காத்திருப்போம்!
நீதி வெல்லும் நாள் வரும்!!
பாபரி மஸ்ஜிதை மீட்டெடுப்போம்!!!
மனித வாழ்க்கையில் கடந்து போன காலங்கள் என்பது மிக முக்கியமானவையாகும்.
அந்த காலங்களை அவ்வளவு எளிதாக ஒரு மனிதன் கடந்து விடக்கூடாது, மறந்து விடக்கூடாது.
இன்றைய மற்றும் எதிர்கால வாழ்வு குறித்தான உறுதிப்பாடு நமக்கு வழங்கப்பட வில்லை. அது நம் கையிலும் இல்லை.
ஆனால், நம்மை விட்டும் கடந்து போன காலங்களின் வாழ்வென்பது உறுதியாக அது நம்முடையதே!
கடந்த கால வாழ்க்கையின் நல்லது, கெட்டதுகளை நினைவு கூறுமாறு, அசை போட்டு பார்க்குமாறு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனின் வழியே நமக்கு கட்டளையிடுகின்றான்.
اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى
وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى
وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰىؕ
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா? இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான். ( அல்குர்ஆன் : 93: 3 – 6 )
وَلَـقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَاۤ اَنْ اَخْرِجْ قَوْمَكَ مِنَ
وَذَكِّرْهُمْ بِاَيّٰٮمِ اللّٰهِؕ اِنَّ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ
فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لّـِكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ
“நிச்சயமாக, நாம் மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு அனுப்பிவைத்து, “நீர் உம்முடைய சமூகத்தினரை இருள்களிலிருந்து, வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் கொண்டு வாரும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராக” என்று கட்டளையிட்டோம்; நிச்சயமாக இதில் பொறுமையுடையோர், நன்றி செலுத்துவோர் எல்லோருக்கும் படிப்பினைகள் இருக்கின்றன”. ( அல்குர்ஆன் : 14: 5 )
وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ
عَلَيْكُمْ اِذْ جَعَلَ فِيْكُمْ اَنْۢـبِيَآءَ وَجَعَلَـكُمْ مُّلُوْكًا
وَّاٰتٰٮكُمْ مَّا لَمْ يُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ
“அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்” என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும்”. ( அல்குர்ஆன் : 5: 20 )
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَآءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا ؕ وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرًا ۚ
“நம்பிக்கை கொண்டோரே! உங்களிடம் கூட்டுப் படையினர் வந்தபோது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்!
அவர்களுக்கு எதிராகக் காற்றையும், நீங்கள் காணாத படையினரையும் அனுப்பினோம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான். ( அல் குர்ஆன் : 33: 9 )
மேற்கூறிய இறைவசனங்கள் வாயிலாக கடந்த கால வாழ்வின் நல்லது கெட்டதுகளை நினைவு கூருமாறு இறைவன் கூறுவதை உணர முடிகின்றது.
அந்த அடிப்படையில் நீதியின் பெயரால் துரோகம் இழைக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை நினைவு கூர்வோம்!
இந்த தேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட காலம் தொட்டு சுமார் 450 ஆண்டு காலங்கள் இறைவழிபாடு நடத்தப்பட்டு நம் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டு 28 ஆண்டுகளைத் தொட்டு நிற்கும் பாபரி இறையில்லம் குறித்தான செய்திகளை இந்த உம்மத்தின் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம்.
விரிவாகவோ அல்லது சுருக்கமாகவோ பாபரி மஸ்ஜித் குறித்த விவரங்களை நாம் சமூகத்தின் முன்னர் சமர்ப்பிப்போம்.
பாபரி மஸ்ஜித் குறித்த விரிவான தகவல்களுக்கு நம்முடைய முந்தைய தலைப்பான இறையில்லம்! அதன் மாண்பும்.. மகத்துவமும்… என்ற தலைப்பை பார்வையிடவும்.
நம்முடைய கடந்த கால சங்கடங்களை நினைவு கூர்வதால் எதிர்கால தலைமுறை அது குறித்த விழிப்புணர்வை நிச்சயம் பெறுவார்கள்.
