Thursday 28 December 2017

இந்த உம்மத்தின் உயர்வைக் கேள்விக் ( ? ) குறியாக்கும் நாசகாரக் காரணிகள்!!!



இந்த உம்மத்தின் உயர்வைக் கேள்விக் ( ? ) குறியாக்கும்
நாசகாரக் காரணிகள்!!!




ரபீவுல் ஆகிர் எனும் இரண்டாம் வசந்தத்தின் இரண்டாம் ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் தூய வாழ்வின் நினைவலைகள் இந்த சமூகத்தின் முற்றத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், இன்றைய முஸ்லிம் உம்மத்திற்கான தேவை என்ன என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய கடமையும், கடப்பாடும் நமக்கு நிறையவே இருக்கின்றது.

இன்றைக்கு அறிவு தீட்சன்யம் நிறைந்த இமாம் கஸ்ஸாலி (ரஹ்), இமாம் ஷாஃபிஈ (ரஹ்), இமாம் அஹ்மத் (ரஹ்) போன்ற அறிஞர்களின் தேவை இந்த உம்மத்திற்கு இருக்கின்றது.

வீரமும், ஆற்றலும் நிறைந்த கஅகாஃ இப்னு அம்ர் (ரலி), ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி), ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) போன்ற விவேகிகளின் தேவை இந்த உம்மத்திற்கு இருக்கின்றது.

இறைநெருக்கமும், இறைக்காதலும் கொண்ட முஸ்அப் இப்னு உமைர் (ரலி), ஸஅத் இப்னு முஆத் (ரலி), முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) போன்ற இறை நேசர்களின், அழைப்பாளர்களின் தேவை இந்த உம்மத்திற்கு இருக்கின்றது.

சமகால அறிவும், மதியூகமும் நிறைந்த ஸல்மான் ஃபார்ஸி (ரலி), காலித் இப்னு வலீத் (ரலி), முஆவியா (ரலி) போன்ற மதியூகிகளின் தேவை இந்த உம்மத்திற்கு இருக்கின்றது.

இந்த உம்மத்தின் தேவை ஒன்றாகவும், உருவாகிக் கொண்டிருப்பவர்கள் வேறொன்றாகவும் இருப்பதைக் காண்கின்றோம்.

உம்மத்திற்கான தேவை என்ன என்பதைப் பற்றி சிந்திப்பது தலை சிறந்த ஓர் சிந்தனை என்பதை முதலில் நாம் மனதில் பதிக்க வேண்டும்.

தலைசிறந்தவர்களும், மகத்தான மனிதர்களும், இந்த உம்மத்தின் உயர்வு குறித்து சதா கவலை கொண்டிருப்பவர்களும் அத்தகைய சிந்தனையைத் தான் கொண்டிருப்பார்கள் என்கிறது வரலாறு.

حدثنا عبد الله قال حدثني أبي قثنا عبد الله بن يزيد قثنا حيوة قال أخبرني أبو صخر أن زيد بن أسلم حدثه عن أبيه عن عمر بن الخطاب أنه قال يوما لمن حوله تمنوا فقال بعضهم أتمنى لو أن هذه الدار مملوءة ذهبا فأنفقه في سبيل الله ثم قال تمنوا فقال رجل أتمنى لو أنها مملوءة لؤلؤا أو زبرجدا أو جوهرا فأنفقه في سبيل الله وأتصدق ثم قال عمر تمنوا فقالوا ما ندري يا أمير المؤمنين قال عمر أتمنى لو أنها مملوءة رجالا مثل أبي عبيدة بن الجراح ومعاذ بن جبل وسالم مولى أبي حذيفة وحذيفة بن اليمان.
فأستعين بهم على إعلاء كلمة الله.
فضائل الصحابة:ج2/ص740

ஆம்! உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் அது. வல்லரசுகளான ரோமும், பாரசீகமும் இஸ்லாத்தின் ஆளுமையின் கீழ் வந்திருந்தது. இஸ்லாத்தின் எல்லை பரந்து விரிந்து கொண்டிருந்த தருணமும் கூட.

அபூஉபைதா அல் ஜர்ராஹ் (ரலி), முஆத் இப்னு ஜபல் (ரலி), ஹுதைஃபா (ரலி), ஸாலிம் (ரலி) போன்ற மகத்தான மனிதர்கள் பூமியை விட்டு ஒன்றன் பின் ஒன்றாக விடை பெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் ஓர் வீட்டில் அமீருல் முமினீன் உமர் (ரலி) அவர்களும், உயர்வு மேவும் சில நபித்தோழர்களும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்போது, உமர் (ரலி) அவர்கள் அங்கிருந்த சக நபித்தோழர்களிடம் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் ஆசையைச் சொல்லுங்கள்! என்றார்கள்.

அப்போது, சில நபித்தோழர்கள்இந்த வீடு முழுவதும் தங்கமாக நிரம்பி இருக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகின்றோம். அப்படி இருந்தால் அதைக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் செலவழிப்போம்”.

இன்னும் சில நபித்தோழர்கள்இந்த வீடு முழுவதும் மாணிக்கக் கற்கள், மரகதம், பவளம் ஆகியவற்றால் நிரம்பி இருக்க வேண்டும் என்று விருப்புகின்றோம். ஏனெனில், அதைக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யவும், ஏழைகளின் துயர் துடைத்திடவும் முடியும் என்றனர்.

அப்போது, மீண்டும் உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தவர்களை நோக்கி உங்கள் ஆசைகளை இன்னும் தெரிவியுங்கள்!” என்றார்கள்.

இப்போது, சபையில் இருந்த அனைவரின் பார்வையும் உமர் (ரலி) அவர்களை நோக்கித் திரும்பியது, அனைவரும் ஒரே குரலில்எங்களின் விருப்பங்களை தெரிந்து கொண்ட கலீஃபா அவர்களே! உங்களின் விருப்பமும், ஆசையும் தான் என்ன? என்று வினவினர்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள்இந்த வீடு முழுவதும் அபூஉபைதா, முஆத் இப்னு ஜபல், ஸாலிம் மவ்லா அபூஹுதைஃபா, ஹுதைஃபா இப்னுல் யமான் (ரலி அன்ஹும்) போன்ற அறிவும், ஆற்றலும், ஒழுக்கமும் ஈமானும் கொண்ட மனிதர்கள் நிரம்பி இருக்க வேண்டும்என்று ஆசைப்படுகின்றேன். அவர்களைக் கொண்டு நான் இந்த சத்திய சன்மார்க்கத்தின் உயர்வுக்கு வித்திடுவேன்என்று கூறினார்கள்.

( நூல்: ஃபளாயிலுஸ் ஸஹாபா, பாகம், 2 பக்கம் 750, முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் அல் ஹாகிம் )

 அல்லாஹ்வின் அழகிய நடைமுறை

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனைத்து இறைத்தூதர்களையும் அந்தந்த காலகட்டத்தின் தேவைகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் தக்கவாறே அனுப்பினான்.

சூனிய அறிவும், ஏகாதிபத்தியமும் மிகைத்திருந்த காலத்தில் நபி மூஸா (அலை) அவர்களையும், மருத்துவ தேவை அதிகரித்திருந்த காலத்தில் நபி ஈஸா (அலை) அவர்களையும், அளவை, நிறுவையில் மோசடி பெருகி இருந்த காலத்தில் நபி ஷுஐபு (அலை) அவர்களையும், கட்டிடக்கலை மவுசாக இருந்த காலத்தில் நபி ஹூத் (அலை) அவர்களையும் அல்லாஹ் அனுப்பி அந்த உம்மத்துகளை சீர் திருத்தினான்.

நபி {ஸல்} அவர்களின் நடைமுறை….

மாநபி {ஸல்} அவர்கள் 23 ஆண்டுகால நபித்துவ வாழ்க்கையில் இந்த உம்மத்தின் எல்லாத் தேவைகளுக்குமான ஆற்றல் கொண்டவர்களை உருவாக்கினார்கள்.

மக்காவின் 13 ஆண்டுகால வாழ்வை எடுத்துக் கொண்டோமானால் அங்கே ஸுமைய்யா, யாஸிர் (ரலி அன்ஹுமா) போன்ற உயிர்த் தியாகிகளையும், பிலால், கப்பாப், ஸின்னீரா (ரலி அன்ஹும்) போன்ற எதையும் தாங்கும் அஞ்சா நெஞ்சர்களையும், கதீஜா, அபூபக்ர் (ரலி அன்ஹுமா) போன்ற கொடையாளர்களையும், உமர், ஹம்ஜா, ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி அன்ஹும்) போன்ற வீரர்களையும், முஸ்அப், இப்னு உம்மி மக்தூம், முஆத் இப்னு ஜபல் (ரலி அன்ஹும்) போன்ற தாயீக்களையும், அல்லாஹ்விற்காகவும், சத்திய தீனுல் இஸ்லாத்திற்காகவும் எதையும் தூக்கி எறிகிற ஸஅத் இப்னு அபீ வக்காஸ், அபீ சீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்த ஸஹாபாக்களையும் உருவாக்கினார்கள்.

மக்காவில் வாழ்ந்த அந்த 13 ஆண்டு காலத்தில் எல்லோரையும் நபி {ஸல்} அவர்கள் ஒரே ஆற்றல் கொண்டவர்களாக உருவாக்காமல் வெவ்வேறு ஆற்றல் கொண்டவர்களாக இந்த உம்மத்தின் அன்றையே தேவைக்கு ஏற்றவாறு உருவாக்கினார்கள்.

அடுத்த மதீனாவின் 10 ஆண்டுகள் மனித வாழ்வின் மகத்தான அத்துனை துறைகளுக்குமான ஆற்றல் கொண்டவர்களை ஒவ்வொரு ஆண்டின் இடைவெளியின் போதும் அறிமுகம் செய்து கொண்டே இருந்தார்கள்.

மாநபி {ஸல்} அவர்களின் 23 ஆண்டுகால உருவாக்கத்தின் பிரதிபலிப்பு சுமார் மூன்று நூற்றாண்டுகள் வரை ஒட்டு மொத்த உலகிலும் வியாபித்து இருந்தது.

ஆனால், இன்றோ இந்த உம்மத்தின் தேவைக்கு ஏற்ப ஆற்றல் கொண்டவர்கள், அறிவு படைத்தவர்கள், வீரம் மிக்கவர்கள் இருக்கின்றார்களா? என்றால் இல்லை என்று சொல்லும் சூழ்நிலை தான் நிலவுகின்றது.

வாருங்கள்! இந்த உம்மத்தின் உயர்வைக் கேள்விக் குறியாக்கும் காரணிகளைக் கண்டறிந்து, அவைகளைக் களைந்தெறிந்து இந்த உம்மத்துக்கு தேவையான ஆற்றல் கொண்டோர்களை உருவாக்குவோம்! உம்மத்தின் உயர்வை உறுதி செய்வோம்!

இந்த உம்மத்தின் உயர்வை கேள்விக்குறியாக்கும் பிரதான காரணிகளை நாம் கண்டறிய முற்படும் போது சில இல்லாமைகள் இந்த உம்மத்தை ஆக்கிரமித்து இருப்பதை அறிய முடிகின்றது.

அதில் ஒன்று தான் இஸ்லாமிய மயமாக்கப்பட்ட இல்லங்கள் இல்லாமை.

நபித்தோழர்களின் இரண்டாம் தலைமுறையினர், பேறு பெற்ற நாற்பெரும் இமாம்கள், வரலாற்று ஆசிரியர்கள், ஹதீஸ் கலை வல்லுனர்கள், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள், வலிமார்கள், இறைநேசச் செல்வர்கள், நாதாக்கள் என இந்த தீனின் உயர்வுக்கு வித்திட்ட அனைவரும் இஸ்லாமிய மயம் நிறைந்த இல்லங்களில் இருந்தே உருவாக்கம் செய்யப்பட்டவர்கள் என்பது நிரூபணம் ஆகின்றது.

இல்லம் என்பது மனித சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் அருட்கொடைகளில் அபரிமிதமான கொடையாகும்.

ஏனென்றால், மனித சமூகத்திற்கு மன அமைதி தரும் மூன்று அம்சங்களில் ஒன்றாக அல்லாஹ் இல்லத்தைக் கூறுகின்றான்.

மேலும், அல்லாஹ் உங்களுக்காக உங்கள் இல்லங்களை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான்”. ( அல்குர்ஆன்: 16: 80 )

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”பிரயாணம் என்பது வேதனையின் ஒரு பகுதியாகும். ஏனெனில், ஒருவர் பயணத்தின் போது பிடித்தமான உணவை உண்ணமுடியாமலும், நீராகாரங்கள் பருக முடியாமலும், சரியாக உறங்க முடியாமலும் தடுக்கப்படுகின்றார். எனவே, பிராயாண நோக்கம் முடிந்து ஊர் திரும்பும் ஒருவர் விரைவாக அவரின் இல்லத்திற்கு வந்து சேரட்டும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                   ( நூல்: புகாரி, பாபு அஸ்ஸஃபரு கித்அதும் மினல் அதாப் )

மேற்கூறிய இறைவசனமும், இறைத்தூதர் மொழியும் இல்லத்தின் மாண்பை உணர்த்துகின்றது.

ஆனால், இன்றைய இல்லங்களில் மனதிற்கு அமைதி கிடைக்கின்றதா? என்று நம்மில் ஒவ்வொருவரும் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

மாறாக, இன்றைய இல்லங்கள் சோதனைகளின் குடியிருப்புகளாக, பிரச்சனைகளின் ஊற்றுகளாக, சீரழிவின் அடையாளங்களாக, ஆபாசங்களையும், அபத்தங்களையும் உருவாக்கும் இடங்களாக அல்லவா மாறிப் போயிருக்கின்றது?

உஸாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”மாநபி {ஸல்} அவர்கள் மலைக் குன்றுகளில் ஒரு மலைக்குன்றின் மீது எங்களோடு அமர்ந்திருந்த ஓர் சந்தர்ப்பத்தில்நான் காண்பவற்றை நீங்கள் காண்கின்றீர்களா?” என்று கேட்டு விட்டு, இதோஉங்கள் இல்லங்களில் பூமிக்கு மழைநீர் இறங்குவது போன்று சோதனைகளும், குழப்பங்களும் இறங்குவதைக் காண்கின்றேன்என்று கூறினார்கள்.

                  ( நூல்: புகாரி, பாபு நுஸூலுல் ஃபிதனி கமவாகிஇல் மதரி )

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் மாநபி {ஸல்} அவர்கள் மதீனாவில் நிகழ விருக்கிற சோதனைகள், குழப்பங்கள் குறித்து முன்னறிவிப்பு செய்தார்கள் என்றும், அது போலவே, உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக ஜமல், ஸிஃப்ஃபீன், நஹர்வான் ஆகிய யுத்தங்கள் நடைபெற்றதும் மதீனாவின் இல்லங்களைத் தாண்டி அன்றைய முஸ்லிம் உலகையே ஓர் உலுக்கு உலுக்கிற்று என்கின்றார்கள்.

இன்னும் சில அறிஞர்கள் இந்த நபிமொழியை நபிகளார் காலத்தோடு நாம் சுருக்கி விட முடியாது நாம் வாழும் காலத்தோடும் அது பிரதிபலிக்கும் என்றும் விளக்கம் தருகின்றார்கள்.

நாம் வாழுகிற இந்த காலத்தோடு இந்த நபிமொழியை ஒப்பிட்டுப் பார்த்தால் எவ்வளவு நிதர்சனமாக ஒத்துப் போகின்றது என்கிற உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

ஏனெனில், முன்பெல்லாம் பாவமான காரியத்தைச் செய்ய வேண்டுமானால், தீமையைச் செய்ய வேண்டுமானால் வீட்டை விட்டு வெளியேறி ஊருக்கு ஒதுக்குப் புறமான இடங்களிலும், யாரும் பார்க்காத இடங்களிலும் செய்து வந்தார்கள்.

ஆனால், இன்று அந்த நிலைமாறி வசிக்கும் இல்லங்களிலேயே சர்வ சாதாரணமாக பாவம் செய்கிற, தீமை செய்கிற நிலை உருவாகி இருக்கின்றது.

அன்னிய ஆணோடு ஓடிப்போகும் துணிச்சல் நமது பெண்களுக்கும், அன்னிய பெண்ணோடு தவறான நடத்தையில் ஈடுபடும் துணிச்சல் நமது இளைஞர்களுக்கும் இன்று வந்திருக்கின்றது என்றால் அதற்கு முழு முதற்காரணம் நமது இல்லங்கள் இஸ்லாமியச் சூழலில் இருந்து விலகியதே.

ஆம்! ஆபாசங்களும், விரசங்களும் நிறைந்த சீரியலையும், சினிமாவையும், இரட்டை அர்த்தங்கள் நிறைந்த தொடர்களையும் மகள், மகன், மருமகன், மருமகள், மாமனார், மாமியார், கொளுந்தன், கொளுந்தியாள் என குடும்பம் சகிதமாக அமர்ந்து பார்க்கும், ரசிக்கும் கொடுமைகள் நடந்தேறி வருகின்றது.

இன்னொரு புறம் மொபல், இணையம், வாட்ஸ் அப், யூடியூப் என தொலை தொடர்பு சாதனங்கள் வழியாகவும் எளிதாக தவறான பல தொடர்புகளை வீட்டில் இருந்தவாறே மேற்கொள்கிற நிலை அதிகரித்து வருகின்றது.

24 மணி நேரத்தில் பெரும்பாலான நேரங்கள் இன்றைய இல்லங்கள் இஸ்லாமியச் சூழலில் இருந்து விலகியே இருக்கின்றது.

எனவே மேற்கூறிய நபிமொழியின் கருத்துப் படி இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் இல்லங்கள் சோதனைகளின் குடியிருப்புகளாக, பிரச்சனைகளின் ஊற்றுகளாக, சீரழிவின் அடையாளங்களாக, ஆபாசங்களையும், அபத்தங்களையும் உருவாக்கும் இடங்களாக மாறியிருக்கின்றது.

இப்படியான இல்லங்களில் இருந்து இமாம் ஷாஃபிஈ போன்றவர்களும், கௌஸுல் அஃளம் போன்றவர்களும், இமாம் ஸுயூத்தி போன்றவர்களும், ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி போன்றவர்களும் எப்படி வெளியாகுவார்கள்?

ஆகவே நமது இல்லங்களை இஸ்லாமியமயப் படுத்துவோம்! அமைதியும், ஆனந்தமும் தவழும் இல்லங்களாக அமைப்போம்! அல்லாஹ்வின் கருணையும் அருளும் நிலவும் இல்லங்களாக மாற்றுவோம்!

இஸ்லாமியச் சூழல் நிறைந்த இல்லங்களின் அடையாளங்கள்...

1.   திக்ர், துஆக்கள் பேணப்பட வேண்டும்.

அபூமூஸல் அஷ்அரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வை நினைவு கூறப்படும் வீட்டிற்கும், அல்லாஹ்வை நினைவு கூறப்படாத வீட்டிற்கும் உதாரணமாகின்றது உயிருள்ளவனுக்கும், இறந்தவனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றதாகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

2.   குர்ஆன் ஓதுவது பேணப்பட வேண்டும்.

இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “குர்ஆன் ஓதப்படுகிற இல்லங்கள் மலக்குமார்களின் வருகையால் நிரம்பி இருக்கும். ஷைத்தான்கள் அங்கிருந்து விரண்டோடுவார்கள். அந்த இல்லத்தாரின் வாழ்வு விசாலமாக ஆகிவிடும், நலவுகளும் நன்மையான காரியங்களும் பெருகிவிடும். எந்த வீட்டில் குர்ஆன் ஓதப்படுவதில்லையோ அங்கு ஷைத்தான்களின் ஆதிக்கம் பெருகிவிடும். மலக்குமார்களின் வருகை நின்றுவிடும். அந்த இல்லத்தாரின் வாழ்வு நெருக்கடியாகி விடும். நலவுகளும், நன்மையான காரியங்கள் நடைபெறுவது அருகிவிடும்”

             ( நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா பாகம், 10, பக்கம் 487 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “உங்கள் இல்லங்களை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள். எந்த வீட்டில்  சூரத்துல் பகரா ஓதப்படுகின்றதோ அந்த வீட்டை விட்டும் ஷைத்தான் விரண்டோடி விடுகின்றான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                           ( நூல்: அஹ்மத் )

3.   உபரியான தொழுகைகள் பேணப்படவேண்டும்...

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்கள் தொழுகையின் ஒரு பகுதியை வீட்டில் நிறைவேற்றுங்கள். உங்கள் வீடுகளை மண்ணறைகளைப் போன்று ஆக்கிவிடாதீர்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                   ( நூல்: முஸ்லிம் )

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் தொழுது முடித்து விட்டால் உபரியான தொழுகைகளை வீட்டில் சென்று விரைவாக நிறைவேற்றட்டும்! ஏனெனில், அல்லாஹ் வீட்டில் நிறைவேற்றப்படுகிற தொழுகைகளுக்கே நிறைய நன்மைகளை வழங்குகின்றான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                               ( நூல்: முஸ்லிம் )

இரவு வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து மறுநாள் காலை வீட்டை விட்டு வெளியேறுகிற வரை சராசரியாக தினமும் ஏராளமான துஆக்களை ஓத வேண்டிய நடைமுறையை நபி {ஸல்} அவர்கள் கற்றுக் கொடுத்து இருக்கின்றார்கள்.

கண்ணாடி பார்த்தல், உளூ செய்தல், உணவு, குடிபானம், டாய்லெட், உடலுறவு ஆடை அணிவது, கழற்றுவது, செறுப்பணிவது, கழற்றுவது, நறுமணம் பூசுவது என ஒரு நீண்ட பட்டியலே இருக்கின்றது.

ஃபர்ளான அனைத்து தொழுகையின் முன் பின் சுன்னத்துகள், இஷ்ராக், ளுஹா, அவ்வாபீன், தஹஜ்ஜத் தொழுகை நஃபில் தொழுகை என தொழுகைகளை வீட்டில் தொழுவது.

ஃபஜ்ருக்குப் பின் யாஸீன் சூரா, லுஹருக்குப் பின் ரஹ்மான் சூரா அஸருக்குப் பின் நபஃ சூரா, மஃக்ரிப்க்குப் பின் வாகிஆ சூரா, இஷாவுக்குப் பின் துஃகான், முல்க், அலிஃப் லாம் மீம் ஸஜ்தா சூரா, வாரத்தில் ஒரு நாள் கஹ்ஃப், தினந்தோரும் சூரத்துல் பகரா, ஒரு நாளைக்கு ஒரு ஜுஸ்வு என முப்பது நாளில் ஒரு குர்ஆன் என குர்ஆனை திரும்பத் திரும்ப ஓதுவது.

காலை மாலை ஓதவேண்டிய ஏராளமான திக்ர், அவ்ராதுகள், சின்ன சின்ன சூராக்கள், ஸலவாத் என இவற்றை வழமையாக ஓதி வருவது.

வீடுகளில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை கடைபிடிப்பது, ஹராம், ஹலாலை பேணுவது, வீடுகளையே மஸ்ஜித்களைப் போல் பாவிப்பது, ஹதீஸ் வரலாற்று நூல்களை படிப்பது என சதா எந்நேரமும் மலக்குமார்கள் வந்து போகும் இடமாக நம் இல்லங்களை நாம் வைத்திருப்போம் என்றால் நம் இல்லங்களில் இருந்து இந்த உம்மத்திற்கு தேவையானவர்கள் உருவாகுவார்கள்.
நம்முடைய இல்லங்கள் இந்த இஸ்லாமியச் சூழல் இல்லாமல் உருவானதாலேயே இன்றைய உம்மத்தின் தேவைகளும் பெருகி இருக்கின்றது.

சோபனப் பேற்றை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஃபாதிஹ்….

ونشأ تحت رعاية أبيه السلطان "مراد الثاني" سابع سلاطين الدولة العثمانيةالذي عمل على تعليمه وإعداده ليكون جديرًا بمنصب السلطان ، والقيام بمسئوليته ، فأتم "محمد الفاتح" حفظ القرآن ، وقرأ الحديث النبوي ، وتعلم الفقه الإسلامي .
  
ودرس "محمد الفاتح"  الرياضيات والفلك وفنون الحرب والقتال ، وإلى جانب ذلك تعلم اللغات العربية والفارسية واللاتينية واليونانية ، وخرج مع أبيه في معاركه وفتوحاته .

ثم ولاه أبوه إمارة صغيرة ؛ ليتدرب على إدارة شئون الدولة تحت إشراف عدد من كبار علماء عصره ، وهو ما أثر في تكوين شخصية الأمير الصغير ، وبناء تفكيره بناءً إسلاميًّا صحيحًا .

وقد نجح الشيخ "آق شمس الدين "- وكان واحدًا ممن قام على تربية "محمد الفاتح" وتعليمه – في بث روح الجهاد والتطلع إلى معالي الأمور في نفس الأمير الصغير، وأن يلمح له بأنه المقصود ببشارة النبي – صلى الله عليه وسلم- .. وكان لهذا الإيحاء دور كبير في حياة "محمد الفاتح" فنشأ محبًّا للجهاد ، عالي الهمة والطموح ، واسع الثقافة ، وعلى معرفة هائلة بفنون الحرب والقتال .

