Thursday, 11 January 2018

அபாபீல்களாக, ஹுத்ஹுத்களாக வாழ்வோம்!!!



அபாபீல்களாக, ஹுத்ஹுத்களாக வாழ்வோம்!!!



உன் வாழ்வின் லட்சியம் என்ன? அந்த லட்சியத்தை நோக்கிய பயணத்தில் உன் முயற்சி எத்தகையது? என நம்மில் எவரிடமாவது கேட்கப்பட்டால் அது குறித்த நம்முடைய விவரங்களும் விளக்கங்களும் எத்தகைய நீளமானது என்பதை நாம் அறிவோம்.

ஏனென்றால் உலகளாவிய லட்சியங்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நம்மில் பலரும் வாழ்ந்து வருகின்றோம்.

வாழும் காலங்களில் நாம் எந்த லட்சியத்தை நோக்கி பயணப்பட்டாலும் அது கை கூடும் என்று கூறுகிறது இஸ்லாம்.

وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَى (39) وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَى (40

மனிதனுக்கு தான் முயற்சி செய்ததைத்தவிர வேறெதுவும் இல்லை. இன்னும், அவனுடைய முயற்சியின் பயனை விரைவில் அவன் காண்பான்”.

                                                     ( அல்குர்ஆன்:53: 39,40 )

எவருடைய நோக்கம் உலகமாகவும், பெண்ணாகவும் இருக்கின்றதோ உலகை அடைந்து கொள்வார்! பெண்ணை திருமணம் செய்து கொள்வார்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                              ( நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன் )

முயற்சிகள் பயன் தரும், லட்சியங்கள் நிறைவேறும் என்கிற தகவலை பதிவு செய்கிற அதே வேளையில் எந்த லட்சியம் உயர்ந்தது? எந்த முயற்சி சிறந்தது? என பதிவு செய்யவும் இஸ்லாம் தவறவில்லை.


وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الآخِرَةَ وَلا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ

அல்லாஹ் உனக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளின் மூலம் மறுமையின் வீட்டைப் பெற அக்கறை கொள்! என்றாலும், இவ்வுலகத்தின் உனது பங்கையும் நீ மறந்து விட வேண்டாம்! மேலும், அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்திருப்பது போன்று நீயும் உபகாரம் செய்!”                               ( அல்குர்ஆன்: 28: 77 )

இங்கே, அல்லாஹ் மனித சமூகத்தின் உலக வாழ்வின் லட்சியத் தேடல்களை அங்கீகரிப்பதோடு மறுமையின் சுவனத்தேடலையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு மனித சமூகத்திற்கு அறிவுறுத்துகின்றான்.

உலக லட்சியங்களை அடைந்து கொள்ள இலகுவான வழி?

ﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻳُﺮِﻳﺪُ ﺍﻟْﻌَﺎﺟِﻠَﺔَ ﻋَﺠَّﻠْﻨَﺎ ﻟَﻪُ ﻓِﻴﻬَﺎ ﻣَﺎ ﻧَﺸَﺎﺀُ ﻟِﻤَﻦْ ﻧُﺮِﻳﺪُ ﺛُﻢَّ ﺟَﻌَﻠْﻨَﺎ ﻟَﻪُ ﺟَﻬَﻨَّﻢَ ﻳَﺼْﻠَﺎﻫَﺎ ﻣَﺬْﻣُﻮﻣًﺎ ﻣَﺪْﺣُﻮﺭًﺍ
‏‏ ﻭَﻣَﻦْ ﺃَﺭَﺍﺩَ ﺍﻟْﺂﺧِﺮَﺓَ ﻭَﺳَﻌَﻰ ﻟَﻬَﺎ ﺳَﻌْﻴَﻬَﺎ ﻭَﻫُﻮَ ﻣُﺆْﻣِﻦٌ ﻓَﺄُﻭﻟَﺌِﻚَ ﻛَﺎﻥَ ﺳَﻌْﻴُﻬُﻢْ ﻣَﺸْﻜُﻮﺭًﺍ

விரைவில் கிடைக்கக்கூடிய உலகப் பலன்களை ஒருவன் விரும்புகின்றான் எனில், அவனுக்கு அவன் விரும்பியதை இங்கேயே கொடுத்து விடுகின்றோம். நாம் நாடுகின்றவற்றை நாம் நாடுகின்றவர்களுக்கு மட்டும்!.

பிறகு, அவனுடைய பங்கில் நரகத்தை எழுதிவிடுகின்றோம். இறையருளை இழந்தவனாகவும், சபிக்கப்பட்டவனாகவும் அவன் அதில் கிடந்து எரிவான்.

மேலும், இறைநம்பிக்கை கொண்டு யார் மறுமையை விரும்புகின்றாரோ அதற்காகப் பாடுபடுகின்றாரோ அத்தகைய ஒவ்வொருவரின் முயற்சியும் மதிக்கப் படக்கூடியதாகவே இருக்கும்.

இம்மையை விரும்புகின்றவர்களுக்கும், மறுமையை விரும்புகின்றவர்களுக்கும் உலகில் நாமே வாழ்க்கை வசதிகளை அளித்துக் கொண்டிருக்கின்றோம்”.

                                                  ( அல்குர்ஆன்: 17: 18 – 20 )

மேற்கூறிய இறைவசனத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உலகின் லட்சியங்களை நோக்கிய முயற்சியில் பலன் பெறுகின்றவர்களின் இறுதி முடிவு நஷ்டத்திற்குரியதாய் அமைந்து விடும் என்று எச்சரிப்பதோடு, மறுமையை நோக்கமாகக் கொண்டு லட்சியங்களை அமைத்துக் கொள்பவர்களின் உலக வாழ்வில் வசதிகளையும், லட்சியங்களையும் அடைந்து கொள்ள வழிவகை செய்வதாக வாக்களிக்கின்றான்.

ஆகவே, மறுமையை அடிப்படையாகக் கொண்டு உயர்ந்த லட்சியங்களையும், குறிக்கோள்களையும் அமைத்து இந்த உலகத்திலே செயல்படுமாறு மனித சமூகத்தை அல்லாஹ் வலியுறுத்துகின்றான்.

உயர்ந்த லட்சியவாதிகளுக்கு அல்லாஹ் அளிக்கும் கௌரவம்


மேலும், அவர்கள் அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள்.

மேலும், “நாங்கள் அல்லாஹ்வுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம்! நாங்கள் உங்களிடம் இருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்க வில்லை.

நீண்ட கடும் துன்பத்திற்குரிய ஒரு நாளின் வேதனையைக் குறித்து தான் நாங்கள் அஞ்சுகின்றோம்என அவர்களிடம் கூறுகின்றார்கள்.

எனவே, அல்லாஹ் அவர்களை அந்நாளின் தீங்கிலிருந்து காப்பாற்றுவான்! அவர்களுக்குப் பொலிவையும் மகிழ்வையும் அளிப்பான்! அவர்களின் பொறுமைக்குப் பகரமாக சுவனத்தையும், பட்டாடையையும் அவர்களுக்கு வழங்குவான்.

அங்கு அவர்கள் உயர்ந்த கட்டில்களில் தலையணைகள் வைத்து சாய்ந்திருப்பார்கள். வெயிலின் வெப்பமோ, கடுங்குளிரோ அங்கு அவர்களைத் துன்புறுத்தாது. சுவனத்தின் நிழல்கள் அவர்களின் மீது தாழ்ந்திருக்கும்

இன்னும், பல சுவனத்து இன்பங்களை தொடர்ந்து அல்லாஹ் கூறிவிட்டு இறுதியாகதிண்ணமாக, இது தான் உங்களுக்குரிய கூலி! உங்களுடைய முயற்சி மதிப்பிற்குரியதாக ஆகிவிட்டிருக்கின்றதுஎன்று முடிப்பான. ( அல்குர்ஆன்: 76: 8- 22 )

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவளிக்கும் போது கூட நம் சிந்தனை எவ்வளவு உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகின்றான் பாருங்கள்!.

அதற்கான வெகுமதிகளை அல்லாஹ் எவ்வளவு உயர்வானதாக வழங்கி கௌரவிக்கின்றான் என்பதைப் பாருங்கள்!.

அப்படியானால், மறுமையை அடிப்படையாகக் கொண்டு, இறை நேசத்தை கருவாகக் கொண்டு, இஸ்லாத்தை நோக்கமாகக் கொண்டு தீனின் உயர்வை உளப்பூர்வமாகக் கொண்டு லட்சியப் பாதையில் பயணிப்பவர்களை அல்லாஹ் எப்படிப் பார்ப்பான்!? எப்படிக் கௌரவிப்பான்.

ஒன்று இந்த உலகத்திலே அபாபீல்களைப் போன்று போராளி மனப்பான்மையோடு வாழ முயற்சிக்க வேண்டும். அல்லது ஹுத்ஹுத்களைப் போன்று நன்மையின் மீது நாட்டம் உள்ளவர்களாய் வாழ முயற்சிக்க வேண்டும்.

ظل نجم الدين أيوب ـ أمير تكريت ـ لم يتزوج لفترة طويلة، فسأله أخوه أسد الدين شيراكوه قائلًا: يا أخي لماذا لا تتزوج؟ فقال له نجم الدين: لا أجد من تصلح لي، فقال له أسد الدين: ألا أخطب لك؟ قال من؟ قال: ابنة ملك شاه ـ بنت السلطان محمد بن ملك شاه السلطان السلجوقي، أو ابنة نظام الملك كان وزيرا من الوزراء العظام الوزير العباسي،
 فيقول له نجم الدين قائلًا إنهم لا يصلحون لي، فيتعجب منه أسد الدين شيراكوه، فيقول له: ومن يصلح لك؟ فيرد عليه نجم الدين قائلًا: إنما أريد زوجة صالحة تأخذ بيدي إلي الجنة وأنجب منها ولدا تحسن تربيته حتى يشب ويكون فارسًا ويعيد للمسلمين بيت المقدس، في ذلك الوقت كان بيت المقدس محتلًا من قبل الصليبين،
 وكان نجم الدين وقتها في العراق في تكريت بينه وبين بيت المقدس مسافات شاسعة، ولكن قلبه وعقله كانا معلقين في بيت المقدس، وكان هذا هو ما حلمه أن يتزوج زوجة صالحة ينجب منها فارسًا يعيد للمسلمين بيت المقدس، فأسد الدين لم يعجبه كلام أخيه فقال له: ومن أين لك بهذه؟
 فرد عليه نجم الدين: من أخلص لله النية رزقه الله المعين، وفي يوم كان نجم الدين يجلس إلي شيخ من الشيوخ في مسجد في تكريت يتحدث معه،
فجاءت فتاه تنادي على الشيخ من وراء الستار، فاستأذن الشيخ من نجم الدين ليكلم الفتاة، فيسمع نجم الدين الشيخ وهو يقول لها: لماذا رددت الفتى الذي أرسلته إلي بيتكم ليخطبك؟ فقالت له الفتاة: أيها الشيخ ونعم الفتى هو من الجمال والمكانة ولكنه لايصلح لي، فقال لها الشيخ: وماذا تريدين؟ فقالت له: سيدي الشيخ أريد فتى يأخذ بيدي إلي الجنة وأنجب منه ولدًا يصبح فارسًا يعيد للمسلمين بيت المقدس ـ
 الله أكبر نفس الكلمات التي قالها نجم الدين لأخيه هي نفس الكلمات التي تقولها الفتاة للشيخ ـ ونجم الدين قد رفض بنت السلطان وبنت نظام الملك بما لهما من المكانة والجمال، وكذلك الفتاة رفضت الفتي الذي له من المكانة والجمال ماله، كل هذا من أجل ماذا؟ لأن كلا منهما يريد من يأخذ بيده إلى الجنة ومن ينجبان منه فارسًا يعيد للمسلمين بيت المقدس،
 فقام نجم الدين ونادى على الشيخ أيها الشيخ: أريد أن أتزوج من هذه الفتاة، فقال له الشيخ: إنها من فقراء الحي، فقال نجم الدين: هذه من أريدها، أريد زوجة صالحة تأخذ بيدي إلى الجنة، وأنجب منها ولدًا يصبح فارسًا حتى يعيد للمسلمين بيت المقدس: ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجًا لتسكنوا إليها ـ فتزوج نجم الدين أيوب من هذه الفتاة ست الملك خاتون، وبالفعل من أخلص النية رزقه الله المعين، فأنجب نجم الدين ولدًا أصبح فارسًا أعاد للمسلمين بيت المقدس هو: صلاح الدين الأيوبي

நஜ்முத்தீன் அய்யூப் இராக்கின் திக்ரீத் நிலப்பகுதியை ஆண்டு வந்து சிற்றரசர், இஸ்லாமிய ஆட்சியாளர்.

திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து கொண்டு இருந்தார்கள். ஒரு நாள் அவருடைய மூத்த சகோதரர் அஸதுத்தீன் என்பவர் தம் சகோதரர் நஜ்முத்தீன் அய்யூபியை அணுகி “ஏன், இன்னும் திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து வருகின்றீர்கள்? என்று கேட்டார்.

அதற்கவர், ”எனக்கான சரியான துணை இன்னும் அமையவில்லை, ஆகையால் தான் காலதாமதம் செய்து வருகின்றேன்” என்றார்கள்.

அப்படியானால், உமக்காக நான் பெண் பார்க்கின்றேன்! ஸல்ஜூக்கிய மன்னர்களின் குடும்பத்தில் பார்க்கட்டுமா? இல்லை, அப்பாஸிய மன்னர்களின் குடும்பத்தில் பெண் பார்க்கட்டுமா? என்று அரசக்குடும்பம் என்ற மிடுக்கோடு நஜ்முத்தீன் அய்யூபியிடம் கேட்டார்கள்.

அப்போது, நஜ்முத்தீன் அவர்கள் அரசக் குடும்பப் பெண்கள் எல்லாம் எம் இலட்சியத்திற்கு தோதுப் படமாட்டார்கள். ஆகவே, எனக்கான சரியான துணையாகவும் அவர்கள் இருக்கமாட்டார்கள் என்றார்கள்.

பேரரசர்களின் குடும்பப் பெண்களே உங்களுக்கு பொருத்தமான துணையாக அமையாது எனும் போது எங்கிருந்து உமக்கு பொருத்தமான துணையைத் தேடுவது? என ஆச்சர்யம் விலகாமல் அஸதுத்தீன் நஜ்முத்தீன் அய்யூபியிடம் கேட்டார்.

என் துணைவி எப்படி இருக்க வேண்டும்? என்று நான் மிகப் பெரிய லட்சியக் கனவோடு தேடிக் கொண்டிருக்கின்றேன்.

இதோ! சொல்கின்றேன் கேள் என் சகோதரரே! எனக்கு மனைவியாக வருகின்றவள், என் கையைப் பற்றிப் பிடித்து என்னை (நாளை மறுமையில்) சுவனச் சோலைக்குள் அழைத்துச் செல்பவளாய் இருக்கவேண்டும்.

அவள் மூலம் ஆண் வாரிசு ஒன்று கிடைக்க வேண்டும். அந்த வாரிசை ஒழுக்க மாண்புள்ளவனாகவும், மாபெரும் குதிரை வீரனாகவும் வளர்த்து ஆளாக்கி, அந்த வாரிசின் மூலம் இந்த உம்மத்தின் மிகப் பெரும் பாக்கியமான பைத்துல் முகத்தஸ் சிலுவைப் படை வீரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் முஸ்லிம்கள் வசம் ஆக வேண்டும்.

இது தான் நான் தேடிக்கொண்டிருக்கும் என் வாழ்க்கைத் துணைவிக்கான தகுதி” என்று கூறினார்கள்.

இதுகேட்ட அஸதுத்தீன் “இப்படியான லட்சிய வேட்கை கொண்ட பெண்ணை எங்கு சென்று தேடுவது? என்று ஆச்சர்யம் மேலிட வினவினார்.
அதற்கு, நஜ்முத்தீன் அவர்கள் “யார் அல்லாஹ்வுக்காக தூய எண்ணம் கொள்வாரோ அல்லாஹ் அவருக்கு உதவி செய்வான்” என்று பதில் கூறினார்கள்.

இந்த உரையாடல் நடைபெற்ற சில நாட்களுக்குப் பின்னர் திக்ரீத்தின் பகுதியில் பிரபல்யமாகியிருந்த ஒரு ஷைகிடம் நஜ்முத்தீன் அய்யூபி அவர்கள் வந்தார்கள்.

சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, திரைக்கு அப்பால் இருந்து ஒரு பெண்மணி ஷைகிடம் சிறிது நேரம் பேச அனுமதி வேண்டினார்.

ஷைக் அவர்கள் அப்பெண்மணியின் குரலை வைத்து அடையாளம் கண்டு கொண்டு, அனுமதி வழங்கிய பின் “பெண்ணே! உம்மைப் பெண் பார்க்க ஓர் இளைஞரை நான் நேற்று வரச் சொன்னேனே நீ ஏன் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டாய்? என்று கேட்டார்கள்.

அதற்கு அப்பெண் “ஷைக் அவர்களே! அந்த இளைஞர் அழகானவர் தான், அந்தஸ்து உடையவர் தான் ஆனாலும் பேசிப்பார்த்ததில் எனக்கான சரியான துணையாக அவர் இல்லை, என் லட்சியத்திற்கும், என் கனவிற்கும் உகந்தவராய் அவர் இல்லை ஆகவே, அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டேன்” என்று பதில் கூறினாள் அப்பெண்மணி.

அப்படி என்னம்மா உன் கனவும், லட்சியமும்? என்று ஆச்சர்யத்தோடு வினவினார்கள் ஷைக் அவர்கள்.

அப்பெண்மணி “என் வாழ்க்கையைத் துணையாக வரும் என் கணவர் இவ்வுலகில் மாத்திரமல்ல நாளை மறுமையில் சுவனத்திலும் என் துணையாக இருக்க வேண்டும். அவரே என்னை சுவனத்திற்குள் அழைத்துச் செல்ல வேண்டும்.

அவர் மூலம் ஆண் வாரிசு ஒன்று கிடைக்க வேண்டும். அந்த வாரிசை ஒழுக்க மாண்புள்ளவனாகவும், மாபெரும் குதிரை வீரனாகவும் வளர்த்து ஆளாக்கி, அந்த வாரிசின் மூலம் இந்த உம்மத்தின் மிகப் பெரும் பாக்கியமான பைத்துல் முகத்தஸ் சிலுவைப் படை வீரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் முஸ்லிம்கள் வசம் ஆக வேண்டும்.

இது தான் என கனவும், லட்சியமும் என் வாழ்க்கைத் துணைவருக்கான தகுதியும் ஆகும்” என்று கூறினார்.

இதைக் கேட்ட நஜ்முத்தீன் அய்யூபி அவர்கள் மகிழ்ச்சியில் அல்லாஹு அக்பர் என்று கூறி விட்டு, நாம் தேடிய தகுதியோடும் நம்மைப் போன்ற கனவோடும், லட்சியத்தோடும் நாம் வாழ்கிற ஊரிலேயே அல்லாஹ் நமக்கான ஜோடியைப் படைத்திருக்கின்றான் என்ற உணர்வோடு ஷைக் அவர்களிடத்தில் “ஷைக் அவர்களே! இந்தப் பெண்ணையே நீங்கள் எனக்குப் பேசி திருமணம் செய்து வையுங்கள்!” என்று கூறினார்கள்.

அதற்கு ஷைக் அவர்கள், நஜ்முத்தீன் நீர் நாடாளும் ஓர் ஆட்சியாளர், அப்பெண்ணோ உனக்கு நேர் எதிரான நிலையில் வாழும் ஓர் ஏழை” எப்படி இது சாத்தியமாகும் என்று வினவினார்கள்.

ஒரு வழியாக ஷைக் அவர்களின் முயற்சியால் இருவருக்கும் திருமணமும் நடந்தேறியது.

அந்த கனவுத்தம்பதியருக்கு, லட்சியத்தம்பதியருக்கு பிறந்த மாவீரர் தான் பைத்துல் முகத்தஸை மீட்டெடுத்த அபுல் முளஃப்ஃபர் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி ஆவார்கள்.

அல்லாஹ் அத்தம்பதியரின் ஒரு லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுத்தான். இன்ஷாஅல்லாஹ் இன்னொரு லட்சியத்தையும் நாளை மறுமையில் சுவனத்தில் நிறைவேற்றியருள்வானாக! ஆமீன்!.

மாநபி {ஸல்} அவர்களின் புனித பாதங்களை மதீனாவின் மண் முத்தமிட்ட முதல் தருணம் அது.

நபி {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குள் அபூஅய்யூப் அன்ஸாரி ரலி அவர்களின் வீட்டிற்குள் வீற்றிருந்த தருணம் அது.

மதீனாவின் அன்ஸாரி ஆண்களும் பெண்களும் அண்ணலாரைச் சந்தித்து முகம் மலர அகம் குளிர அன்பளிப்புகளை ஒருவர் பின் ஒருவராக வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

தூரத்தில் ஒரு பெண்மணி கையில் ஒரு சிறுவனைப் பிடித்துக் கொண்டு இதை ஒரு ஓரமாக நின்று அவதானித்துக் கொண்டு நிற்கின்றார்.

இஸ்லாத்தை ஏற்றதற்காக தம்மை விட்டும் ஓடிய கணவன், போன இடத்திலேயே இறந்தும் போய் விட்டான். கையில் ஒரு ஆண்மகனை கொடுத்து விட்டு சென்று விட்டான்.

என்ன செய்வது? அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு இந்த மண்ணின் மைந்தர்கள் எல்லாம் ஏதாவது ஒன்றை கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். நாம் கொண்டு போய் கொடுக்க நம்மிடம் என்ன இருக்கின்றது என்று யோசித்துக் கொண்டே இருக்கின்றார்.

திடீரெனெ மனதினுள் மின்னல் போல் பளிச்சிட தம் மகனை அழைத்துக் கொண்டு அபூஅய்யூப் அன்ஸாரி (ரலி) அவர்களின் வீட்டை நோக்கி நடக்கின்றார்கள்.
நடந்த மீதி விஷயங்களை அவரின் மகனார் சொல்வதன் மூலம் அறிந்து கொள்வோமே!?

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மாநபி {ஸல்} அவர்கள் மதீனாவில் வந்திறங்கிய தருணம் அது.

எட்டு வயது நிரம்பியவனாக இருந்த என்னை அழைத்துக் கொண்டு, மாநபி {ஸல்} அவர்களின் முன்னால் வந்து நின்ற என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! மதீனாவின் ஆண்களும், பெண்களும் உங்களுக்கு அவர்களின் சார்பாக அன்பளிப்புகளை வழங்கியதை நான் கண்ணுற்றேன்.

அல்லாஹ்வின் தூதரே! இந்த என் மகனைத் தவிர வேறெந்தச் செல்வமும் என்னிடம் இல்லை.

இதோ! நபியே! என் மகனை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்! பூமியில் நீங்கள் வாழும் காலம் வரை உங்களுக்கு என் மகன் சேவகம் செய்வான்” என்று கூறி என்னை நபி {ஸல்} அவர்களிடம் கொடுத்தார்கள்.

நானும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உயிர் வாழும் காலம் வரை நபி {ஸல்} அவர்களுக்கு பணிவிடைகள் செய்திருக்கின்றேன். ஆனால், ஒரு நாள் கூட நபி {ஸல்} அவர்கள் முகம் சுழிக்கவோ, திட்டவோ, அடிக்கவோ இல்லை” என்று கூறினார்கள்.                                    ( நூல்: முஸ்னத் அபூயஃலா 3624 )

குத்ஹு யாரசூலுல்லாஹ்… இதுவரை அந்த மண்ணில் மாநபி {ஸல்} அவர்களுக்கு இப்படியான அன்பளிப்புகளை எவரும் வழங்கியிருக்க வில்லை.

இன்னும் சொல்லப்போனால் மாநபி {ஸல்} அவர்களுக்காக எதையும் அர்ப்பணம் செய்கிற புது அத்தியாயத்தை துவக்கி வைத்தவர்கள் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களே!.

ஒரு புறம்….தந்தை இல்லை, தாய் மட்டுமே ஆதரவு என்கிற நிலையில் இருந்த சிறு பாலகர் அனஸ்… குத்ஹு யாரசூலுல்லாஹ் என்கிற ஒற்றை வார்த்தையின் மூலம் இனி அனஸ் பெருமானார் {ஸல்} அவர்களுக்குச் சொந்தமானார்.

இன்னும் சொல்லப்போனால், இந்த நிகழ்வு பெருமானார் {ஸல்} அவர்களை அனஸ் (ரலி) அவர்கள் முதன் முதலாக பார்த்த அடுத்த கனம் நடந்தேறுகின்றது.

தாயாரின் விருப்பத்திற்கிணங்க, எவ்வித மறுப்பும் ஆர்ப்பாட்டமும் செய்யாமல் மாநபி {ஸல்} அவர்களுக்கு சேவகம் செய்ய ஆயத்தமாகின்றார். 

இன்னொரு புறம்… கணவர் இறந்து போனார், அவரின் நினைவாகவும், ஆதரவாகவும் இருக்கும் ஒரேயொரு மகன் அனஸ்.

எனினும் அகிலத்தின் அருட்கொடைக்கு அன்பளிப்பு வழங்க அல்லாஹ் வழங்கிய கொடையான அனஸை தவிர வெறெதுவும் இல்லாத போது, அல்லாஹ் வழங்கிய அந்தக் கொடையையே அகிலத்தின் அருட்கொடைக்கு முன் அர்ப்பணித்தார்கள்.

குத்ஹு யாரசூலுல்லாஹ்…. அன்றையப் பொழுதில் அல்லாஹ்வை அகமகிழச் செய்த வார்த்தைகள் அவை.

இருவருக்கும் அல்லாஹ் வழங்கிய கௌரவங்களும், அங்கீகாரங்களும் தான் எத்தனை? எத்தனை?

அபூதல்ஹா எனும் அழகிய மணாளரை அல்லாஹ் உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு வழங்கினான்.

நபிகளார் காலத்திற்கு பின்னர் அன்றைய முஸ்லிம் உம்மாவின் சிறந்த முன்மாதிரி தம்பதியர்களாக அதிகம் பேசப்பட்ட, புகழப்பட்ட தம்பதியர்கள் உம்மு ஸுலைம் – அபூதல்ஹா தம்பதியரே!

புகழும், மார்க்க அறிவும் நிறைந்த சந்ததிகளை அல்லாஹ் அத்தம்பதியருக்கு வழங்கினான்.

நபிகளாரின் அமுதவாயால் சுவனத்துப் பெண்மணி என்ற சோபனத்தையும் அல்லாஹ் வழங்கினான்.

அல்லாமா சுயூத்தீ (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: “அபூஹுரைரா (ரலி) இப்னு உமர் (ரலி) ஆகிய இருவருக்குப் பின்பு நபிகளாரிடம் இருந்து அதிக அறிவிப்புகளை இந்த உம்மத்திற்கு தந்தவர்கள் அனஸ் (ரலி) அவர்கள்.

2286 நபி மொழிகளை அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்கள் வேறெந்த நபித்தோழர்களும் அறிவித்திராத பல புதிய செய்திகளை இந்த உம்மத்திற்கு வழங்கியவர்கள்.

வாழும் காலத்திலேயே ஈமான் ஸலாமத் கொண்ட மூன்று தலைமுறையைக் காணும் பாக்கியத்தையும், அளவிலா செல்வ வளத்தையும், முதுமையிலும் இளமையின் தோற்றத்தையும், நபிகளாரைப் பார்த்தவர்களில், பழகியவர்களில் இறுதியில் மரணித்தவர் என்கிற புகழையும், நூற்றுக்கும் மேற்பட்ட ரமழானை அடையும் பாக்கியத்தையும், நோன்பு நோற்கும் பாக்கியத்தையும் அல்லாஹ் வழங்கினான்.

தாயாருக்கும், மகனுக்கும் இவ்வளவு பெரிய கௌரவத்தை வழங்கியது “குத்ஹு யாரசூலுல்லாஹ்… என்கிற ஒற்றை வார்த்தை தான் என்றால் அது மிகையல்ல.

ஆகவே, உயர்ந்த லட்சியங்களும், குறிக்கோள்களும் மறுமையை நோக்கமாகக் கொண்டு அமைப்போம்!

அல்லாஹ் அளிக்கும் உயர்ந்த சன்மானங்களையும், கௌரவங்களையும் ஈருலகிலும் பெறுவோம்!

அபாபீல்களாகவும், ஹுத்ஹுத்களாகவும் வாழ்வோம்!!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உயர்ந்த லட்சியங்களோடும், குறிக்கோள்களோடும் வாழும் நற்பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

4 comments:

  1. அல்லாஹு அக்பர் இரண்டு சம்பவங்களுமே ஈமானிய உணர்வை மேளோங்க செய்கிறது. جزاك الله خيراً في الدارين

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். خد ه يا رسول الله என்று கூறி அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஹஜ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்பளிப்பு செய்தது போன்று தாங்கள் அருமையான பயான் குறிப்புகளை தமிழக உலமாக்கள் அனைவர்களுக்கும் அன்பளிப்பு செய்துள்ளீர்கள். جزاكم الله خيرا كثيرا يا أستاذ

    ReplyDelete