Thursday, 14 November 2024

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மாநபி (ஸல்) அவர்கள் வழங்கிய மகத்தான வழிமுறைகள்!

 

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மாநபி (ஸல்) அவர்கள் வழங்கிய மகத்தான வழிமுறைகள்!



தங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டுமென்று தான் உலகில் எல்லோரும் ஆசைப்படுகின்றனர்.

அதற்காக பல்வேறு வழிகளைத் தேடுகின்றனர் மேலும், அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்

பணம் படைத்தவர்கள், அதிகாரம் படைத்தவர்கள் அதற்காக தங்களது பணங்களையும், பதவி, பட்டங்கள் அனைத்தையும் செலவழிக்கவும் தயாராக உள்ளார்கள்.

ஆனாலும் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லை என்பதை அறியமுடிகிறது 

இதற்கு காரணம் மகிழ்ச்சியைக்குறித்த அவர்களின் கண்ணோட்டம் தவறானதாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிலர் பணத்தால் மகிழ்ச்சியைப்பெறலாம் என்று எண்ணுகிறார்கள். அந்த பணத்தைத்தேடி இருக்கும் சந்தோசத்தைக்கூட தொலைத்துவிடுகிறார்கள்.

சிலர் புகழால் மகிழ்ச்சியைப்பெறலாம் என்று எண்ணுகிறார்கள். அந்த புகழைத் தேடியே இருக்கும் சந்தோசத்தை இழந்து வாடுகிறார்கள்.

வேறு சிலர் தமக்கு இருக்கும் அதிகாரத்தால் செல்வாக்கால் மகிழ்ச்சியைப்பெற்று விடலாம் என்று எண்ணுகிறார்கள். அதற்காக காலத்தையும் பொருளாதாரத்தையும் பெருமளவு செலவழிக்கத் துணிந்து  விடுகிறார்கள்.

இன்னும் சிலர் ஆரோக்கியமே  மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கியம் என்று கூறி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நாளையும், பொழுதையும். கழித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

மொத்தத்தில் இவை எதுவுமே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான காரணிகள் இல்லை என்பதை தாமதமாகவே புரிந்து கொள்கிறார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டும் போது உறுதியான இரண்டு அடிப்படைகளை கூறுகின்றான்.

ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச்செய்வோம். அன்றி (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம். ( அல்குர்ஆன் 16: 97 )

மாநபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டும் போது சில காரணிகளை பட்டியல் இடுகிறார்கள்.

அதில் சில காரணிகளை நாம் இந்த அமர்விலே பார்க்க இருக்கின்றோம்.

 عن سعد بن أبي وقاص رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : ( أربع من السعادة : المرأة الصالحة ، والمسكن الواسع ، والجار الصالح ، والمركب الهنيء ، وأربع من الشقاوة : الجار السوء ، والمرأة السوء ، والمسكن الضيق ، والمركب السوء ) (رواه ابن حبان في صحيحه )

ஸஅது பின் அபீ வகாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினர்கள்

நான்கு விஷயங்கள் மனிதனுக்கு மகிழ்ச்சியைத்தரும், 1.  நல்ல மனைவி, 2. விசாலமான வீடு, 3. நல்ல அண்டை விட்டுக்கார், 4. நல்ல வாகனம். நான்கு விஷயங்கள் மனிதனின் மகிழ்ச்சியின்மைக்கு காரணமாகும் 1. மோசமான அண்டைவிட்டுக்கார், 2. தீய மனைவி, 3. நெருக்கடியான வீடு, 4. மோசமான வாகனம் என்றும் கூறினார்கள். ( நூல் ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 4032 )

நல்ல மனைவி....

ஒரு மனிதனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக படைக்கப்பட்ட உறவே மனைவி எனும் உறவு தான்.

وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏

இன்னும், நீங்கள் அவர்களிடம் நிம்மதி பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. ( அல்குர்ஆன்: 30: 21 )

ஷைத்தான்களின் தலைவனுக்கு பிடித்த ஷைத்தான்....

ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்குபவர் முதலில் இழப்பது மனைவியுடனான உறவில் விரிசலையே. எப்போது ஒருவர் தம் மனைவியுடன் பிணக்கை, விரிசலை சந்திக்கின்றாரோ மகிழ்ச்சியான வாழ்க்கையின் ஒரு பகுதியை இழந்து விடுகிறார்.

நபி () அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (رضی الله عنه) அறிவிக்கிறார்கள்:

'இப்லீஸ் தனது ஆட்சிக்கட்டிலைத் தண்ணீரின்மீது அமைத்து, பிறகு தன் படைகளை (பூமியில் குழப்பம் விளைவிக்க) அனுப்புகிறான். அப்போது அவனுடைய படைகளில் அவனுக்கு மிக நெருக்கமானவன் யாரெனில், (மக்களுக்கிடையே) மிக அதிகமாக குழப்பம் ஏற்படுத்தியவனே ஆவான். அந்தப் படையினரில் ஒருவன் (இப்லீஸிடம்) வந்து, 'நான் இன்னின்னவாறு செயல்பட்டேன்' என்று கூறுவான். அதற்கு இப்லீஸ், 'நீ எதையும் (பிரமாதமாகச்) செய்துவிடவில்லை' என்று கூறுவான். பிறகு அவர்களில் இன்னொருவன் வந்து, 'ஒருவனை அவனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரித்து வைக்கின்றவரை நான் அவனை விடவில்லை' என்று கூறுவான். அப்போது இப்லீஸ் அவனைத் தன் பக்கம் நெருக்கி வைத்துக்கொண்டு, 'நீதான் நல்லவனாக உள்ளாய்' என்று கூறுவான். (இப்லீஸின் படையைச் சார்ந்த ஒருவன் ஒரு பெண்ணுக்கும் அவளுடைய கணவனுக்கும் இடையே பிரித்து வைத்துவிட்டதால் அவனைத் தன் பக்கம் நெருக்கமாக அமர வைத்து) கட்டியணைத்துக் கொள்வான்.'[முஸ்லிம் 2813]

ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக் காத்துக்கொள்வார்கள்.' [அல் குர்ஆன், 4:34]

கணவன் எடுக்கும் முடிவுகளில் துணை நிற்கும் மனைவியே நல்ல மனைவி!

وفد على أمير المؤمنين بعض من يثق بهم من أهل حمص فقال لهم : اكتبوا لى أسماء فقرائكم حتى أسد حاجتهم  فرفعوا كتابا فإذا فيه : فلان وفلان وسعيد بن عامر فقال : ومن سعيد بن عامر ! فقالوا : أميرنا قال : أميركم فقير ! قالوا : نعم ووالله إنه لتمر عليه الأيام الطوال ولا يوقد فى بيته نار فبكى عمر حتى بللت دموعه لحيته ثم عمد إلى ألف دينار فجعلها فى صرة وقال : اقرؤوا عليه السلام منى وقولوا له : بعث إليك أمير المؤمنين بهذا المال لتستعين به على قضاء حاجاتك .

جاء الوفد لسعيد بالصرة فنظر إليها فإذا هى دنانير فجعل يبعدها عنه وهو يقول : إنا لله وإنا إليه راجعون كأنما نزلت به نازلة أو حل بساحته خطب فهبت زوجته مذعورة وقالت : ما شأنك يا سعيد ؟ أمات أمير المؤمنين، قال : بل أعظم من ذلك، قالت : أأصيب المسلمون فى وقعة، قال : بل أعظم من ذلك، قالت : وما أعظم من ذلك، قال : دخلت على الدنيا لتفسد آخرتى وحلت الفتنة فى بيتى قالت : تخلص منها وهى لا تدرى بأمر الدنانير شيئا، قال : أوتعينينى على ذلك قالت : نعم  فأخذ الدنانير فجعلها فى صرر ثم وزعها على فقراء المسلمين .

ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள், நபிகளாரின் தோழர்களில் குறிப்பிடும் படியான வாழ்விற்கும், புகழுக்குரிய வாழ்விற்கும் சொந்தக்காரர் ஆவார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று ஒன்று மிகப் பிரபல்யமானது. ஒரு மாகாணத்தின் ஆளுநராக இருந்த போதும் மதீனாவில் தமக்கென சொந்த வீடு கூட இல்லாத நிலையில் தம் வாழ்க்கையை வாடகை வீட்டில் கழித்தவர் ஸயீத் (ரலி) அவர்கள்.

ஒரு முறை ஹிம்ஸ் ன் முக்கிய பிரதிநிதிகள் ஸயீத் (ரலி) அவர்களைச் சந்திக்க வருகை புரிந்திருந்தனர்.

வந்தவர்கள் ஒரு பணமுடிப்பை ஸயீத் (ரலி) அவர்களின் கையில் கொடுத்து இதை கலீஃபா உமர் (ரலி) அவர்கள் தங்களிடம் கொடுக்கச் சொன்னார்கள்”  என்றனர்.

இதைக் கேட்டதும் ஸயீத் (ரலி) அவர்கள் இன்னா லில்லாஹி.. வஇன்னா இலைஹி ராஜிவூன்...என்றார்கள்.

இந்த வார்த்தையை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஸயீத் (ரலி) அவர்களின் துணைவியார் இங்கே நடந்த சம்பவங்கள் தெரியாததால் என்ன கலீஃபா உமர் (ரலி) அவர்கள் இவ்வுலகை விட்டு சென்று விட்டார்களா?” என்று கேட்டார்கள்.

இல்லை, இல்லை அதை விட மிகப் பெரிய சோதனை ஒன்று என்னை பீடித்துள்ளதுஎன்று ஸயீத் (ரலி) கூறினார்கள்.

யாராவது பெரும் படையுடன் முஸ்லிம்களை தாக்க வருகை தந்து விட்டார்களா?” என அவர்களின் துணைவியார் கேட்க, இல்லை இல்லை அதை விட பெரும் சோதனை என்றார்கள்.

அப்படி என்னதான் பெரும் சோதனை உங்களை வந்தடைந்து விட்டது? கொஞ்சம் சொல்லுங்களேன்இது அவர்களின் துணைவியார்.

நான் உன்னிடம் சொன்னால் அந்த விஷயத்தில் எனக்கு உறுதுணையாக இருப்பாய் என்று நீ உறுதி அளித்தால் நான் உனக்கு சொல்கின்றேன்”  இது ஸயீத் (ரலி) அவர்கள்.

உறுதியளித்ததும், ஸயீத் (ரலி) அவர்கள் சம்பவத்தை கூறினார்கள்.

கலீஃபா உமர் (ரலி) அவர்களைப் பார்க்க ஹிம்ஸ் மாகாணத்தின் முக்கியஸ்தர்கள் மதீனா வந்திருந்த சமயம் அது. பல்வேறு விஷயங்களை பரிமாறிய பின்னர் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் பகுதியின் ஏழைகளின் பட்டியலை தாருங்கள் நாம் அவர்களின் துயர் துடைத்திட பண உதவி அளிக்கின்றோம்”  என்றார்கள்.

அங்கேயே பட்டியலை தயார் செய்து உமர் (ரலி) அவர்களிடத்தில் ஒப்படைத்தனர் ஹிம்ஸின் பிரதிநிதிகள்.

பட்டியலின் முதல் பெயரை உமர் (ரலி) அவர்கள் வாசிக்கின்றார்கள் ஸயீத் இப்னு ஆமிர் என்றிருந்தது. யார் இந்த ஸயீத் என்று கலீஃபா வினவ, அதுவா நம்ம ஹிம்ஸின் ஆளுநர் ஸயீத் (ரலி) அவர்கள் தான்”  என்று பிரதிநிதிகள் கூற உமர் (ரலி) அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள்.

பின்பு ஒரு பண முடிப்பை கொடுத்து இதை உங்கள் ஆளுநர் ஸயீத் (ரலி) அவர்களிடம் கலீஃபா உமர் தந்தார் என்று சொல்லி கொடுத்து விடுங்கள் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள்.

அந்த பணத்தை தான் இப்போது பெரும் சோதனை என்று சொல்லி தம் மனைவியிடம் புலம்பிக்கொண்டிருந்தார்கள்.

பின்பு ஹிம்ஸ் பகுதியின் ஏழைகளை அழைத்து அந்த பணத்தை அப்போதே பங்கு வைத்து கொடுத்து விட்டார்கள்.

கொஞ்சம் நமக்கு எடுத்து விட்டு கொடுத்திருக்கலாமே என்று அவர்களின் துணைவியார் கூறிய போது நம் தேவைகளை நிறைவேற்ற அல்லாஹ்வே எப்போதும் போதுமானவன். என்று ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.   (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:156)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ أَنْصَارِيٍّ بِالْمَدِينَةِ مَالاً مِنْ نَخْلٍ، وَكَانَ أَحَبُّ مَالِهِ إِلَيْهِ بَيْرَحَاءَ، وَكَانَتْ مُسْتَقْبِلَ الْمَسْجِدِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ. قَالَ أَنَسٌ فَلَمَّا نَزَلَتْ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} قَامَ أَبُو طَلْحَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ يَقُولُ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} وَإِنَّ أَحَبَّ مَالِي إِلَىَّ بَيْرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بَخٍ ذَلِكَ مَالٌ رَابِحٌ ـ أَوْ رَايِحٌ شَكَّ عَبْدُ اللَّهِ ـ وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ "". فَقَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ، فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَفِي بَنِي عَمِّهِ. وَقَالَ إِسْمَاعِيلُ وَيَحْيَى بْنُ يَحْيَى رَايِحٌ.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா ஸைத் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் ஏராளமான பேரீச்சமரங்களுடைய (பெரும்) செல்வராக இருந்தார். அவருடைய செல்வங்களில் பைருஹாஎனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம்.

‘‘நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்எனும் (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ், ‘நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது பைருஹா’ (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும், அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் அதைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்என்று சொன்னார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நல்லது. அது ‘(மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே!அல்லது அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே!என்று கூறினார்கள். -அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் மஸ்லமா (இவ்வாறு) சந்தேகத்துடன் அறிவிக்கிறார்.-

(தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், ‘‘தர்மம் செய்வது குறித்து) நீங்கள் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்என்று சொன்னார்கள்.

அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘(அவ்வாறே) செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!எனக் கூறிவிட்டுத் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்மாயீல் பின் அபீஉவைஸ் (ரஹ்) அவர்களும் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களும் நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே!என்றே அறிவித்துள் ளார்கள். ( நூல்: புகாரி )

இந்த நிகழ்வு நடைபெறும் போது அபூ தல்ஹா (ரலி) அவர்களின் குடும்பமும் அந்த தோட்டத்தில் ஒரு பகுதியில் தான் குடியிருந்தனர்.

நபி ஸல் அவர்களின் சபையில் மேற்கூறியவாறு அந்த தோட்டத்தை ஒப்படைத்த பின்னர் தமது தோட்டத்திற்கு வருகை தந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள் தோட்டத்திற்கு வெளியே நின்று கொண்டு நடந்த சம்பவத்தை கூறிய போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தாம் உடுத்தியிருந்த துணியோடு வெளியே வந்து விட்டார்கள்.

அபூதல்ஹா (ரலி) அவர்கள் காரணம் கேட்டதற்கு "எப்போது நீங்கள் இந்த தோட்டத்தை கொடுத்து விட்டீர்களோ அப்போதிலிருந்து அந்த தோட்டத்தில் எதுவும் நமக்கு சொந்த மில்லை" என்று பதில் கூறினார்கள். 

இந்த தகவல் நபி ஸல் அவர்களுக்கு தெரிய வந்த போது உம்மு சுலைம் ரலி அவர்களை வெகுவாகப் பாராட்டினார்கள். வாழ்த்தினார்கள்.

