உலகின் மனசாட்சியை உலுக்கிய காஸா குழந்தை முஹம்மது ஜகரிய்யா புகைப்படம்!!
காஸாவில் நிலவும் மோசமான நிலை மற்றும் அங்குள்ள குழந்தைகள் பட்டினியில் வாடுவதைக் காட்டும் புகைப்படம் ஒன்று உலகையே உலுக்கியுள்ளது.
அந்தப் புகைப்படத்தை எடுத்த அகமது அல்-அரினி, அங்குள்ள குழந்தை குறித்தும் காஸாவில் நிலவும் சூழல் குறித்தும் பிபிசிக்கு பேட்டியளித்தார். அவர் கூறியது என்ன?
காஸாவிற்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜபாலியா அல் பலத் எனும் ஊரில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் ஒரு கூடாரத்தில் சென்று நான் ஒரு குழந்தையை படம் பிடித்தேன்.
அந்த கூடாரமே ஒரு கப்ர் - மண்ணறை போன்று தான் இருந்தது.
அந்த குழந்தையின் பெயர் முஹம்மது ஜகரிய்யா உடுத்த ஆடையில்லாமல் (கேரி பேக்) நெகிழியை அணிந்திருந்தது அந்தக் குழந்தை.
அந்தக் குழந்தையின் ஒட்டிய முதுகை, எழும்பும் தோலுமாய் இருக்கும் அதன் உடலமைப்பை நான் ஃபோட்டோ எடுக்கும் போது பல முறை செயலிழந்து போய் விட்டேன்.
அந்த குழந்தை முஹம்மது ஜகரிய்யா பசியால், உண்ண உணவில்லாமல், ஊட்டச்சத்து குறைபாட்டால் அப்படி காட்சி தந்தது". என்று. ( நன்றி: பிபிசி தமிழ், 27/07/2025 ) ( கூடுதல் விவரங்களுக்கு காண்க:- வீடியோ லிங்க் https://www.bbc.com/tamil/articles/cvgn48gv0ejo )
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள பொதுவான உணர்வு பசியாகும். பசியில்லாத, பசிக்காத உயிரினங்கள் உலகில் இல்லை எனலாம்.
பசியினால் பல உயிர்கள் நாள்தோறும் இவ்வுலகில் துன்புற்று உயிரிழந்த வண்ணம் இருக்கின்றன.
உணவில்லாததால் பசியேற்பட்டு பல்வேறு பிரச்சனைகள் உலகில் தோன்றிய வண்ணம் உள்ளன.
The Global Hunger Index (GHI) is
an annual report that tracks and measures hunger levels globally, regionally,
and nationally. It is calculated using a formula that combines four indicators:
The 2024 GHI report showed that
42 countries still face alarming or serious levels of hunger.
வாஷிங்டன் போஸ்ட் ரிப்போர்ட் வெளியிட்டுள்ள 2024 Food Policy Research
Institute (IFPRI) ரிப்போர்டில், "42 நாடுகளில் பசிக் கொடுமை ஒரு முக்கிய பிரச்சனையாக கண்டறியப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ( நன்றி: global hunger index 2025 )
உலக அளவில் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போதுமான உணவு கிடைக்காமல் துன்பப்படுகின்றனர்.
யுனிசெஃப் மற்றும் உலக உணவுத் திட்டம் போன்ற அமைப்புகளின் சமீபத்திய அறிக்கைகளின் அடிப்படையில் 2024ம் ஆண்டில், 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 295 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை அனுபவித்தனர். இது 2023ம் வருடத்துடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.
உலகில் 81 கோடி மக்கள் இன்னும் பட்டினியுடன் வாழ்கின்றனர். 79.1 கோடி மக்கள் அதாவது 98 சதவீதம் வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளனர்.உலகில் 10 பேரில் ஒருவர் பசியோடு ஓருவேளை உணவுக்கு கையேந்தி வாழ்கிறார்.
ஆசியபசிபிக் பிராந்தியத்தில் 52 கோடி மக்கள், ஆப்பிரிக்காவில் 3 கோடி மக்கள், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 4 கோடி மக்கள், வளர்ச்சியடைந்த நாடுகளில் 1.5 கோடி மக்கள் பட்டினியில் வாழ்கிறார்கள். உலகில் ஊட்டச்சத்துக்குறைவால் 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி அதிகரித்துள்ளதாக உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல் (Global hunger index list) தெரிவிக்கிறது. ( நன்றி: கல்கி ஆன்லைன், 28/05/2025 )
நாம் அன்றாடம் கடந்து செல்லும் பல்வேறு துன்பங்களை காட்டிலும் மிகக் கொடுமையானது தனி மனிதன் அனுபவிக்கும் பசிக் கொடுமையே ஆகும்.
அத்தகைய பசிக் கொடுமையை ஒரு நாட்டில் வாழும் பெரும்பாலான மக்கள் அனுபவித்து வருகின்றார்கள் எனும் போது அவர்களின் உடல்நிலை, மனநிலை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கு காஸா மக்களின் புகைப்படங்களே சாட்சியாக இருப்பதை நாம் அவதானிக்கலாம்.
வள்ளுவன் கூறுவான் ஒரு நாடு சிறந்த நாடு என்பதற்கான அடையாளம் என்பது "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு".
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.
சிறந்த நாடு என்பதற்கான இந்த மூன்று அடையாளங்களையும் நாம் வாழும் இந்த உலகில் முற்றிலுமாக இழந்து நிற்கும் ஒரு நாடு இருக்குமானால் அது ஃபலஸ்தீன் தான்.
2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது, ஹமாஸ் தலைமையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் காஸாவில் போரைத் தொடங்கியது, இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்வினை ஆற்றுகிறோம் எனும் பெயரில் இஸ்ரேல் தொடர்ந்து வரும் போரில் இது வரை காஸாவில் நிகழ்த்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல்களினால் "காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 59000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 137,656 பேர் காயமடைந்துள்ளனர்.
ஃபலஸ்தீனின் காஸா வின் தற்போதைய நிலை....
அம்னஸ்டி இன்டர்நேஷனல் உலக சபையில் உரையாற்றிய
ஐ.நா.
பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் "மே 27 முதல் உணவு பெற முயன்றபோது 1,054-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF), ஐ.நா. தலைமையிலான அமைப்புக்கு பதிலாக உதவி பொருட்கள் விநியோகம் தொடங்கிய பின்னர் நடந்ததாகவும் தெரிவித்தார்.
இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபையின் சரக்குந்துகளை (ட்ரக்குகளை) அனுமதிக்கத் தவறினால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவில் பசியின் கொடுமையால் மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கை 14,000-ஐத் தாண்டிவிடும்.
இது ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உயர் அதிகாரி டாம் ஃபிளெட்சர் கடந்த 20/07/2025 அன்று விடுத்திருக்கும் எச்சரிக்கையாகும்.
காஸாவில் உள்ள குழந்தைகளின் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்குப் பாலூட்டக்கூட முடியாத நிலையில் இருக்கிறார்கள்... ஏனெனில், அவர்களுக்கே போதுமான ஊட்டச்சத்து இல்லை.
"தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு இந்த குழந்தைகளின் உணவை கொண்டு சேர்ப்பதற்காக நாங்கள் அனைத்து விதமான அபாயங்களையும் எதிர்கொள்கிறோம்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பிபிசியிடம் மேலும் தெரிவித்தார்.
பிபிசியை மேற்கோள்காட்டி ஃபிளெட்சர் கூறியது, "அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த 14,000 குழந்தைகளில் இயன்றவரை பல உயிர்களைக் காப்பாற்ற நான் விரும்புகிறேன்" என்பதே.
நூற்றுக்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சரக்குந்துகள் நிவாரணப் பொருட்களுடன் காஸாவின் எல்லையில் காத்திருக்கின்றன.
குறைந்தபட்சம் நூறு சரக்குந்துகளாவது உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
இஸ்ரேல் காசாவை குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாற்றுகிறது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா, அமைப்பின் தலைவர் பிலிப் லசரினி தெரிவித்துள்ளார்.
காசாவில் பசிக் கொடுமை எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது என்றும் கடந்த இரண்டு மாதங்களில் காசாவின் உணவு விநியோக மய்யங்களில் 798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அய்.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில் 615 பேர் இஸ்ரேல் மற்றும் அமெ ரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளையின் விநியோக மய்யத்தில் கொல்லப்பட்டனர்" என்றும் அவர் கூறினார்.
ஐ. நா, உலக உணவுத் திட்டத்தின்படி, இஸ்ரேலிய தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், காசாவில் சுமார் 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது.
காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறுகையில்,
"உணவு தேடி வரும் மக்களை குறி வைத்துக் கொள்வதில் எந்த நியாயமும் இல்லை. உணவு விநியோக மையங்களில் கொலை செய்வதை (காண்ட்ராக்டர் கில்லர்ஸ்) நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மில்லியன் கணக்கான மக்கள் பசி, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, நோய் மற்றும் இறப்பு போன்ற பேரழிவு சூழ்நிலையில் உள்ளனர். இது உலகின் மிக மோசமான பசி நெருக்கடிகளில் ஒன்றாகும்.
அங்கு ஊட்டச்சத்து குறைபாடும் நோய்களும் ஒன்றையொன்று தூண்டிவிடுகின்றன. அன்றாட நோயே மரண தண்டனையாக மாறி வருகின்றது.
ஒரு வருடத்திற்கும் குறைவான 71000/ குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகி விடுகிறது. ( நன்றி: பிபிசி, 25/07/2025, jaffnamuslim.com 20/07/2025,
விடுதலை,
13/07/2025, )
அடுத்த சோமாலியாவாக ஃபலஸ்தீனம் உருவாகுதில் இருந்து உலக நாடுகள் தான் ஃபலஸ்தீனை காக்க வேண்டும்.
குரல் கொடுப்பதும், உதவி புரிவதும்.....
இஸ்ரேலின் நட்பு நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், "உடனடியாக காஸாவிற்குள் உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் நீக்க வேண்டும்" என்று வெள்ளிக்கிழமையன்று வலியுறுத்தின.
"காஸாவில் நடைபெற்று வரும் மனிதாபிமான பேரழிவையும்", போரையும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்கள் கூட்டு அறிக்கையில் வலியுறுத்தினர்.
மேலும், இஸ்ரேல் "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தனது கடமைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என்றும் கூறியுள்ளனர்.
"பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய உதவிகளை தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ( நன்றி: பிபிசி தமிழ், 23/07/2025 )
பொதுவாக அநீதிக்கு உள்ளாக்கப்படுகிற ஒரு தனிமனிதனையோ, ஒரு குழுவையோ, ஒரு ஊராரையோ, ஒரு சமூகத்தையோ காணும் போது அநீதிக்கு உள்ளாக்கப்படுபவரை பாதுகாக்க குரல் கொடுப்பதும், உதவி புரிவதும் உயர்ந்த செயலாக இஸ்லாம் கூறுகிறது.
கடந்த காலங்களில் அப்படி குரல் கொடுத்தவர்களையும், உதவி புரிந்தவர்களையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் அடையாளப்படுத்த தவறவில்லை.
மூஸா (அலை) அவர்களின் வாழ்க்கையில்...
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக ஒலித்த ஒரு குரலையும், உதவி செய்த ஒருவரையும் அல்லாஹ் அடையாளப்படுத்துகிறான்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு உதவப் போய் அதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக ஆக்கப்பட்ட போது...
وَجَآءَ
رَجُلٌ مِّنْ اَقْصَا الْمَدِيْنَةِ يَسْعٰى قَالَ يٰمُوْسٰٓى اِنَّ الْمَلَاَ
يَاْتَمِرُوْنَ بِكَ لِيَـقْتُلُوْكَ فَاخْرُجْ اِنِّىْ لَـكَ مِنَ النّٰصِحِيْنَ
பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நாம் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார்.
(அல்குர்ஆன்: 28: 20 )
ஃபிர்அவ்ன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொலை செய்ய முடிவெடுத்து தமது அபிப்பிராயத்தை தமது அவைப் பிரதானிகளிடமும், தம் மக்களிடமும் அறிவித்த போது...
وَقَالَ
فِرْعَوْنُ ذَرُوْنِىْۤ اَقْتُلْ مُوْسٰى وَلْيَدْعُ رَبَّهٗ اِنِّىْۤ اَخَافُ
اَنْ يُّبَدِّلَ دِيْنَكُمْ اَوْ اَنْ يُّظْهِرَ فِى الْاَرْضِ الْفَسَادَ
மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று. ( அல்குர்ஆன்: 40: 26 )
وَقَالَ
رَجُلٌ مُّؤْمِنٌ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَكْتُمُ اِيْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ
رَجُلًا اَنْ يَّقُوْلَ رَبِّىَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَيِّنٰتِ مِنْ
رَّبِّكُمْ وَاِنْ يَّكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهٗ وَاِنْ يَّكُ صَادِقًا
يُّصِبْكُمْ بَعْضُ الَّذِىْ يَعِدُكُمْ اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ
مُسْرِفٌ كَذَّابٌ
ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.” ( அல்குர்ஆன்: 40: 28 )
அல்லாஹ் ஒரு ஊர் மக்களுக்கு ஒன்றுக்கு மூன்று இறைத்தூதர்களை அனுப்ப அந்த மக்களை நேர்வழியில் கொண்டு வரும் பணியில் அந்த இறைத்தூதர்கள் ஈடுபட்டிருக்கும் போது அந்த மக்கள் அந்த இறைத்தூதர்களை பொய் படுத்தியதோடு கொலை செய்யவும் முனைந்தனர்.
قَالُـوْۤا
اِنَّا تَطَيَّرْنَا بِكُمْۚ لَٮِٕنْ لَّمْ تَنْتَهُوْا لَنَرْجُمَنَّكُمْ
وَلَيَمَسَّنَّكُمْ مِّنَّا عَذَابٌ اَلِيْم
(அதற்கு அம்மக்கள்:) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்; நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக் கல்லாலடிப்போம்; மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும் பிடித்துக் கொள்ளும்.” ( அல்குர்ஆன்: 36: 18 )
இந்தச் செய்தியை கேள்வி பட்ட அந்த சமூகத்தில் ஒருவர் ஓடோடி வந்து...
وَجَآءَ
مِنْ اَقْصَا الْمَدِيْنَةِ رَجُلٌ يَّسْعٰى قَالَ يٰقَوْمِ اتَّبِعُوا
الْمُرْسَلِيْنَۙ
(அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); “என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.
اتَّبِعُوْا
مَنْ لَّا يَسْــٴَــلُكُمْ اَجْرًا وَّهُمْ مُّهْتَدُوْنَ
“உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் அவர் கூறினார்). ( அல்குர்ஆன்: 36: 20,21 )
"நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?”
பசியை ஆயுதமாகப் பயன்படுத்தி இஸ்ரேல் காசாவில் இனப் படுகொலை செய்து வருவதாக கடுமையான விமர்சனம் எழுந்துள்ள நிலையில்.....
"சர்வதேச சமூகத்தில் பலர் காட்டும் அலட்சியம், இரக்கமின்மை, உண்மையின்மை, மனிதாபிமானமின்மை ஆகியவற்றை விளக்க முடியவில்லை" என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்.
அநீதம் இழைப்பவர்களோடு இணைந்து அநீதம் செய்வோராய் வாழும் மக்களை நோக்கி அல்குர்ஆன் விளித்துக் கூறும்"சொல்லாடல்" மிகவும் வலிமையானது.
லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தில் நிலவிய ஓரினச்சேர்க்கை எனும் வரம்பு மீறிய செயலால் மிகவும் மன வருத்தத்திற்கு உள்ளான லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களுடைய சமூக மக்களை நோக்கி கேட்ட அந்த வார்த்தையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் அப்படியே இடம் பெறச் செய்துள்ளான்.
اَلَيْسَ
مِنْكُمْ رَجُلٌ رَّشِيْدٌ
"நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.
57 இஸ்லாமிய நாடுகளைக் கொண்ட ஓஐசி ( Organisation of Islamic
Cooperation ) யில் துணிவோடு இஸ்ரேலைக் கண்டித்து, காஸா மக்களின் துயர் துடைக்க தமது முழு பலத்தையும் பிரயோகித்து "அவர்களின் பசி நீக்க" நடவடிக்கை எடுக்க ஒரு நாடு கூட இல்லையே எனும் போது உள்ளபடியே மனம் கனக்கிறது.
இத்தனைக்கும் இதில் 48 நாடுகள் தனி மெஜாரிட்டி (முழுக்க இஸ்லாமியர்கள்) கொண்ட நாடுகள்.
பசித்தவர்களுக்கு உணவளிப்பது, உணவளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் உயர்வுகள், உணவளிக்குமாறு தூண்டுவது குறித்த இஸ்லாமிய வழிகாட்டல்களை அறிந்து வைத்துக் கொண்டு பசியால் இறந்து கொண்டிருக்கும் அந்த மக்களை காப்பாற்ற ஆர்ப்பரித்து எழாமல் மௌனம் சாதிப்பது தான் வேதனையாக இருக்கிறது.
உணவுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட போதும், அதில் குழந்தைகளும் பெண்களும் அடங்குவர் என்று தெரிந்த பிறகும் கூட "இஸ்லாமிய கூட்டமைப்பு" நாடுகளின் மௌனம் சந்தேகிக்க வைக்கிறது.
தமக்கும், தமது சமூகத்திற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து கடும் நெருக்கடியை மக்கா வாழ்க்கையில் அளித்து வந்த ஒரு சமூகம் உண்ண உணவின்றி எலும்பும் தோலுமாய் மாநபி ஸல் அவர்களின் முன்பாக வந்து நின்ற போது மாநபி ஸல் அவர்கள் நடந்து கொண்ட மனிதாபிமான, மனித நேய பண்பை இவர்கள் ஒரு முறையாவது படித்துப் பார்க்க வேண்டும்.
عن جرير
بن عبد الله البجلي قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِي
النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ مِنْ مُضَرَ،
بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ الله صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ، فَدَخَلَ ثُمَّ خَرَجَ،
فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ: {يَا
أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ}
النساء: 1 إِلَى آخِرِ الْآيَةِ،
{إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} النساء: 1 وَالْآيَةَ
الَّتِي فِي الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ
وَاتَّقُوا اللهَ} الحشر: 18 «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ،
مِنْ ثَوْبِهِ، مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ - حَتَّى قَالَ - وَلَوْ
بِشِقِّ تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ
كَفُّهُ تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ،
حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ
رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ
مُذْهَبَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ
فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا
بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي
الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ
بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “”(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு சபையில் அமர்ந்திருந்தோம்.
அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் ( கழுத்துகளில் ) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அல்லது, அவர்களில் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.
அவர்களது வறிய நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ( ஒருவித பதட்டத்தோடு ) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களிடம் பாங்கு சொல்லுமாறு உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரையொன்றை நிகழ்த்தினார்கள்.
அப்போது, “மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்.
பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப் படுத்தி உலகில்) பரவச் செய்தான், ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்” என்கிற (4 –ஆம் அத்தியாயத்தின் 1 –ஆவது ) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்.
பின்னர், ‘அல் ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள ”இறைநம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக் கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’ எனும் ( 59 –ஆம் அத்தியாயத்தின் 18 –ஆவது ) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.
அப்போது ”( உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு ‘ஸாஉ’ கோதுமை, ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்” என்றும் ”பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்” என்றும் வலியுறுத்திக் கூறினார்கள்.
உடனே ( நபித்தோழர்கள் ) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை ( நிறைய பொருட்களைக் ) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது, பின்னர் தொடர்ந்து மக்கள் ( தங்களின் தர்மப் பொருட்களுடன் ) வந்துகொண்டிருந்தனர்.
இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று இலங்கிக் கொண்டிருப்பதை நான் கண்டேன்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு, அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது.
அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் அ(தன்படி செயல்பட்ட) வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு” என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
இத்தனைக்கும் இந்த முளர் கூட்டத்தினர் அப்போது இஸ்லாத்தை தழுவி இருக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் மக்காவின் மாநபி ஸல் அவர்களின் 13 ஆண்டு கால வாழ்க்கையில் மாநபி ஸல் அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும்
பெரும் அநீதியை இழைத்தவர்கள்.
இவர்களது அநீதியான செயலுக்காக மாநபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் பஞ்சத்தை ஏற்படுத்துமாறு பிரார்த்தித்த கூட்டத்தார்களில் இந்த கூட்டத்தினரும் உண்டு.
عن أبي
هريرة رضي الله عنه أنَّ النبيَّ صلى الله عليه وسلم كان إذا رفع رأسه من الركعة
الآخِرة،
قَالَ:
قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى صَلاَةِ الفجر شَهْرًا، يَقُولُ
فِى قُنُوتِهِ: "اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ
أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِى
رَبِيعَةَ... اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ"،يقول:
«اللهمَّ أَنْجِ عَيَّاش بن أبي ربيعة، اللهمَّ أَنْجِ سَلَمَة بنَ هشام، اللهم
أَنْجِ الوليد بن الوليد، اللهم أَنْجِ المستضعفين من المؤمنين، اللهمَّ اشْدُدْ
وَطْأَتَك على مُضَر، اللهمَّ اجعلها سنين كسِنِي يوسف».
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் சோதனைக் காலப்பிராத்தனை) ஓதினார்கள். அவர்கள் "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" என்று கூறியதும் பின்வருமாறு குனூத் ஓதுவார்கள்:
“இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப் பட்டவர்களை நீ காப்பாற்றுவாயாக!
இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!
தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “இதன் பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான் பார்த்தேன்.
உடனே நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஒடுக்கப்பட்ட) மக்களுக்காகப் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதாகக் கருதுகிறேன்" என்றேன். அப்போது, "(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள் (மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்கப்பட்டது.
மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ( நூல்: புகாரி, முஸ்லிம் )
ஒதுங்கி நிற்பதன் ஆபத்துகளும்… வேடிக்கை பார்ப்பதன் விபரீதங்களும்…
காஸா மக்களின் துயர் துடைக்கும் பணியில் பங்கெடுக்காமலும், யாருக்கோ, எங்கேயோ ஏதோ நடக்கிறது என்கிற தொனியில் அலட்சியமாக இருப்பவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
عن أبي
ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: من لم يهتم بأمر المسلمين فليس
منهم
أخرجه
الطبراني في "المعجم الأوسط" (1/29)
“முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களில் யார் ஒதுங்கி இருக்கின்றார்களோ, கவலைப் படாமல் இருக்கின்றார்களோ அவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்களே அல்லர்” என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: தப்ரானீ )
தபூக் யுத்தத்திற்கு வராமல் ஊரிலேயே தங்கி விட்டவர்களின் நிலைமை, அவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார நெருக்கடி, அவர்களின் மன்னிப்பு என பேசி வந்த இறைவன் தொடர்ந்து அவர்களின் செயல் குறித்து ஆதங்கத்துடன் பதிவு செய்வதை அவ்வளவு எளிதாக ஒரு முஃமின் கடந்து போய்விட முடியாது.
مَا
كَانَ لِاَهْلِ الْمَدِيْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ
يَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَ لَا يَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ
نَّـفْسِهٖ ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ لَا يُصِيْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا
مَخْمَصَةٌ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَطَــٴُـــوْنَ مَوْطِئًا يَّغِيْظُ
الْكُفَّارَ وَلَا يَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّيْلاً اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ
عَمَلٌ صَالِحٌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَۙ
மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல;
ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
وَلَا
يُنْفِقُوْنَ نَفَقَةً صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً وَّلَا يَقْطَعُوْنَ وَادِيًا
اِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப் பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை; அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான். ( அல்குர்ஆன்: 9: 120 )
பசி பற்றி அல்குர்ஆன்....
1.சோதனை என்கிறது அல்குர்ஆன்...
وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ
مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! ( அல்குர்ஆன்: 2: 155 )
2.தண்டனை என்கிறது அல்குர்ஆன்...
وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَٮِٕنَّةً
يَّاْتِيْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ
اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُـوْعِ وَالْخَـوْفِ بِمَا كَانُوْا
يَصْنَعُوْنَ
மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான். ( அல்குர்ஆன்: 16: 112 )
சோதனையாக இருந்தாலும் தண்டனையாக இருந்தாலும் சரி பசியால் ஏற்படும் எதையும் அல்லாஹ் நமக்கோ, நம் குடும்பத்தினருக்கோ, நம் சமூகத்திற்கோ தராமல் இருக்க நாம் ஆதரவு வைக்க வேண்டும்.
ஏனெனில், முன் சென்ற காலத்தில் வாழ்ந்த ஒரு நபியின் சமூகத்திற்கு அல்லாஹ் பசியின் (சோதனை) மூலம் உம்மத்தின் எண்ணிக்கையை குறைக்க விரும்பிய போது அந்த நபி அல்லாஹ்விடம்...
قال:
«إن نبيا فيمن كان قبلكم أعجبته كثرة أمته، فقال: لن يروم هؤلاء شيء فأوحى
الله إليه: أن خير أمتك بين إحدى ثلاث: إما أن نسلط عليهم عدوا من غيرهم
فيستبيحهم، أو الجوع، وإما أن أرسل عليهم الموت، فشاورهم، فقالوا: أما العدو، فلا
طاقة لنا بهم، وأما الجوع فلا صبر لنا عليه، ولكن الموت، فأرسل عليهم الموت، فمات
منهم في ثلاثة أيام سبعون ألفا»
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ”தோழர்களே! நமக்கு முன்னர் வாழ்ந்த ஒரு நபி, தமது சமுதாயம் பெரும்பான்மை பலத்துடனும், எவராலும் எளிதில் வீழ்த்திட முடியாத ஆற்றலுடனும் வாழ்ந்து வருவதை நினைத்து பெருமிதம் கொண்டார்.
இந்த பெருமிதம் மிகவும் ஆபத்தானது என்பதை அந்த நபிக்கு அறிவுறுத்திட நினைத்த வல்ல ரஹ்மான் அந்த நபியிடத்தில் “நபியே! உமது சமுதாயம், உம்முடைய பெருமிதத்தால் பெரும்பான்மை பலத்தை இழக்கும் அபாயகரமான ஓர் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
அவர்களின் பெரும்பான்மை பலத்தை குறைத்திடுவதற்காக பின் வருகிற மூன்று முடிவுகளில் ஏதேனும் ஒன்றை நீரும், உம் சமூக மக்களும் தேர்ந்தெடுத்து நம்மிடம் தெரிவிக்க வேண்டும்.
1. பலமான எதிரிகளை அவர்களின் மீது நான் சாட்டுவதன் மூலம் அவர்களின் எண்ணிக்கையை குறைத்திடுவேன். 2. பசி, பஞ்சம், பட்டினி போன்றவைகளை அவர்களின் மீது சாட்டி சோதித்திடுவேன். 3. இவ்விரண்டுமின்றி இயற்கையான மரணத்தின் மூலம் உம் சமூகத்தின் எண்ணிக்கையை குறைத்திடுவேன்.
இம்மூன்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பீராக! என்று வஹீ மூலம் அறிவித்தான்.
இறைச் செய்தியை பெற்றுக் கொண்ட அந்த நபி தம் சமூகத்தார்களை ஒன்றிணைத்து நடந்த சம்பவங்களை விளக்கிக் கூறி, இது இறைவனின் கட்டளை மூன்றில் எதை நீங்கள் தேர்வு செய்கின்றீர்கள்” என்று கேட்டார்.
அதற்கு அம்மக்கள் “நீங்கள் தான் அல்லாஹ்வின் தூதராய் இருக்கின்றீர்கள்! எங்களின் வாழ்விற்கு எது சிறந்த முடிவாக இருக்கும் என்பதை தாங்களே நன்கு அறிவீர்கள். ஆகவே, நீங்கள் தேர்ந்தெடுக்கிற எந்த முடிவாக இருந்தாலும் நாங்கள் முழு மனதோடு, விரும்பி ஏற்றுக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
உடனடியாக, அந்த இறைத்தூதர் தொழுகையில் ஈடுபட்டார். நீண்ட நேரம் அந்த இறைத்தூதர் தொழுகையில் ஈடுபட்டார். ஏனெனில், அந்த சமூகத்திற்க்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக தொழுகையில் ஈடுபடுவார்கள்.
தொழுது முடித்ததும் அல்லாஹ் அவருக்கு தெளிவான முடிவெடுக்கும் ஆற்றலை வழங்கினான்.
தாம் தெரிவு செய்திருக்கிற அந்த முடிவை அல்லாஹ்வின் சன்னிதானத்தில் முறையிட்டார்!
என் இறைவனே! என் உம்மத்தினரின் மீது பலம் வாய்ந்த எதிரிகளை நீ சாட்டி விடாதே! என் சமூக மக்களுக்கு அதை எதிர் கொள்ள சக்தி பெற மாட்டார்கள்.
என் இறைவனே! என் உம்மத்தினரின் மீது பசி, பட்டினி, பஞ்சம் போன்றவற்றை சாட்டிவிடாதே! அவர்கள் பொறுமையோடு அதை எதிர் கொள்ள அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்.
என் இறைவனே! இயற்கையான மரணத்தையே என் சமூக மக்களுக்கு வழங்கி விடு! அது தான் கௌரவமாகவும், சிறந்ததாகவும் இருக்கும் என நான் கருதுகின்றேன். அதையே நாங்கள் தேர்ந்தெடுக்கின்றோம்” என்று துஆ செய்தார்.
உடனடியாக, அல்லாஹ் அந்த துஆவை கபூல் செய்தான். ஆம்! அன்றைய நாளிலேயே அந்த சமூகத்தின் எழுபதினாயிரம் மக்கள் இறந்து போனார்கள்” என்று கூறிய அண்ணலார் இந்தச் செய்தியை அல்லாஹ் எனக்கு அறிவித்துக் கொடுத்தான்.
ஆகவே, நம்மை பொறுமை இழக்கச் செய்யும், நம் இறை நம்பிக்கையை உரசிப் பார்க்கும் பசியின் மூலம் ஏற்படும் சோதனை மற்றும் தண்டனையில் இருந்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
பசித்தோருக்கு உணவளித்தல் இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்!
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا : أَنَّ
رَجُلاً سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ
تُطْعِمُ الطَّعَامَ وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ ، وَمَنْ لَمْ
تَعْرِفْ
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது? ’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ( நூல்: புகாரி )
عَنْ
أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم :إِنَّ اللَّهَ
عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ
تَعُدْنِى. قَالَ يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ. قَالَ
أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِى فُلاَنًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ
أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِى عِنْدَهُ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ
فَلَمْ تُطْعِمْنِى. قَالَ يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ
الْعَالَمِينَ. قَالَ أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِى فُلاَنٌ
فَلَمْ تُطْعِمْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ
عِنْدِى يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِى. قَالَ يَا رَبِّ
كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ اسْتَسْقَاكَ عَبْدِى
فُلاَنٌ فَلَمْ تَسْقِهِ أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِى
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), “ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்த போது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?” என்று கேட்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
மேலும் “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: முஸ்லிம் )
பசித்தோருக்கு உணவளிக்க மறுப்பது இறை நிராகரிப்பார்கள் பண்பு என அல்லாஹ் எச்சரிக்கிறான். இந்தப் பண்பு முஸ்லிம்களாகிய நமது வாழ்க்கையில் வராமல் இருப்பதற்கு அதிகக் கவனத்தோடு வாழ்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.
وَاِذَا
قِيْلَ لَهُمْ اَنْفِقُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا
لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنُطْعِمُ مَنْ لَّوْ يَشَآءُ اللّٰهُ اَطْعَمَهٗ
اِنْ اَنْـتُمْ اِلَّا فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! என்று அவர்களிடம் கூறப்படும் போது “(இல்லாதவருக்கு) நாங்கள் உணவளிக்க வேண்டுமா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு உணவளித்திருப்பானே! தெளிவான வழிகேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (ஏக இறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர். ( அல்குர்ஆன்: 36: 47 )
குற்றப்பரிகாரமும் (கஃப்ஃபாரா) - ஏழைகளுக்கு உணவளிப்பதும்
ஒருவர் தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அல்லாஹுவிடத்தில் உண்மையான தவ்பா செய்வதுடன், சில பாவங்களுக்கு குற்றப்பரிகாரத்தையும் வழங்க வேண்டும்.
குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா) என்பது, பாவம் செய்த ஒருவரின் பாவத்தை தர்மம், தொழுகை இன்னும் அவைகள் போன்றதைக் கொண்டு பரிகாரம் தேடுவதாகும். குற்றப்பரிகாரம், பாவம் செய்தவரின் பாவத்தை போக்குவதால், அதற்கு குற்றப்பரிகாரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்தக் குற்றப் பரிகாரத்தில் ஏழைகளுக்கு உணவளிப்பதும் ஒன்றாகும்.
1) ரமளான் மாத நோன்பை நோற்ற நிலையில் மனைவியுடன் உடலுறவு கொண்டவரின் பரிகாரம்
ரமளான் நோன்பை நோற்ற நிலையில் தன் மனைவியுடன் உடலுறவு கொண்டால் பின்வரும் பரிகாரங்களில் ஒன்றை முறைப்படி கொடுக்க வேண்டும்.
அ. ஒரு அடிமையை உரிமை இட வேண்டும், அதற்கு முடியாவிட்டால்.
ஆ. இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும், அதற்கும் முடியா விட்டால்
இ. அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
أَنَّ
أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
بَيْنَمَا
نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ
يَا رَسُولَ اللهِ هَلَكْتُ قَالَ مَا لَكَ قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي
وَأَنَا صَائِمٌ ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم هَلْ تَجِدُ رَقَبَةً
تُعْتِقُهَا قَالَ : لاََ ، قَالَ : فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ
مُتَتَابِعَيْنِ قَالَ : لاََ فَقَالَ : فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ
مِسْكِينًا قَالَ : لاََ قَالَ فَمَكَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَبَيْنَا
نَحْنُ عَلَى ذَلِكَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَرَقٍ فِيهَا تَمْرٌ
– وَالْعَرَقُ الْمِكْتَلُ- قَالَ أَيْنَ السَّائِلُ فَقَالَ أَنَا قَالَ خُذْهَا
فَتَصَدَّقْ بِهِ فَقَالَ الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللهِ
فَوَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا – يُرِيدُ الْحَرَّتَيْنِ – أَهْلُ بَيْتٍ
أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى
بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ أَطْعِمْهُ أَهْلَكَ
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சபையில் இருந்தோம். அப்போது, ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் என்றார். உம்மை அழித்தது எது என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ரமளானின் (பகல் நேரத்தில்) என் மனைவியுடன் உடல் உறவு கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ஒரு அடிமையை உரிமையிடுங்கள் என்றார்கள், அதற்கு எனக்கு சக்தி இல்லை என்றேன். இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோருங்கள் என்றார்கள், அதை என்னால் தாங்கி கொள்ள முடியாது என்றேன், அறுபது மிஸ்கீன்களுக்கு உணவளியுங்கள் என்றார்கள், அதற்கு எனக்கு சக்தி இல்லை என்றேன், உட்காரு என்றார்கள் அவரும் உட்கார்ந்து விட்டார். அவ்வாறு அவர் உட்கார்ந்து இருக்கும் போதே அரக் என்று அழைக்கப்படும் (பேரீத்தம்பழ) கூடை (நபி – ஸல் – அவர்களிடம்) கொண்டுவரப்பட்டது, இதைக் கொண்டு தர்மம் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் அவருக்கு கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! உங்களை உண்மையை கொண்டு அனுப்பியவன் (அல்லாஹ்வின்) மீது ஆணையாக, மதீனாவின் இரு மலைகளுக்கு மத்தியில் எங்களை விட மிகத்தேவையுள்ளவர்கள் இல்லை என்றார். இக்கூடையை எடுத்துக் கொண்டு உமது குடுப்பத்துக்கு உணவளியும் என்றார்கள் நபி(ஸல்) அவர்கள். ( நூல்: இப்னு மாஜா )
2) சத்தியத்தை முறித்தவருக்குரிய பரிகாரம்
சத்தியத்தை முறித்தவர் பின்வரும் மூன்று பரிகாரங்களில் விரும்பிய ஒன்றை நிறை வேற்ற வேண்டும்.
அ. பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது
ஆ. பத்து ஏழைகளுக்கு உடை வாங்கி கொடுப்பது, அல்லது
இ. ஒரு அடிமையை உரிமை விடுவது.
குறிப்பு: இம்மூன்றில் ஒன்றையாவது ஒருவருக்கு நிறைவேற்ற முடியாவிட்டால், அவர் மூன்று நோன்பு நோற்க வேண்டும். ( பார்க்க: அல்குர்ஆன்: . 5: 89 )
3) ளிஹார் செய்தவருக்குரிய பரிகாரம்
அறியாமை காலத்தில் தன் மனைவியை தலாக் இடுவதற்கு பயன் படுத்தும் வார்த்தைகளில் ஒன்றுதான் ளிஹார் என்பது. அதாவது ஒருவர் தன் மனைவியை பார்த்து நீ என் தாயின் முதுகைப் போல் என்று கூறினால், அந்தப் பெண் தலாக் இடப்பட்டவளாக கருதப்படுவாள். அதாவது என் தாய் எனக்கு ஹராம் என்பது போல், நீயும் என்மீது ஹராம் என்பதே அவ்வார்த்தையின் கருத்தாகும். நம்மில் யாராவது அப்படி கூறினால், அது தலாக்காக கணக்கிடப்பபடமாட்டாது, ஆனால் அவ்வாறு கூறியவர் அதற்குரிய பரிகாரத்தை செலுத்தாத வரை அந்த மனைவியிடம் உடல் உறவு கொள்வது ஹராமாகும்.
பின்வரும் பரிகாரங்களை முறைப்படி நிறைவேற்ற வேண்டும்:
1. அடிமையை உரிமை இடுதல், அதற்கு முடியாதவர்
2. இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும், அதற்கும் முடியாதவர்
3. அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். ( பார்க்க: அல்குர்ஆன்: 58: 3,4 )
4) ஹஜ்ஜில் ஏற்படும் குற்றங்களுக்கு பரிகாரம்...
عَنْ
عَبْدِ اللهِ بْنِ مَعْقِلٍ قَالَ
جَلَسْتُ
إِلَى كَعْبِ بْنِ عُجْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، فَسَأَلْتُهُ ، عَنِ
الْفِدْيَةِ فَقَالَ نَزَلَتْ فِيَّ خَاصَّةً وَهْيَ لَكُمْ عَامَّةً حُمِلْتُ
إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَالْقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي
فَقَالَ مَا كُنْتُ أُرَى الْوَجَعَ بَلَغَ بِكَ مَا أَرَى ، أَوْ مَا كُنْتُ
أُرَى الْجَهْدَ بَلَغَ بِكَ مَا أَرَى تَجِدُ شَاةً فَقُلْتُ : لاَ فَقَالَ
فَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ لِكُلِّ مِسْكِينٍ
نِصْفَ صَاعٍ
அப்துல்லாஹ் பின் மஃகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன்; (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரம் பற்றி அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள், “என் விஷயமாகத்தான் (அல்குர்ஆன்: 2:196) ஆவது இறைவசனம் அருளப்பெற்றது; என்றாலும், அது உங்கள் அனைவருக்கும் பொதுவானதே! பேன்கள் என் முகத்தில் உதிர்ந்துகொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், “உமக்கு இவ்வளவு அதிகமாக வேதனை ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை! உம்மிடம் ஒரு ஆடு இருக்கிறதா?’ என்று கேட்டார்கள்; நான் “இல்லை!’ என்றேன்; நபி (ஸல்) அவர்கள் “(தலையை மழித்துக் கொண்டு) மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாஉ வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பீராக!’ என்று கூறினார்கள்” என்றார்கள். ( நூல்: புகாரி )
5) இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடியதற்கு பரிகாரம்...
يٰۤـاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَاَنْـتُمْ حُرُمٌ ؕ وَمَنْ
قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ
يَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْيًاۢ بٰلِغَ الْـكَعْبَةِ اَوْ
كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِيْنَ اَوْ عَدْلُ ذٰ لِكَ صِيَامًا لِّيَذُوْقَ وَبَالَ
اَمْرِهٖ ؕ عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ ؕ وَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللّٰهُ
مِنْهُ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍ
நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக்கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப்போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி).அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.
(
அல்குர்ஆன்:
5: 95 )
மொத்தத்தில் ஏதேனும் ஒரு வகையில் பசித்திருப்போரின் பசியை நீக்குவதன் முக்கியத்துவத்தை இஸ்லாம் இந்த உலகத்தில் உணர்த்தியது போன்று வேறெந்த சமயங்களும் உணர்த்தவில்லை.
காஸா மக்களின் பசியைக் கண்டு நெக்குருகும் இந்த நேரத்தில் நம் அருகாமையில் பசியால் வாடும் மக்களுக்கும் உணவளித்து அவர்களின் துயர் துடைப்போம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் இஸ்லாம் விரும்பும் இந்த அழகிய பண்பாட்டை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!
ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
Aameen mashallah kangal kalangi vittathu
ReplyDelete