அடங்கமறுப்போம்! ஆர்ப்பரித்து எழுவோம்!!
இறுதி வரை
களத்தில் நின்று
போராடுவோம்!!!
குடியுரிமை திருத்த
சட்டத்திற்கு எதிராக நடைபெற்று
வரும் போராட்டங்கள் எப்போது
முடிவுக்கு வரும்? போராட்டக்
களத்தில் பங்கெடுத்திருக்கிற சாமானியன்
வரையிலும் இன்றைய தலையாய
கேள்வியாக மாறியிருக்கின்றது.
கண்டன ஆர்ப்பாட்டம்,
கண்டன போராட்டம், கண்டனப்
பேரணி, கண்டன பொதுக்கூட்டம்,
சிஏஏ விழிப்புணர்வு மாநாடு,
சமூக ஒற்றுமை மாநாடு,
வாழ்வுரிமை மாநாடு என
விரிவான பல போராட்டங்கள்.
இரண்டு கோடி கையெழுத்து
இயக்கம்.
தமிழகத்தில் சமீபத்தில்
முன்னெடுத்து இருக்கிற தொடர்
இருப்பு போராட்டகளமான ஷஹீன்
பாக்குகள், நாட்டையே திரும்பிப்
பார்க்க வைத்திருக்கிற சென்னையில்
சட்டமன்ற முற்றுகை போராட்டம்,
மாநிலத்தின் (சென்னை அல்லாத)
அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
போராட்டங்கள்.
போராடத் தொடங்கி
70 நாட்களைக் கடந்தாகிவிட்டது. சுட்டெரிக்கும் வெயில், பனிபொழியும்
குளிர், கால்கடுக்க நிற்பது
நடப்பது, தொண்டை வரண்டு
போகும் அளவுக்கு குரலெழுப்புவது,
பொருளாதாரச் செலவினங்கள், நேர
விரயம், நலல, சுப
காரியங்கள் ஒத்திவைப்பு, என்று
பல அர்ப்பணிப்புகள் ஆனாலும்,
மத்திய அரசு தன்
முடிவில் பிடிவாதமாக இருக்கின்றது.
சிலுவைப் போர்
வீரர்களுக்கு எதிரான போராட்டம்,
பாலஸ்தீன பூமியை மீட்டெடுக்கும் போராட்டம் பல
நூறு ஆண்டுகளுக்குப் பின்னர்
தான் மாவீரர் சுல்தான்
ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்களால்
முடித்து வைக்கப்பபட்டது.
இந்திய சுதந்திரப்
போராட்டம் 200 ஆண்டுகளைக் கடந்து
தான் முடிவுக்கு வந்தது.
செச்சன்ய முஸ்லிம்களின்
போராட்டம் சுதந்திரக் கனவை
சுமந்து, 70 ஆண்டுகளைக் கடந்து
இன்றும் தொடர்கிறது.
உலகில் இன்றளவும்
நீதிக்காகவும், அமைதிக்காகவும் போராட்டங்கள்
தொடர்ந்து நடைபெற்று கொண்டு
தான் இருக்கின்றன.
அநியாயக்கார ஆட்சியாளர்களும்,
கருப்புச் சட்டங்களும், கொடுமைகளும்
அகற்றப்படுகின்ற வரை
இந்த பூமியில் போராட்டங்கள்
இருந்து கொண்டு தான்
இருக்கும்.
நாம்
எடுத்திருக்கின்ற இந்த போராட்டமானது குடியுரிமை திருத்த
சட்டம் திரும்பப் பெறப்படுகிற
வரை தொடரும், அது
எத்தனை ஆண்டுகள் எடுத்துக்
கொள்ளும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க
முடியும்.
அதை தீர்மானிக்க
வேண்டியது மத்திய அரசு.
அதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம்
இயற்றி அழுத்தம் தர
வேண்டியது மாநில அரசுகளின்
கடமை.
போராட்டங்களால் மாற்றம் நிகழுமா?
இந்திய அரசியல்
சாசனம் வழங்கியிருக்கின்ற அடிப்படை
உரிமைகளில் மகத்தான ஒன்று
தான். அரசியல் அமைப்பிற்கு
உட்பட்டு தீர்வு காணும்
உரிமை.
இந்த உரிமையின்
அடிப்படையில் தான் சிஏஏ,
என்பிஆர், என்ஆர்சி, க்கு
எதிரான போராட்டங்களை இந்திய
மக்கள் முன்னெடுத்துள்ளனர். அந்த
அடிப்படையில் தான் ஜனநாயக
வழியில், அறநெறியின் படி
நாம் தொடர்ந்து போராடி
வருகின்றோம்.
நாட்டில் ஏற்பட்ட
பல்வேறு சூழ்நிலைகளில் போராட்டங்களின் மூலம் தங்களது
எதிர்ப்பை பலமாக வெளிப்படுத்திய காரணத்தால் அரசியல்
கட்டமைப்புகளை மாற்ற முடிந்திருக்கின்றது.
அரசாங்கங்களைத் தேர்வு செய்வதிலும்,
சமூகக்கட்டமைப்பை மாற்றியமைப்பதிலும் மக்கள் முன்னெடுத்த
பல்வேறு போராட்டங்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன.
இரும்புப்பெண்மணி என்று
அழைக்கப்பட்ட இந்திராகாந்தி அவர்கள்
பிரதமராக இருந்தபோது கொண்டு
வந்த (Indian Emergency 25 June 1975 – 21 Marach 1977) நெருக்கடி
நிலை – அவசரகால பிரகடனம்
இந்திய மக்கள் முன்னெடுத்த
மாபெரும் போராட்டங்களால் இந்திராகாந்தி
அவர்களால் திரும்பப் பெறப்பட்டது.
சாதீய வேறுபாடு,
தீண்டாமை ஆகியவற்றிற்கு எதிரான
போராட்டங்களே நாட்டில் இடஒதுக்கீடு
பெற்றுத்தருவதற்கு அடிப்படையாய்
அமைந்தது.
என்னவொன்று, போராட்டத்தின்
இறுதி வடிவம் வெற்றியாய்
அமைய வேண்டுமானால் நீண்ட
நெடிய நாட்களும், பெரிய
அளவிலான தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் நாம் செய்ய
வேண்டியது இருக்கும்.
போராட்டங்கள் ஏன்?
இன்று நாட்டில்
நடைபெறும் போராட்டங்களில் முஸ்லிம்
சமூகம் மகத்தான பங்களிப்பைச்
செய்வதை பாஜகவை எதிர்ப்பதற்காகவும்,
இந்தியாவில் தங்களின் இருப்பைப்
பாதுகாப்பதற்காகவும் தான்
என ஃபாசிஸ சங்கப்பரிவார
கூட்டங்களால் கொச்சையான பிரச்சாரம்
மேற்கொள்ளப்படுகின்றது.
இந்தப் போராட்டங்களை
இந்தியாவின் அனைத்து சமூக
மக்களோடு இணைந்து முஸ்லிம்
சமூகம் முன்னெடுக்க பிரதானமான
மூன்று காரணங்களை அடையாளப்படுத்தலாம்.
ஒன்று, கடந்த
கால காயங்களுக்கு மருந்தாக
(தீவிரவாதிகள், இந்தியச் சமூகத்திற்கு
எதிரானவர்கள் எனும் பழிச்சுமையை
இறக்கி வைக்க), எதிர்காலக்
கனவுகள் சிதைந்து போகாமல்
இருக்க (அரசியல், கல்வி,
அதிகாரம் போன்றவற்றில் முழுமை
பெற),
நிகழ்காலத் தேவைகள் சூன்யமாகி
விடாமல் இருக்க (வாக்குரிமை,
குடியுரிமை, வாழ்வுரிமை ஆகியவற்றை
இழந்து விடாமல் இருக்க)
வேண்டும் என்பதற்காக.
இரண்டாவது, இந்திய
தேசம் சுதந்திரம் அடைந்த
பின்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்து இந்தியா
என்றோ, இஸ்லாமிய இந்தியா
என்றோ குறுகிய வட்டத்தில்
சிந்திக்காமல் குடியரசு இந்தியா
என விசாலமாக சிந்தித்தனர்.
ஏனெனில், இந்திய
சுதந்திர வேட்கையில் போராட்டக்
களங்களில் பங்கெடுத்தவர்கள் (சாவர்க்கரின்
வாரிசுகளைத் தவிர) இந்திய
தேசத்தின் அனைத்து மக்களும்
தான் என்பதை அவர்கள்
உணர்ந்திருந்தனர்.
