Thursday, 30 April 2015

நிலஅபகரிப்பும்... இஸ்லாமிய வழிகாட்டலும்...



நிலஅபகரிப்பும்... இஸ்லாமிய வழிகாட்டலும்...



தனது நிலத்தைப் பாழ்படுத்தும் ஒரு நாடு தன்னையே பாழ்படுத்திக் கொள்கிறதுஎன்றான் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் எனும் அறிஞன்.

உலகில் ஒரு விஷயத்துக்காக உழைக்க வேண்டும், சண்டையிட வேண்டும், உயிரையே பணயம் வைக்க வேண்டும் என்றால், அது நிலத்துக்காகத்தான். ஏனெனில், அதுதான் நிலையானதுஎன்றான் மார்கரெட் மிச்செல் எனும் அறிஞன்.

இப்படி உலகின் பெரும்பாலான அறிஞர்கள் நிலத்திற்கும் மனிதனுக்கும் இடையேயான தொடர்பு குறித்து நிரம்பவே கூறியிருக்கின்றார்கள்.

கடந்த ஒரு மாத காலமாக இந்திய அரசியலில் சூறாவளியாய் சுழற்றி அடிக்கும் பெரும் பிரச்சனைக்ரோனி கேபிடலிஸ்ட்” – பெருநிறுவனங்களின், பெருமுதலாளிகளின் பிரதிநிதி என்று அழைக்கப்படும் பிரதமர் மோடியின் அரசு கொண்டு வரத்துடிக்கும்நிலம் கையகப்படுத்தும் மசோதாஎன்றால் அது மிகையல்ல.

இந்திய தேசத்தில் இருக்கிற 8000 சிறிய, பெரிய அரசியல் கட்சிகள், இயக்கங்களில் விரல் விட்டு எண்ணுகிற அளவிலான சில கட்சிகளைத் தவிர்த்து ஏனைய பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலுவாக எதிர்க்கும் மசோதாவும் அதுதான்.

சமீபத்தில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டது இந்த மசோதாவின் மீது  புதியதோர் பார்வையை பதிய வைத்திருக்கிறது.

நிலம் கையகப்படுத்துதல் சம்பந்தமாக மோடி அரசின் அதீத ஆசைக்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் 1894ல் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம் தான், அடிப்படையாக உள்ளது.

அடுத்து, அந்தச் சட்டத்தின் படி, தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவது எளிதாக இல்லை என, முந்தைய காங்., கூட்டணி அரசு உணர்ந்தது.

அதையடுத்து, 'நிலம் கையகப்படுத்துதலில், நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் வெளிப்படையான தன்மை, மறுகுடியமைப்பு, மறுகுடியேற்ற திருத்த சட்டம்' என்ற பெயரில், முந்தைய காங்., அரசு, 2013ல், ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.அந்த சட்டத்தின் அம்சங்கள் தங்களுக்கு போதாது என, கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு கருதியது.

ஏராளமான தொழிற் திட்டங்களை, மத்திய அரசு கொண்டு வர உள்ளதாலும், அவற்றிற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த, தற்போது உள்ள சட்டம் போதுமானதாக இருக்காது என்ற காரணத்தாலும், மோடி அரசு, கடந்த ஆண்டு டிசம்பரில், அவசர சட்டம் பிறப்பித்தது.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என கருதி, முந்தைய காங்., அரசு கைவிட்டிருந்த, 13 சட்டங்களை, மோடி அரசு, தன் அவசர சட்டத்தில் சேர்த்தது.

இதனால் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து, நீதிமன்றங்களுக்கு செல்ல முடியாது; விவசாயிகள், நில உரிமையாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.

கடந்த ஆண்டு டிசம்பரில், மோடிஅரசு பிறப்பித்த அவசர சட்டத்தில், ஐந்து அம்சங்களுக்கான நிலம் கையகப்படுத்துதலுக்கு, நிலத்தின் உரிமையாளரிடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவை,
*
மிகப்பெரிய தொழில் வளாகங்கள்
*
தனியார், பொதுத் துறை இணைந்த திட்டங்கள்
*
கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள்
*
குறைந்த விலை வீட்டுவசதி திட்டங்கள்
*
ராணுவ திட்டங்கள்.

இந்த தேசத்தின் வளங்களைச் சுரண்ட வேண்டும் என்ற பேராசையால் தான் ஆங்கிலேய அரசு இத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனாலும், ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலம் கையகப்படுத்துதலால் ஏற்பட்ட இழப்பை விட சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட இழப்பு அபரிமிதமானதும், அதிர்ச்சிக்குரியதுமாகும்.

”1947 –ல் தொடங்கி 2004 வரையில் நிலம் கையகப்படுத்துதலால் தங்களுடைய வாழ்விடங்களை விட்டும் வெளியேறியவர்கள் 6 கோடி பேர்என்கிறது வால்டர் பெர்னாண்டஸ் என்பவரின் ஆய்வு.

நிலங்களிலிருந்து இந்தியப் பழங்குடிகள் வெளியேற்றப்பட்டது தான் கொலம்பஸ் காலத்துக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய நிலப்பறிப்புஎன்கிறது 2009 –ல் ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டஅரசின் வேளாண் உறவும், முற்றுப் பெறாத நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளும்எனும் தலைப்பிலான அறிக்கை.

ஆக, மேக் இன் இந்தியா திட்டத்தால் இந்த இந்திய தேசம் என்ன வளர்ச்சியை அடையப் போகிறது? என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஓர் இறை நம்பிக்கையாளனைப் பொறுத்த வரையில் நிலம் என்பது வெறும் மண் மட்டும் அல்ல படைத்த இறைவனின் புறத்திலிருந்து மனித சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்ற மாபெரும் அருட்கொடையாகும்.

ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு நிலத்திற்கான தேவை இந்த உலகோடு முடிந்து விடும் ஒன்றாகவும் இஸ்லாம் கூறி விட வில்லை. மாறாக, மண்ணறை எனும் மாபெரும் உலகிலும், மறுமையில் சுவனத்திலும் தொட்டுத் தொடர்ந்திடும் ஓர் உயரிய பொக்கிஷம் என்பதாகவும் கூறுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்:

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ

 பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியினாலான பெருங் குவியல்கள், உயர் ரகக் குதிரைகள், கால் நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது ஆசை கொள்வது (நேசம் கொள்வது) மனிதர்களுக்கு அழகாக்கப் பட்டுள்ளது. இவை அனைத்தும் இவ்வுலகின் வாழ்க்கைக் குரிய சாதனங்கள் ஆகும். திண்ணமாக, அழகிய முடிவு அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது.”      {அல்குர்ஆன்,3:14.}

وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ ()
மனிதர்களே! மேலும், நிச்சயமாக நாம் உங்களை பூமியில் அனைத்து அதிகாரங்களுடன் வசிக்கச் செய்திருக்கின்றோம். அதில் உங்கள் வாழ்க்கைக்கான அத்துனை வசதிக்குரிய சாதனங்களையும் ஆக்கித்தந்திருக்கின்றோம்”. (அல்குர்ஆன்:7:10)

எனவே, நிலம் என்பது வெறுமெனே மண் என்பது மாத்திரமல்ல. நாம் வசிக்கும் வீடு, கடை, விவசாய நிலம், தோட்டம் என பல்வேறு பயன் பாடுகளைக் குறிக்கும் விரிவான பொருளுடையதாகும்.

மேலும், இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான ஜகாத், ஹஜ், ஸதகா ஆகியவற்றை நிறைவேற்ற உதவியாக இருப்பதும் இந்த நிலங்களின் மூலம் கிடைக்கிற வருமானமும், சம்பாத்தியமும் தான்.

பெரும் பாக்கியமான வாழ்வு….

அல்லாஹ் ஸபஃ எனும் சமூகத்தார் வசித்த பகுதியைப் பற்றி அடையாளப் படுத்தும் போது, பூத்துக் குழுங்கும் பூஞ்சோலைகளாலும், பசுமையான தோட்டங்களாலும், சூழப்பட்ட ஓர் பகுதியில் வாழ்ந்ததாக கூறுகின்றான்.

لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ ()

ஸபஃ சமூகத்திற்கு அவர்கள் வசித்த இடத்திலேயே ஒரு சான்று இருந்தது. வலப்புறமும் இடப்புறமும் இரு தோட்டங்கள் இருந்தன. நாடோ நன்கு தூய்மையாய் இருக்கிறது. படைத்த இறைவனோ பெரும் மன்னிப்பாளனாய் இருக்கின்றான். ஆகவே, உங்கள் இறைவன் உங்களுக்கு வழங்கிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், மேலும், உங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்!” ( அல்குர்ஆன்: 34:15 )

பின்னர், அந்த சமூகம் இறைக்கட்டளைகளைப் புறக்கணித்த காரணத்தால் அத்தகைய வாழ்க்கைச் சூழலை இழந்ததாக அடுத்த இரு வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ் சுவனத்து இன்பங்களைப் பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடும் போது ஏராளமான நில புலன்களோடும், பசுமை நிறைந்த சூழல் கொண்ட வனப்பான ஓர் வாழ்க்கை உண்டென்றே கூறுகின்றான்.

எனவே, மனித வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கிற இந்த நிலம் குறித்தும், அதன் மீது ஓர் இறை நம்பிக்கையாளன் கொண்டிருக்க வேண்டிய தொடர்பு குறித்தும், இஸ்லாம் நிறைவானதொரு வழியைக் காட்டி இருக்கிறது.

இன்றைக்கு உலகில் நடைபெருகிற பெரும்பாலான குற்றச் செயல்களின் பிண்ணனியில் நிலத்திற்கும் ஓர் தொடர்பு இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு இஸ்லாமிய வழிகாட்டலை நாம் பார்ப்போம்.

