ரமழானை வரவேற்கத்
தயாராகுவோம்!!!
அல்லாஹ்வின் மகத்தான கருணையால் ரஜபு மாதத்தின் இறுதி நாளை நிறைவு செய்து, சங்கைக்குரிய ஷஅபான் மாதத்தின் துவக்க நாளில் நாம். வீற்றிருக்கின்றோம்.
கடந்த காலங்களில்
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, ரமழான் மாதத்தை அடைந்து, அவனுக்காக நாம் நோன்பு நோற்றுள்ளோம். பல்வேறு வணக்க வழிபாடுகளில்
ஈடுபட்டுள்ளோம்.
இந்த நோன்பை
நோற்றதன் மூலமாக நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா? என்பதை நாம் சுய பரிசோதனை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
இதோ! ரமழான் மாதம்
நமக்கு மிகவும் சமீபமாக இருக்கிறது. நாம் ரமழானை வரவேற்க காத்திருக்கின்றோம்.
ரமழானில் நமது
எதிர் பார்ப்பும்,
இலக்கும் எதுவாக இருக்க வேண்டும்? என்பதை அல்லாஹ்வும் அவனது தூதரும் மிக அழகாகவே நமக்கு வழிகாட்டி
இருக்கின்றார்கள்.
நமது நோன்பு
நம்மைத் தீய நடவடிக்கைகளிலிருந்து தடுக்க வேண்டும். அது, எம்மை நல்ல வழிகளில் நடைபோடத் தூண்ட வேண்டும்.
ரமழானிலும் நாம்
மற்ற காலங்களில் செய்வது போன்றே நமது தீய செயல்களை தொடர்வோமேயானால், நமது தீய செயல்களை மாற்றவில்லை என்றால், நமது ஈமானை நாம் மீள்
விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ‘இபாதத்’ செய்வதற்கும் அதன் மன அமைதிபெறுவதற்கும், அதன் மூலம் இறையச்சத்தை
அதிகப்படுத்திக் கொள்வதற்கும் ரமழான் மாதமும், அதில் நாம் நோற்கும்
நோன்பும் ஓர் அரிய வாய்ப்பாகும்.
இதனை நாம் மிகச்
சரியாக பயன்படுத்தவில்லையானால் நம்மை விட துர்ப்பாக்கியசாலிகள் இந்த உலகில் யாரும்
இருக்க மாட்டார்கள்.
ஆகவே, முதலில்
ரமழானில் முழுமையாக நோன்பு நோற்று, அனைத்து வணக்க வழிபாடுகளையும் அழகிய முறையில்
கடைபிடித்து அல்லாஹ்வுக்கு பொருத்தமான முறையில் ரமழானை அடைந்து, அல்லாஹ் கூறுகிற
“தக்வா” வை பெற்றிட முதலில் நிய்யத் செய்வோம்.
1) நிய்யத்தை சீராக்குவோம்!
அமலால் அடைய
முடியாததை அழகிய நிய்யத்தால் அடைந்து கொள்ளலாம்.
عن أبي
كبشة الأنماري أن النبي صلى الله عليه وسلم قال: (إنما الدنيا لأربعة نفر: عبد
رزقه الله مالا وعلما فهو يتقي فيه ربه، ويصل فيه رحمه، ويعلم لله فيه حقا، فهذا
بأفضل المنازل، وعبد رزقه الله علما ولم يرزقه مالا فهو صادق النية يقول: لو أن لي
مالا لعملت بعمل فلان فهو بنيته فأجرهما سواء)[رواه الترمذي وقال: حسن صحيح
இந்த உலகம் நான்கு
வகையான மனிதர்களுக்கு பாக்கியமானதாகும். ஒரு அடியார், அல்லாஹ் அவருக்கு அறிவு (மார்க்க) ஞானத்தையும், நிறைவான பொருளாதாரத்தையும் வழங்கி இருக்கின்றான். அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
வழங்கிய அந்த அருட்கொடைகளைக் கொண்டு அவர் அல்லாஹ்வை அஞ்சி வாழ்கிறார். மேலும், அல்லாஹ் வழங்கிய அந்த அருட்கொடைகளைக் கொண்டு அவர் உறவுகளைப் பேணி வாழ்கிறார்.
மேலும், அல்லாஹ் வழங்கிய அந்த அருட்கொடைகளில் அல்லாஹ்விற்காக மேற்கொள்ள வேண்டிய
கடமைகள் என்னென்ன என்பதையும் அறிந்து வைத்துள்ளார். இவர் உயர்தர
அந்தஸ்துகளைப் பெற்றவராவார்.
இன்னொரு அடியார், அல்லாஹ் அவருக்கு அறிவு (மார்க்க) ஞானத்தை வழங்கி பொருளாதாரத்தை வழங்காமல்
விட்டிருப்பான். அந்த அடியார் "உண்மையான நிய்யத்தோடு
"எனக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இன்ன அடியாரைப் போன்று பொருளாதாரத்தை
வழங்கி இருந்தால் அவரைப் போன்றே நானும் அமல் செய்திருப்பேன்" என்று
சொல்கிறார். அவருடைய உயர்வான நிய்யத்தைக் கொண்டு இவரும் நன்மையில் அவருடன் சமமாக்கப்படுவார்"
என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்" என்று அபீ கப்ஷத்துல் அன்மாரீ (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: திர்மிதி )
நிய்யத்தைப் பொறுத்தே நிறைவாக வழங்கப்படும்!
