தராவீஹ் சிந்தனை: 4, உங்களில் சிறந்தவர் தொடர்:- 3,
பதில் ஸலாம் சொல்வதும்… பசித்தவருக்கு உணவளிப்பதும்..
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் உடைய மகத்தான கருணையால் மூன்றாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, நான்காம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம்.
பெருமானார் {ஸல்}
அவர்கள் பல சந்தர்ப்பங்களில் “ஃகியாருக்கும்,
ஃகைருக்கும் ( உங்களில் மிகச் சிறந்தவர் ) ஃகைருன் நாஸ் (
மனிதர்களில் மிகச் சிறந்தவர் ) என்ற அடைமொழியோடு சில நல்ல பண்புகளை பல்வேறு
சந்தர்ப்பங்களில் பட்டியலிட்டார்கள்.
அப்படி பெருமானார்
(ஸல்) அவர்கள் பட்டியலிட்டுக் கூறிய சில நல்ல பண்புகளை இந்த ரமழானில் நாம்
தொடராகப் பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.
மூன்றாவதாக இன்றைய அமர்வில் ஸலாமிற்கு பதில் சொல்பவரும், பசித்தோருக்கு உணவளிப்பவரும் உங்களில் சிறந்தவர்கள் என்ற நபிமொழி குறித்து நாம்
பார்க்க இருக்கின்றோம்.
حَدَّثَنَا
عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ زُهَيْرٍ عَنْ عَبْدِ
اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ حَمْزَةَ بْنِ صُهَيْبٍ أَنَّ
صُهَيْبًا كَانَ يُكَنَّى أَبَا يَحْيَى وَيَقُولُ إِنَّهُ مِنْ
الْعَرَبِ وَيُطْعِمُ الطَّعَامَ الْكَثِيرَ فَقَالَ لَهُ عُمَرُ يَا
صُهَيْبُ مَا لَكَ تُكَنَّى أَبَا يَحْيَى وَلَيْسَ لَكَ وَلَدٌ
وَتَقُولُ إِنَّكَ مِنْ الْعَرَبِ وَتُطْعِمُ الطَّعَامَ الْكَثِيرَ
وَذَلِكَ سَرَفٌ فِي الْمَالِ فَقَالَ صُهَيْبٌ إِنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَنَّانِي أَبَا يَحْيَى وَأَمَّا
قَوْلُكَ فِي النَّسَبِ فَأَنَا رَجُلٌ مِنْ النَّمِرِ بْنِ قَاسِطٍ مِنْ
أَهْلِ الْمَوْصِلِ وَلَكِنِّي سُبِيتُ غُلَامًا صَغِيرًا قَدْ غَفَلْتُ
أَهْلِي وَقَوْمِي وَأَمَّا قَوْلُكَ فِي الطَّعَامِ فَإِنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ خِيَارُكُمْ مَنْ أَطْعَمَ
الطَّعَامَ وَرَدَّ السَّلَامَ فَذَلِكَ الَّذِي يَحْمِلُنِي عَلَى أَنْ أُطْعِمَ
الطَّعَامَ
உமர் (ரலி)
அவர்கள் ஸுஹைப் (ரலி) என்கிற நபித்தோழரிடம் ஒரு சந்தர்ப்பத்தில் பேச நேரிடும் போது
ஒரு சில விஷயங்கள் குறித்து பேசினார்கள். அதில், ஸுஹைப் அவர்களே! உங்களுக்கு பிள்ளைச் செல்வங்கள் ஏதும் இல்லை. ஆனால், அபூ யஹ்யா என்று குறிப்புப் பெயருடன் நீங்கள் அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள்
அரபுலகத்தைச் சார்ந்தவராகவும், அதிகமாக மக்களுக்கு
உணவளிப்பவராகவும்,
அதற்காக அதிக பொருளாதாரத்தை செலவழிக்க கூடியவராகவும்
இருக்கின்றீர்களே?
என்று கேட்டார்கள்.
அதற்கு, ஸுஹைப் (ரலி) அவர்கள் "எனக்கு நபி ஸல் அவர்களே "அபூ யஹ்யா"
என்று குறிப்புப் பெயர் வைத்து அழைத்தார்கள். மேலும் நான் நம்ர் இப்னு காஸித்
எனும் வமிசத்தைச் சேர்ந்தவன், எனது வமிசம் மௌஸல்
பகுதியில் இருந்து வந்ததாகும்.
