Thursday 8 January 2015

அண்ணல் நபி {ஸல்} அவர்களின் ஆளுமைத்திறன்!



அண்ணல் நபி {ஸல்} அவர்களின் ஆளுமைத்திறன்!



உலகம் பல்வேறு வகையான தலைவர்களைக் கண்டிருக்கிறது. எனினும், சில தலைவர்களின் வாழ்க்கையும் வார்த்தைகளும் மட்டுமே மனித சமூகத்தில் வியக்கத்தக்க மாற்றங்களையும், ஏற்றங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

காலப்போக்கில் அவர்களின் வார்த்தைகளும், வாழ்க்கைப் போங்குகளும் மனித சமூகத்தின் மனங்களில் இருந்தும் காணாமல் போயும் இருக்கிறது.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வார்த்தைகளும், வாழ்க்கைப் போங்குகளும் இன்றளவிலும் எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாமல் 200 கோடிக்கும் மேலான முஸ்லிம்களால் பேணப்பட்டு வருவதே அடிப்படை அம்சமாகும்.

How Muhammad {sal} touched their Hearts? முஹம்மது {ஸல்} அவர்கள் மட்டும் மனித குல வரலாற்றில் மனித மனங்களை வென்றெடுத்து, பன்னெடுங்காலமாய் ஆதிக்கம் செலுத்துவது எப்படி? எனும் கேள்வியோடு அண்ணல் நபி {ஸல்} அவர்களின் வாழ்க்கைப் பதிவுகளை ஆராய்ந்து பார்த்தோமேயானால் அங்கே அண்ணலாரின் ஆளுமைத்திறன் தான் இதற்கான அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றது என்பதை நம்மால் எளிதாக விளங்க முடியும்.

ஏனெனில், உலகத்தின் வேறெந்த தலைவர்களிடத்திலும் ஆளுமைத்திறன் என்பது அதற்கான ஒழுங்குகளோடும், முழுத்தகுதியோடும் இடம் பெற்றிருக்க வில்லை.

தத்துவத்துறையின் தலைவர், மைசூர் மகளிர் பல்கலைகழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் ராமகிருஷ்ண ராவ் அவர்கள் அண்ணலாரின் வாழ்க்கைப் பதிவுகளை வாசித்து, ஆராய்ந்து பார்த்து ”Mohammed: The Prophet of Islam” எனும் நூலை எழுதினார். அதில் ஓரிடத்தில்

"The personality of Muhammad, it is most difficult to get into the whole truth of it. Only a glimpse of it I can catch. What a dramatic succession of picturesque scenes. There is Muhammad the Prophet. There is Muhammad the Warrior; Muhammad the Businessman; Muhammad the Statesman; Muhammad the Orator; Muhammad the Reformer; Muhammad the Refuge of Orphans; Muhammad the Protector of Slaves; Muhammad the Emancipator of Women; Muhammad the Judge; Muhammad the Saint. All in all these magnificent roles, in all these departments of human activities, he is alike a hero."
( நூல்: K. S. Ramakrishna Rao in his book 'Mohammed: The Prophet of Islam' writes)

இறைத்தூதர் முஹம்மது {ஸல்} அவர்களின்ஆளுமைத்திறனின் முழுப் பரிமாணத்தை விளங்கிக் கொள்வதென்பது மிகவும் சிரமமான ஒன்று தான்.

ஏனெனில், மனித சமூகம் தங்களின் மனங்களில் வெறும் கற்பனைக் கதாபாத்திரங்களாக சித்தரித்து வைத்திருந்த பெரும்பாலானவற்றிற்கு உண்மையான, உயிரோட்டமான ஓர் உருவகத்தைக் கொடுத்து, மனித சமூகத்தின் பயன் மிக்க அத்துனைத் துறைகளிலும் வலம் வந்து, அசாத்தியமான ஓர் முன்மாதிரியை ஏற்படுத்தி, மிகப் பெரிய அளவிலான தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கின்றார்.

அவரின் வாழ்க்கைப் பதிவுகளைப் பார்வையிடுகின்ற, வாசிக்கின்ற, ஆராய்கின்ற ஓருவர் இறுதியாக ஓர் முடிவுக்கு வருவார்.

அந்த முடிவு இது தான் முஹம்மது {ஸல்} அவர்கள் தான் மனித சமூகத்திற்கான கதாநாயகர்இறுதியாக நானும் அந்த முடிவுக்குத் தான் வந்தேன்.

என்ன ஓர் ஆச்சர்யம்! ”அவர் இறைத்தூதராக இருக்கின்றார். அவர் ஓர் படை வீரராக பரிணமிக்கின்றார். அவர் ஓர் தொழிலதிபராக மிளிர்கின்றார். அவர் ஓர் போதகராக ஜொலிக்கின்றார். அவர் ஓர் ராஜதந்திரியாக காட்சி தருகின்றார். அவர் ஓர் சீர்திருத்தவாதியாக வலம் வருகின்றார். அவர் ஓர் அகதிகளின் அடைக்கலமாகத் திகழ்கின்றார். அவர் ஓர் பெண்ணின விடுதலையின் போராளியாக ஒளிர்கின்றார். அவர் ஓர் அடிமைகளின் விலங்கொடிக்கும் வீரராய் தோன்றுகின்றார். அவர் ஓர் நீதிபதியாக வீற்றிருக்கின்றார். இத்தனைக்கும் மேலாக அவர் ஓர் புண்ணிய சீலராக, புருஷராக அலங்கரிக்கின்றார்.”

