Thursday, 19 September 2024

மாநபி (ஸல்) அவர்களின் அருகாமையும், நபித்தோழர்களின் ஆசையும்!

 

மாநபி (ஸல்) அவர்களின் அருகாமையும், நபித்தோழர்களின் ஆசையும்!


இந்த உலகில் நபி ஸல் அவர்களின் மீதான நமது அன்பு நேசம் காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன் மாதிரி ஸஹாபாக்களான நபித்தோழர்கள் தான்.

இந்த உலகில் அல்லாஹ்வுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதற்கான முன் மாதிரி ஸஹாபாக்களான நபித்தோழர்கள் தான்.

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு வழங்கி இருக்கிற மகத்தான வாழ்வியலை நாம் இந்த உலகில் வாழ வேண்டுமானால் அதற்கான முன் மாதிரியும் ஸஹாபாக்களான நபித்தோழர்கள் தான்.

அவ்வளவு ஏன்? அல்லாஹ்வை நாம் ஈமான் கொள்ள வேண்டுமானால் கூட நாம் எப்படி ஈமான் கொள்ள வேண்டும் என்பதற்கான முன் மாதிரியும் ஸஹாபாக்களான நபித்தோழர்கள் தான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த நபித்தோழர்களை அப்படித்தான் அடையாளப்படுத்தினான்.

فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا

ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப் போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்". ( அல்குர்ஆன்: 2: 137 )

இன்னும் சொல்லப்போனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய நேரடி கண்காணிப்பில் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் நபித்தோழர்கள். 

எங்கெல்லாம் "யா அய்யுஹல்லذதீன ஆமனூ" என்று இறைநம்பிக்கையாளர்களை அழைத்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பேசுகின்றானோ அந்த அழைப்புக்கு முழு முதல் சொந்தக்காரர்கள் நபித்தோழர்கள்.

அவர்களை மட்டுமல்ல அவர்களை யாரெல்லாம் பின்பற்றுகின்றார்களோ அத்தனை பேருக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய "ரிளாவை - திருப் பொருத்தத்தை" வழங்கி கௌரவித்து, சுவனத்தின் பிரவேசத்தை சோபனமாக  நல்குகின்றான்.

وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ‏

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்". ( அல்குர்ஆன்: 9: 100 )

 

அவர்களில் ஒருவரின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறி வேத வசனத்தை இறக்கியருளுவான். அவர்களில் ஒருவரின் ஆசைக்கு அல்லாஹ் இசைவு தெரிவித்து

வேத வசனத்தை இறக்கியருளுவான்.

அவர்களில் ஒருவரின் கவலையை போக்கிட ஏழு வானத்திற்கு அப்பால் இருந்து ஜிப்ரயீல் (அலை) அவர்களை அனுப்பி வைத்து வேத வசனத்தை இறக்கியருளுவான். இப்படியாக அவர்களின் வாழ்க்கை முழுவதும் அல்லாஹ்வினது கவனத்தையும், அவனுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களினது கவனத்தையும் நாள் தோறும் ஈர்க்கக்கூடிய வகையில் அவர்கள் வாழ்ந்தார்கள்.

உதாரணத்திற்கு ஒரு நிகழ்வைக் காணலாம்!

في أعقاب غزوة بدر أنزل الله على نبيه صلى الله عليه وسلم

من آي القرآن ما يرفع شأن المجاهدين ويفضلهم على القاعدين ،

لينشط المجاهد إلى الجهاد ، ويأنف القاعد من القعود ، فأثر ذلك

في نفس ابن أم مكتوم رضي الله عنه وعز عليه أن يُحرم من ذلك الفضل وقال

( يا رسول الله لو أستطيع الجهاد لجاهدت )

ثم سأل الله بقلب خاشع أن ينزل القرآن في شأنه وشأن أمثاله

ممن تعوقهم عاهاتهم عن الجهاد ، فهو بحكم عاهته محروم من

هذه العبادة العظيمة ، فكان يتألم وكان يبكي ، وكان يسأل

النبي صلى الله عليه وسلم ، أن يسأل ربه أن ينزل قرآنا في

شأن ابن أم مكتوم رضي الله عنه المعذور ، وشأن أمثاله ممن

تعوقهم عاهاتهم عن الجهاد ، وجعل يدعو في ضراعة :

( اللهم أنزل عذري ، اللهم أنزل عذري )

فما أسرع أن استجاب الله سبحانه لدعائه ، حدث زيد بن ثابت

رضي الله عنه كاتب وحي رسول الله صلى الله عليه وسلم فقال :

( كنت إلى جنب الرسول صلى الله عليه وسلم ، فغشيته السكينة ،

ونزل عليه الوحي ، فلما سُري عنه قال : " اكتب يا زيد 

فكتبت : (( لا يستوي القاعدون من المؤمنين ))

فقام ابن أم مكتوم وقال :

( يا رسول الله فكيف بمن لا يستطيع الجهاد ؟ )

