Sunday, 1 May 2022

ஈதுல் ஃபித்ர் சிந்தனை :- 2022 ஈகைக்கு இலக்கணம் வகுத்த இஸ்லாம்!!!

 

ஈதுல் ஃபித்ர் சிந்தனை :- 2022

ஈகைக்கு இலக்கணம் வகுத்த இஸ்லாம்!!!



முஸ்லிம் உம்மத்திற்கு இஸ்லாம் வழங்கியிருக்கின்ற மகத்தான கொடைகளில் ஒன்று  இரு பண்டிகை தினங்கள் ஆகும்.

ஒன்று, ஈதுல் ஃபித்ர்  ஈகைத்திருநாள், 30 நாட்கள்  நோன்பு நோற்று, வணக்க  வழிபாட்டில் ஈடுபட்டு, இறையச்சத்தைப் பெற காத்து, தவமிருக்கும் ஓர் சமூகத்தை  மகிழ்ச்சிப் படுத்த, புத்துணர்ச்சியூட்ட வழங்கப்பட்டிருக்கும் மகத்தான பண்டிகை நாள்.

இன்னொன்று, ஈதுல் அள்ஹா  தியாகத் திருநாள்,  இறை ஆலயமாம் கஅபாவை  ஹஜ் செய்வதன் மூலமும், முன்மாதிரி முதல் முஸ்லிம் இறைத்தூதர் இப்ராஹீம்  அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தும் இறை திருமுன்  எல்லாவற்றையும் அர்ப்பணிக்க காத்து நிற்கும் ஓர் சமூகத்தை சந்தோஷப் படுத்திட,  அர்ப்பணிக்கத் தூண்டிட எல்லாம் வல்ல இறைவனால் வழங்கப்பட்டிருக்கிற  மகோன்னதமான பண்டிகைத் திருநாள்.

இந்த இரு பண்டிகை நாட்களும் படைத்த இறைவனோடும், படைப்புகளோடும்

 நெருக்கத்தை, தொடர்பை வலுப்படுத்த வழங்கப்பட்டிருக்கும் மகத்தான நாட்களாகும்.

இதில் நாம் ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாளில் அவனுக்கு பிடித்தமான  அவனுடைய ஆலயத்தில் வணக்க வழிபாடுகளை நிறைவு படுத்தி ஈகைத் திருநாள்  நமக்குச் சொல்ல வருகிற சிந்தனையைப் பெற அமர்ந்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த நாள் போன்ற மகிழ்ச்சியும், ஈகையும் நிறைந்த  பல ஈதுத் திருநாட்களைத் தந்து ஈகையோடும், பிறருக்கு ஈந்தளிக்கிற நற்பேற்றோடும்  வாழ்கிற நல்ல நஸீபை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக!  நம்மையும், நம் மனைவி, மக்கள் நம் குடும்பத்தார்கள் அனைவரையும் தீனுக்காக கபூல் செய்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

இஸ்லாம் ஈகை மார்க்கம் ஆகும். ஈகையை விரும்புகிற, போதிக்கிற மார்க்கம் ஆகும். ஈகையோடு வாழ்வதை தூண்டுகிற, ஈகையோடு வாழ்பவர்களை ஊக்குவிக்கிற அற்புத மார்க்கம்.

ஈகையை வெளிப்படுத்தும் ஒரு முஃமினின் விஷயத்தில் அது எந்த வடிவத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்கிற, அதற்காக நன்மைகளை வாரி வழங்குகிற மார்க்கம்.

ஈகையை வெறும் பொருளாதாரத்தோடு சுருக்கி விடாமல், பரந்து பட்ட மனப்பான்மையோடு, சொந்த சமூக மக்களுக்கும்,த்தோடும், சக மனிதர்களுக்கும் ஏன்? உயிரினங்களுக்கும் கூட பயன் தருவதை, பயனளிப்பதை புண்ணியமான செயலாக பார்க்கும் புனித மார்க்கம் இஸ்லாம்.

ஈகையோடு வாழ்வதை இஸ்லாம் ஐந்து விதமாக கூறுகின்றது. 1) தாராளமாக வாரி வழங்குவது. 2) இயன்றதை வழங்குவது. 3) பிறரை வழங்கத் தூண்டுவது. 4) வழங்குவதற்கு முயற்சி செய்வது. 5) வழங்குவதாக நிய்யத் வைப்பது.

இதில் ஐந்து வகையினருக்கும் அவரவர்களின் பங்களிப்பின் படி மகத்தான கூலியை வழங்கி இஸ்லாம் கௌரவிக்கின்றது.

1) தாராளமாக வாரி வழங்குவது…


لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ

வசதி உள்ளவர் தன்னுடைய வசதிக்கு ஏற்ப (தாராளமாகச்) செலவு செய்யட்டும். ஒருவருக்கு அவரின் வாழ்வாதாரம் (ரிஜ்க்) குறைந்த அளவில் வழங்கப்பட்டிருந்தால் அவருக்கு அல்லாஹ் வழங்கிய (அந்தக் குறைந்த) அளவில் அவர் செலவு செய்யட்டும்.   (அல்குர்ஆன்: 65: 7 )

ما سُئِلَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ علَى الإسْلَامِ شيئًا إلَّا أَعْطَاهُ، قالَ: فَجَاءَهُ رَجُلٌ فأعْطَاهُ غَنَمًا بيْنَ جَبَلَيْنِ، فَرَجَعَ إلى قَوْمِهِ، فَقالَ: يا قَوْمِ أَسْلِمُوا، فإنَّ مُحَمَّدًا يُعْطِي عَطَاءً لا يَخْشَى الفَاقَةَ.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்)  கேட்டார். அண்ணலார் அவற்றை கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் (ஸல்) அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்" என்று கூறினார். நூல்:- முஸ்லிம்-4630

வந்த அந்த மனிதர் ஸஃப்வான் இப்னு உமைய்யா என்று ஹதீஸ் விரிவுரை நூல்களில் காணப்படுகின்றது.


وقد رويت هذه الحكاية أبسط من هذا يقول أحد من عاصر ابن المبارك: كنت عند عبد الله بن المبارك جالسا إذ كلموه في رجل يقضي عنه سبعمائة درهم دينا.
 فكتب إلى وكيله: إذا جاءك كتابي هذا وقرأته فادفع إلى صاحب هذا الكتاب سبعة آلاف درهم.
 فلما ورد الكتاب على الوكيل وقرأه التفت إلى الرجل فقال: أي شيء قضيتك؟
 فقال: كلموه أن يقضي عني سبعمائة درهم دينا. فقال: قد أصبت في الكتاب غلطا، ولكن اقعد موضعك حتى أجري عليك من مالي وأبعث إلى صاحبي فأوامره فيك.
 فكتب إلى عبد الله بن المبارك: أتاني كتابك وقرأته وفهمت ما ذكرت فيه؛ وسألت صاحب الكتاب فذكر أنه كلمه في سبع مائة درهم وها هنا سبعة آلاف.. فإن يكن منك غلط فاكتب إلي حتى أعمل على حسب ذلك.
 فكتب إليه: إذا أتاك كتابي هذا وقرأته وفهمت ما ذكرت فيه فادفع إلى صاحب الكتاب أربعة عشر ألفا.
 فكتب إليه: إن كان علي هذا الفعال تفعل فما أسرع ما تبيع الضيعة، فكتب إليه عبد الله بن المبارك: إن كنت وكيلي فأنفذ ما آمرك به، وإن كنت أنا وكيلك فتعال إلى موضعي حتى أصير إلى موضعك فأنفذ ما تأمرني به.
وأضاف :قال رسول الله صلى الله عليه وسلم: "من فاجأ من أخيه المسلم فرحة غفر الله له".. فأحببت أن أفاجئه فرحة على فرحة.

பெரும் செல்வந்தரும், மாமேதையுமான முஹத்திஸ் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, "எனக்கு 700  வெள்ளிக்காசுகள் கடன் உள்ளது. அதற்கு உதவி செய்யுங்கள்" என்றார். உடனே அன்னார், ஒரு துண்டு சீட்டில் 7000 வெள்ளிக்காசுகள் கொடுக்கவும் என்று எழுதி அவரிடம் கொடுத்து, "இதை என் கணக்கரிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றார்கள்.

அவரும் அந்த துண்டுச்சீட்டை கொண்டுவந்து கணக்கரிடம் கொடுத்தபோது, அந்த கணக்கர் அவரிடம், "உனக்கு எவ்வளவு தேவை இருக்கிறது?" என்று கேட்டார். அவர், "எனக்கு 700 திர்ஹம் தேவை இருக்கிறது" என்றார். உடனே கணக்கர் அவரிடம், "700 என்பதற்கு 7000 என்று ஞாபக மறதியாக முதலாளி எழுதி விட்டார்கள் போலும், அதனால் நீ மீண்டும் முதலாளியிடம் சென்று இதைப்பற்றி விசாரித்து விட்டு வா!" என்றார். அவரும் அன்னாரிடம் சென்று விசாரித்தபோது, உடனே அன்னார், அந்தத் துண்டு சீட்டை வாங்கி 7000 என்பதை அழித்துவிட்டு 14,000 என்று எழுதிக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்கள்.

உடனே, இதைப் பற்றி விசாரிக்க கணக்கரே நேரடியாக வந்துவிட்டார். அப்போது அன்னார் அந்த கணக்கரிடம், ("من فاجأ من أخيه المسلم فرحة غفر الله له") "ஓர் முஸ்லிமுக்கு அவன் எதிர்பார்த்திராத மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றாரோ அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்கின்றான்”) (இப்னு அபீத்துன்யா) என்ற இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழியை எடுத்துரைத்துவிட்டு, "என்னிடம் உதவி கேட்டு வந்தவருக்கு அவர் கேட்டதை விட அதிகம் கொடுத்து அவர் எதிர்பாராத மகிழ்ச்சியை ஏற்படுத்தவே 7000 என்று எழுதினேன். ஆனால், நீ அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி, அவருடைய இன்ப அதிர்ச்சியைத் கெடுத்து விட்டாய். அதனால் தான் மீண்டும் 7000 என்பதை அழித்துவிட்டு 14,000 என்று எழுதி அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி நினைத்தேன். அதனால் அவருக்கு 14,000 வெள்ளிக் காசுகளைக் கொடுத்து அனுப்பி விடு" என்றார்கள்.

2) இயன்றதை வழங்குவது…

 

وعن أبي هريرة رضي الله عنه قال : " جَاءَ رَجُلٌ إلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ، فَقَالَ : إنِّي جَائِعٌ فَأَطْعِمْنِي ؟ فَبَعَثَ النَّبيُّ صلى الله عليه وسلم إلَى أحَدِ أزْوَاجِهِ : " هَلْ عِنْدَكُنَّ شَيْءٌ ؟ " فَكُلُّهُنَّ قُلْنَ : وَالَّذِي بَعَثَكَ بالْحَقِّ مَا عِنْدَنَا إلاَّ الْمَاءُ ، فَقَالَ صلى الله عليه وسلم : " مَا عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم مَا يُطْعِمُكَ هَذِهِ اللَّيْلَةَ " ثُمَّ قَالَ : " مَنْ يُضِيفُ هَذا هَذِهِ اللَّيْلَةَ رَحِمَهُ اللهُ ؟ ".

 فَقَامَ رَجُلٌ فَقَالَ : أنَا يَا رَسُولَ اللهِ ، - قالَ في صحيحِ مُسلم : هُوَ أبُو طَلْحَةَ ، وَقِيْلَ : أبُو أيُّوبٍ ، والضَّيْفُ أبُو هريرةَ - فَمَضَى بهِ إلَى مَنْزِلِهِ ، فَقَالَ لأَهْلِهِ : هَذا ضيْفُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَكْرِمِيهِ وَلاَ تَدَّخِرِي عَنْهُ شَيْئاً ، فَقَالَتْ : مَا عِنْدَنَا إلاَّ قُوتُ الصِّبْيَةِ ، قَالَ : قُومِي فَعَلِّلِيهِمْ عَنْ قُوتِهِمْ حَتَّى يَنَامُوا ، ثُمَّ أسْرِجِي وَأحْضِرِي الطَّعَامَ ، فَإذا قَامَ الضَّيْفُ لِيَأْكُلَ قُومِي كَأَنَّكِ تُصْلِحِينَ السِّرَاجَ فَأَطْفِئِيهِ ، وَتَعَالَي نَمْضُغْ الْسِنَتَنَا لِضَيْفِ رسُولِ اللهِ صلى الله عليه وسلم حَتَّى يَشْبَعَ.

 فَقَامَتْ إلَى الصِّبْيَةِ فَعَلَّلَتْهُمْ حَتَّى نَامُوا وَلَمْ يَطْعَمُوا شَيْئاً ، ثُمَّ قَامَتْ فَأَسْرَجَتْ ، فَلَمَّا أخَذ الضَّيْفُ لِيَأْكُلَ قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ السِّرَاجَ فَأَطْفَأَتْهُ ، وَجَعَلاَ يَمْضُغَانِ ألْسِنَتَهُمَا ، فَظَنَّ الضَّيْفُ أنَّهُمَا يَأْكُلاَنِ مَعَهَُ ، فَأَكَلَ الضَّيْفُ حَتَّى شَبعَ ، وَبَاتَا طَوِيَّيْنِ. فَلَمَّا أصْبَحَا غَدَوا إلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ، فَلَمَّا نَظَرَ إلَيْهِمَا تَبَسَّمَ ثُمَّ قَالَ : " لَقَدْ عَجِبَ اللهُ مِنْ فُلاَنٍ وَفُلاَنَةٍ هَذِهِ اللَّيْلَةَ فَأَنْزَلَ اللهُ تَعَالَى هَذِهِ الآيَةَ { وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ } ".

ஒருமுறை ஒரு மனிதர் கடும் பசியுடன் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உணவு அளிக்கும்படி வேண்டி நின்றார். நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் ஆள் அனுப்பி, வீட்டில் உண்பதற்கு ஏதேனும் உண்டா? எனக் கேட்டார்கள். இன்று எதுவும் இல்லை என்றே பதில் வந்தது.

நபியவர்கள் தம் அன்புத் தோழர்களின் பக்கம் பார்வையைத் திருப்பி, அல்லாஹ்வின் இந்த அடிமையை அழைத்துச் சென்று விருந்தளிப்பவர் உங்களில் யாரேனும் உண்டா? என வினவினார்கள்!

இதனைக் கேட்டதும் அபூ தல்ஹா (ரலி) எழுந்து இறைத்தூதரே! இவரை, எனது வீட்டிற்கு விருந்தாளியாய் அழைத்துச் செல்கிறேன் என ஏற்றார்கள்.

வீட்டிற்குச் சென்று ஏதேனும் உணவு உள்ளதா? என்று தம் அருமை மனைவியார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களை நோக்கிக் கேட்டார்கள்!

பிள்ளைகளுக்காக உணவு சமைத்துள்ளேன். அதைத் தவிர அல்லாஹ்வின் மீது ஆணையாக வேறு உணவு எதுவும் இல்லை.

பரவாயில்லை குழந்தைகளைத் தாலாட்டித் தூங்கச் செய்துவிடுங்கள். அவர்கள் தூங்கி விடுவார்கள்! அப்போது நாம் இந்த உணவை விருந்தாளிக்கு முன்னால் வைத்துவிடுவோம், பிறகு நீங்கள் எழுந்து விளக்கைச் சரி செய்வது போன்று பாவனை செய்து அணைத்துவிட வேண்டும்! இருளில் விருந்தாளியே உணவு முழுவதையும் திருப்தியாக உண்ணும் வகையில் நாம் வெறுமனே வாயை அசைத்து உண்பதாகக் காட்டிக்கொண்டிருக்க வேண்டும்.

இவ்வாறே, இருந்த கொஞ்ச உணவையும் அந்தப் பசியாளி வயிறாற உண்பதற்கு அளித்துவிட்டு குழந்தைகளை பசியோடு தூங்கச் செய்துவிட்டு ஒருவாறு விருந்தாளியை மகிழ்வித்தோம் என்ற திருப்தியுடன் கணவனும் மனைவியும் இரவைக் கழித்தார்கள்.

காலையில் அபூ தல்ஹா (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகம் வந்தபோது நபியவர்களின் புனித நாவில் இந்தத் திருவசனம் ஒலித்தது:

மேலும், அவர்கள் தங்களைவிட பிறருக்கே முன்னுரிமை அளிப்பார்கள், தமக்குத் தேவை இருப்பினும் சரியே!|        (59 : 9)

பிறகு அபூ தல்ஹா (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், இரவில் நீங்கள் இருவரும் விருந்தாளியை உபசரித்த விதம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகி விட்டது. அதன் பிறகு அபூ தல்ஹா (ரலி) அவர்களின் குடும்ப நலத்திற்காக நபியவர்கள் இறைவனை இறைஞ்சினார்கள்!

3) பிறரை வழங்கத் தூண்டுவது. 1. சொல்லால்…

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَاءَهُ السَّائِلُ أَوْ طُلِبَتْ إِلَيْهِ حَاجَةٌ قَالَ: «اشْفَعُوا تُؤْجَرُوا، وَيَقْضِي اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا شَاءَ»

நபி {ஸல்} அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), ‘(உங்களால் உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய நாவினால் நிறைவேற்றித் தருவான் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி), நூல்:புகாரி

وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ، قَالُوا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، قَالَ

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أُبْدِعَ بِي فَاحْمِلْنِي، فَقَالَ: «مَا عِنْدِي»، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، أَنَا أَدُلُّهُ عَلَى مَنْ يَحْمِلُهُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ»

ஒரு மனிதர் நபி {ஸல்} அவர்களிடம் வந்து, “என் வாகனப் பிராணி மடிந்துவிட்டது. எனவே, நான் ஏறிச்செல்வதற்கு எனக்கு வாகனப் பிராணி தாருங்கள் என்று கேட்டார். நபி {ஸல்} அவர்கள், “என்னிடம் (வாகனப் பிராணி) இல்லை என்று கூறினார்கள். அப்போது மற்றொரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! இவரை வாகனத்தில் ஏற்றியனுப்பும் ஒருவரை நான் இவருக்கு அறிவித்துக் கொடுக்கிறேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:  அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி), நூல்: முஸ்லிம்

3) பிறரை வழங்கத் தூண்டுவது. 2. செயலால்…

كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، قَالَ : فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ، فَدَخَلَ ثُمَّ خَرَجَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ: {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ} [النساء: 1] إِلَى آخِرِ الْآيَةِ، {إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} [النساء: 1] وَالْآيَةَ الَّتِي فِي الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللهَ} [الحشر: 18] «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ، مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ – حَتَّى قَالَ – وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ مُذْهَبَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»

நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.

அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

அப்போது மக்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள் எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும், ‘அல்ஹஷ்ர் அத்தியாயத்திலுள்ள நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொருவரும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளட்டும்.

அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும் என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்’’ என்று வலியுறுத்தினார்கள்.

உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது.

அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), (  நூல்: முஸ்லிம் )

4) வழங்குவதற்கு முயற்சி செய்வது…

وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَى (39) وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَى (40) ثُمَّ يُجْزَاهُ الْجَزَاءَ الْأَوْفَى

“மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததேயல்லாமல் வேறு இல்லை. நிச்சயமாக, அவனது முயற்சியின் பயனை அவனுக்கு விரைவில் காண்பிக்கப்படும். பின்னர் அதற்கு முழுமையான கூலியாக கூலி வழங்கப்படுவான்”. ( அல்குர்ஆன்: 53: 39-41 )

ஏதேனும் ஒரு நற்காரியத்தைச் செய்வதற்கு முயற்சிக்கும் போது அதைச் செய்ய முடியாமால் போனாலும் கூட அந்த முயற்சிக்கும் அல்லாஹ் கூலி தருகிறான். இதைப் பின்வரும் நிகழ்வு மூலம் அறிந்து கொள்ளலாம்.

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ هُوَ ابْنُ زَيْدٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي غَزَاةٍ، فَقَالَ: «إِنَّ أَقْوَامًا بِالْمَدِينَةِ خَلْفَنَا، مَا سَلَكْنَا شِعْبًا وَلاَ وَادِيًا إِلَّا وَهُمْ مَعَنَا فِيهِ، حَبَسَهُمُ العُذْرُ»

நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போரில் (தபூக் போரில்) ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ‘மதீனாவில் (நம்முடன் வராமல் தங்கிவிட்ட) சிலர் இருக்கின்றனர். நாம் எந்த மலைக் கணவாயை, பள்ளத்தாக்கைக் கடந்தாலும்  அவர்களும் நம்முடன் இருக்கும் நிலையிலேயே அதை நாம் கடந்து வருகிறோம். (ஏற்கத்தகுந்த) சில காரணங்களே (புனிதப் போரில் கலந்து கொள்ளவிடாமல்) அவர்களைத் தடுத்து விட்டன என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ( நூல்: புகாரி )

5) வழங்குவதாக நிய்யத் வைப்பது…

وَإِذَا أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا  فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ

“(எனது அடியான்) அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்” என்று அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுவதாக  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ( நூல்: புகாரி )

நபி{ஸல்}அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஓர் அடியான் அல்லாஹ்வின் சமூகத்தில் கொண்டு வரப்படுவான் அவனோடு மலை போல் குவிக்கப்பட்ட அவனுடைய நற்செயல்களும் கொண்டு வரப்படும். அப்போது அங்கே ஓர் வானவர் இவரால் பாதிப்புக்குள்ளானவர்கள் எவரும் உண்டோ? வாருங்கள் இவரின் நன்மைகளில் இருந்து அதற்கான ஈட்டை பெற்றுச் செல்லுங்கள்.என்று அறிவிப்புச் செய்வார்.அப்போது சிலமனிதர்கள் அங்கே வந்து அவரின் நன்மைகளில் இருந்து எடுத்துச் சென்றிடுவர். இறுதியில் அம்மனிதர் மட்டும் தனியே நின்று கொண்டிருப்பார். அப்போது அல்லாஹ் அவரை அழைத்து ஓஅடியானே உன்னுடைய பொக்கிஷம் ஒன்று என்னிடம் உள்ளது அதை என் படைப்பினங்களில் எவரும் அறிய மாட்டார்.பரிசுத்த என்வானவர்களும் கூட அறியமாட்டார்கள்.என்று சொல்வான்.
அப்போது அந்த அடியான் அல்லாஹ்வே அது என்ன”? என்று கேட்பான்.  அதற்கு அல்லாஹ் ஓஅடியானே உன்னுடைய தூய்மையான எண்ணங்கள் தான்! நீ ஒவ்வொரு முறை எண்ணும் போதும் அதற்கு நான் எழுபதுமடங்கு நன்மைகளை எழுதினேன்.என்பான். ( நூல்: தன் பீஹுல் gகாஃபிலீன்,பாகம்:2,பக்கம்:377 )

எனவே, அவரவர்களின் வசதிக்கும், தகுதிக்கும் ஏற்ப நாம் ஈகையோடு நடந்து கொள்வோம்!

இஸ்லாத்தின் தாராளத்தன்மையையும், ஒரு முஸ்லிமின் தாராளத்தன்மையையும் நம்முடைய ஈகையின் மூலம் உலகிற்கு உணர்த்துவோம்!!

அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் நல் வாழ்த்துகள்!! அல்லாஹ் ரப்புல் ஆலமீன்! நம் அனைவரிடமும் இருந்து ரமழானின் அனைத்து வணக்க, வழிபாடுகளையும் கபூல் செய்தருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!

2 comments:

  1. பாரக்கல்லாஹ் அருமையான கட்டுரை

    ReplyDelete