( நூல்: K. S. Ramakrishna Rao in his book 'Mohammed: The Prophet of Islam' writes…)

ஆளுமைத்திறன் என்பதற்கு அறிஞர் பெருமக்கள் பல்வேறு விதமான பொருள்களை, விளக்கங்களைத் தந்திருக்கின்றார்கள்.

அதில் ஒன்று, தனது கருத்துக்களை கொள்கைகளை முன் வைத்து மக்களுக்கு மத்தியில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது.

இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற ஆளுமைத் திறன் பெற்றவராக இருக்க வேண்டுமானால் அவரிடம் ஐந்து வகையான வளங்கள், பண்புகள் நிறைவாகப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள்.


1. அறிவு சார்ந்த ஆளுமை (Intellectual personality)
2.
ஆன்மீகம் சார்ந்த ஆளுமை (Spiritual personality)
3.
உளம் சார்ந்த ஆளுமை  (Emotional personality)
4. உடல் சார்ந்த ஆளுமை  ( Physical personality)
5.
ஒழுக்கம் சார்ந்த ஆளுமை (ethical personality)

இந்த ஐந்து வகையான வளங்களிலும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முழுமைப் பெற்றவராக இருக்கின்றார்கள்.

ஆகவே தான் உலக வரலாற்று ஆசிரியர்கள் அண்ணலாரின் வாழ்க்கையை வியந்து போற்றுகின்றார்கள்.

1. அண்ணலாரின் {ஸல்} அறிவு சார்ந்த ஆளுமை (Intellectual personality)
1. அறிஞர்களின் அறிவுத்திறனும்அண்ணலாரின் அறிவுத்திறனும்….

மனித சமூகம் குறித்தான கண்ணோட்டத்தில் பல்வேறு அறிஞர்கள் உதிர்த்த வார்த்தைகளும், தத்துவங்களும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

ஆனால், ”அவர்கள் அறிவு ரீதியாக எந்த அளவு மேம்பட்டிருந்தார்கள்?” என்பதை அதை வாசிக்கும் போது நாம் உணர்ந்து கொள்ளலாம்.

”கைட் டூ த காஸஃபி ஆஃப் மாரஸ்மால் புரட்டீஸ்” எனும் நூலில், C.E.M. ஜோன் எனும் அறிஞன் மனிதனைப் பற்றி கூறும் போது

மனிதன் என்பவன் ஒரு தொழிற்சாலைக்கு ஒப்பானவன் ஆவான். ஆரோக்யமான ஒரு மனிதனின் உடலில் 46 லிட்டர் தண்ணீரும், 7 பார் சோப் தயாரிக்கும் அளவு கொலஸ்ட்ரால்கொழுப்பும், 900 பென்ஸில்கள் செய்வதற்குத் தேவையான கார்பன்கரியமிலமும், 2,200 தீக்குச்சிகள் செய்வதற்குத் தேவையான பாஸ்பரஸ்சும், 2 அங்குல நீள ஆணி செய்யும் அளவுக்கு அயர்ன்இரும்புச் சத்தும், கொஞ்சம் கால்சியம், கொஞ்சம் சல்பஸ், கொஞ்சம் மக்னீசியமும் இருக்கின்றது.

மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தமும், அதில் 25 கோடி ரத்த அணுக்களும் இருக்கின்றன.

இவற்றைக் கொண்டு 3000 சதுர மீட்டர் பரப்புள்ள சுவருக்கு பெயிண்ட் அடிப்பது போல பூசி மெழுகலாம். 25 வோல்ட் சக்தி கொண்ட மின்சார பல்பை சில நிமிட நேரம் எரிய வைக்கத் தேவையான மின்சாரமும் உள்ளது.

மனிதன் குரங்கிலிருந்தே தோன்றினான்என்றான் சார்லஸ் டார்வின் எனும் அறிஞன்.

மனிதன் ஒரு மிருகம். உணர்ச்சிகளின் ஒட்டு மொத்த உறைவிடம்என்றான் மெக்டுவல்ஸ் எனும் அறிஞன்.

மனிதன் காம இச்சையின் மொத்த இருப்பிடம்என்றான் சிக்மென் ஃபிராய்ட் எனும் அறிஞன்.

மனிதன் ஒரு பொருளாதார மிருகம்என்றான் காரல் மார்க்ஸ் எனும் அறிஞன்.

                        ( நூல்: மாணவர் ஸ்பெஷல், தினத்தந்தி, 06.03.2006 )

ஆனால், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உலக அரங்கில் மனிதன் என்பவன் மிக உயர்ந்த படைப்பு என்றும், இறைவனின் பிரதிநிதி என்றும் பிரகடனம் செய்தார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدٌ ، ثنا مُحَمَّدُ بْنُ بُكَيْرٍ ، ثنا أَيُّوبُ بْنُ جَابِرٍ ، عَنْ أَبِي حُصَيْنٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
 " النَّاسُ مَعَادِنُ كَمَعَادِنِ الذَّهَبِ وَالْفِضَّةِ , خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الإِسْلامِ إِذَا فَقِهُوا "

ஒரு சந்தர்ப்பத்தில் நபி {ஸல்} அவர்கள் இப்படிக் கூறினார்கள்: “மனிதர்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓர் வளமான ஆற்றல் இருக்கின்றது. அந்த ஆற்றலின் மூலமே அவன் உலகில் அறியப்படுவான். அதுவே அவனுடைய முகவரியும் ஆகும் என்பதை மாநபி {ஸல்} அவர்கள் உணர்த்திக்காட்டினார்கள்.

இந்தப் பிரகடனத்தின் வாயிலாக எல்லா வகையான ஆற்றலும், பண்புகளும், குணங்களும் கொண்ட ஓர் ஒப்பற்ற மனித சமுத்திரத்தை உருவாக்கிக் காட்டினார்கள்.

ஆதலால் தான், உண்மைக்கு ஓர் அபூபக்ர் (ரலி), நீதிக்கு உமர் (ரலி), வீரத்திற்கு ஓர் அலீ (ரலி), ராஜ தந்திரத்திற்கு ஓர் அம்ர் இப்னு ஆஸ் (ரலி), வெற்றித் தலைமைக்கு ஓர் காலித் இப்னு வலீத் (ரலி), இரக்கத்திற்கு ஓர் உஸ்மான் (ரலி), நேர்மைக்கு ஓர் ஸஅத் இப்னு முஆத் (ரலி), என்று பல்வேறு சுரங்கங்களை உம்மத்திற்கு உரியவர்களாக அடையாளப் படுத்தினார்கள்.

மனித சமூகத்திற்கான நிரந்தரமான ஓர் உன்னத முகவரியைத் தந்து, உலக அறிஞர்களின் அறிவுத்திறனில் இருந்து வேறுபட்டு அறிவு வளத்தில் மிகவும் உச்சத்தில் இருக்கின்றார்கள்.

في دار من دور المدينة المباركة جلس عمر رضي الله عنه إلى جماعة من أصحابه فقال لهم " تمنوا .."

فقال أحدهم " أتمنى لو أن هذه الدار مملوءة ذهباً أنفقه في سبيل الله "

ثم قال عمر رضي الله عنه تمنوا ، فقال رجل آخر " أتمنى لو أنها مملوءة لؤلؤاً وزبرجداً وجوهراً أنفقه في سبيل الله وأتصدق به "

ثم قال تمنوا ، فقالوا " ما ندري ما نقول يا أمير المؤمنين ؟ "

فقال عمر رضي الله عنه " ولكني أتمنى رجالاً مثل أبي عبيدة بن الجراح ، ومعاذ بن جبل ، وسالم مولى أبي حذيفة فأستعين بهم على اعلاء كلمة الله "

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில், ஒரு முறை நபித்தோழர்கள் சிலரோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, உமர் (ரலி) அவர்கள்தோழர்களே! உங்களில் ஒவ்வொருவருக்கும் இருக்கிற ஆசைகளை இந்த சபையிலே வெளிப்படுத்துங்கள் என்று கூறினார்கள்.

அப்போது, ஒரு தோழர் இந்த அறை முழுவதும் தங்கம் நிரப்பப்பட்டு, அதை முழுவதையும் நான் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதையே ஆசைப்படுகின்றேன.” என்று கூறினார்.

உடனே, இன்னொரு தோழர்இந்த அறை முழுவதும் தங்கம், மரகதம், பவளம் போன்றவைகள் குவியல்களாக நிரப்பப்பட்டு, அதை முழுவதையும் நான் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதையும், தர்மம் செய்வதையும் ஆசைப் படுகின்றேன்என்று கூறினார்.

அப்போது, தோழர்களெல்லாம் சேர்ந்துஉமர் (ரலி) அவர்களே! உங்களின் ஆசை என்ன? என்று கேட்டனர்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள்அபூ உபைதா (ரலி), முஆத் இப்னு ஜபல் (ரலி), ஸாலிம் (ரலி) போன்றோர்கள் இந்த அறை முழுவதும் நிரம்பி இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகின்றேன்.

அவர்களின் மூலம் நான் சத்திய சன்மார்க்கத்தின் திருக்கலிமாவை மேலோங்கச் செய்வேன்என்று கூறினார்கள்.

                                ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}… )

இந்த ஒரு சம்பவமே அண்ணலாரின் அறிவு சார்ந்த ஆளுமைக்கு மிகப்பெரும் உதாரணமாகும்.


2. முடிவெடுப்பதில் அறிவு சார்ந்த ஆளுமை..
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான சில தருணங்களில் அபாரமான சில முடிவுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

அதற்கு அண்ணலாரின் அறிவு சார்ந்த ஆளுமையும், முடிவெடுக்கும் திறனும் – Decision making skill, சிக்கல்களைத் தீர்க்கும் திறனும் – Problem Solving Skill தான் துணை நின்றது என்றால் அது மிகையல்ல.

ஏகத்துவ சுகந்தத்தை எடுத்தியம்பிய ஆரம்ப தருணம் அது. அண்ணல் நபி {ஸல்} அவர்களிடம் நேருக்கு நேர் நின்று திராணியற்றிருந்த குறைஷி குலத்தலைவர்கள் அபூதாலிப் அவர்களை வைத்து பல்பேறு சமரசங்களை மேற்கொண்டனர்.

ஒரு கட்டத்தில் பொன்னைத் தருகிறோம், ஆட்சி, அதிகாரத்தைத் தருகிறோம், அழகிய பெண்ணைத் தருகிறோம் என்றனர்.

அடுத்து, இறைவணக்கத்தில் ஓர் சமன் நிலையை உருவாக்குவோம்அதாவது, சில காலம் முஹம்மதே! நீங்கள் எங்கள் கடவுளை வணங்குங்கள்! சில காலம் நாங்கள் அல்லாஹ்வை வணங்குகின்றோம் என்றனர்.

وجاءت سادات قريش إلى أبي طالب فقالوا له : يا أبا طالب، إن لك سنًا وشرفًا ومنزلة فينا، وإنا قد استنهيناك من ابن أخيك فلم تنهه عنا، وإنا والله لا نصبر على هذا من شتم آبائنا، وتسفيه أحلامنا، وعيب آلهتنا، حتى تكفه عنا، أو ننازله وإياك في ذلك، حتى يهلك أحد الفريقين .
عَظُم على أبي طالب هذا الوعيد والتهديد الشديد، فبعث إلى رسول الله صلى الله عليه وسلم وقال له : يا بن أخي، إن قومك قد جاءونى فقالوا لي كذا وكذا، فأبق عليَّ وعلى نفسك، ولا تحملنى من الأمر ما لا أطيق، فظن رسول الله صلى الله عليه وسلم أن عمه خاذله، وأنه ضعُف عن نصرته،

அடுத்தபடியாக, ”அபூதாலிபைச் சந்தித்து உமது சகோதரர் மகன் முஹம்மத் எங்கள் தெய்வங்களை விமர்சிக்கிறார். எங்கள் மூதாதையர்களை ஏசுகிறார். எங்கள் இளைஞர்களை எங்களுக்கு எதிராக மாற்றுகிறார். எங்களில் கீழானவர்களை எங்களுக்கு சரி நிகரானவர்கள் என்று கூறுகின்றார்.

ஆகவே, இத்தோடு அவர் தமது பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவரை நீங்கள் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் நாங்கள் அவர் விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட இது தோதுவாக அமையும்என்றனர்.

அபூதாலிப் அண்ணலாரை அழைத்து நடந்த சம்பவத்தைப் பரிமாறி விட்டு, சகோதரனின் மகனே! என்னை பலவீனப்படுத்தி விடாதே! இந்த விஷயத்தில் நீர் எனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்என்றார்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒற்றை வார்த்தையில் தங்களது முடிவைத் தெரிவித்தார்கள்.

فقال : ( يا عم، والله لو وضعوا الشمس في يمينى والقمر في يسارى على أن أترك هذا الأمر ـ حتى يظهره الله أو أهلك فيه ـ ما تركته )

அவர்கள் எனது வலது கையில் சூரியனையும், எனது இடது கையில் சந்திரனையும் தந்தாலும் கூட அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இந்த மார்க்கத்தை அல்லாஹ் மேலோங்கச் செய்யும் வரை நான் ஓய மாட்டேன்! ஒரு வேளை அதற்காக நான் உயிர் துறக்க நேரிட்டாலும், உயிர் துறப்பேனே தவிர (இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயந்து) ஒரு போதும் நான் இந்த ஏகத்துவ அழைப்பிலிருந்து பின் வாங்க மாட்டேன்என்று கூறினார்கள்.

فلما ولى ناداه أبو طالب، فلما أقبل قال له : اذهب يا بن أخي، فقل ما أحببت، فو الله لا أُسْلِمُك لشىء أبدًا وأنشد :
والله لن يصلوا إليك بجَمْعِهِم ** حتى أُوَسَّدَ في التراب دفينًا
فاصدع بأمرك ما عليك غَضَاضَة ** وابْشِرْ وقَرَّ بذاك منك عيونًا
وذلك في أبيات .

இது கேட்ட அபூதாலிப்என் சகோதரனின் மகனே! தைரியமாகச் செல்! உன் விருப்பப்படி செயல்படு! நீ விரும்புவதைச் சொல்! அல்லாஹ்வின் மீது ஆணை ஒரு போதும் நான் உம்மை அவர்களிடம் ஒப்படைக்க மாட்டேன்!

என்று கூறிவிட்டு, சிலவரிகளில் கவிதை ஒன்றையும் பாடினார்கள்.
கவலை மேகங்களும், ஸ்திரத்தன்மையற்ற சூழ்நிலையும் தங்களை சூழ்ந்திருக்கும் போது அண்ணலார் எடுத்த உறுதியான அந்த முடிவு எதிரிகளை நிலை குலைய வைத்தது.

عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهَا قَالَتْ مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بَيْنَ أَمْرَيْنِ إِلاَّ أَخَذَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لِنَفْسِهِ إِلاَّ أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ عَزَّ وَجَل .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும்படி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பெற்றால், அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையேஅது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் தேர்வு செய்வார்கள்.

அது பாவமான காரியமாக இருந்தால், மக்களிலேயே அவர்கள் தான் அதிலிருந்து விலகி வெகுதொலைவில் சென்றுவிடுவார்கள்.

(நூல்: முஸ்லிம், பாபு முபாஅததிஹி {ஸல்} லில் ஆஸாமி வஃக்தியாரிஹி)


جاءت قريش من ها هنا واليهود من ها هنا والنجدية من ها هنا. يريد مالك: إن الذين جاءوا من فوقهم بنو قريظة، ومن أسفل منهم قريش وغطفان. وكان سببها: أن نفرا من اليهود منهم كنانة بن الربيع بن أبي الحقيق وسلام بن أبي الحقيق وسلام ابن مشكم وحيي بن أخطب النضريون وهوذة بن قيس وأبو عمار من بني وائل، وهم كلهم يهود، هم الذين حزبوا الأحزاب وألبوا وجمعوا، خرجوا في نفر من بني النضير ونفر من بني وائل فأتوا مكة فدعوا إلى حرب رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وواعدوهم من أنفسهم بعون من انتدب إلى ذلك، فأجابهم أهل مكة إلى ذلك، ثم خرج اليهود المذكورون إلى غطفان فدعوهم إلى مثل ذلك فأجابوهم، فخرجت قريش يقودهم أبو سفيان بن حرب، وخرجت غطفان وقائدهم عيينة بن حصن بن حذيفة بن بدر الفزاري على فزارة، والحارث بن عوف المري على بني مرة، ومسعود بن رخيلة على أشجع


அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கும், இஸ்லாமிய மார்க்கத்திற்கும் செய்த துரோகத்திற்காக நாடு கடத்தப்பட்ட பனூ நளீர் குலத்தார்களின் தலைவனான ஹுயய் இப்னு அக்தப் என்பவன் குறைஷித் தலைவர்களைச் சந்தித்து, மாநபி {ஸல்} அவர்களின் மீதும், முஸ்லிம்களின் மீதும் படையெடுக்குமாறு தூண்டினான்.

அப்படி படையெடுத்தால் தங்களின் குலம் முழு ஒத்துழைப்பு தரும் என வாக்கும் தந்தான்.

பனூ நளீர் குலத்தின் இன்னொரு தலைவனான கினானா இப்னு ரபீஉ என்பவன், பனூ ஃகத்ஃபான் குலத்தாரை மாநபி {ஸல்} அவர்களுக்கெதிராக படை எடுக்குமாறு தூண்டிவிட்டான்.

பனூ ஃகத்ஃபான் குலத்தார் தங்களின் நட்பு குலத்தாரான பனூ அஸத் குலத்தாரிடம் இது விஷயத்தில் தங்களுக்கு ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொண்டனர்.

இதற்கிடையில், குறைஷிகள் பனூ சுலைம் கோத்திரத்தார்களை அழைத்துக் கொண்டு மர்ருள் ளஹ்ரான் எனும் இடத்தில் ஒன்று கூடினர்.

பனூ நளீர், பனூ குரைளா, பனூ ஃகத்ஃபான், பனூ அஸத், பனூ சுலைம், குறைஷிகள் என 10,000 பேர் ஒரு பெரும் படையாகத் திரண்டு மதீனாவைத் தாக்கிட திட்ட மிட்டனர்.

ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் இது நடைபெறுகின்றது. எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க மதீனாவைச் சுற்றிலும் பெரும்அகழி தோண்டியதால் அகழ்யுத்தம் என்றும், பல அணிகளாக பிரிந்திருந்த எதிரிகள் ஓரணியில் ஒன்றிணைந்ததால் இது அல் அஹ்ஸாப் பல அணியினர் என்றும் அழைக்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட 20 அல்லது 15 நாட்கள் முற்றுகை நீடித்தது. எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகம், ஆயுதங்களும் அதிகம். ஆனால், முஸ்லிம்களின் எண்ணிக்கையும், ஆயுதபலமும் மிகவும் குறைவாகத் தான் இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் அதிகமதிகம் துஆச் செய்து கொண்டிருந்தார்கள்.

وأتى رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نعيم بن مسعود بن عامر الأشجعي فقال: يا رسول الله، إني قد أسلمت ولم يعلم قومي بإسلامي، فمرني بما شئت،
 فقال له رسول
الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إنما أنت رجل واحد من غطفان فلو خرجت فخذلت عنا إن استطعت كان أحب إلينا من بقائك «1» معنا فأخرج فإن الحرب خدعة) «2». فخرج نعيم بن مسعود حتى أتى بني قريظة- وكان ينادمهم في الجاهلية- فقال: يا بني قريظة، قد عرفتم ودي إياكم، وخاصة ما بيني وبينكم، قالوا: قل فلست عندنا بمتهم، فقال لهم: إن قريشا وغطفان ليسوا كأنتم، البلد بلدكم، فيه أموالكم وأبناؤكم ونساؤكم، وإن قريشا وغطفان قد جاءوا لحرب محمد وأصحابه، وقد ظاهرتموهم عليه فإن رأوا نهزة «3» أصابوها، وإن كان غير ذلك لحقوا ببلادهم وخلوا بينكم وبين الرجل، ولا طاقة لكم به، فلا تقاتلوا مع القوم حتى تأخذوا منهم رهنا. ثم خرج حتى أتى قريشا فقال لهم: قد عرفتم ودي لكم معشر قريش، وفراقي محمدا، وقد بلغني أمر أرى من الحق أن أبلغكموه نصحا لكم، فاكتموا علي، قالوا نفعل، قال: تعلمون أن معشر يهود، قد ندموا على ما كان من خذلانهم محمدا، وقد أرسلوا إليه: إنا قد ندمنا على ما فعلنا، فهل يرضيك أن نأخذ من قريش وغطفان [رجالا من «4» أشرافهم فنعطيكهم فتضرب ] أعناقهم، ثم نكون معك على ما بقي منهم حتى نستأصلهم. ثم أتى غطفان فقال مثل ذلك. فلما كان ليلة السبت وكان ذلك من صنع الله عز وجل لرسوله والمؤمنين، أرسل أبو سفيان إلى بني قريظة عكرمة بن أبي جهل في نفر من قريش وغطفان يقول لهم: إنا لسنا بدار مقام، قد هلك الخف والحافر، فاغدوا صبيحة غد للقتال حتى نناجز محمدا، فأرسلوا إليهم: إن اليوم يوم السبت، وقد علمتم ما نال منا من تعدى في السبت، ومع ذلك فلا نقاتل معكم حتى تعطونا رهنا، فلما رجع الرسول بذلك قالوا: صدقنا والله نعيم بن مسعود، فردوا
إليهم الرسل وقالوا: والله لا نعطيكم رهنا أبدأ فاخرجوا معنا إن شئتم وإلا فلا عهد بيننا وبينكم. فقال بنو قريظة: صدق والله نعيم بن مسعود. وخذل الله بينهم، واختلفت كلمتهم، وبعث الله عليهم ريحا عاصفا في ليال شديدة البرد، فجعلت الريح تقلب آنيتهم وتكفأ قدورهم.


