Thursday 5 March 2015

விடியலைத்தேடும் இளைஞர் சமூகம்!!!



விடியலைத்தேடும் இளைஞர் சமூகம்!!!



இன்றைய முஸ்லிம் உலகு புதிய இயக்கம், புதிய ஜமாஅத் புதிய கொள்கை என நாளுக்கொரு முழக்கங்களை சந்தித்து வருகின்றது.

இவையனைத்தும் இளைஞர் சமூகத்தை முன் வைத்தே அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

சில பதவிகளும், சில பொறுப்புகளும் வழங்கப்படுவதால் இளைஞர் சமூகமும் அதைக் கௌரவமாகவே கருதிக்கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு இயக்கத்தினரும் தாங்கள் தான் மிகச் சிறந்த அளவிலான சமூகப் பணிகளை ஆற்றுவதாகவும், திறம்பட இயக்கம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்காகப் போராடுகின்றோம் என்று சூளுரைத்துக் கொண்டு போராடிய தாலிபான்களால் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முடிந்ததா?

ஈவிரக்கமில்லாமல், காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டிருக்கின்ற .எஸ்..எஸ் இயக்கப்போராளிகளால் தான் கிலாஃபத் ஆட்சியை நிறுவ முடிந்ததா?

ஆண்டு தோறும் டிஸம்பர் 6- அன்று அரசு அலுவலகங்களில் ஏதேனும் ஓர் அலுவலகத்தின் முன்பு சிலநூறு, சிலஆயிரம் முஸ்லிம்களைத் திரட்டிக் கொண்டு போராடிய, போராடிக்கொண்டிருக்கின்ற இயக்கங்களால் தான் பாபரி மஸ்ஜிதை மீட்க முடிந்ததா?

இல்லையே! அப்படியானால், இந்த சமூகம் அல்லாஹ்வின் ஏதோ ஒரு கட்டளையை மறந்திருக்க வேண்டும் அல்லது மீறியிருக்க வேண்டும்.

எது அந்த இறைக்கட்டளை? அது தான் ஒற்றுமை

உலகளவில் இஸ்லாமிய அரபுதேச நாடுகளும், இந்திய, தமிழக அளவில் இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் பெருமைபேசி சிதறிய கண்ணாடித்துகள் போல் பிரிந்து கிடப்பது தான் அடிப்படைக் காரணம்.

கருத்துவேறுபாடுதான் சமூகத்தில் நிலவுகிற ஒற்றுமையின்மைக்கு காரணமாக அமைந்திருப்பதாக குற்றம் சுமத்துகின்றார்கள்.

இதே கருத்து வேறுபாடு நபித்தோழர்களுக்கு மத்தியில் இருந்திருக்கிறது, தாபியீன்களுக்கு மத்தியில் இருந்திருக்கிறது, இமாம்களுக்கு மத்தியில் இருந்திருக்கிறது ஆனால், அவர்கள் பிரிந்து போகவில்லை. சமூகத்தை பிரித்துக் கொண்டும் போகவில்லை.

பின்னர் ஏன் நாம் பிரிந்து போயிருக்கின்றோம்? அவர்கள் கருத்துவேறுபாட்டின் போது எத்தகைய இஸ்லாமிய ஒழுக்க நெறிகளை கையாண்டார்களோ அத்தகைய ஒழுக்க நெறிகளை நாம் கையாளவில்லை.

நபித்தோழர்களின் கருத்து வேறுபாடும்அவர்களின் ஒற்றுமையும்

1. உமர் (ரலி) அவர்களும்இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும்

ولقد ذكر ابن القيم في "إعلام الموقعين " أن المسائل الفقهية التي خالف فيها ابن مسعود عمر رضي الله عنهما بلغت مائة مسألة وذكر أربعاً منها.

அல்லாமா இப்னுல் கைய்யூம் அல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “உமர் (ரலி) அவர்களுக்கும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்கும் இடையே நூறு மஸ்அலாக்களில் கருத்து வேறுபாடு இருந்தது.

وكان ابن مسعود يرى في قول الرجل لامرأته: "أنت عَلَيَّ حرام " أنه يمين، وعمر يقول: هي طلقة واحدة.

ஒரு கணவன் தன் மனைவியைப் பார்த்து"أنت عَلَيَّ حرام "  நீ என் மீது ஹராம்என்று சொல்லி விட்டால் என்ன சட்டம் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் வினவப்பட்ட போதுசத்தியத்திற்குரிய சட்டம் என்னவோ அது தான் இதற்குரிய சட்டம் என்று கூறினார்கள்.

சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரம்கஃப்ஃபாரா கொடுத்து விட்டால் மீண்டும் கணவன் மனைவியோடு சேர்ந்து வாழலாம்என்று கூறினார்கள்.

இதே விஷயத்தில் உமர் (ரலி) அவர்கள் நிலைப்பாடு என்னவெனில்அது ஒரு தலாக் விடுவதற்குச் சமம். முதல் தலாக் நிகழ்ந்து விடும். எனவே, தலாக்கிற்கான இத்தா முடிந்த பிறகு மீண்டும் கணவன் தன் மனைவியோடு சேர்ந்து வாழலாம்என்று கூறினார்கள்.

وكان ابن مسعود يقول في رجل زنى بامرأة ثم تزوجها: لا يزالان زانيين ما اجتمعا، وعمر لا يرى ذلك، ويعتبر أوله سفاحاً وآخره نكاحاً.

இதே போன்று, ஒருவன் தான் விபச்சாரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டு வாழ்கிறானெனில் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழும் காலமெல்லாம் விபச்சாரக் குற்றத்திலேயே வாழ்கின்றார்கள்எனும் கருத்தைக் கொண்டிருந்தார்கள் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள்.

ஆனால், உமர் (ரலி) அவர்களோமுந்தைய உறவை குற்றமென்றும், பிந்திய உறவை திருமணம் என்றும்கூறினார்கள்.

وعمر رضي الله عنه معروف من هو في فقهه وجلالة قدره، وقد كان ابن مسعود أحد رجال عمر رضي الله عنهما في بعض الأعمال،

ஆனால், பெரும்பாலான நேரங்களிலும், முக்கியமான சட்டப் பிரச்சனைகளின் போதும் உமர் (ரலி) அவர்கள் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் சட்ட முன் வடிவுக்கே முன்னுரிமை தந்திருக்கின்றார்கள்.

ومع ذلك فإن اختلافهما هذا ما نقص من حب أحدهما لصاحبه، وما أضعف من تقدير ومودة أي منهما للآخر،

மேலும், இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மீது உமர் (ரலி) அவர்களுக்கும், உமர் (ரலி) அவர்கள் மீது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்கும் எவ்வித காழ்ப்புணர்ச்சியும், குரோதமும் ஏற்பட்டது கிடையாது. ஒருவருக்கொருவர் அதிக நட்போடும், அன்போடும் வாழ்ந்து வந்தார்கள்.

فهذا ابن مسعود يأتيه اثنان: أحدهما قرأ على عمر وآخر قرأ على صحابي آخر، فيقول الذي قرأ على عمر: اقرأنيها عمر بن الخطاب، فيجهش ابن مسعود بالبكاء حتى يبل الحصى بدموعه، ويقول: اقرأ كما أقرأك عمر فإنه كان للإسلام حصناً حصيناً، يدخل الناس فيه ولا يخرجون منه، فلما أصيب عمر انثلم الحصن.

ஒரு முறை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் இரண்டு நபர்கள் வந்தனர். ஒருவர் உமர் (ரலி) அவர்களிட்ம் இருந்து குர்ஆனின் வசனங்களை கற்று வந்திருந்தார். இன்னொருவர், ஒரு நபித்தோழரிடம் இருந்து குர்ஆனைக் கற்று வந்திருந்தார்.