قال فما انقضى كلامه حتى غشيت رسول الله صلى الله عليه

وسلم السكينة ، ولما سُري عنه قال : " اقرأ ما كتبته يا زيد "

فقرأت (( لا يستوي القاعدون من المؤمنين ))

قال : اكتب (( غير أولي الضرر ))

فكأن من إكرام الله سبحانه أن يستجيب لهذا الصحابي الجليل ،

பத்ர் யுத்தம் முடிவடைந்து, பத்ரில் கலந்து கொண்டவர்களுக்கு அல்லாஹ் அளித்த சிறப்புகளை கேள்விபட்டு அந்த சிறப்புக்களை தம்மால் அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தோடும், பத்ரில் கலந்து கொள்ளாதவர்களை அல்லாஹ் விமர்சித்து இறைவசனம் இறக்கியருளியுள்ளான் என்பதைக் கேள்விபட்டு ஒரு வித நடுக்கத்தோடும் நபிகளாரின் அவைக்கு நபிகளாரைக் காண வருகை தந்தார்கள் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் தூதரே! என்னால் இயலுமானால் நானும் போரில் கலந்து கொண்டிருப்பேனே!என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தன் இயலாமையை முறையிட்டார்கள்.

பின்னர், வானை நோக்கி கையை உயர்த்தி யாஅல்லாஹ் என் விஷயத்திலும், என் போன்ற இயலாதவர்களின் நிலை குறித்தும் நீ உன் திருமறையில் வசனம் ஒன்றை இறக்கியருள வேண்டும்என அல்லாஹ்விடம் அழுது மன்றாடினார்கள்.

உடனடியாக அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அந்நிஸா அத்தியாயத்தின் 95 –ஆம் இறைவசனத்தில் “ஙைர உலில் ளரர” என்ற வார்த்தையை இணைத்து இறக்கியருளினான்.

لَا يَسْتَوِى الْقَاعِدُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ غَيْرُ اُولِى الضَّرَرِ وَالْمُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ‌ فَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِيْنَ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ عَلَى الْقٰعِدِيْنَ دَرَجَةً  وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰى‌ؕ وَفَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِيْنَ عَلَى الْقٰعِدِيْنَ اَجْرًا عَظِيْمًا ۙ‏

ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக)அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.

நபித்தோழர்களுடைய ஒவ்வொருவருடைய வாழ்வும் "இந்த உலகில் வாழும் உங்களுக்கும் எனக்கும் இஸ்லாமிய வாழ்வியலுக்கான முன் மாதிரியே!"

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ قَالَ: نا عَبْدُ بْنُ أَحْمَدَ، ثنا عَلِيُّ بْنُ عُمَرَ، ثنا الْقَاضِي أَحْمَدُ بْنُ كَامِلٍ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ رَوْحٍ، ثنا سَلَّامُ بْنُ سُلَيْمٍ، ثنا الْحَارِثُ بْنُ غُصَيْنٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصْحَابِي كَالنُّجُومِ بِأَيِّهِمُ اقْتَدَيْتُمُ اهْتَدَيْتُمْ»

"என்னுடைய தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்கள்; அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நேர்வழி பெறுவீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அப்து ஹுமைத், பைஹகீ )

காரணம், அவர்கள் அல்லாஹ்வின் மீது வைத்திருந்த நேசம் அப்படி! அவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் மீது வைத்திருந்த நேசம் அப்படி!

குறிப்பாக, நபி (ஸல்) அவர்களுடனான உறவில் ஒவ்வொரு நபித்தோழரும் நபி ஸல் அவர்களிடம் சிறப்பான ஒரு இடத்தை பெற்றிருந்தார்கள்.

1)   நபி ஸல் அவர்களின் அமுத வாயால் அந்த சோபனத்தை நான் பெற வேண்டும்!..

وقال ابن جرير: حدثنا أبو كُرَيْب، حدثنا زيد بن الحُبَاب، حدثنا أبو ثابت بن ثابت بن قيس بن شمَّاس، حدثني عمي إسماعيل بن محمد بن ثابت بن قيس بن شماس، عن أبيه قال: لما نزلت هذه الآية: { لا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ } قال: قعد ثابت بن قيس (5) في الطريق يبكي، قال: فمر به عاصم بن عدي من بني العَجلان، فقال: ما يبكيك يا ثابت؟ قال: هذه الآية، أتخوف أن تكون نزلت فيَّ وأنا صيت، رفيع الصوت. قال: فمضى عاصم بن عدي إلى رسول الله صلى الله عليه وسلم قال: وغلبه البكاء، فأتى امرأته جميلة ابنة عبد الله بن أبي بن سلول فقال لها: إذا دخلتُ بيت فَرَسي فشدّي عَلَيّ الضبَّة بمسمار فضربته بمسمار حتى إذا خرج عطفه، وقال: لا أخرج حتى يتوفاني الله، عز وجل، أو يرضى عني رسول الله صلى الله عليه وسلم. قال: وأتى عاصم رسولَ الله صلى الله عليه وسلم فأخبره خبره، فقال: "اذهب فادعه لي". فجاء عاصم إلى المكان فلم يجده، فجاء إلى أهله فوجده في بيت الفَرَس، فقال له: إن رسول الله صلى الله عليه وسلم يدعوك. فقال: اكسر الضبة. قال: فخرجا فأتيا (6) النبي صلى الله عليه وسلم فقال له رسول الله صلى الله عليه وسلم: "ما يبكيك يا ثابت؟". فقال: أنا صيت وأتخوف أن تكون هذه الآية نزلت في: { لا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ } . فقال له رسول الله صلى الله عليه وسلم: "أما ترضى أن تَعِيش حَميدًا، وتقتل شهيدا، وتدخل الجنة؟". فقال: رضيت ببشرى الله ورسوله صلى الله عليه وسلم، ولا أرفع صوتي أبدا على صوت النبي صلى الله عليه وسلم.

ஒரு சந்தர்ப்பத்தில், அல்லாஹ் ஹுஜுராத் அத்தியாயத்தின் 2 –ஆம் வசனத்தை இறக்கியருளிய போது, மதீனாவின் வீதியில் இருந்து அழுது கொண்டிருந்தார்கள்.

அவ்வழியாகச் சென்ற ஆஸிம் இப்னு அதீ (ரலி) அவர்கள் அதைப் பார்த்து விட்டு, அழுவதற்கான காரணத்தை வினவிய போது,  மேற்கூறிய இறைவசனத்தை சுட்டிக் காட்டி அந்த வசனம் என் சம்பந்தமாகத்தான் இறங்கிற்றோ என்கிற கவலையில் நான் அழுகின்றேன் என்றார்கள்.

அங்கிருந்து ஆஸிம் (ரலி) அவர்கள் விடைபெற்றதும், அழுகை மிகுதியாகவே நேராக வீட்டிற்குச் சென்ற ஸாபித் (ரலி) அவர்கள், தம்முடைய மனைவி ஜமீலா (ரலி) அவர்களிடம் வந்து, என்னை குதிரையை கட்டும் லாயத்தில் ஓரிடத்தில் கூண்டடித்து என்னை கட்டிப்போட்டு விடுங்கள்.

பின்னர் தமது மனைவியை நோக்கி என்னை குறித்து நபி {ஸல்} அவர்கள் திருப்தி கொள்ளாதவரையில் எனக்கு மரணமே வந்தாலும் நான் கூண்டை விட்டு  வெளியே வரமாட்டேன்என்றார்கள்.

அதே வேளையில் ஆஸிம் (ரலி) அவர்கள் வழியில் தாம் கண்ட காட்சியை அண்ணலாரிடம் கூறினார்கள். அப்போது நபிகளார் ஸாபித் (ரலி) அவர்களை தம்மிடம் அழைத்து வருமாறு ஆஸிம் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

நேராக மதீனாவின் வீதிக்கு வந்த ஆஸிம் (ரலி) அவர்கள், ஸாபித் (ரலி) அவர்கள் அங்கு இல்லாததைக் கண்டு ஸாபித் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

அங்கே குதிரை லாயத்திலே முடங்கிக்கிடந்த ஸாபித் (ரலி) அவர்களிடம் நபி {ஸல்} அவர்கள் உடனே மஸ்ஜிதுன் நபவீ க்கு உங்களை வரச்சொன்னார்கள்என்றார். அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள் தம் மீது போடப்பட்டிருக்கின்ற கூண்டை உடைக்கச் சொன்னார்கள்.

அது போன்றே ஆஸிம் (ரலி) அவர்களும் உடைத்தார்கள். பின்னர் இருவரும் நபிகளாரின் சபை நோக்கி நடந்தார்கள்.

 

அழுது புலம்பியவராக அண்ணலாரின் அவைக்குள்ளே அடியெடுத்து வைத்த ஸாபித் (ரலி) அவர்களை நோக்கி பெருமானார் {ஸல்} அவர்கள் தோழரே! நீர் புகழுக்குரிய வாழ்வை வாழ்வீர் என்றால் பொருந்திக்கொள்வீரா?” நீர் ஷஹாதத் எனும் வீர மரணம் அடைவீர் என்றால் பொருந்திக்கொள்வீரா?” நீர் சுவனத்தைப் பெற்றுக் கொள்வீர் என்றால் பொருந்திக்கொள்வீரா?”

வாரும்! உமக்கான சோபனத்தை பெற்றுச் செல்லும்! என்று கூறினார்கள். நிச்சயமாக! அல்லாஹ்வின் தூதரே! இதோ! அல்லாஹ்வுடைய, அல்லாஹ்வின் தூதருடைய சோபனத்தை நான் பொருந்திக்கொள்கின்றேன்.என்று ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இனி ஒரு போதும் நான் தங்களின் குரலை விட உயர்த்தி பேசமாட்டேன் அல்லாஹ்வின் தூதரே! என்றுரைத்தார்.

