Sunday 13 October 2013

தியாகிகள் மறக்கப்படுதில்லை

தியாகம் என்பது எத்தன்மையது என்பதைப் புரிந்து கொண்டால் தியாகிகள் ஏன் மறக்கப்படுதில்லை என்பதை எளிதாக தீர்மானம் செய்துவிடலாம்.

இஸ்லாத்தை பொருத்தமாட்டில் தியாகம் என்பதற்கு மதிப்புமிக்க மிகவும் விரும்பக்கூடிய விஷயங்களை ஒருமனிதன் இறைவனுக்காக விட்டுக் கொடுப்பது அல்லது அர்ப்பணிப்பது என்பது பொருளாகும்.

உதாரணமாக, கால நேரங்கள், பொருளாதாரம், வாழ்க்கை போன்ற நிதர்சனமானவைகளாகவோ,
உணர்வுகள், கருத்துக்கள், நாட்டங்கள், உள்ளார்ந்த மன்ப்பான்மைகள் போன்ற மனம் சம்பந்தப் பட்டவைகளாகவோ இருக்கலாம்.

தியாகம் என்பதற்கு ஷரீஆ வின் பார்வையில் விலங்கையோ, மனிதனையோ, இறைவனுக்கு காணிக்கையாக பலியிடுதல்; அல்லது இறைவன் முன் அர்ப்பணித்துவிடுதல்என்பதும் பொருளாகும்.

முஸ்லிம், இறைநம்பிக்கையாளன் என்பவன் ஒரு சாதாரண மனிதனைப் போல் அல்ல,
தனது செயல்பாடுகளின் வழியாக உலக மாந்தர்களிடையே மிகப்பெரும் தாக்கத்தையும், மாற்றத்தையும் கொண்டுவர பாடுபடவேண்டும்.

பரந்து விரிந்த இப்பூலகில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமெனில் அவன் அனைத்து நிலைகளிலும் தன் இறைவனுக்காக, இறைவனின் திருப்திக்காக சில, பல விஷயங்களை விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும்.

மேலும், தியாகத்தின் மூலம் தான் அரிய பல மாற்றங்களை உண்டாக்க முடியும் என்கிற திடமான நம்பிக்கையோடு வாழ்க்கைப் பாதையில் பயணிக்க வேண்டும்.
ஏனெனில், தியாகம் என்பது உயிரால், உடலால், உடமையால், வாழ்வால், உணர்வுகளால், எண்ணங்களால், பாசப் பிணைப்புகளால் எல்லையில்லா இழப்புக்களை உள்ளடக்கியது.
இதில் எதையும் அர்ப்பணித்திட முன்வருபவர்களை தியாகிகள்அவர்களே மதிக்கப்படுவார்கள்! போற்றப்படுவார்கள்! மறக்கப்படாமல் மக்களின் உள்ளங்களில் என்றென்றும் நிறுத்தப்படுவார்கள்.

ஆம்! அத்தகைய தியாகங்கள் ஒருபோதும் வீண் போவதில்லை!
     மதிக்கப்படுகின்றது!!
ஆம்! அத்தகைய தியாகிகள் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை!
     போற்றப்படுகின்றார்கள்!!

தியாகத்தின் முன்னோடி
     ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக இறைத் தோழர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த தியாகத்தை இஸ்லாம் எந்தளவு உயர்த்திப் பிடிக்கின்றது, போற்றுகின்றது என்றால், நம் உயிரினும் மேலான பெருமாளார் (ஸல்) அவர்களைப் புகழ வேண்டும், அவர்களின் மீது ஸலவாத்  ஓத வேண்டும் என்றால்,
இறைவா! நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள்  மீதும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் எவ்வாறு அருள்புரிந்தாயோ அது போன்று அருள்புரிவாயாக! நீயே! புகழுக்குரியோனும், மதிப்புமிக்கவனும் ஆவாய்!

