மேம்பட்ட மஹல்லா எது?, பாகம் 1
வானுயர்ந்த
மினாராக்கள்,
முழுவதும் குளிரூட்டப்பட்ட மஸ்ஜித், நுழைவாயில் முதல் டாய்லெட் வரை மார்பிள்ஸ் மயம், எண்ணிக்கையில் அடர்ந்த பணியாளர்கள், லட்சத்தை தொட்டு நிற்கும்
மாதந்திர செலவுகள்,
செல்வாக்கும், பாரம்பரியமும் அடையாளமும்
கொண்ட நிர்வாகிகள் இது தான் இன்றைய மேம்பட்ட "மஹல்லாவின்" அடையாளங்களாக
நம்மில் பலரும் பெருமையுடன் சொல்லிக் கொள்வது.
உண்மையில் ஒரு
மேம்பட்ட மஹல்லாவிற்கான அடையாளங்கள் இவை மட்டும் தானா? என்று கேட்டால் ஒரு மேம்பட்ட மஹல்லாவின் அடையாளங்களில் இவைகள் ஒரு பகுதி
மட்டுமே என்று தான் பதில் சொல்ல முடியும்.
ஏனெனில், மாநபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய மஹல்லாவான மதீனா தான். ஒட்டுமொத்த
உம்மத்துக்குமான முன் மாதிரி மஹல்லாவாகும்.
மாநபி (ஸல்)
அவர்கள் மஸ்ஜித் அந் நபவீயை அடிப்படையாக வைத்து உருவாக்கிய முன் மாதிரி மஹல்லாவின்
கட்டமைப்பு என்பது மதீனாவில் மாநபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பத்தாண்டுகளிலும்
பார்த்து பார்த்து கட்டமைக்கப்பட்டது.
அந்த மஹல்லா
மாத்திரமல்ல அருகே மாநபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய மஸ்ஜித் குபா மஹல்லாவும்
மாண்பிற்குரியது,
மகத்துவத்திற்குரியது.
இரண்டு மஹல்லா
மக்கள் குறித்தும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் புகழ்ந்து கூறிய, சிலாகித்து இறக்கியருளிய இறைவசனங்களை இந்த உம்மத் கவனிக்கத் தவறி விட்டதோ? என்றே எண்ணத் தோன்றுகிறது.
மஸ்ஜித் குபா மஹல்லா மக்கள்....
لَمَسْجِدٌ
اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِؕ فِيْهِ
رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْا ؕ وَاللّٰهُ يُحِبُّ
الْمُطَّهِّرِيْنَ
நிச்சயமாக! ஆரம்ப
தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும்
தகுதியானது;
அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே
விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான். ( அல்குர்ஆன்: 9: 108 )
மஸ்ஜித் அந் நபவீ மஹல்லா மக்கள்...
وَالَّذِيْنَ
تَبَوَّؤُ الدَّارَ وَالْاِيْمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّوْنَ مَنْ هَاجَرَ
اِلَيْهِمْ وَلَا يَجِدُوْنَ فِىْ صُدُوْرِهِمْ حَاجَةً مِّمَّاۤ اُوْتُوْا
وَيُـؤْثِرُوْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ
يُّوْقَ شُحَّ نَـفْسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَۚ
இன்னும்
சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில்
முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள்
நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே
(உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு
எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். ( அல்குர்ஆன்: 59: 9 )
எனவே, முன்மாதிரி மஹல்லா என்பது தான் இன்றைய உம்மத்தின் உயர்ந்த நோக்கமாக இருக்க
வேண்டும். அதை உருவாக்க வேண்டிய, கட்டமைக்க வேண்டிய
கடமையும் கடப்பாடும் இந்த உம்மத்திற்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
வக்ஃப் திருத்த
சட்ட மசோதா அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐந்தாண்டு அம்ச திட்டங்களை வடிவமைத்து
நம் மஹல்லாக்களை மேம்படுத்த நாம் முன் வர வேண்டும்.
ஒவ்வொரு ஐந்தாண்டு
அம்ச திட்டங்களை உருவாக்க தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு, வக்ஃப் வாரியம் என இம் மூன்று அமைப்புகளும் மிகச் சிறந்த ஒரு குழுவை அமைத்து
இந்த உம்மத்தை வழி நடத்த முன் வர வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
மேம்பட்ட மஹல்லாவாக மாற்றம் பெற....
1)
நூறு சதவீத தீனை மஹல்லாவில் உறுதி செய்வது.
2)
பள்ளிவாசல் வளாகம் மஸ்ஜித் அந் நபவீ வளாகமாய் மாற்றம்
பெறுதல்.
3)
துறை சார்ந்த அறிஞர்கள் உருவாக்கப்படுவது.
4)
மஹல்லா மக்கள் தொகை கணக்கெடுப்பு
5)
செல்வந்தர்கள் ஒன்றிணைவது
6)
இறையில்ல பரிபாலன பொறுப்பை உணர்ந்து நிர்வாகிகள் செயல்படுவது.
மேம்பட்ட
மஹல்லாவின் முதல் இலக்கு மஹல்லா மக்கள் அனைவரிடமும் நூறு சதவீத தீனுடைய
வாழ்க்கையை வாழ உறுதி செய்வது.
முதல் இலக்கை
நோக்கிய பயணத்தை திட்டமிட்டு அமைப்பதில் அந்த மஹல்லாவின் இமாமின் பங்களிப்பு தான்
தலையாயதாகும்.