உமர் (ரலி) அவர்களிடம் குர்ஆனைக் கற்றுவந்தவர் நான் உமர் (ரலி) அவர்களிடம் இருந்து குர்ஆனைக் கற்று வந்துள்ளேன்என்றார். அப்படியானால், உமர் (ரலி) அவர்கள் உங்களுக்கு குர்ஆன் வசனங்களை எப்படி ஓதிக் காண்பித்தாரோ அப்படியே என்னிடம் ஓதிக்காட்டுங்கள்என்றார்கள் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள்.

அவர் அது போன்று ஓத ஆரம்பித்ததும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள்தங்களது தாடி நனையும் அளவுக்கு அழுதார்கள்பின்னர்இந்த சன்மார்க்கமான இஸ்லாத்திற்கு அழகிய பாதுகாப்பான கோட்டைகள் இருக்கின்றது. மக்கள் இதனுள் வந்ததன் பின்னர் அவர்கள் ஒரு போதும் வெளியேற வில்லை. ஏன் தெரியுமா? இந்த கோட்டையில் எந்த ஒரு ஓட்டையும் விழா வண்ணம் அணையை காக்கும் மதகு போல் உமர் (ரலி) அவர்கள் தன்னை அமைத்துக் கொண்டார்கள்என்றார்கள்.

ويقبل ابن مسعود يوماً وعمر جالس فلما رآه مقبلاً قال: "كنيّف مُلئ فقهاً أوعلما ً" وفي رواية: "كنيّف ملئ علماً آثرت به أهل القادسية ".

ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் ஒரு சபையில் அமர்ந்திருக்கும் போது எதிரே இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் வருகை தந்தார்கள். அப்போதுஅறிவாலும், சட்ட ஞானத்தாலும் நிறைந்திருப்பவரே வருக!” என வரவேற்றார்கள்.

2. உமர் (ரலி) அவர்களும்.. அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களும்

உமர் (ரலி) அவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன.

كما اختلفا في قسمة الأراضي المفتوحة: فكان أبو بكر يرى قسمتها وكان عمر يرى وقفها ولم يقسمها.

அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாமியப் படைகள் வெற்றி கொள்கிற பூமியில் கிடைக்கிற நிலங்களை படைவீரர்களுக்கு பங்கு வைத்து கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் சில காலம் இதைக் கடைபிடித்த போதும் பின்நாளில் வெற்றி கொள்ளப்பட்ட பூமியில் கிடைக்கிற நிலங்களை பைத்துல்மாலுக்கு வக்ஃப் செய்து விட்டார்கள்.

وكذلك اختلفا في المفاضلة في العطاء، فكان أبو بكر يرى التسوية في الأعطيات حين كان يرى عمر المفاضلة وقد فاضل بين المسلمين في أعطياتهم.

இது போன்றே, அபூபக்ர் (ரலி) அவர்கள் பைத்துல் மாலிலிருந்து செய்கிற உதவியாகட்டும், அல்லது ஃகனீமத் பொருளை பங்கு வைக்கிற விதமாக இருக்கட்டும் அனைவருக்கும் சமமாகவே பங்கு வைப்பார்கள்.

ஆனால், உமர் (ரலி) அவர்களோ அரசின் நலத்திட்ட உதவிகளாகட்டும், ஃகனீமத் பொருளாகட்டும், சன்மானங்களாகட்டும் யாருக்கு வழங்குகின்றார்களோ அவர்களின் ஆரம்ப கால பங்களிப்பு என்ன? அவர் பத்ரில் கலந்து கொண்டவரா? அல்லது பைஅத்துர் ரிழ்வானில் கலந்து கொண்டவரா? இஸ்லாமிய வளர்ச்சியில் அவரின் பங்களிப்பு என்ன? என்று பார்த்து அதற்குத் தக்கவாறு பங்கு கொடுப்பார்கள்.

உதாரணத்திற்கு ஒரு செய்தியைப் பார்க்கலாம்.

உமர் (ரலி) அவர்கள் தங்களின் ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கி வந்தார்கள்.

ஒரு முறை உஸாமா (ரலி) அவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய பின்னர் அடுத்து வந்த உமர் (ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கு உதவித்தொகையை வழங்கினார்கள் உமர் (ரலி) அவர்கள்.

தமக்கு உஸாமா (ரலி) அவர்களை விட குறைவாக வழங்கப்பட்டிருப்பதைக் கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன் அவர்களே! எந்த ஒரு யுத்தத்திலும் கலந்து கொள்ளாத உஸாமா அவர்களுக்கு அதிகமாகவும், சிறுபிராயத்திலிருந்தே இஸ்லாத்தின் அத்துனை போர்களிலும் பங்கெடுத்த எனக்கு குறைவாகவும் தந்தது எப்படி நியாயமாகும்?என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடத்தில், உஸாமா (ரலி) அவர்கள் எத்தகைய கண்ணியம் வாய்ந்தவராக இருந்தாரோ, அப்படித்தான் இந்த உமரிடத்திலும் கண்ணியம் வாய்ந்தவராக மதிக்கப்படுவார்.

மேலும், உன்னுடைய தந்தை உமரின் மீது வைத்திருந்த கண்ணியத்தை விட, உஸாமா வின் தந்தை ஜைத் அவர்கள் மீது அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உயர்ந்த மரியாதையும், கண்ணியமும் உயர்ந்ததாகும்என்று பதில் கூறினார்கள்.

                             (நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:183.)

ஒரு முறை அரசின் உதவியைப் பெறுவதற்காக வரிசையில் காத்துக் கொண்டிருந்த உம்மு ஸலீத் (ரலி) அவர்களைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் தம் பணியாளரை அழைத்து “உஹத் யுத்த களத்தில் காயமுற்ற பல தோழர்களுக்கு, நாவறண்ட பல நபித்தோழர்களுக்கு, உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த என் தோழர் பலருக்கு தண்ணீர் புகட்டிய வீரப்பெண் உம்மு ஸலீத் அங்கே வெயிலில் காய்ந்து கொண்டிருக்கின்றார். 

குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டு, அடுத்த மாதத்திலிருந்து உங்கள் வீடு தேடி உங்களுக்கான அரசின் உதவிகள் வந்து சேரும்! என கூறச் சொன்னார்கள்.

                             (நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்: 186.)


 உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் மீது கொண்டிருந்த நேசம்..

ஃகலீஃபா உமர் {ரலி} அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஷாம் தேசத்திலிருந்து ஒருவர் உமர் {ரலி} அவர்களைக் காண வந்திருந்தார்.

இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த மனிதர் அமீருல் முஃமினீன் அவர்களே!   மாநபி {ஸல்} அவர்களுக்குப் பிறகு சிறந்த மனிதராகவும், முஃமின்களின் சிறந்த தலைவராகவும் உங்களைத் தான் நான் காண்கிறேன்என்றார்.                         
 அதற்கு உமர் {ரலி} அவர்கள் அப்படியா? என்று கேட்டுவிட்டு, “நீர் எனதருமைத் தோழர் அபூபக்ர் ஸித்தீக் {ரலி] அவர்களைப் பார்த்திருக்கிறீரா? என்று கேட்டார்கள்.    

அதற்கு அவர் இல்லை நான் பார்த்ததில்லை என்று பதில் கூறினார்.

உடனே உமர் {ரலி} அவர்கள் நீர் மட்டும் என் தோழர் அபூபக்ர் {ரலி} அவர்களை பார்த்திருக்கிறேன் என்று கூறியிருந்தீர் என்றால் உம்மை சாட்டையால் அடித்து விரட்டி இருப்பேன்.

”என் தோழரை குறைபடுத்தி,  என்னை உயர்வாக்கி புகழ்கிறீரோ?   எத்தனையோ நாட்கள் அபூபக்ர் {ரலி} அவர்களின் நெஞ்சில் முளைத்திருக்கும் ரோமத்தைப் போன்றாவது நான் இருந்திருக்கக் கூடாதா? என ஏங்கிய நாட்கள் எமக்கு உண்டு.

 அப்படிப்பட்ட என் தோழரை குறைத்து மதிப்பிட்டு, என்னை உயர்வாகக் கருதுகிறீரோ?” என்று கோபத்தோடு கேட்டார்கள்.

                                           (  நூல்: ஃகுல்ஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:86 )

அலீ (ரலி) அவர்களும்.. உமர் (ரலி) அவர்களும்

وقد كان بين عمر وعلي رضي الله عنهما بعض الاختلافات، ولكن في نطاق أدب رفيع. فقد أرسل عمر رضي الله عنه مرة إلى امرأة مغيبة (زوجها غائب ) كان يُدخلَ عليها فأنكر ذلك، فأرسل إليها، فقيل لها أجيبي عمر. فقالت: يا ويلاه ما لها ولعمر؟ فبينما هي في الطريق (إليه ) فزعت فضربها الطلق، فدخلت داراً فألقت ولدها، فصاح الصبي صيحتين ثم مات. فاستشار عمر صحب النبي صلى الله عليه وسلم فأشار عليه بعضهم: أنه ليس عليك شيء، إنما أنت والٍ مؤدب، وصمت علي رضي الله عنه ، فأقبل عليه عمر وقال: ما تقول؟ قال: إن كانوا قالوا برأيهم فقد أخطأ رأيهم، وإن كانوا قالوا في هواك فلم ينصحوا لك، أرى أن ديته عليك، فإنك أنت أفزعتها، وألقت ولدها بسببك؛ فأمر عمر أن يقسم عقله (دية الصبي ) على قومه. وهكذا نزل عمر على رأي علي رضي الله عنهما ولم يجد غضاضة في العمل باجتهاده وهو أمير المؤمنين، وقد كان في رأي غيره له منجاة.

உமர் (ரலி) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்தன.

ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் கணவர் வெளியூர் சென்றிருந்த ஒரு பெண்மணியின் மீதான புகாரை விசாரிக்க அவரை அழைத்து வருமாரு ஆளனுப்பினார்கள்.

அவர் அந்த வீட்டிற்கு வந்து அந்த வீட்டின் கதவைத் தட்டினார்.அப்போது அந்த வீட்டில் ஒரு பெண்மணியும் அவளின் குழந்தையும் இருந்தனர்.

கதவு திறக்கப்படவில்லை. வந்தவர்கலீஃபா தங்களை விசாரணைக்காக தங்களை வரச்சொன்னார்என்றார்.

அப்பெண்மணியோ உமருக்கு இங்கு என்ன வேலை? என்று கேட்டார். அப்போது அவர் தெருவில் கிடந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு கதவை ஓங்கி ஒரு அடி அடித்தார்கள். கதவு கழன்று அருகில் நின்றிருந்த பெண்மணியின் குழந்தை மீது விழுந்தது. சிறிது நேரத்தில் அந்தக் குழந்தை இறந்து போனது.

இது குறித்து எழுந்த சட்டப் பிரச்சனையை ஆலோசிக்க நபித்தோழர்கள் பலர் அடங்கிய ஒரு குழுவை அமைத்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அந்தக் குழுவினரும் விவாதித்தனர்.

குழுமியிருந்த அத்துனை நபித்தோழர்களும் ஆட்சித்தலைவர் என்ற ரீதியில் தான் உமர் (ரலி) அவர்கள் அங்கே சென்றார்கள். போன இடத்தில் யதார்த்தமாகத் தான் விரும்பத்தகாத அந்தச் சம்பவமும் நடைபெற்றது. அதற்கு உமர் (ரலி) என்ன செய்வார்கள். இது குற்றமாகக் கருதப்படாதுஎன்றார்கள்.

அந்தச் சபையில் அலீ (ரலி) அவர்கள் மட்டும் அமைதியாக இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கிமௌனம் கலையுங்கள். இது குறித்த உங்கள் அபிப்பிராயம் என்னவென்று சொல்லுங்கள்என்றார்கள்.

அதற்கு, அலீ (ரலி) அவர்கள்இதோ உங்களுக்கு தீர்வு சொன்ன இவர்கள் தங்களின் சொந்த அபிப்பிராயத்தைச் சொல்லியிருப்பார்கள் எனில் அது மிகவும் தவறானதாகும். மேலும், உங்களுக்குப் பயந்தோ அல்லது உங்களை திருப்தி படுத்தவோ இவர்கள் தீர்வு கூறியிருப்பின் அவர்கள் உங்களுக்கு நலம் நாடவில்லை என்று அர்த்தம்.

உங்களால் தான் இப்படியான ஒரு காரியம் நடைபெற்றுள்ளது. எனவே, நீங்கள் தான் அதற்குப் பொறுப்பு. எனவே நீங்கள் அதற்கு ஈட்டுத்தொகை வழங்க வேண்டும்என்று கூறினார்கள்.

(அன்றைக்கு சிசுக்கொலைக்கு ஈடாக 50 தீனார்களோ அல்லது 500 திர்ஹங்களோ வழங்க வேண்டும்என்று நடைமுறையில் இருந்தது.)

உடனடியாக வழங்கிட உமர் (ரலி) அவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் ஆணையிட்டார்கள்.

அலீ (ரலி) அவர்களும்தல்ஹா (ரலி) அவர்களும்முஆவியா (ரலி) அவர்களும்

ويدخل عمران بن طلحة على عليّ رضي الله عنه، بعدما فرغ من معركة الجمل، فيرحب به ويدنيه ويقول: "إني لأرجو أن يجعلني الله وأباك من الذين قال الله عز وجل فيهم: ((وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ إخْواناً على سُرُرٍ مُتَقَابِلِين )) [الحجر:47]. ثم أخذ يسأله عن أهل بيت طلحة فرداً فرداً وعن غلمانه وعن أمهات أولاده... يا ابن أخي كيف فلانة؟ كيف فلانة؟ ويستغرب بعض الحاضرين ممن لم يحظوا بشرف صحبة رسول الله صلى الله عليه وسلم ، ولم يدركوا ماذا يعني أن يكون الإنسان من أصحاب رسول الله صلى الله عليه وسلم ، فيقول رجلان جالسان على ناحية البساط: الله أعدل من ذلك، تقتلهم بالأمس وتكونون إخواناً في الجنة؟ فيغضب الإمام علي، ويقول للقائلين: "قوما أبْعَدَ أرضِ الله وأسحقها فمن هو إذاً إن لم أكن أنا وطلحة، فمن إذن؟! ".

அலீ (ரலி) அவர்களுடைய ஆட்சி விவகாரத்தில் எதிர் கருத்து கொண்டிருந்தவர்கள் தாம் தல்ஹா (ரலி) அவர்களும், முஆவியா (ரலி) அவர்களும்.

ஜமல் போரில் ஷஹீதானார்கள் தல்ஹா (ரலி) அவர்கள். தல்ஹா (ரலி) அவர்களின் மறைவுக்கு மறு நாள் தல்ஹா (ரலி) அவர்களின் மகனார் இம்ரான் இப்னு தல்ஹா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களைச் சந்திக்க வந்தார்கள்.

இம்ரான் (ரலி) அவர்களிடத்தில் அலீ (ரலி) அவர்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரின் நலம் குறித்தும் தனித்தனியே விசாரித்தார்கள். பின்னர் அலீ (ரலி) அவர்கள்இம்ரானை நோக்கிஎன் சகோதரனின் மகனே! நானும் உமது தந்தையும் எப்படிப்பட்ட தோழர்கள் தெரியுமா?”…

அல்லாஹ் கூறுகின்றானேஅவர்களின் உள்ளங்களில் படிந்திருக்கும் குரோதங்களை நாம் அகற்றி விடுவோம். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக கட்டில்களில் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள்” ( அல்குர்ஆன்: 15 : 48 ) என்ற இறை வசனத்திற்கு ஏற்ப அல்லாஹ் என்னையும் உமது தந்தையையும் ஆக்கவேண்டும்என்றே நான் விரும்புகின்றேன் அதையே நானும் அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கின்றேன்என்று கூறினார்கள்.

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அருகிலிருந்த இருவர்அல்லாஹ் தான் இந்த விஷயத்தில் நீதி தரவேண்டும். நேற்று ஒருவருக்கொருவர் எதிரெதிர் திசையில் நின்று சண்டையிட்டுக் கொண்டார்கள். இன்றுநாளை சுவனத்தில் நண்பர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகபேசிக் கொள்கின்றார்கள்.

இதைக் கேட்டதும் அலீ (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் பரிசுத்தப் பூமியை விட்டும் நீங்கள் எழுந்து செல்லுங்கள். “எங்கள் இருவருக்கும் இவ்வாறு ஆசிக்கத் தகுதி இல்லை என்று யார் சொன்னது? நாங்கள் ஆசிக்காமல் வேறு யார் ஆசிக்கத் தகுதி படைத்தவர்கள்?” என்று கோபமாகக் கேட்டார்கள்.

ويسأل بعضهم أمير المؤمنين علياً عن "أهل الجمل " أمشركون هم؟ فيقول رضي الله عنه: من الشرك فرُّوا .

قال: أمنافقون هم؟ فيقول رضي الله عنه: إن المنافقين لا يذكرون الله إلاّ قليلاً .

فيقال: فمن هم إذن؟ فيقول كرَّم الله وجهه: إخواننا بغوا علينا.

ஒரு சமயம் சிலர் அலீ (ரலி) அவர்களிடம் வந்து உங்களை எதிர்த்த ஜமல் கலகக்காரர்கள்முஷ்ரிக்குகளா?” என்று கேட்டனர்.

அதற்கு அலீ (ரலி) அவர்கள்அவர்களுக்கும் இணைவப்பிற்கும் துளியளவு கூட சம்பந்தமில்லை. அவர்கள் இணைவைப்பிலிருந்து விலகி ஓடியவர்கள்என்றார்கள்.

அப்படியானால், ”அவர்கள் நயவஞ்சகர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு, அலீ (ரலி) அவர்கள்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை கொஞ்சமாகத்தானே நினைவு கூறுவார்கள். ஆனால், இவர்களோ படைத்த ரப்பை அதிகமதிகம் நினைவு கூர்பவர்கள் ஆயிற்றேஎன்றார்கள்.

அப்படியானால், ”அவர்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு, அலீ (ரலி) அவர்கள்அவர்கள் நம் சகோதரர்கள் தான், எனினும் நமக்கு எதிராக துணிந்து விட்டவர்கள்என்றார்கள்.

حدثنا عبد الله بن محمد بن يوسف قال: حدثنا يحيى بن مالك بن عابد قال: حدثنا أبو الحسن محمد بن محمد بن سلمة البغدادي بمصر، قال: حدثنا أبو بكر محمد بن الحسن بن دريد قال: أخبرنا العكلي عن الحرمازي عن رجل من همدان قال: قال معاوية لضرار الصدائي: يا ضرار صف لي علياً. قال: أعفني يا أمير المؤمنين. قال: لتصفنه. قال: أما إذ لا بد من وصفه فكان والله بعيد المدى شديد القوى يقول فصلاً ويحكم عدلاً يتفجر العلم من جوانبه وتنطق الحكمة من نواحيه. ويستوحش من الدنيا وزهرتها ويستأنس بالليل ووحشته وكان غزير العبرة. طويل الفكرة يعجبه من اللباس ما قصر ومن الطعام ما خشن. وكان فينا كأحدنا يجيبنا إذا سألناه وينبئنا إذا استنبأناه. ونحن والله مع تقريبه إيانا وقربه منا لا نكاد نكلمه هيبةً له. يعظم أهل الدين ويقرب المساكين لا يطمع القوي في باطله ولا ييئس الضعيف من عدله. وأشهد أنه لقد رأيته في بعض مواقفه وقد أرخى الليل سدوله وغارت نجومه قابضاً على لحيته يتململ تململ السليم ويبكي بكاء الحزين ويقول: يا دنيا غري غيري ألي تعرضت أم إلي تشوقت هيهات هيهات قد باينتك ثلاثاً لا رجعة فيها، فعمرك قصير وخطرك قليل. آهٍ من قلة الزاد وبعد السفر ووحشة الطريق. فبكى معاوية وقال: رحم الله أبا الحسن، كان والله كذلك فكيف حزنك عليه يا ضرار؟ قال: حزن من ذبح ولدها وهو في حجرها.

அலீ (ரலி) அவர்களின் வஃபாத்திற்குப் பிறகு, ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் நெருங்கிய பணியாளர், தோழர் ளிரார் அஸ்ஸுதாயீ (ரலி) அவர்களை அழைத்து அலீ (ரலி) அவர்களின் குண நலன்கள் குறித்தும், அவர்களின் இபாதத்கள் குறித்தும் எனக்கு சொல்லுங்களேன் என்றார்.

அப்போது, ளிரார் அஸ்ஸுதாயீ (ரலி) அவர்கள் “அலீ (ரலி) அவர்களின் தூர நோக்கு சிந்தனையையும், வலிமையையும், பேச்சின் வளத்தையும், தீர்ப்பின் நீதத்தையும், அவர்களின் அபார நினைவாற்றலையும், உலகப் பற்றற்ற தன்மையையும், சுவனத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த ஆவலையும், நரகத்தை நினைத்து அவர்கள் வடித்த கண்ணீரையும், தீனுக்கு அவர்கள் ஆற்றிய சேவையையும், ஏழைகளுக்கு அவர்கள் வழங்கிய சேவைகளையும், அவர்களின் இரவு வணக்கத்தையும், பேணுதலான வாழ்க்கை முறைகளையும் அடுக்கடுக்காக” சொல்லி முடித்தார்கள்.

எதிரே அமர்ந்திருந்த முஆவியா (ரலி) அவர்களோ தேம்பித் தேம்பி அழுதார்கள். பின்னர் “அல்லாஹ் அபுல் ஹஸன் அலீ அவர்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்.

ளிராரே! நீர் கூறியது முற்றிலும் உண்மையே! அலீ (ரலி) அவர்கள் அப்படித்தான் இந்த உலகிலே வாழ்ந்தார்கள்” என்றார்கள் முஆவியா (ரலி) அவர்கள்.

பின்னர் ளிராரிடம், முஆவியா (ரலி) அவர்கள் “அலீ (ரலி) அவர்களின் பிரிவை நீங்கள் எவ்வாறு கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, ளிரார் அவர்கள் “தாயின் மடியில் இருக்கிற ஒரு குழந்தையை தாயின் கண் முன்னால் அறுத்தால் அந்த தாயின் நிலை எவ்வாறு இருக்குமோ அவ்வாறு தான் எங்களின் நிலையும் இருக்கின்றது” என்று பதில் கூறினார்கள்.

( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபதில் அஸ்ஹாப், இஃலாமுல் மூக்கியீன் )

நபித்தோழர்கள் கருத்துவேறுபாடுகளை ஒரு போதும் விரும்பியதில்லை. அப்படியே அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்த எந்த ஒரு விஷயமும் அடிப்படை கொள்கையில் அல்ல. ஃப்ரூஉ என்று சொல்லப்படுகிற வெளிவிவகாரங்களில் தான் என்பதை உணர வேண்டும்.

அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அதில் அவரவர்கள் நிலையாக, நம்பிக்கையாக இருந்தார்களே தவிர மற்றவர்களை பிழையானவர்களாகவோ, வழிகேடர்களாகவோ, முஷ்ரிக் என்றோ, காஃபிர் என்றோ அழைக்கவில்லை.

மேலும், பெரும்பாலும் அவர்கள் இஜ்மாயிய்யத் எனும் ஒற்றுமை குழையாமல் பார்த்துக் கொண்டார்கள்.

தங்களின் கருத்து வேறுபாடுகளும், முடிவுகளும் தவறென்று தகுந்த ஆதாரங்களோடு அவர்களுக்கு உணர்த்தப்படுமேயானால் உடனடியாக அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வார்கள்.

حدثني محمد بن حاتم حدثنا يحيى بن سعيد عن ابن جريج ح وحدثني محمد بن رافع واللفظ له حدثنا عبد الرزاق بن همام أخبرنا ابن جريج أخبرني عبد الملك بن أبي بكر بن عبد الرحمن عن أبي بكر قال سمعت أبا هريرة رضي الله عنه يقص يقول في قصصه من أدركه الفجر جنبا فلا يصم فذكرت ذلك لعبد الرحمن بن الحارث لأبيه فأنكر ذلك فانطلق عبد الرحمن وانطلقت معه حتى دخلنا على عائشة وأم سلمة رضي الله عنهما فسألهما عبد الرحمن عن ذلك قال فكلتاهما قالت كان النبي صلى الله عليه وسلم يصبح جنبا من غير حلم ثم يصوم قال فانطلقنا حتى دخلنا على مروان فذكر ذلك له عبد الرحمن فقال مروان عزمت عليك إلا ما ذهبت إلى أبي هريرة فرددت عليه ما يقول قال فجئنا أبا هريرة وأبو بكر حاضر ذلك كله قال فذكر له عبد الرحمن فقال أبو هريرة أهما قالتاه لك قال نعم قال هما أعلم ثم رد أبو هريرة ما كان يقول في ذلك إلى الفضل بن العباس فقال أبو هريرة سمعت ذلك من الفضل ولم أسمعه من النبي صلى الله عليه وسلم قال فرجع أبو هريرة عما كان يقول في ذلك قلت لعبد الملك أقالتا في رمضان قال كذلك كان يصبح جنبا من غير حلم ثم يصوم

விடியற்காலைப் பொழுதில் குளிப்பு கடமையானவருக்கு நோன்பு கூடாது எனும் கருத்தை அபூஹுரைரா (ரலி) அவர்கள் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்களான நபி {ஸல்} அவர்களின் மனைவியர்களில் பலர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.

இது குறித்த தகவல் அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு தெரிய வந்தபோது தங்களின் நிலைப்பாட்டை கைவிட்டு விட்டார்கள்.

( நூல்: முஸ்லிம், பாபு ஸிஹ்ஹது ஸவ்மு மன் தலஅல் ஃபஜ்ரி வஹுவ ஜுனுபுன்.. )

அதே போன்று நபித்தோழர்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் மேற்கொள்கிற எந்த ஒரு இஜ்திஹாதும், சட்ட முடிவும் நபி {ஸல்} அவர்களின் சொல்லுக்கு ஒத்து இருக்கிற அளவிலேயே எடுத்து இருப்பார்கள். மனோ இச்சையின் அடிப்படையில் அவர்கள் ஒரு போதும் மார்க்க ஃபத்வா வழங்கமாட்டார்கள்.

حدثنا عبد الرحمن بن مهدي عن سفيان عن فراس عن الشعبي عن مسروق عن عبد الله أنه سئل عن رجل تزوج امرأة فمات عنها ولم يدخل بها ولم يفرض لها صداقا فقال عبد الله  
لها الصداق ولها الميراث
 وعليها العدة
فقال معقل بن يسار  شهدت رسول الله صلى الله عليه وسلم قضى في بروع بنت واشق مثل ذلك

ஒரு முறை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் ஒரு மஸ்அலா குறித்து சட்டம் கேட்கப்பட்டது. “ஒருவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தார். ஆனால், அவளுக்குரிய மஹரை நிர்ணயிக்காமலேயே, அவளோடு உறவு கொள்ளாமலேயே அவர் இறந்து விட்டார். அப்பெண்ணுக்குரிய மஹர் தொகை எவ்வளவு?” என்று.

அதற்கு, “இது குறித்து அண்ணலார் {ஸல்} அவர்கள் ஏதும் தீர்ப்பளித்திருக்கின்றார்களா? என்று எனக்குத் தெரியாது” என்று கூறி மஸ்அலா கேட்டு வந்தவர்களை திருப்பி அனுப்பி விட்டார்கள்.

ஆனால், மீண்டும் மீண்டும் அம்மக்கள் வந்து கேட்கவே இஜ்திஹாத் செய்து தங்களின் முடிவை தெரிவித்தார்கள்.

“அப்பெண்ணுக்கு இணையான தரத்திலுள்ள மற்ற பெண்கள் எவ்வளவு மஹர் பெற்றிருக்கின்றார்களோ அதே அளவு மஹர் தொகை அப்பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும். அதை விடக் குறைக்கக் கூடாது.

மேலும், அப்பெண் இத்தாவையும் நிறைவேற்ற வேண்டும். கணவனுடைய சொத்திலிருந்து அவளுக்கும் பங்கு வழங்கப்பட வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்கள்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் வழங்கிய இந்தத் தீர்ப்பைக் கேள்விப் பட்ட மஃகல் இப்னு யஸார் (ரலி) அவர்கள் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைச் சந்தித்து “எங்களுடைய கோத்திரத்தில் இதே போன்ற பிரச்சனை புரூவு பிந்த் வாஸிக் எனும் பெண்மணிக்கு ஏற்பட்ட போது நபி {ஸல்} அவர்களிடம் நாங்கள் கொண்டு வந்தோம்.

அப்போது நபி {ஸல்} அவர்கள் இவ்விதமே தீர்ப்பளித்தார்கள்” என்று மஃகல் (ரலி) அவர்கள் சான்று பகர்ந்த போது, இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் “தாம் இஸ்லாத்தை தழுவும் போது ஏற்பட்ட அதே மகிழ்ச்சி அதன் பிறகு இப்போது தான் தாம் அடைந்ததாக தெரிவித்தார்கள்.
             ( நூல்: முஸன்னஃப் அபீ ஷைபா, முஸ்னத் அஹ்மத், நஸாயீ )

ஆனால், இன்றோ கருத்து வேறுபாடு கொண்டிருக்கிற இருவேறு தலைவர்கள், இருவேறு இயக்கத்தினர்கள் ஒருவர் மற்றொருவரை எந்த அளவு கீழ்த்தரமாக விமர்சிக்கின்றார்கள். முஷ்ரிக் என்றும் காஃபிர் என்றும் கொஞ்சம் கூட நா கூசாமல் பொது மேடைகளில் முழங்கி வருகின்றார்கள் என்பதை நாம் சிந்திக்க கடமை பட்டிருக்கின்றோம்.

