தான்.

எனவே, நம்முடைய ஒவ்வொரு நாளையும் மிகச் சிறப்பான நாளாக வடிவமைப்போம்.

வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் துணை நிற்பானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!.