Wednesday, 13 April 2022

தெவிட்டாத தேன்மறை – தராவீஹ் உரை:- 12. அழகாகப் பேசுவோம்! அழகானதைப் பேசுவோம்!!

 

தெவிட்டாத தேன்மறைதராவீஹ் உரை:- 12.

அழகாகப் பேசுவோம்! அழகானதைப் பேசுவோம்!!



அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் 11 –வது நோன்பை நோற்று, 12 – வது தராவீஹை நிறைவு செய்து, 12 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் அந் - நஹ்ல் அத்தியாயத்தின் எஞ்சிய 40 வசனங்களையும், சூரா பனீ இஸ்ராயீல் நிறைவு செய்யப்பட்டு சூரா அல் கஹ்ஃபின் 74 வசனங்கள் என 264 வசனங்கள் 225 ஓதப்பட்டுள்ளது.

இன்றைய தராவீஹ் தொழுகையின் 8 –வது ஸலாத்தின் “வல்யதலத்தஃப்” எனும் வார்த்தையோடு குர்ஆனின் சரிபாதி எழுத்துக்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தராவீஹ் தொழுகையோடு குர்ஆனின் சரிபாதி 15 ஜுஸ்வுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!!!

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட பனீ இஸ்ராயீல் அத்தியாயத்தின் 53 ம் வசனத்தில் அல்லாஹ் மனித சமூகத்தை அழகியதைப் பேசுமாறும், அழகாகப் பேசுமாறும் வலியுறுத்துவதைப் பார்க்கின்றோம்.


وَقُل لِّعِبَادِى يَقُولُواْ ٱلَّتِى هِىَ أَحْسَنُ ۚ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ ۚ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُّبِينًا

(முஹம்­மதே!) அழ­கி­ய­வற்­றையே பேசு­மாறு எனது அடி­யார்­க­ளுக்குக் கூறு­வீ­ராக! ஷைத்தான் அவர்­க­ளி­டையே பிளவை ஏற்­ப­டுத்­துவான். ஷைத்தான் மனி­த­னுக்குப் பகி­ரங்க எதி­ரி­யாவான்.                               ( அல்­குர்ஆன்: 17: 53 )

ஓர் இறை நம்பிக்கையாளனின் பேச்சில் உண்­மையும் அழகும் இருக்க வேண்டும், ஆழ் மன­தி­லி­ருந்து வரும் நேர்­மை­யான வார்த்­தை­க­ளா­கவும் அவை இருக்க வேண்டும், ஏனெனில்,  உண்­மையும், நேர்மையும் அழ­கான பேச்­சுக்­களும் ஓர் இறை­நம்பிக்கையாளனுக்கான சிறந்த அடை­யா­ள­மாகும். எனவே தான் அல்லாஹ் என் அடியார்களை “அழகானதைப் பேசுமாறு சொல்லுங்கள் நபியே!” என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அழகான பேச்சுக்களின் மகத்துவமே தனியானது...

اَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللّٰهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ اَصْلُهَا ثَابِتٌ وَّفَرْعُهَا فِى السَّمَآءِۙ‏

(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.                                     ( அல்குர்ஆன்:14: 24. )

مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِيْعًا ؕ اِلَيْهِ يَصْعَدُ الْـكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهٗ ؕ وَ الَّذِيْنَ يَمْكُرُوْنَ السَّيِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ وَمَكْرُ اُولٰٓٮِٕكَ هُوَ يَبُوْرُ

எவர் இஸ்ஸத்தை கண்ணியத்தை நாடுகிறாரோ, அவர், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வார்த்தைகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன;

(அல்குர்ஆன்: 35:10.)

இந்த வசனங்களை படிகின்ற போது நமது பேச்சினூடே வெளிப்படும் அழகிய வார்த்தைகளுக்கு இறைவனிடத்தில் எவ்வளவு பெரிய அந்தஸ்து இருக்கிறது என்பதை  விளங்கமுடிகிறது.

தர்மம் செய்த நன்மையைப் பெற்றுத் தரும்...

حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«كُلُّ سُلاَمَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ، يَعْدِلُ بَيْنَ الِاثْنَيْنِ صَدَقَةٌ، وَيُعِينُ الرَّجُلَ عَلَى دَابَّتِهِ فَيَحْمِلُ عَلَيْهَا، أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ، وَكُلُّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ، وَيُمِيطُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ»

அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள், “மக்கள் தமது மூட்­டுக்கள் ஒவ்­வொன்­றுக்­கா­கவும் சூரியன் உதிக்­கின்ற ஒவ்­வொரு நாளிலும் தர்மம் செய்­வது அவர்­களின் மீது கட­மை­யாகும். இரு­வ­ருக்­கி­டையே நீதி செலுத்­து­வதும் தர்­ம­மாகும். ஒருவர் தன் வாக­னத்தின் மீது ஏறி அமர (அவ­ருக்கு) உது­வு­வதும் தர்­ம­மாகும்.   அல்­லது அவ­ரது பயணச் சுமை­களை அதில் ஏற்றி விடு­வதும் தர்­ம­மாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்­ம­மாகும். ஒருவர் தொழு­கைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்­ம­மாகும். தீங்கு தரும் பொருளைப் பாதை­யி­ருந்து அகற்­று­வதும் ஒரு தர்­ம­மே­யாகும்.அறி­விப்­பவர் : அபூ­ஹு­ரைரா (ரழி)  ( நூல்: புகாரி (2989) )

சுவனத்தில் நுழைவிக்கும்…

நான் நபி (ஸல்) அவர்­க­ளிடம் வந்து, “அல்­லாஹ்வின் தூதரே உங்­களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்­சி­ய­டை­கி­றது. எனது கண் குளிர்ச்­சி­ய­டை­கி­றது. எனக்கு அனைத்து பொருட்­களைப் பற்­றியும் சொல்­லுங்கள்என்றேன். அதற்கு அவர்கள், “அனைத்தும் நீரி­லி­ருந்து படைக்­கப்­பட்­டுள்­ளனஎன்று கூறி­னார்கள். எந்த காரி­யத்தை நான் செய்தால் சொர்க்­கத்­திற்கு செல்­வேனோ அப்­ப­டிப்­பட்ட ஒரு காரி­யத்தை எனக்கு கற்­றுக்­கொ­டுங்கள்என்று கூறினேன். ஸலாத்தைப் பரப்பு, நல்ல பேச்சைப் பேசு. உற­வு­களை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்­தி­யுடன் சொர்க்­கத்தில் நுழைவாய்என்று கூறி­னார்கள். அறி­விப்­பவர் : அபூ ஹுரைரா (ரழி), ( நூல் : அஹ்மத் (9996) )

நரகத்தில் இருந்து காக்கும்…

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ

ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّارَ، فَتَعَوَّذَ مِنْهَا وَأَشَاحَ بِوَجْهِهِ، ثُمَّ ذَكَرَ النَّارَ فَتَعَوَّذَ مِنْهَا وَأَشَاحَ بِوَجْهِهِ، – قَالَ شُعْبَةُ: أَمَّا مَرَّتَيْنِ فَلاَ أَشُكُّ – ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ تَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ»

நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள், “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்­தேனும் நர­கத்­தி­லி­ருந்து உங்­களைக் காப்­பாற்றிக் கொள்­ளுங்கள். அதுவும் இல்­லை­யானால் அழ­கான வார்த்­தையைக் கொண்­டா­வது (காப்­பாற்றிக் கொள்­ளுங்கள்)என்­றார்கள். ( அறி­விப்­பவர் : அதீ பின் ஹாதிம் (ரழி), நூல் : புகாரி (6023) )

எனவே தான் அல்லாஹ் ஒவ்வொரு மனிதர்களிடம் அவர்களின் தகுதிக்கேற்ப அழகான முறையில் பேசவேண்டும் என பின்வருமாறு திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் கட்டளையிடுகின்றான்.

அனைத்து மனிதர்களிடம்...

وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا

மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்’.                ( அல்குர்ஆன்:  2: 83 )

பெற்றோரிடம்:

وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا

பெற்றோரில் ஒருவரோ, அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்துவிட்டால்,  அவர்களை ச்சீ என்று (சலிப்பாக) சொல்லவேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்ட வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுவீராக! ( அல்குர்ஆன்:  17: 23 )         

யாசகரிடம்:

وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِنْ رَبِّكَ تَرْجُوهَا فَقُلْ لَهُمْ قَوْلًا مَيْسُورًا

(உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து, (அதை) எதிர்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் அன்பான சொல்லையே சொல்வீராக            ( அல்குர்ஆன்: 17: 28 )

நபி {ஸல்} அவர்களும் அனைவரிடமும் அழகிய முறையிலேயே பேசுங்கள் என கூறுகின்றார்கள்.

حَدَّثَنِي عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ،…

நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் நம்­பிக்கை கொண்­டவர் தம் அண்டை வீட்­டா­ருக்கு தொல்லை தர­வேண்டாம். அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் நம்­பிக்கை கொண்­டவர் தம் விருந்­தா­ளியைக் கண்­ணி­யப்­ப­டுத்­தட்டும். அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் நம்­பிக்கை கொண்­டவர் (ஒன்று) நல்­லதைப் பேசட்டும். அல்­லது வாய் மூடி இருக்­கட்டும்.

அறி­விப்­பவர் : அபூ­ஹு­ரைரா (ரழி)  நூல்: புகாரி (6018)

பொதுவாக நாம் எப்போதுமே அழகாகப் பேசுவதாகவே எண்ணிக் கொண்டிருக்கின்றோம். உண்மையில் நாம் அழகாகத்தான் பேசுகின்றோம் என்பதை உணர வேண்டுமானால் நம்மிடம் அறிவீனமாக நடந்து கொள்பவர்களிடம் நாம் எப்படி பேசுகின்றோம் என்பதை வைத்தே நம்முடைய பேச்சின் தரத்தை நாம் முடிவு செய்து விடலாம். அழ­கிய வார்த்­தை­களால் மக்­க­ளோடு உரை­யா­டுதல் என்ற அம்­சத்தை  கடைப்­பி­டிக்கும் அதே­வேளை உண்­மைக்குப் புறம்­பான வார்த்­தைகளை பேசாதிருப்பது,    அறி­வீனர்களுடன்­ சரிக்கு சரியாக உரையாடாமல் இருப்பதும் முக்கியமாகும்..

وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ

வீணா­ன­வற்றை அவர்கள் செவி­யுறும் போது அதை அலட்­சியம் செய்­கின்­றனர். எங்கள் செயல்கள் எங்­க­ளுக்கு உங்கள் செயல்கள் உங்­க­ளுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்­டா­கட்டும். அறி­வீ­னர்­களை விரும்ப மாட்டோம்எனவும் கூறு­கின்­றனர். அல்­குர்ஆன் (28 : 55)

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் எத்தனையோ பேர் அறிவீனமாக நடந்திருக்கின்றார்கள். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் யாரையும் நபியவர்கள் ஏசியதாக, கண்ணியக்குறைவாக பேசியதாக காண முடியாது. மாறாக கண்ணியமான முறையில் பதில் சொல்வார்கள், சபிக்க மாட்டார்கள், அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை பேசமாட்டார்கள் என்று பின் வரும் ஹதீஸும், நிகழ்வும் தெரிவிக்கின்றது.

عَنْ أَنَسٍ قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّابًا وَلَا لَعَّانًا وَلَا فَحَّاشًا كَانَ يَقُولُ لِأَحَدِنَا عِنْدَ الْمُعَاتَبَةِ مَا لَهُ تَرِبَ جَبِينُهُ

நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்டவார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரை கண்டிக்கும்போதுகூட, ‘அவருக்கு என்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும் என்றே கூறுவார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) புகாரி: 6031)


عن سحامة بن عبد الرحمن بن الأصم قال :سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا ، وَكَانَ لَا يَأْتِيهِ أَحَدٌ إِلَّا وَعَدَهُ ، وَأَنْجَزَ لَهُ إِنْ كَانَ عِنْدَهُ ، وَأُقِيمَتِ الصَّلَاةُ ، وَجَاءَهُ أَعْرَابِيٌّ فَأَخَذَ بِثَوْبِهِ فَقَالَ : إِنَّمَا بَقِيَ مِنْ حَاجَتِي يَسِيرَةٌ ، وَأَخَافُ أَنْسَاهَا ، فَقَامَ مَعَهُ حَتَّى فَرَغَ مِنْ حَاجَتِهِ ، ثُمَّ أَقْبَلَ فَصَلَّى.