முற்றுகையில் ஈடுபட்டிருந்த ஓர் இரவில் நபி {ஸல்} அவர்கள்யா அல்லாஹ் நீ வாக்களித்திருக்கின்றாயே அந்த வெற்றியை உன்னிடம் கேட்கின்றேன்என மன்றாடிக்கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

எதிரிகளின் புறத்திலிருந்து ஓர் உருவம் முஸ்லிம்களின் பகுதிக்கு வந்து கொண்டிருந்ததை நபி {ஸல்} அவர்கள் பார்த்துவிட்டார்கள்.

யார்? என {ஸல்} அவர்கள் கேட்டதும், நான் தான் நுஅய்ம் இப்னு மஸ்வூத் இப்னு ஆமிருல் அஷ்ஜயீ என்று பதில் வந்தது.

! நுஅய்ம் இப்னு மஸ்வூதா? என்ன இந்த நேரத்தில் அதுவும் இங்கே? என நபி {ஸல்} அவர்கள் வினவினார்கள்.

அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், இது என் குடும்பத்தார் களுக்கும், என் குலத்தார்களுக்கும் தெரியாது என்று கூறிவிட்டு, சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே! நான் என்ன செய்யவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்நீரோ ஃகத்ஃபான் குலத்தார்களில் இருந்தும் இஸ்லாமான தனியொரு நபராக இருக்கின்றீர்.

உம்மால் என்ன செய்திட முடியும்? வேண்டுமானால் தந்திரத்தைக் கையாண்டு இந்த யுத்தத்தின் போக்கை மாற்றிவிடும்!

கைகோர்த்து நிற்கிற இவர்களின் இதயங்களில் உமது தந்திரத்தால் பிரிவினையை ஏற்படுத்தி விடும்! உமக்கு சக்தி இருந்தால் இப்படிச் செய்து விடும்! அது போதும்! போர் என்றாலே தந்திரம் தானே!என்று கூறினார்கள்.

நுஅய்ம் இப்னு மஸ்வூத் அவர்கள் ஃகத்ஃபான் குலத்தைச் சேர்ந்தவர்கள். மதீனாவிற்கு கிழக்கே இருந்த நஜ்த் தேசத்தில் தான் ஃகத்ஃபான் குலத்தார்கள் வசித்து வந்தனர். வியாபார ரீதியாக பனூ குரைளாக்களோடு மிக அதிகமான நெருக்கம் இருந்த்து நுஅய்ம் அவர்களுக்கு.

அதையும் தாண்டி ஒரு நெருக்கம் அவர்களோடு இருந்த்தென்றால் அது இது தான் நுஅய்ம் ஓர் உல்லாசப் பிரியராக இருந்தார்.

மது, சூது, மாது என உல்லாசத்தில் மூழ்கிக் கிடந்தார். அதற்காக காசு பணங்களை கொண்டு வந்து பனூ குரைளாக்களிடம் கொட்டுவார். அவர்கள் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.

ஆனாலும், நுஅய்ம் மதிநுட்பம் நிறைந்தவர், எந்தக் காரியத்தையும் மிக அற்புதமாக திட்டம் தீட்டி சாதிப்பதில் வல்லவர்.

இவையனைத்தையும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்ததால் நுஅய்ம் அவர்களிடம் தமது முடிவைக் கூறினார்கள்.

நுஅய்ம் நேராக பனூ குரைளாக்களிடம் வந்தார். எனக்கு உங்கள் மீது இருக்கிற அன்பு உங்களுக்கு தெரியும் தானே? குறிப்பாக உங்களுக்கும் எனக்கும் இடையே இருக்கிற நட்பு உண்மையானது தானே?என்றார்.

அதற்கு, அவர்கள் அதில் அணுவளவேனும் சந்தேகம் இல்லை. நீர் உண்மையைத் தான் சொல்கின்றீர்!

அப்படியென்றால், என் மனதை உறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லட்டுமா? என்று கேட்டார் நுஅய்ம்.

ம்ம்ம், சொல்லும் என்றார்கள்.

ஃகத்ஃபான் குலத்தார்களும், குறைஷிகளும் உங்களைப் போன்று கிடையாது. அவர்களின் சொத்துக்களும், மனைவி மக்களும், ஊரில் பத்திரமாக இருக்கின்றார்கள்.

சுய நலத்தைத் தவிர வேறொன்றும் அவர்களை முஹம்மதுக்கு {ஸல்} எதிராக போரிட அழைத்து வரவில்லை.


இந்தப் போரில் வெற்றி கிடைத்தாலும் போரில் கிடைத்த பொருட்களில் எந்த ஒன்றையும் அவர்கள் உங்களுக்கு தரப்போவதில்லை.

சரி, வெற்றி கிடைத்தால் பரவாயில்லை. ஒரு சமயம் போரில் தோற்றுவிட்டால் உங்களை அம்போ என விட்டு விட்டுச் சென்று விடுவார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இது உங்களின் சொந்த பூமி, உங்களின் சொந்த ஊர், உங்களின் சொத்துக்களெல்லாம் இங்கேதான் இருக்கின்றன.

உங்களின் மனைவி, மக்கள் என அத்துனை பேர்களும் உங்களுடன் இங்கே தான் இருக்கின்றார்கள்.

நீங்கள் வேறு அவசரப்பட்டு, முஸ்லிம்களுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை நொடிப்பொழுதில் அவர்கள் போருக்கு வா என்றதும் தூக்கி எறிந்து விட்டீர்கள்.

முஸ்லிம்களின் கோபத்திற்கும், வேகத்திற்கும் உங்களால் ஈடுகொடுக்க இயலாது. ஏனெனில், அவர்களின் கோபம் முழுக்க உங்களின் மீது தான் இருக்கும். இப்ப கூட ஒன்றும் நடந்து விட வில்லை பார்த்து, யோசித்து நல்ல முடிவாக எடுங்கள்.

இதை உங்கள் மீது நான் கொண்டிருக்கின்ற தனிப்பட்ட அன்பின் வெளிப்பாட்டில் தான் சொல்கின்றேன்என்றார் நுஅய்ம்.

நினைத்துப் பார்க்கவே பனூ குரைளா குலத்தாருக்கு திகிலூட்டியது. நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதையும் நீரே சொல்லிவிடும்!என்றார்கள்  பதற்றத்தோடு.

என்னுடைய தீர்க்கமான ஆலோசனை இது தான்! அதாவது உங்கள் கூட்டணிப் படையினரில் சில முக்கியஸ்தர்களை நீங்கள் பிணையாக கேட்க வேண்டும். அவர்கள் ஒத்துக் கொள்ளும் வரை போர் செய்யப் போவதில்லை என உறுதியாய் நின்று விடுங்கள்.

அப்படி பிணையாளியாய் சிலரை தந்தார்கள் என்றால் நம்பி போரிடுங்கள். அப்போது தான் அது உங்கள் ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்தும். நீங்கள் பாதுகாக்கப்பட அடித்தளமாய் அமையும்.என்றார் நுஅய்ம்.

இதைக்கேட்ட பனூ குரைளாவினர் தக்க சமயத்தில் அழகானதொரு தீர்வை சொன்னீர்! உண்மையில் நீர் ஒரு சிறந்த சிந்தனையாளர் தான்! என மகிழ்ச்சியோடு கூறினர்.

முதல் தந்திரம் படுவேகமாக வேலை செய்ய ஆரம்பித்ததும், அடுத்து தன் தந்திரவலையில் சிக்க வைக்க படையை வழி நடத்தி வந்த குறைஷித் தலைவர் அபூ சுஃப்யானை நோக்கி நகர்ந்தார்கள் நுஅய்ம் {ரலி} அவர்கள்.

நேராக குறைஷிகளின் கூடாரம் நோக்கி நடந்தார்கள். அங்கே அபூ சுஃப்யானும், இன்னும் சில தலைவர்களும் அமர்ந்திருந்தனர்.

அடுத்த வலையை கொஞ்சம் பெரிதாகவே வீசினார் நுஅய்ம். குறைஷித் தலைவர்களை நோக்கிஉங்கள் மீது நான் கொண்டிருக்கிற அளவு கடந்த நேசத்தையும், முஹம்மது மீது நான் கொண்டிருக்கிற அளவு கடந்த வெறுப்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

நான் ஒரு விஷயத்தைக் கேள்விபட்டேன். அதை உங்களிடம் கூறுவது என் மீதுள்ள தார்மீகக் கடமையாக கருதுகின்றேன். ஆனால், நான் தான் உங்களிடம் கூறியதாக நீங்கள் யாரும் என்னைக் காட்டிக் கொடுத்து விடக் கூடாது. இதற்கு ஒத்துக் கொண்டீர்களென்றால் நான் அதைக் கூறுகின்றேன்என்றார்.

குறைஷித்தலைவர்கள் சரி நாங்கள் உம்மை காட்டிக் கொடுக்க மாட்டோம்என்றார்கள்.

பனூ குரைளாவினர் முஹம்மதிடம் செய்த ஒப்பந்தத்தை முறித்து விட்டு, உங்களோடு கை கோர்த்த்தை நினைத்து வருத்தப்பட்டு பயப்பட ஆரம்பித்து விட்டனர்.

