அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 17.
முதியோரை மதிப்போம்!!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அர் ரூம் அத்தியாயத்தின் 54 -ம் வசனம் மனிதன்
தன் வாழ்க்கையில் சந்திக்கும் மூன்று பருவம் குறித்து பேசுவதை அவதானிக்க
முடிகிறது.
குழந்தைப் பருவம், இளமைப் பருவம்,
முதுமைப் பருவம் இந்த மூன்று பருவங்களில் முதுமைப் பருவம்
குறித்து இன்றைய அமர்வில் பேசவும் கேட்கவும் இருக்கிறோம்.
முதுமைப் பருவம்; அது வாழ்வின் தவிர்க்க முடியாத, அழகான ஒரு பருவம்.
1995 ம் ஆண்டில் 60 வயதைக் கடந்த முதியோர்கள் எண்ணிக்கை 54 கோடி, 2025 ம் ஆண்டில் 120
கோடி, 2050 ம் ஆண்டில் 210 கோடியாக அதிகரிக்கும் என்று ஐ.நாவின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
اَللّٰهُ
الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ ضُؔعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضُؔعْفٍ قُوَّةً ثُمَّ
جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضُؔعْفًا وَّشَیْبَةً یَخْلُقُ مَا یَشَآءُ وَهُوَ
الْعَلِیْمُ الْقَدِیْرُ
அல்லாஹ் உங்களை
(ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப்
பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக் கிறான். அந்த பலத்திற்குப் பின்னர்
வயோதிகத்தையும்,
பலவீனத்தையும் கொடுக் கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு உங்களை ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும்
மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்’. ( அல்குர்ஆன்: 30: 54 )
முதுமை என்பது
மனிதனுக்கு ஏற்படுகின்ற ஒரு பலவீனமாகும். மேலும், மனிதன் தன் வாழ்நாளில் சந்தித்தே ஆக வேண்டிய பருவமும் கூட.
இந்த பருவத்தில்
பிறருடைய துணை இன்றி,
உதவி இன்றி தம்முடைய பெரும்பாலான செயல்களை செய்ய முடியாது.
ஆகவே தான் நபி ﷺ அவர்கள் முதுமையின் பலகீனத்தில் இருந்து அல்லாஹ்விடம்
பாதுகாப்புத் தேடி துஆச் செய்தார்கள்.
وَعَنْ
زَيْدِ بنِ أَرْقَم، قَالَ: كَانَ رَسُولُ اللَّه ﷺ يقَولُ: اللهُمَّ إِنِّي
أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَلِ، والبُخْلِ وَالهَرم، وعَذَاب الْقَبْر
ஜைத் பின் அர்கம்
(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கஸலி வல்புஃக்லி வல்ஹரமீ. வஅஊது
பிக்க மின் அதாபில் கப்ர்" என்று பிரார்த்தித்து வந்தார்கள்.
பொருள்: இறைவா!
இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும், கஞ்சத்தனத்தில் இருந்தும், தள்ளாமையில் (முதுமையில்)
இருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின்
வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். ( நூல்: புகாரி )
முதுமைப்
பருவத்தில் இருப்பவர்களுக்கு உளவியல் ரீதியாக இரண்டு விஷயங்களை சமூகம் தர வேண்டும்
என்று நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒன்று அவர்களுக்கு
ஸலாம் - முகமன் கூறுவது. இரண்டு அவர்களின் வயதைக் கவனத்தில் கொண்டு மரியாதை
செலுத்துவது. இவ்விரண்டும் தளர்ந்து போய் இருக்கும் அவர்களை மனதளவில் அவர்களை
சீராக செயல்பட வைக்கும்.
عن أبي
هُرَيرةَ رَضِيَ اللهُ عنه، عَنِ النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم، قال:
((يُسَلِّمُ الصَّغيرُ على الكبيرِ، والمارُّ على القاعِدِ، والقَليلُ على الكثيرِ ))
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் உட்கார்ந்திருப்பவருக்கும், குறைவானவர்கள் அதிகமானவர்களுக்கும் சலாம் சொல்லட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி), (
நூல்: புகாரி )
ليس
منَّا مَنْ لم يُجِلَّ كبيرَنا ، ويرحمْ صغيرَنا ! ويَعْرِفْ لعالِمِنا حقَّهُ،
خلاصة حكم المحدث : حسن
الراوي
: عبادة بن الصامت | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم
: 5443
‘யார் நம்மில்
பெரியவருக்கு மரியாதை செய்யாமலும் சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் அறிஞரின்
தகுதியை அறிந்து (அதற்குத் தக்கவாறு அவரிடம் நடந்து) கொள்ளாமலும் இருக்கிறார்களோ
அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்’ என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), ( நூல்: அஹ்மத் )
சமூகத்தில் நம்மை
மதிப்பவர்கள் இன்னும் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில்
உருவாக்கும்.
முதியோர்கள்
இரண்டு வகையினர் ஆவர். நம்மைப் பெற்றெடுத்த பெற்றோர் முதுமைப் பருவத்தை அடைவது.
இரண்டாம் வகையினர் உறவுகளில், சமூகத்தில் நாம் காணும்
முதியோர்.
இஸ்லாம்
பெற்றோர்கள் விஷயத்தில் ஒரேயொரு வசனத்தின் ஊடாக பல்வேறு விஷயங்களை
வலியுறுத்துகிறது. அதில் ஒன்று பெற்றோர்களை முதுமைப் பருவத்தில் உதவி உபகாரம்
செய்வது (இஹ்சான்),
இங்கிதமாகப் பேசுவது (கவ்லுன்கரீம்) விரட்டாதிருப்பது
(நஹர்), சீ என்று கூட (உஃப்ஃபின்) கூறாதிருப்பது,
பணிந்து குனிந்து (கஃப்ளுள் ஜனாஹ்) நடந்து கொள்வது,
அவர்களுக்காக (ரப்பிர்ஹம் ஹுமா ) பிரார்த்திப்பது இவைகள் அனைத்தும் அவர்களது முதுமைப் பருவத்தில் அவர்களுடைய
பிள்ளைகளது நீங்காக் கடமைகளாகும்.
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا )
அவனையன்றி (வேறு
எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை
செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்;அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை
அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர்
தாழ்த்துவீராக; மேலும்,
“என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும்
அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப்
பிரார்த்திப்பீராக!”
( அல்குர்ஆன்: 17: 23, 24 )
رَغِمَ
أنفُه، ثُمَّ رَغِمَ أنفُه، ثُمَّ رَغِمَ أنفُه، قيلَ: مَن يا رَسولَ اللهِ؟ قال:
مَن أدرَك والِدَيه عِندَ الكِبَرِ أحَدَهما أو كِلَيهما، ثُمَّ لَم يَدخُلِ
الجَنَّةَ، خلاصة حكم المحدث : [صحيح]
الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2551
‘வயதான பெற்றோரைப் பெற்று
யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவருடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ( நூல்: முஸ்லிம் )
1.
முதியோர்களை முன்னிலை படுத்துங்கள்!
حَدَّثَنِي
إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ، أَخْبَرَنَا بِشْرُ بْنُ عُمَرَ ، قَالَ : سَمِعْتُ
مَالِكَ بْنَ أَنَسٍ ، يَقُولُ : حَدَّثَنِي أَبُو لَيْلَى عَبْدُ اللَّهِ بْنُ
عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْلٍ ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ ، أَنَّهُ
أَخْبَرَهُ عَنْ رِجَالٍ مِنْ كُبَرَاءِ قَوْمِهِ ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ
سَهْلٍ ، وَمُحَيِّصَةَ ، خَرَجَا إِلَى خَيْبَرَ مِنْ جَهْدٍ أَصَابَهُمْ ،
فَأَتَى مُحَيِّصَةُ ، فَأَخْبَرَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ سَهْلٍ قَدْ قُتِلَ
وَطُرِحَ فِي عَيْنٍ - أَوْ فَقِيرٍ - فَأَتَى يَهُودَ ، فَقَالَ : أَنْتُمْ
وَاللَّهِ قَتَلْتُمُوهُ ، قَالُوا : وَاللَّهِ مَا قَتَلْنَاهُ ، ثُمَّ أَقْبَلَ
حَتَّى قَدِمَ عَلَى قَوْمِهِ ، فَذَكَرَ لَهُمْ ذَلِكَ ، ثُمَّ أَقْبَلَ هُوَ
وَأَخُوهُ حُوَيِّصَةُ وَهُوَ أَكْبَرُ مِنْهُ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ ،
فَذَهَبَ مُحَيِّصَةُ لِيَتَكَلَّمَ وَهُوَ الَّذِي كَانَ بِخَيْبَرَ ، فَقَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمُحَيِّصَةَ : كَبِّرْ
كَبِّرْ ، يُرِيدُ السِّنَّ ، فَتَكَلَّمَ حُوَيِّصَةُ ، ثُمَّ تَكَلَّمَ
مُحَيِّصَةُ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
إِمَّا أَنْ يَدُوا صَاحِبَكُمْ ، وَإِمَّا أَنْ يُؤْذِنُوا بِحَرْبٍ ، فَكَتَبَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ فِي ذَلِكَ ،
فَكَتَبُوا إِنَّا وَاللَّهِ مَا قَتَلْنَاهُ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحُوَيِّصَةَ ، وَمُحَيِّصَةَ ، وَعَبْدِ الرَّحْمَنِ
: أَتَحْلِفُونَ وَتَسْتَحِقُّونَ دَمَ صَاحِبِكُمْ ؟ قَالُوا : لَا ، قَالَ :
فَتَحْلِفُ لَكُمْ يَهُودُ ، قَالُوا : لَيْسُوا بِمُسْلِمِينَ ، فَوَادَاهُ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عِنْدِهِ ، فَبَعَثَ إِلَيْهِمْ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِائَةَ نَاقَةٍ حَتَّى
أُدْخِلَتْ عَلَيْهِمِ الدَّارَ ، فَقَالَ سَهْلٌ : فَلَقَدْ رَكَضَتْنِي مِنْهَا
نَاقَةٌ حَمْرَاءُ
ஸஹ்ல் பின்
அபீஹஸ்மா (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் பெரியவர்கள் சிலரிடமிருந்து (கேட்டுக்)
கூறியதாவது::-
அப்துல்லாஹ் பின் ஸஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின்
மஸ்வூத் (ரலி) அவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட கடுமையான வறுமையின் காரணத்தால்
(பேரீச்சம் பழங்கள் பறிப்பதற்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள். பின்னர்
முஹய்யிஸா பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் வந்து தெரிவித்தார்கள்: அப்துல்லாஹ் பின்
ஸஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஒரு "நீர் நிலையில்" அல்லது
"குழியில்" கிடந்தார். பிறகு யூதர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள்தாம் அவரைக் கொலை செய்தீர்கள்" என்று நான்
கூறினேன். யூதர்கள்,
"அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் கொல்லவில்லை" என்று
கூறினர்.
பிறகு முஹய்யிஸா
பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தம் குலத்தாரை நோக்கி வந்து அவர்களிடமும் அதைப்
பற்றித் தெரிவித்தார்கள். பின்னர் அவரும் அவரைவிட வயதில் மூத்தவரான அவருடைய
சகோதரர் ஹுவய்யிஸா பின் மஸ்வூத் (ரலி) அவர்களும் மற்றும் அப்துர் ரஹ்மான் பின்
ஸஹ்ல் (ரலி) அவர்களும் (நபி ﷺ
அவர்களிடம்) வந்தார்கள். அப்போது கைபரில் அப்துல்லாஹ்வுடன் இருந்த முஹய்யிஸா பின்
மஸ்வூத் (ரலி) அவர்கள் (அவர்கள் இருவரையும் முந்திக் கொண்டு) பேச ஆரம்பித்தார்.
அப்போது,
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் முஹய்யிஸா பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம், "வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; வயதில் மூத்தவரை
(முதலில்) பேசவிடு" என்று கூறினார்கள். எனவே, (முதலில்) ஹுவய்யிஸா பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு முஹய்யிஸா
பேசினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "(நீங்கள் ஐம்பது பேர் சத்தியம் செய்வதன் மூலம் யூதர்களே கொலை செய்தார்கள்
என்பது நிரூபணமானால்,)
ஒன்று அவர்கள் (கொல்லப்பட்ட) உங்கள் நண்பருக்கான
உயிரீட்டுத் தொகையை வழங்கட்டும்! அல்லது (நம்முடன் நடந்த சமாதான உடன்படிக்கையை
முறித்துக்கொண்டு) அவர்கள் போர்ப் பிரகடனம் செய்யட்டும்!" என்று கூறினார்கள்.
பிறகு இது
தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்கள் யூதர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதற்கு யூதர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அவரைக் கொலை செய்யவில்லை" எனப் பதில்
எழுதினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஹுவய்யிஸா (ரலி), முஹய்யிஸா (ரலி),
அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்ல் (ரலி) அகியோரிடம், "(அப்துல்லாஹ் பின் ஸஹ்ல் அவர்களை யூதர்கள்தாம் கொலை செய்தார்கள் என்று)
சத்தியம் செய்து,நீங்கள் உங்கள் கொலையாளிக்கு (தண்டனையளித்து பழிவாங்கிக்கொள்ளும்) உரிமையை
பெற்றுக் கொள்கிறீர்களா?"என்று கேட்டார்கள். அதற்கு, அம்மூவரும்
"இல்லை" என்றனர். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "அப்படியானால் உங்கள் குற்றச்சாட்டுக்கு (மறுப்புத் தெரிவித்து) யூதர்கள்
சத்தியம் செய்வர்" என்றார்கள். அதற்கு அவர்கள் மூவரும், "அவர்கள் முஸ்லிம்கள் இல்லையே (யூதர்கள் பொய் சத்தியம் செய்வதற்குக்கூட
தயங்கமாட்டார்கள்)" என்று கூறினர்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்கள்,
தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களின் கொலைக்கான
உயிரீட்டுத் தொகையை கொடுத்துவிட்டார்கள். அவருடைய குடும்பத்தாருக்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை அனுப்பினார்கள். அவை அவர்களது வீட்டுக்குக்
கொண்டுவரப்பட்டன. ஸஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அந்த ஒட்டகங்களில் சிவப்பு ஒட்டகம் ஒன்று தனது காலால் என்னை உதைத்து விட்டது.
( நூல்: புகாரி )
أنَّ
النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم قال: أراني أتَسَوَّكُ بسِواكٍ، فجاءَني
رَجُلانِ، أحَدُهما أكبَرُ مِنَ الآخَرِ، فناولتُ السِّواكَ الأصغَرَ منهما، فقيلَ
لي: كَبِّرْ، فدَفَعتُه إلى الأكبَرِ منهما، الراوي : عبدالله بن عمر | المحدث :
البخاري | المصدر : صحيح البخاري
இப்னுஉமர் (ரலி)
அவர்கள் அறிவித்தார்கள்:- “நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: நான் கனவில்
பல் துலக்கும் குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாக என்னைக் கண்டேன். என்னிடம்
இருவர் வந்தனர் இருவரில் ஒருவர் மற்றொருவரை விட பெரியவராக இருந்தார். எனவே, நான் அந்தக் குச்சியை சிறியவருக்கு வழங்கிவிட்டேன். அப்போது எனக்கு, ‘பெரியவரிடம் கொடுப்பீராக’ என்று கூறப்பட்டது.
நானும் அவ்விருவரில் பெரியவருக்கு அதை வழங்கிவிட்டேன்”. நூல் : முஸ்லிம்)
2.
இன்று அவர்கள் என்றால் நாளை நீங்கள்?..
عن أنس
بن مالك رضي الله تعالى عنه قال: قال رسولُ الله ﷺ: «مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا
لِسِنِّهِ إِلَّا قَيَّضَ اللهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّهِ» . رواه
الترمذي
ஒரு வாலிபர் வயது
முதிர்ந்தவருக்கு மரியாதை செலுத்தும் போது, வாலிபர் வயோதிக பருவத்தை
அடையும்போது,
அவருக்கு மரியாதை செலுத்தும் ஒருவரை இறைவன் ஏற்படுத்தாமல்
விடமாட்டான் என நபி ﷺ
கூறினார்கள்”
(அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதி)
كان
الشافعي يقلب أوراق كتاب "الموطأ" برفق شديد وهيبة، خشية أن يُسمع صوتها
فينزعج مالك
இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறுவதாவது: ‘நான் எனது ஆசிரியப் பெருந்தகை இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுக்கு முன்பு அமர்ந்து
முஅத்தா நூலை படிக்கும்போது, நூலின் ஒரு பகுதியை
திருப்பும்போது மெதுவாக திருப்புவேன். ஏனென்றால் அதன் சப்தத்தின் தொந்தரவு அவர்கள்
கேட்கக்கூடாது என்பதற்காக’
என்கிறார்.
وقال الرَّبيعُ صاحِبُ الشَّافعيِّ: (ما اجتَرَأتُ أن أشرَبَ الماءَ والشَّافعيُّ ينظُرُ إليَّ؛ هَيبةً له!)
ரபீஉ (ரஹ்)
கூறுகிறார்: ‘எனது ஆசிரியப் பெருந்தகை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் என்னை பார்த்துக்
கொண்டிருக்கும் போது,
நான் தண்ணீர் அருந்த துணியமாட்டேன்’ எனும் பணிவடக்கத்தை தெரிவிக்கிறார்.
இமாம் ஷாஃபிஈ ரஹ்
அவர்கள் தங்களது இளமைப் பருவத்தில் முதியவராக இருந்த தமது ஆசிரியர் இமாம் மாலிக்
ரஹ் அவர்களை கண்ணியம செய்தார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இமாம் ஷாஃபிஈ ரஹ்
அவர்களின் முதுமையின் போது அவர்களுக்கு கண்ணியம் தருகிற மாணவராக ரபீஉ ரஹ் அவர்களை
வழங்கினான்.
3.
முதியோரை மதிக்கும் பண்பாடு நல்ல மாற்றங்களை உண்டு பண்ணும்..
روى قصة
عن أمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنه مع أحد اليهود، حيث سارا معاً في
طريق، فأظهر عليّ رضي الله عنه أدباً رفيعاً وتواضعاً (إيثاراً) في الطريق، مما
أدهش اليهودي. قيل إن اليهودي سأله: "ألسنا نمشي في طريق واحد؟"، فأجاب
عليّ بحسن خُلق، مما جعل اليهودي يعجب بحكمته ويسأله عن دينه في النهاية
ஒரு நாள் அலீ
(ரலி) குறுகலான ஒரு பாதையில் வந்து கொண்டிருக்கும் பொழுது வழியில் அலீ ரலி
அவர்களுக்குப் பின்னால் ஒரு யூதப் பெரியவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது
அந்த யூதருக்கு அலீ ரலி அவர்கள் வழி விட்டு, முன்னால் செல்லுமாறு
கூறினார்கள்,
அதற்கு அந்த யூதப் பெரியவர் "நாம் இருவரும் சேர்ந்தே
இந்த பாதையில் செல்லலாமே?
என்றார். அப்போது அலீ ரலி அவர்கள் "வயது முதிர்ந்த
உங்களுக்கு இணையாக நடந்து வருவது அவ்வளவு ஒழுக்கமான செயல் அல்ல" என்று
பணிவுடன் கூறினார்கள். இதைக் கேட்ட அந்த யூதப் பெரியவர் திகைத்துப் போனார். மேலும், அலீ ரலி அவர்களிடம் இஸ்லாத்தின் மாண்புகள் குறித்து கேட்டறிந்து இஸ்லாத்தை
தழுவினார். ( நூல்: மனாகிபு அலீ ரலி லிஇமாமி அலீ அஸ்ஸுல்லாபீ )
4.
முதியோர்களின் உரிமைகளை வழங்குங்கள்!
وفي (
كتاب الأموال لأبى عبيد) أن عمر بن عبد العزيز رضى الله عنه وهو من خلفاء
المسلمين العلماء العاملين كتب إلى عامله على البصرة كتاباً ومما جاء فيه :(وانظر
من قبلك من أهل الذمة قد كبرت سنه وضعفت قوته وخلت عنه المكاسب، فأجر عليه من بيت
مال المسلمين ما يصلحه) ص 46
உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் பஸ்ராவில் இருந்த தனது கவர்னருக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார்: ”அஹ்லுத் திம்மாக்களில் (அதாவது முஸ்லிம் அரசின் பாதுகாப்பில் வாழும் முஸ்லிம் அல்லாத குடிமக்களில்) எவராவது முதிர்ந்த வயதை அடைந்து, அவரது உடல் பலவீனமுற்று, தொழில் வாய்ப்புக்கள் இல்லாத நிலை உருவாகிவிட்டால் அவருக்கு தேவையான அளவு உதவியை முஸ்லிம்களது பைத்துல் மாலில் இருந்து பெற்றுக் கொடுங்கள்.” ( நூல்: கிதாபுல் அம்வால் – லிஇமாமி அபூ உபைத் (ரஹ்), பக்:46 )
الفاروقُ
-رضي الله عنه وأرضاه- رأى شيخاً ضريراً يهودياً, يمدُّ يده إلى الناس، ويطلب منهم
المساعدة, فقال له عمر: "ما ألجأك إلى ما أرى"، قال اليهودي: فرضتم
عليَّ الجزيةَ وأنا كبير السن, لا أستطيع العمل لأؤدِّيَ ما علي, فلجأتُ إلى مدِّ
يديْ إلى الناس, فرقَّ له عمرُ وأخذ بيده, وذهب به إلى منزله فأعطاه مالاً, وأمر
بإسقاط الجزية عنه وقال: "والله ما أنْصفناه, أنْ أكَلْنَا شَبِيْبَتَهُ, ثم
نخذله عند الهرم", وأسقط الجزية عن كل يهوديٍّ كبيرٍ في السن.
உமர் (ரலி)
அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஜிஸ்யா (வரி)
செலுத்துவதற்காகப் யாசகம் எடுத்த வயதான யூத முதியவரை உமர் ரலி அவர்கள் கண்டார்கள்.
அந்த முதியவரிடம் காரணம் கேட்ட போது, "தான் ஜிஸ்யா வரி செலுத்தவே இவ்வாறு யாசகம் கேட்கிறேன் என்றார் அந்த முதியவர்.
அப்போது, உமர் (ரலி) அவர்கள் அந்த முதியவரை தன் வீட்டிற்கு அழைத்து பண உதவி செய்தார்கள், "இளைஞனாக இருக்கும்போது நாம் அவரிடம் வரி வசூலித்துவிட்டு, வயதான காலத்தில் அவரைப் புறக்கணிப்பது அநீதியாகும்" என்று உமர் (ரலி)
கருவூலப் பொறுப்பாளரிடம் கூறி, அவருக்கு ஜிஸ்யா வரியை
ரத்து செய்ய சொன்னார்கள். பின்னர் கருவூலப் பொறுப்பாளரிடம், அந்த முதியவர் மற்றும் இதே போன்ற நிலையில் உள்ளவர்களுக்கு
பைத்துல்மாலிலிருந்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்கள். ( நூல்: மனாகிபு உமர்
(ரலி)...)
5.
முதியோர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்!
عن
المِسْور بنِ مخرمة قال: خرجنا حُجاجًا مع عمر بنِ الخطاب، فنزلنا منزلاً بطريق
مكة، يقال له الأبواء، فإذا نحن بشيخ على قارعة الطريق، فقال الشيخ: يا أيها
الركب؛ قِفُوا، فقال عمر: قِفُوا، فوقفنا، فقال عمر، قل يا شيخ. قال: أفيكم رسول
الله -صلى الله عليه وسلم-؟ فقال عمر: أمسِكوا؛ لا يتكلَّمَنَّ أحد، ثم قال: أتعقل
يا شيخ؟ قال: العقلُ ساقَني إلى ها هنا، قال: تُوُفِّيَ النبي -صلى الله عليه
وسلم-. قال: وقد تُوُفِّيَ -صلى الله عليه وسلم-؟ قال: نعم، قال: فبكى، حتى
ظنَنَّا أن نفسه ستخرج من بين جنبيه. ثم قال: فمن ولي أمر الأمة من بعده؟ قال: أبو
بكر. قال: نحيف بني تَيْم؟ قال: نعم. قال: أفيكم هو؟ قال: لا، قال: وقد تُوُفِّيَ؟
قال: نعم. قال: فبكى حتى سمعنا لبكائه شَحِيجًا.
மிஸ்வர் இப்னு
மக்ரமா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- நாங்கள் உமர் ரலி அவர்களுடன் ஹஜ்ஜுக்கு
சென்று கொண்டிருந்தோம். செல்லும் வழியில் மக்காவில் அப்வாஃ எனும் இடத்தில்
இறங்கினோம். புறப்பட தயாராக இருந்தோம். அப்போது அங்கே பாதையில் ஒரு முதியவர்
எங்களின் அருகில் நெருங்கி வந்து ஓ வாகனக் கூட்டத்தாரே! கொஞ்சம் நில்லுங்கள்!
என்றார். அப்போது,
உமர் ரலி அவர்கள் எங்களை நிற்குமாறு கூறினார்கள். நாங்கள்
அப்படியே நின்றோம். பின்னர், அவரிடம் முதியவரே!
சொல்லுங்கள் முதியவரே! என்ன காரணத்திற்காக அழைத்தீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு, அந்த முதியவர் "உங்களுடன் முஹம்மது ﷺ அவர்கள் வந்துள்ளார்களா? என்று கேட்டார்.
அப்போது, உமர் ரலி அவர்கள் எங்களை பேசாமல் அமைதியாக இருக்குமாறு சைகை செய்து விட்டு, முதியவரே! ஏதாவது விபரம் இருக்கிறதா? நீங்கள் சுய நினைவுடன்
(அறிவுடன்) தான் இந்த கேள்வியை கேட்கின்றீர்களா? என்று கேட்டார்கள்.
அதற்கவர், "நீங்கள் தான் என்னை பார்க்கின்றீர்களே? என் சுய நினைவு (அறிவு)
தான் இதோ என்னை உங்களின் முன்னால் அழைத்து வந்துள்ளது" என்றார்.
அப்போது உமர் ரலி
அவர்கள் "முஹம்மது நபி ﷺ
அவர்கள் இந்த உலகை விட்டும் விடைபெற்றுச் சென்று விட்டார்கள்" என்று பதில்
கூறினார்கள்.
அதைக் கேட்டதும்
அவர்,
"முஹம்மது நபி ﷺ அவர்கள் இந்த உலகை விட்டும் விடைபெற்றுச் சென்று
விட்டார்களா?"
என்று கேட்டு விட்டு,
குலுங்கி குலுங்கி அழுதார். நாங்கள் "அவரின் உயிர்
அவரின் தோல் புஜங்களின் வழியாக வெளியேறி விடும்" என்று எண்ணும் அளவுக்கு
அவரின் அழுகை இருந்தது.
பின்னர் இயல்பு
நிலைக்கு திரும்பிய அவர்,
"நபி ﷺ
அவர்களுக்குப் பின்னால் இந்த உம்மத்தை யார் வழி நடத்துகிறார்?" என்று கேட்டார்.
அப்போது, உமர் ரலி அவர்கள் "அபூபக்ர் சித்தீக் ரலி அவர்கள் என்று பதிலளித்தார்கள்.
அதற்கவர்,
"குறைஷிகளின் பழங்குடியினரான பனூதைம் வழித்தோன்றலில்
வந்தவாரா?"
என்று கேட்டார். உமர் ரலி அவர்கள் ஆம் என்று பதில் கூற, உங்களுடன் அபூபக்ர் சித்தீக் ரலி அவர்கள் வந்துள்ளார்களா? என்று கேட்டார் அந்த முதியவர். அப்போது, உமர் ரலி அவர்கள்
"இல்லை" என்று பதிலளித்தார்கள்.
அதற்கவர்
"அபூபக்ர் சித்தீக் ரலிஅவர்கள் இந்த உலகை விட்டும் விடைபெற்றுச் சென்று
விட்டார்களா?"
என்று கேட்டார். பின்னர் அந்த முதியவர் தேம்பித் தேம்பி
அழுதார். அவரின் அழுகையின் விசும்பலை நாங்கள் கேட்டோம்.
ثم قال:
فمن ولي أمر الأمة بعده؟ فقال: عمر بن الخطاب. قال: فأين كانوا عن أبيض بني أمية؟
-يريد عثمانَ بنَ عفان-؛ فإنه كان ألْيَن جانبًا، وأقْرَبَ. قال: قد كان ذلك، قال:
إن كانت صَدَاقة عمرَ لأبي بكر لمسَلَّمة إلى خير، أمنكم هو؟ قال: هو الذي يكلِّمك
منذ اليوم. قال: أغِثْني؛ فإني لم أجد مُغيثًا.
பின்னர் இயல்பு
நிலைக்கு திரும்பிய அவர்,
"அபூபக்ர் சித்தீக் ரலி அவர்களுக்குப் பின்னால் இந்த
உம்மத்தை யார் வழி நடத்துகிறார்?" என்று கேட்டார்.
அப்போது, உமர் ரலி அவர்கள் "உமர் இப்னு கத்தாப் ரலி அவர்கள் இந்த உம்மத்தை வழி
நடத்துகிறார்" என்று கூறினார்கள்.
அதற்கவர், பனூ உமைய்யாவின் உஸ்மான் என்ன ஆனார்? அவர் மென்மையானவரும், மக்களுக்கு மிக நெருக்கமானவரும் ஆயிற்றே!" என்றார். அப்போது, உமர் ரலி அவர்கள்"ஆம்! நீங்கள் சொல்வது சரி தான். உஸ்மான் ரலி அவர்கள்
அவ்வாறு தான் இப்போதும் இருக்கின்றார்கள்" என்று கூறினார்கள்.
அதற்கவர், அபூபக்ர் சித்தீக் ரலி அவர்களுடனான நெருக்கம் உமருக்கு இருக்குமானால் நிச்சயம்
அவர் உங்களை சிறந்த முறையில் நடத்துவார்" என்று கூறி விட்டு, "உங்களுடன் உமர் ரலி அவர்கள் வந்துள்ளார்களா?" என்று கேட்டார்.
அப்போது, உமர் ரலி அவர்கள் "உங்களுடன் பேசிக் கொண்டிருப்பவரே அந்த உமர் தான்"
என்றார்கள்.
