அமைதி மார்க்கம் இஸ்லாம்!!
உலக அமைதி தினம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
இந்நாள் முன்னர் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர் 2002 -ல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21 -ல் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக எல்லா மனிதர்களுக்குமே எந்த நெருக்கடியுமற்ற “அமைதியான வாழ்வு” வேண்டும் என்பதே உச்சபட்ச இலட்சியமாக இருக்கும்.
உலகில் அமைதி வேண்டும் என்றுதான் ஒவ்வோர் உயிரும் ஏங்கிக்கொண்டிருக்கிறது.
உலகில் நிகழும் அமைதியின்மை தனி மனித அமைதியை பாதிக்கிறது.
தற்போதைய நாம் வாழும் காலத்தில் அமைதியின்மை ஏற்படுவதற்கு அமைதி இல்லாமல் போனதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
முதலாவது, உலக நாடுகள் இடையே நடைபெறும் போர் ஆகும். இதற்கு நம் முன் சாட்சியாக நிற்கும் "காசா" பெரும் சான்றாகும்.
உலக நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஏனெனில், அமைதியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும்.
இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டு பேரழிவைச் சந்தித்த போதுதான் அமைதியின் தேவையை, நிதர்சனத்தை ஜப்பான் மட்டுமல்ல, மற்ற உலக நாடுகளும் உணர்ந்தன.
முன்பெல்லாம் கொள்கைக்காக போரிட்டன நாடுகள், இன்றோ, எல்லைக்காகவும், தமது இருப்பை காட்டிக் கொள்ளவும், இன அழிப்புக்காகவும் போரிடுகின்றன.
போருக்கான எல்லைகளை வகுக்க முடியாத அளவுக்கு ஓய்வின்றி போராடிக் கொண்டிருக்கின்றன.
இரண்டாவது வறுமை, ஆப்ரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் பலவும் இப்போதும் கூட வறுமை காரணமாக அமைதியை தொலைத்து உழல்கின்றன.
உள்நாட்டு போரால் அமைதியை தொலைத்த நாடுகளுக்கு அண்மை உதாரணமாக ஆப்கானிஸ்தானை சொல்லலாம், அங்கு நடந்த உள்நாட்டு போர் காரணமாக சாமானிய மக்களின் அமைதி தொலைந்து போனது. அதே போன்று சிரியா, ஏமன், லிபியா, ஈராக், உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் தொடர்ச்சியாக உள்நாட்டு போர் நடந்து சாமானிய மக்களின் அமைதி தொலைந்து போனது.
மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதன் காரணமாக அந்நாட்டு மக்கள் அமைதியின்றி தவிக்கின்றனர்.
எத்தியோப்பியா, சூடான், சோமாலியா, காங்கோ, நைஜீரியா, புருண்டி உள்ளிட்ட பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகளில் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரணமாக பல ஆண்டுகளாகவே மக்கள் அமைதியை தொலைத்து வாழ்ந்து வருகின்றனர்.
உலகில் மக்களின் அமைதியை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது போர்கள்தான். எனவே போரற்ற, உள்நாட்டு மோதல்களற்ற வாழ்வுதான் மக்களுக்கான அமைதிக்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மூன்றாவது, மக்களின் அமைதியை கெடுக்கும் ஆபத்தாக தற்போது இயற்கை சீற்றங்களும், காலநிலை மாற்றங்களும் மாறியுள்ளன.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ளன.
அண்மை ஆண்டுகளில் புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றங்கள், காற்று-நீர் மாசுபாடு, அபரிமிதமான இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் உலகமெங்கும் வாழக்கூடிய அனைத்து நாடுகளுமே கொஞ்சம் கொஞ்சமாக அமைதியை தொலைத்து வருகின்றன.
நான்காவது, பரஸ்பரம் சக மனிதர்களிடையே ஏற்படும் கசப்புணர்வுகள், காழ்ப்புணர்ச்சி, குடும்பங்களிடையே ஏற்படும் மனக்கசப்புகள், இரு வேறு பிரிவினரிடையே உருவாகும் புரிதலற்ற சூழல்கள் போன்றவைகளாலும் மக்கள் அமைதியை இழந்து தவிக்கின்றனர்.