இந்த செய்தி ஹயாதுஸ்ஸஹாபா மற்றும்  சில ஹதீஸ் விரிவுரை நூல்களில் வேறுபட்ட அறிவிப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: صَنَعَ أَبُو الْهَيْثَمِ بْنُ التَّيْهَانِ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَعَامًا فَدَعَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ فَلَمَّا فَرَغُوا قَالَ

 أَثِيبُوا أَخَاكُمْ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا إِثَابَتُهُ؟ قَالَ إِنَّ الرَّجُلَ إِذَا دُخِلَ بَيْتُهُ فَأُكِلَ طَعَامُهُ، وَشُرِبَ شَرَابُهُ، فَدَعَوْا لَهُ فَذَلِكَ إِثَابَتُهُ

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களுக்கும், நபித்தோழர்களுக்கும் உணவு சமைத்துக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

வயிறார உண்டு முடித்து திருப்தியோடு இருக்கும் எங்களிடம் உங்கள் சகோதரருக்கு நீங்கள் வாழ்த்து சொல்லுங்கள்! என்று எங்களிடம் நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அப்போது, நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! எப்படி வாழ்த்துவது? என்று கேட்டோம். அதற்கு நபி {ஸல்} அவர்கள் அவருக்காக துஆ செய்வதுஎன்று பகர்ந்தார்கள்.

عن أبي هريرة: أن النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قال لأبي الهيثم بن التَّيهان: “هل لك خادم؟

قال لا قال فإذا أتانا سبي فأتنا فأتي النبي صلى الله عليه وسلم برأسين ليس معهما ثالث فأتاه أبو الهيثم فقال النبي صلى الله عليه وسلم اختر منهما فقال يا نبي الله اختر لي فقال النبي صلى الله عليه وسلم إن المستشار مؤتمن خذ هذا فإني رأيته يصلي واستوص به معروفا فانطلق أبو الهيثم إلى امرأته فأخبرها بقول رسول الله صلى الله عليه وسلم فقالت امرأته ما أنت ببالغ ما قال فيه النبي صلى الله عليه وسلم إلا أن تعتقه قال فهو عتيق فقال النبي صلى الله عليه وسلم إن الله لم يبعث نبيا ولا خليفة إلا وله بطانتان بطانة تأمره بالمعروف وتنهاه عن المنكر وبطانة لا تألوه خبالا ومن يوق بطانة السوء فقد وقي

நபி {ஸல்} அவர்கள் அபுல் ஹைஸம் (ரலி) அவர்களை அன்பொழுக நோக்கியவாறு, தோழரே! உங்களுக்கு பணிவிடை செய்ய வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டார்கள்.

அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் இல்லை, என்றார்கள். அப்படியானால், நம்மிடம் கைதிகள் வந்தார்கள் என்று நீங்கள் கேள்வி பட்டீர்கள் என்றால் நம்மிடம் வாருங்கள்! நல்ல ஒரு கைதியை பணியாளனாக பெற்றுச் செல்லுங்கள்!என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அது போன்று, ஒரு சந்தர்ப்பத்தில் நபி {ஸல்} அவர்களிடம் இரு கைதிகள் வந்ததாக கேள்விபட்டு அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் சென்றார்கள்.

நபி {ஸல்} அவர்கள் இரு கைதிகளில் ஒருவரை தேர்வு செய்து கொடுத்து விட்டு, “தோழரே! இவர் தொழுகையாளி, இவரோடு நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்!என்று கூறினார்கள்.

அந்த அடிமையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் உம்மு ஹைஸம் (ரலி) அவர்களிடம் நடந்த சம்பவங்களைக் கூறினார்கள்.

அது கேட்ட உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள் அப்படியானால், இந்த அடிமையை அல்லாஹ்விற்காக நாம் உரிமை விட்டு விடுவோம்! என்று கூறி உரிமை விட்டு விட்டார்கள்.

இந்த செய்தியறிந்த நபி {ஸல்} அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து இருவருக்காகவும் துஆ செய்தார்கள்.

                                 ( நூல்: இப்னு கஸீர், பாகம்: 4, பக்கம்: 707 )

விசாலமான வீடு....

وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُمْ مِنْ جُلُودِ الْأَنْعَامِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَا أَثَاثًا وَمَتَاعًا إِلَى حِينٍ

மேலும், அல்லாஹ் உங்களுக்காக உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான்.

மேலும், கால்நடைகளின் தோல்களின் மூலம் உங்களுக்கு எத்தகைய வீடுகளை உருவாக்கினானென்றால், நீங்கள் பயணம் செல்லும் போதும் அல்லது தங்கிவிடும் போதும் அவற்றை இலேசாகக் காண்கின்றீர்கள்.

மேலும், கால் நடைகளின் குறுமென் மயிர், முடி, ரோமம் ஆகியவற்றின் மூலம் (அணிவதற்கும் வீட்டு உபயோகத்திற்கும் உரிய) ஏராளமான பொருள்களை அவன் படைத்தான். வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவை உங்களுக்குப் பயன்படுகின்றன. ( அல்குர்ஆன்: 14: 

ஆதலால் தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல் அவர்கள் உளூவின் போது இடையே செய்யும் தங்களது துஆவில் ரிஜ்கில் வாழ்வாதாரத்தில் அபிவிருத்தியைக் கேட்பதற்கு முன்னால் இல்லத்தின் விசாலத்தைப் பற்றி அல்லாஹ்விடம் முறையிட்டார்கள்.

وقد كان الرسول - صلى الله عليه وسلم - يدعو، فيقول: (اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِي فِي دَارِي وَبَارِكْ لِي فِي رِزْقِي) ابن أبي شيبة(29384) صحيح                                

இறைவா! என்னுடைய பாவத்தை மன்னித்து விடுவாயாக! என் வீட்டை விசாலமாக்குவாயாக! என் வாழ்வாதாரத்தில் ரிஜ்கில் அபிவிருத்தி செய்வாயாக!  ( நூல்: இப்னு அபீ ஷைபா, ஹதீஸ் எண்: 29384 )

நல்ல அண்டை வீட்டார்....

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோ நடந்து கொண்டேன் என்பதை எப்படி அறிந்து கொள்வது? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ நல்ல முறையில் நடந்து கொண்டாய் என உன்னுடைய அண்டை வீட்டார் கூறுவதை நீ செவியேற்றால் நீ நல்ல முறையில் நடந்து கொண்டவனாவாய். நீ தீய முறையில் நடந்து கொண்டாய் என உனது அண்டை வீட்டார் சொல்வதை நீ கேள்விப்பட்டால் நீ தீய முறையில் நடந்து கொண்டவனாவாய்என்று கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

நபி ஸல் அவர்களின் அண்டை வீட்டாரின் அழகிய பண்பு....

நபி ஸல் அவர்களின் மதீனாவின் அண்டை வீட்டார்கள் யார் என்பது குறித்து தனி ரிஸாலாவே இருக்கிறது.

அதில் அபூ அய்யூபுல் அன்ஸாரி (ரலி) அவர்களும் நபி ஸல் அவர்களின் ஒரு அண்டை வீட்டார் ஆவார்.

அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தபோது) எனது வீட்டிலேயே தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் கீழ்த்தளத்திலும் நான் மேல்தளத்திலும் தங்கியிருந்தோம். ஓர் இரவில் நான் உணர்வு பெற்று, "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைக்கு மேலே நடமாடுவதா?" என்று சொல்லிக்கொண்டு, (தலைக்கு நேரான பகுதியிலிருந்து) விலகி மற்றொரு பகுதியில் (நானும் வீட்டாரும்) இரவைக் கழித்தோம்.

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்துச்) சொன்னபோது அவர்கள், "கீழ்த்தளமே மிகவும் வசதியானது" என்று கூறினார்கள். நான், "நீங்கள் கீழேயிருக்க நான் மேல்தளத்தில் இருக்கமாட்டேன்" என்று சொன்னேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் மேல் தளத்துக்கும் நான் கீழ்த் தளத்துக்கும் இடம் மாறிக்கொண்டோம்.

நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்துவந்தேன். அது (நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) என்னிடம் கொண்டுவரப்பட்டால், (உணவுப் பாத்திரத்தில்) நபி (ஸல்) அவர்களின் விரல்கள்பட்ட இடத்தைப் பற்றிக் கேட்பேன். அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைக் கண்டறி(ந்து அந்த இடத்தில் நான் சாப்பிடு)வேன்.