உடனடியாக அல்லாஹ் அடுத்து ஒரு இறை வசனத்தை இறக்கியருளினான்.

إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُولِ اللَّهِ أُولَئِكَ الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَى لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ      

திண்ணமாக! எவர்கள் இறைத்தூதரின் திருமுன் உரையாடும் போது தங்கள் குரலைத் தாழ்த்துகின்றார்களோ உண்மையில் அத்தகையவர்களின் இதயங்களை இறையச்சத்திற்காக அல்லாஹ் பரிசோதித்து தேர்ந்தெடுக்கின்றான். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் இருக்கின்றது. ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், இஸ்தீஆப், உஸ்துல் ஃகாபா )

2)   அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பொருந்திக் கொண்டதாக தெரிவிக்க வேண்டும்!...

كَانَ رَسُولُ اللَّهِ ( صلى الله عليه و آله ) لَمَّا حَاصَرَ بَنِي قُرَيْظَةَ قَالُوا لَهُ ابْعَثْ إِلَيْنَا أَبَا لُبَابَةَ نَسْتَشِيرُهُ فِي أَمْرِنَا ، فَقَالَ رَسُولُ اللَّهِ ( صلى الله عليه و آله ) : " يَا أَبَا لُبَابَةَ ائْتِ حُلَفَاءَكَ وَ مَوَالِيَكَ ، فَأَتَاهُمْ .
فَقَالُوا لَهُ : يَا بَا لُبَابَةَ مَا تَرَى ، أَ نَنْزِلُ عَلَى حُكْمِ رَسُولِ اللَّهِ ( صلى الله عليه و آله ) ؟
فَقَالَ : انْزِلُوا وَ اعْلَمُوا أَنَّ حُكْمَهُ فِيكُمْ هُوَ الذَّبْحُ ، وَ أَشَارَ إِلَى حَلْقِهِ .
ثُمَّ نَدِمَ عَلَى ذَلِكَ ، فَقَالَ خُنْتُ اللَّهَ وَ رَسُولَهُ ، وَ نَزَلَ مِنْ حِصْنِهِمْ ، وَ لَمْ يَرْجِعْ إِلَى رَسُولِ اللَّهِ ( صلى الله عليه و آله ) ، وَ مَرَّ إِلَى الْمَسْجِدِ ، وَ شَدَّ فِي عُنُقِهِ حَبْلًا ثُمَّ شَدَّهُ إِلَى الْأُسْطُوَانَةِ الَّتِي كَانَتْ تُسَمَّى أُسْطُوَانَةَ التَّوْبَةِ ، فَقَالَ لَا أَحُلُّهُ حَتَّى أَمُوتَ ، أَوْ يَتُوبَ اللَّهُ عَلَيَّ .
فَبَلَغَ رَسُولَ اللَّهِ ( صلى الله عليه و آله ) ، فَقَالَ : " أَمَا لَوْ أَتَانَا لَاسْتَغْفَرْنَا اللَّهَ لَهُ ، فَأَمَّا إِذَا قَصَدَ إِلَى رَبِّهِ فَاللَّهُ أَوْلَى بِهِ " .
وَ كَانَ أَبُو لُبَابَةَ يَصُومُ النَّهَارَ وَ يَأْكُلُ بِاللَّيْلِ مَا يُمْسِكُ رَمَقَهُ ، وَ كَانَتْ بِنْتُهُ تَأْتِيهِ بِعَشَائِهِ ، وَ تَحُلُّهُ عِنْدَ قَضَاءِ الْحَاجَةِ .
فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ وَ رَسُولُ اللَّهِ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ نَزَلَتْ تَوْبَتُهُ .
فَقَالَ : " يَا أُمَّ سَلَمَةَ قَدْ تَابَ اللَّهُ عَلَى أَبِي لُبَابَةَ " .
فَقَالَتْ : يَا رَسُولَ اللَّهِ أَ فَأُؤْذِنُهُ بِذَلِكَ ؟
فَقَالَ : " لَتَفْعَلَنَّ " .
فَأَخْرَجَتْ رَأْسَهَا مِنَ الْحُجْرَةِ ، فَقَالَتْ : يَا أَبَا لُبَابَةَ أَبْشِرْ قَدْ تَابَ اللَّهُ عَلَيْكَ .
فَقَالَ : الْحَمْدُ لِلَّهِ .
فَوَثَبَ الْمُسْلِمُونَ يَحُلُّونَهُ .
فَقَالَ : لَا وَ اللَّهِ حَتَّى يَحُلَّنِي رَسُولُ اللَّهِ ( صلى الله عليه و آله ) بِيَدِهِ .

அகழ்ப்போர் முடிந்து நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குத் திரும்பினார்கள். அன்று அவர்கள் தனது மனைவி உம்மு ஸலமாவின் வீட்டில் மதிய வேளையில் குளித்துக் கொண்டிருந்தபோது வானவர் ஜிப்ரீல் (அலை) நபியவர்களை சந்தித்து ''என்ன நீங்கள் உங்களது ஆயுதத்தைக் கீழே வைத்து விட்டீர்களாநிச்சயமாக வானவர்கள் தங்களின் ஆயுதங்களை இன்னும் கீழே வைக்கவில்லை.

நான் இப்போதுதான் எதிரிகளை விரட்டிவிட்டு வருகிறேன். நீங்கள் உங்கள் தோழர்களுடன் குரைளாவினர்களை நோக்கிப் புறப்படுங்கள். உங்களுக்கு முன் நான் சென்று அவர்களுடைய கோட்டைகளை அசைக்கிறேன். அவர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துகிறேன்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து வானவர்களின் ஒரு கூட்டத்துடன் புறப்பட்டார்.

நபி (ஸல்) அவர்கள் ஒருவரை அனுப்பி மக்களுக்கு மத்தியில் அறிவிக்கக் கூறினார்கள்: ''யார் கட்டளையைக் கேட்டு கீழ்ப்படிந்து நடக்கிறாரோ அவர் அஸ்ர் தொழுகையை குரைளாவினரிடம் சென்றுதான் தொழ வேண்டும்'' (அதாவது உடனடியாக இங்கிருந்து குரைளாவினரை நோக்கி புறப்பட வேண்டும்) என்று கூறினார்கள்.

மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமை பொறுப்பாளராக நியமித்துவிட்டு நபியவர்கள் புறப்பட்டார்கள். போர்க் கொடியை அலீயிடம் வழங்கி அவரை அவசரமாக முன்கூட்டி அனுப்பி வைத்தார்கள். அலீ (ரழி) படையுடன் குரைளாவினரின் கோட்டையைச் சென்றடைந்தார்கள். அங்கிருந்த யூதர்கள்அலீ (ரழி) காதில் படும்படியாக நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக ஏசினர்.

 

நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளின் சில குறிப்பிட்ட நபர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு குரைளாவினரின் ஒரு கிணற்றுக்கு அருகில் வந்து இறங்கினார்கள்.

மீதமுள்ள முஸ்லிம்கள் உடனடியாக குரைளாவினரை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தவுடன்: ''அஸ்ர் தொழுகையை நேரம் தவறுவதற்குள் வழியிலேயே தொழுது விடுவதா அல்லது நேரம் தவறினாலும் குரைளா சென்று தொழுவதா'' என அவர்களுக்கு மத்தியில் இரு கருத்துகள் நிலவின.

மதீனாவிலேயே அஸ்ர் தொழுது விட்டு புறப்படலாமென யாரும் தாமதித்துவிடக் கூடாது என்ற கருத்தில்தான் நபி (ஸல்) அவர்கள் குரைளா சென்று அஸ்ர் தொழ வேண்டுமென கூறினார்கள். தொழுகை நேரத்தைத் தவறவிடுவது நபியவர்களின் நோக்கமல்ல என்று கூறிவிட்டு சிலர் வழியிலேயே அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர்.

இவர்களைத் தவிர மற்றவர்கள் நபியவர்கள் கூறியபடி குரைளா சென்று அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர். அப்போது மக்ரிப் நேரமாக இருந்தது. இன்னும் தாமதமாக வந்து சேர்ந்த சிலர் இஷா நேரத்தில் அஸ்ர் தொழுதனர்.

நபி (ஸல்) அவர்கள் இரு கூட்டத்தார்களின் செயல்களைப் பற்றி ஏதும் கடிந்து கொள்ளவில்லை.

இவ்வாறு இஸ்லாமியப் படை ஒன்றன்பின் ஒன்றாக மதீனாவிலிருந்து புறப்பட்டு நபியவர்கள் தங்கியிருந்த இடத்தை வந்தடைந்தது. இஸ்லாமியப் படையில் மொத்தம் மூவாயிரம் வீரர்களும்முப்பது குதிரைகளும் இருந்தன. குரைளாவினரின் கோட்டைகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.  ஹிஜ்ரி 5, துல்கஅதா மாதத்தில் நடந்த இந்த முற்றுகை இருபத்தைந்து இரவுகள் நீடித்தன.

இறுதியாக நபியவர்கள் கூறும் தீர்ப்பையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். சரணடைவதற்கு செய்தனர்.

எனினும் சரணடைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள தங்களுக்கு நண்பர்களாக இருந்த சில முஸ்லிம்களுடன் தொடர்பு கொண்டு அறிய விரும்பினர். ஆகவே, நபியவர்களிடம் தூதனுப்பி அபூலுபாபாவை தங்களிடம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். அபூலுபாபா யூதர்களின் நட்புரீதியான ஒப்பந்தக்காரராக இருந்தார்.