أخرجه البخاري في " الأدب المفرد " ( 278 ) و في " التاريخ " ( 2 / 2 / 211 )

 அனஸ் (ரலி) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஸமாஹா இப்னு அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ஒருமுறை மஸ்ஜிதுன் நபவியில் (அதான் சொல்லப்பட்டு இகாமத் சொல்லப்படுகிறது) நபியவர்கள் தொழ வைப்பதற்காக (அங்கே முஸல்லாவிற்கு வந்து) தயாராகி விடுகிறார்கள். அந்த நேரத்தில் ஒரு கிராமவாசி நபி {ஸல்} அவர்களது சட்டையைப் பின்பக்கமாக பிடித்துக் கொள்கிறார். (தொழுகைக்கு முன்பாக அவருடைய சில தேவைகளை நபி {ஸல்} நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். (தொழுகை நேரம் வந்தவுடன் தொழுது முடித்த பிறகு அவருடைய தேவையை நிறைவேற்றலாம் என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அந்த உதவியை ஒதுக்கிவிட்டு, தொழுகைக்கு வந்து விட்டார்கள். 

       ஆனால், அந்த கிராமவாசி சட்டையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வுடைய தூதரே! இன்னும் கொஞ்சம் நேரம் தான் பாக்கி இருக்கிறது. எனக்கு நீங்கள் செய்ய வேண்டிய உதவி, அதையும் செய்து விட்டு அதற்கு அப்புறமாக தொழ வைத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதரே! இன்னும் கொஞ்சம் தான் நீங்கள் எனக்கு செய்ய வேண்டிய உதவி. அதை முடித்து விடுங்கள். அதற்கு பிறகு தொழ வையுங்கள். நான் மறந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன். நபி {ஸல்} தொழாமல் அப்படியே விட்டுவிட்டு, அவருடைய தேவையை முடித்துவிட்டு பிறகு வந்து தொழுகை நடத்துகிறார்கள்.                           ( நூல்: அல் அதபுல் முஃப்ரத் )