இவ்வாறே (ஒரு நாள்) வெள்ளைப் பூண்டு உள்ள ஓர் உணவு தயாரித்தேன். (நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) அது திருப்பிக் கொண்டுவரப்பட்டபோது, நபி (ஸல்) அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது "நபி (ஸல்) அவர்கள் அதை உண்ணவில்லை" என்று என்னிடம் சொல்லப்பட்டது. அதைக் கேட்டு நான் பதறினேன்.

மேல் தளத்திற்கு ஏறிச்சென்று "அது (வெள்ளைப் பூண்டு) தடைசெய்யப்பட்டதா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை. ஆயினும், அதை நான் விரும்பவில்லை" என்று பதிலளித்தார்கள்.

நான், "அவ்வாறாயின், தாங்கள் வெறுப்பதை அல்லது தாங்கள் வெறுத்ததை நானும் வெறுக்கிறேன்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்களும் வேத அறிவிப்பும்) வந்துகொண்டிருந்தன.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ( நூல்: புகாரி )

நற்பண்புள்ள அண்டை வீட்டாரை விலை மதிக்க முடியாத அருட்கொடையாகக் கருத வேண்டும். 

باع أبو الجهم العدوي داره بمائة ألف درهم، ثم قال: بكم تشترون جوار سعيد بن العاص جاري، كم تدفعون الآن على الجوار، قالوا: وهل يشترى جوار قط؟ قال: ردوا عليَّ داري وخذوا دراهمكم، والله لا أدع جوار رجل إن فقدت سأل عني، وإن رآني رحب بي، وإن غبت حفظني، وإن شهدت قربني، وإن سألته أعطاني، وإن لم أسأله ابتدأني، وإن نابتني جائحة فرج عني، فبلغ ذلك سعيداً، فبعث إليه بمائة ألف درهم.

அபூ ஜஹ்ம்  என்பவருக்கு கடுமையான பண நெருக்கடி ஆதலால் தாம் குடியிருக்கும் வீட்டை விற்க முன் வந்தார். ஆச்சர்யம் என்னவென்றால் அவர் வீட்டிற்கு ஒரு லட்சம் திர்ஹமை விலையாக நிர்ணயம் செய்தது தான். வீடு கேட்டு வந்த எல்லோரும் விலையை கேட்டு விட்டு, இந்த வீட்டிற்கு 100 திர்ஹமே அதிகம். இதிலும் 1’00000 திர்ஹமா?” என திகைத்துப் போயினர். அப்படி என்ன தான் அந்த வீட்டில் இருக்கிறது என அனைவரும் வினவிய போது அபூ ஜஹ்ம் கூறினார் என் பக்கத்து வீட்டில் ஸயீத் இப்னுல் ஆஸ் [ரலி} என்ற பெருந்தன்மையான மனிதர் குடியிருக்கிறார். 

அவரின் குண நலன்களை நீங்கள் அறிவீர்களேயானால் நான் நிர்ணயித்த விலை சரிதான் என்று ஒத்துக் கொள்வீர்கள். அவருக்கு நான் தீங்கு பல செய்திருக்கின்றேன். ஆனால், எனக்கு ஒரு போதும் அவர் தீங்கிழைத்ததில்லை. மாறாக, எனக்கு உபகாரம் செய்திருக்கிறார். நான் அவரிடம் பல முறை மடத்தனமாக நடந்திருக்கின்றேன். ஆனால், அவர் என்னுடன் சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்கின்றார். நான் ஊரில் இருந்தால் என்னோடு நேசம் பாராட்டுவார். நான் வெளியூர் சென்று விட்டால், நான் திரும்பி வரும் வரை என் வீட்டையும், என் வீட்டாரையும் பாதுகாத்துக் கொள்வார். 

என் தேவையை அவராகவே முன் வந்து நிறைவேற்றித் தருவார். எனக்கு ஏதாவது துன்பம் நேரிட்டால், துவண்டு போய் விடுவார். அதைக் களைவதில் மும்முரமாக ஈடுபடுவார். என்ன செய்ய என் போதாத காலம் எனக்கு பண நெருக்கடி மட்டும் இல்லை என்றால் ஒரு போதும் அவரை விட்டும் பிரியமாட்டேன்என்றார். 

