இன்றைய உலகுக்கு தேவை...
முஹம்மது நபி ﷺ அவர்களே! (பாகம் - 2)
சமீபத்தில் நேபாள் அரசு சமூக வலைத்தளங்கள் ஆன வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், facebook, டிக் டாக், யூடியூப், எக்ஸ் போன்ற 26 க்கும் மேற்பட்ட மெஸேஜ்ஜிங் Apps களை தடை செய்தது
தெற்காசியப் புவிசார் அரசியல் நிபுணரும், தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியருமான தனஞ்சய் திரிபாதியின் கூற்றுப்படி, நேபாளத்தில் 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம்,
நேபாளத்தின் மொத்த மக்கள் தொகையான 3 கோடி பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
டேட்டா ரிப்போட்டலின் சமீபத்திய தரவுகளின்படி 2025 ஜனவரியை எடுத்துக்கொண்டால் நேபாளத்தில் ஒரு கோடியே 43 லட்சம் சமூக ஊடக பயனர்கள் உள்ளனர்.
இது அந்நாட்டு மக்கள் தொகையில் 48.1 சதவீதமாகும். தெற்கு ஆசியாவில் மக்கள் தொகை அடிப்படையில் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்தும் பயனர்களை கொண்ட நாடாக நேபாளம் உள்ளது.
அதே நேரம், போலி செய்திகள், வெறுப்பு பேச்சுகள், இணைய மோசடி போன்றவற்றை கட்டுப்படுத்த இந்த தடை அவசியம் என நேபாள அரசு கூறுகிறது.
மேலும், "நாளுக்கு நாள் ஆபாசத்தை தூண்டும் செக்ஸுவல் வீடியோக்களை அப்லோடு செய்து அதன் மூலமாக வருமானம் ஈட்டுவது அதிகரித்து கொண்டே வருகிறது
மனைவி என்ற பெயரிலும் கூட வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதன் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு சமூக வலைதள பயனர்கள் முயற்சி செய்து வருகின்றனர்" என்றும் குற்றம் சுமத்தியது.
கடும் கட்டுப்பாடுகளை கொண்ட நேபாள் நாடு இதை என்ன செய்வது, எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி கடைசியில் தடை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டு தடை செய்தது. தற்போது தமது அரசை இழந்துள்ளது.
இந்நிலையில், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை அங்குள்ள இளம் தலைமுறையினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனினும், இதை ஏற்க மறுத்து Gen Z என தங்களைக் கூறிக்கொள்ளும் இளம் தலைமுறையினர் திங்களன்று பெருந்திரளாக தலைநகர் காத்மாண்டுவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டமாக இது தொடங்கி, பின்னர் ஊழலுக்கு எதிரான, அரசுக்கு எதிரான போராட்டமாக இது மாறி, பெரும் கலவரமாக வெடித்து 25 பேர் கொல்லப்பட்டு 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தற்போது நேபாள் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள போதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்
நேபாள் இருக்கிறது.
என்ன செய்திருக்கலாம்?
தடை செய்வதற்கு பதிலாக சில கட்டுப்பாடுகளை விதித்து சிறிது சிறிதாக அமல்படுத்தி இருக்கலாம்
உதாரணத்திற்கு இஷ்டப்பட்ட வீடியோக்களை அப்லோடு செய்யும் பொழுது அதை ஆட்டோமேஷன் மூலமாக கண்காணித்து ரிமூவ் செய்யலாம்.
இது போன்று ஏகப்பட்ட ஆப்ஷன்களை சமூக வலைத் தள நிறுவனங்கள் வைத்துள்ளன அதை விடுத்து ஒட்டுமொத்தமாக தடை செய்யப் போய் அரசாங்கத்தையே இழந்து நிற்கின்றது.
GEN ZEE தலைமுறையை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்களிடையே ஏற்பட்ட எமோஷனல் ஒரு அரசாங்கத்தையே காலி செய்துவிட்டது
மன்னன் ஓடினால் மக்கள் பிச்சை எடுப்பார்கள் என்பதுதான் பழமொழி அது பல நாடுகளில் உண்மையாகியுள்ளது அந்த நாடுகளில் நேபாளமும் சேர்ந்து விடும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
இது போன்ற புரட்சியால் அரசை இழந்த லிபியா, சிரியா, சூடான், இலங்கை, பங்களாதேஷ், போன்ற நாடுகளில் இதுவரை சரிந்த நிர்வாகத்தை தூக்கி நிறுத்த முடியவில்லை
ஏதோ மக்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்களே தவிர அடுத்த தலைமுறைக்கான நோய் காப்பீடு, எதிர்காலம், கல்வி & மருத்துவம் குறித்து எந்தவித திட்டமும் தெளிவான பார்வையும் கிடையாது ஏனென்றால் அங்கு அரசாங்கமே கிடையாது
கவனமாக கையாள வேண்டிய ஒரு பிரச்சினையை, தலைமுறை தாண்டி கட்டுப்படுத்த வேண்டிய ஒரு காரியத்தை ஏனோ தானோ என்று ஏதோ ஒரு அரசியல் கோமாளியின் ஆலோசனையை கேட்டு ஒரு சட்டத்தை எப்படி அமல்படுத்துவது என்று தெரியாமல் பகிரங்கமாகவே அறிவித்து ஆட்சி அதிகாரத்தை இழந்து இருக்கிறது நேபாள் அரசாங்கம்.
பொதுவாக நாட்டு மக்களின் நலன் சார்ந்த விஷயங்களை அமல்படுத்துவதில் முறையான கவனமும் அணுகுமுறையும் அவசியம் என்பதை மக்களை ஆளும் அரசுகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதை இன்றைய நேபாளத்தின் வீழ்ச்சி சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
240 ஆண்டுகளாக மன்னராட்சி நடைபெற்று வந்த நேபாளத்தில், கடந்த 2008-ம் ஆண்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது.