மேலும், நான் சிறுவனாக இருக்கும் போது நானும் எனது குடும்பத்தாரும் ஓரிடத்தில் ஒன்று
கூடியிருந்தோம். என் பெற்றோர்கள் கவனமற்று இருக்கும் போது யாரோ சிலரால் நான்
கைதியாக்கப்பட்டேன்" என்று கூறி விட்டு, நான் ஏன் இவ்வாறு
உணவளிக்கிறேன்?
என்று நீங்கள் கேட்கின்றீர்கள்.
நிச்சயமாக பெருமானார் (ஸல்) அவர்கள் "பசித்திருப்போருக்கு உணவளிப்பவரும், ஸலாம் சொன்னால் பதில் சொல்வோரும் உங்ஙளில் மிகச் சிறந்தவர்கள்" என்று கூறினார்கள். ஆகவே தான் நான் இவ்வாறு உணவளித்து வருகிறேன் என்று பதில் ஸுஹைப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.( நூல்: முஸ்னத் அஹ்மத் )
உங்களில் சிறந்தவர் பதில் ஸலாம் சொல்பவரே!!!
وقد أمر
صلى الله عليه وسلم بردّ السلام وجعله حقاً فروى أحمد (2/540) والبخاري (1240)
ومسلم (2792) والنسائي في اليوم والليلة (221) وأبو داود(5031) عن أبي هريرة رضي
الله عنه رفعه (حق المسلم على المسلم خمس : ردّ السلام وعيادة المريض واتباع
الجنائز ، وإجابة الداعي وتشميت العاطس
) .
ஸலாம் எனும்
முகமன் கூறுவது நபிவழி. அதற்கு பதில் வாழ்த்து கூறுவது கடமையாகும்.
‘ஒரு முஸ்லிம் தம்
சகோதரருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும். முகமனுக்குப் பதிலுரைப்பது, நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸாவைப் பின் தொடர்வது, விருந்துண்ண அழைத்தால் பதிலளிப்பது, தும்மி அல்ஹம்துலில்லாஹ்
சொன்னால் யர்ஹமுகல்லாஹ் என்று சொல்வது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
ஸலாம் எனும்
முகமனுக்கு பதில் அளிப்பது உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக அமைந்துள்ளது.
ஸலாம் கூறினால்
அதற்கு பதில் கூறுவது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ
رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا
‘உங்களுக்கு ஸலாம்
கூறப்படும்பொழுது,
அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு)
ஸலாம் கூறுங்கள்;
அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள்’. ( அல்குர்ஆன்: 4: 86 )
وقد كان
عبدالله بن عمر يُمسك بيد صاحبه، ويصحبه إلى السوق، ثم يرجعان، فيقول له صاحبه: يا
أبا عبدالرحمن خرجنا وعدنا، ولم نشترِ، ولم نبعْ، فلمَ خرجنا؟ فقال: إنما خرجنا من
أجل السلام.
அப்துல்லாஹ் இப்னு
உமர் (ரலி) அவர்கள் தமது நண்பரை அழைத்துக் கொண்டு கடைவீதிக்கு செல்வார்களாம்.
கடைவீதியில் செல்வோருக்கு ஸலாம் சொல்லி பின்னர் தமது நண்பருடன் திரும்பி வந்து
விடுவார்களாம். பின்னர் தமது நண்பரிடம் அபூ அப்துர்ரஹ்மானே! கடை வீதிக்கு
சென்றோம். எந்த பொருளையும் வாங்கவும் இல்லை, விற்கவும் இல்லை. பின்னர்
எதற்காக சென்றோம்?
ஆம்! நாம் கடைவீதிக்கு சென்றதெல்லாம் ஸலாம் சொல்லவும், சொல்லப்படும் ஸலாமிற்கு பதில் சொல்லவும் தான் " என்று கூறுவார்களாம். (
நூல்: பதாயிஉஸ் ஸனாயிஃ )
1- السلام.
٢-
المصافحة.
٣-
الابتسامة.
4- الكلمة الطيبة.
5- رد السلام
فهذه
خمسة أعمال صالحة تحصلها في دقيقة أو أقل
பெரும் நன்மை
தரும் ஐந்து நல்லறங்களை ஒரு நொடிப் பொழுதில் இறைநம்பிக்கையாளர் ஒருவர்
செய்ய முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! ஒரு முஸ்லிம்
இன்னொரு முஸ்லிமை சந்திக்கும் அந்த நொடிப் பொழுதில் இந்த ஐந்து நல்லறங்கள்
நடந்தேறுகின்றது.
1. ஸலாம் சொல்வது, 2. கைலாகு முஸாஃபஹா செய்வது, 3. முகமலர்ச்சியுடன்
சந்திப்பது,
4. அழகிய வார்த்தையை பேசுவது, 5. ஸலாமிற்கு பதில் சொல்வது. ( பதாயிவுல் ஃபவாயித் )
عَنْ
عَبْدِ اللهِ يَعْنِيْ اِبْنَ مَسْعُوْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلسَّلاَمُ
اِسْمٌ مِنَ اَسْمَاءِ اللهِ تَعَالَي وَضَعَهُ فِي اْلاَرْضِ فَاَفْشُوْهُ
بَيْنَكُمْ، فَاِنَّ الرَّجُلَ الْمُسْلِمَ اِذَا مَرَّ بِقَوْمٍ فَسَلَّمَ
عَلَيْهِمْ فَرَدُّوْا عَلَيْهِ كَانَ لَهُ عَلَيْهِمْ فَضْلُ دَرَجَةٍ
بِتَذْكِيْرِهِ اِيَّاهُمُ السَّلاَمَ، فَاِنْ لَمْ يَرُدُّوْا عَلَيْهِ رَدَّ
عَلَيْهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْهُمْ. رواه البزار والطبراني واحد اسنادي البزار
جيد قوي الترغيب:٣ /٤٢٧
ஸலாம் என்ற
வார்த்தை அல்லாஹுதஆலாவின் பெயர்களில் ஒன்று. அல்லாஹுதஆலா அதை பூமியில் இறக்கி
வைத்துள்ளான்,
எனவே உங்களுக்கிடையே அதை நன்றாகப் பரப்புங்கள். ஏனேனில் ஒரு
முஸ்லிம் ஒரு கூட்டத் தாரைக் கடந்து செல்லும்போது அவர் அக்கூட்டத்தாருக்கு ஸலாம்
சொல்ல, அவர்கள் இவருக்குப் பதில் சொன்னால், அவர்களுக்கு ஸலாமை ஞாபக
மூட்டியதன் காரணத்தால் ஸலாம் சொல்லியவருக்கு அந்தக் கூட்டத்தாரை விட ஒரு படித்தரம்
சிறப்புக் கிடைக்கிறது. அவர்கள் இவருக்குப்பதில் சொல்லவில்லை யெனில்
மனிதர்களைவிடச் சிறந்த மலக்குகள் இவருடைய ஸலாமுக்குப் பதில் சொல்கின்றனர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்வூத்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: பஸ்ஸார், தபரானீ )
حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَوْفٍ،
عَنْ أَبِي رَجَاءٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ،
فَرَدَّ عَلَيْهِ السَّلَامَ، ثُمَّ جَلَسَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «عَشْرٌ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ
اللَّهِ، فَرَدَّ عَلَيْهِ، فَجَلَسَ، فَقَالَ: «عِشْرُونَ» ثُمَّ جَاءَ آخَرُ
فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، فَرَدَّ
عَلَيْهِ، فَجَلَسَ، فَقَالَ: «ثَلَاثُونَ»
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார். நபியவர்கள்
அவருக்குப் பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர்
வந்தார். அவர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறினார். நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள்
(இவருக்கு) இருபது (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு என்று கூறினார். அவருக்கு நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் (இவருக்கு) முப்பது (நன்மைகள்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
حَدَّثَنَا
يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ
هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: " خَلَقَ اللَّهُ آدَمَ عَلَى صُورَتِهِ، طُولُهُ سِتُّونَ
ذِرَاعًا، فَلَمَّا خَلَقَهُ قَالَ: اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ، النَّفَرِ
مِنَ المَلاَئِكَةِ، جُلُوسٌ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، فَإِنَّهَا
تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ،
فَقَالُوا: السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ، فَزَادُوهُ: وَرَحْمَةُ
اللَّهِ، فَكُلُّ مَنْ يَدْخُلُ الجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ، فَلَمْ يَزَلِ
الخَلْقُ يَنْقُصُ بَعْدُ حَتَّى الآنَ
"
அல்லாஹ் ஆதமைத்
தன்னுடைய உருவில் படைத்தான். அப்போது அவரது உயரம் அறுபது முழங்களாக இருந்தது.
அவர்களைப் படைத்த போது நீங்கள் சென்று அங்கு அமர்ந்து கொண்டிருக்கும்
வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்)
வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள்; ஏனெனில் அது தான் உங்களது
முகமனும் உங்களது சந்ததிகளின் முகமனும் ஆகும் என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம்
(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று) அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன்
சொன்னார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (சாந்தியும் இறைவனின் கருணையும்
உங்கள் மீது நிலவட்டும்) என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 6227
உங்களில் சிறந்தவர் பசித்தவருக்கு உண்வளிப்பவரே!!!
உணவளிக்க மறுப்பது, உணவளிக்காமல் இருப்பது, உணவளிக்க தூண்டாமல் இருப்பது என இம்மூன்று பண்புகளுமே திருமறையில் அல்லாஹ்
கண்டித்து கூறியுள்ளான்.
இந்தப் பண்புகள்
முஸ்லிம்களாகிய நமது வாழ்க்கையில் வராமல் இருப்பதற்கு அதிகக் கவனத்தோடு வாழ்வது
நம் அனைவரின் பொறுப்பாகும்.
وَاِذَا
قِيْلَ لَهُمْ اَنْفِقُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا
لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنُطْعِمُ مَنْ لَّوْ يَشَآءُ اللّٰهُ اَطْعَمَهٗٓ
اِنْ اَنْـتُمْ اِلَّا فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
அல்லாஹ்
உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! என்று அவர்களிடம்
கூறப்படும் போது “(இல்லாதவருக்கு) நாங்கள் உணவளிக்க வேண்டுமா? அல்லாஹ் நாடியிருந்தால்
அவர்களுக்கு உணவளித்திருப்பானே! தெளிவான வழிகேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (ஏக இறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர். ( அல்குர்ஆன்: 36:
47 )
فِي
جَنَّاتٍ يَتَسَاءَلُونَ (40) عَنِ الْمُجْرِمِينَ (41) مَا سَلَكَكُمْ فِي سَقَرَ
(42) قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ (43) وَلَمْ نَكُ نُطْعِمُ
الْمِسْكِينَ
அவர்கள் சொர்க்கச்
சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில்
சேர்த்தது எது?”
என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள்.
(வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதி
வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை” (எனவும் கூறுவார்கள்). ( அல்குர்ஆன்: 74: 40-47 )
كَلَّا
بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ (17) وَلَا تَحَاضُّونَ عَلَى طَعَامِ
الْمِسْكِينِ (18) وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا (19) وَتُحِبُّونَ
الْمَالَ حُبًّا جَمًّا (20) كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا (21)
وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا (22) وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ
يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى (23)
அவ்வாறில்லை!
நீங்கள் அனாதையை மதிப்பதில்லை. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை. வாரிசுச்
சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள். செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள்.
அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் போது, வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது, அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான்.
(அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்? ( அல்குர்ஆன்: 89:
17-23 )
اَرَءَيْتَ
الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِؕ
فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ
وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ
தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை. ( அல்குர்ஆன்: 107:
1-3 )
நாளை மறுமையில் கை சேதம் அடைய வேண்டி வரும்!
وعن أبي
هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم
القيامة يا ابن آدم مرضت فلم تعدني قال يا رب كيف أعودك وأنت رب العالمين قال أما
علمت أن عبدي فلانا مرض فلم تعده أما علمت أنك لو عدته لوجدتني عنده يا ابن آدم
استطعمتك فلم تطعمني قال يا رب كيف أطعمك وأنت رب العالمين قال أما علمت أنه
استطعمك عبدي فلان فلم تطعمه أما علمت أنك لو أطعمته لوجدت ذلك عندي يا ابن آدم
استسقيتك فلم تسقني قال يا رب كيف أسقيك وأنت رب العالمين قال استسقاك عبدي فلان
فلم تسقه أما علمت أنك لو سقيته لوجدت ذلك عندي رواه مسلم
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் எங்களை நோக்கி “மறுமை நாளில் அல்லாஹ்
மனிதனிடம் “மனிதனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். நீயோ என்னை நலம் விசாரிக்க வரவில்லையே!” என்று கேட்பான்.
மனிதன்
பதைபதைப்போடு “என் இறைவனே! நீ தானே அனைத்துலகையும் படைத்து பரிபாலித்துக்
கொண்டிருக்கின்றாய்! உன்னை எப்படி நான் வந்து நலம் விசாரிப்பது” என்று கேட்பான்.
அப்போது, அல்லாஹ் “இன்ன மனிதன் நோயுற்றிருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது உடல் நலம் பற்றி நீ விசாரிக்கச் செல்லவில்லையே! நீ அவனை நலம்
விசாரிக்கச் சென்றிருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” என்று கூறுவான்.
மீண்டும், அல்லாஹ் “மனிதா! உன்னிடம் நான் உணவு கேட்டேனே? நீ ஏன் எனக்கு உணவு
அளிக்கவில்லை?”
என்று கேட்பான்.
அதற்கு, மனிதன் “அகில உலகங்களின் இரட்சகன் நீ! எப்போது நீ பசியோடு இருந்தாய்? நான் உனக்கு எப்படி உணவளிப்பது?” என்று கேட்பான்.
அப்போது, அல்லாஹ் ““இன்ன மனிதன் பசியோடு இருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது பசியை போக்கிட உணவு கொடுக்க வில்லையே! நீ அவனுக்கு உணவு
கொடுத்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” நீ அவனது தேவையை நிறைவேற்றி இருந்தால் அதற்கான நற்கூலியை இப்போது இங்கு
பெற்றிருப்பாய்!”
என்று கூறுவான்.
மீண்டும், அல்லாஹ் “மனிதா! நான் தாகித்த நிலையில் உன்னிடம் வந்து தண்ணீர் கேட்டேனே? ஏன் எனக்கு நீ குடிக்கத் தண்ணீர் தரவில்லை?” என்று கேட்பான்.
அதற்கு, மனிதன் “அகில உலகங்களின் அதிபதி நீ! எப்போது தாகித்திருந்தாய்? உனக்கு எவ்வாறு நான் தண்ணீர் புகட்டுவது?” என்று கேட்பான்.
அப்போது, அல்லாஹ் ““இன்ன மனிதன் தாகத்தோடு இருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது தாகத்தைப் போக்கிட நீ தண்ணீர் கொடுக்க வில்லையே! நீ அவனுக்கு தண்ணீர்
கொடுத்து தாகத்தை தீர்த்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” நீ அவனது தேவையை நிறைவேற்றி இருந்தால் அதற்கான நற்கூலியை இப்போது இங்கு
பெற்றிருப்பாய்!”
என்று கூறுவான். ( நூல்: முஸ்லிம் )
رواه
مسلم في صحيحه عن عائشة رضي الله عنها قالت: « جَاءَتْنِي مِسْكِينَةٌ تَحْمِلُ ابْنَتَيْنِ
لَهَا، فَأَطْعَمْتُهَا ثَلاَثَ تَمَرَاتٍ، فَأَعْطَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا
تَمْرَةً، وَرَفَعَتْ إِلَى فِيهَا تَمْرَةً لِتَأْكُلَهَا فَاسْتَطْعَمَتْهَا
ابْنَتَاهَا فَشَقَّتِ التَّمْرَةَ الَّتِي كَانَتْ تُرِيدُ أَنْ تَأْكُلَهَا
بَيْنَهُمَا، فَأَعْجَبَنِي شَأْنُهَا، فَذَكَرْتُ الَّذِي صَنَعَتْ لِرَسُولِ
الله صلى الله عليه وسلم فَقَالَ: «إِنَّ الله قَدْ أَوْجَبَ لَهَا بِهَا
الجَنَّةَ، أَوْ أَعْتَقَهَا بِهَا مِنَ النَّارِ
ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறினார்கள்: “என்னிடம் இரு பெண்குழந்தைகளை சுமந்தவாறு ஒரு ஏழைப்பெண்மணி வந்தார். அவருக்கு
நான் மூன்று பேரீத்தம் பழங்களை உண்ணக்கொடுத்தேன். இரு பேரீத்தம் பழங்களை தம் இரு
பெண்குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு, ஒன்றை தான் தின்பதற்காக
வாயின் அருகே கொண்டு சென்ற போது, அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று அம்மா என்று இரக்கமாகக் கூற
தன் வாயருகே கொண்டு சென்ற அந்தப்பழத்தை தன் பிஞ்சுக்குழந்தையின் வதனத்தில் ஊட்டி
விட்டு வாஞ்சையோடு அக்குழந்தையை நோக்கினாள்.
உண்மையில், இந்தக் காட்சியைக் கண்டு நான் ஆச்சர்யம் அடைந்தேன். நடந்த சம்பவத்தை நபி {ஸல்} அவர்களிடம் கூறிய போது “அப்பெண்மணியின் இரக்க சிந்தனைக்குப் பரிசாக அல்லாஹ் அவளுக்கு சுவனத்தைக்
கொடுத்து நரகிலிருந்து விடுதலையும் தந்து விட்டான்”. என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம்)
அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் பசித்தோருக்கு உண்வளித்தும், பதில் ஸலாமை விரைந்து சொல்லியும் மேலான
சிறந்தவர்களில் ஒருவராக நம்மை ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment