Thursday 1 March 2018

இரண்டாம் ஃபிர்அவ்ன் பஷர் அல் அசாதின் மனிதப் படுகொலைகளும், சிரிய முஸ்லிம்களின் கேள்விக்குறியான விடியலும்....



இரண்டாம் ஃபிர்அவ்ன் பஷர் அல் அசாதின் மனிதப் படுகொலைகளும், சிரிய முஸ்லிம்களின் கேள்விக்குறியான விடியலும்....



கண்முன் நடக்கும் மனிதத் துயரம் என்று அறிக்கை விடுகிறார் . நா பொதுச் செயலர் அண்டோனியா குட்டெரஸ்.

சொல்வதற்கு வார்த்தை வரவில்லை என்று வெற்று அறிக்கையை வெளியிடுகின்றது யுனிசெஃப் அமைப்பு.

 நாங்கள் உயிர் பிழைப்போம் என்று ஒரு போதும் நம்பவில்லை. இறப்பதற்கு எங்கள் முறை எப்போது வரும் என்று தான் காத்திருக்கின்றோம் என்கின்றனர் சிரியாவின் கிழக்கு கௌதா நகர மக்கள்.

ஏதாவது அதிசயங்கள் நடந்திடாதா? உயிர் பிழைக்க சிறு துரும்பாவது கிடைத்திடாதா? என பதுங்கு குழியில் இருந்து எட்டிப்பார்க்கின்றன குழந்தைகளின் இரத்தம் தோய்ந்த முகங்கள்.

இரக்கம் காட்டுங்கள்! சண்டையை நிறுத்துங்கள் என கெஞ்சுகின்றன சிரியாவின் நேச நாடுகள்.

எப்போதும் போல நமக்கென்ன என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன அரபுலக முஸ்லிம் நாடுகள்.

முன் எப்போதும் இல்லாத பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டிருப்பதற்கு கிழக்கு கௌதா நகரத்தில் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொன்று குவிக்கப்படுவதே காரணம் ஆகும்.

ஏனெனில், 2013 –இல் இதே கௌதா நகரில் சிரியா படைகளால் நிகழ்த்தப்பட்ட ரசாயன தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை விட தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாகும்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிரியாவில் நடக்கும் உள் நாட்டு போரால் இது வரை 4 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

லட்சக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து உள் நாட்டிலும், உலக நாடுகளிலும் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல் உறுப்புக்களை இழந்து, மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அழுகிய புண்களுடனும், துர் நாற்றம் வீசும் புண்களுடனும் ஊணத்தோடும், நடை பிணமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

உலக நாடுகளின் கவனத்திற்கு இவைகளைக் காட்சிப்படுத்தி நியாயம் தேடித் தர வேண்டிய ஊடகங்கள் ஊணமாகிப் போயிருக்கின்றன.

சர்வதேச நீதிமன்றம், உலக மனித உரிமை ஆணையம், ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாடுகள் கூட்டமைப்பு, அரபுலக நாடுகள் கூட்டமைப்பு என அத்துனையும் வாய் பொத்தி, கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்த மக்களுக்கான விடியல் எப்போது? யார் அந்த மக்களை இந்த படுகொலையில் இருந்து மீட்டெடுக்கப் போகின்றார்கள்? என்கிற கேள்வி சிரியா முஸ்லிம்களைத் தாண்டி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களிடமும், மனிதநேயம் இதயத்தில் இடம் பெற்றுள்ள சகோதர மதத்தவர்களிடமும் நிலவுகின்றது.

வாருங்கள்! குர்ஆனிய ஒளியில், அண்ணலாரின் வழிகாட்டலில், வரலாற்றின் வெளிச்சத்தில் அவர்களின் விடியலையும், அவர்களை மீட்டெடுக்கப் போகின்றவர்களையும் பார்த்து வருவோம்!

இரண்டாம் ஃபிர்அவ்ன்

ஈராக், ஆப்கானிஸ்தான், செசன்யா முஸ்லிம்களின் சோக வரலாற்றில் தற்போது சிரியா முஸ்லிம்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

என்ன ஒரு வித்தியாசம் என்றால் ஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் வேட்டையாடியது ஏகாதிபத்திய அமெரிக்கா.

செசன்யாவை வேட்டையாடியது ரஷ்யா. தற்போது ரஷ்யா மற்றும் ஈரானின் துணையோடு வேட்டையாடிக் கொண்டிருப்பது பசுந்தோல் போர்த்திய புலி பஷர் அல் அஸாத் எனும் இரண்டாம் ஃபிர்அவ்ன்.

எப்படி தன் சொந்த நலனுக்காக ஃபிர்அவ்ன் தன் சொந்த நாட்டு ஆண் மக்களை கொன்று குவித்து, பெண் மக்களை மானபங்கப்படுத்தினானோ அதே போன்று பஷர் அல் அஸாத்தும் நடந்து கொண்டிருக்கின்றான்.

ஃபிர்அவ்னுக்கு செங்கடலில் மூழ்கடித்து முடிவைக் கொடுத்து, உலக மக்களுக்கு படிப்பினையாக ஆக்கிய இறைவன் பஷர் அல் அஸாதிற்கும் படிப்பினைக் குரிய முடிவை நாம் வாழும் காலத்திலேயே கொடுத்திட வேண்டும் என்று ஆதரவு வைப்போம்! அல்லாஹ் போதுமானவன்.

கிளர்ச்சியாளர்களை படுகொலை செய்ய அனுமதி இருக்கின்றதா?..

وفي عام 149 هجرية
الموافق 765م
 ثار أهل الموصل، وكان المنصور قد أخذ عليهم عهدًا قبل ذلك -حين ثاروا عليه ذات مرة- أن لو فعلوها مرة أخرى حل له دماؤهم وأموالهم، فلما ثاروا عليه في المرة الثانية دعا المنصور أجلة الفقهاء -وكان أبو حنيفة بينهم- واستفتاهم أتحل له أموالهم ودماؤهم حسب ما عاهدوه أم لا؟ فاستند الفقهاء إلى المعاهدة وقالوا: "إن عفوت فأنت أهل العفو وإن عاقبت فبما يستحقون"، وسكت أبوحنيفة عن الجواب فقال له المنصور: "ما تقول أنت يا شيخ" فرد عليه: "إنهم شرطوا لك ما لا يملكونه -يعني دماءهم- فإنه قد تقرر أن النفس لا يجري فيها البذل والإباحة، وشرطت عليهم ما ليس لك، لأن دم المسلم لا يحل إلا بإحدى معان ثلاث، أرأيت إن أحلت امرأة نفسها لرجل بغير نكاح أتحل له؟ وإذا قال رجل لآخر اقتلني أيحل له قتله؟"، قال المنصور:
لا"
 قال: "فكف يدك عن أهل الموصل فلا تحل لك دماؤهم".

இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் வாழும் காலத்தில் கலீஃபா அல் மன்சூர் ஆட்சியாளராக இருந்தார்.

மெளஸல் மாகாணத்து மக்கள் அவ்வப்போது கிளர்ச்சி செய்து வந்தனர். இறுதியில் இனி ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட மாட்டோம் என ஒப்பந்தமிட்டு அம்மாகாண மக்கள் கலீஃபா அல்மன்சூரிடம் தந்தனர்.

ஹிஜ்ரி 149 -இல் மீண்டும் அம்மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது கலீஃபா நாட்டின் அனைத்து ஃபுகஹாக்களையும் ஒன்று கூட்டினர். அபூ ஹனீஃபா (ரஹ்) உட்பட அனைவரும் ஆலோசனை கூடத்திற்கு வந்தனர்.

கிளர்ச்சியில் ஈடுபடும் அம்மக்களின் உயிர்களும், உடமைகளும் தமக்கு ஹலாலா? இல்லையா? என அனைவரிடமும் கேட்டார் கலீஃபா.

அனைத்து ஃபுகஹாக்களும் ஒப்பந்தத்தை மீறுவது குற்றம். மேலும், இனி நாங்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டால் எங்கள் உயிர்களும், உடமைகளும் உங்களுக்குச் சொந்தம் என அம்மக்களே ஒப்பந்தம் செய்திருக்கின்றார்கள் என்றனர். ஆக அவர்களை போர் மூலம் அடக்குவது ஆகுமானது தான் என்று ஃப்த்வா தந்தனர்.

மேலும், நீங்கள் மன்னிக்க நினைத்தால் அது உங்கள் பெருந்தன்மையை வெளிக்காட்டும் என்றும் கூறினார்கள்.

அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள் சட்ட மேதை இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள்.
           
இது குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்? என இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களின் மெளனத்தை கலைத்தார் கலீஃபா.

இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ”தங்களுக்கு சொந்தமில்லாத, ஒரு விஷயத்தை ஒப்பந்தத்தின் போது மெளஸல் நகர மக்கள் உங்களுக்கு வழங்கிருக்கின்றார்கள். (அதாவது அவர்களுடைய உயிர்கள், மற்றும் உடமைகள்) அவ்விதமே கேட்கக் கூடாத, கேட்க தகுதியற்ற, உரிமையில்லாத நிபந்தனை ஒன்றை நீங்கள் கேட்டுப்பெற்றுள்ளீர்கள்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்! ”என்னைக்கொன்று விடுங்கள் என ஒரு மனிதர் யாரிடமாவது கூறினால் அவரைக் கொலை செய்வது ஆகுமா? ஒரு பெண் திருமணம் செய்யாமலேயே தன்னை அனுபவித்துக்கொள்ள உரிமை வழங்கினால் அது ஹலாலாக ஆகிவிடுமா?” என்று கேட்டார்கள்.

இல்லை! அனுமதி, ஹலால் இல்லை! என பதில் கூறினார் கலீஃபா அல்-மன்சூர்.

அப்படியென்றால், மெளஸல் மாகாணத்தின் மக்கள் மீது கை வைக்காதீர்கள்! அவர்களுடைய உயிர்களைப் போக்குவது உங்களுக்கு ஹலால் அல்ல! என இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) திட்டவட்டமாக தெரிவித்தார்கள்.

எனவே, அநியாயமாக உயிரையும், உடமைகளையும் பறிப்பது மனிதநேயமற்ற செயல் என்பதையும், தெளிவான உரிமை மீறல் என்பதையும் இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

( நூல்: இப்னுல் அஸீர்; பாகம் 5, பக்கம் 25, தமிழ் நூல்: இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும், வீழ்ச்சியும் பாகம் 2, பக்கம் 65 )

சிரியா மக்களுக்கான மீட்சி எங்கே?

பெருமானார் {ஸல்} அவர்கள் எதிரிகளிடம் இருந்து இந்த உம்மத்தை பாதுகாக்க பல்வேறு முறைகளைக் கையாண்டு இருக்கின்றார்கள்.

துன்பங்களை சகித்துக் கொள்வது, ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது, அண்டை நாடுகளில் தஞ்சம் அடைக்கலம் கோருவது, மாற்றுக் கருத்தாளர்களின் உதவிகளை பயன்படுத்துவது, எதிரிகளோடு சரி நிகராக போரிடுவது, அல்லாஹ்விடம் முறையிடுவது என தங்களது 23 ஆண்டுகால ஏகத்துவ வாழ்க்கையில் காலத்திற்கு தக்கவாறு இவ்வாறான முறைகளில் ஏதேனும் ஒன்றைக் கையாண்டு இருக்கின்றார்கள்.

முதல் நிலை பொறுமை காப்பது, சகித்துக் கொள்வது....

ولقد ذهب يوما مع بعض رفاقه المضطهدين الى رسول الله صلى الله عليه وسلم، لا جوعين من التضحية، بل راجين العافية، فقالوا:" يا رسول الله.. ألا تستنصر لنا..؟؟" أي تسأل الله لنا النصر والعافية
ولندع خبّابا يروي لنا النبأ بكلماته
" شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد ببرد له في ظل الكعبة، فقلنا: يا رسول الله، ألا تستنصر لنا..؟؟
فجلس صلى الله عليه وسلم، وقد احمرّ وجهه وقال
قد كان من قبلكم يؤخذ منهم الرجل، فيحفر له في الأرض، ثم يجاء بمنشار، فيجعل فوق رأسه، ما يصرفه ذلك عن دينه
وليتمّنّ الله هذا الأمر حتى يسير الراكب من صنعاء الى حضرموت لا يخشى الا الله عز وجل، والذئب على غنمه، ولكنكم تعجلون


ஒருநாள் கப்பாப் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்கள் சிலரும் சென்று முஹம்மத் {ஸல்} அவர்களிடம் மக்காவாசிகளின் அடக்குமுறை குறித்து சற்று முறையிட்டார்கள். அந்த நிகழ்ச்சியை கப்பாப் (ரலி) அவர்களே விவரிக்கின்றார்கள்.

"இறைத்தூதர் (ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, 'எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?' என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும்.

ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும்.

அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் சிறி)தும்கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும்.

எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) 'ஸன்ஆ' விலிருந்து 'ஹளர மவ்த்' வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார்.

ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவரசப்படுகிறீர்கள்" என்று கூறினார்கள்" ( நூல்: புகாரி )

இரண்டாம் நிலை அல்லாஹ்விடம் முறையிட்டு மன்றாடுவது….

கப்பாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்திற்காக அவரின் எஜமானியும், குறைஷித் தலைவர்களும் கடும் வேதனை செய்தார்கள்.

கற்களை நெருப்பில் இட்டு சுட்டு, தீ கொழுந்து விட்டு எரிந்து அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருந்து, பின்னர் அவரை அந்த நெருப்புக் கங்குகளின்மேல் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பர்கள்.

அவரது முதுகுச் சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழ, பிறகு அந்தத் தீ அணைந்தது. அது அவரது காயத்திலிருந்து வழிந்து விழுந்த நீரினால்.

பலமுறை மாநபி {ஸல்} அவர்களிடம் முறையிட்ட போதும், மாநபி {ஸல்} அவர்கள் பொறுமையை மேற்கொள்ளுமாறு உபதேசித்தார்கள்.

இந்நிலையில், நடக்கும் கொடுமையெல்லாம் பத்தாது என்று எஜமானி உம்மு அன்மாரும் தன் பங்குக்குப் கொடுமை செய்தாள்.

ومر رسول الله به ذات يوم وهو يعذب، فرفع كفيه إلي السماء وقال
اللهم انصر خبابا
واستجاب الله لدعاء رسوله، فقد أصيبت أم أنمار بسعار غريب فجعلها تعوي مثل الكلاب!
ونصحها البعض بأن علاجها هو أن تكوي رأسها بالنار!
وهكذا ذاقت من نفس الكأس التي أذاقته لخباب بن الأرت.

ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அந்தக் கடை வழியாக நடந்து சென்றவர்கள் கப்பாபைப் பார்த்துவிட்டு, நின்று, கப்பாப் அவர்களின் தலையை அனுசரனையாய் தடவி விட்டு, ஏதோ பேசிவிட்டு நகர்ந்தார்கள்.

பொறுக்க முடியவில்லை உம்மு அன்மாருக்கு. பட்டறைக்கல்லில் இருந்து பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியொன்றை எடுத்து வந்து கப்பாபின் தலையில் சூடு போட்டாள். பிறகு அதைப் பல் துலக்குவதுபோல் ஒரு தினசரி வழக்கமாகவே ஆக்கிக் கொண்டாள்.

சதை பொரிக்க ஆரம்பிக்கும். அதற்கு மேல் சுயநினைவு தங்க மறுத்து மயக்கமுறும் நிலையில் கப்பாப் கீழே வீழ்ந்தார்.

இதைக் கண்ணுற்ற மாநபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் இரு கரமேந்தி யாஅல்லாஹ்! கப்பாபுக்கு நீ உதவி செய்வாயாக!". என்று துஆச் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களது துஆவுக்கு இறைவன் பதிலளிக்க ஆரம்பித்தான்.

ஆம்! உம்மு அன்மாருக்கு திடீரென்று தலைவலியொன்று உண்டானது. அது அதிகமாயிற்று. பிறகு தீவிரமாயிற்று. மிகத் தீவிரமாயிற்று. யாரும் அப்படியொன்று கேள்விப்பட்டிராத தலைவலி.

வலியின் கொடுமையால் அவள் கத்துவது நாய் ஊளையிடும் சப்தம் போலிருந்தது. மிரண்டு அவளுடைய மகன் அரபுலகத்தின் அனைத்து வைத்தியர்களிடமும் தூக்கிக் கொண்டு ஓடினார்.

ஆனால், யாருக்கும் தலைவலிக் காரணம் புரியவில்லை. இறுதியாக, அக்காலத்தில் சூட்டுக்கோல் வைத்திய முறை என்று ஒன்று இருந்தது. அதாவது, அவளுக்குத் தலையில் சூட்டுக்கோலால் சூடு இட்டார்கள்.

கடைசியாக, அதன் காரணமாகவே உம்மு அன்மார் இறந்தும் போனார்.

ن أَبِى هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى صَلاَةِ الفجر شَهْرًا، يَقُولُ فِى قُنُوتِهِ: "اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِى رَبِيعَةَ... اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ"، ثم يستمر في دعائه فيقول: "اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى قريش، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِىِّ يُوسُفَ".

قَالَ أَبُو هُرَيْرَةَ: وَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَلَمْ يَدْعُ لَهُمْ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ
 "وَمَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا".
صحيح البخاري ومسلم والسنن

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் சோதனைக் காலப்பிராத்தனை) ஓதினார்கள். அவர்கள் "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" என்று கூறியதும்  பின்வருமாறு குனூத் ஓதுவார்கள்:

 இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப் பட்டவர்களை நீ காப்பாற்றுவாயாக!

இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!

தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இதன் பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான் பார்த்தேன்.

உடனே நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஒடுக்கப்பட்ட) மக்களுக்காகப் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதாகக் கருதுகிறேன்" என்றேன். அப்போது, "(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள் (மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்கப்பட்டது.

மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

فَاسْتَقْبَلَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقِبْلَةَ ثُمَّ مَدَّ يَدَيْهِ فَجَعَلَ يَهْتِفُ بِرَبِّهِ 
 اللَّهُمَّ أَنْجِزْ لِي مَا وَعَدْتَنِي اللَّهُمَّ آتِ مَا وَعَدْتَنِي اللَّهُمَّ إِنْ تُهْلِكْ هَذِهِ الْعِصَابَةَ مِنْ أَهْلِ الْإِسْلَامِ لَا تُعْبَدْ فِي الْأَرْضِ
 فَمَا زَالَ يَهْتِفُ بِرَبِّهِ مَادًّا يَدَيْهِ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ حَتَّى سَقَطَ رِدَاؤُهُ عَنْ مَنْكِبَيْهِ

பத்ர் யுத்தம் நடப்பதற்கு முதல் இரவு நபியவர்கள் உறங்காது காலை வரையிலும் பிரார்த்தனையில் இருந்தார்கள். நெஞ்சுருக அல்லாஹ்விடம் பின்வருமாறு வேண்டினார்கள்.

இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று. நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு! இறைவா! இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்) என நபியவர்கள் பிரார்த்தித்த பின்னர் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி அருளினான்.

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ ()

“நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்”.                                                                    ( அல்குர்ஆன் 08:09 )

இன்னும் பல்வேறு தருணங்களில் மாநபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடி, முறையிட்டு தங்களையும், தீனுல் இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் சூழ்ந்திருந்த சூழ்ச்சிகளை முறியடித்தார்கள்.

மூன்றாம் நிலை அடைக்கலமும் ஆதரவும் வேண்டி நின்றது…

அபூபக்ர் (ரலி) அவர்களும்…. இப்னு தகினா அவர்களின் மனித நேய உதவியும்….

நபி {ஸல்} அவர்கள் மக்காவில் இறைநிராகரிப்பாளர்கள் கடுமையான நெருக்கடியும், துன்பமும் இழைத்த போது கிருஸ்துவ நாடான அபீ சீனியாவிற்கு ஹிஜ்ரத் அடைக்கலம் தேடி அனுப்பி வைத்தார்கள்.

அதே போன்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இப்னு தகினா என்கிற கிருஸ்துவர் தன் சொந்த ஜாமீனில் அடைக்கலம் பெற்றுக் கொடுத்த போது மாநபி {ஸல்} அவர்கள் அதைத் தடுக்கவில்லை. அதை அங்கீகரிக்கவும் செய்தார்கள்.

عَنِ الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ - رضى الله عنها - قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ قَطُّ ، إِلاَّ وَهُمَا يَدِينَانِ الدِّينَ ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلاَّ يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - طَرَفَىِ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً ، فَلَمَّا ابْتُلِىَ الْمُسْلِمُونَ خَرَجَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا قِبَلَ الْحَبَشَةِ ، حَتَّى إِذَا بَلَغَ بَرْكَ الْغِمَادِ لَقِيَهُ ابْنُ الدَّغِنَةِ - وَهْوَ سَيِّدُ الْقَارَةِ - فَقَالَ أَيْنَ تُرِيدُ يَا أَبَا بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ أَخْرَجَنِى قَوْمِى فَأَنَا أُرِيدُ أَنْ أَسِيحَ فِى الأَرْضِ فَأَعْبُدَ رَبِّى . قَالَ ابْنُ الدَّغِنَةِ إِنَّ مِثْلَكَ لاَ يَخْرُجُ وَلاَ يُخْرَجُ ، فَإِنَّكَ تَكْسِبُ الْمَعْدُومَ ، وَتَصِلُ الرَّحِمَ ، وَتَحْمِلُ الْكَلَّ ، وَتَقْرِى الضَّيْفَ ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ ، وَأَنَا لَكَ جَارٌ فَارْجِعْ فَاعْبُدْ رَبَّكَ بِبِلاَدِكَ . فَارْتَحَلَ ابْنُ الدَّغِنَةِ ، فَرَجَعَ مَعَ أَبِى بَكْرٍ ، فَطَافَ فِى أَشْرَافِ كُفَّارِ قُرَيْشٍ ، فَقَالَ لَهُمْ إِنَّ أَبَا بَكْرٍ لاَ يَخْرُجُ مِثْلُهُ ، وَلاَ يُخْرَجُ ، أَتُخْرِجُونَ رَجُلاً يُكْسِبُ الْمَعْدُومَ ، وَيَصِلُ الرَّحِمَ ، وَيَحْمِلُ الْكَلَّ ، وَيَقْرِى الضَّيْفَ ، وَيُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ . فَأَنْفَذَتْ قُرَيْشٌ جِوَارَ ابْنِ الدَّغِنَةِ وَآمَنُوا أَبَا بَكْرٍ وَقَالُوا لاِبْنِ الدَّغِنَةِ مُرْ أَبَا بَكْرٍ فَلْيَعْبُدْ رَبَّهُ فِى دَارِهِ ، فَلْيُصَلِّ وَلْيَقْرَأْ مَا شَاءَ ، وَلاَ يُؤْذِينَا بِذَلِكَ ، وَلاَ يَسْتَعْلِنْ بِهِ ، فَإِنَّا قَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ أَبْنَاءَنَا وَنِسَاءَنَا . قَالَ ذَلِكَ ابْنُ الدَّغِنَةِ لأَبِى بَكْرٍ ، فَطَفِقَ أَبُو بَكْرٍ يَعْبُدُ رَبَّهُ فِى دَارِهِ ، وَلاَ يَسْتَعْلِنُ بِالصَّلاَةِ وَلاَ الْقِرَاءَةِ فِى غَيْرِ دَارِهِ ، ثُمَّ بَدَا لأَبِى بَكْرٍ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ ، وَبَرَزَ فَكَانَ يُصَلِّى فِيهِ ، وَيَقْرَأُ الْقُرْآنَ ، فَيَتَقَصَّفُ عَلَيْهِ نِسَاءُ الْمُشْرِكِينَ وَأَبْنَاؤُهُمْ ، يَعْجَبُونَ وَيَنْظُرُونَ إِلَيْهِ ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً لاَ يَمْلِكُ دَمْعَهُ حِينَ يَقْرَأُ الْقُرْآنَ ، فَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ ، فَأَرْسَلُوا إِلَى ابْنِ الدَّغِنَةِ فَقَدِمَ عَلَيْهِمْ ، فَقَالُوا لَهُ إِنَّا كُنَّا أَجَرْنَا أَبَا بَكْرٍ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِى دَارِهِ ، وَإِنَّهُ جَاوَزَ ذَلِكَ ، فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ ، وَأَعْلَنَ الصَّلاَةَ وَالْقِرَاءَةَ ، وَقَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ أَبْنَاءَنَا وَنِسَاءَنَا ، فَأْتِهِ فَإِنْ أَحَبَّ أَنْ يَقْتَصِرَ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِى دَارِهِ فَعَلَ ، وَإِنْ أَبَى إِلاَّ أَنْ يُعْلِنَ ذَلِكَ فَسَلْهُ أَنْ يَرُدَّ إِلَيْكَ ذِمَّتَكَ ، فَإِنَّا كَرِهْنَا أَنْ نُخْفِرَكَ ، وَلَسْنَا مُقِرِّينَ لأَبِى بَكْرٍ الاِسْتِعْلاَنَ . قَالَتْ عَائِشَةُ فَأَتَى ابْنُ الدَّغِنَةِ أَبَا بَكْرٍ ، فَقَالَ قَدْ عَلِمْتَ الَّذِى عَقَدْتُ لَكَ عَلَيْهِ ، فَإِمَّا أَنْ تَقْتَصِرَ عَلَى ذَلِكَ وَإِمَّا أَنْ تَرُدَّ إِلَىَّ ذِمَّتِى ، فَإِنِّى لاَ أُحِبُّ أَنْ تَسْمَعَ الْعَرَبُ أَنِّى أُخْفِرْتُ فِى رَجُلٍ عَقَدْتُ لَهُ . قَالَ أَبُو بَكْرٍ إِنِّى أَرُدُّ إِلَيْكَ جِوَارَكَ ، وَأَرْضَى بِجِوَارِ اللَّهِ .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மக்கவில் முஸ்லிம்கள் இணைவைப்பாளர்களால் சோதனைக்கு உள்ளாக்கப்பட போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் நாடு துறந்து அபீசீனியாவை நோக்கி ஹிஜ்ரத் சென்றார்கள்.

யமன் செல்லும் வழியில் அல்காரா குலத்தின் தலைவர் இப்னு தஃகினா என்பவரை சந்தித்தார்கள்.

தம் நோக்கத்தையும், முஸ்லிம்கள் மக்காவில் சந்தித்துவரும் கஷ்டங்களையும் அவரிடம் தெரிவித்தார்கள்.

அதற்கு, இப்னு தஃகினா உம்மைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது. ஏனெனில், நீர் ஏழைகளுக்காக உழைக்கின்றீர், உறவைப் பேணுகிறீர்; சிரமப்படுவோரின் சுமையைச் சுமக்கின்றீர்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்; சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவுகின்றீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகின்றேன். ஆகவே, திரும்பிச் சென்று உமது ஊரிலேயே இறைவனை வழிபடுவீராக!என்று கூறினார்.

அத்தோடு நின்று விடாமால், அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு குறைஷித்தலைவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தாம் அடைக்கலம் தந்திருப்பதாகவும் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஆகவே, குறைஷிகள் இப்னு தஃகினாவின் அடைக்கலத்தை ஏற்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

மேலும், குறைஷிகள் இப்னு தஃகினாவிடம் தமது வீட்டில் தமது இறைவனைத் தொழுது வருமாறும் விரும்பியதை ஓதுமாறும் அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறும் அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும் படியும் அபூபக்கருக்கு நீர் கூறுவீராக. ஏனெனில் அவர் எங்களது மனைவி மக்களை குழப்பி சோதனைக்குள்ளாக்கி  விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்என்றனர்.

இதை இப்னு தஃகினா அபூபக்கர் (­லி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு அபூபக்கர் (ரலி­) அவர்கள் வீட்டிற்கு வெளியே தொழுது ஓதி பகிரங்கப்படுத்தாமல் தம் வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள்.

பிறகு அவர்களுக்கு ஏதோ தோன்ற தமது வீட்டிற்கு முன்புறத்திலுள்ள காலியிடத்தில் தொழுமிடம் ஒன்றைக் கட்டி வெளியே வந்து தொழுதார்கள். அந்தப் இடத்தில் தொழவும் குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள்.

இணைவைப்பவர்களின் மனைவிமக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் அவரை கவனிக்கலானார்கள். அபூபக்கர் (லி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது மனம் உருகி வெளிப்படும் தமது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுபவராக இருந்தார்கள். இணைவைப்பவர்களான குரைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது.

குறைஷிகள் இப்னு தஃகினாவை அழைத்து வரச் செய்து நடந்தவற்றைக் கூறினார்கள்.

 அவர் அடைக்கலத்திற்கான நிபந்தனைகளை அபூபக்ர் (ரலி) அவர்களிடத்திலே நினைவு படுத்திய போது அபூபக்கர் (ரலி) அவர்கள்இப்னு தஃகினாவே! உம் அடைக்கலத்தை நீர் திரும்ப எடுத்துக் கொள்ளும்! நான் அல்லாஹ்வின் அடைக்கலத்தையே திருப்தியுறுகின்றேன்என்று கூறினார்கள்.       ( நூல்: புகாரி )

நான்காம் நிலை மாற்றுக் கருத்தாளர்களான இணை வைப்பாளர்களின் உதவிகளை ஏற்றுக் கொண்டது...

عندها ذهب الرسول الى ابناء من بني عمرو ليدعوهم إلى الإسلام و يطلب منهم ان العون له والنصرة وللإسلام وللمؤمنين الموجودين في مكة فكان الثلاثة هم: عبد ياليل ومسعود وحبيب أولاد عمرو بن عمير، وكانوا احد اشراف و سادات المدينة فعرض رسول الله عليهم الاسلام وان يتركوا عبادة اللات إلى عبادة الله وحده ، فهذا يعني ان دخولهم في الاسلام كأنه إعلان للحرب على قبيلة قريش. فكان موقفهم من دعوة الرسول انه قال احدهم الا وهو عبد اليل بن عمرو : إنه سيمرط (أي سيمزق) ثياب الكعبة إن كان الله أرسلك. أما الاخر الا وهو مسعود فقال: أما وجد الله أحدًا غيرك. وأما الثالث حبيب فقد قال -وهو يحاول أن يصطنع الذكاء مع شدة غبائه- قال
 والله لا أكلمك أبدًا، إن كنت رسولاً لأنت أعظم خطرًا من أن أرد عليك الكلام، ولئن كنت تكذب على الله ما ينبغي أن أكلمك. فقال لهم رسول الله : ( إذا فعلتم ما فعلتم فاكتمـوا عني ) ، وكره رسـول الله صلى الله عليه وسلم أن يبلغ قومه عنه فيذئرهم [ أي : يجرئهم ] ذلك عليه ، فلم يفعلوا ، وأغروا به سفهاءهم وعبيدهم يسبونه ويصيحون به ، حتى اجتمع عليه الناس ، وألجئوه إلى حائط لعتبة بن ربيعة وشيبة بن ربيعة وهما فيه ، وجعلوه يمر من بين الصفين وهم يقذفونه بالحجارة ويقذفونه بأسوأ الكلام والسباب، حتى سالت دماؤه الشريفة على كعبيه وتلون النعل بالدم، وكان زيد بن حارثة يبذل كل طاقته لتلقي الحجارة في جسده، بل في رأسه حتى لا تصيب رسول الله ، حتى شج رأسه ، ورسول الله يسرع الخطا بين الصفين حتى انتهى منه ورجع عنه من سفهاء ثقيف من كان يتبعه ، فعمد إلى ظل حبلة [ أي : شجرة ] من عنب فجلس فيه ، وابنا ربيعة ينظران إليه ويريان ما لقي من سفهاء أهل الطائف ، فلما اطمأن رسول الله صلى الله عليه وسلم


நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு நபி (ஸல்) மக்காவிலிருந்து 60 மைல் தொலைவிலுள்ள தாயிஃபிற்குச் சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தாயிஃபிற்குச் சென்றடைந்தபோது அங்கு வசித்து வந்த ஸகீஃப் கூட்டத்தாரின் தலைவர்களும் அம்ர் இப்னு உமைர் அஸ்ஸகபிஎன்பவனின் பிள்ளைகளுமான 1) அப்து யாலில், 2) மஸ்ஊது, 3) ஹபீப் என்ற மூன்று சகோதரர்களிடம் சென்றார்கள். அவர்களிடம் இஸ்லாமைப் பரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரினார்கள்.

ஆனால், அவர்களில் ஒருவன் உன்னை அல்லாஹ் தூதராக அனுப்பியது உண்மையென்றால் நான் கஅபாவின் திரைகளைக் கிழித்து விடுவேன்என்று கூறினான். மற்றொருவன் அல்லாஹ்வுக்கு உன்னைத் தவிர நபியாக அனுப்ப வேறொருவர் கிடைக்கவில்லையா?” என்று கேட்டான்.

மூன்றாமவன், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உன்னிடம் ஒருபோதும் பேச மாட்டேன். நீ உண்மையில் தூதராக இருந்தால் உனது பேச்சை மறுப்பது எனக்கு மிக ஆபத்தானதாகும். நீ அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவராக இருந்தால் உன்னிடம் பேசுவதே எனக்குத் தகுதியல்லஎன்று கூறினான். அப்போது நபி (ஸல்) இதுதான் உங்கள் முடிவாக இருந்தால் நமது இந்த சந்திப்பை (மக்களுக்கு வெளிப்படுத்தாமல்) மறைத்துவிடுங்கள்என்று கூறினார்கள்.

நபி (ஸல்) தாயிஃபில் பத்து நாட்கள் தங்கி அங்குள்ள மற்ற எல்லா தலைவர்கள், பிரமுகர்களைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். ஆனால், அவர்களில் எவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாததுடன் தங்களது ஊரைவிட்டு உடனடியாக வெளியேறும்படியும் கூறி, நபி (ஸல்) அவர்கள் மீது வம்பர்களை ஏவிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் ஊரைவிட்டு வெளியே செல்ல முயன்றபோது அங்குள்ள வம்பர்களும் அடிமைகளும் ஒன்றுகூடி அவர்களை ஏசிப்பேசினர்.

இறுதியில், மக்களின் கூட்டம் அதிகமாகி அவர்கள் அனைவரும் இரு அணிகளாக நின்று கொண்டு, நபி (ஸல்) அவர்களின் மீது கற்களை எறிந்தனர். அதிகமான கற்களை நபி (ஸல்) அவர்களின் குதிகால் நரம்பை நோக்கி எறியவே அவர்களது பாதணிகளும் இரத்தக் கறைகளாயின. நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களது அடிமை ஜைது இப்னு ஹாரிஸா நபியவர்களைக் காப்பதற்காக தங்களையே கேடயமாக்கிக் கொண்டார்கள். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தாஃயிபிலிருந்து மூன்று மைல்கள் தொலைவிலுள்ள ரபிஆவுடைய மகன்களான உத்பா, ஷைபா என்ற இருவருக்குச் சொந்தமான தோட்டம் வரை நபி (ஸல்) அவர்களை அடித்துக் கொண்டே வந்தனர்.

நபி (ஸல்) அந்த தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள திராட்சை தோட்ட பந்தலின் நிழலில் அமர்ந்தார்கள்.

நபி {ஸல்} அவர்களை இந்த நிலைமையில் பார்த்ததும் ரபிஆவின் மகன்களுக்கு இரக்கம் வந்தது. தங்களது கிறிஸ்துவ அடிமை அத்தாஸை அழைத்துத் திராட்சைக் குலையை அவருக்குச் சென்று கொடுஎன்று கூறினர்.

                                            ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் )

زادت حيرة المشركين إذ نفدت بهم الحيل، ووجدوا بني هاشم وبني المطلب مصممين على حفظ نبى الله صلى الله عليه وسلم والقيام دونه، كائنًا ما كان، فاجتمعوا في خيف بني كنانة من وادى المُحَصَّبِ فتحالفوا على بني هاشم وبني المطلب ألا يناكحوهم، ولا يبايعوهم، ولا يجالسوهم، ولا يخالطوهم، ولا يدخلوا بيوتهم، ولا يكلموهم،
تم هذا الميثاق وعلقت الصحيفة في جوف الكعبة، فانحاز بنو هاشم وبنو المطلب، مؤمنهم وكافرهم ـ إلا أبا لهب ـ وحبسوا في شعب أبي طالب، وذلك فيما يقال : ليلة هلال المحرم سنة سبع من البعثة .

நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு கினானா கிளையாருக்குச் சொந்தமான முஹஸ்ஸப் என்ற பள்ளத்தாக்கில் ஒன்று கூடிய மக்கத்து இணைவைப்பாளார்கள்இது வரை நாம் முஹம்மதுக்கு எதிராக எடுத்த எந்த நடவடிக்கைக்கும் முஹம்மதும், முஹம்மதின் தோழர்களும் உடன்படாததாலும், ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையார்கள் தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாலும் நாம் இவர்கள் விஷயமாக தீர்க்கமான ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, நல்ல ஆலோசனைகள் வழங்கிட ஒத்துழைப்பு தாருங்கள் என்று தங்களுக்குள் கோரிக்கொண்டனர்.

இறுதியாக, ”ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையாரிடம் திருமண உறவு, கொடுக்கல் வாங்கல், அவர்களுடன் அமர்வது, அவர்களுடன் பழகுவது, அவர்களது வீட்டுக்குச் செல்வது, அவர்களிடம் பேசுவது, அவர்களுக்கு கருணை காட்டுவது, அவர்களின் சமரச பேச்சை ஏற்பது, இது போன்ற எந்த ஒரு தொடர்பையும் அவர்களோடு மேற்கொள்ளக் கூடாதுஎன தீர்மானமாக எழுதி கஅபாவில் தொங்க விடப்பட்டது.

ஹாஷிம், முத்தலிப் கிளையாரில் அபூலஹபைத் தவிர மற்ற நிராகரிப்பாளர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் அபூதாலிப் பள்ளத்தாக்கில் ஊர் விலக்கம் செய்து ஒதுக்கி வைக்கப்பட்டனர்.

மூன்றாண்டுகள் சொல்லெனா துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் முஸ்லிம்கள்.

ஒரு சிலரின் பெரும் முயற்சிக்குப் பிறகு இதுவும் தோற்றுப் போனது.
ஜூஹைர் இப்னு அபூ உமைய்யா
ஹிஷாம் இப்னு அம்ர்
முத்இம் இப்னு அதீ
அபுல் புக்தரீ
ஸம்ஆ ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து மக்கத்து தலைவர்களிடம் கடுமையாக சண்டை போட்டு, தொங்கவிடப் பட்டிருந்த தீர்மானத்தை கிழித்தெறிந்தனர்.

மீண்டும் மாநபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் பிரவேசிக்கின்றார்கள். முன்பு போலவே அழைப்புப் பணியை தொடர்கின்றார்கள்.

                                            ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் )

( பின் நாளில் ஹகீம் இப்னு ஹிஷாம் அவர்களும், அபுல் புக்தரீ அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் )

இன்னும், இது போன்ற பல தருணங்களில் ( ஹிஜ்ரத், அபீ சீனியா, ஹுதைபிய்யா ) மாற்றுக் கருத்தாளர்கள் பலரின் குரல்கள் மாநபி {ஸல்} அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஆதரவாக ஒலித்து, அதை அங்கீகரித்து முஸ்லிம் சமூகம் அடைந்து கொண்டிருந்த துன்பங்களில் இருந்து ஓரளவு மீள மாநபி {ஸல்} அவர்கள் ஆதரித்து வந்ததை வரலாறு நெடுகிலும் காண முடிகின்றது.

ஐந்தாம் நிலை ஒப்பந்தங்களை, உடன்படிக்கையை ஏற்படுத்தியது...

நபி (ஸல்) அவர்கள் மதினாவில் அடியேடுத்து வைத்த அடுத்தகணமே பல்வேறு இனத்தவரோடும், பல்வேறு கொள்கை கொண்டோரோடும் இணக்கமான ஒப்பந்தங்களை ஏற்படுத்தி சமய நல்லிக்கத்தை உருவாக்கினார்கள்.

குறிப்பிடும்படியாக ஹுதைபிய்யா உடன்படிக்கை மற்றும் யூதர்களோடும், கிருஸ்துவர்களோடும் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி சகோதர சமய உறவுகளை மேம்படுத்தி முஸ்லிம் உம்மத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

ஆறாம் நிலை நிர்பந்த சூழ்நிலையில் சரிநிகராக எதிரிகளோடு போர்க் களத்தைச் சந்தித்தது…

அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவிக்கின்றார்கள்: “நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கு அருகிலிருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?' என்று அவர்களிடம் வினவப்பட்டது.
      'பத்தொன்பது' என்று அவர்கள் பதிலளித்தார்கள். 'நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?' என்று வினவப்பட்டபோது, 'பதினேழு' என்றார்கள்.

'இவற்றில் முதல் போர் எது?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உஸைரா' அல்லது 'உஷைர்' என்று பதிலளித்தார்கள்.

கதாதா(ரஹ்) அவர்களிடம் நான் கேட்டபோது அவர்கள், 'உஷைரா தான் (சரியான உச்சரிப்பு)' என்றார்கள்.                                    ( நூல்: புகாரி )

بلغ عدد سرايا الرسول -صلى الله عليه وسلم- ثلاثاً وسبعين سريّة في فترات زمنية مختلفة، وإلى أماكن متعددة، وبقيادات حكيمة متميزة، وهذه السرايا سنذكرها حسب حدوثها خلال سنوات الهجرة
 في السنة
இது தவிர்த்து நபி {ஸல்} அவர்கள் 73 சிறிய, பெரிய படைகளை நபித் தோழர்களின் தலைமையில் பல்வேறு நோக்கங்களுக்காக, பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்கள் என வரலாற்று ஆசிரியர் இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.                                    ( நூல்: சீரத் இப்னு ஹிஷாம் )

இதில் எதிரிகளின் படையெடுப்பு, எதிரிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றின் பின்னரே மாநபி {ஸல்} அவர்கள் எதிரிகளோடு போரிட்டார்கள்.

ஆனாலும் நபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடி முறையிடுகிற நிலையில் இருந்து ஒரு போதும் மாறியதில்லை.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு சூழ்நிலைகளை முன் வைத்து மக்கள் தீர்வுகளை வேண்டி நின்ற போது மாநபி {ஸல்} அவர்கள் துஆவைத் தான் முதன்மையாக ஆக்கினார்கள்.

தற்போது சிரியா முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க ஹகீம் இப்னு ஹிஷாம், முத்இம் இப்னு அதீ, அபுல் புக்தரீ, ஜூஹைர் இப்னு அபூ உமைய்யா, ஹிஷாம் இப்னு அம்ர், ஸம்ஆ போன்றவர்களோ இல்லை.

அடைக்கலமும், ஆதரவும் கொடுக்க இப்னு தகினா, அபீ சீனியா போன்ற நல்லோர்களும், நாடுகளும் இல்லை.

ஏகாதிபத்திய, சியோனிச, யூத, ஃபாசிஸ, ஷியா போன்ற இறைவிரோதிகளை எதிர்த்து போராட, போரிட இன்றைய அரபுல முஸ்லிம் நாடுகளுக்கு ஆண்மை இல்லை.

ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் ஏற்படுத்தி அம்மக்களை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சித்ரவதைகளில் இருந்து காப்பாற்றிட முஸ்லிம் உம்மாவிற்கு மிகச் சிறந்த மகத்தான ஆளுமைகள் இல்லை.

ஆனால், பெருமானார் {ஸல்} அவர்கள் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் கையாண்ட துஆ எனும் பேராயுதம் நம் கைவசம் இருக்கின்றது.

அல்லாஹ்விடம் மன்றாடி, முறையிட்டு, கதறியழுது சிரியா முஸ்லிம்களுக்காக இரு கரம் ஏந்துவோம்!

அடைக்கலத்தாலும், ஆதரவுக் கரத்தாலும், போராலும், ஒப்பந்தங்களாலும், உடன்படிக்கையாலும், கிடைத்திடாத நிம்மதியான நிரந்தரமான தீர்வை அல்லாஹ் அம்மக்களுக்கு வழங்குவான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீனிடம் முறையிடுவோம்! சிரியா மக்களுக்கான விடியலும் அவனே! அவர்களை மீட்டெடுக்கப் போதுமானவனும் அவனே!

தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் வழிகாட்டுதல் மற்றும் வேண்டுகோளின் படி ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு திக்ர் செய்து உளமுருகி, கதறியழுது துஆ செய்வோம்!

اللهم أنج المستضعفين من المؤمنين والمسلمين في بلاد الشام، وفي مشارق الأرض ومغاربها يا أرحم الراحمين، واجعل لهم فرجاً ومخرجاً

اللهم انصر المجاهدين في سبيلك، وألّف بين قلوبهم، ووحّد صفوفهم، ووفقهم لاتباع كتابك وسنة نبيك، ويسّر لهم أسباب النصر وفتح بيت المقدس وإقامة شريعتك

اللهم اجعلهم من الذين إن مكنتهم في الأرض أقاموا الصلاة وآتوا
الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر، ولله عاقبة الأمور
اللهم أنت ربنا و إلهنا و خالقنا قصدناك و رجوناك فلا تخيب رجاءنا و دعوناك فاستجب دعاءنا
اللهم انصرأهلنا في سوريا و اليمن وفلسطين و ليبيا و العراق و مصر و تونس والسودان وكافة بلاد المسلمين نصراً عزيزاً من عندك على من يحاربونك و يحاربون سنة نبييك
ودينك و يقتلون عبادك ، اللهم كِن سلاحهم واضرب وجوههم و مزقهم و فتتهم
واجعل أمرهم شتاً شتاً ، واجعل بيننا وبينهم سداً سداً ، و صب
عليهم العذاب صباً صباً ، و أطفأ نارهم و شلّ إرادتهم
اللهم عليك في بشار الاسد وحاشيته ومن يواليه من داخل البلاد وخارجها
اللهم جردهم من حولهم وقوتهم و سلطهم على أنفسهم و اجعل بأسهم بينهم
اللهم زلزل الأرض من تحت أقدامهم وألق الرعب فى قلوبهم وانصر اهلنا الابرياء فى كل مكان
اللهم انصر عبادك المؤمنين على القوم الفاسدين
أللهم أن الأعداء قد استهانوا بدينك وبعبادك
اللهم انهم أظهروا علينا قوتهم فأرنا فيهم قدرتك
اللهم زلزلهم أللهم أجعلهم عبرة للعالمين
أللهم يا أكبر من كل كبيرعليك بمن تجبر وتكبر
أللهم أنصرشعوب المسلمين وأشف جرحاهم وفك قيد اسراهم وأرحم شهدائهم وموتاهم
اللهم أرزقهم النصر على عدوهم وألأمان
أللهم أرزقهم الرزق الحلال وعوض عليهم
أللهم عوض عنهم خسائرهم و وسع عليهم ارزاقهم
يا ألله يا ألله يا ألله
حسبنا الله و نعم الوكيل

சிலுவையுத்தக்காரர்கள், மங்கோலியர்கள், தார்த்தாரியர்கள், பொதுவுடமை வாதிகள், யூதர்கள், கிருஸ்துவர்கள், ஆகியோர் இஸ்லாமிய மண்ணில் இழைத்த கொடூரக் குற்றங்களை போல, தங்களின் முன்னாள் சகாக்களை பின்பற்றி அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் அவர்களின் இஸ்லாமிய விரோதி ஷீஆக்களும், அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் பஷர் அல் அஸாத் போன்ற கயவர்களும் தங்களுடைய மூர்க்கத்தனமான வன்கொடுமைகளை மீண்டும் புனித பூமியான ஷாமிலே அரங்கேற்றம் செய்யலாம் என்று திட்டமிடுகிறார்கள்.

ஆனால் இதற்கு முன்னால், முஸ்லிம்களை எதிர்த்த எதிரிகள் இறுதியில் அடைந்த கதி என்ன என்பது வரலாறு நெடுகிலும் பரவி, விரவிக் கிடக்கின்றது, படிப்பினை பெற மறுக்கிறார்கள்!

முஸ்லிம் உம்மாவின் எதிரிகள் அனைவரும் வேரறுக்கப்படுவார்கள்! இஸ்லாத்தின் மகத்துவமும் முஸ்லிம்களின் பெருமையும் மீண்டும் உலகில் நிலை நாட்டப்படும்!  

அல்லாஹ்வின் கதவுகளை தட்டுவோம்! துஆவின் மகத்துவம் என்ன என்பதை உலகிற்கு பறை சாற்றுவோம்!!

இன்ஷா அல்லாஹ்... வரும் நாட்கள் மாற்றத்தை காண காத்திருக்கிறது; அந்த மாற்றத்தைக் காண அல்லாஹ் நம் எல்லோருக்கும் தௌஃபீக் செய்வானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!