·       توليه الحكم .. والعمل على تحقيق البشارة :

 وبعد وفاة أبيه السلطان "مراد الثاني" في (5 من المحرم 852 ﻫ = 7 من فبراير 145 م) تولى "محمد الفاتح" عرش الدولة العثمانية ، وكان شابًّا فتيًّا في العشرين من عمره ، ممتلأ حماسًا وطموحًا ، يفكر في فتح مدينة "القسطنطينية" عاصمة الدولة البيزنطية .. وسيطر هذا الحلم على مشاعر "محمد الفاتح" ، فأصبح لا يتحدث إلا في أمر الفتح ، ولا يأذن لأحد ممن يجلس معه أن يتحدث في موضوع غير هذا الموضوع .

وكانت الخطوة الأولى في تحقيق هذا الحلم هو السيطرة على مضيق "البسفور" حتى يمنع "القسطنطينية" من وصول أية مساعدات لها من أوروبا ، فبنى قلعة كبيرة على الشاطئ الأوروبي من مضيق "البسفور" ، واشترك هو بنفسه مع كبار رجال الدولة في أعمال البناء ، ولم تمض ثلاثة أشهر حتى تم بناء القلعة التي عرفت بقلعة "الروم" ، وفى مواجهتها على الضفة الأخرى من "البسفور" كانت تقف قلعة "الأناضول" ، ولم يعد ممكنًا لأي سفينة أن تمر دون إذن من القوات العثمانية .

وفى أثناء ذلك نجح مهندس نابغة أن يصنع للسلطان "محمد الفاتح" عددًا من المدافع ، من بينها مدفع ضخم عملاق لم يُرَ مثله من قبل ، كان يزن (700) طن، وتزن القذيفة الواحدة (1500) كيلو جرام، وتسمع طلقاته من مسافات بعيدة ، ويجره مائة ثور يساعدها مائة من الرجال الأشداء وأطلق على هذا المدفع العملاق اسم المدفع السلطاني .

·       فتح "القسطنطينية" .. وتحقق البشارة :

وبعد أن أتم السلطان "محمد" استعداداته زحف بجيشه البالغ (265) ألف مقاتل من المشاة الفرسان ومعهم المدافع الضخمة حتى فرض حصاره حول "القسطنطينية" ، وبدأت المدافع العثمانية تطلق قذائفها على أسوار المدينة الحصينة دون انقطاع ليلاً أو نهارًا ، وكان السلطان يفاجئ عدوه من وقت لآخر بخطة جديدة في فنون القتال حتى تحطمت أعصاب المدافعين عن المدينة وانهارت قواهم .

وفى فجر يوم الثلاثاء الموافق (20من جمادى الأولى 827 ﻫ = 29 من مايو 1453 م) نجحت القوات العثمانية في اقتحام الأسوار ، وزحزحة المدافعين عنها بعد أن عجزوا عن الثبات ، واضطروا للهرب والفرار ، وفوجئ أهالي "القسطنطينية" بأعلام العثمانيين ترفرف على الأسوار ، وبالجنود تتدفق إلى داخل المدينة كالسيل المتدفق .

وبعد أن أتمت القوت العثمانية فتح المدينة دخل السلطان "محمد"- الذي أطلق عليه من هذه اللحظة "محمد الفاتح" – على ظهر جواده في موكب عظيم وخلفه وزراؤه وقادة جيشه وسط هتافات الجنود التي تملأ المكان :

"ما شاء الله ، ما شاء الله ، يحيا سلطاننا ، يحيا سلطاننا "

ومضى موكب السلطان حتى بلغ كنيسة "آيا صوفيا" حيث تجمع أهالي المدينة ، وما إن علموا بوصول السلطان "محمد الفاتح" حتى خرُّوا ساجدين وراكعين ، ترتفع أصواتهم بالبكاء والصراخ لا يعرفون مصيرهم وماذا سيفعل معهم السلطان "محمد الفاتح" .

800 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணல் நபிகளாரின் ஓர் சோபனத்தைப் பெற்றிட வேண்டும் என்கிற முனைப்போடு பல இஸ்லாமிய ஆட்சியாளர்கள் முயன்று அது கிடைக்காமல் போனதும், அந்த சோபனத்திற்கு சொந்தக்காரர் யார் என ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகும் எதிர்பார்த்த வரலாற்று நிகழ்வொன்று ஹிஜ்ரி 857 –இல் சாத்தியமானது.

அந்த சோபனத்தைச் சொந்தமாக்கியவர் உஸ்மானிய கலீஃபாவான முஹம்மது இப்னு ஸுல்தான் என்று அறியப்படுகின்ற முஹம்மத் அல் ஃபாத்திஹ் (ரஹ்) அவர்கள்.

அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு முறை நாங்கள் நபி {ஸல்} அவர்களைச் சூழ அமர்ந்திருந்தோம். அப்போது, காண்ஸ்டாண்டி நோபிள், ரோம் இவற்றில் எது முதலில் வெற்றி கொள்ளப்படும்? என்று வினவினோம். அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் “ஹிர்கலின் நகரம் காண்ஸ்டாண்டி நோபிள் முதலில் வெற்றி கொள்ளப்படும். படைத் தளபதிகளில் மிகச் சிறந்தவர். அந்த நகரத்தை வெற்றி கொள்ளும் தளபதியே! படைகளில் மிகச் சிறந்த படையும் அதுவே!” என கூறினார்கள்.                                 ( நூல்: முஸ்னத் அஹ்மத் 6645 )

காண்ஸ்டாண்டி நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய இஸ்தான்பூல் நகரமாகும் இதை அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது.

அன்று இறுதி தூதரின் காலத்தில் பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் பரந்த இரண்டு கிளைகளைக் கொண்டு அமைந்திருந்தது . ஒன்று; ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். இன்னொன்று; காண்ஸ்டாண்டி நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது.

இந்தச் சோபனத்தைப் பெற்றிட வேண்டும் என்ற நோக்கில் முதலாவதாக முயற்சி மேற்கொண்டவர்கள் கலீஃபா முஆவியா (ரலி) அவர்கள்.

ஸுஃப்யான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் தலைமையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), அபூஅய்யூபுல் அன்ஸாரி (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி) போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நனித்தோழர்களைக் கொண்ட படையை அனுப்பி வைத்தார்கள்.

எனினும் அந்த நகரின் கோட்டைச் சுவரைக் கூட அந்த படையால் நெருங்க முடியாமல் போனது. அங்கு நடை பெற்ற போரில் வெற்றியும் கிடைக்கவில்லை. அபூஅய்யூபுல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அந்த போரில் ஷஹீத் ஆனார்கள். அந்த கோட்டையின் அருகேயே நல்லடக்கமும் செய்யப்பட்டார்கள்.

அதன் பின்னர் ஹிஜ்ரி 54 –இல் கலீஃபா வலீத் இப்னு அப்துல் மலிக்கின் காலத்தில் தளபதி மூஸா இப்னு நுஸைர் அவர்களும், ஹிஜ்ரி 99 –இல் ஸுலைமான் இப்னு அப்துல் மலிக்கின் காலத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

உமைய்யாக்கள் ஆட்சியின் போதும், அப்பாஸியர்கள் ஆட்சியின் போதும் பெரும், பெரும் முயற்சிகள் படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் தோல்வியே மிஞ்சியது.

அடுத்து சல்ஜூக்கிய சாம்ராஜ்யம் முயன்று அதுவும் தோல்வியில் முடிந்தது.

பின்னர், நீண்ட காலத்திற்குப் பின்னர் உஸ்மானியப் பேரரசு அந்த சோபனத்தை நோக்கி நகர்ந்தது.

ஆம்! 1393 –இல் உஸ்மானிய்ய பேரரசின் கலீஃபா பாயஸீத் காண்ஸ்டாண்டி நோபிளை முற்றுகையிட்டார்.

எனினும், ஐரோப்பியர்கள், மங்கோலியர்கள் ஆகியோரின் உதவியோடு பைஸாந்தியப் பேரரசன் முஸ்லிம் படையைத் தோற்கடித்தான்.  இதில் கலீஃபா பாயஸீத் (ரஹ்) ஷஹீத் ஆனார்கள்.

கலீஃபா பாயஸீதின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மகன் முஹம்மது இப்னு பாயஸீத் ( 1 –ஆம் முஹம்மது ), அவர்களும், அவரைத் தொடர்ந்து அவரது மகன் முராத் இப்னு முஹம்மது ( 2 –ஆம் முராத் ) அவர்களும் ஆட்சி செய்தனர்.

1432 –இல் 2 ஆம் முராத் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. முஹம்மத் என்று பெயரிட்ட 2 ஆம் முராத் ஆக் ஷம்சுத்தீன் என்கிற மாபெரும் மேதையிடம் தன் மகனை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

தன் மகனார் முஹம்மத் பார்க்கும் இடம் அனைத்திலும் பெருமானார் {ஸல்} அவர்களின் சோபனம் நிறைந்த அந்த நபி மொழியை இடம் பெறச் செய்து, அவரை நாள் தோரும் உற்சாகமூட்டிக் கொண்டே இருப்பார் தந்தை 2 ஆம் முராத் அவர்கள்.

ஆக் ஷம்சுத்தீன் அவர்கள் முஹம்மத் அவர்களை குர்ஆனில் தேர்ச்சி பெற்றவராகவும், ஹாஃபிழாகவும், ஹதீஸ் கலை, ஃபிக்ஹ் கலை, வரலாறு ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவராக ஆக்கினார்.

அத்தோடு, அரபு, பாரசீகம், லத்தீன், கிரேக்கம் துருக்கி ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவராகவும் ஆக்கினார். முறையான போர்ப்பயிற்சிகள் வழங்கி மாபெரும் மதியூகியாகவும், வீரனாகவும் மாற்றினார்கள்.

அன்பும், பண்பும், மார்க்கப்பற்றும் கொண்டவராகவும் முஹம்மத் அவர்களை உருவாக்கி 2 ஆம் முராத் அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

அப்போது, முஹம்மத் அவர்களுக்கு வயது 12 தான் ஆகியிருந்தது. ஒரு ஆட்சியாளருக்கு உரித்தான அத்துனை அம்சங்களும் தம் மகனுக்கு கிடைத்து விட்டதாகக் கருதிய மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் முஹம்மதை கலீபாவாக நியமித்து விட்டு அனைத்துப் பொருப்புக் களிலிருந்தும் ஒதுங்கி தூரமான இடம் ஒன்றிற்கு சென்று விடுகிறார்

இந்நிலையில், அரியணையில் அமர்ந்து சில மாதங்கள் ஆவதற்குள் ரோம பேரரசு உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் மீது பாரியதொரு படையெடுப்பு மேற்கொண்டது.

இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது முஹம்மதுக்கு மிகக்கடினமாக இருந்தது. எனவே தந்தையின் உதவியை நாட முடிவு செய்தான். விரைவாகவந்து படைக்குத் தலைமை தாங்குமாறு தந்தைக்கு கடிதம் அனுப்பினார்.

தந்தையிடமிருந்து இப்பொழுது நீ தான் ஆட்சியாளன், படைக்கும் நீயே தலைமை தாங்கு..! என்னால் வர முடியாதுஎன்று பதில் வந்தது.

இதற்கு முஹம்மதின் பதில் கடிதம் பின்வருமாரு இருந்தது. ஆம் நான் தான் ஆட்சியாளன். இப்பொழுது நான் கட்டளையிடுகிறேன், உடனடியாக வந்து படையை வழி நடாத்துங்கள் என்று.

ஒருவாராக தந்தையின் உதவியோடு படையெடுப்பை முறியடித்து வெற்றி வாகை சூடினார் முஹம்மத்.

மீண்டும் 2 ஆம் முராத் தம் மகனிடம் இருந்து ஆட்சிப் பொறுப்பை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

முஹம்மத் 18 –ஆவது வயதை அடைந்த போது உஸ்மானியப் பேரரஸின் 8 –வது ஆட்சியாளராக தந்தை 2 –ஆம் முராதால் நியமிக்கப்படுகின்றார்.
      நீண்ட கால போர்த்திட்டம் தீட்டி 1435 –ஆம் ஆண்டு ஹிஜ்ரி 857 –இல் 2,65000 இரண்டு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரம் வீரர்களோடு காண்ஸ்டாண்டி நோபிளை நோக்கி படையெடுப்பை நடத்தினார்.

சுமார் 53 நாட்களாக கடல் வழியாகவும், தரை வழியாகவும் மிகப் பெரிய முற்றுகையிட்டு மகத்தான வெற்றி வாகை சூடினார்.

ஹிஜ்ரி 52 –இல் முஆவியா (ரலி) அன்ஹு அவர்களிடம் இருந்து துவங்கிய சோபனத் தாகத்திற்கு வெற்றி வாகை சூடி சுமார் 805 ஆண்டு கால தேடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

வரலாற்றில் முஹம்மத் அல் ஃபாத்திஹ் என்ற நிரந்தர புகழுக்குச் சொந்தக் காரராக மாறிப்போனார்.

இதன் பிண்ணனியில் முஹம்மத் அவர்களின் தந்தை, ஆக் ஷம்சுத்தீன் (ரஹ்) அவர்களின் மகத்தான பங்களிப்பு என்பதோடு 2 –ஆம் முராத் அவர்களின் இல்லத்திற்கும் மகத்தான பங்கு இருக்கின்றது.

அந்த இல்லம் எப்போதும் குர்ஆன், ஹதீஸ், வரலாறு ஒலிக்கும் இடமாக, அவரின் தந்தையின் துஆ ஒலிக்கும் இடமாக, காணும் இடமெல்லாம் நபிகளாரின் சோபனம் நினைவூட்டப்படும் இடமாக இருந்தது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு சோபனத்தைப் பெறுவதற்கு 800 ஆண்டு கால தொடர் முயற்சிக்குப் பிறகு மகத்தான வெற்றியை நல்கினான் என்றால் இந்த உலகின் 100 ஆண்டு கால ஏகாதிபத்திய, மேற்குலக, ஃபாஸிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் இந்த உம்மத்திற்கு மகத்தான வெற்றியை நல்குவான்.

அந்த வெற்றியை நோக்கிய நகர்வுக்கு நாம் முஹம்மத் அல் ஃபாத்திஹ் போன்றவர்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

அத்தகைய சூழல் கொண்ட இஸ்லாமிய இல்லங்களை நாம் உடனடியாக நிர்மாணிக்க சூளுரைக்க வேண்டும்.

எனவே, இஸ்லாமிய மயமாக்கப்பட்ட இல்லங்களை நிர்மாணிப்போம்! இந்த உம்மத்தின் உயர்வுக்கும் வித்திடும் மேன்மக்களை உருவாக்குவோம்!

வல்ல ரஹ்மான் நம் அனைவரின் முயற்சிக்கும் துணை நிற்பானாக! ஆமீன்!
வஸ்ஸலாம்!!