Wednesday 14 February 2018

உணர்வுகளைக் காயப்படுத்த வேண்டாம்!!!



உணர்வுகளைக் காயப்படுத்த வேண்டாம்!!!



உயிரைக் கொல்பவன் மட்டும் கொலைகாரன் அல்லபிறரின் உணர்வுகளைக் கொல்பவனும் கொலைகாரன் தான்என ஓர் கவிஞன் கூறினான்.

ஆம்! இந்தக் கவிதையின் வார்த்தைகள் முழுவதும் உண்மையே!

பிறரின் உணர்வுகளைக் கொல்பவர்கள் இன்று சமூகத்திலே பல்கிப் பெருகி விட்டார்கள்.

இன்னும் சொல்லப்போனால் பிறர்களின் உணர்வுகளைப் பந்தாடி அதை அணு அணுவாக ரசித்து இன்புறுபவர்களும் இருக்கின்றார்கள்.

மனிதன் எவ்வாறு மதிக்கப்பட வேண்டுமோ அதே போன்று மனித உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

أخبرنا أبو محمد عبد الرحمن بن عمر المعدل التجيبي نا أحمد بن إبراهيم بن جامع ثنا علي بن عبد العزيز ثنا القعنبي ثنا داود بن قيس الفراء عن أبي سعيد مولى عامر بن كوثر عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم
كل المسلم على المسلم حرام دمه وعرضه وماله

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிமுடைய உயிரைப் போக்குவது, அவனுடைய பொருளாதாரத்தை மோசடி செய்வது, அவனுடைய உணர்வுகளைக் காயப்படுத்தி அவமானப்படுத்துவது ஆகிய இம்மூன்றும் ஹராம் தடுக்கப்பட்டது ஆகும்என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( நூல்: )

அதே போன்று உணர்வுகளைக் காயப்படுத்துபவன், உணர்வுகளைக் கொல்பவன் மீதான கண்டனத்தையும் இஸ்லாம் பதிவு செய்திருக்கின்றது.

وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا (58)

மேலும், எவர் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும், இறைநம்பிக்கை கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாத ஏதேனும் ஒரு குற்றத்தை செய்ததாகக் கூறி  துன்புறுத்து ( உணர்வுகளை ஊணப்படுத்து ) கின்றார்களோ நிச்சயமாக!, அத்தகையவர்கள் பெரும் அவதூறையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொண்டனர்”.                                                ( அல்குர்ஆன்: 33: 58 )

இப்படியானவர்கள் மூன்று காரணங்களால் இந்த இழி செயலில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

1.   எல்லோரும் செய்வதால் செய்கின்றார்கள். 2. அப்படிச் செய்வதை அவர்கள் மிகவும் இலகுவான ஒன்றாகக் கருதுகின்றார்கள். 3. பிறரை தங்களை விட குறைவானவர்களாக கருதுகின்றார்கள்.

لَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنْفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هَذَا إِفْكٌ مُبِينٌ ()

நீங்கள் இதைக் கேள்வியுற்ற சமயத்தில் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும், இறைநம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களில் உள்ளவர்களைப் பற்றி நன்மையானதையே எண்ணிஇது தெளிவான அவதூறு தான்என்று கூறியிருக்க வேண்டாமா?. ( அல்குர்ஆன்: 24: 12 )

إِذْ تَلَقَّوْنَهُ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُمْ مَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِنْدَ اللَّهِ عَظِيمٌ (15) وَلَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُمْ مَا يَكُونُ لَنَا أَنْ نَتَكَلَّمَ بِهَذَا سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ (16)

 இதனை நீங்கள் சிலரிடமிருந்து சிலர் உங்கள் நாவுகளின் மூலம் எடுத்துக் கொண்டு, உங்களுக்கு எது பற்றி அறிவு இல்லையோ ( தெரிய வில்லையோ ) அந்த விஷயத்தை, உங்கள் வாய்களால் கூறிக் கொண்டிருந்த பொழுது, இந்த செயலை நீங்கள் மிக இலேசான ஒன்றாக எண்ணி விட்டீர்கள்; ஆனால், அல்லாஹ்விடத்தில் இதுவோ மிகப்பெரிய ஒன்றாகும்”.

நீங்கள் இதனைக் கேள்வி பட்ட போதுஇது பற்றி பேசுவது நமக்குத் தகுதி இல்லை. அல்லாஹ்வே! நீயே பரிசுத்தமானவன். இது மகத்தான பெரும் அவதூறு ஆகும் என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?             ( அல்குர்ஆன்: 24: 15,16 )

மேற்கூறிய மூன்று வசனங்களிலும் சத்திய ஸஹாபாக்களில் சிலர் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் குறித்தான பொய்யான அவதுறு குறித்து தாங்கள் அறியாது மக்களோடு மக்களாக பேசிக் கொண்டது குறித்து அல்லாஹ் விமர்சிக்கின்றான்.

இந்த இறைவசனங்கள் இறக்கப்பட்டதன் பிண்ணனியைப் பார்த்தால் நாம் மிக அழகாக விளங்கிக் கொள்வோம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் குறித்து கூறப்பட்ட அவதூறு விவகாரத்தில் பெரிதும் காயப்படுத்தப் பட்டிருந்தார்கள்.

فقال رسول الله صلى الله عليه وسلم وهو على المنبر: "يا معشر المسلمين مَنْ يعذرني من رجل قد بلغني أذاه في أهل بيتي، فوالله ما علمت على أهلي إلا خيرًا، ولقد ذكروا رجلا ما علمت عليه إلا خيرًا، وما كان يدخل على أهلي إلا معي" .

எந்தளவுக்கு எனில் ஒரு நாள் மக்களை ஒன்று திரட்டி மிம்பரின் மீது நின்று முஸ்லிம்களே! என்னோடு மட்டுமே வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட என் வாழ்க்கைத் துணையின் மீது அபாண்டத்தை வாரி இறைத்து எனக்கும், என் குடும்பத்தாருக்கும் மன ரீதியாக காயத்தை ஏற்படுத்தி இருக்கிற இந்த நிலையில் இருந்து உங்களில் யார் என்னை மீட்டி வெளியே கொண்டு வரப்போகின்றீர்கள்? என்று கேட்டார்கள்.

قالت: فتشهد رسول الله صلى الله عليه وسلم حين جلس، ثم قال: أما بعد يا عائشة، فإنه قد بلغني عنك كذا وكذا، فإن كنت بريئة فسيبرئك الله، وإن كنت ألْمَمْت بذنب فاستغفري الله ثم توبي إليه، فإن العبد إذا اعترف بذنب ثم تاب، تاب الله عليه.

இன்னொரு கட்டத்தில், பெற்றோரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைச் சந்திக்க வீட்டிற்கு வருகை தந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவை நோக்கிஆயிஷாவே! உம் விஷயத்தில் நான் இன்னின்னவாறு கேள்விப் படுகின்றேன். உமக்கும் அந்த விஷயத்திற்கும் துளி அளவு கூட சம்பந்தம் இல்லாதிருக்குமானால் விரைவில் அல்லாஹ் உம்மை அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பான்.

அதே நேரத்தில் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீ அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு தவ்பா பாவ மீட்சி பெற்றுக் கொள். ஏனெனில், அடியான் செய்து விட்ட பாவத்தைக் கூறி மன்னிப்புக் கேட்டு, அவன் பால் மீள்கிற போது அவன் மகத்தான மன்னிப்பை வழங்குகின்றான்.

பெருமானார் அவர்களின் உணர்வுகள் எந்தளவு காயப்பட்டிருந்தால் இவ்வாறான வார்த்தைகள் எல்லாம் வெளிப்பட்டு இருக்கும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அவதூறுக்கு அப்பாற்பட்டவர்கள், பரிசுத்தமானவர்கள் என்று விளக்கிக் கூறி இறைவசனங்களை இறக்கியருளினான்.

அத்தோடு மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூய மனைவியின் மீது குற்றம் சுமத்தியவன் மீதான தண்டனையை உறுதி படுத்திய அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உணர்வுகள் காயப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் அவர்களின் அறியாமையாலும், எல்லோரும் பேசுகின்றார்கள் என்ற மனோ நிலையில் இருந்ததாகவும் விளக்கிக் கூறி, இனி மேல் இது போன்று உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கின்றான்.

 يَعِظُكُمُ اللَّهُ أَنْ تَعُودُوا لِمِثْلِهِ أَبَدًا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (17)

நீங்கள் உண்மையில் இறைநம்பிக்கை கொண்டிருந்தால் இது போன்றதின் பால் ஒரு போதும் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கின்றான்”.                     ( அல்குர்ஆன்: 24: 17 )

ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் இந்த உம்மத்தின் கத்தீப் என்றும் ஷஹீத் என்றும் அடையாளப்படுத்தப்பட்ட நபித்தோழர் ஆவார்கள்.

ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இவர்கள் கேட்கும் திறன் குறைவானவர்கள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில போது கடமையான தொழுகைகளுக்குப் பின்னர் தோழர்களுக்கு உபதேசம் செய்வதுண்டு.

குறிப்பாக ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னர் சில நிமிடங்கள் உபதேசம் செய்வார்கள். கேட்கும் திறன் குறைவாக இருக்கும் காரணத்தால் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முன் ஸஃப்ஃபில் தொழும் பழக்கமுடையவராக இருந்தார்கள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபதேசம் செய்கிற போது ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் அமர்ந்து கேட்பார்கள்.

சில போது ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது அல்லது அதற்கும் பிந்தைய ஸஃப்ஃபில் தொழுதால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் உபதேசம் செய்ய ஆரம்பித்தால் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகே அமர்ந்து கேட்க வழி விட்டு அமர இடம் கொடுப்பார்கள் மற்ற நபித்தோழர்கள்.

قَالَ ابْنُ عَبَّاسٍ نَزَلَتْ فِي ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ وَذَلِكَ أَنَّهُ كَانَ فِي أُذُنِهِ وَقْرٌ، فَكَانَ إِذَا أَتَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ سَبَقُوهُ بِالْمَجْلِسِ أَوْسَعُوا لَهُ حَتَّى يَجْلِسَ إِلَى جَنْبِهِ، فَيَسْمَعَ مَا يَقُولُ، فَأَقْبَلَ ذَاتَ يَوْمٍ وَقَدْ فَاتَتْهُ رَكْعَةٌ مِنْ صَلَاةِ الْفَجْرِ، فَلَمَّا انْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ الصَّلَاةِ أَخَذَ أَصْحَابُهُ مَجَالِسَهُمْ، فَضَنَّ كُلُّ رَجُلٍ بِمَجْلِسِهِ فَلَا يَكَادُ يُوَسِّعُ أَحَدٌ لِأَحَدٍ، فَكَانَ الرَّجُلُ إِذَا جَاءَ فَلَمْ يَجِدْ مَجْلِسًا يَجْلِسُ فِيهِ قَامَ قَائِمًا كَمَا هُوَ، فَلَمَّا فَرَغَ ثَابِتٌ مِنَ الصَّلَاةِ أَقْبَلَ نَحْوَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ، وَيَقُولُ: تَفَسَّحُوا تَفَسَّحُوا، فَجَعَلُوا يَتَفَسَّحُونَ لَهُ حَتَّى انْتَهَى إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَهُ وَبَيْنَهُ رَجُلٌ فَقَالَ لَهُ: تَفَسَّحْ، فَقَالَ الرَّجُلُ: قَدْ أَصَبْتَ مَجْلِسًا فَاجْلِسْ، فَجَلَسَ ثَابِتٌ خَلْفَهُ مُغْضَبًا، فَلَمَّا انْجَلْتِ الظُّلْمَةُ غَمَزَ ثَابِتٌ الرَّجُلَ، فَقَالَ: مَنْ هَذَا؟ قَالَ: أَنَا فُلَانٌ، فقال له ثَابِتٌ: ابْنُ فُلَانَةٍ، وَذَكَرَ أُمًّا لَهُ كَانَ يُعَيَّرُ بِهَا فِي الْجَاهِلِيَّةِ، فَنَكَّسَ الرَّجُلُ رَأَسَهُ وَاسْتَحْيَا، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى هَذِهِ الْآيَةَ.

இந்நிலையில், ஒரு நாள் ஃபஜ்ர் தொழுகைக்கு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு ரக்அத் தாமதமாக வந்தார்கள். மீதமிருக்கும் இரு ரக்அத்தை தொழுது முடிக்கும் முன்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் உபதேசம் செய்ய ஆரம்பித்தார்கள்.

தொழுது முடித்த ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சபைகளில் அமர்ந்திருந்த நபித்தோழர்களிடம் தமக்கு வழிவிடும்படி அனுமதி வேண்டினார்கள்.

ஒருவர் பின் ஒருவராக வழிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சற்று முன்பாக நின்று கொண்டிருந்தார்கள். இன்னும் ஒருவர் வழி விட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் அருகே அமர்ந்து விடலாம் என்கிற நிலை.

அப்போது, அவருக்கு முன்பாக அமர்ந்திருந்தவரிடம் சற்று வழி விடுமாறு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வேண்டினார்கள்.

அதற்கவர் வழிவிட மறுத்து, இருக்கும் இடத்தில் அமர வேண்டியது தானே? எதற்கு முன்னே செல்ல வேண்டும்? என்று கடிந்து கொண்டார்.

ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கோபத்தோடு அங்கேயே அமர்ந்து கொண்டார்கள்.

இருள் சூழ்ந்திருந்ததால் வழிவிட மறுத்த அவரை ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை.

இருள் விலகி ஒளி படர ஆரம்பித்ததும் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமக்கு வழிவிட மறுத்த அவரை அடையாளம் கண்டு கொண்டு, அதை உறுதிபடுத்தும் முகமாக நீர் யார்? நீர் யாரின் மகன்? என்று கேட்டார்.

அதற்கவர் தான் இன்னாரின் மகன் என்று தம் தாயாரின் பெயர் கூறி தன்னை அடையாளப்படுத்தினார்.

சற்றும் தாமதியாமல் “ஓ! நீர் இன்ன பெண்ணின் மகன் தானா? என்று அவரின் தாயார் அறியாமைக் காலத்தில் செய்த ஓர் செயலைச் சுட்டிக் காட்டி குத்திக் காட்டும் முகமாக பேசினார்கள்.

சபையில் இருந்த சக நபித்தோழர்கள் அனைவரும் இதைக் கேட்டு அவரை உற்று நோக்க தர்மசங்கடத்தால் தலையின் மீது கையை வைத்து, வெட்கப்பட்டு அவர் கூனிக் குறுகிப் போனார்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடனடியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி ஓர் வசனத்தை இறக்கியருளினான்.

“இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்பட்ட அவர்கள் பரிகாசம் செய்த இவர்களை விட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம். அதே போன்று எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்பட்ட அவர்கள் பரிகாசம் செய்த இவர்களை விட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம். உங்களில் சிலர் சிலரை குறை கூறவும் வேண்டாம். உங்களில் சிலர் சிலரை அவருக்கு வைக்கப்படாத பெயர் கூறி அழைக்கவும் வேண்டாம்.

இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் தீயவற்றைக் குறித்துக் காட்டும் தீய பெயர் கூறுவது மிகக் கெட்டதாகி விட்டது. எவர்கள் இவைகளில் இருந்து தவ்பாச் செய்து மீளவில்லையோ அவர்களே அநியாயக்காரர்கள்”.       ( அல்குர்ஆன்: 49: 11 )

                                             ( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ )

உணர்வுகளைக் காயப்படுத்துவது, அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பதைக் கூறும் அல்லாஹ் உடனடியாக தவ்பாச் செய்து மீள வேண்டிய அளவிலான பாவம் என்றும் அநியாயக்காரர்களின் செயல் என்றும் எச்சரிக்கை செய்கின்றான்.

எனவே, சக மனிதனின், சக முஸ்லிமின், சக உறவுகளின், நண்பர்களின், இரத்த உறவுகளின் உணர்வுகளைக் காயப்படுத்துவதில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.

இன்று முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற பொதுத்தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருகி இருக்கின்ற அதே வேளையில் தனி நபர் மற்றும் சமூகம், குடும்பம், இயக்கம், மஹல்லா, ஊர் சார்ந்த பல்வேறு விஷயங்களை பதிவிட்டு, பகிர்ந்து, விமர்சித்து பிறரின் உணர்வுகளை காயப்படுத்துவோரின் எண்ணிக்கையும் பெருகி இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் நிலை இது விஷயத்தில் அளவு கடந்து நடந்து கொள்கின்றார்களோ என்று எண்ணுமளவிற்கு இருக்கின்றது.

1.   எடுத்த எடுப்பிலேயே அடுத்தவர் பற்றிய தவறான எண்ணம் தவிர்க்கப்பட வேண்டும்.

لما سار رسول الله صلى الله عليه وسلم إلى تبوك جعل لا يزال يتخلف الرجل، فيقولون يا رسول الله: تخلف فلان، فيقول: دعوه، إن يك فيه خير فسيلحقه الله بكم، وإن يك غير ذلك فقد أراحكم الله منه، حتى قيل: يا رسول الله تخلف أبو ذر وأبطأ به بعيره، فقال رسول الله صلى الله عليه وسلم: دعوه، إن يك فيه خير فسيلحقه الله بكم، وإن يك غير ذلك فقد أراحكم الله منه، فتلوم أبو ذر رضي الله عنه على بعيره فأبطأ عليه، فلما أبطأ عليه أخذ متاعه فجعله على ظهره فخرج يتبع رسول الله صلى الله عليه وسلم ماشيا، ونزل رسول الله صلى الله عليه وسلم في بعض منازله ونظر ناظر من المسلمين فقال: يا رسول الله هذا رجل يمشي على الطريق، فقال رسول الله صلى الله عليه وسلم: كن أبا ذر، فلما تأمله القوم قالوا: يا رسول الله هو والله أبو ذر! فقال رسول الله صلى الله عليه وسلم: رحم الله أبا ذر يمشي وحده ويموت وحده ويبعث وحده،

ஹிஜ்ரி ஒன்பது, தபூக் யுத்தத்திற்கான அழைப்பு விடப்படுகின்றது. கடுமையான கோடைக்காலம், மிக நீண்ட தூரப் பயணம்.எதிரிகளின் எண்ணிக்கையும் மிக அதிகம் என போருக்கு தடை ஏற்படுத்துகிற சூழ்நிலைகள் முஸ்லிம்களை சூழ்ந்திருந்தது.

ஒருவாராக நபி (ஸல்) அவர்களின் தலைமையில் முஸ்லிம்கள் போருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

மாலை நேரத்தில் ஓர் இடத்தில் படை வீரர்களை இளைப்பாறிச் செல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவே முஸ்லிம்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.

அப்போது சிலர் நபி (ஸல்) அவர்களிடத்தில்நம்மோடு போருக்கு வராமல் இன்னவர் ஊரிலேயே பின் தங்கி விட்டார்” என்று ஒருவர் குறித்து முறையிட்டனர்.

அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் ”இன்ன மனிதர் குறித்து என்னிடம் கூறுவதை தவிர்த்து விடுங்கள்! அவர் விஷயத்தில் அல்லாஹ் நலவை நாடியிருந்தால் அவரை உங்களோடு இப்படையில் இணைப்பான். அவர் விஷயத்தில் அதுவல்லாத வேறேதேனும் நாடி இருந்தால் உங்களுக்கு இதயத்தில் நிம்மதியை நல்குவான்” என்று கூறினார்கள்.

சற்று நேரம் கழித்து இன்னும் சிலர்  நபி (ஸல்) அவர்களிடத்தில்நம்மோடு போருக்கு வராமல் அபூதர் (ரலி) ஊரிலேயே பின்தங்கி விட்டார் என்றனர்.

அதற்கு, உடனடியாக “இல்லை! ஒருபோதும் அப்படியிருக்காது; அவர் நம்மோடு தான் புறப்பட்டிருப்பார்; வழியிலே அவரது வாகனம் (கோவேறு கழுதை) பலகீனப்பட்டிருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறுதியாக, அதிகாலை நேரத்தில் மாநபி (ஸல்) அவர்களும், மாநபியின் தோழர்களும் புறப்படத்தயாராயிருந்த போது, தூரத்தில் ஒரு மனிதர் முதுகிலே ஒரு மூட்டையை சுமந்து வருவதைக் கண்டு அண்ணலாரிடம் தெரிவித்தார்கள் தோழர்கள்.

அப்படியானால், அந்த மனிதர் அபூதர் (ரலி) அவர்களாகத்தான் இருப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

மிகச் சமீபமாக வரும்போது  அந்த மனிதர் அபூதர் (ரலி) அவர்கள் தான் என்பதை உறுதிபடுத்திய பின் நபிகளாரிடத்தில் இதோ! அபூதர் (ரலி) அவர்கள் வந்து விட்டார்கள் எனக் கூறினார்கள் நபித்தோழர்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள்: “ அல்லாஹ் அபூதர் (ரலி) அவர்களுக்கு அருள் பாளிப்பானாக! தனியே நடந்து வந்தார். தனியே இருக்கும் போதுதான் மரணிப்பார்; நாளை மஹ்ஷரில் தனியாகத்தான் எழுப்பப்படுவார்!” என்று சோபனம் கூறினார்கள்.

                                   ( நூல்: தஹ்தீப் - சீரத்- இப்னு ஹிஷாம்; பக்கம்:256 )

எந்த ஒரு தருணத்திலும் எடுத்த எடுப்பிலேயே ஒருவர் குறித்து தவறாக எண்ண இடம் கொடுத்து விடக்கூடாது என்பதை இங்கே மாநபி {ஸல்} அவர்கள் தோழர்களுக்கு உணர்த்தினார்கள். 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தபூக் யுத்தத்திற்கான அழைப்பு விடுத்திருந்த தருணம் அது.. நீண்ட தூர பயணம், கடுமையான வெயிற்காலமும் கூட.. நிறைய நிதிகளும், தளவாடங்களும் தேவைப் பட்டது.                                

மக்களை அல்லாஹ்வின் பாதையில் அள்ளி அள்ளி வழங்குமாறு மாநபி {ஸல்} அவர்கள் ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள். மக்களும் ஒவ்வொருவராக வந்து தங்களால் இயன்ற அளவு கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.          

ஒரு ஏழை நபித்தோழர் தன் விரிப்பைக் கொண்டு வந்து சந்தையில் இதோ இந்த விரிப்பை யாரேனும் விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். தபூக்கிற்கான நிதியில் என் பங்கும் சேர வேண்டுமென நான் ஆவல் கொள்கிறேன்என்று கூறிக் கொண்டிருந்தார்.                   
ஒருவர் ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட அந்த நபித்தோழர் விரைவாக மாநபியை நோக்கிச் சென்றார். தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உமைர் இப்னு ஸஅதுல் காரீ என்ற சிறுவர் அந்த நபித்தோழரைப் பின் தொடர்ந்தார்.

மஸ்ஜிதுன் நபவீயில் வீற்றிருந்த நபிகளாரின் கையில் ஒரு திர்ஹத்தை கொடுத்து விட்டு தமது உள்ளக் கிடக்கை வெளிப்படுத்தினார் அந்த ஏழை நபித்தோழர்.                                 
அவர்  நபிகளாரை விட்டு நகர்ந்ததும்  உஸ்மான் {ரலி} அவர்கள் அங்கே வந்தார்கள். 1000 பொற்காசுகள் நிரப்பப்பட்ட ஒரு தோல் பையை மாநபியின் கரங்களில் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.                  

சிறிது நேரத்தில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் {ரலி} அவர்கள் தமது தோள்களில் ஒரு பையைச் சுமந்து வந்து மாநபி {ஸல்} அவர்களின் முன் கொட்டினார்கள். பையிலிருந்து 200 ஊக்கியா தங்கக் கட்டிகள் வந்து விழுந்தது.                                                     
இப்படியாக, நபித்தோழர்கள் ஒவ்வொருவராக வருவதும், ஏதாவது கொடுத்து விட்டுச் செல்வதுமாய் இருந்தனர். இந்தக் காட்சியை மஸ்ஜிதின் வாசலில் நின்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் சிறுவரான உமைர் இப்னு ஸஅத்.                                
வேகமாக தம் வீட்டிற்கு வந்தார். இவரின் தந்தை ஸஅத் {ரலி} அவர்கள் பத்ரில் கலந்து கொண்டு ஷஹீதாகி விட்டார். பின்னர் இவரின் தாயார் அர்மலா {ரலி} அவர்கள், ஜுலாஸ் இப்னு சுவைத் {ரலி} என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்கள்.                       
இப்போது வளர்ப்புத் தந்தையான ஜுலாஸ் {ரலி} அவர்களிடம் வந்து சந்தையிலிருந்து துவங்கி மாநபி {ஸல்} அவர்களின் தர்பார் வரையிலான தான்  கண்ட காட்சியை சொல்லிவிட்டு, ஆதங்கத்தோடு அச்சிறுவர் கேட்டார்.

 தந்தையே!  நீங்களும் பெரும் செல்வந்தர் தானே ஏன் நபி {ஸல்} அவர்களிடம் வந்து அல்லாஹ்விற்காக கொடை வழங்கவில்லை.? போய் நீங்களும் கொடுத்து விட்டு வாருங்கள். என்றார்.                                                                        
அதற்கு, ஜுலாஸ் முஹம்மத் அவர் சொல்வதில் {கொள்கையில்} உண்மையாளராக இருப்பாரேயானால், நாம் கழுதையை விட கேடு கெட்டவர்களாக ஆகி விட்டிருப்போம்என்று சொன்னார்.                   

இதைக் கேட்ட உமைர் முஹம்மத் {ஸல்} அவர்கள் உண்மையாளர் தான் என்று நான் சாட்சி கூறுகின்றேன். நீர் தான் கழுதையை விட கேடு கெட்டவர்என்று உணர்ச்சிப் பொங்க கூறினார்.

இந்த பதிலை சற்றும் எதிர் பாராத ஜுலாஸ் மகனே தயவு செய்து இதை நபிகளாரிடம் சொல்லிவிடாதே என்று சொன்னார்.               

அப்போது உமைர் ஜுலாஸே! என்று பெயர் கூறி அழைத்து, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதுவரை  என் இதயத்தில் மனிதர்களில் மிகவும் உயர்ந்தவராக உம்மைத்தான் வைத்திருந்தேன். என் சிந்தையில் உம்மைத் தான் பெரும் கொடையாளியாக இருத்தியிருந்தேன். உம்மை கண்ணியமானவராகவும், நல்லவராகவும் கருதியிருந்தேன்.  
                                                      
ஆனால், நீர் சொன்ன ஒரு வார்த்தை உம் மீதான அனைத்து நன்மதிப்பையும் தூக்கி எறிய வைத்து விட்டது.                          

இப்போது சொல்கிறேன் கேட்டுக்கொள்ளும்! நீர் பேசியதை மக்களிடம் தெரியப்படுத்தினால், நான் உம்மை கேவலப்படுத்தியது போல் ஆகி விடும். நீர் பேசியதை நான் மறைத்து விட்டால் மக்களெல்லாம் மதிக்கின்ற இறைத் தூதருக்கு நான் துரோகம் செய்தது போல் ஆகிவிடும்”.  
                                                 
ஆகவே, கண்டிப்பாக நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் சொல்வேன். என்றார்.                                

அதற்கு ஜுலாஸ் நீ சிறுவனாக இருப்பதால் உன் சொல்லை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.எனக் கொன்றும் கவலை இல்லை என்றார்.                                                  
உமைர் மஸ்ஜிதுன்நபவி-க்கு வந்தார். மாநபி {ஸல்} அவர்களிடம் நடந்த சம்பவங்களை விவரமாகக் கூறினார்.                      

உறுதியான நெஞ்சோடும், உண்மைக்கும்,நீதிக்கும் சாட்சியாளனாய் நின்று சான்று பகர்வதை பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த மாநபி {ஸல்} அவர்கள் ஜுலாஸை அழைத்து வர ஒருவரை அனுப்பினார்கள். 
                                       
அதற்குள் அங்கிருந்த சில நபித் தோழர்கள் ஜுலாஸ் நம்மோடு தான் தொழுகிறார். நம்மோடு தான் கலந்துறவாடுகிறார்அவர் அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றனர்.

இந்த சம்பவம் மிக நீண்டது. இறுதியில், ஜுலாஸ் மாநபி {ஸல்} அவர்கள் குறித்து சொன்னது உண்மை தான் என்று அல்லாஹ் இறை வசனத்தை இறக்கியருளி உமைர் இப்னு ஸஅதுல் காரீயை உண்மை படுத்தினான்.

( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபத்தில் அஸ்ஹாப், தஃப்ஸீர் இப்னு கஸீர் )

இங்கே, தம் சக தோழர் ஒருவர் குறித்த ஒரு குற்றச்சாட்டை ஒருவர், அதுவும் அவரின் மகன் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் சமூக முற்றத்தின் முன் வைக்கும் போது அது உண்மையாக இருக்குமா? இருக்காதா? என்று ஆராயாமல் அவர் குறித்து நற்சான்று வழங்கிய நபித்தோழர்களின் உன்னத நிலையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்: (இவர்தான் கஅப் (ரலி)அவர்கள் கண்பார்வை இழந்த காலத்தில் அவர்களை வழிநடத்தி அழைத்துச் செல்பவராக இருந்தார்.) கஅப் (ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் நபியவர்களை விட்டும் பின்தங்கிவிட்டபொழுது நடந்த நிகழ்ச்சி பற்றி இவ்வாறு அறிவித்ததை நான் கேட்டுள்ளேன்.

كَا نَ مِنْ خَبَرِيْ حِيْنَ تَخَلَّفْتُ عَنْ رَّسُوْلِ اللهِ فِيْ غَزْوَةِ تَبُوْكٍ أنِّيْ لَمْ أكُنْ قَطُّ أقْوَي وَ لاَأيْسَرَ مِنَّيْ حِيْنَ تَخَلَّفْتُ عَنْهُ فِيْ تِلْكَ الْغَزْوَةِ , وَاللهِ مَا جَمَعْتُ رَاحِلَتَيْنِ قَطٌّ حَتَّي جَمَعْتُهَ فِيْ فِيْ غَزْوَةِ تَبُوْكٍ أنِّيْ لَمْ أكُنْ قَطُّ أقْوَي وَ لاَأيْسَرَ مِنَّيْ حِيْنَ تَخَلَّفْتُ عَنْهُ فِيْ تِلْكَ الْغَزْوَةِ , وَاللهِ مَا جَمَعْتُ رَاحِلَتَيْنِ قَطٌّ حَتَّي جَمَعْتُهَ فِيْ فِيْ غَزْوَةِ تَبُوْكٍ أنِّيْ لَمْ أكُنْ قَطُّ أقْوَي وَ لاَأيْسَرَ مِنَّيْ حِيْنَ تَخَلَّفْتُ عَنْهُ فِيْ تِلْكَ الْغَزْوَةِ , وَاللهِ مَا جَمَعْتُ رَاحِلَتَيْنِ قَطٌّ حَتَّي جَمَعْتُهَ فِيْ تِلْكَ الْغَزْوَةِ , وَلَمْ يَكُنْ رَسُوْلُ اللهِ يُرِيْدُ غَزْوَةً اِلاَّ وَرَّي بِغَيْرِهَا حَتَّي تِلْكَ الْغَزْوَةِ, فَغَزَاهَا رَسٌوْلُ اللهِ فِيْ حَرٍّ شّدِيْدٍ, وَاسْتَقْبَلَ سَفَرًا بَعِيْدًاوَ مَفَازًا, وِاسْتَقْبَلَ عَدَدًا كَثِيْرًا , فَجَلَّي للمُسْلِمِيْنَ أمْرَهُمْ لِيَتَأهَّبُوْا اُهْبَةَ غَزْوِهِمْ فَأخْرَهُمْ بِوَجْهِهِمُ الَّذِيْ يُرِيْدُ, وَ الْمُسْلِمُوْنَ مَعَ رَسُوْلِ اللهِ كَثِيْرٌ وَ لاَ يَجْمَعُهُمْ كِتَابٌ حَافِظٌ (يُرِيْدُ بِذَلِكَ الدِّوَانَ) قَالَ كَعْبٌ : فَقَلَّ رَجُلٌ يُرِيْدُ أنْ يَتَغَيَّبَ اِلاَّ ظَنَّ أنَّ ذَلِكَ سَيَخْفَي بِهِ مَا لَمْ يَنْزِلْ وَحْيٌ مِنَ اللهِ, وَغَزَا رَسُوْلُ اللهِ تِلْكَ الْغَزْوَةَ حِيْنَ طَابَتْ الثِّمَارُ وَ الظِّلاَلُ فَأنَااِلَيْهَا أصْعَرُ

கஅப்(ரலி)அவர்கள் சொன்னார்கள்: நபி(ஸல்)அவர்கள் கலந்துகொண்ட எந்த யுத்தத்தை விட்டும் நான் எப்போதும் பின்தங்கியதில்லை., தபூக் யுத்தத்தைத்தவிர! ஆனால் பத்று யுத்தத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்! அதில் கலந்துகொள்ளாமல் இருந்த எவரும் கண்டிக்கப்படவில்லை.

ஏனெனில் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் - குறைஷிகளின் வாணிபக் குழுவைத் தாக்குவதற்காகத்தான் புறப்பட்டிருந்தார்கள். அங்கே முன்னறிவிப்பு இல்லாமல் அவர்களையும் அவர்களுடைய பகைவர்களையும் மோதச் செய்தான், அல்லாஹ்!

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக நாங்கள் உறுதிமொழி கொடுத்த போது நடைபெற்ற நள்ளிரவு கணவாய் உடன்படிக்கையில் நபி (ஸல்) அவர்களிடம் நான் ஆஜராகியுள்ளேன். அதற்குப் பகரமாக பதருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பெறுவதை நான் விரும்பவில்லை. அதையவிட பத்ருப் போர்தான் மக்களிடையே அதிகம் பேசப்படக்கூடியதாக இருந்தாலும் சரியே!

நான் அதிக அளவு சக்தியும் சௌகரியுமும் முன்னெப்போதும் பெற்றிருந்ததில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதற்கு முன்பு ஒருபொழுதும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் இருந்ததில்லை! ஆனால் அந்தப் போரின்போது இரண்டு ஒட்டகங்களை நான் சேகரித்து வைத்திருந்தேன்.

நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் போருக்குப் புறப்பட நாடினால் அதனைச் சாடைமாடையாக- மறைத்தே பேசுவார்கள். இவ்வாறு இந்தப் போரும் வந்தது! நபியவர்கள் இந்தப் போருக்காகப் புறப்பட்டது கடுமையான வெயில்நேரத்தில்! அதுவும் நெடியதொரு பயணத்தை மேற்கொண்டார்கள். பாலைவெளியைக் கடந்து செல்ல நேர்ந்தது! எதிரிகளின் அதிக எணண்ணிக்கை கொண்ட படையைச் சந்திக்கநேர்ந்தது!

எனவே, முஸ்லிம்கள் தங்களுடைய போர்தடவாடங்களைத் தயார் செய்துகொள்ளவேண்டும் என்பதற்காக யதார்த்த நிலையை அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறினார்கள். முஸ்லிம்கள் எங்கு நோக்கிச் செல்லவேண்டுமென்பது தமது நாட்டம் என்பதை வெளிப்படையாக அறிவித்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் முஸ்லிம்கள் அதிக அளவில் புறப்பட்டிருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை எந்த ஏட்டிலும் பதிவு செய்துவைக்கப்படவில்லை. (அதாவது அரசாங்கப் பதிவேடு என்று எதுவும் அப்பொழுது இல்லை)

கஅப் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: போருக்குப் புறப்படாமல் தங்கிவிடலாமென  விரும்பும் எவரேனும் இருந்தால் நாம் கலந்து கொள்ளாதது பற்றி அல்லாஹ்விடம் இருந்து வஹி (குர்ஆன் வசனம்) இறங்கினாலே தவிர அது யாருக்கும் தெரியப் போவதில்லை - என்றே எண்ணிக் கொண்டிருந்தார்!

நபி (ஸல்) அவர்கள் இந்தப் போருக்காகப் புறப்பட்ட நேரத்தில் கனிகள் கனிந்திருந்தன., நிழல்கள் நன்கு அடர்த்தியாகி விட்டிருந்தன! நான் அவற்றின் மேல் அதிக மையல் கொண்டிருந்தேன்!

فَتَجَهَّزَ رَسُوْلُ اللهِ وَالْمُسْلِمُوْنَ مَعَهُ , وَطَفِقْتُ أغْدُولِكَيْ أتَجَهَّزَ مَعَهُ , فَأرْجِعُ وَلَمْ أقْضِ شَيْئًَ, وَأقُوْلُ فِيْ نَفْسِي, : أنَا قَادِرٌ عَلَي ذَلِكَ اذَا ارَدْتُ, فَلَمْ يَزَلْ يَتَمَادَي بِي حَتَّي اسْتَمَرَّ بالنَّاسِ الْجِدُّ , فَاصْبَحَ رَسُوْلُ اللهِ غاَدِيًا وَالْمُسْلِمُوْنَ مَعَهُ , وَلَمْ أقْضِ مِنْ جِهَازِي شَيْئًا , ثُمَّ غَدَوْتُ فَرَجَعْتُ وَلَمْ أقْضِ شَيْئًا فَلَمْ يَزَلْ يَتَمَادَي بِيْ حَتَّي أسْرَعُوْا وَ تَفَارَطَ الْغَزْوُ فَهَمَمْتُ أَنْ أرْتَحِلَ فَأدْرَكَهُمْ , فَيَا لَيْتَنِي فَعَلْتُ, ثُمَّ لَمْ يُقَدَّرْ ذَلِكَ لِيْ فَطَفِقْتُ اِذَا خَرَجْتُ فِيْ النَّاسِ بَعْدَ خُرُوْجِ رَسُوْلِ اللهِ يَحْزُنُنِيْ أَنِّيْ لاَ أَرَي لِيْ اُسْوَةً, اِلاَّ رَجُلاً مَغْمُوصًا عَلَيْهِ فِي النِّفَاقِ اَوْ رَجُلاً مِمّنْ عَذَرَ اللهُ تَعَالَي مِنَ الضُّعَفَاءٍ

 நபி(ஸல்) அவர்கள் போருக்கான ஏற்பாட்டைச் செய்து முடித்திருந்தார்கள். அவர்களுடன் முஸ்லிம்களும் அதற்கான ஏற்பாட்டை முழுமையாக்கி விட்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் போருக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகக் காலையில் புறப்படலானேன். ஆனால் எதையும் செய்து முடிக்காமலேயே திரும்பிவருவேன்.

நான் என் மனத்திற்குள் சொல்லிக்கொள்வேன்: நாம் நாடிவிட்டால் எற்பாட்டைச் செய்துமுடிக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கத்தானே செய்கிறது!- இந்த எண்ணம் தான் தொடர்ந்து என்னைத் தாமிதப்படுத்திக் கொண்டே இருந்தது! மக்களோ இடைவிடாது முயற்சிகள் மேற்கொண்ட வண்ணம் இருந்தனர்!

நபி(ஸல்)அவர்கள் தோழர்களுடன் ஒரு நாள் அதிகாலையில் போருக்காகப் புறப்பட்டுவிட்டார்கள். நானோ அதுவரையில் எவ்வித ஏற்பாட்டையும் செய்து முடிக்காமலேயே இருந்தேன். பிறகு மறுநாள் காலையில் சென்றேன். எதையும் செய்து முடிக்காமலேயே திரும்பி வந்தேன்.

இவ்வாறு நான் தாமிதமாகிக் கொண்டே இருந்தேன். படைவீரர்களோ மிகவேகமாகப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தார்கள். வெகுதூரம் சென்றுவிட்டார்கள். நானும் பயணம் புறப்பட முனையத்தான் செய்தேன்.,

எப்படியேனும் அவர்ளைப் பிடித்துவிட வேண்டும் என நாடத்தான் செய்தேன். அந்தோ! அப்படி நான் செய்தேனில்லையே! எனது விதியில் அந்தப் பாக்கியம் எழுதி வைக்கப் பட்டிருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்!

நபி(ஸல்) அவர்கள் சென்ற பிறகு நான் மக்கள் மத்தியில் சென்றபொழுது - நயவஞ்சகனென்று இழித்துக் கூறப்பட்டவனையும் (பெண்கள் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகளைப் போன்ற) இயலாதவர்களையும் தக்க காரணம் உடையவர்களையும் தவிர என்னைப்போல் போருக்குக் கிளம்பாதிருந்த எவரையும் நான் காணவில்லை., இது எனக்கு மிகுந்த துயரம் அளிக்கலானது!
 
وَلَمْ يَذْكُرْنِي رَسُوْلُ اللهِ ' حَتَّي بَلَغَ تَبُوْكًا , فَقَالَ وَهُوَ جَالِسٌ فِي الْقَوْمِ بِتَبُوْكٍ : مَا فَعَلَ كَعْبُ بْنُ مَالِكٍ؟ فَقَالَ رَجُلٌ مِنْ بَنِيْ سَلِمَةَ: يَا رَسٌوْلَ اللهِ حَبَسَهُ بُرْدَاهُ, وَالنَظَرُ فِيْ عِطْفِيْهِ فَقَالَ لَهُ مُعَادُ بْنُ جَبَلٍ : بِئْسَ مَا تَقُوْلُ وَاللهِ يَا رَسُوْلَ اللهِ مَا عَلِمْناَ عَلَيْهِ الاَّ خَيْرًا, فَسَكَتَ رَسُوْ لُ الله ِ فَبَيْنَمَا هُوْ عَلَي ذَلِكَ رَأي رَجُلاً مُبَيَّضًا يَزُوْلُ بِهِ السَّرَابُ . فَقَالَ رَسُوْلُ اللهِ : كُنْ أبَا خَيْثَمةَ, فَأذَا هُوَ أبُو خَيْثَمَةَ  الاَنْصَارِي وَهُ الذِّيْ تَصَدَّقَ بِصَاعِ التَّمْرِ حِيْنَ لَمَزَهُ الْمُنَافِقُوْنَ

 நபி (ஸல்) அவர்கள் தபூக் சென்றடையும் வரையில் என்னைப் பற்றி எதுவும் கூறவில்லை. தபூக்கில் மக்கள் மத்தியில் அவர்கள் அமர்ந்திருந்தபொழுது கஅப் பின் மாலிக் என்ன செய்தார்? என்று கேட்டார்கள்.

அப்போது, பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர் பதில் சொன்னார்: “அல்லாஹ்வின் தூதரே! அவர் அணிந்திருந்கும் வேஷ்டியும் மேலங்கியும் அவரைத் தடுத்துவிட்டன! தமது ஆடையழகைக் கண்டு பூரிப்படைவதே அவரது வேலை!

அதற்கு முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் ”நீ எவ்வளவு மோசமான வார்த்தையைக் கூறிவிட்டாய்! அல்லாஹ்வின்தூதரே! நாங்கள் அவரது விஷயத்தில் நல்லதைத் தவிர வேறெதையும் அறிந்திருக்கவில்லை!” என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமாகிவிட்டார்கள்.

                                                            ( நூல்: புகாரி )

இங்கே, முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கஅப் (ரலி) அவர்கள் குறித்து ஒருவர் விமர்சித்த போது கஅப் (ரலி) அவர்கள் குறித்தான சிந்தனை முற்றிலும் தவறானது என்பதை நிலை நிறுத்தியதோடு சக முஸ்லிம் ஒருவர் குறித்தான ஒரு குற்றச்சாட்டின் போது எடுத்த எடுப்பிலேயே அவர் குறித்து தவறான எண்ணம் ஏதும் வைக்கக் கூடாது என்பதை உணர்த்துகின்றார்கள்.

2.   பிறரின் உணர்வுகள் காயப்பட்டு விடக்கூடாது என்பதற்காக….

قال ابن القيم رحمه الله
قال ابو علي الدقاق: جاءت امراة فسألت حاتما عن سألة فاتفق أنه خرج منها صوت في تلك الحالة فخجلت فقال حاتم ارفعي صوتك فأوهمها أنه أصم فسرت بذلك وقالت إنه لم يسمع الصوت فسرت بذلك ولقب بحاتم الصم وهذا التغافل هو نصف الفُتوَّة
مدارج السالكين ص/344 و ج/2

இப்னுல் கைய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் அபூ அலீ அத்துகாக் (ரஹ்) என்பவரின் வாயிலாக அறிவிக்கின்றார்கள்.

பல்க் தேசத்தின் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மிகப் பெரும் அறிஞரான அபூஅப்துர் ரஹ்மான் இப்னு உல்வான் அல் அஸம்மு (ரஹ்) அவர்கள் குறித்து அபூ அலீ அத்துகாக் (ரஹ்) அவர்களைச் சந்திக்க வந்த ஒருவர் அபூஅப்துர் ரஹ்மான் இப்னு உல்வான் அல் அஸம்மு (ரஹ்) அவர்கள் கேட்கும் திறன் பெற்றவராக இருந்தும் அவர்களின் பெயருடன் அஸம்மு ( செவிடர் ) என்று இணைத்து அழைக்கப் படுகின்றதே “அவர்களுக்கு எப்படி அஸம்மு எனப் பெயரிட்டது? என்று கேட்டார்.

அதற்கு, அபூ அலீ (ரஹ்) அவர்கள் “ஒரு முறை ஒரு பெண்மணி ஹாத்தமுல் அஸம்மு ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைச் சந்தித்து மார்க்க சம்பந்தமான கேள்வி கேட்க வந்தார்.

இமாம் அவர்கள் ஏதோ பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இமாம் அவர்களுக்கு சற்று தொலைவில் திரை மறைவில் நின்று கொண்டிருந்த அப்பெண்மணி தம் சந்தேகத்தைக் கேட்டார். இந்நிலையில், அப்பெண்மனிக்கு வாயுத் தொல்லையின் காரணமாக சப்தமாக காற்றுப் பிரிந்தது.

இதைக் கொஞ்சமும் எதிர்பாராத அப்பெண்மனி வெட்கத்தால் நாணிப் போனார். அந்தப் பெண்மனியின் வெட்கத்தை உணர்ந்த இமாம் அவர்கள் “என்னம்மா கேள்வி கேட்டாய்? எனக்கு காது கேட்காது. கொஞ்சம் சப்தமாகக் கூறு” என்றார்கள்.

இமாம் அவர்கள் இப்படிக் கூறியதும் தம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, மனதில் மகிழ்ச்சியோடு நல்ல நேரம் இமாம் அவர்களுக்கு காது கேட்கவில்லை என்று பூரிப்படைந்து தம் சந்தேகத்திற்கான விடையைப் பெற்று சென்று விட்டார்.

இதற்குப் பிறகு இமாம் அவர்கள் யார் அவர்களிடம் கேள்வி கேட்க, அல்லது பேச வந்தாலும் கொஞ்சம் சப்தமாக கூறுங்கள்! எனக்கு காது கேட்காது என்று கூறுவார்கள்.

நாளடைவில் இமாம் அவர்களுக்கு காது கேட்காது எனும் செய்தி தேசம் முழுவதும் பரவி ஹாத்தம் என்று அழைக்கப்பட்ட இமாம் அவர்கள் ஹாத்தமுல் அஸம்மு என்று அழைக்கப்படலானார்கள்” என்று கூறினார்கள்.

இப்னு முலக்கின் (ரஹ்) அவர்களின் இன்னொரு அறிவிப்பின் படி “ஹாத்தம் (ரஹ்) அவர்கள் அப்பெண்மணி மரணிக்கும் வரை காது கேட்காதவரைப் போன்றே இருந்து விட்டு, பின்னர் தனக்கு காது கேட்கும் என்றும் மேற்கூறிய காரணத்தால் தான் இது வரை காது கேட்காதவரைப் போன்று நான் இருந்தேன் என்றும் எனக்கு காது கேட்கும் விபரம் அப்பெண்மணிக்கு தெரிந்தால் அவரின் மனம் மிகப்பெரிய அளவில் வருந்தும் என்பதால் நான் அஸம்மு என்று அழைப்பதை மனமுவந்து ஏற்றுக் கொண்டேன்” என்று கூறினார்கள்.

( நூல்: மதாரிஜுஸ் ஸாலிக்கீன் லிஇமாமி இப்னுல் கய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்), தபகாத்துல் அவ்லியா லிஇமாமி இப்னுல் முலக்கின் (ரஹ்) …. )

3.   பிறரின் உணர்வுகளைக் காயப்படுத்துபவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் தண்டனை…

عن واثلة بن الأسقع رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم
لا تظهر الشماتة لأخيك فيرحمه الله ويبتليك " رواه الترمذي وقال : حديث حسن

வாஸிலா இப்னு அல் அஸ்கவு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உம் சகோதரன் விஷயத்தில் அவன் படும் துன்பத்தைக் கண்டு நீ மகிழ்ச்சியுராதே! அல்லாஹ் அவனுக்கு அருள்புரிந்து அந்த துன்பத்தில் இருந்து விடுவித்து. உன்னை அத்துன்பத்தில் ஆழ்த்தி விடுவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                 ( நூல்: முஸ்னத் அஷ் - ஷிஹாப், திர்மிதீ )

ஆகவே, பிறரின் உணர்வுகளைக் காயப்படுத்துவதில் இருந்தும் நாம் தவிர்ந்து வாழ்வோம்!

பிறரின் உணர்வுகளை ஊனப்படுத்துபவர்களோடு உள்ள தொடர்புகளை நெறிப் படுத்துவோம்!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சக மனிதர்களை, சக முஸ்லிம்களை மதித்து வாழும் நற்பேற்றினை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!