Thursday, 15 April 2021

இந்த ஐந்து அம்சங்களை கடைபிடித்து அமல் செய்வோம்!!

 

இந்த ஐந்து அம்சங்களை கடைபிடித்து அமல் செய்வோம்!!

 

 


 

பொதுவாக அமல்கள் மற்றும் வணக்க, வழிபாடுகள் விஷயத்தில் ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு ஐந்து அம்சங்கள் மிகவும் முக்கியமானதாகும்.

இந்த ஐந்து அம்சங்கள் தான் அந்த அமல்களின், வணக்க வழிபாடுகளின் மக்பூலிய்யத்திற்கு காரணமாக அமைகின்றன.

1.   நிய்யத்எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும். 2. ஜுஹ்த்தொடர் முயற்சி செய்வது. 3. செயல் படுத்துவது. 4. பூர்த்தியாக்குவது. 5. இக்லாஸ்மனத்தூய்மையோடு செய்வது.

நிய்யத்தும்மக்பூலிய்யத்தும்

 

إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنْفُسِهِمْ قَالُوا فِيمَ كُنْتُمْ قَالُوا كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ قَالُوا أَلَمْ تَكُنْ أَرْضُ اللَّهِ وَاسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا فَأُولَئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَسَاءَتْ مَصِيرًا (97) إِلَّا الْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيعُونَ حِيلَةً وَلَا يَهْتَدُونَ سَبِيلًا (98) فَأُولَئِكَ عَسَى اللَّهُ أَنْ يَعْفُوَ عَنْهُمْ وَكَانَ اللَّهُ عَفُوًّا غَفُورًا (99)

தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது அவர்களிடம் ”நீங்கள் எந்நிலையில் இருந்தீர்கள்? எனக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் ”பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம் என பதிலளிப்பார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையை? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா? எனத வானவர்கள் மீண்டும் கேட்பார்கள். இவர்களுக்குரிய இடம் நரகம் தான்! மேலும் அது மிக்க் கேடான இடமாகும். ஆனால், எவ்வித முயற்சியையும் மேற்கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் கிடைக்காமல், உண்மையிலேயே இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அல்லாஹ் மன்னிக்க்க்கூடும். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாகவும் பிழை பொறுப்பவனும் ஆவான்”.  ( அல்குர்ஆன்: 4: 97,98,99 )

இந்த இறைவசனம் ஹிஜ்ரத் செய்யாமல் ஊரிலேயே தங்கி விட்டிருந்தவர்களை குறித்து அல்லாஹ்வால் விமர்சித்து இறக்கப்பட்டது.

رُوي أنه لمّا نزلت هذه الآية سمعها رجل من بني ليث شيخ كبير مريض يقال له جُنْدُع بن ضَمْرة، فقال: والله ما أبيت الليلة بمكة، أخرجوني، فخرجوا به يحملونه على سرير حتى أتوا به التنعيم فأدركه الموت، فصفقَ يمينه على شماله ثم قال: اللهم هذه لك وهذه لرسولك أبايعك على ما بايعك عليه رسولك، فمات فبلغ خبرُه أصحاب رسول الله صلى الله عليه وسلم، فقالوا: لو وَافَى المدينة لكان أتم وأوْفَى أجرًا، وضحك المشركون وقالوا: ما أدرك هذا ما طلب، فأنزل الله: { وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ }  . أي: قبل بلوغه إلى مهاجره، { فَقَدْ وَقَعَ } أي: وجَبَ { أَجْرُهُ عَلَى اللَّهِ } بإيجابه على نفسه فضْلا منه، { وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا }

 

இந்த இறைவசனம் இறங்கிய செய்தி மதீனாவில் இருந்து மக்காவில் மிகவும் பலவீனமாக, சுகவீனமாகக் கிடந்த நபித்தோழர் ஜுந்துஃ இப்னு ளம்ரா (ரலி) அவர்களுக்கு கிடைத்த்து.