மக்களின் நிம்மதியை கெடுத்துக்கொண்டிருக்கும் இது போன்ற காரணிகளில் இருந்து மக்களை விடுவித்து உலகம் முழுவதும் “அமைதி” யை நிலவச் செய்வது தான் ஒவ்வொரு மனிதருக்கான உன்னத தேவையாக இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
இத்தகைய அமைதியின்மையில் இருந்து மக்களை விடுவித்து அமைதி, சாந்தி,
நிம்மதி தவழும் மகத்தான ஒரு வாழ்க்கையின் பால் அழைத்துச்
செல்லும் ஆற்றல் இந்த உலகில் "இஸ்லாமிய மார்க்கத்திற்கு" மட்டுமே
இருக்கிறது என்பதை நாம் விளங்கிடவும், உலகிற்கு விளக்கிடவும்
கடமைப்பட்டுள்ளோம்.
இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள்.
பெயரில் மாத்திரம் அல்ல கொள்கையிலும் போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.
மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், அமைதியும் நிம்மதியும் மகிழ்ச்சியும் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது.
அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் அமைதிப் பிரமாணங்கள் பல சுடர்விட்டுப் பிரகாசிப்பதைக் காண முடியும்.
பொதுவாக தனிமனித அமைதியே உலக அமைதிக்கு வித்திடுகிறது என்று சொல்லப்படும்.
எனவே, தனி மனித அமைதியை கெடுக்கும் காரணிகளை கண்டறிந்து தவிர்ப்பதும், தனி மனித அமைதிக்கு உத்திரவாதம் தரும் அம்சங்களை ஆராய்ந்து செயல்படுத்துவதும் தலையாய கடமைகளாகும்.
மனிதன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுருத்துகிறது.
குறிப்பாக, தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு இடையூறு இல்லாத வாழ்க்கை முறைகளை அமைப்பதும், அமைதியை தழைத்தோங்கச் செய்வதும் சமூக பொறுப்புணர்வு என்றும் வலியுறுத்துகிறது.
ஒரு தினத்தின் அழகிய செயலைச் செய்பவர் யார் எனில்? தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக, மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு மனிதன் முகம் சுழித்து பாதையில் இருந்து ஒதுங்கி செல்ல தூண்டும் கன நேர அமைதியின்மையை கூட இஸ்லாம் விரும்பவில்லை.
عَنْ أبي ذَرٍّ – رضي اللهُ عنه - قال: قال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: «عُرِضتْ عليَّ أعمالُ أمَّتِي، حسَنُها وسَيِّئُها، فوجدتُ في محاسنِ أعمالِها الأذَى يُماطُ عنِ الطَّريقِ، ووجَدتُ في مساوِئ أعمالِها النُّخاعَةَ تكونُ في المسْجِدِ لا تُدْفَنُ» رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் சமூகத்தின் நல்ல செயல்களும், தீய செயல்களும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றில் மூடப்படாத எச்சிலே தீய செயல்களின் பட்டியலில் அதிகமாக இருப்பதாகக் கண்டேன்” (நூல்: முஸ்லிம்).
وَحَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ: أَنَّ الضَّحَّاكَ بْنَ خَلِيفَةَ سَاقَ خَلِيجاً لَهُ مِنَ الْعُرَيْضِ، فَأَرَادَ أَنْ يَمُرَّ بِهِ فِي أَرْضِ مُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ، فَأَبَى مُحَمَّدٌ. فَقَالَ لَهُ الضَّحَّاكُ: لِمَ تَمْنَعُنِي وَهُوَ لَكَ مَنْفَعَةٌ، تَشْرَبُ بِهِ أَوَّلاً وَآخِراً، وَلاَ يَضُرُّكَ. فَأَبَى مُحَمَّدٌ، فَكَلَّمَ فِيهِ الضَّحَّاكُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، فَدَعَا عُمَرُ بْنُ الْخَطَّابِ مُحَمَّدَ بْنَ مَسْلَمَةَ، فَأَمَرَهُ أَنْ يُخَلِّيَ سَبِيلَهُ فَقَالَ مُحَمَّدٌ: لاَ. فَقَالَ عُمَرُ لِمَ تَمْنَعُ أَخَاكَ مَا يَنْفَعُهُ وَهُوَ لَكَ نَافِعٌ، تَسْقِي بِهِ أَوَّلاً وَآخِراً، وَهُوَ لاَ يَضُرُّكَ. فَقَالَ مُحَمَّدٌ: لاَ وَاللَّهِ. فَقَالَ عُمَرُ: وَاللَّهِ لَيَمُرَّنَّ بِهِ وَلَوْ عَلَى بَطْنِكَ. فَأَمَرَهُ عُمَرُ أَنْ يَمُرَّ بِهِ، فَفَعَلَ الضَّحَّاكُ.
ழஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்கள், அரீள் என்ற இடத்தில் இருந்து ஓர் நீரோடையைத் தோண்டி, அதனை முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்களுடைய நிலத்தினூடாகக் கொண்டுவர நாடினார். மஸ்லமா (ரலி) அதனைத் தடுத்தார். அப்போது ழஹ்ஹாக் (ரலி) அவரிடம் கேட்டார்: ‘‘அது உங்களுக்கும் நன்மை பயக்கும் செயல்தானே... பின்னர் ஏன் நீங்கள் தடுக்கின்றீர்கள்?. முதாலவதாகவும் கடைசியாகவும் நீங்கள்தானே அதிலிருந்து பயனடைவீர்கள்?. அதன் மூலம் உங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படப்போவதும் இல்லையே’’. ஆயினும் மஸ்லமா (ரலி) சம்மதிக்கவில்லை. ஆகவே ழஹ்ஹாக் (ரலி), உமர் (ரலி) அவர்களிடம் இது குறித்து முறையிட்டார். மஸ்லமா (ரலி) அவர்களை அழைத்து, நீரோடைக்கான தடையை நீக்கி வழி ஏற்படுத்திக் கொடுக்குமாறு உமர் (ரலி) உத்தரவு பிறப்பித்தார். அப்போதும் மஸ்லமா (ரலி), ‘‘முடியாது’’ என்று கூறினார். அதனைச் செவியுற்ற உமர் (ரலி) கூறினார்: ‘‘அல்லாஹ்வின் மீது ஆணை! அந்த நீரோடையை நான் தோண்டத்தான் செய்வேன். அது உமது வயிற்றுக்கு மேலாகச் செல்வதாக இருந்தாலும் சரியே’’. பின்னர் அவருடைய நிலத்தினூடாக தோண்டுமாறு உமர் (ரலி) உத்தரவு பிறப்பித்தார். ழஹ்ஹாக் (ரலி) அவ்வாறே செய்தார். ( நூல்: முவத்தா லிஇமாமி மாலிக் )
எனவே, எந்த செயல் மூலமாகவும் தனிமனிதர் ஒருவருக்கு அமைதியின்மையை ஏற்படுத்த எவரையும் மார்க்கம் அனுமதிக்கவில்லை.
தனி மனித அமைதியை கெடுக்கும் காரணிகளில் மிகவும் பிரதானமானது பிறரின் உரிமையையும், பிறரின் உணர்வுகளையும் மதிக்கமல் நடப்பது.
பிறரின் உரிமைகளை வழங்கி பிறரின் உணர்வுகளை வழங்கி வாழும்
போது அங்கே நிலவும் சாந்தி மற்றும் அமைதிக்கு ஈடே இல்லை.
நபி யூசுஃப் (அலை) அவர்களுடைய வரலாற்றைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறும் போது அதனை வரலாறுகளில் மிக அழகிய வரலாறு என்று கூறுகிறான்.
அவ்வளவு பாடங்களை அவர்களுடைய வரலாற்றில் அல்லாஹ் வைத்திருக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்:
لَقَدْ كَانَ فِي يُوسُفَ وَإِخْوَتِهِ آيَاتٌ لِلسَّائِلِينَ
(நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சரித்திரத்தைப் பற்றி வினவுகின்ற (யூதர்களாகிய இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. ( அல்குர்ஆன்: 12: 7 )
தன்னை கொலை செய்ய வேண்டுமென்று நாடி, அதற்காக முயற்சி செய்து, அதற்காக பல திட்டங்களைத் தீட்டி, கிணற்றில் தூக்கி வீசி அதை செய்து காட்டிய அவர்களின் சகோதரர்கள் கடுமையான பஞ்ச காலத்தில் மிஸ்ரின் அரசராக வீற்றிருந்த தம் சகோதரர் தான் அரசர் என்று அறியாமலே நபி யூசுஃப் (அலை) அவர்களிடம் உதவி கேட்டு தஞ்சம் புகுந்தனர்.
அவர்களை தம் சகோதரர்கள் என்று அறிந்து கொண்ட யூசுஃப் (அலை) எப்படி நடந்து கொண்டார்கள்? என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுவதை கொஞ்சம் கவனியுங்கள்.
فَلَمَّا دَخَلُوْا عَلَيْهِ قَالُوْا يٰۤاَيُّهَا الْعَزِيْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰٮةٍ فَاَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَاؕ اِنَّ اللّٰهَ يَجْزِى الْمُتَصَدِّقِيْنَ
அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கூறினார்கள்.
قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِيُوْسُفَ وَاَخِيْهِ اِذْ اَنْتُمْ جٰهِلُوْنَ
(அதற்கு அவர்?) “நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று வினவினார்
قَالُوْۤا ءَاِنَّكَ لَاَنْتَ يُوْسُفُؕ قَالَ اَنَا يُوْسُفُ وَهٰذَاۤ اَخِىْ قَدْ مَنَّ اللّٰهُ عَلَيْنَاؕ اِنَّهٗ مَنْ يَّتَّقِ وَيَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ
(அப்போது அவர்கள்) “நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 12: 88-90 )
அந்த சகோதரர்களைப் பார்த்து யூசுஃப் (அலை) சொல்லியிருக்கலாம்; நீங்கள் என்னை கிணற்றில் தள்ளி கொல்லப் பார்த்தீர்கள், அல்லாஹ் என்னை பாதுகாத்தான்.
இந்த சம்பவத்தைச் சொல்லியிருந்தால், அந்த இடத்தில் யூசுஃப் நபியுடைய சகோதரர்கள் சபையில் வெட்கத்தால், குற்ற உணர்வால் தலைகுனிந்து இருப்பார்கள். அவமான பட்டிருப்பார்கள். ஆனாலும் யூசுஃப் (அலை) அவ்வாறு சொல்லவில்லை.
وَجَآءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْۢ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّيْطٰنُ بَيْنِىْ وَبَيْنَ اِخْوَتِىْؕ
என் சகோதரர்களே! எனக்கும் உங்களுக்கும் இடையில் ஷைத்தான் கெட்ட ஊசலாட்டத்தை ஏற்படுத்தி விட்டான். அதனால் நமக்கு மத்தியில் இந்த பிணக்குகள் ஏற்பட்டன. ( அல்குர்ஆன்: 12 : 100 )
இங்கு யூஃசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது சகோதரர்கள் செய்த தீமையைக் கூட, தனது சகோதரர்கள் செய்த அந்த கொலைக் குற்றத்தைக் கூட சொல்லிக்காட்டவில்லை.
நீங்கள் நல்லவர்கள் தான், ஆனால், ஷைத்தான் நமக்கு மத்தியில் இப்படிப்பட்ட ஊசலாட்டங்களை ஏற்படுத்தி விட்டான். என்னவொரு அழகான வார்த்தை.
அப்போது, யூசுஃப் (அலை) அவர்களின் சகோதரர்கள் உள்ளத்தில் இருந்து வெளியே வந்த வார்த்தை எப்படியானது?!
قَالُوْا تَاللّٰهِ لَقَدْ اٰثَرَكَ اللّٰهُ عَلَيْنَا وَاِنْ كُنَّا لَخٰـطِــِٕيْنَ
அதற்கவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும், நிச்சயமாக அல்லாஹ் எங்களை விட உம்மை மேன்மையுடையவராகத் தெரிவு செய்திருக்கின்றான்” என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 12: 91 )
இன்று, சக மனிதனுடைய தவறுகள் விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், திருத்தப்படுவதில்லை. இன்று, குற்றங்கள் திருத்தப்படுவதில்லை. ஆனால், பகிரங்கப்படுத்தப்பட்டு கேவலப்படுத்தப்படுவதைப் பார்த்து வருகிறோம்.
இதே யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கையில் இன்னொரு நிகழ்வும் நடந்தேறியது.
சிறையில் இருக்கும் போது இருவருக்கு கனவுக்கான விளக்கம் அளித்தார்கள் யூசுஃப் (அலை) அவர்கள்.
ஒருவருக்கு அவர் கண்ட கனவுக்கான விளக்கத்தை சொல்லிய பிறகு, நீர் விடுதலையாகி வெளியே சென்ற பிறகு மன்னரின் பணியாளராய் சேவகம் செய்வாய் அப்போது, மன்னனிடம் என் நிலையை சொல்லி என்னை விடுதலை செய்ய உதவி செய் என்று சொல்லி இருப்பார்கள்.
அதைப் போன்றே அவரும் விடுதலையாகி மன்னனிடம் பணியாளராக சேவையாற்றி வருவார். ஆனால், யூசுஃப் அலை அவர்களின் கோரிக்கையை மறந்து போயிருப்பார்.
فَاَنْسٰٮهُ الشَّيْطٰنُ ذِكْرَ رَبِّهٖ فَلَبِثَ فِى السِّجْنِ بِضْعَ سِنِيْنَ
அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், “என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக!” என்றும் சொன்னார்; ஆனால் (சிறையிலிருந்து விடுதலையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப் பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான்; ஆகவே அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார். ( அல்குர்ஆன்: 12: 42 )
ஆனால், சில வருடங்களுக்குப் பிறகு அரசர் கண்ட ஒரு கனவிற்கான விளக்கத்தை கேட்க சிறைச்சாலைக்குள் வரும் அந்த மனிதரிடம் யூசுஃப் (அலை) நடந்து கொண்ட விதம் என்ன?
ஒரு வார்த்தை கூட பழைய நிகழ்வுகள் குறித்து பேசவில்லை யூசுஃப் (அலை) அவர்கள்.
நான் உன்னிடம் சொன்னேனே? அதை ஏன் செய்ய வில்லை?
உனக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்தேன்?
என்னை மறந்து விட்டாயே? என கடிந்து கொள்ளவும் இல்லை.
மாறாக, மிகவும் அமைதியாக சாந்தமாக கனவுக்கான விளக்கத்தை சொல்லி அனுப்பினார்கள்.
மீண்டும் இரண்டாம் முறையாக யூசுஃபை அரசர் அழைத்து வரச் சொல்லி அவரை அனுப்பி வைப்பார்.
அப்போதும் கூட தங்கள் இருவருக்கும் இடையே எந்த விதமான உரையாடலும் நடக்காதது போல யூசுஃப் (அலை) அவர்கள் நடந்து கொள்வார்கள்.
பழைய விஷயங்கள் எதையும் கிளற மாட்டார்கள்.
என் தரப்பு நியாயங்களை நான் சொல்கிறேன். அதை அரசரிடம் சொல்லி என் வழக்கை மீண்டும் மீளாய்வு செய்து என்னை நிரபராதியாக விடுதலை செய்ய ஆவண செய்ய சொல் என்று சொல்லி அனுப்புவார்கள்.
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِىْ بِهٖۚ فَلَمَّا جَآءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰى رَبِّكَ فَسْـٴَــلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِىْ قَطَّعْنَ اَيْدِيَهُنَّؕ اِنَّ رَبِّىْ بِكَيْدِهِنَّ عَلِيْمٌ
(“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 12: 50 )
இன்று எதற்கெடுத்தாலும் நாம் பிறருடைய உள்ளத்தை காயப்படுத்துகிறோம், பிறரை பழிக்கின்றோம், பழி வாங்குகின்றோம். பிறருடைய மனதை நோகடிக்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِحَدِّ الشِّفَارِ، وَأَنْ تُوَارَى عَنِ الْبَهَائِمِ، وَإِذَا ذَبَحَ أَحَدُكُمْ فَلْيُجْهِزْ»
நீங்கள் ஒரு பிராணியை அறுப்பதாக இருந்தால் அந்தப் பிராணியின் கண்ணுக்கு எதிராக நீங்கள் கத்தியை தீட்டாதீர்கள் என்று சொன்னார்கள். ஒரு பிராணியை அறுக்கும் பொழுது இன்னொரு பிராணி அதை பார்க்கும்படி அறுக்காதீர்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 5864.
கால்நடைகளின் உள்ளத்தை கூட நாம் காயப்படுத்தி விடக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தினார்கள். ஒரு மிருகத்தின் உணர்வைக்கூட மதிக்கச் சொன்னார்கள் என்றால், நாம் ஒரு மனிதனின் உணர்வை, ஒரு இறைநம்பிக்கையாளரின் உணர்வை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.
எந்த அளவுக்கு உள்ளத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால்...
«إِذَا كُنْتُمْ ثَلاَثَةً، فَلاَ يَتَنَاجَى رَجُلاَنِ دُونَ الآخَرِ حَتَّى تَخْتَلِطُوا بِالنَّاسِ، أَجْلَ أَنْ يُحْزِنَهُ»
நீங்கள் ஓரிடத்தில் மூன்று பேராக இருந்தால், ஒருவரை விட்டு இரண்டு பேர் மட்டும் தனியாக ரகசியம் பேச வேண்டாம். நீங்கள் மக்களோடு கலக்கின்ற வரை, மக்கள் அதிகமாகின்ற வரை. நீங்கள் இவ்வாறு நடந்து கொள்வது, அவருடைய உள்ளத்தை (காயப்படுத்தும்) கவலையில் ஆழ்த்தும். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் (ரழி) நூல் : புகாரி, எண் : 6290.
அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது {ஸல்} அவர்களுடைய மற்றொரு ஹதீஸில் மேலும் ஒரு வழிகாட்டுதலை கூறுகிறார்கள்:
«لاَ يُقِيمُ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَجْلِسِهِ ثُمَّ يَجْلِسُ فِيهِ» «أَنَّهُ نَهَى أَنْ يُقَامَ الرَّجُلُ مِنْ مَجْلِسِهِ وَيَجْلِسَ فِيهِ آخَرُ، وَلَكِنْ تَفَسَّحُوا وَتَوَسَّعُوا»
ஒருவர் சபையில் அமர்ந்திருக்கும் பொழுது, இன்னொருவர் உள்ளே வருகிறார். ஏற்கனவே அமர்ந்திருந்தவரை எழுப்பி விட்டு இப்போது உள்ளே நுழைந்தவர் அந்த இடத்தில் உட்கார வேண்டாம். அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரழி), நூல் : புகாரி, எண் : 6269, 6270.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்,
ஒருவர் ஒரு இடத்தில் உட்கார்ந்து, பின்னர் ஒளுவுடைய தேவைக்காகவோ அல்லது வேறு தேவைக்காகவோ எழுந்து செல்கிறார். இப்பொழுது, இன்னொருவர் அந்த இடத்திற்கு வந்து அந்த இடத்தை பூர்த்தி செய்து உட்கார்ந்து கொள்கிறார்.
இப்பொழுது முந்திச் சென்றவர், திரும்பி வருவதைப் பார்த்து விட்டால், இரண்டாவதாக உட்கார்ந்தவர் அந்த இடத்தை காலி செய்து முதலாமவருக்கு கொடுத்துவிட வேண்டும். முந்தி வந்தவர் தான் அந்த இடத்திற்கு உரிமையாளர். ( நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 7124 )
ஏன் இவ்வாறு கூறுகிறார்கள் என்று பார்த்தோமேயானால், ஏற்கனவே அமர்ந்திருந்த அந்த மனிதரின் உள்ளம் காயப்பட்டு விடக்கூடாது என்பதற்காக.
இன்று, நமக்கு மத்தியில் பிறருடைய உள்ளம் கவலைப்பட்டால் என்ன? அந்த கவலையிலேயே சிக்கி செத்தால் என்ன? என்று அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சர்வசாதாரணமாக நாம் நடந்து கொள்கின்றோம்.
பிறருடைய தவறு ஒன்றை சுட்டிக் காட்ட விரும்பினால் கூட பிறரின் உள்ளத்து உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சுட்டிக் காட்ட வேண்டும்.
أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِمَارًا وَحْشِيًّا وَهُوَ بِالأَبْوَاءِ، أَوْ بِوَدَّانَ، فَرَدَّ عَلَيْهِ، فَلَمَّا رَأَى مَا فِي وَجْهِهِ، قَالَ: «أَمَا إِنَّا لَمْ نَرُدَّهُ عَلَيْكَ إِلَّا أَنَّا حُرُمٌ»
ஒருசமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராமிலிருந்த போது ஓர் சஹாபி வேட்டைப் பிராணியை வேட்டையாடி சமைத்துக் கொண்டு வருகிறார்.
அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் இஹ்ராமில் இருக்கிறார்கள். இஹ்ராமில் இருக்கும்பொழுது தானும் வேட்டையாடக் கூடாது. தனக்காக வேட்டையாடப்பட்டதை சாப்பிடவும் கூடாது.
இந்த நிலையில் தனக்காக சமைத்து கொண்டுவரப்பட்ட வேட்டை மாமிசத்தை மறுப்பதை தவிர வேறு வழியில்லை. எனவே, அதை மறுத்துவிட்டு அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
சகோதரரே! இந்த வேட்டைப் பிராணியை இப்பொழுது உங்களிடமிருந்து நான் வாங்கிக் கொள்ள முடியாது. ஏனென்றால், நான் இஹ்ராமில் இருக்கும்பொழுது அதை புசிக்க முடியாது . அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி), நூல் : புகாரி, எண் : 1825, 2573. முஸ்னது அஹ்மது, எண்: 16423.
ஒரு விஷயத்தை நாம் மறுப்பதாக இருந்தாலும் கூட, அதற்குரிய அழகிய காரணத்தை அதற்குரிய அழகிய விளக்கத்தை எடுத்துச் சொல்லி, பிறருடைய உள்ளம் காயப்படாமல் காரணத்தை புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் அங்கே உருவாக்க வேண்டும்.
நான் எதற்கு காரணம் சொல்ல வேண்டும்?
எனக்கு என்ன தேவை இருக்கிறது? உனக்கெல்லாம் விளக்கம் கொடுப்பதற்கு? என்ற தொனியில் நாம் பேசினோம் என்றால் அங்கே ஒரு இதயம் நொறுக்கப்படுகிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு ஏற்படுத்தும் மனக்காயம் என்ன செய்யும்?...
وعن
جابر بن سمرة، رضي الله عنهما .
قال:
شكا أهل الكوفة سعداً، يعني: ابن أبي وقاص - رضي الله عنه - إلى عمر بن الخطاب -
رضي الله عنه - فعزله واستعمل عليهم عمارًا، فشكوا حتى ذكروا أنه لا يحسن يصلي،
فأرسل إليه فقال: يا أبا إسحاق، إن هؤلاء يزعمون أنك لا تحسن تصلي .
فقال: أما أنا والله فإني كنت أصلي بهم صلاة رسول الله صلى الله عليه وسلم لا أخرم عنها أصلي صلاة العشاء فأركد في الأوليين، وأخف في الأخريين، قال: ذلك الظن بك يا أبا إسحاق، وأرسل معه رجلاً - أو رجالاً - إلى الكوفة يسأل عنه أهل الكوفة، فلم يدع مسجداً إلا سأل عنه، ويثنون معروفً
حَتَّى
أَتَوْا مَسْجِداً لِبَنِي عَبْسٍ.
فَقَالَ
رَجُلٌ يُقَالُ لَهُ: أَبُو سعدَةَ: أَمَا إِذْ نَشَدْتُمُوْنَا بِاللهِ،
فَإِنَّهُ كَانَ لاَ يَعْدِلُ فِي القَضِيَّةِ، وَلاَ يَقْسِمُ بِالسَّوِيَّةِ،
وَلاَ يَسِيْرُ بِالسَّرِيَّةِ.
فَقَالَ
سَعْدٌ: اللَّهُمَّ إِنْ كَانَ كَاذِباً فَأَعْمِ بَصَرَهُ، وَعَجِّلْ فَقْرَهُ،
وَأَطِلْ عُمُرَهُ، وَعَرِّضْهُ لِلْفِتَنِ.
قَالَ:
فَمَا مَاتَ حَتَّى عَمِيَ، فَكَانَ يَلْتَمِسُ الجُدُرَاتِ، وَافْتَقَرَ حَتَّى
سَأَلَ، وَأَدْرَكَ فِتْنَةَ المُخْتَارِ، فَقُتِلَ فِيْهَا
.
قَالَ
عَبْدُ المَلِكِ: فَأَنَا رَأَيْتُهُ بَعْدُ يَتَعَرَّضُ لِلإِمَاءِ فِي
السِّكَكِ، فَإِذَا سُئِلَ كَيْفَ أَنْتَ؟
يَقُوْلُ:
كَبِيْرٌ مَفْتُوْنٌ، أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ.
مُتَّفَقٌ عَلَيْهِ .
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூஃபாவில் ஆளுநராக இருந்தார்கள். அப்போது, ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் மீது கூஃபா நகர மக்கள் விமர்சனம் ஒன்றை ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களின் கவனத்திற்கு கடிதத்தின் வாயிலாக தெரிவித்தார்கள்.
அதாவது, ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்கும் போது சரியாக தொழ வைப்பதில்லை என்றும், குறிப்பாக மக்ரிப் மற்றும் இஷாத் தொழுகையின் போது நீண்ட அத்தியாயங்களை ஓதுகின்றார்கள்” என்பது தான் அந்த விமர்சனம்.
உடனடியாக வந்த இந்த விமர்சனம் உண்மைதானா என்று கண்டறிய ஒரு குழுவை நியமித்தார்கள்.
அந்த குழு கூஃபா விரைந்து சென்று மக்களிடையே விசாரித்தது. கூஃபா நகர மக்களும், அவர் இமாமாக பணியாற்றும் மஸ்ஜிதின் மக்களும் ஸஅத் (ரலி) அவர்கள் குறித்து நல்லதையே கூறினார்கள்.
பனூஅபஸ் எனும் பள்ளியில் அந்தக் குழு விசாரித்த போது, அங்கிருந்த உஸாமா இப்னு கதாதா ( அபூஸஅதா ) என்பவர் எழுந்து ”ஆளுநர் ஸஅத் அவர்கள் எங்களுக்கு மத்தியில் சமத்துவமாகப் பங்கு வைப்பதில்லை, தீர்ப்பளிப்பதில் நீதியாக நடந்து கொள்வதும் இல்லை, எங்களோடு யுத்தகளங்களுக்கு வருவதும் இல்லை” என்று குற்றம் சுமத்தினார்.
உண்மை கண்டறியும் குழுவினர் அதிர்ச்சியோடு கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் சென்று நீங்கள் ஒரு விஷயத்தை ஆராய்ந்து வருமாறு அனுப்புனீர்கள். ஆனால், அங்கு ஒருவர் இன்னின்னவாறு புதுசாக விமர்சனங்களை வைக்கின்றார் என்று கூறினார்கள்.
