தராவீஹ் சிந்தனை:- 26. சிறந்த அமல்
& சிறந்த காரியம் தொடர்:- 16.
குழப்பமான கால கட்டத்தில் வாழ்பவர்களில் சிறந்தவர்கள்!!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 25 -ம் நோன்பை நிறைவு செய்து
விட்டு,
26 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம்
அமர்ந்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள்
மற்றும் சில விஷயங்கள்
குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.
அந்த வகையில் இந்த
நாளின் இன்றைய அமர்வில் "குழப்பங்கள் மிகைத்து நிற்கும் கால கட்டத்தில்
சிறந்தவர் யார்?"
என்பது குறித்து நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு சில
விஷயங்களை பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.
عن
عبدالله بن عباس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم:- خيرُ الناسِ في
الفِتَنِ رَجلٌ أخَذَ بِعنانِ فَرَسِهِ خَلْفَ أعداءِ اللهِ ، يُخِيفُهمْ و
يُخِيفُونهُ ، أو رَجلٌ مُعتَزِلٌ في بادِيَةٍ يُؤَدِّي حَقَّ اللهِ الذي عليْهِ.
أخرجه الترمذي والنسائي.
"இஸ்லாத்திற்கு
எதிரான கொலைகளும்,
குழப்பங்களும் மிகைத்து நிற்கும் கால கட்டத்தில் உங்களில்
சிறந்தவர் ஒருவராவார். அவர் தனது குதிரையை தயாராக வைத்திருப்பார். அவர் தனது
குதிரையின் கடிவாளத்தை பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் விரோதியான அவர்களை எதிர்த்து
போராட களம் காண்பார். ஒரு கட்டத்தில் எதிரிகளின் தாக்குதலால் காயமடைந்து பொறுமை
காத்து, தமது வீரத்தால் அவர்களை பயமுறுத்துவார்.
இன்னொரு மனிதர், கொலைகளும்,
குழப்பங்களும் மிகைத்து நிற்கும் கால கட்டத்தில் ஊருக்கு
ஒதுக்கு புறமாக ஓரிடத்தில் ஒதுங்கி அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்றுவார் அவரும்
உங்களில் சிறந்தவர் ஆவார் "
என நபி ஸல் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள். ( நூல்: திர்மிதீ )
இன்னொரு
ரிவாயத்தில் "தான் ஒதுங்கி தன்னை தற்காத்துக் கொள்வது போன்று அவரின் மூலமாக
பிறருக்கு எவ்வித துன்பமும் ஏற்படுத்தாதவர் ஆவார் " என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. ( நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ )
குழப்பம் ஏற்படுவதை தடுக்க முடியாது!
عَنْ
أُسَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَشْرَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُطُمٍ مِنْ الْآطَامِ فَقَالَ هَلْ تَرَوْنَ مَا أَرَى
إِنِّي أَرَى الْفِتَنَ تَقَعُ خِلَالَ بُيُوتِكُمْ مَوَاقِعَ الْقَطْرِ صحيح
البخاري
மதீனாவின் கோட்டைகளில்
ஒரு கோட்டை மீது ஏறிய நபி (ஸல்) அவர்கள் நான் பார்ப்பவைகளை எல்லாம் நீங்கள்
பார்க்கின்றீர்களா?
எனக் கேட்டுவிட்டு: மழைத்துளிகள் போன்று (அடுக்கடுக்கான)
குழப்பங்கள் உங்கள் வீடுகளின் மத்தியில் நெகிழ்வதை நான் பார்க்கின்றேன் எனக்
கூறினார்கள். (புகாரி).
குழப்பம் ஏற்படுவது அல்லாஹ் அமைத்த நியதிகளில் கட்டுப்பட்டது.
عَنْ
أُمِّ سَلَمَةَ قَالَتْ اسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللَهُ عَلَيْهِ وَسَلَّمَ
ذَاتَ لَيْلَةٍ فَقَالَ سُبْحَانَ اللَّهِ مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنْ
الْفِتَنِ وَمَاذَا فُتِحَ مِنْ الْخَزَائِنِ أَيْقِظُوا صَوَاحِبَاتِ الْحُجَرِ
فَرُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الْآخِرَةِ- صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள்
ஒரு நாள் இரவு திடீரென விழித்தெழுந்து, சுப்ஹானல்லாஹ்! இவ்விரவு
என்ன குழப்பங்கள்தாம் இறக்கப்பட்டுள்ளதோ! என்ன பொக்கிஷங்கள்தாம் திறக்கப்பட்டுள்ளதோ!
அறைவாசிகளை (நபியின் மனைவியரை) உறக்கத்தில் இருந்து (தொழுகைக்காக) எழுப்பி
விடுங்கள். உலகில் ஆடை அணிந்த எத்தனையோ பெண்கள் மறுமையில் நிர்வாணிகளாக இருக்கப்
போகின்றனரே! எனக் கூறினார்கள் (புகாரி)
உலகில் குழப்பங்கள் நிறைந்த முஸ்லிம் பிரதேசம்...
عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَأَيْتُ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُشِيرُ إِلَى الْمَشْرِقِ فَقَالَ هَا
إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا مِنْ حَيْثُ يَطْلُعُ
قَرْنُ الشَّيْطَانِ. ((صحيح البخاري))
நபி (ஸல்) அவர்கள்
(மதீனாவின்) கிழக்குத் திசையை நோக்கி (ஈராக்கை நோக்கி) சைகை செய்து, இதோ இங்கிருந்தான் குழப்பங்கள் தோன்றும். இதோ இங்கிருந்துதான் ஷைத்தானின்
கொம்பு வெளிப்படும் என்று கூறியதைக் கணடேன் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரழி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)
யுஸைர் பின் அம்று
(ரழி) அவர்கள் ஸஹ்ல் பின் ஹனீஃப் (ரழி) அவர்களிடம் கவாரிஜ்கள் பற்றி நபி (ஸல்)
அவர்கள் ஏதாவது கூறியது பற்றி நீங்கள் செவிமடுத்தீர்களா எனக் கேட்டார்கள். அவர்கள்
ஈராக் நகர் பக்கமாக கையைக் காட்டி இஙகிருந்து ஒரு கூட்டம் வெளிப்படும். குர்ஆனை
அவர்கள் நன்கு திறம்பட ஓதுவார்கள். அவர்களின் தொண்டைக் குழியை அது கடக்காது.
ஈட்டியில் இருந்து அம்பு வெளியேறுவது போன்று அவர்கள் இஸ்லாத்தை விட்டும்
வெளியேறிச் செல்வார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறினார்கள். (புகாரி)
இது பற்றி
விளக்கமளிக்கும் இமாம்களான கத்தாபி, மற்றும் இப்னு ஹஜர் போன்ற
அறிஞர்கள் இஸ்லாமிய சிந்தனைக்கு முரணான சிந்தனாரீதியான இயக்கங்களான, கவாரிஜ்,
முஃதஸிலா, மற்றும் ஜஹ்மிய்யா, கத்ரிய்யா,
ஷீஆ போன்ற நம்பிக்கை கோட்பாடுகளில் வழிதவறிய குழுக்களை
அடையாளம் காட்டுவதைப் பாரக்கின்றோம். ( நூல்: மஆலிமுஸ்ஸுன்னா, ஃபத்ஹுல் பாரி )
குழப்பங்களில் ஒன்றை விட ஒன்று சளைத்ததாக இருக்காது.
… وَإِنَّ أُمَّتَكُمْ هَذِهِ جُعِلَ عَافِيَتُهَا فِي أَوَّلِهَا وَسَيُصِيبُ آخِرَهَا بَلَاءٌ وَأُمُورٌ تُنْكِرُونَهَا وَتَجِيءُ فِتْنَةٌ فَيُرَقِّقُ بَعْضُهَا بَعْضًا وَتَجِيءُ الْفِتْنَةُ فَيَقُولُ الْمُؤْمِنُ هَذِهِ مُهْلِكَتِي ثُمَّ تَنْكَشِفُ وَتَجِيءُ الْفِتْنَةُ فَيَقُولُ الْمُؤْمِنُ هَذِهِ هَذِهِ فَمَنْ أَحَبَّ أَنْ يُزَحْزَحَ عَنْ النَّارِ وَيُدْخَلَ الْجَنَّةَ فَلْتَأْتِهِ مَنِيَّتُهُ وَهُوَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَأْتِ إِلَى النَّاسِ الَّذِي يُحِبُّ أَنْ يُؤْتَى إِلَيْهِ – صحيح مسلم
உங்களது இந்த
சமூத்தின் ஆரோக்கியம் (ஈடேற்றம்) அதன் ஆரம்ப சமூகத்தில் ஆக்கப்பட்டிருந்தது. அதன்
இறுதிக்கட்டத்தில் பல சோதனைகள், மற்றும் நீங்கள்
வெறுக்கின்ற விவகாரங்கள் (குழப்பங்கள்) நடந்தே தீரும்.
ஒரு குழப்பமான
நிலை வரும். ஒரு குழப்பம் முந்திய மற்ற குழப்பத்தை எளிதாக்கிக் காட்டும். ஒரு
குழப்பம் வரும். அப்போது இறை விசுவாசியானவன் இதுவே எனது அழிவு என முடிவு செய்வான்.
பின்னர் அது அகன்று விடும். பிறிதொரு குழப்பம் வரும். அப்போது இறை விசுவாசியானவன்
இதுவே எனது அழிவு. இதுவேதான் என முடிவு செய்வான்.
யார் நரகில்
இருந்து காப்பற்றப்பட்டு,
சுவனத்தில் நுழைவிக்கப்பட விரும்புகின்றாரோ அவர்
அல்லாஹ்வையும்,
மறுமை நாளையும் நம்பியவராக இருக்கும் நிலையில் அவரது மரணம்
அவரை வந்தடையட்டும்.
மனிதர்களில்
யாரிடம் வர அவர் விரும்புகின்றாரோ அவரிடமே அவர் வரவும். (அதாவது குழப்பவாதிகளிடம்
சிக்கிக் கொள்ள வேண்டாம்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
குழப்பமான கால கட்டத்தில் ஒரு முஃமின் எடுக்க வேண்டிய நிலைப்பாடு!
1. போராடுவது..
குழப்பமான
சூழ்நிலைகள் வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் எச்சரிக்கையாவும் நிதானமாகவும்
நடந்து கொள்ள வேண்டும்.
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا خُذُوا حِذْرَكُمْ فَانْفِرُوا ثُبَاتٍ
أَوِ انْفِرُوا جَمِيعًا
நம்பிக்கை
கொண்டவர்களே! உங்களின் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.
(எச்சரிக்கையாக இருங்கள்),
பிரிந்தவர்களாகவோ, சேர்ந்தோ போருக்குப்
புறப்படுங்கள். ( அல்குர்ஆன்: 4: 71 )
2. தொழுகை,
துஆவில் ஈடுபடுவது..
இமாம் இப்னு ஹஜர்
(ரஹ்) அவர்கள் குழப்பங்கள் இறக்கப்படுவது பற்றிய ஹதீஸை விளக்குகின்றபோது
பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
…وَفِي الْحَدِيث النَّدْب إِلَى الدُّعَاء ، وَالتَّضَرُّع عِنْدَ نُزُول الْفِتْنَة وَلَا سِيَّمَا فِي اللَّيْل لِرَجَاءِ وَقْت الْإِجَابَة لِتُكْشَف أَوْ يَسْلَم الدَّاعِي وَمَنْ دَعَا لَهُ وَبِاَللَّهِ التَّوْفِيق . فتح الباري لابن حجر
மேற்படி ஹதீஸில் துஆவின் பக்கம்
அதிரடியாக நெருங்குவதும்,
குழப்பங்களின் போது அல்லாஹ்வை இறைஞ்சி வழிபடுவதும்
உள்ளடங்கி இருக்கின்றது. குறிப்பாக இரவில் விடையளிக்கப்படும் நேரத்தைக் கவனத்தில்
கொண்டு குழப்பங்கள் நீங்கிடவும், அல்லாஹ்வை அழைப்பவரும், யாருக்காக அவர் பிரார்த்திக்கின்றாரோ அவரும் அதில் இருந்து ஈடேற்றம் பெறவும்
(பிரார்த்தனை செய்தல்) இந்த ஹதீஸில் காணப்படுகின்றது என்றும் மற்றொரு இடத்தில்
விரிவுரை செய்கின்றபோது
… وَفِي الْحَدِيث اِسْتِحْبَاب الْإِسْرَاع إِلَى الصَّلَاة عِنْد خَشْيَة الشَّرّ كَمَا قَالَ تَعَالَى : ( وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاة ) وَكَانَ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَمْر فَزِعَ إِلَى الصَّلَاة ، وَأَمَرَ مَنْ رَأَى فِي مَنَامه مَا يَكْرَه أَنْ يُصَلِّيَ ، وَسَيَأْتِي ذَلِكَ فِي مَوَاضِعه . وَفِيهِ التَّسْبِيح عِنْد رُؤْيَة الْأَشْيَاء الْمَهُولَة ، ((فتح الباري لابن حجر
பொறுமையக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி வேண்டுங்கள் என்று அல்குர்ஆன் குறிப்பிடுவது போன்று
தீமைகள் ஏற்படுவதை அஞ்சுகின்றபோது தொழுகையின் பக்கம் விரைதல் நபிவழியாகும் என்பது
இந்த ஹதீஸில் உள்ளடங்கி இருக்கின்றது. திகில் கொள்ளும்படியான ஏதாவது நிகழ்வுகள்
ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் பக்கம் விரைவார்கள். ( நூல்: ஃபத்ஹுல் பாரி )
3. ஒதுங்கி இருப்பது...
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:- «يُوشِكُ أَنْ يَكُونَ
خَيْرَ مَالِ المُسْلِمِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الجِبَالِ وَمَوَاقِعَ
القَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الفِتَنِ»
‘ஒரு காலம் நெருங்கிக்
கொண்டிருக்கிறது. அன்று முஸ்லிமின் செல்வங்களில் ஆடுதான் சிறந்தது.
குழப்பங்களிலிருந்து மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டைக் கூட்டிக் கொண்டு
அவன் மலைகளின் உச்சியிலும் மழை பெய்யும் இடங்களிலும் சென்று வாழ்வான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி
(ரலி) ( நூல்: புகாரி )
4. மௌனமாக இருப்பது.
أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:- «سَتَكُونُ فِتَنٌ القَاعِدُ فِيهَا
خَيْرٌ مِنَ القَائِمِ ، وَالقَائِمُ فِيهَا خَيْرٌ مِنَ المَاشِي، وَالمَاشِي
فِيهَا خَيْرٌ مِنَ السَّاعِي، وَمَنْ يُشْرِفْ لَهَا تَسْتَشْرِفْهُ، وَمَنْ
وَجَدَ مَلْجَأً أَوْ مَعَاذًا فَلْيَعُذْ بِهِ»
‘விரைவில் நிறையக்
குழப்பங்கள் தோன்றும். (அந்த நேரத்தில்) அவற்றுக்கிடையே (மௌனமாகி)
அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான்.
அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனை விடச்
சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச்
சிறந்தவன் ஆவான். அதை அடைகிறவரை அது வீழ்த்தி அழித்துவிட முனையும்.
அப்போது, புகலிடத்தையோ,
அபயம் தரும் இடத்தையோ பெறுகிறவர் அதைக் கொண்டு பாதுகாப்பு
பெறட்டும்’
என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி) ( நூல்: புகாரி )
حَدَّثَنِي
عَامِرُ بْنُ سَعْدٍ، قَالَ:- "كَانَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ فِي
إِبِلِهِ، فَجَاءَهُ ابْنُهُ عُمَرُ، فَلَمَّا رَآهُ سَعْدٌ قَالَ: أَعُوذُ
بِاللهِ مِنْ شَرِّ هَذَا الرَّاكِبِ، فَنَزَلَ فَقَالَ لَهُ: أَنَزَلْتَ فِي
إِبِلِكَ وَغَنَمِكَ، وَتَرَكْتَ النَّاسَ يَتَنَازَعُونَ الْمُلْكَ بَيْنَهُمْ؟
فَضَرَبَ سَعْدٌ فِي صَدْرِهِ، فَقَالَ: اسْكُتْ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ اللهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ،
الْغَنِيَّ، الْخَفِيَّ»
ஆமிர் பின் சஅத்
பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் ஒட்டகங்களுக்கிடையே
இருந்தார்கள். அப்போது அவர்களுடைய புதல்வர் உமர் பின் சஅத் அவர்கள் வந்தார்கள்.
அவரை சஅத் (ரலி) அவர்கள் கண்டபோது, “வாகனத்தில் வரும்
இந்த மனிதரின் தீமையிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள்.
அவர்
(வாகனத்திலிருந்து) இறங்கி,
“நீங்கள் உங்களுடைய ஒட்டகங்களுக்கும் ஆடுகளுக்குமிடையே
தங்கிவிட்டீர்கள்;
ஆட்சியதிகாரத்திற்காக மக்களைத் தம்மிடையே சண்டையிட்டுக்
கொள்ள விட்டுவிட்டீர்கள்”
என்று (குறை) கூறினார்.
உடனே, சஅத் (ரலி) அவர்கள் அவரது நெஞ்சில் அடித்து, “பேசாமல் இரு! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் இறையச்சமுள்ள,
போதுமென்ற மனமுடைய, (குழப்பங்களிலிருந்து)
ஒதுங்கி வாழ்கின்ற அடியானை நேசிக்கின்றான்’ என்று கூறியதை நான்
கேட்டுள்ளேன்”
என்றார்கள். ( நூல்: முஸ்லிம் )
குழப்பங்களில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது...
உலகில்
வாழும் எந்த மனிதனும் ஃபித்னாவிலிருந்து தப்பி வாழ முடியாது. உலகின் நாலா
புறங்களில் இருந்தும் ஃபித்னாக்கள் அவனைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.
நபித்தோழர்கள் சந்தித்த குழப்பமான கால கட்டம்...
قال ابن
عمر رضي الله عنهما : دخلت على حفصة ونوساتها تنطف فقلت : قد كان من الناس ما ترين
، ولم يُجعل لي من الأمر شيء . قالت : فالحق بهم ، فإنهم ينتظرونك وإني أخشى أن
يكون في احتباسك عنهم فُرقة ، فلم يرعه حتى ذهب قال : فلما تفرق الحكمان خطب
معاوية فقال : من كان يريد أن يتكلم في هذا الأمر فليطلع إليّ قرنه ! فنحن أحق
بذلك منه ومن أبيه . يُعرّض بابن عمر
!
فقال له
حبيب بن مسلمة : فهلا أجبته فداك أبي وأمي ؟ فقال ابن عمر : حللت حبوتي فهممت أن
أقول : أحق بذلك منك من قاتلك وأباك على الإسلام ، فخشيت أن أقول كلمة تفرّق الجمع
، ويسفك فيها الدم ، فذكرت ما أعد الله في الجنان . رواه البخاري
நான் ( என்
சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களது கூந்தலில் இருந்து தண்ணீர்
சொட்டிக் கொண்டிருந்தது.
நான் அவர்களிடம்
மக்களின் ( அரசியல் ) விவகாரங்களில் நீங்கள் பார்ப்பது நடந்து கொண்டிருக்கின்றது.
எனக்கோ இந்த (ஆட்சியதிகார) விஷயத்தில் எந்த பங்கும் வழங்கப்படவில்லை. (இந்நிலை
அவர்கள் கூட்டியுள்ள இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நான் செல்லத்தான் வேண்டுமா?) என்று கேட்டேன் அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள் நடந்து கொண்டிருக்கும் ஆலோசனைக்
கூட்டத்திற்கு) போய் சேர். ஏனெனில் அவர்கள் உன்னை எதிர்ப்பார்த்துக்
கொண்டிருப்பார்கள். நீ செல்லாமல் இருப்பதால் மக்களிடையே (மேலும்) பிளவு ஏற்பட்டு
விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன். என்று கூறினார்கள் . நான் செல்லும் வரை என்னை
அவர்கள் விடாமல் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள்.
(நானும் சென்றேன்
அங்கே ஒருமித்த கருத்து உருவாகாமல்) மக்கள் பிளவுபட்டிருந்த போது முஆவியா (ரலி)
அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அவர்கள் தமது உரையில் (இப்னு உமர் (ரலி) அவர்களையும்
அன்னாருடைய தந்தை உமர் (ரலி) அவர்களையும் கருத்தில் கொண்டு) எவர் இந்த ( ஆட்சி
பொறுப்பு ) விசயத்தில் கருத்துச் சொல்ல விரும்புகின்றாரோ அவர் தன் தலையை
காட்டட்டும். ஏனெனில் அவரை விடவும் அவருடைய தந்தையை விடவும் நாமே ஆட்சி
பொறுப்பிற்கு மிகவும் அருகதையானோர் என்று கூறினார்கள்.
ஹபீப் பின் மஸ்லமா
(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நான் (இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நீங்கள்
(அப்போது) முஆவியா (ரலி) அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அப்போது நான் எனது துண்டை அவிழ்த்து (உதறிப்
போட்டு) க் கொண்டு (உஹத் மற்றும் கன்தக் போர்களில் முஆவிவே) உங்களுடனும் உங்கள்
தந்தை (அபூ ஸூப்யான்) உடனும் இஸ்லாத்திற்காகப் போரிட்ட (அலீ (ரலி) போன்ற) வரே இந்த
(ஆட்சியதிகார) விசயத்திற்காக உங்களை விடக் தகுதி வாய்ந்தவர் என்று சொல்ல
நினைத்தேன்.
ஆயினும்
மக்களிடையே பிளவை ஏற்படுத்தி இரத்தம் சிந்த செய்து விடும் ஒரு வார்த்தையை நான்
கூறி விடுவேனா நான் கூறிய வார்த்தைக்கு நான் நினைக்காத கருத்து கற்பிக்கபட்டு
விடுமோ என்றெல்லாம் அஞ்சினேன். மேலும் சுவனத்தில் (பொறுமையாளர்களுக்காக) அல்லாஹ்
தாயரித்து வைத்துள்ளவற்றை எண்ணிப்பார்த்தேன் (அதனால் அவர்களுக்கு பதில் கூறவில்லை)
என்று கூறினார்கள். அப்போது நான் (நல்ல வேளை நீங்கள் கோப உணர்ச்சிக்கு ஆளாகாமல்)
பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள் என்று கூறினேன். ( நூல் : புகாரி )
நபித்தோழர்களை திட்டுபவர்கள் உருவான குழப்பமான காலத்தில்...
أخبرنا
أبو الفتوح يوسف بن المبارك بن كامل بن الحسين الخفاف ببغداد أن أبا بكر محمد بن
عبد الباقي بن محمد الأنصاري أخبرهم أنبأنا إبراهيم بن أبي حفص البرمكي قراءة عليه
أنبأنا أبو محمد بن ماسي البزاز قراءة عليه ثنا أبو مسلم الكجي ثنا محمد بن عبد
الله الأنصاري قال ثنا ابن عون قال أنبأني محمد بن محمد بن الأسود عن عامر بن سعد
قال:
بينما
سعد -يعني ابن أبي وقاص رضي الله عنه- يمشي إذ مر برجل وهو يشتم عليا وطلحة
والزبير رضوان الله عليهم، فقال له سعد: إنك لتشتم قوما قد سبق لهم من الله ما سبق
والله لتكفن عن شتمهم أو لأدعون الله عليك، قال: يخوفني كأنه نبي؟ قال فقال سعد:
اللهم إن كان هذا يسب أقواما قد سبق لهم منك ما سبق فاجعله اليوم نكالا، قال:
فجاءت بختية فأفرج الناس لها فتخبطته، قال: فرأيت الناس يتبعون سعدا ويقولون:
استجاب الله لك أبا إسحاق
சஅத் பின் அபீ
வக்காஸ் (ரலி) அவர்களது மகன் தனது தந்தைகயின் பிரார்த்தனைகளை இறைவன் எவ்வாறு உடன்
அங்கீகரித்தான் என்பதற்கு தனது நினைவலைகளில் இருந்து ஒரு சம்பவத்தை நமக்கு
எடுத்துக் காட்டுகின்றார். ஒருமுறை ஒரு மனிதன் அலி (ரலி) அவர்கள் பற்றியும்
இன்னும் சுபைர் (ரலி),
தல்ஹா (ரலி) அவர்கள் பற்றியும் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு
அர்ச்சித்துக் கொண்டிருப்பதை சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கேட்டு விட்டு, இந்த மாதிரி கெட்ட வார்த்தைகளைக் கொண்டு பேசுவதை நிறுத்துங்கள் என்று
கோபத்துடன் கூறினார்கள். ஆனால் அந்த மனிதர் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின்
கோபத்தைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கொண்டே இருந்தார். மிகவும் கோபத்தின்
உச்சிக்கே சென்று விட்ட சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், இனிமேலும் நீங்கள் நிறுத்தவில்லை என்றால், உங்கள் மீது சாபம்
இறங்கட்டுமாக என்று நான் பிரார்த்தனை செய்து விடுவேன் என்று கூறினார்கள்.
உடனே அந்த மனிதர், நீங்கள் என்ன அனைத்து வல்லமையும் படைத்தவரா? அல்லது இறைத்தூதரா?
நீங்கள் கேட்ட துஆவுக்கு இறைவன் உடனே பதில் அளிப்பதற்கு!
என்று கேட்டு விட்டார். அந்த மனிதரது கேடு கெட்ட இந்த வார்த்தைகளைக் கேட்ட சஅத்
பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள். பின் தன்னைத்
தூய்மைப்படுத்திக் கொண்டு (ஒளுச் செய்து கொண்டு) இரண்டு ரக்அத் துக்களைத்
தொழுதார்கள். பின் இறைவனிடம் இவ்வாறு முறையிட்டார்கள் :
யா அல்லாஹ்! நீ
யாரைப் பொருந்திக் கொண்டாயோ, இன்னும் அவர்களது
நற்செயல்கள் குறித்து திருப்தி கொண்டாயோ அத்தகைய நல்ல ஆத்மாக்களைப் பற்றி இந்த
மனிதர் குறை கூறிக் கொண்டிருக்கின்றார். நிச்சயமாக இத்தகைய கெட்ட வார்த்தைகளுக்கு
அவர்கள் உரித்தவர்களல்ல என்பதை நீ அறிவாய், இந்த மனிதருடைய
வார்த்தைகளை நீ நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டாய். அவர் வெளிப்படுத்திய இந்த
வார்த்தைகளுக்காக பிற மனிதர்களுக்கு இவரை ஒரு படிப்பினையாக ஆக்கி வைப்பாயாக! என்று
பிரார்த்தித்தார்கள்.
சஅத் பின் அபீ
வக்காஸ் (ரலி) அவர்கள் பிரார்த்தனை செய்து விட்டு திரும்பிய சற்று
நேரத்திற்குள்ளாக,
எங்கிருந்தோ கட்டப்பட்ட கயிறை அறுத்துக் கொண்டு, மதம் பிடித்தது போல ஒரு ஒட்டகம் மனிதர்கள் கூடி நின்று கொண்டிருந்த அந்த
இடத்தை நோக்கி வந்தது. அந்த ஒட்டகம் அந்த கூட்டத்தின் நடுவே அலை மோதித் திரிவதைக்
கண்ட நாங்கள்,
அந்த ஒட்டகம் ஏதோ ஒரு குறிப்பிட்ட மனிதரைத் தேடுவது போல
இருந்தது.
அப்பொழுது, எந்த மனிதரைக் குறித்து சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இறைவனிடம்
முறையிட்டார்களோ அந்த மனிதரின் தலையை இரத்த வெறி கொண்ட அந்த ஒட்டகம் கொத்தாகப்
பிடித்து,
அங்குமிங்கு பலம் கொண்ட மட்டும் ஆட்டியது. ஒட்டகத்தின்
பிடியில் அகப்பட்ட அவனது கழுத்து முறிந்து, அவன் மரணத்தைத்
தழுவினான். கூடியிருந்த மக்கள் அனைவரும் கண் மூடி விழிப்பதற்குள் நடந்து விட்ட
அந்தக் கோரக் காட்சியைப் பார்த்து பிரமித்து நின்றார்கள்.
இறைவனால்
பொருந்திக் கொள்ளப்பட்ட,
அந்த நல்லடியார்களைப் பற்றி சற்று முன் வாய்த் துடுக்காகப்
பேசிய அந்த மனிதர் இப்பொழுது செத்து மடிந்த நிலையில் தரையில் வீழ்ந்து கிடந்தார்.
இவ்வாறு பேசத் துடிக்கும் மனிதர்களுக்கு ஒரு பாடமாகவும் அந்த நிகழ்வு இருந்தது.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குழப்பங்களில் இருந்து நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment