Thursday 24 September 2020

 

சான்றாளர்களாய் வாழ்வோம்!!!

 

 

வாழ்க்கை என்பது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு வழங்கியிருக்கிற அபரிமிதமான அருட்கொடையாகும்.

 

புகழோடும், செல்வாக்கோடும் வாழ்கிறவர்களின் வாழ்க்கையே இங்கு கவனிக்கப்படுகிறது, போற்றப்படுகின்றது.

 

ஆனால், இலக்கோடும், இலட்சியத்தோடும், இறைவனின் உவப்பையும், பொருத்தத்தையும் நோக்கமாகக் கொண்டு வாழ்கின்றவர்களின் வாழ்க்கையே உலகம் உள்ளவரை கவனிக்கப்படும் வரலாறாய் நின்று போற்றப்படும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

 

அத்தகைய வாழ்க்கையை வாழவே ஒரு இறை நம்பிக்கையாளன் விரும்ப வேண்டும். வாழவும் வேண்டும்.

 

عن أبي الأحوص ، عن عبد الله بن مسعود قال

 كان دعاء النبي صلى الله عليه وسلم في العيدين " اللهم إنا نسألك عيشة تقية ، وميتة سوية ، ومردا غير مخز ولا فاضح

 

மாநபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் விரும்பிப் பிரார்த்திக்கும் பிரார்த்தனைகளில் ஒன்றாகஅல்லாஹ்வே உன்னிடம் தூய்மையான, பொருந்திக் கொள்ளப் பட்ட வாழ்க்கையை கேட்கின்றேன். அழகான மரணத்தைக் கேட்கின்றேன். நாளை மறுமையில் இழிவுக்கும், கேவலத்திற்கும் உள்ளாகாத நிலையைக் கேட்கின்றேன்என்பதாக இருந்தது என இப்னு மஸ்வூத் (ரலி) கூறுகின்றார்கள். (நூல்:ஹாகிம்)

وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ

 

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட பிரார்த்தனைகளில் ஒன்றாகஎனக்குப் பின் வருவோரில் அவர்கள் என் விஷயத்தில் என்னைப் பற்றி அழகானதைக் கூறிடும் பொருட்டு எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!” இருந்ததாக அல்குர்ஆன்: 26: 84 ல் அல்லாஹ் குறிப்பிடுவான்.

 

وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ

இன்னொரு இடத்தில் அல்லாஹ் இந்தப் பிரார்த்தனையை அங்கீகரித்ததாகஇன்னும் அவரின் மீது பின்னோர்களில் அவரின் புகழை நிலைத்திருக்க விட்டு வைத்தோம்அல்குர்ஆன்: 37:108 ல் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

 

ஒரு இறைநம்பிக்கையாளன் அப்படி வாழத் துவங்கி விட்டான் எனில் அவனுடைய வாழ்க்கையின் முழு பகுதியையும் ஆவணப்படுத்துவதை அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கின்றான்.

 

وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ

அவர்கள் முற்படுத்தி வைத்தவற்றையும், அவர்கள் மரணித்த பின்னும் நன்மையைச் சேர்த்து வைக்கின்ற அவர்களின் நற்செயலான அடிச்சுவடுகளையும் நாம் எழுதுகின்றோம்”.                                       ( அல்குர்ஆன்: 36: 12 )

 

அல்லாஹ்வின் ஆவணம் எப்படி இருக்கும் அந்த முஃமினுடைய வாழ்க்கையில் நடந்த பென்னம் பெரிய காரியங்களில் இருந்து சின்னஞ்சிரிய நல்லறங்கள் கூட பதிவு செய்யப்பட்டிருக்கும்.

 

மனிதர்களில் நபிமார்களுக்குப் பிறகு மிகவும் மதிப்பு வாய்ந்தவர்களான ஸஹாபாக்களைப் பற்றி அல்லாஹ்வின் ஆவணம் குர்ஆனின் பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை ஒரு முறை நாம் வாசிக்க வேண்டும்.

 

அவர்களின் உயிர்த்தியாகம், அவர்களின் பொருளாதாரத் தியாகம், அவர்களின் நாடு துறத்தல்ஹிஜ்ரத், அவர்களின் சித்ரவதை என பென்னம் பெரிய அர்ப்பணிப்புகளை பட்டியலிடும் இறைவன் அவர்களின் கண்கள் சிந்திய கண்ணீரை, ஏனைய மனிதர்கள் சாதாரணமாகக் கடந்து விடும் செயலில் கூட அவர்கள் காட்டிய முனைப்பை, விருந்தாளிக்கு உணவளிக்க விளக்கை அணைத்த சின்னஞ்சிறிய செயல்களை எல்லாம் கூட ஆவணப்படுத்தி போற்றிப் புகழ்கின்றான்.

 

இன்னும் ஒரு படி மேலாக ஒரு முஃமினுடைய ஈமான் என்பது அவர்களுடைய ஈமானைப் போன்று இருக்க வேண்டும் என்று ஈமானுக்கே வரைவிலக்கணமாக அவர்களை அல்லாஹ் ஆக்கியிருப்பான்.

 

فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا

ஆகவே நீங்கள் நம்பிக்கை கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொள்வார்களாயின் நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெறுவார்கள்”. ( அல்குர்ஆன்:2:137 )

 

எனவே, அத்தகைய புகழ்மிக்க வாழ்க்கையை இந்த உலகில் வாழ்ந்து விட்டு இந்த உலத்தை விட்டு நாம் விடை பெற வேண்டும்.

 

திருவள்ளுவன் இப்படிக் கூறுவான்: “தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்”. இல்லறவியல் 114.

 

இதற்கு உரை எழுதிய முன்னாள் முதல்வர் மு.கருணநிதி அவர்கள்ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறியவரா அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்என்றார்.

 

ஆகவே, இந்த உலகத்தை விட்டு நாம் விடை பெறும் போது நாம் நல்லவர்களாக வாழ்ந்தோம் என்று சொல்வதற்கான சான்றுகளை விட்டுச் செல்வோம்.

 

அல்லாஹ் அடையாளப்படுத்தும் மூன்று வழிகள்

 

நாம் இறை திருப்தியை நோக்கமாகக் கொண்டு வாழ்கிற போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாம் வாழும் காலத்திலேயே நம் புகழை வெளிப்படுத்துவான்.

 

1.   நம்மை நேசிக்கிறவர்களை உருவாக்குவான். 2. நம்முடைய பண்பாடுகள், குண நலன்களை அழகாக்கி மனித மனங்களில் இடம் பெறச் செய்வான்.

 

நிச்சயமாக! எவர்கள் ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு (பிறரின்) நேசத்தை ரஹ்மான் வழங்குவான்”.      (அல்குர்ஆன்: 20: 96 )

 

ஒரு சமயம் முஹம்மத் இப்னு முன்கதிர் {ரஹ்} அவர்கள், தங்களது நண்பர் அபூ ஹாஸிம் {ரஹ்} அவர்களைச் சந்தித்து அபூ ஹாஸிம் அவர்களே! என்னை நிறைய மக்கள் அடிக்கடி வந்து சந்திக்கின்றனர். அவர்களில் பெரும்பாலனவர்களை நான் யாரென்றே அறியேன்.

ஆனாலும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்காக துஆ செய்கின்றார்கள். நான் நெகிழ்ந்து போகின்றேன். ஆதலால், நான் அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்கின்றேன்.என்றார்கள்.

 

அதற்கு, அபூஹாஸிம் {ரஹ்} அவர்கள் உம் திறமையால் தான் இவ்வாரெல்லாம் நடப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்; உம் கல்வியால் தான் உமக்கு மரியாதை தருவதாக நீர் கருதிவிடாதீர்கள்.

 

ஏனெனில், அல்லாஹ் குர்ஆனில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்காக விரைவில் கருணைமிக்க இறைவன் மக்களின் உள்ளங்களில் அன்பைத் தோற்றுவிப்பான்.” (அல்குர்ஆன்:19:96) என்று கூறுகின்றான்.

 

உமக்கு முன்னால் வாழ்ந்த பல முன்னோர்களுக்கும் இது போன்று நடந்துள்ளது. ஆகவே, மக்களின் உள்ளத்தில் உம் மீதான பிரியத்தை ஏற்படுத்தியது அல்லாஹ் தான் என்று உம் இதயத்தில் இருத்துவீராக! இதற்காக அல்லாஹ்விற்காக நீர் நன்றி செலுத்துவீராக!என்று கூறினார்கள். ( நூல்:அத்துலாலுல் ஸம்ரதிய்யா, பாபு அஷ் ஷுக்ர் )

كان رسول الله صلى الله عليه وسلم جالساً مع أصحابه ودخل الصحابى الجليل عبد الله بن سلام رضي الله عنه، وعندما أشرف عليهم قال صلى الله عليه وسلم

 إِنَّ أَوَّلَ مَنْ يَدْخُلُ هَذَا الْبَابَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ "، فَدَخَلَ عَبْدُ اللَّهِ بْنُ سَلامٍ

فدخل وألقى السلام وجلس، ثم قام بعد لحظات، فقال صلى الله عليه وسلم

 {قام عنكم الآن رجلٌ من أهل الجنة}، وكان عبد الله بن عمرو بن العاص رضى الله عنهما شابٌ نشأ على طاعة الله؛ يُحيى الليل كله فى التهجد والصلاة لهن، وجعل أيامه كلها صيامٌ لله، ويتلو القرآن فى كل ثلاثة أيامٍ مرة من أوله إلى آخره، فقال فى نفسه: ما العمل الذى زاد به هذا الرجل عنى والذى وصفه به النبى صلى الله عليه وسلم أنه من أهل الجنة؟ فأراد أن يستكشف هذا الأمر فزاره فى بيته وطلب منه أن يبيت عنده على أنه حدث خلافٌ بينه وبين أبيه، وهو فى الحقيقة يريد أن ينظر إلى عبادته وطاعته لله.

وبعد صلاة العشاء انتظر أن يقوم الرجل فلم يقم وظل نائماً، وفى النصف الثانى من الليل وجده يقظاً يتقلب ويتململ ولكنه لا يقوم، فلما إقترب الفجر قام وتوضأ وقال: هيا يا عبد الله نصلى الصبح مع رسول الله صلى الله عليه وسلم. وفى النهار وجده مفطراً غير صائم، فقال: لعله هذه الليلة كان مجهداً ومتعباً، انتظر ليلة ثانية فوجده فى الثانية على هذه الهيئة، وفى الثالثة على هذه الكيفية، فقال: لابد من إخباره بالأمر

فقال: يا أخى سمعت النبى صلى الله عليه وسلم يقول وأنت داخل وأنت خارج أنك رجلٌ من أهل الجنة، فأحببت أن أطلع على العمل الذى فزت به بهذه المنزلة، فلم أجدك زدت عن الفرائض المفترضة شيئاً، فسكت الرجل ثم قال له: لا أزيد عما رأيت، فلما نظر إليه ووجده متعجباً، قال له

غير أنى أبيت كل ليلة وليس فى قلبى غلٌ ولا غشٌ ولا حقدٌ ولا حسدٌ لأحدٍ من المسلمين، قال فبذاك

மாநபி {ஸல்} அவர்களின் சபை வழக்கம் போல, ‘மஸ்ஜிதுன் நபியில் கூடியிருந்தது. நபிகளாரின் அருளுரைகளைக் கேட்டு அவற்றைத் தங்கள் வாழ்வில் செயல்படுத்த எப்போதும் போல் நபித்தோழர்கள் அங்கு குழுமியிருந்தனர்.

 

சபையோர்களிடம் நபி {ஸல்} அவர்கள் சொன்னார்கள்:தோழர்களே, இப்போது சுவனவாசி ஒருவர், உங்கள் முன் வர இருக்கிறார் பாருங்கள்

 

நபிகளாரின் மதிப்புக்குரிய சோபனம் பெற்றஅந்த மனிதரைப் பார்க்க நபித்தோழர்கள் ஆவலுடன் காத்திருக்க அங்கே மதீனாவாசியான அன்சாரியின் தோழர் ஒருவர் வந்தார். தொழுவதற்குத் தயாராய் தாடியில் நீர் சொட்டச் சொட்ட, தனது செருப்புகளை சுமந்துகொண்டு அவர்களைக் கடந்து சென்றார்.

 

இரண்டாவது நாளும் அவர் அங்கே வந்தார். மூன்றாவது நாளும் இப்படியே நடந்தது. நபிகளாரும் சுவனவாசிக்குரிய அந்த அன்சாரியின் தோழரை முன்அறிவிப்பு செய்தார்கள்.

 

இதைக் கேட்டு அங்கு குழுமியிருந்த நபித்தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வியப்படைந்தார். நபிகளாரின் சபை கலைந்ததும், நபிகளாரால் சுவனவாசி என்று அறிவிக்கப்பட்ட அன்சாரி தோழரிடம் சென்றார். ஒரு மூன்று நாள் அவரோடு தங்கியிருக்க அனுமதி வேண்டினார். அவரும் அதற்குச் சம்மதித்தார்.

அன்சாரியின் தோழரோடு மூன்று நாட்கள் தங்கியிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் எந்தவிதமான பிரத்யேக வணக்கமுறைகளையும் அவரிடம் காணவில்லை. எல்லாம் வழக்கம்போலவே இருக்கக் கண்டார்.

 

ஆனால், அவர் தூங்கச் செல்லும்போது, இறைவனை நினைவுகூர்ந்து தியானிப்பவராக இருந்தார். அதேபோல, யாரைக் குறித்தும் எவ்விதமான தீயவார்த்தைகளையும் அவர் கூறாமலிருப்பதையும் கண்டார். இப்படியே மூன்று நாட்களும் கழிந்தன.

 

வழக்கமான நடத்தைகள் கொண்ட ஒருவரை சுவனவாசிஎன்று நபிகளார் முன்அறிவிப்பு செய்தது எப்படி? குழம்பித் தவித்த அப்துல்லாஹ் பின் அம்ர் தனது சந்தேகத்தை விடைபெறும்போது, அந்த அன்சாரி தோழரிடம் கேட்கவும் செய்தார்.

அதைக் கேட்ட அன்சாரி தோழர், புன்முறுவலுடன் சொன்னார்: சகோதரரே! நீங்கள் மூன்று நாட்கள் என்னோடு தங்கியிருந்து கண்டது முழுக்க முழுக்க உண்மைதான்! அதே நேரத்தில் நீங்கள் காணாத ஒரு விஷயமும் இருக்கிறது. நான் யார் மீதும் குரோதம் கொள்வதில்லை. அதேபோல, பிறருக்கு இறைவனால் அருளப்படும் அருட்கொடைகளைக் கண்டு பொறாமைப்படுவதும் இல்லை!” என்று கூறினார்.

 

இந்த நற்குணங்கள் பெற்றிருந்ததாலேயே அந்த அன்சாரி தோழர், சுவனவாசி என்று நபிகளாரால் முன்னறிவிப்பு செய்யப்பட்டார் என்பதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) புரிந்து கொண்டார்.

 

அந்த நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் ஆவார்கள்.

 

மேலும், மாநபி {ஸல்} அவர்கள் இது போன்று வாழும் காலங்களிலேயே சுவனவாசி என்று பல நபித்தோழர்களை, நபித்தோழியர்களை அடையாளப்படுத்தி இருக்கின்றார்கள்.

 

இப்போது நம்மோடு நபி {ஸல்} அவர்கள் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம் ஆனால், மாநபி {ஸல்} அவர்கள் சோபனம் சொல்வதற்கு காரணமான பண்பாடுகள் இருக்கிறது. அந்த பண்பாடுகளைக் கொண்டு நாம் வாழ்கிற போது அந்த சோபனத்திற்குரியவர்களாக நாம் மாறி விடுவோம்.

 

2.மரணத்தின் போது நம் புகழை வெளிப்படுத்துவான்...

 

وفي ليلة من الليالي نام هو والصحابة، وكانوا في غزوة في سبيل الله، قال ابن مسعود - رضي الله عنه وأرضاه -: قمت آخر الليل فنظرت إلى فراش الرسول - صلى الله عليه وسلم - فلم أجده في فراشه، فوضعت كفي على فراشه فإذا هو بارد، وذهبت إلى فراش أبي بكر فلم أجده على فراشه، فالتفت إلى فراش عمر فما وجدته، قال: وإذا بنور في آخر المخيم، وفي طرف المعسكر، فذهبت إلى ذلك النور ونظرت، فإذا قبر محفور، والرسول - عليه الصلاة والسلام - قد نزل في القبر، وإذا جنازة معروضة، وإذا ميت قد سجي في الأكفان، وأبو بكر وعمر حول الجنازة، والرسول - صلى الله عليه وسلم - يقول لأبي بكر وعمر: « دليا لي صاحبكما».

فلما أنزلاه نزله - صلى الله عليه وسلم - في القبر، ثم دمعت عيناه - صلى الله عليه وسلم - ثم التفت إلى القبلة ورفع يديه وقال: «اللهم إنّي أمسيت عنه راض فأرض عنه، اللهم إنّي أمسيت عنه راض فارض عنه».
قال: قلت من هذا؟

قالوا: هذا أخوك عبد الله ذو البجادين مات في أول الليل.

قال ابن مسعود: فوددت والله أني أنا الميت



இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: தபூக் யுத்தத்திற்காக எதிரிகளின் இருப்பிடத்திற்கே நபித்தோழர்களை அண்ணலார் அழைத்துச் சென்றிருந்த தருணம் அது.

 

முதல் நாள் இரவு திடீரென நான் கண்விழித்தேன். அண்ணலாரின் கூடாரத்தில் அண்ணலாரைப் பார்த்தேன். ஆனால், நபி {ஸல்} அவர்கள் அங்கு இல்லை.

 

உடனடியாக நபி {ஸல்} அவர்களைத் தேடியவாறு அபூபக்ர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்கு வந்தேன். அங்கு அண்ணலாரும் இல்லை, அபூபக்ர் (ரலி) அவர்களும் இல்லை.

 

அங்கிருந்து நேராக உமர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்குச் சென்று தேடினால், அங்கு உமர் (ரலி) அவர்களும் இல்லை.

 

மூவரையும் தேடிக் கொண்டிருக்கும் போது படை வீரர்கள் முகாமிட்டிருந்த பகுதியின் எல்லைப் பகுதியிலிருந்து நெருப்பு மூட்டப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

 

அதன் அருகே விரைவாகச் சென்று பார்த்தேன். அங்கு அண்ணலார் {ஸல்} அவர்களும், அபூபக்ர்(ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களும் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.

 

அங்கே, கப்ர் ஒன்று தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு ஜனாஸாவும் வைக்கப்பட்டிருந்தது.

 

அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் இறந்து போன அந்த மனிதர் யார்? என்று வினவினேன்.

 

அதற்கு அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உமது தோழர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் (ரலி) அவர்கள் தான் என்று கூறினார்கள்.

 

மாநபி {ஸல்} அவர்கள் மண்ணறைக்குள் இறங்கினார்கள். பின்னர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்களின் உடலை குழிக்குள் இறக்குமாறு கூறினார்கள்.

 

பின்னர், மண்ணறைக்குள் நின்றவாறு வானை நோக்கி கையை உயர்த்தியாஅல்லாஹ்! இன்று மாலை நேரத்தை அடைகிற போது இந்த அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்கள் வாழ்வை  நான் பொருந்திக் கொண்டேன்! உன்னுடைய தூதராகிய நான் பொருந்திக் கொள்கிற நிலையில் அவர் இவ்வுலகில் வாழ்ந்தார்! எனவே யாஅல்லாஹ் நீயும் அவரைப் பொருந்திக் கொள்வாயாக!” என்று இருமுறை துஆ செய்தார்கள். பின்னர் தாங்களே நல்லடக்கமும் செய்தார்கள்.

 

அப்போது நான் இறந்து போன அப்துல்லாஹ் துல் பஜாதைனாக இருந்திருக்கக் கூடாதா? என ஏங்கினேன்.”                                       ( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல்ஃகாபா )

 

 

أمّا عامر بن عبد الله بن الزبير .. فلقد كان على فراش الموت .. يعد أنفاس الحياة

.. وأهله حوله يبكون ..

فبينما هو يصارع الموت .. سمع المؤذن ينادي لصلاة المغرب .. ونفسه تحشرج في حلقه ..

وقد أشتدّ نزعه .. وعظم كربه ..

فلما سمع النداء قال لمن حوله : خذوا بيدي ..!!

قالوا : إلى أين ؟ ..

قال : إلى المسجد ..

قالوا : وأنت على هذه الحال !!

قال : سبحان الله .. !! أسمع منادي الصلاة ولا أجيبه ..

خذوا بيدي .. فحملوه بين رجلين .. فصلى ركعة مع الإمام .. ثمّ مات في سجوده

التمهيد لما في الموطأ من المعاني والأسانيد

 

 

ஆமிர் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களின் மரண நேரம்-வாழ்நாளின் இறுதி மூச்சுக்கள் எண்ணப்படுகிறது-அவரை சுற்றி அவரின் குடும்பத்தினர் அழுதுகொண்டிருக்கின்றனர்-

 

மரணத்தின் பிடியில் போராடும் அன்னாருக்கு மஃரிப் தொழுகைக்கு பாங்கு சொல்லப்படும் சப்தம் கேட்கிறது. அப்போது தன்னை சுற்றி அமர்ந்தவர்களிடம்-என் கைபிடித்து தூக்குங்கள் என்றார். எங்கே செல்ல விரும்புகிறீர்?என கேட்டபோது,மஸ்ஜிதிற்கு என்று கூறினார்கள்.

 

இந்த நிலையிலா?என்று குடும்பத்தினர் ஆச்சரியமாக கேட்ட போது-அல்லாஹ்வின் அழைப்பை கேட்டபின்னும் பதில் சொல்லாமல் இருக்க என்னால் முடியாது என்றார்கள்.

 

இறுதியில் அவரை இருவர் தூக்கி ஸப்பில் நிறுத்தியபோது ,இமாமுடன் ஒரு ரகஅத் தொழுத நிலையில் ஸுஜூதில் அவரின் ரூஹ் பிரிந்தது.

எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்?

 

لما نزل الموت بالعابد الزاهد عبد الله بن إدريس .. اشتد عليه الكرب .. فلما اخذ

يشهق .. بكت ابنته ..

فقال : يا بنيتي .. لا تبكي .. فقد ختمت القرآن في هذا البيت أربعة آلاف ختمة ..

كلها لأجل هذا المصرع

 

அப்துல்லாஹ் இப்னு இத்ரீஸ் ரஹ் அவர்களின் மரண நேரத்தில் அன்னாரின் மகள் அழுதபோது-மகளே!நீ அழ வேண்டாம்,ஏன் தெரியுமா?நான் இந்த நாளை எதிர்பார்த்து இந்த வீட்டில் நான்காயிரம் குர்ஆன் முடித்துள்ளேன் என்றார்களாம்.

 

நீங்கள் எப்படி வாழ்கிறீர்களோ அப்படியே மரணத்தை சந்திப்பீர்கள்.

 

குர்ஆன் ஓதுவதில் அதீத பேராசைக்கொண்ட உஸ்மான் ரலி அவர்களுக்கு குர்ஆன் ஓதும் நிலையில் மரணம் வருகிறது.



ஷஹாதத் மரணத்தின் மீது அளவு கடந்த ஆசை கொண்டிருந்த உமர் ரலி அவர்களுக்கு தொழுகையில் நின்றுகொண்டிருந்த உமர் ரலி அவர்களை தேடி ஷஹாதத் மரணம் வருகிறது.

 

தன் நேசரான நபி ஸல் அவர்கள் வாழ்ந்த வாழ்வை மட்டும் தான், தான் வாழவேண்டும் என்று ஆசைப்பட்ட அபூபக்கர் ரலி அவர்களுக்கு 63 வயதில் மரணம் வருகிறது. ( நன்றி: உஸ்மானிகள் ஆன்லைன் மரணம் ஒரு இழப்பல்ல )

 

3.மரணத்திற்குப் பின்பு நமக்காக பிரார்த்திக்கும் ஒரு கூட்டத்தை அல்லாஹ் வெளிப்படுத்துவான்.

 

இன்ஷா அல்லாஹ்… இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் பதிவு செய்யப்படும்