கடந்த 2024 ஜூலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி உடைந்து ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து சிபிஎன் (யுஎம்எல்), நேபாள காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. சிபிஎன் (யுஎம்எல்) தலைவர் சர்மா ஒலி பிரதமராக பதவி வகித்தார். இந்த நிலையில் தற்போது அந்த அரசும் இல்லாத சூழலில் மீண்டும் மன்னராட்சியை நோக்கி நேபாளம் தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ( நன்றி: இந்து தமிழ் திசை, பிபிசி 09/09/2025 )
ஆபாசமும், செக்ஸுவலும்….
நேபாள அரசு சமூக வலைத் தள பயன்பாட்டை தடை செய்ய பிரதானமாக சொன்ன காரணம் "ஆபாசமும், செக்ஸுவலும்" தான்.
"எந்த சமூகத்தில் ஆபாசமும் செக்ஸுவலும் மிகைக்குமோ அங்கே அந்த சமூகம் சமூக ஒழுங்கில் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்திக்கும்" இது தான் ஆபாசம் மற்றும் செக்ஸுவலுக்கு இருக்கும் வலிமை.
இது போன்ற நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தும் பிரச்சினைகளை எளிதாக அணுக எது மாதிரியான முன்னெடுப்பு தேவை? யாருடைய முன்மாதிரி நடவடிக்கைகள் தேவை என்பதை நாம் வரலாறு முழுவதும் தேடிப் பார்த்தோமேயானால் அங்கு கிடைக்கும் ஒற்றைப் பதில் "இன்றைய நவீன உலகின் பிரச்சினைகளுக்கு தீர்வு மாநபி (ஸல்) அவர்களின் அணுகுமுறையிலும், நடவடிக்கையிலும் காணக் கிடைக்கின்றன" என்பது தான்.
இந்த நேரத்தில் பெர்னாட்ஷா நபி (ஸல்) அவர்களைப் பற்றி இந்த நவீன உலகிற்கு சொன்ன செய்தி கவனிக்கத்தக்கதாகும்:-
“I believe
that if a man like him were to assume the dictatorship of the modern world he
would succeed in solving its problems in a way that would bring it the much
needed peace and happiness
The Genuine Islam"
அவரை போன்ற ஒருவர் இன்றைய நவீன உலகின் சர்வாதிகாரத் தலைமையை அடைவார் எனில், இந்த உலகிற்குத் தேவையான அமைதி மகிழ்ச்சி ஆகியவற்றை கொண்டு வரும் வகையில் இன்றைய பிரச்சனைகளுக்கு அவர் தீர்வு காண்பதில் வெற்றி அடைவார்.
இந்த உலகில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள சட்டங்களுக்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் நடைமுறைப் படுத்திய சட்டங்களுக்கும் இடையேயான வித்தியாசம் என்பது மலைக்கும் மடுவுக்கும் இடையேயான வித்தியாசத்தைக் போன்றதாகும்.
ஆகவே, தான் மத்திய கால அறிஞர்கள் பலரும் 20 ம் நூற்றாண்டின் அறிஞர்கள் பலரும் நவீன உலகின் பிரச்சினைகளுக்கான தீர்வாக மாநபி (ஸல்) அவர்களை முன்மொழிகின்றார்கள்.
காரணம், மாநபி (ஸல்) அவர்கள் ஆன்மீகம் கலவாத அறிவியலையும், ஆன்மீகம் இழையோடாத அரசியலையும் புறந்தள்ளினார்கள்.
மனித வாழ்வின் தொடர்பான எந்தவொரு அம்சங்களையும் ஆன்மீகத்தோடே இணைத்தார்கள் மாநபி (ஸல்) அவர்கள். ஆதலால் அப்போதும் வெற்றி பெற்றார்கள். இப்போதும் வெற்றி பெறுவார்கள்.
அவர்களின் சித்தாந்தத்தை உள்வாங்கும் உலகின் எந்த நாடும் இது மாதிரியான பிரச்சினைகளை மிக எளிதாக சமாளித்து மகத்தான வெற்றியை ஈட்டும்.
ஆபாசமான காரியங்களை விட்டும் மக்களை மாற்ற மாநபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட வழி முறைகள்....
அறியாமைக் கால நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஆபாச செயல்களை செய்வதை விட்டும் அவர்களை தடுப்பதற்கு மாநபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகள் மூன்று விதமாக அமைந்திருந்ததை மாநபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகின்றது.
ஒன்று, தவறு செய்வதைத் தூண்டக் கூடிய காரணிகள் ஒழிக்கப்படுவது.
இரண்டு, அந்தத் தவறு எத்தகைய தண்டனைக்கு உட்பட்டது என்பதை உணர்த்துவது.
இதில், இரண்டு அம்சங்களை நபி ஸல் அவர்கள் கையாண்டார்கள்.
ஒன்று, ஆபாச நடவடிக்கைகள் கொண்ட ஆண்/பெண் உடனான உறவை வரையறுத்தது.
இரண்டு, எவ்வித இரக்கத்துக்கும் இடம் தராத வகையில் தண்டனை அமைந்திருப்பது.
மூன்று, கடுமையான அந்த தண்டனையை உடனடியாக நிறைவேற்றுவது.
ஆபாசங்களின் வரையறை...
மனித சமூகத்தை ஒழுக்க கேட்டின் பக்கம் இழுத்துச் செல்லும் காரணிகளை அடையாளப் படுத்தும் முன்பாக மாநபி (ஸல்) அவர்கள் இந்த சமூகத்திற்கு அறிவுறுத்தியது எது எதன் மூலமாகவெல்லாம் மனிதன் ஒழுக்க கேட்டில் வீழ்வான் என்று தான்.