في السنة العاشرة من الهجرة النبوية، قدِم على رسول الله صلى الله عليه وسلم وفد بني عامر وفيهم: عامر بن الطُّفَيْل (زعيم مؤامرة قتل سبعين من الصحابة في بئر معونة غدْراً) وَأَرْبَد بْن قَيْس، وكانا من رؤساء القوم ولا يريدان الإسلام، ولكنهما ذهبا بسبب طلب قومهما منهما أن يذهبا إلى النبي صلى الله عليه وسلم، فقد قال بنو عامر لعامر بن الطفيل: "يا عامر، إِنَّ النَّاسَ قَدْ أَسْلَمُوا فَأسْلِمْ". فوافق عامر بن الطُّفَيْل وأَرْبَد بْن قَيْس على الذهاب إلى المدينة المنورة، ولأنهما ـ عامر بن الطُّفَيْل وَأَرْبَدُ بْنُ قَيْس ـ لا يريدان الإسلام فقد اتفقا فيما بينهما على الغدْر بالنبي صلى الله عليه وسلم وقتله. وقد حفظ الله عز وجل نبيه صلى الله عليه وسلم من مؤامرتهما وأهْلكهما، فمات أحدهما بالطاعون، وصُعِق الآخر بصاعقة من السماء. ذكر ابن هشام في "السيرة النبوية"، وابن سعد في "الطبقات الكبرى"، وابن كثير في "البداية والنهاية"، والسيوطي في "الخصائص الكبرى" وغيرهم: أن عامر بن الطفيل قال لأَرْبَد بْن قَيْس: "إذا قدِمْنا على الرجل (النبي صلى الله عليه وسلم)، فإني سأشغل عنك وجهه، فإذا فعلت ذلك فاعْله (اقتله) بالسيف، فلما قدموا على رسول الله صلى الله عليه وسلم، قال عامر بن الطفيل: يا محمد، خالني (اتخذني صديقا)، قال: لا والله حتى تؤمن بالله وحده، قال: يا محمد خالني، وجعل يكلمه وينتظر من أرْبد ما كان أمَرَه به، فجعل أرْبد لا يحير (يفعل) شيئا، قال: فلما رأى عامر ما يصنع أربد، قال: يا محمد خالني قال: لا، حتى تؤمن بالله وحده لا شريك له. فلما أبَى عليه رسول الله صلى الله عليه وسلم قال: أما والله لأملأنها عليك خيلا ورجالا، فلما ولَّى قال رسول الله صلى الله عليه وسلم: اللهم اكفني عامر بن الطفيل. فلما خرجوا من عند رسول الله صلى الله عليه وسلم، قال عامر لأربد: ويلك يا أربد أين ما كنتُ أمرتُك به؟ والله ما كان على ظهر الأرض رجل هو أخوف عندي على نفسي منك. وايم الله لا أخافك بعد اليوم أبدا. قال: لا أبا لك! لا تعجل عليّ، والله ما هممتُ بالذي أمرتني به من أمره إلا دخلت بيني وبين الرجل، حتى ما أرى غيرك، أفأضربك بالسيف؟ وخرجوا راجعين إلى بلادهم، حتى إذا كانوا ببعض الطريق، بعث الله على عامر بن الطفيل الطاعون في عنقه، فقتله الله في بيت امرأة من بني سلول، فجعل يقول: يا بني عامر، أَغُدَّةٌ (داء يصيب البعير فيموت منه، وهو شبيه بالطاعون) كَغُدَّةِ الْبَكْر (الفتى من الإبل) في بيت امرأة من بني سلول!". هلاك عامر بن الطفيل وأَرْبَدُ بْنُ قَيْس: قال الماوردي في "أعلام النبوة": "فأما عامر فطرح الله عليه الطاعون في عنقه فقتله في بيت امرأة من بني سلول فجعل يقول: أغدة كغدة البكر في بيت امرأة من بني سلول (كانوا موصوفين باللؤم)، وركب فرسه فركضه (رماه وداسه) حتى مات. وأما أرْبَد فقدِم على قومه فقالوا: ما وراءك يا أربد؟ فقال: والله لقد دعانا محمد إلى عبادة شيء لوددت أنه عندي الآن فأرميه بنبلي هذا حتى أقتله، ثم خرج بعد مقالته بيوم أو يومين ومعه جمال له تتبعه، فأرسل الله عليه وعلى جماعته صاعقة أحرقتهم".

இஸ்லாம் மக்களிடையே வெகுவேகமாகப் பரவிக்கொண்டிருந்த காலகட்டம் அது. பல்வேறு பகுதிகளில் இருந்து கோத்திரங்களின் தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்காக வருகை தந்துகொண்டிருந்தனர். ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சபையில் தோழர்களுடன் அமர்ந்து இருக்கின்றார்கள்.

ஆமிர் இப்னு அத்துஃபைல். அரபுகுலத் தலைவர்களில் ஒருவர். தலைக்கனமும் பிடிவாத குணமும் மிக்கவர். இஸ்லாத்தில் சேரும்படி மக்கள் இவருக்கு உபதேசம் செய்தபோது அவர்களிடம் கூறினார்: நான் மரணமடைவதற்கு முன்னர் இந்த அரபு குலம் முழுவதையும் எனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவேன். இது இறைவன் மீது ஆணை. அம்மக்கள் எனக்குத்தான் கட்டுப்பட வேண்டும். எனது ஆணைக்கே இணங்க வேண்டும். அப்படியிருக்க எங்கிருந்தோ வந்த இந்த குறைஷி இளைஞனை நான் பின்பற்றுவதா..?’. என்று பிதற்றியவாறே மக்காவில் சுற்றித் திரிந்தார். இந்த நிலையில் தான் இப்போது மாநபி {ஸல்} அவர்களைச் சந்திக்க வருமை தந்திருந்தார்.

மஸ்ஜிதுன் நபவீயின் உள்ளே நுழைந்தார். நுழைந்ததுதான் தாமதம், உடனடியாக பெருமானார் {ஸல்} அவர்களை நோக்கி முஹம்மதே, என்னோடு தனியாக வாருங்கள்’. ஆமிர் அதிகார தோரணையில் கூறினார்: அண்ணலாரும் அவருடன் எழுந்து சென்றார்கள். உர்பத் என்ற தன் தோழரையும் ஆமிர் தன் கூடவே அழைத்து வந்திருந்தார். நபி (ஸல்) அவர்களிடம் தாம் பேசிக்கொண்டு இருக்கும்போது பின்னால் இருந்து அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற தீய திட்டத்துடன் அவரை அழைத்து வந்திருந்தார்.

உர்பத் மறைத்து வைத்திருந்த வாளில் தமது கையை வைத்தவாறு இருவரையும் பின் தொடர்ந்து சென்றார். ஒரு ஓரமாக இருவரும் ஒதுங்கிச் சென்றனர். . உர்பத் தமது வாளை உயர்த்த நாடினார், முடியவில்லை. வாளை உருவ முற்படும்போதெல்லாம் கையை அதிலிருந்து எடுக்க முடியவில்லை.

ஆமிர் இவரை நோக்கி கோபத்துடன் சைகை காட்ட இவரால் ஒன்றும் செய்ய முடியாமல் அசையாமல் நின்று கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் . உர்பத் என்ன செய்கிறார் என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் கவனிக்கத் தொடங்கினார்கள்.

ஆமிரைப் பார்த்து நபிகளார் கூறினார்கள்: துஃபைலின் மகன் ஆமிரே, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்’.

ஆமிர்: முஹம்மதே, நான் இஸ்லாத்தை ஏற்றால் எனக்கு என்ன தருவீர்?’

நபி (ஸல்) அவர்கள்: முஸ்லிம்களுக்கு என்ன கிடைக்குமோ அதுதான் உமக்கும். அவர்களின் சாதக பாதகங்கள் உமக்கு உண்டு. அவ்வளவுதான்’.

ஆமிர்: நான் இஸ்லாத்தை ஏற்றால் உமக்குப்பின் இந்த ஆட்சி அதிகாரத்தை எனக்கு விட்டுத் தருவீரா..?’

ஆமிரின் நோக்கம் என்ன என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்ட நபி (ஸல்) அவர்கள் தைரியமாக தமது பதிலை இவ்வாறு கூறினார்கள்: உமக்கோ, உமது கூட்டத்தினருக்கோ அது இல்லை’. உடனே ஆமிர் தனது வேண்டுகோளின் அளவை சற்று குறைத்தார். சரி.. நான் இஸ்லாத்தை ஏற்றால் கிராமப் புறங்களின் அதிகாரம் எனக்கும், நகர் புறங்களின் அதிகாரம் உமக்கும் என்று வைத்துக்கொள்ளலாமா..?’

நடக்காத காரியத்தை ஆமிர் வலியுறுத்துகின்றார் என்பதைப் புரிந்துகொண்ட நபிகளார் மிகவும் ஆணித்தரமாக, ‘இல்லைஎன்று பதிலளித்தார்கள்.

அண்ணலாரின் பதிலைக் கேட்ட ஆமிரின் முகம் மாறியது. கோபம் தலைக்கேறியது. பெரும் சப்தத்துடன் கத்தினார்: முஹம்மதே, உமக்கு எதிராக பெரும் குதிரைப்படையை நான் திரட்டுவேன். ஆயுதம் தரித்த ராணுவத்தை அனுப்புவேன். இங்கிருக்கும் ஒவ்வொரு பேரீத்த மரத்திலும் எனது குதிரைகள் கட்டப்பட்டிருக்கும். கத்ஃபானின் பெரும் படையைக் கொண்டு உமக்கு எதிராக நான் போர் தொடுப்பேன்’.

காட்டுக் கத்தல் கத்தியவாறே தம்முடைய தோழரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றார் ஆமிர்.

தமது கிராமத்தை அடைந்து பெரும் படையைத் திரட்டி மதீனாவைத் தாக்க வேண்டும் என்று எண்ணியவாறு வேகமாக செல்லத் தொடங்கினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, ‘யா அல்லாஹ், ஆமிரின் தீங்கிலிருந்து என்னைக் காப்பாயாக. அவருடைய கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டுவாயாகஎன்று பிரார்த்தனை செய்தார்கள்.

ஆமிரோ.. வேக வேகமாக தனது ஊரை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். பாதிவழி செல்லும்போதே வேகம் குறைந்தது. மனம் ஓய்வை நாடியது. ஓய்வெடுப்பதற்குத் தகுந்த இடத்தைத் தேடினார். செல்லும் வழியில் இருந்த கிராமத்தில் கூடாரம் ஒன்று இருப்பதைக் கண்டு அங்கு சென்று ஓய்வெடுக்க நாடினார். பனூ ஸலூல் எனும் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் கூடாரம் அது. மக்களிடையே மோசமான பெண் என்று பெயர் பெற்றவள்.

வேறு வழியின்றி ஆமிர் தன்னுடைய குதிரையில் இருந்து இறங்கி அவளுடைய வீட்டில் தங்கினார். அசதியில் தூங்கிவிட்டார். திடீரென தொண்டையில் ஒருவித வலி ஏற்படத் தொடங்கியது. சிறிது சிறிதாக வலி அதிகரிக்கத் தொடங்கியது. மரண பயம் கண்ணில் தோன்றியது. விபச்சாரியின் வீட்டில் மரணம் ஏற்பட்டால் அது தனது பரம்பரைக்கே கேவலம் என்று எண்ணிய ஆமிர் படுக்கையில் இருந்து விழித்து எழுந்து அவசரமாகத் தம்முடைய குதிரையில் ஏறி புறப்பட்டார். செல்லும் வழியில் குதிரையில் இருந்து கீழே விழுந்தார். விழுந்தவர் உடனே இறந்தார்.

அவரை அங்கேயே விட்டுவிட்டு அவருடைய தோழர் உர்பத் ஊருக்கு வந்தார். உர்பதிடம் மக்கள் என்ன விஷயம் என்று வினவினர். நடந்த சம்பவங்களை கூறிய அவன் ஆணவத்துடன் தன் மக்களிடம் கூறினான்: ஏதோ ஒரு தெய்வத்தை வணங்குமாறு முஹம்மத் எங்களை அழைத்தார். இறைவன் மீது ஆணை, அந்த முஹம்மத் மட்டும் இப்போது என் கையில் சிக்கினால் என்னுடைய அம்பால் ஒரே அடியாக அடித்தே கொன்றுவிடுவேன்’.

இந்த நிகழ்வு நடந்து இரண்டு நாட்களுக்குப்பின் இர்பத் தன்னுடைய ஒட்டகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது பேரிடி ஒன்று அவன் தலையில் விழ கரிக்கட்டையாக செத்து விழுந்தான். இதுகுறித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்:

لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ مِنْ وَالٍ (11)

ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு முன்பும், பின்பும் கண்காணிப்பாளர்கள் (வானவர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின் ஆணையின்படி அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. மேலும், அல்லாஹ் ஒரு சமூகத்திற்குத் தீமையை நாடிவிட்டால் அதனை யாராலும் தடுத்து நிறுத்திட இயலாது. அல்லாஹ்வுக்கு எதிராக அத்தகைய சமூகத்தாருக்கு உதவி செய்வோரும் எவருமிலர்”. (13:10-14)

எதிர்த்துப் பேசுவதற்கும், கோபத்தை வெளிப்படுத்துவதற்கும் தகுதியுள்ளவர்களிடமும் கூட மாநபி {ஸல்} அவர்கள் அழகான முறையிலேயே பேசினார்கள் என்றால் நாம் எப்படி நம்முடைய பேச்சை அமைத்துக் கொள்ள வேண்டும்?

சிந்திப்போம்! பேசுவோம்! அழகாகப் பேசுவோம்!! அழகானதைப் பேசுவோம்!!!

1 comment: