Thursday 6 December 2018

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை வழங்குவோம்!!!


மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை வழங்குவோம்!!!




டிசம்பர் 3 –ஆம் தேதி சர்வதேச அளவில் மாற்றுத் திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தங்களுடைய அன்றாட வாழ்வில் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக இந்த தினம் கடை பிடிக்கப்படுகிறது.

ஏதோ ஒரு வகையில் குறைபாடு உடையவர்கள் உலகில் 100 கோடி மக்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.

இந்தியாவில் மட்டும் 2 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 557 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இது நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவீதம் ஆகும்.

இவர்களில் ஆண்கள் 1 கோடியே 49 லட்சம் பேரும், பெண்கள் 1 கோடியே 18 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

நம் நாட்டின் இந்த புள்ளிவிவரம் தவறென்று கூறும் ஒரு சாரார் சுமார் ஏழரை கோடி மக்கள் மாற்றுத் திறனாளிகளாய் இருக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

நம் நாட்டில் (2013ல்) 7 ½ கோடி பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். ஆனால், தவறான புள்ளி விபரப்படி 2 ½ கோடி பேர் மட்டுமே காட்டப்படுகின்றனர். இவர்களுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் வழங்கப்படுகிறது.

கணக்கெடுக்கப்படாத மீதமுள்ள 5 கோடி பேர் அரசின் எவ்வித சலுகையுமின்றி, வீடுகளிலும் அவர்கள் சரிவர பராமரிக்கப்படாமல் கண்டு கொள்ளப்படாமல் விட்டு விடப்பட்டுள்ளனர். இது மனித நேயமற்ற மனிதாபிமானமற்ற மிகப்பெரும் கொடூரமான செயலாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.


மாற்றுத் திறனாளிகள் வகைபாடு..

மாற்றுத் திறனாளிகளை அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளின் அடிப்படையில் உடல் உறுப்புக்களில் குறைபாடு உடையோர், பார்வைக் குறைபாடு உடையோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், மனவளர்ச்சி மற்றும் மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையவர்கள் ( Multiple Disability ) என்று ஆரம்பத்தில் 5 வகைகளாகப் பிரித்திருந்தனர்.

ஆனால், தற்போது தொழுநோய், மூளை முடக்குவாதம், உயரக்குறைபாடு, தசை அழிவு நோய், கற்றல் குறைபாடு, கவனச்சிதறல் குறைபாடு, நடுக்குவாதம், நரம்பியல் சார்ந்த நோய்கள், ஹீமோபிலியா என்கிற ரத்த ஒழுக்கு, தலசீமியா என்கிற ரத்த அழிவுச்சோகை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் இதோடு மேலும் சிலவற்றைச் சேர்த்து 22 வகைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்கொள்ளும் பிரச்சனைகள்…

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் ஆரோக்கியம் மட்டுமே பிரச்சனை அல்ல, அது மனித உடலுக்கும் அதனை சூழ்ந்திருக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பைப் பிரதிபலிக்கும் சிக்கலான ஒரு பிரச்சனையாகும்.

போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, மருத்துவ பராமரிப்பு அளிக்க முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை, இதைத் தாண்டி சமூகப்புறக்கணிப்பு, அலட்சியப்படுத்துதல், குறைபாடுகளை சுட்டிக்காடி எள்ளி நகையாடுதல் என நீண்ட பட்டியல் இருக்கிறது.

நம்மீதான கடமை என்ன?

மாற்றுத் திறனாளிகள் என்பவர்கள் ஒரு குடும்பத்தின் உறுப்பினராக, சமூகத்தின் அங்கமாக இருக்கின்றார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

அவர்களுடைய உடல் மற்றும் மனநலக் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாற்றுத் திறனாளிக்கும் தனிப்பட்ட திறமைகளும், ஆர்வமும் உண்டு. அவர்களுடைய திறமைக்கான வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் ஆர்வங்களை அங்கீகரிக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் நம் குடும்பங்களில், நம் சமூகத்தில், நம் மஹல்லாவில், நம் தெருவில், நம் பக்கத்து வீட்டில் இருக்கின்றார்கள் என்றால் அவர்களை சுமையாக கருதும் நமது பார்வையை மாற்றிக் கொண்டு, அவர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதை பூர்த்தி செய்வோம்.

மாற்றுத் திறனாளின் உரிமைகளை வழங்கிய உயர் மார்க்கம் இஸ்லாம்!

மாற்றுத் திறனாளிகளுக்கு சோபனம் கூறிய மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..

قال أنس رضى الله عنه " إن جبريل أتى رسول الله صلّى الله عليه وسلم وعنده ابن ام مكتوم فقال له متى ذهب بصرك قال وانا غلام فقال جبريل الأمين له : قال الله تبارك وتعالى : إذا ما أخذت كريمة عبدى لم أجد له بها جزاء الا الجنة ، هكذا وعد الله إبن أم مكتوم بالجنة وبشره بها جبريل عليه السلام.

 البداية والنهاية أبو الفداء الحافظ بن كثير

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

ஒரு நாள் பொழுது அண்ணலார் சபையில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்திருந்தார்கள். அப்போது அங்கே இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள்.

அப்போது, அண்ணலார் {ஸல்} அவர்கள் தங்களருகே இப்னு உம்மி மக்தூம் அவர்களை அழைத்து, ”அப்துல்லாஹ் அவர்களே உங்களின் பார்வை பிறவியிலேயே இப்படியா? அல்லது இடையிலே ஏற்பட்ட ஏதேனும் கோளாரில் பார்வை பரிபோனதா?” என்று அன்பொழுக விசாரித்தார்கள்.

அப்போது, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், தாம் சிறுவயதாக இருக்கும் போது ஏற்பட்ட ஒரு சூழ்நிலையில் பார்வை பறிபோனதாக தெரிவித்தார்கள்.

அப்போது ஜிப்ரயீல் (அலை) அவர்கள், நபிகளாரிடம்சங்கையான என்னுடைய அடியானிடம் இருந்து நாம் ஏதேனுமொரு அருட்கொடையை எடுத்துக் கொண்டோம் எனில், அதற்குப் பகரமாக நாம் சுவனத்தைத் தவிர வேறெதையும் கூலியாக வழங்குவதில்லைஎன்று அல்லாஹ் கூறியதாக கூறினார்கள். ( நூல்: அல்பிதாயா வந்நிஹாயா )

1.   விழிப்புலன் (கண்பார்வை) இழந்தவரின் கோரிக்கையை கனிவுடன் நிறைவேற்றிய காரூண்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

عن محمود بن الربيع الأنصاري ، أن عتبان بن مالك - وهو من أصحاب الرسول صلى الله عليه و سلم ، وهو ممن شهدوا بدرا من الأنصار- أنه أتى رسول الله صلى الله عليه وسلم ، فقال : يا رسول الله ! قد أنكرت بصري وأنا اصلي لقومي ، فإذا كانت الأمطار سال الوادي الذي بيني وبينهم لم أستطع أن آتي مسجدهم فأصلي بهم ، وددت يا رسول الله أنك تأتيني فتصلي في بيتي فأتخذه مصلى ، قال : فقال رسول الله صلى الله عليه وسلم : " سأفعل - إن شاء الله - " . قال عتبان :فغدا رسول الله صلى الله عليه وسلم ،وأبو بكر حين ارتفع النهار فاستأذن رسول الله صلى الله عليه وسلم ،فأذنت له ،فلم يجلس حتى دخل البيت ، ثم قال : " أين تحب أن أصلي في بيتك ؟ " قال : فأشرت له إلى ناحية من البيت ، فقام رسول الله صلى الله عليه و سلم فكبر ، فقمنا فصففنا فصلى ركعتين ثم سلم . رواه البخاري الفتح 1/519

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சமூகத்திற்கு வருகை தந்த இத்பான் இப்னு மாலிக் (ரலி) எனும் நபித்தோழர் நபிகளாரிடத்தில்

அல்லாஹ்வின் தூதரே! நான் என் சமூக மக்களுக்கு இமாமாக இருக்கின்றேன். என் வீட்டிற்கும் பள்ளிவாசலுக்கும் இடையே ஓர் ஓடை ஓடுகின்றது.

அதைக் கடந்து தான் நான் தொழவைக்கச் செல்வேன். ஆனால், மழைக் காலங்களில் அதைக் கடந்து செல்ல எனக்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது. மேலும், சமீப காலமாக எனக்குப் பார்வைக் குறைபாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அது எனக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, நான் அங்கு சென்று தொழுவதும், தொழவைப்பதும் இயலாத காரியமாக இருக்கின்றது.

ஆகவே, நான் எனது வீட்டிலேயே ஓரிடத்தில் தொழுது கொள்ள அனுமதியளித்து, அந்த இடத்தில் நீங்கள் வந்து முதல் தொழுகையைத் தொழுதிட என் உள்ளம் நாடுகின்றது, அதுவே எனது விருப்பமாகவும் இருக்கின்றது. மேலும், அந்த இடத்தை நான் தொழுமிடமாக ஆக்கிக் கொள்வேன்.

அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வருவீர்களா?” என்று வேண்டி நின்றார்.

அதற்கு அண்ணலார், இன்ஷா அல்லாஹ்.. அப்படியே செய்கின்றேன் என்றார்கள்.

இத்பான் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:மறுநாள் நபிகளாரும், அபூபக்ர் (ரலி) அவர்களும் முற்பகல் நேரத்தில் எனது வீட்டிற்கு வருகை தந்தார்கள்.

 பின்னர், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} வீட்டினுள் எங்கேயும் அமராமல் என்னை நோக்கி நீர்! எங்கே தொழுதிட விரும்புகின்றீர்!என்று கேட்டார்கள்.

அப்போது நான் வீட்டின் ஒரு ஓரப்பகுதியை சுட்டிக் காட்டினேன். அண்ணல் நபி {ஸல்} அவர்கள் இமாமாக நிற்க, நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நபிகளாரைப் பின் பற்றி இரண்டு ரக்அத்கள் தொழுதோம். பின்னர் அண்ணலார் என்னிடம் இருந்து விடை பெற்றுச் சென்றார்கள். ( நூல்: புகாரியின் தெளிவுரை ஃபத்ஹுல் பாரீ, பாகம்:1, பக்கம்:519 )

2.   மாற்றுத் திறனாளிகளோடு சமமாக பழக வேண்டும் என்று வலியுறுத்திய வல்லோன் அல்லாஹ்...

இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர், மதீனத்து மக்கள், பார்வையற்றவர்கள், நோயாளிகள், ஆகியோருடன் சேர்ந்து உணவருந்த மாட்டார்கள். அப்படி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை வெறுத்தனர்.

மதீனா வந்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மதீனத்து மக்களின் இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று கருதிய போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பின்வரும் இறைவசனத்தை இறக்கியருளினான்.

மக்கள் முன்பாக வந்து நின்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

لَيْسَ عَلَى الْأَعْمَى حَرَجٌ وَلَا عَلَى الْأَعْرَجِ حَرَجٌ وَلَا عَلَى الْمَرِيضِ حَرَجٌ وَلَا عَلَى أَنْفُسِكُمْ أَنْ تَأْكُلُوا مِنْ بُيُوتِكُمْ
لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَأْكُلُوا جَمِيعًا أَوْ أَشْتَاتًا
المراد [هاهنا] أنهم كانوا يتحرجون من الأكل مع الأعمى؛ لأنه لا يرى الطعام وما فيه من الطيبات، فربما سبقه غيره إلى ذلك. ولا مع الأعرج؛ لأنه لا يتمكن من الجلوس، فيفتات عليه جليسُه، والمريض لا يستوفي من الطعام كغيره، فكرهوا أن يؤاكلوهم لئلا يظلموهم، فأنزل الله هذه الآية رخصة في ذلك. وهذا قول سعيد بن جبير، ومِقْسَم.
وقال الضحاك: كانوا قبل المبعث يتحرجون من الأكل مع هؤلاء تقذرًا وتَقَزُّزًا، ولئلا يتفضلوا عليهم، فأنزل الله هذه الآية.

நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில், பார்வையற்றோர், நடக்க முடியாதவர்கள், நோயாளிகள் மீது எந்தவிதக் குற்றமுமில்லை” (24:61) என்ற திருமறை வசனத்தை ஓதிக் காட்டி மக்கள் கண்ணோட்டத்தை மாற்றி, வெறுப்புணர்வை நீக்கி அனைவரும் சேர்ந்து உணவு உண்ணும் நிலையை ஏற்படுத்தினார்கள்.         ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

3.   மனித உணர்வுகளை ஊனப்படுத்துவதும், காயப்படுத்துவதும் ஈமானுக்குப் பிறகு பெரிய பாவம் என்று உணர்த்தினான் வல்லோன் அல்லாஹ்…

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ (11)

இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்யவேண்டாம் (பரிகாசம் செய்யப்பட்ட ) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மிகச் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்பட்ட ) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மிகச் சிறந்தவர்களாகஇருக்கலாம். உங்களில் சிலர் சிலரை குறை கூறவும் வேண்டாம் உங்களில் சிலர் சிலரை அவருக்கு வைக்கப்படாத பெயர்களால் அழைக்கவும் வேண்டாம். இறை நம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தைகளைக் கைவிட வில்லையோ அவர்கள் தாம் கொடுமைக்காரர்கள்                                        ( அல்குர்ஆன்: 49: 11 )

இவ்வசனம் அல் - ஹுஜறாத் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வத்தியாயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் இடம் பெற வேண்டிய பொதுவாக பண்பியல்புகள் பற்றி எடுத்துக் கூறப்படுகின்றது.

அத்தோடு தம்மிடம் இருப்பதைக் கொண்டு அதைப்போன்று  இல்லாமற்றவர்களைக் குறை கூறித்திரிவதும், மற்றவர்களுக்கு பட்டப் பெயர் சூட்டுவது இஸ்லாமிய சமூகத்தில் ஆரோக்கியமான பண்பல்ல, என்பதைக் கூறுவதோடு குறிப்பாக மாற்றுத் திறனாளிகளின் ஊனத்தன்மையை வைத்து பட்டப்பெயர் சூட்டுவதையும் அவர்களை குறை கூறுவதையும் இஸ்லாம் தடைசெய்துள்ளதோடு அவர்களை கொடுமைக்காரர்கள் என்று கடுமையாக விமர்சிப்பதையும் உணர முடிகின்றது.

4.   மாற்றுத் திறனாளிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த மாண்பாளன் அல்லாஹ்...

பத்ர் யுத்தம் முடிவடைந்து, பத்ரில் கலந்து கொண்டவர்களுக்கு அல்லாஹ் அளித்த சிறப்புகளை கேள்விபட்டு அந்த சிறப்புக்களை தம்மால் அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தோடும், பத்ரில் கலந்து கொள்ளாதவர்களை அல்லாஹ் விமர்சித்து இறைவசனம் இறக்கியருளியுள்ளான் என்பதைக் கேள்விபட்டு ஒரு வித நடுக்கத்தோடும் நபிகளாரின் அவைக்கு நபிகளாரைக் காண வருகை தந்தார்கள் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அல்லாஹ்வின் தூதரே! என்னால் இயலுமானால் நானும் போரில் கலந்து கொண்டிருப்பேனே!” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தன் இயலாமையை முறையிட்டார்கள்.

பின்னர், வானை நோக்கி கையை உயர்த்தியாஅல்லாஹ் என் விஷயத்திலும், என் போன்ற இயலாதவர்களின் நிலை குறித்தும் நீ உன் திருமறையில் வசனம் ஒன்றை இறக்கியருள வேண்டும்என அல்லாஹ்விடம் அழுது மன்றாடினார்கள்.

உடனடியாக அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அந்நிஸா அத்தியாயத்தின் 95 –ஆம் இறைவசனத்தை இறக்கியருளினான்.

புகாரியின் இன்னொரு அறிவிப்பில்..

حدثني سهل بن سعد الساعدي: أنه رأى مَروان بن الحكم في المسجد، قال: فأقبلت حتى جلست إلى جنبه، فأخبرنا أن زيد بن ثابت أخبره: أن رسول الله صلى الله عليه وسلم أملى عَلَيّ: " لا يستوي القاعدون من المؤمنين والمجاهدون في سبيل الله ". فجاءه ابن أم مكتوم، وهو يمليها عليَّ، قال: يا رسول الله، والله لو أستطيع الجهاد لجاهدت -وكان أعمى-فأنزل الله على رسول الله صلى الله عليه وسلم، وفَخِذه على فخذي، فثقلت علي حتى خفت أن تُرَض  فخذي، ثم سري عنه، فأنزل الله: { غَيْرُ أُولِي الضَّرَرِ }



ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.

நான் மர்வான் இப்னு ஹகமைப் பள்ளி வாசலில் பார்த்தேன். அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர், ஸைத் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு (பின்வருமாறு) தமக்குத் தெரிவித்ததாக எங்களிடம் கூறினார்:

'இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்' எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) வசனத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நான் எழுதிப் பதிவு செய்வதற்காக) என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருக்கும்போது,

இப்னு உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னால் அறப்போர் புரிய முடிந்திருந்தால் அறப்போர் புரிந்திருப்பேன்' என்று கூறினார்கள். அவர் கண் பார்வையற்றவராக இருந்தார். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலை வஸல்லம் அவர்களின் தொடை என் தொடை மீதிருக்க, அவர்களின் மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். எனவே, என் தொடை நசுங்கிப் போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு நபி(ஸல்) அவர்களின் தொடை என் மீது கனத்து (அழுத்தத் தொடங்கி)விட்டது. பிறகு, அந்நிலை அகன்றது. அப்போதுதான் அல்லாஹ் 'இடைஒறு உள்ளவர்களைத் தவிர' எனும் சொற்றொடரை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.

5.   மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை அங்கீகரித்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்...

وكان رسول الله يستخلفه على المدينة المنورة في غزواته فيصلي بالناس ويرعى شؤونهم وقد استخلفه ثلاث عشرة مرة في الأبواء وبواط وذي العشيرة، وغزوته في طلب كرز بن جابر، وغزوة السويق، وغطفان، وفي غزوة أحد، وحمراء الأسد، ونجران، وذات الرقاع، وفي خروجه إلى حجة الوداع، وفي خروجه إلى بدر

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களால் கிட்டத்தட்ட பதிமூன்று முறை மதீனாவின் இடைக்கால தலைவராக நியமிக்கப் பெற்ற சிறப்பு வாய்ந்த நபித்தோழர்.

பாங்கு சொல்கிற பணியிலும் மற்றும் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்ட 13 முறையும் இமாமத் பணியிலும் நியமிக்கப்பட்ட நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் விழிப்புலன் அற்ற மாற்றுத் திறனாளியே!

முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் முதன் முதலாக ஒரு நாட்டிற்கு இஸ்லாமிய அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்கள்.

யார் அந்த முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு?

قال عمر بن الخطاب عندما حانت وفاته: «لو كان معاذ بن جبل حيا وليته ثم قدمت على ربي عز وجل فسألني من وليت على أمة محمد؟ لقلت: وليت عليهم معاذ بن جبل بعد ان سمعت النبي يقول: معاذ بن جبل إمام العلماء يوم القيامة، وقد كان أعرج».

ஓர் ஆச்சர்யமான செய்தி முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி என்றால் நம்ப முடிகின்றதா?

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சரி, அவர்களது மறைவிற்குப் பின்னர் மாநபித்தோழர்களும் சரி முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்கிய மரியாதையும், கௌரவமும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

وعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: أَخَذَ بِيَدِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ, فَقَالَ
((إِنِّي لَأُحِبُّكَ يَا مُعَاذُ, فَقُلْتُ: وَأَنَا أُحِبُّكَ يَا رَسُولَ اللَّهِ, فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَلَا تَدَعْ أَنْ تَقُولَ فِي كُلِّ صَلَاةٍ رَبِّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ ))
أخرجه النسائي في سننه

ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓ முஆதே! என்றழைத்து.. முஆத் அவர்களின் கரங்களைப் பற்றிப் பிடித்துமுஆதே! உம்மை நான் நேசிக்கின்றேன்! கூறினார்கள்.

அது கேட்ட, முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நானும் தங்களை நேசிக்கிறேன்! என்றார்கள்.

மீண்டும் நபி {ஸல்} அவர்கள் முஆதே! அது உண்மையானால், கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும்

யா அல்லாஹ்! உன்னை நினைப்பதிலும், உனக்கு நன்றி செலுத்துவதிலும், உன்னை அழகிய முறையில் வணங்குவதிலும் எனக்கு உதவி புரிவாயாக! என்று பிரார்த்திப்பதை விட்டு விட வேண்டாம்என்று கட்டளையிட்டார்கள்.


நபி {ஸல்} அவர்கள் சபைக்குள் நுழையும் போதெல்லாம் முஆத் இருக்கின்றாரா? என்று கேட்டவாறு தான் நுழைவார்கள்.

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களின் இந்த ஓயாத கல்வித் தாகத்தால் ஒரு முறை மாநபி {ஸல்} அவர்கள் தோழர்களை நோக்கி இப்படிக் கூறினார்கள்.

قَالَ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-: (خُذُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ: مِنِ ابْنِ مَسْعُوْدٍ، وَأُبِيٍّ، وَمُعَاذِ بنِ جَبَلٍ، وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ)

 குர்ஆனின் அறிவை நீங்கள் நான்கு நபர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்! 1. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல், ஸாலிம் மவ்லா அபீ ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹும்)”

இன்னொரு சந்தர்ப்பத்தில் இப்படிக் கூறினார்கள்.

عَنْ خَالِدٍ، وَعَاصِمٍ، عَنْ أَبِي قِلاَبَةَ:
عَنْ أَنَسٍ مَرْفُوْعاً: (أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي: أَبُو بَكْرٍ، وَأَشَدُّهَا فِي دِيْنِ اللهِ: عُمَرُ، وَأَصْدَقُهَا حَيَاءً: عُثْمَانُ، وَأَعْلَمُهُم بِالحَلاَلِ وَالحَرَامِ: مُعَاذٌ، وَأَفْرَضُهُم: زَيْدٌ، وَلِكُلِّ أُمَّةٍ أَمِيْنٌ، وَأَمِيْنُ هَذِهِ الأُمَّةِ: أَبُو عُبَيْدَةَ

என் உம்மத்தில் மிகவும் இரக்கமுடையவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆவார்கள். தீனுடைய காரியங்களில் மிகவும் ரோஷமுடையவர் உமர் (ரலி) அவர்கள் ஆவார்கள். உண்மை பேசுவதிலும், வெட்க உணர்விலும் மேலோங்கியவர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆவார்கள். ஹலால், ஹராமை மிகவும் விளங்கியவர் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் ஆவார்கள்.

போதிக்கும் ஆசானாக நியமனம் வழங்கி ஆணை பிறப்பித்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..

ابْنُ سَعْدٍ: أَنْبَأَنَا مُحَمَّدُ بنُ عُمَرَ، حَدَّثَنَا إِسْحَاقُ بنُ يَحْيَى، عَنْ مُجَاهِدٍ، قَالَ:
لَمَّا فَتَحَ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- مَكَّةَ، اسْتَخْلَفَ عَلَيْهَا عَتَّابَ بنَ أَسِيْدٍ يُصَلِّي بِهِم، وَخَلَّفَ مُعَاذاً يُقْرِئُهُم وَيُفَقِّهُهُم

மக்கா வெற்றிக்குப் பிறகு மக்காவாசிகள் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி இணைந்த வண்ணம் இருந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்காவாசிகளுக்கு கவர்னராக அத்தாப் இப்னு உஸைத் (ரலி) அவர்களையும், குர்ஆனை கற்றுக் கொடுப்பதற்கும், சன்மார்க்க சட்டதிட்டங்களை போதிப்பதற்கும் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை ஆசானாகவும் நியமித்தார்கள்”.

وروى سهل بن أبي حثمة، عن أبيه قال: كان الذين يفتون على عهد رسول الله صلى الله عليه وسلم من المهاجرين: عمر، وعثمان، وعلي. وثلاثة من الأنصار: أُبي بن كعب، ومعاذ بن جبل، وزيد بن ثابت.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாழும் காலத்திலேயே மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வளித்திடும் ஆற்றல் மிக்க ஆறு நபித்தோழர்கள் உண்டு. முஹாஜிர்களில் மூன்று பேர். 1.உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), அன்ஸார்களில் மூன்று பேர். 1.உபை இப்னு கஅப் (ரலி), முஆத் இப்னு ஜபல் (ரலி), ஜைத் இப்னு ஸாபித் (ரலி) ஆகியோர் ஆவார்கள்.

                                               ( நூல்: உஸ்துல் ஃகாபா )

فهذا عائذ الله بن عبدالله يحدثنا انه دخل المسجد يوما مع أصحاب الرسول صلى الله عليه وسلم في أول خلافة عمر..قال:
" فجلست مجلسا فيه بضع وثلاثون، كلهم يذكرون حديثا عن رسول الله صلى الله عليه وسلم، وفي الحلقة شاب شديد الأدمة، حلو المنطق، وضيء، وهو أشبّ القوم سنا، فاذا اشتبه عليهم من الحديث شيء ردّوه اليه فأفتاهم، ولا يحدثهم الا حين يسألونه، ولما قضي مجلسهم دنوت منه وسالته: من أنت يا عبد الله؟ قال: أنا معاذ بن جبل".


ஆயிதல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) எனும் தாபியீ கூறுகின்றார்கள்:  

நான் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தின் துவக்கத்தில் மஸ்ஜிதுன் நபவீயிற்குச் சென்றேன். அங்கே முப்பதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் ஒரு இளம் வயது வாலிபரிடம் நபிகளாரின் ஹதீஸ் குறித்தும், சன் மார்க்க சட்டதிட்டங்கள் குறித்தும் வினா எழுப்பிக் கொண்டிருக்க, சற்றும் அசராமல் ஒவ்வொன்றுக்கும் மிக அழகிய முறையிலே பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.

உடனடியாக அந்த சபையில் என்னையும் ஒரு மாணவராக நான் இணைத்துக் கொண்டேன். அவர்கள் அளிக்கும் பதிலில் ஒளியும், இனிமையும் இழையோடியதை நான் அறிந்து கொண்டேன்.

நீண்ட நேரத்திற்குப் பின் சபை முடிந்து எல்லோரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது அவர் அருகே சென்று அல்லாஹ்வின் அடியாரே நீங்கள் யார்? என்று வினவினேன். அதற்கு அவர்கள் நான் தான் முஆத் இப்னு ஜபல் (ரலி) என்று அடக்கத்தோடும் பணிவோடும் பதில் கூறினார்கள்.

وهذا أبو مسلم الخولاني يقول:
" دخلت مسجد حمص فاذا جماعة من الكهول يتوسطهم شاب برّاق الثنايا، صامت لا يتكلم. فاذا امترى القوم في شيء توجهوا اليه يسألونه. فقلت لجليس لي: من هذا..؟ قال: معاذ بن جبل.. فوقع في نفسي حبه".

அபூ மூஸ்லிம் ஃகவ்லானி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் ஹிம்ஸ் நகரின் ஒரு பள்ளிவாயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு பெருங்கூட்டத்தினர் அமர்ந்திருந்தனர். அவர்களின் நடுவே ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார்.

அவரை நான் உற்று நோக்கினேன். அவரது கண்களும், பற்களும் வெண்முத்துக்கள் போல் பளிச்சிட்டன. ஆனால், அவரோ மிகவும் அமைதியாகவும், அடக்கமாகவும் அமர்ந்திருந்தார்.

அங்கே கூடியிருந்தவர்கள் அவ்வப்போது தங்களுக்கான மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று கொண்டிருந்தனர். அப்போது நான் இவர் யார்? என அங்கிருந்தோரிடம் வினவ, அவர்கள் இவர் தான் முஆத் இப்னு ஜபல் (ரலி) பதில் கூறினார்கள்.

அன்றிலிருந்து நான் அவர்களை நேசிக்க ஆரம்பித்து விட்டேன்.

وهذا شهر بن حوشب يقول:
" كان أصحاب رسول الله صلى الله عليه وسلم اذا تحدثوا وفيهم معاذ بن جبل، نظروا اليه هيبة له"…
ஷஹ்ர் இப்னு ஹவ்ஷப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபித்தோழர்கள் ஒன்று கூடி கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கும் அவைக்கு முஆத் (ரலி) வருகை புரிந்தார்கள் என்றால் முஆத் (ரலி) அவர்களை மரியாதை கலந்த பார்வையோடு அணுகுவார்கள்.          ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}.)

6.   மாற்றுத் திறனாளிகளுக்கு சமூகத்தில் அங்கீகாரத்தை வழங்கத்தூண்டிய வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..

وقال  الإمام أحمد: حدثنا عبد الرزاق، أخبرنا مَعْمَر، عن ثابت البُنَاني، عن أنس قال: خطب النبي صلى الله عليه وسلم على جُلَيْبيب امرأة من الأنصار إلى أبيها، فقال: حتى أستأمر أمها. فقال النبي صلى الله عليه وسلم: فنعم  إذًا. قال: فانطلق الرجل إلى امرأته،فذكر ذلك لها  ، فقالت: لاها الله ذا  ، ما وجد رسول الله صلى الله عليه وسلم إلا جلَيبيبا، وقد منعناها من فلان وفلان؟ قال: والجارية في سترها  تسمع. قال: فانطلق الرجل يريد أن يخبر النبي صلى الله عليه وسلم بذلك. فقالت الجارية: أتريدون أن تَرُدّوا على رسول الله صلى الله عليه وسلم أمره؟ إن كان قد رضيه لكم فأنكحوه. قال: فكأنها جَلَّت عن أبويها، وقالا صدقت. فذهب أبوها إلى رسول الله صلى الله عليه وسلم فقال: إن كنت رضيته فقد رضيناه. قال: "فإني قد رضيته". قال: فزوجها  ، ثم فزع أهل المدينة، فركب جُلَيْبيب فوجدوه قد قتل، وحوله ناس من المشركين قد قتلهم، قال أنس: فلقد رأيتها وإنها  لمن أنفق بيت بالمدينة  .

وقال  الإمام أحمد: حدثنا عفان، حدثنا حماد -يعني: ابن سلمة -عن ثابت، عن كنانة بن نعيم العدوي، عن أبي برزة الأسلمي أن جليبيبا كان امرأ يدخل على النساء يَمُرّ بهن ويلاعبهن، فقلت لامرأتي: لا يدخلن اليوم عليكم  جُليبيبُ، فإنه إن دخل عليكم  لأفعلن ولأفعلن. قال: وكانت الأنصار إذا كان لأحدهم أيّم لم يزوجها حتى يعلم: هل لنبي الله صلى الله عليه وسلم فيها حاجة أم لا ؟ فقال رسول الله صلى الله عليه وسلم لرجل من الأنصار: "زوجني ابنتك". قال: نعم، وكرامة يا رسول الله  ، ونُعْمَة عين. فقال: إني لست أريدها لنفسي. قال: فلمن يا رسول الله؟ قال: لجليبيب.


ஒரு முறை நபி {ஸல்} அவர்கள், ஜுலைபீப் (ரலி) அவர்களை அழைத்து என்ன திருமணம் செய்து கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள்.

அதற்கு ஜுலைபீப் அவர்கள்அருவருப்பான தோற்றம் கொண்ட எனக்கு இந்த மதீனாவில் யார் பெண் கொடுப்பார்? என்று விரக்தியுடன் கேட்டார்”.

தோழரே! அல்லாஹ்விடத்தில் நீர் ஒன்றும் அருவெறுப்பானவர் இல்லை. ஊரின் இந்த பகுதியில் உள்ள (ஒரு இடத்தை சுட்டிக்காட்டி) இன்ன மனிதரிடம் சென்று நான் உமக்கு பெண் கேட்டதாக சொல்லுங்கள்என்று கூறி அனுப்பி வைத்தார்கள் நபி {ஸல்} அவர்கள்.

அந்த வீட்டிற்குச் சென்று நபிகளார் சொன்ன அந்த விஷயத்தைக் கூறினார்கள். அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மறுக்கவும் முடியாமல், ஆமோதிக்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர். அவருக்கு பெண் தர அவர்களின் மனம் இடம் தர வில்லை.                        

ப்போது உள்ளிருந்தவாரே தமது பெற்றோரின் உரையாடலையும் ஜுலைபீப் அவர்களின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணி தமது பெற்றோரை அழைத்து….

வந்திருப்பவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே எனக்காக அனுப்பிய மணாளன், நீங்கள் எப்படி எனக்காக மாப்பிள்ளை பார்ப்பீர்களோ அதை விட பன்மடங்கு அக்கறையோடு தான் மா நபி {ஸல்} அவர்கள் எனக்கான மணாளனை தேர்ந்தெடுத்து அனுப்பியிருப்பார்கள்”  என்று கூறிவிட்டு....

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا (36)

 “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனுமொரு விவகாரத்தில் முடிவு செய்துவிட்டால் பிறகு அந்த விவகாரத்தில் மாற்று முடிவு எடுக்கும் அதிகாரம் இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும்,இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது.” எனும் இறை வசனத்தை தம் பெற்றோரிடம் ஓதிக் காண்பித்தார்கள்.

பின்பு என் விஷயத்தில் நபிகளாரின் முடிவையே நான் திருப்தி அடைகிறேன். ஜுலைபீப் அவர்களை என் மணாளராக்க மனப்பூர்வமாக சம்மதிக்கின்றேன்”  என்று கூறினார்கள்.

                                            (நூல்: இப்னு கஸீர், பாகம்:3)

جليبيب، بضم الجيم، على وزن قنيديل، وهو أنصاري، له ذكر في حديث أبي برزة الأسلمي في إنكاح رسول الله صلى الله عليه وسلم ابنة رجل من الأنصار، وكان قصيراً دميماً، فكأن الأنصاري أبا الجارية وامرأته كرها ذلك، فسمعت الجارية بما أراد رسول الله صلى الله عليه وسلم فتلت قول الله: " وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمراً أن يكون لهم الخيرة من أمرهم " وقالت: رضيت، وسلمت لما يرضى لي به رسول الله صلى الله عليه وسلم، فدعا لها رسول الله، وقال: " اللهم اصبب عليها الخير صباً، ولا تجعل عيشها كداً " ز فكانت من أكثر الأنصار نفقة ومالاً.

நபி {ஸல்} அவர்களின் முன்னே அமர்ந்து அந்த வீட்டில் நடை பெற்ற அத்துனை நிகழ்வினையும் ஜுலைபீப் {ரலி} விவரித்துக்கொண்டிருந்தார்கள்.

 அந்தப் பெண்மணி உதிர்த்த வார்த்தைகளை கேட்ட மாநபி {ஸல்} அவர்கள்
இறைவா! அப்பெண்மணியின் வாழ்க்கையில் அனைத்து வகையான நலவுகளையும் கொட்டுவாயாக! கேடுகளும், சோதனைகளும் நிறைந்த வாழ்வை கொடுத்து விடாதே!” என்று அகம் மகிழ துஆ செய்தார்கள்.

 இந்த செய்தியை அறிவிக்கின்ற அபூ பர்ஸா {ரலி} அவர்கள்மதீனாவிலேயே, அன்ஸாரிப் பெண்களிலேயே இந்தப் பெண்மணியை விட செல்வச் சீமாட்டியை நாங்கள் கண்டதில்லை”  என்று கூறுகின்றார்கள்.

                                                 ( நூல்: உஸ்துல் ஃகாபா, இஸ்தீஆப்,பாகம்:1,பக்கம்:155,156 )

இறுதியாக, மாற்றுத் திறனாளிகளின் கவனத்திற்கு….

மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் பலரும் தங்களுடைய குறைபாடுகளுக்காக படைத்த ரப்பை நிந்திக்கிற பழக்கம் உடையவராக இருப்பதைக் காண முடிகின்றது.

அதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ سُبْحَانَ اللَّهِ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ (68)

”மேலும், உம்முடைய இறைவன் தான் நாடுவதைப் படைக்கின்றான்; மேலும், அவனே எப்படிப் படைக்க வேண்டுமென தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். இப்படித் தேர்ந்தெடுப்பது இவர்கள் பணியன்று. அல்லாஹ் தூய்மையானவன்; மிகவும் உயர்ந்தவன்”.                                                ( அல்குர்ஆன்: 28: 68 )

இன்னொரு கோணத்தில் சொல்ல வேண்டுமானால் இது அல்லாஹ்வின் தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.

مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَا فِي أَنْفُسِكُمْ إِلَّا فِي كِتَابٍ مِنْ قَبْلِ أَنْ نَبْرَأَهَا إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ (22) لِكَيْلَا تَأْسَوْا عَلَى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (23)
எந்த துன்பமும் அதனை நாம் சிரிஷ்டிப்பதற்கு முன்னதாக ( லவ்ஹூல் மஹ்பூல்) எனும் கிரந்தத்தில் (பதியப்பட்டு) இருந்தே தவிர பூமியிலோ அல்லது உங்களிலோ ஏற்படுவதில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதாகும் . உங்களுக்கு தவறி விட்டதன் மீது நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காவும் அல்லாஹ் உங்களுக்க கொடுத்ததைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளாதிருப்பதற்காகவும் இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான். கர்வம் கொண்டு தற்பெருமையடிப்போர் ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. ( 57: 22-23)


அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளைப் பொருந்திக் கொண்டு நன்றியாளர்களாய் வாழ முயற்சிக்க வேண்டும்..

குறைவான செல்வ வளம் கொடுக்கப்பட்ட ஸஅலபா இப்னு ஹாத்தப் ரலியல்லாஹு அன்ஹு என்கிற நபித்தோழர் செல்வ வளம் பெருகிட துஆச் செய்யுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வேண்டி நின்ற போது…

عن أبي أمامة الباهلي قال: " جاء ثعلبة بن حاطب الأنصاري إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، فقال: " ويحك يا ثعلبة، قليل تؤدي شكره خير من كثير لا تطيقه " .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் ஸஅலபா இப்னு ஹாத்தப் என்கிற நபித்தோழர் வந்தார்.

அல்லாஹ்வின் தூதரே! செல்வச் செழிப்பான வாழ்விற்காக அல்லாஹ்விடம் எனக்காக பிரார்த்தியுங்கள்என்றார்.

ஸஅலபாகுறைவாக வழங்கப்பட்டு அதற்காக நீர் நன்றி செலுத்துவது இருக்கிறதே, நிறைவான செல்வம் வழங்கப்பட்டு நன்றி செலுத்தாமல் வாழ்வதைக் காட்டிலும் மிகச் சிறந்ததாகும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

எனவே, தன்னம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் சமூகத்தில் வாழ்ந்து சிகரம் தொட்ட சாதனையாளர்களாய் வலம் வர வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவத்தையும், உரிமைகளையும் இங்கு ஓரளவு குறிப்பிட்டுள்ளேன்.

எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவளிப்போம்! அவர்களின் உரிமைகளை வழங்குவோம்!! 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன்! இயற்கையான குறைபாடுகளோடு பிறப்பதில் இருந்து நமது சந்ததிகளைப் பாதுகாப்பானாக!

விபத்து, நோய், மருத்துவம் போன்ற காரணங்களினால் ஏற்படுகிற ஊனங்களில் இருந்து நம் எல்லோரையும் பாதுகாப்பானாக!!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!