கஜா புயலும்… கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்…
கடந்த
வியாழக்கிழமை (நவம்பர் 15)
நள்ளிரவு வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த ‘கஜா’
புயலால், தஞ்சாவூர், திருவாரூர்,
நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் கடலோர மாவட்டங்களின் நிலை மிக
மோசமானதாக இருக்கிறது.
நிவாரணப் பொருள்களும், உதவிகளும் சமூக ஆர்வலர்களால் செய்யப்பட்டு வருகிறது. இருந்தும் பல மாவட்டங்களில் மக்கள் போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை உலுக்கிய கஜா புயலின்
பேரழிவிலிருந்து பெருமளவில் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் விதமாகப் பேரிடர்
நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசையும் அரசு நிர்வாகத்தையும்
பாராட்டுகிற அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றால் என்ன
என்கிற கேள்வியையும் அரசிடம் இந்த நேரத்தில் முன்வைக்க வேண்டும்.
இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் 50-க்கும் மேற்பட்ட உயிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பல
லட்சக்கணக்கான மரங்கள், மான்கள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான உயிரினங்களை இழந்திருக்கிறோம். பறவைகள், கால்நடைகள் எனப் பேரிழப்பை தமிழகம் சந்தித்திருக்கிறது.
விவசாயிகள், குறிப்பாகத் தென்னை விவசாயிகள் பேரிழப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். மீனவர்கள் தங்களின் படகுகள், வீடுகள் என அனைத்தையும் இழந்து
நிர்க்கதியாய் நின்று கொண்டிருக்கிறார்கள்.
புயல் பாதித்த 8 மாவட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பக் குறைந்தது 3 மாதங்களாகும். விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க 5 வருடங்களாகும் என்கின்றன தரவுகள்.
வர்தா, ஒகி, தானே எனக் கடந்த மூன்று ஆண்டுகளில்
தமிழகம் சந்தித்த தீவிரப் புயல்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திச்
சென்றுள்ளன.
இவ்வளவு இழப்புகளை
தொடர்ச்சியாக தமிழகம் சந்தித்துவருவதற்கான காரணங்கள் என்ன?
வெப்ப மண்டல நாடுகளைத் தாக்கும் புயல்களில் 10% இந்தியாவைத் தாக்கிப் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. அதனால்தான்
உலகம் முழுவதும் புயல்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் 76% இந்தியாவிலும், வங்கதேசத்திலும் ஏற்படுகின்றன. அதோடு இந்தியாவில் வாழக்கூடிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்குப் புயல்களால் பேரழிவு ஏற்படும் ஆபத்து உள்ளது.
புயல்கள் ஏற்படுத்தும் பேரழிவுகள் மட்டுமல்லாமல், `புயலால் ஏற்படும் கடல்மட்ட உயர்வு' கடந்த 100
ஆண்டுகளில் 30 முறை பேரழிவுகளை கொண்டுவந்துள்ளது"
``இந்தியா,
குறிப்பாகத்
தமிழகம் வெப்ப மண்டல பிரதேசம். இந்தியாவின்
கிழக்கு
கடற்கரைதான் அதிகமான புயல்களைச் சந்தித்துள்ளது. 1890
முதல் 2002 -ம் ஆண்டுவரை 304
புயல்களை
இந்தியாவின் கிழக்குக் கடற்கரை சந்தித்துள்ளது.
மேற்கு கடற்கரை 48 புயல்களைச் சந்தித்துள்ளது. இவை மாறும்
என்கிறது, ஐ.பி.சி.சி அறிக்கை. வடக்கு இந்தியப்
பெருங்கடலின் வெப்பம் அதிகரித்துவருவதால் மேற்கு கடற்கரையும்
அதிக அளவில் புயல்களைச் சந்திக்குமென்று அறிக்கை
தெளிவுபடுத்துகிறது.
கஜா புயல்,
கடந்த 16 ஆண்டுகளில் தமிழகத்தைத் தாக்கிய
பத்தாவது புயலாகும். இந்த ஆண்டின் 13-வது காற்றழுத்த தாழ்வு மண்டலம். 1890-ம் ஆண்டு முதல், 2002 வருடம் வரையான காலகட்டத்தில் தமிழகத்தைத்
தாக்கிய புயல்களின் எண்ணிக்கை 54. புயல்களைச் சந்தித்த வகையில் ஒடிசா (98),
ஆந்திரா (79), மேற்கு வங்காளம் (69)
ஆகிய
மாநிலங்களுக்கு அடுத்த படியாக தமிழகத்துக்கு நான்காவது இடம்.
1890-2002
காலகட்டத்தில், 54 புயல்களைச் சந்தித்த தமிழகம் கடந்த 16 ஆண்டுகளில், அதாவது 2002 முதல் 2018
வரையான
காலகட்டத்தில் 10 புயல்களைச் சந்தித்துள்ளது. புயல்களின் எண்ணிக்கை
30% அதிகரித்துள்ளது.
அதாவது வருடத்துக்கு 0.49
புயல்கள் என்று
இருந்த சராசரி கடந்த 16 ஆண்டுகளில், வருடத்துக்கு 0.63 என உயர்ந்துள்ளது.
கஜா புயல் ஏற்படுத்திய சேதங்களும்..
உயிரிழப்புகளும்...
514 நிவாரண முகாம்களில் 2,51,674 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்,
841 மின்மாற்றிகள், 201 துணை மின் நிலையங்கள், 86702 மின்கம்பங்கள் பலத்த சேதம்
அடைந்துள்ளதாகவும் அரசுத் தரப்பு அறிக்கை தெரிவிக்கின்றது.
50 க்கும் மேற்பட்ட மனித உயிர்கள், 14986 பறவைகள், 1181
ஆடுகள், 270 மாடுகள் ஆகியவை உயிரிழந்திருக்கின்றன.
945 மாமரங்கள், 4000 காபி, பருத்தி, பயறு, பலாவும், 4747
வாழைகளும், 30100 தென்னை மரங்களும், 7636 மக்காச் சோளமும், 3253 முந்திரி
மரங்களும், 32706 நெற்பயிர்களும், 88102 வேளாண்மை மற்றும் தோட்டப்பயிர்களும்,
முற்றிலும் அழிந்து போயிருக்கின்றன.
4844 மீன்பிடி படகுகளும், 5550 மீன்பிடி வலைகளும், 5727
மீன்பிடி படகின் இஞ்சின்களும் முற்றிலுமாய் சேதமடைந்துள்ளன.
இவைகள் அனைத்தும் அரசுத்தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும்
தோராயமான சேதங்களும் இழப்புகளும் தான்.
சேதங்களின் மதிப்பு பல்லாயிரக்கணக்கான கோடிகளைத் தொடும்
என்பது துல்லியமான கணெக்கெடுப்புக்குப் பின்னால் தெரியவரும்.
இது போன்ற நேரங்களில் முஸ்லிம் உம்மத்தாகிய நாம் என்ன செய்ய
வேண்டும்?
நம்முடைய மார்க்கம் நமக்கு காட்டுகிற வழிகாட்டுதல் என்ன?
ஒரு முஸ்லிமாக நாம் என்ன செய்ய வேண்டும்?...
உலகில் யார் பாதிக்கப்பட்டாலும் முதல் ஆளாக ஓடிச் சென்று அரவணைக்கவும், உதவிக்கரம் நீட்டவும் இஸ்லாம் ஆணையிட்டுள்ளது.
1. சேவையும் இறைவழிபாடுதான்…
அல்குர்ஆன் இறைவனுக்கு வழிபடுவதை மனித வாழ்க்கையின் லட்சியம் எனக்
குறிப்பிடுகிறது.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ ()
“நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு வழிபட வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும்
படைக்கவில்லை”.
( அல்குர்ஆன்: 51: 56 )
அல்குர்ஆன் அல்லாஹ்வின் படைப்பினங்களுக்கு, சக மனிதர்களுக்கு சேவை செய்வதை
வாழ்க்கையின் குறிக்கோள் என வலியுறுத்துகிறது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا
رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ()
“இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ருகூவும், ஸுஜூதும் செய்யுங்கள். மேலும், உங்கள் இறைவனுக்கு வழிபடுங்கள். மேலும், சேவையாற்றுங்கள். நீங்கள் வெற்றியடையக் கூடும்!”. ( அல்குர்ஆன்: 22: 77 )
ஒரு மனிதன் வழிபாடுகளின் மூலம் இறை உவப்பையும்,
இறை
நெருக்கத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் தூண்டும் அதே வேளையில் அந்த
வழிபாட்டை இரு கூறுகளாக பிரித்திருக்கின்றது.
ஒன்று உடல் ரீதியிலானது. இன்னொன்று உடமை மற்றும் பொருள்
ரீதியிலானது.
இறைவனின் நெருக்கத்தை, பொருத்த்தத்தைப் பெறுவதற்காக எவ்வாறு
உடல் ரீதியான வழிபாடு முக்கியம் என்று குர்ஆன் வலியுறுத்துகிறதோ அதே போன்று உடமை
மற்றும் பொருள் ரீதியான வழிபாடும் முக்கியம் என வலியுறுத்துகிறது.
ஆகவே தான் குர்ஆனில் அல்லாஹ் தொழுகையையும் ஜகாத்தையும் பல இடங்களில்
ஒன்றிணைத்தே வலியுறுத்திக் கூறுகின்றான்.
இறைவனின் முன் பக்திப் பரவசத்துடன் தலை தாழ்த்துவது மட்டுமல்ல வழிபாடு என்பது.
மாறாக, தான் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கிற
செல்வத்தில் சக மனிதர்களுக்கும் உரிமை உள்ளது என்ற உணர்வுடன் சேவையாற்றுவதும், உதவிக்கரம் நீட்டுவதும் வழிபாடு தான் என்பதை உணர்த்துவதற்காகத் தான் உடல்
ரீதியான தொழுகையையும், பொருள் ரீதியான ஜகாத்தையும் இணைத்தே
அல்லாஹ் கூறியிருக்கின்றான்.
மேலும், தற்போது முஸ்லிம் சமூகம் தாங்கள் செய்த நற்பணிகளை, சேவைகளை எண்ணி பெருமிதம் அடைந்து வருவதை முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக பகிர்வு தளங்களில் பரிமாறுவதின் தெரிய முடிகின்றது.
இதில் முஸ்லிம் சமூகம் மன நிறைவும், பெருமிதமும் அடைந்து விடக் கூடாது. ஏனெனில், உலகில் யார் பாதிக்கப்பட்டாலும் முதல்
ஆளாக ஓடிச் சென்று அரவணைக்கவும், உதவிக்கரம் நீட்டவும் இஸ்லாம்
ஆணையிட்டுள்ளது.
وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ
”அல்லாஹ் உமக்கு உபகாரம் செய்திருப்பதைப்
போன்று நீயும் சக மனிதர்களுக்கு உபகாரம் செய்”. ( அல்குர்ஆன்: 28: 77 )
2. மனித நேயப்பண்பு முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய உயர் பண்பாகும்..
أصابت خيل رسـول اللـه -صلى اللـه عليه وسلم- ابنة حاتم الطائي في
سبايا
طيّ فقدمتْ بها على رسـول الله -صلى الله عليه وسلم-فجُعِلَتْ في حظيرة بباب
المسجد فمرّ بها رسول الله -صلى الله عليه وسلم- فقامت إليه وكانت امرأة جزلة ، فقالت يا رسول الله هَلَكَ الوالِد وغابَ الوافد،فقال ومَنْ وَافِدُك ؟، قالت عدي بن حاتم ، قال الفارُّ من الله ورسوله ؟، ومضى حتى مرّ ثلاثاً ، فقامت وقالت يا رسول الله هَلَكَ الوالِد وغابَالوافد فامْنُن عليّ مَنّ الله عليك قال قَدْ فعلت ،
طيّ فقدمتْ بها على رسـول الله -صلى الله عليه وسلم-فجُعِلَتْ في حظيرة بباب
المسجد فمرّ بها رسول الله -صلى الله عليه وسلم- فقامت إليه وكانت امرأة جزلة ، فقالت يا رسول الله هَلَكَ الوالِد وغابَ الوافد،فقال ومَنْ وَافِدُك ؟، قالت عدي بن حاتم ، قال الفارُّ من الله ورسوله ؟، ومضى حتى مرّ ثلاثاً ، فقامت وقالت يا رسول الله هَلَكَ الوالِد وغابَالوافد فامْنُن عليّ مَنّ الله عليك قال قَدْ فعلت ،
ஹாத்திம் தாயி என்பவருடைய மகள் ஸஃபானாவும், அவரின் கோத்திரத்தாரும் கைதியாக
பிடிக்கப்பட்டு மதீனாவின் மஸ்ஜித்துன் நபவீயின் முன்னால் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த தருணம் அது..
நிலைமையை உணர்ந்து கொண்ட ஸஃபானா தழுதழுத்த குரலில் நபி {ஸல்} அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தையோ இறந்து விட்டார். என்னை ஆதரிக்க வேண்டிய என் சகோதரன் அதீயோ என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி
விட்டு ஓடிவிட்டார். என் மீது கருணை காட்டுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்!” என்றார்.
இந்த அபயக்குரல் மூன்று நாட்களாக மாநபி {ஸல்} அவர்களின் காதுகளில் பள்ளிவாசலைக் கடந்து
வீட்டிற்கும், வீட்டைக் கடந்து பள்ளிவாசலுக்கும்
செல்கிற போது ஒலித்துக் கொண்டே இருந்தது.
மூன்றாம் நாள் ஸஃபானாவின் அருகே சென்ற பெருமானார் {ஸல்} அவர்கள் அன்பு கூர்ந்து நோக்கி ”ஸஃபானாவே! உம்முடைய கோரிக்கை தான் என்ன?” ஆதரவுடன் கேட்டார்கள்.
وفي رواية أخرى أن سُفانة قد قالتلرسول الله -صلى الله عليه وسلم- يا مُحَمّد ! إن رأيتَ أن تخلّي عنّي فلاتشمِّت بي أحياء العرب ؟! فإنّي ابنة سيّد قومي ، وإنّ أبي كان يفُكّ العاني ،ويحمي الذّمار ، ويُقْري الضيف ، ويُشبع الجائع ، ويُفرّج عن المكروب ، ويفشيالسلام ويُطعم الطعام ، ولم يردّ طالب حاجة قط ، أنا ابنة حاتم الطائي )قالالنبي -صلى الله عليه وسلم- يا جارية ، هذه صفة المؤمن حقاً ، لو كان أبوكإسلامياً لترحّمنا عليه خلّوا عنها فإن أباها كان يُحِبّ مكارم الأخلاق ، والله يحب مكارم الأخلاق
அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை வறியோருக்கும், எளியோருக்கும், வாழ வழியில்லாதோருக்கும் கலங்கரை
விளக்கமாய் இருந்தவர். உயிருடன் வாழும் காலம் வரைக்கும் ஈந்து
கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்த மாமனிதர் அவர்.
ஆனால், நானும், என் சமூகமும் இன்று இப்படி
நிராயுதபாணிகளாய் நின்று கொண்டிருக்கின்றோம். எங்கள் மீது கருணை காட்டுங்கள்! உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவான்!” என்றார்.
قال
رسـول الله صلى الله عليه
وسلم
(( ارحموا عزيز قوم ذلّ ،
وغنياً افتقر ، وعالماً ضاع بين جهّال ))
[ ذكر هذه ابن هشام في سيرته ، والطبري في تاريخه ]
நீண்ட உரையாடலுக்குப் பின்னர் அண்ணலார் ஸஃபானாவின் தந்தையை வாழ்த்தி விட்டு, விடுதலை அளிப்பதாக கூறிவிட்டு அணிய ஆடையும்,
உண்ண உணவும், செலவுக்கு பணமும் கொடுத்து விட்டு சுற்றியிருந்த தோழர்களை நோக்கி “கண்ணியமானவர்கள் இழிவடைந்த நிலையில் இருப்பதைக் கண்டாலோ, வசதி படைத்தவர்கள் வறுமையில் மாட்டிக் கொண்டாலோ, அறிவுபடைத்தவர்கள் முட்டாள்களிடத்தில் சிக்கிக் கொண்டாலோ
உடனடியாக அவர்களுக்கு உதவுங்கள்” என கூறினார்கள்.
பின்னர், தகுந்த பாதுகாப்போடு ஸஃபானாவை அவரின்
சொந்த ஊரான ஷாமுக்கு அனுப்பி வைத்தார்கள். (
நூல்: இப்னு ஹிஷாம், அத்தாரிக் லித் தபரீ )
இப்போது, முஸ்லிம் சமூகம் அண்ணலாரின் இந்த அன்புக்
கட்டளையைத் தானே செய்திருக்கின்றது.
எனவே, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் வலியுறுத்திய கடமையைத் தான்
செய்திருக்கின்றோம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும்.
முஸ்லிம் சமூகம் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு
வாழ்க்கைக்கு திரும்பும் வரை தொடர்ந்து உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
நம்மை நோக்கி வருகிற பிற சமூக மக்களின் வாழ்த்துக்களை, பாராட்டுக்களை எண்ணி, அகமகிழ்ந்து போகிறோம் எனில் இஸ்லாம் மனித
நேயப் பணிகளுக்கு வழங்குகிற அபரிமிதமான நன்மைகளை இழக்கும் அபாயம் நேரிடலாம்.
3. எல்லா காலங்களிலும் மனித நேயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي
الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا
إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8)
“தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயங்களில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ – உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்ற வில்லையோ அவர்களிடம் நீங்கள்
நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ்
உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை
நேசிக்கின்றான்”.
( அல்குர்ஆன்: 60:8 )
4. அனைத்து உயிரினங்களோடும் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும்..
وعَنْ أَبِي هُرَيْرَةَ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :¬«بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ
إِذْ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَوَجَدَ بِئْرًا، فَنَزَلَ فِيهَا فَشَرِبَ،
وَخَرَجَ، فَإِذَا كَلْبٌ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنْ الْعَطَشِ، فَقَالَ
الرَّجُلُ: لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنْ الْعَطَشِ مِثْلُ الَّذِي بَلَغَ
مِنِّي، فَنَزَلَ الْبِئْرَ، فَمَلَأَ خُفَّهُ، ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، حَتَّى
رَقِيَ، فَسَقَى الْكَلْبَ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ». فَقَالُوا: يَا
رَسُولَ اللَّهِ وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لَأَجْرًا؟ فَقَالَ: «فِي كُلِّ
ذِي كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ»[البخاري ومسلم].
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு மனிதன் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனுக்குக் கடுமையாக தாகம் ஏற்பட்டது. அருகில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி
நீர் அருந்தினான். தாகம் தீர நீர் அருந்திய பின்னர் மேலே
வந்தான். அங்கே நாயொன்று தாகத்தின் கொடுமையால்
தரையை நக்கிக் கொண்டிருந்தது.
அப்போது அந்த மனிதன் ”நாம் எவ்வாறு தாகத்தால் துடித்துக்
கொண்டிருந்தோமோ அவ்வாறு தானே இந்த நாயும் தாகத்தால் துடித்துக் கொண்டிருக்கின்றது” என்று தன் மனதினுள் எண்ணினான்.
உடனே, கிணற்றுக்குள் இறங்கி தனது காலுறைக்குள்
தண்ணீர் நிரப்பிக் கொண்டு வெளியே வந்து அந்த நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனது இந்தச் செயலை மிகவும் மதித்தான்.
அதன் விளைவாக
அவனது பாவங்களை மன்னித்தான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
அப்போது, நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! பிராணிகளுக்குச் சேவை செய்தாலும் நன்மை
கிடைக்குமா?” என்று கேட்டார்கள்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “ஈரமான ஈரலுடைய எந்த ஒன்றுக்கும் அதாவது எந்த ஓர் உயிர்
பிராணிக்கும் சேவை செய்தாலும் நன்மை கிடைக்கும்” என்று பதில் கூறினார்கள். ( நூல்: புகாரி )
5. மனிதனுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு
செய்யும் சேவையே!..
وعن أبي هريرة رضي الله قال
قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم
مرضت فلم تعدني قال يا رب كيف أعودك وأنت رب العالمين قال أما علمت أن عبدي فلانا
مرض فلم تعده أما علمت أنك لو عدته لوجدتني عنده يا ابن آدم استطعمتك فلم تطعمني
قال يا رب كيف أطعمك وأنت رب العالمين قال أما علمت أنه استطعمك عبدي فلان فلم
تطعمه أما علمت أنك لو أطعمته لوجدت ذلك عندي يا ابن آدم استسقيتك فلم تسقني قال
يا رب كيف أسقيك وأنت رب العالمين قال استسقاك عبدي فلان فلم تسقه أما علمت أنك لو
سقيته لوجدت ذلك عندي رواه مسلم
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்களை நோக்கி “மறுமை நாளில் அல்லாஹ் மனிதனிடம் “மனிதனே!
நான்
நோய்வாய்ப்பட்டிருந்தேன். நீயோ என்னை நலம் விசாரிக்க வரவில்லையே!” என்று கேட்பான்.
மனிதன் பதைபதைப்போடு “என் இறைவனே! நீ தானே அனைத்துலகையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்றாய்! உன்னை எப்படி நான் வந்து நலம் விசாரிப்பது” என்று கேட்பான்.
அப்போது, அல்லாஹ் “இன்ன மனிதன் நோயுற்றிருந்ததை நீ
அறிந்திருந்தாய் தானே! ஆனால்,
அவனது உடல் நலம்
பற்றி நீ விசாரிக்கச் செல்லவில்லையே! நீ அவனை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால்
அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” என்று கூறுவான்.
மீண்டும், அல்லாஹ் “மனிதா!
உன்னிடம் நான்
உணவு கேட்டேனே? நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை?” என்று கேட்பான்.
அதற்கு, மனிதன் “அகில உலகங்களின் இரட்சகன் நீ! எப்போது நீ பசியோடு இருந்தாய்? நான் உனக்கு எப்படி உணவளிப்பது?” என்று கேட்பான்.
அப்போது, அல்லாஹ் ““இன்ன மனிதன் பசியோடு இருந்ததை நீ
அறிந்திருந்தாய் தானே! ஆனால்,
அவனது பசியை
போக்கிட உணவு கொடுக்க வில்லையே! நீ அவனுக்கு உணவு கொடுத்திருந்தால் அங்கே
என்னைப் பார்த்திருப்பாய்!” நீ அவனது தேவையை நிறைவேற்றி இருந்தால்
அதற்கான நற்கூலியை இப்போது இங்கு பெற்றிருப்பாய்!”
என்று கூறுவான்.
மீண்டும், அல்லாஹ் “மனிதா!
நான் தாகித்த
நிலையில் உன்னிடம் வந்து தண்ணீர் கேட்டேனே? ஏன் எனக்கு நீ குடிக்கத் தண்ணீர்
தரவில்லை?” என்று கேட்பான்.
அதற்கு, மனிதன் “அகில உலகங்களின் அதிபதி நீ! எப்போது தாகித்திருந்தாய்? உனக்கு எவ்வாறு நான் தண்ணீர் புகட்டுவது?” என்று கேட்பான்.
அப்போது, அல்லாஹ் ““இன்ன மனிதன் தாகத்தோடு இருந்ததை நீ
அறிந்திருந்தாய் தானே! ஆனால்,
அவனது தாகத்தைப்
போக்கிட நீ தண்ணீர் கொடுக்க வில்லையே! நீ அவனுக்கு தண்ணீர் கொடுத்து தாகத்தை
தீர்த்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!”
நீ அவனது தேவையை
நிறைவேற்றி இருந்தால் அதற்கான நற்கூலியை இப்போது இங்கு பெற்றிருப்பாய்!” என்று கூறுவான்.
( நூல்: முஸ்லிம் )
மனித குலத்திற்கு செய்யும் சேவையை இறைவன் தனக்கு செய்யும் சேவைக்கு ஒப்பாக்கி
கூறுவதில் இருந்து மனிதகுல சேவையின் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது.
6. ஓர் உயிரை வாழ வைப்பதென்பது…
وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
“எவர் ஓர் உயிரை வாழ வைக்கின்றாரோ அவர்
ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் வாழ வைத்தவரைப் போன்றவராவார்”. ( அல்குர்ஆன்: 5: 32 )
7. வறியவர்களின் நிலை கண்டு வாரி, வாரி வழங்க வேண்டும்..
عن جرير بن عبد الله البجلي قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ
مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ
مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ الله صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ، فَدَخَلَ ثُمَّ
خَرَجَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ:
{يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ
وَاحِدَةٍ} النساء: 1 إِلَى آخِرِ الْآيَةِ،
{إِنَّ
اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} النساء: 1 وَالْآيَةَ
الَّتِي فِي الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ
وَاتَّقُوا اللهَ} الحشر: 18 «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ،
مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ - حَتَّى قَالَ - وَلَوْ بِشِقِّ
تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ
تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى
رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ مُذْهَبَةٌ،
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي
الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا
بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي
الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ
بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “”(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களோடு சபையில் அமர்ந்திருந்தோம்.
அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை
அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் ( கழுத்துகளில் ) வாட்களைத்
தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அல்லது, அவர்களில் அனைவருமே
முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.
அவர்களது வறிய நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம்
மாறிவிட்டது.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ( ஒருவித பதட்டத்தோடு ) வீட்டுக்குள்
சென்றுவிட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களிடம் பாங்கு சொல்லுமாறு உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள்
தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரையொன்றை நிகழ்த்தினார்கள்.
அப்போது, “மனிதர்களே! உங்கள்
இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள்
யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர்
மனைவியையும் படைத்தான்.
பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும்
பெண்களையும் (வெளிப் படுத்தி உலகில்) பரவச் செய்தான், ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர்
(தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக்
கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது
கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்” என்கிற (4 –ஆம் அத்தியாயத்தின் 1 –ஆவது ) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்.
பின்னர், ‘அல் ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள ”இறைநம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு
ஆன்மாவும் நாளைக் கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற் கொள்ளட்டும்.
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’ எனும் ( 59 –ஆம் அத்தியாயத்தின் 18 –ஆவது ) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர்
கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.
அப்போது ”( உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி,
ஒரு ‘ஸாஉ’ கோதுமை,
ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம்
பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்” என்றும் ”பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்” என்றும் வலியுறுத்திக் கூறினார்கள்.
உடனே ( நபித்தோழர்கள் ) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும்
வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ கோதுமையிலிருந்தும்
ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும்
தர்மம் செய்தார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை ( நிறைய பொருட்களைக் ) கொண்டுவந்தார்.
அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது, பின்னர் தொடர்ந்து மக்கள் ( தங்களின்
தர்மப் பொருட்களுடன் ) வந்துகொண்டிருந்தனர்.
இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை
நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று
இலங்கிக் கொண்டிருப்பதை நான் கண்டேன்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் இஸ்லாத்தில்
ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப்
பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு, அதற்காக
அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது.
அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன்
பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் அ(தன்படி செயல்பட்ட)
வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு” என்று
கூறினார்கள்.
( நூல்: முஸ்லிம் )
மனித நேய மாண்பாளர்களுக்கும், மனித குலத்திற்கு சேவை செய்வோருக்கும்
இஸ்லாம் கூறும் சோபனங்கள்…
பசித்தவருக்கு உணவளிப்பது, தாகிப்பவருக்கு தண்ணீர் அளிப்பது, ஆடையில்லாதோருக்கு
ஆடை கொடுப்பது, உணவு சமைப்பதற்கு உபகரணங்கள் வழங்குவது,
இதர இன்றியமையாதத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது மிகச் சிறந்த செயல்
எனக் கூறிடும் இஸ்லாம் அதற்காக அபரிமிதமான நன்மைகளை வாரி வழங்குகின்றது.
1. இறை நேசத்திற்கு உரியவராகின்றார்.
وقد قال النبي – صلى الله عليه وسلم
أحب الناس إلى الله
عزَّ وجل أنفعهم للناس ، وأحب الأعمال إلى الله عزَّ وجل سرور تدخله على مسلم ، أو
تكشف عنه كربه ، أو تقضي عنه ديناً ، أو تطرد عنه جوعاً ، ولو أن تمشي مع أخيك في
حاجته أحب إليَّ من أن أعتكف في المسجد شهراً
ஒரு கிராமவாசி மாநபி {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்கு பிரியமான செயல் எது? என்று வினவினார்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} “மனிதர்களில் அல்லாஹ்விற்கு மிகவும்
நேசத்திற்குரியவர் சக மனிதர்களுக்கு எல்லா வகையிலும் பயன் தருகின்றவரே! செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது ஒரு முஸ்லிம் தன் சக முஸ்லிமின்
வாழ்க்கையில் ஏற்படுத்துகிற மகிழ்ச்சியும், சந்தோஷமும் ஆகும்.
அந்த மகிழ்ச்சி என்பது அவனுடைய ஒரு கஷ்டத்தை நீக்குவதின் மூலமாகவோ, அல்லது அவனுடைய கடனை அடைப்பதின் மூலமாகவோ, அல்லது அவனுடைய பசியை, வறுமையை போக்குவதின் மூலமாகவோ அமைந்திருந்தாலும் சரியே!
மீண்டும், கேள்வி கேட்ட அந்த கிராமவாசியை நோக்கி “நீர் உம் சகோதரர் ஒருவரின் தேவையை நிறைவேற்றுவதற்காக நடந்து செல்வதென்பது ஒரு
மாத காலம் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பதை விட எனக்கு மிகப் பிரியமானதாகும்” என்று பதில் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )
2. மண்ணறை முதல் மஹ்ஷர் வரை உதவி
செய்யப்படுவார்….
فعن جعفر بن يزيد، عن جعفر
بن محمد عن أبيه عن جده رضي الله عنهم قال: قال رسول الله صلى الله عليه وسلم
ما أدخل رجلٌ على مؤمنٍ سروراً إلا خَلَقَ الله عزَّ وجل من ذلك السرور
ملكاً يعبد الله عزَّ وجل ويوحِّده، فإذا صار العبد في قبره، أتاه ذلك السرور
فيقول: أما تعرفني ؟! فيقول له: مَن أنت ؟ يقول: أنا السرور الذي أدخلتني على
فلان، أنا اليوم أونس وحشتك، وألَقِّنك حجتك، وأثبتك بالقول الثابت، وأشهدك مشاهدك
يوم القيامة، وأشفع لك إلى ربك، وأريك منزلتك في الجنة
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “இறைநம்பிக்கையாளன் ஒருவன் தன் சக முஸ்லிமின் வாழ்வில் ஏற்படுத்துகிற
மகிழ்ச்சியின் பிரதிபலனாக அல்லாஹ் ஒரு வானவரை படைக்கிறான். அந்த வானவர் அல்லாஹ்வை வணங்குகின்றார்.
அந்த இறைநம்பிக்கையாளர் இறந்து, கப்ரில் வைக்கப்பட்ட பிறகு அந்த
மகிழ்ச்சிக்கு அழகிய தோற்றம் கொடுத்து அல்லாஹ் கப்ருக்கு அனுப்புகின்றான். அது அவன் முன்னால் வந்து நின்று ”நான் யார் என்பதை நீ அறிவாயா?” என்று கேட்கும்.
அப்போது, அந்த முஃமின் நீயார்? என்று கேட்பார். அதற்கு அந்த உருவம் நான் தான் உலகில்
இன்ன மனிதனின் வாழ்வில் நீ ஏற்படுத்திய மகிழ்ச்சி என்று சொல்லி விட்டு… தொடர்ந்து “இன்று நான் உன்னுடைய வெருட்சியை நீக்க
வந்திருக்கின்றேன். உம் ஆதாரத்தை நிலை நிறுத்தவும், உம்மை வானவர்களின் கேள்வியின் போது சிறந்த பதிலை கொண்டு தரிபடுத்தவும்
வந்திருக்கின்றேன்.
மறுமை நாளில் உனக்கு சாட்சியாகவும், உம் இறைவனிடத்தில் சிறந்த
பரிந்துரையாகவும் நான் இருப்பேன்.
மேலும், சுவனத்தில் உம் இருப்பிடம் எது என்பதை
இப்போது உமக்கு காண்பித்து தரவே நான் இங்கு வந்துள்ளேன்!” என்றும் அது சொல்லும்.
( நூல்: தர்ஃகீப் வத் தர்ஹீப் )
3. சுவனத்தில் சாந்தியோடு நுழைவார்…
فعن عبد الله بن عمرو رضي
الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: «اعبدوا الرحمن، وأطعموا
الطعام، وأفشوا السلام، تدخلوا الجنة بسلام»
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள், பசித்தவருக்கு உணவளியுங்கள், ஸலாத்தைப் பரப்புங்கள், நீங்கள் சாந்தியோடு சுவனம் நுழைவீர்கள்!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
وعن البراء بن عازب رضي
الله عنه قال :جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله،
علمني عملا يدخلني الجنة. قال :«أعتق النسمة وفك الرقبة، فإن لم تطق ذلك
فأطعم الجائع واسق الظمآن
பர்ரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! சுவனத்தில் நுழையச் செய்திடும் ஓர் அமலை எனக்கு
அறிவித்துத் தாருங்கள்!” என்றார்.
அப்போது, நபி {ஸல்} அவர்கள் ”அடிமையை விடுவிப்பீராக! ஆபத்தில் மாட்டிக் கொண்டிருப்போரை காப்பாற்றுவாயாக! அல்லது அகதிகளை
ஆதரிப்பீராக! இவற்றைச் செய்திட உம்மால் இயலவில்லை எனில்
பசித்தவருக்கு உணவளிப்பீராக! அல்லது தாகித்தவருக்கு தண்ணீர் வழங்குவீராக!” என்று கூறினார்கள். (நூல்:இப்னு
ஹிப்பான்)
وروى أحمد في المسند، والترمذي في السنن عن أبي سعيد الخدري قال: قال رسول الله صلى
الله عليه وسلم
أيما مؤمن أطعم مؤمنا على
جوع أطعمه الله يوم القيامة من ثمار الجنة، وأيما مؤمن سقى مؤمنا على ظمأ سقاه
الله يوم القيامة من الرحيق المختوم، وأيما مؤمن كسا مؤمن على عري كساه الله من
خضر الجنة
அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எந்த ஒரு இறை நம்பிக்கையாளர் பசித்திருக்கும் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு
உணவளிக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்து கனிகளை
மறுமையில் வழங்குவான்.
“எந்த ஒரு இறை நம்பிக்கையாளர்
தாகித்திருக்கும் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு தண்ணீர்
கொடுக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு ரஹீக்கில் மஃதூமின் நீரை
மறுமையில்
புகட்டுவான்.
“எந்த ஒரு இறை நம்பிக்கையாளர்
ஆடையில்லாதிருந்த ஓர் இறை நம்பிக்கையாளருக்கு அணிய ஆடை
கொடுக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்து பட்டாடையை மறுமையில் அணிவிப்பான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: திர்மிதீ
)
وروى أحمد في الزهد عن عبد الله بن عبيد بن عمير، قال
يحشر الناس يوم القيامة أجوع ما كانوا وأعطش ما
كانوا وأعرى ما كانوا ، فمن أطعم لله عز وجل أطعمه الله عز وجل ، ومن كسا لله عز
وجل كساه الله عز وجل ، ومن سقى لله عز وجل سقاه الله عز وجل ،
அப்துல்லாஹ் இப்னு உபைத் இப்னு அம்ர் (ரலி) அறிவிக்கிற இன்னொரு அறிவிப்பில்… இறை நம்பிக்கையாளர் – என்ற வார்த்தை இடம் பெறாமல் பொதுவாக அல்லாஹ்விற்காக யார் மேற்கூரிய நற்பணிகளை செய்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் மேற்கூரிய சோபனங்களை வழங்குவதாக முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
நிறைவாக ஓர் அழகிய வரலாற்றுச் செய்தி....
وذكر أهل التاريخ أنه في عهد الخليفة أبي بكر الصديق - رضي الله عنه -
أصاب الناس جفاف وجوع شديدان، فلمّا ضاق بهم الأمر ذهبوا إلى الخليفة أبي بكر -
رضي الله عنه - وقالوا: يا خليفة رسول الله،
إنّ السّماء لم تمطر، والأرض لم تنبت، وقد أدرك الناس الهلاك فماذا نفعل؟ قال أبو
بكر - رضي الله عنه -: انصرفوا، واصبروا، فإني أرجو ألاّ يأتي المساء حتّى يفرج
الله عنكم. وفي آخر النهار جاء الخبر بأنّ قافلة جمالٍ لعثمان بن عفّان - رضي الله
عنه - قد أتت من الشّام إلى المدينة. فلمّا وصلت خرج النّاس يستقبلونها، فإذا هي
ألف جمل محملة سمناً وزيتاً ودقيقاً، وتوقّفت عند باب عثمان - رضي الله عنه -
فلمّا أنزلت أحمالها في داره جاء التجار. قال لهم عثمان - رضي الله عنه - ماذا
تريدون؟ أجاب التجار: إنّك تعلم ما نريد، بعنا من هذا الذي وصل إليك فإنّك تعرف
حاجة النّاس إليه. قال عثمان: كم أربح على الثّمن الذي اشتريت به؟ قالوا: الدّرهم درهمين.
قال: أعطاني غيركم زيادة على هذا. قالوا: أربعة! قال عثمان - رضي الله عنه -: أعطاني غيركم أكثر.
قال التّجار: نربحك خمسة. قال عثمان: أعطاني غيركم أكثر. فقالوا: ليس في المدينة
تجار غيرنا، ولم يسبقنا أحد إليك، فمن الذي أعطاك أكثر مما أعطينا؟! قال عثمان -
رضي الله عنه -:إن الله قد أعطاني بكل درهم عشرة، الحسنة بعشرة أمثالها، فهل عندكم
زيادة؟ قالوا: لا. قال عثمان: فإني أشهد الله أني جعلت ما جاءت به هذه الجمال صدقة
للمساكين وفقراء المسلمين. ثم أخذ عثمان بن عفان يوزّع بضاعته، فما بقي من فقراء
المدينة واحد إلاّ أخذ ما يكفيه ويكفي أهله.
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம், பஞ்சம் எனும் பேரிடர் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
கடும் பஞ்சத்தால் மக்கள் உண்ண உண்வின்றி,
குடிக்க
நீரின்றி கடும் சோதனைக்கு உள்ளாகினர். அனுதினமும் ஆட்சியாளரின் வீட்டு வாசலின் முன்பாக ஆயிரமாயிரம் மக்கள் வருவதும், போவதுமாக தங்களின் சிரமங்களை முறையிட்டவர்களாக இருந்ததை தவிர்க்க
முடியவில்லை.
“அல்லாஹ்வால் எங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஆட்சியாளரே! வானம் பொய்த்து விட்டது! பூமி மலடாகி
காய்ந்து விட்டது! நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை
நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் என்ன செய்வது?” என்று கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி கேட்டனர்.
கண்ணீர் மல்க, கலீஃபா அபூபக்ர் (ரலி) கூறினார்கள் “மக்களே! உங்களின் இல்லங்களுக்கு
திரும்பிச் செல்லுங்கள்! பொறுமை காத்திடுங்கள்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
உங்களின் கஷ்டங்களை எல்லாம் மிக விரைவில்
நீக்கி, சுகத்தோடு வாழ வைப்பான்” என ஆதரவு வைக்கின்றேன்” என்று.
இப்படியாக நாட்கள் பல உருண்டோடியது.
திடீரென ஒரு
நாள் மதீனா நகரெங்கும் புளுதிப் படலம், மக்கள் என்னவோ ஏதோவென்று பதறியடித்தவாறு வீட்டை விட்டு வெளியேறி மதீனாவின் முக்கிய வீதியில் ஒன்று கூடி தூரத்தில் தெரிந்த புளுதி கொஞ்சம், கொஞ்சமாக மதீனா நகரை நெருங்கி வருவது
குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
இப்போது புளுதி சிறிது விலகி ஓர் ஒட்டகக் கூட்டம் தங்களின் அருகே வருவதை
உணர்ந்தனர்.
அவர்களின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி! அந்த ஒட்டகக் கூட்டத்தினரைக்
கண்டு…
ஆம்! அந்த ஒட்டகக்கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்களின் வியாபாரக் கூட்டம். கடந்த
சில மாதங்களுக்கு முன்பாக ஷாமுக்கு சென்றிருந்த வியாபாரக் கூட்டம். பெருமளவு
தானியங்களோடும், ஜைத்தூன் எண்ணெய் பீப்பாய்களோடும், கொழுப்புகளோடும் ஆயிரம் ஒட்டகைகளில்
வந்து உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன்பாக நின்றது.
வரலாற்று ஆசிரியர்கள் இப்படிக் கூட
கூறுவார்கள் “முதல் ஒட்டகம் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன் நின்றது என்றால் ஆயிரமாவது கடைசி ஒட்டகம் ஷாமின் எல்லையில் நின்றது” என்று.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட மதீனா
மற்றும் அதன்
சுற்று வட்டார வியாபாரிகள் அனைவரும் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன்பாக கூடிவிட்டனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள் வியாபாரிகளின்
முற்றுகையையும், மக்களின் முகத்தில் தெரிந்த சோக ரேகைகளின் பிண்ணனியையும் ஒரே நேரத்தில் புரிந்து கொண்டார்கள்.
ஏனெனில், வருகிற வழியிலேயே மதீனாவில் நிகழ்கிற பேரிடர், அதனால் ஏற்பட்டிருக்கிற பசி, பஞ்சம் ஆகியவற்றைக் கேட்டு தெரிந்து வைத்திருந்தார்கள்.
உள்ளூர் மற்றும் சுற்று வட்டார வியாபாரிகளின் சார்பாக ஒருவர் முன் வந்து
“மக்களின் தேவைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்! எனவே, மொத்த சரக்குகளையும் உள்ளூர் மற்றும்
சுற்று வட்டார வியாபாரிகளாகிய எங்களிடமே நீங்கள்
விலைக்கு தர வேண்டும். வெளியூர் வியாபாரிகளுக்கு நீங்கள் விற்பனை செய்யக் கூடாது” என்று கோரிக்கை வைத்தார்.
அது கேட்ட உஸ்மான் (ரலி) அவர்கள் “என்னிடம் இருந்து நீங்கள் வாங்கும்
பொருளுக்கு எவ்வளவு லாபம் தருவீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு, வியாபாரிகள் “ஒரு திர்ஹம் மதிப்புள்ள பொருளுக்கு இரண்டு திர்ஹம்கள்
தருகின்றோம்” என்றார்கள். அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள் “வெறொருவர் உங்களை விட கூடுதலாக
தருகின்றேன் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்கள்.
அதற்கு, வியாபாரிகள் “இரண்டுக்கு மூன்று திர்ஹம்” என்றார்கள். அதற்கு
, உஸ்மான் (ரலி)
அவர்கள் “வெறொருவர் உங்களை விட கூடுதலாக
தருகின்றேன் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்கள்.
அதற்கு, வியாபாரிகள் “மூன்றுக்கு நான்கு திர்ஹம்” என்றார்கள். அப்போதும் முன்பு போன்றே உஸ்மான் (ரலி) அவர்கள் கூற, இப்போது வியாபாரிகள் கடைசியாக நான்குக்கு ஐந்து திர்ஹம் தருகின்றோம்” என்றார்கள்.
அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள் “வெறொருவர் உங்களை விட கூடுதலாக தருகின்றேன் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட வியாபாரிகள் “எங்களுக்குத் தெரிந்து உள்ளூரின், சுற்றுபுறத்தின் அனைத்து வியாபாரிகளும் இங்கே தான் குழுமியிருக்கின்றோம். அத்தோடு இதுவரை உங்களிடம் தான் நாங்கள் கொடுக்கல் வாங்கலும் வைத்திருக்கின்றோம், எங்களை விட கூடுதல் விலைக்கு, கூடுதல் லாபத்திற்கு வியாபாரம் பேசிய அந்த வியாபாரி யார்? இப்பொழுதே எங்களுக்குத் தெரிய வேண்டும்? என்று கேட்டனர்.
அது கேட்ட உஸ்மான் (ரலி) அப்படியே மௌனித்து நிற்கின்றார்கள். மக்கள்
ஏக்கத்தோடு நிற்கின்றார்கள். வியாபாரிகள்
புருவத்தை
உயர்த்தி யாராக இருக்கும் என்ற சிந்தனையோடு நின்று கொண்டிருக்கின்றார்கள்.
நீண்ட மௌனத்திற்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் “அல்லாஹ்விடம் நான் வியாபாரம் பேசியுள்ளேன்” அவன் தான் உங்களை விட அதிக விலைக்கு, லாபத்திற்கு வியாபாரம் பேசிய
வியாபாரியாவான்” என்று கூறி மௌனத்தைக் கலைத்தார்கள்.
“அல்லாஹ் ஒவ்வொரு திர்ஹத்திற்கும் பத்து திர்ஹம் தருவதாக திருக் குர்ஆன் மூலம் வாக்களித்திருக்கின்றான். “எவர் அழகிய ஒன்றை நம்மிடம் கொண்டு வருகின்றாரோ அது போன்று
அவருக்கு பத்து நன்மைகளை வழங்குவோம்” அல்அன்ஆம் அத்தியாயத்தின் 160 –ஆவது வசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, இதை விட கூடுதலாக நீங்கள் யாரும் தருவீர்களா? இறைவனை விட கூடுதலாக வழங்க யாருக்குத் தான் இயலும்? என்று கேட்டார்கள்.
அதற்கு, வியாபாரிகள் “எங்களால் ஒருபோதும் அப்படித் தர இயலாது” என்று கூறினார்கள்.
அப்போது, உஸ்மான் (ரலி) அவர்கள் “என் ஒட்டகைகள் ஆயிரமும் சுமந்து வந்த அத்துனை
பொருட்களையும் வறட்சியாலும், பசி பஞ்சத்தாலும் வாடி வதங்கிக் கொண்டிருக்கிற இந்த மக்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்குகின்றேன்! அல்லாஹ்வே இதற்கு
உன்னையே சாட்சியாகவும் ஆக்குகின்றேன்” என்று கூறினார்கள்.
மதீனாவில் இருக்கிற எல்லா குடும்பத்தினர்களும் அவரவர்களின்
தேவைக்கு ஏற்ப அதில் இருந்து எடுத்துக்
கொண்டார்கள்.
இறுதியில் எதுவும் மிஞ்சவில்லை”.
( நூல்: ஃபிக்ஹுத் தாஜிருல் முஸ்லிம் )
ஆகவே, உலக மாந்தருக்கு சேவை செய்தல், மனித நேயத்தோடும், மனிதாபிமானத்தோடும் நடத்தல் என்கிற
மகத்தான பணியை இஸ்லாம் வழிபாடாகவே கருதுகின்றது.
அதற்கென எல்லையில்லா பல நன்மைகளை வாரி வழங்குவதை மேற்கூரிய நபிமொழிகள், மற்றும் வரலாறுகள், திருமறை வசனங்கள் உணர்த்துவதை நம்மால் உணர முடிகின்றது.
எனவே, எல்லா காலத்திலும், எல்லா மனிதர்களிடத்திலும் மனித நேயத்தோடு நடந்து மானுடம் தழைக்க
உதவியாளர்களாய் இருப்போம்!
வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களோடும் இரக்கத்தோடும், சேவை உணர்வோடும் நடந்து கொள்ளும் அழகிய
பண்பைத் தந்தருள் புரிவானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!
Barakkallahu
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteجزاك الله خيرا كثيرة في الدارين
ReplyDeleteيا استادي
جزاك الله خيرا كثيرا فى الدارين
ReplyDeleteجزاك الله خيرا كثيرا فى الدارين
ReplyDeleteமாஷா அல்லாஹ் மௌலானா மிகவும் பயனுள்ள தகவல்கள் அனைத்தும் அல்லாஹ் உங்கள் கல்வி ஞானத்தை மென் மேலும் அதிகப்படுத்துவானாக!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமாஷாஅல்லாஹ்! பஷீர் மெளலானா
நிவாரண பணி காரணமாக, இந்த தாமத பதிவு .அல்லாஹ் தங்களின் ஆயுளில்,ஆரோக்கியத்தில்,கல்வியில்,
பொருளாதாரத்தில்,நிம்மதியில் மற்றும் அனைத்து நலவுகளிலும் அபிவிருத்தி செய்வானாக!