கடிதம் கிடைக்கப்பெற்ற ஸஅத் (ரலி) அவர்கள் மதீனா வந்தடைந்தார்கள்.
அமீருல் முஃமினீன் முன்பாக வந்து நின்றார்கள் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள்.
அமீருல் முஃமினீன்: ஸஅதே! நீங்கள் அழகிய முறையில் தொழ வைக்கவில்லையாமே அப்படியா?
வாய் நிறைய புன்னைகை பூத்தவாறு ஸஅத் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன்! அம்மக்களுக்கு நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழ வைத்தது போன்றே முந்திய இரண்டு ரக்அத்தில் சற்று நீட்டியும் கடைசி ரக்அத்களில் சுருக்கமாகவும் தொழ வைத்தேன்” என்று கூறினார்கள்.
அடுத்த படியாக உமர் (ரலி) அவர்கள் அபூஸஅதா எழுப்பிய மூன்று விமர்சனங்கள் குறித்து விளக்கம் கேட்டார்கள்.
இதைச் செவியுற்ற ஸஅத் (ரலி) அவர்கள் அதிர்ச்சியுற்றவராக “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்குப் பாதகமாக நான் மூன்று பிரார்த்தனைகளைச் செய்கின்றேன்” எனக்கூறிவிட்டு...
யாஅல்லாஹ்! உனது அடியார் உஸாமா இப்னு கதாதா என் மீது சுமத்திய குற்றச்சாட்டில் பொய்யுரைத்திருந்தால், அவர் பிரபல்யத்திற்காகவும், அதைக் கொண்டு இன்பம் அடைவதற்காகவும் கூறியிருந்தால் ”அவரின் ஆயுளை நீ நீளமாக்குவாயாக!, அவருக்கு வறுமையை நீ நீடித்துவிடுவாயாக!, அவரைக் குழப்பங்களுக்கு மத்தியில் வாழ வைப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
உஸாமா இப்னு கதாதா தங்களது கடைசி காலத்தில் “தமது இரு புருவங்களும் கண்களின் மீது விழுந்து தொங்கும் அளவிற்கு முதுமை அடைந்தார். மேலும், கடுமையான வறுமை ஏற்பட்டு, வீதியில் வருவோர் போவோரிடம் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அத்தோடு பாதையில் செல்லும் பெண்களை சில்மிஷம் செய்து, அவமாரியாதைக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும், இது குறித்து அவரிடம் ஏன் இந்த வயதில் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கின்றீர்கள்? உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று கேட்டால் “ஸஅத் அவர்களின் மனவருத்தமும், துஆவும் தான் என்னுடைய இந்த கேவலமான நடவடிக்கைகளுக்கு காரணம்” என்று பதில் கூறுவார்.
முக்தார் எனும் ஆட்சியாளரின் காலத்தில் ஏற்பட்ட ஒரு கலவரத்தில் கடுமையான முறையில் கொலைசெய்யப்பட்டு இறந்தார்.
( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா, உஸ்துல் ஃகாபா )
எல்லாவற்றையும் விசாரித்து முடித்த அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் “ஸஅதே! உடனடியாகச் சென்று கூஃபாவில் மீண்டும் கவர்னராகப் பொறுப்பேற்றுக் கொள்வீராக!” என்றார்கள்.
இதைக் கேட்ட ஸஅத் (ரலி) அவர்கள் கோபத்தோடு அமீருல் முஃமினீன் அவர்களே! “எனக்கு ஒழுங்காக தொழ வைக்கத் தெரியவில்லை என்று விமர்சித்த மக்களுக்கா என்னை தலைமையேற்றிடச் செல்லுமாறு ஆணையிடுகின்றீர்கள்? இல்லை, இனி ஒரு போதும் அங்கே செல்ல மாட்டேன் என்று கூறி வாழ்நாளின் இறுதி வரை மதீனாவிலேயே இருந்து விட்டார்கள்.
இல்லாத ஒன்றை, செய்யாத ஒன்றை சொல்லி
ஒருவரின் உள்ளத்தை காயப்படுத்தியதால் துஆ ஒப்புக்கொள்ளப்படும் பாக்கியம் நிறைந்த, சிறந்த போர் வீரரான,
சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட நல்ல, சிறந்த பரக்கத்தான ஒரு மனிதரை கூஃபா நகர மக்கள் இழந்தனர். ( நூல்: உஸ்துல்
காபா )
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு இரு உலகிலும் நற்கூலி வழங்குவானாக ஆமீன்
ReplyDeleteபாரகல்லாஹ்
ReplyDelete