மேலும், இருவேறு கருத்து கொண்டவர்கள் ஜமாத் தொழுகையை புறக்கணிப்பதும், தனியாக ஜமாத் நடத்துவதும், தனிப்பள்ளி அமைப்பதும் பரவலாகி வருவதையும் பார்த்து வருகின்றோம்.

وفي صحيح البخاري أن عبد الله بن عمر رضي الله عنه كان يصلي خلف الحجاج بن يوسف الثقفي، وكذا أنس بن مالك، وكان الحجاج فاسقاً ظالماً،

இப்னு உமர் (ரலி) அவர்களும், அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களும் கொடுங்கோன்மை புரிந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் பின்னால் நின்று தொழுதிருக்கின்றார்கள்.

وفي الصحيح أن عثمان رضي الله عنه لما حصر صلى بالناس شخص، فسأل سائل عثمان: إنك إمام عامة وهذا الذي صلى بالناس إمام فتنة؟ فقال
يا ابن أخي، إن الصلاة من أحسن ما يعمل الناس، فإذا أحسنوا فأحسن معهم وإذا أساءوا فاجتنب إساءتهم

அப்துல்லாஹ் இப்னு அதீ (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டில் சிறைவைக்கப்பட்டு முற்றுகையிட்டிருந்த போது உஸ்மான் (ரலி) அவர்களிடம் “இந்த கலகக்காரர்களின் பின்னால் நின்று தொழலாமா?” என்று வினவினார்.

அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் ”என் சகோதரனின் மகனே! மனிதர்கள் செய்யும் அமல்களில் மிகவும் அழகிய அமல் தொழுகைதான். உன்னோடு நல்ல முறையில் நடந்து கொள்பவர்களோடு நீயும் நல்ல முறையில் நடந்து கொள். உன்னோடு தீய முறையில் நடந்து கொள்பவர்களோடு நீ அவர்களுக்கு தீங்கு செய்வதில் இருந்தும் தவிர்ந்து வாழ்ந்து கொள்! அவ்வளவு தான். மற்றபடி தொழுகையை அவர்களோடு சேர்ந்தே நிறைவேற்று” என்று பதில் கூறினார்கள்.

மேலும், இமாம்கள் அனைவரும் ஏகோபித்து சொல்வதும் இதே கருத்தைத் தான்.

இன்றைய தவ்ஹீத் இயக்கத்தினருக்கு எதிரான நிலைப்பாட்டில் நபித்தோழர்கள் இருப்பதாலோ என்னவோ இன்றைய நவீன கொள்கைவாதிகள் நபித்தோழர்களின் எந்த ஒரு செயலையும் பெரும்பாலும் அங்கீகரிப்பதில்லை.

தாபியீன்கள் தபவுத் தாபியீன்களின் காலம்…

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்கா வெற்றியின் போது 10000 முஸ்லிம்களை இந்த உம்மத்தின் முன்னால் சமர்ப்பித்தார்கள்.

ஹுனைன் யுத்தத்தின் போது 13000 முஸ்லிம்களை சமர்ப்பித்தார்கள். இதுவே ஹஜ்ஜத்துல் விதாவிலே லட்சத்தையும் தாண்டி நின்றது.

அதன் பின்னர் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி – அன்ஹும்) ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் உலக நாடுகளை நோக்கிய படையெடுப்புகள் என பல்வேறு பகுதிகளில் நபித்தொழர்கள் பிரிந்து போயினர்.

அந்தந்த நபித்தோழர்கள் தங்கள் வசித்த பகுதியில் தங்களுக்கு கிடைத்திருந்த நபிமொழிகளின் படி அப்பகுதி மக்களிடையே தீர்ப்பளித்துக் கொண்டும், புனித நபித்தோழர்கள் வழங்கிய ஃபத்வாக்களை வழங்கியும் வந்தனர்.

وقد حمل علم وفقه الفقهاء والقراء من الصحابة بعدهم من تلقى عنهم من التابعين، أمثال: سعيد بن المسيب  الذي يعتبر راوية عمر وحامل فقهه في المدينة، وعطاء بن أبي رباح في مكة، وطاووس في اليمن، ويحيى بن أبي كثير في اليمامة، والحسن في البصرة، ومكحول في الشام، وعطاء في خراسان، وعلقمة في الكوفة وغيرهم. . . وهؤلاء كانوا كثيراً ما يمارسون الفتوى والاجتهاد بمشهد من أصحاب رسول الله صلى الله عليه وسلم الذين تلقوا العلم والفقه عنهم، وتربوا على أيديهم، وتأدبوا بآدابهم، وتأثروا بمناهجهم في الاستنباط، فما خرجوا عن آداب الصحابة في الاختلاف عندما اختلفوا، ولا جاوزوا تلك السيرة، وهؤلاء هم فقهاء الجمهور الذين تأثرت بهم جماهير الأمة، وعنهم تلقوا الفقه، ولعل مما يوضح ذلك الأدب هاتان المناظرتان في الدية.

இந்த நபித்தோழர்களிடம் மாணவர்களாகவும், தோழர்களாகவும் இருந்த பல தாபீயீன்கள் அவர்களின் ஷரீஆ விவகாரங்களையும், மார்க்க ஃபத்வாக்களையும் தீவிரமாக கண்காணித்து பதிவு செய்து கொண்டனர்.

மதீனாவிலே ஸயீத் இப்னு முஸய்யிப் (ரஹ்) அவர்களும், மக்காவிலே அதாஃ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்களும், யமனிலே தாவூஸ் (ரஹ்) அவர்களும், யமாமாவிலே யஹ்யா இப்னு அபீகஸீர் (ரஹ்) அவர்களும், பஸராவிலே ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களும், ஷாமிலே மக்ஹூல் (ரஹ்) அவர்களும், குராஸானிலே அதாஃ (ரஹ்) அவர்களும், கூஃபாவிலே அல்கமா (ரஹ்) அவர்களும் இம்மாபெரும் பணியில் தங்களின் ஆயுட்காலத்தை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

அடுத்த தலைமுறையினரான தபவுத்தாபியீன்களிடம் தங்களின் இல்மையும், ஃபிக்ஹையும், நபித்தோழர்களின் ஃபத்வாக்களையும் அழகிய முறையில் ஒப்படைத்துச் சென்றனர். (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!)

இமாம்களின் காலம்…

மிகவும் கவனமாக தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இல்மையும், ஃபிக்ஹையும், முன்னோர்களான ஃபத்வாக்களையும் அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய உலகுக்கு புத்துயிர் கொடுத்தனர். தங்களின் மாணவர்களிடம் இந்த அமானிதத்தைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தனர்.

காலங்கள் மாறுகிற போது காட்சிகளும், பிரச்சனைகளும் மாறிக் கொண்டிருந்தன. தபவுத் தாபியீன்கள் இங்கு தான் கியாஸ் மற்றும் தஃவீல் என்ற இருவழிப்பாதைகளைத் தேர்ந்தெடுத்தனர்.

அதுவும் முந்தைய இருவழிகளான அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவுக்கு முரண்படாத, முன்னோர்களான நபித்தோழர்களின் இஜ்மாவை புறந்தள்ளாத அமைப்பில் தங்களின் சட்ட முன்வரைவைத் தொகுத்தனர்.

தபவுத்தாபியீன்களின் காலம் தான் ஃபிக்ஹ் –ன் பொற்காலம் எனலாம். அந்த அளவுக்கு பெரும் பெரும் இஜ்திஹாதுகளும், முஜ்தஹிதளும் இந்த உம்மத்திற்கு கிடைத்தது.

அவர்களிடம் இருந்து அறிவுச்சுடரைப் பெற்ற இமாம்கள் சிற்சில மாற்றங்களோடு தங்களிடம் அந்த அமானிதம் தரப்பட்டதை உணர்ந்தார்கள். அதைச் சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டார்கள்.

இதன் பின்னர் தபவுத்தாபியீன்களும், இமாம்களும் உயிர் நீக்கவே மக்களிடையே பல்வேறு மஸ்லக்கள், மத்ஹப்கள் – வழிமுறைகள் பின்பற்றப்பட ஆரம்பித்தன.

ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மக்களின் நிலையில் மாற்றமும் இத்தகைய மனோ நிலையும் ஏற்பட்டது.

அவைகளில் மிகவும் பிரபல்யமாகவும், அதிகமான மக்களாளும் பின்பற்றப் பட்ட மத்ஹப்கள் வழிமுறைகள் இவைகள் தாம்.

أولاً: الإمام أبو سعيد الحسن بن يسار البصري توفي سنة (110هـ ).
ثانياً: الإمام أبو حنيفة النعمان بن ثابت بن زوطي توفي سنة (150هـ ).
ثالثاً: الإمام الأوزاعي أبو عمرو عبد الرحمن بن عمرو بن محمد توفي سنة (157هـ ).
رابعاً: الإمام سفيان بن سعيد بن مسروق الثوري توفي سنة (160هـ ).
خامسا: الإمام الليث بن سعد توفي سنة (175هـ ).
سادساً: الإمام مالك بن أنس الأصبحي توفي سنة (179هـ ).
سابعاً: الإمام سفيان بن عينة توفي سنة (198هـ ).
ثامناً: الإمام محمد بن إدريس الشافعي توفي سنة (204هـ ).
تاسعاً: الإمام أحمد بن محمد بن حنبل توفي سنة (241هـ ).
وهناك الإمام داود بن على الأصبهاني البغدادي المشهور بالظاهري نسبة إلى الأخذ بظاهر ألفاظ الكتاب والسنة توفي سنة (270هـ ).
وغير هؤلاء كثير أمثال: إسحاق بن راهويه المتوفى سنة (238هـ )، وأبي ثور
إبراهيم بن خالد الكلبي المتفى سنة(240هـ ). وهناك آخرون لم تنتشر مذاهبهم،
ولم يكثر أتباعهم، أو اعتبروا مقلّدين لأصحاب المذاهب المشهورة.

சிலர், அபூ ஸயீத் ஹஸன் இப்னு அல்யஸார் அல் பஸரீ அவர்களையும், சிலர் அபூஹனீஃபா நுஃமான் இப்னு ஸாபித் அவர்களையும், சிலர் அவ்ஸாயீ அபூஅம்ர் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்களையும், சிலர் ஸுஃப்யான் இப்னு ஸயீத் (ரஹ்) அவர்களையும், சிலர் லைஸ் இப்னு ஸஅத் (ரஹ்) அவர்களையும், சிலர் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) அவர்களையும், சிலர் ஸுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்களையும், சிலர் முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ்ஷாஃபிஇ (ரஹ்) அவர்களையும், சிலர் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களையும், சிலர் தாவூத் இப்னு அலிய்யுல் இஸ்பஹானீ (ரஹ்) அவர்களையும், சிலர் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி (ரஹ்) அவர்களையும், அபூஸவ்ர் இப்ராஹீம் இப்னு காலித் (ரஹ்) அவர்களையும் பின்பற்றுபவர்களாக இருந்தனர்.

ஆனால், நான்காம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த ஆலிம்களும், மக்களும் தங்களின் மனோஇச்சையின் படி வாழத்துவங்கினர். அரும்பாடு பட்டு பாதுகாத்த ஃபிக்ஹை சீரழித்தனர்.

أما بعد القرن الرابع فقد تغيرت الحال ولندع حجة الإسلام الغزالي (توفي: 505هـ ) يصف لنا ذلك حيث يقول: "اعلم أن الخلافة بعد رسول الله صلى الله عليه وسلم تولاها الخلفاء الراشدون المهديون، وكانوا أئمة علماء بالله تعالى، فقهاء في أحكامه، وكانوا مشتغلين بالفتاوى في الأقضية، فكانوا لا يستعينون بالفقهاء إلاّ نادراً في وقائع لا يستغني فيها عن المشاورة، فتفرغ العلماء لعلم الآخرة، وتجردوا لها وكانوا يتدافعون الفتاوى وما يتعلق بأحكام الخلق من الدنيا، وأقبلوا على الله تعالى بكنه اجتهادهم كما نقل من سيرهم، فلما أفضت الخلافة من بعدهم (أي الخلفاء) إلى قوم تولوها بغير استحقاق ولا استقلال بعلم الفتاوى والأحكام اضطروا إلى الاستعانة بالفقهاء، وإلى استصحابهم في جميع أحوالهم لاستفتائهم في مجاري أحكامهم، وكان قد بقي من علماء التابعين من هو مستمر على الطراز الأول، وملازم صفو الدين، ومواظب على سمت علماء السلف، فكانوا إذا طلبوا هربوا وأعرضوا، فاضطر الخلفاء إلى الإلحاح في طلبهم لتولية القضاء والحكومات ، فرأى أهل تلك الأعصار عز العلماء، وإقبال الأئمة والولاة عليهم مع إعراضهم عنهم، فاشرأبّوا لطلب العلم توصلاً إلى نيل العز، ودرك الجاه من قبل الولاة، فأكبوا على الفتاوى، وعرضوا أنفسهم على الولاة، وتعرّفوا إليهم، وطلبوا الولايات والصلات منهم، فمنهم من حرم، ومنهم من أنجح، والمنجح لم يخل من ذل الطلب، ومهانة الابتذال، فأصبح الفقهاء بعد أن كانوا مطلوبين طلبين، وبعد أن كانوا أعزّة بالإعراض عن السلاطين أذلّة بالإقبال عليهم، إلاّ من وفقه الله تعالى في عصر من علماء دين الله، وقد كان أكثر الإقبال في تلك الأعصار على علم الفتاوى والأقضية لشدة الحاجات إليها في الولايات والحكومات . ثم صدر بعدهم من الصدور والأمراء من يسمع مقلات الناس في قواعد العقائد، والمجادلة في الكلام، فأكب الناس على علم الكلام وأكثروا فيه التصانيف، ورتبوا فيه طرق المجادلات، واستخرجوا فنون المناقضات في المقالات، وزعموا أن غرضهم الذب عن دين الله، والنضال عن السنّة وقمع المبتدعة، كما زعم من قبلهم أن غرضهم بالاشتغال بالفتاوى: الذين، وتقلد أحكام المسلمين إشفاقاً على خلق الله، ونصيحة لهم، ثم ظهر بعد ذلك من لم يستصوب الخوض في الكلام، وفتح باب المناظرة فيه، لما كان قد تولد من فتح بابه من التعصبات الفاحشة، والخصومات الفاشية المفضية إلى إهراق الدماء وتخريب البلاد، ومالت نفسه إلى المناظرة في الفقه وبيان الأولى من مذهب الشافعي وأبي حنيفة، رضي الله عنهما، على الخصوص، فترك الناس الكلام وفنون العلم وانثالوا على المسائل الخلافيّة بين الشافعي وأبي حنيفة على الخصوص، وتساهلوا في الخلاف مع مالك وسفيان وأحمد(157) رحمهم الله تعالى وغيرهم، وزعموا أن غرضهم استنباط دقائق الشرع، وتقرير علل المذهب، وتمهيد أصول الفتاوى، وأكثروا فيها التصانيف والاستنباطات ورتبوا فيها أنواع المجادلات والتصنيفات، وهم مستمرون عليه إلى الآن، وليس ندري ما الذي يُحدث الله فيما بعدنا من الأعصار، فهذا هو الباعث على الإكباب على الخلافيات والمناظرات لا غير، ولو مالت نفوس أرباب الدنيا إلى الخلاف مع إمام آخر من الأئمة وإلى علم آخر من العلوم لمالوا أيضاَ معهم ولم يسكتوا عن التعلل بأن ما اشتغلوا به هو علم الدين، وأن لا مطلب لهم سوى التقرب إلى رب العالمين".


அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கின்ற ஓர் அறிவிப்பில்….

“நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் தங்களின் மனோ இச்சையின் அடிப்படையில் வாழத்துவங்கினர். முன்னோர்களான நபித்தோழர்களின் காலத்திலும், தாபியீன்கள் காலத்திலும், தபவுத்தாபியீன்கள், இமாம்கள் காலத்திலும் பின்பற்றப்படாத பல நடைமுறைகளைப் பின்பற்றினர்.

அதற்காக முன்னோர்களின் ஃபத்வாக்களை தர்க்க ரீதியில் அணுகினர்.

وقد يسال أحدهم عن الوضوء من لمس المرأة، ومس الذكر فيقول: لا ينتقض به الوضوء عند أبي حنيفة.

وإذا سئل عن لعب الشطرنج وأكل لحوم الخيل قال: حلال عند الشافعي .

وإذا سئل عن تعذيب المتهم، أو مجاوزة الحد في التعزيرات قال: أجاز ذلك مالك .

وإذا أراد أن يحتال لأحد في بيع وقف إذا تخرب وتعطلت منفعته، ولم يكن لمتوليه ما يعمره به أفتاه بجواز ذلك على مذهب أحمد؛ حتى أصبحت أوقاف المسلمين تتحول من الوقف إلى الملك الخاص في كل مجموعة من السنين(161).

وهكذا ضاعت مقاصد الشرع بضياع تقوى الله، وأهملت قواعده الكلية، حتى بلغ الأمر بسفهاء الشعراء وغواتهم ومجّانهم حد التندر بأحكام الله كأن يقول أبو نواس:

أباح العراقي النبيـذ وشربه وقال حرامان المدامة والسكر

وقال الحجازي الشرابان واحد فحلت لنا من بين قوليهما الخمر

سآخذ من قوليهما طرفيهما وأشربها لأفارق الوازر الوزر


பெண்ணை தொட்டால் உளூ முறியுமா? ஒரு ஆண் தன் மர்ம உறுப்பைத் தொட்டால் உளூ முறியுமா? என்று கேட்டால் இமாம் ஷாஃபிஇ முறியும் என்கிறார். இமாம் அபூஹனீஃபா முறியாது என்கிறார் எனவே அபூஹனீஃபாவைப் பின் பற்றுவோம்.

சதுரங்கம் விளையாடலாமா? ஆம்! இமாம் ஷாஃபிஇ கூடும் என்கிறார். எனவே விளையாடலாம். குதிரை இறைச்சி சாப்பிடலாமா? ஆம்! இமாம் ஷாஃபிஇ கூடும் என்கிறார். எனவே சாப்பிடலாம்.

சந்தேகத்திற்குரிய நபரை அடிக்கலாமா? ஆம்! இமாம் மாலிக் கூடும் என்கிறார். எனவே அடிக்கலாம்.

இராக் வாசிகள் போதை தரும் குடிபானங்களைச் சாப்பிடக் கூடாது. நபீத் எனும் பழச்சாற்றை சாப்பிடலாம் என்றனர்.

ஹிஜாஸ் வாசிகள் மதுவைத்தவிர மற்றெல்லாவற்றையும் சாப்பிடலாம் என்றனர்.

மக்களைத் திருப்தி படுத்தவும், ஆட்சியாளர்களின் அன்பைப் பெறுவதற்கும் சட்டமியற்றும் ஃபுகஹாக்கள் உருவானார்கள்.

இப்படியே குழப்பங்களும் பிரச்சனைகளும் முற்றி அழகிய தோற்றத்திலிருந்த ஃபிக்ஹை அழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றனர்.

أما الذين تأصلت مذاهبهم وبقيت إلى يومنا هذا، ولا يزال لها الكثير من المقلدين في ديار الإسلام كلها، ولا يزال فقههم وأصوله مدار التفقه والفتوى - عند الجمهور- أولئك هم الأئمة الربعة: أبو حنيفة، ومالك، والشافعي، وأحمد.

அல்லாஹ் அந்த காலத்திலும் வாழ்ந்த சில நல்லுள்ளம் கொண்டவர்களின் இதயத்தில் சில உதிப்புகளை வழங்கினான்.

அவர்கள் மீண்டும் இந்த உம்மத்தைப் புணரமைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தினர்.

அவர்கள் மக்கள் முன் ஒருமித்த ஓர் தீர்மானத்தை முன் வைத்தனர். இனிமேல் அவரவர் விருப்பம் போல் ஃபிக்ஹைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

நான்கு இமாம்களோடு நின்று விடுவோம். அவரவர்கள் அவரவர்களின் இமாம்களோடு நின்று விடுவோம்.

அந்த மேன்மக்களின் பெரும் முயற்சியால் விளைந்த மாபெரும் நன்மையே இன்று அவனியில் நான்கு மத்ஹபுகளின் தோற்றமும் வளர்ச்சியும்.

சிதறிப் போயிருந்த மக்களையும், கருத்து வேறுபாடுகளால் காணாமல் போயிருந்த நல்ல பண்புகளையும் இன்று வரை நிலைத்திருக்க வைத்திருப்பது மத்ஹப் எனும் அழகிய வழிமுறைகளே!

இந்த மத்ஹபை விமர்சித்து அதன் முதுகின் மேல் சவாரி செய்து இந்த சமுதாயத்தைக் கூறுபோட்ட இயக்கவாதிகள் மத்ஹப்தான் பிரிவினையை உண்டாக்கியது என்கின்றனர்.

பிரிவினையை சரி செய்யப்போகிறோம் எனும் ஓங்கிய குரலோடு தவ்ஹீத் இயக்கங்களை ஆரம்பித்தவர்கள் இப்போது என்ன ஆனார்கள்?

1. கையை அசைப்பதிலே இரட்டை நிலைப்பாடு. 2. ஜகாத் விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு. 3. பிறை விஷயத்தில் மூன்று நிலைப்பாடு. 4. சூனியம் விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு. 5. ஒற்றுமை விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு. 6. அரசியல் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு. என நூற்றுக்கும் மேற்பட்ட விஷயங்களில் இவர்கள் முரண்பட்டு நிற்கின்றனர்.

இவர்கள் கருத்து வேறுபாடுகள் சமூகத்தைப் பிரிக்கின்றது என்று முழங்குவார்கள். அதே நேரத்தில் சத்தமில்லாமல் அதே கருத்து வேறுபாடுகளால் இவர்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்தும் போவார்கள்.

ஒன்றிணைக்க வந்தவர்கள் ஏன் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து போனார்கள். இன்ஷா அல்லாஹ்.. எளிதில் அவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

அல்லாஹ் நேர்வழியில் நடந்திடும் பாக்கியத்தை வழங்குவானாக! அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மீது தொடர்ந்து நம்மைப் பயணிக்க வைப்பானாக!

              ஆமீன்!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!
                         வஸ்ஸலாம்!!!

கருத்துவேறுபாடுகள் ஏற்படக் காரணம் என்ன? இமாம்கள் எப்படித் தங்களின் ஆய்வுகளை மேற்கொண்டார்கள் என்பதை நாம் விட்டு விட்டோம். இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் காலங்களில் நாம் பதிவிடுவோம்..