எதிர் பார்க்கப்படும் மஹ்தி (அலை) யார்?
நாம் வாழும் இவ்வுலகம் ஒரு நாள் அழிக்கப்படும்; அதன் பின்னர் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவர். அந்நாளில் இந்த உலகில் மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படையில் நியாயத் தீர்ப்பு வழங்கப்படும் என்று ஈமான் கொள்வது - நம்புவது இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றாகும்.
உலகம் எப்போது அழிக்கப்படும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான் என்று நம்புவதும் நபிமார்களோ,வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய மாட்டார்கள் என்று நம்புவதும் ஈமானில் கட்டுப்பட்டதாகும்.
என்றாலும் அந்த நாள் சமீபமாகும் போது ஏற்படும் அடையாளங்கள் சிலவற்றை நமது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துச் சென்றுள்ளனர்.
அந்த அடையாளங்களில் சில சிறிய அடையாளங்களாகவும், சில பெரிய அடையாளங்களாகவும் அமைந்துள்ளன.
இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த பெரிய அடையாளங்களில் பிரதானமான சில அடையாளங்கள் உண்டு.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானில் இருந்து இறங்குதல். தஜ்ஜாலின் வருகை. யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியாகுதல், இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வருகை தந்து நீதியின் அடிப்படையில் ஆட்சி அமைத்தல் போன்றவையாகும்.
பெரிய அடையாளங்களில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையையும், இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையையும் அடிப்படையாகக் கொண்டு சிலர் இந்த உம்மத்தில் குழப்பம் விளைவித்து வந்திருக்கின்றனர். விளைவித்தும் வருகின்றனர்.
மறுமைநாளோடு தொடர்புடைய இந்த அடையாளங்கள் குறித்து நாம் அறிந்து வைத்திருப்பதும், அது குறித்த தெளிவுகளை நாம் பெற்றிருப்பதும் மிகவும் அவசியமாகும்.
குறிப்பாக, இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை விஷயத்தில் நாம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க கடமைப் பட்டுள்ளோம்.
ஏனெனில், இந்த உம்மத்தில் தாம் தான் மஹ்தி என்று தம்மை மஹ்தி என்று பிரகடனப்படுத்தி இந்த உம்மத்தில் பெருங்கூட்டத்தினரின் ஈமானை பாழ்படுத்திய பலர் உண்டு.
எப்போதெல்லாம் தம்மை மஹ்தி என்று இந்த உம்மத்தில் தம்மை சிலர் அடையாளப்படுத்தினார்களோ அப்போதெல்லாம் இந்த உம்மத்தில் பெரும் சலசலப்புகளும், பெரும் குழப்பங்களும் நிகழ்ந்துள்ளது என்பது தான் கடந்த காலத்தின் நிதர்சனமான வரலாறு.
ஒருவர் தம்மை மஹ்தி என்று அறிமுகம் செய்து புனித ஹரமான
கஅபத்துல்லாஹ்விலேயே ஆயுதம் தாங்கிய வன்முறையை நிகழ்த்தி பல மக்களின் இரத்தத்தை ஓட்டி பெரும் ஃபித்னாவுக்கு வழி வகுத்தார்.
இன்னொருவர் தம்மை ஆரம்பத்தில் மஹ்தியாக அறிமுகம் செய்து, பிறகு ஈஸா (அலை) வாக அடையாளப்படுத்தி பின்னர் தம்மை நபியாக பிரகடனப்படுத்தி இந்த உம்மத்தின் பெருங்கொண்ட கூட்டத்தை காதியானி எனும் பெயரில் வழிகெடுத்தான். மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்ற அவனை நம்பிய ஒரு கூட்டம் இன்றும் இந்த உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
ஆகவே, "எதிர் பார்க்கப்படுகிற அந்த மஹ்தி அலைஹிஸ்ஸலாம் யார்?" என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தற்போது தள்ளப்பட்டுள்ளோம்.
ஆம்! சென்னையில் இருந்து ஒருவர் தாம் பிற்காலத்தில் மஹ்தியாக அறிவிக்கப்படலாம் என்றும், தாம் தான் எதிர் பார்க்கப்படும் மஹ்தி என்றும் பிரகடனப்படுத்தி தம்மைச் சுற்றி ஒரு கூட்டத்தை உருவாக்கி வழி கெடுத்துக் கொண்டுள்ளார் எனும் செய்தியை அறிய முடிகிறது.
மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை உண்டா? இல்லையா?
மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் பல்வேறுபட்ட கருத்துக்களை தங்கள் கிரந்தங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஹம்பலி மத்ஹபின் பிரபலமான இமாம் முஹம்மத் பின் அஹ்மத் அஸ்ஸஃபாரீனி (ரஹ்) அவர்கள் " லவாமிஃ அல்அன்வாரில் பஹிய்யா " என்ற தங்களது நூலில் குறிப்பிட்டுள்ள கருத்து கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்தாகும்.