நீங்கள் கைவிட்டு விடுவீர்களோ என கவலை கொண்டு அச்சப்பட ஆரம்பித்து விட்டனர். ஆகவே, அவர்கள் தரப்பிலிருந்து சிலரை முஹம்மதிடம் தூது அனுப்பியுள்ளனர்.

நாங்கள் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டோம்! அதற்காக நாங்கள் இப்போது வருந்துகிறோம். எங்களை நீங்கள் மன்னிக்க வேண்டும்.

நாங்கள் செய்த தவறுக்குப் பரிகாரத்தையும் நாங்களே செய்கிறோம். அது இது தான்குறைஷ் மற்றும் ஃகத்ஃபான் குலத்தார்களின் முக்கியஸ்தர்கள் சிலரை பிணையாக பிடித்துத் தருகிறோம் நீங்கள் திருப்தியடைவீர்களா? அதன் பின்னர் உங்களோடு இணைந்து அவர்களை கடுமையாக தாக்குகிறோம்.என்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். என்றார் நுஅய்ம்.

மேலும், பனூ குரைளாவினர் உங்களிடம் பிணையாளிகள் வேண்டும் என கோரிக்கை வைத்தால் ஒருத்தரைக் கூட அனுப்பி வைத்துவிடாதீர்கள்.என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் நுஅய்ம்.

அடுத்து தன்னுடைய குலமான ஃகத்ஃபான் குலத்தின் தலைவர்களிடம் வந்து குறைஷிகளிடம் சொன்னது போலவே சொன்னார்.

அவர்களின் தந்திரம் மூன்று புறத்திலும் வேலை செய்ய ஆரம்பித்தது.

அன்றொரு நாள் இரவு விடிந்தால் சனிக்கிழமை, அபூ சுஃப்யான் இக்ரிமாவையும், ஃகத்ஃபான் குலத்தார்கள் சிலரையும் பனூ குரைளாவினரிடம் தூது அனுப்பினார்.

இக்ரிமா பேசினார்நாம் இங்கு எந்த நோக்கத்திற்காக வந்தோமோ அது இன்னும் நிறை வேறியதாகத் தெரியவில்லை. முற்றுகையும் நீடித்துக் கொண்டே செல்கிறது.

வீர்ர்களும் சோர்வடைந்து விட்டனர். தளபதி  நாளை யுத்த்த்தை தொடங்கலாம் என்று கூறிவிட்டார், நீங்கள் தயாராய் இருங்கள். நாளை நடக்கும் யுத்தத்தில் நீங்களும் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டுமென என் தந்தை உங்களிடம் சொல்லச் சொன்னார்.என்று பேசி முடித்தார் இக்ரிமா.

நாளை சனிக்கிழமை நாங்கள் அந்த நாளில் எதையுமே செய்யமாட்டோம் என்று உங்கள் தந்தைக்கு தெரியாதா?

அது போக, நாங்கள் உங்களோடு இணைந்து போரிட வேண்டுமானால் உங்களில் சில முக்கியஸ்தர்களை எங்களிடம் பிணையாக தரவேண்டும்.

அப்படி தந்தால் தான் நாங்கள் உங்களோடு இணைந்து போரிடுவோம். இல்லையென்றால் நாங்கள் பின் வாங்கி விடுவோம்என்றார்கள்.

இந்தச் செய்தியை கேட்டு விட்டு, நேராகச் சென்று அபூ சுஃப்யான் அவர்களிடம் இக்ரிமா அவர்கள் கூறினார்கள்.

அதைக்கேட்ட அபூ சுஃப்யான்உண்மையில் நுஅய்ம் இப்னு மஸ்வூத் சத்தியத்தையே நம்மிடம் கூறியுள்ளார். பனூ குரைளாவினரிடம் ஆளனுப்பிக் கூறி விடுங்கள்அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு ஆளைக்கூட நாங்கள் அனுப்ப மாட்டோம். இஷ்டம் இருந்தால் சேர்ந்து போரிடட்டும். இல்லையென்றால், ஊரைப் பார்த்து போகட்டும்!என்று.

இதைக் கேட்டதும் பனூ குரைளாவினர் நமது நண்பர் நுஅய்ம் உண்மையையே கூறினார். குறைஷ், மற்றும் ஃகத்ஃபான் குலத்தார்களின் சுயரூபம் இப்போது நமக்கு புரிந்து விட்டது. நாம் போரில் கலந்து கொள்ள வேண்டாம். என்று கூறினர்.

( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:8, பக்கம்:17,18. தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:173,174,175. )


இக்கட்டான சூழ்நிலையில், நான் என்ன செய்ய வேண்டுமென வேண்டி நின்ற நுஅய்ம் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மேற்கொண்ட  உறுதியான  முடிவு பல அணியினராய் இறுமாப்போடு வந்த எதிரிகள் பிரிந்து, கத்தியின்றி இரத்தமின்றி அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு மா பெரும் வெற்றியை பெற்றது.

ஆக, அண்ணல் நபி {ஸல்} அவர்களின் வாழ்க்கையில் ஆளுமைத்திறன் என்பது எல்லா நிலைகளிலும் மேலோங்கி இருந்ததை வரலாறு வாகாய் பதிவு செய்திருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ்... இதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் நாம் பதிவிடுவோம்.