மெய்ப்பொருள் காண்பது அறிவு!!!
இப்போது முழு
உலகும் உற்று கவனிக்கும்
நாடாக சீனா இருந்து
கொண்டிருக்கிறது என்றால்
அது மிகையல்ல!
ஏனெனில், சீனாவில்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த
கட்டுரையை எழுதத் துவங்கும்
போது 11,374 ஆக இருந்தது.
15 நிமிட இடைவெளிக்குப்
பின்னர் பிபிசி செய்தி
நிறுவனத்தின் செய்திப்படி 28,018 பேர்
ஆவார்கள். இதனால் நிகழ்ந்த
மரணங்களின் எண்ணிக்கை பிறந்து
30 மணி நேரமே குழந்தை
உட்பட 565 பேர் பலியாகி
உள்ளனர்.
ஜப்பானில் 45 பேரும்,
தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரில்
தலா
25 பேரும், தென்கொரியாவில் 13 பேரும்,
ஆஸ்திரேலியாவில் 14 பேரும், அமெரிக்கா
மற்றும் மலேசியாவில் 12 பேரும்,
வியட்நாமில் 10 பேரும், கனடாவில்
5 பேரும், பிலிப்பைன்ஸ்
மற்றும் பிரிட்டன், இந்தியா
ஆகிய நாடுகளில் 3 பேரும்,
ரஷ்யா, இத்தாலியில் 2 பேரும்,
நேபாளம், சுவீடன், இலங்கை,
பெல்ஜியம், ஸ்பெயின், கம்போடியா
ஆகிய நாடுகளில் ஒருவரும்
பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்திய அரசு
பிப், 6 அன்று வெளியிட்டுள்ள
அறிக்கையில் “கொரோனா வைரஸ்
தாக்கியிருக்கிறதா என
1,265 விமானங்களில் வந்த 1,38,750 பயணிகள்
பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இதுவரை
நோய் தாக்கியதாக புதிதாக
ஒருவர் கூட அறியப்படவில்லை.
கொரோனா பாதிக்கப்பட்ட
வுஹான் நகரில் இருந்து
வரவழைக்கப்பட்ட இந்தியர்களான 645 பேர்களில்
யாருக்கும் கொரோனா தாக்கவில்லை”
என்றும் அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
( நன்றி: பிபிசி.காம்
06/02/2020 நேரம் இரவு 09:15 )
சர்வதேச சுகாதார அமைப்பு (WHO) சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவித்து இதனை
எதிர்கொள்ள மூன்று மாத செயல் திட்டத்திற்கு 675 மில்லியன் டாலர்கள் நிதியாக தேவை எனவும்
அறிவித்துள்ளது.
உலக நாடுகளை பயத்திலும் நெருக்கடியிலும்,
பரபரப்பிலும் ஆழ்த்தியிருக்கிற சீனா ஒரு புறத்தில் தேவையான மருத்துவ கட்டமைப்புக்காகவும்
இன்னொரு புறம் உலகெங்கிலும் இருந்து எழுப்பப்படுகிற கேள்விகளாலும், விமர்சனங்களாலும்
அல்லாடி வருகின்றது.
கொரோனா வைரஸ் எங்கிருந்து?
எப்படி பரவியது?....
காரணம் 1.
2019, டிசம்பர் மாதம்
தொடக்கத்திலேயே இந்த நகரத்தில் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப் பட்டனர். இதுகுறித்து எச்சரித்த உலக சுகாதார மையம், சீன
அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டது.
இதன் பிறகுதான் டிசம்பர் 31-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்குதலை சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், அடுத்தடுத்தநாள்களில் ஹுபி மாகாணத்தின் 15 நகரங்களுக்குப் பரவிவிட்டது
கொரோனா.
கொரோனா வைரஸ் பயோ ஆயுதமா?
இதற்கிடையே, `கொரோனா வைரஸ் பயோ ஆயுதமா?’ என்ற கேள்வி, உயிரியியல் விஞ்ஞானிகள் மத்தியில் தீவிரமாக
விவாதிக்கப்பட்டுவருகிறது. இதன் பின்னணியில் சில பகீர் சம்பவங்களையும் விஞ்ஞானிகள் அலசுகிறார்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய மருத்துவ நிபுணர்கள் சிலர், “2012, ஜூன் மாதம் சவுதி
அரேபியாவின் ஜெட்டா நகரத்தின் தனியார் மருத்துவமனை
ஒன்றில் 61
வயது முதியவர் திடீர் காய்ச்சலால் அனுமதிக்கப்படுகிறார். அவரது நுரையீரலில் இறுக்கம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்த நுரையீரல் மருத்துவர் முகமது ஜாகி, வித்தியாசமான புதிய வைரஸ் ஒன்று நுரையீரலில் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
இதுகுறித்து தன்
நண்பரான நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் உள்ள ‘இராஸ்மஸ் மெடிக்கல் சென்டரின்’ மருத்துவர் ரோன்
பவுச்சரைத் தொடர்புகொண்டு சொல்கிறார்.
இதற்கிடையே தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த முதியவர் இறந்துவிட்டார். பிறகு நெதர்லாந்து நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த வைரஸ் தொடர்பான ஆராய்ச்சி வேகமெடுக்கிறது.
2013, மே மாதம் அந்த
வைரஸின் மாதிரிகள் கனடாவின் வின்னிபெக் நகரத்தில் உள்ள தேசிய நுண்ணுரியியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இங்கிருந்துதான் அந்த வைரஸ் சீனாவுக்குக் கடத்தப்பட்டு, பயோ ஆயுதமாக `கொரோனா வைரஸ்’
என்ற பெயரில் உருமாறி, தற்போது உலகையே அச்சுறுத்துவதாக நுண்ணுயிரியியல் விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறார்கள்.
கனடாவின் தேசிய நுண்ணுயிரியியல் ஆய்வகம், மிகவும் ஆபத்தான வைரஸ்களை
ஆய்வுசெய்யும்
‘பயோ சேஃப்டி லெவல் 4’ வகையைச்
சேர்ந்தது. இந்தியாவிலும் போபால், ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் ‘லெவல் 4’
ஆய்வகங்கள் உள்ளன. சியாங்குவோ கியு என்கிற சீனப் பெண்மணியும் அவரின் கணவர் கெடிங் செங்கும் கனடா ஆய்வகத்தில் பணிபுரிந்தனர்.
இருவரும் கடந்த 15 ஆண்டுகளில் ஏராளமான சீன மாணவர்களை ஆராய்ச்சி
உதவிக்காக அந்த ஆய்வகத்துக்கு அழைத்துவந்துள்ளனர். 2019, மார்ச் மாதம் இந்த ஆய்வகத்திலிருந்து மர்ம பார்சல் ஒன்று சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள தேசிய உயிர் பாதுகாப்பு ஆய்வகத்துக்குச் சென்றிருப்பதை கனடாவின் உளவுத்துறை கண்டுபிடித்தது.
இதுகுறித்து அவர்கள் விசாரித்தபோதுதான், நெதர்லாந்தின்
ரோட்டர்டாம் நகரிலிருந்து கனடாவுக்கு ஆய்வுக்குக்
கொண்டுவரப்பட்ட வைரஸை ரகசியமாக சீனாவுக்கு அந்தத் தம்பதியர் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 2019, ஜூன் மாதம்
இந்தத் தம்பதியர் மற்றும் அவர்களுடன் பணிபுரிந்த சீன
மாணவர்கள் அனைவரும் கனடாவிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.
சீனாவின் வூஹான் நகரத்தின் தேசிய உயிர் பாதுகாப்பு ஆய்வகத்துக்குக் கொண்டுவரப்பட்ட அந்த வைரஸ்,
ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு `கொரோனா வைரஸ்’
என்னும் பெயரில் பயோ ஆயுதமாக
உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் நான்கு மாதங்களாக ஆராய்ச்சியில் இருந்த இந்த வைரஸ், ஆய்வகத்தில் பணிபுரியும் சிலர் மூலம் நவம்பர் மாத
இறுதியில் வெளியேறி நகரெங்கும் பரவ ஆரம்பித்துவிட்டதாகத்
தெரியவருகிறது.
2019, டிசம்பர் 1-ம் தேதியே
இந்த வைரஸ் தாக்குதலால் 60 வயது முதியவர் ஒருவர் வூஹான் அரசு மருத்துவமனையில்
இறந்துபோனார். வூஹான் ‘லெவல் 4’
ஆய்வகத்தை உளவுப் பார்க்கும் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ, இந்தச் சம்பவம்குறித்து உடனடியாக உலக சுகாதார மையத்தை எச்சரித்தது.
அதன் பிறகே, 2019, டிசம்பர்
31-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்குதல் பரவுவதை சீன அரசு
ஒப்புக்கொண்டது”
என்றார்.கள்.
``அடுத்த 20 நாள்களுக்குள் இந்த வைரஸின் தாக்கத்தைக் கட்டுப் படுத்தவில்லையெனில், உலக மக்கள்தொகையில் பத்து
சதவிகிதத்தை ஒரு
வருடத்துக்குள் கொரோனா காவு வாங்கிவிடும்’’ என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சியூட்டுகிறார்கள்.
“கொரோனா வைரஸ் தாக்குதலின் பின்னணியில் பயோ ஆயுதம் விவகாரம் இருக்க வாய்ப்பு இருக்கிறதா?’’
என்று, ஜனநாயக தமிழ்நாடு அரசு
மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணனிடம்
பேசினோம்.
‘‘சர்வதேச அளவில் பீதியைக் கிளப்பிவருகிறார்கள். நாம் பெரிதாக அச்சப்படத் தேவை யில்லை. இந்த வைரஸ், முதலில் சவுதி அரேபியாவில்தான் பரவத் தொடங்கியது. பிறகு ஆப்பிரிக்கா விலும் தற்போது சீனாவிலும் பரவிவருகிறது. இது குளிர்காலத்தில் பரவும் சாதாரண வைரஸ்தான். ‘பயோ ஆயுதம்’
என்று சொல்ல முடியாது. சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலே பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இந்திய மருத்துவத் துறையில்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக
மேற்கொள்ளப்படுகின்றன”
என்றார். ( நன்றி: ஜுனியர்விகடன் 01/02/2020 )
இதை உலகின் அநேக உயிரியல்
விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் மறுத்தாலும் இப்படியான சந்தேகப்பார்வையும் சீனாவின் மீது
எழுகிறது.
காரணம் 2.
2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ்
சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம்
காணமுடியவில்லை.
2019-nCoV வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை
தாக்கக்கூடும் என்கிற மருத்துவ நிபுணர்கள் சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள் என்றும் கூறுகின்றனர்.
மேலும், இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு,
நிமோனியா
மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது என்கின்றனர் மருத்துவ
நிபுணர்கள்.
கொரோனா வைரஸ்
என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே
மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த
எண்ணிக்கை ஏழாகிறது.
இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை. ஐந்து லட்சம் சீன
மருத்துவர்கள் சிகிச்சை மற்றும் வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியில் இறங்கி
உள்ளனர்.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பரவிய சார்ஸ் வைரஸ்
பாதிப்புக்குப் பிறகு இப்போதுதான் சீனா மிகப் பெரிய வைரஸ் பாதிப்பை
சந்தித்துள்ளது.
இந்த கொரோனா வைரஸானது விலங்குகளிலிருந்துதான் மனிதர்களுக்குப் பரவுகிறது.
இதுவரை வுஹான் மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சார்ஸ் வைரஸை பொறுத்தவரை வவ்வாலிலிருந்து அது மனிதர்களுக்குப் பரவியது. அதே
போலத்தான் இப்போதும் வவ்வாலிலிருந்து இந்த கொரானா வைரஸ் பாம்புகளுக்குப் பரவி
பாம்புகளை உணவாக உட்கொள்கிற சீன (மனித) ர்களுக்குப் பரவி தொடர்ந்து எல்லோருக்கும்
பரவியிருப்பதாக கூறுகின்றனர்.
சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை உள்ளது.
இரண்டுமே கொரோனா வைரஸ் என்ற குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் வகையாகும். இரண்டுமே
விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவிய வைரஸுமாகும்.
இறந்து போன நாய்கள், கோழி, பன்றி, பாம்பு உள்ளிட்டவற்றின் உடலிலிருந்து இவை பரவுகின்றன. இங்கிருந்து மனிதர்களிடம் தாவுவது இந்த வைரஸ்களுக்கு மிகவும் சுலபமானதும் கூட.
இப்படியாக இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றது. எது சரி? எது
தவறு? என்ற ஆய்வுக்கு நாம் வரவில்லை. மாறாக, இந்த வைரஸ் பரவியதற்கான காரணங்களாக
சொல்லப்படக் கூடிய இரண்டு காரணங்களையுமே இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:423
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:423
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
என்று திருக்குறள் கூறுகிறது. ஆகவே, கொரோனா வைரஸ் பரவல் குறித்த விஷயத்தை
மிகச் சாதாரணமாக கடந்து போய் விட இயலாது. அதன் உண்மையான பிண்ணனியை அறிந்து கொள்ள வேண்டியது
நம் அனைவரின் கடமையாகும்.
இஸ்லாம் மனித வாழ்க்கையின் அத்துனை துறைகளுக்கும்
அழகிய வழிகாட்டுதலை வழங்கியிருப்பது போன்று இந்த விவகாரத்திலும் அழகிய தெளிவை, வழிகாட்டுதலை
வழங்கியிருக்கின்றது.
பொதுவாக உலகில் இயற்கையான அமைப்புகளில் ஏற்படுகிற
மாற்றங்களின் பிண்ணனி குறித்தான காரணங்களை இஸ்லாம் கூறுகிற போது ஒற்றை வார்த்தையில்
கூறி விடுகின்றது.
ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي
النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ
“மனிதர்கள் தங்கள் கரங்களால் எதைச் சம்பாதிக்கின்றார்களோ,
அதன் காரணமாகவே நிலத்திலும், நீரிலும் குழப்பங்கள்
தோன்றுகின்றன” (அல்குர்ஆன்:30:41)
அதே போன்று மனித வாழ்க்கையின் அமைப்புகளில் ஏற்படுகிற
மாற்றங்களின் பிண்ணனி குறித்தான காரணங்களை இஸ்லாம் கூற முற்படுகிற போது அதே ஒற்றை வார்த்தையை
இங்கேயும் கூறுகின்றது.
وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ
“உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எந்தவொரு துன்பமானாலும்
அது உங்கள் கைகள் சம்பாதித்தவை தான்”. ( அல்குர்ஆன்: 42: 30 )
கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் பயோ (உயிரியல்
ஆய்வு) ஆயுதம் பிண்ணனியாக இருக்குமேயானால் அது முற்றிலும் தவறானதாகும்.
“மேலும், உங்களுடைய கரங்களால் உங்களுக்கு அழிவைத்
தேடிக் கொள்ளாதீர்கள்”. ( அல்குர்ஆன்:
2: 195 )
ஆய்வு எனும் பெயரால் ஆக்கப்பூர்வமான விஷயங்களை முன்னெடுக்காமல்
இது போன்ற அழிவு விஷயங்களை முன்னெடுத்தால் அது முதலில் அவர்களையே தாக்கும், அழிக்கும்
என்பது தான் நிதர்சனமான உண்மையாகும் என இந்த இறை வசனம் எச்சரிக்கின்றது.
இரண்டாவது காரணம் தான் கொரோனா வைரஸ் பரவலுக்கு அடிப்படை
என்றால்அதுவும் பிழையானதே ஆகும் என இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது.
உலகிலேயே சீன மக்கள் தான் கட்டுப்பாடற்ற அருவருப்பான உணவு வகைகளை எந்த வித அருவருப்பும் இன்றி உண்ணும் மக்களாக இருந்து வருகிறார்கள். அதன் காரணமாகவே சார்ஸ், கொரோனா என தொடர்ச்சியாக பல கொடிய வைரஸ்கள் அவர்களை தாக்குகின்றன.
சீனர்கள் தங்களது கட்டுப்பாடற்ற
உணவுக் கலாச்சாரம் குறித்து மிக அதிகமாகவே சிந்திக்க
வேண்டிய கட்டாயத்தை இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையும் அல்ல.
அத்தோடு உலக மக்களும் அருவருப்பான உணவை நாடுகிற விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்க
வேண்டும்.
ஏனெனில், உணவு குறித்தான இஸ்லாத்தின் அறை கூவல்
சிறந்ததும், மகத்துவம் வாய்ந்ததும் ஆகும்.
அல்லாஹ் மூன்று அம்சங்களில் எவ்வித சமரசமும் இல்லாமல்
ஆணை பிறப்பிக்கின்றான்.
அது விஷயத்தில் சம்பந்தப்பட்டவர் ரஸூலாக, நபியாக
இருந்தாலும் சரியே. நபியைக் கொண்டு, ரஸூலைக் கொண்டு ஈமான் கொண்டவராக இருந்தாலும் சரியே.
இல்லை அல்லாஹ்வைக் கொண்டும் ரஸூல் மற்றும் நபியைக் கொண்டும் ஈமான் கொள்ளாமல் வாழ்கிறவர்களாக
இருந்தாலும் சரியே.
இறையச்சம், இறைவழிபாடு, உணவு உண்ணும் முறை என்கிற
மூன்று அம்சங்களே அவை.
1.
இறையச்ச விஷயத்தில் சமரசமில்லாத
கட்டளைகள்….
يَاأَيُّهَا النَّبِيُّ اتَّقِ اللَّهَ
“நபியே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!”. ( அல்குர்ஆன்:
33: 1 )
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ
“இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!”.
(அல்குர்ஆன்: 3: 102 )
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ
نَفْسٍ وَاحِدَةٍ
“ஓ! மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த
உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்!”. ( அல்குர்ஆன்: 4: 1 )
2.
வழிபாடு விஷயத்தில் சமரசமில்லாத
கட்டளைகள்….
قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ
“ நபியே! அவர்களிடம் கூறிவிடுவீராக! கீழ்ப்படிதலை
அல்லாஹ்வுக்கே உரித்தாக்கி அவனை வணங்கும் படி திண்ணமாக, எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது”.
(அல்குர்ஆன்: 39: 11 )
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا
رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ருகூவும், சுஜூதும்
செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்கி வழிபடுங்கள்! மேலும், நற்பணியாற்றுங்கள்! இதன் மூலமே
நீங்கள் வெற்றியடைவீர்கள்”. ( அல்குர்ஆன்: 22: 77 )
يَاأَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ
وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ
“ஓ! மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும்
படைத்த உங்கள் இறைவனை வணங்கி வழிபடுங்கள்!”. ( அல்குர்ஆன்: 2: 21 )
3.
உணவு விஷயத்தில் சமரசமில்லாத
கட்டளைகள்…
يَاأَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا
“தூதர்களே! தூய்மையானவற்றையே உண்ணுங்கள்! நன்மையான
காரியங்களையே மேற்கொள்ளுங்கள்!”. ( அல்குர்ஆன்: 23: 51 )
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا
رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ
“இறைநம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு அளித்திருக்கும்
தூய்மையானவற்றையே உண்ணுங்கள்! மேலும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்”. (
அல்குர்ஆன்: 2: 172 )
يَاأَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا
“ஓ! மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் தூய்மையான, அனுமதிக்கப்பட்ட
பொருள்களையே உண்ணுங்கள்!” ( அல்குர்ஆன்: 2:
168 )
எனவே, கொரோனா வைரஸின் பரவலுக்குப்
பின்னால் உள்ள காரணிகளை எந்த கோணத்தில் கூறினாலும் அதன் பிண்ணனியில் இருப்பது மனிதத்
தவறுகளும், இறைவன் தடுத்தவற்றைத் துச்சமாகக் கடந்து போகும் துணிவும் தான் என்கிற மெய்ப்பொருளை
சீனர்களும், உலக மக்களும் முஸ்லிம் உம்மாவும் அறிந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற தாக்கங்களில் இருந்து
நாம் மொத்த மனித சமூகமும் விடுபட வேண்டுமானால் ஒன்றே ஒன்றை செயல் படுத்தினால் போதும்.
ஆம்! மாற்றம் என்கிற செயல்
முறையை…
ذَلِكَ بِأَنَّ اللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِعْمَةً أَنْعَمَهَا
عَلَى قَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ
“எந்தச் சமூகமும் தங்களின்
நடைமுறைகளை மாற்றிக் கொள்ளாத வரை, நிச்சயமாக! அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த எந்த
ஓர் அருட்கொடையையும் மாற்றுவதில்லை”. ( அல்குர்ஆன்:
8: 53 )
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا
بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا
لَهُمْ مِنْ دُونِهِ مِنْ وَالٍ (11)
“எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை
மாற்றிக் கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும்
அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. மேலும், அல்லாஹ் ஒரு சமூகத்திற்கு தீமையை நாடிவிட்டால்
அதனை யாராலும் தடுத்து நிறுத்திட இயலாது. அல்லாஹ்வுக்கு எதிராக அத்தகைய சமூகத்தாருக்கு
உதவி செய்வோரும் எவரும் இல்லை”. ( அல்குர்ஆன்: 13: 11 )
ஆகவே, இறைக்கட்டளைகளை துணிவுடன்
மீறுகிற நிலையில் இருந்து நாம் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் அல்லாஹ்வின்
கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக நேரிடும். அல்லாஹ் நம் அனைவர்களையும் கொடிய நோய்களில்
இருந்தும், அவன் கோபம், சாபம் மற்றும் அவனுடைய தணடனைகளில் இருந்தும் நம்மை பாதுகாப்பானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
Alhamdulillah
ReplyDeleteاللهم لك الحمد ولك الشكر
ReplyDeleteகாலச் சூழ்நிலையில் கடும் ஆபத்தை உணர்த்தும் நோய்களின் தலை கொரொனா வைரஸ் பற்றிய இரண்டாம் கட்டுரையை இரு காரணங்களை முன்வைத்து இறை வசனத்தை இடத்திற்கு தோதுவாக இரவு கண் விழித்து எழுத்தின் மூலம் சமூகத்திற்கு எழுச்சி தந்த ஆசிரியர் அவர்களின் சேவையை அல்லாஹ் அங்கீகரிப்பானாக அமீன்
அறிவுப்பூர்வமான தகவல்
ReplyDeleteஅனைவருக்கும் தெரிய வேண்டிய தகவல்
இஸ்லாமிய உணவு முறை யை உலகம் முழுவதும் பின்பற்ற வேண்டிய தகவல்
அன்பு நன்றி உஸ்மானியாரே
جزاكم الله خيرا كثيرا في الدارين
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமையான தகவல்
ReplyDelete