அதிகப்படியான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் & அனைத்து ஷீஆக்களின் அறிஞர்கள் ஆகியோரின் ஏகோபித்த கருத்து மறுமை நாளின் அடையாளத்தில் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையும் ஒன்று என்பதுதான்.
وقد
أنكر جماعة خروج المهدي محتجين بحديث "ولا مهدي إلا عيسى ابن مريم" وهو
حديث رواه ابن ماجه والحاكم، لكنه ضعيف كما جزم بذلك جماعة منهم.
எனினும், சில அறிஞர் பெருமக்கள் மர்யமின் குமாரரான ஈஸாவைத் தவிர மஹ்தீ என்பவர் யாருமில்லை என்ற இப்னு மாஜா, ஹாகிம் போன்ற கிரந்தங்களில் இடம் பெற்றிருக்கும் அறிவிப்பை வைத்து மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையை மறுக்கின்றனர், ஆனால் இந்த அறிவிப்பு பலவீனமானது என்று பல அறிஞர்கள் மறுத்துக் கூறுகின்றனர்.
وقد روي
عمن ذُكر من الصحابة وغير من ذُكر منهم رضي الله عنهم، بروايات متعددة، وعن
التابعين من بعدهم، ما يفيد مجموعه العلم القطعي ، فالإيمان بخروج المهدي واجب كما
هو مقرر عند أهل العلم ، ومدون في عقائد أهل السنة والجماعة" انتهى
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களிடம் இது நபித்தோழர்கள் வாயிலாகவும் அவர்களின் மாணவர்களின் (தாபிஈன்கள்) வாயிலாகவும் பெறப்பட்ட பல அறிவிப்புகளில் ஊடாக மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை உறுதியாகிறது. ஆகவே, அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையை ஏற்றுக்கொள்வது வாஜிபாகும்.
منها
خمسون حديثاً، فيها الصحيح والحسن والضعيف المنجبر،
மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருகை தொடர்பாக 50 நபிமொழிகள் ஹதீஸ் நூற்களில் இடம் பெற்றிருக்கிறது. அவைகளில் ஆதாரம் மிக்கது ஆதாரமற்றது, பலகீனமானது என்று பல தரங்களில் வந்திருக்கின்றன.
وهي
متواترة بلا شك ولا شبهة، بل يصدق وصف التواتر على ما هو دونها في جميع الاصطلاحات
المحررة في الأصول..." انتهى
அதில் பின் வரும் ஹதீஸ் உசூல் ஹதீஸின் அடிப்படையில் இது எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் தவாத்துரின் (அங்கீகாரத்தை) அந்தஸ்தை பெற்றிருக்கிறது.
وعن علي
رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : " المهدي منا أهل
البيت يصلحه الله في ليلة " . مسند أحمد 2/58 ح 645 تحقيق أحمد شاكر وقال :
إسناده صحيح وسنن ابن ماجه.
அலி (ரலி) அவர்கள் இறுதித்தூதர் ﷺ அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: மஹ்தீ நமது குடும்பத்தில் இருந்து தோன்றுவார் அவரை அல்லாஹ் ஒரே இரவில் தகுதி உடையவராக ஆக்கிவிடுவான். நூல் - முஸ்னத் அஹ்மத்-2/58 (அல்லாமா அஹ்மத் ஷாகிர் (ரஹ்) ஆதாரப்பூர்வமானது என்று சரி கண்டிருக்கிறார்கள் - நூல் ஸுனன் இப்னு மாஜா-2/1367 ஸஹீஹுல் ஜாமிஃ அஸ்ஸஹீர் -6735 )
١. أنه مِن
ولد فاطمة ابنة النبي صلى الله عليه وسلم ، ومِن ذرية الحسن بن علي رضي الله عنه ،
واسمه محمد بن عبد الله .
٢. أنه يخرج في آخر الزمان ، مصاحباً لنزول عيسى عليه السلام ،
ومقتل الدجال .
٣. أنه يملأ الأرض قسطاً وعدلاً ، كما
ملئت جوراً وظلماً .
٤. يمكث سبعاً ، أو ثمانياً من السنين ؛
وتكثر الخيرات في زمنه .
٥. ينصر الله به الإسلامَ ، والمسلمين ،
وتكون العزة في الأرض لأهل الإسلام .
٦. وَصَفَه النبي صلى الله عليه وسلم بأنه أَجْلَى الْجَبْهَةِ (
انحسار الشَّعر عن مقدّمة الجبهة ) ، أَقْنَى الأَنْفِ ( أي : أنفه طويل رقيق في
وسطه حدب).
٧ . يعتصم بالبيت الحرام ، ويغزوه جيشٌ يُخسف به بين مكة والمدينة
.
٨. وهو لا يدَّعي المهدية لنفسه ، وإنما
الناس يبايعونه لدلائل يرونها فيه .
٩. يصلي خلفه عيسى عليه السلام
.
وللوقوف
على بعض أحاديث المهدي، وعقيدة أهل السنة والجماعة
மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குறித்து ஒன்பது விஷயங்கள் நமக்கு மிகவும் முக்கியமான பகுதியாகும்.
இறுதித் தூதர் முஹம்மது நபி ஸல் அவர்களின் மகள் வழி குடும்பத்தில் தோன்றுவார்.
இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பெயரும் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயரும் ஒன்றாக இருக்கும்.
இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தந்தை பெயரும் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை பெயரும் ஒன்றாக இருக்கும்.
மஹ்தீ என்பவர் அவரது ஆட்சி பரந்து விரிந்து இருக்கும். அவரது ஆட்சியில் செல்வம் செழித்து ஓடும். நீதியும், நேர்மையும் கோலோச்சும் என்பது தான் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பாகும்.
தன்னை மஹ்தீ என்று அவர் சொல்ல மாட்டார். மாறாக, அன்றைய காலத்தின் மக்களால் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கஅபத்துல்லாஹ்வில் வைத்து பைஅத் செய்யப்படுவார்கள்.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பின்னால் நின்று தொழுவார்கள்.
المهدي
المُنْتَظَر صحيح، وسوف يقع في آخر الزمان، قرب خروج الدجال ونزول عيسى عند اختلاف
بين الناس، عند موت خليفة فيخرج المهدي، ويبايع ويقيم العدل في الناس سبع سنوات أو
تسع سنوات، وينزل في وقته عيسى ابن مريم، عليه الصلاة والسلام، هذا جاءت به أحاديث
كثيرة،
எதிர்பார்க்கப்பட்ட மஹ்தி அவர்களின் வருகை உண்மைதான். கியாமத் தினம் வருவதற்கான கால அடையாளங்கள் தோன்றும் சமயத்தில், தஜ்ஜால் தோன்றுவதற்கு அருகிலும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானில் இருந்து இறங்குவதற்கு அருகிலும், ஒரு கலீஃபாவின் மரணத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் போது, மஹ்தி வெளிப்படுவார். (ஒரு மனதுடன் இந்த உம்மத்தின் கலிஃபாவாக ஏற்கப்பட்டு) அவர் பைஅத் செய்யப்படுவார். ஏழு அல்லது ஒன்பது ஆண்டுகளாக, மக்களிடையே நீதியை நிலைநாட்ட பாடுபடுவார். மர்யமின் மகன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வர இருக்கின்ற காலத்தில், இவர் இறங்குவார். இதைத்தான் ஆதாரமான நபிமொழிகள் கூறுகின்றன.
حدثنا
أحمد بن إبراهيم ثنا عبد الله بن جعفر الرقي ثنا أبو المليح الحسن بن عمر عن زياد
بن بيان عن علي بن نفيل عن سعيد بن المسيب عن أم سلمة قالت : سمعت رسول الله صلى
الله عليه و سلم يقول ” المهدي من عترتي من ولد فاطمة ” ت / 6 م قال عبد الله بن
جعفر وسمعت أبا المليح يثني على علي بن نفيل ويذكر منه صلاحا . قال الشيخ الألباني
: صحيح سنن أبي داود [2 /509]
மஹ்தீ என்பவர் என் வழித்தோன்றலில் – ஃபாத்திமாவின் வழியில் வருவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : அபூதாவூத் )
حدثنا
مسدد أن عمر بن عبيد حدثهم ح وثنا محمد بن العلاء ثنا أبو بكر يعني ابن عياش ح
وثنا مسدد قال ثنا يحيى عن سفيان ح وثنا أحمد بن إبراهيم قال ثنا عبيد الله بن
موسى أخبرنا زائدة ح وثنا أحمد بن إبراهيم قال حدثني عبيد الله بن موسى عن فطر
المعنى واحد كلهم عن عاصم عن زر عن عبد الله : عن النبي صلى الله عليه و سلم قال ”
لو لم يبق من الدنيا إلا يوم ” قال زائدة في حديثه ” لطول الله ذلك اليوم ” ثم
اتفقوا ” حتى يبعث [ الله ] فيه رجلا مني ” أو ” من أهل بيتي يواطىء اسمه اسمي
واسم أبيه اسم أبي ” زاد في حديث فطر ” يملأ الأرض قسطا وعدلا كما ملئت ظلما وجورا
” وقال في حديث سفيان ” لا تذهب أو لاتنقضي الدنيا حتى يملك العرب رجل من أهل بيتي
يواطىء اسمه اسمي ” ت / 4 م قال أبو داود لفظ عمر وأبي بكر بمعنى سفيان . قال
الشيخ الألباني : حسن صحيح سنن أبي داود [2 /508]
பூமியின் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் மீதமாக இருந்தால் கூட அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான். அதில் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அல்லாஹ் அனுப்புவான். அவர் பெயரும், என் பெயரும் ஒன்றாக இருக்கும். அவரது தந்தையின் பெயரும், என் தந்தையின் பெயரும் ஒன்றாக இருக்கும். அநீதியால் நிரப்பப்பட்டுள்ள பூமி முழுவதும் நீதியால் அவர் நிரப்புவார் என்று இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : அபூதாவூத்
حدثنا
عبيد بن أسباط بن محمد القرشي الكوفي قال حدثني أبي حدثنا سفيان الثوري عن عاصم بن
بهدلة عن زر عن عبد الله قال : قال رسول الله صلى الله عليه و سلم لا تذهب الدنيا
حتى يملك العرب رجل من أهل بيتي يواطئ اسمه اسمي قال أبو عيسى وفي الباب عن علي و
أبي سعيد و أم سلمة و أبي هريرة وهذا حديث حسن صحيح هذا حديث حسن صحيح قال الشيخ
الألباني : حسن صحيح سنن الترمذي [4 /505]
அரபு தேசத்தை என் பெயருடையை என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : திர்மிதி
மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மஹ்தீ என்ற பெயரில் ஒரு மன்னர் வருவார் என்று முன்னறிவிப்புச் செய்கின்றன.
நமது காலத்தில் அப்படி ஒருவர் வந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிபு நிறைவேறி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அப்படி வராவிட்டால் எதிர்காலத்தில் அவர் வருவார் என்று கருதிக் கொள்ள வேண்டும்.
சென்னை சோழவரம் ஆங்காடு மஸ்ஜித் அல் ஃகைர் இமாம் & தலைவர், ஜைனுல் ஆபிதீன் ஸாஜிதா தம்பதியரின் மகனுமான யாக்கூப் மேற்கூறிய ஹதீஸ் அடிப்படையில் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) வழித் தோன்றல் இல்லை என்பதும், அவர்களின் தந்தை பெயர் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தந்தை பெயரைப் போலவே ஒன்றாக இல்லை என்பதும் தெளிவாகிறது.
மேலும், மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையோடு தம்மை இணைத்துக் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று நிரூபணமாகிறது.
மேலும், ஸஹீஹான ஹதீஸ்களை மறுத்து, இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வார்த்தையை திரித்துக் கூறி இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் ஹதீஸையே இட்டுக் கட்டிக் கூறுவதும் நிரூபணமாகிறது.
எனவே, யாக்கூப் என்பவர் பொய்யர் ஆவார். அவர் வழி கேட்டில் வீழ்ந்து விட்டார் என்பதை நாம் அறிய முடிகிறது.
மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் என்று தம்மை வாதிடுபவர்கள் யார்?
இப்படி தம்மை மஹ்தீயாக வாதிடுபவர்கள் குறித்து அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் ஃபத்வா என்ன? அவர்கள் குஃப்ரில் இருக்கின்றார்களா? என்பது குறித்து நாம் ஆராய்ந்தோம் என்றால் முதலாவதாக கடந்த நூற்றாண்டுகளில் இது போன்று தம்மை மஹ்தீயாக அறிவித்துக் கொண்டவர்கள் குறித்து அக்காலத்தின் மேன்மைமிகு அறிஞர் பெருமக்கள் யாரும் "காஃபிர்" என்று ஃபத்வா வழங்கவில்லை என்பதை பார்க்க முடிகிறது.
لا يجوز
الحكم عليهم بالكفر لمجرد ادعاء المهدية، فليس ذلك من أنواع الكفر الأكبر المخرج
من الملة، وهو خمسة أنواع: كفر التكذيب، وكفر الاستكبار، وكفر الإعراض، وكفر الشك،
وكفر النفاق،
தன்னை மஹ்தீ என்று வாதிடுபவரை மஹ்தீ என்று வாதிடுவதை மட்டுமே கவனத்தில் கொண்டு காஃபிர் என்று தீர்ப்பளிப்பது கூடாது. ஏனெனில், மார்க்கத்தை விட்டும் வெளியேற்றுகிற "குஃப்ருல் அக்பர்" பெரிய இறை நிராகரிப்பு எதையும் அவர் செய்யவில்லை.
أن
الكفر أنواع، وقد ذكرها أهل العلم في كتبهم، وبينوها، فمنها ما هو كفر أكبر، مخرج
من الملة، وهذا النوع عده ابن القيم -رحمه الله تعالى- في كتابه: "مدارج
السالكين" خمسة أقسام.
இமாம் இப்னுல் கைய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் தங்களது "மதாரிஜுஸ் ஸாலிக்கீன்" எனும் நூலில் குஃப்ரை (குஃப்ருல் அக்பரை) ஐந்து வகையாக பிரிக்கின்றார்கள். குஃப்ருல் அக்பர் என்பது ஐந்து வகையாகும். 1. குஃப்ருத் தக்தீப் - பொய்படுத்துவதன் மூலம் ஏற்படும் இறை நிராகரிப்பு, 2. குஃப்ருல் இஸ்திக்பார் - பெருமை கொள்வதன் மூலம் ஏற்படும் இறை நிராகரிப்பு, 3. குஃப்ருல் இஃராள் - புறக்கணிப்பதன் மூலம் ஏற்படும் இறை நிராகரிப்பு, 4. குஃப்ருஷ் ஷக் - சந்தேகிப்பதன் மூலம் ஏற்படும் இறை நிராகரிப்பு, 5. குஃப்ருன் நிஃபாக் - நயவஞ்சகத்தின் மூலம் ஏற்படும் இறை நிராகரிப்பு. மேற்கூறிய இந்த ஐந்து பெரும் இறைநிராகரிப்புக்குள் மஹ்தீ என்று வாதிடுவது வருவதில்லை. ஆகவே காஃபிர் என்று ஃபத்வா வழங்க இயலாது.
الأول:
كفر التكذيب، ودليله قوله تعالى: فَمَنْ أَظْلَمُ مِمَّنْ كَذَبَ عَلَى اللَّهِ
وَكَذَّبَ بِالصِّدْقِ إِذْ جَاءَهُ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوىً
لِلْكَافِرِينَ [الزمر:32].
எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்த போது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா? ( அல்குர்ஆன்: 39: 32 )
ومنها:
كفر الاستكبار، والإدبار مع التصديق، ودليله قوله تعالى: إِلَّا إِبْلِيسَ أَبَى
وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ [البقرة:34].
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். ( அல்குர்ஆன்: 2: 34 )
ومنها:
كفر الإعراض، ودليله قوله تعالى: وَالَّذِينَ كَفَرُوا عَمَّا أُنْذِرُوا
مُعْرِضُونَ [الاحقاف:3].
ஆனால் நிராகரிப்பவர்களோ, தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதைப் புறக்கணிப்பவர்களாக இருக்கிறார்கள். ( அல்குர்ஆன்: 46: 3 )
ومنها:
كفر الشك، ودليله قوله تعالى: وَدَخَلَ جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ لِنَفْسِهِ قَالَ
مَا أَظُنُّ أَنْ تَبِيدَ هَذِهِ أَبَدًا * وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً
وَلَئِنْ رُدِدْتُ إِلَى رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِنْهَا مُنْقَلَبًا* قَالَ
لَهُ صَاحِبُهُ وَهُوَ يُحَاوِرُهُ أَكَفَرْتَ بِالَّذِي خَلَقَكَ مِنْ تُرَابٍ
ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلًا [الكهف:35- 37].
(பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை” என்றும் கூறிக் கொண்டான்.
(நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்” என்றும் கூறினான்.
அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக: “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான். ( அல்குர்ஆன்: 18: 35-37 )
ومنها:
كفر النفاق، ودليله قوله تعالى: ذَلِكَ بِأَنَّهُمْ آمَنُوا ثُمَّ كَفَرُوا
فَطُبِعَ عَلَى قُلُوبِهِمْ فَهُمْ لا يَفْقَهُونَ [المنافقون:3].
இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும்; ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள். ( அல்குர்ஆன்: 63: 3 )
வன்முறைக் களமான கஅபத்துல்லாஹ்....
1979ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி, பஜ்ரு தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட்ட ஓர் அமைதியான நாள். கஃபதுல்லாஹ்வில் சாதாரண வழமையான நாளாகவே தொடங்குகின்றது. ஹறம் ஷரீபை நோக்கி மக்கள் கூட்டம் அலை அலையாகத் திரண்டு சுப்ஹு தொழுகைக்குத் தயாராகின்றனர். அது இஸ்லாமிய வரலாற்றின் கறை படிந்த கறுப்பு நாட்களுள் ஒன்றாக அமையப் போகின்றது என்பது தொழுகைக்காக அணி திரண்ட பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாள், ஹிஜ்ரி 1400 ஆரம்பிக்கின்ற முஹர்ரம் 1ம் நாளாகவும் அமைந்திருந்தது.
Sheikh Mohammed al-Subayil (ஷேக் முஹம்மத் அல் சுபையில்)எனும் இமாம் அவர்களினால் சுப்ஹு தொழுகை நடாத்தப்படுகின்றது. தொழுகை முடிவடைந்ததும், உடனடியாக, சில துப்பாக்கி வேட்டுக்கள் கேட்கின்றன. அதுவும், ஹறத்தின் உள்ளேயே கேட்கின்றது. முன்வரிசைப் புறத்திலிருந்து குழப்பமான ஓர் இரைச்சல் சத்தம் கேட்க ஆரம்பிக்கின்றது. அப்போது, Juhayman al-Otaybi (ஜுஹிமான் அல் உதைபி) எனும் நபர், இமாமிடமிருந்த ஒலிவாங்கியைப் பறித்தெடுக்கின்றார்.
இன்னும் சிலர் எழுந்து காவலுக்கு நிற்கின்றனர். அப்போது, ஒலிவாங்கியைப் பறித்த ஜுஹிமான் அல் உதைபி, அங்கு தொழுது விட்டு குழுமியிருந்த மக்களை நோக்கி பேச ஆரம்பிக்கின்றார். நாட்டிலுள்ள ஊழல் மற்றும் ஏனைய பாவச் செயல்களைப் பற்றி அவர் உரைக்கின்றார். உலக முடிவு நாளுக்குரிய ஏராளமான அடையாளங்கள் கண்முன்னே நிகழ்ந்தேறியும், நிகழ்ந்து முடிந்தும் இருப்பதை அவர் மக்களுக்குப் பறை சாற்றுகின்றார். மேலும், ஒவ்வொரு நூற்றாண்டுக்கொரு முறை, மார்க்கத்தை நல்வழிப்படுத்துவதற்காக ஓர் “முஜத்தித்” தோன்றுவார் என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருப்பதை நினைவு கூருகிறார்.
உலகம் நெறி பிறழ்ந்து, ஈனச்செயல்களிலும், பாவச்செயல்களிலும் மூழ்கியிருக்கும் போது மஹ்தி அலைஹிஸ்ஸலாம் தோன்றுவார் என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஹதீதையும் அவ்விடத்திலே அவர் ஞாபகமூட்டுகின்றார். இப்போது நாம் இருக்கும் கால கட்டம், நபி பெருமானார் கூறிய அந்தக் கால கட்டம் என அவர் நியாயிக்கின்றார். அதனைத் தொடர்ந்து ஒரு நபரை அவ்விடத்திற்கு எழுந்து வருமாறு அழைக்கின்றார்.
மக்களுக்கு அவரைக் காட்டி, இதோ, இவர்தான் அந்த மஹ்தி. அனைவரும் இவரிடத்திலே “பையத்” செய்து கொள்ளுங்கள் என்று வேண்டினார். இவருடைய பெயர் Mohammed Abdullah
al-Qahtani (முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் கஹ்தானி). ரசூலுல்லாஹ் கூறியது போல், இவருடைய பெயர் முஹம்மத். இவரின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ். இவரின் குலம் அல்-கஹ்தான் என்று சொல்லப்படுகின்ற குறைஷிக் குலத்திலிருந்து தோன்றுகின்ற குலம். இதோ இவர் ஹஜ்ருல் அஸ்வத் மற்றும் மகாமு இப்றாஹீம் ஆகியவற்றிற்கிடையே இருந்து தோன்றுகின்றார். மேலும், ஹிஜ்ரி 1400 முதலாம் நாளிலேயே உங்களிடத்தில் இவர் வந்திருக்கின்றார். ஆகவே, சந்தேகமின்றி இவர்தான் மஹ்தி. நாம் அனைவரும் இவரை ஏற்றுக் கொள்வோம் எனக் கூறினார். மக்களோ செய்வதறியாது திகைத்து நின்றனர். பலருக்கு அறபி மொழி தெரியாததன் காரணமாக எதுவுமே விளங்காத சூன்ய நிலையும் அங்கு தோன்றியது.
சிலர் அங்கிருந்த வெளியேற முற்பட்டனர். கதவுகள் அடைக்கப்பட்டு, அங்கு மக்களை வெளியேற விடாமல் ஆயுதம் தரித்த குழு ஒன்று நிற்பதும் அவதானிக்கப் பட்டது. மக்களிடையே பீதி பரவ ஆரம்பித்தது. அன்றிலிருந்து சுமார் ஒன்றரைக் கிழமைகள் (அண்ணளவாக 2 வாரங்கள்) புனித கஃபா அந்த ஆயுதம் தரித்த ஜுஹிமான் அல் உதைபியின் குழுவினரால் கைப்பற்றப் பட்டிருந்தது. மக்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டிருந்தனர். யாரும் உள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப் படவில்லை.
இவர்களால் கஃபா தடுத்து வைக்கப்பட்டிருந்த நாட்களில் தவாப், அதான், தொழுகை, ஸயீ என எவ்வித அமல்களும் இடம்பெறவில்லை. சவூதி அரசாங்கத்திற்கு ஆரம்பத்தில் எதுவுமே புரிந்திருக்கவில்லை. என்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்கு யாரையாவது அனுப்ப முயற்சித்தால் அவர்கள் கஃபாவின் மினாறாக்களில் இருந்த குறிபார்த்துச் சுடும் ஜுஹிமான் அல் உதைபியின் குழுக்களால் கொல்லப்பட்டனர். கஃபாவில் இரத்தம் சிந்தப்பட்டது. தொழுகை நடாத்திய இமாம் ஷேக் முஹம்மத் அல் சுபையில் அவர்களுக்கு இது கடும் போக்காளர் குழு ஒன்றின் வேலை என்பது புரிந்து விட்டது. பெண் ஒருவரின் ஹிஜாபை அணிந்து அவர் எப்படியோ தப்பித்து விட்டார். அரச தரப்பினருக்கு தகவல் அளித்த முக்கியஸ்தர்களுள் அவரும் ஒருவர்.
அரசாங்கம் எவ்வளவோ முயற்சித்தும் பலன் கிட்டவில்லை. மஹ்தியை ஏற்று, அரசாங்கம் தமது பதவிகளை இவர்களுக்குத் தரும் வரை விடமாட்டோம் என கடும் போக்காளர்கள் விடாப் பிடியாக நின்றனர். சுமார் 8 நாட்கள் கடந்த நிலையில் சவூதி அரசு படைகளை அனுப்ப முடிவு செய்தது. உண்மையான மஹ்தி இப்படி நடந்து கொள்ள மாட்டார் என சவூதியின் உலமாக்கள் குழு தீர்மானித்து யுத்தம் செய்வதற்கு பத்வா வழங்கியது. பொதுவாக யுத்தம் செய்வதற்கு தடுக்கப்பட்ட பிரதேசமாக ஹறம் ஷெரீப் அமைந்திருந்தாலும் இஸ்லாத்தைப் பாதுகாக்க வேண்டிய சூழலில் இது அனுமதிக்கப் பட்டிருந்தது.
மிகவும் திறமையான படைகளை அனுப்பி போராடி மீட்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. படைகள் சென்றன. மூடப்பட்டிருந்த
கதவுகளைத் தகர்த்து இராணுவம் உள் நுழைந்தது. அங்கே, ஜுஹிமான் அல் உதைபியின் படையினர்க்கு எதிராக யுத்தம் நடத்தப்பட்டது. கஃபாவின் உள்ளேயே இது நிகழ்ந்தது. கஃபாவின் அடித்தளத்தில் ஜுஹிமான் அல் உதைபியின் குழுக்கள் மறைந்திருந்து ராணுவத்தைத் தாக்கினர். அவர்கள் உணவுக்கென பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்திருந்தனர். தண்ணீரை ஸம் ஸம் கிணற்றிலிருந்து பெற்றனர். ஆயுதங்களை பஜ்ரு நேரம் ஜனாஸாக்கள் கொண்டுவரும் சந்தூக்குகளில் கொண்டு வந்திருந்தனர்.
யுத்தம் நிகழ்ந்தது. இரு தரப்பிலும் உயிர்கள் பறிக்கப் பட்டன. மஹ்தி என்று கூறப்பட்ட முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் கஹ்தானியும் இதில் கொல்லப்பட்டார். இவற்றிற்கெல்லாம் மூல காரணமாக இருந்த ஜுஹிமான் அல் உதைபி உயிருடன் பிடிபட்டார். அவருடன் சேர்த்து சுமார் 70 பேர் கைது செய்யப் பட்டனர். ஜுஹிமான் அல் உதைபி உட்பட பிடிபட்ட 70 பேரும் 3 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். ( நன்றி: ஜஃப்னா முஸ்லிம், 17/07/2013 )
எப்போது மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருகை தருவார்கள்?...
இப்னு மாஜாவில் உள்ள பலமான ஹதீத் ஒன்றின் பிரகாரம், முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள், கஃபதுல்லாஹ் பிரதேசத்தில் ஜுர்ஹும் கோத்திரத்தினரால் மறைக்கப்பட்ட புதையல் ஒன்றை எடுப்பதற்கு மூன்று இளவரசர்கள் யுத்தம் செய்து ஈற்றில் ஒருவரும் வெற்றி அடைய மாட்டார்கள். அப்போது, கிழக்கலிருந்து கறுப்புக் கொடிகள் (ஒரு படை) வரும். எந்த தேசமும் கண்டிராத கடுமையான போர் மூளும்.
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீத் ஒன்றின் பிரகாரம், கறுப்புக் கொடிகளைக் கண்டால், மஹ்தி (அலை) இருப்பார் (யாருடன் என்று குறிப்பிடப்படவில்லை) என்பதை உணர்ந்து கொள்ளுங்கள், தவழ்ந்தேனும் அவரிடம் சென்று பையத் செய்து கொள்ளுங்கள் என்று ரசூல் (ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதாவூது கிரந்தத்திலே இடம்பெற்றுள்ள பலமான ஒரு ஹதீதின் பிரகாரம், கலீபா ஒருவரின் மரணத்தைத் தொடர்ந்து ஓர் உள்நாட்டு யுத்தம் மூளும். அப்போது, எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மதீனாவிலிருந்து தப்பித்து பாதுகாப்புத் தேடி மக்காவிற்கு வருவார். அவர் மக்காவில் இருக்கும் சந்தர்ப்பத்தில், மக்கள் அவரைத் தேடிக் கண்டுபிடித்து, கட்டாயப்படுத்தி, கஃபாவில் வைத்து, ஹஜ்ருல் அஸ்வத் மற்றும் மகாமு இப்றாகீம் ஆகியவற்றிற்கிடையே பையத் செய்வார்கள்.
எனவே, இமாம் மஹ்தி (அலை), மதீனாவிலிருந்து மக்காவிற்கு வருவார்கள். கஃபாவில் இளவரசர்கள் புதையல் ஒன்றிற்காய் யுத்தம் செய்வார்கள். கிழக்கிலிருந்து கறுப்புக் கொடிகளுடன் ஓர் படை வரும். அப்போது மக்கள் இமாம் மஹ்தி (அலை) அவர்களைத் தேடிக் கொண்டுவந்து பலவந்தப்படுத்தி பையத் செய்து, இந்த யுத்தங்களுக்கு ஓர் தீர்வை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் இன்ஷா அல்லாஹ்.
எனவே, இமாம் மஹ்தி (அலை), தானாக முன்வந்து தன்னை மஹ்தி என்று அழைக்க மாட்டார். பதவியை, தலைமைத்துவத்தை விரும்ப மாட்டார். அவர், யுத்தம் நிறைந்த ஓர் சூழலில், மக்களால், அடையாளப்படுத்தப் படுவார். உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஓர் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று திரட்டுவார். அவருடைய ஆட்சி மிகவும் செழிப்பானதாக இருக்கும். எல்லோருக்கும் பணத்தினை அவர் வாரி வழங்குவார். விளைச்சல் பெருகிக் காணப்படும். எல்லோரும் தன்னிறைவோடு வாழ்வார்கள். அவரின் ஆட்சி ஏழு வருடங்களாகும். அந்த ஏழு வருடங்களும் செம்மையான ஆட்சி நிகழும்.
அப்போதுதான் தஜ்ஜாலின் வருகையும் நிகழும். ரசூல் (ஸல்) எதனைக் கொண்டு அதிகம் எச்சரித்தார்களோ, அது நிகழும். இமாம் மஹ்தி (அலை), தஜ்ஜாலை எதிர்த்துப் போரிடுவார்கள். அதற்காக, அவர் டமஸ்கஸில் படையுடன் சென்று ஓர் பஜ்ருத் தொழுகைக்கு தயாரகும் போது ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இரண்டு மலக்கு மார்களின் சிறகில் இறங்குவார்கள். தொழுகைக்காக இமாம் செய்ய தயாராக இருந்த மஹ்தி (அலை), ஈஸா (அலை) அவர்களை இமாம் செய்யுமாறு பணிப்பார்கள். அப்போது, ஈஸா (அலை) அவர்கள் மறுத்து விட்டு மஹ்தி (அலை) அவர்களைத் தொடர்ந்து இமாம் செய்யுமாறு பணித்துவிட்டு பின்னால் நின்று தொழுவார்கள்.
இந்த சம்பவத்திற்கு மேலதிகமாக, மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி எந்த ஆதாரபூர்வமான ஹதீதுகளும் அறிவிக்கப்படவில்லை. இதன் பின்னர் ஈஸா (அலை) அவர்களால் தஜ்ஜால் கொல்லப்படுவதும் ஏனைய நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, ஈஸா (அலை) அவர்கள் பூமிக்கு இறங்கி ஆட்சி செய்வதற்கு ஏற்ற வகையில் பூமியை சீராக்கி வைப்பது மஹ்தி (அலை) அவர்களின் காலத்திலாகும். ( நன்றி: ஜஃப்னா முஸ்லிம் 17/07/2013 )
ஆகவே, உலக அழிவின் சிறிய அடையாளங்களையும் பெரிய அடையாளங்களையும் இணைக்கும் பாலமாக அமையப் போகும் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வருகயை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் புரிந்து கொள்ளும் நஸீபைத் தந்தருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
Aameen .... Pugal anaithum allahvuke ......
ReplyDeleteNaam therinthu kolla kudiya nalla padipinaikal.
ReplyDelete