إن يعلم
الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم
"உங்களுடைய உள்ளங்களில்
ஏதாவது ஒரு நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்
தொகையாக) எடுத்துக்கொள்ளப்பட்டதை விட (இவ்வுலகத்தில்) மேலானது உங்களுக்கு அவன்
கொடுப்பான்;
உங்களை அவன் மன்னிப்பான்; அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும்
இருக்கின்றான்." ( அல்குர்ஆன்: 8: 70 )
فعلم ما
في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ومغانم كثيرة يأخذونها
அவர்களுடைய
இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது
(சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கி அவர்களுக்கு அண்மையிலான வெற்றியையும்
அளித்தான். ( அல்குர்ஆன்: 48:
18 )
كتب
سالم بن عبد الله إلى عمر بن عبد العزيز-رحمهم الله جميعا- في بداية خلافته:
"فإن نويت الحق وأردته أعانك الله عليه، وأتاح لك عمالا، وأتاك بهم من حيث لا
تحتسب، فإن عون الله على قدر النية؛ فمن تمت نيته في الخير تم عون الله له، ومن
قصرت نيته قصر من العون بقدر ما قصر منه" أخرجه أحمد في كتاب الزهد
உமர் இப்னு
அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஆட்சியாளராக பொறுப்பேற்ற ஆரம்ப நேரத்தில் ஸாலிம்
இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் ஆட்சியாளர் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்)
அவர்ஙளுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். அதில், "நீங்கள் மக்களுக்கு நல்லாட்சி நடத்த வேண்டும் என்று நிய்யத் செய்து, அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும் என்று நாடினால் "அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
உமக்கு உதவி செய்வான்'"
உமது அதிகாரிகள் உம் எண்ணங்களுக்கு ஏற்ப இசைந்து நடக்குமாறு
ஆக்குவான். அது நீர் எதிர் பார்க்காத வகையில் அமைந்திருக்கும்!. நிச்சயமாக!
அல்லாஹ்வின் உதவி என்பது நிய்யத்தைப் பொருத்தே! நிய்யத் பெரிதாக இருக்கும்
பட்சத்தில் அல்லாஹ்வின் உதவியும் பெரிதாக இருக்கும். நிய்யத் குறைவாக இருக்கும்
பட்சத்தில் அல்லாஹ்வின் உதவியும் அதற்கேற்ப குறைவாகவே இருக்கும்" என்று அந்த
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். ( நூல்: கிதாபுஜ் ஜுஹ்த் லிஇமாமி அஹ்மத் )
وَقَالَ عَبْدُ اللهِ بْنُ المُبَارَكِ رَحْمَةُ اللهِ عَلَيْه:
«رُبَّ عَمَلٍ صَغِيرٍ تُكَثِّرُهُ النِّيَّة، وَرُبَّ عَمَلٍ
كَثِيرٍ تُصَغِّرُهُ النِّيَّة».
இமாம் இப்னுல்
முபாரக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- எத்தனையோ அற்பமான செயல்களைக்கூட நிய்யத்
மிகப்பெரியதாக மற்றிவிடுகிறது எத்தனையோ மிகப்பெரிய செயல்களைக்கூட நிய்யத்
அற்பமானதாக மாற்றிவிடுகிறது. ( நூல்: ஜாமிஉல் உலூமி வல்
ஹிகம் )
இமாம் சுஃப்யானுஸ்
ஸவ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- என்னுடைய நிய்யத்திற்கு நான் சிகிட்ச்சை
அளிப்பதற்கு சிரமப்பட்டதைப்போன்று வேறு எதற்கும் நான் சிரமப்பட்டதில்லை ஏனெனில்
எனது நிய்யத் அடிக்கடி புரண்டுகொண்டே இருக்கிறது. ( நூல்: ஜாமிஉல் உலூமி வல் ஹிகம்
)
சரியான நிய்யத்
தான் அச்செயலை நன்மையானதாக மாற்றும் எனவே நாம் நிய்யத்தை சீராக்குவதில் அதிக கவனம்
செலுத்தவேண்டும்.
கடந்த கால ரமளானை
நாம் சரியான முறையில் பயன்படுத்தினோமா? அப்படி பயன்படுத்த
தவறியிருந்தால் அதற்குக் காரணம் நிய்யத்தை நாம் சரியான முறையில் அமைத்துக்
கொள்ளவில்லையென்பது தான்
இந்த ரமளானில், ரமழான் வேண்டி நிற்கிற தக்வாவை அடைய வேண்டு மென்று நிய்யத் செய்து கொள்ள
வேண்டும்.
2) உளப்பூர்வமாக தவ்பாச் செய்ய தயாராகுவோம்!
ரமளானை
பாவங்களிலிருந்து விலகி பாவமன்னிபுக் கோருவதற்கான சிறந்ததோர் மாதமாக அல்லாஹ்
ஆக்கியுள்ளான்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا
تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
‘நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள்
மன்னிக்கப்படும்’
என்று இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்ககூடிய செய்தி .ஸஹீஹுல் புகாரியில் காணலாம்.
இம்மாதத்தை அடைந்த
பின்னரும் யார் தமது பாவங்களுக்கான மன்னிப்பை பெறவில்லையோ அவன்தான் மனிதர்களில்
மிகப்பெரிய நஷ்டவாளி.