இந்த செய்தியை கேள்வி பட்ட ஸயீத் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் உமக்கு பக்கத்து வீட்டுக் காரனாய் இருக்க நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீயே என் பக்கத்து வீட்டாளனாய் இரு என்று கூறி ஒரு லட்சம் திர்ஹத்தை நானே தருகின்றேன் என்று கூறி ஒரு லட்சம் திர்ஹத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள் ஸயீத் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள்.    ( நூல்: வஃப்யாத்துல் அஃயான், பாகம்:2, பக்கம்;535 )

حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ ، أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ قَالَ وَقَفْتُ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فَجَاءَ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ فَوَضَعَ يَدَهُ عَلَى إِحْدَى مَنْكِبَيَّ إِذْ جَاءَ أَبُو رَافِعٍ مَوْلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَال يَا سَعْدُ ابْتَعْ مِنِّي بَيْتَيَّ فِي دَارِكَ فَقَالَ سَعْدٌ وَاللَّهِ مَا أَبْتَاعُهُمَا فَقَالَ الْمِسْوَرُ وَاللَّهِ لَتَبْتَاعَنَّهُمَا فَقَالَ سَعْدٌ وَاللَّهِ لاَ أَزِيدُكَ عَلَى أَرْبَعَةِ آلاَفٍ مُنَجَّمَةٍ ، أَوْ مُقَطَّعَةٍ قَالَ أَبُو رَافِعٍ لَقَدْ أُعْطِيتُ بِهَا خَمْسَمِئَةِ دِينَارٍ وَلَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ مَا أَعْطَيْتُكَهَا بِأَرْبَعَةِ آلاَفٍ وَأَنَا أُعْطَى بِهَا خَمْسَ مِئَةِ دِينَارٍ فَأَعْطَاهَا إِيَّاهُ

நான் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வந்து, தமது கையை எனது தோள்புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூராஃபிவு (ரலி) அவர்கள் வந்து ஸஅதே! உமது வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடம்மிருந்து வாங்கிக் கொள்வீராக!எனக் கூறினார்கள். அதற்கு ஸஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்கமாட்டேன். என்றார்கள்.

அருகிலிருந்த மிஸ்வர் (ரலி) அவர்கள், ஸஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்என்றார்கள். அப்போது ஸஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! தவணை அடிப்டையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிமாகத் தரமாட்டேன்என்று கூறினார்கள். அதற்கு அபூராஃபிவு (ரலி) அவர்கள் ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது.

அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுறாவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.  அறிவிப்பவர் : அம்ர் பின் ஷரீத், நூல் :புகாரீ (2258)

நல்ல வாகனம்....

நல்ல வாகனம் என்றால் நாம் அதை சரியாக பராமரிக்கும் போது நமக்கு பயன் தருவதும் நம் பயணங்களை இலகுவாக்குவதும், நாம் செல்லும் இலக்குகளை நோக்கி விரைவாக கொண்டு சேர்க்க உதவும். அதே தீய வாகனம் என்றால் மேற்கூறிய அம்சங்களுக்கு நேரெதிரானதாக அமைவதாகும். ஹாக்கிம் உடைய ஒரு அறிவிப்பில் மாநபி ஸல் அவர்களின் நேரடி வார்த்தைகளே இதை சுட்டிக் காட்டுகின்றன.

وقد رواه الحاكم (2684) ولفظه : ( ثلاث من السعادة وثلاث من الشقاوة : فمن السعادة : المرأة تراها تعجبك ، وتغيب فتأمنها على نفسها ومالك ، والدابة تكون وطيئة فتلحقك بأصحابك ، والدار تكون واسعة كثيرة المرافق ، ومن الشقاوة : المرأة تراها فتسوءك ، وتحمل لسانها عليك ، وإن غبت عنها لم تأمنها على نفسها ومالك ، والدابة تكون قَطوفا فإن ضربتها أتعبتك ، وإن تركتها لم تلحقك بأصحابك ، والدار تكون ضيقة قليلة المرافق ) .

இந்த நபிமொழியில் மனிதனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மூன்று காரியங்கள் என்று மாநபி ஸல் அவர்கள் பட்டியல் இட்டிருப்பார்கள்.

No comments:

Post a Comment