அவமதிப்பும் அதன் மதிப்பும்!
எல்லாம் வல்ல இறைவன் மனிதர்களில் ஒவ்வொருவரையும் மதிப்பும், உயர்வும்,கண்ணியமும் நிறைந்தவர்களாகவே படைத்திருக்கின்றான், பெரும்பாலான மனிதர்கள் அந்த மதிப்பையும், கண்ணியத்தையும், உயர்வையும் தக்கவைத்துக் கொள்கின்ற்னர், காப்பாற்றிக் கொள்கின்றனர். சில போது அவைகளை சிதைத்துக் கொள்கிறவர்களும் உண்டு அதே சமயம் மற்றவர்களின் கண்ணியத்தையும், மதிப்பையும், உயர்வையும் கருத்தில் கொள்ளாமல் அவர்களை அவமதித்தும், அவமானப்படுத்தியும் நடந்து கொள்கின்றனர். இத்தகைய நடைமுறைகளை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.நடந்து கொள்கின்றவர்களை நல்லவர்களாகஅங்கீகரிப்பதுமில்லை.அவர்களின் நல்லறங்களை ஏற்றுக்கொள்வதுமில்லை.
கல்வியறிவு இல்லாதோர், ஊனமுற்றோர், வயதில் குறைந்தோர், பெண்கள்,நோயாளிகள், கடனாளிகள் போன்றோர்களை. அவ்ரகளிடம் கணப்படும் செயல்களை மையமாகவைத்து குத்திபேசுவது, பட்டபெயர் சூட்டி அழைப்பது, கேளியும்,பரிகாசமும் செய்வது, இது போன்ற சக முஸ்லிமை, சகமனிதர்களை அவமானப்படுத்தும், இழிவுபடுத்தும் மனித நேயமற்ற செயல்களைச் செய்ய இஸ்லாம் அறவே செய்யகூடாதென தடை செய்துள்ளது
ياأيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون (
இறைநம்பிக்கையாளர்களே! எந்த ஒரு பிரிவினரும் மற்றெந்த பிறிவினரையும் பரிகாசம் செய்யவேண்டாம், ஒரு வேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாயிருக்கலாம், எந்தப்பெண்களும் மற்றெந்த பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒரு வேளை அவர்கள் இவர்களை விட சிறந்தவர்களாகயிருக்கலாம் ஒருவரையொருவர் குறித்துப் பேச வேண்டாம், ஒருக்கொருவர் மோசமான பட்டப்பெயர்களைச்சூட்டி அழைக்கவேண்டாம்.இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும்.எவர்கள் இந்த நடவடிக்கையைக் கைவிடவில்லையோ அவர்கள் தான் கொடுமைக்காரர்கள்.”
மேற்கூறப்பட்ட 49:11- வது வசனம் பல்வேறு வரலாற்றுப் பிண்ணணியை அடிப்படையாகக்கொண்டு இறக்கிஅருளப்பட்டதாக பெரும்பான்மையான திருக்குர் ஆன் விரிவுரையாளர்கள் பல்வேறு அறிவிப்புகளை மேற்கோள் காட்டி விளக்கம் தருகிறார்கள்.
தஃஸீர் அல் குதுபீ பாகம் 9: பக்கம் 133
وقيل : نزلت في عكرمة بن أبي جهل حين قدم المدينة مسلما ، وكان المسلمون إذا رأوه قالوا ابن فرعون هذه الأمة . فشكا ذلك إلى رسول الله - صلى الله عليه وسلم - فنزلت
அபூ ஜஹ்ல் - உடைய மகன் இக்ரிமா (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு முஸ்லிம்களில் சிலர்
இந்த உம்மத்தின் ஃபிர்அவ்னுடைய மகன் என அவர் காதுபட பேசியது அவமதிப்பது போன்றும் தன்னைஅவமானப்படுத்துவதாகவும்,கருதிய அவர்கள்நபி (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்ட போது அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கியருளினான்.
அம்மார்,கப்பாப், ஆமிர் இப்னு ஃபுஹைரா, பிலால், சுஹைப், ஸல்மான், ஸாலிம் (ரலியல்லாஹு அன்ஹும்)ஆகியோரின் ஆடை மற்றும் இனம், அடிமை, நிலை மற்றும் ஏழ்மையை பார்த்து பனு தமீம் கோத்திரத்தினர் கேலிசெய்த போது அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கியருளினான்
[ளஹ்ஹாக்(ரஹ்)]
தஃஸீர் அல் குதுபீ பாகம் 9: பக்கம் 133
فقال ابن عباس : نزلت في ثابت بن قيس بن شماس كان في أذنه وقر ، فإذا سبقوه إلى مجلس النبي - صلى الله عليه وسلم - أوسعوا له إذا أتى حتى يجلس إلى جنبه ليسمع ما يقول ، فأقبل ذات يوم وقد فاتته من صلاة الفجر ركعة مع النبي - صلى الله عليه وسلم - ، فلما انصرف النبي - صلى الله عليه وسلم - أخذ أصحابه مجالسهم منه ، فربض كل رجل منهم بمجلسه ، وعضوا فيه فلا يكاد يوسع أحد لأحد حتى يظل الرجل لا يجد مجلسا فيظل قائما ، فلما انصرف ثابت من الصلاة تخطى رقاب الناس ويقول : تفسحوا تفسحوا ، ففسحوا له حتى انتهى إلى النبي - صلى الله عليه وسلم - وبينه وبينه رجل فقال له : تفسح . فقال له الرجل : قد وجدت مجلسا فاجلس! فجلس ثابت من خلفه مغضبا ، ثم قال : من هذا ؟ قالوا فلان ، فقال ثابت : ابن فلانة! يعيره بها ، يعني أما له في الجاهلية ، فاستحيا الرجل ، فنزلت
ஸாமத் இப்னு கைஸ் (ரலி) என்கிற நபிதோழர், அவரின் காதில் அடைப்பு ஏற்பட்டு செவித்திறன் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.எனவே, பள்ளியில் அவர் நுழைந்தால் நபி (ஸல்) அவர்களின் உறையாடலை நபி (ஸல்) அருலில் அமர்ந்து கேட்கும் விதமாக நபித் தோழர்கள் அவருக்கு வசதி செய்து கொடுப்பார்கள்.ஒரு நாள் தொழுகைக்கு தாமதமாக வந்தார்கள். தொழுது முடித்ததும் நபித்தோழர்கள் தத்தமது இடங்களில் அமர்ந்து கொண்டார்கள், அவர்களுக்கு பின்னால் இருந்து வழிவிடுங்கள், வழிவிடுங்கள், என்று சொல்லிக் கொண்டெ முன்னால் அமர்ந்திருந்த் ஒருவரிடம் வந்து விட்டார்கள்.. முன்னால் அமர்ந்திருந்த அவரிடம் ஸாபித் (ரலி) வழி விடுங்கள், என்றார்கள்-அத்ற்கவர் இடம்தான் கிடைத்துவிட்டதே இடத்தில் உட்காருங்கள் என்று கூறிவிட்டார்
கோபத்துடன் அவ்விடத்தில் அமர்ந்துகொண்டார்கள் ஸாபித் (ரலி)
அதிகாலை நேரத்தின் இருள் விலகி வெளிச்சம் பரவத் தொடங்கியதும், முன்னால் அமர்ந்திருவர் யார்? என அக்கம் பக்கத்திலிருந்த்வர்களிடம் விசாரித்துவிட்டுஓ! நீ இன்னாருடைய மகனா?அறியாமை காலத்தில் அம்மனிதரின் தாயார் இருந்த நிலையைச் சுட்டிக்காட்டி கோட்டார்கள்.அந்த சபையினர் அனைவரும் அம்மனிதரை நோக்க அம்மனிதர் வெட்கத்தாலும், அவமானத்தாலும் தன் தலையை தாழ்த்திக்கொண்டார். அப்போதுதான் மேற்கண்ட வசனம் இறங்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் பின்னர் ஸாபித் (ரலி) அவர்கள் இனி எப்போதும் நான் யாரையும்.அவமதிப்பு செய்யமாட்டேன்.என்று உறுதிபூண்டார்கள்.
திர்மிதி 3892
أن رسول الله صلى الله عليه وسلم دخل على صفية وهي تبكي، فقال لها: " ما يبكيك " ؟. قالت: بلغني أن عائشة وحفصة تنالان مني وتقولان نحن خير من صفية نحن بنات عم رسول الله صلى الله عليه وسلم وأزواجه قال: " ألا قلت لهن كيف تكن خيراً مني وأبي هارون وعمي موسى وزوجي محمد صلى الله عليه وسلم " . وكانت صفية حليمة عاقلة فاضلة.
ஏன் அழுகிறாய்?எனக்கேட்க, ஸஃபிய்யாவைவிட நாங்கள் இருவரும் தான் மிக உயர்ந்தவர்கள்.ஏனெனில் நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சிறிய தகப்பனாரின் பெண்மக்களாவோம்.என அன்னை ஆயிஷா (ரலி) ஹஃப்ஸா (ரலி) ஆகிய இருவரும் பேசிக்கொண்டதாக கேள்விபட்டேன்.
நீ அவர்களிடத்தில் என்னைவிட எப்படி நீங்கள் சிறந்தவர்களாக இருக்க முடியும், என் தந்தை ஹாரூன் (அலை) அவர்கள், என் சிறிய தகப்பனார் மூஸா (அலை) அவர்கள், என் கணவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள் - என சொல்லிவிடுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதி:3892)
அல் இஸ்தீஆப் பாகம் 3, பக்கம் 234
மற்றொரு அறிவிப்பில்:-
நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களில் ஒருவரான அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள்நபி (ஸல்) அவர்களிடம் பெண்களில் சிலர் என்னைப்பார்த்து யூதப்பெண்மணியே என கேலி செய்கின்றனர்என்றார்கள்.அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ ஏன் அவர்களுக்கு இப்படிப் பதில் கூறவில்லை.என்னுடைய தந்தை ஹாரூன் (அலை) என்னுடைய சிறிய தகப்பனார் மூஸா (அலை) எனது கணவர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.ஆவார்கள்.என.கூறினார்கள்.ஸஃபிய்யா (ரலி) அவர்களை அவ்விதம் கூறியவர்களை கண்டிக்கும் விதமகவும் மேற்கண்ட வசனம் இறங்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
மேலும், சமூகத்தில் மாற்றுத்திறனாளி - ஊனமுற்றோர்களை கடும் சொற்களால் பேசுவது,முக்கியமான சபைகளில், கேவலப்படுத்துவது, அவமதிப்பது. உடலில் உள்ளஊனங்களை சுட்டிக்காட்டி பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு துன்புறுத்துவதை நாம் காணமுடிகிறது, இதுவிஷயத்தில் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் வன்மையாக கண்டித்ததை காணமுடிகிறது.
ஒருசமயம் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சபையில் அமர்ந்திருந்தார்கள் அச்சமயம் அவர்களின் கெண்டைக்கால் ஆடைவிலகி தென்பட்டது.அவர்களின் காலில்ஒரு பகுதி சூம்பிப்போயும், ஒரிடத்தில் சதைகெட்டியாயும் இருந்ததை பார்த்து சுற்றியிருந்தவர்கள் கேலி செய்து சிரித்தார்கள் அப்போது நபி (ஸல்) அவர்கள்: அவருடையகெண்டைக் காலின் நிலையை பார்த்து சிரிக்கின்றீர்களா? எவனுடைய கரத்தில் என் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அவ்விரண்டு கால்களுக்கும் மறுமையில் தராசிலே உஹது மலையை விடவும் கனம் அதிகம் இருக்கும் என்று கூறினர்கள்.
[அஹ்மத்]
அல் இஸ்தீஆப் பாகம் 3, பக்கம் 131
"ألا تحبون أن تكونوا كأبي ضَمْضَم؟"
قالوا: يا رسول الله، ومن أبو ضمضم؟ قال:
"إن أبا ضمضم كان إذا أصبح قال: اللهم إني قد تصدقت بعرضي على من ظلمني
ஒரு முறை அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களோடு சபையில் அமர்ந்திருந்த நபித்தோழர்களை நோக்கிقالوا: يا رسول الله، ومن أبو ضمضم؟ قال:
"إن أبا ضمضم كان إذا أصبح قال: اللهم إني قد تصدقت بعرضي على من ظلمني
தோழர்களே !அபூளம்ளமைப்போல் ஆகுவதற்கு நீங்கள் பிரியப்படுகின்றீர்களா?
அல்லாஹ்வின் தூதரே !யார் அந்த அபூளம்ளம்?என நபித் தோழர்கள் கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் : ஒவ்வொரு நாள் காலைப் பொழுதிலும் (மாற்றுத்திறனாளியாகவும், ஏழ்மை நிலையிலும் உழன்று கொண்டிருந்த அவர்கள்) இஸ்லாத்திற்காகவும், இன்னபிற நோக்கத்திற்காகவும் தர்மங்கள் செய்ய முடியவில்லையே என மன ஆதங்கத்துடன் ஒவ்வொரு நாளும் அதிகாலைத் தொழுகைக்குப் பின்னரும் மேற்கூறிய துஆவை மற்றொரு அறிவிப்பில்
முதல் துஆவின் பொருள்:
யாஅல்லாஹ்! உன் வழியில் செலவு செய்ய என்னிடம் பொருளும், பொருளாதாரமும் இல்லை, எனவே சக மனிதர்களிடம் நான் பட்ட அவமானங்களையும், அவமதிப்புகளையும் அதனால் ஏற்பட்ட மன உளச்சலையும், மன வேதனையையும் நான் பொருத்திருந்தேனே அதன் தன்மையை உன் பாதையில் நான் செய்கிறேன் என கூறினார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு அல்லாஹ் அவரிடம் இருந்து வை ஏற்றுக்கொண்டான். அவரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என்றார்கள்.
எனவே, மேற்கூறிய வரலாறுகளின் மூலம் பிறரை அவமதிப்பு செய்வது, அவமானப்படுத்துவது குற்றம் என்றும், அவமதிப்புக்கு உள்ளானவர், அவமதித்தவரை விட மேலானதவராக இருப்பார் என்பதை பின்னால் சொல்லப்பட்ட இரு நிகழ்வுகளில் நபி (ஸல்) அவர்கள் கூறியவிதம் நமக்கு உணர்த்துகிறது.
குலஃபாவுர் ரசூல் (ஸல்) பக்கம் 130
ஒரு நாள் உமர் (ரலி) அவர்களிடம் மிஸ்ர் பகுதியிலிருந்து ஓர் கருப்பு நிற வாலிபர் வந்து அமீரூல் முஃமினின் அவர்களே! என்னை மிஸ்ரின் நீதிபதி, கவர்னர் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் மகன் முஹம்மத் அடித்து துன்புறுத்தினார் என்று தனது மேலாடையை கழற்றி காண்பித்தார்கள்.உடனே கிளம்பி மதீனா வருமாறு அம்ருல்னுல் ஆஸ் (ரலி) அவரின் மகன் முஹம்மதுக்கும் உமர் (ரலி) கட்டளை பிறப்பித்துக் கடிதம் எழுதி அனுப்பினார்கள்.மதீனாவில் உமர் (ரலி) மஸ்ஜித் நபவீயின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்திருக்கும் போது அம்ருல்னுல் ஆஸ் (ரலி) மேல் துண்டு அணிந்தவராக அவைக்குள் நுழைந்தார்.அவரின் துண்டுக்குள் முகத்தை மறைத்தவராக அவரது மகன் முஹம்மதுவும், அவரைப்பின் தொடர்ந்து வந்தார்.எங்கே மிஸ்ர்?என உரத்த குரலில் உமர் (ரலி) அழைத்தார்கள்.உமர் (ரலி) அவர்கள் முன் வந்து நின்றார்.
கையில் சவுக்கை கொடுத்து அடியுங்கள் என்றார்கள், அடித்து முடித்தார் அம்ருப்னுல் ஆஸ் (ரலி)ஐயும் அடிக்குமாறு உமர் (ரலி) கூறியபோது என்னை அடித்த அவரது மகனை நான் அடித்து விட்டேன். இல்லை அவரது அதிகாரம் தானே அவரது மகன் உங்களை அவமானப்படுத்தி பேசுவதற்கும் அடிப்பதற்கும் காரணமாக இருந்தது. இல்லை! நான் என்னை அடித்தவரை அடித்து விட்டேன்.அது போதும் எனக்கு என்றார் மிஸ்ரி.
அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களைப்பார்த்து உமர் (ரலி) அவர்கள் அம்ரே!
மக்கள் தங்களது பிள்ளைகளை சுதந்திரமானவர்களாக பெற்றெடுத்திருக்க அப்பொழுது நீங்கள் அடிமையாக நடத்த ஆரம்பித்தீர்கள் என்று கடுமையாக கேட்டார்கள்.பின்பு அந்த மிஸ்ரியை பார்த்து மன நிம்மதியோடு ஊர்போய் சேருங்கள்.மீண்டும் அவர்கள் உங்களை அனுமதித்தாலோ, அவமானப் படுத்தினாலோ உடனே எனக்கு கடிதம் எழுதுங்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
பல பேருக்கு முன்னால் இந்தா அடிக்கிறேன் வாங்கிக்கொள் என்று அந்த மிஸ்ரியை அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் மகன் அவமானப் படுத்தினாரோ அது போன்று உமர் (ரலி) அவர்களும் மதினாவில் பலர் முன்னிலையில் அடி என்று கூறினார்கள். என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் இந்த சம்பவத்தை கூருகிறார்கள்.
மேலும்.பாவம் செய்தவர்கள் திருந்திவிட்டால் அவர்களை சபையில் வைத்து குத்திக்காட்டி. கேவலத்திற்கும் அவமாத்திற்கும் ஆளாக்குவதை இஸ்லாம் தடை செய்கிறது
யூசுப் (அலை) அவர்களின் சகோதரர்கள் யூசுப் (அலை) அவர்களுக்கு பல்வேறு இன்னல்கள் கொடுத்தது பற்றி குர் ஆனில் சொல்லப்பட்டுள்ளது தங்களது தவறுகளை உணர்ந்த அவர்கள் தங்களது தந்தை யஃகூப் (அலை) அவர்களிடம் வந்து எங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள் என்று கூறி நல்லவர்களாக மாறியபின் தமது தந்தையையும் தமது சகோதரர்களையும் அரசவைக்கு அழைத்துவந்து சபையோர் முன்னிலையில் அவமானப்படுத்தவில்லை. மாறாக, கண்ணியப்படுத்தினார்கள் என குர் ஆன் கூறுகிறது
(பார்க்க : அல்குர் ஆன் : 12 : 97 முதல் 100 வரை)
பிறரை அவமானப் படுத்துவதை.அவமதிப்பதை சர்வ சாதரணமாக கருதி செய்வோர் பின்னாளில் நல்லோர்களையும், நல்லோர்களின் நல்லறங்களையும் அவமதித்து.முனாஃபிக் - நய்வஞ்சகன் எனும் நிலைக்கு தள்ளப்பட்டு நரகின் அதள பாதாளத்தில் வீழ்த்தப்படுவார்கள் என பின்வரும் வரலாறும் இறைவசனமும் எச்சரிக்கை செய்கிறது.
அல் இஸ்தீஆப் பாகம் 3, பக்கம் 139
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தான தர்மங்கள் செய்யும்மாறு நபித்தோழர்களை ஆர்வமுட்டினார்கள்.
அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் தங்களிடமிருந்த 4,000 திர்ஹமில் 2,000 திர்ஹத்தையும் 400, தீனாரில் 200, தீனாரையும் தன்னிடமிருந்ததில் சரிபாதியை கொண்டு வந்து நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தார்கள். அப்போது
நபி (ஸல்) அவர்கள்
நீர்வழங்கியதிலும், உமது குடும்பத்திற்காக வைத்துக் கொண்டதிலும் அல்லாஹ் பரக்கத் - (வளம்) செவானாக !என்று து ஆ செய்தார்கள் !
ஆஸிம் இப்னு அதய் என்பவர் நூறு வஸ்க் பேரீத்தம் பழம் கொடுத்தார்கள் இதைப் பார்த்துக் கொண்டிருந்த நயவஞ்சகர்கள்.இவர்கள்! முகஸ்துதிக்காகத் தான் இவ்வாறு செய்கிறார்கள் என்றனர்.
சிறிது நேரத்தில் என்ற பெயர்கொண்ட ஏழை அன்ஸாரி ஸாஹாபியொருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து என்னிடம் இரு பேரீத்தம் பழம் உள்ளது. ஒரு -யை, என் குடும்பத்தினருக்காக வைத்துவிட்டு ஒரு -யை இந்தாருங்கள் வைத்துக் கொள்ளுங்கள் அல்லாஹ்விற்காக! என்றார்.இதைப் பார்த்துக்கொண்டிருந்த முனாஃபிக்கின்கள்.
அல்லாஹ்வும், அவனதூதரும் இந்த ஏழையின்- ஐ கூட பெற்றுக்கொள்வதில் தேவையற்றவர்களாக இருக்கமுடியவில்லை என்று கேலி செய்து கொண்டிருந்தனர். அப்போது வல்ல ரஹ்மான் இறைநம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தான தர்மங்களைப் பற்றியும் இவர்கள் குறை கூறுகின்றார்கள்; (இறைவழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதிப்பதைத்தவிர வேறேதுவும் இல்லாதவர் (செய்யும் தான தர்மங்)களைப்பற்றியும் இவர்கள் கேலி செய்கின்றனர். அல்லாஹ் இவர்களைக் கேலி செய்கின்றான். மேலும், இவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனையும் இருக்கிறது (நபியே!) நீர் இவர்களுக்காக பாவமன்னிப்புக்கோரினாலும் சரி, கோரவிட்டாலும் சரி எழுபது தடவைகள் இவர் களுக்காக நீர் மன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் இவர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டான்
(அல்குர் ஆன் : 9 : 72 , 80 )
எனும் இறைவசனங்களை அல்லாஹ் இறக்கியருளினான்
சமுகத்திலே துவக்கத்திலே இமாம்களின் இஜ்திஹாத்தில் பிழைஇருப்பதாக குறைகந்தார்கள்.மத்ஹப் மறுப்பாள்ர்கள்.
பின்பு இமாம்களையே அவமதித்தார்கள்.பின்பு நபித்தோழர்களின் -யை விமர்சித்தார்கள்.தற்போது நபி (ஸல்) அவர்களையே குறைவுபடுத்தியும், அவமதித்தும் பேசியதை நாம் கேட்டோம்.ஆரம்பத்தில் சின்ன சின்னதாய் அவர்கள் பிறரை குறை கூறி, அவமானபடுதிவந்தனர்.இறுதியில் நபி (ஸல்) அவர்களையே அவமதிக்கும் துணிவை பெற்றனர்.
காரணம் பிறரை அவமதிப்பதினால், அவமானப்படுத்தினால் ஏற்படும் இழப்பை விளங்காதின் விளைவே!
பிறரை அவமதிப்பவர் முதலில் கொடுமைக்காரனாய் சமுதாயத்தில் உலாவருவார்.அவரின் செயல் தொடருமேயானால் அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காமல், அல்லாஹ்வின் வழிகாட்டலுமில்லாமல் சமுகத்தில்பாவியாகவும், நயவஞ்சகராகவும் அலைந்துதிரிவர் என நாம் துக்கத்தில் ஓதிய வசனம் இறுதியில் ஓதிய வசனமும் உணர்த்துகிறது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-
மிகத்தீய வட்டி தான் முஸ்லிம் சகோதரனை அவமானப்படுத்துவதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-
ஒரு முஸ்லிமுடைய கண்ணியத்தை வரம்பு மீறிக் கெடுப்பது மிகப் பெரும் பாவங்களில் ஒன்றாகும்.
ஆகவே மற்றவர்களை குறை படுத்தி, அவமானப்படுத்தி பாவங்களைச் சம்பாதிக்காமல் இறைவனும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் காட்டிய வழியில் நடை போட்டு நடந்திட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாகா !ஆமீன்.
வஸ்ஸலாம்
No comments:
Post a Comment