Thursday 8 May 2014

ஊடகத்துறையும்.. முஸ்லிம்களும்…



  ஊடகத்துறையும்.. முஸ்லிம்களும்

 

சமீப காலமாக சர்வதேச அளவில் முஸ்லிம் சமூகம் அவமானப்படுத்தப்பட்டு வருவதை நாம் அனுபவித்து வருகின்றோம்.

திட்டமிட்ட இந்த தீய செயலுக்கு அத்துணை ஊடகங்களும் துணை போவதை யாரும் மறுத்துக்கூறிட இயலாது.

இன்றைய நவீன யுக்திகள் இஸ்லாமிய விரோத சக்திகள் என அனைவரும் ஓரணியில் ஒன்றிணைந்து இப்பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் தமிழகத்தின் தலைநகர் சென்னையின் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் போது நமது செய்தித்தாள்களும், காணொளி ஊடகங்களும் போட்டி போட்டு முஸ்லிம்களை தனிமைப் படுத்தி தங்களின் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியதை நாம் அறிவோம்.

இன்று நேற்றல்ல நீண்ட நெடுங்காலமாகவே முஸ்லிம் விரோத சக்திகள், ஃபாஸிச பயங்கரவாதிகள் இத்தகைய கையாலாகாத துர்ப்பிரச்சாரத்தை கையாண்டு வெகுஜன மக்களிடையே முஸ்லிம்கள் மீதான நம்பகத்தன்மையை அகற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனாலும், கடந்த காலங்களிருந்தோ, நிகழ்காலத்திலிருந்தோ இந்த முஸ்லிம் சமூகம் பாடம் பெற்றிருக்கின்றதா? ஊடகவியலாளர்களின் இத்தீய பிரச்சாரத்திற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கின்றதா? அல்லது அதற்கான முயற்சிகளையாவது மேற்கொண்டிருக்கின்றதா?
இது போன்று ஏராளமான கேள்விகள் முஸ்லிம் சமூகத்தின் அகன்ற பார்வைக்கு முன் தொக்கி நிற்கிறது.

அவமானமும், கேவலமும் நிரந்தரமல்ல

وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ

அல்லாஹ் கூறுகின்றான்: “ஆயினும், கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கையாளருக்கும் உரியதாகும்.”

அல்லாஹ்வால் கண்ணியத்திற்கு உரியவர்களாக அடையாளம் காட்டப்பட்ட ஓர் சமூகம் ஏன் அவமானத்திற்குள்ளாக வேண்டும்?.

நம் சக்தியை நாமே உணராத போது, நம்மின் பலத்தை நம்மை எதிர்ப்பவர்களுக்கு நாம் உணர்த்தாத போது, அதற்காக முழுமையாக உழைக்காத போது நாம் இந்த இழிநிலைக்கு தள்ளப்படுகின்றோம்.

உணர்வதும்உணர்த்துவதும்….

உமர் இப்னு ஃகத்தாப் (ரலி) அவர்கள்.

فروى مجاهد عن ابن عباس قال : سألت عمر بن الخطاب : لأي شيء سميت الفاروق ؟ قال : أسلم حمزة قبلى بثلاثة أيام ـ ثم قص عليه قصة إسلامه . وقال في آخره : قلت ـ أي حين أسلمت : يا رسول الله، ألسنا على الحق إن متنا وإن حيينا ؟ قال : ( بلى، والذي نفسي بيده، إنكم على الحق وإن متم وإن حييتم ) ، قال : قلت : ففيم الاختفاء ؟ والذي بعثك بالحق لنخرجن، فأخرجناه في صفين، حمزة في أحدهما، وأنا في الآخر، له كديد ككديد الطحين، حتى دخلنا المسجد، قال : فنظرت إلىّ قريش وإلى حمزة، فأصابتهم كآبة لم يصبهم مثلها، فسماني رسول الله صلى الله عليه وسلم ( الفاروق ) يومئذ .


ஒருமுறை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருக்கும் போதுஉங்களுக்கு ஃபாரூக் என்ற பெயர் எப்படி வந்தது?” எனக் கேட்டார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், அதுவா? எனக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் ஹம்ஜா (ரலி) அவர்கள் முஸ்லிமானார்கள். நான் அதற்கு பின்னரே முஸ்லிம் ஆனேன்.

நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போதுஅல்லாஹ்வின் தூதரே! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் சத்திய கொள்கையில் தானே இருக்கின்றோம்என்று கேட்டேன்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்ஆம்! என் உயிர் எவன் வசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் சத்தியத்தின் மீது தான் இருக்கின்றீர்கள்என்று கூறினார்கள்.

அதற்கு, நான்அப்படியென்றால் ஏன் நாம் (இவ்வளவு அவமானங்களையும், கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு) மறைவாக செயல்பட வேண்டும்.

உங்களைச் சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் பகிரங்கமாக சத்தியத்தைக் கூறியே ஆக வேண்டும்என்று கூறி முஸ்லிம்களை இரண்டு அணிகளாக ஆக்கி, ஓர் அணியில் நானும் இன்னொரு அணியில் ஹம்ஜாவும் இருந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை இரு அணிகளுக்கும் நடுவில் ஆக்கிக் கொண்டோம்.

திருகையிலிருந்து மாவுத்துகள்கள் பறப்பது போன்று எங்களது அணியில் இருந்து புழுதிகள் பறந்தன. நாங்கள் கஃபாவில் நுழைந்தவுடன் என்னையும், ஹம்ஜாவையும் பார்த்த குறைஷிகளுக்கு அதுவரை ஏற்படாத கைசேதமும் கவலையும் ஏற்பட்டதை நான் கண்டேன்.

அன்று தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எனக்கு ஃபாரூக் எனப் பெயரிட்டார்கள்.” என்று கூறினார்கள்.

كان ابن مسعود رضي الله عنه يقول : ما كنا نقدر أن نصلى عند الكعبة حتى أسلم عمر .
وعن صهيب بن سنان الرومى رضي الله عنه قال : لما أسلم عمر ظهر الإسلام، ودعى إليه علانية، وجلسنا حول البيت حلقًا، وطفنا بالبيت، وانتصفنا ممن غلظ علينا، ورددنا عليه بعض ما يأتى به .
وعن عبد الله بن مسعود قال : ما زلنا أعزة منذ أسلم عمر .

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “உமர் (ரலி) முஸ்லிமாக ஆகும் வரை நாங்கள் கஃபாவிற்கு அருகில் கூட தொழ முடியாதவர்களாக இருந்தோம்”.

ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்கு வருகை தந்த பின்பு தான் இஸ்லாம் வெளி உலகிற்கு வெளிச்சமாகத் துவங்கியது. பகிரங்கமாக இஸ்லாமிய பிரச்சாரமும் செய்யப்பட்டது.
மேலும், கஃபாவைச் சுற்றி கூட்டமாக எங்களால் அமர முடிந்தது. எங்களால் தவாஃப் செய்ய முடிந்தது. எங்களை துன்புறுத்துகிற சிலர்களின் தொல்லைகள் சிலவற்றிற்கு தகுந்த சில பதிலடிகள் கொடுக்க முடிந்தது.”

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “உமர் (ரலி) அவர்கள் முஸ்லிமானதற்கு பின்னர் தான் முஸ்லிம்கள் பலமிக்கவர்களாக மாறினார்கள்.”

                                    (நூல்: ரஹீக் அல் மஃக்தூம் பக்கம்:81)

இங்கே, உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமும் முஸ்லிம்களும் எவ்வளவு உயர்வு மிக்கவர்கள் என்பதை உளப்பூர்வமாக உணர்ந்தார்கள். அவர்கள் கையாண்ட அந்த உபாயம் எதிரிகளுக்கு முஸ்லிம்களின் வலிமையை, இஸ்லாத்தின் மாண்பை உணர்த்தும் முகமாய் அமைந்தது.

 மேலும், அதுவரை முஸ்லிம்களுக்கு அவமானங்களையும் கொடுமைகளையும் இழைத்தவர்கள் சற்று பின் வாங்கி விக்கித்துப் போய் நின்றார்கள் என வரலாறு சான்றுரைக்கின்றது.

 இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்கத்துடித்த எதிரிகளில் பலர் விரண்டோடியதாகவும், இன்னும் பலர் அழிந்து போனதாகவும், இன்னும் சிலர் அந்த ஒப்பற்ற இறைமார்க்கத்தில் தன்னை சரணடைத்ததாகவும் வரலாற்றின் பல பக்கங்கள் சான்றுரைத்துக் கொண்டிருக்கின்றது.

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதா (ரலி) அவர்கள்.

عن عكرمة، عن ابن عباس قال: أسرت الروم عبد الله بن حذافة السهمي، صاحب النبي صلى الله عليه وسلم، فقال له الطاغية: تنصّر وإلا ألقيتك في البقرة، لبقرة من نحاس، قال: ما أفعل. فدعا بالبقرة النحاس فملئت زيتاً وأغليت، ودعا برجل من أسرى المسلمين فعرض عليه النصرانية، فأبى، فألقاه في البقرة، فغذا عظامه تلوح، وقال لعبد الله: تنصّر وإلا ألقيتك. قال: ما أفعل. فأمر به أن يلقى في البقرة فبكى، فقالوا: قد جزع، قد بكى: قال ردوه. قال: لا ترى أني بكيت جزعاً مما تريد أن تصنع بي، ولكني بكيت حيث ليس لي إلا نفسٌ واحدة يفعل بها هذا في الله، كنت أحب أن يكون لي من الأنفس عدد كل شعر في، ثم تسلّط علي فتفعل بي ذها. قال: فأعجب منه: وأحبّ أن يطلقه، فقال: قبل رأسي وأطلقك. قال: ما أفعل. قال تنصّر وأزوجك بنتي وأقاسمك ملكي. قال: ما أفعل. قال قبل رأسي وأطلقك وأطلق معك ثمانين من المسلمين. قال: أما هذه فنعم. فقبّل رأسه، وأطلقه، وأطلق معه ثمانين من المسلمين. فلما قدموا على عمر بن الخطاب قام إليه عمر فقبل رأسه، قال: فكان أصحاب رسول الله صلى الله عليه وسلم يمازحون عبد الله فيقولون: قبلت رأس علج، فيقول لهم: أطلق الله بتلك القبلة ثمانين من المسلمين.

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள், இஸ்லாத்தை ஆரம்பத்திலேயே ஏற்றுக் கொண்ட நற்பேறு பெற்றவர்கள். ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட புனிதர்களில் ஒருவர். பத்ரில் கலந்து கொண்டு சிறப்பாக பங்களித்த பாங்கான வீரரும் கூட.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கிஸ்ரா மன்னனுக்கு இவர்களிடம் தான் இஸ்லாமிய அழைப்பை ஏந்திய கடிதத்தை கொடுத்தனுப்பினார்கள்.

இன்னும் பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க கௌரவத்திற்கு சொந்தக்காரர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ரோமை நோக்கி அனுப்பப்பட்ட ஒரு படைக்கு அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) தளபதியாக நியமிக்கப் பட்டார்கள்.

நீண்ட போராட்டத்திற்கு பின் முஸ்லிம் படையினர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

முஸ்லிம்கள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்துல்லாஹ் (ரலி) தளபதியல்லவா? கொஞ்சம் கூடுதலாகவே சித்ரவதை செய்யப்பட்டார்கள்.

அவர்களுக்கு முன்னால் தோன்றிய ரோம அரசன் இஸ்லாத்தை விட்டு விடுமாறு கூறி கட்டாயப்படுத்தினான். தொடர்ந்து சித்ரவதையை மேற்கொள்ளுமாறு தம் பணியாளர்களுக்கு கட்டளையிட்டான்.

ஆனால், கொஞ்சம் கூட இசைந்து கொடுக்க வில்லை அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.

உடனடியாக மிகப்பெரிய அடுப்பு தயார் செய்யப்பட்டு மிகப் பிரமாண்டமான அண்டா வரவழைக்கப்பட்டு அண்டா முழுவதும் நீரால் நிரப்பப்பட்டது.

தீ மூட்டப்பட்டு, தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது. கொதிக்கும் தண்ணீருக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட அப்துல்லாஹ் (ரலி) அவர்களை நோக்கிநீர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டால் உம்மை நான் விட்டு விடுகின்றேன்என்றான் அரசன்.

ஒரு போதும் நான் அத்தகைய இழிவான காரியத்தை செய்ய மாட்டேன் என்று கூறினார் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.
கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் ஒருவரை பிடித்து கொதிக்கும் வெந்நீருக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இஸ்லாத்தை விட்டு விட்டால் உம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்ன சொல்கிறாய்? என்று கேட்டான் அரசன்.

என் உயிரை விட இஸ்லாமே மேலானது என்றார் அவர். உடனே கொதிக்கும் நீரில் தூக்கி போட்டான். கை வேறு கால் வேறு என உடலின் அத்துணை அங்கங்களும் பிரிந்து போனது. இதைக் கண்ணுற்ற அப்துல்லாஹ் (ரலி) அப்படியே கதறுகின்றார்கள்.

மீண்டும் இன்னொரு முஸ்லிம் கொண்டு வரப்பட்டு அது போன்றே கொடூரமாக கொலை செய்யப்படுகின்றார்.

மீண்டும் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் முன் வந்த அரசன் அடுத்து நீ தான் என்ன சொல்கின்றாய்? மதம் மாறுகின்றாயா? இல்லையா? என்று கேட்டான்.

அவர்கள் மறுக்கவே, தலை கீழாக கட்டப்பட்டு கொதிக்கும் நீரின் மேலாக தொங்க விடப்படுகின்றார்கள். ஒரு கட்டத்தில் தேம்பி தேம்பி அழுகின்றார்கள்.

இந்த செய்தி அரசனுக்கு தெரிவிக்கப்பட்டு, அரசன் அவர்களை அவிழ்த்து விடச் சொல்லி அருகில் அழைத்து அழுததின் காரணம் என்ன என்று கேட்டான்.

நான் ஒன்றும் நீ ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த தண்டனையைக் கண்டு அஞ்சி நடுங்கி அழவில்லை. மாறாக, என்னிடம் சன்மார்க்கத்திற்காக கொடுப்பதற்கு இந்த உயிரைத் தவிர வேறு உயிரை என்னுள் அல்லாஹ் படைக்கவில்லையே என்று தான்.

அல்லாஹ் மாத்திரம் என் தலைமுடியின் அளவுக்கு உயிர் கொடுத்திருப்பானேயானால் அவையனைத்தையும் சத்திய மார்க்கத்திற்கு சன்மானமாக வழங்கியிருப்பேனே! என்று நினைத்து தான் நான் அழுகின்றேன் என்றார்கள்.

இதுவரை மரணத்தின் விளிம்பில் நிற்கிற எத்தனையோ மனிதர்களின் கெஞ்சல்களை கேட்டுப் பழகிய அரசனுக்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் இந்த அணுகுமுறை புதிதாகத் தோன்றியது.

அப்படியே ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்ற அரசன் அவரை விடுவிக்க ஆணை பிறப்பித்தான். அருகில் அழைத்த அரசன்எனது நெற்றியில் முத்தமிடும்! உம்மை விடுதலை செய்கின்றேன்! நீர் கிறிஸ்துவனாக மதம் மாறிவிடு! உமக்கு எனது மகளை திருமணம் செய்து தருகின்றேன். எனது ஆட்சியில் பாதி நிலப்பரப்பை ஆளும் அதிகாரத்தைத் தருகின்றேன்என்றான். 

ஒரு போதும் நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று கூறினார். அதற்கு அந்த அரசன்என் நெற்றியில் முத்தமிட்டால் நான் உம்மையும் உம்மோடு சிறை பிடித்திருக்கிற 80 நபர்களை விடுதலை செய்து விடுகின்றேன்என்று கூறினான்.

அதற்கு, அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபத்துஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள் அப்படி என்றால் உலகில் நீ தான் மிகச் சிறந்த மனிதன் இப்போதே உம் நெற்றியின் மீது முத்தமிடுகின்றேன்என்று கூறி முத்தமிட்டார்கள்.

சக தோழர்களை விடுவித்த மகிழ்ச்சியில் மதீனா நோக்கி வந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபத்துஸ் ஸஹ்மீ (ரலி) அவர்களை மதீனாவின் எல்லையில் பெரும் கூட்டத்தோடு வந்து நின்று வரவேற்றார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.

சுற்றியிருந்த மக்களில் சிலர் “உயிருக்கு பயந்து எதிரியின் நெற்றியில் முத்தமிட்டு வந்த கோழை” என்பதாக விமர்சித்து அப்துல்லாஹ் (ரலி) அவர்களை கேலி பேசினர்.

உடனே, உமர் (ரலி) அவர்கள் “அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) அவர்களின் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு சுற்றியிருந்த மக்களை நோக்கி “அவர் கொடுத்த ஒரு முத்தம் தான் 80 முஸ்லிம்களின் உயிரையும், ஈமானையும் காப்பாற்றியுள்ளது” என்று கூறினார்கள்.

கொடூரமாக கொலை செய்ய வேண்டும் என்கிற வெறியில், முஸ்லிம்களை கொன்று அவமானப்படுத்த வேண்டும் என்கிற ஆணவத்தில் இருந்த ரோம் அரசனுக்கு ஈமானின் வலிமையையும், முஸ்லிம்களின் உயிருக்கு உண்டான மரியாதையையும், கண்ணியத்தையும் இதை விட அழுத்தமாக உணர்த்த முடியாது என்பதை மிக அழகாகவே தங்களின் செயல்பாட்டால் நிரூபித்தார்கள் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள்.
                                                    (நூல்: உஸ்துல் ஃகாபா)

وفي تلك الموقعة بالذات موقعة اليرموك، وبعد أن أخذ جيشه مواقعه، دعا نساء المسلمين، ولأول مرّة سلّمهن السيوف، وأمرهن، بالوقوف وراء صفوف المسلمين من كل جانب وقال لهن:
" من يولّي هاربا فاقتلنه"..

யர்மூக் யுத்தத்தின் முதலாம் நாள் அணிவகுப்பை படையின் தளபதி காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் பார்வையிட்டு சரி செய்து கொண்டு வருகின்றார்கள்.

இறுதியாக, செவிலியர்களாக, பணிவிடைபுரிவதற்காக முஸ்லிம் படையினருடன் வந்திருந்த தாய்மார்களின் கைகளில் வாள்களைக் கொடுத்து “முஸ்லிம் படையினர் யாராவது புறமுதுகிட்டு ஓடினால் அவர்களை நீங்கள் கொன்று விடுங்கள்” என்று கூறி முஸ்லிம் படையினரின் அணிவகுப்பின் இறுதி வரிசையில் நாலாபுறமும் சுற்றி நிற்குமாறு ஆணையிட்டார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக யர்மூக்கில் தான் இந்த அதிசயமும் நடைபெற்றது.

எல்லாவற்றையும் சரி செய்து விட்டு அணிவகுப்பின் முதல் வரிசையில் கம்பீரமாக வந்து நின்றார் தளபதி காலித் இப்னு வலீத் (ரலி).

وقال ماهان قائد الروم يخاطب خالدا"
" قد علمنا أنه لم يخرجكم من بلادكم الا الجوع والجهد..
فان شئتم، أعطيت كل واحد منكم عشرة دنانير، وكسوة، وطعاما، وترجعون الى بلادكم، وفي العام القادم أبعث اليكم بمثلها".!!
وضغط خالد الرجل والبطل على أسنانه، وأدرك ما في كلمات قائد الروم من سوء الأدب..
وقرر أن يردذ عليه بجواب مناسب، فقال له:
" انه لم يخرجنا من بلادنا الجوع كما ذكرت، ولكننا قوم نشرب الدماء، وقد علمت أنه لا دم أشهى وأطيب من دم الروم، فجئنا لذلك"..!!
ولوة البطل زمام جواده عائدا الى صفوف جيشه. ورفع اللواء عاليا مؤذنا بالقتال..
" الله أكبر"
" هبّي رياح الجنة"..


எதிரணியின் தளபதி மாஹான் தூரத்தில் இருந்து இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான் போலும்.

 காலித் (ரலி) அவர்கள் வந்து நின்றதும் ”ஓ! காலிதே! ஓ முஸ்லிம்களே! நீங்கள் பஞ்சத்தாலும், பசியாலும் பீடித்திருக்க வேண்டும் ஆதலால் தான் வல்லரசு ரோமை எதிர்த்து போராடி எங்கள் வளங்களை அள்ளிச் செல்லலாம் என இங்கு வந்திருக்கின்றீர்கள்”

வேண்டுமானால் நபர் ஒருவருக்கு 10 தீனாரும், உடுத்த உயர் ரக ஆடையும், உண்ண அறுசுவை உணவும் தருகின்றோம். வாங்கிக்கொண்டு ஊரைப் பார்த்து ஓடி விடுங்கள்.

அடுத்த ஆண்டு இது போன்று வாளேந்தி வந்து எங்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்களே உங்களுக்கு இது போன்று உங்கள் ஊருக்கே அனுப்பித் தருகின்றோம். ஒழுங்காக ஊரைப் பார்த்து ஓடி விடுங்கள்” என்று ஏளனமாக விமர்சித்தான்.

 خالد بن الوليد - لا ينام ولا يترك أحدا ينام

காலித் (ரலி) அவர்களுக்கு இப்படியும் ஒரு பெயர் உண்டுஇஸ்லாம் வெற்றி கொள்ளும் வரை அவர் உறங்க மாட்டார், இஸ்லாத்தை வெற்றி கொள்ள நினைப்பவர்களின் கண்களையும் அவர் உறங்க விட மாட்டார்

காலித் (ரலி) அவர்களின் வாள் முனைக்கு எவ்வளவு கூர்மை உண்டோ அது போன்றே அவர்களின் வார்த்தைக்கும் கூர்மை அதிகம் எதிரிகளின் நெஞ்சுக்கூட்டை உருக்குச் சட்டையைக் கடந்து துளைக்கும் ஆற்றல் பொருந்தியது.

காலித் (ரலி) அவர்கள் ரோமப் படையின் தளபதி மாஹானை நோக்கி நெஞ்சுயர்த்தியவர்களாக ரோமத் தளபதியே! நீ சொல்வது போன்று நாங்கள் பசியாலோ, பஞ்சத்தாலோ பீடிக்கப்பட்டு இங்கு வந்து நிற்க வில்லை.

நாங்கள் உதிரத்தை உறிஞ்சிப்பார்க்கும் கூட்டம். நாங்கள் ரோமர்களின் உதிரம் மிகவும் ருசியாக இருக்கும் என்று கேள்விப்பட்டு, உங்களின் உதிரங்களைக் குடிக்க குழுமியிருக்கின்றோம்.” அதையும் நீர் பார்க்கத்தான் போகிறீர் என்று கர்ஜித்தார்கள்.

உடனடியாக, முஸ்லிம் படையினரை நோக்கி திரும்பிய காலித் (ரலி) “கையில் இருக்கும் இஸ்லாமிய கொடியை உயர்த்தியவர்களாக  அல்லாஹு அக்பர்சுவர்க்கத்தை நோக்கி முன்னேருங்கள்!” என்று கூறினார்கள்.

                        (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்: 297)

அல்லாஹு அக்பர்! அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றியை நல்கினான்.

நம்மை நாம் உணர்கிற போதும், நம் வலிமையை நாம் உணர்த்துகிற போதும் அவமானங்களும், கேவலங்களும் நிரந்தரமல்ல என்பதை நாம் உணர முடியும்.

மேற்கூறிய வரலாற்று நிகழ்வுகள் அதைத்தான் நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.

முழுமையாக முயற்சிப்பதும்உழைப்பதும்….

இப்போது நாம் தலைப்பின் உள்ளே நுழைவோம்.

 எதிரிகளை நாம் எதிர் கொள்ள வேண்டும் என முடிவெடுத்து விட்டால் எதிரிகள் எந்தெந்த விதத்திலெல்லாம் நம்மை நெருங்குகின்றார்களோ, அதே வழிகளை கையாள வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.

وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِنْ دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ

அல்லாஹ் கூறுகின்றான்: “அவர்களை எதிர்ப்பதெற்கென நீங்கள் தயாராகி விட்டீர்களென்றால் முடிந்த அளவு எல்லா ஆற்றல்களையும் தயார் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மேலும், குதிரைப் படைகளையும் திரட்டிவையுங்கள்.

இவற்றின் மூலம் அல்லாஹ்வுக்கும், உங்களுக்கும் பகைவர்களாய் உள்ளவர்களையும் இவர்கள் அல்லாத வேறு பகைவர்களையும் நீங்கள் திகிலடையச் செய்திட வேண்டும்.”                                            

                                                          (அல்குர்ஆன்:8:60)

சமீப காலமாக உலகெங்கிலும் இஸ்லாத்திற்கெதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் ஊடகங்கள் (BIAS) ஒரு பக்க சார்புடன் நடந்து கொள்வதையும், எதிர்மறையாக செய்திகளை வெளியிட்டு சர்வதேச அளவில் உலக அமைதிக்கு எதிரானவர்களாகவும், இந்திய அளவில் தேச விரோதிகளாகவும் சித்தரித்து வருகின்றது.

அடிப்படைக் காரணம் இது தான் ஊடகத்துறையில் முஸ்லிம்கள் தங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்த தவறிவிட்டனர்.

உலக அளவில் வெகுஜன மக்களை சென்றடைகிற வகையில் முஸ்லிம்களுக்கென தனியாக தரமான பத்திரிக்கைகள் இல்லை.

அல் ஜஸீரா வைத் தவிர்த்து தொலைக்காட்சி ஊடகம் இல்லை.

தேசிய அளவில் தின, வார, மாத வாரமிருமுறை, மாதமிருமுறை, என 82237 பத்திரிக்கைகள் உள்ளன. அவற்றில் 4853 பத்திரிக்கைகள் முறையாக பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

இந்தியாவில் வெளியாகும் 750 ஆங்கில பத்திரிக்கைகளில் ஒன்று மட்டுமே முஸ்லிம்களுக்கு உரியது.

இந்தியாவில் வெளியாகும் 760 இதர மொழிப் பத்திரிக்கைகளில் நூற்றி சொச்சம் பத்திரிக்கைகள் மட்டுமே முஸ்லிம்களுக்கு உரியது.

மலையாளத்தில் மட்டும் நூற்றுக்கும் குறையாத முஸ்லிம் பத்திரிக்கைகள் அனைத்து சமூக வாசகர்களைக் கொண்டுள்ளது.

இன்னும் சொல்லப் போனால் தேசியத் தரம் வாய்ந்த ஒரு பத்திரிக்கையோ, மாத இதழோ இல்லை.

தமிழ் மொழியிலே ஏராளமான முஸ்லிம் பத்திரிக்கைகள் இருந்த போதிலும், இங்கே தப்லீக் ஆதரவுதரீக்கத் எதிர்ப்பு என்று சிலதும், சுன்னீவஹ்ஹாபீ ஆதரவு எதிர்ப்பு என்று சிலதும் தங்களின் இயக்க பெருமைகளை தம்பட்டம் அடிக்க, எதிர் இயக்கத்தார்களை விமர்சிக்க சிலதும் வெளிவந்து நமது பெருமைகளை நாற்றமடிக்க வைத்துள்ளது என்பது தான் முற்றிலும் உண்மை.

என்ற போதிலும், சமநிலைச் சமுதாயம், வைகறை வெளிச்சம், விடியல் வெள்ளி, சமரசம் போன்ற பத்திரிக்கைகள் மாத்திரமே முஸ்லிம்களின் உள்ளக் குமுறல்களை அரசின் பக்கமும் சகோதர சமய மக்களின் கவனத்திற்கும் கொண்டு செல்கின்றன.

பத்திரிக்கைகளில் முஸ்லிம்கள் சார்பாக வாதாடுவதற்கு உரிய ஆற்றலும், ஆளுமையும் உள்ளவர்கள் அதிகமாக இருந்தும் கவனம் செலுத்தாததும், முன்வராததும் தான் முஸ்லிம்களின் அவமானத்திற்கு காரணம்.

அடுத்து காணொளி ஊடகத்தில் முஸ்லிம்களின் நிலை மிகவும் அவமானகரமானது. 14 விழுக்காடு கொண்ட ஓர் சமூகத்திற்கு தேசிய அளவில் ஊடகத்துறையில் உள்ள பிரதிநிதித்துவம் வெறும் 3 விழுக்காடு மட்டுமே.
அதே இந்தி சேனல்களில் முஸ்லிம்கள் 6 விழுக்காடு மட்டுமே உள்ளனர்.

ஆனால், மொத்த இந்திய மக்கள் தொகையில் 16 விழுக்காடு கொண்ட உயர் சாதியினர் 88 விழுக்காடு ஊடகங்களில் உயர் பதவியில் அமர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இப்போது தெரிகின்றதா? கெஜ்ரிவால் எப்படி டில்லியின் முதல்வரானார். அண்ணா ஹஸாரே எப்படி பிரபல்யமானார். பாபா ராம் தேவ் எப்படி அரசியலில் களம் கண்டார் என்று.

ஆனால், இவர்கள் பிரபல்யமாகுவதற்கு காரணமான அதே ராம் லீலா மைதானத்தில் தான் இட ஒதுக்கீடு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால் எடுத்துச் சென்று மக்களுக்கு முன்னால் சொல்லிட ஒரு நாதியில்லை.

அடுத்து (facebook) முகநூலில் தடம் பதித்துள்ளவர்கள் உலகம் முழுவதிலும் உள்ளவர்களை ஒரே நொடியில் காண வைப்பதற்கான அரிய சாதனம்.

முஸ்லிம்களில் 250 மில்லியன் பேர் முக நூலைப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் 50 மில்லியன் முஸ்லிம்களில் ஒருவருக்கு பல அக்கவுண்ட்கள் இருப்பதாகவும் தவறான ஐடிக்களில் இவர்கள் வலம் வருவதாகவும் சைபர் க்ரைம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சரி இதிலாவது இவர்கள் சாதிக்கின்றார்களா? என்றால் ஆபாசம், அசிங்கம், அநாகரீகம் என பல்வேறு தகாத செயல்களுக்கு பல பேர் இதைப் பயன்படுத்துகின்றார்கள்.

அடுத்து லட்சத்திற்கும் மேற்பட்ட (Blog) வலைப்பூக்களில் சில ஆயிரம் பிளாக் குகள் முஸ்லிம்களுக்கு உரியவைகள்.

ஆயிரத்திற்கும் குறைவான பிளாக்குகள் மட்டும் தான் முஸ்லிம்களின் நிலை குறித்து விவாதிக்கின்றன. ஆனாலும் அது எல்லா மக்களையும் சென்று முழுமையாச் சென்றடைகின்றது என்று சொல்லிவிட முடியாது.

அதிலும் குறிப்பாக இன்றைய ஆலிம்களில் பல பேர் பிளாக்குகள் ஆரம்பித்து முஸ்லிம் சமூகத்தை விழிப்படையச் செய்யும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

3 லட்சம் பார்வையாளர்களை நெருங்கிவிட்ட கோவை. அப்துல் அஜீஸ் பாக்கவி அவர்களின் வெள்ளிமேடை, 2 லட்சம் பார்வையாளர்களை நெருங்கி விட்ட அபூபக்கர் உஸ்மானி அவர்களால் தொடங்கப்பட்டு, தற்போது கம்பம் ஹயாத் உஸ்மானி, மற்றும் மேலை, காஜா ஹுஸைன் உஸ்மானி ஆகியோர்களால் கையாளப்படும் உஸ்மானிகள் ஆன்லைன், சதக் மஸ்லஹி அவர்களின் வெள்ளி மேடை பல்சுவை, பிலாலியாக்களின் வெள்ளியரங்கம், இளம் எழுத்தாளர், அபுல் ஹஸன் ஃபாஸி அவர்களின் வெள்ளிமேடை நியூ, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாவின் உலமா.இன், திண்டுக்கல் அப்துர்ரஹ்மான் யூஸுஃபி அவர்களின் டி.ஜி.எல் (திண்டுக்கல்) யூஸுஃபிகள்.காம் என்று நீண்ட பட்டியல் இருக்கின்றது.

ஆனாலும், பன்முகத்தன்மையையும், முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்தான தொலை நோக்குப் பார்வையையும், இந்த பிளாக்குகளில் கையாளப்பட வேண்டும்.

 ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தாண்டி அனைத்து சமூக மக்களின் கவனத்தையும் ஈர்க்கச் செய்திடும் வகையில் எதிர்காலத்தில் இந்த வலைப் பூக்கள் சாதிக்க வேண்டும். என்பது தான் நம்முடைய ஆவலும் ஆசையும் கூட.

ஊடகத்துறைக்கும், ஊடகவியலாளர்களுக்கு முன் மாதிரி யார்?

இன்றைய முஸ்லிம் சமூகத்தில் ஒட்டு மொத்தமாக ஊடகத்தைப் புறக்கணிக்கிற மக்களும், ஒட்டு மொத்தமாக ஆதரவு தருகிற மக்களும் இருக்கின்றனர்.

தற்காலத்தில் வளர்ச்சியின் உச்சியில் இருக்கின்ற தொடர்பு சாதனங்களை நன் நோக்கங்களுக்காக பயன் படுத்த முஸ்லிம்கள் முன் வரவேண்டும்.

முதல் ஊடகம் குர்ஆன்

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்காவில் ஏகத்துவ பிரச்சாரத்தை துவக்கிய காலகட்டத்தில் சிந்தனை ரீதியிலான ஒரு போராட்டத்தையும் கையில் எடுத்திருந்தனர் மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள்.

அதன் ஒரு வெளிப்பாடாககுர்ஆனை காது கொடுத்து கேட்காதீர்கள். அவ்வாறு உங்கள் முன் ஓதிக் காட்டப்படுகிற போது அதில் ஈடுபாடு கொள்ளாமல் வேறு விஷயங்களில் மனதை ஈடுபடுத்துங்கள்என்று பிரச்சாரம் செய்தனர்.

மனிதனை மனிதனாக உணர்த்துகிற ஆற்றல் கொண்ட உண்மையான ஊடகம் அல்குர்ஆன் தான் என்பதை அவர்கள் விளங்கியதன் காரணத்தால் அவர்கள் குர்ஆன் வசனங்களை கேட்பதற்கு தடை விதித்தனர்.

وقيل: نزلت في النضر بن الحارث،
كان يشتري المغنيات فلا يظفر بأحد يريد الإسلام إلا انطلق به إلى قينته فيقول: أطعميه واسقيه وغنية، ويقول: هذا خير مما يدعوك إليه محمد من الصلاة والصيام وأن تقاتل بين يديه.
இதன் வெளிப்பாடாக, நள்ர் இப்னு ஹாரிஸ் என்பவர் ஒரு பாடகியை விலை கொடுத்து வாங்கினார்.

இஸ்லாத்தை தழுவ விருப்பம்  கொண்டிருப்பவர்களை அழைத்துக் கொண்டுவந்து அந்த பாடகியின் முன் கொண்டு வந்து நிறுத்திஇதோ! இவருக்கு நன்றாக உணவு கொடு! தண்ணீர் கொடு, பாடல் இசைத்து பரவசப்படுத்து! என்று கூறுவார்.

அப்பாடகியும் உணவு கொடுத்து, தண்ணீரும் கொடுத்து பாடலை ரசித்து கேட்டுக் கொண்டிருக்கும் அந்நேரத்தில் அந்த மனிதரை அணுகிமனிதா! உம்மை முஹம்மது தொழுகை, நோன்பு வீரமரணம், போராட்டம் என்பனவற்றில் பங்கு கொள்ள அழைக்கிறாரே அதை விட இந்த வாழ்க்கை உமக்கு சிறப்பானதல்லவா?” என்று கூறி திசை திருப்புவாள்.

وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ

இந்த காலச் சூழலில்தான்,  மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். பின்னர் அவர்கள் எவ்வித அறிவுமின்றி மக்களை அல்லாஹ்வின் வழியை விட்டும் பிறழச் செய்வதற்காகவும், அந்த வழியில் வருமாறு விடுக்கப்படும் அழைப்பை ஏளனம் செய்வதற்காகவும் தான் இப்படிச் செய்கின்றார்கள். இத்தகையோருக்கு இழிவு படுத்தும் வேதனை உண்டு.”  எனும் இறைவசனத்தை அல்லாஹ் இறக்கியருளினான்.

                                               (நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ)

இன்றைக்கு எந்த நடைமுறையை ஊடகங்கள் கையில் எடுத்திருக்கின்றனவோ அதே நடைமுறையை அன்றைய காஃபிர்கள் நேரிடையாக பெண்களைக் கொண்டு கையாண்டு இருக்கின்றார்கள்.

அன்று பாடகி என்றால் இன்று, அழகிகள், விளையாட்டு வீரர்கள் நடிகர்கள் என பல பிரிவுகளில், கலை இலக்கியம் பண்பாடு எனும் வடிவங்களில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதை கூர் நோக்கோடு கவனிக்க கடமை பட்டிருக்கின்றோம்.

குறுக்கு வழிகளை இறைவிரோதிகள் தேர்ந்தெடுத்து சத்திய வழியிலிருந்து மக்களை தடுத்த போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒன்றும் சும்மா இருந்திட வில்லை.

அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சகல ஊடகங்களையும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கையாண்டார்கள்.

அசத்தியத்தின் போலித்தன்மையை தோலுரித்துக்காட்டி சத்தியத்தின் மேன்மையை மக்களுக்கு புரிய வைக்க அரும்பாடு பட்டார்கள்.

صعد النبي صلى الله عليه وسلم ذات يوم على الصفا، فعلا أعلاها حجرًا، ثم هتف : ( يا صباحاه )
وكانت كلمة إنذار تخبر عن هجوم جيش أو وقوع أمر عظيم .
ثم جعل ينادى بطون قريش، ويدعوهم قبائل قبائل : ( يا بني فهر، يا بني عدى، يا بني فلان، يا بني فلان، يا بني عبد مناف، يا بني عبد المطلب ) .
فلما سمعوا قالوا : من هذا الذي يهتف ؟ قالوا : محمد . فأسرع الناس إليه، حتى إن الرجل إذا لم يستطع أن يخرج إليه أرسل رسولًا لينظر ما هو، فجاء أبو لهب وقريش .
فلما اجتمعوا قال : ( أرأيتكم لو أخبرتكم أن خيلًا بالوادى بسَفْح هذا الجبل تريد أن تغير عليكم أكنتم مُصَدِّقِىَّ ؟ ) .
قالوا : نعم، ما جربنا عليك كذبًا، ما جربنا عليك إلا صدقًا .
قال : ( إنى نذير لكم بين يدى عذاب شديد، إنما مثلى ومثلكم كمثل رجل رأي العَدُوّ فانطلق يَرْبَأ أهله ) ( أي يتطلع وينظر لهم من مكان مرتفع لئلا يدهمهم العدو ) ( خشى أن يسبقوه فجعل ينادى : يا صباحاه )
ثم دعاهم إلى الحق، وأنذرهم من عذاب الله، فخص وعم فقال :
( يا معشر قريش، اشتروا أنفسكم من الله، أنقذوا أنفسكم من النار، فإنى لا أملك لكم من الله ضرًا ولا نفعًا، ولا أغنى عنكم من الله شيئًا .
يا بني كعب بن لؤى، أنقذوا أنفسكم من النار، فإني لا أملك لكم ضرًا ولا نفعًا .
يا بني مرة بن كعب، أنقذوا أنفسكم من النار .
يا معشر بني قصى، أنقذوا أنفسكم من النار، فإنى لا أملك لكم ضرًا ولا نفعًا .
يا معشر بني عبد مناف، أنقذوا أنفسكم من النار، فإنى لا أملك لكم من الله ضرًا ولا نفعًا، ولا أغنى عنكم من الله شيئًا .
يا بني عبد شمس، أنقذوا أنفسكم من النار .
يا بني هاشم، أنقذوا أنفسكم من النار .
يا معشر بني عبد المطلب، أنقذوا أنفسكم من النار، فإنى لا أملك لكم ضرًا ولا نفعًا، ولا أغنى عنكم من الله شيئًا، سلونى من مالى ماشئتم، لا أملك لكم من الله شيئًا .
يا عباس بن عبد المطلب، لا أغنى عنك من الله شيئًا .
يا صفية بنت عبد المطلب عمة رسول الله، لا أغنى عنك من الله شيئًا .
يا فاطمة بنت محمد رسول الله، سلينى ما شئت من مالى، أنقذى نفسك من النار، فإنى لا أملك لك ضرًا ولا نفعًا، ولا أغنى عنك من الله شيئًا .
غير أن لكم رحمًا سأبُلُّها بِبلاَلها ) أي أصلها حسب حقها .


