Thursday, 2 August 2018

நாம் வாழும் காலம் குறித்து இஸ்லாம்!!!

நாம் வாழும் காலம் குறித்து இஸ்லாம்!!!





நாம் வாழும் காலத்தை நவீன தொழில் நுட்பத்தில் வானளாவிய சாதனை படைத்துக் கொண்டிருக்கும் அறிவியல் உலகம் என்றும், அதிசயிக்கத்தக்க விண்வெளி சார்ந்த முன்னேற்றத்தின் காரணமாக விஞ்ஞான உலகம் என்றும், மெச்சத்தக்க அளவிலான உயர்வுகளை உயிர்காக்கும் மருத்துவத்துறை அடைந்திருப்பதால் மருத்துவ உலகம் எனவும் போற்றுகின்றோம், அப்படிக் கூறுவதில் பெருமிதமும் கொள்கின்றோம்.

உண்மையில் தற்கால உலகை 'அறிவியல் யுகம்' ’விஞ்ஞான யுகம்’ ’மருத்துவ யுகம்என்று வர்ணிக்கும் அளவுக்கு மனித சமூகத்தின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கின்றதா? என்றால் நிச்சயம் உயர்ந்திருக்கின்றது என்று கூற முடியாது.

ஏனெனில், முன்னெப்போதையும் விட இப்போது தான் மனித சமூகம் நாகரிகம், கலாச்சாரம், ஒழுக்கம், பண்பாடு போன்றவற்றில் மிகப்பெரிய சீரழிவை, வீழ்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது.

நாள் தோறும் உலகெங்கும் நடைபெறுகிற அசாதாரணச் சூழலை ஊடகத்தின் வாயிலாக நாம் கண்டு வருகின்றோம்.

அந்த வரிசையில் உலகெங்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான குற்றங்கள், பாலியல் அத்துமீறல்கள், வன்புணர்வு, வல்லுறவுக் குற்றங்கள் நாள் தோறும் பெருகிக் கொண்டிருப்பதை பார்க்கையில் உண்மையில் தொழில் நுட்பம், விஞ்ஞானம், மருத்துவம், நாகரிகம், கலாச்சாரம் என இவைகள் எதுவும் மனித சமூகத்தை மகத்தான பாதையில் அழைத்துச் செல்லவில்லை என்பதை ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்வதை மறுப்பதற்கில்லை.

இஸ்லாம் நாம் வாழும் காலம் குறித்து கருத்தாழமிக்க இரண்டு வாக்கியங்களைக் கொண்டு அழைப்பதைப் பார்க்கலாம்.

1.   நல்லோர்களால் வாழவே முடியாது என்று எண்ணம் நிறைந்து காணப்படும் காலம்.
2.   நல்லதா? கெட்டதா? என்று ஆராயாமல் எதையும் செய்யத்துணிபவர்கள் நிறைந்து வாழ்கிற காலம்.

من حديث أنس رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم: "يأتي على أمتي زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر
، سلسلة الأحاديث الصحيحة/ المجلد الثاني957

மாநபி {ஸல்} அவர்கள் நவின்றதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “என் உம்மத்தினர் மீது ஒரு காலம் வரும்! அக்காலத்தில், தீனின் மீது நிலைத்திருப்பது என்பது கையில் நெருப்புக்கங்கை வைத்திருப்பதற்குச் சமமாகும்”. ( நூல்: ஸில்ஸிலதுல் அஹாதீஸுஸ் ஸஹீஹா, பாகம் 2, பக்கம்: 957 )

وعن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "يأتي على الناس زمان ما يبالي الرجل من أين أصاب المال من حلال أو حرام"، رواه البخاري، صحيح الجامع الصغير، المجلد الثاني، 5344

மாநபி {ஸல்} அவர்கள் நவின்றதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மக்களிடையே ஒரு காலம் வரும்! அக்காலத்தில், ஒரு மனிதன் தன் பொருளாதார வளத்தின் பெருக்கத்தை ஹலால், ஹராம் என்றெல்லாம் பார்க்க மாட்டான், எந்த வழியிலாவது சம்பாதித்து வளப்படுத்தவே விரும்புவான்”. ( புகாரி )

சமீப காலமாக திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் பட்டியலில் முஸ்லிம்களின் பெயர்களும் இடம் பெறுவதை அவ்வப்போது ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகின்றது.

முஸ்லிம் சமூகத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிலானவர்களே இதில் இடம் பெற்றாலும் இது குறித்த விழிப்புணர்வை நம் சமூகத்திற்கு கொடுப்பதற்கு நமக்கு கடமையும், கடப்பாடும் இருக்கின்றது.
சமீபத்தில் ஹரியானாவில் நடந்த சம்பவத்தில் 4 முஸ்லிம்களின் பெயர் இடம் பெற்றிருந்தது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று ஹரியானா மாநிலம் மேவார் பகுதியில் கருவுற்றிருந்த ஆட்டுடன் சில ( 8 ) மனிதர்கள் பாலியல் உறவு கொண்டதும், அதையடுத்து அந்த ஆடு இறந்துபோனதாக தகவல் வெளியானது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மேவார் காவல்துறை கண்காணிப்பாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்.

இந்திய தண்டனைச் சட்டம் 377 பிரிவு மற்றும் மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தான் 4 முஸ்லிம்களின் பெயர் இடம் பெற்றிருந்தது.

உலகில் எங்கோ ஒரு முஸ்லிம் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் விமர்சிக்கும் பொறுப்பற்ற ஊடக விமர்சனங்கள் பெருகி இருக்கும் கால கட்டத்தில் இது நடைபெற்று இருப்பது கவலையளிக்கிற விஷயமாகும்.

கால மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தில் சமரசம் செய்து கொள்ளாத நபித்தோழர்கள்…..

எந்த போராட்டமும், இரத்தமும் சிந்தாமல் உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்களின் தலைமையில் பாரசீக வெற்றி சாத்தியமானது.

உபுல்லாவின் கோட்டைக்குள் நுழைந்த முஸ்லிம் படையினருக்கு ஆச்சர்யம் தாளவில்லை.

கோட்டைக்குள் பொன்னும், பொருளும் மலை போல் குவிந்து கிடந்தது.

கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு இந்த வெற்றியை குறித்தும் எதிர்கால திட்டம் குறித்தும் விரிவான ஒரு கடிதத்தை எழுதினார்கள்.

அதில் உடனடியாக அங்கே ஓர் பள்ளிவாசலை நிறுவ வேண்டும் என்றும்  உபுல்லாவின் கோட்டையை இஸ்லாமிய இராணுவத்தளமாகவும், ஒரு நகரை உருவாக்கி ஆட்சியின்  தலைமையிடமாகவும் அமைக்க வேண்டும்கொண்டு என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

உத்பா (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதற்கு இசைவு தந்தார்கள்.

பஸ்ரா எனும் நகரை உருவாக்கி, ஒரு பள்ளிவாசலையும் நிறுவி, இராணுவத் தலைமையிடத்தையும் உருவாக்கினார்கள்.

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்களையே இஸ்லாமிய அரசின் முதல் ஆளுநராக நியமித்தார்கள்.

பாரசீகத்தின் வளங்களைக் கேள்விப் பட்ட மதீனத்து முஸ்லிம்கள் பெருமளவில் பஸராவிற்கு குடிபெயர்ந்தார்கள்.

ஆனால், மிகவும் துடிப்போடு இருந்த முஸ்லிம்கள் பாரசீக வளங்களைக் கண்டதும் ரொம்பவே மாறிப் போய் விட்டார்கள்.

நிலம் வாங்குவதிலும், வீடு கட்டுவதிலும் தங்களை முழு வீச்சில் ஈடுபடுத்திக் கொண்ட முஸ்லிம்களைக் கண்டதும் கலங்கிப் போன உத்பா (ரலி) ஆழ்ந்த கவலையில் மூழ்கிப் போனார்கள்.

இப்படியே போனால், சொகுசு வாழ்க்கையில் இம்மக்கள் மூழ்கிப்போனால் ஈமானிய வாழ்க்கையை இழந்து விடுவார்களோ? என்ற அச்சம் உத்பா (ரலி) அவர்களின் ஆழ்மனதை ரணமாக்கிக் கொண்டிருந்தது.

أخبرنا يحيى بن محمود بن سعد بإسناده عن أبي بكر بن أبي عاصم قال: حدثنا أزهر بن حميد أبو الحسن، حدثنا محمد بن عبد الرحمن الطفاوي، حدثنا أيوب السختياني، عن حميد بن هلال، عن خالد بن عمير: أن عتبة بن غزوان - وكان أمير البصرة - خطب فقال في خطبته:
" ألا إن الدنيا قد ولّت حذّاء، ولم يبق منها إلا صبابة كصبابة الإناء يتصابها أحدكم، وإنكم ستنتقلون منها لا محالة، فانتقلوا منها بخير ما بحضرتكم إلى دار لا زوال لها ، وأعوذ بالله أن أكون عظيماً في نفسي صغيراً في أعين الناس، "

நிலைமை விபரீதமாவதற்குள் மக்கள் அனைவரையும் பள்ளிவாசலில் ஒன்று கூட ஆணையிட்டார்கள்.

மக்கள் ஒன்று கூடியதும், மக்கள் திரள் நோக்கிமக்களே! அறிந்து கொள்ளுங்கள்! இவ்வுலக வாழ்வும் அதன் சொகுசும் மிக விரைவில் அழிந்து போய் விடும்! அழிவே இல்லாத ஒரு உலகத்தை நோக்கியே நாம் வாழ வேண்டும் என நபி {ஸல்} அவர்களால் வழிகாட்டப்பட்டு இருக்கின்றோம்.

அந்த உலகத்திற்கு நீங்கள் செல்ல வேண்டுமேயானால் மிகச் சிறந்த நற்செயல்கள் செய்திருக்க வேண்டும்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இஸ்லாத்தை அறிமுகம் செய்த போது அவர்களுடன் இருந்தது ஒரு சின்னஞ்சிறு கூட்டம் அந்தக் கூட்டத்தில் ஏழாவது நபராக நான் இருந்தேன்.

لقد رأيتني سابع سبعة مع رسول الله صلى الله عليه وسلم، ما لنا طعام إلا ورق الشجر، حتى قرحت اشداقنا.
அண்ணலாரையும், அவர்தம் குடும்பத்தார்களையும், தோழர்களையும் ஊர் விலக்கு செய்து அபூ தாலிப் கணவாயில் தங்கியிருந்த போது அவர்களுள் நானும் ஒருவன், உண்ண உணவின்றி இலைகளையும், தழைகளையும் உண்டதால் எங்களின் உதடுகளிலும் வாய்களிலும் கொப்பளங்கள் ஏற்பட்டது.

ولقد رزقت يوما بردة، فشققتها نصفين، أعطيت نصفها سعد بن مالك، ولبست نصفها الآخر"

மேலும், என்னிடம் அணிந்து கொள்ள ஆடை கூட கிடையாது, ஒரு போது யாரோ தூக்கியெறிந்த ஒரு பழைய துணி ஒன்று வீதியில் கிடந்தது. அதை எடுத்து பாதியாகக் கிழித்து நானும் ஸஅத் இப்னு மாலிக் (ரலி) அவர்களும் இடுப்பில் அரைத் துணியாக கட்டிக் கொண்டோம்.

ஆனால், இன்றோ அக்குழுவில் இருந்த எங்களில் சிலர் சில நகரங்களுக்கு தலைவர்களாக ஆகியிருக்கின்றோம்.

உலக மக்களின் பார்வையில் நான் உயர்ந்தோனாகவும், அல்லாஹ்வின் பார்வையில் கீழோனவனாகவும் ஆகிவிடாமல் இருக்க அவனிடமே நான் பாதுகாவல் தேடுகின்றேன்!” என்று கூறி தமது உரையை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.

ثم خرج حاجاً وخلف مجاشع بن مسعود، وأمره أن يسير إلى الفرات، وأمر المغيرة بن شعبة أن يصلي بالناس،

ஏறக்குறைய நான்காண்டுகள் அம்மக்களோடு இருந்து அவர்களின் குண நலன்கள் மாறிட போராடினார்கள். இறுதியாக ஹிஜ்ரி 18 –ஆம் ஆண்டின் ஒரு ஷவ்வால் மாதத்தின் இறுதியில் இந்த உரையை நிகழ்த்தி விட்டு ஹஜ்ஜுக்காக அங்கிருந்து புறப்பட்டார்கள்.

தங்களுக்கு பகரமாக முஜாஷஃ இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களை தற்காலிக ஆளுநராகவும், முகீரா இப்னு ஷுஅபா (ரலி) அவர்களை இமாமாகவும் வைத்து விட்டு ஹ்ஜ்ஜுக்கு புறப்பட்டு வந்தார்கள்.

فلما وصل عتبة إلى عمر استعفاه عن ولاية البصرة، فأبى أن يعفيه،

ஹஜ் கடமையை முடித்ததும் மதீனா வந்த உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்கள் நேராக ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து தன்னால் தொடர்ந்து ஆளுநர் பதவியில் நீடிக்க முடியாது என்றும், ஆளுநர் பதவியில் இருந்து தம்மை அகற்றிவிடுமாறு கோரி நின்றார்கள்.
فيصيح به عمر:
" والله لا أدعك.. أتضعون أمانتكم وخلافتكم في عنقي.. ثم تتركوني"..؟؟!!
فقال عتبة بن غزوان: اللهم لا تردني إليها! فسقط عن راحلته فمات ، وهو منصرف من مكة إلى البصرة، بموضع يقال له: معدن بني سُليم، قاله ابن سعد.

அது கேட்ட உமர் (ரலி) அவர்கள் உரத்த குரலில்அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களின் பொறுப்புக்களை, உங்களின் தலைமைத்துவத்தை என் கழுத்தில் சுமத்தி விட்டு சென்று விடலாம் என்று எண்ணுகின்றீகளா?”

ஒரு போதும் உங்களை நான் விட்டு விட மாட்டேன்! மீண்டும் பஸராவிற்கு செல்லுங்கள்!” என்று கண்டிப்புடன் கூறினார்கள்.

இதைக் கேட்டதும், பஸராவை நோக்கி தமது வாகனத்தை செலுத்திய உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்கள் வானை நோக்கி கையை உயர்த்தியா அல்லாஹ்! என்னை பஸராவிற்கு அழைத்துச் சென்றிடாதே!

அல்லாஹ் மனத்தூய்மையுடன் செய்த அந்த துஆவை ஒப்புக் கொண்டான். ஆம்! பஸரா சென்றிடும் வழியில் பனூ ஸுலைம் பள்ளத்தாக்கின் அருகே வாகனம் இடரி கீழே விழுந்து ஷஹீதானார்கள்.

               ( நூல்: உஸ்துல் ஃகாபா, ரிஜாலுன் ஹவ்லர் ரசூல் {ஸல்}.. )

அரசு உத்தியோகம், கவர்னர் பதவி, அதுவும் புதிதாக உருவாகியிருந்த ஓர் தலைநகருக்கு அதுவும் செல்வ வளங்களும், கனிம வளங்களும் நிறைந்திருந்த ஓர் வளமான பூமிக்கு

அந்த பூமியை இஸ்லாமிய எல்லைக்குள் கொண்டு வந்து, அந்நகரை உருவாக்கியவர் என்கிற காரணங்களையெல்லாம் தாண்டி உத்பா (ரலி) அவர்களின் தூய வாழ்வை உணர்ந்திருந்த உமர் (ரலி) அவர்கள் உத்பா (ரலி) மறுத்த போதும் மீண்டும் பதவியைக் கொடுத்து அனுப்பினார்கள்.

ஆனால், மக்களின் தவறான அணுகுமுறை எங்கே தங்களின் ஈமானிய வாழ்வை உரசிப் பார்த்து விடுமோ, அசைத்துப் பார்த்திடுமோ என்று பயந்தார்கள் உத்பா (ரலி) அவர்கள்.

ஹராம், ஹலால் குறித்த விழிப்புணர்வும்… பேணுதலும்….

وَأخرج البُخَارِيّ وَمُسلم وَابْن أبي شيبَة وَالنَّسَائِيّ وَابْن أبي حَاتِم وَابْن حبَان وَالْبَيْهَقِيّ فِي سنَنه وَأَبُو الشَّيْخ وَابْن مرْدَوَيْه عَن ابْن مَسْعُود قَالَ كُنَّا نغزو مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَلَيْسَ مَعنا نسَاء فَقُلْنَا أَلا نستخصي فنهانا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن ذَلِك وَرخّص لنا أَن ننكح الْمَرْأَة بِالثَّوْبِ إِلَى أجل ثمَّ قَرَأَ عبد الله {يَا أَيهَا الَّذين آمنُوا لَا تحرموا طَيّبَات مَا أحل الله لكم وَلَا تَعْتَدوا إِن الله لَا يحب الْمُعْتَدِينَ}

கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்உத் (ரலி) அவர்கள் "எங்களுடன் துணைவியர் எவரும் இல்லாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஓர் அறப்போரில் கலந்துகொண்டிருந்தோம்.

நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) "நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)கொள்ளலாமா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள்.

அதன் பிறகு துணியை (மணக்கொடையாக)க் கொடுத்துப் பெண்களை ஒரு குறிப்பிட்ட காலம்வரை மணமுடித்துக் கொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்" என்று கூறிவிட்டுப் பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றைத் தடை செய்யப்பட்டவையாக ஆக்கிவிடாதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்" (5:87) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

وعن ابن سيرين: أن قيماً كان لسعد بن أبي وقاص رضي الله عنه في أرض له فأخبره عن عنب أنه لا يصلح زبيباً، ولا يصلح أن يباع إلا لمن يعصره، فأمره بقلعه وقال: بئس الشيخ أنا إن بعت الخمر.

நபித்தோழர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மாபெரும் திராட்சை வியாபாரியாக திகழ்ந்தார்கள்.

தொடர்ச்சியாக ஏற்பட்ட விலை வீழ்ச்சியால் திராட்சை வீணாகி பெருத்த நஷ்டம் அவர்களுக்கு ஏற்பட்டது.

அப்போது, ஸஅத் (ரலி) அவர்கள் தங்களின் பணியாளர்களிடம் இது குறித்த ஆலோசித்த போது “நமக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க திராட்சைப் பழங்களை மொத்தமாக மது வியாபாரிகளிடம் விற்று விடலாம்” என்று ஒரு பணியாளர் கூறினார்.

ஸஅத் (ரலி) அவர்கள் அந்த ஆலோசனையை நிராகரித்து விட்டு, திராட்சைகள் அனைத்தையும் கீழே கொட்டி விடுமாறு கூறிவிட்டு “ நான் மதுவிற்காக விற்பனை செய்திருந்தால் எவ்வளவு பெரிய கேடு உண்டாயிருக்கும் எனக்கு” என்று அங்கலாய்த்துக் கொண்டார்கள்.            ( நூல்: அல் முஃக்னீ லி இப்னு குதாமா )

எனவே, குழப்பமும், சோதனையும் நிறைந்த காலகட்டத்தில் நம்முடைய உம்மத்தின் நகர்வுகள் மிகவும் கவனமாக அமைந்திருக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தை நெறிப்படுத்தி உலக முற்றத்தில் மகத்தான மனித சமூகமாக நிலை நிறுத்த வேண்டும்.

ஆகவே, மானக்கேடான விஷயங்களை, ஆபாசமான செயல்களை, அதன் தீமைகளை, அதனால் ஏற்படும் கேடுகளை, விளைவுகளை அறிந்து விலகி வாழும் நற்பேற்றை வல்ல ரஹ்மான் முழு மனித சமூகத்திற்கும், இந்த முஸ்லிம் உம்மத்திற்கும் தந்தருள் புரிவானாக!

ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!


3 comments:

  1. Arumaii moulana jazakallah hair

    ReplyDelete
  2. ஜஸாகுமுல்லாஹு ஹைரா

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ் தற்காலத்திற்கேற்ற படைப்பு

    ReplyDelete