حَدَّثَنَا
إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا أَبُو هِشَامٍ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا
وُهَيْبٌ، حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ كُتِبَ عَلَى ابْنِ آدَمَ
نَصِيبُهُ مِنَ الزِّنَى مُدْرِكٌ ذَلِكَ لاَ مَحَالَةَ فَالْعَيْنَانِ زِنَاهُمَا
النَّظَرُ وَالأُذُنَانِ زِنَاهُمَا الاِسْتِمَاعُ وَاللِّسَانُ زِنَاهُ
الْكَلاَمُ وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا
وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ
ﺻﺤﻴﺢ
ﻣﺴﻠﻢ 5165
“விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கு (விதியில்) எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடையக் கூடியவனாகவே உள்ளான். கண்கள் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். காதுகள் செய்யும் விபச்சாரம் (ஆபாசப் பேச்சுகளைச்) செவியுறுவதாகும். நாவு செய்யும் விபச்சாரம் (ஆபாசப்) பேச்சாகும். கை செய்யும் விபசாரம் (அந்நியப் பெண்ணைப்) பற்றுவதாகும். கால் செய்யும் விபச்சாரம் (தவறான உறவைத் தேடி) அடியெடுத்து வைப்பதாகும். மனம் இச்சை கொள்கிறது; ஏங்குகிறது. மர்ம உறுப்பு அதை உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ( நூல்: முஸ்லிம் 5165 )
அதன் பின்னரும் ஒருவன் ஒழுக்கக் கேடான அந்த காரியத்தை செய்ய துணிவானேயானால் அவனிடம் இறைநம்பிக்கையே இருக்காது என்று எச்சரிக்கை செய்தார்கள்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلاَ
يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ حِينَ يَشْرَبُهَا
وَهُوَ مُؤْمِنٌ، وَالتَّوْبَةُ مَعْرُوضَةٌ بَعْدُ»
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ விபச்சாரம் புரிகிறவன் விபச்சாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி விபச்சாரம் புரிவதில்லை. (திருடன்) திருடும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடுவதில்லை. (மது அருந்துபவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்துவதில்லை. மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோருதல் பின்னர் தான் ஏற்படுகிறது. அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ( நூல்: புகாரி )
ஒரு வேளை அதன் ருசியறிந்து அதன் போக்கில் வாழ்ந்து அதை நியாயப் படுத்தி அதன் மூலம் ஒருவன் பொருளீட்டினான் என்றால் அது ஆகாத பொருளாதாரம், அது தடை செய்யப்பட்ட பொருளாதாரம் என்றும் கண்டித்தார்கள்.
حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي
بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ رَضِيَ
اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
نَهَى
عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ
நாய் விற்ற கிரயத்தையும், விபச்சாரத்தின் கூலியையும், சோதிடன் பெருகின்ற பொருளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர் : உக்பா இப்னு அம்ரு (ரலி), ( நூல்: புகாரி )
1) ஆபாசமான செயலை செய்யத் தூண்டக் கூடிய காரணிகளை ஒழித்தது.
எல்லா தீமைகளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது பார்வைப் புலன் தான். பார்வைப்புலனைப் பாதுகாத்தாலே ஒரு மனிதன் ஒழுக்கக் கேட்டில் வீழ்வதைத் தடுக்க முடியும். ஆகவே, முதலில் மாநபி (ஸல்) அவர்கள் பார்வைப் புலனை பாதுகாக்க வலியுறுத்தினார்கள்.
எனவே, அல்லாஹ்வின் கனத்த வார்த்தைகளோடு தமது கண்டிப்பான அறிவுரைகளையும் உம்மத்துக்கு வழங்கினார்கள்.
(நபியே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! ( அல் குர்ஆன்: 24: 30, 31 )
செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை. ( அல்குர்ஆன்: 17: 36 )
கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான். (அல் குர்ஆன் 40:19)
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (அல் குர்ஆன் 6:103)
عن جرير
بن عبد الله قال: سألت رسول الله صلى الله عليه وسلم: عن نظر الفجأة؟ فأمرني أن
أصرف بصري، وقال لعلي كما عند أصحاب السنن: لا تتبع النظرة النظرة, فإن لك الأولى
وليست لك الثانية.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரெனப் படும் பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல்: திர்மிதி 2700
عن عبد
الله بن عباس قال: كان الفضل رديف النبي صلى الله عليه وسلم، فجاءته امرأة من
خثعم، فجعل الفضل ينظر إليها وتنظر إليه، فجعل النبي صلى الله عليه وسلم يصرف وجه
الفضل إلى الشق الآخر ـ
(இளைஞரான) ஃபழ்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது, ''கஸ்அம்'' கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபியவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1513
قال:
ولوى عنق الفضل فقال العباس: يا رسول الله؛ لويت عنق ابن عمك، قال: رأيت شابا
وشابة، فلم آمن عليهما الشيطان ـ
(இதைக் கண்ட) அப்பாஸ் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! எதற்காக நீங்கள் உங்களுடைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தை திருப்பினீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ''ஒரு இளைஞனையும், இளம் பெண்ணையும் நான் பார்த்தேன். அவ்விருவருக்கு மத்தியில் ஷைத்தான் நுழைவதை நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள் என்று தப்ரியின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. ( நூல்: ஃபத்ஹுல் பாரீ)
2) ஆடைக்கட்டுப்பாடு...
இரண்டாவது அணியும் ஆடைகளுடன் தொடர்புடையது ஆகவே, அதனையும் மாநபி ஸல் அவர்கள் நெறிப்படுத்தினார்கள்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். ( அல்குர்ஆன்: 24: 31 )
صِنْفانِ
مِن أهْلِ النَّارِ لَمْ أرَهُما، قَوْمٌ معهُمْ سِياطٌ كَأَذْنابِ البَقَرِ
يَضْرِبُونَ بها النَّاسَ، ونِساءٌ كاسِياتٌ عارِياتٌ مُمِيلاتٌ مائِلاتٌ،
رُؤُوسُهُنَّ كَأَسْنِمَةِ البُخْتِ المائِلَةِ، لا يَدْخُلْنَ الجَنَّةَ، ولا
يَجِدْنَ رِيحَها، وإنَّ رِيحَها لَيُوجَدُ مِن مَسِيرَةِ كَذا وكَذا. الراوي :
أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை. (முதலாம் பிரிவினர் யாரெனில்,) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு மக்களை அடி(த்து இம்சி)க்கும் கூட்டத்தார்.
(இரண்டாம் பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்தபடி (தளுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தம் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களின் தலை(முடி) சரிந்து நடக்கக்கூடிய கழுத்து நீண்ட ஒட்டகத்தைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு தொலைவிலிருந்து வீசிக்கொண்டிருக்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ( நூல்: முஸ்லிம் )
عن ابنِ
عبَّاسٍ رضي اللَّه عَنْهُما قَالَ: "لَعَنَ رسُولُ اللَّه ﷺ المُتَشبِّهين
مِن الرِّجالِ بِالنساءِ، والمُتَشبِّهَات مِن النِّسَاءِ بِالرِّجالِ" رواه
البخاري.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள். ( நூல்: புகாரி 5885, 5886 ).
عن أبي
هريرة رضي الله عنه قال:
لعن
رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لِبْسَةَ المرأة، والمرأة تلبس لِبْسَةَ
الرجل.
[صحيح] - [رواه النسائي في الكبرى وابن ماجه بمعناه وأحمد] -
[السنن الكبرى للنسائي -
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: பெண்களின் ஆடைகளை அணிந்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களின் ஆடைகளை அணிந்து கொள்ளும் பெண்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள். ( நூல்: நஸாஈ )
3) தனிமையில் இருத்தல், குழைந்து பேசுதல், சுதந்திரமாகப் பழகுதல்....
அடுத்து ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்து பழகுதல், பேசுதல், உறவாடுதல் இவை அடுத்த கட்ட நகர்வுக்கு அழைத்துச் செல்வதால் மாநபி ஸல் அவர்கள் அதையும் ஒழுங்கு படுத்தினார்கள்.
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، ح وحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ، حَدَّثَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرٍ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، حَدَّثَهُ أَنَّ نَفَرًا مِنْ بَنِي هَاشِمٍ دَخَلُوا عَلَى أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ، فَدَخَلَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ، وَهِيَ تَحْتَهُ يَوْمَئِذٍ، فَرَآهُمْ، فَكَرِهَ ذَلِكَ، فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: لَمْ أَرَ إِلَّا خَيْرًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ قَدْ بَرَّأَهَا مِنْ ذَلِكَ» ثُمَّ قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ: «لَا يَدْخُلَنَّ رَجُلٌ، بَعْدَ يَوْمِي هَذَا، عَلَى مُغِيبَةٍ، إِلَّا وَمَعَهُ رَجُلٌ أَوِ اثْنَانِ»
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த (ஆண்கள்) சிலர் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) (அவர்கள் தனிமையில் இருந்தபோது) அவர்களிடம் வந்தனர். அப்போது அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் வீட்டினுள் நுழைந்தார்கள். அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் வெறுப்படைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்துவிட்டு, “(ஆயினும்) நான் (என் துணைவி விஷயத்தில்) நல்லதையே கருதுகிறேன்” என்று அபூபக்ர் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் நிரபராதியாக்கிவிட்டான்” என்று கூறி விட்டு, பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, “இன்றைய தினத்திற்குப் பின் எந்த ஆணும் தனிமையில் இருக்கும் எந்தப் பெண்ணிடமும் செல்ல வேண்டாம்; அவனுடன் மற்ற ஓர் ஆணோ, இரு ஆண்களோ இருந்தால் தவிர” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ( நூல்: முஸ்லிம் )
ﻋﻦ اﺑﻦ
ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﺃﻧﻪ: ﺳﻤﻊ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻳﻘﻮﻝ: «ﻻ ﻳﺨﻠﻮﻥ ﺭﺟﻞ
ﺑﺎﻣﺮﺃﺓ، ﻭﻻ ﺗﺴﺎﻓﺮﻥ اﻣﺮﺃﺓ ﺇﻻ ﻭﻣﻌﻬﺎ ﻣﺤﺮﻡ»، ﻓﻘﺎﻡ ﺭﺟﻞ ﻓﻘﺎﻝ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، اﻛﺘﺘﺒﺖ ﻓﻲ
ﻏﺰﻭﺓ ﻛﺬا ﻭﻛﺬا، ﻭﺧﺮﺟﺖ اﻣﺮﺃﺗﻲ ﺣﺎﺟﺔ، ﻗﺎﻝ: «اﺫﻫﺐ ﻓﺤﺞ ﻣﻊ اﻣﺮﺃﺗﻚ»
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ”ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, “இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், “நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
، عن النبي ﷺ أنه قال: لا يخلُوَنَّ رجلٌ
بامرأةٍ، فإنَّ الشيطان ثالثهما،
وروى
أحمد في "المسند" بإسنادٍ صحيحٍ عن عمر
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.” ( நூல்: அஹ்மத் )
وَعَن
ابنِ عبَّاسٍ رضي اللَّه عنْهُما: أنَّ رسُول اللَّه ﷺ قَال: لا يَخْلُوَنَّ
أحدُكُمْ بِامْرأةٍ إلا مَعَ ذِي مَحْرَمٍ متفقٌ عَلَيْهِ.
“உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.” ( நூல்: புகாரி, முஸ்லிம் )
وَعَنْ
عُقْبَةَ بْن عَامِرٍرض عَنْهُ: أنَّ رَسُولَ اللَّه ﷺ قَال: إيَّاكُمْ
وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ،
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை (ஆண்களை) நான் எச்சரிக்கிறேன' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : உக்பது பின் ஆமிர் (ரலி) நூல்: புகாரி (5232)
"நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். ( அல்குர்ஆன்: 33: 32 )
2) அந்தத் தவறு எத்தகைய தண்டனைக்கு உட்பட்டது என்பதை உணர்த்துவது.