அல்லாஹ் நம் நிலையை பெண்களோடும், குழந்தைகளோடும் இணைத்துச் சொல்லி இருக்கின்றானே? என்று கூறி, தமது மக்களை அழைத்து என்னை எப்படியாவது மதீனாவில் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று விட்டு விடுங்கள், என்று முறையிட்டார்

முதலில் மறுத்த அவர்களின் மக்கள் பின்னர் ஒரு கட்டிலில் அவரை தூக்கி சுமந்து மதீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் பொது தன்யீம் எனும் இடத்தில் அபூளம்ரா (ரலி) அவர்களுக்கு வஃபாத்தின் அறிகுறி தென்பட்டது.

பின்பு வலது புறமாகத் திரும்பி “இறைவா! என்னுடைய இந்த பயணம் உனக்கானது! உனது ரஸூலுக்கானது. உனது ரஸூல் உன்னிடத்தில் எதன் மீது உறுதிப் பிரமாணம் செய்தார்களோ அதற்கானது” எனத் துஆ செய்தார். பின்பு வஃபாத்   ஆகிவிடுகிறார்கள் ஜுந்துஃ இப்னு ளம்ரா (ரலி).

மக்காவில் இருந்த இணை வைப்பாளர்கள் இதை கேள்விபட்டு ”ஒழுங்காக இங்கேயே இருந்திருந்தால் தமது மரண நேரத்தில் தமது குடும்பத்தார்களை கண்ணாரக் கண்டிருப்பார்.

முஹம்மத், முஹம்மத் என்று கூறி அநியாயமாக போகிற வழியிலேயே ஒரு வழிப் போக்கனைப் போல இறந்து விட்டாரே! என ஏளனமும், கேலியும் செய்தனர்.

மதீனாவில் இருந்த ஏனைய நபித்தோழர்களுக்கு இந்த செய்தி எட்டிய போது,

அல்லாஹ் விலக்கு அளித்தவர்களில் ஒருவராக இருந்த போதும்,இறையச்சத்தோடும், ஆர்வத்தோடும் ஹிஜ்ரத் செய்து ஹிஜ்ரத் பூமியின் (மதீனாவில்) என்லையில் வைத்து இறந்து, ஹிஜ்ரத் செய்த மொத்த நன்மையையும், பலனையும் அடையாமல் இறந்துவிட்டாரே என ஏக்கத்தோடும், வருத்தத் தோடும் கூறிக்கொண்டனர்.

அனைத்தையும் கேட்கும் ஆற்றல் பெற்றிருக்கும் வல்ல அல்லாஹ் இணைவைப்பாளர்களின் வசைபாடுதலையும் இறைநம்பிக்கையாளர்களின் ஆசை வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

அடுத்த கணமே... “எவர் அல்லாஹ்வின் வழியில் ஹிஜ்ரத் செய்கின்றாரோ, அவர் பூமியில் கணக்கிலடங்கா தங்குமிடங்களையும்  வாழ்விற்கான பெரும் வளங்களையும் காண்பார். மேலும், எவர் அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செய்வதற்காகத் தன்னுடையை வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு (வழியிலேயே) அவருக்கு மரணம் ஏற்பட்டு விட்டால், திண்ணமாக அவருக்கு நற்கூலி வழங்குவது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும். கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்”.

அல்குர்ஆன்: 4-100 எனும் இறைவசனத்தை இறக்கியருளி இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களை இன்புறச் செய்தான், இறை மறுப்பாளர்களின் செவிகளில் இடி விழச் செய்தான்.

இவ்வசனம் இறங்கியதும் ”ஹிஜ்ரத்திற்கான பயணத்தில் ஏற்படும் மரணத்திற்கு என்ன கூலி என்பதை தீர்வாக தந்துவிட்டல்லவா மரணமெய்திருக்கிறார் அபூளம்ரா (ரலி) என பெருமிதத்துடன் நபித்தோழர்கள் கூறினார்கள். ( நூல்: இஸ்தீஆப் பாகம் 2, பக்கம்-9 தஃப்ஸீர் இப்னு கஸீர்- பாகம்1, பக்கம் -710, 711 )

விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருந்தும் கூட தூய்மையான எண்ணத்தால் ஹிஜ்ரத் செய்ய விழைந்து மரணத்தைத் தழுவி மகத்தான நற்கூலிக்கு உரியவராக மாறியதோடல்லாமல் ஹிஜ்ரத் செய்த நிலையில் மரணத்தை தழுவியவருக்கான நற்கூலி என்னவென்பதை அல்லாஹ்விடம் இருந்து பெற்றும் தந்தார்கள்.  

முயற்சியும்மக்பூலிய்யத்தும்

أبي سعيد سعد بن مالك بن سنان الخدري 

قال

عن نبي الله ﷺ

كان فيمن كان قبلكم رجل قتل تسعة وتسعين نفسًا، فسأل عن أعلم أهل الأرض فدُل على راهب فأتاه فقال: إنه قتل تسعة وتسعين نفسًا، فهل له من توبة؟ فقال: لا، فقتله فكمل به مائة، ثم سأل عن أعلم أهل الأرض، فدُل على رجل عالم، فقال: إنه قتل مائة نفس، فهل له من توبة؟ فقال: نعم، ومن يحول بينه وبين التوبة؟ انطلق إلى أرض كذا وكذا، فإن بها أناسًا يعبدون الله تعالى فاعبد الله معهم، ولا ترجع إلى أرضك، فإنها أرض سوء، فانطلق حتى إذا نصف الطريق أتاه الموت، فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب، فقالت ملائكة الرحمة: جاء تائبًا مقبلاً بقلبه إلى الله تعالى، وقالت ملائكة العذاب: إنه لم يعمل خيرًا قط، فأتاهم ملك في صورة آدمي، فجعلوه بينهم -أي حكمًا- فقال: قيسوا ما بين الأرضيْن، فإلى أيتهما كان أدنى فهو له، فقاسوه فوجدوه أدنى إلى الأرض التي أراد، فقبضته ملائكة الرحمة

அபூ ஸயீதில் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒருமனிதன் இருந்தான். அவன் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்திருந்தான்!

பிறகு அவன், இந்தப் புவிவாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று விசாரித்தான். ஒரு துறவியின் பக்கம் அவனுக்கு வழி காட்டப்பட்டது. அவரிடம் வந்தான். நான் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்து விட்டேன். எனக்கு மன்னிப்பு உண்டா? என்று அவரிடம் கேட்டான். அவர், கிடையாது என்று சொல்லி விட்டார். உடனே அவரையும் கொலை செய்து அவருடன் நூறைப் பூர்த்தியாக்கினான்.

பிறகு இப்புவி வாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று கேட்டான். கல்லி அறிவுபெற்ற இன்னொரு மனிதரின் பக்கம் அவனுக்கு வழிகாட்டப்பட்டது. (அவரிடம் சென்று) கேட்டான்: நான் நூறு பேரைக் கொலை செய்துள்ளேன். எனக்குப் பாவமன்னிப்பு உண்டா?

அவர் சொன்னார்: ஆம், உண்டு! பாவமன்னிப்புப் பெறவிடாமல் உன்னை யாரால் தடுக்க முடியும்? நீ இன்ன இன்ன ஊருக்குச் செல்! அங்கு, அல்லாஹ்வை வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் உள்ளனர்., அவர்களுடன் சேர்ந்து நீயும் அல்லாஹ்வை வணங்கு. உனது சொந்த ஊருக்கு நீ திரும்பி விடாதே! அது கெட்டதொரு பூமியாகும்!

உடனே அவன் (அந்த ஊரை நோக்கிப்) புறப்பட்டான். பாதி வழி வந்திருக்கும்பொழுது மரணம் அவனைத் தழுவிக்கொண்டது! அவனைக் கைப்பற்றும் விஷயத்தில் கருணை மலக்குகளும் தண்டனை மலக்குகளும் தர்க்கம் செய்யலானார்கள்!

கருணை மலக்குகள் சொன்னார்கள்: இவன் பாவமீட்சி தேடியவனாக தனது இதயத்தால் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கியவனாக வந்துள்ளான்,. என்று! தண்டனை மலக்குகள் சொன்னார்கள்: இவன் எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை என்று!