இறைவா! நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள்  மீதும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் எவ்வாறு கருணைபுரிந்தாயோ அது போன்று கருணைபுரிவாயாக! நீயே! புகழுக்குரியோனும், மதிப்புமிக்கவனும் ஆவாய்!
இந்த யுக முடிவு நாள்  வரையிலும் இன்றளவும், ஏன்? தனியாகவோ, கூட்டாகவோ, கடமையான தொழுகையிலோ, ஜனாஸா தொழுகையிலோ, மேற்கூறியவாறு தான் ஓத முடியும். இன்னும் சொல்லப் போனால் இது தான் நாம் நபி (ஸல்) அவர்களின்மீது ஓதகிற ஸலவாத்தில் மிகச் சிறந்த்தும், உயர்வானதும் ஆகும்.

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற இடம் இன்று மகாமு இப்ராஹீம்தொழுமிடமாக.....

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷைத்தானை கல்லெடுத்து விரட்டிய இடம், இன்று ரம்யுல் ஹிஜார்எனும் அமலாக.....

அன்று அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க தமது மனைவி மக்களை விட்டு விட்டு வந்த இடம் பாலைவனம் இன்று ஜம் ஜம் நீருற்று...

அன்று அல்லாஹவிற்காக தம் மகனை அர்ப்பணிக்கத்துணிந்த அந்த தீர செயல்
இன்று உள் ஹிய்யாஎனும் இபாத்த்தாக.....

எல்லாவற்றிற்கும் மேலாக இறைத்தூதர் எனும் நிலையிலிருந்து இறைத் தோழராக....

தனியொரு மனிதர் எனும் நிலையிலிருந்து ஒரு சமுதாயத்துக்கு நிகரானவராக....

இன்னும் ஏராளம், தாராளமாக,

திண்ணமாக! உங்களுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் அழகியதோர் முன்மாதிரி இருக்கிறது.
அல்-குர்ஆன்: 60 : 4
உலக முஸ்லிம்களின் முன்னோடியாக, தியாகத்தின் முன் மாதிரியாக உலக வரலாற்றில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்கள், மறக்காமல் நினைவு கூறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தியாகத்தின் வரையறை:
தியாகம் என்றாலே உயிரை விடுவது தான் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
அது தவறான கண்ணோட்டமல்ல. ஆனால், அது இறுதியான ஒன்று.
அதற்கு முன்னால் மனிதன் பல்வேறு தியாகங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.
ஏனென்றால்,
     உயிரை துறப்பது மட்டும் தியாகம் அல்ல
     உயிர்ப்போடும், அர்ப்பணிப்போடும் வாழ்வது தான் தியாகம்!
என்று இஸ்லாம் தியாகத்திற்கான இலக்கணத்தை சொல்லித்தருகின்றது.

உயிரை விடுவது மட்டும்தான் தியாகம் என்று மார்க்கம் சொல்லியிருக்மேயானால் இன்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை மயானமும், மண்ணறைகளும் மட்டும்தான் காட்சி தரும்.

உணர்வுப்பூர்வமான தியாகம்:
அல்லாஹ் கூறுகின்றான்:
நபியே! நீங்கள் சொல்லுங்கள்!
உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்கள் உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள், இன்றும் நஷ்டமடைந்துவிடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற உங்களுடைய வியாபாரம், மற்றும் உங்களுக்கு விருப்பமான உங்கள் இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விட – அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு நேசமானவையாயிருந்தால், அல்லாஹ் தன் முடிவினை செயல்படுத்தும்வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமூகத்திற்கு ஒருபோதும் நேர்வழிகாட்டுவதில்லை.
(அல்-குர்ஆன்: 9:24)
தியாகம் என்பது எங்கிருந்து, எப்படி துவங்க வேண்டும் என்பதை மேற்கூறிய வசனத்தில் 8 கூறுகளாக பிரித்து அல்லாஹ் கூறியுள்ளான்.
அதில் 5 விஷயங்கள் உணர்வுகளோடும், 3 விஷயங்கள் பொருளாதாரத்தோடும், நிதர்சனமானவையாகவும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
பெற்றோரை பொருத்தவரையில் அவர்களுக்கு வழிபட்டுநடப்பது, அவர்களை உதாசினப்படுத்தாமல் இருப்பது, அவர்களோடு நல்லமுறையில் நடந்து கொள்வது, அவர்களுக்காக துஆ செய்வது என பல்வேறு போதனைகளை அல்குர்அஆன் அறிவுறுத்துகிறது. ஆனால், அதே பெற்றோர் இறைவனுக்கு மாறு செய்யும்மாறு வற்புறுத்தினால் ஒருபோதும் அவர்களுக்கு அந்த விஷயத்தில் உடன்பட வேண்டாம் என கட்டளை பிறப்பித்துள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான்:
பெற்றோர் நலம் பேண வேண்டுமென நாம் மனிதனுக்கு அறிவுறித்துயுள்ளோம். ஏனெனில் அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிமை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் (சிரம்ம் மேற்கொண்டாள்) பிடித்தன. எனவே எனக்கு நன்றிசெலுத்து! உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து! என் பக்கமே நீ திரும்பிவரவேண்டியுள்ளது.
ஆனால், நீ எதனை அறிய மாட்டாயோ? அதனை என்னோடு நீ இணை கற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுடைய பேச்சை நீ ஒருபோதும் நீ கேட்காதே! இவ்வுலகில் அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்!
(அல்-குர்ஆன்: 31:14,15)
இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது ஏகத்துவ பயணத்தில் முதலில், தனது தந்தையை மறுதலிக்க வேண்டியிருந்த்து, ஆரம்பத்தில் அவருக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு வேண்டி மன்றாடினார். ஆனால் அல்லாஹ் மன்னிப்புத் தேடும் மன ஏக்கத்தைவிட்டுவிடுமாறு கூறிய போது அதை முற்றிலுமாக கை விட முன் வந்தார் என அல்லாஹ் அழகிய முறையில் விமாசிப்பான்.

அல்லாஹ் கூறுகின்றான்:
இறைவனுக்கு இணை வைப்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களுக்காகப் பாவ மன்னிப்பு கோரிப் பிரார்த்திப்பது நபிக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் ஏற்ற செயல் அல்ல. அவர்கள் நெருங்கிய உறவினராய் இருப்பினும் சரியே!
இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புக் கோரியது அவருக்கு தாம் கொடுத்திருந்த வாக்குறுதியின் அடிப்படையில் தான். ஆனால், தம்முடைய தந்தை அல்லாஹ்வுக்கு விரோதியாய் இருக்கின்றார் என்பது இப்ராஹீமுக்கு தெளிவாக விளங்கியபோது அவர் தம் தந்தை (க்காக கேட்ட பிரார்த்தனை) யை விட்டு விலகிக்கொண்டார். திண்ணமாக, இப்ராஹீம் மிக இளகிய மனமும், இறையச்சமும், சகிப்புத்தன்மையும் உள்ளவராக இருந்தார்.
அல்-குர்ஆன்:9:14
பத்ர் யுத்தத்திற்கான தயிப்புகளை சரிசெய்து முடித்த பின்னர் நபித்தோழர்களை நோக்கி மாநபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்: நாளை நடைபெறும் யுத்தத்தில் உங்கள் எதிரே பனூ ஹாஷிம் கிளையார்களில் யாரையும் கண்டால் அவர்களை கொலை செய்துவிட வேண்டாம். அவர்கள் நிர்பந்தமாக அழைத்து வரப்பட்டுள்ளார்கள். மேலும். அப்பாஸ் அவர்களையும், அபுல் புக்தரி அவர்களையும் கொலை செய்யவேண்டாம்இவர்கள் இருவரும் பட்டு வற்புறுத்தல் மற்றும் நிர்பந்த்ததின் அடிப்படையில் அழைத்துவரப்ட்டுள்ளனர்.
கண்ணில் படுகின்ற எந்தர ஒரு .இறைவிரோதியையும் விட்டவிடக் கூடாது எனகிற தீர்மானத்தோடு இருந்த் தோழர்களிடையே அறிவிப்பை வெளியிட்டார்கள்.

குறைஷிகளின் மாபெரும் தலைவர்களில் உத்பா இப்னு ரபீஆ ஒருவன். பதீரில் குறைஷிப் படையை வழிநடத்தியதில் இவனுக்கும் முக்கிய பங்குண்டு.
ஆச்சர்யம் என்னவென்றால் உத்பாவின் மகன் அபூஹுதைஃபா முஸ்லிம்கள் அணியில் இருக்கிறார்.
அவர்களால் இந்த அறிவிப்பை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவர் இப்படிச் சொன்னார்! எங்கள் தந்தையரையும், சகோதரர்களையும், சொந்த பந்தங்களையும் நாங்கள் போரில் கொல்ல வேண்டும்
ஆனால், அப்பாஸை கண்டால் மட்டும் விட்டுவிட வேண்டுமா?
படைத்த ரப்பின் மீது ஆணை!
“அவரைப் போர்க்களத்தில் எங்கு கண்டாலும் என் வாளால் வெட்டுவேன்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறிய விபரம் தெரிய வந்த போது
உமர் (ரலி) அவர்களை அழைத்து “ஹஃப்ஸாவின் தந்தையேநாளை நடக்கும் போரில் அல்லாஹ்வின் தூதருடைய பெரிய தந்தையின் முகம் வாளால் வெட்டப்படுமா?“ – என்று கேட்டார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள்: “அனுமதி மட்டும் தாருங்கள் நயவஞ்சகனாக மாறிவிட்ட இவரின் தலையை இந்த இடத்திலேயே கொய்து விடுகிறேன்என்றார்கள்.
வேண்டாம் என மாநபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை தடுத்து விட்டார்கள்.
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்
பக்கம்:132
அபூஹுதைஃபா ஒன்றும் சாமானியர் அல்ல, நபித் தோழர்களில் மிகச் சறிப்பு பெற்றவர். இரண்டு ஹிஜ்ரத்திலும் கலந்து கொண்டவர், இரண்டு கிப்லாவிலும் தொழும் பாக்கியம் பெற்றவர், என்ற போதிலும், குடும்ப்பாசம், உணர்வு ரீதா அவரை இவ்வாறு பேசத்தூண்டியது. பான்மையை தமது உள்ளத்தில் கொண்டிவர இயலாமல் போனது.
ஆனாலும், அவர் அந்த உணர்ச்சி வெளிபாட்டிற்குப் பின் பெரிதும் வருத்தப்பட்டார்.
சந்திக்கும் நபர்களிடத்திலும் சந்தப்பம் கிடைக்கும் போதிலும்

அபூஹுதைஃபா (ரலி) இப்படிச் சொல்வார்களாம்:
“பத்ரில் நான் சொன்ன அந்த வார்த்தை என் நிம்மதியை சீர்குலைத்துவிட்டது.
அப்பாஸ் அவர்கள் குறித்து நான் அன்று கூறிய வார்த்தைகளை நினைத்து சதா பயந்து கொண்டே இருந்தேன்.
அதற்கு பரிகாரம் போர்க்களத்தில் நான் ஷஹீத் ஆவது தான் என்று உறுதிகொண்டேன்.

இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பத்ருக்குப்ப பின் நடந்த அனைத்து யுத்த களங்களிலும் கலந்து கொண்டார்கள். இறுதியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்தில் நடந்த யமாமா போர்க்களத்தில் ஷஹீத் வீர மணரம் அடைந்தார்கள்.
நூல் : இஸ்தீஆப்: பாகம்3
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்
பக்கம்:132


ஹல்ரத் உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் உயர்மட்ட ஆலோசனைக்குழு ஒன்றை அமைத்திருந்தார்கள் அதில் ஆறு சிறந்த நபித் தோழர்களை நியமித்திருந்தார்கள். அந்த அறுவரில் ஒருவர் அபூஉபைதா (ரலி) அவர்கள் ஆவார்கள்.

