உரிமைகள் புறக்கணிக்கப்படும் போது….
என்ன தேசமோ..
இது என்ன
தேசமோ…
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ..
தர்மம் தூங்கிப் போகுமோ..
நீதி வெல்லுமோ..
இங்கு நேரமாகுமோ…
என்ன தேசமோ..
இது என்ன
தேசமோ…
1985 – களில் வெளியான
ஒரு திரைப்படத்தின் பாடல்
ஒன்றிற்காக கவிஞர் வைரமுத்து
வெளிப்படுத்திய வலிமையான வரிகள்
இவை.
தற்போது மத்தியில்
ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜக அரசையும்,
மிகுந்த வலியோடு அதை
தாங்கிக் கொண்டிருக்கும் குடிமக்களின்
நிலையையும் உணரச் செய்யும்
ஆற்றல் நிறைந்த வார்த்தைகள்
இவை.
பாராளுமன்றத்தில் காலியான
இருக்கைகளை வைத்துக்கொண்டு மக்கள்
விரோத மசோதாக்களை ஒன்றன்
பின் ஒன்றாக ( 35 மசோதாக்களை
) நிறைவேற்றி வரும் மக்கள்
விரோத மத்திய அரசு
05.08.2019 திங்கள்கிழமையன்று காஷ்மீர்
மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து,
அதிகாரம் அளிக்கும் அரசியல்
சாசனத்தின் 370 மற்றும் 35ஏ
ஆகிய பிரிவுகளை ரத்து
செய்யும் மசோதாவை தாக்கல்
செய்து வழக்கம் போல்
சொற்பமான எண்ணிக்கையினரை வைத்துக்
கொண்டு வெற்றியும் பெற்றனர்.
ஆம்! அரசியல்
சாசனத்தின் அந்த இரண்டு
பிரிவுகளும் அரசியல் சாசனத்தில்
இருந்தே நீக்கப்படுவதாக தேசத்தின்
முதல் குடிமகன் ஜனாதிபதி
அறித்தார்.
இந்த மசோதா
நிறைவேறிய பிறகு, தொடர்ந்து
இந்த மசோதாவை தாக்கல்
செய்த உள்துறை மந்திரி
அமித்ஷா “இனி காஷ்மீர்
மாநிலம் ஜம்மு
– காஷ்மீர் என ஒரு
யூனியன் பிரதேசம், லடாக்
என மற்றொரு யூனியன்
பிரதேசம் என இரு
பகுதிகளாக பிரிக்கப்படுவதாகவும் அவர்
அறிவித்தார்.
இதில், ஜம்மு
– காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய
யூனியன் பிரதேசமாகவும், லடாக்
சட்டசபை இல்லாத யூனியன்
பிரதேசமாகவும் இருக்கும் என்று
உள்துறை மந்திரி அறிவித்தார்.
இந்த மசோதாவும்,
இந்த ரத்தும் அரசியல்
சாசனத்திற்கு எதிரானது, இந்திய
இறையாண்மைக்கு விரோதமானது, ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கக்
கூடியது என்று நாட்டின்
பெரும்பாலான அரசியல் கட்சி
தலைவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள்,
தங்களின் கருத்துக்களையும், கண்டனங்களையும் தொடர்ந்து தெரிவித்து
வருகின்றனர்.
முதல் மசோதாவாக
முத்தலாக் மசோதாவில் துவங்கி
நேற்று அரசியல் சாசனத்தின்
முக்கிய இரண்டு பிரிவுகளை
ரத்து செய்வதற்கான மசோதாவை
நிறைவேற்றி இருக்கிற அரசின்
இந்த செயல்பாடுகளை நாட்டின்
குடிமக்களாகிய நாம் எப்படி
எதிர் கொள்ள வேண்டும்?
எப்படி எதிர் கொள்ளப்
போகிறோம்?
வரலாற்றின் வடிவில் கஷ்மீர்….
கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மயூர ஆட்சியின் கீழும்,
கி.பி.16 – 18 -ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் முகலாய ஆட்சியின் கீழும், பின்னர் 19ம்,
20ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழும் காஷ்மீர் இருந்துள்ளது. 1846ல் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் காஷ்மீர் வந்தது.
சீக்கிய மன்னன் ரஞ்சித் சிங்கிடமிருந்து டோக்ரா (Dogra) வம்சத்தைச் சேர்ந்த குலாப்சிங், ஜம்முவை விசுவாசத்தின் பரிசாக பெற்று ஆண்டு வந்தபோது தான் ஆங்கி லேயருக்கும் சீக்கியருக்கும் போர் ஏற்பட்டது.
சீக்கிய அரசுக்கு துரோகம் செய்து குலாப் சிங் ஆங்கிலேயரை வெற்றி பெறச் செய்தான். அதற்குப் பரிசாக காஷ்மீரை 75 இலட்சம் ரூபாய்க்கு ஆங்கிலேயர் விற்று விட்டனர். அப்பொதுதான் குலாப் சிங்கிற்கும், ஆங்கிலேயருக்கும் இடையில் ‘அமிர்தசரஸ் உடன்படிக்கை’ (1846) ஏற்பட்டது. இவ்வொப்பந்தத்தின்படி ஆங்கிலேய அரசு அதிகபட்சமாக காஷ்மீருக்குப் பாதுகாவலனாகவே இருந்தது.
குலாப் சிங் ஜம்முவின் சுதந்திர மன்னர் மஹாராஜாவாக (Princely Ruler) மாறினார். குலாப் சிங் 1857ல் இறந்தார்.
ரம்பீர் சிங் மற்றும் பிரதாப் சிங் ஆகிய இரு மஹா ராஜாக்கள் அவரையடுத்து ஆட்சிக்கு வந்தனர். இறுதியாக வந்த ஆட்சியாளரே ஹரிசிங் (1925-1947) ஆவார். இவர்கள் அனைவரும் 80% ஆன,
மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்களை ஆட்சி செய்தனர். முஸ்லிம்களோ ஹரிசிங்கிற்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சி செய்து வந்தனர்.
இந்த தருணத்தில், பல்வேறு தேசங்களாகவும், சமஸ்தானங்களாகவும் இருந்து வந்த இந்தியா சுதந்திரம் பெற்றது.
அப்போது, காஷ்மீரும் ஒரு தேசமாக ஒரு மன்னரின் ஆதிக்கத்திலேயே தான் இருந்தது. இந்து மன்னரான மஹாராஜா ஹரிசிங் ( தற்போது காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருக்கும் கரண் சிங்கின் தந்தையாவார் ) கஷ்மீரை அப்போது ஆட்சி செய்து வந்தார்.
சுதந்திர இந்தியாவின் காஷ்மீர்....
1947 இல் இந்தியத் துணைக் கண்டம் சுதந்திரம் பெற்ற பின்பு இந்திய - பாகிஸ்தான் பிரிவினை கலவரம் உச்சத்தில் இருந்தது. அதன் தாக்கம் ஜம்முவிலும் எதிரொலித்தது. முஸ்லிம்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர்.
5 இலட்சம் அளவிற்கு முஸ்லிம்கள் ஜம்முவிலிருந்து வெளியேறினர். இதை எதிர்க்கும் விதமாக மன்னருக்கு எதிராக முஸ்லீம்கள் ஜம்மு பகுதியில் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இவர்களுடன் ஆப்கானிஸ்தானின் எல்லையோர பாகிஸ்தான் பகுதியில் வசிக்கும் ‘பதான்’
ஆதிவாசிகளும், மன்னர் படைகளில் இருந்த முஸ்லிம்களும், அக்பர்கான் என்ற பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் தலைமையில் ஜம்முவிற்குள் நுழைந்தனர். இந்தப் பழங்குடிப் படையினர் முஸ்லீம்கள், சீக்கியர், இந்து என வித்தியாசமில்லாமல் கொள்ளைகளில் ஈடுபட்டனர்.
இந்தப் படையெடுப்பைத் தடுக்க முடியாத மன்னர் மஹாராஜா ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். காஷ்மீரின் தலையெழுத்தை மாற்றி எழுதியதும், காஷ்மீர் சிக்கலின் தொடக்கப் புள்ளியும் இதுதான் என்றால் அது மிகையல்ல.
இந்தியா - காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கையை நிபந்தனையாக்கி, இந்திய அரசு பழங்குடிப் படையுடன் போரிட்டது. அவர்களை விரட்டிச் சென்ற இந்திய இராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. இதை சாக்காகச் சொல்லி பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது.
இந்திய - பாகிஸ்தான் முதல் போர் முடிவுக்கு வந்தபோது இரண்டு இராணுவம் எவ்வளவு முன்னேறி உள்ளதோ அதை அவர்களே வைத்துக் கொள்ளலாம் என உடன்படிக்கை ஏற்பட்டது.
பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றியிருந்தது. இந்த கைப்பற்றிய பகுதியின் எல்லைதான் பிறகு எல்லைக் கோடாக (LOC) நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதியை ”சுதந்திரக் காஷ்மீர்”
(Azad Kashmir) என பாகிஸ்தானும், ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர்” (Pakistan Occupeid Kashmir-POK) என இந்தியாவும் அழைத்துக் கொண்டனர்.
26.10.1947 அன்று காஷ்மீரைத் தற்காலிகமாக இணைப்பதற்கான இணைப்பு உடன்படிக்கை மன்னர் ஹரிசிங்கிற்கும் இந்திய அரசிற்கும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளை இந்திய அரசாங்கம் பெற்றது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவின்படி சுயாட்சி உரிமைகள் கொண்ட மாநிலமாக காஷ்மீர் இருக்கும். இதையடுத்து இந்திய அரசு ஒரு வாக்குறுதி அளித்தது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய பிறகு பொதுவாக்கெடுப்பு நடத்தி இறுதி முடிவை காஷ்மீரிகளே தீர்மானிப் பார்கள் என நேரு அவர்கள் வானொலியில் (02.11.1947) தெரிவித்தார்.
தற்போதைய மத்திய அரசின்
முடிவுக்குப் பின்னால் இருக்கும் நம்பிக்கை…
370 –ஆவது பிரிவை
நீக்குவதன் மூலம் காஷ்மீர்
பள்ளத்தாக்கில் இனி முதலீடுகள்
குவியும், வேலை வாய்ப்புகள்
பெருகும் எனவும் அங்கு
நிலம் வாங்குவதற்கான கட்டுப்பாடுகள் நீங்குவதால் வர்த்தகம்
எளிதாகும் எனவும் மேலும்,
மாநிலத்தின் வளர்ச்சி பற்றாக்குறையால்,
கல்வீச்சு மற்றும் ஆயுதம்
ஏந்தும் மாநில இளைஞர்களுக்கு
இதன் மூலம் வேலை
வாய்ப்புகள் பெருகும் எனவும்
ஆளும் மத்திய அரசு
கூறுகின்றது.
மேலும், சிறுபான்மையினருக்கு சமூக, பொருளாதார,
நீதி, கல்வி போன்றவற்றில்
சமத்துவமும், முன்னேற்றமும் கிடைக்கும்
என்றும், பாலின பாகுபாடு
நீக்கம், தகவல் அறியும்
உரிமை சட்டத்தில் வெளிப்படை,
போன்ற பலன்கள் மற்றும்
இரட்டை குடியுரிமை தொடர்பான
முரண்பாடு நீங்கும் என்றும்
அரசு தெரிவித்துள்ளது.
தற்போதைய மத்திய அரசின்
முடிவுக்குப் பின்னால் ஏற்பட இருக்கும் விளைவுகள்…
நிலம் வாங்குவதற்கான
கட்டுப்பாடுகள் நீங்குவதால் இனி
அங்கு இந்தியர்கள் எவ்வளவு
வேண்டுமானாலும் சொத்து, நிலம்
வாங்கலாம் என்பதன் மூலம்
இந்தியாவிலேயே அதிக முஸ்லிம்கள்
வசிக்கும் பகுதி எனும்
பெயர் பெற்ற காஷ்மீர்
பகுதி இந்து, முஸ்லிம்
விகிதாச்சாரம் மாறுபட வாய்ப்புள்ளது.
இனி அதிக
தொழிற்சாலைகள் அங்கு முளைக்கலாம்.
இந்திய கார்ப்பரேட் முதலாளிகள்
மிகப் பெரிய அளவில்
சொத்துகள் வாங்கி குவிக்கலாம்.
வேலை வாய்ப்புகள் பெருகும்
என்றாலும் சுற்றுச் சூழல்
பிரச்சனை பெருமளவில் ஏற்படும்.
காஷ்மீரின் இயற்கை
வளம் மற்றும் பன்முக
உயிர் சூழல் ஆகியவற்றிற்கு
எவ்வித உத்திரவாதமும் அளிக்க
முடியாது.
சுதந்திர இந்தியாவில்
அவர்கள் இதுவரை அனுபவித்து
வந்த துன்பங்களை விட
இனி அவர்கள் உயிர்
வாழ அதிக விலை
கொடுக்க வேண்டி இருக்கும்.
அதிக போராட்டங்களை நடத்த
வேண்டியிருக்கும்.
மொத்தத்தில் காஷ்மீரிகளின்
துயரங்களும், கஷ்டங்களும் அது
இனியும் தொடரும் என்பதில்
ஐயமில்லை.
உயிர்வாழவும்,
உரிமை கோரவும் உரிமையில்லையா?...
இன்றைக்கு உலகில்
இருக்கிற பெரும்பாலான நாடுகள்
இன்னொரு நாட்டிடம் இருந்து
விடுதலை பெற்றவையே.
உலகில் இதுவரை
உருவான நாடுகளில் பெரும்பாலானவைகள் அந்தந்த பகுதி
மக்களின் கருத்தை கேட்ட
பின்னரே தனி நாடாக
உருவானது.
ஆனாலும், காஷ்மீர்
மக்களுக்கு அந்த உரிமை
முற்றிலுமாக மறுக்கப்பட்டு விட்டது.
சுதந்திரம் வாங்கிய
கையோடு நடந்த நிகழ்வின்
போதும் சரி, சுதந்திர
இந்தியாவின் 72 ஆண்டுகளுக்குப் பிறகான
தற்போதைய நிகழ்வின் போதும்
சரி காஷ்மீர் மக்களின்
உரிமைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சிற்றரசர்கள் (Princely States) எடுக்கும் தீர்மானமானது, நடைமுறையில் பெரும்பான்மை மக்களை வைத்தே மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கஷ்மீர் விவகாரத்தில் மன்னரின் முடிவே
மேற்கொள்ளப்பட்டது.
ஹைதராபாத் டெக்கான் மக்களுள் பெரும்பான்மையினர் இந்துக்கள். ஆட்சியாளர்கள் முஸ்லிம் நவாப்கள். பெரும்பான்மை
மக்களான இந்துக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தினர். ஆகவே, அவர்கள். இந்தியாவுடன் சேர்ந்து கொண்டனர்.
இதே நடைமுறை கஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 80% பெரும்பான்மை முஸ்லிம்களின் விருப்பத்தை சிறுபான்மை ஆட்சியாளரான ஒருவர் மட்டுமே எப்படி தீர்மானிக்க இயலும்?
( துணை நின்றவை அப்துல் மலிக் ஏ. அவர்கள் எழுதிய “கஷ்மீர் வரலாறும் எதிர்காலமும்” (இணைய கட்டுரை) மார்க்ஸ் பேரா. அவர்கள் எழுதிய கஷ்மீர்... என்ன நடக்கிறது அங்கே? இந்திய வெளியீடு. ஆலிப் எஸ்.எம் அவர்கள் எழுதிய கஷ்மீர் முடிவற்ற முரண்பாடு வெளியீடு: அரசியல் விஞ்ஞான சங்கம் )
ஓர்
அரசு எப்படி
செயல்பட வேண்டும்?...
முந்தைய ஆட்சியாளரின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பிந்தைய ஆட்சியாளரின் உரிமையும் கடமையும் ஆகும்…
1.
தனியொரு மனிதருக்கு வழங்கிய வாக்குறுதி..
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும்,
தோழர் அபூபக்ர்
ஸித்தீக் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் புறப்பட்டு பயணமாகிக்
கொண்டிருக்கின்றார்கள்.
வழியில், சுராக்கா இப்னு மாலிக் என்பவர் சிவப்பு
நிற நூறு ஒட்டகைகளுக்காக துரத்திக்கொண்டு வருவதை அபூபக்ர் (ரலி) பார்த்து விட்டு, அல்லாஹ்வின் தூதரிடம் தெரிவிக்கின்றார்கள்.
இன்னும் வேகமாக செலுத்துகின்றார்கள் குதிரையை,
ஆனாலும்
அருகாமையில் வந்து விட்ட சுராக்காவை கண்ட அபூபக்ர்
(ரலி) மீண்டும் பெருமானார் {ஸல்} அவர்களிடம் முறையிட, அப்படியே குதிரையை விட்டு கீழிறங்கி நின்று கொண்டு பின் தொடர்ந்து வருவதின்
நோக்கம் என்ன வென்று சுராக்காவிடம் கேட்டார்கள்
{ஸல்} அவர்கள்.
சுராக்கா சொன்னார் “உங்களது கூட்டத்தினர் உங்களைப்
பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறினர்” அதற்காகவே பின் தொடர்கின்றேன்.
وروى ابن عيينة، عن أبي موسى، عن الحسن أن رسول الله صلى الله عليه
وسلم قال لسراقة ابن مالك: كيف بك إذا لبست سواري كسرى ومنطقته وتاجه؟ قال: فلما
أى عمر بسواري كسرى ومنطقته وتاجه، دعا سراقة بن مالك وألبسه إياهما.
وكان
سراقة رجلاً أزب كثير شعر الساعدين، وقاله له: ارفع يديك، وقل: الله أكبر، الحمد
لله الذي سلبهما كسرى بن هرمز، الذي كان يقول: أنا رب الناس، وألبسهما سراقة رجلاً
أعرابياً، من بني مدلج، ورفع عمر صوته.
அப்போது, பெருமானார் {ஸல்} அவர்கள் சுராக்காவை நோக்கி “சுராக்காவே! பாரசீக மன்னர் கிஸ்ராவின் அணிகலன்களை
நீர் அணிந்தால் நீர் எப்படி இருப்பீர்? உமது தோற்றம் எப்படி இருக்கும்?” என்று கேட்டார்கள்.
சுராக்கா அண்ணலாரிடம் “பாரசீக மன்னர் கிஸ்ராவின் அணிகலனையா
நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி {ஸல்} அவர்கள்
“ஆம்! இஸ்லாம் பாரசீகத்தை வென்றெடுக்கும்! அதன் அணிகலன்கள் உங்களை அலங்கரிக்கும்!” என்று கூறினார்கள்.
ஆம்! உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் பாரசீகம்
வெற்றி கொள்ளப்பட்டது. சுராக்கா இப்னு மாலிக் (ரலி) அழைக்கப்பட்டு பாரசீக மன்னன் கிஸ்ராவின்
அணிகலன்களை அணிவித்து விட்டு, உமர் (ரலி) அவர்கள்
“மக்களின் இறைவன்
நானே என்று சொல்லிக்கொண்டிருந்த ஹுர்முஸின் மகன் கிஸ்ராவினுடைய அணிகலனை ஏகனாம்
அல்லாஹ்வின் அடிமையாகிய ஓர் அரபியான சுராக்காவிற்கு அணிவிக்க துணை செய்த
அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! என்று உரத்த குரலில் முழங்கினார்கள்.
(நூல்: உஸ்துல் காபா, பாகம்:1, பக்கம்:422)
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுடைய வஃபாத்திற்கு ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பாரசீக வெற்றி சாத்தியமானது.
20
ஆண்டுகளுக்கு முன்னர் முஹம்மது {ஸல்} அவர்கள் அளித்த
வாக்குறுதியை அன்றைய நாளின் ஆட்சியாளராய் இருந்த உமர் (ரலி) அவர்கள்
நிறைவேற்றினார்கள்.
காஷ்மீர் மக்களின்
விருப்பம் கவனத்தில் கொள்ளப்படும். அவர்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை
வழங்கப்படும் என்பது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், முதல் ஆட்சியாளர் அளித்த
வாக்குறுதி அது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவின்படி சுயாட்சி உரிமைகள் கொண்ட மாநிலமாக காஷ்மீர் இருக்கும். இதையடுத்து இந்திய அரசு ஒரு வாக்குறுதி அளித்தது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய பிறகு பொதுவாக்கெடுப்பு நடத்தி இறுதி முடிவை காஷ்மீரிகளே தீர்மானிப் பார்கள் என நேரு அவர்கள் வானொலியில் (02.11.1947) தெரிவித்தார்.
ஆனால், தற்போதைய
மத்திய அரசு அந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டிருக்கின்றது.
முந்தைய ஆட்சியாளர்கள் மதித்த மரபுகளை பிந்தைய ஆட்சியாளர்கள் மதிப்பது உரிமையும், கடமையும் ஆகும்..
الشيخ
عبد القادر الشيبي كبير سدنة بيت الله الحرام، وذلك في مستشفى الملك خالد بالحرس
الوطني في جدة، عن عمر يناهز الـ74 عاما، بعد صراع مع مرض سرطان الكبد دام 5 أشهر.
ودُفن الشيخ عبد القادر في مقبرة المعلاة بمكة المكرمة، بعد أن صُلي عليه عصر أمس
في المسجد الحرام بمكة المكرمة.
يُذكر أن «آل شيبة» توارثوا حمل مفاتيح الكعبة المشرفة منذ أكثر من 16 قرنا، وحسب التقاليد القرشية فإن السدانة يتولاها الأكبر سنا في العائلة. وتولى الشيخ عبد القادر بن طه الشيبي سدانة الكعبة عقب وفاة الشيخ عبد العزيز بن عبد الله الشيبي منذ عام 2010.
يُذكر أن «آل شيبة» توارثوا حمل مفاتيح الكعبة المشرفة منذ أكثر من 16 قرنا، وحسب التقاليد القرشية فإن السدانة يتولاها الأكبر سنا في العائلة. وتولى الشيخ عبد القادر بن طه الشيبي سدانة الكعبة عقب وفاة الشيخ عبد العزيز بن عبد الله الشيبي منذ عام 2010.
கஅபா ஆலயத்தின் திறவுகோல்
ஒரு குறிப்பிட்ட குடும்பத்தாரிடமே இன்று வரை இருந்து வருகின்றது.