இந்நிலையில் வேறொரு மலக்கு மனித வடிவத்தில் அங்கு வந்தார். அவரைத் தங்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும் நடுவராக்கினார்கள், அந்த மலக்குகள். அவர் சொன்னார்: இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரத்தை அளந்து பாருங்கள். இந்த மனிதன் எந்த ஊரின் பக்கம் நெருக்கமாக இருக்கிறானோ அந்த ஊரைச் சேர்ந்தவனாவான்! "

அவ்வாறு அளந்து பார்த்த பொழுது அவன்,எந்த ஊரை நாடி வந்தானோ அந்த ஊரின் பக்கம் நெருக்கமானவனாக இருந்தான். உடனே கருணை மலக்குகள் அவனைக் கைப்பற்றிக் கொண்டார்கள்!" (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஸஹீஹ் (முஸ்லிமின்) ஓர் அறிவிப்பில் வந்துள்ளது: அவன் நல்ல ஊரின் பக்கமே ஒருசாண் அளவு அதிக நெருக்கமாக இருந்தான். எனவே அவ்வூர்வாசிகளுடன் சேர்க்கப்பட்டான்

ஸஹீஹ் (முஸ்லிமின்) வேறோர் அறிவிப்பில் உள்ளது: இந்த ஊருக்கு நீ தூரமாகிவிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டான். மேலும் அந்த ஊருக்கு- நீ நெருக்கமாகிவிடு என்று கட்டளையிட்டான். மேலும் கூறினான்: (இப்பொழுது) இரு ஊர்களுக்கும் மத்தியில் அளந்து பாருங்கள் என்று! அதன்படி அந்த மனிதன் இந்த ஊரின் பக்கமே அதிக நெருக்கமாக இருக்கக் கண்டார்கள்!

ஸஹீஹ் (முஸ்லிமின்) இன்னோர் அறிவிப்பில் உள்ளது: அவன் தனது இதயத்தால் அந்த ஊரை நாடிப் புறப்பட்டான்.                                                ( நூல்: முஸ்லிம் )

செயல்பாடும்மக்பூலிய்யத்தும்

ஏகத்துவத்தை ஏற்று பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்ட ஓர் சமூகம்இறை வழிபாட்டில் ஒரு புது வித இன்பத்தை சுவைத்துக் கொண்டிருந்த இனிய தருணம்அச்சுறுத்தல்அடி உதைபெரும் காயம் உயிரிழப்பு ஊர் விலக்கம் என பல்வேறு அபாயகரமான கட்டங்களைத்தாண்டி வெற்றியின் சுகந்தத்தை நுகர ஆரம்பித்திருந்த இனிய பொழுது,

வருகிறது படைத்தோனாம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஓர் இறைக் கட்டளைஆம்நபித்துவத்தின் 15 –ஆம் ஆண்டு,  மதீனாவில் அடியெடுத்து வைத்திருந்த 2 –ஆம் வருடத்தின் ஒரு நாள் பொழுதின் உதய நேரத்தில். 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் மீது ஏனைய சமூக மக்களின் மீது கடமையாக்கப்பட்டது போன்று நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக மாற்றம் பெரும் பொருட்டு

அது வரை வல்லோனின் தூதை செவியேற்று இன்பமடைந்திருந்த அம் மேன்மக்கள் அப்போது தான் வல்லோனின் கட்டளைக்கு உருவாக்கம் கொடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

புதியதொரு கட்டளை, எத்தனை ஆண்டுகளோ, எத்தனை நாட்களோ இதை செய்ய ரஹ்மான் கட்டளையிடுகின்றானோ எனும் பதை பதைப்பு அம்மக்களின் இதயங்களில் ஊடுருவும் முன் அடுத்து அல்லாஹ்வே அதற்கான தெளிவையும் பிறப்பித்தான்.

أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

எண்ணப்படுகின்ற குறிப்பிட்ட நாட்கள்.

அடுத்து அந்த நாட்களின் மகோன்னதம் குறித்து அல்லாஹ் சிலாகித்துக் கூறினான்.

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُون 

ரமழான் மாதம், அது எத்தகையதென்றால் மக்களுக்கு நேர்வழியையும், தெளிவையும் பிரித்துக் கூறுகின்ற குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதம்.

பிறகென்ன அம்மேன்மக்களின் வாழ்க்கையில் இறையச்சம் பிரவாகமெடுத்து ஓடியதை இன்ன பிற இறைக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்ட போது பார்க்க முடிந்தது.

அல்லாஹ் அந்த ஒற்றைக் கட்டளையின் மூலம் எது உருவாகும் என்று சொன்னானோ, அதை பரிசோதிக்க திடீரென அடுத்த சோதனையாக, அதே ஆண்டில், அதே மாதத்தில், சில தினங்களில் பத்ரின் வடிவத்தில்.

பத்ருக்கான தயாரிப்பில் அம்மேன்மக்கள் முன் மொழிந்த வீர வார்த்தைகளை வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.

அல்லாஹ்வின் கட்டளையை அம்மக்கள் அணுகிய விதம் அல்லாஹ்வை ஆனந்தப்படுத்தியது. அல்லாஹ்வும் அம்மக்களை வெற்றியை கையில் வழங்கி ஆனந்தப்படுத்தினான். ஆம்! பத்ரில் மாபெரும் வெற்றி.

அது மாத்திரமல்ல அடுத்த 6 ஆண்டுகளில் இன்னொரு மாபெரும் வெற்றிஃபத்ஹ் மக்கா அதுவும் ரமலானில் தான் அல்லாஹ் அவர்களை கௌரவப்    படுத்தினான்.

அல்லாஹ்வின் இன்ன பிற ஏவல், விலக்கல்கள் அதன் பின்னரே அந்த சமூகத்தை வந்தடைந்தது.

நோன்பின் மூலமாக அச்சமூகம் அடைந்த இறையச்சம் அம்மேன்மக்களை பல்வேறு புகழாரங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற்றியது.

فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا

அல்லாஹ் இப்படிக் கூறினான்: “நீங்கள் ஈமான் கொண்டால் அவர்களைப் போன்று ஈமான் கொள்ளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் நேர்வழியில் நிலைத்திருக்க முடியும்.” எவ்வளவு உயர்ந்த ஒரு புகழாரம்!

இக்லாஸும்மக்பூலிய்யத்தும்... 

(حديث مرفوع) حَدَّثَنَا أَبِي ، وَرَقَبَةُ بْنُ مصقَلَةَ ، جَمِيعًا عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " انْطَلَقَ ثَلاثَةُ نَفَرٍ يَمْشُونَ ، فَدَخَلُوا فِي غَارٍ ، فَأَرْسَلَ اللَّهُ عَلَيْهِمْ صَخْرَةً فَأَطْبَقَتِ الْغَارَ عَلَيْهِمْ ، فَقَالَ بَعْضٌ لِبَعْضٍ : تَعَالَوْا ، فَلْيَنْظُرْ كُلُّ رَجُلٍ مِنَّا أَفْضَلَ عَمَلٍ عَمِلَهُ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ رَبِّهِ ، فَلْيَذْكُرْهُ ، فَلْيَدْعُ اللَّهَ ، لَعَلَّهُ أَنْ يُفَرِّجَ عَنَّا مَا نَحْنُ فِيهِ ، وَيُلْقِيَ عَنَّا هَذِهِ الصَّخْرَةَ ، فَقَالَ رَجُلٌ مِنْهُمْ : اللَّهُمَّ إِنَّكَ تَعْلَمُ أَنَّهُ كَانَتْ لِي ابْنَةُ عَمٍّ ، فَطَلَبْتُ مِنْهَا نَفْسَهَا ، فَقَالَتْ : لا وَاللَّهِ ، لا أَفْعَلُ حَتَّى تُعْطِيَنِي مِائَةَ دِينَارٍ ، فَطَلَبْتُهَا ، فَجَمَعْتُهَا بَيْنَ حِسِّي وَبِسِّي حَتَّى أَتَيْتُهَا بِهَا ، فَلَمَّا قَعَدْتُ مِنْهَا مَقْعَدَ الرَّجُلِ مِنَ امْرَأَتِهِ ارْتَعَدَتْ ، وَبَكَتْ ، فَقَالَتْ : يَا عَبْدَ اللَّهِ ، اتَّقِ اللَّهَ ، وَلا تَفْتَحْ هَذَا الْخَاتَمَ إِلا بِحَقِّهِ ، فَقُمْتُ عَنْهَا ، وَتَرَكْتُهَا لَهَا ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي تَرَكْتُهَا مِنْ مَخَافَتِكَ ، فَافْرُجْ عَنَّا مِنْهَا فُرْجَةً نَرَى السَّمَاءَ . قَالَ : فَفَرَّجَ اللَّهُ عَنْهُمْ فُرْجَةً ، فَنَظَرُوا إِلَى السَّمَاءِ وَقَالَ الثَّانِي : اللَّهُمَّ إِنَّكَ تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي أَبَوَانِ ، وَكَانَ لِي وُلْدٌ صِغَارٌ ، فَكُنْتُ أَرْعَى عَلَى أَبَوَيَّ ، فَكُنْتُ أَجِيءُ بِالْحِلابِ ، فَأَبْدَأُ بِأَبَوَيَّ ، فَأَسْقِيهِمْ ، ثُمَّ أَجِيءُ بِفَضْلِهِمَا إِلَى وُلْدِي ، وَإِنِّي جِئْتُ لَيْلَةً بِالْحِلابِ فَوَجَدْتُ أَبَوَيَّ نَائِمَيْنِ ، وَالصِّبْيَانُ يَتَضَاغَوْنَ مِنَ الْجُوعِ ، فَلَمْ أَزَلْ بِهِمْ حَتَّى نَامُوا ، ثُمَّ قُمْتُ بِالْحِلابِ عَلَيْهِمْ ، حَتَّى قَامَا فَشَرِبَا ، ثُمَّ انْطَلَقْتُ إِلَى الصِّبْيَةِ بِفَضْلِهِ فَسَقَيْتُهُمْ ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي صَنَعْتُ ذَلِكَ مِنْ مَخَافَتِكَ ، فَافْرُجْ عَنَّا مِنْهَا فُرْجَةً . قَالَ : فَفَرَّجَ اللَّهُ عَنْهُمْ مِنْهَا فُرْجَةً ، وَقَالَ الثَّالِثُ : اللَّهُمَّ إِنَّكَ تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي أَجِيرٌ ، فَأَعْطَيْتُهُ أَجْرَهُ فَغَمَطَهُ وَذَهَبَ وَتَرَكَهُ ، فَعَمِلْتُ لَهُ بِأَجْرِهِ حَتَّى صَارَ لَهُ بَقَرٌ وَرَاعِيهَا . قَالَ : فَأَتَانِي يَطْلُبُ أَجْرَهُ ، فَقُلْتُ : انْطَلِقْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرَاعِيهَا ، فَخُذْهَا . قَالَ : يَا عَبْدَ اللَّهِ ، اتَّقِ اللَّهَ ، وَلا تَهْزَأْ بِي ، قَالَ : قُلْتُ : انْطَلِقْ فَخُذْهَا . قَالَ : فَانْطَلَقَ فَأَخَذَهَا ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي إِنَّمَا فَعَلْتُ ذَلِكَ مِنْ مَخَافَتِكَ فَأَلْقِهَا عَنَّا . قَالَ : فَأَلْقَاهَا اللَّهُ عَنْهُمْ ، فَخَرَجُوا يَمْشُونَ " .

 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

(உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில்) மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்த போது (திடீரென்று) மழை பிடித்துக் கொண்டது. எனவே, அவர்கள் (ஒதுங்குவதற்காக) ஒரு மலைக் குகையை நோக்கிப் போனார்கள்.

 (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை அவர்களின் குகை வாசலை அடைத்துக் கொண்டது.

(வெளியேற முடியாமல் திணறிய) அவர்கள் (மூவரும்) திணறினர். அப்போது அவர்கள் தமக்குள்,  நாம் (வேறெவருடைய திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக (என்று தூய்யைமான முறையில்) செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை முன்வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்என்றார்கள்.

அல்லாஹ் இதன் மூலம்  இ(ப் பாறை)தனை (நம்மைவிட்டு) அகற்றிவிடக் கூடும்' என்று பேசிக்கொண்டனர்

எனவே, அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார்.

இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்த பின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டு வந்து என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முதலில் ஊட்டுவேன்.

(ஒரு நாள்) இலை தழைகளைத் தேடியபடி வெகு தூரம் சென்று விட்டேன். ஆதலால் அந்திப் பொழுதிலே தான் (வீட்டுக்கு) வர முடிந்தது. அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன்.

உடனே எப்போதும் போன்று பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன். அவர்கள் இருவருக்கும் முன் குழந்தைகளுக்கு முதலில் ஊட்டுவதையும் நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ என்னுடைய காலருகில் (பசியால்) கதறிக்கொண்டிருந்தனர்.

இதே நிலையில் நானும் அவர்களும் இருக்க, வைகறை வந்துவிட்டது. (இறைவா!) நான் இச்செயலை உன்னுடைய திருப்தியை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால் எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்திடுவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொள்வோம்என்றார்.

அவ்வாறே அல்லாஹ் அவர்களுக்குச் சற்றே நகர்த்திக்கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தார்கள்.

இரண்டமாவர் (பின்வருமாறு) வேண்டினார்.

இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். (ஒரு நாள்) அவளிடம் அவளைக் கேட்டேன். நான் அவளிடம் நூறு பொற்காசுகள் கொண்டு கொடுத்தாலே  தவிர (எனக்கு இணங்க முடியாதென) அவள் மறுத்து விட்டாள்.

நான் முயற்சிசெய்து, (அந்த) நூறு பொற்காசுகளைச் சேகரித்தேன். நான் அதனுடன் சென்று அவளைச் சந்தித்து, அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே அமர்ந்தபோது அவள் 'அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! முத்திரையை அதற்குரிய (சட்ட பூர்வ) உரிமை(யான திருமணம்) இன்றித் திறக்காதே' என்று சொன்னாள். உடனே நான் அவளைவிட்டுவிட்டு எழுந்துவிட்டேன்.

(இறைவா!) இதை உன் திருப்தியைப் பெற விரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக (இன்னும் சற்று) நகர்த்திடுவாயாக!  என்றார்.

அவ்வாறே (அல்லாஹ்) அவர்களுக்கு (இன்னும்) சற்றே நகர்த்திக்கொடுத்தான்.

மூன்றாமவர் (பின்வருமாறு) வேண்டினார்:

இறைவா! நான் ஒரு 'ஃபரக்' அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து கூலியாள் ஒருவரை (பணிக்கு) அமர்த்தினேன்.  அவர் தம் வேலை முடிந்தவுடன், 'என்னுடைய உரிமையை (கூலியை)க் கொடு' என்று கேட்டார்.  நான் (நிர்ணயித்தபடி) அவரின் உரிமையை (கூலியை) அவர் முன் வைத்தேன்.  அதை அவர் பெற்றுக்கொள்ளாமல் (என்னிடமே) விட்டுவிட் (டுச் சென்று விட் )டார்.

பின்னர் நான் அதை (நிலத்தில் விதைத்து) தொடர்ந்து விவசாயம் செய்து வந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)லிருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர்களையும் நான் சேகரித்துவிட்டேன்.

பின்னர் (ஒருநாள்) அவர் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! எனக்கு அநியாயம் புரியாதே! என்னுடைய உரிமையை என்னிடம் கொடுத்துவிடு' என்று கூறினார்.

அதற்கு நான், 'அந்த மாடுகளிடமும் அவற்றின் இடையர்களிடமும் நீ செல்! (அவை உனக்கே உரியவை)' என்று சொன்னேன். அதற்கு அம்மனிதர், 'அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! என்னைப் பரிகாசம் செய்யாதே!  என்று கூறினார்.

 நான், 'உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும் நீயே எடுத்துக்கொள்' என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்தபடி நடந்தார்.

(இறைவா!) நான் இந்த(நற்) செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதியிருந்தால் மீதமுள்ள அடைப்பையும் நீ அகற்றிடுவாயாக!என்றார்.

அவ்வாறே அல்லாஹ் அப்பாறையை  அவர்களைவிட்டும்  (முழுமையாக) அகற்றிவிட்டான்.                                                                                                            (  நூல்: புகாரீ )

பூர்த்தியும்மக்பூலிய்யத்தும்

எந்த அமலைச் செய்தாலும் அதை முழுமையாக பூர்த்தியாக்க வேண்டும் அந்த அமலையும் மக்பூலிய்யத்தைப் பெறும் தகுதியானதாக அல்லாஹ் ஆக்குகின்றான்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் பல்வேறுபட்ட பிரார்த்தனைகளின் அங்கீகாரம் என்பது ஒவ்வொரு அமலின் இறுதியில் அமைந்திருப்பதைக் காணலாம்.

وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ (84)

இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் “இறைவா! என்னை பின் வரும் மக்களால் பேசப்படக்கூடியவராக ஆக்கிவிடு” ( அல்குர்ஆன்: 26: 84) என்று துஆச் செய்தார்கள்.

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَابُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَاأَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ (102)

فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ (103) وَنَادَيْنَاهُ أَنْ يَاإِبْرَاهِيمُ (104) قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (105) إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ (106) وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ (107) وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ (108)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கனவில் கண்டது போன்று தம்முடைய மகனை அறுத்துப்பலியிட முனைந்து அந்த அமலைப் பூர்த்தியாக்கிய போது இப்ராஹீம் (அலை) அவர்களை இந்த உலகில் உள்ள அனைத்து மக்களாலும் பேசப்படுகிற ஒருவராக ஆக்கினான். என்று அல்குர்ஆனின்  வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

கஅபாவை நிர்மாணித்த பின்னர் அல்லாஹ்விடம் பிரத்யேகமான நான்கு துஆக்களை இப்ராஹீம் (அலை) கேட்டார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த நான்கு துஆக்களையும் நிறைவேற்றித் தந்தான்.

وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ (125) وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ (126)

وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ (127) رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ (128) رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ (129)

மாநபி {ஸல்} அவர்கள் நபியாக அனுப்பப்பட்டதும் இப்ராஹீம் (அலை) அவர்களின் மகத்தான பிரார்த்தனையால் தான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இப்ராஹீம் (அலை) அவர்களைக் குறித்து குறிப்பிடும் பொழுது…

وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ (124)

“மேலும், இப்ராஹீமை அவரது ரப்பு சில கட்டளைகளைக் கொண்டு சோதித்த போது அவர் அவைகளை முழுமையாக்கி விட்டார். மெய்யாக நான் உம்மை மனிதர்களுக்கு தலைவராக ஆக்குகின்றேன் என்று அல்லாஹ் கூறினான். “எனது சந்ததியில் இருந்தும் நீ தலைவர்களை ஏற்படுத்து” என்று இப்ராஹீம் கூறினார். எனது இவ்வாக்குறுதி உமது சந்ததியினரில் அநியாயக்காரர்களைச் சாராது” என அல்லாஹ் கூறினான்.

அல்லாஹ்வின் இந்த வாக்குறுதிப்படி இஸ்ரவேலர்களின் 3000 க்கும் மேற்பட்ட நபிமார்களை அல்லாஹ் இஸ்ஹாக் (அலை) அவர்களின் சந்ததியில் இருந்தும், ஈருலக சர்தார் முஹம்மது {ஸல்} அவர்களை அல்லாஹ் இஸ்மாயீல் (அலை) அவர்களின் தலைமுறையில் இருந்தும் வழங்கினான்

இவை எல்லாவற்றிற்கும் காரணம் இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் எந்த கட்டளையாக இருந்தாலும் அதை முழுமையாகச் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ

நோன்பைப் பற்றி அல்லாஹ் கூறும் போது கூட “நீங்கள் நோன்பினுடைய எண்ணிக்கையை பூர்த்தியாக்குங்கள்” என்றே கூறுகின்றான்.

எனவே, நாம் ரமலானில் முப்பது நோன்புகளையும் பூர்த்தியாக நோற்க வேண்டும். அதன் நிபந்தனைகள் மற்றும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நோற்க வேண்டும்.

எனவே, நாம் ரமலானில் செய்கிற எந்த அமலாக இருந்தாலும் இந்த ஐந்து அம்சங்களை கடைபிடித்து மக்பூலிய்யத்தைப் பெறுவோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன்! நம்முடைய அனைத்து அமல்களையும் மக்பூலிய்யத் பெற்ற அமலாக ஆக்கியருள்வானாக!!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

 

 

4 comments:

  1. மாஷா அல்லாஹ் பரிபூரணமான எடுத்துக்காட்டு சிறந்த தொகுப்பு பாரக்கல்லாஹ் உஸ்மானியாரே ஃபதபாரக்கல்லாஹ்.....ஜாபர் வாஹிதி ஈரோடு

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
    இரமலானின் இபாதத்துக்கான முழு பூஸ்டர். الحمد لله وجزاكم الله خير الجزاء يا استاذ الكريم

    ReplyDelete