கடந்த கால வாழ்க்கையின் ரணங்களை பகிர்ந்து கொண்ட மாநபித்தோழர் உத்பா இப்னு கஸ்வான் (ரலி)…
எந்த போராட்டமும், இரத்தமும் சிந்தாமல் உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்களின் தலைமையில் பாரசீக வெற்றி சாத்தியமானது.
உபுல்லாவின் கோட்டைக்குள் நுழைந்த முஸ்லிம் படையினருக்கு ஆச்சர்யம் தாளவில்லை.
கோட்டைக்குள் பொன்னும், பொருளும் மலை போல் குவிந்து கிடந்தது.
கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு இந்த வெற்றியை குறித்தும் எதிர்கால திட்டம் குறித்தும் விரிவான ஒரு கடிதத்தை எழுதினார்கள்.
அதில் உடனடியாக அங்கே ஓர் பள்ளிவாசலை நிறுவ வேண்டும் என்றும் உபுல்லாவின் கோட்டையை இஸ்லாமிய இராணுவத்தளமாகவும், ஒரு நகரை உருவாக்கி ஆட்சியின் தலைமையிடமாகவும் அமைக்க வேண்டும்கொண்டு என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள்.
உத்பா (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதற்கு இசைவு தந்தார்கள்.
பஸ்ரா எனும் நகரை உருவாக்கி, ஒரு பள்ளிவாசலையும் நிறுவி, இராணுவத் தலைமையிடத்தையும் உருவாக்கினார்கள்.
கலீஃபா உமர் (ரலி) அவர்கள் உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்களையே இஸ்லாமிய அரசின் முதல் ஆளுநராக நியமித்தார்கள்.
பாரசீகத்தின் வளங்களைக் கேள்விப் பட்ட மதீனத்து முஸ்லிம்கள் பெருமளவில் பஸராவிற்கு குடிபெயர்ந்தார்கள்.
ஆனால், மிகவும் துடிப்போடு இருந்த முஸ்லிம்கள் பாரசீக வளங்களைக் கண்டதும் ரொம்பவே மாறிப் போய் விட்டார்கள்.
நிலம் வாங்குவதிலும், வீடு கட்டுவதிலும் தங்களை முழு வீச்சில் ஈடுபடுத்திக் கொண்ட முஸ்லிம்களைக் கண்டதும் கலங்கிப் போன உத்பா (ரலி) ஆழ்ந்த கவலையில் மூழ்கிப் போனார்கள்.
இப்படியே போனால், சொகுசு வாழ்க்கையில் இம்மக்கள் மூழ்கிப்போனால் ஈமானிய வாழ்க்கையை இழந்து விடுவார்களோ? என்ற அச்சம் உத்பா (ரலி) அவர்களின் ஆழ்மனதை ரணமாக்கிக் கொண்டிருந்தது.
أخبرنا يحيى بن محمود بن سعد بإسناده عن أبي بكر بن أبي عاصم قال: حدثنا أزهر بن حميد أبو الحسن، حدثنا محمد بن عبد الرحمن الطفاوي، حدثنا أيوب السختياني، عن حميد بن هلال، عن خالد بن عمير: أن عتبة بن غزوان - وكان أمير البصرة - خطب فقال في خطبته:
" ألا إن الدنيا قد ولّت حذّاء، ولم يبق منها إلا صبابة كصبابة الإناء يتصابها أحدكم، وإنكم ستنتقلون منها لا محالة، فانتقلوا منها بخير ما بحضرتكم إلى دار لا زوال لها ، وأعوذ بالله أن أكون عظيماً في نفسي صغيراً في أعين الناس، "
நிலைமை விபரீதமாவதற்குள் மக்கள் அனைவரையும் பள்ளிவாசலில் ஒன்று கூட ஆணையிட்டார்கள்.
மக்கள் ஒன்று கூடியதும், மக்கள் திரள் நோக்கி “மக்களே! அறிந்து கொள்ளுங்கள்! இவ்வுலக வாழ்வும் அதன் சொகுசும் மிக விரைவில் அழிந்து போய் விடும்! அழிவே இல்லாத ஒரு உலகத்தை நோக்கியே நாம் வாழ வேண்டும் என நபி {ஸல்} அவர்களால் வழிகாட்டப்பட்டு இருக்கின்றோம்.
அந்த உலகத்திற்கு நீங்கள் செல்ல வேண்டுமேயானால் மிகச் சிறந்த நற்செயல்கள் செய்திருக்க வேண்டும்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இஸ்லாத்தை அறிமுகம் செய்த போது அவர்களுடன் இருந்தது ஒரு சின்னஞ்சிறு கூட்டம் அந்தக் கூட்டத்தில் ஏழாவது நபராக நான் இருந்தேன்.
لقد رأيتني سابع سبعة مع رسول الله صلى الله عليه وسلم، ما لنا طعام إلا ورق الشجر، حتى قرحت اشداقنا.
அண்ணலாரையும், அவர்தம் குடும்பத்தார்களையும், தோழர்களையும் ஊர் விலக்கு செய்து அபூ தாலிப் கணவாயில் தங்கியிருந்த போது அவர்களுள் நானும் ஒருவன், உண்ண உணவின்றி இலைகளையும், தழைகளையும் உண்டதால் எங்களின் உதடுகளிலும் வாய்களிலும் கொப்பளங்கள் ஏற்பட்டது.
ولقد رزقت يوما بردة، فشققتها نصفين، أعطيت نصفها سعد بن مالك، ولبست نصفها الآخر"
மேலும், என்னிடம் அணிந்து கொள்ள ஆடை கூட கிடையாது, ஒரு போது யாரோ தூக்கியெறிந்த ஒரு பழைய துணி ஒன்று வீதியில் கிடந்தது. அதை எடுத்து பாதியாகக் கிழித்து நானும் ஸஅத் இப்னு மாலிக் (ரலி) அவர்களும் இடுப்பில் அரைத் துணியாக கட்டிக் கொண்டோம்.
ஆனால், இன்றோ அக்குழுவில் இருந்த எங்களில் சிலர் சில நகரங்களுக்கு தலைவர்களாக ஆகியிருக்கின்றோம்.
உலக மக்களின் பார்வையில் நான் உயர்ந்தோனாகவும், அல்லாஹ்வின் பார்வையில் கீழோனவனாகவும் ஆகிவிடாமல் இருக்க அவனிடமே நான் பாதுகாவல் தேடுகின்றேன்!” என்று கூறி தமது உரையை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.
கை விட்டுப்போனது குறித்து கவலைப்படாதே!..
لِّـكَيْلَا تَاْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰٮكُمْؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِۙ
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியைஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்”. ( அல்குர்ஆன்: 57: 23 )
கண் முன்னே இருக்கும் பிரச்சனைகள் குறித்து கவலைப்படாமல் இந்த உம்மத்தின் நீண்ட எதிர்காலம் குறித்த லட்சியமே மிகைத்திருக்க வேண்டும் என வழிகாட்டிய மாநபி {ஸல்} அவர்கள்…
وعن البراء بن عازب رضي الله عنه قال: (أمرنا رسول الله صلى الله عليه وسلم بحفر الخندق، قال وعرض لنا فيه صخرة لم تأخذ فيها المعاول، فشكوناها إلى رسول الله صلى الله عليه وسلم، فجاء فأخذ المعول ثم قال
بسم الله، فضرب ضربة، فكسر ثلث الحجر، وقال
الله أكبر ، أعطيتُ مفاتيح الشام، والله إني لأبصر قصورها الحمر من مكاني هذا، ثم قال: بسم الله، وضرب أخرى، فكسر ثلث الحجر، فقال
الله أكبر، أعطيت مفاتيح فارس، والله إني لأبصر المدائن، وأبصر قصرها الأبيض من مكاني هذا، ثم قال: بسم الله، وضرب ضربة أخرى فقلع بقية الحجر، فقال
الله أكبر، أعطيت مفاتيح اليمن، والله إني لأبصر أبواب صنعاء من مكاني هذا) رواه أحمد.
அஹ்ஸாப் யுத்தத்தில் அகழ் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த முஹாஜிரீன்கள் மற்றும் அன்சார்கள் கலந்திருந்த ஒரு குழுவில் ஸல்மான் (ரலி) பணியாற்றிக் கொண்டிருந்தார். பெரும் பாறையொன்று எதிர்ப்பட்டது. தகர்க்கவே இயலவில்லை. பாறையைச் சுற்றிக் கொண்டு அகழை வெட்டிக் கொண்டு செல்லவும் மனமில்லை. இறைத்தூதர் இட்ட கட்டளை ஆயிற்றே! எனவே, ஓடோடிச் சென்று இறைத்தூதரையே உதவிக்கு அழைத்து வந்தனர்.
பெருமானார் {ஸல்} வந்து பார்த்தார்கள். கோடாரியை கையில் வாங்கி (“உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மை….. முழுமையாக உள்ளது”) என்று கூறிக் கொண்டே ஒரே போடாய் போட்டார்கள். மின்னலென ஓர் ஒளிக்கீற்று தெறித்தது. பாறையின் கால்பாகம் பிளந்து போனது.
(“உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும், நீதியும் உள்ளது”) என்று கூறியவாறு மீண்டும் அடித்தார்கள். இன்னொரு பாகம் கழன்று போனது. பிறகு மூன்றாம் முறையாக (“உம்முடைய இறை வனின் வாக்கில் உண்மையும் நீதியும் உள்ளன. அவனுடைய வார்த்தை களை மாற்றக் கூடியவர் யாரும் இல்லை!”) என்று கூறினார்கள். பாறை முழுவதுமாய் தூள் தூளானது.
பிறகு, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸல்மான் (ரழியல்லாஹு அன்ஹு) இறைத்தூதரை அணுகி, ‘அண்ணலே! தாங்கள் ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் ஓர் ஒளிக் கீற்று வெளிப்பட்டதே! என்ன அது?’ என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘ஸல்மானே!’ நீங்கள் கவனிக்கவில்லையா? முதல் ஒளிக் கீற்றில் யமன், மாளிகைகளை நான் பார்த்தேன். (அவற்றை முஸ்லிம்கள் வெற்றி கொள்வர்!) இரண்டாவது ஒளிக்கீற்றில் ரோமானியர்களின் சிவப்பு அரண்மனையைக் கண்டேன். (அவற்றையும் வெற்றி கொள்வர்!) மூன்றாவது ஒளிக்கீற்றில் மதாயின் (கிஸ்ராவின்) மாளிகைகளைக் கண்டேன்!’ என்று கூறினார்கள்.
எதிரிகளின் கொடூரமான முற்றுகை நிலையில் பட்டினியோடும் , குறைந்த பட்ச ஆயுத வலிமையிலும் நின்று சொல்லப்பட்ட இந்த முன்னறிவிப்பை அந்த நபித்தோழர்கள் மத்தியில் மாநபி {ஸல்} வெளியிட்டபோது அவர்களது பார்வை இது விஷயத்தில் தங்களை பங்காளியாக்கும் போராட்ட உணர்வையே ஏற்படுத்தியது .
சத்தியத்தின் கரங்களால் குறிப்பிடப்பட்ட அந்தப் பகுதிகளை தட்டித் திறக்கும் கடின முயற்சிக்கு தமது உள்ளக் கதவுகளை தெளிவோடு திறந்தார்கள் என்பதும் காலத்தின் பரிணாமத்தில் அந்த வெற்றிகள் காலம் கடந்தவையாகவே கிடைக்கவும் பெற்றுள்ளதை வரலாறு காட்டி நிற்கின்றது .
நீதி வெல்லும் அந்த நாளுக்காக காத்திருந்த மாநபி {ஸல்} அவர்கள்…
பெருமானார் {ஸல்} அவர்கள் மக்காவின் 13 ஆண்டுகால வாழ்வில் எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக்கொண்டார்கள். பொறுமையைக் கையாளுமாறு உம்மத்தை வேண்டிக் கொண்டார்கள்.
மாநபி {ஸல்} அவர்கள் மதீனாவின் வாழ்க்கையில் போராடினார்கள். போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு உம்மத்திற்கு அழைப்பு கொடுத்தார்கள்.
ஆனால், மக்கா வாழ்க்கையிலும் சரி, மதீனா வாழ்க்கையிலும் சரி இறையில்லம் (கஅபா) தொடர்பான விவகாரத்தில் மட்டும் காத்திருந்தார்கள். அந்தக் காத்திருப்பு இன்று வரை வீண் போகவில்லை. அதற்குப் பின்னர் இன்று வரை அது இந்த உம்மத்தின் கரங்களில் மட்டுமே இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் மறுமை வரையிலும் இருக்கும்.
ولما أشرقت شمس الإسلام يوم فتح مكة المكرمة، أخذ نبينا محمد (صلى الله
عليه وسلم) من عثمان بن طلحة بن أبي طلحة الحجبي سادن الكعبة المفتاح، وفتح بابها،
ودخلها بعد تطهيرها من الأصنام. فقد «روى ابن عباس، رضي الله عنهما، أن رسول الله
(صلى الله عليه وسلم) لما قدم مكة أبى أن يدخل البيت وفيه الآلهة، فأمر بها،
فأخرجت، فأخرج صورة إبراهيم وإسماعيل وفي أيديهما من الأزلام، فقال النبي (صلى الله
عليه وسلم): قاتلهم الله لقد علموا ما استقسما بها قط، ثم دخل البيت، فكبر في
نواحي البيت، وخرج ولم يصل فيه» رواه
البخاري.
وعن ابن عمر، رضي الله عنهما، قال «أقبل رسول الله (صلى
الله عليه وسلم) عام الفتح على ناقة لأسامة بن زيد، حتى أناخ بفناء الكعبة، ثم
دعا عثمان بن طلحة، فقال: ائتني بالمفتاح، فذهب إلى أمه، فأبت أن تعطيه، فقال:
والله لتعطينه أو ليخرجن هذا السيف من صلبي، قال: فأعطته إياه، فجاء به إلى النبي (صلى الله عليه
وسلم) فدفعه إليه، ففتح الباب، قال: ثم دخل النبي (صلى الله عليه وسلم) وبلال
وأسامة بن زيد وعثمان بن طلحة، وأمر بالباب فأغلق، فلبثوا فيه مليا، ثم فتح الباب»
رواه البخاري
ومنذ يوم فتح مكة أقر رسول الله صلى الله عليه وسلم سدانة الكعبة لآل شيبة وثبتها لهم، وقال الرسول الكريم: (خذوها يا بني طلحة خالدة تالدة لا ينزعها منكم إلا ظالم)، وأيضا أجمع المفسرون على أن سبب نزول قول الله تعالى (إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الأمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا)، هو أداء مفتاح الكعبة لآل الشيبي»، ويختتم بالقول «ونرجو الله أن يعيننا على هذه الأمانة الكبيرة».
ஜாஹிலிய்யா (அறியாமைக்) காலத்தில் கஅபா ஆலயத்தைப் பாரமரிக்கும் பொறுப்பு உஸ்மான் பின் தல்ஹா அவர்களுடைய குடும்பத்தினரான ”ஆலுஷைபா” குடும்பத்தினரிடம் இருந்தது. கஅபாவின் திறவுகோலும் அவர்களிடம்தான் இருந்தது.
கஅபாவின் ஆலயத்திற்கு உள்ளாகச் சென்று அவ்வளவு எளிதாக யாராலும் தரிசித்து விடமுடியாது. அவர்கள் விரும்புபவர்களை ஆலயத்திற்கு உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். விரும்பாதவர்களை அனுமதிக்க மாட்டார்கள்.
இஸ்லாத்தின் கொள்கைகளை எடுத்தியம்பிய ஆரம்ப நாட்களில் ஒருமுறை மாநபி {ஸல்} அவர்கள் உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம், தங்களையும் அந்த ஆலயத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்குமாறு வேண்டினார்கள்.
உஸ்மான் அவர்களோ அப்போது இறை நிராகரிப்பாளராய் இருந்த தருணம் அது. நபிகளார் மீதும் இஸ்லாத்தின் மீதும் அதிக வன்மம் கொண்டிருந்த நேரமும் கூட. அனுமதி மறுத்து விட்டார் உஸ்மான். நபிகளாருக்கு அது பெரும் மனவருத்தத்தைத் தந்தது.
அந்த வருத்தத்துடனேயே உஸ்மான் பின் தல்ஹா அவர் களிடம் நபிகளார் “உஸ்மான்! ஒன்றை நன்றாக நினைவில் வைப்பீராக! இதோ இப்போது உமது கரங்களில் இருக்கும் இந்தத் திறவுகோல்.. நிச்சயம், ஒருநாள் என் கரங்களுக்கு வரும். அப்படி வரும் அந்த நாள் வெகு தொலைவிலும் இல்லை. அந்த நாளில் அந்தத் திறவுகோலை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற அதிகாரமும் என்னிடம் இருக்கும். என்பதை நினைவில் வைப்பீராக! மறந்துவிடாதீர்!” என்று கூறினார்கள்.
இதனைக் கேட்டதும் தான் தாமதம், உஸ்மான் பின் தல்ஹா “முஹம்மதே! அப்படி ஒருநாள் வரவே வராது. அவ்வாறு வந்துவிட்டால் அந்த நாளில் இந்த உஸ்மான் மண்ணுக்கு மேலாக உயிரோடு இருப்பதைவிட மண்ணுக்கு கீழாக புதைந்து போயிருப்பான்”. என்று கூறினார்.
நாட்களும், வருடங்களும் நம் கட்டளைப் பிரகாரம் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்ன? அந்த நாளும் வந்தது. ஆம்! ஹிஜ்ரி எட்டு மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. வெற்றித் திருமகனாய் மாநபி {ஸல்} அவர்கள் கஅபாவுக்கு முன்பாக அமர்ந்து இருக்கின்றார்கள்.
கஅபாவைத் திறந்து அங்கிருக்கும் சிலைகளை அகற்றி தூய்மை படுத்தவேண்டும். என்ன செய்வது? திறவுகோல் அது உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம் அல்லவா இருக்கிறது.
பழைய உரையாடல்கள் மின்னலாய் வந்து போகிறது. அருகில் இருந்தவர்களிடம் நபிகளார் {ஸல்} அவர்கள் கேட்டார்கள், “உஸ்மான் எங்கே?”. “இதோ இருக்கின்றேன்” என்று கூறுகின்றார். “கஅபாவின் திறவுகோல் எங்கே?”. “இதோ இருக்கிறது” என்று கூறி தன்னிடம் இருந்த சாவியை எடுத்துக் கொடுக்கின்றார்.
திறவுகோலை வாங்கிய நபிகளார் {ஸல்} அவர்கள் ஒரு கணம் அந்த திறவுகோலைப் பார்க்கிறார்கள்.
அந்தப் பார்வையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் நிரம்பி இருந்தன. என்ன வேண்டுமெனாலும் செய்வதற்கான அதிகாரம் இப்போது தன்னிடம் இருக்கிறது. இந்தச் சாவியைக் கூட தாம் விரும்பும் யாருக்கு வேண்டுமென்றாலும் கொடுக்கும் அதிகாரமும் உள்ளது. காலம் காலமாக அதனைத் தங்கள் கைவசம் வைத்திருந்த உஸ்மான் பின் தல்ஹா அவர்களும் அங்கே நிற்கின்றார்கள்.
கஅபாவைப் பராமரிக்கும் பணி என்பது மிகவும் கண்ணியமான பணி. யாருடைய குடும்பத்திற்கு அந்த நற்பேறு வழங்கப்படுகிறதோ அவர்களுக்கு ஒட்டுமொத்த மக்களும் கண்ணியம் கொடுப்பார்கள். ஆகவே அனைவரது கண்களும் அந்தத் திறவுகோல் மீதே இருந்தது.
அண்ணலாருக்கு அருகே அவரது பெரியதந்தை அப்பாஸ் (ரலி) அவர்களும், அலீ (ரலி) அவர்களும் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அப்பாஸ் (ரலி) அவர்கள் காதருகே குனிந்து பெருமானார் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! அந்தத் திறவுகோலை என்னிடம் தாருங்கள். இன்றுமுதல் இந்த ஆலயத்தைப் பராமரிக்கும் பணியை நான் மேற்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் ஒன்றை வைக்கின்றார்.
மாநபி {ஸல்} அவர்கள் பதில் ஏதும் கூறாமல் அப்படியே அந்த இடத்தை விட்டும் கடந்து போய் கஅபாவைத் திறந்தார்கள். சிலைகளை அகற்றி சுத்தம் செய்தார்கள். ஓரிடத்தில் இறைவனுக்கு நன்றி பாராட்டும் பொருட்டு தொழுதார்கள். உள்ளேயே வலம் வந்தார்கள்.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆம்! ஆலயத்திற்குள் வலம் வந்துகொண்டிருக்கும்போதே இறைக்கட்டளையுடன் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) வந்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! அந்தத் திறவுகோலை உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடமே ஒப் படைத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். பின்னர், பின்வரும் வசனம் இறக்கியருளப்பட்டது.
“(இறை நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். அமானத் - அடைக்கலப் பொருட்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள்; நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு வழங்குங்கள்.
திண்ணமாக, அல்லாஹ் உங்களுக்கு வழங்குகின்ற அறிவுரை மிக உன்னதமானதாகும். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 4: 58 )
இந்த வசனத்தை ஓதியவாறே கஅபாவை வலம் வந்த நபிகளார் {ஸல்} அவர்கள் பின்னர் வெளியே வந்து “உஸ்மான் பின் தல்ஹா எங்கே?” என்று கேட்டார்ர்கள்.
“இதோ இருக்கின்றேன் இறைத் தூதரே!” என்று கூறி தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறினார்.
அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் “நீட்டுங்கள்! உங்கள் கரங்களை” என்று கூற, கரத்தை நீட்டினார் உஸ்மான் இப்னு தல்ஹா (ரலி) அவர்கள்; அந்தக் கரத்தில் கஅபாவின் திறவுகோலை வைத்த பெருமானார் (ஸல்) அவர்கள் உஸ்மான் இப்னு தல்ஹா அவர்களே! “மறுமைநாள் வரை இது உங்கள் குடும்பத்தாரிடமே இருக்கும்” என்று சோபனம் கூறினார்கள். ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் )
காத்திருப்பதும் ஒரு வணக்கமே…
عن علي بن أبي طالب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:" انتظار الفرج من الله عز وجل عبادة
அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் புறத்திலிருந்து தாப்படும் மகிழ்ச்சிக்காக காத்திருப்பது வணக்கமாகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
وعن عبدالله بن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: " سلوا الله من فضله فإن الله يحب أن يسأل من فضله وأفضل العبادة انتظار الفرج " أخرجه الترمذي
அல்லாஹ்விடம் அவனுடைய மேலான அருளைக் கேளுங்கள்!! ஏனெனில், நிச்சயமாக! அல்லாஹ் அவனுடைய மேலான அருளை வேண்டி நிற்பவர்களை நேசிக்கின்றான். வணக்கத்தில் மிகச் சிறந்தது மகிழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருப்பதாகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார்கள். ( நூல்: திர்மிதீ )
பாபரி மஸ்ஜிதிற்காக அற வழியில் போராடினோம். ஜனநாயக ரீதியிலான அத்தனை போராட்ட வடிவங்களையும் கையில் எடுத்தோம். சட்ட போராட்டமும் நடத்தினோம்.
பொறுத்திருந்தோம்! போராடினோம்! காத்திருப்போம்!! இன்ஷாஅல்லாஹ் நீதி வெல்லும் ஒரு நாளை அல்லாஹ் நிச்சயம் தருவான் பாபரி மஸ்ஜிதை மீட்டெடுப்போம்!!!
மாஷா அல்லாஹ் தங்களது பானியில் நல்ல உணர்வூட்டல் பாரகல்லாஹ்
ReplyDeleteBarakallah moulana sirappaga ulladu
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒருநாள் பாபரி மஸ்ஜித் கட்டப்படும்.
ReplyDeleteபாரக்கல்லாஹ் உஸ்தாத்
அருமையான பதிவு
இன்ஷா அல்லாஹ் பாபரி மஸ்ஜித் மீண்டும் ஒருநாள் கட்டப்படும்.
ReplyDeleteஅருமையான பதிவு
பாரக்கல்லாஹ்
நிகழ்கால சூழலில்
ReplyDeleteநாம் எதிர்நோக்கவேண்டிய
கடமையையும் நிறைவான இறை நம்பிக்கை குறித்தும் அண்ணல் நபிமணியின் வாழ்வின் நிகழ்வை பாடமாக தன் பதிவில் தந்த கட்டுரை ஆசிரியர் ஆலிம் அவர்களின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் மன மகிழ்ச்சியையும்
இறையருளையும் நிறைவாக இறைவன் வழங்குவானாக ஆமீன்
Barakallah
ReplyDeleteMasha Allah
ReplyDelete