தங்களுடைய மரண நேரத்தில் உமர் (ரலி) அவர்கள் “அபூஉபைதா மட்டும் உயிரோடு இருந்தால் அவரை நான் எனக்குப் பின் கலீஃபாவாக பிரமாணமெடுத்திருப்பேன் எனக் கூறினார்கள்.
சகதோழர்கள் அது என்ன? அபூஉபைதா (ரலி) அவர்களுக்கும் மட்டும் உங்களிடத்தில் அவ்வளவு மதிப்பு? என்று வினவிய போது, பத்ர் யுத்த களத்தில் எதிரணியில் தமது தந்தை ஜர்ராஹ் பங்கெடுத்து முஸ்லிம்களுக்கெதிராக கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு சந்தர்ப்பம் தமது தந்தையை யுத்த களத்தில் நேரெதிரே சந்திக்க வேண்டி வந்த்து.
சற்றும் தாமதிக்காமல் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக, அல்லாஹ் ரசூலின் மேல்கொண்ட பிரியத்திற்காக தமது தந்தையை கொன்றுவிட்டார்.
ஆதலால் தான் என உமர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்
பாகம்:4, பக்கம்:420

இறைத்தூதர் நூஹ் நபி (ஸல்) அவர்கள் தங்கள 950 ஆண்டுகால அழைப்பியல் பணியில் மூலம் 100க்கும் குறைவாவர்கேயை நுழைவிக்க வேண்டியிருந்த்து.

அல்-குர்ஆன் கூறுகிறது:
அக்கப்பல் அவர்களைச் சுமந்து சென்று கொண்டிருந்த்து. அலைகள் ஒவ்வொன்றும் மலையளவு உயர்ந்து கொண்டிருந்தன. நூஹுடைய மகன் தொலைவில் இருந்தான். அவர் தம் மகனை கூவியழைத்து கூறினார்: “என் அன்பு மகனே! எங்களோடு நீயும் ஏறிக்கொள்; நிராகரிப்பாளர்களுடன் இருக்காதே!அதற்கு அவன் பதிலளித்தான்: “ நான் இப்போதே ஒரு மலையின் மீது ஏறிக் கொள்கிறேன்; அது என்னை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிவிடும்”.

அதற்கு நூஹ் கூறினார்: “இன்று அல்லாஹ்வின் தீர்ப்பிலிருந்து காப்பாற்றக் கூடியது எதுவும் இல்லை. அல்லாஹ் யாருக்கு கருணை புரிந்தானோ அவர்கள் மட்டும் காப்பாற்றப்படுவார்கள்.
இதற்குள்ளாக இருவருக்குமிடையே ஓர் அலை குறுக்கிட்டு மூழ்கடிக்கப்பட்டவர்களில் அவன் சேர்ந்துவிட்டான்.

(பின்பு) நூஹ் தன் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்: என் இறைவனே! என்னுடைய மகன் எனது குடும்பத்தைச் சேர்ந்தவன் மேலும், திண்ணமாக உனது வாக்குறுதி உண்மையானதாகும். மேலும், நீயே தீர்ப்பளிப் போர்களில் உயர்ந்தோனாவாய்!
அதற்கு அல்லாஹ் பதிலளித்தான்: “நூஹே! திண்ணமாக அவன் உனது குடும்பத்தைச் சார்ந்தவன் அல்லன். அவன் ஒரு வீணான செயல் ஆவான். எதனுடைய உண்மை நிலையை நீர் அறிய மாட்டீரோ அதைப்பற்றி நீர் எம்மிடம் கேட்காதீர்!
அறிவிலிகளில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம் என நான் உம்மை அறிவுறுத்துகிறேன்.
(உடனே) நூஹ் பணிவுடன் கூறினார்: “என் இறைவனே! எதைப் பார்த்து எனக்கு அறிவு இல்லையோ அதைப் பற்றி உன்னிடம் கேட்பதைவிட்டு உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். நீ என்னை மன்னிக்காவிட்டால், என்மீது அருள்புரியாவிட்டால் நான் அழிந்தே போய்விடுவேன்.
அல்-குர்ஆன்: 11: 42 முதல் 47 வரை)
தனது மகன் மீது கொண்ட அதீத பாசத்தால் அல்லாஹ்விடம் கெஞசிக் கேட்டார்கள் நூஹ் (அலை) அவர்கள்.
அல்லாஹ்வின் பதில் இப்படி அமைந்தபின நூஹ் தம் மகன் விஷயத்தில் மன்றாடிக் கேட்பதைத் கூட நிறுத்தி விடுவதற்கு மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள்.
பத்ரு யுத்தம் தீமையின் ஆணி வேர்கள் பிடுங்கி எறியப்பட்ட நாள் நச்சுப் பாம்புகளைவிட கொடியவர்கள் நசுக்கப்பட்ட நாள்.
அந்த பத்ர் யுத்தத்தில்
தன் சுக போகமான வாழ்வையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு நபிகளாரோடும், நபித் தோழர்களோடும், இஸ்லாமிய பண்பியலில்தான் வாழ்வேன் என சூளுரைத்த முஸ் அப் பின் உமைர் (ரலி) அவர்கள் ஒருபுறம் நேர் எதிரே உருவிய வாளோடு தம் அருமைச் சகோதரர் உபைத் பின் உமைர் மறுபுறம்,
சகோதர பாசமா? சன்மார்க்கத்தின் மீதான நேசமா? வென்றது சன்மார்க்கத்தின் மீதான நேசம் தான்,
ஆம்! அடுத்த கணமே, தன் சகோதர்ரை தம் வாளுக்கு இறையாக்கினார் முஸ் அப் (ரலி) அவர்கள்.
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்
பாகம்:4, பக்கம்:420
தன்னோடு பிறக்காவிட்டாலும் இறைநம்பிக்கையாளர்களை தம் சொந்த சகோதரனைப் போலல்லவா உரிமை வழங்கச் சொல்கிறான் அல்லாஹ்.
நம் சொந்த சகோதரனாக இருந்தாலும் இஸ்லாத்தின் உரிமையை பறிக்க முயலும் பட்சத்தில் சகோதர பாசத்தைவிட சன் மார்க்க இஸ்லாத்தின் மீதான நேசமே உயர்வாய் தெரிந்த்து முஸ் அப் (ரலி) அவர்களுக்கு,
இறைத்தூதர் நூஹ் (அலை)மற்றும் இறைத்தூதர் லூத் (அலை) ஆகிய இருவர்களின் துணைவியரும் இறை நிராகரிப்பில் அதீத ஆர்வம் காட்டியபோது,
குறிப்பாக இறைத்தூதர் லூத் (அலை) அவர்களின் மனைவி இறைமறுப்பாளர்களின் மீது அனுதாபம் காட்டினாள், அவர்கள் தரங்கெட்ட செயலை செய்வதற்கு துணை போனாள்.
தங்களின் மனைவியரை கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டபோது மனமுவந்து இருவரம் கைவிட்டு விட்டனர்.

“நூஹ் உடைய மனைவியையும், லூத் உடைய மனைவியையும் அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றான்.
இவ்விருவரும் நம்முடைய இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர்.
எனினும், அவ்விருவரும் த்த்தமது கணவருக்கு துரோகமிழைத்தனர். பிறகு அவ்விரு நல்லடியார்களும் அல்லாஹ்வுக்கு எதிராக இவர்களுக்கு எவ்வித பயனையும் அளிக்க இயலவில்லை. அவ்விரு பெண்களிடம் நரக நெருப்புக்குள் செல்வோருடன் சேர்ந்து நீங்களும் சொல்லுங்கள் என்று சொல்லப்பட்டது
அல்-குர்ஆன்: 66:10
தன்னையே இறைவன் என்றான் ஃபிர்அவ்ன், தன் வேலையாட்களான சூனியக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்றபோது தன்னிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றான் ஃபிர் அவ்ன், அவனின் துணைவியார் ஆஸியா பின்த்மஸாஹிம் (ரலி) இதயத்தில் இஸ்லாம் குடி புகுந்த்து.
தங்களின் கண்முன்னே ஆடம்பர வாழ்வும், அரசி என்கிற பட்டமும், பணிவிடைபுரிய வரிசையில் நிற்கிற பணிப்பெண்களும், சொகுசு வாழ்க்கையும் தொடுகிற தூரத்தில் தான் இருந்த்து.
தூக்கி எறிந்தார்கள் ஆடம்பர மோகத்தை,
வாரி அணைத்துக் கொண்டார்கள் வல்ல ரஹ்மானின் நினைவோடு வாழும் வாழ்க்கையை.....
ஆம்! சாக்கடையில், ஒருபோதும் நறுமணம் கமழாது!
கணவன் – மனைவியின் உறவை அல்லாஹ் “அமைதியும், சாந்தியும் தவழும் உறவென்பான்.
இறைமறுப்பாளர்களின் கீழ் எப்படி இறை நம்பிக்கையாளர்கள் சாந்தியும் அமைதியும் பெற முடியும்.
ஆகவே, உதறித்தள்ளினார்கள் அன்னை ஆஸியா (ரலி).
உயர்த்திக் கூறினான் வல்லோன் அல்லாஹ் வான்மறையில்
இப்படி....
ஃபிர் அவ்னுடைய மனைவியை அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். ஒரு சமயம் தம் இறைவனிடம் பிரார்த்த்த்தார்; என் அதிபதியே! எனக்காக உன்னிடத்தில் – சுவனத்தில் ஓர் மாளிகையை அமைத்துத் தருவாயாக! மேலும் ஃபிர் அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! மேலும் கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக!
அல்-குர்ஆன்: 66:10

அல்லாஹ்வின் கட்டளை மக்காவைவிட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய வேண்டும் என்பதற்காக தமது குடும்பங்களையும் சொந்த பந்தங்களையும் உறவினர்களையும் விட்டுச் செல்ல நேர்ந்ததுபோல் பல நபித் தோழர்கள் அத்தகைய அர்ப்பணிப்பை மேற்கொண்டனர்.

அதற்குப் பிரதி பலனாக மக்கத்து முஹாஜிர்களை தம் உறவினர்களையும் விட மேலானவர்களாக மதிக்கக் கூடியவர்களாக மதீனத்து அன்ஸார்களை அல்லாஹ் உருவாக்கி கொடுத்தான்,

மேற்கூறிய இந்த ஐந்து அம்சங்களும் மனிதனால் மிகவும் மதிக்கப்படக்கூடிய உறவுகள், ஆகும்

தன் உணர்வோடும், சிந்தனையோடும் இரத்தம்போல் கலந்துவிட்ட ஒன்றாகும்.

சொல்லப்போனால், அவன் தன் வாழ்வின் பெரும் பகுதியை இவர்களுக்காகவே செலவழிக்கின்றான்.


இத்தகைய பாசப் பிணைப்புகளையும், குடும்ப்ப் பந்தயங்களையும் இறை நேசத்திற்காக, இறைத்தூதரின் மீதான காதலுக்காக அர்ப்பணிக்க முன்வருமாறு அல்லாஹ் அறை கூவல் விடுகிறான்.

5 comments:

  1. மௌலானா! உங்கள் சேவையால் நீங்களும் போற்றப் படுகிறீர்கள்!

    ReplyDelete