பிறர் நிலத்தை ஆக்கிரமிப்பதும், அபகரிப்பதும்


எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை கழுத்தில் மாலையாகக் கட்டி தொங்க விடப்படுவார்என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக ஸயீத் இப்னு ஜைத் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி )


அபூ ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: “எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள்அபூஸலமாவே! பிறரது நிலத்தை எடுத்துக் கொள்ளும் விஷயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி {ஸல்} அவர்கள்எவர் ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறாரோ மறுமையில் அவர் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாகக் கட்டி தொங்க விடப்படும்என்று கூறினார்கள்.         ( நூல்: புகாரி )

حدثنا عبد الوارث بن سفيان حدثنا قاسم بن أصبغ أخبرنا المطلب ابن سعيد أخبرنا عبد الله بن صالح قال: حدثني الليث قال: حدثني ابن الهادي عن أبي بكر بن محمد بن عمرو بن حزم قال: جاءت أروى بنت أويس إلى أبي محمد بن عمرو بن حزم فقالت له: يا أبا عبد الملك إن سعيد بن زيد بن عمرو بن نفيل قد بنى ضفيرة في حقي فأته بكلمة فلينزع عن حقي فوالله لئن لم يفعل لأصيحن به في مسجد رسول الله صلى الله عليه وسلم فقال لها: لا تؤذي صاحب رسول الله صلى الله عليه وسلم فما كان ليظلمك ولا ليأخذ لك حقاً. فخرجت وجاءت عمارة بن عمرو وعبد الله بن سلمة فقالت لهما ائتيا سعيد بن زيد فإنه قد ظلمني وبنى ضفيرة في حقي فوالله لئن لم ينزع لأصيحن به في مسجد رسول الله صلى الله عليه وسلم. فخرجا حتى أتياه في أرضه بالعقيق فقال لهما: ما أتى بكما؟ قالا: جاءتنا أروى بنت أويس فزعمت أنك بنيت ضفيرة في حقها وحلفت بالله لئن لم تنزع لتصيحن بك في مسجد رسول الله صلى الله عليه وسلم فأحببنا أن نأتيك ونذكر ذلك لك. فقال لهما: إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " من أخذ شبراً من الأرض بغير حقه يطوقه الله يوم القيامة من سبع أرضين " . فلتأت فلتأخذ ما كان لها من الحق اللهم إن كانت كاذبة فلا تمتها حتى تعمي بصرها وتجعل ميتتها فيها فرجعوا فأخبروها ذلك فجاءت فهدمت الضفيرة وبنت بنيانا فلم تمكث إلا قليلاً حتى عميت وكانت تقوم بالليل ومعها جارية لها تقودها لتوقظ العمال فقامت ليلة وتركت الجارية فلم توقظها فخرجت تمشي حتى سقطت في البئر فأصبحت ميتة.

மர்வான் இப்னு ஹகம் (ரஹ்) அவர்களிடம் அர்வா பிந்த் உவைஸ் எனும் பெண்மனி சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட பத்து நபித்தோழர்களில் ஒருவரான ஸயீத் இப்னு ஜைத் (ரலி) அவர்களைக் குறித்து நில அபகரிப்புக் குற்றச்சாட்டு ஒன்றை சமர்ப்பித்தார்.

அபூ அப்துல் மலிக் அவர்களே! எனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை ஸயீத் இப்னு ஜைத் அவர்கள் அபகரித்துக் கொண்டார். நீங்கள் வந்து பேசி என் நிலத்தை அவரிடம் இருந்து மீட்டுத்தரவேண்டும். இல்லையெனில், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! மஸ்ஜிதுன் நபவீக்கு முன்னால் நின்று நான் கூச்சலிடுவேன்என்று கூறினாள்.

அப்போது, மர்வான் அவர்கள்அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் நபித் தோழருக்கு நோவினை கொடுக்காதே! அவர் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார். முதலில் இங்கிருந்து கிளம்புஎன்று விரட்டி விட்டார்கள்.

அங்கிருந்து வெளியேறிய அப்பெண்மனி நேராக அம்மாரா இப்னு அம்ர், மற்றும் அப்துல்லாஹ் இப்னு ஸலமா என்பவர்களிடத்தில் சென்று மர்வான் அவர்களிடத்தில் முறையிட்டது போன்று முறையிட்டாள்.

இருவரும் ஸயீத் (ரலி) அவர்களிடம் வந்து அர்வா வின் முறையீடு குறித்தும், அவளின் மிரட்டல் குறித்தும் கூறிவிட்டு இது குறித்து உங்களின் அபிப்பிராயம் என்ன? என்று கேட்டனர்.

அப்போது, ஸயீத் (ரலி) அவர்கள் “”எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை கழுத்தில் மாலையாகக் கட்டி தொங்க விடப்படுவார்என நபி {ஸல்} அவர்கள் கூறியதை ( தங்களின் செவியைப் பிடித்துக் காட்டி ) இந்தச் செவியால் நான் கேட்டிருக்கின்றேன்.

பிறகு, நான் எப்படி அவ்வாறு அப்பெண்மனியின் நிலத்தின் ஒரு பகுதியை அபகரிப்பேன்என்று அவ்விருவரிடமும் கூறிவிட்டு

தங்களின் இரு கரங்களையும் வானை நோக்கி உயர்த்திஇறைவா! அவள் பொய் சொல்கிறாள் என்றால் அவளின் பார்வையை குருடாக்கி விடு! எந்த நிலத்தை நான் அபகரித்ததாகச் சொல்கிறாளோ அதிலேயே அவளை மரணிக்கச் செய்! என துஆச் செய்தார்கள்.

அல்லாஹ் ஸயீத் அவர்களின் துஆவைக் கபூலாக்கினான். பின் நாளில் அது போன்றே அவளின் மரணமும் நடந்தேறியது.

மக்கள் கூடஅல்லாஹ் அர்வாவைக் குருடாக்கியது போல் உன்னையும் குருடாக்குவானாக! என ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிலையை நாங்கள் கண்டோம் என அலாவு இப்னு அப்துர்ரஹ்மான் மற்றும், முஹம்மத் இப்னு அபூபக்ர் ஆகிய இந்த அறிவிப்பின் இரு ராவிகளும் கூறுகின்றார்கள்.

                       ( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபத்தில் அஸ்ஹாப் )

பொதுமக்களின் பாதைகளை ஆக்கிரமிப்பது


அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். அதற்கு, நபித்தோழர்கள்எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக்கொள்கிற எங்கள் சபைகள்என்று கூறினார்கள்.

அப்படியானால், நீங்கள் அந்தச் சபைகளுக்கு வந்து அமரும் போது , பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள்பாதையின் உரிமை என்ன?” என்று வினவ, நபி {ஸல்} அவர்கள்அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும் உங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்வதும், பாதையில் செல்வோருக்கு இடையூறு செய்யாமல் இருப்பதும், ஸலாமுக்கு பதில் கூறுவதும், நன்மை புரியும் படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் தான் அதன் உரிமைகள் ஆகும்என்று நபி {ஸல்} அவர்கள் பதில் கூறினார்கள்.                                       ( நூல்: புகாரி )

தொழுகைக்காக பொது இடங்களை ஆக்கிரமிப்பது


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “ஏழு இடங்களில் தொழுவதை நபி {ஸல்} அவர்கள் தடை செய்தார்கள். அவை, கழிவுப் பொருட்கள் கொட்டும் இடம், குப்பை மேடு, அடக்கஸ்தலம், பொதுமக்கள் நடமாடும் இடம், குளியல் அறை, ஒட்டகை தண்ணீர் குடிக்கும் இடம், கஅபாவின் மேற்பகுதி ஆகியவை ஆகும்.                                                ( நூல்: திர்மிதீ )

அநாதைகளின் சொத்துக்களை அபகரிப்பது

عن جابر في سبب نزول الآية{ يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الأنْثَيَيْنِ }: قال الإمام أحمد: حَدّثنا زكريا بن عدي، حدثنا عبيد الله -هو ابن عَمْرو (3) الرقيّ -عن عبد الله بن محمد بن عَقيل، عن جابر قال: جاءت امرأة سعد بن الرَّبيع إلى رسول الله صلى الله عليه وسلم فقالت: يا رسول الله، هاتان ابنتا سعد بن الربيع، قُتل أبوهما معك في أحُد شهيدا، وإن عمهما أخذ مالهما، فلم يَدَعْ لهما مالا ولا يُنْكَحَان إلا ولهما مال. قال: فقال: "يَقْضِي اللَّهُ في ذلك". قال: فنزلت آية الميراث، فأرسل رسولُ الله صلى الله عليه وسلم إلى عمهما فقال: "أعْطِ ابْنَتي سعد الثلثين، وأُمُّهُمَا الثُّمُنَ، وما بقي فهو لك".

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபைக்கு தன்னுடைய இரு பெண்மக்களை அழைத்துக் கொண்டு ஸஅத் இப்னு ரபீஉ (ரலி) அவர்களின் மனைவி வருகை தந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதோ இவ்விரண்டு பெண்மக்களின் தந்தை உங்களோடு உஹதிலே கலந்து கொண்டு ஷஹீதாகி விட்டார்.

என் கணவரின் சகோதரர் இவ்விரண்டு பெண்மக்களின் சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டு விரட்டி விட்டார். எந்த வருமானமும் இல்லாத நான் எவ்வாறு இந்த குழந்தைகளை வளர்த்து, ஆளாக்கி, திருமணம் செய்து கொடுப்பேன். எனக்கு அழகியதொரு தீர்வைச் சொல்லுங்கள்என்று வேண்டி நின்றார்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் அல்லாஹ் உம் விஷயத்தில் சீக்கிரம் ஒரு தெளிவைப் பிறப்பிப்பான்என்று கூறினார்கள். பின்னர் வராஸத் பற்றிய அந்நிஸா அத்தியாயத்தின் 10 மற்றும் 11 –வது ஆயத் இறங்கியது.

நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக (அபகரித்துக் கொண்டு அதன் மூலம்) உண்கிறார்களோ, அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், வெகு விரைவில் கொழுந்து விட்டு எரியும் நரக நெருப்பில் வீசியெறியப்படுவார்கள்”.                     ( அல்குர்ஆன்: 4:10,11 )

உடனடியாக, நபி {ஸல்} அவர்கள்ஸஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களின் சகோதரரை அழைத்து உம் சகோதரரின் இரு பெண்மக்களுக்கும் மூன்றில் ஒரு பாகத்தையும், உம் சகோதரரின் மனைவிக்கு எட்டில் ஒரு பாகத்தையும் கொடுப்பீராக! மீதமுள்ளதை நீர் எடுத்துக் கொள்வீராக!” என்று கூறினார்கள்.


பிறரின் நிலத்தில் சேதத்தை விளைவிப்பது….

قال ابن جرير: حدثنا أبو كُرَيْب وهارون بن إدريسَ الأصم قالا حدثنا المحاربي، عن أشعت، عن أبي إسحاق، عن مُرّة، عن ابن مسعود في قوله: { وَدَاوُدَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ } قال: كرم قد أنبتت عناقيده، فأفسدته. قال: فقضى داود بالغَنَم لصاحب الكَرْم، فقال سليمان: غيرُ هذا يا نبي الله! قال: وما ذاك؟ قال: تدفع الكرم إلى صاحب الغنم، فيقوم عليه حتى يعود كما كان، وتدفع الغنم إلى صاحب الكرم فيُصيب منها حتى إذا كان الكرم كما كان دفعت الكرم إلى صاحبه، ودفعت الغنم إلى صاحبها،

ஒரு நாள் நபி தாவூத் (அலை) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்தனர். ஒருவர் விவசாயி, இன்னொருவர் ஆட்டு மந்தை வைத்திருப்பவர்.

நேற்றிரவு இவரின் ஆடுகள் என்னுடைய விளைநிலத்தில் புகுந்து விளைந்த வற்றையெல்லாம் மேய்ந்து நாசமாக்கிவிட்டதுஎன்று தாவூத் (அலை) அவர்களிடம் முறையிட்டார் விவசாயி.

அவ்வாறு நடந்தது உண்மை தானா? என மந்தையின் உரிமையாளரிடம் வினவ, அவர் ஆம் என்று உறுதி படுத்தினார்.

இது குறித்து, தாவூது (அலை) அவர்கள் தீர்ப்பு வழங்குகையில்மந்தையின் உரிமையாளர் தம் ஆட்டு மந்தையை விவசாயியிடம் அப்படியே ஒப்படைத்து விட வேண்டும்என்று உத்தரவிட்டார்கள்.

விவசாயியும், மந்தையின் உரிமையாளரும் வெளியே வந்த போது, தீர்ப்பு  குறித்து விசாரித்தார்கள் ஸுலைமான் (அலை) அவர்கள்.

அதற்கு. நான் நீதிபதியாக இருந்திருப்பின் இவ்வாறில்லாமல் இருவருக்கும் நன்மை பயக்கும் ஓர் தீர்வை தீர்ப்பாக வழங்கியிருப்பேன்என்று கூறினார்கள்.

அந்த இருவரும் மீண்டும் தாவூத் (அலை) அவர்களிடம் சென்று, நபி ஸுலைமான் (அலை) அவர்கள் கூறியதைத் தெரிவித்தார்கள்.

நபி ஸுலைமான் (அலை) அழைத்து வரப்பட்டு, அத்தைகைய நன்மை பயக்கும் தீர்ப்பு என்ன? என்று தாவூத் (அலை) அவர்கள் கேட்டார்கள்.

அப்போது, நபி ஸுலைமான் (அலை) அவர்கள்மந்தையின் உரிமையாளர், விவசாயியிடம் ஒப்படைத்து விட வேண்டும். மேலும், ஆட்டின் பாலையும், உரோமத்தையும் அவற்றின் இதர பலன்களையும் விவசாயி அனுபவித்துக் கொள்ளலாம்.

மேலும், மந்தையின் உரிமையாளர் விவசாயியின் நிலத்தில் உழுது, பயிரிட்டு ஆடுகள் மேய்வதற்கு முன்னர் அந்த விவசாய நிலம் எவ்வாறு இருந்ததோ அந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

பின்னர், அப்படியே அந்த விவசாயியிடம் அந்த நிலத்தை ஒப்படைத்து விட்டு, தனது மந்தையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

அதுவரை, ஆடுகள் விவசாயியிடம் தான் இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அதன் முழு உரிமையும் வழங்கட்டாது. இதுவே என்னுடைய தீர்ப்பாகும்” என்றார்கள்.

இது கேட்ட, தாவூத் (அலை) அவர்கள் “ஸுலைமானே! நீ அளித்த தீர்ப்பே நேர்மையான தீர்ப்பாகும்” எனக்கூறி தம் தீர்ப்பை மாற்றி ஸுலைமான் (அலை) அவர்களின் தீர்ப்பையே வழங்கினார்கள்.

                     ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் அல் ஃகாஸின் )

எனவே, பிறரின் நிலத்தின் மீதான உரிமையில் தனி மனிதாக இருக்கட்டும், குழுவாக இருக்கட்டும், குடும்பமாக இருக்கட்டும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மறுமை நாளிலும், இவ்வுலகிலும் பேராபத்தைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை மேலே சொன்ன விஷயங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

பொதுக்காரியத்திற்கும், பொது மக்களின் பயன்பாடுகளுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் நிலத்தை அபகரிக்கலாமா?...

استدعت توسعة عمر بن الخطاب رضي الله عنه للمسجد النبوي الشريف أن يضم الدور التي كانت قريبة من المسجد، ويدخلها فيه، فكان -رضي الله عنه- يعرض على أهلها التعويض من بيت مال المسلمين لمن أراد البيع، ومن أراد أن يتصدق بداره على المسجد قبل منه ذلك وشكره على صدقته. فكان ممن تصدق ببعض داره: عبد الله بن جعفر بن أبي طالب، وأبناء أبي بكر الصديق، رضي الله عن الجميع، فقد روى السمهودي في رواية ليحيى عن أبي الزناد: (أن عمر بن الخطاب -رضي الله عنه- لما زاد في المسجد، دعا من كان له إلى جانبه منزل، فقال: اختاروا مني بين ثلاث خصال: إما البيع فأثمن، وإما الهبة فأشكر، وإما الصدقة على مسجد رسول الله صلى الله عليه وسلم، فأجابه الناس)
ومن الدور التي أدخلها عمر رضي الله عنه في توسعة المسجد، دار أسامة وإلى الغرب منها، دار زيد بن حارثة، وإلى الغرب منها دار جعفر بن أبي طالب، وإلى الغرب منها دار العباس، هذا من جهة القبلة. كما أدخل دار سعد بن أبي وقاص، ودار عبد الرحمن بن عوف، وإلى الشمال منها دار الصديق، ثم دار عبد الله بن مسعود، وهذه من الجهة الغربية
وروى السمهودي عن ابن سعد عن سالم أبي النضر قال: لما كثر المسلمون في عهد عمر رضي الله عنه، وضاق بهم المسجد، اشترى عمر ما حول المسجد من الدور، إلا دار العباس بن عبد المطلب -رضي الله عنه- وحجرات أمهات المؤمنين - رضي الله عنهن، فقال عمر للعباس: يا أبا الفضل، إن مسجد المسلمين قد ضاق بهم، وقد ابتعت ما حوله من المنازل نوسع به على المسلمين في مسجدهم.
فقال العباس: ما كنت لأفعل، قال: فقال له عمر: اختر مني إحدى ثلاث، إما أن تبيعنيها بما شئت من بيت المال، وإما أن أخطك حيث شئت من المدينة وأبنيها لك من بيت مال المسلمين، وإما أن تصدق بها على المسلمين فتوسع في مسجدهم. فقال: لا، ولا واحدة منها. فقال عمر: اجعل بيني وبينك من شئت، فقال: أبي بن كعب، فانطلقا إلى أبي فقصا عليه القصة، فقال أبي، إن شئتما حدثتكما بحديث سمعته من رسول الله صلى الله عليه وسلم، فقالا: حدثنا، قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الله أوحى إلى داود أن ابن لي بيتا أذكر فيه، فخط له هذه الخطة، خطة بيت المقدس، فإذا تربيعتها بزاوية بيت رجل من بني إسرائيل، فسأله داود أن يبيعه إياها، فأبى، فحدث داود نفسه أن يأخذه منه، فأوحى الله إليه: أن يا داود أمرتك أن تبني لي بيتا أذكرفيه، فأردت أن تدخل في بيتي الغصب، وليس من شأني الغصب، وإن عقوبتك ألا تبنيه، قال: يا رب فمن ولدي، قال: فمن ولدك
فأخذ عمر بمجامع أبي بن كعب، فقال: جئتك بشيء فجئت بما هو أشد منه، لتخرجن مما قلت فجاء يقوده حتى دخل المسجد، فأوقفه على حلقة من أصحاب رسول الله صلى الله عليه وسلم، فيهم أبو ذر: فقال أبي: نشدتكم الله رجلا سمع رسول الله صلى الله عليه وسلم يذكرحديث بيت المقدس حين أمر الله داود أن يبنيه إلا ذكر، فقال أبو ذر: أنا سمعته من رسول الله صلى الله عليه وسلم.، وقال آخر: أنا سمعته، يعني من رسول الله صلى الله عليه وسلم، قال: فأرسل أبيا.
قال: فأقبل أبي على عمر، فقال يا عمر: أتتهمني على حديث رسول الله صلى الله عليه وسلم؟ فقال عمر: والله يا أبا المنذر ما اتهمتك عليه، ولكن أردت أن يكون الحديث عن رسول الله صلى الله عليه وسلم ظاهرا. قال:
 وقال عمر للعباس
اذهب فلا أعرض لك في دارك، فقال العباس: أما إذ قلت ذلك فإني قد تصدقت بها على المسلمين أوسع


ஹிஜ்ரி 17 –ஆம் ஆண்டு, உமர் (ரலி) ஆட்சிப்பொறுப்பிற்கு வந்து நான்காண்டுகள் உருண்டோடி விட்டது.

மெல்ல, மெல்ல இஸ்லாம் அருகே இருக்கும் நாடுகளுக்கு பரவிக்கொண்டிருந்த இனிமையான தருணம் அது.

மஸ்ஜிதுன் நபவீ உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்களின் கூட்ட நெரிசலால் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள் பள்ளியை விஸ்தரிக்க முடிவெடுத்தார்கள்.

அதற்காக, பள்ளியைச் சுற்றி இருக்கிற நபித்தோழர்களின் வீட்டை இடித்து, அந்த இடத்தையும் சேர்த்து கட்டினால் தான் பள்ளியை விரிவாக்கம் செய்ய முடியும் என்ற நிலையையும் உணர்ந்தார்கள்.

பள்ளியைச் சுற்றிலும் ”உஸாமா (ரலி), ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), மற்றும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), அப்துர்ர்ஹ்மான் இப்னு அபூபக்ர் (ரலி), முஹம்மத் இப்னு அபூபக்ர் (ரலி), முஃமின்களின் அன்னையர் நபி {ஸல்} அவர்களின் தூய மனைவியர் ஆகியோரின் வீடுகள் இருந்தன.

உமர் (ரலி) அவர்கள், முஃமின்களின் அன்னையர் வீட்டை மட்டும் விட்டு விட்டு மற்றெல்லாவரின் வீடுகளையும், இடங்களையும் வாங்கிட முடிவெடுத்தார்கள்.

வீட்டின் உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து “ நீங்கள் உங்கள் வீட்டை விலைக்கு கொடுத்தீர்கள் என்றால் அதற்குப் பகரமாக மதீனாவின் இன்னொரு இடத்தில் ஒரு வீட்டையோ, அல்லது அதற்கான கிரயத்தையோ முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது நீங்கள் விரும்பினால் அரசுக்கு அன்பளிப்பாக தரலாம். அரசும் உங்களை நன்றியுணர்வுடன் நடத்தாட்டும். அல்லது நீங்கள் விரும்பினால் அல்லாஹ்விற்காக தருமமாகத் தந்திடுங்கள். கூலி வழங்குவதற்கு அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்களும், அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் இரு மகன்களும் தங்களின் வீடுகளையும், நிலங்களையும் அல்லாஹ்விற்காக தர்மம் செய்து விட்டார்கள்.

மற்ற நபித்தோழர்களில் சிலர் கிரயத்தையும், இன்னும் சிலர் மதீனாவின் பிற பகுதியில் நிலத்தையும் பெற்றுக் கொண்டு அவர்கள் வசித்த வீட்டையும், நிலத்தையும் அரசிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்வு நடைபெறுகிற போது, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஊரில் இல்லை.

ஊரில் இருந்து வந்த உடன் உமர் (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து மற்ற வீட்டின் உரிமையாளர்களிடம் பேசியது போன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் பேசினார்கள்.

ஆனால், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோ மறுத்து விட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ”நீர் இடம் தரவில்லையானால் அரசு உம்முடைய நிலத்தை தம் அதிகாரத்தைக் கொண்டு கைப்பற்றிக் கொள்ளும்!” என்று கூறினார்கள்.

இருவருக்கும் பேச்சு முற்றவே, வழக்காக நீதிமன்றத்தில் தொடுத்தார்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.

நீதிபதி உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் இருவரின் வாதப் பிரதிவாதங்களையும் கேட்டு விட்டு, உமர் (ரலி) அவர்களை நோக்கி “உமர் (ரலி) அவர்களே! நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் “அல்லாஹ் நபி தாவூத் (அலை) அவர்களிடம் பைத்துல் முகத்தஸ்ஸை கட்ட ஆணை பிறப்பித்தான்.

முதற்கட்டமாக அதற்கான இடத்தை தெரிவு செய்யும் பணியை மேற்கொண்டார்கள் தாவூத் (அலை) அவர்கள்.

அங்கே, இஸ்ரவேலர்களில் ஒருவருக்குச் சொந்தமான ஓர் இடம் இருப்பதைக் கண்டு அதை இறையில்லம் கட்ட இடம் தேவைப்படுவதால் தம்மிடம் விலைக்கு தந்து விடுமாறு விலைபேசினார்கள்.

ஆனால், அவரோ தரமுடியாது என்று மறுத்து விட்டார். அதற்கு தாவூத் (அலை) அவர்கள் “மனதிற்குள் இப்படிச் சொல்லிக்கொண்டார்களாம் “ நீ தராவிட்டால் என்ன? நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று.

உடனடியாக, அல்லாஹ் தாவூத் (அலை) அவர்களிடம் வஹீ மூலம் “என்னை வணங்குவதற்காகக் கட்டப்படுகிற ஆலயம் என்பது ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, மோசடி ஆகிய குற்றங்களிலிருந்து நீங்கி பரிசுத்த பூமியாய் இருக்க வேண்டும்” என்று அறிவித்தான்.

பின்னர், அதற்கான இழப்பீடைக் கொடுத்து அந்த இடத்தை வாங்கி பைத்துல் முகத்தஸின் கட்டுமானப்பணியை துவக்கினார்கள் தாவூத் (அலை) அவர்கள்” ஆகவே, உமர் அவர்களே! சற்று நிதானித்து முடிவெடுங்கள்” என்றார்கள்.

இதைக் கேட்டதும், உமர் (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் அவர்களே! உம்முடைய வீடும் வேண்டாம், உம்முடைய நிலமும் வேண்டாம். இரண்டையும் அதிகாரத்தைக் கொண்டு நான் ஒரு போதும் அபகரிக்க மாட்டேன்” என்றார்கள்.

அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் “உமர் (ரலி) அவர்களே! ஒரு மனிதனுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கிற உரிமையை அவர் எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் நான் இவ்வாறு செய்தேன். மேலும், உங்களை விட மஸ்ஜிதுன் நபவீயின் விரிவாக்கத்தில் அதிக நாட்டமுடையவன் நான். எனவே, எந்தப் பிரதி பலனையும் நாடாமல் இதோ என் வீட்டையும், நிலத்தையும் உங்களிடம் தருகின்றேன்” என்றார்கள்.

                                                  ( நூல்: வஃபாவுல் வஃபா )

في زمن سيدنا عمرو بن العاص، قرر سيدنا عمر بناء مسجد كبير جدا ليصلي الناس به، فما كان من القائميين علي البناء من " مهندسين "أن يبحثوا عن أكثر الاماكن المناسبة لبناء المسجد .
و بعد بحث إستقروا علي المكان الذي يتواجد فيه المسجد في زمننا الحالي. و قد كان في المكان بعض البيوت التي رضى أصحابها عن طيب خاطر أن تُهدّ ومن ثم يسكنوا هم في مكان آخر لكي يبني المسجد في هذا المكان .
إلا سيدة مسيحية ، فلقد أبت أن تترك بيتها و تذهب الي بيت آخر للسكن . فحاولوا إقناعها بشتي الطرق ، و لكنها أبت . فقال سيدنا عمرو حسنا أعطوها المال " المقابل لثمن بيتها " و هدّوا البيت - فلقد كان بناء المسجد متوقفا علي بيتها فقط .
فما كان من السيدة إلا أن أرسلت ابنها الي أمير المؤمنيين عمر بن الخطاب شاكيه إليه حالها، ذهب ابنها الي أمير المؤمنيين و بلغه شكواه ، فماذا فعل عمر بن الخطاب ؟
كتب جملة واحدة علي ورقة شجر ، و أعطاها لابن السيدة ، و قال له اعطيها لعمرو بن العاص، اندهش الرجل و قال له أهذه الورقة ستُرجع إلينا بيتنا ؟!
فقال له سيدنا عمر، نعم فقط اعطها له.
عاد الرجل الي مصر و أعطى ورقة الشجر الي سيدنا عمرو ، فإذا به يقول أوقفوا البناء و ردّوا له بيته!!!!
فيا ترى ما الذي كان مكتوبا علي الورقة ؟؟؟
هل كتب فيها: من أمير المؤمنيين عمر بن الخطاب الي عمرو بن العاص والي مصر : أنا آمرك بأن ترد البيت الى أصحابه
இதே போன்ற தொரு சம்பவம், இதே உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் “ஒரு கிறிஸ்தவப் பெண்மனி உமர் (ரலி) அவர்களிடம் எகிப்தின் ஆட்சியாளர் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் இறையில்லம் கட்ட தம்முடைய வீட்டையும், இடத்தையும் ஆக்கிரமித்ததாக குற்றம் சுமத்திய போது, பள்ளியின் அந்தப் பகுதியை இடித்து விட்டு, முன்பு இருந்தது போன்று அப்பெண்மனியின் வீட்டைக் கட்டிக்கொடுக்குமாறு உமர் (ரலி) அவர்கள் எகிப்தின் ஆளுநர் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டார்கள்.

 ( நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்}…லி இமாமி காலித் முஹம்மத் காலித் (ரஹ்).. )

ஆகவே, தனி மனிதாக இருந்தாலும் சரி, அரசாக இருந்தாலும் சரி சம்பத்தப்பட்ட நிலத்திற்கு சொந்தக்காரருக்கு நியாயமான இழப்பையும், அவருக்கான உரிமையையும் கொடுக்காமல் கையகப்படுத்துவது என்பது நாளை மறுமையில் கடுமையான இறைத்தண்டனைப் பெற்றுத்தருவதோடு மாத்திரமல்லாமல், இவ்வுலகத்திலும் நில உரிமையாளனின் மனக்கொதிப்புக்கும், சாபத்திற்கும் ஆளாக நேரிடும் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

தொடர்ந்து இந்திய அரசு மக்கள் விரோதப்போக்கையும், முஸ்லிம் விரோதப் போக்கையும் கடைபிடிக்குமானால் ஒட்டுமொத்த இந்திய தேசமும் மோடி அரசுக்கு மிகச் சரியான பாடத்தை எதிர் வரும் தேர்தல் காலங்களில் தருவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனவே, நாம் உலகில் வாழும் காலத்தில் அனைவரின் உரிமைகளையும், அனைத்து உரிமைகளையும் பேணி வாழ்வதற்கு வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக! ஆமீன்!!                       வஸ்ஸலாம்!!!





3 comments:

  1. காலத்துக்கு ஏற்ற அருமையான பதிவு

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அருமை..அருமையான ஆழமான சிந்தனை பதிவு பாரகல்லாஹ்..ஹஜ்ரத்👌👍💐

    ReplyDelete