ஒரு மஹல்லா
ஜமாஅத்தில் மார்க்க சேவையாற்றும் இமாமின் செயல்பாடு என்பது ஜும்ஆவுடன் நின்று
விடுவதில்லை. அதைத் தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான வழிமுறைகளில் இமாமின்
சேவைகள் அமைய வேண்டும்.
1) குழந்தைகள் மதரஸா
குழந்தைகளுக்கு
மார்க்கக் கல்வியைப் போதிக்கும் பகுதி நேர மதரஸாக்களை காலையிலும், மாலையிலும் நடத்த வேண்டும். இது தான் நம்முடைய சந்ததிகள் அஹ்லுஸ் ஸுன்னத் வல்
ஜமாஅத்தின் வார்ப்புகளாக உருவாகும் களமாகும்; பயிற்சித் தளமாகும்.
2) வயது வந்தோர் கல்வி
மாலை, இரவு நேரங்களில் வயது வந்தவர்கள், இளைஞர்கள் மற்றும்
முதியோருக்காக குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதன்
மூலம் குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள் அதைக் கற்றுக் கொள்வதுடன், அவர்கள் கொள்கைப் பிடிப்புள்ளவர்களாக ஆகவும் வழி வகுக்கும்.
3) குர்ஆன்,
ஹதீஸ் விரிவுரை & ஃபிக்ஹ் வகுப்புகள்:-
வாரத்தில் ஒரு
நாள் அல்லது இரண்டு நாட்களைத் தேர்வு செய்து குர்ஆன் மற்றும் ஹதீஸ் விரிவுரை
வகுப்புகள் மற்றும் ஃபிக்ஹ் - சட்ட விளக்க வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
இது போன்ற
காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் தான் நம் மக்களை அஹ்லுஸ் ஸுன்னத் வல்
ஜமாஅத்தில் பற்றுள்ளவர்களாக பிடிமானம் கொண்டவர்களாக மாற்ற முடியும். ஒரு ஊரில்
சேவையாற்றும் அர்ப்பணிப்பு நிறைந்த இமாமால் தான் இந்தக் காரியங்களைத் தடையின்றிச் செயல்படுத்த முடியும்.
4) பெண்கள் மதரஸா
& மார்க்க விளக்க வகுப்புகள்:-
மாதத்தில் இரண்டு
முறை தர்பியா - மார்க்க விளக்க வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மாதத்தின்
இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பயான் ஊடாகவும், நான்காவது
ஞாயிற்றுக்கிழமை கேள்வி
& பதில் நிகழ்ச்சி ஊடாகவும் நடத்துவது சிறந்தது.
சிறந்த
பாடத்திட்டத்துடன் கூடிய முஅல்லமா, முபல்லிகா, ஆலிமா,
ஹாஃபிழா, ஃபாளிழா பட்டப்படிப்புகள்
கொண்ட மதரஸாக்களை நிறுவி பெண்களின் வாழ்க்கையை நெறி படுத்துவதன் மூலம் சிறுவர்
சிறுமியர் இளைஞர் யுவதி பெரியோர் என அனைவரையும் தீனுடைய வாழ்க்கைக்குள் கொண்டு வர
இயலும்.
ஆரம்பக் கல்வி ஆயுள் வரை வழிநடத்தும்....
சிறுவர் சிறுமியர்
வளரும் பருவத்தினராய் இருக்கும் போது பெறுகிற கல்வியறிவும் வழிகாட்டலும் வாழ்க்கை
முழுமைக்கும் பயனுள்ளதாக அமையும், முழு வாழ்க்கையிலும் அது
பிரதிபலிக்கும்.
أَنَّهُ
سَمِعَ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، يَقُول كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي
الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا
غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا
زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ
நான்
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை)
என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்
(ஸல்) அவர்கள் என்னிடம்,
‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால்
சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. அறிவிப்பவர்: உமர் இப்னு அபீஸலமா (ரலி) ( நூல்: புகாரி-5376 )
கற்றவர் பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்....
أَتَيْنَا
إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ
مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ يَوْمًا وَلَيْلَةً، وَكَانَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا
ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا أَهْلَنَا – أَوْ قَدِ اشْتَقْنَا – سَأَلَنَا
عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا، فَأَخْبَرْنَاهُ، قَالَ: «ارْجِعُوا إِلَى
أَهْلِيكُمْ، فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ – وَذَكَرَ
أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ أَحْفَظُهَا – وَصَلُّوا كَمَا
رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ
أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»
சம வயதுடைய
இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள்
தங்கினோம். நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும்
இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி
(ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள்
அவர்களைப் பற்றி விவரித்தோம்.
அப்போது நபி (ஸல்)
அவர்கள் ‘உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக்
கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை
நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்‘ என்று கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்ன சில செய்திகள் எனக்கு நினைவிலில்லை.
அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி) ( நூல்: புகாரி-631 )
வரலாறாய் வாழ்ந்த இரண்டு “அப்துல்லாஹ்”கள்….
நபித்துவத்தின்
துவக்க ஆண்டுகளில் உமர் (ரலி) அவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் அப்துல்லாஹ் இப்னு
உமர் (ரலி) அவர்கள்.
பெருமானார்
ஸல் அவர்களின் சபையில் மார்க்கக் கல்வியை பெற்றதோடு நின்று விடாமல் பெருமானார் ஸல்
அவர்களின் அண்மையில் இருந்து பெருமானார் ஸல் அவர்களின் செயல்களை மிக நுணுக்கமாக
கண்டறிந்து வாழ்க்கையில் நடைமுறை படுத்தியவர்கள்.
சிறார்
பருவத்திலேயே மிகவும் ஒழுக்கமான முறையில் வளர்ந்து வந்தார்கள்.
வயதில்
மூத்தவர்களிடத்திலும் கல்வியறிவில் உயர்ந்தவர்களிடத்திலும் மரியாதையோடும்
கண்ணியத்தோடும் நடந்தார்கள்.
قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: أَخبِرُونِي بِشَجَرَةٍ, مَثَلُهَا
مَثَلُ المُسلِمِ تُؤتِي أُكُلَهَا كُلَّ حِينٍ, بِإِذنِ رَبِّهَا، وَلا تَحُتٌّ
وَرَقَهَا؟ فَوَقَعَ فِي نَفسِي أَنَّهَا النَّخلَةُ، فَكَرِهتُ أَن أَتَكَلَّمَ
وَثَمَّ أَبُو بَكرٍ, وَعُمَرُ، فَلَمَّا لَم يَتَكَلَّمَا قَالَ النَّبِيٌّ - صلى
الله عليه وسلم -: هِيَ النَّخلَةُ. فَلَمَّا خَرَجتُ مَعَ أَبِي قُلتُ: يَا
أَبَتَاهُ! وَقَعَ فِي نَفسِي أَنَّهَا النَّخلَةُ، قَالَ: مَا مَنَعَكَ أَن
تَقُولَهَا؟ لَو كُنتَ قُلتَهَا كَانَ أَحَبَّ إِلَيَّ مِن كَذَا وَكَذَا، قَالَ:
مَا مَنَعَنِي إِلاَّ أَنِّي لَم أَرَكَ وَلا أَبَا بَكرٍ, تَكَلَّمتُمَا،
فَكَرِهتُ. [البخاري في الأدب
அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், "ஒரு முஸ்லிமான மனிதரை ஒத்திருக்கும்" அல்லது "(அவரைப்)
போன்றிருக்கும்" ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள்.
அதன் இலை உதிராது.
அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக்கொண்டிருக்கும் என்று
சொன்னார்கள். அப்போது,
என் மனதில், "அது பேரீச்ச மரம்தான்" என்று தோன்றியது. ஆனால், அபூபக்ர்,
உமர் (ரலி - அன்ஹுமா) (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை
நான் கண்டேன். ஆகவே,
நான் எதையும் பேசவோ, சொல்லவோ விரும்பவில்லை.
பின்னர் (என் மனதில் தோன்றியதை நான் சொல்லாமலிருந்து விட்டது குறித்து என் தந்தை
உமர் (ரலி) அவர்களிடம் சொன்ன போது), "நீ அதைச் சொல்லியிருந்தால் இன்ன இன்ன (செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும்
பிரியமானதாய் இருந்திருக்கும்" என்று சொன்னார்கள். ( நூல்: புகாரி )
وفي
أخرى، قَالَ: بَينَا نَحنُ عِندَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - جُلُوسٌ إِذَا
أُتِيَ بِجُمَّارِ نَخلَةٍ,، فَقَالَ النَّبِيٌّ - صلى الله عليه وسلم -: \"
إِنَّ مِن الشَّجَرِ لَمَا بَرَكَتُهُ كَبَرَكَةِ المُسلِمِ \" فَظَنَنتُ
أَنَّهُ يَعنِي النَّخلَةَ، فَأَرَدتُ أَن أَقُولَ هِيَ النَّخلَةُ يَا رَسُولَ
اللَّهِ، ثُمَّ التَفَتٌّ، فَإِذَا أَنَا عَاشِرُ عَشَرَةٍ,، أَنَا أَحدَثُهُم
فَسَكَتٌّ فَقَالَ النَّبِيٌّ - صلى الله عليه وسلم - هِيَ النَّخلَةُ \".
[البخاري
இந்த மன
முதிர்ச்சி அவர்களுக்கு ஏற்பட்ட போது அவர்களின் வயது பத்து ஆகும். இது குறித்து
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் இன்னொரு அறிவிப்பில்....
"அப்போது நான் பத்து வயதை ஒத்த சிறுவனாக இருந்தேன்" என்று கூறினார்கள்.
இளமைப் பருவத்தில்
இபாதத்தில் திளைத்தவர்கள். சன்மார்க்கப் போர்களில் ஆர்வத்துடன் கலந்து
கொண்டார்கள்.
ஒரு நாள் இப்னு
உமர் (ரலி) அவர்கள் ஒரு கனவு கண்டார். ஒரு பட்டுத்துணி அவரை சொர்க்கத்தில் அவர்
விரும்புகிற இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்வதாக கனவு கண்டார். பெருமானார் (ஸல்)
அவர்களிடம் இதற்கான விளக்கத்தை அறிந்து சொல்லுமாறு தன்னுடைய சகோதரியும் பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் கோரினார்.
அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் பெருமானாரிடம் இது குறித்து வினவிய போது நபி (ஸல்) அவர்கள்
نِعْمَ
الرجلُ عبد الله، لو كان يصلي من الليل فيكثر
"அப்துல்லாஹ்
பாக்கியமான ஒருவர். அவர் இரவுத் தொழுகையின் நேரத்தை இன்னும் அதிகப் படுத்தினால்
நன்றாக இருக்கும்" என்று சொன்னார்கள், அதை செவியேற்ற
நாளிலிருந்து இப்னு உமர் ரலி தஹஜ்ஜுத் தொழுகையை விட்டதேயில்லை. இரவில் அதிக நேரம்
உறங்கியதும் இல்லை. ( நூல்: புகாரி )
சோதனையான
காலகட்டங்களில் வாழும் ஒருவர் மிகவும் நேர்த்தியாக அந்த காலகட்டத்தில் வாழ்வதற்கு, தடம் புரண்டு செல்லாமல் தம்மை தற்காத்து நேர்வழியில் செல்வதற்கு ஒருவருக்கு
சிறார் பருவத்திலும்,
அவரது இளமைப் பருவத்திலும் அவருக்கு கிடைக்கும் சிறந்த
வழிகாட்டலே அடிப்படையாக இருக்கும் என்பதை இப்னு உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கையைப்
படிப்பவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.
அப்துல்லாஹ் இப்னு
உமர் (ரலி) அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மூன்று சோதனையான கால கட்டங்களை எவ்வித
சலனமும் இன்றி கடந்து வந்தவர்கள்.
முதல் கால கட்டம்....
طلب منه
عثمان أن يشغل منصب القضاء فاعتذر، وألحَّ عليه عثمان فثابر على اعتذاره، وسأله
عثمان : "أتعصيني؟" فأجاب ابن عمر : "كلا، ولكن بلغني
أن القضاة ثلاثة: قاضٍ يقضي بجهل فهو في النار، وقاضٍ يقضي بهوى فهو في النار، وقاضٍ
يجتهد ويصيب؛ فهو كفاف لا وزر ولا أجر، وإني لسائلك بالله أن تعفيني". وأعفاه
عثمان بعد أن أخذ عليه عهدًا ألاَّ يخبر أحدًا؛ لأنه خشي إذا عرف
الأتقياء الصالحون أن يتبعوه وينهجوا نهجه.
உஸ்மான் (ரலி)
அவர்களின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் நல்ல அதிகாரிகள், நீதிபதிகளின் தேவை ஏற்பட்டது. அப்போது, உஸ்மான் (ரலி) அவர்கள்
இப்னு உமர் (ரலி) அவர்களின் அறிவாற்றல் மற்றும் பேணுதலான வாழ்க்கையால் கவரப்பட்டு அவரை நீதிபதி பதவியை ஏற்குமாறு கூறினார்கள். நீதிபதி பதவியை ஏற்க மறுத்து விட்டார்கள்.
அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள் "ஆட்சியாளரின் ஆணைக்கு மாறு செய்ய விழைகின்றீரா?" என்று கேட்ட போது, "நீதிபதிகள் விஷயத்தில் மூன்று கட்டங்கள் இருக்கிறது. அதன் பிரதிபலிப்பாக
மூன்று விளைவுகள் இருக்கிறது. ஒன்று, ஒரு நீதிபதி வழக்கின்
எவ்வித அறிவும் இன்றி தீர்ப்பு வழங்க நேரிடும், அவ்விதமே அவர் தீர்ப்பும்
வழங்க இறுதியில் அவர் நரகத்தில் நுழைந்து விடுவார். இரண்டு, ஒரு நீதிபதி வழக்கின் போது வழக்கு தொடர்பான அறிவும், ஆதாரமும் இருந்து தாம் விரும்பிய வாறு தீர்ப்பு வழங்க நேரிட்டு, அவர் அவ்விதமே தீர்ப்பு வழங்க இறுதியில் அவர் நரகத்தில் நுழைந்து விடுவார்.
மூன்று, ஒரு நீதிபதி வழக்கின் போது தீர்ப்புக் கூறுவதற்கு தேவையான விஷயங்களை தமது
ஆய்வால் பெற்றுக் கொள்ள,
தீர்ப்புக் கூறுவதற்கு அதுவே போதுமானதாக இருப்பதாகக் கருதி
தீர்ப்பு வழங்குவார். அதனால் அவருக்கு எவ்வித லாபமும் நஷ்டமும் ஏற்படாது. என்று
கூறி, அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்து விடுங்கள், உங்களுக்கு மாறு செய்வதாக
நினைக்க வேண்டாம் என்று சொல்லி மிக அழகாக பதில் சொன்னார்கள் இப்னு உமர் (ரலி)
அவர்கள். தொடர்ந்து உஸ்மான் (ரலி) அவர்களிடம் "நாம் பேசிக் கொண்ட இந்த
விவகாரம் குறித்து வெளியில் எவரிடமும் தெரிவித்து விட வேண்டாம். ஏனெனில், நீதிபதி பதவிக்கு பொருத்தமான இறையச்சமுள்ள நல்லோர்கள் பலர் வாழ்ந்து வரும்
சூழலில் அவர்களும் என்னைப் போன்றே பதில் கூறி ஒதுங்கிச் சென்றிட வழியமைத்து
விடும்" என்றார்கள். ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் (ஸல்)..... )
இரண்டாம் கால கட்டம்....
يقول
الحسن رضي الله عنه: " لما قتل عثمان بن عفان, قالوا لعبد الله بن عمر: انك
سيّد الناس, وابن سيد الناس, فاخرج نبايع لك الناس..
قال: ان
والله لئن استطعت, لا يهراق بسببي محجمة من دم..قالوا: لتخرجن, أ, لنقتلنكك على
فراشك.. فأعاد عليهم قوله الأول..فأطمعوه.. وخوّفوه.. فما استقبلوا منه شيئا"..!!
உஸ்மான் (ரலி)
அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட பின்னர் மக்களிடையே பெரும் குழப்பம் நிலவிய
சந்தர்ப்பத்தில் வெகுஜன மக்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து "நீங்கள்
தான் மக்களில் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமானவர், நீங்கள் முந்தைய ஜனாதிபதியின் மகனும் ஆவீர்கள்! ஆகவே, தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்! உங்களுக்கு நாங்கள் பைஅத்
செய்கின்றோம்" என்று கூறினார்கள்.
அதற்கு, இப்னு உமர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் தலைமைத்துவத்திற்கு
தகுதியானவன் இல்லை,
இப்போது தான் இரத்தம் ஒன்று ஓட்டப்பட்டுள்ளது. அதன் ஈரம்
கூட இன்னும் காயாத நிலையில், என்னைக் காரணமாக வைத்து
மக்களின் இரத்தங்கள் ஓட்டப்பட நான் விரும்பவில்லை" என்றார்கள்.
ஆனாலும், ஜனாதிபதி பதவிக்கு முன்வருமாறு மக்கள் பல வகையிலும் அவரை நிர்பந்தப்படுத்தினர், ஒரு கட்டத்தில் நீங்கள் ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை எனில் கொன்று
விடுவோம் என்றும் கூட மிரட்டினர், மக்கள் கூறிய ஆசை
வார்த்தைகளை காதில் வாங்கிக் கொள்ளாமல், மக்களின் மிரட்டலுக்கு
பணியாமல் மிக உறுதியாக தான் அதற்கு பொருத்தமானவனல்ல என்று கூறி விலகி விட்டார்கள்
இப்னு உமர் (ரலி) அவர்கள்.
மூன்றாம் கால கட்டம்....
من قال حي على الصلاة أجبته..ومن قال حي على الفلاح أجبته..ومن قال حي على قتل أخيك المسلم واخذ ماله قلت: لا".!!
இதற்குப் பின்னர்
அலி (ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு
வளர்ந்த போது எந்த தரப்பாரோடும் சேர முடியாது என உறுதியோடு நின்று விட்டார் இப்னு
உமர் ரலி).
இந்த முடிவுக்காக
சிலர் அவர்களைத் தூற்றிய போதும் தமது நிலையை மிக உறுதியாக வெளிப்படுத்தினார் இப்னு
உமர் (ரலி) அவர்கள். அதற்காக அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் மிக கனமானவை, "தொழுகையில் பால் விரைந்து வாருங்கள்" என்று என்னை நோக்கி ஒருவர்
அழைத்தால் நான் பதில் சொல்வேன். வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்" என்று
என்னை நோக்கி ஒருவர் அழைத்தால் நான் பதில் சொல்வேன்.
ஆனால், உம்முடைய சகோதரனை கொலை செய வா!, உம்முடைய முஸ்லிமான
சகோதரனின் பொருளாதாரத்தை எடுத்துக் கொள்ளலாம் வா!" என்று அழைத்தால் நான்
சொல்வேன் என்னை அழைக்காதீர்கள் வரமாட்டேன்" என்று.
(
நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் (ஸல்).... )
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இளைஞர்களை நாம் பார்த்தோம். அவர்கள்
"இயக்கங்கள்" எனும் சோதனைக்குள் சிக்குண்டார்கள்.
நம் கண் முன்னே
வளர்ந்து நிற்கும் இன்றைய இளைஞர்களை நாம் பார்க்கின்றோம்.
இவர்கள்
"கலாச்சார மோகம்" எனும் சோதனையில் சிக்குண்டு முதலில் ஆடை, சிகை அலங்காரம்,
இரு சக்கர வாகன மோகம், டாட்டூஸ் என்று தடம்
புரண்டு,
அடுத்து சமூக ஊடகங்கள் மற்றும் மொபைல், இன்டர்நெட் எனும் சோதனைகளில் சிக்குண்டு, தற்போது மது, கஞ்சா எனும் மாபெரும் சோதனையின் பிடியில் மிக ஆழமாகவே சிக்கியுள்ளார்கள்.
ஈமானுக்கான சோதனை
என்பது இஸ்லாமிய வரலாற்றில் எல்லா காலங்களிலும் இடம் பெற்றுள்ளன. சோதனையின்
வடிவங்கள் தான் வெவ்வேறானதே தவிர. சோதனைகள் ஒரு முஃமினுக்கு நிரந்தரமானது.
இப்னு உமர் (ரலி)
வாழும் காலத்தில் அவர்கள் எதிர்கொண்ட சோதனை அப்படி இருந்தது.
இங்கு நமக்கான
படிப்பினை இது தான் சிறார் பருவத்தில் மார்க்கக் கல்வி, அறிவு ஞானம்,
இபாதத் என்று கிடைக்கும் பட்சத்தில் இளைமைப் பருவமும்
அதற்கடுத்த நிலைகளும் மிகச் சரியானதாக அமையும். ஈமானுக்கான உரைகல்லாக இருக்கும்
எவ்வித சோதனைகளையும் மிக எளிதாக கடந்து வெற்றி பெற்றிட முடியும்.
அத்தகைய வெற்றியை
சாத்தியப் படுத்துவது சிறார் பருவத்தில் பள்ளிவாசல் சூழலில், மஹல்லா அமைப்பில் ஒருவருக்கு கிடைக்கும் கல்வியும் வழிகாட்டலும் தான்.
2) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
அப்துல்லாஹ் இப்னு
உமர் (ரலி) அவர்களைப் போலவே நபித்துவத்தின் பிந்தைய ஆண்டுகளில் பிறந்தவர் தான்
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் சம காலத்தில் வாழ்ந்த இவர்களும் வரலாற்றில் மிகவும் கவனிக்கப்பட்டவர்கள்.
மாநபி (ஸல்)
அவர்கள் இவ்வுலகை விட்டு விடைபெறும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வயது
பதிமூன்று தான்.
17 அல்லது 18 வது வயதில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் உமர் (ரலி) அவர்களின் "உயர்
மட்ட ஆலோசனைக் குழுவில்" இடம் பெற்றார்கள்.
அபூ ஸாலிஹ் (ரஹ்)
அவர்கள் கூறினார்கள்: 20
அல்லது 22 வயதில் தமது இல்லத்திலேயே
சன்மார்க்கத்தின் உயர்ந்த பாடமான அல்குர்ஆன் & அல்குர்ஆன்
விரிவுரை,
நபிமொழி வகுப்பு, மஸாயில் & ஃபராயில் வகுப்பு,
வரலாறு, கவிதை என்று அதிகாலை
முதல் இரவு வரை தொடர்ந்து பல்வேறு கல்விச் சேவைகளை வழங்கும் ஆற்றல் பெற்றவராய்
விளங்கினார்கள்.
இவர்களிடம் கல்வி
பயின்ற உள்ளூர் தாபிஈன்கள் மட்டுமே ஆயிரத்தை தாண்டியவர்கள். பல்வேறு பகுதிகளில்
இருந்து வந்து தங்கி பயின்றவர்கள் எண்ணிக்கையின் அளவு வேறு.
மக்கள் அவர்களின்
வீட்டுக்கு வருபவர்களாகவும் செல்பவர்களாகவும் இருந்து கொண்டே இருப்பார்கள். எந்த
அளவுக்கெனில் அவர்கள் வசிக்கும் தெரு எப்போதும் நெருக்கடியாகவே இருந்து
கொண்டிருக்கும்.
இவர்களும்
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களைப் போலவே நான்கு கலீஃபாக்கள் ஆட்சியைக்
கண்டவர்கள்.
அன்றைய
காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் ஏதாவது மிக முக்கியமான முடிவுகளை எடுக்க ஒன்று
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இல்மை நாடுவார்கள். அல்லது அப்துல்லாஹ்
இப்னு உமர் (ரலி) அவர்களின் பேணுதலான நடவடிக்கையை நாடுவார்கள்.
حَدَّثَنَا
أَبُو النُّعْمَانِ ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ أَبِي بِشْرٍ ، عَنْ
سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا
، قَالَ : كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ
أَشْيَاخِ بَدْرٍ فَقَالَ بَعْضُهُمْ لِمَ تُدْخِلُ هَذَا الْفَتَى مَعَنَا
وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ فَقَالَ إِنَّهُ مِمَّنْ قَدْ عَلِمْتُمْ قَالَ
فَدَعَاهُمْ ذَاتَ يَوْمٍ وَدَعَانِيمَعَهُمْ قَالَ وَمَا رُئِيتُهُ دَعَانِي
يَوْمَئِذٍ إِلاَّ لِيُرِيَهُمْ مِنِّي فَقَالَ مَا تَقُولُونَ {إِذَا جَاءَ
نَصْرُ اللهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ} حَتَّى خَتَمَ
السُّورَةَ فَقَالَ بَعْضُهُمْ أُمِرْنَا أَنْ نَحْمَدَ اللَّهَ وَنَسْتَغْفِرَهُ
إِذَا نُصِرْنَا وَفُتِحَ عَلَيْنَا وَقَالَ بَعْضُهُمْ لاَ نَدْرِي ، أَوْ لَمْ
يَقُلْ بَعْضُهُمْ شَيْئًا فَقَالَ لِي يَا ابْنَ عَبَّاسٍ أَكَذَاكَ تَقُولُ
قُلْتُ : لاَ قَالَ فَمَا تَقُولُ قُلْتُ هُوَ أَجَلُ رَسُولِ اللهِ صلى الله عليه
وسلم أَعْلَمَهُ اللَّهُ لَهُ {إِذَا جَاءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ} فَتْحُ
مَكَّةَ فَذَاكَ عَلاَمَةُ أَجَلِكَ {فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ
إِنَّهُ كَانَ تَوَّابًا} قَال عُمَرُ مَا أَعْلَمُ مِنْهَا إِلاَّ مَا تَعْلَمُ.
இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட
புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர்,
“எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக எங்களுடன் அமரச்
செய்கிறீர்கள்?”
என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்” என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம்
அழைத்தார்கள்;
அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என்
(தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக்
கருதுகிறேன்.
(அவர்களெல்லாம் வந்தவுடன்
அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், “இதா ஜாஅ நஸ்ருல்லாஹி….. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீங்கள் பார்க்கும் போது
உங்கள் இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும்,
அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்)” என்னும் (திருக்குர்ஆனின் 110வது “அந்நஸ்ர்’)
அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக் காட்டி, “இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், “நமக்கு உதவியும்
வெற்றியும் அளிக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக்
கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்று (விளக்கம்)
கூறினர். சிலர்,
“எங்களுக்குத் தெரியாது” என்றனர். அல்லது
அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை.
பிறகு உமர் (ரலி)
அவர்கள் என்னிடம்,
“இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித்தான் கூறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். அவர்கள்,
“அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அது, அல்லாஹ்,
தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து
(இறப்பு நெருங்கி) விட்டதை அறிவிப்பதாகும். ஆகவே, “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து’ என்பதில் உள்ள “வெற்றி’
என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றிதான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று)
உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்’ என்பதே இதன் கருத்தாகும்” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இந்த
அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்” என்று சொன்னார்கள். அறி: இப்னு அப்பாஸ் (ரலி), ( நூல்: புகாரி )
இந்த இரண்டு
அப்துல்லாஹ் களும் பின்நாளில் வரலாறாய் வாழ்வதற்கு அடிப்படையாய் அமைந்தது மேம்பட்ட
ஒரு மஹல்லாவில் இருந்து அவர்கள் பெற்ற கல்வியறிவும், வழிகாட்டலும் தான்.
பெண்கள் அடைந்த மாற்றமும்.... முன்னேற்றம்....
மாநபி (ஸல்)
அவர்கள் மதீனா வந்த துவக்க காலத்தில் பெண்கள் விஷயத்தில் தனிக்கவனம்
செலுத்தினார்கள். அவர்களுக்கென்று மார்க்கம் கற்றுக் கொடுக்க வாரத்தில் தனியொரு
நாளையே ஒதுக்கினார்கள். காரணம் பெண்களின் மார்க்கக் கல்வியறிவு நிலை சாதாரணமாக
இருந்தது தான்..
أنَّ
امرأةً سألتِ النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ ، عن غُسْلِها منَ المَحيضِ
فأخبرَها كيفَ تغتسلُ ثمَّ قالَ خُذي فِرصةً من مسكٍ فتطَهَّري بِها قالت وَكَيفَ
أتطَهَّرُ بِها فاستَترَ كذا ثمَّ قالَ سبحانَ اللَّهِ تطَهَّري بِها قالت عائشةُ
رضيَ اللَّهُ عنها فجذبتُ المرأةَ وقلتُ : تتَّبعينَ بِها أثرَ الدَّ
ஒரு பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘மாதவிடாய் நின்ற பின்பு எப்படிக்
குளிக்க வேண்டும்?’
என கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் அவள்
குளிக்கும் முறையை அவளுக்குக் கூறிவிட்டு, ‘கஸ்தூரி
வைக்கப்பட்ட பஞ்சை எடுத்து அதனால் நீ சுத்தம் செய்’ என்றார்கள். அப்போது ‘நான் எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்?’ என அப்பெண்
கேட்டார். ‘அதைக் கொண்டு நீ சுத்தம் செய்’ என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள். மீண்டும் அந்தப் பெண் ‘எப்படி?’ என்று கேட்டபோது ‘ஸுபஹானல்லாஹ்! சுத்தம் செய்து கொள்!’ என்று கூறினார்கள். உடனே
நான் அந்தப் பெண்ணை என் பக்கம் இழுத்து ‘கஸ்தூரி கலந்த பஞ்சைக்
கொண்டு இரத்தம் பட்ட இடத்தில் வைத்துச் சுத்தம் செய்’ என்று அவளிடம் கூறினேன்” என ஆயிஷா(ரலி)
அறிவித்தார். ( நூல்: புகாரி )
ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னால்...
மாநபி {ஸல்}
அவர்களால் மார்க்க ஞானம் கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்த போது அவர்களின் கேள்விகளில்
மாற்றம் ஏற்பட்டது.
عن زينب
الثقفية امرأة عبد الله بن مسعود رضي الله عنهما قالت: قال: رسول الله صلى الله
عليه وسلم: تصدَّقنَ يا مَعْشَرَ النساءِ، ولو من حليكنَّ. قالت: فرجعت إلى عبد
الله بن مسعود فقلت: إنك رجل خفيف ذات اليد، وإن رسول الله صلى الله عليه وسلم قد
أمرنا بالصدقة، فائته فاسأله فإن كان ذلك يجزئ عني وإلا صرفتها إلى غيركم؟ فقال عبد
الله: بل ائته أنت، فانطلقتُ فإذا امرأة من الأنصار بباب رسول الله صلى الله عليه
وسلم مثل حاجتها حاجتي، وكان رسول الله صلى الله عليه وسلم قد ألقيت عليه المهابة،
فخرج علينا بلال رضي الله عنه فقلنا له: ائت رسول الله صلى الله عليه وسلم فأخبره
أن امرأتين بالباب يسألانك، أتجزئ الصدقة عنهما على أزواجهما وعلى أيتام في
حجورهما؟ ولا تخبره من نحن. قالت: فدخل بلال على رسول الله صلى الله عليه وسلم
فسأله؟ فقال له رسول الله صلى الله عليه وسلم: من هما؟ فقال: امرأة من الأنصار،
وزينب، فقال رسول الله صلى الله عليه وسلم: أي الزيانب؟ قال: امرأة عبد الله بن
مسعود. فقال رسول الله صلى الله عليه وسلم: لهما أجران أجر القرابة وأجر الصدقة
அப்துல்லாஹ் இப்னு
மஸ்வூத் (ரலி) அவர்களின் மனைவி ஜைனப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் எங்களிடையே உரை நிகழ்த்திய பெருமானார் {ஸல்}
அவர்கள் “அன்ஸாரிப் பெண்களே! அல்லாஹ்வின்
பாதையில் தான தர்மம் வழங்குங்கள்! உங்களின் ஆபரணங்களாக இருப்பினும் சரியே!” என்று கூறினார்கள்.
உரை முடிந்து வீட்டுக்கு வந்த நான் என் கணவரிடம் மாநபி {ஸல்}
நிகழ்த்திய உரை குறித்து கூறிவிட்டு, “உங்களுக்கு நான் ஸதகாச் செய்யலாமா? என்று கேட்டு வாருங்கள்.
செய்யலாம் என்றால்,
உங்களுக்கே நான் தந்து விடுகின்றேன். செய்யக் கூடாது என்று
மாநபி {ஸல்}
அவர்கள் கூறினால் பிறருக்கு நான் அதை கொடுத்து விடுகின்றேன்” என்றேன்.
இதைக் கேட்ட என்
கணவர் (வெட்கத்தின் காரணமாக) மாநபி {ஸல்} அவர்களிடம் சென்று கேட்க மறுத்து, என்னைப் பார்த்து நீயே
சென்று கேள்!”
என்றார்கள்.
நானும் பெருமானார்
{ஸல்}
அவர்களைச் சந்தித்து விளக்கம் கேட்பதற்காக மாநபியின்
மஸ்ஜிதுக்கு சென்றேன். அங்கு என்னைப் போன்றே விளக்கம் கேட்க அன்ஸாரிப் பெண்களில்
சிலர் வந்திருந்தனர்.
அப்போது நானும்
ஒரு அன்ஸாரிப் பெண்மனியும் பெருமானார் {ஸல்} அவர்களைச் சந்தித்து விளக்கம் கேட்க ஆயத்தமாகி, மேலாடையை போர்த்திக் கொண்டிருக்கும் போது உள்ளே இருந்து பிலால் (ரலி) அவர்கள்
வந்தார்கள்.
பிலால் (ரலி)
அவர்களிடம்,
நானும், அன்ஸாரிப் பெண்மனியும்
வந்த விவரத்தைக் கூறி,
நாங்கள் யார் என்கிற விவரத்தை மாநபி {ஸல்}
அவர்களிடம் தெரிவிக்காமல் விளக்கம் கேட்டு வந்து சொல்லுமாறு
கூறினோம்.
பிலால் (ரலி)
அவர்கள் மாநபி {ஸல்}
அவர்களிடம் “அன்ஸாரிப் பெண் ஒருவரும், ஜைனப் (ரலி) அவர்களும் உங்களிடம் இன்னின்னவாறு விளக்கம் கேட்டு என்னை
அனுப்பினார்கள்”
என்றார்கள்.
அதற்கு, பெருமானார் {ஸல்}
அவர்கள் எந்த ஜைனப்? என்று கேட்க, பிலால் (ரலி) அவர்கள் என்னைப் பற்றிக் கூறினார்கள். அப்போது, மாநபி {ஸல்}
அவர்கள் பிலாலே! அவ்விருவரிடமும் சென்று “தாராளமாக கணவருக்கு கொடுக்கலாம். மேலும், அவர்களுக்கு ஸதகாவின்
கூலி, உறவை ஆதரித்த கூலி என இரண்டு வகையான கூலிகள் கிடைக்கும் என்று சொல்லி
விடுங்கள்!”
என கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
மார்க்க வழிகாட்டல் தொடர்ச்சியாக கிடைத்த போது.....
قالت
عائشة رضى اللّه عنها رحم اللّه النساء المهاجرات الأول لمّا انزل اللّه تعالى
وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلى جُيُوبِهِنَّ شققن مروطهن فاختمرن به
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ் முந்தைய முஹாஜிர்களான பெண்களுக்கு அருள் புரிவானாக! “பெண்கள் முந்தானைகளால் தங்களின் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்!” என்ற இறைக் கட்டளை அருளப்பட்ட போது அவர்கள் தங்களின் மெல்லிய ஆடைகளைக் கை விட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளை அமைத்துக் கொண்டனர்.” ( நூல்: தஃப்ஸீர் அல் மள்ஹரீ )
மார்க்கத்தின் பிரகாரமே வாழ வேண்டும் என்ற ஆசை.....
அடுத்தடுத்த கட்டங்களில் தொடர்ந்து மாநபி ஸல் அவர்களின் சமூகம் வந்து தங்களது பிரச்சினைகளைக் கூறி அதற்கான தீர்வுகளை அல்லாஹ்விடம் இருந்து இறைவசனங்களாக பெற்றுச் செல்லும் நிலைக்கு நபிகளார் காலத்து பெண் சமூகம் மாறியது.
சொத்துப் பிரச்சினை, குலா, ளிஹார் - தவறான விவாக விலக்கு,
தவறான திருமணம் என்று அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்கள் சட்டங்களாக, வழிகாட்டுதல்களாக பெற்ற பட்டியல் நீண்டது.
எப்போது ஒரு மஹல்லாவில் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் இளைஞர்கள் யுவதிகள் என அனைவரும் மார்க்கக் கல்வியை, மதரஸாக் கல்வியை, குர்ஆனிய கல்வியை பெறுகின்றார்களோ அந்த மஹல்லா மேம்பட்ட மஹல்லாவின் முதல் இலக்கில் வெற்றி வாகை சூடிடும் என்பதைத் தான் மேற்கூறிய அம்சங்கள் நமக்கு
உண்ர்த்துகின்றன.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் அனைவருக்கும் மேம்பட்ட மஹல்லாவை அமைப்பதிலே ஒருங்கிணைந்த சிந்தனையை
வழங்கியருள்வானாக!.
மஹல்லா மேம்பாடு இன்ஷா அல்லாஹ்... தொடரும்...
கால சூழ்நிலைக்கேற்ப அற்புதமான குறிப்பு மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்
ReplyDelete