இவருடைய பொருட்களும், பிள்ளைகளும் யூதர்களின் பகுதியில் இருந்தன. அபூலுபாபா யூதர்களைச் சந்தித்தவுடன் அவரிடம் பெண்களும், சிறுவர்களும் எழுந்து வந்து அழுதனர். இதைப் பார்த்து அவரது உள்ளம் இளகிவிட்டது. அவர்கள் ''அபூலுபாபாவே! நாங்கள் நபியவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் நபியவர்கள் எங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள்?'' என்றனர். அப்போது அபூலுபாபா ''தனது கழுத்தைச் சீவுவது போல் செய்து காட்டி, அந்தத் தீர்ப்பு கொலை!'' என்று சூசகமாகக் கூறினார்.

 

நபி (ஸல்) அவர்களின் இந்த இரகசிய முடிவை வெளிப்படுத்தி தவறு செய்து விட்டோம். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மோசடி செய்து விட்டோம் என்று அபூலுபாபா உணர்ந்தார், வருந்தினார். எனவே, நபியவர்களைச் சந்திக்கச் செல்லாமல் மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்று தன்னை ஒரு தூணுடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டார்.

நபியவர்கள்தான் தன்னை அவிழ்த்துவிட வேண்டும், இனி ஒருக்காலும் குரைளாவினரின் பூமிக்கு செல்லவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டார். நபியவர்கள் அபூலுபாபாவின் வருகையை எதிர்பார்த்திருந்தார்கள். இவரின் செய்தி நபியவர்களுக்கு கிடைத்தவுடன் ''அபூலுபாபா என்னிடம் நேரடியாக வந்து விஷயத்தை கூறியிருந்தால் நான் அவருக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால், எப்போது அவர் அவருடைய விருப்பப்படி நடந்து கொண்டாரோ அல்லாஹ் அவரது பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்வரை நான் அவரை அவிழ்த்துவிட முடியாது'' என்றார்கள்.

தங்களது கோட்டைகளிலிருந்து வெளியேறி நபியவர்களுக்கு முன் சரணடைந்தனர். நபியவர்கள் ஆண்களைக் கைது செய்யுமாறு கட்டளையிட்டார்கள். முஹம்மது இப்னு மஸ்லமாவின் தலைமையின் கீழ் ஆண்கள் அனைவரும் விலங்கிடப்பட்டனர்.

பெண்களும் சிறுவர்களும் ஆண்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஓரமான இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டனர். அப்போது அவ்ஸ் கூட்டத்தினர் நபியவர்களை சந்தித்து ''அல்லாஹ்வின் தூதரே! கைனுகா இன யூதர்கள் விஷயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

அவர்கள் எங்கள் சகோதரர்களாகிய கஸ்ரஜ் இனத்தவரின் நண்பர்களாவர். இந்த குரைளா இன யூதர்கள் (அவ்ஸ்களாகிய) எங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள். நீங்கள் இவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்'' என்றார்கள். அதற்கு நபியவர்கள் ''உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இவர்கள் விஷயத்தில் தீர்ப்பளித்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் ''நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம்'' என்றனர்.

நபியவர்கள் ''இவர்கள் குறித்து தீர்ப்பளிக்கும் உரிமையை ஸஅது இப்னு முஆதிடம் ஒப்படைக்கிறேன்'' என்றவுடன் அவ்ஸ் கூட்டத்தினர் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.

நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களை அழைத்து வர ஆளனுப்பினார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அகழ்ப்போரில் காலில் அம்பு தைத்துவிட்டதின் காரணமாக நபியவர்களுடன் வர முடியாமல் மதீனாவில் தங்கிவிட்டார்கள். அவர்கள் ஒரு கழுதையில் நபியவர்களிடம் அழைத்து வரப்பட்டார்கள். 

அவர் வந்து கொண்டிருக்கும் போதே அங்கிருந்தவர்கள் அவரைச் சுற்றி ''ஸஅதே! உம்மிடம் ஒப்பந்தம் செய்திருந்த இந்த யூதர்கள் விஷயத்தில் அழகிய தீர்ப்பைக் கூறுவாயாக! அவர்களுக்கு உதவி புரிவாயாக! நீ அவர்களுக்கு ஏற்ற தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் நபியவர்கள் உன்னை தீர்ப்பளிக்கும்படி அழைத்திருக்கிறார்கள்'' என்று கூறினார்கள்.

ஆனால், ஸஅது (ரழி) அவர்களின் எந்த பேச்சுக்கும் பதிலளிக்கவில்லை. குழுமியிருந்த மக்கள் ஸஅதை மிக அதிகமாகத் தொந்தரவு செய்தவுடன் ஸஅது (ரழி) ''இப்போதுதான் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்பை பொருட்படுத்தாமல் இருக்க இந்த ஸஅதுக்கு நேரம் வந்துள்ளது'' என்றார்.

ஸஅத் (ரழி) அவர்களின் இந்த துணிவுமிக்க சொல்லால் குழுமியிருந்த மக்கள் யூதர்களின் விஷயத்தில் ஸஅது (ரழி) அவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டனர். அதாவது, யூதர்களை கொல்ல வேண்டும் என்ற உறுதியில் ஸஅது (ரழி) இருக்கிறார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிய வந்தது. இதனால் ஸஅது (ரழி) தங்களது தீர்ப்பை வெளிப்படையாக கூறுவதற்கு முன்பாகவே யூதர்கள் கொல்லப்படப் போகிறார்கள் என்ற செய்தியை மக்கள் மதீனாவாசிகளுக்குத் தெரிவித்தனர்.

ஸஅது (ரழி), நபி (ஸல்) அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்தபோது நபியவர்கள் தங்களது தோழர்களிடம் ''உங்களது தலைவரை எழுந்து சென்று அழைத்து வாருங்கள்'' என்று கூறினார்கள். நபித்தோழர்கள் ஸஅதைக் கழுதையிலிருந்து இறக்கி அழைத்து வந்தவுடன் ''ஸஅதே! இந்த யூதர்கள் உமது தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்'' என்றார்கள்.

அப்போது ஸஅது (ரழி) ''எனது தீர்ப்பு அவர்கள் (யூதர்கள்) மீது செல்லுபடி ஆகுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு மற்றவர்கள் ''ஆம்! செல்லுபடியாகும்'' என்றனர். பிறகு ஸஅது (ரழி) ''முஸ்லிம்களின் மீது எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?'' என்று கேட்டார்கள். மக்கள் ''ஆம்!'' என்றனர். அப்போது ''இங்குள்ள மற்றவர் மீதும் - அதாவது தனது முகத்தால் நபியவர்களை சுட்டிக்காட்டி - எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?'' என்று கேட்டார்கள்.

அப்போது நபியவர்கள் ''ஆம்! நானும் உங்களுடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன்'' என்றார்கள். இதற்குப் பின் ஸஅது (ரழி) அந்த யூதர்கள் விஷயத்தில் தீர்ப்பு கூறினார்கள்:

''ஆண்களைக் கொன்றுவிட வேண்டும். சிறுவர்களையும் பெண்களையும் கைதிகளாக்க வேண்டும். இவர்களின் சொத்துகளையும் பொருட்களையும் பங்கு வைத்துவிட வேண்டும். இதுதான் எனது தீர்ப்பு'' என ஸஅது (ரழி) கூறினார். இத்தீர்ப்பைக் கேட்ட நபியவர்கள் ''ஏழு வானங்களுக்கு மேலிருக்கும் அல்லாஹ்வின் தீர்ப்பை நீங்கள் இவர்கள் விஷயத்தில் வழங்கி விட்டீர்கள்'' என்று கூறினார்கள்.

இத்தீர்ப்புக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜார் கிளையைச் சேர்ந்த பின்துல் ஹாரிஸ் என்ற பெண்ணின் வீட்டில் யூதர்களை அடைத்து வைக்க கட்டளையிட்டார்கள். அதற்குப் பின் அவர்களுக்காக மதீனாவின் கடைத் தெருவில் பெரும் அகழ் தோண்டப்பட்டது. பின்பு ஒவ்வொருவராக அழைத்து வரப்பட்டு அக்குழியில் வைத்து தலை வெட்டப்பட்டது.

 

பிறகு அதிலேயே புதைக்கப்பட்டனர். அவர்கள் 600லிருந்து 700 பேர் வரை இருந்தனர். அனைவரும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், அபூ லுபாபா ஆறு இரவுகள் தூணிலேயே தன்னைக் கட்டிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு தொழுகையின் நேரத்திலும் அவரது மனைவி அவரை அவிழ்த்து விடுவார்.

அவர் தொழுது முடித்தவுடன் மீண்டும் தன்னைத் தூணில் கட்டிக் கொள்வார். நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு உம்மு ஸலமாவின் வீட்டில் இருந்தபோது அதிகாலை ஸஹர் நேரத்தில் அபூலுபாபாவின் பாவமன்னிப்பு தொடர்பான வசனம் இறங்கியது.

فَجَاءَ رَسُولُ اللَّهِ ( صلى الله عليه و آله ) ، فَقَالَ : " يَا أَبَا لُبَابَةَ قَدْ تَابَ اللَّهُ عَلَيْكَ تَوْبَةً "

﴿ وَآخَرُونَ اعْتَرَفُواْ بِذُنُوبِهِمْ خَلَطُواْ عَمَلاً صَالِحًا وَآخَرَ سَيِّئًا عَسَى اللّهُ أَن يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللّهَ غَفُورٌ رَّحِيمٌ خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلاَتَكَ سَكَنٌ لَّهُمْ وَاللّهُ سَمِيعٌ عَلِيمٌ أَلَمْ يَعْلَمُواْ أَنَّ اللّهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَأْخُذُ الصَّدَقَاتِ وَأَنَّ اللّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ ﴾

மேலும், தம் குற்றங்களை ஒப்புக்கொண்டிருக்கும் வேறு சிலரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் நற்செயலோடு தீய செயலையும் கலந்து விட்டிருக்கின்றனர். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மீது கருணை புரியக்கூடும். ஏனென்றால், திண்ணமாக! அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனும், கருணை புரிபவனும் ஆவான் என்கிற இறைவசனத்தை அல்லாஹ் இறக்கியருளினான்.