عن أبي
هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (رغم أنف (خاب وخسر)
رجل ذكرت عنده فلم يصل علي، ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له،
ورغم أنف رجل أدرك عنده أبواه الكبر فلم يدخلاه الجنة) رواه الترمذي
ஒருமுறை
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் யார் ஒருவர்
அவரிடம் எனது பெயர் நினைவுகூறப்பட்ட பின்னரும் என்மீது ஸலவாத் சொல்லவில்லையோ அவன்
இழிவடையட்டும். யார் ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்த பின்னரும் அவனது பாவங்கள்
மன்னிக்கப்படாத நிலையில் ரமளான் அவனை விட்டும் கடந்து விடுகிறதோ அவனும்
இழிவடையட்டும். வயது முதிர்ந்த பெற்றோர் தன்னிடமிருந்தும் அவர்கள் மூலமாக யார்
சொர்க்கம் செல்லவில்லையோ அவனும் இழிவடையட்டும் என்று கூறினார்கள் என அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவிக்ககூடிய செய்தி ( நூல்
ஜாமிஉத் திர்மிதி )
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً
نَصُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ
جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ
النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ نُورُهُمْ يَسْعَى بَيْنَ أَيْدِيهِمْ
وَبِأَيْمَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا
إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
அல்லாஹ்
கூறுகிறான்,
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற முறையில் அல்லாஹ்விடம் தவ்பா
செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள்
பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; (அல்குா்ஆன் 66:8)
கலப்பற்ற
முறையிலான தவ்பா என்பதற்கு அறிஞர்கள் விளக்கமளிக்கையில் "கடந்த காலத்தில்
செய்த தவறுகளுக்காக வருந்தி வரும்காலாத்தில் இதுபோன்ற தவறுகளை செய்யமாட்டேன் என்று
உறுதிபூண்டு நிகழ்காலத்தில் பாவங்களை விட்டு தூரமாவது தான் தவ்பதுன் நஸூஹா"
என்று கூறினார்கள். (நூல் தஃப்ஸீர் இப்னு கஸீர் )
எதிர் வரும் சங்கை
மிகு ரமளானில் மிக அதிகமதிகம் நாம் செய்த பாவங்களுக்கு வருந்தி பாவமன்னிப்பு கேட்க
வேண்டும். வல்ல அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பானாக! ஆமீன்!
காலையிலும்,
மாலையிலும் இஸ்திஃக்ஃபார் செய்வோம்!
اللَّهُمَّ
أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا
عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ
أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي
فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம அன்த்த
ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க. வ
வஃதிக்க மஸ்ததஃத்து. அஊது பிக்க மின் 'ர்ரி மா ஸனஃத்து. அபூஉ
லக்க பி நிஃமத்திக்க அலைய்ய வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா
யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.
(பொருள்: அல்லாஹ்வே! நீயே
என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான்
உனக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியையும், வாக்குறுதியையும் என்னால்
இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம்
பாதுகாப்பு கோருகின்றேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான்
ஒப்புக் கொள்கின்றேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக்
கொள்கின்றேன். ஆகவே,
என்னை மன்னிப்பாயாக. ஏனெனில், பாவத்தை
மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.)
عن
شَدَّاد بْن أَوْسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قال : ( سَيِّدُ الِاسْتِغْفَارِ أَنْ تَقُولَ : اللَّهُمَّ
أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا
عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا
صَنَعْتُ ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ
لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ ) ، قَالَ : ( وَمَنْ
قَالَهَا مِنْ النَّهَارِ مُوقِنًا بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ
يُمْسِيَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ، وَمَنْ قَالَهَا مِنْ اللَّيْلِ وَهُوَ
مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ )
என்று ஒருவர்
கூறுவதே தலை சிறந்த பாவமன்னிப்பு கோரல் (ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்) ஆகும். மேற்கண்ட
பிரார்த்தனையை நம்பிக்கையோடும், தூய்மையான எண்ணத்தோடும்
பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர்
சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான
எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டு, காலை நேரத்திற்கு முன்பே
இறந்து விடுகின்றாரோ அவரும் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார் என்று நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ்(ரலி) ( நூல்: புகாரி )
2) ஸஹர் நேரத்தில்...
وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
அவர்கள் இரவின்
கடைசி நேரங்களில் பாவ மன்னிப்புத் தேடுவார்கள்' (அல்குர்ஆன் 51:18)
كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ (17)
وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
(அவர்கள்)
பொறுமையாளர்களாகவும்,
உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு)
கட்டுப்பட்டோராகவும்,
(நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்)' (அல்குர்ஆன் 3:17)
இந்த வசனங்களில்
இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றி சொல்லும் போது, ஸஹர் நேரத்தில் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று வல்ல அல்லாஹ்
குறிப்பிடுகின்றான். இந்த வசனங்களுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் இரவின் பிற்பகுதியில் பாவமன்னிப்பு தேடுவதை வலியுறுத்தியுள்ளார்கள்.
قال:
ينزل ربنا إلى سماء الدنيا كل ليلة، حين يبقى ثلث الليل الآخر، فيقول: من يدعوني
فأستجيب له، من يسألني فأعطيه، من يستغفرني فأغفر له وفي اللفظ الآخر: هل من سائل
فيعطى سؤله؟ هل من داعٍ فيستجاب له؟ هل من مستغفر فيغفر له؟ وفي اللفظ الآخر: هل
من تائب، فيتاب عليه؟.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:'நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்
வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும்
என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு
கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்' என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ( நூல்: புகாரி )
3) லைலத்துல் கத்ர்
இரவில்...
عن
عائشة رضي الله عنها قالت، قلت يا رسول الله أرأيت إن علمت اي ليلة ليلة القدر ما
اقول فيها ؟
قال : قولي "اللهم إنك عفو تحب العفو فأعف عني"
ரமளானின்
கடைசிப்பத்தில் சங்கைமிகு லைலத்துல் கத்ர் உடைய இரவுகளில் பாவமன்னிப்பு தேடுவதை
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு வலியுறுத்தி உள்ளார்கள் என்பதை அன்னை
ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதீ, அஹமத்)
اللَّهُمَّ
إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
அல்லாஹும்ம
இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ பஅஃபு அன்னி
பொருள் : யா அல்லாஹ்! நீயே பாவங்களை மன்னிக்கக்கூடியவன்.
மன்னிப்பதை விரும்புபவன். (ஆகவே) என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!!
மேற்கண்டவாறு நாம்
அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவோம்! அல்லாஹ்வின் மகத்தான மன்னிப்பை பெறுவோம்!
4) தொழுகையில் ஸலாம் கொடுத்ததும்...
'அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பும் போது மூன்று
தடவை (அஸ்தஃக்ஃபிருல்லாஹ் என்று) பாவமன்னிப்பு தேடுவார்கள்' அறிவிப்பவர்: ஸவ்பான்(ரலி), ( நூல்:: முஸ்லிம் )
பாவங்களை இலேசாக கருதக்கூடாது....
தனி மனிதர்களின்
செயலிலும்,
மனதிலும் நிகழ்கிற தவறுகளுக்கு சமுதாயமே தண்டிக்கப்படும்
அபாயம் உண்டு!
وَتُوبُوا
إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
''மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும்
அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்''. (அல்குர்ஆன் 24:31)
இங்கே, அல்லாஹ் ஒரு தனிமனிதனை மட்டும் அழைக்கவில்லை. இறைநம்பிக்கை கொண்ட ஒட்டுமொத்த மக்கள் அனைவரையும் அல்லாஹ் முஃமின்களே! என்று அழைத்துக் கூறுகின்றான்.
மறுமையில் அவனது
பாவத்தின் சுமையை அவன் மட்டும்தான் சுமப்பான், அனுபவிப்பான் என்றாலும், இவ்வுலக வாழ்க்கையை பொறுத்தவரை அல்லாஹ்வுடைய விதி அப்படி கிடையாது.
ஒரு முஸ்லிம் தவறு
செய்தால் அந்த தவறுடைய பாதிப்பை எல்லா முஸ்லிம்களும் அனுபவித்தாக வேண்டும்.
وَاتَّقُوا
فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ
اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
''நீங்கள் வேதனைக்கு பயந்து
கொள்ளுங்கள்;
அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப்
பிடிக்கும் என்பதில்லை.நிச்சயமாக! அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன்
என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்''.( அல்குர்ஆன்: 8: 25 )
ஒரு சமுதாயத்தில்
ஒருவர் பாவம் செய்தால்,
அதனுடைய பிரதிபலனை, அதனுடைய தண்டனையை சமுதாய
மக்கள் அனைவரும் அனுபவிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.
ஆகவேதான், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ''முஃமின்களே!'' என்று இந்த முழு முஸ்லிம் சமுதாயத்தையும் அழைத்து கூறுகிறான். ''நீங்கள் எல்லோருமே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்'' என்று.
ஒரு சில
முஸ்லிம்கள் செய்யும் தவறால், குற்றத்தால் ஒட்டுமொத்த
சமுதாயமும் சோதனைக்குள்ளாக்கப் படுவார்கள் என்பதை பின்வரும் வரலாற்று சம்பவத்தின்
மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
ثم مضى
الرسول حتى وصل إلى ساحة أحد، فجعل ظهره للجبل ووجهه للمشركين، وصف الجيش، وجعل
على كل فرقة منه قائدا، واختار خمسين من الرماة، على رأسهم عبد الله بن جبير
الأنصاري ليحموا ظهر المسلمين من التفاف المشركين وراءهم، وقال لهم: «احموا ظهورنا،
لا يأتونا من خلفنا، وارشقوهم بالنبل؛ فإن الخيل لا تقوم على النبل، إنا لا نزال
غالبين ماثبتم مكانكم، اللهم إني أشهدك عليهم» وقال لهم في رواية أخرى: “إن
رأيتمونا تخطفنا الطير فلا تبرحوا مكانكم هذا حتى أرسل إليكم، وإن رأيتمونا هزمنا
القوم أو ظاهرناهم وهم قتلى، فلا تبرحوا مكانكم حتى أرسل إليكم”.
ثم
ابتدأ القتال، ونصر الله المؤمنين على أعدائهم، فقتلوا منهم عددا، ثم ولوا
الأدبار، فانغمس المسلمون في أخذ الغنائم التي وجدوها في معسكر المشركين، ورأى ذلك
من وراءهم من الرماة فقالوا: ماذا نفعل وقد نصر الله رسوله؟ ثم فكروا في ترك
أمكنتهم لينالهم نصيب من الغنائم، فذكرهم رئيسهم عبد الله بن جبير بوصية الرسول،
فأجابوا بأن الحرب قد انتهت، ولا حاجة للبقاء حيث هم، فأبى عبد الله ومعه عشرة
آخرون أن يغادروا أمكنتهم
உஹது போரில் நபி
(ஸல்) அவர்கள்,
ஓரிடத்தில் 50-க்கும் மேற்பட்ட
நபித்தோழர்களை நிறுத்திவிட்டு அந்த தோழர்களிடம் கூறினார்கள்:
"எங்களுடைய
ஜனாஸாக்களை (பிரேதங்களை) பறவைகள் தின்பதை நீங்கள் பார்த்தாலும் கூட, நான் உங்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் வரை, அதாவது என்னுடைய கட்டளை
உங்களுக்கு வரும்வரை,
'உங்களுடைய இடத்திலேயே தங்கி இருங்கள்'.
ஆனால்,அந்த நபித் தோழர்கள் கனீமத் பொருள்களை பார்த்துவிட்டு, போர் முடிந்துவிட்டது என்று கருதி (நல்ல எண்ணத்தில்தான், நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அவர்களாகவே ஒரு விளக்கத்தை சொல்லிவிட்டு அந்த
இடத்திலிருந்து இறங்குகிறார்கள். அங்கே அல்லாஹ்வுடைய தூதரின் கட்டளைக்கு மாற்றம் நடந்தது.
فَلْيَحْذَرِ
الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ
عَذَابٌ أَلِيمٌ
''ஆகவே எவர் அவருடைய
கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக்
கொள்ளட்டும்".(அல்குர்ஆன்24 : 63)
மேலும், மனதளவில் செய்யக்கூடிய தவறுகளுக்கும், பாவத்திற்கும் ஒரு பெரிய
பாதிப்பை இந்த உலகத்திலேயே சந்தித்தாக வேண்டும்.
நம்மில் பலர்
செயல் வடிவ குற்றத்தை மட்டுமே குற்றமாக பார்க்கிறோம். ஆனால்,மனதளவில் செய்யக் கூடிய பாவங்களை நாம் பாவங்களாக பார்ப்பது கிடையாது.
ஹுனைன் போரில் நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 12
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸஹாபாக்களை அழைத்துக் கொண்டு
செல்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கிருந்த தோழர்களில் சிலர், நாம் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறோம்.
இதுவரை நடந்த
போர்களில் குறைவான எண்ணிக்கையில் வெற்றிகளை சந்தித்த நாம், இந்த போரிலோ இவ்வளவு அதிக எண்ணிக்கை இருப்பதால் நிச்சயமாக நாம் வெற்றிபெறுவோம்
என்று மனதளவில் பெருமையாக நினைத்தார்கள். இது மனதளவில் செய்த குற்றம்.
அல்லாஹ் வானத்திலிருந்து
தான் இறக்க வேண்டிய உதவியை நிறுத்திக்கொண்டான். இதைத்தான் அல்லாஹ்
கீழ்காணும் வசனத்தில் சொல்லிக் காட்டுகின்றான் :
لَقَدْ
نَصَرَكُمُ اللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ
أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ
الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ
பல போர்க்களங்களில் (உங்கள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்கள் அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி (குறுகி) விட்டது. நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள்.(அல்குர்ஆன்9 :
25)
தம்மிடம் இருப்பதைக் கொண்டு பெருமை கொள்வதை அரபியில் عجب
என்று சொல்வார்கள். عجب
என்பது மனதில் இருக்கக்கூடிய ஒரு தன்மை. இந்த தன்மைக்காக வேண்டி தான் அல்லாஹ் அவர்களை சோதித்தான்.
அல்லாஹ்வின் உதவியை அவன் தடுத்து கொண்ட போது,அங்கே முஸ்லிம்கள் சிதறி விட்டார்கள், பின்வாங்கினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இந்த சம்பவத்தில், ஒரு சிலருடைய இந்த எண்ணத்தால் எல்லா முஸ்லிம்களுக்கும் அங்கே பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.
ஆகவே, நாம் செய்யும் தவறுகளை, பாவங்களை மிகவும் இலகுவாக எண்ணி விடக் கூடாது. மேலும், தொடர்ந்து இது போன்ற தவறுகளில், பாவங்களில் நாம் ஈடுபட்டு விடக்கூடாது. மாறாக, தவ்பாச் செய்து நாம் விரைவாக மீண்டு நல்லதொரு வாழ்க்கையை வாழ விழைய வேண்டும்.
எதிர் வரும் ரமழானில் தவ்பாச் செய்து புதிய ஒரு வாழ்க்கையை வாழ முயற்சி செய்ய வேண்டும்.
3) திருக்குர்ஆன் ஓத ஆயத்தமாகுவோம்!
يستحب
للمسلم أن يكثر من قراءة القرآن في رمضان ويحرص على ختمه، لكن لا يجب ذلك عليه،
بمعنى أنه إن لم يختم القرآن فلا يأثم، لكنه فوت على نفسه أجورا كثيرة
ஒரு முஸ்லிம்
ரமழானில் குர்ஆனை அதிகமாக ஓதுவதும் அதை முடிக்க முயற்சிப்பதும் முஸ்தஹப் ஆகும், ஆனால் அது கட்டாயமில்லை, அதாவது, அவர் குர்ஆனைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், அவர் பாவம் செய்யவில்லை, ஆனால் அவர் இறைவனிடம்
இருந்து பெரிய வெகுமதியை தவறவிட்டார். .
குர்ஆன்
அருளப்பட்டதன் மூலம் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது.
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ
وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ
فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ
أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
ரமளான் மாதம்
எத்தகையதென்றால்,
அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையானவழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியை தெளிவுபடுத்தக்கூடியதும், சத்தியத்தையும்
அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.
எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும்
நோன்பு நோற்க வேண்டும். (அல்குா்ஆன் 2:185)
عن ابن
عباس قال كان رسول الله صلى اللهم عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في
رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله
صلى اللهم عليه وسلم أجود بالخير من الريح المرسلة
‘நபி ﷺ அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத்
திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள், நபி ﷺ அவர்களை ரமழான் மாதத்தில்
சந்திக்கும்போது நபி ﷺ
மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள்
ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி ﷺ அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த)
குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக
இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி ﷺ அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும்
கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி)
அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி )
عَنْ
أَبِي هُرَيْرَةَ رضي الله عنه: أن جبريل كان يعْرضُ عَلَى النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقُرْآنَ كُلَّ عَامٍ مَرَّةً، فَعرضَ عَلَيْهِ
مَرَّتَيْنِ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فيه.
قال ابن
الأثير في "الجامع في غريب الحديث"
நபி ﷺ அவர்களின் மரணித்திற்கு முந்திய ரமளானில் இருமுறை
ஜீப்ரீல் அவர்களிடம் ஓதிகாட்டினார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
وقد كان
من هدي السلف رضوان الله عليهم، الحرص على ختم القرآن في رمضان، تأسياً بالنبي صلى
الله عليه وسلم.
فعن
إبراهيم النخعي قال: كان الأسود يختم القرآن في رمضان في كل ليلتين.
"السير" (4/51).
وكان
قتادة يختم القرآن في سبع، فإذا جاء رمضان ختم في كل ثلاث، فإذا جاء العشر ختم في
كل ليلة. "السير" (5/276).
وعن
مجاهد أنه كان يختم القرآن في رمضان في كل ليلة. "التبيان" للنووي
(ص/74) وقال: إسناده صحيح.
وعن
مجاهد قال: كان علي الأزدي يختم القرآن في رمضان كل ليلة. "تهذيب
الكمال" (2/983).
وقال
الربيع بن سليمان: كان الشافعي يختم القرآن في رمضان ستين ختمة. "السير"
(10/36).
وقال
القاسم ابن الحافظ ابن عساكر: كان أبي مواظباً على صلاة الجماعة وتلاوة القرآن،
يختم كل جمعة، ويختم في رمضان كل يوم. "السير" (20/562).
நபி ﷺ அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி ரமலானில் குர்ஆனை
முழுமைப்படுத்த பாடுபடுவது ஸலஃப் (ரலி) களின் வழக்கமாகும்.
இப்ராஹீம்
அந்-நகயீ ரஹ் கூறினார்: அல்-அஸ்வத் ரஹ் ஒவ்வொரு இரண்டு இரவுகளிலும் ரமலானில்
குர்ஆனை நிறைவு செய்வார். ( நூல்: அஸ்-சியர் (4/51).
கதாதா ரஹ் சாதாரண
நாட்களில் குர்ஆனை ஏழு நாட்களில் முடிப்பார்கள், ரமழான் வந்ததும்,
மூன்று நாட்களுக்கு ஒருமுறை குர்ஆனை ஓதி முடிப்பார்கள்.
கடைசிப் பத்து நாட்கள் வந்ததும், ஒவ்வொரு இரவிலும் குர்ஆனை
ஓதி முடிப்பார்கள். ( நூல்: அஸ்-சியர் (5/276).
அவர் ரமலானில்
ஒவ்வொரு இரவும் குர்ஆனை நிறைவு செய்வார் என்று முஜாஹித் ரஹ் கூறுகிறார்கள். அதன்
இஸ்னாத் ஸஹீஹ் ஆகும். ( நூல்: அத்-திபியான் அந்-நவாவி (பக்கம் 74).
முஜாஹித் ரஹ்
கூறினார்கள்: 'அலி அல்-அஸ்தி ரமலானில் ஒவ்வொரு இரவும் குர்ஆனை நிறைவு செய்வார். ( நூல்:
தஹ்தீப் அல்-கமால் (2/983).
அர்-ரபீ' இப்னு சுலைமான் கூறினார்: அல்-ஷாஃபாயி ரமலானில் அறுபது முறை குர்ஆனை
முடித்தார். ( நூல்: அஸ்-சியர் (10/36).
அல்-காசிம் இப்னு
அல்-ஹாஃபிஸ் இப்னு அஸாகிர் ரஹ் கூறினார்: எனது தந்தை ஒவ்வொரு நாளும் ஜமாஅத்துத்
தொழுகையில் தவறாமல் கலந்து கொள்வார், குர்ஆனைத் தவறாமல் ஓதி
வருவார்கள். மேலும் ரமலானில் ஒவ்வொரு வாரமும், ஒரு குர்ஆனைத் தவறாமல்
ஓதி முடிப்பார்கள். ( நூல் : அஸ்-சியர் (20/562).
4) அமல்களை அதிகமாகச் செய்ய ஆர்வம் காட்டுவோம்!
وَالْوَزْنُ
يَوْمَئِذٍ الْحَقُّ فَمَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ هُمُ
الْمُفْلِحُونَ
அந்நாளில்
மதிப்பீடு செய்தல் உண்மை. நன்மையின் எடைகள் கனமாக இருப்போரே வெற்றி பெற்றோர். ( அல்குர்ஆன்: 7: 8 )
فَأَمَّا
مَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
யாருடைய எடைகள்
கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான .வாழ்க்கையில் இருப்பார் ( அல்குர்ஆன்: 101: 7 )
இந்த இரண்டு
வசனங்களிலும் நமது அமல்களை நிச்சயம் இறைவன் மதிப்பீடு செய்வான் என்பதை உறுதியாக
அறிவிக்கிறது.
وَمَنْ
خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فِي جَهَنَّمَ
خَالِدُونَ
எவரது எடைகள்
இலேசாகி விட்டனவோ அவர்கள் தமக்குத் தாமே நட்டத்தை ஏற்படுத்தினர். நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள். (
அல்குர்ஆன்: 23: 103 )
وَأَمَّا
مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ
யாருடைய எடைகள்
இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும். ( அல்குர்ஆன்: 101: 9 )
இந்த இரு
வசனங்களில் எவருடைய எடைகள் லேசாக உள்ளதோ அவரின் மறுமை வாழ்க்கை நரகம் என்பதை
இறைவன் பகிரங்கமாகவே எச்சரிக்கை செய்கிறான்.
நாம் அதிகமாக
அமல்களின் பக்கமே நமது கவணத்தை வைத்திருக்க வேண்டும்!
அமல்களை ஏன்
அதிகரித்து கொண்டே இருக்க வேண்டும்? என்ற காரணத்தையும் நபி ﷺ அவர்கள் நமக்கு தெளிவாக உபதேசம் செய்திருக்கிறார்கள்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: «بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ
الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي
مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا».
நபி ﷺ அவர்கள் கூறுகின்றார்கள்: இருள் நிறைந்த ஒரு பகுதியைப் போன்று வரவிருக்கும் குழப்பத்திற்கு முன்னால்
நற்செயல்களில் போட்டி இடுங்கள். அந்தக் குழப்பம் வந்தால் ஒரு மனிதன் முஃமினாக
காலைப் பொழுதை அடைந்து மாலையில் காஃபிராகி விடுவான். அல்லது மாலையில் முஃமினாக
இருப்பவன் காலையில் காஃபிராகி விடுவான். உலகத்தின் செல்வங்களுக்காகத் தனது
மார்க்கத்தை விற்று விடுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி)
( நூல்: முஸ்லிம் )
5) சுய ஒழுக்கத்தை மேம்படுத்துவோம்!
நோன்பு என்பது
வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் அல்ல. மாறாக, இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்காத்தான் என்பதை நாம் அறிவோம்.
அவ்வாறு நாம்
இறையச்சத்தை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கும் போது நமது குணநலன்களை அழகாக்க
வேண்டும். இப்படிப்பட்ட எண்ணமில்லாமல் நோன்பு நோற்பதனால் அந் நோன்பினால் எவ்வித
பயனுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நோன்பு வைத்துள்ள
நிலையில் பொய் பேசுவது,
புறம் பேசுவது, பிறரை ஏசுவது, திட்டுவது,
பிறரிடம் சண்டை செய்வது போன்ற தீய பண்புகளை விட்டும் விலகி
இருக்க வேண்டும்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ
وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ للهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ».
‘பொய்யான பேச்சையும்
பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும், பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி ).
عن أبي
هريرة رضي الله عنه أن النبيَّ صلى الله عليه وسلم قال: ((مَن لم يَدَعْ قول
الزُّور والعملَ به والجهلَ، فليس للهِ حاجةٌ أن يَدَعَ طعامه وشرابه))؛ رواه
البخاري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்: பொய்யான பேச்சையும், பொய்யான
நடவடிக்கைகளையும். அறியாமையையும் கைவிடாதவர் தம் உணவையும் பானத்தையும் கைவிடுவதில்
அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். (
நூல்: புகாரி ).
நம் நாவிலிருந்து உதிரும்
பேச்சின் கடினத்தன்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
وَعَنْ
أَبي هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ النَّبيَّ ﷺ يَقُولُ: إنَّ الْعَبْد لَيَتَكَلَّمُ
بِالكَلِمةِ مَا يَتَبيَّنُ فيهَا يَزِلُّ بهَا إِلَى النَّارِ أبْعَدَ مِمَّا
بيْنَ المشْرِقِ والمغْرِبِ. متفقٌ عليهِ
ஓர் அடியார்
பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு)
கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில்
விழுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறி: அபூஹுரைரா (ரலி), ( நூல்: புகாரி )
இதைப் போன்று, ஒருவர் செய்த தவறுக்காக அவரின் பெற்றோரைத் திட்டும் பழக்கம் நம்மிடம் உள்ளது.
இவைகள் அறியாமைக் காலப் பழக்கங்கள் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
حَدَّثَنَا
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ وَاصِلٍ الأَحْدَبِ
، عَنِ المَعْرُورِ بْنِ سُوَيْدٍ ، قَالَ : لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ ،
وَعَلَيْهِ حُلَّةٌ ، وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ ،
فَقَالَ : إِنِّي سَابَبْتُ رَجُلًا فَعَيَّرْتُهُ بِأُمِّهِ ، فَقَالَ لِي
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ
بِأُمِّهِ ؟ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ ، إِخْوَانُكُمْ خَوَلُكُمْ ،
جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ ،
فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ ، وَلاَ
تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ
நான் அபூதர் (ரலி)
அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதா எனுமிடத்தில் சந்தித்தேன்.
அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய
அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எஜமானரும் ஒரே
போல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில்
அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசி விட்டேன்.
அப்போது என்னைப்
பார்த்து நபியவர்கள் அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே
இருக்கிறீர்! அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ்
தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான்.
எனவே தம் சகோதரரை
தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும்.
தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய
வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய)
பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள்
உதவுங்கள் என்று கூறினார்கள். ( ,நூல் : புகாரி )
6) லைலத்துல் கத்ரை பெற்றுக் கொள்ள முனைய வேண்டும்!
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (1) وَمَا أَدْرَاكَ مَا
لَيْلَةُ الْقَدْرِ (2) لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (3)
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ
(4) سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ (5)
நிச்சயமாக!
நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமிக்க) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில்
இறக்கி வைத்தோம். கண்ணியமிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன? அதில் வானவர்களும் ரூஹும், தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்திய
வண்ணம் இறங்குகின்றார்கள். அந்த இரவு சாந்தி நிலவக்கூடியதாகும்; அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குா்ஆன் 97:1-5)
وروى
السيوطي عن ابن أبي حاتم، عن سفيان بن عيينة، قال: كل شيء في القرآن: {وما يدريك}
فلم يخبر، {وما أدراك} فقد أخبر به. والمراد بالضمير في قول سفيان رسول الله صلى
الله عليه وسلم.
சுஃப்யான் பின்
உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: குர்ஆனில் எங்கெல்லாம் ‘‘உமக்குத் தெரியுமா?”
(வ மா அத்ரா(க்)க) என்று வருகிறதோ அங்கெல்லாம் குறிப்பிட்ட
செய்தியை நபி ﷺ
அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக்கொடுத்திருப்பான். (இதன்படி லைலத்துல் கத்ர் இன்ன
இரவுதான் என்பதை நபியவர்களுக்கு ﷺ அல்லாஹ் தெரிவித்தான்.) எங்கெல்லம் ‘‘உமக்கு எப்படித் தெரியும்?” (வ மா யுத் ரீ(க்)க) என்று
வருகிறதோ அங்கெல்லாம் குறிப்பிட்ட செய்தியை நபியவர்களுக்கு ﷺ அல்லாஹ் அறிவித்திருக்கமாட்டான். (எடுத்துக்காட்டாக
யுகமுடிவு நாள் எப்போது என்பதைச் சொல்லலாம்)
قال
مجاهد: “بلغني أنه كان في بني إسرائيل رجل لبس السلاح في سبيل الله ألف شهر فلم
يضعه عنه
﴾فذكر ذلك رسول الله ﷺ لأصحابه، فعجبوا من قوله،
فأنزل الله تعالى: ﴿لَيْلَةُ القَدْرِ خَيْرٌ مِن ألْفِ شَهْرٍ
#ليلة_القدر خير لكم من تلك الألف شهر التي لبس فيها السلاح،
وذلك الرجل في سبيل الله
“شرح العمدة” ٢/ ٦٦٨
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ரவேல் சமூகத்தில் ஒருவர் 1000 மாதங்கள் தொடர்ந்தும் அல்லாஹ்வின் பாதையில் போராடியதாக நபி ﷺ அவர்கள் ஸஹாபாக்களிடம் கூறினார்கள். ஸஹாபாக்கள்
ஆச்சரியப்படவே அல்லாஹ் பின்னரும் வசனத்தை இறக்கினான்..கண்ணியமுள்ள அந்த இரவு
ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். (97:3), இமாம் முஜாஹித்
(ரஹ்) ( நூல்: ஷரஹுல் உம்தா )
நபி ﷺ அவர்கள் கூறினார்கள் உங்களுக்கு ரமளான் மாதம்
வந்துள்ளது அது பரகத்பொருந்திய மாதமாகும் அதில் அல்லாஹ் நோன்பை உங்கள் மீது
கடமையாக்கியுள்ளான் அதில் வானத்தின் வாசல்கள் திறக்கப்படும் நரகத்தின் வாசல்கள்
மூடப்படும் அழிச்சாட்டியம் செய்யக்கூடிய ஷைத்தான் விலங்கிடப்படுவான் அல்லாஹ்விற்கு
அதில் ஓர் இரவுள்ளது அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும் யார் அதில் நன்மைகள்
இழந்துவிடுகிறாறோ அவர் அனைத்து நன்மையையும் இழந்தவர் ஆவார் அறிவிப்பாளர் அபூஹுரைரா
( நூல் சுனனுந் நஸாயி )
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ
حَفِظْنَاهُ وَإِنَّمَا حَفِظَ مِنَ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي
هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
"" مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا
تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا
وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "". تَابَعَهُ
سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ عَنِ الزُّهْرِيِّ.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ
அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். யார்‘லைலத்துல்கத்ர்' (கண்ணியமிக்க) இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று
வழிபடுகிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
லைலத்துல் கத்ர்
என்பது ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஒரு
இரவுக்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள்
செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கும் என்று
அல்லாஹ் சூரத்துல் கத்ரில் கூறுகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை
கிடைக்கின்றது. இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக
நோன்பின் கடைசிப்;
பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். "83 வருடம் நாம் வாழ்வோமா?"
என்பதே கேள்விக்குரியானது!
ஆனால், ஒருநாள் அமல் செய்வதினால் அந்த நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான்.
இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட இந்தப்பத்து நாட்களில் நபியவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுவடுவார்கள்.
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள்
செய்திருக்கும் போது நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் எவ்வளவு அதிகமாக அமல்களில்
ஈடுபட வேண்டும்.
எதிர் வரும்
ரமளானை பயனுள்ளதாக நாம் ஆக்கிக்கொள்ள அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் அருள்
புரிவானாக!
ரமளானில் அனைத்து அமல்களையும்
செய்ய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் பரிபூரண
ஆரோக்கியத்தை வழங்கியருள்வானாக!
ரமழானின் மூலமும், நோன்பின் மூலமும்,
இதர வணக்க வழிபாடுகளின் மூலமும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
என்னென்ன நன்மைகளை எல்லாம் தருவதாக வாக்களித்துள்ளானோ அத்துனை பாக்கியங்களையும்
நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
ஹழ்ரத் ,இன்னும் ஒரு மாத காலங்கள் உள்ளன!
ReplyDeleteஇன்று பார்க்கப்பட்டது ரமலான் பிறை அல்ல, ஷாபான் பிறையாகும்.
இருப்பினும் கட்டுரை அருமை ஷாபான் மாதத்தின் கடைசி வாரத்தில் பயன்படுத்திக் கொள்ள உதவும் அடியேனுக்கு..