عن
عُبَادَةَ بْنَ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
كُنَّا
عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” أَتُبَايِعُونِي
عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلاَ تَزْنُوا، وَلاَ تَسْرِقُوا،
وَقَرَأَ آيَةَ النِّسَاءِ – وَأَكْثَرُ لَفْظِ سُفْيَانَ: قَرَأَ الآيَةَ –
فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ
شَيْئًا فَعُوقِبَ فَهُوَ كَفَّارَةٌ لَهُ، وَمَنْ أَصَابَ مِنْهَا شَيْئًا مِنْ
ذَلِكَ فَسَتَرَهُ اللَّهُ، فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ
شَاءَ غَفَرَ لَهُ ” تَابَعَهُ عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ فِي الآيَةِ
நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள், ”அல்லாஹ்விற்கு எதையும் இணை கற்பிக்கமாட்டீர்கள்; விபசாரம் புரியமாட்டீர்கள்; திருடமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா?” என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (60:12➚ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், ”உங்களில் எவர் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
மேற்கூறப்பட்ட (விபசாரம் முதலான)வற்றில் எதையாவது ஒருவர் செய்து அதற்காக (இவ்வுலகில் இஸ்லாமியச் சட்டப்படி) அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையவாது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படு கின்றார். அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : உபாதா பின் ஸாமித் (ரலி) ( நூல்: புகாரி )
விபச்சாரம் செய்யக்கூடாது என்று நபியவர்கள் பைஅத் வழங்கினார்கள்
يٰۤاَيُّهَا
النَّبِىُّ اِذَا جَآءَكَ الْمُؤْمِنٰتُ يُبَايِعْنَكَ عَلٰٓى اَنْ لَّا
يُشْرِكْنَ بِاللّٰهِ شَيْــٴًــا وَّلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِيْنَ وَلَا
يَقْتُلْنَ اَوْلَادَهُنَّ وَلَا يَاْتِيْنَ بِبُهْتَانٍ يَّفْتَرِيْنَهٗ بَيْنَ
اَيْدِيْهِنَّ وَاَرْجُلِهِنَّ وَلَا يَعْصِيْنَكَ فِىْ مَعْرُوْفٍ
فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللّٰهَؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம்” என்று உம்மிடம் உறுதிமொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதிமொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். ( அல்குர்ஆன்: 60: 12 )
وَالَّذِيْنَ
لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ
الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ وَلَا يَزْنُوْنَ ۚ وَمَنْ
يَّفْعَلْ ذٰ لِكَ يَلْقَ اَثَامًا
يُضٰعَفْ
لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا ۖ
اِلَّا
مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ
سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
وَمَنْ
تَابَ وَعَمِلَ صَالِحًـا فَاِنَّهٗ يَتُوْبُ اِلَى اللّٰهِ مَتَابًا
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான். கியாமத் நாளில் வேதனை அவனுக்குப் பன்மடங்காக்கப்படும். அதில் இழிவுபடுத்தப்பட்டவனாக நிரந்தரமாகத் தங்குவான். திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர. அவர்களது தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார்.
(
அல்குர்ஆன்:
25: 68-71 )
திருமணமாகாதவர்கள்....
عَنْ
زَيْدِ بْنِ خَالِدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ أَمَرَ فِيمَنْ زَنَى، وَلَمْ يُحْصَنْ بِجَلْدِ
مِائَةٍ، وَتَغْرِيبِ عَامٍ»
திருமணமாகாத நிலையில் விபசாரம் செய்தவன் விஷயத்தில், அவனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கவேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித்(ரலி) ( நூல்: புகாரி: 2649 )
اَلزَّانِيَةُ
وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ
وَّلَا
تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ
بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۚ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ
الْمُؤْمِنِيْنَ
விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். ( அல்குர்ஆன்: 24:02 )
திருமணமானவர்கள்....
عَنْ
أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ الجُهَنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا،
قَالاَ
جَاءَ أَعْرَابِيٌّ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اقْضِ بَيْنَنَا بِكِتَابِ
اللَّهِ، فَقَامَ خَصْمُهُ فَقَالَ: صَدَقَ، اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ،
فَقَالَ الأَعْرَابِيُّ: إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا، فَزَنَى
بِامْرَأَتِهِ، فَقَالُوا لِي: عَلَى ابْنِكَ الرَّجْمُ، فَفَدَيْتُ ابْنِي مِنْهُ
بِمِائَةٍ مِنَ الغَنَمِ وَوَلِيدَةٍ، ثُمَّ سَأَلْتُ أَهْلَ العِلْمِ، فَقَالُوا:
إِنَّمَا عَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ، وَتَغْرِيبُ عَامٍ، فَقَالَ النَّبِيُّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ،
أَمَّا الوَلِيدَةُ وَالغَنَمُ فَرَدٌّ عَلَيْكَ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ،
وَتَغْرِيبُ عَامٍ، وَأَمَّا أَنْتَ يَا أُنَيْسُ لِرَجُلٍ فَاغْدُ عَلَى
امْرَأَةِ هَذَا، فَارْجُمْهَا»، فَغَدَا عَلَيْهَا أُنَيْسٌ فَرَجَمَهَا
அபூ ஹுரைரா(ரலி) அவர்களும், ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்களும் கூறினார்கள்.(ஒருமுறை) கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்’ என்று கேட்டார். அவரின் எதிரி எழுந்து நின்று, ‘உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்’ என்று கூறினார்.
அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக்காட்டி), ‘என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரின் மனைவியுடன் விபச்சாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம், ‘உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்’ என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும், ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன்.
அவர்கள், ‘உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்புக் கூறினார்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்படவேண்டும்’ என்று கூறிவிட்டு
(அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, ‘உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக’ என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார். ( நூல்: புகாரி: 2696 )
இதில், இரண்டு அம்சங்களை நபி ஸல் அவர்கள் கையாண்டார்கள்.
ஒன்று, ஆபாச நடவடிக்கைகள் கொண்ட ஆண்/பெண் உடனான உறவை வரையறுத்தது.
اَلزَّانِىْ
لَا يَنْكِحُ اِلَّا زَانِيَةً اَوْ مُشْرِكَةً وَّ الزَّانِيَةُ لَا يَنْكِحُهَاۤ
اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ ۚ وَحُرِّمَ ذٰ لِكَ عَلَى الْمُؤْمِنِيْنَ
விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது. ( அல்குர்ஆன்: 24: 03 )
இரண்டு, எவ்வித இரக்கத்துக்கும் இடம் தராத வகையில் தண்டனை அமைந்திருப்பது.
عَنْ
جَابِرٍ:- أَنَّ رَجُلًا مِنْ أَسْلَمَ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَهُوَ فِي المَسْجِدِ، فَقَالَ: إِنَّهُ قَدْ زَنَى، فَأَعْرَضَ
عَنْهُ، فَتَنَحَّى لِشِقِّهِ الَّذِي أَعْرَضَ، فَشَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ
شَهَادَاتٍ، فَدَعَاهُ فَقَالَ: «هَلْ بِكَ جُنُونٌ؟ هَلْ أَحْصَنْتَ» قَالَ:
نَعَمْ، فَأَمَرَ بِهِ أَنْ يُرْجَمَ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ
الحِجَارَةُ جَمَزَ حَتَّى أُدْرِكَ بِالحَرَّةِ فَقُتِلَ
ஜாபிர்(ரலி) கூறியதாவது ; நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது, ‘அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் வந்து, ‘நான் விபசாரம் செய்துவிட்டேன்’ என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரைவிட்டு முகத்தைத் திருப்பினார்கள். உடனே அவர் நபி(ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) நான்கு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து, ‘உனக்கு என்ன பைத்தியமா?’ என்றும், ‘உனக்குத் திருமணம் ஆம்விட்டதா?’ என்றும் கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றார்.
எனவே, அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.) அவரின் மீது கற்கள் விழுந்தபோது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். இறுதியில் (மதீனாவின் புறநகர்ப் பகுதியில்) பாதைகள் நிறைந்த (அல்ஹர்ரா எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டார். ( நூல்: புகாரி )
போலித்தனத்தை தோலுரித்த பெருமானார் (ஸல்)...
சமூக பண்பாட்டு விழுமியங்களை தகர்த்துக் கொண்டிருந்த, போலித்தனமான உறவுமுறைகளுக்கு தடை விதித்தார்கள்.
قَالَ
يَحْيَى بْنُ سُلَيْمَانَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، ح وَحَدَّثَنَا
أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ
شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ
أَنَّ
النِّكَاحَ فِي الجَاهِلِيَّةِ كَانَ عَلَى أَرْبَعَةِ أَنْحَاءٍ: فَنِكَاحٌ
مِنْهَا نِكَاحُ النَّاسِ اليَوْمَ: يَخْطُبُ الرَّجُلُ إِلَى الرَّجُلِ
وَلِيَّتَهُ أَوِ ابْنَتَهُ، فَيُصْدِقُهَا ثُمَّ يَنْكِحُهَا، وَنِكَاحٌ آخَرُ:
كَانَ الرَّجُلُ يَقُولُ لِامْرَأَتِهِ إِذَا طَهُرَتْ مِنْ طَمْثِهَا: أَرْسِلِي
إِلَى فُلاَنٍ فَاسْتَبْضِعِي مِنْهُ، وَيَعْتَزِلُهَا زَوْجُهَا وَلاَ يَمَسُّهَا
أَبَدًا، حَتَّى يَتَبَيَّنَ حَمْلُهَا مِنْ ذَلِكَ الرَّجُلِ الَّذِي
تَسْتَبْضِعُ مِنْهُ، فَإِذَا تَبَيَّنَ حَمْلُهَا أَصَابَهَا زَوْجُهَا إِذَا
أَحَبَّ، وَإِنَّمَا يَفْعَلُ ذَلِكَ رَغْبَةً فِي نَجَابَةِ الوَلَدِ، فَكَانَ
هَذَا النِّكَاحُ نِكَاحَ الِاسْتِبْضَاعِ. وَنِكَاحٌ آخَرُ: يَجْتَمِعُ الرَّهْطُ
مَا دُونَ العَشَرَةِ، فَيَدْخُلُونَ عَلَى المَرْأَةِ، كُلُّهُمْ يُصِيبُهَا،
فَإِذَا حَمَلَتْ وَوَضَعَتْ، وَمَرَّ عَلَيْهَا لَيَالٍ بَعْدَ أَنْ تَضَعَ
حَمْلَهَا، أَرْسَلَتْ إِلَيْهِمْ، فَلَمْ يَسْتَطِعْ رَجُلٌ مِنْهُمْ أَنْ
يَمْتَنِعَ، حَتَّى يَجْتَمِعُوا عِنْدَهَا، تَقُولُ لَهُمْ: قَدْ عَرَفْتُمُ
الَّذِي كَانَ مِنْ أَمْرِكُمْ وَقَدْ وَلَدْتُ، فَهُوَ ابْنُكَ يَا فُلاَنُ،
تُسَمِّي مَنْ أَحَبَّتْ بِاسْمِهِ فَيَلْحَقُ بِهِ وَلَدُهَا، لاَ يَسْتَطِيعُ
أَنْ يَمْتَنِعَ بِهِ الرَّجُلُ، وَنِكَاحُ الرَّابِعِ: يَجْتَمِعُ النَّاسُ
الكَثِيرُ، فَيَدْخُلُونَ عَلَى المَرْأَةِ، لاَ تَمْتَنِعُ مِمَّنْ جَاءَهَا،
وَهُنَّ البَغَايَا، كُنَّ يَنْصِبْنَ عَلَى أَبْوَابِهِنَّ رَايَاتٍ
تَكُونُ عَلَمًا، فَمَنْ أَرَادَهُنَّ دَخَلَ عَلَيْهِنَّ، فَإِذَا حَمَلَتْ
إِحْدَاهُنَّ وَوَضَعَتْ حَمْلَهَا جُمِعُوا لَهَا، وَدَعَوْا لَهُمُ القَافَةَ،
ثُمَّ أَلْحَقُوا وَلَدَهَا بِالَّذِي يَرَوْنَ، فَالْتَاطَ بِهِ، وَدُعِيَ
ابْنَهُ، لاَ يَمْتَنِعُ مِنْ ذَلِكَ «فَلَمَّا بُعِثَ مُحَمَّدٌ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ بِالحَقِّ، هَدَمَ نِكَاحَ الجَاهِلِيَّةِ كُلَّهُ إِلَّا
نِكَاحَ النَّاسِ اليَوْمَ»
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்
அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன:
முதல் வகை:
இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்: ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவரின் மகளையோ பெண் பேசி ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.
இரண்டாம் வகைத் திருமணம்:
ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் மாதவிடாயிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குக் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொள்!’ என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலகி இருப்பார். அவள் உடலுறவுகொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகிறவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்டமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார். குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஉ’ (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.
மூன்றாம் வகைத் திருமணம்:
பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்து பிரசவமாகி சில நாள்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது” என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) ‘இவன் உங்கள் மகன், இன்னாரே!” என்றே விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.
நான்காம் வகைத் திருமணம்:
நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள்.
இந்தப் பெண்கள் விலைமாதுகள் ஆவர். அவர்கள் தங்களின் வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை – பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக்குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவரின் மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்கமுடியாது.
சத்திய(மார்க்க)த்துடன் முஹம்மத்(ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள். ( நூல்: புகாரி )
ஆன்மீகத்தின் பெயரால் நடைபெற்ற ஆபாசத்தை களையெடுத்த அண்ணல் எம் பெருமானார் (ஸல்)...
حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ . ( ح ) وَحَدَّثَنِي
أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ ، ( وَاللَّفْظُ لَهُ ) . حَدَّثَنَا غُنْدَرٌ ،
حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ ،
عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ
كَانَتِ
الْمَرْأَةُ تَطُوفُ بِالْبَيْتِ وَهِيَ عُرْيَانَةٌ
فَتَقُولُ
: مَنْ يُعِيرُنِي تِطْوَافًا؟ تَجْعَلُهُ عَلَى فَرْجِهَا وَتَقُولُ : الْيَوْمَ
يَبْدُو بَعْضُهُ أَوْ كُلُّهُ فَمَا بَدَا مِنْهُ فَلَا أُحِلُّهُ
فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ : { خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ }
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அறியாமைக் காலப்) பெண்கள் இறையில்லம் கஅபாவை நிர்வாணமாகச் சுற்றி (தவாஃப்) வருவார்கள். அப்போது அவர்கள், “தவாஃப் ஆடையை இரவல் தருபவர் யார்?” என்று கூறி, (அதைப் பெற்று) தமது இன உறுப்பின் மீது வைத்துக்கொண்டு, பின்வருமாறு பாடுவார்கள்: “இன உறுப்பில் சிறிதளவோ முழுவதுமோ
வெளிப்படுகிறது இந்நாள். இதை எவரும் பார்க்க அனுமதிக்க முடியாது என்னால்”.
எனவேதான், “நீங்கள் தொழுமிடங்கள் ஒவ்வொன்றிலும் உங்களது அலங்காரத்தை மேற்கொள்ளுங்கள்” (அல்குர்ஆன்: 7:31) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
حَدَّثَنِي
هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي
عَمْرٌو، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، ح وحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، أَخْبَرَنَا
ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونسُ، أَنَّ ابْنَ شِهَابٍ، أَخْبَرَهُ، عَنْ
حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ
بَعَثَنِي أَبُو بَكْرٍ الصِّدِّيقُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ عَلَيْهَا
رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ، فِي
رَهْطٍ، يُؤَذِّنُونَ فِي النَّاسِ يَوْمَ النَّحْرِ: «لَا يَحُجُّ بَعْدَ
الْعَامِ مُشْرِكٌ، وَلَا يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ»،
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “விடைபெறும்” ஹஜ்ஜுக்கு முந்தைய ஹஜ்ஜின்போது, அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணக் குழுவிற்குத்) தலைவராக ஆக்கியிருந்தார்கள். அப்போது துல்ஹஜ் பத்தாவது நாளில் (மினாவில் வைத்து) “இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது; இந்த ஆலயத்தை நிர்வாணமாக எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது” என்று பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் ஒருவனாக என்னையும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ( நூல்: புகாரி )
மாநபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய மறுமலர்ச்சி...
நபித்துவத்தின் ஐந்தாவது ஆண்டு அபீ சீனியாவிற்கு மாநபி (ஸல்) அவர்கள் சிறு குழுவை ஹிஜ்ரத் அனுப்பி வைத்தார்கள். அடுத்த ஆண்டிலும் கொஞ்சம் கூடுதலான எண்ணிக்கையில் ஒரு குழுவை அனுப்பி வைத்தார்கள்.
அந்த ஐந்தாவது ஆண்டிலேயே மாநபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தையே சர்வதேச அரங்கில் பதிவு செய்தார்கள் ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள்.
كَلَّمَهُ
جَعْفَرُ بْنُ أَبِي طَالِبٍ فَقَالَ لَهُ أَيُّهَا الْمَلِكُ كُنَّا قَوْمًا
أَهْلَ جَاهِلِيَّةٍ نَعْبُدُ الْأَصْنَامَ وَنَأْكُلُ الْمَيْتَةَ وَنَأْتِي
الْفَوَاحِشَ وَنَقْطَعُ الْأَرْحَامَ وَنُسِيءُ الْجِوَارَ يَأْكُلُ الْقَوِيُّ
مِنَّا الضَّعِيفَ فَكُنَّا عَلَى ذَلِكَ حَتَّى بَعَثَ اللَّهُ إِلَيْنَا
رَسُولًا مِنَّا نَعْرِفُ نَسَبَهُ وَصِدْقَهُ وَأَمَانَتَهُ وَعَفَافَهُ
فَدَعَانَا إِلَى اللَّهِ لِنُوَحِّدَهُ وَنَعْبُدَهُ وَنَخْلَعَ مَا كُنَّا
نَعْبُدُ نَحْنُ وَآبَاؤُنَا مِنْ دُونِهِ مِنْ الْحِجَارَةِ وَالْأَوْثَانِ
وَأَمَرَنَا بِصِدْقِ الْحَدِيثِ وَأَدَاءِ الْأَمَانَةِ وَصِلَةِ الرَّحِمِ
وَحُسْنِ الْجِوَارِ وَالْكَفِّ عَنْ الْمَحَارِمِ وَالدِّمَاءِ وَنَهَانَا عَنْ
الْفَوَاحِشِ وَقَوْلِ الزُّورِ وَأَكْلِ مَالَ الْيَتِيمِ وَقَذْفِ الْمُحْصَنَةِ
وَأَمَرَنَا أَنْ نَعْبُدَ اللَّهَ وَحْدَهُ لَا نُشْرِكُ بِهِ شَيْئًا
وَأَمَرَنَا بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَالصِّيَامِ قَالَ فَعَدَّدَ عَلَيْهِ
أُمُورَ الْإِسْلَامِ فَصَدَّقْنَاهُ وَآمَنَّا بِهِ وَاتَّبَعْنَاهُ عَلَى مَا
جَاءَ بِهِ فَعَبَدْنَا اللَّهَ وَحْدَهُ فَلَمْ نُشْرِكْ بِهِ شَيْئًا
وَحَرَّمْنَا مَا حَرَّمَ عَلَيْنَا وَأَحْلَلْنَا مَا أَحَلَّ لَنَا فَعَدَا
عَلَيْنَا قَوْمُنَا فَعَذَّبُونَا وَفَتَنُونَا عَنْ دِينِنَا لِيَرُدُّونَا إِلَى
عِبَادَةِ الْأَوْثَانِ مِنْ عِبَادَةِ اللَّهِ وَأَنْ نَسْتَحِلَّ مَا كُنَّا
نَسْتَحِلُّ مِنْ الْخَبَائِثِ فَلَمَّا قَهَرُونَا وَظَلَمُونَا وَشَقُّوا
عَلَيْنَا وَحَالُوا بَيْنَنَا وَبَيْنَ دِينِنَا خَرَجْنَا إِلَى بَلَدِكَ
وَاخْتَرْنَاكَ عَلَى مَنْ سِوَاكَ وَرَغِبْنَا فِي جِوَارِكَ وَرَجَوْنَا أَنْ
لَا نُظْلَمَ عِنْدَكَ أَيُّهَا الْمَلِكُ
நஜ்ஜாஷி மன்னர் நபித்தோழர்களை அழைத்து விசாரிக்கிறார். அப்போது அவரிடம், ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள், "மன்னரே! நாங்கள் எதையும் அறியாத மக்களாக இருந்தோம்.
சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம், செத்த பிணங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அசிங்கமான மானக்கேடான காரியங்களைச் செய்துகொண்டிருந்தோம்.
சொந்த பந்தங்களான உறவுகளைப் பகைத்துக் கொண்டிருந்தோம்.
அண்டை வீட்டார்களுக்குத் தொந்தரவு செய்து வந்தோம்.
பலமானவர்கள் பலவீனமானவர்களைச் சுரண்டி வாழ்ந்து வந்தோம்.
இந்நிலையில் எங்களுக்கு ஒரு தூதரை அல்லாஹ் அனுப்பினான். அவரது பாரம்பரியத்தை நாங்கள் அறிவோம். அவரது உண்மையையும் நாங்கள் அறிவோம். அவரது நேர்மையும் பரிசுத்தமான வாழ்க்கையும் எங்களுக்குத் தெரியும்.
அவர் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என எங்களுக்குச் சொன்னார்.
மற்றவைகளை விடச் சொன்னார். மரம் செடி கொடிகள் சிலைகள் போன்ற எதையும் வணங்கக் கூடாது என்று சொன்னார்.
உண்மையை மட்டும் பேச வேண்டும் என்று ஏவினார். அமானிதத்தைக் காப்பாற்றச் சொன்னார். சொந்தபந்தங்களைச் சேர்த்து வாழவேண்டும் என்றார்.
அண்டை வீட்டாருடன் நெருக்கத்தை ஏற்படுத்த ஏவினார். இறைவனால் தடை செய்யப்பட்டதைத் தவிர்க்கச் சொன்னார். உயிரைக் கொலை செய்யக் கூடாது என்றார்.
அசிங்கமான ஆபாசமான காரியத்தைத் தடுத்தார். பொய் சொல்லக் கூடாது என்றார்.
அனாதை சொத்தைச் சாப்பிடக் கூடாது என்றார்.பெண்கள் மீது அவதூறு சொல்லக் கூடாது என்று எங்களுக்கு ஏவினார்.
தொழச் சொன்னார். ஜகாத் கொடுக்கச் சொன்னார். நோன்பு வைக்கச் சொன்னார் என்று அப்படியே பட்டியல் போட்டு பேசுகிறார்.
இதை நாங்கள் நம்பியதாலும், செயல்படுத்தியதாலும் எங்களை இந்த மக்காவாசிகளான காஃபிர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டனர். அதனால்தான் நாங்கள் எங்கள் ஊரிலிருந்து உங்கள் நாட்டுக்கு வந்துவிட்டோம். உங்களைத் தேர்ந்தெடுத்து விட்டோம். உங்களது அடைக்கலத்திற்குத்தான் நாங்கள் ஆசைப்படுகிறோம். மன்னரே! உங்களது ஆட்சியில் எங்களுக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம் என்று கூறினார்கள். ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் )
அதனைத் தொடர்ந்து அடுத்த 18 ஆண்டுகளில் உலகத்திற்கே ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் உத்தமர்களான நபித்தோழர்களையும், நபித்தோழியர்களையும் இந்த உலகிற்கு தந்தார்கள் மாநபி ஸல் அவர்கள்
மாஷா அல்லாஹ் காலத்திற்கு தேவையான அருமையான பதிவு
ReplyDelete