எனவே தான்
ஜனநாயகம், மதச்சார்பின்மை எனும்
கொள்கையை கொண்டிருக்கிற் குடியரசு
இந்தியாவை அவர்கள் உருவாக்கினர்.
ஆனால், அவர்கள்
உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி
எனும் கருப்புச் சட்டங்களை
இயற்றி மாபெரும் ஆபத்தை
இன்றைய மத்திய அரசு
உருவாக்கி இருக்கின்றது.
அன்று குடியரசு
இந்தியாவை உருவாக்க போராடிய
இந்திய இஸ்லாமிய சமூகம்
இன்று குடியரசு இந்தியாவைக்
காப்பாற்ற இந்தப் போராட்டங்களை
வீரியத்தோடு முன்னெடுத்துள்ளது.
மூன்றாவது, இந்த
இந்திய தேசம் முழுமையான
சுதந்திரத்தோடு சுதந்திர இந்தியாவாக
இருக்க வேண்டும் என்று
விரும்பிய, விருப்பத்தை வெளிப்படுத்திய,
விருப்பத்தை அடைய இந்திய
போராட்டங்களில் பங்கெடுத்து அனைத்து
வடிவிலான தியாகங்களையும் செய்து
சுதந்திர இந்தியா உருவாகுவதற்கு
பங்காற்றிய எங்கள் கண்
முன்னே இந்த தேசம்
மதத்தின் பெயரால் பிளவு
பட்டு சிதைந்து விடக்கூடாது
என்பதற்காக.
இரண்டும் நடைபெற்றே தீரும்…
இன்ச் அளவு
கூட நகர மாட்டோம்
என்கிறார் நாட்டின் பிரதமர்
மோடி, திரும்பப் பெரும்
எண்ணமே இல்லை என்கிறார்
உள்துறை அமைச்சர் அமித்ஷா
இவர்களின் கணக்கு தப்புக்
கணக்கு என்பதை மிக
விரைவில் அவர்கள் புரிந்து
கொள்வார்கள்.
பெரும்பான்மை பாராளுமன்ற
பிரதிநிதிகளின் பலம், ஆட்சி,
அதிகாரத்தின் வலிமை இவைகள்
தான் இவர்களை இப்படி
நாட்டு மக்களின் நலனுக்கு
எதிராக பேச வைக்கின்றது.
அவர்களுக்கு சொல்லிக்
கொள்வோம்! நீங்கள் நகர
வேண்டாம், திரும்பப் பெறவும்
வேண்டாம். ஆனால், நகர்த்தப்படுவீர்கள்!
அந்தச் சட்டம் உங்களையே
இல்லாமல் ஆக்கும் இது
நடந்தே தீரும்.
போராட்டத்தின் வெற்றி
யாருக்கு?...
سَيُهْزَمُ
الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ
“பலப்பிரயோகம் செய்யும்
பலம் கொண்ட குழுவினர்
அதிவிரைவில் தோல்வி அடைவதையும்,
அனைவரும் புறமுதுகிட்டு ஓடுவதையும்
காணலாம்”. (அல்குர்ஆன்: 54: 45 )
كَمْ
مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ
“எத்தனையோ சின்னஞ்சிறு
கூட்டம், அல்லாஹ்வின் அனுமதி
கொண்டு பெரும் பெரும்
கூட்டங்களை வெற்றி கொண்டிருக்கின்றது”. ( அல்குர்ஆன்: 2: 249 )
فَأَمَّا
الزَّبَدُ فَيَذْهَبُ جُفَاءً وَأَمَّا مَا يَنْفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِي
الْأَرْضِ
பலன் தராத
நுரை ஒன்றுமில்லாமல் போய்
விடும்; எது மக்களுக்குப்
பயன் தருகின்றதோ அது
பூமியில் நிலைத்து நிற்கும்”. ( அல்குர்ஆன்:
13: 17 )
அகதிகள் முகாமில் அடைபடப் போவது யார்?...
ஆப்கானியப் படை
வீரர் அலிவர்த்திகான் 1726 ஆம் ஆண்டு துருக்கியில்
இருந்து
இந்தியா வந்து வங்காளத்தின் படையில் சேர்ந்தார். காலம் அவரை
வங்காளத்தின்
நவாப் ஆக்கியது. அலிவர்த்திகானின் மறைவுக்குப் பிறகு அவரது பேரர் ஆன சிராஜ் - உத் -தெளலா 1740-ல் தனது 24 ஆம் வயதில் இள ரத்தத்தின் துடிப்போடு வங்காளத்தின் நவாப் நாற்காலியின் அதிபதி ஆனார். இவர் நவாப் ஆனதும், எதிர்ப்பே இல்லாமல் எங்கும் சுருட்டிக் கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஏகாதிபத்திய ஆவலுக்கு பல வகைகளில் இடிகளை
இனாமாக இறக்க
ஆரம்பித்தார். ஆங்கில ஏகாதிபத்தியம்
கலக்கம் அடைந்தது.
சிராஜ் - உத் –தெளலா வங்காளத்தின் நவாப் ஆகப் பொறுப்பேற்றுக் கொண்டதை பிரிட்டிஷார் விரும்பவில்லை. ஆகவே அவரது அரசவையில் இருந்த சிலரை இரகசியமாக சந்தித்து ,
ஆசைகாட்டி சிராஜ் - உத் –தெளலாவை பதவியில் இருந்து கவிழ்த்துவிட திட்டம்
தீட்டினார்கள். இந்த விபரம் சிராஜ் - உத் –தெளலாவுக்குத்
தெரியவந்தது. அவரது கோபத்தைக் கிளப்பியது. அத்துடன் பிரிட்டிஷாரின் மூன்று முக்கியமான செயல்கள் சிராஜ் - உத் –தெளலா உடைய
ஆத்திரத்தை அதிகமாக்கியது.
முதலாவதாக, வில்லியம் கோட்டையில் அவர்கள் செய்த
மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவர்கள் போர்க் கைதிகளை
அடைக்கும் விதமாக செய்தார்கள். இந்தச்செயல் சிராஜ் - உத் –தெளலாவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் நவாப் ஆன தன்னிடம் - இப்படி தனது ஆளுமைக்கு உட்பட்ட பிரதேசத்தில் கட்டிட மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக அரசின் அனுமதியை பிரிட்டிஷார் கேட்காதது ஏன் என்று சிராஜ் - உத் –தெளலா கேள்வி எழுப்பினார். தட்டிக் கேட்க ஆள்
இல்லாமல்
வளர்ந்த பிரிட்டிஷாருக்கு இது அதிசயமாக இருந்தது. இந்த இந்திய மண்ணிலும் தங்களை எதிர்க்க ஒருவனா என்று சிந்திக்க ஆரம்பித்தனர். முளையிலேயே கிள்ளி எறியும் திட்டம் முளைவிட்டது.
இரண்டாவதாக பிரிட்டிஷாருக்கு அனுமதிக்கப் பட்ட வர்த்தக சலுகைகளை அவர்கள் மீறி செயல்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டை அவர்கள் மீது சுமத்தினார் நவாப் சிராஜ் - உத் –தெளலா. பிரிட்டிஷாரின் அத்துமீறலான செயல்களால் அரசுக்கு சுங்கம் மூலம் வரவேண்டிய வரிகள் பிரிட்டிஷாரால் ஏமாற்றப் பட்டன என்கிற குற்றமும் பிரிட்டிஷார் மீது சுமத்தப் பட்டது.
மூன்றாவதாக, சிராஜ் - உத் –தெளலா உடைய அரசுக்கு துரோகம் இழைத்து அரசுப் பணத்தைக் களவாடி கையாடல் செய்த கிருஷ்ணதாஸ் மற்றும் ராஜிவ்பல்லவ் ஆகிய சிலருக்கு தங்க இடமும் பொருளும் கொடுத்து அவர்களை நவாப்புக்கு எதிராக தூண்டிவிட்டு தங்களின் பாதுகாப்பில் வைத்துக் கொண்ட செயல் நவாபின் ஆத்திரத்தை அதிகமாக்கியது.
இத்தகைய
காரணங்களால் நவாப் சிராஜ் - உத் –தெளலாவுக்கும் பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் உறவு சீர்கெட
ஆரம்பித்தது. இந்நிலையில் தங்களின் ஆரம்ப கால
அனுமதியை வைத்து ஆங்கிலக் கடற்படையை கல்கத்தாவில் குவிக்க ஆரம்பித்தனர் . படைக் குவிப்பை நிறுத்தும்படி நவாப் சிராஜ் - உத்
–தெளலா விடமிருந்து அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்
பட்டது. அந்த
எச்சரிக்கைக்கும் கிழக்கு இந்தியக்
கம்பெனியினர் கேளாக்காதினர் ஆயினர். நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்கிற ஆணவம் மிக்க மனோநிலை நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் கோபத்தைத் தூண்டியது . உடனே ஆங்கிலேயர் கட்டிய நாம் மேலே குறிப்பிட்ட வில்லியம் கோட்டையை தனது படைகளைவிட்டு ஆக்ரமிக்க உத்தரவிட்டார். ஆங்கிலேயர் கதிகலங்கினர். இந்த முற்றுகையில் இருந்து தான் மட்டும் ஹூக்ளி நதியில் நின்ற ஒரு கப்பலில் ஏறி தப்பித்து சென்றான் அட்மிரல் வாட்சன் என்கிற தளபதி.
அதற்குப் பின்தான்
வரலாற்றில் Calcutta’s
Black Hole என்று குறிப்பிடப்படும் “கல்கத்தா இருட்டறைத் துயர் நிகழ்ச்சி “ என்பது நடந்தது. எந்த ஆங்கிலேயர்கள் தங்களை எதிர்க்கும் இந்தியர்களை அடைத்துவைத்து சித்தரவதை செய்ய சின்னஞ்சிறு அறை வைத்து சிறைச்சாலை காட்டினார்களோ அந்த சிறைச்சாலை அறைக்குள் நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் உத்தரவின் பேரில் வில்லியம் கோட்டைக்குப்
பொறுப்பாளராக இருந்த ஹால்வேல் உட்பட 146 ஆங்கிலேயர்களும்
கைது செய்யப்பட்டு கடும் கோடை இரவில் 18 அடி நீளமும் 16 அடி 10அங்குல அகலமும் இருந்த சிறிய அறையில்
அடைக்கப்பட்டு வினை
விதைத்தவர்கள் வினை அறுத்தார்கள். கெடுவான்
கேடு நினைப்பான் என்கிற இலக்கணத்துக்கு இலக்கியமாக அடைபட்ட 146 ல் 22
பேர்களைத் தவிர அனைவரும் மூச்சுத்திணறி இறந்து கிடந்தனர்.
ஆங்கிலேயர்கள் காவு வாங்கப்பட்ட கணக்கைத் தொடங்கி வைத்தவர் நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆவார். ( நன்றி:
அதிரை நிருபர்.ப்ளாக்ஸ்பாட்.காம்
)
இந்தியர்களை கைது
செய்து அடைத்து வைக்க
கட்டப்பட்ட சிறையிலே பிரிட்டீஷ்
காரர்களை அடைத்து வைத்தார்
வங்காள சிங்கம் சிராஜ்
உத் தௌலா (ரஹ்)
அவர்கள்.
எனவே, எந்தச்
சட்டத்தைக் கொண்டு வந்து
நீங்கள் எங்கள் குடியுரிமையைப் பறித்து, எங்களை
அகதிகள் முகாமிலே கொண்டு
சென்று அடைக்க வேண்டும்
என ஆசைப்படுகின்றீர்களோ அதே
அகதிகள் முகாமில் நீங்கள்
அடைக்கப்படுவீர்கள்.
இந்த இரண்டும்
நிச்சயம் நடந்தே தீரும்.
ஒன்று இந்தப் போராட்டத்தில்
இன்ஷா அல்லாஹ் வெற்றி
பெறுவோம்! இன்னொன்று இந்த
சட்டத்தைக் கொண்டே உங்களை
தண்டிப்போம்!!
குறிவைக்கப்படும் போராட்ட
களங்கள்…
கடந்த டிசம்பர்
மாதம், டெல்லி
ஜாமியா பல்கலைக்கழகத்தில் டெல்லி காவல்துறை மேற்கொண்ட
தாக்குதலைக்
கண்டித்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்
பெறக் கோரியும் மிகச் சாதாரணமாகத் துவங்கிய ஷஹீன் பாக் பெண்களின் போராட்டம்
தற்போது நாட்டின் மிக முக்கியமான போராட்டக் களமாக மாறி, சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது ஷஹீன் பாக்கின் போராட்ட முழக்கம்.
சர்வதேச ஊடகங்கள்
ஷஹீன் பாக் போராட்டத்தை `மீண்டும் ஒரு சத்தியாகிரகம்' என்று மகாத்மா காந்தியின்
அமைதிப் போராட்டத்தோடு இதை ஒப்பிடுகின்றன.
டெல்லியின்
குளிர்காலத்தின் கடுமையைத் தாண்டி, இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது ஷஹீன் பாக் போராட்ட களம்.
டெல்லியை நொய்டா, ஃபரிதாபாத் முதலான நகரங்களுடன் இணைக்கும் பிரதான சாலையில்,
ஷஹீன் பாக் என்ற இடத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்று
வருகிறது.
ஜாமியா பல்கலைக்கழகத்துக்கு மிக அருகில் இருக்கும் இந்த
இடத்துக்கு
லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 24 மணி நேரமும் போராட்டங்கள் தொடர்கின்றன.
`ஷஹீன்' என்னும் உருது சொல்லுக்கு `ராஜாளி' என்று பொருள். `இந்தியா ஒரு
தோட்டம் என்றால், நாங்கள் அதைக் காக்கும்
ராஜாளிகள்'
என்று எழுதப்பட்ட பதாகையொன்று தொங்கவிடப்பட்டுள்ளது போராட்ட களத்தின் முகப்பு பகுதியில்.
போராட்ட களத்தில் தேசிய
கீதம் இசைக்கப்படுகிறது;
பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் முதலான வலதுசாரிகளுக்கு எதிரான முழக்கங்கள், பேச்சுகள் தொடர்கின்றன; பாடல்கள்
பாடப்படுகின்றன; விடுதலைக்கான கவிதைகள்
வாசிக்கப்படுகின்றன;
ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
புர்கா அணிந்த
முஸ்லிம் பெண்கள் இந்தப் போராட்டத்தை முன்னின்று
நடத்துகின்றனர். இவற்றையெல்லாம் கடந்து, அனைத்து மதத்தவரும்
இணைந்து பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துகின்றனர். ஒரு
போராட்டக்களம் அத்தனை ஜனநாயகத்துடன், கடுங்குளிரிலும் இயல்பாக
இயங்கிவருகிறது.
ஷஹீன் பாக்
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் 4 மாதக் குழந்தை, கடுங்குளிர் காரணமாக உயிரிழந்தது. முகமது ஆரிஃப், நாஸியா தம்பதி தினமும் ஷஹீன் பாக்குக்குப்
போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கின்றனர். கடந்த இரண்டு நாள்களுக்கு முன், 4 மாதங்களே ஆன முஹம்மது
ஜஹான் உயிர்த்தியாகம் செய்துள்ளான்.
குழந்தையின் தாய் நாஸியா,
"என் மகன் குளிரால் இறந்துள்ளான்; வேறு எந்த நோயும் இல்லை. நாங்கள் இப்போதும்
நாட்டுக்காகப் போராட்டத்தைத் தொடரவுள்ளோம். எங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. நாங்கள் என்ன செய்வது? பிரதமர் மோடியும் அமித் ஷாவும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
'ஐ லவ் இந்தியா'
என்ற தொப்பியணிந்தபடி, பலரின் செல்லப்பிள்ளையாக இருந்த குழந்தை இறந்துள்ளது, ஷஹீன் பாக் பெண்களிடையே சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமைதியான
போராட்டத்தை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது இன்னமும் நடைபெற்று வருகின்றன.
டெல்லியில் நடைபெற்ற
தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதி எம்.பியும்
பி.ஜே.பி-யைச் சேர்ந்தவருமான பர்வேஷ் வர்மா, "ஷஹீன் பாக்கில் லட்சக்கணக்கானோர் அமர்ந்துள்ளனர்; அவர்கள்
நாளை உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து, உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் வன்கொடுமை செய்வார்கள்; உங்களையும் கொல்வார்கள். இதை இப்போதே உணர்ந்துகொண்டு உங்கள் முடிவை எடுங்கள்" என்று சர்ச்சையாகப் பேசினார்.
டெல்லி தேர்தல் பிரசாரத்துக்காக அழைக்கப்பட்டிருக்கும்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தான் செல்லும் ஒவ்வோர் இடத்திலும் ஷஹீன் பாக் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி வருகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் பாகிஸ்தானிடம் பணம் வாங்கிக்கொண்டு, ஷஹீன் பாக்குக்கு பிரியாணி தந்து ஊக்குவிக்கிறார் என்ற ரீதியில், தொடர்ச்சியாகக் கருத்து கூறிக்கொண்டிருந்தார் யோகி.
மத்திய அமைச்சர்
ரவிஷங்கர் பிரசாத்,
"குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் தேசத்தைத் துண்டாட நினைப்பவர்களால் நடத்தப்படும் போராட்டம் அது" என்று கூறினார். பி.ஜே.பி-யின் ராகுல் சின்ஹா, "ஷஹீன் பாக்கில் போராடுபவர்கள் அனைவரும் பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள்" என்று வன்மத்தோடு பேசினார்.
மத்திய நிதித்துறை
இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கூறிய முழக்கமான, "தேசத்துரோகிகளைத் துப்பாக்கியால் சுடுங்கள்" என்று கூறியதன் பிறகு, மூன்று
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் டெல்லியில் நிகழ்ந்துவிட்டன.
பி.ஜே.பி-யின்
தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியா, 'ஷஹீன் பாக்
பெண்கள் பணம் வாங்கிக்கொண்டு போராடுகின்றனர்' என்று குற்றம் சாட்டினார்.
ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர
மத்திய அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதில் வெற்றியடைய முடியவில்லை.
இந்நிலையில்
இறுதியாக பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று வழக்கு தொடர்ந்தார்கள்
இப்போராட்டம் தொடர்பான வழக்கு 17/02/2020 அன்று உச்ச
நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்,
“பொதுமக்கள் ஒரு தீர்வுக்காக போராடுகிறார்கள். எனவே இப்போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று மறுத்து விட்டது. அதேவேளை
பொதுமக்களுக்கோ,
சாலை போக்குவரத்திற்கோ
போராட்டக் காரர்கள் இடையூறு செய்யாமல் போராட்டம் நடத்த வேண்டும்”
என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஷஹீன் பாக்கின்
பெண்கள் தங்கள் போராட்டத்தை வீரியமாகத் தொடர்ந்து வருகிறார்கள். 'முத்தலாக்'
சட்டத்தை நீக்கி, இந்திய முஸ்லிம்
பெண்களின்
வாழ்க்கையில் புரட்சி ஏற்படுத்தியதாகத் தொடர்ந்து பிரசாரம்
செய்துவந்த
ஆளும்கட்சிக்கு, முஸ்லிம் பெண்கள் தங்கள்
போராட்டத்தை முன்னெடுக்கும்போது, அவர்கள் பாகிஸ்தானிடம்
பணம்பெறுபவர்களாகத் தெரிகிறார்கள். தேசத்துரோகிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள், ஆம் ஆத்மி கட்சியிடம்
பணம்பெற்றவர்கள்,
துப்பாக்கியால் சுடுங்கள், இந்து ராஷ்ட்ரம் அமைப்போம் என ஒவ்வொரு நாளும் ஷஹீன் பாக்கின் பெண்கள் மீதான அவதூறுகள் தொடர்ந்தபடி இருக்கின்றன.
இத்தனைக்கும்
இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் மூன்று பெண்களும் 90 வயதுகளைக் கடந்த
மூதாட்டிகள். அதை தலைமையேற்று நடத்தும் அஸ்மா காத்தூன் அவர்கள் 93 வயதைக்
கடந்தவர்கள் ஆவார்கள்.
இன்று நாட்டில்
நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டக்களங்களுக்கு
வீரத்தை வித்திட்டது ஷஹீன் பாக் பெண்களின் போராட்டம் என்றால் அது மிகையல்ல.
இதன் தொடர்ச்சியாக
தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஷஹீன் பாக்குகள் உருவாகி, தொடர் இருப்பு போராட்டக்
களங்களாக மாற்றம் பெற்றன.
அதற்கு முற்றுப்
புள்ளி வைக்கும் முகமாக நடைபெற்றது தான் வண்ணாரப் பேட்டை லால் குண்டா ஷஹீன் பாக்
போராட்ட களத்தின் மீதான, போராட்டகாரர்கள் மீதான தடியடி வன்முறை.
முதலில் காசு
பணத்திற்காக, பிரியாணிப் பொட்டலங்களுக்காக போராடுகின்றார்கள் என்று கொச்சைப்
படுத்துதல், பின்னர், எச்சரிக்கை, பின்னர் மிரட்டல், அதன் பின்னர் உயிர்ப்பலி,
அதன் தொடர்ச்சியாக தடியடி, அதன் பின்னர் சட்டத்தின் இரும்புக்கரம் கொண்டு
ஒடுக்குதல் என முஸ்லிம் சமூகத்தை போராட்டக் களங்களில் இருந்து பின்வாங்கச் செய்ய
எல்லா வகையிலான முயற்சிகளையும் மேற்கொண்டு, அதில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததன்
பின்னர் தற்போது இலவசங்களைக் கொண்டு மயக்கி விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர்.
போராட்டக்களங்கள் ஒன்றும் புதிதல்ல...
முதலில் முஸ்லிம்
சமூகத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை மத்திய அரசு மற்றும் எடப்பாடி தலைமையிலான மாநில
அரசும் களைந்தெறிய வேண்டும்.
இஸ்லாமியர்களாக
நாங்கள் இருப்பதும், முஸ்லிம்களாக நாங்கள் வாழ்வதும் தான் உங்களை இது போன்ற
சட்டங்களை இயற்றத் தூண்டும் என்றால் அந்த இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக,
முஸ்லிம்களாக வாழ்வதற்காக நாங்கள் எந்தவொரு தியாகத்தைச் செய்யவும் அணுவளவும் தயங்க
மாட்டோம்.
எந்தவொரு
மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம்! போராட்டக் களத்தில் இருந்து ஒரு அடி கூட பின்
வாங்க மாட்டோம். எந்த இலவசங்களுக்கும், சலுகைகளுக்கும் விலை போக மாட்டோம் என்பதை
உறுதி பட அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றோம்.
யர்முக் யுத்த
களத்தின் முதல் நாள் தளபதி காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் வீரர்களின்
அணிவகுப்பை சரிசெய்து கொண்டிருந்த தருணம் அது...
ரோமப் படையின்
தளபதி மாஹான் இஸ்லாமியப்படையின் வீரத்தளபதி காலித் பின் வலீத் (ரலி)
மற்றும் இஸ்லாமிய படைவீரர்களை நோக்கி…
قد علمنا أنه لم يخرجكم من بلادكم
إلا الجهد والجوع فإن شئتم أعطيت كل واحد منكم عشرة دنانير وكسوة وطعاماً، وترجعون
إلى بلادكم، وفي العام القادم أبعث إليكم بمثلها!
”உங்களின் வறுமையும், ஏழ்மையும் தான் உங்களை எங்களுக்கு எதிராக போரிடத் தூண்டியிருக்கும் என நான்
நினைக்கிறேன்.
இப்போது ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை.
நீங்கள்
விரும்பினால் உங்கள் ஒவ்வொருவருக்கும் 10 தீனார்களையும், நல்ல ஆடைகளையும்,
சிறப்பான உணவுகளையும் தருகிறேன்.பெற்றுகொண்டு ஓடி விடுங்கள். அடுத்த ஆண்டு இப்படி படை
நடத்தி வந்து வாங்கத்தேவையில்லை. நானே உங்கள் பகுதிக்கு
வந்து இதே போன்று வினியோகிக்கிறேன்” என்று ஏளனமாக் கூறினான்.
ரோமப்படைத்தளபதியின்
இந்த ஆணவப் பேச்சுக்கு பிண்ணனியில் தமது படையில் 4 லட்சம் வீரர்கள் அணிதிரண்டு வந்திருப்பதும், இஸ்லாமியப் படையில் வெறும் 46 ஆயிரம் வீரர்கள் மட்டுமே
இருப்பதும் தான் அப்படிப் பேசுமாறு அவனைத்தூண்டியது என்பதை காலித் (ரலி)
விளங்கிக் கொண்டார்கள்.
காலித் இப்னு
வலீத் (ரலி)
அவர்கள் ரோமப் படைத்தளபதி மாஹானை நோக்கி:
إنه لم يخرجنا من بلادنا الجوع
كما ذكرت، ولكننا قوم نشرب
الدماء، وقد علمنا أنه لا دم أشهى ولا أطيب من دم الروم، فجئنا لذلك!)… وعاد بجواده الى صفوف الجيش
ورفع اللواء عالياً مؤذناً بالقتال: (الله أكبر، هبي رياح الجنة)
”கவனமாகக் கேட்டுக்கொள்! மாஹானே! நீ சொன்னது போன்ற சூழ்நிலையில் நாங்கள்
இல்லை. நாங்கள் வந்த நோக்கத்தை நீ தவறாக கணித்து
விட்டாய். நாங்கள் எதிரியின் ரத்தத்தை குடித்து
தாகம் தீர்க்க துடிப்பவர்கள். அதுவும் ரோமர்களின் ரத்தம் மிகவும்
ருசியாக இருக்கும் என்பதை கேள்விப்பட்டோம். அதனை பரீட்சித்துப்பார்க்க வேண்டியே
இங்கு வந்தோம்” என்று கூறினார்கள்.
பின்பு காலித் (ரலி) அவர்கள் தமது படைவீரர்களை நோக்கி “என்னருமைத் தோழர்களே! சுவனத்து தென்றல் காற்றை சுவாசிக்க
விரைந்து செல்லுங்கள்! அல்லாஹு அக்பர் என வீரமுழக்கமிட்டு
எதிரிகளின் களத்தினுள் முதல் வீரராக நுழைந்தார்கள். ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}.......... )
பதில் சொல்வதோடு நின்று விடாமல் அதை யுத்த களத்திலும் நிரூபித்துக் காட்டினார்கள். தளபதியும், இஸ்லாமியப் படை வீரர்களும்.
ஆம்! 4 லட்சம் கொண்ட ரோமப்படை 46 ஆயிரம் பேர் கொண்ட சின்னஞ்சிறு படையிடம் சிக்குண்டு சிதறி ஓடி தோல்வியைத் தழுவினர்.
عن عكرمة، عن ابن عباس قال: أسرت الروم عبد الله بن حذافة السهمي، صاحب
النبي صلى الله عليه وسلم، فقال له الطاغية: تنصّر وإلا ألقيتك في البقرة، لبقرة
من نحاس، قال: ما أفعل. فدعا بالبقرة النحاس فملئت زيتاً وأغليت، ودعا برجل من
أسرى المسلمين فعرض عليه النصرانية، فأبى، فألقاه في البقرة، فغذا عظامه تلوح،
وقال لعبد الله: تنصّر وإلا ألقيتك. قال: ما أفعل. فأمر به أن يلقى في البقرة
فبكى، فقالوا: قد جزع، قد بكى: قال ردوه. قال: لا ترى أني بكيت جزعاً مما تريد أن
تصنع بي، ولكني بكيت حيث ليس لي إلا نفسٌ واحدة يفعل بها هذا في الله، كنت أحب أن
يكون لي من الأنفس عدد كل شعر في، ثم تسلّط علي فتفعل بي ذها. قال: فأعجب منه:
وأحبّ أن يطلقه، فقال: قبل رأسي وأطلقك. قال: ما أفعل. قال تنصّر وأزوجك بنتي
وأقاسمك ملكي. قال: ما أفعل. قال قبل رأسي وأطلقك وأطلق معك ثمانين من المسلمين.
قال: أما هذه فنعم. فقبّل رأسه، وأطلقه، وأطلق معه ثمانين من المسلمين. فلما قدموا
على عمر بن الخطاب قام إليه عمر فقبل رأسه، قال: فكان أصحاب رسول الله صلى الله
عليه وسلم يمازحون عبد الله فيقولون: قبلت رأس علج، فيقول لهم: أطلق الله بتلك
القبلة ثمانين من المسلمين.
அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள்,
இஸ்லாத்தை ஆரம்பத்திலேயே ஏற்றுக் கொண்ட நற்பேறு பெற்றவர்கள்.
ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட புனிதர்களில் ஒருவர். பத்ரில் கலந்து கொண்டு சிறப்பாக பங்களித்த பாங்கான வீரரும் கூட.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கிஸ்ரா மன்னனுக்கு இவர்களிடம் தான்
இஸ்லாமிய அழைப்பை ஏந்திய கடிதத்தை கொடுத்தனுப்பினார்கள்.
இன்னும் பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க கௌரவத்திற்கு சொந்தக்காரர் தான்
அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள்.
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ரோமை நோக்கி
அனுப்பப்பட்ட ஒரு படைக்கு அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) தளபதியாக நியமிக்கப் பட்டார்கள்.
நீண்ட போராட்டத்திற்கு பின் முஸ்லிம் படையினர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
முஸ்லிம்கள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்துல்லாஹ் (ரலி) தளபதியல்லவா? கொஞ்சம்
கூடுதலாகவே சித்ரவதை செய்யப்பட்டார்கள்.
அவர்களுக்கு முன்னால் தோன்றிய ரோம அரசன் இஸ்லாத்தை விட்டு விடுமாறு கூறி
கட்டாயப்படுத்தினான். தொடர்ந்து சித்ரவதையை மேற்கொள்ளுமாறு தம் பணியாளர்களுக்கு கட்டளையிட்டான்.
ஆனால், கொஞ்சம் கூட இசைந்து கொடுக்க வில்லை அப்துல்லாஹ் (ரலி)
அவர்கள்.
உடனடியாக மிகப்பெரிய அடுப்பு தயார் செய்யப்பட்டு மிகப் பிரமாண்டமான அண்டா
வரவழைக்கப்பட்டு அண்டா முழுவதும் நீரால் நிரப்பப்பட்டது.
தீ மூட்டப்பட்டு, தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது. கொதிக்கும்
தண்ணீருக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட அப்துல்லாஹ் (ரலி)
அவர்களை நோக்கி “நீர் கிறிஸ்தவ மதத்திற்கு
மாறிவிட்டால் உம்மை நான் விட்டு விடுகின்றேன்” என்றான் அரசன்.
ஒரு போதும் நான் அத்தகைய இழிவான காரியத்தை செய்ய மாட்டேன் என்று கூறினார்
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.
கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் ஒருவரை பிடித்து கொதிக்கும்
வெந்நீருக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இஸ்லாத்தை விட்டு விட்டால் உம் உயிரை
காப்பாற்றிக் கொள்ளலாம் என்ன சொல்கிறாய்? என்று கேட்டான் அரசன்.
என் உயிரை விட இஸ்லாமே மேலானது என்றார் அவர். உடனே கொதிக்கும் நீரில் தூக்கி போட்டான்.
கை வேறு கால் வேறு என உடலின் அத்துணை அங்கங்களும் பிரிந்து போனது.
இதைக் கண்ணுற்ற அப்துல்லாஹ் (ரலி) அப்படியே கதறுகின்றார்கள்.
மீண்டும் இன்னொரு முஸ்லிம் கொண்டு வரப்பட்டு அது போன்றே கொடூரமாக கொலை
செய்யப்படுகின்றார்.
மீண்டும் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் முன் வந்த அரசன் அடுத்து நீ தான் என்ன
சொல்கின்றாய்? மதம் மாறுகின்றாயா? இல்லையா?
என்று கேட்டான்.
அவர்கள் மறுக்கவே, தலை கீழாக கட்டப்பட்டு கொதிக்கும் நீரின் மேலாக தொங்க விடப்படுகின்றார்கள்.
ஒரு கட்டத்தில் தேம்பி தேம்பி அழுகின்றார்கள்.
இந்த செய்தி அரசனுக்கு தெரிவிக்கப்பட்டு, அரசன் அவர்களை அவிழ்த்து விடச் சொல்லி
அருகில் அழைத்து அழுததின் காரணம் என்ன என்று கேட்டான்.
நான் ஒன்றும் நீ ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த தண்டனையைக் கண்டு அஞ்சி நடுங்கி
அழவில்லை. மாறாக, என்னிடம் சன்மார்க்கத்திற்காக கொடுப்பதற்கு
இந்த உயிரைத் தவிர வேறு உயிரை என்னுள் அல்லாஹ் படைக்கவில்லையே என்று தான்.
அல்லாஹ் மாத்திரம் என் தலைமுடியின் அளவுக்கு உயிர் கொடுத்திருப்பானேயானால்
அவையனைத்தையும் சத்திய மார்க்கத்திற்கு சன்மானமாக வழங்கியிருப்பேனே! என்று நினைத்து தான்
நான் அழுகின்றேன் என்றார்கள்.
இதுவரை மரணத்தின் விளிம்பில் நிற்கிற எத்தனையோ மனிதர்களின் கெஞ்சல்களை
கேட்டுப் பழகிய அரசனுக்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் இந்த
அணுகுமுறை புதிதாகத் தோன்றியது.
அப்படியே ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்ற அரசன் அவரை விடுவிக்க ஆணை
பிறப்பித்தான். அருகில் அழைத்த அரசன் “எனது நெற்றியில் முத்தமிடும்!
உம்மை விடுதலை செய்கின்றேன்! நீர்
கிறிஸ்துவனாக மதம் மாறிவிடு! உமக்கு எனது மகளை திருமணம்
செய்து தருகின்றேன். எனது ஆட்சியில் பாதி நிலப்பரப்பை ஆளும்
அதிகாரத்தைத் தருகின்றேன்” என்றான்.
ஒரு போதும் நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று கூறினார். அதற்கு அந்த அரசன்
”என் நெற்றியில் முத்தமிட்டால் நான் உம்மையும் உம்மோடு சிறை
பிடித்திருக்கிற 80 நபர்களை விடுதலை செய்து விடுகின்றேன்”
என்று கூறினான்.
அதற்கு, அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபத்துஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள் ”அப்படி என்றால் உலகில் நீ தான் மிகச்
சிறந்த மனிதன் இப்போதே உம் நெற்றியின் மீது முத்தமிடுகின்றேன்” என்று கூறி முத்தமிட்டார்கள்.
சக தோழர்களை விடுவித்த மகிழ்ச்சியில் மதீனா நோக்கி வந்த அப்துல்லாஹ் இப்னு
ஹுதாஃபத்துஸ் ஸஹ்மீ (ரலி) அவர்களை மதீனாவின் எல்லையில் பெரும்
கூட்டத்தோடு வந்து நின்று வரவேற்றார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.
சுற்றியிருந்த
மக்களில் சிலர் “உயிருக்கு பயந்து எதிரியின் நெற்றியில்
முத்தமிட்டு வந்த கோழை” என்பதாக விமர்சித்து அப்துல்லாஹ்
(ரலி) அவர்களை கேலி பேசினர்.
உடனே, உமர் (ரலி) அவர்கள் “அப்துல்லாஹ் இப்னு
ஹுதாஃபா (ரலி) அவர்களின் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு சுற்றியிருந்த மக்களை
நோக்கி “அவர் கொடுத்த ஒரு முத்தம் தான் 80 முஸ்லிம்களின்
உயிரையும், ஈமானையும் காப்பாற்றியுள்ளது” என்று கூறினார்கள். ( நூல்: உஸ்துல் ஃகாபா )
போராட்ட களத்தில் பயணிக்கும் முஸ்லிம் சமூகத்தின் கவனத்திற்கு...
பல்வேறு போராட்ட
களங்களில் பங்கெடுத்து வரும் முஸ்லிம் சமூகம் போராட்ட களங்களில் ஆதாபு எனும்
ஒழுங்குகளையும், அக்லாக் எனும் பண்பாடுகளையும், ஹுகூக் எனும்
கடமைகளையும் பேண வேண்டும்.
1.
போராட்டம் நடைபெறும் இடம், கால நேரம், சூழ்நிலை குறித்தான தெளிவு அவசியம் இருக்க
வேண்டும்.
لَمْ يكُن رسولُ الله ﷺ
يُريدُ غَزْوةً إِلاَّ ورَّى بغَيْرِهَا حتَّى كَانَتْ تِلكَ الْغَزْوةُ، فغَزَاها رسولُ الله ﷺ في حَرٍّ شَديدٍ، وَاسْتَقْبَلَ سَفراً بَعِيداً وَمَفَازاً. وَاسْتَقْبَلَ عَدداً
كَثيراً، فجَلَّى للْمُسْلمِينَ أَمْرَهُمْ ليَتَأَهَّبوا أُهْبَةَ غَزْوِهِمْ
فَأَخْبَرَهُمْ بوَجْهِهِمُ الَّذي يُريدُ،
கஅப் இப்னு மாலிக்
(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “மாநபி {ஸல்} அவர்கள் எந்தப் போருக்கு
புறப்பட்டாலும் அதைச் சாடைமாடையாக மறைத்தே கூறுவார்கள். ஆனால், தபூக்
யுத்தத்திற்கு புறப்படும் முன்பாக யதார்த்த நிலையை, பயணத்தில் இருக்கும் சிரமங்களை
வெளிப்படையாகவே கூறினார்கள்.
أخرجه ابن سعد في "الطبقات الكبرى" (3/567) فقال
:" أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ
إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَبِيبَةَ ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ ، عَنْ
عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ : " أَنَّ رَسُولَ اللَّهِ صلّى الله عليه
وسلم نَزَلَ مَنْزِلًا يَوْمَ بَدْرٍ ، فَقَالَ الْحُبَابُ بْنُ الْمُنْذِرِ:
لَيْسَ هَذَا بِمَنْزِلٍ ، انْطَلِقْ بِنَا إِلَى أَدْنَى مَاءٍ إِلَى الْقَوْمِ ،
ثُمَّ نَبْنِي عَلَيْهِ حَوْضًا ، وَنَقْذِفُ فِيهِ الْآنِيَةَ ، فَنَشْرَبُ
وَنُقَاتِلُ ، وَنُغَوِّرُ مَا سِوَاهَا مِنَ الْقُلُبِ ، قَالَ: فَنَزَلَ
جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ صلّى الله عليه وسلم فَقَالَ: الرَّأْيُ مَا أَشَارَ بِهِ الْحُبَابُ بْنُ الْمُنْذِرِ ، فَقَالَ
رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم: يَا حُبَابُ ، أَشَرْتَ بِالرَّأْيِ
فَنَهَضَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم فَفَعَلَ
ذَلِكَ " .
பத்ர் யுத்தத்திற்கான ஆயத்த பணிகளில்
ஈடுபட்டிருந்த மாநபி {ஸல்} அவர்கள் ‘பத்ர்’ களம் சென்று மதீனா பகுதிக்கு நேராக இருக்கும் முதலாவது
கிணற்றுக்கருகில் தமது கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்.
அப்போது ஹுபாப் இப்னுல் முன்தீர் என்ற நபித்தோழர் ‘அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நாம் கூடாரமிடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையா? அப்படியாயின் நாம் இதை
விட்டும் ஒரு அடி
முன்னாலோ, பின்னாலோ நகர மாட்டோம்!
அல்லது உங்களது சொந்த அபிப்பிராயப்படி நீங்கள் தீர்மானித்த இடம்
என்றால்,
என்னிடம் மாற்று அபிப்பிராயம் உள்ளது!’ என்றார்.
நபி(ஸல்) அவர்கள் தனது சொந்த முடிவு
என்றதும்,
‘அல்லாஹ்வின் தூதரே! இதற்கு பின்னரும்
தொட்டிகள் உள்ளன. நாம் முன்னேறிச் சென்று அவற்றையும் எம் வசப்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத் தாண்டியிருக்கும் சிறிய நீர் தொட்டிகளிலிருந்து தண்ணீரை நாம் எடுத்துக் கொள்வோம்.
அப்போது நாம் தண்ணீர் குடிக்க அவர்கள் தாகத்தோடு போராடுவார்கள்’ என்று தனது அபிப்பிராயத்தைக் கூற அது போர்த்தந்திரத்திற்கும்,
எதிரிகளைப் பலவீணப்படுத்தவும் ஏற்ற யுக்தியாகத் திகழ்ந்ததால் நபி(ஸல்) அவர்கள் தனது முடிவை மாற்றி அவர் கருத்துப்படி செயற்பட்டார்கள்’ ( அஸ்ஸீரதுன்னபவிய்யா-இப்னு ஹிஸாம்., அத் தபகாத்-இப்னு ஸஃத் )
இன்று நாம்
போராட்டங்கள் அறிவிக்கப்பட்டதும் நமது வீட்டுப் பெண்களோடும், குழந்தைகளோடும்
முதியவர்களோடும் பயணம் செய்கின்றோம். பங்கேற்கின்றோம். நாம் போராடுகிற இடங்களைச்
சுற்றியுள்ள இடங்களை அறிந்து வைத்திருப்பது காலத்தின் அவசியமும் கட்டாயமும் ஆகும்.
2.
அல்லாஹ்வுக்காக போராட களம் காணுங்கள்..
وعن أبي موسى عبد الله بن قيس الأشعري رضي الله عنه قال:
سئل رسول الله صلى الله عليه وسلم عن الرجل يقاتل شجاعة، ويقاتل حمية ويقاتل رياء،
أي ذلك في سبيل الله ؟ فقال رسول الله صلى الله عليه وسلم: من قاتل لتكون كلمة
الله هي العليا فهو في سبيل الله متفق عليه
அபூமூஸா
அப்துல்லாஹ் இப்னு கைஸ் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி {ஸல்}
அவர்களிடம் “ஒருவர் வீரத்தை நிலை நாட்ட போராடுகின்றார், இன்னொருவர்
மனமாச்சர்யங்களுக்காக (இன, மொழி, குல, குடும்ப, நிற பெருமையை நிலை நாட்ட)
போராடுகின்றார், வேறொருவர் முகஸ்துதிக்காக போராடுகின்றார் இவர்களில் இறைவழியில்
போராடுகின்றவர் யார்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு, மாநபி
{ஸல்} “இறைமார்க்கம் மேலோங்கித் திகழ வேண்டும் என்பதற்காக எவர் போராடுகின்றாரோ
அவரே இறை வழியில் போராடுபவர் ஆவார்” என பதிலளித்தார்கள். ( நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன் )
எனது மாவட்டம்,
எனது ஊர், எனது மஹல்லா, எனது ஜமாஅத், எனது அமைப்பு, எனது இயக்கம், எனது கட்சி
என்கிற சிந்தனையை தூக்கி எறியுங்கள்.
நான் இதைச்
செய்தேன், என் அமைப்பால் தால் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்ட முடிந்தது, என் ஜமாஅத்தின்
பங்களிப்பே அதிகம், என் இயக்கத்தினரே அதிகம் பங்கேற்றனர் என்பது போன்ற பிதற்றலை
விட்டொழியுங்கள்.
போராட்ட களங்களில்
இயக்க, அமைப்பு, கட்சி, ஜமாஅத் சார்ந்த கோஷங்களை முற்றிலும் புறக்கணித்து
விடுங்கள்.
3.
சாலை மற்றும் பாதைகளின் ஒழுங்குகளைப் பின்பற்றுங்கள்…
عن أبي
سعيد الخدري رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: «إياكم والجلوس على
الطرقات»: قالوا: ما لنا بدٌّ، إنما هي مجالسنا نتحدث فيها، قال: «فإذا أبيتم إلا
المجالس، فأعطوا الطريق حقها» قالوا: وما حق الطريق؟ قال: «غض البصر، وكف الأذى،
ورد السلام، وأمر بالمعروف، ونهي عن المنكر»
وزاد في
رواية عن عمر بن الخطاب: «وتغيثوا الملهوف، وتهدوا الضال»
அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“பாதைகளில் அமர்வதன் விஷயத்தில் உங்களை நான் எச்சரிக்கின்றேன்”
என நபி {ஸல்} அவர்கள் எங்களோடு
அமர்ந்திருந்த சபை ஒன்றில் கூறினார்கள். அப்போது நாங்கள்
“அல்லாஹ்வின் தூதரே! இது நாள் வரை அப்படி அமர்ந்து
தானே நாங்கள் பேசி வருகின்றோம்! ஏன் அப்படிக் கூறுகின்றீர்கள்?”
என்று கேட்டோம்.
இனி நீங்கள் பேசினால்
அதற்கான இடங்களில் அமர்ந்து பேசுங்கள்! பாதையின்
கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுங்கள்” என்றார்கள். அப்போது நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! பாதையின் கடமைகள் என்ன? என்று” கேட்டோம்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள்
“பார்வையை தாழ்த்திக் கொள்வதும், நோவினை தருபவைகளை
அகற்றுவதும், ஸலாம் உரைத்தால் பதில் சொல்வதும், நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும், (உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிற
அறிவிப்பில் கூடுதலாக) அபயக்குரல் எழுப்புவோருக்கு உதவி செய்வதும்,
வழி தவறியவர்களுக்கு வழிகாட்டுவதும்” தான் பாதையின்
கடமைகள் என்றார்கள். ( நூல்: புகாரி,அபூதாவூத் )
போராட்டக்களங்கள் என்பது
இன்று பெரும்பாலும் சாலைகளும், பொதுமக்கள் கூடும் இடமாகத்தான்
இருக்கின்றது எனவே, மிகவும் கவனமாக நாம் பாதையின் ஒழுங்குகளைப்
பேண வேண்டும்.
4.
வெறுப்புணர்வை தூண்டும் முழக்கங்களை தவிர்க்க வேண்டும்..
عن أنس
- رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ((يسِّروا ولا تعسِّروا،
وبشِّروا ولا تنفِّروا))؛ متفق عليه.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“நீங்கள். எளிதாக இந்த மார்க்கத்தை அடையாளப்படுத்துங்கள்!
இஸ்லாத்தை சிரமமாக காட்டி விடாதீர்கள் மக்களுக்கு சோபனம் தருகிற வார்த்தைகளையே
கூறுங்கள். நம்மை விட்டும் விரண்டோடுகிற அளவிலான வார்த்தைகளைக்
கூறாதீர்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம்
)
போராட்டக்களங்களுக்கு
பங்கெடுக்க வாகனத்தில் செல்லும் போதோ, போராட்டக்களத்தில்
பயணிக்கும் போது சகோதர சமயத்தவர்களின், சகோதர இயக்கத்தவர்களின்
உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகவோ, முஸ்லிம் சமூகத்தின் மீது தவறான
எண்ணங்களை ஏற்படுத்தும் விதமாகவோ கோஷங்களை ஒரு போதும் எழுப்பி விடக்கூடாது.
5.
போராளிகளுக்கு தாராளமாக செலவு செய்யுங்கள்…
டெல்லியைச் சேர்ந்த
வழக்கறிஞர் டி.எஸ் பிந்த்ரா என்பவர் ஷஹீன் பாக், முஸ்தஃபா பாத், குரோஜி ஆகிய பகுதிகளில் குடியுரிமை திருத்த
சட்டத்திற்கு எதிராக போராடுகிற மக்களுக்கு உணவு வழங்குவதற்காக லட்சக்கணக்கான மதிப்புள்ள
தனது அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றில் ஒன்றை விற்று விட்டார்.
அவர் பெற்றெடுத்த மக்களும்
குருத்வாராவுக்கு புனித பயணம் மேற்கொள்ள சேமித்து வைத்திருந்த பணத்தை வழங்கி விட்டனர். இது போன்றே சென்னை வண்ணாரப்பேட்டை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில்
தொடர் இருப்பு போராட்டம் நடத்தி வரும் போராளிகளுக்காக சகோதர சமய மக்கள் வாஞ்சையோடு
செலவிடுகின்றனர்.
அவர்களின் அரவணைப்பை
அன்போடு ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் அவர்களின் சுமையை குறைக்க நாம் இன்னும் கூடுதல்
முயற்சி செய்ய வேண்டும்.
وقد قال
النبي – صلى الله عليه وسلم
أحب الناس إلى الله
عزَّ وجل أنفعهم للناس ، وأحب الأعمال إلى الله عزَّ وجل سرور تدخله على مسلم ، أو
تكشف عنه كربه ، أو تقضي عنه ديناً ، أو تطرد عنه جوعاً ، ولو أن تمشي مع أخيك في
حاجته أحب إليَّ من أن أعتكف في المسجد شهراً
ஒரு கிராமவாசி மாநபி {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்கு பிரியமான செயல் எது? என்று வினவினார்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} “மனிதர்களில் அல்லாஹ்விற்கு மிகவும்
நேசத்திற்குரியவர் சக மனிதர்களுக்கு எல்லா வகையிலும் பயன் தருகின்றவரே! செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது ஒரு முஸ்லிம் தன் சக முஸ்லிமின்
வாழ்க்கையில் ஏற்படுத்துகிற மகிழ்ச்சியும், சந்தோஷமும் ஆகும்.
அந்த மகிழ்ச்சி என்பது அவனுடைய ஒரு கஷ்டத்தை நீக்குவதின் மூலமாகவோ, அல்லது அவனுடைய கடனை அடைப்பதின் மூலமாகவோ, அல்லது அவனுடைய பசியை, வறுமையை போக்குவதின் மூலமாகவோ அமைந்திருந்தாலும் சரியே!
மீண்டும், கேள்வி கேட்ட அந்த கிராமவாசியை நோக்கி “நீர் உம் சகோதரர் ஒருவரின் தேவையை நிறைவேற்றுவதற்காக நடந்து செல்வதென்பது ஒரு
மாத காலம் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பதை விட எனக்கு மிகப் பிரியமானதாகும்” என்று பதில் கூறினார்கள்.
وفي
رواية للطبراني "
" إن أحب الاعمال
إلى الله تعالى بعد الفرائض : إدخال السرور على المسلم ، كسوت عورته ، أو أشبعت
جوعته ، أو قضيت حاجته
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இன்னொரு அறிவிப்பின் படி..
”அல்லாஹ்வின் கடமைகளை சரிவர செய்கிற ஓர்
அடியானின் செயல்களில் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான செயல் தன் சக முஸ்லிமின்
வாழ்வினில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகும். அந்த மகிழ்ச்சி என்பது அவன் மானத்தை
மறைக்க ஆடை கொடுப்பதின் மூலமாகவோ, அல்லது அவன் பசியை நீக்குவதன் மூலமாகவோ, அவனுடைய தேவைகளை நிறைவேற்றுவதின் மூலமாகவோ அமைந்திருந்தாலும் சரியே!” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
( நூல்:தப்ரானி,
ஸில்ஸிலத் அஸ்
ஸஹீஹ் லில் அல்பானீ )
فعن
جعفر بن يزيد، عن جعفر بن محمد عن أبيه عن جده رضي الله عنهم قال: قال عليه الصلاة
“ والسلام“
ما أدخل
رجلٌ على مؤمنٍ سروراً إلا خَلَقَ الله عزَّ وجل من ذلك السرور ملكاً يعبد الله
عزَّ وجل ويوحِّده، فإذا صار العبد في قبره، أتاه ذلك السرور فيقول: أما تعرفني ؟!
فيقول له: مَن أنت ؟ يقول: أنا السرور الذي أدخلتني على فلان، أنا اليوم أونس
وحشتك، وألَقِّنك حجتك، وأثبتك بالقول الثابت، وأشهدك مشاهدك يوم القيامة، وأشفع
لك إلى ربك، وأريك منزلتك في الجنة
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “இறைநம்பிக்கையாளன் ஒருவன் தன் சக முஸ்லிமின் வாழ்வில் ஏற்படுத்துகிற
மகிழ்ச்சியின் பிரதிபலனாக அல்லாஹ் ஒரு வானவரை படைக்கிறான். அந்த வானவர் அல்லாஹ்வை வணங்குகின்றார்.
அந்த இறைநம்பிக்கையாளர் இறந்து, கப்ரில் வைக்கப்பட்ட பிறகு அந்த
மகிழ்ச்சிக்கு அழகிய தோற்றம் கொடுத்து அல்லாஹ் கப்ருக்கு அனுப்புகின்றான். அது அவன் முன்னால் வந்து நின்று ”நான் யார் என்பதை நீ அறிவாயா?” என்று கேட்கும்.
அப்போது, அந்த முஃமின் நீயார்? என்று கேட்பார். அதற்கு அந்த உருவம் நான் தான் உலகில்
இன்ன மனிதனின் வாழ்வில் நீ ஏற்படுத்திய மகிழ்ச்சி என்று சொல்லி விட்டு… தொடர்ந்து “இன்று நான் உன்னுடைய வெருட்சியை நீக்க
வந்திருக்கின்றேன். உம் ஆதாரத்தை நிலை நிறுத்தவும், உம்மை வானவர்களின் கேள்வியின் போது சிறந்த பதிலை கொண்டு தரிபடுத்தவும்
வந்திருக்கின்றேன்.
மறுமை நாளில் உனக்கு சாட்சியாகவும், உம் இறைவனிடத்தில் சிறந்த
பரிந்துரையாகவும் நான் இருப்பேன்.
மேலும், சுவனத்தில் உம் இருப்பிடம் எது என்பதை இப்போது உமக்கு காண்பித்து தரவே நான்
இங்கு வந்துள்ளேன்!”
என்றும் அது சொல்லும். ( நூல்:
தர்ஃகீப் வத் தர்ஹீப் )
6.
வணக்க வழிபாடுகளால் தொடர்
இருப்பு போராட்ட களங்களை நிரப்ப வேண்டும்.
திங்கள் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் நஃபிலான
நோன்பு நோற்ற நிலையில் பங்கேற்பது.
திக்ர், திலாவத், ஸலவாத் மஜ்லிஸ்களை அமைப்பது, இரவுத்
தொழுகைகளை அதிகம் பேணுவது. ஸஜ்தாவில் நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபடுவது. துஆக்களில்
ஈடுபடுவது என சுழற்சி முறையில் அமைத்துக் கொள்வது.
ஜமாஅத்தாக – கூட்டாக நிறைவேற்ற வாய்ப்புள்ள இடங்களில்
கூட்டாகவும், வாய்ப்புகள் இல்லாத இடங்களில் தனியாகவும் அமல்களில் ஈடுபட வேண்டும்.
எனவே, இஸ்லாம் கூறும் அமைப்பில் நமது போராட்ட களங்களை
அமப்போம்! இறைவனுக்காக போராடுவோம்!! ஈடு இணையில்லா வெற்றி பெறுவோம்!!!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் முயற்சிகள் அனைத்திற்கும்
தகுந்த கூலியை வழங்குவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
தன் கருவில் குழந்தையை பாதுகாத்து
ReplyDeleteஅதன் வளர்சிக்காக தன்னை தியாகம் செய்யும் தாய்மையின் மகத்துவம்போல்
சமூகத்தின் தேவையைக்கருதி சமகால நிகழ்வுகள் குறித்து சன்மார்க்க சான்றுகளோடு
தமிழை தாய்மொழியாகக்கொண்ட ஆயிரக்கணக்கான ஆலிம்களின் சிந்தனைக்கு சிறந்த பாதையாக கட்டுரைகளை வழங்கிவரும்
ஆசிரியர் பஷீர் அஹ்மது உஸ்மானி
அவர்களின் சேவையை அல்லாஹ்
அங்கீகரிப்பானாக ஆமீன் ஆமீன் ஆமீன்
தேடலில் மூழ்கி பலர்
அறிவுத்தேடலுக்கு
விருந்தளிப்பவரே
தங்களின் நேரத்தை
பலர் பயனடைய
தியாகத்தால்
பங்கிட்டுத்தருபவரே
செய்தியை பதிவிட
தங்கள் விரல் அசையும்
ஒவ்வொரு வினாடியும்
பல வெள்ளி மேடையில்
வெளிச்சம் பெறுகிறது
பேரருளாளன்
பெருங்கருணை
பொழியட்டும்
பெருமான் நபியின்
ஆசியும் கிடைக்கட்டும்
அமீன் ஆமீன் ஆமீன்
ஆமீன்
Deleteஅல்லாஹ் தங்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன்
ReplyDeleteBarakallah allah niraivana barakkath ungalukku seyyattum
ReplyDeleteஅல்லாஹ் பரக்கத் செய்வானாக. ஆமீன்
ReplyDeleteماشاء الله تبارك الله
ReplyDeleteBarakallah
ReplyDeletealhamdhu lillah ..
ReplyDeleteBarakallah
ReplyDelete
ReplyDeleteபல்வேறு வரலாற்று சான்றுகளுடன் அருமையான பதிவு
அல்லாஹ் ஹஜ்ரத் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த சுகத்தையும் தந்தருள்வானாக
Barakallah...innaiku unga bayan than Namma jumaa bayan...
ReplyDelete