Thursday, 29 August 2019

வாழ்வோம்! வரலாறாக… வரலாறாவோம்!! பிறர் வாழ்வதற்காக….


வாழ்வோம்! வரலாறாக
வரலாறாவோம்!! பிறர் வாழ்வதற்காக….




ஹிஜ்ரி புத்தாண்டை வரவேற்கிறோம்! ஹிஜ்ரி புத்தாண்டை கொண்டாடுகின்றோம்! ஹிஜ்ரி ஆண்டு குறித்த வரலாற்று நினைவேந்தல் நிகழ்ச்சிகள் பலதை நடத்துகின்றோம். அதில் பங்கு பெறவும் செய்கின்றோம்!

ஏன் நாம் இப்படி செய்கிறோம்? ஹிஜ்ரத் எனும் தியாகப்பயணம் குறித்து அறிந்து வைத்திருப்பதால்.., அதன் வரலாற்றுப் பிண்ணனியை விளங்கி வைத்திருப்பதால்அதனால் உலகளவில் இஸ்லாம் ஏற்படுத்திய தாக்கத்தை புரிந்து வைத்திருப்பதால்

இப்படி எத்தனையோஇருப்பதால்பதில்களாக நம்மிடம் இருக்கின்றன. என்றாலும், இது போன்ற வரவேற்பு, கொண்டாட்டம், நினைவேந்தல் ஆகியவைகளால் இந்த உம்மத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் என்ன? இந்த உம்மத் பெற்றிருக்கிற பயன்பாடுகள் என்ன? இப்படியான ஆயிரமாயிரம் கேள்விகளோடு நாம் அணுகினால் விடை என்னவோ எதிர்மறையாகத் தான் வருகிறது.

ஹிஜ்ரத் என்பது பல படிப்பினைகளையும், பாடங்களையும் சுமந்து நிற்கிற மகத்தான வரலாறு.

ஒரு சமூகத்தின் விளிம்பு நிலை முதற்கொண்டு உயர்நிலை வரை அந்த சமூகம் பதிந்து வந்த தடங்களை பதிவு செய்திருக்கும் கல்வெட்டு.

ஒரு சமூகம் எதிர் கொண்ட அடக்குமுறைகள், அதன் விளைவாக தனி மனித, சமூக வாழ்வில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள், சந்தித்த அவமானங்கள், உயிர், பொருட் சேதங்கள் என பலவற்றை புள்ளிவிவரத்தோடு பதிவு செய்திருக்கிற அற்புதத் தொகுப்பு.

1.   ஹிஜ்ரத் சகோதரத்துவத்தை உணர்த்துகிறது என்று உயர்த்திக் கூறுகின்றோம். ஆனால், சொந்த, சமூக வாழ்வில் எவ்வளவு தூரம் நாம் சகோதரத்துவத்தைப் பேணுகின்றோம்?

2.   ஹிஜ்ரத் விட்டுக் கொடுத்தல் எனும் பண்பாட்டை போதிப்பதாக சொல்கின்றோம். ஆனால், சொந்த, சமூக வாழ்வில் எவ்வளவு தூரம் நாம் கடைபிடிக்கின்றோம்?

ربيعة الأسلمي خادم رسول الله صلى الله عليه وسلم قال
أعطاني رسول الله صلى الله عليه وسلم أرضاً وأعطى أبا بكر أرضاً فاختلفنا في عذق نخلة، قال: وجاءت الدنيا . فقال أبو بكر: هذه في حدي، فقلت: لا، بل هي في حدي . قال: فقال لي أبو بكر كلمة كرهتها وندم عليها. فقال لي يا ربيعة قل لي مثل ما قلت لك حتى تكون قصاصاً، فقلت: لا والله ما أنا بقائل لك إلا خيراً، قال: والله لتقولن لي كما قلت لك حتى تكون قصاصاً وإلا استعديت عليك برسول الله صلى الله عليه وسلم فقلت: لا والله ما أنا بقائل لك إلا خيراً قال فرفض أبو بكر الأرض وأتى النبي ــصلى الله عليه وسلم وجعلت أتلوه ــ أي أتبعه ــ فقال أناس من أسلم أي من قبيلته يرحم الله أبا بكر هو الذي قال ما قال ويستعدي عليك . فقلت أتدرون من هذا ؟ هذا أبو بكر ، هذا ثاني اثنين ، هذا ذو شيبة المسلمين ، إياكم لا يلتفت فيراكم تنصروني عليه فيغضب فيأتي رسول الله صلى الله عليه وسلم فيغضب لغضبه، فيغضب الله لغضبهما، فيهلك ربيعة. قال: فرجعوا عني وانطلقت أتلوه حتى أتى النبي صلى الله عليه وسلم فقص عليه الذي كان. فقال رسول الله صلى الله عليه وسلم يا ربيعة مالك والصديق ؟ فقلت مثل ما قال أي كما ذكر الصديق كان كذا وكذا فقال لي قل مثل ما قلت لك فأبيت أن أقول له، فقال رسول الله صلى الله عليه وسلم أجل فلا تقل له مثل ما قال لك، ولكن قل: يغفر الله لك يا أبا بكر . قال فولى أبو بكر الصديق رضي الله عنه وهو يبكي». رواه الحاكم في مستدركه وقال
 حديث صحيح على شرط مسلم ولم يخرجاه

ரபீஆ அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஒரு பேரிச்சை மரம் விஷயத்தில் நாங்கள் (நானும் அபூபக்ரும்) கருத்து வேறுபாடு கொண்டோம். அது எனது பகுதியில் உள்ளதாகும் என்று நான் கூறினேன். அது எனது பகுதியில் உள்ளதாகும் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

எனவே, எனக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் மத்தியில் (கடும்) வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் நான் வெறுக்கக்கூடிய ஒரு வார்த்தையைக் கூறி விட்டார்கள். பின்பு வருந்தினார்கள். ரபீஆவே அது போன்று என்னிடத்தில் நீங்களும் திருப்பிச் சொல்லுங்கள். பதிலுக்கு பதிலாகி விடும் என்று கூறினார்கள். அதற்கு நான் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று கூறினேன். அவர்கள் நீ இவ்வாறு கூற வேண்டும் இல்லையென்றால் உன் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று முறையிடுவேன் என்று கூறினார்கள். நான் செய்ய மாட்டேன் என்று கூறி விட்டேன்.

எனவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் நிலத்தை விட்டுவிட்டு நபி {ஸல்} அவர்களிடம்) சென்றார்கள். நானும் அவர்களுக்குப் பின்னால் சென்றேன். அஸ்லம் கோத்திரத்தைச் சார்ந்த சிலர் வந்து அபூபக்ருக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக. அபூபக்ர் உம்மிடத்தில் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டு எந்த விஷயம் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடத்தில் முறையிடச் செல்கிறார் என்று கேட்டனர். அதற்கு நான் இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? இவர் தான் (குகையில் இருந்த) இரண்டு பேரில் இரண்டாவதாக இருந்தவர். முஸ்லிம்களிலேயே மிகப்பெரும் அந்தஸ்தை பெற்றவர்கள். உங்களையும் கவனிக்காமல் செல்கிறார்.

அவர் உங்களைப் பார்த்து நீங்கள் அவருக்கெதிராக எனக்கு உதவிசெய்வதாகக் கருதி கோபமுற்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் செல்வார். அவர் கோபமுற்றதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கோபப்படுவார்கள்.

பின்பு அவ்விருவரும் கோபம் கொண்ட காரணத்தினால் அல்லாஹ்வும் கோபப்படுவான். எனவே ரபீஆ அழிந்து விடுவான் என்று கூறினார். அதற்கு அவர்கள் எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்? என்று கேட்டார். (ஒன்றும் செய்யாமல்) திரும்பிச் சென்று விடுங்கள் என்று நான் கூறினேன்.

அபூபக்ர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் சென்றார்கள். நான் மாத்திரம் தனியாக அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன். அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் வந்து நடந்தவாறு விஷயத்தைக் கூறினார்கள். நபி {ஸல்} அவர்கள் தலையை என் பக்கமாக உயர்த்தி ரபீஆவே உனக்கும், சித்திக்கிற்கும் மத்தியில் என்ன நடந்தது என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே இவ்வாறு இவ்வாறு நடந்தது.

அப்போது அவர் வெறுக்கக்கூடிய ஒரு வார்த்தையை என்னிடத்தில் கூறி விட்டார். அதற்குப் பகரமாக நான் கூறியவாரே நீயும் கூறு என்று கூறினார். ஆனால் நான் (கூற) மறுத்து விட்டேன் என்று நபி {ஸல்} அவர்களிடத்தில் நான் சொன்னேன்.

அதற்கு அவர்கள் ஆம். நீ அவரிடத்தில் (அவர் கூறியவாறு) திருப்பிக் கூற வேண்டாம். மாறாக அபூபக்ரே அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக என்றே சொல் என்று கூறினார்கள். எனவே நான் அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக என்று சொன்னேன்.                                        ( நூல் : அஹ்மத் 15982 )

உண்மையில் ஹிஜ்ரத் சொல்லிய விட்டுக் கொடுத்தல் எனும் பண்பாட்டை வாழ்வின் எல்லா நிலைகளிலும் பற்றிப் பிடித்தவர்கள் ஸஹாபாக்கள்.

3.   ஹிஜ்ரத் தியாக மனப்பான்மையை, மனித நேயப்பண்பாட்டை தூண்டுவதாக நாம் பேசுகின்றோம். ஆனால், சொந்த, சமூக வாழ்வில் எந்தளவு அதைக் கையாள்கிறோம்?

ففي معركة اليرموك استشهد عدد من المسلمين، وأصيب بعضهم بجروح خطيرة، وكان من بين الذين أصيبوا: الحارث بن هشام، وعكرمة بن أبي جهل، وعياش بن ربيعة، فلقد سقط الثلاثة في أرض المعركة جرحى، فأسرع إليهم بعض الصحابة ونقلوهم إلى الخيمة التي يتم فيها علاج الجرحى من المسلمين، وأحسّ الحارث بن هشام بالعطش الشديد، فأشار إلى رجل كان يساعد الجرحى بأن يحضر له الماء، وجلس الرجل بجوار الحارث ليسقيه، فنظر الحارث إلى عكرمة وهو يرقد بجواره فأحسَّ بأنّه يريد الماء، فقال الحارث في نفسه: لو شربت الماء فلن يتبقى ماء لعكرمة، فقال للرجل: خذ الماء لعكرمة فإنّه عطشان، فقال له الرجل: وأنت أيضًا عطشان!! فقال له الحارث: الماء قليل فأعطه لعكرمة، فأخذ الرجل الماء وأعطاه لعكرمة، فنظر عكرمة لـ"عياش ابن ربيعة" فأحسّ أنه يريد الماء، فقال الرجل: الماء قليل فأعطه لعياش!! فنظر عيّاش للرجل الذي كان بجواره، فقد كانوا سبعة في الخيمة قد أصيبوا بجراحٍ خطيرة، فقال الرجل: الماء قليل فأعطه للرجل الذي يرقد بجواري، وهكذا ظلَّ كلَّ واحدٍ من هؤلاء السبعة يطلب من الرجل أن يسقى أخاه الذي بجواره، فلما وصل إلى السابع وجده قد مات، فعاد إلى السادس ليعطيه الماء فوجده قد مات، فعاد إلى الخامس ليجده قد مات، فعاد به إلى الرابع فوجده قد مات، فنظر إلى "عياش" ليعطيه الماء فوجده قد مات، فنظر إلى عكرمة ليعطيه الماء فيجده قد مات، فيسرع إلى الحارث ليعطيه الماء فيجده قد مات..
فآثر كلَّ واحدٍ منهم الآخر على نفسهِ حتى ماتوا جميعًا!!

யர்மூக் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணம் அது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் காயமுற்று வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

அப்போது, காயமுற்றவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக படையில் பங்கெடுத்த தோழர் தண்ணீர் பையோடு விரைகிறார்.

தூரத்தில் ஒரு முனகல் சப்தம் அருகே சென்று பார்க்கிறார். அங்கே, ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) அவர்கள் கடும் தாகத்தோடு காணப்படுகின்றார்கள்.

தண்ணீர் பையை திறந்து ஹாரிஸ் (ரலி) அவர்களின்ன் வாயின் அருகே கொண்டு சென்ற போது, அவருக்கு சற்று தொலைவில் இன்னொருவரின் முனகல் சப்தம் ஹாரிஸ் (ரலி) அவர்கள் சப்தம் கேட்ட திசையை நோக்கி அவரின் தாகத்தை போக்குமாறு சைகை செய்கின்றார்.

தண்ணீர் பையோடு அவருக்கு அருகே சென்ற பார்த்த போது, அங்கே இக்ரிமா இப்னு அபூஜஹ்ல் (ரலி) கடுமையான தாகத்தோடு காணப்படுகின்றார்கள்.

அவருக்கு சற்று தொலைவில் இருந்து இன்னொருவரின் முனகல் சப்தம், இக்ரிமா (ரலி) அவர்கள் அவரின் தாகத்தைப் போக்குமாறு சைகை செய்கின்றார்.

தண்ணீர் பையோடு ஓடிச் சென்று பார்த்தால் அங்கே, அயாஷ் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் நாவறண்டு தாகத்தோடு காணப்பட்டார்கள். வாயின் அருகே தண்ணீரை கொண்டு செல்கிற போது அயாஷ் (ரலி) அவர்கள் ஷஹீதாகி விட்டார்.

இக்ரிமா (ரலி) அவர்களை நோக்கி தண்ணீர் பையோடு ஓடிச் சென்று பார்த்தால் அவரும் ஷஹீதாகி விட்டார்.

ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கலாம் என்று அங்கே ஓடிச் சென்றால் அவரும் ஷஹீதாகி விட்டார். ( நூல்: அல்மஃகாஸீ லிஇமாமி அல்வாகிதீ )

உண்மையில் ஹிஜ்ரத் தூண்டுகிற தியாக மனப்பான்மையையும், மனித நேயப் பண்பாட்டையும் மரணத்தின் விளிம்பு வரை கைவிடாதவர்கள் ஸஹாபாக்கள்.

வரலாறுகள் தரும் உணர்வூட்டும் உபதேசங்கள், உயிர்ப்பூட்டும் படிப்பினைகள் யாவும் வெறுமெனே உச்சுக் கொட்டி விட்டு சென்று விடுவதற்காக அல்ல.

உயிராய் நேசித்து, உருகி உருகி கடைபிடித்து வரலாறாய் வாழ்வதற்காக என்பதை உளமாற ஏற்றுக் கொள்வோம்!

வாழ்வோம்! வரலாறாக
வரலாறாவோம்!! பிறர் வாழ்வதற்காக

1441 –வது ஹிஜ்ரி புத்தாண்டில் அடியெடுத்து வைக்க இருக்கின்றோம். ஹிஜ்ரி புத்தாண்டின் வாயிலாக நாம் வாழ்கிற இந்த காலத்திற்கேற்ற படிப்பினை என்ன என்பதை ஹிஜ்ரத் வரலாற்றின் ஊடாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

மதீனாவிற்குள் அடியெடுத்து வைத்த நொடிப்பொழுதுகளில் இருந்து துவங்கிய மாநபி {ஸல்} அவர்களின்இந்த உம்மத்தின் உயர்வு குறித்தான கவலை, தீனுல் இஸ்லாத்தின் எழுச்சி குறித்தான சிந்தனைமாநபி {ஸல்} அவர்கள் மரணத்தை தழுவும் கடைசி நிமிடம் வரை இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

மதீனாவின் வருகைக்குப் பின்னர் மாநபி {ஸல்} அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தீர்க்கமான திட்டமிடல், கள ஆய்வு, மதிவியூகம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.

முஸ்லிம்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு

பெருமானார் {ஸல்} அவர்கள் மதீனாவிற்கு வந்த பின்னால் மேற்கொண்ட பணிகளில் மிக முக்கியமானதுமுஸ்லிம்களின் எண்ணிக்கையைகணக்கெடுக்கச் சொன்னது தான்.

எந்தளவுக்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பது என்றால் வயது வாரியாக, குடும்ப, கோத்திர வாரியாக, தலைமுறை வாரியாக, மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், ஏழை, பணக்காரர்கள், உள்ளூர், வெளியூர் வாசிகள் என எல்லாமும் இடம் பெற்றிருந்தது.

இன்னும் சொல்லப்போனால், பெரும்பாலான நபித்தோழர்களின் வாழ்க்கைத் தரவுகளை பதிவு செய்து வைத்திருக்கும் தாரீஃக், ஸீரத் என்னும் வரலாற்று ஆசிரியர்களின் நூற்களில் நபித்தோழர்கள் அவர்கள் தம் வீடுகளில் பயன்படுத்திய பண்ட பாத்திரங்கள், அன்றாடம் உடுத்தும் ஆடைகள், யுத்தகளத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்கள், வாகனிக்க பயன்படுத்திய வாகனங்கள், அவர்களின் தோட்டம் துறவுகள், நில புலன்கள், தோட்டத்தில் இருந்த மரங்கள் உட்பட கணக்கெடுக்கப்பட்டது.

உதாரணத்திற்கு ஜுபைர் இப்னு அல் அவ்வாம் (ரலி) அவர்களின் வீடு மற்றும் வணிக, விவசாய பணியாளர்கள் எண்ணிக்கை 1000 நபர்கள் என்பது வரை கணக்கிடப் பட்டுள்ளது.

இஸ்லாத்தின் முதல் யுத்தமான ஹிஜ்ரி இரண்டில் நடைபெற்ற பத்ர் அதில் கலந்து கொண்ட முஹாஜிர்கள் எண்ணிக்கை 82, அன்ஸார்களில் அவ்ஸ் கோத்திரத்தாரின் எண்ணிக்கை 61, கஸ்ரஜ் கோத்திரத்தாரின் எண்ணிக்கை 170 மொத்தம் 313.

தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியாத நபித்தோழர்கள் எண்ணிக்கை 7. உஸ்மான் (ரலி) (மனைவி நோய்வாய்ப்படுதல்) ஹுதைஃபா (ரலி அவர்களின் தந்தை அல் யமான் (ரலி) (எதிரிகள் தடுத்தல்) அனஸ் இப்னு நள்ர் (ரலி) (வியாபார பயணம் ஷாம்) கஅப் இப்னு மாலிக் (ரலி) (காரணம் அறியப்படவில்லை) இப்னு உமர் (ரலி), பர்ராவு இப்னு ஆஸிப் (ரலி) (சிறுவர் என்ற காரணத்திற்காக தடுக்கப்படல்)

யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குதிரை 1, ஒட்டகங்கள் 70.
ஷுஹதாக்கள் முஹாஜிர்களில் 6. அன்ஸார்களில் கஸ்ரஜ் கோத்திரத்தார்களில் 6. அவ்ஸ் கோத்திரத்தார்களில் 2 மொத்தம் 14 ஷுஹதாக்கள்.

ஹிஜ்ரி 3, -ல் உஹத் கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் எண்ணிக்கை 700, போருக்கு வராமல் புறமுதுகிட்டு ஓடிய நயவஞ்சகர்கள் எண்ணிக்கை 300. ஷுஹதாக்கள் 70. காயமுற்றோர் 630.

ஹிஜ்ரி 5 –ல் அஹ்ஸாப், கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 3000.

ஹிஜ்ரி 6 –ல் ஹுதைபிய்யா ஒப்பந்தம் கலந்து கொண்டவர்கள் 1400.

ஹிஜ்ரி  7- ல் கைபர் கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 1600, ஷுஹதாக்கள் 20, காயமுற்றோர் 50.

ஹிஜ்ரி 8 –ல் மக்கா வெற்றி கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 10000.

ஹிஜ்ரி 8 –ல் ஹுனைன் கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 12000.

ஹிஜ்ரி 9 –ல் தபூக் கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 30000 க்கும் மேல்.

ஹிஜ்ரி 10- ஹஜ்ஜத்துல் விதாஃ பங்கெடுத்த ஹாஜிகள் 124000 க்கும் மேல்.

அடுத்து நபித்தோழர்களில் ஜன்னத்துல் பகீவிலே நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10000. மக்கா, மதீனாவிற்கு வெளியே சிரியா, பலஸ்தீன், மிஸ்ர், எகிப்து போன்ற பகுதிகளில் நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 30000 என கணக்கெடுப்பு விஷயத்தில் நபித்தோழர்களான மேன்மக்கள் மிகவும் கவனமாக செயல்பட்டார்கள்.

وافق أمير المؤمنين على ذلك الزواج ، وحضر أملاكها طائفة كبيرة من كِرام الصحابة ، وكان فيهم ثمانية عشر بدريًا ، ودعا لها كاتب وحي رسول الله صلَّ الله عليه وسلم ، وطيَّبتها وزينتها ثلاث من أمهات المؤمنين رضي الله عنهن وتم زفافها على زوجها ، وكانت من ثمرات هذا الزواج المبارك هو رزقهما بغلام أصبح بعد عقدين من مولده علمًا من أعلام التابعين ورجلًا من أفذاذ المسلمين

தாபிஈன்களில் ஒருவரான இமாம் கனவுலமேதை இமாம் முஹம்மது இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்களின் தந்தையான தாபிஈ சீரீன் (ரஹ்) அவர்களின் திருமணத்தின் போது மூன்று உம்முஹாத்துல் முஃமினீன்களும், 18 பத்ர் ஸஹாபாக்களும் கலந்து கொண்டனர் என்கிற வியப்பூட்டுகிற ஒரு செய்தி வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

சின்னச் சின்ன விஷயங்களில் இருந்து பென்னம் பெரிய விஷயங்கள் வரை சமூகத்தின் அத்துனை அம்சங்களையும் அவர்கள் பதிவு செய்து வந்தார்கள். 

கணக்கெடுப்பு எதற்காக?...

பொதுவாக உலகின் அனைத்து நாடுகளிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

நமது இந்தியாவிலும் கூட பொதுக் கணக்கெடுப்பு, சாதிவாரியான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு இருக்கின்றது.

பொதுவாக கணக்கெடுப்பின் மூலமாக ஒரு சமூகத்தின் கல்வி, எழுத்தறிவு, பாலினம், பொருளாதார நிலை, பிறப்பு இறப்பு விகிதம், இடம் பெயர்ந்தோர், வசதியுள்ளோர், வசதியற்றோர், ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், வீடு உள்ளவர்கள், வீடில்லாதவர்கள் என 35 க்கும் மேற்பட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் சமூகத்தின் கட்டமைப்பை சீரமைக்க முடியும் என்பது  உலக அறிஞர்களின் கருத்தாகும்.

கணக்கெடுப்பு எப்போது துவங்கியது?...

மக்கள் தொகை கணக்கீடு செய்யும் பழக்கம்  கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இருந்துள்ளன. பாபிலோனியர்கள் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் தொகை கணக்கெடுத்துள்ளனர். நாடு முழுவதும் கணக்கெடுப்பு செய்ய ஆறேழு ஆண்டுகள் ஆனதாம். ஆள் கணக்குடன் கூடவே மக்கள் வைத்திருந்த வெண்ணெய், தேன், பால், கம்பளி, காய்கறிகள் அளவுகளையும் கணக்கீடு செய்துள்ளனர்.
ஆவணப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பு என்றால் 2518 ஆண்டுகளுக்கு முன்பு பெர்ஷியா பேரரசில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்புதான். நிலம் ஒதுக்கீடு செய்யவும், வரி விதிக்கவும் இந்த கணக்கெடுப்பு நடந்ததாம்.

இந்தியாவை பொருத்தவரை தமிழ் பேரரசுகள் ஆண்ட காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அனைத்து நவீனங்களும் பயன்பாட்டில் இருந்துள்ளன. ஆனால் அவை இந்திய வரலாறாக பதியப்படவில்லை.

எனவே இந்திய வரலாறை கணக்கில் கொண்டால் மவுரிய பேரரசு காலத்தில் சுமார் 2370 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்பட்டதாக சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் சொல்கிறது. வரி விதிக்கவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாம். கூடவே மக்களின் பொருளாதார நிலை, வேளாண் தொழில்  ஆகியன குறித்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டதாம்.

உலகின் பெரும் பேரரசுகளாக இருந்த ரோமப் பேரரசு, சோழப் பேரரசுகள் மட்டுமல்ல பழங்குடி பேரரசுகள் இருந்த காலத்திலும் வருவாயை இலக்காக கொண்டுதான் கணக்கெடுப்புகள் நடந்தன. இப்படி இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் மக்களிடம் எப்படியெல்லாம் வரி வசூலிக்கலாம், யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக அந்தக் கால அரசுகள் தலைகளை எண்ணின.

இந்தியாவில், மொகலாயர் காலத்தில்தான் மக்கள் தொகை பற்றிய விவரங்கள் முதன்முதலாக தொகுத்து வெளியிடப்பட்டன. அக்பருடைய அரசவையில் இடம் பெற்றிருந்த அபுல்பாசல் என்ற அறிஞர் எழுதிய, ‘அயனி அக்பரிஎன்ற நூலில், அன்றைய காலக்கட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்ததைக் காண முடிகிறது.

அதனைத் தொடர்ந்து, ஆங்கிலேயர் காலத்தில், (1687)அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த எலிகு ஏல் என்பவர் இங்கிலாந்து மன்னரின் ஆணைப்படி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வசித்தவர்கள் தொடர்பான முழு விவரங்களைச் சேகரித்து தந்தார்.

பின்னர், 1853-ம் ஆண்டு வடமேற்கு பகுதியில் சிறிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கிறிஸ்டோப் குலிமிட்டா என்பவர் தலைமையில், 1871-ல் மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அப்போதுதான் மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் நாட்டில் நிகழ்ந்த பஞ்சங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன.


இந்தியாவில், மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணி முதன்முதலாக 1872-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் இருந்து, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களின் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கணக்கெடுப்பு பணியின்போது, கல்வி மற்றும் எழுத்தறிவு, பாலினம், பொருளாதார நிலை, பிறப்பு, இறப்பு விகிதம், இடம் பெயர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர், பெற்றோர் விழுக்காடு, வீடு முதலான உறைவிடங்கள், மொழி, மதம் போன்ற தகவல்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. ( நன்றி: தினகரன் ஆன்லைன், 2018-07-11@ 10:20:37 )

கணக்கெடுப்பின் மூலம் பெருமானார் {ஸல்} அவர்கள் ஏற்படுத்திய சமூக மாற்றம்..

உதாரணத்திற்கு ஒரு விஷயத்தை இங்கு பார்ப்போம்..


لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “உங்களுக்கு விருப்பமானவற்றை இறைவழியில் அர்ப்பணிக்காத வரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும், எதனை நீங்கள் அர்ப்பணித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.”                                              ( அல்குர்ஆன்: 3: 92 )

இந்த இறை வசனம் இறங்கிய பின்னர் ஒவ்வொரு நபித்தோழர்களும் தங்களுக்கு பிடித்தமானவற்றை இறைவழியில் அர்ப்பணித்திட முன்வந்தார்கள்.

யாருக்கு கொடுப்பது? எப்படி கொடுப்பது? என்கிற நிலையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு பயன்பாட்டிற்கு வர ஆரம்பித்தது.

وقال الإمام أحمد: حدثنا روح، حدثنا مالك، عن إسحاق بن عبد الله بن أبي طلحة، سمع أنس بن مالك يقول: كان أبو طلحة أكثر أنصاري  بالمدينة مالا وكانَ أحبَّ أمواله إليه بيْرَحاءُ -وكانت مُسْتقْبلة المسجد، وكان النبي صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيّب-قال أنس: فلما نزلت: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } قال أبو طلحة: يا رسول الله، إن الله يقول: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } وإن أحبَّ أموالي إلَيَّ بيْرَحاءُ وإنها صدقة لله أرجو بِرَّها وذُخْرَها عند الله تعالى، فَضَعْها يا رسول الله حيث أراك الله [تعالى] فقال النبي صلى الله عليه وسلم: "بَخٍ، ذَاكَ مَالٌ رَابِحٌ، ذَاكَ مَالٌ رَابِح، وَقَدْ سَمِعْتُ، وَأَنَا أرَى أنْ تجْعَلَهَا فِي الأقْرَبِينَ". فقال أبو طلحة: أفْعَلُ يا رسول الله. فَقَسَمها أبو طلحة في أقاربه وبني عمه. أخرجاه

முதன் முதலாக இதைத் துவக்கிவைத்தவர்கள் அபூ தல்ஹா அன்ஸாரி (ரலி) அவர்கள். தங்களுக்கு மிகவும் விருப்பமான பைருஹா தோட்டத்தை அறமாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அபூ தல்ஹா அளித்த தோட்டத்தை வறுமையில் வாடிய அபூ தல்ஹா (ரலி) அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்கள்.

                                               (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்)

وكذلك فعل زيد ابن حارثة، عمد مما يحب إلى فرس يقال له (سبل) وقال: اللهم إنك تعلم أنه ليس لي مال أحب إلي من فرسي هذه، فجاء بها إلى  النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: هذا في سبيل الله. فقال لأسامة بن زيد (اقبضه). فكأن زيدا وجد من ذلك في نفسه. فقال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إن الله قد قبلها منك). ذكره أسد بن موسى. وأعتق ابن عمر نافعا مولاه، وكان أعطاه فيه عبد الله بن جعفر ألف دينار. قالت صفية بنت أبي عبيد: أظنه تأول قول الله عز وجل:" لَنْ تَنالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ".

அடுத்து ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள்தங்களது வீட்டில் இருந்து அழுது புலம்பியவர்களாக யாஅல்லாஹ்! என்னிடத்திலே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பணம் ஒன்றும் இல்லை. என்னிடம் நான் மிகவும் நேசிக்கின்ற ஒன்றாக இதோ இந்த குதிரை மட்டும் தான் இருக்கின்றது. இதோ அதையும் உனக்காக அர்ப்பணித்து விடுகின்றேன்என்று சொல்லியவராக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து குதிரையை கொடுத்து விட்டுச் சென்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஜைத் (ரலி) அவர்களிடம் இருந்து பெற்ற குதிரையை அவர்களின் மகனார் உஸாமா (ரலி) அவர்களுக்கே கொடுத்து விட்டார்கள். பின்பு, ஜைதே! அல்லாஹ் உம்மிடம் இருந்து இதை பூரணமாக ஏற்றுக் கொண்டான்என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் (ரலி) அவர்கள் 1000 தீனாரை எடுத்துக் கொண்டு வந்து நபி {ஸல்} அவர்களிடம் கொடுத்தார்கள்.

இதை, மதீனாவின் ஏழைகளுக்கு மாநபி {ஸல்} பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தங்களின் அடிமையான நாஃபிஉ (ரலி) அவர்களை விடுதலை செய்தார்கள்.

                                             (நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ)

عن ابن عمر رضي الله عنهما أن عمر تصدق بمال له على عهد رسول الله ? وكان يقال له: ثمغ، وكان به نخل، فقال عمر: يا رسول الله إني استفدت مالاً، وهو عندي نفيس، فأردت أن أتصدق به، فقال النبي ?: تصدق بأصله، لا يباع ولا يوهب، ولا يورث، ولكن ينفق ثمر. فتصدق به عمر، فصدقته تلك في سبيل الله، وفي الرقاب، والمساكين، والضيف وابن السبيل، ولذوي القربى، ولا جناح على من وليه أن يأكل بالمعروف، أو يؤكل صديقه غير متمولٍ به، وفي رواية: أصاب عمر بخيبر أرضاً، فأتى النبي ? فقال: أصبت أرضاً لم أصب مالاً قط. أنفس منه، كيف تأمرني به؟ قال:إن شئت حبست أصلها وتصدقت بها، فتصدق عمر: أنه لا يباع أصلها، ولا يوهب، ولا يورث، في الفقراء وذوي القربى، والرقاب، وفي سبيل الله، والضيف، وابن السبيل، لا جناح على من وليها أن يأكل منها بالمعروف، أويطعم صديقاً غير متموِّل فيه، فهذا الموقف العمري فيه فضيلة ظاهرة للفاروق رضي الله عنه ورغبته في المسارعة للخيرات، وإيثاره الحياة الآخرة على الحياة الفانية.

உமர் (ரலி) அவர்கள் நபிகளாரின் சமூகத்திற்கு வருகை தந்தார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! எனக்கு கைபரில் கிடைத்த ஒரு பங்கு நிலமானஸமஃக்உள்ளது.

அதை விடவும் சிறந்த மதிப்புமிக்க வேறொரு பொருள் என்னிடம் இல்லை; நான் அதனை அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்க விரும்புகின்றேன். அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? அன்பு கூர்ந்து எனக்கு ஆலோசனை நல்குங்கள்என்று பணிவுடன் வேண்டி நின்றார்கள்

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்உமரே! நீர் விரும்பினால் அதன் அசலை வக்ஃப் செய்து விடுங்கள்! அதில் இருந்து கிடைக்கும் லாபத்தை தர்மம் செய்து விடுங்கள்.” என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நல்கிய ஆலோசனையின் படி தங்களின் நிலத்தை அர்ப்பணிப்புச் செய்தார்கள்.

அதாவது, அந்த நிலம் விற்கவோ, அன்பளிப்புச் செய்யவோ பட மாட்டாது. அதற்கு யாரும் வாரிசு ஆகவும் முடியாது. அதன் முழு வருமானமும் ஏழை, எளியோர், வறியோர், வறுமையில் வாடும் உமர் (ரலி) அவர்களின் உறவினர்கள், விருந்தாளிகள், பிரயாணிகள் ஆகியோருக்கு செலவழிக்கப்படும்.

மேலும், அடிமையை விடுதலை செய்யவும், சன்மார்க்கப் போருக்காக செலவழிக்கவும் அதில் இருந்து பயன் படுத்தலாம். மேலும், இந்தச் சொத்தைக் கண்காணித்துப் பாதுகாப்பவர் என்கிற முறையில் அவரும் நியாயமான முறையில் சிறிது எடுத்துக் கொள்ளலாம். அல்லது அவரின் நண்பர்களுக்கும் அதிலிருந்து தர்மமாக வழங்கிக் கொள்ளலாம். ஆனால்,ஒரு போதும் அதிலிருந்து சொத்தாக எதையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று கூறி உமர் (ரலி) வக்ஃப் செய்தார்கள்.

( நூல்: ஃப்ஸ்லுல் கிதாப் ஃபீ ஸீரதி இப்னுல் கத்தாப் லில் இமாமிஸ் ஸுல்லாபி )

عن عبد الله بن العباس قال: قال لي علي بن أبي طالب: ما علمت أن أحداً من المهاجرين هاجر إلا مختفياً، إلا عمر بن الخطاب، فإنه لما هم بالهجرة تقلد سيفه، وتنكب قوسه، وانتضى في يده أسهماً، واختصر عنزته، ومضى قبل الكعبة، والملأ من قريش بفنائها، فطاف بالبيت سبعاً متمكناً، ثم أتى المقام فصلى متمكناً، ثم وقف على الحلق واحدة واحدة، وقال لهم: شاهت الوجوه، لا يرغم الله إلا هذه المعاطس، من أراد أن تثكله أمه، ويوتم ولده، ويرمل زوجته، فليلقني وراء هذا الوادي. قال علي: فما تبعه أحد إلا قوم من المستضعفين علمهم وأرشدهم ومضى لوجهه. (اسد الغابة)

இங்கே, உமர் (ரலி) அவர்கள் விஷயத்தில் நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயம் எதுவென்றால் உமர் (ரழி) அவர்கள் தமது ஹிஜ்ரத்தின் போது முதலில் கஅபாவுக்கு வந்து தவாஃப் செய்து விட்டு தமது பயணத்தை தெளிவாக அறிவித்தார்கள்.

வாளை தொங்கவிட்டவராகவும், கையில் நாணில் அம்பு ஏற்றப்பட்ட வில்லை ஏந்தியவராகவும் ஏழு முறை கஅபாவை தவாஃப் செய்த உமர் (ரழி) அவர்கள் அங்கே இருந்த மக்கா குரைஷிகளைப் பார்த்து கூறினார்கள்.
 
"தமது தாயை நாதியற்றவளாக்கவும், பிள்ளைகளை அநாதையாக்கவும், மனைவியை விதவையாக்கவும் விரும்புபவர் எனது ஹிஜ்ரத் பயணத்தில் மக்காவுக்கு வெளியே என்னை சந்திக்கலாம்." என்று கூறினார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
أَوَّلُ مَنْ قَدِمَ عَلَيْنَا مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَابْنُ أُمِّ مَكْتُومٍ وَكَانَا يُقْرِئَانِ النَّاسَ فَقَدِمَ بِلَالٌ وَسَعْدٌ وَعَمَّارُ بْنُ يَاسِرٍ ثُمَّ قَدِمَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فِي عِشْرِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا رَأَيْتُ أَهْلَ الْمَدِينَةِ فَرِحُوا بِشَيْءٍ فَرَحَهُمْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَعَلَ الْإِمَاءُ يَقُلْنَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا قَدِمَ حَتَّى قَرَأْتُ سَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى فِي سُوَرٍ مِنْ الْمُفَصَّلِ رواه البخاري
وَقَدْ سَمَّى اِبْن إِسْحَاق مِنْهُمْ زَيْد بْن الْخَطَّاب وَسَعِيد بْن زَيْد بْن عَمْرو وَعَمْرو بْن سُرَاقَة وَأَخَاهُ عَبْد اللَّه وَوَاقِد بْن عَبْد اللَّه وَخَالِدًا وَإِيَاسًا وَعَامِرًا وَعَاقِلًا بَنِي الْبُكَيْر وَخُنَيْس بْن حُذَافَة - بِمُعْجَمَةٍ وَنُون ثُمَّ سِين مُصَغَّر - وَعَيَّاش بْن رَبِيعَة وَخَوْلِيّ بْن أَبِي خَوْلِيّ وَأَخَاهُ ، هَؤُلَاءِ كُلّهمْ مِنْ أَقَارِب عُمَر وَخُلَفَائِهِمْ ،(فتح الباري)

பின்னர் அவர்களின் குடும்பத்தார்களில் 20 நபர்களோடு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டார்கள். புகாரி விரிவுரையான பத்ஹுல் பாரியில் அவர்கள் யார்? யார்? என்ற விபரமும் உள்ளது.

எனவே, எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி தேவையுள்ளவர்களாகவும், ஏழைகளாகவும் உள்ளவர்களுக்கு மாநபி {ஸல்} இறைவழியில் தானமாக வழங்கப்பட்ட நில, புலன்கள், தோட்டம், தீனார்கள், திர்ஹம்கள் ஆகியவற்றை பங்கு வைத்து கொடுத்தார்கள்.

இதனைப் பின் பற்றியே முஆத் (ரலி) அவர்கள் எமனிலும், உமர் (ரலி) அவர்கள் 22 ½ லட்சம் சதுர மைல் பரப்பிலான இஸ்லாமிய ஆளுகையின் கீழும் முஸ்லிம் சமூகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள்.

ஆனால், இன்றைய முஸ்லிம் சமூகத்தின் நிலை என்ன? தமிழகத்தில் எத்தனை மஹல்லாக்களில் துல்லியமான புள்ளிவிவரங்கள், கணக்கெடுப்புகள் இருக்கின்றன?

பள்ளிவாசலில் பல்பு ஃபீஸானால் மாற்றுவது, இமாம் முஅத்தினுக்கு சம்பளம் கொடுப்பது, நிகாஹ், தலாக் போன்றவைகளில் பங்கெடுப்பது, மீலாத் மற்றும் கந்தூரி விழாக்கள் நடத்துவது, நோன்பு கஞ்சி ஏற்பாடு செய்வது இது மாத்திரமல்ல ஒரு மஹல்லா நிர்வாகத்தின் பணி என்பது.

அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும். நம் சமூகத்தின் உயர்வுக்கான முயற்சிகளில் முஹல்லா நிர்வாகங்களின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் மிகக் குறைவாகவே இருக்கின்றது.

ஆகவே, ஹிஜ்ரத் தரும் மகத்தான இந்த படிப்பினையை பாடமாக ஏற்று மஹல்லா தோறும் கணக்கெடுப்பு பணியைத் தொடருவோம்!

முஸ்லிம் சமூகத்தின் உயர்வுக்கு துணை நிற்போம்!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் சிந்தித்து செயல்படும் நன்மக்களாக ஆக்கியருள் புரிவானாக!!! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்!
    ஹிஜ்ரத் படிப்பினையை ஒரு புதிய கோணத்தில் தொகுத்து வழங்கி உதவியுள்ளீர்கள் உஸ்தாத்!
    جزاكم الله خير الجزاء يا استاذ திருப்பூர்

    ReplyDelete