Thursday 10 November 2016

உயர் ஷரீஅத்தை உயிர் கொடுத்தேனும் காப்போம்!!!



உயர் ஷரீஅத்தை உயிர் கொடுத்தேனும் காப்போம்!!!



சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் சமூகம்  பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வந்திருக்கின்றது.

கடந்த காலங்களில் சில போது, ஆளும் வர்க்கத்தின் துணை கொண்டு, சில போது ஊடகங்களின் துணை கொண்டு, சில போது நீதி மற்றும் சட்டத்தின் துணை கொண்டு, சில போது வன்முறை மற்றும் கலவரங்களின் துணை கொண்டு, சில போது விமர்சனங்களின் துணை கொண்டு இப்படியாக முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது முஸ்லிம் சமூகத்திற்கெதிராக ஆளும் அரசும், ஊடகங்களும், நீதி மற்றும் சட்டம் ஆகிய துறைகளும் ஒன்றிணைந்து பெரும் தாக்குதலை, நெருக்கடியை தந்து கொண்டிருக்கின்றது.

பொதுசிவில் சட்டம் தொடர்பாக தமிழகம் தாண்டி இந்திய தேச அளவில் கடுமையான எதிர்ப்புகள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் என இஸ்லாமிய சமூகத்தோடு, நடுநிலையாளர்களும் இணைந்து அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வரும் இந்த வேளையில் ஒட்டு மொத்த தேசத்தின் கவனத்தையும் செல்லாத நோட்டுக்களின் பக்கம் திசை திருப்பி சத்தமில்லாமல் ஏதோ சாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த தருணத்தில் தான் முஸ்லிம் சமூகம் அதிகம் விழிப்புணர்வுடன் இருக்க கடமைப்பட்டிருக்கின்றது.

உலகில் வேறெந்த சமூகத்திற்கும் எதிராக நடத்தப்படாத தாக்குதல்கள் எல்லாம் ஏன் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக நடத்தப்படுகின்றது? என்ற கேள்வி நம் ஆழ்மனதில் எழுமானால்.... அல்லாஹ் அதற்கு இப்படி பதில் தருவான்.
நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்பட்டு, உடலும், உயிரும் கருகி இறந்து போன இறைநம்பிக்கை கொண்டவர்கள் குறித்து அல்லாஹ் தன் அனுதாபத்தை தெரிவிக்கும் போது....

وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ (8) الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (9)

“அந்த இறைநம்பிக்கையாளர்களிடம் இவர்கள் பகைமை பாராட்டியதற்குக் காரணம் இதைத் தவிர வேறொன்றும் இல்லை: யாவற்றையும் மிகைத்தவனும், தனக்குத்தானே புகழுக்குரியவனும், வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பது தான்! மேலும், அந்த இறைவனோ அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்”.                             ( அல்குர்ஆன்: 85: 8, 9 )

எனவே, ஈமான் எனும் சுடர் எங்கெல்லாம் ஒளிப் பிரவாகம் எடுத்து வீசுகிறதோ அங்கெல்லாம் இந்த தாக்குதல்கள் நடத்தப்படும் எனவே, ஈமானைத் தாங்கி நிற்கும் இதயம் கொண்டவர்கள் அந்தத் தாக்குதல்களை தாங்கி நிற்க வேண்டும். அல்லது அந்த ஈமானுக்காக உயிரையும், உதிரத்தையும் கொடுக்க முன் வர வேண்டும் என்பதை மேற்கூறிய இறை வசனம் நமக்கு உணர்த்துகின்றது.

1. உயிரை விட ஷரீஅத்தே மேலானது....

எப்படி ஈமான் உயர்ந்ததோ அது போன்றே இந்த தீனும், ஷரீஅத்தும் உயர்ந்தது. ஏனெனில், அல்லாஹ் இந்த தீனை மாத்திரமே மார்க்கமாக பொருந்திக் கொண்டுள்ளான். மேலும், இந்த தீனின் எல்லா அம்சங்களையும் அவனே பூர்த்தியாக்கி தந்து நம்மையும் அதில் ஒருவராக அவனே இணைத்திருக்கின்றான்.


إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ

திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட வாழ்க்கை நெறி ( மார்க்கம்தீன் ) ஆகும்”. ( அல்குர்ஆன்: 3: 19 )

هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا

மேலும், அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும், அவன் வழங்கிய மார்க்கத்தில் ( இஸ்லாத்தில் ) உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை.

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் தான் இதற்கு முன்பும், இப்போதும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியுள்ளான். தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக!”.         ( அல்குர்ஆன்: 22: 78 )

ثُمَّ جَعَلْنَاكَ عَلَى شَرِيعَةٍ مِنَ الْأَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ لَا يَعْلَمُونَ (18)

”நபியே! இப்போது தீன் சம்பந்தமான விஷயங்களில் தெளிவான, பிரதான மார்க்கத்தில் ஷரீஅத்தில் உம்மை நாம் நிலை நிறுத்தியிருக்கின்றோம். எனவே, நீர் அதையே பின்பற்றுவீராக! அறியாத மக்களின் மனோ இச்சைகளைப் பின் பற்ற வேண்டாம்”.                                                 ( அல்குர்ஆன்: 45: 18 )

இந்த தீனில் இருக்கின்ற ஒன்றை இல்லை என்று சொல்லவோ, இல்லாத ஒன்றை இருக்கின்றது என்று சொல்லவோ, ஷரீஅத்தின் ஒரு அம்சத்தைக் குறைக்கவோ அல்லது ஒரு அம்சத்தைக் கூட்டவோ எவருக்கும் எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

ஆக இஸ்லாம் என்பது அல்லாஹ் மொழிந்த வார்த்தை எனவே, இஸ்லாத்தை ஒரு போதும் மாற்ற இயலாது. இஸ்லாமிய மார்க்கத்திலும் ஒரு போதும் மாற்றத்தைக் கொண்டு வர எவராலும் இயலாது.

அப்படி எவராவது ஷரீஅத்திற்கு எதிரான நிலைப்பாட்டை யார் எடுத்தாலும் அவர்களுக்கு எதிராக உயிர் போகிற வரை போராட வேண்டியது ஈமானை இதயத்தில் இடம் பெறச் செய்திருக்கிற ஒவ்வொரு முஸ்லிமின் இன்றியமையாத கடமையும், ஈமானின் ஓர் அம்சமும் ஆகும்.

ஏனெனில், உலகில் முதன் முதலாக அல்லாஹ்விற்காக மனித உயிர் ஒன்று அர்ப்பணம் செய்யப்பட்டது ஈமானுக்காக அல்ல ஷரீஅத்திற்காக என்பதை அல்குர்ஆனும், ஸுன்னாவும் குறிப்பிடுகின்றது.

ஆம்! அந்த முதல் உயிர்த்தியாகி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் ஹாபீல் ஆவார்கள்.

ஷரீஅத்திற்கெதிரான நிலைப்பாட்டைக் கையில் எடுத்த தம் சகோதரன் காபீலிடம் போராடி இறுதியில் தம் உயிரையே உயர் ஷரீஅத்திற்காக அர்ப்பணம் செய்தார்.

وقال محمد بن إسحاق: إن آدم كان يغشى حواء في الجنة قبل أن يصيب الخطيئة، فحملت فيها بقابيل وتوأمته أقليما، فلم تجد عليهما وحما ولا وصبا ولا طلقا حتى ولدتهما، ولم تر معهما دما فلما هبط إلى الأرض تغشاها فحملت بهابيل وتوأمته، فوجدت عليهما الوحم والوصب والطلق والدم، وكان آدم إذا شب أولاده يزوج غلام هذا البطن جارية بطن أخرى، فكان الرجل منهم يتزوج أية أخواته شاء إلا توأمته التي ولدت معه لأنه لم يكن يومئذ نساء إلا أخواتهم، فلما ولد قابيل وتوأمته أقليما ثم هابيل وتوأمته لبودا، وكان بينهما سنتان في قول الكلبي وأدركوا، أمر الله تعالى آدم عليه السلام أن ينكح قابيل لبودا أخت هابيل وينكح هابيل أقليما أخت قابيل، وكانت أخت قابيل أحسن من أخت هابيل، فذكر ذلك آدم لولده فرضي هابيل وسخط قابيل، وقال: هي أختي أنا أحق بها، ونحن من [ولادة] الجنة وهما من [ولادة] الأرض، فقال له أبوه: إنها لا تحل لك فأبى أن يقبل ذلك، وقال: إن الله لم يأمره بهذا وإنما هو من رأيه، فقال لهما آدم عليه السلام: فقربا قربانا فأيكما يقبل قربانه فهو أحق بها، وكانت القرابين إذا كانت مقبولة نزلت نار من السماء بيضاء فأكلتها، وإذا لم تكن مقبولة لم تنزل النار وأكلته الطير والسباع، فخرجا ليقربا [قربانا] وكان قابيل صاحب زرع فقرب صبرة من الطعام من أردأ زرعه وأضمر في نفسه ما أبالي أيقبل مني أم لا لا يتزوج أختي أبدا، وكان هابيل صاحب غنم فعمد إلى أحسن كبش في غنمه فقرب به وأضمر في نفسه رضا الله عز وجل فوضعا قربانهما أعلى الجبل، ثم دعا آدم عليه السلام فنزلت نار من السماء وأكلت قربان هابيل ولم تأكل قربان قابيل (2) فذلك قوله عز وجل: { فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا } [يعني هابيل] { وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الآخَرِ } يعني: قابيل فنزلوا على الجبل وقد غضب قابيل لرد قربانه وكان يضمر الحسد في نفسه إلى أن أتى آدم مكة لزيارة البيت، فلما غاب آدم أتى قابيل هابيل وهو في غنمه، { قَالَ لأقْتُلَنَّكَ } قال: ولِمَ؟ قال: لأن الله تعالى قبل قربانك وردّ قرباني، وتنكح أختي الحسناء وأنكح أختك الدميمة، فيتحدث الناس أنك خير مني ويفتخر ولدك على ولدي، { قَالَ } هابيل: وما ذنبي؟ { إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ }.

பூமிக்கு இறக்கப்பட்டு பல்லாண்டுகள் உருண்டோடிய பின்னர் ஆதம் {அலை} அவர்களும், ஹவ்வா {அலை} அவர்களும் அரபாவில் ஒன்றாக சந்தித்தனர்.

இதன்பின்னர் ஒன்று சேர்ந்து வாழ்ந்து ஒரு ஆணும், ஒரு பெண்ணுமாக பல குழந்தைகளைப் பெற்றனர். முதல் சூழில் பிறந்த குழந்தைக்கு காபீல் என்றும், பெண்ணுக்கு இக்லீமா என்றும், இரண்டாம் சூழில் பிறந்த ஆணுக்கு ஹாபீல் என்றும், பெண்ணுக்கு யஹூதா என்றும் பெயரிட்டனர்.

ஹழ்ரத் ஆதம் {அலை} அவர்களும் ஹழ்ரத் ஹவ்வா {அலை} அவர்களும் வெகு சந்தோஷமாக காலம் கழித்து வந்தார்கள்.

ஹழ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 40 முறை கர்ப்பமுற்றார்கள். ஒவ்வொரு தடவையிலும் ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்து கொண்டிருந்தன. முதன் முதலாக பிறந்த ஆண் குழந்தைக்கு காபீல் என்றும்,பெண் குழந்தைக்கு இக்லீமா என்றும் பெயரிடப்பட்டது.

சில தப்ஸீர்களில் ஹழ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 500 முறை கர்ப்பமுற்றதாகவும் இரண்டாவதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஹாபீல் என்றும், பெண் குழந்தைக்கு லியூஜா என்றும் பெயரிடப்பட்டது.

ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது ஷரீஅத்தில் சகோதர-சகோதரி திருமணங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன.

அதாவது ஒரு பிரசவத்தில் பிறக்கும் ஆணுக்கு, இன்னொரு பிரசவத்தில் பிறக்கும் பெண்ணுடன் திருமணம் நடந்து கொண்டிருந்தது. இந்த முறைப்படி ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காபீலுடைய சகோதரியை ஹாபீலுடனும், ஹாபீலுடைய சகோதரியை காபீலுடனும் திருமணம் செய்து விட முடிவு செய்தார்கள்.

காபீலுடைய சகோதரி மிகவும் அழகுடையவளாக இருந்தாள். எனவே காபீலுக்கு தனது சகோதரியையே மணம் முடிக்க விருப்பம் இருந்தது. அதுவுமின்றி காபீலும், அவனது சகோதரியும் ஹழ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவர்க்கத்தில் இருக்கும்போதே கர்ப்பத்தில் தங்கிவிட்டவர்கள்.

எனவே, சுவர்க்கத்திலேயே கர்ப்பத்தில் வந்து விட்ட தங்கள் இருவரையுமே திருமணம் செய்து விடுவதே நல்லதுஎன்று காபீல் வாதாடினான்.

காபீலுடைய இந்த வாதத்தை ஆதம் {அலை} அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் உத்திரவிற்கு மாறு செய்ய இயலாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்கள்.

ஆனால் காபீல் பிடிவாதம் பிடித்தான். எனவே, காபீலும் ஹாபீலும் அல்லாஹ்வின் பெயரால் குர்பானி சமர்ப்பிக்க வேண்டுமென்றும் யாருடைய குர்பானியை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறானோ அவன் இக்லீமியாவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆதம் {அலை} ஹிஸ்ஸலாம் அவர்கள் யோசனை சொன்னார்கள்.

அறுக்கப்பட்ட இறைச்சியை ஒரு பாறையின் மீது இருவரும் வைத்தார்கள். வானத்திலிருந்து ஒரு தீச்சுவாலை வந்து ஹாபீலுடைய இறைச்சியை பஸ்பம் செய்து விட்டது.

இது ஹாபீலுடைய குர்பானியை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளம். எனவே ஹாபீலுக்கே இக்லீமாவை திருமணம் முடித்து வைத்தார்கள். தான் நினைத்தது கிடைக்கவில்லை என்ற பொறாமைத் தீ காபீலை வாட்டி வதைத்தது.

ஹாபீலை பழிவாங்கிட துடிதுடித்தான்.  சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும் காபீல் ஹாபீலை கொன்று விட்டான். உலகில் நடந்த முதல் உயிர்ப்பலியும் இது தான், முதல் உயிர்த் தியாகமும் இது தான்.

               ( நூல்: உம்ததுத் தஃப்ஸீர் லி இமாமி அஹ்மத் ஷாக்கிர், 124/4 )

2. ஒரு முஸ்லிமின் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்?....

فَقَالَ أَبُو بَكْرٍ
إنه قد انقطع الوحي وتم الدين، أينقص وأنا حي وَالله لأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاَةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَالله لَوْ مَنَعُونِي عِقَالاً كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللّهِ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ.

ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஆரம்ப தருணம் அது….

وصل علييهم  என்ற குர் ஆனின் வாசகத்தை குறிப்பிட்டு இப்போது துஆ செய்கிற நபி இல்லை எனவே ஜகாத் தர முடியாது என வாதிட்ட சிலர் நாங்கள் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று கூறி குழப்பம் செய்தார்கள்.

அப்போது அபூபக்கர் (லி) அவர்கள் கூறியதாவது: இறைச்செய்தியைப் பெற்றுக் கொண்டிருந்த நபி {ஸல்} அவர்கள் இல்லை என்பது உண்மை தான், நான் உயிரோடி இருக்கும் வரை பரிபூர்த்தி செய்யப்பட்ட தீனில் குறைவு ஏற்பட நான் விட்டு விடுவேனா? நான் உயிரோடு இருக்கும் காலம் வரை ஒரு போதும் தீனில் குறைவு ஏற்பட விடமாட்டேன்”.

 அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்! நபி {ஸல்} அவர்களின் காலத்தில் கொடுத்து வந்த ஜகாத்துடைய பொருளில் ஒட்டகம் கட்டுவதற்குப் பயன்படுகிற கயிற்றை அல்லது ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத குட்டியை எனக்கு தர மறுப்பவர்களோடும், தொழுகைக்கும், ஜகாத்திற்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்த நினைப்பவர்களோடும் த்தாலும் நான் போரிடுவேன்” என்று கூறினார்கள்.

                                                           ( நூல்: தப்ரானீ )

அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட அதே உணர்வு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்பட வேண்டும். நான் உயிர் வாழ்கிற காலத்தில் என்னுடைய ஷரீஅத்தில் எவனையும் கை வைக்க விடமாட்டேன் என்கிற உணர்வோடு பொதுசிவில் சட்டத்திற்கெதிரான நிலைப்பாட்டை அணுக வேண்டும்.

3. முஸ்லிம் சமூகத்திற்கான பிரச்சனைகளில் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும்.

முஸ்லிம் ஒருவருக்கு ஏற்படுகிற எந்த ஒரு பிரச்சனையானாலும், முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுகிற பிரச்சனையானாலும் சரி அதை அறிந்து கொண்டு எந்தெந்த வகையில் எல்லாம் உதவி செய்ய முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் உதவி செய்ய முன்வர வேண்டும்.

அதிலும் குறிப்பாக, மார்க்கத்தோடு, ஈமானோடு தொடர்பில் இருக்கிற ஓர் காரியம் என்றிருந்தால் ஒன்று பட்டு, உடனடியாக குரல் கொடுக்க வேண்டும்.

وكان رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قبل الصلح قد بعث عثمان بن عفان إلى مكة رسولا، فجاء خبر إلى رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بأن أهل مكة قتلوه، فدعا رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حينئذ إلى المبايعة له على الحرب والقتال لأهل مكة، فروي أنه بايعهم على الموت. وروي أنه بايعهم على ألا يفروا. وهي بيعة الرضوان تحت الشجرة، التي أخبر الله تعالى أنه رضي عن المبايعين لرسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تحتها. وأخبر رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أنهم لا يدخلون النار. وضرب رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بيمينه على شماله لعثمان، فهو كمن شهدها. وذكر وكيع عن إسماعيل بن أبي خالد عن الشعبي قال: أول من بايع رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يوم الحديبية أبو سفيان الأسدي. وفي صحيح مسلم عن أبي الزبير عن جابر قال: كنا يوم الحديبية ألفا وأربعمائة، فبايعناه وعمر آخذ بيده تحت الشجرة وهي سمرة

ஹிஜ்ரி 6, துல்கஅதா மாதம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தாங்கள் கண்ட கனவின் அடிப்படையில் உம்ரா செய்ய 1400 தோழர்களுடன் மக்கா நோக்கி பயணமானார்கள்.

நபி {ஸல்} தங்களின் நிலையையும், நோக்கத்தையும் உறுதியாகத் தெளிபடுத்திக் கூறவும், குறைஷிகளிடம் ஒரு தூதரை அனுப்ப விரும்பியும் உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள்.

ஆனால், உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அங்கு சென்ற பின் எனக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் எனக்காக களமிறங்கிப் போராடும் அதீ இப்னு கஅப் கிளையைச் சார்ந்த எவரும் அங்கில்லை. எனவே, உஸ்மான் (ரலி) அவர்களை அனுப்புங்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தை அவர் தான் சரியான முறையில் குறைஷிகளிடம் எடுத்து வைப்பார்!” என்று கூறினார்கள்.

நபியவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்து நீர் குறைஷிகளிடம் சென்று, நாம் போருக்காக வரவில்லை; உம்ராவிற்காகத்தான் வந்திருக்கின்றோம் என்று எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு அவர்களை சத்திய தீனின் பக்கம் அழையுங்கள்! மேலும், மக்காவில் இருக்கும் முஸ்லிகளைச் சந்தித்து வெற்றி நமக்குத்தான் என்ற நற்செய்தியைக் கூறுங்கள்! அல்லாஹ் அவனது மார்க்கத்தை மிக விரைவில் மக்காவில் ஓங்கச் செய்வான்.

ஆகவே, யாரும் இறைநம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்களிடம் சொல்லுங்கள்! என்று கூறினார்கள்.

உடனே, உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். வழியில் பல்தஹ் எனும் இடத்தை கடந்த போது சில குறைஷிகளை சந்தித்தார்கள். தங்களின் உரையாடலின் போது தாங்கள் மக்காவிற்கு செல்வதின் நோக்கத்தை குறைஷிகளிடம் தெரிவித்தார்கள் உஸ்மான் (ரலி) அவர்கள்.

அதற்கு குறைஷிகள் ”நீர் சொல்வதை நாங்கள் கேட்டு விட்டோம். நல்ல விஷயம் தான். நீர் உமது நோக்கத்தை நிறைவேற்ற மக்காவிற்குச் செல்லலாம்” என்றனர்.

கூட்டத்தில் இருந்த அபான் இப்னு ஸயீத் இப்னு அல் ஆஸ் என்பவர் எழுந்து உஸ்மான் (ரலி) அவர்களை வரவேற்று, பின்னர் தம் குதிரைக்கு கடிவாளமிட்டு அதில் தன் பின்னால் அமரவைத்து, அவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்து மக்காவிற்கு அழைத்து வந்தார்.

மக்கா வந்ததும் குறைஷித்தலைவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் ஆசையை உஸ்மான் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், நீங்கள் வேண்டுமானால் கஅபாவை வலம் வர அனுமதிக்கின்றோம். ஆனால், நபியவர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்று குறைஷிகள் கூறிவிட்டனர்.

ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் நபிகளார் இல்லாமல் தாம் வலம் வர இயலாது என மறுத்து விட்டார்கள்.

குறைஷிகள் உஸ்மான் (ரலி) அவர்களை கையில் காப்பு இட்டு மக்காவில் ஓரிடத்தில் தடுத்து வைத்து விட்டனர். இந்த பிரச்சனையில் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கும் வரை உஸ்மான் அவர்களை அனுப்பாமல் தடுத்து வைத்திடுவோம் என அவர்கள் முடிவெடுத்தனர்.

ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் எனும் செய்தி மக்காவிலும், மக்காவிற்கு வெளியிலும் மிக விரைவாக பரவியது.

இப்படியே முஸ்லிம்களுக்கும் வந்து கிடைத்தது. இந்தச் செய்தி மாநபி {ஸல்} அவர்களிடம் சொல்லப்பட்ட போது குறைஷியர்களிடம் போர் செய்யாமல் இவ்விடத்தை விட்டு நாம் நகரக்கூடாது.” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

மேலும், தங்களது தோழர்களைப் போருக்காக உடன்படிக்கை செய்து தர அழைத்தார்கள். ஸஹாபாக்கள் உயிர் இருக்கும் வரை போராடுவோம் என்பதாகவும், அதற்காக உயிரைக் கொடுக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் நபிகளாரிடம் ஒப்பந்தம் செய்தார்கள்.

அபூ ஸினான் அல் அஸதீ (ரலி) என்பவர்தான் முதன் முதலில் ஒப்பந்தம் செய்தார். ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அவர்களோ மூன்று முறை ஒப்பந்தம் செய்தார். அதாவது, மக்கள் ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்த போதும், பின்பு நடுவிலும், பின்னர் இறுதியிலும் ஒப்பந்தம் செய்தார்.

நபி {ஸல்} அவர்கள் தங்களின் ஒரு கையால் மற்றொரு கையைப் பிடித்துக் காட்டி இந்தக் கை உஸ்மான் சார்பாக” என்று கூறினார்கள். அதாவது, உஸ்மான் (ரலி) உயிருடன் இருந்தால் இதிலும் பங்கெடுத்து இருப்பார் என்பதை உணர்த்தும் முகமாக நபிகளார் இதைச் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு மரத்திற்கு கீழ் இந்த உடன்படிக்கையை வாங்கினார்கள். 

அப்போது உமர் (ரலி) அவர்கள் நபியின் கையைத் தாங்கி பிடித்து இருந்தார்கள்.
மஃகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் மரத்தின் ஒரு கிளையைச் சாய்த்து நபிகளாருக்கு நிழல் தரும் வண்ணமாக பிடித்திருந்தார்கள்.

இந்த உடன்படிக்கையைத் தான் பைஅத்துர் ரிள்வான்” – அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இறைபொருத்தத்திற்குரிய உடன்படிக்கை” என இஸ்லாமிய வரலாறு சான்று பகர்கின்றது.

அல்லாஹ்வும், இது குறித்து திருமறையில்......

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا (18)

இறை நம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களை குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்.” என்று (அல்குர்ஆன்:48:18). குறிப்பிடுகின்றான்.

நிலைமை இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க ஆயத்தமாகி விட்டார்கள். எனும் செய்தி குறைஷிகளுக்குத் தெரியவரவே, இனியும் உஸ்மான் (ரலி) அவர்களை தடுத்து வைத்திருப்பது தங்களுக்கு நல்லதல்ல என்று கருதி உஸ்மான் (ரலி) அவர்களை விடுதலை செய்துவிட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், நபித்தோழர்களும் புறப்பட்டு சில எட்டுக்கள் தான் வைத்திருப்பார்கள். அதற்குள் உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கே வந்து விடுகின்றார்கள்.

( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, 9/100-102, தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:199. )

உஸ்மான் (ரலி) அவர்களை மாநபி {ஸல்} அவர்கள் மார்க்க சம்பந்தமான ஓர் பணிக்கே அனுப்பினார்கள்.

அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று அறிந்ததும், அல்லது கேள்வி பட்டதும் உடனடியாக அந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள ஆயத்தமானார்கள்.

முதலில் தாங்கள் அதற்காக எதையும் சந்திக்கத் தயார் என்றார்கள். பின்னர், வந்திருந்த அனைவரையும் ஒன்றிணைத்தார்கள்.

ஷரீஅத் சட்டம் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தன் உயிருக்கு நிகரான, உயிரை விட மேலான ஓர் அம்சமாகும் எனவே, அதற்காக ஒன்றிணைவது, போராடுவது அனைத்துமே தார்மீக அடிப்படையில் கடமையாகும்.

அப்படி, குரல் கொடுக்காமல், போராட முன்வராமல் ஒளிந்து நின்று வேடிக்கை பார்க்கிற முஸ்லிம்களை குறித்து மாநபி {ஸல்} அவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்.

عن أبي ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال
من لم يهتم بأمر المسلمين فليس منهم
أخرجه الطبراني في "المعجم الأوسط" (1/29)

முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களில் யார் ஒதுங்கி இருக்கின்றார்களோ, கவலைப் படாமல் இருக்கின்றார்களோ அவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்களே அல்லர்” என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                              ( நூல்: தப்ரானீ )

4. இறுதி வரை களத்தில் நின்று போராட வேண்டும்….

இரண்டாம் நூற்றாண்டு ஹிஜ்ரி 200 க்கும் 280 க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் இஸ்லாமிய உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய காலம் என்றே சொல்ல வேண்டும்.

முஃதஜிலாக்களின் ஆதிக்கம் ஓங்கி இருந்த தருணம் அது. அப்பாஸிய ஆட்சியாளர்களில் சிலரும் கூட அவர்களோடு கை கோர்த்துக் கொண்டு இஸ்லாமிய கொள்கைகளில், கோட்பாடுகளில் சராமாரியாக விளையாடிக் கொண்டிருந்த அபாயகரமான, குழப்பமான சூழல் அது.

குர்ஆன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டது அல்ல. அது அல்லாஹ்வால் படைக்கப்பட்டது என்கிற புதியதோர் குழப்பத்தை ஆட்சியாளர்களின் துணை கொண்டு முஃதஜிலாக்கள் நிறுவ முயன்று கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் அன்றைய உலமாக்கள் அணி திரண்டு கடுமையாக எதிர்த்தனர். எதிர்த்த அத்துனை உலமாக்களும் மிரட்டப்பட்டனர். சிலர் சிறை வைக்கப்பட்டனர். சிலர் சித்ரவதை செய்யப்பட்டனர்.

உலமாக்களை சிறைகளிலும், வீடுகளிலும் முடக்கி விட்டு தங்களின் புதிய விஷமக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றனர். மக்களும் அவர்களின் தர்க்க ரீதியிலான வாதங்களுக்கு முன்னால் தோற்றுப் போய் குர்ஆன் படைக்கப்பட்டது தான் எனும் கருத்துக்கு உடன் பட ஆரம்பித்தனர்.

உடன்பட மறுக்கின்றவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். எதிர்த்துப் போராடுகின்றவர்கள் சிலுவையில் அறையப்பட்டு கழுகளுக்கும், விலங்கினங்களுக்கும் இரையாக ஆக்கப்பட்டனர்.

لم يصبر فى المحنة إلا أربعة : أحمد بن حنبل أبو عبد الله . و أحمد بن نصر بن مالك الخزاعى ، و محمد بن نوح بن ميمون المضروب ، و نعيم بن حماد و قد مات فى السجن مقيدا ، فأما أحمد بن نصر فضربت عنقه .و مات محمد بن نوح فى فتنة الخليفة المأمون ، والخليفة المعتصم ضرب الإمام أحمد بن حنبل .
قال الحافظ فى "تقريب التهذيب" ص / 85 :قتل ظلما .

இந்த தருணத்தில் உலமாக்களில் தலை சிறந்த உலமாக்களாக அன்றைய காலத்தில் அறியப்பட்ட இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள், இமாம் அஹ்மத் இப்னு நஸ்ர் (ரஹ்) அவர்கள், முஹம்மத் இப்னு நூஹ் (ரஹ்) அவர்கள், நயீம் இப்னு ஹம்மாது (ரஹ்) ஆகிய நால்வரும் வெகுண்டெழுந்து, மக்களை ஒன்று திரட்டி குர்ஆன் படைக்கப்படது என்று கூறுவதும், நம்புவதும் ஷரீஆவிற்கு முரணானது, குர்ஆன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டது என்று கூறி பிரச்சாரம் செய்தனர்.

ஆனாலும், அப்பாஸிய ஆட்சியாளர்கள் இந்நான்கு இமாம்களுக்கும் சித்ரவதைகளையும், சிறைக்கூடங்களையும், கொடூர மரணங்களையும் பரிசாக வழங்கினர்.

இமாம் முஹம்மத் இப்னு நூஹ் (ரஹ்) அவர்கள் சிறைக்குள் அடித்து சித்ரவதை செய்யப்பட்டார்கள். கலீஃபா மாமூன் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கலகம் ஒன்றில் கலகக்காரர்களால் கொல்லப்பட்டு ஷஹீத் ஆக்கப்பட்டார்கள்.

இமாம் நயீம் இப்னு ஹம்மாது (ரஹ்) அவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, உண்ண உணவு கொடுக்கப்படாமலும், குடிக்க நீர் வழங்கப்படாமலும், சங்கிலியால் கட்டப்பட்ட நிலையிலேயே ஷஹீதாக ஆக்கப்பட்டார்கள்.

ஆட்சியாளர் முஃதஸிம் அவர்களின் கட்டுங்கடங்காத சித்ரவதைகளை உடல் முழுவதும் தாங்கியவர்களாக இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் அநியாயமாக கொல்லப்பட்டு ஷஹீதாக ஆக்கப்பட்டார்கள்.

أن هذه المحنة التي وقعت عامة بأرض الإسلام لم يصمد فيها سوى الإمام أحمد، وقد تداوله ثلاثة خلفاء يسلطون عليه من شرق الأرض إلى غربها ومعهم من العلماء المتكلمين والقضاة والوزراء والأمراء والولاة والقادة العسكريين، فبعضهم تسلط عليه بالحبس وبعضهم بالتهديد والوعيد بالقتل، وبعضهم جلده وعذبه وألقاه في غياهب السجون، وبعضهم بالنفي والتشريد والمطاردة

ஆட்சியாளர் மாமூன், அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த அவரின் மகன் முஃதஸிம் அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த அவரின் மகன் வாஸிக் ஆகியோர் பிழையான கொள்கையில் இருந்ததோடு மாத்திரமல்லாமல் ஆயிரக்கணக்கான மக்களை, மார்க்க அறிஞர்களை, ஸாலிஹீன்களை இந்த பிழையான கொள்கையின் பெயரால் சித்ரவதை செய்தனர்.

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் இம்மூன்று ஆட்சியாளர்களின் வசம் சிக்கி சின்னாபின்னமாக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் பெரும் கருணையின் துணை கொண்டே இமாம் அவர்கள் முஸ்னத் அஹ்மத் மற்றும் இதர நூற்களை தொகுத்து வழங்கினார்கள்.

இமாம் அஹ்மத் இப்னு நஸ்ர் (ரஹ்) அவர்களை கொலை செய்த கொடூரமான விதத்தை உலக வரலாறு உள்ள வரை இதயம் இருக்கிற எவராலும் மன்னிக்கவும், மறக்கவும் முடியாது.

அவ்வளவு கொடூரமான மரணத்தை குர்ஆன் படைக்கப் படவில்லை, அது அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டது என்கிற ஷரீஆவின் உறுதி மிக்க கோட்பாடுகளுக்காக தாங்கிக் கொண்டார்கள்.

في مجلس محاكمة الامام احمد بن نصر ،جلس الواثق و قال لأحمد بن نصر : دع ما أخذت له ، ما تقول فى القرآن ؟ قال : كلام الله .
قال : أفمخلوق هو ؟ قال : كلام الله

அன்றொரு நாள், ஆட்சியாளர் வாஸிக் முன் கொண்டு வரப்பட்ட இமாம் அஹ்மத் இப்னு நஸ்ரு (ரஹ்) அவர்களிடத்திலே அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு துளைக்கிறார் வாஸிக்.

எதற்கும் அஞ்சாத நெஞ்சத்தோடு பதில் கூறினார்கள் இமாமவர்கள்.

குர்ஆன் விஷயத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன?

இமாமவர்கள்: அது அல்லாஹ்வின் வார்த்தை.

குர்ஆன் படைக்கப்பட்டது தானே?

இமாமவர்கள்: இல்லை, குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை.

ثم التفت الخليفة الواثق إلى أعوانه ومستشاريه في المجلس وقال
ما تقولون فيه ؟
فقال عبد الرحمن بن إسحاق هو حلال الدم . و قال جماعة من الفقهاء
المعتزلة - كما قال ، فأظهر ابن أبى دؤاد أنه كاره لقتله ، فقال للواثق
ياأمير المؤمنين شيخ مختل ، لعل به عاهة ، أو تغير عقل ، يؤخر أمره و يستتاب .
فقال الواثق : ما أراه إلا مؤديا لكفره ، قائما بما يعتقده منه .
و دعا الواثق بالصمصامة و قال : إذا قمت إليه ، فلا يقومن أحد معى ، فإنى أحتسب خطاى إلى هذا الكافر ، الذى يعبد ربا لا نعبده ، و لا نعرفه بالصفة التى وصفه بها ، ثم أمربالنطع ،

வாஸிக் சுற்றியிருந்தவர்களை நோக்கி இவர் விஷயத்தில் என்ன கூறுகின்றீர்கள்? என்று கேட்க,

முஃதஜிலாக்களின் அறிஞர் ஒருவர் “இவரைக் கொலை செய்வது தான் சரியான முடிவாகும். இவர் காஃபிர் என்கிறார்.

அருகில் இருந்த மார்க்க அறிஞர்கள், இமாமவர்களை ஏதும் செய்து விடாதீர்கள் என பதறுகின்றார்கள்.

கொஞ்ச நேரத்தில் இதயத்தை சுக்கு நூறாக்குகிற காரியத்தை வாஸிக்கே முன் நின்று செய்தார்.

ஆம்! உடல் வேறாக, தலை வேறாக வெட்டப்படுகின்றது.

وقال جعفر بن محمد الصائغ : « بصرت عيناي وإلا فقئتا وسمعت أذناي وإلا فصمتا أحمد بن نصر الخزاعي حين ضربت عنقه يقول رأسه : لا إله إلا الله ؛ وقد سمعه بعض الناس وهو مصلوب على الجذع ورأسه يقرأ : (الم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ) قال :فاقشعر جلدي،

இமாம் ஜஅஃபர் இப்னு முஹம்மத் அஸ் ஸாயிஃக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இமாம் அஹ்மத் இப்னு நஸ்ர் (ரஹ்) அவர்களின் கழுத்தை வெட்டி தலையை துண்டாக எடுத்த போது அவர்களின் தலை لا إله إلا الله என்று சொன்னதை என் கண்களால் பார்த்தேன். என் காதுகளால் கேட்டேன்.

இமாம் அவர்களின் தலையை சிலுவையில் தொங்க விட்ட போது அவர்களின் தலை “الم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنونஓதியதை மக்கள் கேட்டதாக என்னிடம் சொன்ன போது உண்மையில் என் உடலெல்லாம் புல்லரித்துப் போனதை நான் உணர்ந்தேன்.

ஹிஜ்ரி 231 ஷஅபான் மாதத்தின் பிறை 28 வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டு, அவர்களின் தலை வேறாக முண்டம் வேறாக இருவேறு சிலுவைகளில் அறையப்பட்டு பக்தாத் மாநகரின் கிழக்குப் பகுதியில் ஒரு பாகமும், மேற்குப்பகுதியில் ஒரு பாகமும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

، وعلقوا في أذنه رقعة مكتوب عليها : « بسم الله الرحمن الرحيم ، هذا رأس أحمد بن نصر بن مالك ، دعاه عبد الله الإمام هارون ، و هو الواثق بالله أمير المؤمنين ، إلى القول بخلق القرآن ، و نفى التشبيه ، فأبى إلا المعاندة فعجله الله إلى ناره .

இனி எவரும் குர்ஆன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டது என்று முழங்குவதற்கு முன் வருவாரானால் அவருக்கும் இதே கதி தான் என்றும், ஆட்சியாளர் முஃதஸிம் நேர்வழியில் இருக்கின்றார், இதோ இந்த அஹ்மத் இப்னு நஸ்ரோ ( நவூதுபில்லாஹ்… ) குஃப்ரிய்யத்தில் இருக்கின்றார் என்று எழுதப்பட்ட ஓர் ஓலையை தலையை துண்டாக வெட்டி, அவர்களின் ஒரு பக்க காதில் ஓட்டை போட்டு அதில் தொங்க விட்டு, சிலுவையில் அறைந்திருந்தனர்.

ولم يزل رأسه منصوباً من يوم الخميس الثامن والعشرين من شعبان من هذه السنة أعني سنة إحدى وثلاثين ومائتين( 28 شعبان/231 هـ) إلى بعد عيد الفطر بيوم أو يومين من سنة سبع وثلاثين ومائتين ، فجمع بين رأسه وجثته ودفن بالجانب الشرقي من بغداد بالمقبرة المعروفة « بالمالكية» ، رحمه الله . وذلك بأمر «المتوكل على الله» الذي ولى الخلافة بعد أخيه «الواثق» .
دخل عبد العزيز بن يحي الكتائي صاحب كتاب الحيدة على «المتوكل» ، وكان من خيار الخلفاء لأنه أحسن الصنيع لأهل السنة بخلاف أخيه «الواثق» وأبيه «المعتصم» ،وعمه «المأمون» ، فإنهم أساؤا إلى أهل السنة ،وقربوا أهل البدع والضلال من المعتزلة ،وغيرهم ، فأمره أن ينزل جثة أحمد بن نصر ويدفنه ففعل

இதை விட மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், அவர்களின் உடல் சுமார் 34 நாட்கள் அதாவது ஷவ்வால் பிறை 2 வரை இவ்வாறே இரண்டு பகுதிகளிலும் மக்கள் பார்வைக்காக தொங்க விடப்பட்டிருந்தது.

அதன் பின்னர், ஆட்சியாளராக பொறுப்பேற்ற முதவக்கில் அவர்கள் உடலின் இருபாகங்களையும் ஒன்று சேர்த்து கஃபன் செய்து நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டார்கள்.  ( நூல்: அல்பிதாயா வன் நிஹாயா 10/306, தஹ்தீபுல் கமால் )

எனவே, ஷரீஆவையும், ஷரீஆவின் பகுதியையும் பாதுகாக்க வேண்டும் என்கிற முனைப்பில் மேன்மக்களான நம் முன்னோர்கள் உயிரை துச்சமாக மதித்து எந்தளவு பின்வாங்காமல் இறுதி வரை களத்தில் நின்று போராடி இருக்கின்றார்கள்.

ஷரீஆவிற்காக உதிரத்தை சிந்த மனம் இல்லா விட்டாலும், சில வியர்வைத் துளிகளையாவது சிந்த மனம் வர வேண்டும்.

யாஅல்லாஹ்! ஷரீஆவிற்காக வியர்வைத்துளிகளையும், உதிரத்தையும், உயிரையும் அர்ப்பணிக்கிற நன்மக்களாக எங்களையும் ஆக்கியருள் புரிவாயாக!

ஷரீஆவின் சட்டங்களை மதித்து வாழ்கிற மேன்மக்களாக எங்களையும், எங்கள் மனைவி, மக்கள் மற்றும் குடும்பத்தார்களையும் ஆக்கியருள் புரிவாயாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!