அதற்கவர், அப்படி என்றால் எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்! என் வாழ்க்கைத் தேவைக்கான
உதவியைச் செய்ய எவரும் எனக்கில்லை" என்றார்.
قال:
ومن أنت بلغك الغوث؟ قال: أنا أبو عقيل، أحد بني مُلَيْل؛ لقيت رسولَ الله -صلى
الله عليه وسلم- رَدْهة بَنِي جُعل، دعاني إلى الإسلام، فآمنتُ به، وصدَّقتُ بما
جاء به، سقاني شربةً من سَويق؛ شرب رسول الله -صلى الله عليه وسلم- أوَّلَها،
وشربتُ آخرَها، فما برحْتُ أجد شِبَعها إذا جِعت، ورِيَّها إذا عطشتُ، وبَرْدها
إذا أصبحتُ، ثم تيمَّمْتُ في رأس الجبل الأبيض، أنا وقطعة غنم لي، أصلي في يومي
وليلتي خمسَ صلوات، وأصوم شهرًا وهو رمضان، وأذبح شاةً لعشر ذي الحجة أنسُك بها؛
ذاك علمي.
அப்போது, உமர் ரலி அவர்கள் "உங்களுக்கு உதவிகள் வந்து சேரும்! நீங்கள் யார்?" என்று சொல்லுங்கள்! என்றார்கள்.
அதற்கவர், நான் பனூ முலைல் கோத்திரத்தாரைச் சேர்ந்த அபூ உகைல் (லாஹிக் இப்னு மாலிக்)
ஆவேன். நான் நபி ﷺ
அவர்களை மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையே உள்ள பனூ ஜஅல் கூட்டத்தாருக்கு
சொந்தமான இடத்தில் சந்தித்தேன். அங்கே என்னை நபி ﷺ அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு எனக்கு அழைப்பு
விடுத்தார்கள். நான் அப்போதே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். பின்னர் நபி ﷺ அவர்கள் எனக்கு அவர்கள் குடித்துக் கொண்டிருந்த ஸவீக்
பானத்தை எனக்கு பருக தந்தார்கள். (ஸவீக் (Saweeq) என்பது கோதுமை அல்லது பார்லியை வறுத்து, பொடியாக்கி, நீர் அல்லது நெய் கலந்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான நபிவழி உணவாகும்.) நான்
பருகினேன். பின்னர் நான் மலை உச்சிக்கு எனக்கு இருந்த சிறிய ஆட்டு மந்தையை ஓட்டச்
சென்று விட்டேன். அதன் பின்னர் எனது வாழ்க்கை என்பது தினந்தோறும் ஆடு மேய்க்க
செல்வதும்,
ஐந்து நேரம் தொழுவதும், ரமழானில் நோன்பு
நோற்பதும்,
துல் ஹஜ் பிறை பத்தில் உள்ஹிய்யா கொடுப்பது என்று என்
நினைவு தெரிந்த வரை இப்படியே கடந்து சென்றது.
حتى
ألقَتْ بها السَّنَة –أي القحط- فما أبقت لنا منها إلا شاة واحدة، كنا ننتفع
بدَرَّتها، فغبَنَها الذئب البارحة الأولى، فأدركْنا ذكاتها، فأكلنا، وبلَغْناك
ببعض، فأغِثْ أغاثك الله، فقال عمر: بلَغَك الغوث، بلغك الغوث، أدركني على الماء.
பின்னர், கடும் பஞ்சம் ஏற்பட்டது. அந்த பஞ்சத்தின் போது எனது ஆடுகள் எல்லாம் போனது. ஒரு
ஆடு கூட எஞ்சியிருக்க வில்லை. கடும் சிரமத்திற்கு ஆளானோம். கிடைத்ததை உண்டு
வாழ்ந்தோம். இப்போது உங்களை நான் சந்தித்துள்ளேன்" என்று கூறி, எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்களுக்கு உதவி
செய்வான்" என்றார் அந்த முதியவர்.
"உங்களுக்கு உதவிகள்
வந்து சேரும்! உங்களுக்கு உதவிகள் வந்து சேரும்! என்று இருமுறை கூறி விட்டு, எங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் தேவை ஏற்பாடு செய்து தாருங்கள்!"
என்றார்கள்.
قال
المسور بن مخرمة: فنزلنا المنزل، وأصبنا من فضل زادنا، وكأني أنظر إلى عمر متعَبًا
على قارعة الطريق، آخذًا بزمام ناقته، لم نَطْعَم طعامًا، ما ننتظر للشيخ ونرمُقه،
فلما رحل الناس دعا عمر صاحب الماء، فوصف له الشيخ وجلَّاه له، وقال: إذا أتى عليك
فأَنْفِقْ عليه، وعلى آله حتى أعود إليك - إن شاء الله
-.
மிஸ்வர் இப்னு
மக்ரமா ரலி அவர்கள் கூறுகின்றார்கள்:- நாங்கள் ஒரு வீட்டை அடைந்தோம். அங்கே எங்கள்
பயண சாதனங்களில் சிலதை இறக்கி வைத்தோம். இப்போதும் என் கண் முன்னே அந்த காட்சி
நிழலாடுகிறது "உமர் ரலி அவர்கள் தமது ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறை பிடித்து
அப்படியே பாதையில் குத்த வைத்து அமர்ந்து விட்டார்கள். நாங்கள் எதையும் சாப்பிடவும்
இல்லை. அந்த முதியவரின் வாழ்க்கை முறை எங்களை கவலையடையச் செய்து விட்டது. அந்த
முதியவர் தண்ணீருக்காக ஏற்பாடு செய்திருந்த ஒருவர் எங்களின் தண்ணீர் தேவையை சரி
செய்து தந்தார். நாங்கள் புறப்பட தயாரான போது, அவரிடம் "இந்த
முதியவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செலவழிப்பீராக! உம்மிடம் எப்போது வந்து
உதவி கேட்டாலும் செய்வீராக! இன்ஷா அல்லாஹ்... ஹஜ்ஜில் இருந்து திரும்பியதும் உம்மை
சந்திக்கின்றேன்" என்று கூறினார்கள்.
قال
المسور: فقضينا حجنا، وانصرفنا، فلما نزلنا المنزل دعا عمر صاحب الماء، فقال: هل
أحسست الشيخ؟ قال: نعم؛ يا أمير المؤمنين، أتاني وهو موعوك، فمرض عندي ثلاثًا،
فمات"، ودفنته، وهذا قبره. فكأني أنظر إلى عمر، وقد وثب مباعِدًا بين خطاه،
حتى وقف على القبر، فصلى عليه، ثم انضجَعَ، فاعتنقه، وبكى، حتى سمعنا لبكائه
شَحِيجًا، ثم قال: كره الله له مِنَّتَكُم، وسَبَقَ به، واختار له ما عنده -إن شاء
الله-. ثم أمر بأهله، فحُملوا معه، فلم يزل ينفق عليهم، حتى قُبض. (تاريخ مدينة
دمشق لابن عساكر (44 / 351 و 352).
மிஸ்வர் இப்னு
மக்ரமா ரலி அவர்கள் கூறுகின்றார்கள்:- நாங்கள் ஹஜ்ஜை முடித்து திரும்பினோம்.
தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து தந்த அந்த மனிதரின் வீட்டுக்கு வந்தோம். அவரிடம்
உமர் ரலி அவர்கள் "அந்த முதியவரிடம் நல்ல முறையில் நடந்து கொண்டீரா?" என்று கேட்டார்கள். அவர், அமீருல் முஃமினீன்
அவர்களே! ஆம்! என்றார். பின்னர் அந்த மனிதர், "அந்த முதியவர் நோய்வாய்ப்பட்டு நீங்கள் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு
தான் இந்த உலகை விட்டும் விடை பெற்றுச் சென்றார். இதோ அவரை நல்லடக்கம் செய்த இடம்
என்று அவரை அடக்கம் செய்த மண்ணறைக்கு அழைத்துச் சென்று அடையாளம் காட்டினார்.
இப்போதும் என் கண்
முன்னே நிழலாடுகிறது உமர் ரலி அவர்கள் அங்கே நடந்து கொண்ட விதம்.
உமர் ரலி அவர்கள்
மெல்ல எட்டு எடுத்து வைத்து மண்ணறையை நோக்கி நடந்தார்கள். பின்னர் அந்த மண்ணறை
அருகில் நின்று தொழ வைத்தார்கள். அங்கேயே சரிந்தவர்களாக அமர்ந்து அவருக்காக
இரங்கல் தெரிவித்தார்கள். தேம்பித் தேம்பி அழுதார்கள்.
அவருக்கு நீங்கள்
செய்த உபகாரங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விரும்பவில்லை போலும், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னிடம் உள்ளதை அனுபவிக்க அவர்களை தன் பக்கம்
தேர்ந்தெடுத்துக் கொண்டான்" என்று கூறி விட்டு, முதியவரான அபூ உகைல் (ரலி) அவர்களின் குடும்பத்தாரை தம்மோடு மதினாவிற்கு
புறப்படுமாறு பணித்தார்கள். பின்னர் அவர்களை அழைத்துக் கொண்டு மதீனா வந்தார்கள்.
உமர் ரலி அவர்கள் இந்த உலகை விட்டும் விடை பெற்றுச் செல்லும் வரை அபூ உகைல் (ரலி)
அவர்களின் குடும்பத்தினருக்கு தம் சொந்த செலவில் உதவிகள் செய்து வந்தார்கள். (
நூல்: தாரீஃகே திமிஷ்கு லிஇமாமி இப்னு அஸாகிர் ரஹ்... )
முதியோர்கள் நம்மை
அணுகி ஏதேனும் பேச முற்படும் போது சிறிது நேரம் அவர்களுக்கு ஒதுக்கி அவர்களோடு பேச
வேண்டும். அவர்களின் மன பாரம் குறைய நாம் ஒரு காரணமாக விளங்க வேண்டும். இங்கே உமர்
ரலி அவர்கள் ஹஜ்ஜுக்கு புறப்பட்டு ஹஜ் பயணத்தில் இருந்த போதும் முதியவரான அபூ உகைல்
ரலி அவர்களின் அழைப்புக்கு பதில் தரும் முகமாக நேரம் ஒதுக்கினார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்
அனைவருக்கும் முதியோர்களை மதித்து வாழும் பண்பாட்டை வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்!
ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:
Post a Comment