அப்போது, உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே! அபூலுபாவிற்கு மகிழ்ச்சி தருகிற இந்த செய்தியை நான் சென்று முதலாவதாக அறிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் உனக்கு பிரியம் என்றால் நீ சென்று அறிவித்து விடுஎன்று கூறி அனுமதி அளித்தார்கள்.

உம்மு ஸலமா (ரழி) தனது அறையின் வாசலில் நின்றவராக ''அபூ லுபாபாவே! நீங்கள் நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான்'' என்று கூறினார்.

இச்செய்தியைக் கேட்ட மக்கள் அவரை அவிழ்த்து விடுவதற்காக அவரை நோக்கி விரைந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்களைத் தவிர தன்னை வேறு யாரும் அவிழ்க்கக் கூடாது என்று மறுத்துவிட்டதால் நபியவர்கள் சுபுஹு தொழுகைக்கு வந்தபோது அவரை அவிழ்த்து விட்டார்கள்.  ( நூல்: ஸஹீஹுல் புகாரி, சீரத் இப்னு ஹிஷாம் )

3) மேலான உங்கள் அருகாமையே எனக்கான "நற்பேறு"!....  

قال ابن إسحاق فلما عرف المسلمون رسول الله صلى الله عليه وسلم نهضوا به ونهض معهم نحو الشعب معه أبو بكر الصديق وعمر بن الخطاب وعلى بن أبي طالب وطلحة بن عبيد الله والزبير بن العوام وسعد بن أبي وقاص وابو دجانة وزياد بن السكن والحارث بن الصمة وأم عمارة نسيبة بنت كعب المازنية ورهط من المسلمين رضوان الله عليهم.

உஹத் யுத்தத்தின் போது நபித்தோழர்கள் நாலா புறமும் சிதறி ஓடிய போது எதிரிகள் அண்ணலாரைத் தாக்கிட ஆயத்தமானார்கள். அப்போது அண்ணலாருக்கு  அருகே நாலா புறங்களிலும் தங்களை அரணாக அமைத்து அண்ணலாரை காக்கும் பணியில் சில நபித்தோழர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அதில் தங்களையும் ஒருவராக வீர மங்கை உம்மு உமாரா (ரலி) அவர்கள்  இணைத்துக் கொண்டார்கள்.

عن عمر قال سمعت رسول الله صلى الله عليه و سلم يقول ما ألتفت يوم أحد يمينا ولا شمالا إلا وأراها تقاتل دوني.

மாநபி {ஸல்} அவர்களைக் காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு  சுழன்று சுழன்று போராடிய உம்மு உமாரா (ரலி) அவர்களைப் பார்த்து உஹத் யுத்த களத்தில் என்னைச் சுற்றி வலப்புறத்திலும், இடப்புறத்திலும் உம்மு உமாரா (ரலி)  அவர்கள் போராடியதைப் போன்று வேறெவரும் போராட நான் பார்க்க வில்லை என்று  நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

கிட்டத்தட்ட 13 – க்கும்  மேற்பட்ட காயங்களோடு அம்மையார் போராடிக்  கொண்டிருக்க  ஒரு எதிரி வாள் கொண்டு வீசி அம்மையாரின் தோள்பட்டையை  காயப்படுத்தி விட்டான்.

அந்தக் காயம் அதிக வேதனையைத் தரவே அண்ணலாரை நோக்கி மெல்ல நடந்து வந்தார்கள். அண்ணலாரின் அருகே வந்ததும் அல்லாஹ்வின் தூதரே! என் கணவர், இருமகன்கள், நான் உட்பட அனைவரும் நாளை மறுமையில் சுவனத்தில் உங்களோடு தோழமை பெற்றிட துஆ செய்யுங்கள் என்று வேண்டினார்கள்.

أن رسول الله صلى الله عليه وسلم قال : اللَّهُمَّ اجْعَلْهُم رُفَقَائِي فِي الجَنَّةِ).  )

உடனடியாக, உம்மு உமாராவுக்காக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்  யாஅல்லாஹ் இவர்கள் அனைவரையும் சுவனத்தில் என்னுடன் இருப்பவர்களாய்  ஆக்கியருள் புரிவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.இதனைக் கேட்ட உம்மு உமாரா (ரலி) அவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள். ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம்,  ஸியரு அஃலா மின் நுபலா, தபகாத் இப்னு ஸஅத் )

1 comment: