Thursday 3 May 2018

மகத்தான கூலியை பெற்றுத்தரும் நான்கு அம்சங்கள்!!


மகத்தான கூலியை பெற்றுத்தரும் நான்கு அம்சங்கள்!!



மனித சமூகத்திடம் இருந்து வெளிப்படுகிற நான்கு அம்சங்களுக்கு அல்லாஹ் வழங்குகின்ற சன்மானம் மகத்தானது.

இரண்டு அம்சங்கள் அஃக்லாக் எனும் பண்பாடுகளோடு தொடர்புடையது, இரண்டு அம்சங்கள் இபாதத் எனும் வழிபாட்டோடு தொடர்புடையது.

அஃக்லாக் – பண்பாடுகளோடு தொடர்புடைய இரண்டு அம்சங்களாவன, 1. தனக்கு அநீதமும், தீங்கும் செய்தோரை மன்னித்தல். 2. பொறுமையை மேற்கொள்வது.

இபாதத் – வழிபாட்டோடு தொடர்புடைய அம்சங்களாவன, 3. நோன்பு நோற்பது. 4. ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட நிலையில் மரணிப்பது.

وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ

“தீமையின் கூலி அதே போன்று தீமையே ஆகும். இனி எவர் மன்னித்து விடுகின்றாரோ மேலும், சீர்திருத்தம் செய்கின்றாரோ அவருடைய கூலி அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது”.                         ( அல்குர்ஆன்: 42: 40 )

إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ (10)

“திண்ணமாக, பொறுமையை மேற்கொள்பவர்களுக்கு அவர்களின் கூலி அளவின்றி வழங்கப்படும்”.                                   ( அல்குர்ஆன்: 39: 10 )

وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ

“மேலும், ஒருவர் அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செய்வதற்காகத் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறிய பிறகு வழியிலேயே அவருக்கு மரணம் ஏற்பட்டு விட்டால், திண்ணமாக, அவருக்கு நற்கூலி வழங்குவது அல்லாஹ்விற்கு பொறுப்பாகி விட்டது”.           ( அல்குர்ஆன்: 4: 100 )

“நோன்பு எனக்கானது, நானே அதற்கு கூலியாவேன்” என்று அல்லாஹ் கூறியதாக மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                     ( நூல்: )

அடியார்களின் நற்செயல்களும்… அல்லாஹ் வழங்கும் நற்கூலியும்…

”இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தோருக்கு அல்லாஹ் வழங்கும் நற்கூலியே சிறந்ததாகும்”.                                    ( அல்குர்ஆன்: 28: 80 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அடியார்கள் செய்கிற இபாதத்- வணக்க, வழிபாடு களுக்கு கூலி வழங்குவதில் சில வரைமுறைகளை கையாள்கிறான்.

“நன்மை, தீமைகளை எழுதுவதில் அல்லாஹ் மலக்குகளுக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளான்” என்று கூறிய நபி {ஸல்} அவர்கள் “ஒருவர் ஒரு நற்செயல் செய்ய நாடினார்,. பிறகு, ஏதேனும் ஒரு காரணத்தால் அவரால் அந்த நற்செயலை செய்ய முடியாமல் போனது. என்றாலும் அல்லாஹ் அவருக்கு முழுமையான ஒரு நன்மையை எழுதுகின்றான். அவர் நாடியது போன்றே செய்து விட்டால் பத்து நன்மையில் இருந்து எழுநூறு வரை, இன்னும் அதை விடவும் அதிகமாக பன்மடங்காக எழுதுகின்றான்.                                       ( நூல்: புகாரி )

“ஒருவர்  நன்மையைக்குரிய ஒரு செயலைக் கொண்டு வருவாராயின், அவருக்கு அதை விடச் சிறந்த நன்மை இருக்கின்றது”.         ( அல்குர்ஆன்: 28: 84 )

“எவர் இறைவனின் திருமுன் நன்மையைக் கொண்டு வருவாரோ அவருக்கு, அவருக்கு அதைப்போல் பத்து மடங்கு நற்கூலி உண்டு”.      ( அல்குர்ஆன்: 6: 160 )

அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போர்களின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன! ஒவ்வொரு கதிர்களும் நூறு தானிய மணிகளைக் கொண்டதாகும்.

இவ்வாறே, அல்லாஹ் தான் நாடுவோருக்கு அவர்களுடைய நற்செயல்களின் பயன்களை பன்மடங்காக்குகின்றான்”.                        ( அல்குர்ஆன்: 2: 261 )

“ஆண்கள் மற்றும் பெண்களில் இருந்து எவர்கள் தான தருமங்கள் வழங்குபவர்களாக இருக்கின்றார்களோ, மேலும், எவர்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் வழங்குகின்றார்களோ அவர்களுக்கு திண்ணமாக, பன்மடங்கு அதிகம் வழங்கப்படும், அவர்களுக்கு கண்ணியமான கூலியும் இருக்கின்றது”.

                                                      ( அல்குர்ஆன்: 57: 18 )

ஆனால், நல்லறங்களுக்கான நற்கூலிகளை வழங்குவதில் மேற்கூறிய நான்கு அம்சங்களுக்கு மாத்திரம் ”ஃபஅஜ்ருஹூ அலல்லாஹ்” அல்லாஹ்வே கூலியை, நன்மையை வழங்குவதை தீர்மானிக்கின்றான். அல்லது அல்லாஹ்வே கூலியாக ஆகின்றான், அல்லது கணக்கில்லாத கூலிகளையும், நன்மைகளையும் வழங்குகின்றான் என்பதாக அறிஞர் பெருமக்கள் விளக்கம் தருகின்றார்கள்.

மன்னிப்போம்! மகத்தான நற்கூலியைப் பெறுவோம்!!!

 أتى شابّان إلى عمر وكان في المجلس، وهما يقودان رجلاً من البادية فأوقفوه أمام عمر بن الخطاب قال عمر: ما هذا، قالوا: يا أمير المؤمنين، هذا قتل أبانا، قال: أقتلت أباهم؟ قال: نعم قتلته، قال كيف قتلتَه؟
قال دخل بجمله في أرضي، فزجرته، فلم ينزجر، فأرسلت عليه حجراً، وقع على رأسه فمات.
قال عمر: القصاص.. قرار لم يكتب. وحكم سديد لا يحتاج مناقشة

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு நாள் உமர் (ரலி) அவர்களின் சபைக்கு இரண்டு வாலிபர்கள் நடுத்தர வயதுடைய ஒரு கிராமவாசியை கயிற்றால் கட்டி இழுத்து வந்தனர்.

உமர் (ரலி) அவர்கள் இவர் யார்? என்று கேட்க, இரு வாலிபர்களும் இவர் எங்கள் தந்தையைக் கொன்றுவிட்டார் என்றனர்.

அந்தக் கிராமவாசியிடம் இவ்விரு இளைஞர்களும் சொல்வது உண்மைதானா? என்று கேட்க, அந்த கிராமவாசி ஆம்என்று பதில் கூறினார்.

எப்படிக் கொலை செய்தீர்? ஏன் கொலை செய்தீர்? என்று கேட்டார்கள் அமீருல் முஃமினீன் அவர்கள்.

அவர், நான் தூரமான இன்ன பகுதியில் இருந்து ஒட்டகங்களை மேய்ச்சலுக்காக கொண்டு வந்திருக்கின்றேன். நான் கொண்டு வந்திருக்கும் ஒரு ஒட்டகம் இவ்விரு வாலிபரின் தந்தைக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்து மேய்ந்திருக்கின்றது. நான் அதை கவனிக்கவில்லை.

பின்னர், நான் கவனித்ததும் அதை அங்கிருந்து விரட்ட எத்தனித்தேன். அதே நேரத்தில் இவ்விரு இளைஞர்களின் தந்தையும் விரட்டினார். அது நகர மறுக்கவே பெரிய கல்லொன்றை எடுத்து ஒட்டகத்தின் மீது வீசினார். அந்த இடத்திலேயே அது இறந்து போனது.

அவர் ஒட்டகத்தின் மீது எறிந்த அதே கல்லை எடுத்து அவர் மீது நான் எறிந்தேன். அது அவரின் தலையில் பட்டு அவரும் அதே இடத்தில் இறந்து போனார்என்றார்.

பெரிய அளவிலான விசாரணைக்கு ஏதும் சந்தர்ப்பம் கிடைக்காததால், குற்றவாளியும் தன் குற்றத்தை ஒத்துக் கொண்டதால் உமர் (ரலி) அவர்கள் குற்றம் செய்த அவருக்கு மரண தண்டனை என தீர்ப்பு வழங்கினார்கள்.

قال الرجل: يا أمير المؤمنين: أسألك بالذي قامت به السماوات والأرض، أن تتركني ليلة؛ لأذهب إلى زوجتي وأطفالي في البادية، فأُخبِرُهم بأنك سوف تقتلني، ثم أعود إليك، والله ليس لهم عائل إلا الله ثم أنا، قال عمر: من يكفلك أن تذهب إلى البادية، ثم تعود إليَّ، فسكت الناس جميعاً..
இந்த தீர்ப்பைக் கேட்ட அந்த கிராமவாசி: அமீருல் முஃமினீன் அவர்களே! எந்த பூமியும், வானமும் எந்த இறிவனின் ஆற்றலால் நிலை கொண்டிருக்கின்றதோ அந்த இறைவனை முன்னிருத்தி நான் உங்களிடம் கேட்கின்றேன்.

எனக்கு ஒரேயொரு நாள் அவகாசம் கொடுங்கள்! நான் என் மனைவி, மக்களை சந்தித்து விட்டு வருகின்றேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! அல்லாஹ்விற்கு பிறகு அவர்களுக்கு என்னைத்தவிர வேறு யாரும் இல்லை!

நான் அவர்களிடம் சென்று அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான இதர அம்சங்களை செய்து விட்டு, நடந்த நிகழ்வுகளையும் கூறி நான் ஒரு மரண தண்டனை குற்றவாளி என்பதையும் எடுத்துக் கூறி அவர்களிடம் இருந்து விடை பெற்று மீண்டும் இங்கு வந்து விடுகிறேன். அதன் பின்னர் எனக்கு தண்டனையை வழங்குங்கள்!என்றார்.

அதற்கு, நீர் ஒரு மரண தண்டனைக் குற்றவாளி, நீர் ஊர் சென்று திரும்பும் வரை உம் சார்பாக எவராவது பொறுப்பேற்றுக் கொண்டால் உம்மை நான் அனுப்பி வைக்கின்றேன். நீரும் சென்று விட்டு வரலாம்! என்றார்கள்.

إنهم لا يعرفون اسمه، ولا خيمته، ولا داره، ولا قومه، فكيف يكفلونه، وهي كفالة ليست على عشرة دنانير، ولا على أرض، ولا على ناقة، إنها كفالة على الرقبة أن تُقطع بالسيف.

ومن يعترض على عمر في تطبيق شرع الله؟ ومن يشفع عنده؟ ومن يمكن أن يُفكر في وساطة لديه؟ فسكت الصحابة،
சபை முழுவதும் நீண்ட மவுனம் நிலவியது. அவரும் சபை முழுவதிலும் ஒரு பார்வை பார்த்தார்.

எவராவது நமக்கு பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டாரா? நம் அருமைக் குழந்தைகளையும், மனைவியையும் மரணிப்பதற்கு முன் ஒரு முறை பார்த்து விட்டு வந்து விடலாமே! எனும் ஏக்கம் அந்தப் பார்வையில் தெரிந்தது.

சபையினரின் அமைதிக்கும் ஓர் அர்த்தம் இருந்தது. முன் பின் அறியாதவர், அவரின் பெயரோ, ஊரோ, கோத்திரமோ எதுவும் அங்கிருக்கும் யாருக்கும் தெரியவில்லை இது ஒரு புறம்.

இவருக்குப் பதிலாக பொறுப்பேற்க இருப்பது ஒன்றும் தீனாரோ அல்லது திர்ஹம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவே! சென்றவர் திரும்ப வராவிட்டால் போவது உயிர் அல்லவா?

وعمر مُتأثر، لأنه وقع في حيرة، هل يُقدم فيقتل هذا الرجل، وأطفاله يموتون جوعاً هناك، أو يتركه فيذهب بلا كفالة، فيضيع دم المقتول؟
سكت الناس، ونكّس عمر رأسه، والتفت إلى الشابين، أتعفوان عنه؟ قالا: لا، من قتل أبانا لا بد أن يُقتل يا أمير المؤمنين، قال عمر: من يكفل هذا أيها الناس، فقام أبو ذر الغفاريّ بشيبته وزهده، وصدقه، قال: يا أمير المؤمنين، أنا أكفله،

உமர் (ரலி) அவர்களுக்கு, அந்த கிராமவாசியின் தவிப்பும் ஏக்கமும் நன்கு புலப்பட்டது. என்ற போதிலும் இறைஷரீஅத் சம்தப்பட்ட விஷயம் அல்லவா? ஆதலால் தலை மீது கைவைத்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்கள்.

இரண்டு இளைஞர்களையும் நோக்கி இளைஞர்களே! இவரை மன்னிக்க முன்வருகின்றீர்களா? என்று கேட்டார்கள் அமீருல் முஃமினீன் அவர்கள்.

எங்கள் தந்தையைக் கொன்றவனை நாங்கள் மன்னிக்க விரும்பவில்லை, மரண தண்டனையை நிறைவேற்றியே ஆகவேண்டும்என்று ஒருமித்த குரலில் கூறினார்கள்.

சுற்றியிருந்த சபையினரை நோக்கிய உமர் (ரலி) அவர்கள்இவருக்கு யாராவது பொறுப்பேற்கின்றீர்களா?” என்று கேட்டார்கள்.

அந்த அவையில் நிலவிய நிசப்தத்தை கலைத்தது அந்தக் குரல். ஆம்! நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்! அமீருல் முஃமினீன் அவர்களே!என்று ஒலித்தது அந்தக் குரல்.

குரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல! அஞ்சாநெஞ்சர் என்று அறியப்படுகிற அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) அவர்கள்.

قال عمر: هو قَتْل، قال: ولو كان قتلاً، قال: أتعرفه؟ قال: ما أعرفه، قال: كيف تكفله؟ قال: رأيت فيه سِمات المؤمنين، فعلمت أنه لم يكذب، وسيأتي إن شاء الله، قال عمر: يا أبا ذرّ، أتظن أنه لو تأخر بعد ثلاث أني تاركك! قال: الله المستعان يا أمير المؤمنين، فذهب الرجل، وأعطاه عمر ثلاث ليالٍ؛ يُهيئ فيها نفسه، ويُودع أطفاله وأهله، وينظر في أمرهم بعده، ثم يأتي، ليقتص منه لأنه قتل

அமீருல் முஃமினீன் அவர்கள் அபூதர் (ரலி) அவர்களை நோக்கி அபூதர் அவர்களே! நீங்கள் கொலைப்பழிக்கு பகரம் ஏற்றிருக்கின்றீர்கள் தெரியுமா உங்களுக்கு?” என்று வினவ, ஆம் நன்றாகத்தெரியும்!என்று பதில் கூறினார்கள்.

அவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்ற உமர் (ரலி) அவர்களின் வினாவிற்கு, “இல்லை, தெரியாதுஎன்று பதிலளித்தார்கள் அபூதர் (ரலி) அவர்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் பின்னர் எந்த அடிப்படையில் நீர் பொறுப்பேற்றுக் கொண்டீர்? என்று வினவியதற்கு, “ அமீருல் முஃமினீன் அவர்களே! அவரின் முகத்திலே நான் இறைநம்பிக்கையாளர்களின் ஒளியைப் பார்த்தேன்! அவர் பொய் பேசமாட்டார், இன்ஷாஅல்லாஹ் சொன்னது போன்று ஊர் சென்று திரும்பி வருவார் என்று நான் விளங்கிக் கொண்டேன்என்று அபூதர் (ரலி) பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அவர் வரவில்லையென்றால் உம்மை விட்டு விடுவேன் என்று மட்டும் கருதி விடாதீர்கள்! இறைச்சட்டத்தின் முன் அனைவரும் எனக்கு சமமே!என்று கூறினார்கள். அதற்கு, அபூதர் (ரலி) அவர்கள் அல்லாஹ் எனக்கு பேருதவி செய்வான் அமீருல் முஃமினீன் அவர்களே! என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் மூன்று நாள் அவகாசம் கொடுத்து மூன்றாம் நாள் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்குள் நீர் ஊர் சென்று மதீனாவிற்கு வந்து விடவேண்டும் என்று அந்த கிராமவாசியிடம் சொல்லி ஊர் சென்று வர அனுமதி கொடுத்தார்கள்.

وبعد ثلاث ليالٍ لم ينس عمر الموعد، يَعُدّ الأيام عداً، وفي العصر نادى في المدينة: الصلاة جامعة، فجاء الشابان، واجتمع الناس، وأتى أبو ذر، وجلس أمام عمر، قال عمر: أين الرجل؟ قال: ما أدري يا أمير المؤمنين، وتلفَّت أبو ذر إلى الشمس، وكأنها تمر سريعة على غير عادتها،


وقبل الغروب بلحظات، وإذا بالرجل يأتي، فكبّر عمر، وكبّر المسلمون معه،

அமீருல் முஃமினீன் அவர்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்கள். மூன்றாம் நாள் அஸர் தொழுகையின் நேரம் வந்தது. தொழுகைக்கான அழைப்பும் கொடுக்கப்பட்டு, இகாமத்தும் கொடுக்கப்பட்டு தொழுகை முடிந்தும் விட்டது. ஆனால், இப்போது வரை அந்த கிராமவாசி மதீனாவுக்கு வரவில்லை.

தொழுகை முடிந்தது. வாதிகளான இரு வாலிபர்களும், அமீருல் முஃமினீன் அவர்களும் மற்றும் எல்லோரும் அங்கே கூடி மஸ்ஜிதுன் நபவியை ஒட்டியிருக்கிற பாதையை பார்த்தபடியே அமர்ந்திருக்கின்றார்கள்.

சற்று நேரத்தில் அபூதர் (ரலி) அங்கே வந்தார்கள். முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் அபூதர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் முன் வந்து அமர்ந்தார்கள்.

அபூதர் (ரலி) அவர்களே! நீங்கள் பொறுப்பெடுத்த அம்மனிதரை எங்கே? என்று கேட்டார்கள் உமர் (ரலி) அவர்கள்.

சூரியனை திரும்பிப் பார்த்தவாறே, இன்றைக்கு மட்டும் எப்படி வழக்கத்திற்கு மாறாக இந்தச் சூரியன் விரைவாக மறையப்போகிறது என்று நினைத்தவர்களாக அமீருல் முஃமினீன் அவர்களே! உங்களைப் போன்று தான் நானும் அவரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்!என்றார்கள்.

சூரியன் அஸ்தமிக்கும் சற்றும் முன்பாக, மஸ்ஜிதுன் நபவீயை நோக்கி ஓர் உருவம் விரைந்து வருவதை மாநபியின் மஸ்ஜிதில் எதிர்பார்த்து குழுமியிருந்த அனைவரும் கண்டனர்.

அருகில் வர வர அனைவரின் முகத்திலும் அப்படியொரு ஆனந்தம், மகிழ்ச்சி, அபூதர் (ரலி) பிழைத்துக் கொண்டார் என்பதற்காக அல்ல. எந்த காரணத்தைக் காட்டி அபூதர் (ரலி) அவருக்காக பொறுப்பேற்றாரோ அதை அவர் உண்மை படுத்தி விட்டார் என்பதற்காக.

மாநபி மஸ்ஜிதின் முன்பிருந்த உமர் (ரலி) அவர்கள் அல்லாஹு அக்பர் என்று முழங்க, சுற்றியிருந்தவர்களும் மகிழ்ச்சிப் பெருக்கில் விண்ணுயர தக்பீர் முழக்கத்தை எழுப்பினர்.
فقال عمر: أيها الرجل أما إنك لو بقيت في باديتك، ما شعرنا بك، وما عرفنا مكانك، قال يا أمير المؤمنين، والله ما عليَّ منك ولكن عليَّ من الذي يعلم السرَّ وأخفى! ها أنا يا أمير المؤمنين، تركت أطفالي كفراخ الطير، لا ماء ولا شجر في البادية، وجئتُ لأُقتل، فوقف عمر وقال للشابين: ماذا تريان؟ قالا وهما يبكيان: عفونا عنه يا أمير المؤمنين لصدقه، قال عمر: الله أكبر، ودموعه تسيل على لحيته

ஆச்சர்யம் விலகாத பார்வையோடு நோக்கிய உமர் (ரலி) அவர்கள் ஓ! கிராமவாசியே! நீர் நினைத்திருந்தால் உம் ஊரிலேயே தங்கியிருக்கலாம், உம் ஊரையோ, உம் வீட்டையோ தெரிந்து கொள்ளாத எங்களை நீர் ஏமாற்றி இருக்கலாம்! ஆனாலும், சொன்ன நேரத்தில் நீர் வந்து எங்களை ஆச்சர்யப்படுத்தி விட்டீர்! ஆனந்தப்படுத்தி விட்டீர்!என்று கூறினார்கள்.

அமீருல் முஃமினீன் அவர்களே! உங்களுக்கும் எனக்குமான விஷயம் அல்லவே இது? எனக்கும் இரகசியத்தையும், பரகசியத்தையும் அறிந்து கொள்கிற எல்லாம் வல்ல இறைவனோடல்லவா தொடர்புள்ள ஓர் விஷயம் இது!எப்படி ஏமாற்ற முடியும் என்று கூறினார்.

அமீருல் முஃமினீன் அவர்களே! தண்ணீரும், மரமும் இல்லாத ஓர் ஊரிலே எப்படி தவித்துக் கொண்டிருக்கும் ஓர் பறவை தன் குஞ்சுகளுக்கு தன் இறகால் அரவணைத்து இரக்கம் காட்டுமோ அது போன்று அரவணைத்து அன்பு காட்டி. என் குழந்தைகளை ஊரில் விட்டு விட்டு வந்திருக்கின்றேன்.

எனக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள்!என்று அந்தக் கிராமவாசி கூறினார்.

கண்களில் நீர் ததும்பி வழிந்தோடிய நிலையில் இருந்த உமர் (ரலி) அவர்கள் வாதிகளான இரு இளைஞர்களையும் நோக்கி இப்போது உங்கள் நிலைப்பாடு என்ன? கேட்க, பொங்கி வரும் கண்ணீரை அடக்க முடியாமல் விம்மியவர்களாக அமீருல் முஃமினீன் அவர்களே! நாங்கள் மன்னித்து விட்டோம்!என்று கூறினார்கள்.

இது கேட்ட உமர் (ரலி) அவர்கள் அல்லாஹு அக்பர்என்று கூறினார்கள். அவர்களின் கண்களில் இருந்து நீர் தாடியை நனைத்து வழிந்தோடிக் கொண்டிருந்தது.

{ இந்தச் சம்பவம் எந்தவொரு வரலாற்று நூலிலும் இடம் பெறவில்லை. எனினும் உமர் (ரலி) அபூதர் (ரலி) மற்றும் நபித்தோழர்கள் ஆகியோரின் கண்ணியத்திற்கும் மாண்பிற்கும் எவ்வித இழப்பையும், ஏற்படுத்தாததோடு மார்க்க அம்சங்களில் எந்த ஒன்றோடும் முரண்படாததால் இந்தச் செய்தியை ஒரு வரலாற்று நிகழ்வாக பார்ப்பதில் எவ்வித குற்றமும் இல்லை என சமகாலத்து அறிஞர்கள் ஆய்வு செய்து சான்றளிக்கின்றார்கள். }

பொறுமையை மேற்கொள்வோம்! கணக்கில்லா கூலியைப் பெறுவோம்!!
وورَد عن الحسن البصريِّ وعن وهب بن منبِّه، أنَّ سيِّدَنا أيوب عليه السلام، كان ذا ثروةٍ واسعةٍ جدًّا، وكان عندَه من كلِّ أصناف الأموال التي يمتلكها البشر، وأنَّه كان قد رُزق ذريةً كبيرةً من الأبناء، وأنَّه كان جوادًا سخيًّا عابدًا لله تعالى مؤدِّيًا واجباته قائمًا بحقوق الناس، حتَّى بلَغ من رضا الله تعالى عنه أنَّ الملائكةَ كانت تصلَّي عليه في السموات، وأنَّ إبليس سمع صلوات الملائكة، وكان هو وجنوده يقعدون مقاعدَ يستمعون فيها إلى كلام الملأ الأعلى، وأنَّه طَعَن أمامَ الله تعالى في صِدق ديانة سيِّدنا أيوب عليه السلام.
وزَعَم ابليس أنَّ ايوب عليه السلام يعبد الله تعالى بسبب ما أنعم به عليه من الثراءِ الواسع والعافية التامَّة، وأنَّه إن سُلِّط عليه فأَزال عنه هذه النِّعَم فسينحرف عن جادَّة الطاعة إلى هاوية الجحود والعصيان، وقد أَذِن الله تعالى بامتحان سيِّدنا أيوب عليه السلام لِمَا يعلَم من صِدق سريرته، وصفاء تديُّنه ونقاء تعلُّقه بالله تعالى ورسوخ محبَّته له، فجَعَل للشيطان سلطانًا في أذيته عليه السلام في كلِّ ما يزول من متاع الدنيا، دونَ أن يكونَ له سلطانٌ على روحه وقلبه وضميره، ويؤيد هذا قوله عليه السلام، كما قال الله تعالى عنه: {أنِّي مسَّني الشيطان بنُصبٍ وعذاب}.
هجمة الشيطان على ممتلكاته
شن الشيطان هجمتَه الشرسة على ممتلكات سيِّدنا أيوب أوَّلًا، فسلَّط جنودَه وأتباعَه ليحرقوا كلَّ ما يمتلك، وكان يأتيه كلَّ مرَّةٍ بخبر هلاك شيءٍ من ممتلكاته من الأغنام والبقر والإبل والخيل والحمير والمزارع، ويقول له: ما أغنت عنك عبادتك شيئًا؛ هلك كلُّ ما تملك من (كذا)، فيجيبه سيِّدنا أيوب بجواب الصابرين: (إنَّا لله وإنَّا إليه راجعون، لله ما أعطَى، ولله ما أخذ، لا ينبغي أن نفرح حين يعطينا الله من فضله عاريةً، ثمَّ نجزع إن استردَّ منَّا عاريتَه)،..
ولما رأى صبرَه وثباته، جاءَ إلى بيتٍ قد اجتمع فيه كلُّ أولادِه، فزلزله عليهم حتَّى انهار فوقَهم فقتلَهم أجمعين، فجاءَه بخبرهم، فأجابه جوابَه الأوَّل، وسلَّم ورضي بحُكم الله تعالى، فلمَّا رأى ثباتَه؛ تسلَّط على جسدِه، فنَفَخ على جسدِه نفخةً وأَلقى في جَوفِه شيئًا، فأصابه بعلَّةٍ جعَلته يضعف ويهزل وتخور قواه، وبقي سيِّدنا أيوب عليه السلام صابرًا على ما أصابه من بلاءٍ، حامدًا الله تعالى سرًّا وعلانيةً، مواظبًا على تأدية واجبات الطاعةِ والعبادة لمدَّة ثماني عشرةَ سنةً، حتَّى أحسَّ بأنَّ الصالحين من أتباعه قد أساؤوا الظنَّ بالله تعالى بسبب ما يرونه من طُول بلائِه؛ هنالك دعا ربَّه أن يزيل عنه الضرَّ وتسلُّطَ الشيطان،{وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ).

சிரியாவின் தென்மேற்கு பகுதியில் ஹவ்ரான் என்ற நகரத்தில் வாழ்ந்தவர்கள் அய்யூப் (அலை) அவர்கள். பெரிய செல்வந்தராக இருந்தார்கள். நிறைய ஒட்டகங்கள், குதிரைகள், கழுதைகள், ஆடுகள், காளைகள், பசுக்கள், நிலபுலன்கள், அடிமைகள் என்று எந்தக் குறையுமின்றி இருந்தார்கள்.

தன்னுடைய பெரிய வீட்டில் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். மிகவும் பயபக்தியுடையவர்களாக இறைவன் அருளிய ஒவ்வொரு விஷயத்திற்கும் நன்றி செலுத்திக் கொண்டே இருந்தார்கள்.

சந்தோஷமாக இருந்த அவர்களின் வாழ்வில் திடீரென சூறாவளியாகச் சோதனைகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சுழல ஆரம்பித்தது.

ஷைத்தான் அவர்களின் அயராத இபாதத்தையும், நன்றி செலுத்தும் தன்மையையும் கண்டு, வியந்து, பொறமை கொண்டு அல்லாஹ்விடத்தில் அவர்களை எப்படியாவது உன் நினைவில் இருந்து தடம் புரளச் செய்வேன் என சபதம் இட்டு, அவர்களை வழிபிறழச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட ஆற்றலை வழங்குமாறு கோரினான். அல்லாஹ்வும் ஷைத்தானுக்கு ஆற்றலை வழங்கினான்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனைவி மக்களோடு சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது, உணவு உண்டு கொண்டிருந்த மக்களின் மீது விழ மொத்தமாக மக்களை இழந்தார்கள். கண்முன்னே இது நடைபெற்ற போதும் அய்யூப் அலை அவர்கள் “அல்லாஹ்வே தந்தான், அவனே எடுத்துக் கொண்டான். அல்ஹம்து லில்லாஹ்!” என்று கூறினார்கள்.

பின்னர், பூமி அதிர்வு ஒன்றின் மூலமாக கால்நடைகள், தோட்டங்கள், விவசாய நிலங்கள், நிலபுண்கள் எல்லாம் அழிந்து போயின. அப்போதும் நபி அய்யூப் அலை அவர்கள் “அல்லாஹ்வே தந்தான், அவனே எடுத்துக் கொண்டான். அல்ஹம்து லில்லாஹ்!” என்று கூறினார்கள்.

அடுத்ததாக, ஷைத்தான் அய்யூப் (அலை) அவர்களின் உடலில் தன் மூச்சுக் காற்றை ஊத தோலில் பிரச்சனை ஆரம்பமானது. அந்தத் தோல் நோய் அவர் உடல் முழுவதும் பரவியது. உடல் அரிப்பினால் அவர் சொறிந்து சொறிந்து தோலில் புண்ணிலிருந்து சீழ் வடிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியது.

மக்கட் செல்வங்களை இழந்தும், செல்வந்தராக இருந்து வறுமையை ருசிக்க ஆரம்பித்தும், உடலில் நோய் ஏற்பட்டு கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியும் மனம் தளராமல் இறைவன்தான் தந்தான் அவனே எடுத்துக் கொண்டான்என்று பொறுமையாக இருந்ததைக் கண்டு மக்கள் ஆச்சர்யப்பட்டனர்.

அய்யூப் அலை அவர்கள் தன்னைக் குணப்படுத்த வேண்டி ரப்பிடம்  பிரார்த்திக்கவில்லை. அவர்களின் மனைவியும் ஏன் நீங்கள் இறைவனிடம் கையேந்தவில்லை என்று கேட்டார்கள்.

அதற்கவர்கள் இத்தனை காலமாகக் கொடுத்துக் கொண்டிருந்ததற்கே இன்னும் நன்றி சொல்லி முடியவில்லை. எப்படி நான் இவ்வேதனையிலிருந்து விரைந்து விடுப்பட வேண்டுவேன்?.

இறைவனிடம் அதற்காகப் பிரார்த்திக்க எனக்கு வெட்கமாக உள்ளது. சில வருடமாகத்தான் நான் சோதனையில் ஆழ்த்தப்பட்டதாக உணர்கின்றேன். நான் ஆரோக்கியமாக, மக்கட்செல்வங்களோடு செல்வந்தராக இருந்த காலமே அதிகம்என்று கூறினார்கள்.

மக்கட் செல்வங்களை இழந்தும், செல்வந்தராக இருந்து வறுமையை ருசிக்க ஆரம்பித்தும், உடலில் நோய் ஏற்பட்டு கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியும் மனம் தளராமல் இறைவன்தான் தந்தான் அவனே எடுத்துக் கொண்டான்என்று கூறி அய்யூப் நபி பொறுமையாக இருந்ததைக் கண்டு மக்கள் ஆச்சர்யப்பட்டனர்.

அய்யூப் அலை அவர்களின் நெஞ்சுரத்தையும், பொறுமையின் உச்சத்தையும் கண்ட ஷைத்தான் தன் சவாலில் இருந்து பின்வாங்கி, தன் தோல்வியை ரப்பிடம் ஒப்புக்கொண்டான்.

ஒரு கட்டத்தில், மக்கள் அய்யூப் (அலை) அவர்களுக்கு இருப்பது தொற்று வியாதியாக இருக்கலாம் என்று அவர்களை ஊரை விட்டு விலக்கி வைத்தார்கள்.

இறைவனின் கோபத்தினால், அவர் செய்த பாவத்தினால் தான் இப்படி ஏற்பட்டிருக்கின்றதுஎன்று மக்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்த போதும், இறைவனையே வாய்விட்டுப் புகழ முடியாதபடி வாய்க்குள்ளும் புண் ஏற்படவே இறைவனிடம் கண்ணீர்விட்டு மன்றாட ஆரம்பித்தார்கள்.

இறைவா, என்னைத் தனிமைப்படுத்திவிடாதே, உன்னைத் துதிக்க என் ஆரோக்கியத்தை எனக்குத் திருப்பித் தருவாயாக. அறிந்தும் அறியாமலும் நான் செய்த பாவத்தை மன்னிப்பாயாக. உன் விருப்பத்தின்படியே நான் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டேன் என்றே இருந்தேன், இன்று உன்னை வணங்கவே உடலில் தெம்பில்லாமல் இருக்கிறேன், என்னைக் குணப்படுத்துவாயாக. கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய். என்னை இத்துன்பத்திலிருந்து விடுபடச் செய்வாயாகஎன்று உருக்கமாகப் பிரார்த்தித்தார்கள்.

உடனே அவருடைய பிரார்த்தனை ஏற்கப்பட்டு வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அய்யூப் (அலை) அவர்களிடம் வந்து உங்கள் காலை மண்ணில் அடியுங்கள்என்றார்கள். பலகீனமான அய்யூப் (அலை) அடிக்க முடியாமல் அடிக்க அங்கு ஒரு நீருற்றுப் பொங்கியது. அதில் அந்தக் குளிர்ச்சியான நீரூற்றில் குளிக்கும்படியும், அதிலிருந்து பருகும்படியும் சொல்லப்பட்டது. அப்படியே செய்ய, அவர்கள் திடகாத்திரமாக மீண்டும் பழைய நிலைக்கே மாறினார்கள்.

துன்பங்கள் விலகியது, நோய் நிவாரணமானது, வீடும், வாழ்க்கையும் வளமையானது. இழந்த மக்களையும், சொத்துக்களையும் அல்லாஹ் முன்பு போன்றே  ஏற்படுத்திக் கொடுத்தான் இறைவன்.

فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ (84)

அதையே அல்லாஹ் “நாம் அவருடைய இறைஞ்சுதலை ஏற்று அவருக்கிருந்த நோவினையை போக்கினோம். அவருக்கு நாம் அவருடைய குடும்பத்தை மட்டும் வழங்கவில்லை. அவர்களுடன் அதே அளவுக்கு இன்னும் அதிகமானவர்களை வழங்கினோம். இது நம்முடைய சிறப்பான கிருபையாகவும், அடிபணிந்து வாழ்வோருக்கு ஒரு நினைவூட்டுதலாகவும் அமைவதற்காக!” ( அல்குர்ஆன்: 21: 84 )

 நோன்பு நோற்போம்! மகத்தான கூலியாக ரப்பையே பெறுவோம்!!!

عن رجاء بن حيوه عن أبي أمامة : أنشأ رسول الله صلى الله عليه وسلم جيشاً فأتيته فقلت يا رسول الله :ادعو الله لي بالشهادة ، فقال : ( اللهم سلمهم وغنمهم ) فغزونا فسلمنا وغنمنا .. حتى ذكر ذلك ثلاثة مرات ، قال ثم أتيته فقلت : يا رسول الله : إني أتيتك تترى - يعني ثلاث مرات - أسألك أن تدعو لي بالشهادة فقلت : ( اللهم سلمهم وغنمهم ) فسلمنا وغنمنا .. يا رسول الله فمرني بعمل أدخل به الجنة .. مرني بعمل أدخل به الجنة، فقال (عليك بالصوم فإنه لامثل له ) ، قال فكان أبو أمامة لا يُرى في بيته الدخان نهاراً إلا إذا نزل بهم ضيف ، فإذا رأوا الدخان نهاراً عرف الناس أنهم قد اعتراهم الضيوف ..

 நபி {ஸல்} அவர்கள் ஒரு படைப் பிரிவை ஓரிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். படை புறப்படும் முன் அப்படைப்பிரிவில் இடம் பெற்றிருந்த அபூ உமாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஷஹாதத் கிடைத்திட துஆ செய்யுங்கள்! என வேண்டி நின்றார்கள்.

அப்போது அண்ணலார் யா அல்லாஹ் இந்தப் படையில் எவ்வித உயிரிழப்பும் இன்றி மிகுதமான கனீமத்தோடு அனைவரும் திரும்பி வர நீ அருள் புரிந்திடு! என்று துஆ செய்தார்கள்.

அது போன்றே நடந்தது. இது போன்று இன்னும் இரண்டு முறை படையை அனுப்பும் போது அபூ உமாமா வேண்டிக்கொண்ட போதும் நபிகளார் {ஸல்} அவர்கள் முன்பு போலவே துஆ செய்தார்கள்.

பிறகு ஒரு நாள் அபூ உமாமா (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களைச் சந்தித்து அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தில் நுழைய வைத்திடும் ஓர் அமலை எனக்கு அறிவித்துத் தாருங்கள்! என்று கேட்டார்கள்.

அப்போது மாநபி {ஸல்} நோன்பு பிடிப்பதை பற்றிப்பிடித்து வாருங்கள்! அதற்கு நிகரான எந்த ஒரு வணக்கமும் இல்லைஎன்று கூறினார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கும் ராவி கூறுகின்றார்கள்: இதற்குப் பின்னர் எந்தக் காலத்திலும் அவர் வீட்டில் பகல் காலங்களில் அடுப்பெறிய நாங்கள் கண்டதில்லை.

அப்படியே அடுப்பெரிந்தாலும் அங்கு சென்று பார்த்தால் அங்கே விருந்தாளிகள் வந்திருப்பார்கள்.

நோன்பு வைப்பதில் ஆர்வம்....

عن أبي الدرداء رضي الله عنه قال : خرجنا مع النبي صلى الله عليه وسلم في بعض أسفارنا في يوم حار حتى يضع الرجل يده على رأسه من شدة الحرارة وما فينا صائم إلا نبينا صلى الله عليه وسلم وابن رواحة ..

நாங்கள் கோடை காலத்தில் நடை பெற்ற போர்க்களங்களங்களுக்கு பயணமாகிற போது எங்களில் நபி {ஸல்} அவர்களும், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களும் (இருவர் மாத்திரமே) நோன்பிருக்க கண்டோம்என அபுத் தர்தா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

நபித்தோழர்களில் உமர் (ரலி), உஸ்மான் (ரலி), ஆயிஷா (ரலி), அபூ தல்ஹா (ரலி), இப்னு உமர் (ரலி) அபுத் தர்தா (ரலிஅன்ஹும்) போன்றோர் பெரும் பாலான நாட்கள் நோன்பிருக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

மூத்தா யுத்தகளத்தில் ஷஹீதாக்கப்படுவார் என முன்னறிவிப்புச் செய்யப்பட்ட ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் பலத்த காயங்களோடு உயிர் பிரியும் தருவாயில் இருக்கின்ற போது, அவர்களிடம் தண்ணீர் கொடுக்கப்பட்டது, அப்போது அவர்கள் மாநபி {ஸல்} அவர்கள் நான் காயபடுத்தப்படுவேன் என்பதை கூறினார்களோ அப்போதே நான் ஷஹீதாகிவிடுவேன் என்பதைத்தான் நபி {ஸல்} மறைமுகமாக முன்னறிவிப்புச் செய்கிறார்கள் என்று விளங்கிக் கொண்டேன். ஆகவே, நான் யுத்த களத்தினுள் நோன்பாளியாகவே களம் கண்டேன். என் ரப்பை நான் நோன்பு வைத்த நிலையில் சந்திக்கவே விரும்புகின்றேன்” என்று கூறி தண்ணீர் குடிக்க மறுத்து விட்டார்கள்.                          ( நூல்: ஸிஃபதுஸ் ஸஃப்வா )

ஆகவே, மகத்தான நற்கூலிகளைப் பெற்றுத் தருகிற நான்கு அம்சங்களில் ஒன்றான நோன்பு நம்மை எதிர் நோக்கி வர இருக்கின்றது.

ரமலான் மாதத்தின் முப்பது நோன்புகளையும் முழுமையாக நோற்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கூலிகளை முழுமையாக பெற முயற்சிப்போமாக! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!