கடந்த 16 நூற்றாண்டுகளாக மக்காவைச் சார்ந்த ஆலு ஷைபா குடும்பத்தார்களும்,
அவர்களின் வழித்தோன்றல்களுமே கஅபாவின் சாவியுடைய காப்பாளர்களாக இருந்து
வருகின்றார்கள்.
கடந்த 23.10.2014 அன்று ஆலுஷைபா வழித்தோன்றலில் 108 –ஆவது காப்பாளராக இருந்து வந்த ஷைகு அப்துல் காதிர் இப்னு தாஹா அஷ்ஷைபீ அவர்கள்
கடும் நோயுற்று ஜித்தா காலித் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வஃபாத்தானார்கள்.
தற்போது, 109 –ஆவது காப்பாளராக டாக்டர், ஸாலிஹ் இப்னு
ஜைனுல் ஆபிதீன் அஷ்ஷைபீ அவர்கள் இருந்து வருகின்றார்கள்.
மாநபி {ஸல்} அவர்களுக்குப் பின்னர் கலீஃபாக்கள்,
அப்பாசிய, உமைய்யா ஆட்சியாளர்கள், அதன் பின்னர் மன்னர்கள், அரசர்கள் என இதுவரை பல ஆட்சி
மாற்றங்கள் கண்ட பிறகும் கூட இஸ்லாத்தின் முதல் நூற்றாண்டில், முதல் ஆட்சியாளர் மதித்த மரபை இன்றளவும் மதித்து நடக்கின்றனர் ஸவூதி அரசின்
ஆட்சியாளர்கள்.
கொஞ்சம் முன் சென்று
வரலாற்றின் சுவடுகளை வாசித்துப் பார்ப்போம்..
ولما
أشرقت شمس الإسلام يوم فتح مكة المكرمة، أخذ نبينا محمد (صلى الله عليه وسلم) من
عثمان بن طلحة بن أبي طلحة الحجبي سادن الكعبة المفتاح، وفتح بابها، ودخلها بعد
تطهيرها من الأصنام. فقد «روى ابن عباس، رضي الله عنهما، أن رسول الله (صلى الله
عليه وسلم) لما قدم مكة أبى أن يدخل البيت وفيه الآلهة، فأمر بها، فأخرجت، فأخرج
صورة إبراهيم وإسماعيل وفي أيديهما من الأزلام، فقال النبي (صلى الله عليه وسلم):
قاتلهم الله لقد علموا ما استقسما بها قط، ثم دخل البيت، فكبر في نواحي البيت،
وخرج ولم يصل فيه» رواه البخاري.
وعن ابن عمر، رضي الله عنهما، قال «أقبل رسول الله (صلى الله عليه وسلم) عام الفتح على ناقة لأسامة بن زيد، حتى أناخ بفناء الكعبة، ثم دعا عثمان بن طلحة، فقال: ائتني بالمفتاح، فذهب إلى أمه، فأبت أن تعطيه، فقال: والله لتعطينه أو ليخرجن هذا السيف من صلبي، قال: فأعطته إياه، فجاء به إلى النبي (صلى الله عليه وسلم) فدفعه إليه، ففتح الباب، قال: ثم دخل النبي (صلى الله عليه وسلم) وبلال وأسامة بن زيد وعثمان بن طلحة، وأمر بالباب فأغلق، فلبثوا فيه مليا، ثم فتح الباب» رواه البخاري
وعن ابن عمر، رضي الله عنهما، قال «أقبل رسول الله (صلى الله عليه وسلم) عام الفتح على ناقة لأسامة بن زيد، حتى أناخ بفناء الكعبة، ثم دعا عثمان بن طلحة، فقال: ائتني بالمفتاح، فذهب إلى أمه، فأبت أن تعطيه، فقال: والله لتعطينه أو ليخرجن هذا السيف من صلبي، قال: فأعطته إياه، فجاء به إلى النبي (صلى الله عليه وسلم) فدفعه إليه، ففتح الباب، قال: ثم دخل النبي (صلى الله عليه وسلم) وبلال وأسامة بن زيد وعثمان بن طلحة، وأمر بالباب فأغلق، فلبثوا فيه مليا، ثم فتح الباب» رواه البخاري
ومنذ
يوم فتح مكة أقر رسول الله صلى الله عليه وسلم سدانة الكعبة لآل شيبة وثبتها لهم،
وقال الرسول الكريم: (خذوها يا بني طلحة خالدة تالدة لا ينزعها منكم إلا ظالم)،
وأيضا أجمع المفسرون على أن سبب نزول قول الله تعالى (إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الأمَانَاتِ إِلَىٰ
أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ
اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا)، هو أداء مفتاح الكعبة لآل الشيبي»، ويختتم بالقول
«ونرجو الله أن يعيننا على هذه الأمانة الكبيرة».
ஜாஹிலிய்யா (அறியாமைக்) காலத்தில் கஅபா ஆலயத்தைப் பாரமரிக்கும் பொறுப்பு உஸ்மான் பின் தல்ஹா அவர்களுடைய குடும்பத்தினரான ”ஆலுஷைபா”
குடும்பத்தினரிடம் இருந்தது. கஅபாவின் திறவுகோலும் அவர்களிடம்தான் இருந்தது.
கஅபாவின் ஆலயத்திற்கு உள்ளாகச் சென்று அவ்வளவு எளிதாக யாராலும் தரிசித்து
விடமுடியாது. அவர்கள் விரும்புபவர்களை ஆலயத்திற்கு உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். விரும்பாதவர்களை அனுமதிக்க மாட்டார்கள்.
இஸ்லாத்தின்
கொள்கைகளை எடுத்தியம்பிய ஆரம்ப நாட்களில் ஒருமுறை மாநபி {ஸல்} அவர்கள் உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம், தங்களையும் அந்த ஆலயத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்குமாறு வேண்டினார்கள்.
உஸ்மான் அவர்களோ அப்போது இறை நிராகரிப்பாளராய் இருந்த தருணம்
அது. நபிகளார் மீதும் இஸ்லாத்தின் மீதும் அதிக வன்மம் கொண்டிருந்த நேரமும் கூட. அனுமதி மறுத்து விட்டார் உஸ்மான்.
நபிகளாருக்கு அது பெரும் மனவருத்தத்தைத் தந்தது.
அந்த வருத்தத்துடனேயே உஸ்மான் பின் தல்ஹா அவர் களிடம் நபிகளார் “உஸ்மான்! ஒன்றை நன்றாக நினைவில் வைப்பீராக! இதோ இப்போது உமது கரங்களில் இருக்கும் இந்தத் திறவுகோல்.. நிச்சயம், ஒருநாள் என் கரங்களுக்கு வரும். அப்படி வரும் அந்த நாள் வெகு தொலைவிலும் இல்லை. அந்த நாளில் அந்தத் திறவுகோலை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற அதிகாரமும் என்னிடம் இருக்கும். என்பதை நினைவில் வைப்பீராக! மறந்துவிடாதீர்!” என்று
கூறினார்கள்.
இதனைக் கேட்டதும்
தான் தாமதம், உஸ்மான் பின் தல்ஹா “முஹம்மதே! அப்படி ஒருநாள் வரவே வராது. அவ்வாறு வந்துவிட்டால் அந்த நாளில் இந்த உஸ்மான் மண்ணுக்கு மேலாக உயிரோடு இருப்பதைவிட மண்ணுக்கு கீழாக புதைந்து போயிருப்பான்”. என்று
கூறினார்.
நாட்களும், வருடங்களும் நம் கட்டளைப் பிரகாரம் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்ன? அந்த நாளும் வந்தது. ஆம்! ஹிஜ்ரி எட்டு மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. வெற்றித் திருமகனாய் மாநபி {ஸல்} அவர்கள் கஅபாவுக்கு முன்பாக அமர்ந்து இருக்கின்றார்கள்.
கஅபாவைத் திறந்து அங்கிருக்கும் சிலைகளை அகற்றி தூய்மை படுத்தவேண்டும். என்ன செய்வது? திறவுகோல் அது உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம் அல்லவா இருக்கிறது.
பழைய உரையாடல்கள் மின்னலாய் வந்து போகிறது. அருகில் இருந்தவர்களிடம் நபிகளார் {ஸல்} அவர்கள் கேட்டார்கள், “உஸ்மான் எங்கே?”. “இதோ இருக்கின்றேன்” என்று கூறுகின்றார். “கஅபாவின் திறவுகோல் எங்கே?”. “இதோ இருக்கிறது” என்று கூறி தன்னிடம் இருந்த சாவியை எடுத்துக் கொடுக்கின்றார்.
திறவுகோலை வாங்கிய நபிகளார் {ஸல்} அவர்கள் ஒரு கணம் அந்த திறவுகோலைப் பார்க்கிறார்கள்.
அந்தப் பார்வையில்
ஆயிரமாயிரம் அர்த்தங்கள் நிரம்பி இருந்தன. என்ன வேண்டுமெனாலும் செய்வதற்கான அதிகாரம் இப்போது தன்னிடம் இருக்கிறது. இந்தச் சாவியைக் கூட தாம் விரும்பும் யாருக்கு வேண்டுமென்றாலும் கொடுக்கும் அதிகாரமும் உள்ளது. காலம் காலமாக அதனைத் தங்கள் கைவசம் வைத்திருந்த உஸ்மான் பின் தல்ஹா அவர்களும் அங்கே நிற்கின்றார்கள்.
கஅபாவைப் பராமரிக்கும் பணி என்பது மிகவும் கண்ணியமான பணி. யாருடைய குடும்பத்திற்கு அந்த நற்பேறு வழங்கப்படுகிறதோ அவர்களுக்கு ஒட்டுமொத்த மக்களும் கண்ணியம் கொடுப்பார்கள். ஆகவே அனைவரது கண்களும் அந்தத் திறவுகோல் மீதே இருந்தது.
அண்ணலாருக்கு அருகே அவரது பெரியதந்தை அப்பாஸ் (ரலி) அவர்களும், அலீ (ரலி)
அவர்களும் நின்றுகொண்டிருந்தனர். அப்போது,
அப்பாஸ் (ரலி) அவர்கள் காதருகே குனிந்து பெருமானார் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! அந்தத் திறவுகோலை என்னிடம் தாருங்கள். இன்றுமுதல் இந்த ஆலயத்தைப் பராமரிக்கும் பணியை நான் மேற்கொள்கிறேன்” என்று
வேண்டுகோள் ஒன்றை வைக்கின்றார்.
மாநபி {ஸல்}
அவர்கள் பதில் ஏதும் கூறாமல் அப்படியே அந்த இடத்தை விட்டும் கடந்து போய் கஅபாவைத் திறந்தார்கள். சிலைகளை அகற்றி சுத்தம் செய்தார்கள். ஓரிடத்தில் இறைவனுக்கு நன்றி பாராட்டும்
பொருட்டு தொழுதார்கள். உள்ளேயே வலம் வந்தார்கள்.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆம்! ஆலயத்திற்குள் வலம் வந்துகொண்டிருக்கும்போதே இறைக்கட்டளையுடன் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) வந்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! அந்தத் திறவுகோலை உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடமே ஒப் படைத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். பின்னர், பின்வரும் வசனம் இறக்கியருளப்பட்டது.
“(இறை நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். அமானத் - அடைக்கலப் பொருட்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள்; நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு வழங்குங்கள்.
திண்ணமாக, அல்லாஹ் உங்களுக்கு வழங்குகின்ற அறிவுரை மிக உன்னதமானதாகும். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்”.
( அல்குர்ஆன்:
4: 58 )
இந்த வசனத்தை ஓதியவாறே கஅபாவை வலம் வந்த நபிகளார் {ஸல்} அவர்கள் பின்னர் வெளியே வந்து “உஸ்மான் பின் தல்ஹா எங்கே?” என்று கேட்டார்ர்கள்.
“இதோ இருக்கின்றேன் இறைத் தூதரே!” என்று
கூறி தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறினார்.
அப்போது, மாநபி
{ஸல்} அவர்கள் “நீட்டுங்கள்! உங்கள் கரங்களை” என்று
கூற,
கரத்தை நீட்டினார் உஸ்மான் இப்னு தல்ஹா (ரலி) அவர்கள்; அந்தக்
கரத்தில் கஅபாவின் திறவுகோலை வைத்த பெருமானார் (ஸல்) அவர்கள் உஸ்மான் இப்னு தல்ஹா அவர்களே! “மறுமைநாள் வரை இது உங்கள் குடும்பத்தாரிடமே இருக்கும்” என்று சோபனம் கூறினார்கள். ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ,
தஃப்ஸீர் இப்னு கஸீர் )
குடிமக்கள் உரிமைகள் கோரினால் உரிய முறையில் பரிசீலித்து உரிமைகளை
நிறைவேற்றுவது அரசின் கடமையாகும்...
سبق أن النبي حاصر أهل الطائف بعد
غزوة حنين ، ثم تركهم في أماكنهم ، ورجع ، فلما رجع تبع أثره عروة بن مسعود الثقفي
حتى أدركه قبل أن يصل إلى المدينة ، فأسلم ، ثم رجع ودعا
قومه إلى الإسلام – وكان أحب إليهم من أبكارهم ، فظن أنهم يطيعونه – فرموه بالنبل
من كل جانب حتى قتلوه ، ثم ائتمروا بينهم ، ورأوا أنهم لا طاقة لهم بحرب من حولهم
من العرب ، فبعثوا عبد ياليل بن عمرو ، ومعه خمسة آخرون من أشرافهم ، وذلك في
رمضان سنة 9هـ فلما قدموا المدينة ضرب عليهم رسول الله قبة في ناحية المسجد
ليسعوا القرآن ، ويروا الناس إذا صلوا .
ومكثوا يختلفون إلى رسول الله ، يدعوهم إلى الإسلام
، وهم لا يسلمون ، حتى طلبوا منه أن يسمح لهم بالزنا وشرب الخمر وأكل الربا ، وأن
لا يهدم اللات ، ويعفيهم عن الصلاة ، وأن لا يكسروا أصنامهم بأيديهم ، فأبى ،
وأخيراً رضخوا له ، وأسلموا واشترطوا أن يتولى هو بهدم اللات ، وأن ثقيفاً لا يهدمونها
بأيديهم أبداً . فقبل ذلك .
وكان عثمان بن أبي العاص الثقفي أصغرهم
سناً ، فكانوا يختلفونه في رحالهم ، فكان إذا رجعوا يذهب إلى النبي يستقرؤه القرآن ، وإذا
رأه نائماً استقرأ أبا بكر ، حتى حفظ شيئاً كثيراً من القرآن ، وهو يكتم ذلك عن
أصحابه ، فلما أسلموا أمره عليهم رسول الله لحرصه على الإسلام
وقراءة القرآن وتعلم الدين .
ورجع الوفد إلى قومه عنهم إيمانه ، وخوفهم
الحرب والقتال ، وقالوا : جئنا رجلاً فظاً غليظاً قد ظهر بالسيف ، ودان له الناس ،
فعرض علينا أموراً شديدة ، وذكروا ما تقدم من ترك الزنا والخمر والربا وغيرها ،
وإلا يقاتلهم ، فأخذتهم النخوة ، واستعدوا للقتال يومين أو ثلاثة أيام ، ثم ألقى الله في قلوبهم الرعب
فقالوا للوفد : ارجعوا فأعطوه ما سأل . فقال الوفد : قد قاضيناه وأسلمنا فأسلم
ثقيف .
وبعث رسول الله خالد بن الوليد
والمغيرة بن شعبة الثقفي في رجال إلى الطائف ليهدموا اللات ، فكسروها وهدموا
بنيانها .
وكان مما اشترطوا على
رسول الله أن يدع لهم الطاغية ثلاث سنين، فما برحوا يسألونه سنة سنة، ويأبى عليهم،
حتى سألوه شهرا واحدا بعد مقدمهم ليتألفوا سفهاءهم، فأبى عليهم أن يدعها شيئا
مسمى، إلا أن يبعث معهم أبا سفيان بن حرب، والمغيرة ليهدماها، وسألوه مع ذلك أن لا
يصلوا، وأن لا يكسروا أصنامهم بأيديهم.
فقال: «أما كسر أصنامكم بأيديكم فسنعفيكم من ذلك، وأما الصلاة فلا خير في دين لا صلاة فيه».
فقالوا: سنؤتيكها وإن كانت دناءة.
وقد قال الإمام أحمد: حدثنا عفان، ثنا محمد بن مسلمة عن حميد، عن الحسن، عن عثمان ابن أبي العاص أن وفد ثقيف قدموا على رسول الله فأنزلهم المسجد ليكون أرق لقلوبهم، فاشترطوا على رسول الله أن لاتحشروا، ولا يعشروا، ولا يجبوا، ولا يستعمل عليهم غيرهم.
فقال رسول الله: «لكم أن لا تحشروا، ولا تجبوا، ولا يستعمل عليكم غيركم، ولا خير في دين لا ركوع فيه».
فقال: «أما كسر أصنامكم بأيديكم فسنعفيكم من ذلك، وأما الصلاة فلا خير في دين لا صلاة فيه».
فقالوا: سنؤتيكها وإن كانت دناءة.
وقد قال الإمام أحمد: حدثنا عفان، ثنا محمد بن مسلمة عن حميد، عن الحسن، عن عثمان ابن أبي العاص أن وفد ثقيف قدموا على رسول الله فأنزلهم المسجد ليكون أرق لقلوبهم، فاشترطوا على رسول الله أن لاتحشروا، ولا يعشروا، ولا يجبوا، ولا يستعمل عليهم غيرهم.
فقال رسول الله: «لكم أن لا تحشروا، ولا تجبوا، ولا يستعمل عليكم غيركم، ولا خير في دين لا ركوع فيه».
ஹிஜ்ரி 9 – ஆம் ஆண்டு ரமலான் மாதம் அண்ணலாரைக் காண ஒட்டு மொத்த ஸகீஃப் கோத்திரமும் மதீனா வந்திருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன் வந்து நின்ற ஸகீஃப் கோத்திரத்தினர் “நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால், சில விஷயங்களில் எங்களுக்கு விதி விலக்கு வழங்க வேண்டும்.” என வேண்டி நின்றனர்.
1. நாங்கள் வசிக்கும் பகுதியை யுத்த தளமாக, இராணுவ தளமாக ஆக்கக் கூடாது. 2. இஸ்லாத்தில் எங்களுக்கு ஈடுபாடு வரும்
வரை சில காலங்களுக்கு சிலைகளை வணங்க அனுமதிக்க வேண்டும். 3. தொழுகை மற்றும் ஜகாத்தில் சலுகைகள் தர வேண்டும். 4. எங்களில் ஒருவரே எங்களுக்கு தலைவராக இருக்க வேண்டும். 5. ஜிஹாத் - மார்க்கப் போரில் கலந்து கொள்ள எங்களை கட்டாயப் படுத்தக்கூடாது. 6. விபச்சாரம், வட்டி போன்றவற்றில் எங்களுக்கு விலக்கு தர
வேண்டும். 7. எங்கள் கரங்களால் எங்களின் பழைய கடவுளர்களின்
சிலைகளை உடைக்கச் சொல்லக்கூடாது.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், ஸகீஃப் கோத்திரத்தார்களின் ஐந்து நிபந்தனைகளில் மூன்றை நிராகரித்து விட்டார்கள்.
1.அல்லாஹ்வுக்கு இணை வைக்க அனுமதிக்க முடியாது.
2.தொழுகையிலும், ஜகாத்திலும் சலுகைகள் தர முடியாது.
3.இஸ்லாம் விலக்கியிருக்கிற எந்தப் பாவமான
காரியங்களிலும் சலுகைகள் தரப்படாது.
( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்: 259 – 262 )
தாயிஃப் என்பது பாலைவனத்தின் சோலையாகும். அழகிய விவசாய பூமியும், குளிர் பிரதேசமும் ஆகும். அவர்களின் தனித்துவங்களையும், அந்த பகுதியின் சூழ்நிலைகளையும் கவனத்தில் கொண்ட மாநபி {ஸல்} அவர்கள் அந்த பகுதியை யுத்த களமாகவோ, இராணுவ முகாம்களாகவோ ஆக்கவில்லை. அதே போன்றே நேர்வழி நின்ற நான்கு கலீஃபாக்களும் அதன் பின்னர் வந்த ஆட்சியாளர்களும் அவ்வாறே நடந்து கொண்டனர்.
இன்றளவும் தாயிஃப்
பசுமை சோலையாகவே காட்சி தருகின்றது. ”சிட்டி ஆஃப் ரோஸஸ்” மலர்கள் பூத்துகுலுங்கும்
பூஞ்சோலை என்றே அழைக்கப்படவும் செய்கின்றது.
அவர்களின் குண
நலன்களுக்கு ஏற்ப அவர்களில் ஒருவரே அவர்களின் தலைவராக அண்ணல் நபி {ஸல்} அவர்களால் நியமிக்கப்பட்டார்கள்.
பின் வந்த ஆட்சியாளர்களும் அவ்வாறே நடந்து கொண்டனர்.
ஆனால், காஷ்மீர்
விவகாரத்தில் முந்தைய அரசு வழங்கிய சட்ட உரிமையை தற்போதைய அரசு நிராகரித்துள்ளது.
26.10.1947 அன்று காஷ்மீரைத் தற்காலிகமாக இணைப்பதற்கான இணைப்பு உடன்படிக்கை மன்னர் ஹரிசிங்கிற்கும் இந்திய அரசிற்கும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் பாதுகாப்பு, அயலுறவு,
தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளை இந்திய அரசாங்கம் பெற்றது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370
ஆவது பிரிவின்படி சுயாட்சி உரிமைகள் கொண்ட மாநிலமாக காஷ்மீர் இருக்கும். இதையடுத்து இந்திய அரசு ஒரு வாக்குறுதி அளித்தது.
ஆனால், பாரத
இந்தியாவின் முதல் பிரதமர் வழங்கிய சிறப்பு அந்தஸ்தை தான் தற்போதைய இந்தியப்
பிரதமர் மோடி நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
சர்வதேச சட்ட விதிகளை மதித்து நடப்பது ஒரு அரசின் தலையாய கடமை ஆகும்…
ஹிஜ்ரி 6, துல்கஅதா மாதம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தாங்கள்
கண்ட கனவின் அடிப்படையில் உம்ரா செய்ய 1400 தோழர்களுடன் மக்கா நோக்கி
பயணமானார்கள்.
நபி {ஸல்} தங்களின்
நிலையையும், நோக்கத்தையும் உறுதியாகத் தெளிபடுத்திக் கூறவும், குறைஷிகளிடம் ஒரு
தூதரை அனுப்ப விரும்பியும் உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள்.
ஆனால், உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அங்கு சென்ற பின் எனக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால்
எனக்காக களமிறங்கிப் போராடும் அதீ இப்னு கஅப் கிளையைச் சார்ந்த எவரும் அங்கில்லை.
எனவே, உஸ்மான் (ரலி) அவர்களை அனுப்புங்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தை அவர் தான்
சரியான முறையில் குறைஷிகளிடம் எடுத்து வைப்பார்!” என்று கூறினார்கள்.
நபியவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்து “நீர் குறைஷிகளிடம் சென்று, நாம் போருக்காக
வரவில்லை; உம்ராவிற்காகத்தான் வந்திருக்கின்றோம் என்று எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு
அவர்களை சத்திய தீனின் பக்கம் அழையுங்கள்! மேலும், மக்காவில்
இருக்கும் முஸ்லிகளைச் சந்தித்து வெற்றி நமக்குத்தான் என்ற நற்செய்தியைக்
கூறுங்கள்! அல்லாஹ் அவனது மார்க்கத்தை மிக விரைவில் மக்காவில் ஓங்கச் செய்வான்.
ஆகவே, யாரும் இறைநம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்களிடம்
சொல்லுங்கள்! என்று கூறினார்கள்.
ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். வழியில் பல்தஹ்
எனும் இடத்தை கடந்த போது சில குறைஷிகளை சந்தித்தார்கள். தங்களின் உரையாடலின் போது
தாங்கள் மக்காவிற்கு செல்வதின் நோக்கத்தை குறைஷிகளிடம் தெரிவித்தார்கள் உஸ்மான்
(ரலி) அவர்கள்.
அதற்கு குறைஷிகள் ”நீர் சொல்வதை நாங்கள் கேட்டு விட்டோம். நல்ல விஷயம் தான்.
நீர் உமது நோக்கத்தை நிறைவேற்ற மக்காவிற்குச் செல்ல்லாம்” என்றனர்.
கூட்டத்தில் இருந்த அபான் இப்னு ஸயீத் இப்னு அல் ஆஸ் என்பவர் எழுந்து உஸ்மான்
(ரலி) அவர்களை வரவேற்று, பின்னர் தம் குதிரைக்கு கடிவாளமிட்டு அதில் தன் பின்னால் அமரவைத்து, அவர்களுக்கு
அடைக்கலமும் கொடுத்து மக்காவிற்கு அழைத்து வந்தார்.
மக்கா வந்ததும் குறைஷித்தலைவர்களிடம், அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்களின் ஆசையை உஸ்மான் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், நீங்கள்
வேண்டுமானால் கஅபாவை வலம் வர அனுமதிக்கின்றோம். ஆனால், நபியவர்களை
நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்று குறைஷிகள் கூறிவிட்டனர்.
ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் நபிகளார் இல்லாமல் தாம் வலம் வர இயலாது என மறுத்து
விட்டார்கள்.
குறைஷிகள் உஸ்மான் (ரலி) அவர்களை கையில் காப்பு இட்டு மக்காவில் ஓரிடத்தில்
தடுத்து வைத்து விட்டனர். இந்த பிரச்சனையில் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கும் வரை
உஸ்மான் அவர்களை அனுப்பாமல் தடுத்து வைத்திடுவோம் என அவர்கள் முடிவெடுத்தனர்.
ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் எனும் செய்தி
மக்காவிலும், மக்காவிற்கு வெளியிலும் மிக விரைவாக பரவியது.
இப்படியே முஸ்லிம்களுக்கும் வந்து கிடைத்தது. இந்தச் செய்தி மாநபி {ஸல்} அவர்களிடம்
சொல்லப்பட்ட போது “குறைஷியர்களிடம் போர் செய்யாமல் இவ்விடத்தை விட்டு நாம் நகரக்கூடாது.” என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள்.
மேலும், தங்களது தோழர்களைப் போருக்காக உடன்படிக்கை செய்து தர அழைத்தார்கள்.
ஸஹாபாக்கள் உயிர் இருக்கும் வரை போராடுவோம் என்பதாகவும், அதற்காக உயிரைக்
கொடுக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் நபிகளாரிடம் ஒப்பந்தம் செய்தார்கள்.
அபூ ஸினான் அல் அஸதீ (ரலி) என்பவர்தான் முதன் முதலில் ஒப்பந்தம் செய்தார்.
ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அவர்களோ மூன்று முறை ஒப்பந்தம் செய்தார். அதாவது, மக்கள் ஒப்பந்தம்
செய்ய ஆரம்பித்த போதும், பின்பு நடுவிலும், பின்னர் இறுதியிலும் ஒப்பந்தம் செய்தார்.
நபி {ஸல்} அவர்கள் தங்களின் ஒரு கையால் மற்றொரு கையைப் பிடித்துக் காட்டி “இந்தக் கை
உஸ்மான் சார்பாக” என்று கூறினார்கள். அதாவது, உஸ்மான் (ரலி)
உயிருடன் இருந்தால் இதிலும் பங்கெடுத்து இருப்பார் என்பதை உணர்த்தும் முகமாக
நபிகளார் இதைச் செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு மரத்திற்கு கீழ் இவ் உடன்படிக்கையை வாங்கினார்கள். அப்போது உமர்
(ரலி) அவர்கள் நபியின் கையைத் தாங்கி பிடித்து இருந்தார்கள். மஃகில் இப்னு யஸார்
(ரலி) அவர்கள் மரத்தின் ஒரு கிளையைச் சாய்த்து நபிகளாருக்கு நிழல் தரும் வண்ணமாக
பிடித்திருந்தார்கள்.
இந்த உடன்படிக்கையைத் தான் “பைஅத்துர் ரிள்வான்” – அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இறைபொருத்தத்திற்குரிய
உடன்படிக்கை” என இஸ்லாமிய வரலாறு சான்று பகர்கின்றது.
அல்லாஹ்வும், இது குறித்து திருமறையில் “இறை நம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம்
செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களை குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய
உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள்
மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு
வெகுமதியாக வழங்கினான்.” என்று (அல்குர்ஆன்:48:18). குறிப்பிடுகின்றான்.
நிலைமை இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க ஆயத்தமாகி
விட்டார்கள். எனும் செய்தி குறைஷிகளுக்குத் தெரியவரவே, இனியும் உஸ்மான்
(ரலி) அவர்களை தடுத்து வைத்திருப்பது தங்களுக்கு நல்லதல்ல என்று கருதி உஸ்மான்
(ரலி) அவர்களை விடுதலை செய்துவிட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், நபித்தோழர்களும் புறப்பட்டு சில எட்டுக்கள் தான் வைத்திருப்பார்கள். அதற்குள்
உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கே வந்து விடுகின்றார்கள்.
( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்: 9, பக்கம்: 100-102, தஹ்தீப் ஸீரத்
இப்னு ஹிஷாம், பக்கம்: 199.)
ஜாஹிலிய்யா காலத்திலும் கூட தூதுவர்களாக செல்பவர்கள் கண்ணியப் படுத்தப்பட வேண்டும், அவர்கள் துன்புறுத்தப்படவோ, கொலை செய்யப்படவோ கூடாது எனும் நடைமுறை சட்டரீதியாக மதிக்கப்பட்டு வந்தது.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சட்ட ரீதியான அந்த முடிவை கையில் எடுத்து சர்வதேச அளவிலான சட்ட (விதிகள் எதுவும் இஸ்லாமிய கொள்கைக்கு
முரண்படாத போது) விதிகளை மதித்தார்கள்.
மூர்க்கத்தனமும் துரோகமிழைக்கும் குணமும் கொண்ட குறைஷிகளை சட்டத்தின் முடிவின் முன் மண்டியிட வைத்து மாபெரும் வெற்றியை ஈட்டினார்கள்.
ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் மன்றமான ஐ. நாவில் இந்த
பிரச்சனை விவாதிக்கப்படவில்லை.
ஐ.நா வும்…. காஷ்மீர் விவகாரமும்...
காஷ்மீர் மீதான உரிமைக்கு இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் வரிந்து கட்டிக்கொண்டு போட்டியிட்டன.
1948 ஜனவரி 1ஆம் தேதி அன்றைய இந்தியப் பிரதமரான ஜவஹர்லால் நேரு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு எடுத்துச்சென்றார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 21-4-1948 அன்று தீர்மானம் (எண் 47) நிறைவேறியது. அதன் படி, இரு நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அவரவர் ஊடுருவிய பகுதியிலிருந்து இரு நாட்டு இராணுவமும் வெளியேற வேண்டுமென அத்தீர்மானம் அமைந்திருந்தது. ஆனால், இது நிறைவேறவில்லை.
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது ஆக்கிரமிப்பை சட்ட பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால், காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அவர்களின் கருத்தை அறிந்து அதன் பின்னர் முடிவெடுப்பது என்று ஐநா சபையில் ஒப்பந்தமானது.
1.காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? 2. பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது 3. தனி நாடாகவே இருக்க வேண்டுமென விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும், வாக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மஹாராஜா ஹரிசிங் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் ஐ.நா. சபையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்.
பாகிஸ்தான் தன்னுடைய இராணுவத்தை விலக்கிக் கொண்டால் தான் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமென இந்தியா கூறியது. நேருவுடன் ஷேக் அப்துல்லாஹ் நட்பு பாராட்டியதாலும், இந்திய இராணுவம் கஷ்மீரில் நிலை கொண்டிருப்பதால் கஷ்மீர் மக்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாதென பாகிஸ்தான் கூறியது.
உலக நாடுகளின் தலையீட்டில் இரு தரப்பு இராணுவத்தையும் வெளியேற்றலாம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், கஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை விரும்பவில்லையெனக்கூறி, பாகிஸ்தானின் யோசனையை நிராகரித்த இந்தியா,
பொது வாக்கெடுப்பு என்கிற ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் கை கழுவியது. அதே நேரத்தில், காஷ்மீரைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொள்வதில் இந்தியா முழுமையாகக் கவனம் செலுத்தியது. இன்று அதை சாத்தியப்படுத்தியுள்ளது.
நிறைவாக...
وَعَنْ
عَبْدِاللَّهِ بنِ مَسْعُودٍ
قَالَ: قالَ رسُولُ
اللَّه ﷺ
إنَّهَا ستَكُونُ بَعْدِي أَثَرَةٌ وأُمُورٌ تُنْكِرُونَهَا، قَالُوا: يَا رسُولَ اللَّهِ، كَيفَ تَأْمُرُ مَنْ أَدْرَكَ مِنَّا
ذلكَ؟ قَالَ
تُؤَدُّونَ
الحَقَّ الَّذِي عَلَيْكُمْ، وتَسْأَلُونَ اللَّهَ الذي لَكُمْ متفقٌ عليه.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நிச்சயமாக!
என(து வாழ்நாளு) க்குப் பிறகு உங்களுக்கு உரிமைப் பறிப்பு ஏற்படும் வகையிலான சுய
நலப்போக்கும், நீங்கள் வெறுக்கக் கூடிய வேறு சில காரியங்களும் நடைபெறும்” என்று
நபி {ஸல்} அவர்கள் கூறிய போது, தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது நாங்கள்
என்ன செய்ய வேண்டுமென நீங்கள் எங்களுக்கு கட்டளையிடுகின்றீர்கள்? என வினவ, அதற்கு
மாநபி {ஸல்} அவர்கள் “உங்கள் கடமையை நீங்கள் நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு சேர
வேண்டிய உரிமைகளை அல்லாஹ்விடமே நீங்கள் கேளுங்கள்!” என்று பதில் கூறினார்கள். (
நூல்: புகாரி )
وَعن
أبي يحْيَى أُسَيْدِ بْنِ حُضَيْرٍ
أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ
قَالَ: يَا رسولَ اللَّهِ أَلا تَسْتَعْمِلُني كَمَا اسْتْعْملتَ فُلاناً وفلاناً
فَقَالَ
إِنَّكُمْ
سَتَلْقَوْنَ بَعْدي أَثَرَةً فاصْبِرُوا حَتَّى تلقَوْنِي علَى الْحوْضِ
உஸைத் இப்னு ஹுளைர் (ரலி அவர்கள் அறிவிக்கிற இன்னொரு அறிவிப்பில், “அன்ஸாரித்
தோழர்களில் ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! இன்ன மனிதரை நீங்கள் அதிகாரியாக
நியமித்ததைப் போன்று என்னையும் அதிகாரியாக நியமிக்க கூடாதா?” என்று வினவிய போது,
சுற்றியிருந்த தோழர்களை நோக்கிய மாநபி {ஸல்} அவர்கள் “என(து வாழ்நாளு) க்குப்
பிறகு உங்கள் உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலான சுய நலப்போக்கை நீங்கள் சந்திக்க
வேண்டிவரும். அப்போது, நீங்கள் பொறுமையை மேற்கொள்ளுங்கள்! மறுமை நாளில் தடாகத்தின்
அருகே என்னை சந்திக்கும் பொருட்டு!” என பதில் கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம்
)
உண்மையில் மாநபி {ஸல்} அவர்கள் முன்னறிவிப்பு செய்த காலத்தில் நாம் வாழ்வதாகவே
நான் கருதுகின்றேன். சுயநலம் நிறைந்த ஆட்சியாளர்களால் நம் உரிமைகள்
புறக்கணிக்கப்படுகின்றது. நாம் விரும்பாத, வெறுக்கிற பல்வேறு காரியங்களை இந்த அரசு
தொடர்ந்து மேற்கொண்டு வருவதையும் கண் கூடாக கண்டு வருகின்றோம்.
எதிர்வினை ஆற்றாமல் பொறுமை காத்து, நம் கடமைகளை சரி வரச் செய்து அல்லாஹ்விடமே
முறையிடுவோம்.
இழந்த உரிமைகள் யாவையும் மீண்டும் பெற்றிட எல்லா வகையிலும் ஆற்றல் பெற்றவன்
அவன் ஒருவன் மாத்திரமே.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சுயநலப் போக்கும், ஃபாஸிச சிந்தனையும் கொண்ட
ஆட்சியாளர்களின் சிந்தனை, செயல்பாடு. சூழ்ச்சி ஆகிய அனைத்திலிருந்தும் காஷ்மீர் முஸ்லிம்களையும்,
ஒட்டு மொத்த இந்திய மக்களையும் காத்தருள் புரிவானாக!!!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
MaashaAllah மிகத்தெளிவான அருமையான கட்டுரை
ReplyDeleteஜஸாக்கல்லாஹ் அவுலியா
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
ReplyDeleteதங்களது உடல்நலன் பாராது மிகுந்த முயற்சியில் காஷ்மீர் விவகார சம்பந்தமாக முழு விபரங்களை பயான் குறிப்பாக வழங்கியுள்ளீர்கள். جزاكم الله خيرا كثيرا يا استاذ
முஜீபுர்ரஹ்மான் சிராஜி. திருப்பூர்.