அன்றொரு நாள் ஸஃபா மலையின் மீதிருந்து யா ஸபாஹா! யா ஸபாஹா! என்றொரு எச்சரிக்கைக் குரல் மக்காவின் வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது.

குரல் வந்த திசை நோக்கி மக்கள் வெள்ளம் ஓடியது. ஆம் தூரத்தில் ஒரு உருவம் இன்னும் சப்தமாக அழைத்துக் கொண்டிருந்தது. யாராக இருக்கும் என்கிற ஒரு வித பதட்டத்தோடு மக்கள் அணிவகுத்து நிற்க அங்கே அண்ணலார் {ஸல்} அவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள்.

மக்களே! இம்மலைக்குப் பின்னால் இருக்கிற கண்வாயில் உங்களைத் தாக்குவதற்காக குதிரை வீரர்கள் கத்திருக்கின்றார்கள் என்று நான் கூறினால் நீங்கள் அதை நம்புவீர்களா?” என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.

அலைகடலென திரண்டிருந்த அரபுலக அம்மக்கள் திரள் உரத்த குரலில்ஆம்! உங்களை நம்புவோம்! உங்களை உண்மையாளராக நாங்கள் கருதுகின்றோம்! நீங்கள் பொய்யுரைத்து நாங்கள் ஒரு போதும் கேட்டதில்லை! பார்த்ததில்லை!” என்றார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள்மிகக் கடுமையான வேதனை வரும்முன் நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கின்றேன்! அல்லாஹ்விடமிருந்து உங்களின் ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்! திட்டவட்டமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாளியாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனையும் அளிக்க முடியாதுஎன்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்து சத்தியத்தின் பால் அழைப்பு கொடுத்தார்கள்.

                                                (நூல்: ரஹீக் அல் மஃக்தூம்,)

இப்னு இஸ்ஹாக் {ரஹ்} போன்ற வரலாற்று ஆசிரியர்கள் இச்சம்பவத்திற்கு விளக்கம் தருகிற போது, “அறியாமைக் காலத்தில் அரபிகள் முக்கியமான ஓர் அறிவிப்பை எல்லா மக்களையும் அது சென்றடைய வேண்டுமானால் உயரமான ஓரிடத்தில் ஒருவரை ஏறச் செய்து தனது ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்று கொண்டு மக்களை உரத்த குரலால் அழைக்கச் செய்து மக்கள் ஒன்று கூடியதும் அந்த அறிவிப்பை பிரகடனப்படுத்துவார்கள்.

 இங்கே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இதே முறையை சிற்சில மாறுதல்களுடன் மலையில் நின்று அழைத்தார்கள். ஆனால் நிர்வாணமாக நிற்க வில்லை. மக்கள் வந்து செவிமடுத்தார்கள்.

பிறர்களின் பிரச்சார யுக்திகளை அதன் தீய சக்திகளை அகற்றி விட்டு முழுக்க முழுக்க நல்லவைகளை கையாண்டு பயன் படுத்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முன் மாதிரியை உருவாக்கிச் சென்றிருக்கின்றார்கள்.

இன்னும் நபிகளாரை இடித்துரைத்து இறை நிராகரிப்பாளர்கள் கவி புனைந்து வசை பாடிய போது அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, ஹஸ்ஸான் இப்னு ஸாபித், கஅப் இப்னு மாலிக் (ரலிஅன்ஹும்) ஆகியோரை கவி படிக்குமாறு ஏவியிருக்கின்றார்கள்.

யுத்த களங்களில் எதிரிகள் கையாள்கிற தந்திரங்களை அண்ணலாரும் கையாண்டு இருக்கின்றார்கள். அதற்கு அஹ்ஸாப் யுத்தத்தில் நுஐம் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பயன் படுத்தி வெற்றியை எளிதில் வசப்படுத்திய வனப்பான வரலாறு நமக்கு முன்மாதிரி.

ஆகவே, நம்மை நாம் முதலில் உணர்வோம்! நம் வலிமையை நாம் உணர்த்துவோம்! இறைவனின் மேலான வழிகாட்டுதலின் அடிப்படையிலும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் உயர்வான முன்மாதிரியின் ஒளியிலும் ஊடகத்தின் வாயிலாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் உய்விக்கச் செய்வோம்!

நமது கண்ணியத்தையும், மரியாதையையும் ஸ்திரப்படுத்துவோம்!

அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

                        வஸ்ஸலாம்!!